Tuesday, January 10, 2012

ஒத்தப் பதிவின் மூலம் மொத்த ஹிட்ஸையும் அள்ளுவது இப்படியா?

நாற்று வலைப் பதிவினைப் படிக்க வந்திருக்கும் அனைவருக்கும் அன்பான வணக்கம்;
நாற்று வலைப் பதிவில் பதிவெழுதுவதில் உள்ள சூட்சுமங்கள், எம் பதிவுகளை எப்படிப் பிரபலமாக்குவது தொடர்பான விடயங்களை "ஒத்தப் பதிவின் மூலம் மொத்த ஹிட்ஸையும் அள்ளுவது எப்படி?" எனும் தொடரினூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இத் தொடரின் முதற் பாகத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்:
பாகம் 02:
உங்கள் ப்ளாக்கில் ஒரே பக்கத்தில் அல்லது முகப்பு பக்கத்தில் பத்துப் பதிவுகளை காட்சிப்படுத்தாது Read More ஆப்சன் வைத்து அழகாக மூன்று பதிவுகளை மாத்திரம் முகப்பில் பார்க்க கூடியவாறு டிஸ்பிளே பண்ணினால் ப்ளாக் லோடிங் ஆகும் டைம் குறையுமுங்க. அப்புறம் பாருங்க; உங்க ப்ளாக் ரொம்ப ஈஸியா ஓப்பின் ஆகும்.

கூகிள் குரோமில் உங்க ப்ளாக்கை ஓப்பின் பண்ணும் போது விண்டோஸ் Task Bar இற்கு கொஞ்சம் மேலாக உங்க இடது கைப் பக்கத்தில் எவ்வாறான தேவையற்ற Script லோட் பண்ணுது என்பதனை நீங்க அறிந்து நீக்க முடியும். இதனைச் செய்வதன் மூலமும் ப்ளாக் லோடிங்கை குறைக்க முடியும். சில பதிவுகளை நாம எழுதும் போது, வழமையாக எம் தளத்திற்கு வரும் வாசகர்களை விட, அதிகளவான வாசகர்கள் ஒரே நேரத்தில் உங்க தளத்தினை Track பண்ணுவாங்க. அப்போது மூன்றாம் நபர் டெம்பிளேட் என்றால் லோடிங் ப்ராப்ளம் ரொம்பவே அதிகமாக இருக்குமுங்க. அலுவலக கணினியில் உங்க ப்ளாக்கினை நாடி திரட்டிகளினூடாக வருவோர், உங்க தளம் ஓப்பினாகுவதில் சிரமம் இருந்தா கண்டிப்பாக மறுபடியும் வரமாட்டாங்க.

சில தளங்களின் Web Page இனை நாம ஓப்பின் பண்ணும் போதே உள்ளே நுழைய முடியாதவாறு Crashed ஆகி இருக்கும். ஸோ...இந்த மாதிரிப் பிரச்சினைகளுக்கு தீர்வாக நீங்க கூகிள் வழங்கும் டெம்பிளேட்களைத் தெரிவு செய்திருப்பதே சாலச் சிறந்தது.  இந்த கூகிள் வழங்கும் டெம்பிளேட்டை தெரிவு செய்வது எப்படீன்னா? Dashborad > Template > Template Design> என்ற ஆப்சனில் போகும் போது, உங்களுக்கு முறையே Template, Background, Adjust Width, Layout, Advanced ஆகிய ஆப்சன்கள் கிடைக்கும். இதில் உள்ள ஒவ்வோர் ஆப்சனின் ஊடாகவும் நீங்கள் உங்களுக்கு விரும்பிய மாதிரி உங்க ப்ளாக்கினை டிசைன் பண்ணிக்கலாம்.

