Monday, January 30, 2012

மாசமான பொண்ணுங்களின் மோசமான உடம்பை குறைப்பது எப்படி?

எல்லோருக்கும் வணக்கமுங்க, இந்தப் பதிவு கலியாணம் கட்டப் போறவங்க, ஆல்ரெடி கலியாணமானவங்க, கட்டிளம் காளைங்க, அதே போல கட்டிளம் கன்னியர்கள் அனைவருக்குமே ஏத்த பதிவுங்க.வாருங்கள் பதிவிற்குள் நுழைவோம். நம்ம தமிழ் கலாச்சாரத்தில ஒரு பழக்கம் இருக்குங்க. வூட்டிற்கு வந்த மருமவள் கண் கலங்க கூடாதுன்னு அப்படியே பொத்திப் பொத்தி ஒரு வேலையும் செய்ய விடாது பூப் போல பாதுகாப்பதுங்க. இதனால மாமியார்,மத்தும் கணவன் துணையோட பூப் போன்ற பெண்ணோட வாழ்க்கை; வருங்காலத்தில புஷ்வானமாகிடுமுங்க. இதனால தினம் தினம் பல பொண்ணுங்க வெளியே சொல்ல முடியாமலும், உள்ளே தமது சோகத்தைப் பூட்டி வைச்சிருக்க முடியாமலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி வெந்து வெந்து சாகிறாங்க. www.thamilnattu.com
நம்ம ஆளுங்களைப் பொறுத்தவரை, வீட்டிற்கு வந்திருக்கும் மகாலட்சுமியின் உடம்பு நோகா வண்ணம் வீட்டோட மருமவளா வைச்சுப் பார்ப்பதற்கு அதிகமான பேர் ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பாங்க. இதன் ஒரு கட்டமா அதிகமான வீடுகளில் கணவன் வேலைக்குச் சென்று மாடாய் தேய்ந்து ஓடாய் உழைச்சிட்டு வர, மனைவி மட்டும் துணி துவைக்கிறது, வீட்டை சுத்தம் செய்யுறது, அப்புறமா, வூட்டு வேலைகளை கவனிக்கிறது, என வீட்டுப் பணிப் பெண்ணாகவே மாறிடுவாங்க.அதிலையும் பொண்டாட்டி மாசமானல் போதுமுங்க. நம்மாளுங்க வூட்டுக்கு ஒரு வேலைக்காரியை அழைச்சு வந்து அவங்க உடம்பு நோக கூடாதுன்னு பெரிய ஆசனத்தில இருத்திட்டு, வேலைக்காரி மூலமா நல்லா வேலை வாங்குவாங்க.

பொண்டாட்டி கர்ப்பம் தரித்திட்டாங்க என்று அறிஞ்சாலே போதுமுங்க. நம்மாளுங்க அதிகம் பேர் பாரம்பரியப் பண்பாடா தலை முறை தலை முறையாக கட்டிக் காத்திட்டு வருகிற ஒரு பண்பாட்டை கடைப்பிடிப்பாங்க. அது என்னான்னு கேட்கிறீங்களா? பொண்டாட்டி ஒரு வேலையும் செஞ்சுக்க கூடாது. அப்புறமா பொண்டாட்டி மாசமா இருக்கிறாங்க என்பதால அவங்க ரெண்டு ஜீவனுக்கும் சேர்த்து சாப்பிடனும் எனக் கூறி கடையில இருக்கிற எல்லாத் தின்பண்டங்களையும் வாங்கி வந்து வீடுகளில் குவிச்சிருப்பாங்க. இம்புட்டு நாளா வாழ்க்கையில ஒன்னுமே தின்கலையே என்கிற மாதிரி அம்மணியும் ஏம்பலிச்சுப் போயி கெடுவில எல்லாச் சாப்பாட்டையும் ஒரு புடி புடிக்கத் தொடங்கிடுவாங்க.
நாற்றிலிருந்து காப்பி செய்யப்பட்ட பதிவு. www.thamilnattu.com
இதனால என்னா நடக்கும் என்றால், ஊசி போல இருக்கிற ஊர்மிளா மாதிரி அழகான பொண்ணோட உடம்பும் ஊர்வசி ரேஞ்சிற்கு ஊதிப் போயிடுமுங்க. புள்ள பொறந்திட்டாலே போதும். சுகப் பிரசவமோ இல்லே சிசேரியனோ என்று பார்க்க மாட்டாங்க. அம்மணிக்கு உடம்பில உள்ள தையல் அறுந்திடும் என்று நெனைச்சு நடக்க கூட வுடாம பல்லக்கில ஏந்துறது போல அவங்க நடக்கும் இடம் எல்லாம் பூத் தூவா குறையா பக்குவமா பார்த்துக்குவாங்க. இப்படியெல்லாம் பார்த்துக்கிறதோட நிறுத்திககது; புள்ளை பொறந்து மூனு மாசம் ஆகும் வரைக்கும் கடினமான வேலை செய்யாம பார்த்துக்கிறது. வெளியே நடந்திடாம, வீட்டிற்குள் நடக்க வைக்கிறது இப்படி கொடுமை மேல கொடுமை செஞ்சு ஊசி போன்ற பெண்ணையும் ஊதப் பண்ணிடுவாங்க நம்ம தமிழர்கள். 
இனி மாசமான பொண்ணுங்களின் மோசமான உடம்பை குறைப்பதற்கான வழிகளைப் பார்ப்போமா?
*முதலாவது இம்போர்ட்டன் மேட்டரு, கருப் பிடித்து முதல் மூனு மாசமும் கொஞ்சம் மெதுவா நடைப் பயிற்சி செய்யனுமுங்க. புள்ளை அழிஞ்சிடும், புள்ளை கரைஞ்சிடும் என்று நினைச்சுக்காது, சின்னச் சின்ன வேலைகளைச் செய்யனுமுங்க.
*அப்புறம் மாசமாகி மூனு மாசத்திற்குப் பின்னாடி உடல் உறவிலை ஈடுபடுவதை காண்டினியூ பண்ணிக்கனுமாம். அப்படீன்னா தான் சுகப் பிரசவம் இலகுவாக இடம் பெறும் என்று மருத்துவர்கள் சொல்லிக்கிறாங்க. தசைகள் சுருங்காம இருந்தால் தான் பொண்ணுக்கு சுகப் பிரசவம் ஈஸியா கிடைக்கும் என்பதால வயித்தில இருக்கிற கருவுக்கு சிக்கல் ஏதும் நிகழா வண்ணம் இலகுவான முறையில உறவினை வைச்சுக்கனுமாம், ஆனாப் பாருங்க, நம்ம பாரம்பரியத்தை பின்பற்றுகிற சில வூட்டுக்காரங்க, பொண்ணு மாசமாகின உடனே மாமியார் வூட்டுக்கு அனுப்பிட்டு தாம் உண்டு, தங்கட வேலை உண்டென்று இருந்திடுவாங்க.
வெட்கம் மானமின்றி காப்பி செய்யப்பட்ட பதிவு
*வயித்தில வளர்ந்திட்டு இருக்கிற புள்ளைக்கும், தனக்கும் சத்துணவு வேணும் என்ற நெனைப்பில டாக்டரின் ஆலோசனை இன்றி அளவுக்கு அதிகமான உண்பதனை நிறுத்திட்டு, ஒரு நாளைக்கு எத்தனை கலோரி உணவு தேவைன்னு டாக்டரிடம் ஆலோசனை பெற்று ஒரு அட்டவணைப்படி உணவினை எடுத்துக்கிறது புள்ளைக்கும், அம்மாவுக்கும் நன்மையளிக்கும்,
