இயந்திரமயமான உலகில் இன்று எம்முடன் கூட வந்து கொண்டிருப்பவை இலத்திரனியல் ஊடகங்கள் என்றால் மிகையாகாது. எமக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் காகிதாதிகள் மூலம் உருவாகும் படைப்புக்களை விட, அப் படைப்புக்களின் இலத்திரனியல் வடிவங்களைப் படிப்பதற்கு தான் நேரம் கிடைக்கின்றது. இதனால் புகழ் பூத்த பல சஞ்சிகைகள், பத்திரிகைகள் எல்லாம் இணையத்த்தின் இணையில்லா வளர்ச்சிக்கு ஏற்றாற் போல மின் நூல்களாகத் தம்மை மாற்றிக் கொள்ள ஆரம்பித்து விட்டன. வாரந் தோறும் "அம்பலத்தார் பக்கங்கள்" வலைப் பதிவின் சொந்தக்காரர் "திரு. பொன்னர் அம்பலத்தார்" அவர்கள் பதிவர்களின் படைப்புக்களை விமர்சனங்களால் அலங்கரித்து பகிர்ந்து வருகின்றார். அவரது இந்த வார விமர்சனம் யாருடைய படைப்புக்களைத் தாங்கி வருகின்றது என்று பார்ப்போமா?வாருங்கள், பதிவிற்குள் நுழைவோம்.
அத்தி பூத்தாற்போல அபூர்வமாக எழுதும் அபூர்வ பதிவர்:
மூன்றாம் விதி: சாய் பிரசாத் என்பவரது வலைப்பூ. அவரது வலைப்பூவிற்கு செல்லும் முன் அவரைப் பற்றியும் ஒரு சில வார்த்தைகள் சொல்ல வேண்டும். சென்ற வருட கடைசியில் நான் முகப் புத்தகதில் எழுதிய எனது நிலைக் குறிப்பு ஒன்றில் (Facebook Status); எனக்கு முன்பே பரிச்சயம் இல்லாத இந்த சாய் பிரசாத் என்னுடன் முரண்பட்டு கருத்துக்களை முன் வைத்திருந்தார். ஒத்து ஒரே தாளக் கதியில் ஆமா போடுபவர்களை விட; முரண்பட்டு மாற்று கருத்துக்களை முன்வைப்பவர்களை எனக்கு அதிகம் பிடிக்கும். ஆரோக்கியமான முரண்களும், விவாதங்களும் புதிய பாதைகளை திறந்து பரந்த அறிவை வளர்த்துக்கொள்ள உதவும் என்ற நம்பிக்கை என்றும் எனக்கு உண்டு.அவரது முரண்பாடு என்னை அவரைப்பற்றி அறியத் தூண்டியது. அப்பொழுது தான் முதன் முதலாக "மூன்றாம் விதி" வலைப்பூவை படித்தேன்.
சில பதிவர்கள் பன்னி (பன்றி)குட்டி போட்டது போல இஷ்டப்பட்ட போதெல்லாம் நிறைய பதிவுகளை எழுதிக் கொண்டிருப்பார்கள். ஆனால் படிக்கும் வாசகர்கள் இவனெல்லாம் எதுக்கு பதிவு எழுதுகிறான் என்று தலையில் அடித்துக் கொள்வார்கள். இன்னும் ஒரு வகைப் பதிவர்கள் அத்தி பூத்தாற் போல எப்பொழுதாவது அபூர்வமாகப் பதிவிடுவார்கள். ஆனால் இவர்களது பதிவுகள் "இந்தப் பதிவர் தனது அடுத்த பதிவை எப்போது போடுவார்” என்ற எதிர்பார்ப்பை உண்டு பண்ணும். பிரசாத்தினுடைய பல பதிவுகள் இந்த எதிர்பார்ப்பை தூண்டுகின்றன.
மூன்றாம் விதியில் முதன்முதலாக நான் படித்த பதிவு தொலைபேசியை தொலைத்த அழகி. அந்தப் பதிவு அவருள் இருக்கும் ஒரு நல்ல கதை சொல்லியை வெளிக்காட்டியுள்ளது. அவரது பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்ததுவும் இது தான். அந்தக் கதையை சொல்லிச் சென்ற பாணியில் இருந்த ஆளுமையும் ஈர்ப்பும், அவர் தொடர்ந்து கவனம் செலுத்தி எழுதினால் அவரால் நல்ல படைப்புக்களை தரமுடியும் என்ற நம்பிக்கையை தருகிறது.
துப்பாக்கிகளின் காலம்: இதைப் பற்றிச் சொல்ல முதல் எனக்கிருக்கும் ஒரு சிக்கலையும் சொல்லிவிட வேண்டும். புதுக்கவிதை, பின் நவீனத்துவ கவி வரிகள்,மற்றும் வெறும் வார்த்தைக் கோர்வைகள்;இவற்றை வகைப்படுத்துவதில் அடிக்கடி எனக்கு ஒரு திணறல் இருக்கும். இது எனக்கு இந்த விடயங்களில் இருக்கும் அறிவீனமா?அல்லது என்னைப் போல பலருக்கும் இதே சிக்கல் தானோ? எனும் ஐயத்தினை ஏற்படுத்தும். இதற்கான விடை இன்னமும் தெரியவில்லை. ஆனால் எது எப்படியோ அவற்றில் நல்ல கருத்து, வாசகர்களை ஈர்க்கும் வார்த்தை பிரயோகம் போன்றவை இருந்தால் ரசித்துப் படிப்பேன். "துப்பாக்கிகளின் காலம்" பதிவிலும் இதே சிக்கல் தான் எனக்கு இருக்கிறது. இப் பதிவும் எந்த வகை என்று தெரியவில்லை. ஆனாலும் வார்த்தை பிரயோகமும் அந்த வார்த்தைகளின் பின் இருந்த கருத்தும் மனதை தொட்டு விட்டது.

"ஒஸ்தி, மயக்கம் பட விமர்சனங்கள்" - விமர்சனம் எழுதுவதில் அவர் ஒரு கத்துக்குட்டி என்பதை உணர்த்துகிறது.
"நியூ ஜப்னா (new jaffna.com) எனும் ஆபாச வலைத்தளம்; பற்றிய தனது பதிவில்,சாய் பிரசாத் அவர்கள்; ஊடகத்துறையினருக்கும், இணையத்தளங்கள் நடத்துவோரிற்கும் இருக்கும்/ இருக்க வேண்டிய சமூகப் பொறுப்புணர்வை வலியுறுத்துவதுடன் தனி மனித சுதந்திரத்தில் ஊடகங்கள் மூக்கை நீட்டுவதை கடுமையாக சாடி இருக்கின்றார்.

"எங்களிற்கு இரண்டு மாவீரர் தினம்" பதிவினூடாக எமது சமுதாயத்தின் மீது இருக்கும் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார். இவ் இரு பதிவுகளும் அவரது சமூகத்தின் மீதான அக்கறை நிரம்பிய பதிவுகளின் வீரியத்தினை வெளிப்படுத்துகிறது எனலாம்.
பல பதிவுகளிலும் பிரசாத்தினது வார்த்தை பிரயோகங்கள் படிக்கும் வாசகரது மனச்சாட்சியை உலுப்பிவிடுகிறது. இன்றைய வியாபார உலகில் சுமாரான பொருளாக இருந்தாலும் தகுந்த வியாபார உத்திகளினாலும், சிறந்த விளம்பரங்களினாலும் அமோகமாக விற்றுவிடலாம்.இது வியாபாரத்தில் மட்டுமன்றி வேறு பலவிடயங்களுக்கும் பொருந்தும். மூன்றாம் விதியும் மிகவும் ஆரம்ப நிலை பதிவரது வலைப்பூ போன்று நேர்த்தியாக வடிவமைக்கப்படாது இருக்கிறது. இனி மேலாவது அவர் வலைப்பூவின் தோற்றத்தை பலரையும் கவரும் வண்ணம் சிறப்பாக வடிவமைப்பார் என எண்ணுகிறேன்.
எத்தனையோ சிறந்த பதிவர்கள் தமது படைப்புக்களை அதிகமான வாசகர்களிடம் கொண்டு செல்ல முடியாமல் கால ஓட்டத்தில் தொலைந்து போகிறார்கள். மூன்றாம் விதியும் திரட்டிகள், முகப் புத்தகம் போன்றவற்றில் இணைக்கப்படாமல் தேடுவாரற்று ஏதோ ஒரு மூலையில் கிடப்பது வேதனை தருகிறது. இனிவரும் காலங்களில் மூன்றாம் விதி மேலும் பல சிறந்த பதிவுகளுடன் அதிக மக்களை சென்றடைய வாழ்த்துக்கள் பிரசாத்.

இவ் விமர்சனத்தில் இணைக்கப்பட்டுள்ள ஒவ்வோர் பதிவின் கீழும் கிளிக் செய்வதன் ஊடாக நேரடியாக மூன்றாம் விதி வலைப் பூவில் உள்ள பதிவின் தொடர்ச்சியினைப் படிக்க முடியும்.
மீண்டும் மற்றுமோர் பதிவரது படைப்புக்களைப் பற்றிய விமர்சனப் பார்வையூடாக உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை, உங்களிடமிருந்து தற்காலிகமாக விடை பெற்றுக் கொள்வது,
நேசமுடன்,
பொ.அம்பலத்தார்.
நன்றி,
வணக்கம்!
|
36 Comments:
எழுத்துகளில் மட்டுமல்ல பழகுவதிலும் சாய் இடம் மிகவும் ஒரு தேர்ந்த ஆளுமையிருக்கும்...
மூவருக்கும் நன்றியும் பாராட்டுக்களம்...
//ஒத்து ஒரே தாளக் கதியில் ஆமா போடுபவர்களை விட; முரண்பட்டு மாற்று கருத்துக்களை முன்வைப்பவர்களை எனக்கு அதிகம் பிடிக்கும்.//
அப்ப உங்களுக்கு எதிர்கருத்து சொன்னா தான் பிடிக்குமா... ஓகே ஓகே
இலைமறை காயாக இருக்கும் தளங்களை அடுத்தவரிடம் கொண்டுசெல்லும் முயற்சிக்கும்,கருத்துக்கும் வாழ்த்துக்கள்.
அறிமுகம் செய்வது மிகவும் நன்றி
குரிய செயலாகும்
உங்கள் பணி அருமை!
புலவர் சா இராமாநுசம்
தவறுகளையும், நிறைவுதரும் பதிவுகளையும் நெற்றியடித்தார்போல எடுத்து எழுதுவதற்கும் நிறைய மனவலிமை வேண்டும், அதனால் ஏற்ப்படும் பின்விளைவுகளை எதிர்கொள்ளும் வலிமை உங்களுக்கும் அம்பலத்தார் அவர்களுக்கும் நிறையவே உண்டு என்பதை வாசிக்கும்போது அறிய முடிகிறது. தொடருங்கள் நற்ப்பணியை.
அருமையான பகிர்வு சகோ
அப்போ நாங்கெல்லாம் உப்பு சப்பிலாம ஆம்மாம் சாமி பின்னூட்டம் போடுறோமா?? சரி சரி
அம்பலத்தாரா கொக்கா...நல்ல அறிமுகம்...தொடருங்கள் இப்பணியை...
அறிமுகத்தில் நல்ல அறிமுகங்கள்.
இலை மறை காயாக இருப்பவர்களுக்கு அறிமுகம் என்பது வாழ்நாள் வரம் எனலாம். அந்த பணியைச் செய்துவரும் அம்பலத்தாரிற்கும் நிரூபனிற்கும் எனது வாழ்த்துக்கள். சாய் பிரசாத்தினுடைய ஒரே ஒரு பதிவை மட்டும் இப்போதைக்கு வாசிப்பதற்கு நேரம் கிடைத்தது. அருமை. அவரிற்கும் எனது வாழ்த்துக்கள்.
நல்ல அறிமுகம் பகிர்வுக்கு நன்றி
த.ம 17
@♔ம.தி.சுதா♔
மதி,நீங்க அவரது நண்பரா தெரிந்துகொண்டதில் சந்தோசம்.
@சசிகுமார்
ஓகோ தெரியாமல் போருக்கு அறைகூவல் விட்டிட்டனோ
@சுவடுகள்
வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே
@புலவர் சா இராமாநுசம்
உங்க கருத்துப்பகிர்விற்கு நன்றி ஐயா
@ரத்னா
நல்லதை நல்லதெனவும் தவறை தவறென சுட்டிக்காட்டுவதற்கும் எதற்கு பயப்படவேண்டும். இதையும் அடுத்தவரில் இருக்கும் அக்கறையில்தானே செய்கிறோம்.
வணக்கம் நிரூபன்!பகிர்வுக்கு நன்றி!நேரம் கிட்டும்போது விஜயம் செய்வேன்!(ஆமா இவரு பெரிய அப்துல் கலாமு,விஜயம் செய்யப் போறாரு!)
அம்பலத்தாருக்கு வாழ்த்துக்கள்.
மேன்மேலும் தொடர்ந்து இதேபோல் நல்ல தகவல்களை வழங்குங்கோ.
நண்பர் சாய் பிரசாத்துக்கு வாழ்த்துக்கள்.....
அம்பலத்தார் அவர்களே,
இதுபோல அறிமுகங்கள் பதிவர்களுக்கு கிடைக்கும்
மிகப்பெரிய பாராட்டு ஐயா....
தொடர்ந்து நீங்கள் அறிமுகப் படுத்தி வரும் பதிவர்கள்
அனைவரும் அருமையான பதிவர்களாக
இருந்திருக்கிறார்கள்..
நண்பர் சாய் பிரசாத் பதிவுகளை இது சென்று பார்க்கிறேன் ஐயா...
@சசிகுமார்
/ஒத்து ஒரே தாளக் கதியில் ஆமா போடுபவர்களை விட; முரண்பட்டு மாற்று கருத்துக்களை முன்வைப்பவர்களை எனக்கு அதிகம் பிடிக்கும்.//
அப்ப உங்களுக்கு எதிர்கருத்து சொன்னா தான் பிடிக்குமா... ஓகே ஓகே
//
இது அம்பலத்தார் ஐயாவின் கருத்து
அவரைப் போலத் தான் எனக்கும் விமர்சகர்களைத் தான் அதிகம் பிடிக்கும்.
@புலவர் சா இராமாநுசம்
அறிமுகம் செய்வது மிகவும் நன்றி
குரிய செயலாகும்
உங்கள் பணி அருமை!
புலவர் சா இராமாநுசம்//
அன்பிற்குரிய புலவர் ஐயா,
இது என் பணி அல்ல,
அம்பலத்தார் ஐயா சிறப்புடன் செய்து வருகின்ற பணி,
நீங்கள் சொல்லும் கருத்துக்கள் யாவும் அம்பலத்தார் ஐயாவிற்கே சேர வேண்டும்!
பதிவின் ஆரம்பத்திலும், இறுதியிலும் தடித்த எழுத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.
@A.R.ராஜகோபாலன்
அருமையான பகிர்வு சகோ
அப்போ நாங்கெல்லாம் உப்பு சப்பிலாம ஆம்மாம் சாமி பின்னூட்டம் போடுறோமா?? சரி சரி
//
வணக்கம் அண்ணா,
இந்தப் பதிவினை நான் எழுதவில்லை,
அம்பலத்தார் ஐயா தான் எழுதியுள்ளார்.
பதிவின் ஆரம்பத்திலும், இறுதியிலும் இப் பதிவினை எழுதியது அம்பலத்தார் ஐயா என்பதனை தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன்.
திறமையானவர்களை அறிமுகம் செய்கிறீர்கள் நிரூ.நன்றி !
hi hi hi
good intro
///சில பதிவர்கள் பன்னி (பன்றி)குட்டி போட்டது போல இஷ்டப்பட்ட போதெல்லாம் நிறைய பதிவுகளை எழுதிக் கொண்டிருப்பார்கள். ஆனால் படிக்கும் வாசகர்கள் இவனெல்லாம் எதுக்கு பதிவு எழுதுகிறான் என்று தலையில் அடித்துக் கொள்வார்கள்.///
பாஸ்,
மேல உள்ள வரிகளை உங்களுக்கும் சேர்த்துக்காங்க...உங்க பதிவ படிக்கும் போது எனக்கு மேல உள்ள வரிகள் தான் தோணுது......பன்னி (பன்றி)குட்டி மாதிரி வத வதன்னு ஏன் பதிவா (!!!!) எழுதி மனுசனை கொல்றேங்க....
நீங்க யாருங்க பதிவர்களுக்கு அட்வைஸ் பண்ண...நீங்க தான் கூகிள் ஒனாரா..இல்ல அங்க வேல தான் செய்றீங்களா...????சும்மா அத பண்ணாத, இத பண்ணாத அப்படி கமெண்ட் போடு...இப்படி கமெண்ட் போடு......அவன் அப்படி எழுதுறான்....இவன் இப்படி எழுதுறான்...இவன் ரொம்ப சொரியுறான்... அப்படின்னு ஒரே ஒப்பாரி.........
அவன் அவனுக்கு புடிச்சதை எழுத தான் ப்ளாக்....உங்களுக்கு பிடிச்சதை எழுத உங்க ப்ளாக் இருக்குல.....அதுல படுத்து உருளுங்க......யாரும் உங்களை தொந்தரவு பண்ண மாட்டங்க.....படு மொக்கையா எழுதிட்டு ஹி ஹி, ஹோ ஹோ......வேற...இத கூட சகிச்சுக்கலாம்..ஆனா இந்த தொடர் அட்வைஸ் மொக்கை இருக்கே...முடியல....
@ரெவெரி
வணக்கம் ரெவரி, இதைத்தான் தமிழ் இலக்கணத்தில வஞ்சப்புகழ்ச்சியணி என்று சொல்லுறது.
@பி.அமல்ராஜ்
நன்றி அமல், பதிவுலக படைப்பாளிகள் எழுதுவதன்மூலம் பணமா சம்பாதிக்கிறாங்க, அவங்களை அறிமுகப்படுத்தி ஒரு சிறிய அங்கீகாரம் கிடைக்கசெய்யவதன்மூலம் ஒரு சின்ன சந்தோசத்தைகொடுப்போமே!
@athira
உற்சாகமூட்டும் வார்த்தைகளிற்கு நன்றியம்மா
@மகேந்திரன்
நன்றி சகோ. முடிந்தவரை அடுத்தவர் திறமைகளையும் மதிக்கக் கற்றுக்கொள்வது நல்லதுதானே.
@ராஜ்
வணக்கம் ராஜ், பதிவை பூரணமாக படித்து உள்வாங்கிக்கொள்ளாமல் பின்னூட்டம் இட்டிருக்கிறியள். பதிவை எழுதியது நான் அதை நிரூபனது பக்கத்தில் அவர் வெளியிட்டிருந்தார். நான் எழுதிய வார்த்தைகளிற்கு அவரை திட்டுவது தவறு.
//நீங்க யாருங்க பதிவர்களுக்கு அட்வைஸ் பண்ண...நீங்க தான் கூகிள் ஒனாரா..இல்ல அங்க வேல தான் செய்றீங்களா...????சும்மா அத பண்ணாத, இத பண்ணாத அப்படி கமெண்ட் போடு...இப்படி கமெண்ட் போடு......அவன் அப்படி எழுதுறான்....இவன் இப்படி எழுதுறான்...இவன் ரொம்ப சொரியுறான்... அப்படின்னு ஒரே ஒப்பாரி.........
அவன் அவனுக்கு புடிச்சதை எழுத தான் ப்ளாக்....உங்களுக்கு பிடிச்சதை எழுத உங்க ப்ளாக் இருக்குல.....அதுல படுத்து உருளுங்க......யாரும் உங்களை தொந்தரவு பண்ண மாட்டங்க......//
மேலே நான் குறிப்பிட்டிருக்கும் நீங்க சொன்ன அதே வரிகளை அப்படியே திருப்பி உங்களுக்கும் பொருத்தி பார்த்துக்கொள்ளுங்கோ. நீங்க கூறினதுபோல நான் எனக்குப் பிடிச்சதை எழுதுகிறேன் நீங்க அதுக்கு ஏன் இந்தக்குதி குதிகுதிக்கிறிங்க.
பாவம் சினிமா எடுக்கிறவன் அவன் கோடிகோடியா பணம்போட்டு தனக்கு விரும்பினமாதிரி படம் எடுக்கிறான். அது அவன் சுதந்திரம் என்று விட்டிடுங்களேன், எதுக்கு உங்க வலைப்பூவில் சினிமா விமர்சனங்களாகவே எழுதிட்டிருக்கிறிங்க.
தனக்குப்பிடிச்சதை எழுதுவதில் தப்பில்லை. அதை அடுத்தவன் விமர்சிக்க கூடாது என்றால் எழுதியதை தனது கணனியில் மட்டுமே வச்சிருந்து தான் மட்டுமே ரசிச்சிட்டு இருந்திடணும். பொது வெளியில் ஒரு விசயத்தை போட்டால் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மன பக்குவம் இருக்கணும்.
Take it easy my dear. ரொம்ப உணர்ச்சிவசப்படாதையுங்கோ.
பின்னூட்டங்கள் இட்ட அனைவருக்கும் நன்றிகள். மீண்டும் மற்றுமொரு பதிவில் சந்திப்போம். நேசமுடன் அம்பலத்தார்.
@ராஜ்
மேல உள்ள வரிகளை உங்களுக்கும் சேர்த்துக்காங்க...உங்க பதிவ படிக்கும் போது எனக்கு மேல உள்ள வரிகள் தான் தோணுது......பன்னி (பன்றி)குட்டி மாதிரி வத வதன்னு ஏன் பதிவா (!!!!) எழுதி மனுசனை கொல்றேங்க....//
ஆமா உங்களை வெத்திலை வைச்சு அழைச்சு படியென்றா சொல்றேன்?
என்னை விட இன்னும் பல பதிவருங்க ஒவ்வோர் நாளும் நாலு பதிவு, மூனு பதிவென்று எழுதுறாங்களே! அங்கே போயி உங்க வீரத்தை காட்டுங்களேன்!
மேலே உள்ள வரி எனக்கு சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை! உங்களுக்கு பிடிச்சிருந்தா படியுங்க. பிடிக்கலைன்னா ப்ளாக் பக்கம் வராதீங்க. என்னால முடிஞ்ச வரை வாசகர்கள் என்ன சொல்றாங்கன்னு அறிந்து தான் பதிவு எழுதுகிறேன்.
நீங்க ஒருத்தர் தான் சும்மா வன்மம் நிறைந்த கருத்துக்களை எழுதிக்கிட்டு இருக்கிறீங்க.
இதே கருத்தை தானே மூனு வாரம் முன்னாடியும் ஒரு பதிவிலை எழுதியிருந்தீங்க.
@ராஜ்
நீங்க யாருங்க பதிவர்களுக்கு அட்வைஸ் பண்ண...நீங்க தான் கூகிள் ஒனாரா..இல்ல அங்க வேல தான் செய்றீங்களா...????சும்மா அத பண்ணாத, இத பண்ணாத அப்படி கமெண்ட் போடு...இப்படி கமெண்ட் போடு......அவன் அப்படி எழுதுறான்....இவன் இப்படி எழுதுறான்...இவன் ரொம்ப சொரியுறான்... அப்படின்னு ஒரே ஒப்பாரி.........
அவன் அவனுக்கு புடிச்சதை எழுத தான் ப்ளாக்....உங்களுக்கு பிடிச்சதை எழுத உங்க ப்ளாக் இருக்குல.....அதுல படுத்து உருளுங்க......யாரும் உங்களை தொந்தரவு பண்ண மாட்டங்க.....படு மொக்கையா எழுதிட்டு ஹி ஹி, ஹோ ஹோ......வேற...இத கூட சகிச்சுக்கலாம்..ஆனா இந்த தொடர் அட்வைஸ் மொக்கை இருக்கே...முடியல....
//
மொக்கையா எழுதுற பதிவுக்கு உங்களை யாரு வந்து இந்த குதி குதிக்க சொன்னாங்க?
சினிமா பத்தி எழுதுறீங்களே!
சினிமா பத்தி விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கு என்று நான் கேட்டா உங்களால ஏத்துக்க முடியுமா?
அது போலத் தான் இதுவும்!
நான் இங்கே யாருக்கும் அட்வைஸ் சொல்லை!
மொதல்ல பதிவினை முழுமையாகப் படிச்சு என்னா சொல்லியிருக்கேன் என்பதனை தங்களின் ஆறறிவைக் கொண்டு உணரப் பாருங்க.
அப்புறமா உங்க கருத்துக்களை முன் வையுங்க.
இந்தப் பதிவிற்கும், நீங்க போட்ட கருத்துரைக்கும் ஏதாச்சும் தொடர்பிருக்கா?
ப்ளாக்கில என்னோட அனுபவங்களை நண்பர்கள் ஹாலிவூட் ரசிகன், மற்றும், குமரன் ஆகியோர் கேட்டாங்க. அவங்களின் விருப்பத்திற்கு அமைவாக எழுதிட்டு இருக்கேன்!
மொக்கை பதிவினை மொக்கையாக தானே எழுத முடியும். உங்களை போல வீக்கிப்பிடியாவிலிருந்து சுட்டு சினிமா விமர்சனம் போலவா எழுத முடியும்?
தொலைபேசியை தொலைத்த அழகி படித்தேன்..
கதை போன்று தோன்றவில்லை...கட்டுரை வடிவம் போன்றே இருந்தது...
ஆனாலும் நடை மிக அருமை...
அறிமுகத்திற்கு நன்றி அம்பலத்தாரைய்யா ....
ஆணி நிறைய பிடுங்க வேண்டியிருப்பதால்.. தொடர்ந்து எழுத முடியவில்லை.. தமதமாக தான் பதிவுகளையும் படிக்க முடிகிறது. வருசம் தொடங்கியதில் இன்றுதான் மூச்சுவிட நேரம் கிடைத்திருக்கிறது. அம்பலத்தார் , மற்றும் நிரூபனிற்கு நன்றிகள்.
@மயிலன்
//மூன்றாம் விதியில் முதன்முதலாக நான் படித்த பதிவு தொலைபேசியை தொலைத்த அழகி. அந்தப் பதிவு அவருள் இருக்கும் ஒரு நல்ல கதை சொல்லியை வெளிக்காட்டியுள்ளது. அவரது பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்ததுவும் இது தான். அந்தக் கதையை சொல்லிச் சென்ற பாணியில் இருந்த ஆளுமையும் ஈர்ப்பும், அவர் தொடர்ந்து கவனம் செலுத்தி எழுதினால் அவரால் நல்ல படைப்புக்களை தரமுடியும் என்ற நம்பிக்கையை தருகிறது. // மயிலன் தவறாக புரிந்துகொண்டீர்கள்போல தெரிகிறது. மேலே குறிப்பிட்ட பந்தியில் நான் அவர் ஒரு சிறந்த கதை சொல்லி என்ற விடயத்தையே வெளிப்படுத்தியிருக்கிறேன். கதை என்றவிடயத்தை ஆராயவில்லை. குறிப்பிடும்போதுகூட அவர் எழுதிய படைப்பு என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன் எழுதிய கதை என்று குறிப்பிடவில்லை. கதை சொல்லி என்ற பதத்திற்கும் கதாசிரியர் என்ற பதத்திற்கும் சிறு வேறுபாடு இருக்கிறது. கி.ரா. போன்றவர்கள் சிறந்த கதை சொல்லிகள். google இல் கதை சொல்லி என்று தேடிப்பார்த்தீர்களானால் புரிந்துகொள்ளமுடியும்.
Post a Comment