அடுத்த முக்கியமான விடயம்; உங்களால் இயன்ற வரை டெம்பிளேட்டில் தேவையற்ற விட்ஜெட்டுக்களை இணைச்சு வைச்சு அழகு பார்க்கிறதையோ, அல்லது உங்க ப்ளாக்கிற்கு வரும் போது Pop up Window அடிப்படையில் விளம்பரங்கள், Youtube வீடியோக்கள் ஓப்பின் ஆகி வாசகர்களுக்கு சிரமம் கொடுப்பதனையோ முடிந்த வரை தவிர்க்கப் பாருங்க. Live Traffic Feed மாதிரி  உங்க ப்ளாக்கிற்கு எம்புட்டுப் பேர் வாறாங்க என்பதனை அறியும் நோக்கில் நீண்ட விட்ஜெட்டுக்களைச் சொருகி வைக்காதீர்கள்.அவை உங்க ப்ளாக்கினுள் நுழையும் போது சில இலவச விளம்பரங்களையும், மிகவும் சத்தமான அலப்பறை ஒலிகளையும் தானியங்கி முறையில் உருவாக்கும் இயல்பு கொண்டவை.

இந்த மாதிரியான பிரச்சினையைப் போக்கிட இருக்கவே இருக்கு. ஹிட் கவுன்டருங்க. (Hit Counters) இணையத்தில் தேடுவதன் மூலம் லோடிங் இல்லாத, சிம்பிளான, சூப்பரான ஹிட் கவுன்டர்ஸ்களை நீங்க இணைச்சுக்கலாம். நள்ளிரவில், ஊர் ஊறங்கிய பிறகு உங்க ப்ளாக்கைப் படிக்க யாரும் வந்தா, ஐயோ..ஆத்தா எங்கேயோ பேய் வாய்ஸ் கேட்குதே என்று பயங் கொள்ளா வண்ணம் உங்க டெம்பிளேட் வடிவமைப்பில் நீங்க கவனம் செலுத்தனுமுங்க. நாம என்ன எழுத்துரு (Font) பாவித்து வலைப் பூ எழுதுகிறோம் என்பதிலும் எம் படைப்புக்களின் நேர்த்தி தங்கியிருக்கிறது.
Page Alignment சேர்க்காது எழுதப்பட்ட பதிவினைக் விளக்கும் படம். இப் படத்தில் ஒவ்வோர் வரிகளும் ஒவ்வோர் திசையில் சிதறியிருப்பதனை நீங்கள் அவதானிக்கலாம். இது பதிவிற்கு அழகினைக் கொடுக்காது.
ப்ளாக் எழுதுவதற்கான எழுத்துருவினைத் தெரிவு செய்தல்: 
NHM Writer எனப்படும் சாப்ட்வேர் இணையத்தில் இலவசமாக கிடைக்குதுங்க. தேடி டவுன்லோட் பண்ணி, அதில தமிழ் எழுத்துருவை தெரிவு செய்து இன்ஸ்ட்டால் பண்ணிட்டு தமிழில் டைப்பு செஞ்சு பார்த்தீங்க. ரொம்பவே சூப்பராவும், ஜாலியாவும் இருக்குமுங்க. அடுத்த மேட்டரு, எம் பதிவுகளின் நேர்த்தி. ஏனோ தானோ என்று கண்ணை முடிக்கிட்டு காக்கா எச்சம் போடுற மாதிரி பதிவை எழுதி வைக்க கூடாது. நம்மளை நோக்கி வருகிற ஒரு வாசகன், மீண்டும் அட இந்தாளோட கடைக்கு மறுபடியும் நான வரனுமுங்க. இவர் கிட்ட நல்ல நீட்டான (Neat) போஸ்ட் கிடைக்குங்க என்று எண்ணும் படியாக நாம எம் பதிவுகளைப் பத்திரிகைகளில் வரும் கட்டுரைகள் போன்று பந்தி பிரித்து, Page Alignment பண்ணி எழுதனுமுங்க.

எமது வலைப் பூவிற்கு நாம் எழுதும் பதிவுகளை ஒவ்வோர் வாசகர்களும் வந்து படிக்கனும் எனும் எதிர்பார்ப்புடன் தானே எல்லோரும் பதிவெழுதுவோமுங்க. உண்மை தானேங்க. அப்படீன்னா நம்ம பதிவுகள் ஒவ்வொன்றையும் நாம எழுதும் போது, அப் பதிவுகளுக்கு நாமளே முதல் வாசகனாக இருக்கனும். பதிவுகளின் வடிவமைப்பில் கவனம் செலுத்தனும். இவை எல்லாவற்றையும் விட, பரீட்சை மண்டபத்தில் உட்கார்ந்திருந்து ஆன்ஸரைத் தேடுற மாணவனைப் போல அல்லாது கம்பியூட்டருக்கு முன்னாடி உட்கார முன்பே இன்று நாம் என்ன எழுதப் போகிறோம் என்பதனை எம் மூளையில் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். ஸோ...இந்த மாதிரிச் சூப்பரான ஐடியாக்களைத் தாங்கி;அடுத்த பாகம் உங்களை நாடி வரவிருக்கிறது. அது வரை காத்திருங்கள்! எதிர்பார்த்திருங்கள்!

Page Alignment சேர்ப்பது எப்படி என்பதை சிகப்பு கோட்டினால் வட்டமிட்டும், Page Alignment செய்யப்பட்ட பதிவின் தோற்றம் எவ்வாறு நேர்த்தியாக அமையும் என்பதையும் இங்கே விளக்கியுள்ளேன்.  



நண்பர்களே, இந்தப் பதிவில் கூறப்பட்டுள்ள விடயங்கள் உங்களுக்கு எளிமையாகப் புரிகிறதா? உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருக்கிறதா? இப் பதிவு உங்களுக்கு உபயோகமாக உள்ளதா? இது பற்றிய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.


பிற் சேர்க்கை: Page Alignment இல் நீங்கள் Justify என்ற ஆப்சனைத் தெரிவு செய்ய வேண்டும். இதனைப் பதிவில் குறிப்பிட மறந்து விட்டேன். வீடு சுரேஸ்குமார் அவர்கள் நினைவூட்டியிருந்தார். அவருக்கு மனமார்ந்த நன்றிகள்.  
**********************************************************************************************************
பதிவர் அறிமுகம் பகுதியினூடாக நாம் ஒரு வீட்டிற்குச் செல்லவிருக்கின்றோம். அட என்னங்க நீங்க. "வீடு" எனும் பெயர் கொண்ட வலைப் பதிவிற்குச் சென்றால் எப்படி இருக்கும் என்று உங்களுக்கு அறிய ஆர்வம் இல்லையா? இதோ; தயாராகுங்கள். பதிவர் சுரேஸ்குமார் அவர்கள் தன்னுடைய வீடு எனும் வலைப் பதிவினூடாக சுவாரஸ்யமான இலக்கியப் பதிவுகளையும்,அனுபவப் பதிவுகளையும்,மற்றும் அறிவியல் பதிவுகளையும் பகிர்ந்து வருகின்றார்.
வீடு வலைப் பதிவிற்குச் செல்ல:
http://veeedu.blogspot.com/
***************************************************************************************************************

31 Comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

அனைத்து பதிவினருக்கும் பயனுள்ள பதிவு....

மாப்ளே இன்னும் புதிய நுட்பங்களையும் பகிரலாமே....

நிரூபன் said...
Best Blogger Tips

@தமிழ்வாசி பிரகாஷ்

அனைத்து பதிவினருக்கும் பயனுள்ள பதிவு....

மாப்ளே இன்னும் புதிய நுட்பங்களையும் பகிரலாமே....
//

வணக்கம் மாமோய்..
இன்னும் புதிய விடயங்கள் அடுத்த பாகத்தில வரும். தொடர்ந்தும் சிறிய சிறிய தகவல்களைப் பகிரலாம் என்று எண்ணியுள்ளேன்.

rajamelaiyur said...
Best Blogger Tips

அப்படி இப்பதான் உங்கள் பணியுடன் தொடர்புடைய பதிவு போட்டுல்லேர்கள் ...

rajamelaiyur said...
Best Blogger Tips

பதிவர்களுக்கு பயன் படும் பதிவு நன்றி

காட்டான் said...
Best Blogger Tips

வீடு சுரேஷ்குமாருக்கு வாழ்த்துக்கள்..!

A.R.ராஜகோபாலன் said...
Best Blogger Tips

எம் சகோ நிருபனின்
எழிலான நடையில்
எளிமையான விளக்கங்கள்
அருமை சகோ

Yoga.S. said...
Best Blogger Tips

மீள் வணக்கம் நிரூபன்!எனக்கு உதவுவதற்காகவே எழுதுவது போல் இருக்கிறது!முயற்சிக்கிறேன்.

K said...
Best Blogger Tips

யோவ், இது எல்லோருக்கும் தெரியும்! புதுஷா ஏதாவது சொல்லு மேன்!

அப்புறம், அங்க தேடி எடு, இங்க தேடி எடு என்ற பேச்சேல்லாம் வேண்டாம்! ஒழுங்கு மரியாதையாக லிங்க் குடு மச்சி!

ஏனென்றால், பேசிக்கலி வீ ஆர் சேம்போறீஸ்!

K said...
Best Blogger Tips

இன்று எனது வலையில்:

ஹன்சிகா இப்படியா குளிப்பார்? - வீடியோ

K said...
Best Blogger Tips

இன்று என் வலையில் -

சேவலுக்கு “அது” எங்கே இருக்கும்? - அதாவது இதயம்!

Unknown said...
Best Blogger Tips

நல்ல தகவல்கள் நிரூ....பயனுள்ள தகவல்கள்...
Page Alignment ல் நீங்க சொல்லுவது FORCE ALIGNMENT என்று கூறுவார்கள்..., அதில் இரண்டு வகை உள்ளது,FULL Justify FORCE Justify,

KANA VARO said...
Best Blogger Tips

தமிழ்மணம் நட்சத்திரமானதற்கு பிந்திய வாழ்த்துக்கள் பாஸ், தொடர்ந்து கலக்குங்க.

KANA VARO said...
Best Blogger Tips

தங்கட ப்ளாக்ல ரேடியோ வெட்ஜெட் போட்டிருக்கிற மகான்கள் இருக்கிறார்களே! செம கடுப்பாகும் எனக்கு.

மற்றது, பேஜ் அலைமன்ட். அது உங்க ப்ளாக்ல இருக்கிறது போலத் தான் இருக்கணும் என அவசியம் இல்லை என நினைக்கிறேன். அது ப்ளாக்கை பார்க்கிறதுக்கு வேணும் எண்டா அழகா இருக்கும். ஆனா வாசிக்கிறதுக்கு நீங்க மேல உதாரணத்தில காட்டின அலைமண்ட்ல இருக்கிற மாதிரி இருந்தா போதும் என வாசிப்பு துறையில் உள்ளவர்கள் சொல்லித்தந்தார்கள். அதாவது செய்தி வாசிக்கும் அறிவிப்பாளர்கள்.

எஸ் சக்திவேல் said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
எஸ் சக்திவேல் said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
எஸ் சக்திவேல் said...
Best Blogger Tips

வாழ்த்துக்கள், தொடருங்கள்.

vanathy said...
Best Blogger Tips

நிரூ, நல்லா விளக்கு விளக்கு என்று விளக்கிட்டீங்க. நன்றி.

//தமிழ்மண முகப்பு பக்கத்தில் என் போட்டோ போட்டிருக்காங்க.
சும்மா பாருங்க. அதுக்காக பொம்பிளை பார்க்க இந்தப் போட்டோவை கொடுக்க வேணாம்.//

karrrr.....
இப்படி படம் போட்டா நான் எங்கனை போய் பெண் தேடுவேன்!!!!!!! பேபி அதிராட்டை சொல்லி வைங்கோ.

கோகுல் said...
Best Blogger Tips

வணக்கம் பாஸ்,நலமா?

செய்யக்கூடியவை செய்யக்கூடாதவைகளை விளங்கும் படியா சொல்லியிருக்கீங்க,
கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

மிகப்பயனுள்ள பகிர்வு

சித்தாரா மகேஷ். said...
Best Blogger Tips

நல்லதொரு பயன்மிக்க பதிவு.பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணாச்சி.

சித்தாரா மகேஷ். said...
Best Blogger Tips

தமிழ்மண இந்தவார நட்சத்திரமானதற்கு என் வாழ்த்துக்கள் அண்ணாச்சி.

Anonymous said...
Best Blogger Tips

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரம்.....மறுபடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் சந்தோசம்..

தமிழ்மணம் நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள் சகோதரம்...

பாரணை முடிச்ச:) அதிரா said...
Best Blogger Tips

என்ன நிரூபன்.. இப்பவெல்லாம் அதிகம் நல்ல விஷயங்களாகச் சொல்ல வெளிக்கிட்டிருக்கிறீங்க வாழ்த்துக்கள்.. இப்படியே இருங்கோ... எதுக்கும் பொம்பிளை பார்க்கும் படலம் முடியும்வரையாவது...:)) சரி சரி முறைக்கப்படாது:))...

பாரணை முடிச்ச:) அதிரா said...
Best Blogger Tips

எமது வலைப் பூவிற்கு நாம் எழுதும் பதிவுகளை ஒவ்வோர் வாசகர்களும் வந்து படிக்கனும் எனும் எதிர்பார்ப்புடன் தானே எல்லோரும் பதிவெழுதுவோமுங்க.///

உண்மைதாங்க:)

உண்மை தானேங்க. அப்படீன்னா நம்ம பதிவுகள் ஒவ்வொன்றையும் நாம எழுதும் போது, அப் பதிவுகளுக்கு நாமளே முதல் வாசகனாக இருக்கனும்.///

இதுவும் உண்மைதாங்க... முதல் வாசகர் மட்டுமில்ல சிலநேரம்.. முழு வாசகருமே நாமதாங்க....:)) ஹையோ என் வாய் அடங்காதாம்.. ஆனா நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:))).

பாரணை முடிச்ச:) அதிரா said...
Best Blogger Tips

// Powder Star - Dr. ஐடியாமணி said...
இன்று எனது வலையில்:

ஹன்சிகா இப்படியா குளிப்பார்? - வீடியோ

January 10, 2012 5:10 PM

Powder Star - Dr. ஐடியாமணி said...
இன்று என் வலையில் -

சேவலுக்கு “அது” எங்கே இருக்கும்? - அதாவது இதயம்///


ஹையோ.. ஹா..ஹா..ஹா....ஹா.. முடியல்ல நிரூபன்... இவருக்கெதுக்காம் ஊர்வம்பு...:)) நான் போட்டுப் பிறகு வாறேன்ன்ன்:))).

Admin said...
Best Blogger Tips

பயனுள்ள பதிவு நண்பா..

வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

தமிழ்மண நட்சத்திர வாழ்த்துகள் நிரூபன். இந்த சமயத்தில் கொஞ்சம் சீரியஸ் பதிவுகளும் போடவும்!

சுதா SJ said...
Best Blogger Tips

சூப்பர் ஜடியாக்கள் மணி...))

சேகர் said...
Best Blogger Tips

இப்படியும் ஹிடுகளை அள்ளலாம்...

MaduraiGovindaraj said...
Best Blogger Tips

புதிய விஷயம் கற்று கொண்டேன் தொடர்ந்து டிப்ஸ் கொடுக்கவும் நன்றி

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

நல்ல ஆலோசனைகள்.

என் வலைத்தளத்திலும் Allignment பிரச்சினைகள் இருப்பதை இன்று தான் கவனித்தேன். அடுத்தடுத்த பதிவுகளில் திருத்திக் கொள்கிறேன்.

மிகவும் நன்றி. அடுத்த பதிவு சீக்கிரம் போடுங்கள்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails