சங்க காலந் தொட்டு தமிழில் பாண்டித்தியம் பெற்றவர்கள் தான் இலக்கணங்களையும், தமிழ் தொடர்பான படைப்புக்களையும் எழுதலாம் எனும் நிலமை எம் தமிழ் இலக்கிய உலகில் இருந்து வந்தது. இம் மரபினைப் பின் வந்த தமிழ் ஆர்வலர்கள் தமிழ் இலக்கியம் தெரியா விட்டாலும் இலகு தமிழ் இலக்கியம் படைக்கலாம் என மாற்றினார்கள்.இன்று தமிழ்த் துறையோடு நெருங்கிய தொடர்பில்லாது தமிழ் மீதான காதல் இருந்தாலே தமிழில் பல படைப்புக்களையும் எழுதலாம் எனும் நிலைக்கு தமிழும், தமிழ் இலக்கிய உலகும் எளிமைப்படுத்தப்பட்டிருக்கிறது. வாரந் தோறும் நாற்று வலைப் பதிவில் "அம்பலத்தார் பக்கம்" வலைப் பூவின் சொந்தக்காரர் "திரு. பொன்னர் அம்பலத்தார்" அவர்கள் பதிவர்களின் படைப்புக்களைப் பற்றிய விமர்சனங்களை எழுதி வருகின்றார்.இப் பதிவினை அம்பலத்தாரின் விமர்சனத்தினூடாக அலங்கரிக்கப் போகும் பதிவர் யார் எனப் பார்ப்போமா?
மயிலிறகால் வருடி இன்ப வைத்தியம் செய்யும் மருத்துவர் மயிலன்!
நான் அண்மையில் படிக்க தொடங்கிய ஒரு வலைப்பூ மயிலிறகு. திகில் கதை, கவிதை, அனுபவப்பகிர்வு, விமர்சனம் என பல விடயங்களும் அடங்கிய ஒரு வலைப்பூவான மயிலிறகின் சொந்தக்காரர் மயிலன். இதில் ஒரு ஆச்சரியம் என்னவெனில் இவர் ஒரு வைத்தியர்.பொதுவாக வலையுலகில் மருத்துவர்கள் பல்சுவை படைப்பாளிகளாக மிளிர்வது அபூர்வமாகவே உள்ளது. நான் அறிந்தவரையில் Steth இன் குரல் http://stethinkural.blogspot.com, ஹாய் நலமா? http://hainallama.blogspot.com ஆகிய வலைப்பூக்களின் சொந்தக்காரரான பதிவர் டாக்டர் முருகானந்தன் என்பவர்தான் இன்று உள்ளவர்களில் பரந்துபட்ட அளவில் அதிகமான பதிவுகளை எழுதும் ஒரு வைத்தியர் என நினைக்கிறேன். ஆனால் அண்மைக் காலத்தில் இணைய எழுத்துலகினுள் நுழைந்திருக்கும் மயிலனும் தமிழோடு தீராத காதல் கொண்டவராக தன் பணிச் சுமையின் மத்தியிலும் பல்சுவைப் பதிவுகளை எழுதிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் மயிலனது வலைப்பூவை மேய்ந்ததில்..வலைப்பக்கத்தின் முகப்பு படம் பெயரிற்கேற்ப இதமானதாக இருக்கிறது. ஆயினும் பக்கத்தின் கறுப்பு பின்புல வர்ணமும் வெள்ளை எழுத்துக்களும் அங்கங்கே எழுத்துகளின் பின்னணியில் கொடுக்கப்பட்டிருக்கும் மற்றொரு நிறமும் நல்ல படைப்புக்களையும் இனிய உணர்வுடன் படிக்கவிடாது எரிச்சல் ஊட்டுகின்றன. ஒரு வைத்தியரான மயிலன் இந்த நிறச் சேர்க்கையின் எதிர் விளைவைக் கவனிக்காது விட்டது ஆச்சரியமே "திகில் கிரைம் குறுந்தொடரான இடம்: உன் வீடு---->நேரம்: http://cmayilan.blogspot.com/2011/10/8_15.html இன்றுரவு 8 மணி முதல் இரண்டு அத்தியாயங்களும் விறுவிறுப்பாக செல்கின்றன. மயிலன் நீங்க நிறைய திகில் கிரைம் படங்கள் பார்ப்பீங்களா? உங்க எழுத்தில் அதன் தாக்கம் தெரிகிறது.
திகில் கதைக்கு எதிர் பாராத திருப்பங்களும்; எதிர் பார்த்திராத முடிவும் முதுகெலும்பு போன்றவை.ஆனால் இக் கதையின் முடிவு எதிர்பார்த்த இலகுவாக கண்டுபிடிக்கக் கூடிய முடிவாக இருக்கிறது. ஆரம்பத்தில் உண்டான எதிர்பார்ப்பிற்கு இது ஏமாற்றமாகிவிட்டது. மற்றொரு கதையான "பூங்காநகர் முதல் தாம்பரம் வரை" http://cmayilan.blogspot.com/2011/09/blog-post_17.html ஒரு ஆரம்ப எழுத்தாளனது கதை எனும் விதத்தில் நன்றாக இருந்தாலும் இதிலும் மயிலன் நீங்க முடிவில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். ஒரு கதை மனதில் நிலைத்து நிற்பதில் முடிவும் முக்கிய பங்களிக்கிறது. இப்படியான விடயங்களில் கவனம் செலுத்தினால் மயிலனால் மேலும் சிறந்த கதைகளை தரமுடியும். மயிலிறகால் பதிவர் மனங்களை வருடிடவும் முடியும்.
மயிலிறகில் முதலாவதாக மனதில் நிற்கும் படைப்பு "மரண அறிவிப்பு" http://cmayilan.blogspot.com/2011/11/blog-post_05.html தீவிர சிகிச்சை பிரிவில் இடம்பெறும் சுவாரசியமான பரபரப்புடன் கூடிய அனுபவங்களை, அங்கு பணி செய்யும் ஒரு வைத்தியரின் எண்ண ஓட்டங்களுடன் அருமையாக பதிவிட்டிருக்கிறார். அவருடன் சேர்ந்து நானும் தீவிர சிகிச்சை பிரிவில் உலாவியது போன்ற எண்ணத்தை உண்டு பண்ணிவிட்டார். அதே மயிலன் தமிழகத்தில் வைத்தியசால்யியில் இறந்த ஒரு கர்ப்பிணிப்பெண்ணின் கணவனால் கொலை செய்யப்பட்ட வைத்தியரின் விடயத்தை விமர்சித்திருந்தார். உணர்ச்சிவசப்பட்ட ஒருநிலையில் இவ் விமர்சனத்தை எழுதியிருக்கிறார் போல தெரிகிறது.
"எழுதக் கூடாத பதிவு" http://cmayilan.blogspot.com/2012/01/blog-post.html எனும் விவாதப் பதிவில் மயிலன் ஒரு வைத்தியராக அவர் எழுதியிருந்த கருத்துக்களை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் மருத்துவத் துறையில் அதிகரித்த தனியார் மயமாக்கலினால் மருத்துவமும் பணம் காய்க்கும் ஒரு தொழிலாக மாறிவிட்டதை அவர் கவனதில் எடுக்க மறந்துவிட்டார்.மயிலன் நீங்கள் எழுத ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே உங்கள் எழுத்து ஆளுமை தொடர்ந்து மெருகேறியிருக்கிறது.உங்களது மேலும் சிறந்த படைப்புக்களிற்காக காத்திருக்கிறேன்.
மீண்டும் மற்றுமோர் விமர்சனப் பதிவினூடாக உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெற்றுக் கொள்வது;
நேசமுடன்;
அம்பலத்தார்.
பிற் சேர்க்கை: விமர்சனத்தில் உள்ள பதிவுகளைப் படிக்க, பதிவின் அருகே உள்ள லிங்கில்/ இணைப்பில் கிளிக் செய்யவும்.
|
19 Comments:
வணக்கம் நிரூபன்!அறிமுகத்துக்கு நன்றி!
வணக்கம் நிரூபன்... பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
நன்றி நிரூபன் உங்கள் பதிவைப் படித்ததால் ஒரு மருத்துவரின் இணையத்தளத்தை அறியவும் படிக்கவும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.
சிறப்பான அறிமுகம்.நன்றி.
ஒரு கணம் அதிர்ந்துவிட்டேன்..
முதலில் திரு.அம்பலத்தார் அவர்களுக்கும் நண்பர் நிருபனுக்கும் கனிவான நன்றிகள்..
அம்பலத்தார் ஐயா அவர்கள் என் வலைப்பூவிற்கு வந்திருந்தார் என்பதையே இப்போதுதான் அறிகிறேன்..
நீங்கள் குறிப்பிட்டிருந்த அந்த இரு கதைகளும் எழுதும்போது எனக்கு பதிவுலக பொறுப்பு என்பது இல்லை...
மெனக்கெடவில்லை என்பது உண்மை..காரணம் அப்போதெல்லாம் நான் எழுதிய கதைகளை நான் மட்டுமே படித்துக்கொண்டிருப்பேன்..(அந்த கதைகளின் கீழுள்ள பின்னூட்டங்களின் எண்ணிகையை பார்த்தால் உங்களுக்கே தெரியும்..சமயங்களில் ஒன்றுகூட இருக்காது..)
இப்போது அவைகளை நான் திரும்பவும் படிக்க விழைகையில் நீங்கள் சொல்வதைத்தான் நானும் உணர்ந்தேன்..
"மரண அறிவிப்பு"..பதிவுலகை விட்டு வெளியேறலாம் என்று நினைத்தபோது எழுதியது...
ஆனால் அதுதான் என்னை வெளியேறாமலும் நிறுத்தியது..
எனக்கான முதல் அங்கீகாரம் என்றுக்கூட சொல்லிகொள்வேன்..
"எழுதக்கூடாத பதிவு"..மயிலிறகின் விதிவிலக்கு..
நீங்கள் சொன்னதுபோல கருத்துவேறுபாடுகள் அதனில் ஏராளம்...
வலையின் அமைப்பு பற்றிய தங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி ஐயா..
தனிப்பட்ட முறையில் ஒரு இருள் விரும்பி என்பதால் அப்படி வைத்து விட்டேன்...விரைவில் சரி செய்கிறேன்...
"நல்லா இருக்கு" என்று மேலோட்டமாக பாராட்டாமல் குறைகளை எடுத்துசொல்லியதால் எனக்கு முழு நிறைவும் நெகிழ்ச்சியும்...
தொடர முயற்சிக்கிறேன்...
பதிவர் டாக்டர் முருகானந்தன் ஐயா பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி...
நன்றி மச்சி...
நன்றி நிரூ.மயிலனுக்கு வாழ்த்துகள் !
டாக்டர் மயிலனுக்கு வாழ்த்துக்கள் .
வைத்தியர் மயிலனை (-:)) ஆரம்பம் முதலே வலையில் தொடர்ந்து வருகிறேன்...
அவர் ஸ்டெதில் அதிகம் காதல் துடிப்பு கேட்கும்...
வாழ்த்துக்கள் சகோதரம் உங்களுக்கும்...மயிலருக்கும்...
நண்பர்கள் அனைவருக்கும் நன்றி...
@ ரெவெரி..
காதல் துடிப்பு...ஹ்ம்ம்...:)
குறைகளையும் சுட்டிக் காட்டி அருமையன விமர்சனம். மயிலனுக்கும் அம்பலத்த்தாருக்கும் வாழ்த்துக்கள்!!
மருத்துவர் மயிலனுக்கு வாழ்த்துக்கள்
அருமையான விமர்சனம்...
டெம்ப்ளேட் முதல் படைப்புகள் வரை ஒவ்வொன்றையும் சகோ அம்பலத்தார் அருமையா விமர்சிருத்திருக்கிறார்..
தொடர்ந்து இது போல் பல வலைப்பூக்களுக்கு வலம் வந்து நிறை,குறைகளை சுட்டிகாட்டி பதிவர்கள் தத்தம் தங்களை மெருகேற்ற தூண்டுகோலாய் இருக்க சகோ அம்பலத்தாரையும், நிரூபனையும் வாழ்த்துகிறேன்
@மயிலன்
குறைகளை நிறைகளாக்கி மென்மேலும் பதிவுலகில் ஜொலிக்க வாழ்த்துக்கள்
அன்பு சகோ நிரூபன்,
நண்பர் மயிலன் பக்கம் இதுவரை சென்று பார்த்ததில்லை.
சென்று பார்க்கிறேன்.
அவர் ஒரு மருத்துவர்,கவிஞர்,சிறந்த கதையாசிரியர்,எல்லாம் சரி அவர் ஒரு ஓவியர் என்பதை கூறாமல் விட்ட நிரூபன் மற்றும் அம்பலத்தாரிடம் ஒரு செல்ல கோபம் கொள்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்!மயிலனுக்கு வாழ்த்துகள்
நன்றாக உள்ளது..இது போன்று தொடர்ந்து எழுதவும்..
மயிலன், விமர்சனங்களை முன்னேற்றத்திற்கான படிக்கற்களாக நினைக்கும் உங்க நல்ல எண்ணத்தினால் உங்கள் வளர்ச்சியும் அபாரமாகவே இருக்கும். வாழ்த்துக்கள்.
ஊக்கம் தரும் பின்னூட்டங்கள் எழுதிய அனைவருக்கும் நன்றிகள். மீண்டும் மற்றும் ஒரு பதிவுடன் சந்திக்கும்வரை...
நேசமுடன் அம்பலத்தார்
Post a Comment