தமிழரின் பாரம்பரிய கலைகள், தமிழர் விளையாட்டுக்கள் எவை என்று இன்றைய சமுதாயத்திடம் கேள்வி கேட்டால் ஒருவரை ஒருவர் பார்த்து முழிக்கின்ற நிலையில் தான் எமது சமுதாயத்தினர் உள்ளார்கள் எனலாம். இதற்கான பிரதான காரணம் தமிழரின் கலைகள் பற்றிய பரிச்சயம் இன்றைய இளைய சமுதாயத்திடமிருந்து அந்நியப்படுகின்றது என்பதேயாகும். தமிழரின் பூர்வீக விளையாட்டுக்களும், தமிழர் கலாச்சாரத்தினைப் பிரதிபலிக்கும் கலைகளும், கால ஓட்டத்தில் எமது சமூகத்தின் கவனிப்பாரற்ற நிலையினால் அழிந்து போகின்றன அல்லது மருவிச் செல்கின்றன எனலாம். ஆரம்ப காலங்களில் தமிழ்ப் பெருமன்னர்களாலும், கிராமங்கள் தோறும் இருந்த அமைப்புக்களாலும், குழுக்களாலும் வளர்த்தெடுக்கப்பட்ட இந்தக் கலை அம்சங்கள் இன்றைய காலத்தில் ஆதரிப்பார் யாருமின்றி அழிவடையும் நிலையில் இருக்கின்றன.
தமிழர்களின் சிறப்பு நிகழ்வுகளான தைப் பொங்கல், சித்திரை வருடப் பிறப்பு மற்றும் இதர பண்டிகை நிகழ்வுகளின் போதெல்லாம் நகர்ப் புறங்களை விட கிராமப் புறங்களினூடாகத் தான் இந்தப் பாரம்பரியக் கலைகள் வளர்த்தெடுக்கப்பட்டன. இவை யாவும் முன்பொரு காலத்தில் வெறும் பண்டிகைக் கால விழாக்கள், விளையாட்டுக்களாக இருக்காது மக்கள் அனைவரது வாழ்வியலோடும் ஒன்றித்த/ பின்னிப் பிணைந்த அன்றாடம் இடம் பெறும் கலை நிகழ்வுகளாகவே இருந்தன.இன்றளவில் எமது சந்ததியைப் பொறுத்த வரை பண்டிகைக் காலங்களின் போது தூசு தட்டிக் கொண்டாடுகின்ற நிலையில் தான் இந்த தமிழர் விளையாட்டுக்களும், தமிழர்களின் கலைகளும் இருந்து வருகின்றன.
முன்னைய காலத்தில் மக்களின் பொழுது போக்கு அம்சங்களாக தொலைக்காட்சிகளும், ஈஸ்ட்மெண்ட் கலர் படங்களும் இருந்த போது அவற்றுக்கு நிகரான அதே அந்தஸ்த்தினைப் பெற்ற பொழுது போக்கு அம்சங்களாக கூத்தும், பொம்மலாட்டமும் மற்றும் இதர தமிழர்களின் கலைகளும் சிறந்து விளங்கின. காலஞ் செல்லச் செல்ல வீட்டுக்கு வீடு தொலைக்காட்சி என்ற நிலமை உருவாகத் தொடங்க, இலத்திரனியல் ஊடகங்களின் வருகையானது தமிழர்களின் வீடுகளின் நுழை வாயிலை அலங்கரிக்கத் தொடங்கியது. இதனால் எம்முடைய அரும் பெரும் சொத்தான பாரம்பரியக் கலைகள் எம்மை விட்டு அந்நியப்பட ஆரம்பித்தன. இன்றளவில் கிராமங்களில், இலத்திரனியல் ஊடகங்களின் செல்வாக்கு இல்லாத பிரதேசங்களில் தான் எம் பாரம்பரியக் கலைகள் பொழுதுபோக்கு அம்சங்களாகச் சிறந்து விளங்குகின்றன.
சில பாரம்பரியக் கலைகளை ரசிப்பதற்கு நாம் விரும்பினாலும் அவை எமக்கு அண்மையில் இடம் பெறுவது இல்லை. பல மைல் தூரம் பயணஞ் செய்து குக் கிராமங்களிற்குச் சென்று தமிழர்களின் அரிய சொத்துக்களான இக் கலைகளை ரசிக்க வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். நகர்ப்புறங்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையின் போதும், இறப்பு வீடு நிகழ்வுகளிலும் தான் அத்தி பூத்தாற் போல எங்காவது ஓர் இடத்தில் எம் பாரம்பரியக் கலைகள் அரங்கேறுகின்றது. நகர்புறங்களிலும், கிராமப் புறங்களிலும் இன்று ஓர் கூத்து நிகழ்வினையோ அல்லது பாரம்பரியக் கலை வடிவத்தினையோ அரங்கேற்றும் போது தமிழ் மக்களாகிய நாம் அவற்றினை ரசிப்பதனை தவிர்த்து டீவிப் பெட்டியினைக் கட்டிப் பிடித்து சின்னத்திரையுடன் சிக்குப்பட்டிருக்கிறோம்.
சினிமாவினூடாக எம் கலைகள் உலகறியச் செய்யப்பட்டிருக்கின்றனவே. ஆவணப்படுத்தப்பட்டுள்ளதே என யாராவது கருத்துக்களை முன் வைக்கலாம். ஆனால் எமது கலைகளைப் பற்றிய தெளிவான விவரணத் தொகுப்பினை தமிழ் சினிமா இன்னமும் முன் வைக்கவில்லை என்றே கூறலாம். வியாபார நோக்கில் இன்றைய போட்டி நிறைந்த சினிமா உலகில் பல்வேறுபட்ட விடயங்களைக் கருப் பொருளாகக் கொண்டு படம் எடுக்கும் இயக்குனர்கள் கூட பாரம்பரியக் கலைகளைப் பற்றிப் பேசுகின்ற படம் எடுப்பதற்கு முயற்சிக்காத நிலையே காணப்படுகின்றது. இதற்கான பிரதான காரணம் எமது மக்களின் மனோ நிலையே எனலாம். சினிமாவிற்குள்ள முக்கியத்துவத்தினைப் போன்று எமது இன்னோர் சந்ததி இன்று சின்னத் திரைக்குள் தம்மை தொலைத்திருக்கிறது.
இந்தச் சின்னத் திரையூடாக தமிழர் விளையாட்டுக்களை விவரணத் தொகுப்புக்களாக (டாக்கிமெண்டரி வடிவில்) வெளியிடுவதற்கு இதுவரை யாரும் முயற்சி செய்ததாக தெரியவில்லை. சின்னத்திரையின் கண்ணீர் காவியங்களுக்குள் தம்மைத் தொலைத்த எம் சமூகமானது; இரவில் ஊரின் எங்காவது ஓர் ஒதுக்குப் புறத்தில் நிகழும் தமிழரின் கலாச்சார நிகழ்வினைப் பார்த்து மகிழத் தயாராக இல்லை என்பதே இன்றைய யதார்த்தம். ஆக சினிமாவும், சின்னத்திரையும் தமிழர்களின் கலைகளின் சீரழிவிற்குத் தான் வழி வகுத்திருக்கின்றன. தமிழர் என்ற நாமத்திற்கான அடையாளமாக விளங்கும் கலைகளின் வளர்ச்சியானது எமது இதர பொழுதுபோக்கு அம்சங்களினூடாக எம்மை விட்டு அந்நியப்பட்டுக் கொண்டே போகின்றது. "அழிந்து செல்லும் எமது கலைகளை அடுத்த சந்ததியிடம் பத்திரமாக கொண்டு செல்ல அரசும், கலை கலாச்சார அமைப்புக்களும் உதவி செய்யாதா?" எனும் ஏக்கத்தில் தான் தமிழர்களின் மன உணர்வு இன்றளவில் இருக்கின்றது.
|
25 Comments:
அப்பாடா, நல்ல போஸ்ட்
>>இந்தச் சின்னத் திரையூடாக தமிழர் விளையாட்டுக்களை விவரணத் தொகுப்புக்களாக (டாக்கிமெண்டரி வடிவில்) வெளியிடுவதற்கு இதுவரை யாரும் முயற்சி செய்ததாக தெரியவில்லை.
புஷ்பவனம் குப்புசாமி குரூப் 2 படம் எடுத்துட்டாரே?
என் இனிய வணக்கம் நண்பரே,
அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய சிறப்பான பதிவு.
@@ தமிழரின் பாரம்பரிய கலைகள், தமிழர் விளையாட்டுக்கள் எவை என்று இன்றைய சமுதாயத்திடம் கேள்வி கேட்டால் ஒருவரை ஒருவர் பார்த்து முழிக்கின்ற நிலையில் தான் எமது சமுதாயத்தினர் உள்ளார்கள் எனலாம்.@@
இந்த அனுபவம் எனக்கும் உண்டு. ஆனால், இது எல்லாம் எவ்வளவு பெரிய அறியாத்தனம் என்பதை பிறகு உணர்ந்துக்கொண்டேன்.
இன்றைய தேதியில் சினிமா மிக பெரிய ஊடக சக்தியாக விளங்குகிறது..இதன் வழி பாரம்பரிய கலைகளை கண்டிப்பாக மக்களின் கவனத்துக்கு கொண்டு வர முடியும்.ஆனால், இதை எல்லாம் செய்யத்தான் யாரும் முன்னுக்கு வர மறுக்கிறார்கள்.மலேசிய தமிழர்கள் மத்தியிலும் நமது கலைகளை பற்றிய விழிப்புணர்களும் அறிவும் இல்லாது போய் வருவதை பார்க்கும் பொழுது வருத்தத்தை அளிக்கிறது.கண்டிப்பாக இந்த சூழல் மாற வேண்டும்..
என்னால் இயன்றவரை இந்த பதிவை பிறருக்கு அறிமுகம் செய்கிறேன்.நன்றி.
//சினிமா & சின்னத்திரை மூலம் சீரழியும் பாரம்பரிய கலைகள்//
சரியாக சொன்னிர்கள் - நன்றி. இதை மாற்றுவது எப்படி?
ஊடகம், அரசு நினைத்தால் முடியும் - நினைப்பார்களா?????
ஒரு காலத்தில் இந்தக்கலைகள் யாழ்ப்பாணத்தில் உயிர்ப்போடிருந்தன என நினைக்கிறேன். (95 வரை) குறிப்பாக 'தெருக்கூத்து!'
ஒரு 'மெசேஜ்' சொல்வதற்கு, உருவகங்கள் மூலமா கதை சொல்வதற்கு சிறந்த ஊடகமாக தெருக்கூத்து இருந்தது! இனி அதை எல்லாம் காணமுடியாது!
சிறந்த கருத்துக்கள் அடங்கிய பதிவு மச்சி...
வணக்கம் நிரூபன்!அப்படி ஒரேயடியாக பாரம்பரியக் கலைகள் மறக்கப்பட்டு விட்டன,சின்னத் திரையால் என்றும் சொல்லிவிட முடியாது!அப்பப்போ,பெரிய திரைகளில் பாரம்பரிய வீரவிளையாட்டுகளை முன்னிறுத்தி காட்சிகள் அமைக்கப்பட்டே வருகின்றன."ஆடுகளம்"உதாரணம்!சில சின்னத்திரைக் காவியங்களில் பாரம்பரிய விளையாட்டுக்கள் உண்டுதான். நீங்கள் சொல்வதுபோல் "சில"பாரம்பரிய பழக்க வழக்கங்கள்,வீர விளையாட்டுகள், கலைகள் மறக்கப்பட்டு விட்டன தான்!
த.ம 6
வணக்கம் சகோதரரே,
முதலில் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படி ஒரு பதிவை தங்களிடமிருந்து எதிர்பார்த்தே காத்திருந்தேன்.
தமிழ்க் கலைகளின் இன்றைய நிலையை அப்படியே சொல்லி
இருக்கிறீர்கள்.
இன்றைய தலைமுறையை குற்றம் சொல்லி எந்த பிரயோசனமும் இல்லை.
அன்றொரு காலத்தில் கல்வியர்வு இல்லாத காலத்தில் தோளைத் தொடர்பு
சாதனங்கள் இல்லாத காலத்தில் கலைகள் மேலோங்கி இருந்தன.
