இன்றல்ல நேற்றல்ல
மூன்றாண்டுகள் ஆகி விட்டன- ஆனாலும்
முத்துக்குமார் நீ மூட்டிய விடுதலை(த்) தீ
இன்னமும் மிளாசி எரிகிறது!
காங்கிரஸின் கள்ள மௌனம் உடைக்க
கருணாநிதியின் கையாலாகத்தனத்தை
வெளிச்சம் போட்டு காட்டிட;
ஈழ மக்களின் அவலத்தினை
தமிழகம் உணர்ந்து தெளிந்திட;
பார முகமாய் இருக்கும்
தமிழக - மத்திய அரசுகளின்
மனத் திரையின் கொடும் விம்பம் அழிய;
நீ தீயில் வேகினாய் - அப்போது
நாமெல்லாம் எங்கள் தேசத்தின்
அரைவாசித் தூரம் தனை
ஆமியிடம் கொடுத்து
நந்திக் கடலுக்கு மேற்காக
நாதியற்று துடித்திருந்தோம்!
சுற்றிவரக் குண்டு வீச்சுக்கள்
குருதி கொப்பளிக்கையில்
மருந்திட்டு ஆற்ற முடியாது
துடி துடிக்கும்
உயிர்களின் அவல ஒலிகள்;
தமிழன் உயிர் குடிக்கும்
குண்டு வீச்சு விமானங்களின்
அலறல் ஒலிகள் - என எல்லா அவலமும்
எமைச் சூழ்ந்திருந்த வேளையில்
இதயத்தில் இடியாய் எங்கள்
இமயத்திலிருந்து ஓர் சேதி கிடைத்தது!
அது! எமக்காக
உயிர் துறந்த உந்தனது
தியாகச் சேதி!
ஆழத் துயரில்
அவலத்தினைச் சுமந்திருந்த எமக்கு
மீளாத் துயரை கொடுத்ததடா உந்தன் சேதி!
கண்ணீர் வடித்தோம் - கதறி அழுதோம்
கண்ணியவான் உன்னை
காண வரமாட்டோமா என
கவலையுற்றோம் - காந்தியின் தேசத்திலிருந்து
எம் மக்களின் கண்ணீர் துடைப்பதற்காய்
தன்னையே ஆகுதியாக்கிய பூந்தமிழே!
தமிழகத்து விடுதலைப் புயலே!
உனக்காக என்ன கைம்மாறு செய்வோம் என
ஏங்கித் தவிக்கிறோம் - ஏதும் செய்ய
இயாலாதோராய் விம்மி வெடிக்கிறோம்!
முத்துக்குமார் நீ இன்னமும்
விடுதலை பேரோளியாய்
தமிழ் உணர்வாளர்கள் உள்ளங்களில்
பட்டொளி வீசிக் கொண்டிருக்கிறாய் - பதவி
பித்துப் பிடித்த கலைஞரின்
பரதேசித்தனத்தை
உன் விடுதலை தீயால்
பார் அறிய வைத்த பெரு மகனே!
உன் தியாகம் ஓர் நாள் - கள்ள மௌனம் கொண்ட
சோனியாவையும் சுட்டுப் பொசுக்குமடா!!
உன் தற்கொடையை எம்மால்
வார்த்தைகளுக்குள்
இலகுவில் அடக்கிட முடியாதடா!
இன்றும் உன் நினைவுகளுடன்
இருக்கின்றோம் எனச் சொல்ல முடிகிறதே - அன்றி
கொடைச் செல்வமே!!
உன் திரு நாட்டிற்காய்
ஏதும் செய்ய முடியலையேடா!
வருந்துகிறோம் - வாட்டமுற்று ஏங்குகிறோம்!
எமை வழி நடத்த யாரும் இன்றி
நாதியற்று நிற்கின்றோம் -
மறக்கவில்லை உன்னையடா - நீயும்
இன்னமும் இறக்கவில்லையடா!
எம்மோடு கூடவே இருக்கின்றாய் தோழா!!
****************************************************************************************************************
இப் பதிவினூடாக நாம் செல்லவிருப்பது யாருடைய வலைப் பூவிற்குத் தெரியுமா?
பதிவர் மனோவி அவர்களது "என் செய்வேன்" எனும் வலைப் பூவிற்குச் செல்லவிருக்கிறோம். சுவையான + சூடான + சுவாரஸ்யமான விடயங்களைத் தன் வலைப் பதிவில் பகிர்ந்து வருகிறார் மனோவி அவர்கள்.
ஓய்வாக இருக்கும் போது, பதிவர் மனோவி அவர்களின் என் செய்வேன் வலைக்கு நீங்களும் சென்று வரலாம் அல்லவா?
*******************************************************************************************************************
|
35 Comments:
@@ தமிழகத்து விடுதலைப் புயலே!
உனக்காக என்ன கைம்மாறு செய்வோம் என
ஏங்கித் தவிக்கிறோம் - ஏதும் செய்ய
இயாலாதோராய் விம்மி வெடிக்கிறோம்!@@
அசையா நெஞ்சையும் அழ வைக்கக்கூடிய உங்களது ஒவ்வொரு வரிகளிலும் முத்துக்குமார் வாழ்கிறார் என்பதில் சந்தேகமில்லை...
@Kumaran
அசையா நெஞ்சையும் அழ வைக்கக்கூடிய உங்களது ஒவ்வொரு வரிகளிலும் முத்துக்குமார் வாழ்கிறார் என்பதில் சந்தேகமில்லை...
//
வணக்கம் குமரன்,
வாங்கோ,
நல்லா இருக்கிறீங்களா?
தங்களின் உணர்வு பூர்வமான கருத்துக்களுக்கு நன்றி.
அப்புறமா, என்ன புதுப் பதிவு ஒன்னையுமே காணலை!
பதிவுத் தொகுப்புடன் உங்கள் வலை நிற்கிறது.
நிதானமாகத்தான் படிக்க முடிகிறது..சில இடங்களில் நகர முடியவில்லை..ஏதோ ஒன்று தொண்டைக்குழியை அடைக்கிறது...
நீ இறந்திருக்க கூடாது...காரணம் இன்னொரு முறை இறந்துகாட்டி தமிழுணர்வை தூண்ட இங்கு எவருமிலர்..
காரணம் இங்கே உயிர்கள் பிரிந்தால்தான் கொஞ்சமாவது உணர்வு கசிகிறது...
@மயிலன்
நிதானமாகத்தான் படிக்க முடிகிறது..சில இடங்களில் நகர முடியவில்லை..ஏதோ ஒன்று தொண்டைக்குழியை அடைக்கிறது...
//
நினவுகளை மீட்டுவது இயலாத காரியம் தானே நண்பா.

மிகவும் யதார்த்தம் நிரம்பிய வரிகளை உதிர்த்திருக்கிறீங்க.
முத்துக்குமார்,
உன் வீரம் மெச்சினோம்,
மறத்தமிழன் என்றோம்,
உன் தியாகம் போற்றினோம்,
உன்னை உண்மையான போராளி என்றோம்,
உனக்காக கண்ணீர் வடித்தோம்,
இறங்கற் பா பாடினோம்,
கொடிகளை அறை கம்பத்தில்
பறக்கவிட்டோம்,
இதெல்லாம் எதற்காக?
உன்னைப்போல மேலும்
சில முத்துகுமார்கள்
உணர்ச்சி வசப்பட்டு
உயிர் இழக்கவேண்டும் அதற்காக.
இல்லைஎன்றால் தற்கொலை
ஒரு கூடாத செயல் என்றல்லவா
நாங்கள் சொல்லியிருப்போம்.
உன்மேல் ஆழ்ந்த வருத்தங்களுடன்,மற்றும் நிஜமான
கண்ணீருடன்,
பொ.முருகன்.
தற்கொலை செய்துகொள்பவன் கோழை, அவனுக்கு பல்லக்குதூக்கும் நீங்கள்தான் தற்கொலையை தூடுகிரீர்கள்..ஏன் வைகோவோ, சீமானோ..நீங்களோ விடுதலைப்புலிகளுக்காக தற்கொலை செய்துகொள்ளவில்லை ?
@மர்மயோகிதற்கொலை செய்துகொள்பவன் கோழை, அவனுக்கு பல்லக்குதூக்கும் நீங்கள்தான் தற்கொலையை தூடுகிரீர்கள்..ஏன் வைகோவோ, சீமானோ..நீங்களோ விடுதலைப்புலிகளுக்காக தற்கொலை செய்துகொள்ளவில்லை ?
//
வாங்கோ மர்மயோசி,
நான் யாரையும் தற்கொலை செய்யத் தூண்டவில்லை
ஒருவனின் தியாகத்திற்கு எம்மால் ஏதும் செய்ய முடியலையே என்று வருந்தியிருக்கிறேன்,
முத்துக்குமார் தற்கொலை செய்த காரணங்களை வரிசைப்படுத்தியிருக்கிறேனே தவிர,
இங்கே அவர் தற்கொலை செய்வது சரி என்று சொல்லவில்லை!
தற்கொலையினையும் ஆதரிக்கவில்லை.
http://www.thamilnattu.com/2011/08/blog-post_31.html
மேற்படி இணைப்பில்
//தமிழகமே இனி ஒரு போதும் தீக்குளிக்க வேண்டாம்!! அப்படீன்னு எழுதியிருக்கேனுங்க.
ஒருத்தனைக் கொன்று அவன் சாவில் குளிர் காயும் எண்ணம் எனக்கு இல்லைங்க.
முத்துக்குமாருக்கு எனது அஞ்சலி..!!
அவர் எதற்காக இறந்தாரோ அந்த காரணிகள் இன்னும் அப்படியே இருக்கின்றது.. ஆனால் இப்படியான தீக்குளிப்பு சம்பவங்களை ஆதரிக்க முடியாது.. இதை எதிர்த்து நீங்கள் போட்ட பதிவு இன்னும் என் மனதில்..!!
//எதற்காக இறந்தாரோ அந்த காரணிகள் இன்னும் அப்படியே இருக்கின்றது..//
காட்டான் அவர்கள் சொன்னது மிகச்சரி
தீக்குளிப்பை நியாயப்படுத்த முடியாது
போராடி சாகலாம் இனியும்
"மூளி" ?! இன்றுதான் கேள்விப்படுகிறேன் இந்தச் சொல்லை.
மூளி என்று உயிரியலில்தான் படித்த ஞாபகம்.
லட்ச மக்கள்,போராளிகள் அங்கு பலியாகிக்கொண்டிருக்க.. தமிழகத்தில் முத்துக்குமார் போன்றவர்கள் உயிர்க்கொடை செய்துகொண்டிருக்க, கலைஞர் கதிரையை கெட்டியாகப்பிடித்துக்கொண்டிருக்க, ஆட்டம்போட்டவர்கள் ஆடி முடித்தேவிட்டார்கள்.!
தியாகங்களுக்கு இதுவரை ஒரு முடிவு எட்டப்படவில்லையாயினும், என்றேனும் ஓர்நாள் விடிவு பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் அஞ்சலிகள் செலுத்துவோமாக.
நிரூ உங்கள் வரிகள் சிறப்பாக இருக்கு.
தற்கொடை செய்தவரது தியாகத்தைக் கொச்சைப்படுத்தமுடியாது தலைவணங்குகிறேன். ஆனாலும் உயிர்க்கொடையைவிட உயிருடன் இருந்து இறுதிவரை போராடுவதே சிறந்தது.
