சுப்பருக்கு அடுத்த ஆத்து சுந்தரி மேல் ஆசை
சுதியேத்த கள்ளு தேடி அரும்பிடும் அவர் மீசை
மப்படிக்க நல்ல நேரம் கிட்டாதா என காத்திருந்தார்
மாலையான வேளையில் சைக்கிளினிலே கள் அடிக்க புறப்பட்டார்
தப்பு தண்டா பண்ணிக் கொ(ல்)ள்ள பெண்ணொருத்தி வேண்டி
தவித்த படி அலைந்தார் - சுந்தரியின் மேல் விழுந்தார்
அப்பனுக்கு பேர் கெடுக்கா பிள்ளையென இருந்தார் - ஊரில்
அயவலர்கள் நடத்தை கண்டு திட்டிடவும் கண்டுக்காது நடந்தார்!
கன்னி ஒருத்தி அருகே இல்லையே என மனதில் ஏக்கம்
கட்டி அணைக்க ஒருத்தி இல்லை என்பதனால் முகத்தில் வாட்டம்
தன்னை மறந்து போதையில் தள்ளாடியதால் போச்சு சுப்பரின் தூக்கம்
தன்னை வாரி வழங்கும் பெண்கள் மேல் உண்டாச்சு நாட்டம்
எண்ணம் மது - ஏக்கம் மாதுவென மாறிடப் பெருகியது கூட்டம்
ஏழில் சனி இருப்பதனை அறியாததால் வரப்போகிறது திண்டாட்டம்
மண்ணில் ஒரு மங்கை நடக்கையில் மனமோ எல்லை மீறும்
மந்திரித்து விட்டு பொம்மை போல சுவைத்திட நாவும் ஊறும்!
மொத்தச் சொத்தையும் இழந்தார் - ஆனாலும்
மோகந்தனை குறைக்க முடியாதவராய் நிலை தளர்ந்தார்
புத்தம் புது மலர்களையும் சுவைத்தார் - பண
புழக்கம் கையை விட்டு குறைந்திடவே
நித்தம் தெருவோர சரக்கு தேடி அலைந்தார்
நிஜத்தை கொல்லும் நோயினுள் அகப்பட்டார்
மொத்த மானமும் கப்பலேற, மோகம் கொண்ட
மெய்யில் நோயதும் முற்றி விட
சித்தப் பிரம்மை பிடித்தவர் போலானார்
சிந்தையில் இரண்டையும் ஒழிக்கனும் என சபதம் எடுத்தார்!
காலங் கடந்து ஞானங் கொண்டவருக்கு - காலன் கொடுத்த
காம நோயினை இலகுவில் மாற்றிட முடியுமோ?
ஆலிங்கனம் செய்யும் அன்பர்கள் அனைவரும்
ஆணுறை என்ற ஒன்றினை மறக்கலாகுமோ - உரிய
காலம் வரும் வரை கன்னிக்காய் பொறுத்திருக்கலாம்
கட்டில் சுகம் வேண்டுமென்றால் மனைவி தவிர்த்து - விபச்சார
கோலங் கொண்டு விளங்கும் பெண்களை நாடுகையில்
கொண்டம் ஒன்றையும் எடுத்து செல்ல மறக்கலாமோ?
*******************************************************************************************************************
விசேட அறிவித்தல்:
அன்பிற்குரிய உறவுகளே;
வரும் திங்கட் கிழமை 16.01.2012 அன்று இலங்கை, இந்திய நேரப்படி மதியம், ஐரோப்பிய நேரப்படி காலை உங்கள் நாற்று வலையில், "வலையுலகில் ஒருவருடம் + தமிழ்மண நட்சத்திர வாரம்!" அப்படீன்னு ஓர் சிறப்பு நினைவு மீட்டல் பதிவு வெளிவரக் காத்திருக்கிறது. அனைவரையும் குடும்ப சமேதரராய் வந்து கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றேன்.
*******************************************************************************************************************
|
15 Comments:
முன்கூட்டிய வாழ்த்துக்கள்
இரவு வணக்கம் நிரூபன்!அருமையான எயிட்ஸ் விழிப்புணர்வுக் கவிதை.காலத்துக்கேற்ற பகிர்வு! நன்றி!!!!
பொங்கலுக்கும் பொங்கல் தினத்துக்கு வரும் பதிவுக்கும் முன்கூட்டிய வாழத்தைச் சொன்னேன்.
நல்ல கவிதை... திருந்த வேண்டியவர்கள் திருந்துவார்களா?
மிகவும் நல்ல விழிப்புணர்வு கவிதை.
கலக்குங்க ...
மறுபடியும் ஏழரையா?
//பண புழக்கம் கையை விட்டு குறைந்திடவே
நித்தம் தெருவோர சரக்கு தேடி அலைந்தார்//
வறுமையிலும் இச்சை!!
//காலங் கடந்து ஞானங் கொண்டவருக்கு - காலன் கொடுத்த
காம நோயினை இலகுவில் மாற்றிட முடியுமோ?//
அதெப்படி முடியும் நேரா கைலாசம்தான் என்னை கேட்டா எசகு நோய்க்கு மருந்து கண்டுபிடிக்ககூடாது...
//ஆலிங்கனம் செய்யும் அன்பர்கள் அனைவரும்
ஆணுறை என்ற ஒன்றினை மறக்கலாகுமோ//
மறக்ககூடாத விசயம்!
நல்ல விழிப்புணர்வு கவிதை..நிரூபன்...பொங்கல் வாழ்த்துகள்...
ரைட்டு....
நல்ல விழிப்புணர்வு கவிதை...!
சுப்பருக்கு வந்த நோய் அவர் தொட்ட பெண்டுகளுக்கும் அல்லவா பரவி இருக்கும்..?ஆணுறை மறந்த சுப்பரை போல் ஆகவேண்டாம் என்று அருமையாக விளக்கியுள்ளீர்கள்..!
கவிதை நன்று!-இதைக்
கடைபிடித்தல் நன்று!
பொங்கல் வாழ்த்துகள்!
புலவர் சா இராமாநுசம்
வணக்கம் நிரூபன்,
//காலங் கடந்து ஞானங் கொண்டவருக்கு - காலன் கொடுத்த
காம நோயினை இலகுவில் மாற்றிட முடியுமோ?//
சரியாப் போட்டீங்க.
கவிதை சூப்பர்.. நல்ல பாடு பொருள். எனது முன்கூட்டிய இனிய பொங்கல் வாழ்த்துக்கள் பாஸ்..
நல்ல விழிப்புணர்வு கவிதை...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
வணக்கம் பாஸ்,நலமா இருக்கீங்களா?
தமிழ்மணம் நட்சத்திர வாழ்த்துகள்,இன்னைக்கு தான்
வலைப்பக்கம் வர முடிஞ்சது,
மொத்தத்தில் புலனடக்கம்
பலன் கொடுக்கும் என்பதை அழகா சொல்லியிருக்கீங்க .
பொங்கல் கொண்டாட ஊருக்கு செல்கிறேன் வந்தவுடன் பார்க்கிறேன்,
முன் கூட்டிய வாழ்த்துகள்.
Post a Comment