ஆனால் இன்றைய நிலை அப்படியா???
பலகோடி செய்திகளை ஒரு சிறிய சிப் (chip )போட்டு அடைத்து விடுகிறார்கள்.
காலத்துக்கு தகுந்த மாற்றங்களை கலைகள் செய்திருக்க வேண்டும்.
அதை கலைஞர்கள் செய்திருக்க வேண்டும்.
அதை...
சில கலைஞர்கள்
அதாவது...
வில்லுப்பாட்டு
கரகாட்டம்
கோலாட்டம்
போன்ற சில கலைஞர்கள்
மட்டுமே மாற்றி வடிவமைத்து
இன்றும் வாழவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் கண்ணுக்கே தெரியாமல் பல
கலைகள் மடிந்து போய்விட்டன என்றே சொல்லலாம்.
இன்றைய ஊடகத்தை எடுத்துக்கொண்டால்...
கலைகளை அவர்கள் வாழவைக்க வேண்டாம் குறைந்தபட்சம்
தோண்டிப் புதைக்காமல் இருந்தாலே சரி...
கலைகளை கொச்சை படுத்திக் கொண்டிருக்கிறார்கள்
"""" அவள் பெயர் தமிழரசி"""""
என்றொரு படம்
அதில் பாவைக் கூத்தை அழகாக காட்டி இருப்பார்கள்..
படம் ஓடியதா?????
ஏன் ஓடவில்லை?????
இன்றைக்கு தமிழ்க் கலைகளை ஊடகங்கள்
காண்பிக்கும் பொழுது
கூத்தும் கும்மாளமுமாக காண்பிக்கிறார்கள்...
குடித்து கூத்தடிப்பதற்கு கலைகளை
பயன்படுத்தவேண்டுமா???
போக்குகள் மாறவேண்டும்.
கலைகள் வாழவேண்டும்..
எம்மால் முடிந்ததை செய்வோம்.
@சி.பி.செந்தில்குமார்
அப்பாடா, நல்ல போஸ்ட்
//
முதல் வருகைக்கு நன்றி பாஸ்..
நெசமாவா சொல்றீங்க நல்ல போஸ்ட் என்று.
அவ்வ்வ்வ்
@சி.பி.செந்தில்குமார்
>>இந்தச் சின்னத் திரையூடாக தமிழர் விளையாட்டுக்களை விவரணத் தொகுப்புக்களாக (டாக்கிமெண்டரி வடிவில்) வெளியிடுவதற்கு இதுவரை யாரும் முயற்சி செய்ததாக தெரியவில்லை.
புஷ்பவனம் குப்புசாமி குரூப் 2 படம் எடுத்துட்டாரே?//
அண்ணே பெருமளவில் யாரும் முயற்சிக்கவில்லை!
ஆனால் பதிவில் ஒரு சிலர் திரையூடாக கிராமியக் கலைகளை காண்பிக்க முயற்சித்திருக்காங்க என்று சொல்லியிருக்கேன்.
@Kumaran
நண்பா, எனக்கும் பாரம்பரியக் கலைகள் தொடர்பான பரிச்சயம் குறைவாகத் தான் இருக்கிறது.
ஏனைய நண்பர்களோடு பழகும் போது தான் பாரம்பரியக் கலைகள் பற்றிப் பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.
தங்களின் நல் முயற்சிக்கு நன்றிகள்.
@மனசாட்சி
ஊடகம், அரசு நினைத்தால் முடியும் - நினைப்பார்களா?????
//
அவர்கள் மனசு வைக்கனும் என்பது தான் எனது ஆசை!
பார்ப்போம்.
@சசிகுமார்
சிறந்த கருத்துக்கள் அடங்கிய பதிவு மச்சி...
//
நன்றி நண்பா.
@Yoga.S.FR
வணக்கம் நிரூபன்!அப்படி ஒரேயடியாக பாரம்பரியக் கலைகள் மறக்கப்பட்டு விட்டன,சின்னத் திரையால் என்றும் சொல்லிவிட முடியாது!அப்பப்போ,பெரிய திரைகளில் பாரம்பரிய வீரவிளையாட்டுகளை முன்னிறுத்தி காட்சிகள் அமைக்கப்பட்டே வருகின்றன."ஆடுகளம்"உதாரணம்!சில சின்னத்திரைக் காவியங்களில் பாரம்பரிய விளையாட்டுக்கள் உண்டுதான். நீங்கள் சொல்வதுபோல் "சில"பாரம்பரிய பழக்க வழக்கங்கள்,வீர விளையாட்டுகள், கலைகள் மறக்கப்பட்டு விட்டன தான்!
//
ஐயா..பெரிய திரைகளில் பாரம்பரியக் கலைகளைப் பற்றிய பேச்சுக்கள் அத்தி பூத்தாற் போலத் தானே வருகின்றன!
அதனையு பதிவில் சொல்லியிருக்கேன்!
யாரும் மேலை நாட்டவர்களைப் போன்று
அழிந்து செல்லும் கலைகளை ஆவணப்படுத்தி documentaries வடிவில் எமது இளைய சந்ததியிடம் எடுத்துச் செல்லவில்லைத் தானே ஐயா.
@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
த.ம 6
//
யோவ்..
நாதாரி..ஏன்யா டெம்பிளேட் கமெண்ட் போட்டு கொல்லுறாய்!
திருந்தவே மாட்டியா?
@ஜீ...
ஒரு காலத்தில் இந்தக்கலைகள் யாழ்ப்பாணத்தில் உயிர்ப்போடிருந்தன என நினைக்கிறேன். (95 வரை) குறிப்பாக 'தெருக்கூத்து!'
ஒரு 'மெசேஜ்' சொல்வதற்கு, உருவகங்கள் மூலமா கதை சொல்வதற்கு சிறந்த ஊடகமாக தெருக்கூத்து இருந்தது! இனி அதை எல்லாம் காணமுடியாது!
//
சகோ...வன்னியில் 2008ம் ஆண்டு வரை தெருக் கூத்து வழக்கத்திலிருந்தது.
உண்மையில் இன்று எல்லாமே காலச் சூழலில் மருவி விட்டது.
@மகேந்திரன்
முதலில் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படி ஒரு பதிவை தங்களிடமிருந்து எதிர்பார்த்தே காத்திருந்தேன்.
தமிழ்க் கலைகளின் இன்றைய நிலையை அப்படியே சொல்லி
இருக்கிறீர்கள்.
இன்றைய தலைமுறையை குற்றம் சொல்லி எந்த பிரயோசனமும் இல்லை.
அன்றொரு காலத்தில் கல்வியர்வு இல்லாத காலத்தில் தோளைத் தொடர்பு
சாதனங்கள் இல்லாத காலத்தில் கலைகள் மேலோங்கி இருந்தன.
ஆனால் இன்றைய நிலை அப்படியா???
பலகோடி செய்திகளை ஒரு சிறிய சிப் (chip )போட்டு அடைத்து விடுகிறார்கள்.
காலத்துக்கு தகுந்த மாற்றங்களை கலைகள் செய்திருக்க வேண்டும்.
அதை கலைஞர்கள் செய்திருக்க வேண்டும்.
//
அண்ணே, உங்களின் மேலான கருத்துக்களுக்கு ரொம்ப நன்றி.
உண்மையிலே எமது தகவல் தொடர்புத் துறை அமைச்சும், அரசும் நினைத்தால் இக் கலைகளை ஆவணபடுத்தி அடுத்த சந்ததியிடம் எடுத்துச் செல்லலாம் என்பதே என் கருத்தும்!
பார்ப்போம்! யாராவது கண் திறக்கிறார்களா என்று?
@மகேந்திரன்
இன்றைய ஊடகத்தை எடுத்துக்கொண்டால்...
கலைகளை அவர்கள் வாழவைக்க வேண்டாம் குறைந்தபட்சம்
தோண்டிப் புதைக்காமல் இருந்தாலே சரி...
கலைகளை கொச்சை படுத்திக் கொண்டிருக்கிறார்கள்
//
உண்மை தான் அண்ணா,
ஊடகங்கள் தம் பார்வையினைப் பாரம்பரியக் கலைகளின் பக்கம் திருப்பாது, அவற்றைக் கொச்சைப்படுத்துகின்றன எனும் கருத்தினை ஏற்றுக் கொள்கிறேன்.
@மகேந்திரன்அவள் பெயர் தமிழரசி"""""
என்றொரு படம்
அதில் பாவைக் கூத்தை அழகாக காட்டி இருப்பார்கள்..
படம் ஓடியதா?????
ஏன் ஓடவில்லை?????
இன்றைக்கு தமிழ்க் கலைகளை ஊடகங்கள்
காண்பிக்கும் பொழுது
கூத்தும் கும்மாளமுமாக காண்பிக்கிறார்கள்...
குடித்து கூத்தடிப்பதற்கு கலைகளை
பயன்படுத்தவேண்டுமா???
போக்குகள் மாறவேண்டும்.
கலைகள் வாழவேண்டும்..
எம்மால் முடிந்ததை செய்வோம்.//
நல்ல கருத்துக்கள் அண்ணா,
எம்மால் இயன்றதைச் செய்வோம்.
நிரூபன் said...
யாரும் மேலை நாட்டவர்களைப் போன்று
அழிந்து செல்லும் கலைகளை ஆவணப்படுத்தி documentaries வடிவில் எமது இளைய சந்ததியிடம் எடுத்துச் செல்லவில்லைத் தானே ஐயா.////உன்மைதான்,விவரண வடிவில்(documentaries)படங்களாக தொகுக்கவில்லை தான்!வருமானம் கிட்டாதே????
கலை ரசனையுடன் உடலும் உளவியலும் கூட இவ்வாறான நவீனத்துவங்களால் பாதிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன.
கணவன் மனைவி இடையே தேவையற்ற பிரச்சனைகள்,சந்தேகம் போன்றன தோன்றுவதில் இந்த சின்னத்திரை சீரியல்கள் முக்கிய பங்கு வகிப்பதாக ஒரு உளவியல் மருத்துவரோ/குடும்ப வழக்குகள் தொடர்பான நீதிபதியோ கூறியிருந்ததாக ஒரு சஞ்சிகையில் படித்த ஞாபகம்.
ஒரேயடியாக தொலைக்காட்சிக்குள்ளேயே வாழ்க்கையைத் தொலைத்துக்கொண்டிருப்பதால்,பல உடற் கோளாறுகள்கூட ஏற்படுகின்றன.சோம்பேறித்தனமும் வளர்கிறது.
ஆனால்,நமது கலைகளைப்பற்றி ஏதாவது வாய்திறந்து பேசினால்க்கூட - வயது போனதுகள் (முதியவர்கள்-பழசுகள்)மாதிரி கதைக்கிறாய், ஸ்ரைல் தெரியாம இருக்கிறாய், வேஸ்ட்,... இப்படியான கேலிகளுக்கெல்லாம் முகம் கொடுக்கவேண்டியிருக்கிறது.
மிர்தங்கம் பழகுவது வேஸ்ட்/ ஸ்டைல் இல்லை. ட்ரம்ஸ் பழகுவதுதான் மதிப்பு.- என்ற ரீதியிலான கொள்கையுடன் நம்மவர்கள் பலர் சுயத்தைத் தொலைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
பதிவில் பிரசுரமாகியிருக்கும் புகைப்படத்தைப்பார்க்கும்போதுதான் ஒரு எண்ணம் வருகிறது.அதாவது,
நாட்டுக்கூத்தில் ஒருவர் மேற்சட்டை அணியாமல் ,கீழே பாரம்பரிய உடை உடுத்து ஆடினால், அது நாகரீகமற்றதும் அழகற்றதுமான செயல்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியிலோ விளம்பரத்திலோ சினிமாவிலோ தோன்றுபவர்கள்- ஆண் பெண் பேதமின்றி, அனைவரும் உள்ளாடைகளுடன் ஆடினால், அது ஸ்டைல். அதுதான் உலகப்புகழ் பூத்த மிலேனியம் நாகரிகம்.!?
இதுதான் நம்மவர்களது ஃபேஸன்.
Post a Comment