மாலை வணக்கம் நிரூபன்!உங்கள் தளமூடாக ஈகைப்பேரொளி முத்துக்குமாரனுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.தமிழ் கூறும் நல்லுலகு இருக்கும் வரை மறக்காது அவர்தம் ஈகம்!அருமையான சாட்டையடிக் கவிதைக்கு நன்றிகள்,உங்களுக்கு!!!!
முத்துக்குமாருக்கு எனது வீர வணக்கங்கள்
உலகத்தை திரும்பி பார்க்க வைத்த அவரது தியாகம் ஒருநாள் ((சோனியாவையும் சுட்டுப் பொசுக்குமடா)) என்பது நிறைவேறும் . இவர் உயிருடன் இருந்திருந்தால் இன்னும் பல சாதனைகள் செய்திருப்பார் .முத்துக்குமாருக்கு வீர வணக்கங்கள்.
நீரு பூத்த நெருப்பாய் கனன்று கொண்டிருக்கிறது.உன் நினைவுகள்.
என்றும் அணையாதிருக்கும் இந்த நெருப்பு.
ஆச்சர்யமான விஷயம்.என் செய்வேன் வலையை நேற்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருந்தேன்.
விதியே விதியே என் செய்ய நினைத்தாய் என் தமிழ் சாதியை... இவர் கடிதம் இன்னும் நூறு தலைமுறைத் தமிழர்களுக்கான வேதம்...
@பொ.முருகன்
முத்துக்குமார்,
உன் வீரம் மெச்சினோம்,
மறத்தமிழன் என்றோம்,
உன் தியாகம் போற்றினோம்,
உன்னை உண்மையான போராளி என்றோம்,
உனக்காக கண்ணீர் வடித்தோம்,
இறங்கற் பா பாடினோம்,
கொடிகளை அறை கம்பத்தில்
பறக்கவிட்டோம்,
இதெல்லாம் எதற்காக?
உன்னைப்போல மேலும்
சில முத்துகுமார்கள்
உணர்ச்சி வசப்பட்டு
உயிர் இழக்கவேண்டும் அதற்காக.
இல்லைஎன்றால் தற்கொலை
ஒரு கூடாத செயல் என்றல்லவா
நாங்கள் சொல்லியிருப்போம்.
உன்மேல் ஆழ்ந்த வருத்தங்களுடன்,மற்றும் நிஜமான
கண்ணீருடன்,
பொ.முருகன்.//
நண்பரே! தற்கொலை எதற்கும் தீர்வைத் தராது என்பதனை ஏலவே ஓர் பதிவிலும் சொல்லியிருக்கேன்,.
தங்களின் இக் கருத்தினை நான் நிராகரிக்கிறேன்.
நான் இங்கே கவிதை போட்டிருப்பது ஒரு தியாகியின் ஈகத்தினை நினைவு கூர்ந்தே அன்றி,
அவன் செய்தது போல ஏனையோரும் அவன் வழியை பின்பற்ற வேண்டும் எனும் எண்ணத்தினால் அல்ல!
புரிந்து கொள்ளுங்கள்.
@காட்டான்
அவர் எதற்காக இறந்தாரோ அந்த காரணிகள் இன்னும் அப்படியே இருக்கின்றது.. ஆனால் இப்படியான தீக்குளிப்பு சம்பவங்களை ஆதரிக்க முடியாது.. இதை எதிர்த்து நீங்கள் போட்ட பதிவு இன்னும் என் மனதில்..!!
நல்லதோர் விடயத்தினை நினைவூட்டியதற்கு நன்றி அண்ணர்.
@ஹைதர் அலி
தீக்குளிப்பை நியாயப்படுத்த முடியாது
போராடி சாகலாம் இனியும்//
வாங்கோ சகோ,
உண்மையான கருத்துக்களைச் சொல்லியிருக்கிறீங்க.
நன்றி.
@சுவடுகள்
"மூளி" ?! இன்றுதான் கேள்விப்படுகிறேன் இந்தச் சொல்லை.
//
மூளி என்பது இராட்சசி, இரக்கமற்ற பெண்ணையும் குறிக்கும் என்று சொல்லுவார்கள்.
நீ மூளி அலங்காரி என்று சூர்ப்பனகையினையும் சொல்லியிருக்கிறார்கள்.
மூக்கறுந்த மூளி என்றும் இலக்கியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது சகோ,
கூகிளில் இருக்கிறது இந்த வார்த்தை பற்றிய நிறைய விபரிப்புக்கள்.
@சுவடுகள்
தியாகங்களுக்கு இதுவரை ஒரு முடிவு எட்டப்படவில்லையாயினும், என்றேனும் ஓர்நாள் விடிவு பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் அஞ்சலிகள் செலுத்துவோமாக.
//
உண்மை தான் நண்பரே! விடிவு பிறக்கும் என்ற நம்பிக்கையினைத் தவிர வேறேதும் இல்லையே!
@அம்பலத்தார்
தற்கொடை செய்தவரது தியாகத்தைக் கொச்சைப்படுத்தமுடியாது தலைவணங்குகிறேன். ஆனாலும் உயிர்க்கொடையைவிட உயிருடன் இருந்து இறுதிவரை போராடுவதே சிறந்தது.
//
உண்மை தான் ஐயா,
உயிருடன் இருந்து போராடுவது தான் சிறந்தது.
@Yoga.S.FR
மாலை வணக்கம் நிரூபன்!உங்கள் தளமூடாக ஈகைப்பேரொளி முத்துக்குமாரனுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.தமிழ் கூறும் நல்லுலகு இருக்கும் வரை மறக்காது அவர்தம் ஈகம்!அருமையான சாட்டையடிக் கவிதைக்கு நன்றிகள்,உங்களுக்கு!!!!
//
நன்றி ஐயா..
@Mahan.Thamesh
முத்துக்குமாருக்கு எனது வீர வணக்கங்கள்
//
நன்றி நண்பரே.
@♥ !முனைங்♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ !
உலகத்தை திரும்பி பார்க்க வைத்த அவரது தியாகம் ஒருநாள் ((சோனியாவையும் சுட்டுப் பொசுக்குமடா)) என்பது நிறைவேறும் . இவர் உயிருடன் இருந்திருந்தால் இன்னும் பல சாதனைகள் செய்திருப்பார் .முத்துக்குமாருக்கு வீர வணக்கங்கள்.
//
நன்றி நண்பா..
காலங் கை கூடும் என காத்திருப்போம்.
@கோகுல்
நீரு பூத்த நெருப்பாய் கனன்று கொண்டிருக்கிறது.உன் நினைவுகள்.
என்றும் அணையாதிருக்கும் இந்த நெருப்பு.//
நன்றி நண்பா.
@கோகுல்
ஆச்சர்யமான விஷயம்.என் செய்வேன் வலையை நேற்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருந்தேன்.
//
ஆய்...சேம் சேம் பப்பு சேம்.
@மரு.சுந்தர பாண்டியன்
விதியே விதியே என் செய்ய நினைத்தாய் என் தமிழ் சாதியை... இவர் கடிதம் இன்னும் நூறு தலைமுறைத் தமிழர்களுக்கான வேதம்...
//
நண்பரே மேற்படி கவிஞர் வைரமுத்துவின் வரிகள் வீழமாட்டோம் எனும் இசை ஆல்பத்தில் மாணிக்க விநாயகம் அவர்களின் குரலில் பாடி ஈழத்திற்கு 2005ம் ஆண்டு அனுப்பப்பட்டிருந்தது.
அப் பாடலை நினைவூட்டிய தங்களுக்கு நன்றி.
//ஒருவனின் தியாகத்திற்கு எம்மால் ஏதும் செய்ய முடியலையே என்று வருந்தியிருக்கிறேன்//
i dont think that this is kind of THIYAAGAM!!
Post a Comment