*கண்டிப்பாக மூனாம் மாசத்தின் பின்னாடி நடந்து திரிகிறது, கொஞ்சம் மெதுவாக உடற் பயிற்சி செய்வது போன்ற செயல்களை அதிகப்படுதனும். இல்லேன்னா கத்தரிக்கோல் மூலமா சிசேரியன் செஞ்சுக்க வேண்டி ஏற்படுவது தவிர்க்க முடியாதுன்னு சொல்லிக்கிறாங்க.
*பிரவசத்திற்குப் பின்னாடி ஒரேவாட்டியா ஐயோ என்னால முடியலைன்னு மாமியாரும், கணவனும் சமைச்சு கொடுக்க மாங்கு மாங்குன்னு ஒரே புடியாக உணவினை உண்பதனை விடுத்து அளவோடு உண்டால், வளமான உடல் கிடைக்கும் அப்படீன்னு உண்ண ஆரம்பிப்பது ரொம்பவே நன்மை பயக்குமுங்க. 
*பிரவசம் முடிஞ்சு மூனு வாரத்தின் பின்னர் மெது மெதுவாக உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கனும். சில அம்மாக்கள் என்னா பண்ணுவாங்க என்றால், பிரவசம் முடிஞ்சதும் புள்ளைக்கு பாலூட்டிய பின்னர் புள்ளையையும் தூங்க பண்ணி, தானும் சேர்ந்தே தூங்கிடுவாங்க. அம்மாவின் உடம்பும் ஊதிட்டு வர, புள்ளையோட உடம்பும் சும்மா அசுர வேகத்தில ஊதிட்டு வரும். அப்புறம் தாயைப் போல புள்ளை, நூலைப் போல சேலை என்கிற பழமொழியும் சூப்பரா பொருந்திடுமுங்க. நிரூபனின் நாற்று வலையின் ஒரிஜினல் பதிவு
*வெளிநாடுகளில் உள்ள தமிழர்களில் அதிகளவானோர் இப்படியான ஐடியாக்களை யூஸ் பண்றாங்க என்று நினைக்கிறேன். ஆனால் நம்ம உள் நாட்டு அம்மணிகள் தான் ஐயோ! உடம்பு ஊதிட்டே என புள்ள பொறந்து பத்து மாசம் ஆன பின்னர் வருத்தப்பட ஆரம்பிக்கிறாங்க. ஸோ...இந்த ஐடியாக்களை விட, உங்களுக்குத் தெரிந்த வேறு ஏதும் ஆலோசனைகள் இருப்பின் நீங்களும் பகிர்ந்து கொள்ளலாம் அல்லவா?
****************************************************************************************************************
படலை என்று சொன்னால் ஈழத்தில் உள்ளோருக்கு நல்ல பரிச்சயம் இருக்கும். வீட்டினுள் நுழைய முன்பதாக வீதிக்கு அருகாக இருக்கும் நுழை வாயிலைப் படலை என்று சொல்லுவார்கள்.
அப்படீன்னா "வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை" எப்படி இருக்கும் என நினைக்கிறீர்களா? வாருங்கள் அங்கே போய்ப் பார்ப்போம்!
படலைக்கு அழகு வேலிகள் இருப்பது தான். தன் மண்ணை விட்டுப் பிரிந்த ஓர் மைந்தனின் உணர்வலைகளினை, நினைவுகளை, அனுபவங்களை இவ் வலைப் பதிவு பேசி நிற்பதால்; இவ் வலைப் பதிவிற்கும் வேலிகள் தொலைத்த ஒர் படலையின் கதை எனும் பெயரைச் சூட்டியிருக்கிறார் ஜேகே அவர்கள். 
பதிவர் ஜேகே அவர்கள் தன்னுடைய வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை வலைப் பூவினூடாக தன் அனுபவங்கள், சுவாரஸ்யமான நினைவலைகள், பரீட்சார்த்த இலக்கிய முயற்சிகளைப் பதிவிட்டு வருகின்றார்.
ஜேகே அவர்களின் வலைப் பூவிற்கும் நீங்கள் ஓய்வாக இருக்கும் போது சென்று வரலாம் அல்லவா?
****************************************************************************************************************

17 Comments:

K said...
Best Blogger Tips

நம்ம தமிழ் கலாச்சாரத்தில ஒரு பழக்கம் இருக்குங்க. வூட்டிற்கு வந்த மருமவள் கண் கலங்க கூடாதுன்னு அப்படியே பொத்திப் பொத்தி ஒரு வேலையும் செய்ய விடாது பூப் போல பாதுகாப்பதுங்க.////////

மச்சி, இதென்னடா புதுக் கதையா இருக்கு? இப்படி எங்கயாச்சும் நடக்குமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

K said...
Best Blogger Tips

மச்சி, தலைப்பு செம செம! நான் வேலைக்குப் போகிறேன்! பாஸ் தூங்கும் போது கமெண்டு போட வர்ரேன்! பாய்!

நிரோஜ் said...
Best Blogger Tips

நீங்க எங்களுடைய யாழ்ப்பாண தமிழை கொலை செய்தது தான் கவலையாக இருக்கிறது .... மத்தப்படி சும்மா படிக்கலாம் ...

எல்லோருக்கும் எண்டு சொல்லிட்டு தனியே கரு தரித்த பொண்ணுங்களுக்கு சொல்லி இருக்கீங்க !!!!

ad said...
Best Blogger Tips

இதப்பத்தி அனுபவமுள்ளவைங்களதான் சார் கேக்கணும்.
எனக்கு ஒரு ஐடியாவுமே வர்ல.

ஜேகே said...
Best Blogger Tips

தலைவரே, இப்ப இப்ப கொஞ்சம் விழிப்புணர்வு வந்து இருக்கு என்று நினைக்கிறேன். எனக்கு தெரிந்த நட்பு வட்டாரங்களில் சிம்ரன்கள் எல்லாம் இப்போது குறைவு. எல்லோரும் நதியா தான்!

அறிமுகத்துக்கு நன்றி நிரூபன்! தலைப்புக்கு விளக்கம் இன்னொருவர் கொடுக்கும் போது அதில் இருக்கும் பெருமை சொல்லிமாளாது. மீண்டும் நன்றிகள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

மச்சி, இதென்னடா புதுக் கதையா இருக்கு? இப்படி எங்கயாச்சும் நடக்குமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
//
இடையில ஒரு வார்த்தையை சேர்த்திருக்கனும் மச்சி,

வீட்டிற்கு வந்த மருமவள் மாசமானதும் கண் கலங்க கூடாது அப்படீன்னு வந்திருக்கனும்,

இதோ மாத்திடுறேன்,
இப்படி நம்ம ஊர் வீடுகளில் இடம்பெறுவது இயல்பு தானே;-))))

நிரூபன் said...
Best Blogger Tips

@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி

மச்சி, தலைப்பு செம செம! நான் வேலைக்குப் போகிறேன்! பாஸ் தூங்கும் போது கமெண்டு போட வர்ரேன்! பாய்!
//
என்னய்யா பாதி சொல்லியும், சொல்லாமலும் ஓடிட்டாய்,
உன்னோட நாலாவது சம்சாரம் மாசமா இருக்கிறா என்று சொன்னியே! இந்த ஐடியா அவங்களுக்கு தேவைப்படாதா?

மேலதிக உடற்பயிற்சி விளக்கம் வேண்ணா, என்னிடம் அனுப்பி வை, கண்டிப்பாக சொல்லி குடுக்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@நிரோஜ்
நீங்க எங்களுடைய யாழ்ப்பாண தமிழை கொலை செய்தது தான் கவலையாக இருக்கிறது .... மத்தப்படி சும்மா படிக்கலாம் ...

எல்லோருக்கும் எண்டு சொல்லிட்டு தனியே கரு தரித்த பொண்ணுங்களுக்கு சொல்லி இருக்கீங்க !!!!//

நண்பா, நம்ம ஊர் பாசை அதிகளவான வாசகர்களுக்கு புரியாது. அதனால தான் லோக்கல் பாசையில் எழுத வேண்டிய நிலமைக்கு ஆளாகிட்டேன்.
அப்புறமா தலைப்பில சொல்லியிருக்கேனே, மாசமான பொண்ணுங்களுக்கு மாத்திரம் தான் இந்த ஐடியான்னு,.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@சுவடுகள்
இதப்பத்தி அனுபவமுள்ளவைங்களதான் சார் கேக்கணும்.
எனக்கு ஒரு ஐடியாவுமே வர்ல.//

ஏலேய் பேரப்புள்ள காணுற வயசில இருந்திட்டு இப்படியா சொல்லுறது?
அவ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@ஜேகே
தலைவரே, இப்ப இப்ப கொஞ்சம் விழிப்புணர்வு வந்து இருக்கு என்று நினைக்கிறேன். எனக்கு தெரிந்த நட்பு வட்டாரங்களில் சிம்ரன்கள் எல்லாம் இப்போது குறைவு. எல்லோரும் நதியா தான்!

அறிமுகத்துக்கு நன்றி நிரூபன்! தலைப்புக்கு விளக்கம் இன்னொருவர் கொடுக்கும் போது அதில் இருக்கும் பெருமை சொல்லிமாளாது. மீண்டும் நன்றிகள்.//

வாங்கோ நண்பா, வாங்கோ!
நன்றி எல்லாம் எதிர்பார்த்து இப்படிப் பண்ணலைங்கோ.
நாம படிச்ச பக்கம் நாலு பேர்க்குத் தெரிஞ்சா சந்தோசம் தானே ஜேகே.

அப்புறமா இப்ப நம்ம உள்ளூர்களிலும் சில இடங்களில் இப்படியான ஆளுங்க இருக்காங்க தானே..
அதே போல ஐரோப்பிய நாடுகளில் அதிக இடங்களில் கணவன் வேலைக்கு போயி மனைவியை வீட்டிற்குள் வைத்து ஊதப் பண்ணும் செயற்பாடுகளும் இருக்கிறது தானே..
அதான் கொஞ்சம் எழுத வேண்டியதாய்ப் போச்சு.

நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும்.

K.s.s.Rajh said...
Best Blogger Tips

வணக்கம் சார் என்ன குடும்பநல ஆலோசகராக மாறிவிட்டீர்களோ?ஹி.ஹி.ஹி.ஹி.

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம் அருமையான விழிப்புணர்வூட்டும் பதிவு!உங்கள்?! ஆலோசனைப்படி மாசமான பெண்கள் நடந்துகொண்டு உங்களுக்குப் பெருமை சேர்க்கவேண்டுமென தந்தைக் குலங்கள் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்!

Yoga.S. said...
Best Blogger Tips

K.s.s.Rajh said...
வணக்கம் சார் என்ன குடும்பநல ஆலோசகராக மாறிவிட்டீர்களோ?ஹி.ஹி.ஹி.ஹி.///உங்கள் போன்ற கன்னிப் பையன்களுக்கு உதவுமே என்று தான்.............................!

ஹேமா said...
Best Blogger Tips

அப்பு ராசா நிரூ...உங்கட பதிவு வேகத்துக்குப் பின்னால என்னால ஓடமுடியேல்ல !

ம்ம்...நல்ல பதிவொன்று.ஆனால் பெண்கள் வாசிச்சால் நல்லது.குழந்தை பிறந்து ஒரு வாரத்திலிருந்தே உடற்பயிற்சி செய்யத்தொடங்கி விடுகிறார்கள் இங்கு.ஊரில் வயிற்றை மெல்லிய சீலையால் கட்டிவிடுவார்கள்.வயிறு பெருக்காமல் இருக்க மிகவும் நல்லது.மற்றது பத்தியக் கறியை இங்கும் கொடுக்கிறார்கள்.இந்த ஊர்களின் காலநிலைக்குச் சரியில்லையென்று இங்குள்ள மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
கோபமாயும் இருக்கிறார்கள்.இதையும் சொல்லி வையுங்கோ நிரூ !

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

மிகவும் நல்ல பதிவு. எதுக்கும் வாசிச்சு வச்சுக்கிறது ஃபியூச்சர்ல யூஸ் ஆகும் இல்லயா? ஹி ஹி

// அம்மாவின் உடம்பும் ஊதிட்டு வர, புள்ளையோட உடம்பும் சும்மா அசுர வேகத்தில ஊதிட்டு வரும். அப்புறம் தாயைப் போல புள்ளை, நூலைப் போல சேலை என்கிற பழமொழியும் சூப்பரா பொருந்திடுமுங்க. //
சூப்பர் தல ...

Unknown said...
Best Blogger Tips

மருமகளை பூப்போலத் தாங்கும்
மாமியார்கள் மிகவும்
குறைவு!

புலவர் சா இராமாநுசம்

Yoga.S. said...
Best Blogger Tips

அப்பு ராசா நிரூ...உங்கட பதிவு வேகத்துக்குப் பின்னால என்னால ஓடமுடியேல்ல !//அதானே?என்னைப்போலை வேலை வெட்டி இல்லாமலிருந்தா இடைக்கிடை ஓடலாம்!ஸ்பீட் கொஞ்சம் கூடித்தான் போச்சுது.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails