உலக வரலாற்றில் கடந்த 2011ம் ஆண்டு போலியோ அற்ற வளமான நாட்டினை உருவாக்கிய பெருமையினை முதன் முதலாக இந்தியா பெற்றிருக்கிறது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் மார்க்கிரட் சான் (WHO - World Health Organisation) அவர்கள் அரசாங்க நிதியின் கீழ் இந்தியா முழுவதும் பரந்து வாழும் மிகப் பெரிய குடித்தொகை மக்களுக்கு சிறப்பான சிகிச்சையளித்தமைக்காக இந்திய அரசினையும்,இந்திய சுகாதார அமைச்சினையும் பாராட்டியிருக்கின்றார். இது மட்டுமன்றி, மைக்ரோசொப்ட் நிறுவன தலைவர் பில்கேட்ஸ் அவர்களும் போலியோ அற்ற ஆண்டினை சிறப்பாக உருவாக்கியமைக்காக இந்தியாவினைப் பாராட்டி,அனைத்துலகும் இந்தியாவினை முன்மாதிரியாகக் கொண்டு போலியோ ஒழிப்புச் செயற்பாட்டினைத் தொடர வேண்டும் எனக் கேட்டிருந்தார்.
இந்த விடயங்கள் ஒரு புறமிருக்க, இப்போது இந்தியா இப் போலியோ நோயின் மூலம் எதிர்காலத்தில் பாரிய விளைவினை எதிர்நோக்கவிருப்பதாக சுகாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள். அது எப்படித் தெரியுமா?போலியோ அற்ற வளமான நாடாக இந்தியாவினை உருவாக்கினாலும்,தரை வழித் தொடர்பினூடாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்,நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இந்தப் போலியோ நோயும்,அதனோடு தொடர்புடைய வைரசும் முற்றாக ஒழிக்கப்படவில்லை. கடந்த வருடம் மட்டும் பாகிஸ்தானில் 173 பேர் போலியோத் தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக மேற்கு வங்கத்தின் சுகாதார அமைச்சர் சுசித் பந்தோபத்யாய அவர்கள் இந்திய அரசின் ராஜ்சபாவில் புள்ளி விபரங்களைச் சமர்ப்பித்திருக்கிறார்.
இந்தியாவில் போலியோவினை முற்று முழுதாக இல்லாது ஒழித்தாலும், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைச் சூழ்ந்துள்ள ஏனைய நாடுகளிடமிருந்து போலியோ வைரஸ் பரவுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக இந்திய சுகாதார அமைச்சு அறிவித்தல் விடுத்திருக்கிறது. போலியோ அற்ற வளமான இந்தியாவினை உருவாக்கப் பல மில்லியன் ரூபாக்களை உலக சுகாதார அமைப்புக்கள் வழங்கியிருக்கும் நிலையில், இந்தியாவின் எல்லைப் பகுதியிலும், மற்றும் ஏனைய நாடுகளினூடாகவும் போலியோ வைரஸ் பரவுகின்ற பகுதிகளில்; தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 300 மில்லியன் டாலர் செலவாகும் என உலக சுகாதார நிலையம் கருத்து தெரிவித்திருக்கிறது.
இப் பிரச்சினைக்கான ஒரே தீர்வு, பாகிஸ்தானிலும் போலியோ ஒழிப்பு நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு விரைவுபடுத்த வேண்டும். அல்லது பாகிஸ்தான், மற்றும் ஏனைய எல்லைப் பகுதியினூடாக இந்தியாவினுள் நுழைவோர் மீது போலியோ பரிசோதனை செய்ய வேண்டும். இவை இரண்டும் சாத்தியப்படாத சமயத்தில் இந்தியாவில் எதிர்காலத்தில் போலியோ கிருமிகளின் தாக்கம் அதிகரிக்கும் என சுகாதார நிபுணர்கள் கவலை வெளியிட்டிருக்கிறார்கள். இந்தியாவிற்கு பாகிஸ்தானில் இராணுவ ரீதியில் அச்சுறுத்தல் இருக்கிறது. இதற்கும் அப்பால் தற்போது நோய்க் கிருமிகளாலும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது.வெகு விரைவில் பாகிஸ்தானிலும் போலியோ ஒழிப்புத் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறதா அல்லது இந்தியா எல்லைப் பகுதியினூடாகப் பரவும் போலியோ வைரஸினைக் கட்டுப்படுத்தும் செயலில் முனைப்புடன் இந்தியா செயற்படுகின்றதா என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
இன்னொரு ராஜபக்ஸேவாக மாறுகிறாரா அமெரிக்க அதிபர் ஒபாமா?
இலங்கையில் தமிழர்களையும், மற்றும் புலிகளுக்கு ஆதரவானோர்களையும் கண்ட இடத்தில் வைத்து எந் நேரத்திலும் கைது செய்து கால வரையறையற்றுச் சிறையில் அடைக்கும் வண்ணம் அவசரகாலச் சட்டம் என்றோர் சட்டம் புழக்கத்தில் இருந்து வருகின்றது. காலங் காலமாக ஆட்சிபீடமேறும் ஆட்சியாளர்கள் ஒவ்வோர் தடவையும் தமிழர்களைக் விசாரணை ஏதுமின்றி கைது செய்து சிறையில் அடைத்து துன்புறுத்தி மகிழும் நோக்கில் அவசர காலச் சட்டத்தினை நிறைவேற்றி, அதன் கால எல்லையினைப் நீடித்துக் கொண்டிருப்பார்கள். இதே போன்ற அல்லது இந்த அவசர காலச் சட்டத்திற்கு நிகரான ஓர் சட்டத்தினை இவ் வருடம் ஜனவரி முதலாம் திகதி நிறைவேற்றியதன் மூலம் அமெரிக்க மக்களிடனதும், உலக மக்களினதும் வெறுப்பிற்கு ஆளாகியிருக்கிறார் அதிபர் பராக் ஒபாமா அவர்கள்.
அமெரிக்காவின் குடியுரிமைக்கு எதிராகச் செயற்படுவோர்கள், மற்றும் அமெரிக்க உளவுத் துறையினால் உலகளாவிய ரீதியில் தேடப்படும் நபர்கள், அமெரிக்காவில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள், FBI, CIA ஆகிய நிறுவனங்களிற்கு வேண்டப்பட்ட குற்றவாளிகள், மற்றும் அமெரிக்காவின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் செயற்படுவோர் எவராயினும் முன்னறிவித்தல் ஏதுமின்றி எங்கும், எந் நேரத்திலும் கைது செய்யப்படாலாம். இவ்வாறு கைது செய்யப்படுவோர் பற்றிய விபரங்கள் எவற்றையும் அந் நபரது உறவினர்களுக்கோ அல்லது அந் நபருடன் நெருங்கியவர்களுக்கோ வழங்காது 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யலாம் எனும் சட்டத்தினை நிறைவேற்றியிருக்கிறார் அதிபர் ஒபாமா அவர்கள்.
உலக மக்கள் அனைவரும் புத்தாண்டினைக் கொண்டாடிக் கொண்டிருந்த 2012.01.01 அன்று சத்தமின்றி இந்த சட்டத்தில் கையொப்பம் இட்டு இச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துகின்ற உரிமையினை அமெரிக்க காவல் துறைக்கும்,இராணுவத்திற்கும் வழங்கியிருக்கிறார் அதிபர் ஒபாமா. இச் சட்டமானது பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு வலுச் சேர்க்கும் என அறிவித்து அமெரிக்க மக்களினதும், உலக மக்களினதும் தலையில் மிளகாய் அரைக்கும் நோக்குடன் NDAA எனும் சட்டத்தில் பிரிவு H.R.1540 இனை அமுல்படுத்தியிருக்கிறது வெள்ளை மாளிகை.இப்போது அமெரிக்க இராணுவ, பொலிஸ்,உளவு நிறுவனங்களிற்கு தமக்கு வேண்டியவர்களை கைது செய்து, கைது தொடர்பாக பிறருக்கு அறிவிக்காது தடுத்து வைத்து, துன்புறுத்தி விசாரணை செய்வதற்கான உரிமை கிடைத்திருக்கிறது.
எதிர்காலத்தில் அமெரிக்கத் தேர்தலின் போது சவால் நிறைந்த ஓர் விடயமாகவும், ஒபாமாவின் ஆட்சியினைத் தீர்மானிக்கப் போகின்ற விடயமாகவும் இந்த NDAA சட்டம் அமைந்து கொள்ளும் எனவும் அமெரிக்க சஞ்சிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.இனி அமெரிக்காவின் குடியாட்சியினைக் கூட கவிழ்க்கின்ற வல்லமையினை இந்தச் சட்டத்தின் மூலம் அமெரிக்க இராணுவ, பொலிஸ் படைகள் பெற்றுக் கொள்ளும் எனவும் கருத்து வெளியிட்டிருக்கின்றன அமெரிக்க சஞ்சிகைகள். அமெரிக்க இராஜங்க திணைக்களத்தினைப் பொறுத்தவரை இச் சட்டமானது பயங்கரவாதத்திற்கு எதிரானது. ஆனால் அப்பாவி மக்களின் உணர்வுகளின் அடிப்படையில் மக்களைப் பயங்கரத்திற்கு ஆளாக்கின்றது இச் சட்டம்.
பிற் சேர்க்கை: புது வருடத்தில் தொடர்ச்சியாக எழுதி வருகின்ற ஒரே மாதிரியான படைப்புக்களைப் பகிராது,கொஞ்சம் வித்தியாசமான படைப்புக்களைப் பகிரலாம் என்று களமிறங்குகிறேன். அதன் ஓர் கட்டமாக இச் செய்தி அலசலினை உங்கள் முன் தவழ விடுகின்றேன். இந்தப் புதிய முயற்சி பற்றிய உங்களின் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
செ.நிரூபன்.
நன்றி;
வணக்கம்.
இப் பதிவில் உள்ள படங்கள் கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டவை.
|
14 Comments:
புது வருடத்தில் தொடர்ச்சியாக எழுதி வருகின்ற ஒரே மாதிரியான படைப்புக்களைப் பகிராது,கொஞ்சம் வித்தியாசமான படைப்புக்களைப் பகிரலாம் என்று களமிறங்குகிறேன்.
ஹா ஹா முதலில் இதற்கு வாழ்த்துக்கள் சகோ... உன் புது முயற்சியில் நீ வெற்றி பெற வாழ்த்துக்கள் நிருபன்...
என்னது புது சட்டமா..அவ்வ்வ்வ்வ்வ்வ்...
தகவலுக்கு நன்றி....
வணக்கம் நிரூபன்!புதிய முயற்சி,ஆரம்பமே களைகட்டியிருக்கிறது!உலக அரசியலால்,தமிழ் மக்களுக்கு ஏற்படவிருக்கும் பூகோளரீதியான மாறுதல்கள் பற்றி பலரும் இப்போது ஆய்வு செய்து வருகிறார்கள்!மூழ்குவோமா? தப்புவோமா?"அவனே"அறிவான்!
வணக்கம் சேனா நிரூபன்.
இதைப் பார்த்ததும் பழைய நினைவொன்று வருகிறது.
எங்களோடு பிரைமரி ஸ்கூலில் படித்த ஒரு பெண்ணிடம் ஆராவது..
What is ur name? எனக் கேட்டால், உடனே சொல்லுவா..
My name is காவன்னா ஜீவலக்ஸ்மி என:)).
//புது வருடத்தில் தொடர்ச்சியாக எழுதி வருகின்ற ஒரே மாதிரியான படைப்புக்களைப் பகிராது,கொஞ்சம் வித்தியாசமான படைப்புக்களைப் பகிரலாம் என்று களமிறங்குகிறேன்.//
வாழ்த்துக்கள்.. ஆனா ஒரு நாளிலேயே 3,4 எனப் போடப்படா சொல்லிட்டேன், பிறகு நானே கொ... ஆகிடுவேன் சொல்லிட்டேன்:)).
@athira
வணக்கம் சேனா நிரூபன்.
இதைப் பார்த்ததும் பழைய நினைவொன்று வருகிறது.
எங்களோடு பிரைமரி ஸ்கூலில் படித்த ஒரு பெண்ணிடம் ஆராவது..
What is ur name? எனக் கேட்டால், உடனே சொல்லுவா..
My name is காவன்னா ஜீவலக்ஸ்மி என:)).
J//
ஹே...ஹே..
நான் இங்கே
செ.நிரூபன் என்று தானே எழுதியிருக்கேன்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@ரேவா
ஹா ஹா முதலில் இதற்கு வாழ்த்துக்கள் சகோ... உன் புது முயற்சியில் நீ வெற்றி பெற வாழ்த்துக்கள் நிருபன்...//
வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் ரொம்ப நன்றி சகோ.
@ஆகுலன்
என்னது புது சட்டமா..அவ்வ்வ்வ்வ்வ்வ்...
தகவலுக்கு நன்றி....//
அடப் பாவி,
அமெரிக்காவில் இருக்கும் உங்களுக்கு இது தெரியலையா?
@Yoga.S.FR
வணக்கம் நிரூபன்!புதிய முயற்சி,ஆரம்பமே களைகட்டியிருக்கிறது!உலக அரசியலால்,தமிழ் மக்களுக்கு ஏற்படவிருக்கும் பூகோளரீதியான மாறுதல்கள் பற்றி பலரும் இப்போது ஆய்வு செய்து வருகிறார்கள்!மூழ்குவோமா? தப்புவோமா?"அவனே"அறிவான்!
//
நன்றி ஐயா,
ஆரம்ப முயற்சியில் இன்னும் சில விடயங்களைச் சேர்த்திருக்க வேண்டும்.
ஆனால் பதிவு நீண்டு விட்டதே என்பதால் சேர்க்க முடியவில்லை.
@athira
வணக்கம் சேனா நிரூபன்.
இதைப் பார்த்ததும் பழைய நினைவொன்று வருகிறது.
//
ஹே...ஹே..
இது என் பதிவினை அனுமதியின்றி Copy பண்ணி தமது தளத்தில் போடுவோர் கண்டிப்பாக கவனிக்காது தான் கொப்பி பேஸ்ட் செய்வாங்க.
அந்த நம்பிக்கையில் எழுதப்பட்டது.
அரசியல் எங்கும் ஒரு மாதிரித்தானோ.ம் இன்னும் சொல்லுங்கோ நிரூ !
போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டதைப் போல் ஹெப்படைடிஸ்,இனம் தெரியாத நரம்பு நோய்கள் குழந்தைகளை தண்ணீரின் மூலம் தாக்கும் வியாதிகளையும் ஒழிக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் புதிய முயற்சி சிறப்பு.......தொடருங்கள் தொடருகிறோம்
போலியோ பற்றிய அச்சம் நீங்கலாகாது...
தொடர்ந்து நாம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்...
------------------------------------------------------------------------------------
ஒபாமா அவர்களின் புதிய சட்டம் சர்வாதிகாரத்துவம்...
சாமானியர்கள் பாதிப்பிற்கு உள்ளாவது உறுதி....
------------------------------------------------------------------------------------
முதலில் நீங்கள் ஒரே மாதிரி எழுதுவதாய் எனக்கு தோன்றவில்லை..:)
வாழ்த்துக்கள்..
ஒரேமாதிரியா.?
இனி மறுபடியும் முழுவதையும் பார்த்துதான் ஒரேமாதிரியா என்று முடிவெடுக்கவேண்டும்.
அட ப்போங்கப்பா... எல்லாத்தையும் கசக்கிப்புழிஞ்சு எழுதுறது,அப்புறம்-நா ஒண்ணுமே எழுதலையே!- ங்கிறது.
(இதுதான் தன்னடக்கமா?)
சட்டம் பற்றிய தகவல் புதுசு.(எனக்கு புதுசு.)
வாழ்த்துக்கள்.
Post a Comment