Thursday, January 12, 2012

தமிழக மக்களிடம் வெட்கித் தலை குனியும் நிலையில் ஈழ மக்கள்!

ஈழ மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் இடையிலான உறவானது ஆழமானது. தொன்று தொட்டு வரலாறுகளின் அடிப்படையில் நோக்கும் போது தொப்புள் கொடி என்ற இறுக்கமான பந்தத்தினால் பிணைக்கப்பட்டது. ஈழ மக்களின் ஒவ்வோர் வலிகளையும், ஈழ மக்கள் சுமந்த அவலங்களையும் பார்த்தும், கேட்டும், எமக்காக கண்ணீர் வடித்தும் இரக்கம் கொண்டவர்களாக, ஈழ மக்களுக்காகப் பல அர்ப்பணிப்புக்களையும், தியாகங்களையும் புரிந்தவர்களாக எம் தமிழகச் சொந்தங்கள் விளங்குகின்றார்கள். ஈழத்தின் துயர் கண்டு தம் இயல்பு நிலையினைக் கூடத் தொலைத்து கண்ணீர் விட்டு எமக்காக கலங்கிய பெருமை எம் தமிழகச் சொந்தங்களிடம் உண்டு.
இன்றைய கால கட்டத்தில் தமிழக மக்கள் எதிர் கொள்கின்ற இரண்டு பிரச்சினைகளாக கூடங்குளம் அணு உலைப் பிரச்சினை மற்றும், தமிழக - கேரல எல்லைப் பகுதியில் இடம் பெறும் முல்லைப் பெரியாறு விவகாரம் ஆகியவை விளங்குகின்றன. "உலகமே கூடி நின்று எதிர்க்கையிலும் எம்மைத் தாய்த் தமிழக உறவுகள் கைவிட மாட்டார்கள் எனும் ஒப்பற்ற நம்பிக்கையில் தான் வன்னியில் இறுதிப் போரினுள் வாழ்ந்த ஒவ்வோர் மக்களும் தம் நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தார்கள்." தாய்த் தேசம் எமக்காகப் புரிந்த தியாகங்களையும், தமிழக மக்கள் ஈழ மக்களுக்காய் உணர்வெழுச்சி கொண்டு பேரெழுச்சியுடன் ஆற்றிய கருமங்களையும் இலகுவில் வார்த்தைகளுக்குள் அடக்கிட முடியாது.

இன்று, ஈழ மக்கள் மேய்ப்பாரற்ற மந்தைக் கூட்டங்களாக, தம்மை வழி நடத்த தக்கதோர் அரசியல் தலமை இல்லாதவர்களாக தம் வாழ்வினைத் தொலைத்து, சிங்கள அரசின் கீழ் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். சுருங்கக் கூறின் அடிமைகள் போல இலங்கையின் வட கிழக்கில் வாழும் தமிழ்ச் சொந்தங்கள் இப்போது நடாத்தப்படுகின்றார்கள். இந் நிலையில் தமிழக மக்கள் தற்போது எதிர் நோக்கும் முல்லைப் பெரியாறு, கூடங்குளம் பிரச்சினைகளிற்கு ஏதும் செய்ய முடியாத நிலையில் கண்ணீர் வடிக்கின்றார்கள்.வாழும் நாடுகள் வேறாயினும் பேசும் மொழியால், குணத்தால், நிறத்தால், கலை கலாச்சாரத்தினால் இரண்டறக் கலக்கப்பட்ட இலகுவில் அறுக்க முடியாத பாசப் பெரும் பிணைப்பினைக் கொண்ட ஈழ மக்கள் இன்று கைகளில் விலங்குடன் கண்ணீர் வடிக்கிறார்கள்.

தமிழகம் ஆண்டாண்டு காலமாக ஓர் அன்னையாகத் தன் சேய்களென ஈழ மக்களைக் கருதி ஆற்றிய பணிகள் கொஞ்ச நஞ்சமல்ல.இவற்றுக்கான கைம்மாறுகளை தமிழகம் அவலத்தினை எதிர் கொள்ளும் நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியாதவர்களாக ஈழ மக்கள் இன்று துடி துடிக்கிறார்கள். தக்ககோர் தலைவன் ஈழ மக்களை இப்போது வழி நடத்திக் கொண்டிருந்தால் ஈழ மக்கள் இந் நிலையினை அடைந்திருப்பார்களா? எம்மை வழி நடாத்திய பெருந் தலைவனின் கீழ் இன்று ஈழம் இருந்திருந்தால் கை தொடும் தூரத்திலுள்ள தமிழகத்தினுள் கால் வைத்து "எம் சொந்தங்களே நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு கரங் கொடுக்க என" உரத்துச் சொல்லி, எம் உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்போம்.
இந் நேரத்தில் வார்த்தைகளால் மட்டும் தான் நாங்கள் இருக்கிறோம் எனச் சொல்ல முடிகிறது. அண்மைக் காலமாக சில விஷமிகளால் தமிழக மக்களின் எழுச்சி குறைந்து விட்டது என்றோர் பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இப்படிச் சொல்வோருக்குச் சுய சிந்தனையே இல்லையா? தமிழக மக்கள் ஈழ மக்களுக்களின் உரிமைக்காக தமிழகத்தில் குரல் கொடுக்கையில் வெளியாகிய செய்திகளையெல்லாம் தடித்த எழுத்தில் பத்திரிகைகளின் முகப்பு பக்கத்தில் போட்டு வியாபாரத்தினைப் பெருக்கிய ஊடகங்களில் ஏதாவது ஒன்று தமிழக மக்களின் அண்மைய பிரச்சினைகள் பற்றி முக்கியத்துவம் கொடுத்துச் செய்திகளை வெளியிட்டிருக்கிறதா? ஆனால் சினிமாச் செய்திகளை மாத்திரம் தம் பிழைப்பு கெடக் கூடாது எனும் நல் நோக்கில் தொடர்ந்தும் வர்ணச் செய்திகளாகப் பிரசுரிக்கின்றன எம் கேவலமான ஈழ ஊடகங்கள்.

தமிழக மக்கள் எங்களின் உறவுகள். நாம் அவர்களிடம் கேள்வி கேட்க உரிமை இருக்கிறது. அவர்களின் உணர்ச்சி அலைகள் அண்மையில் ஓய்ந்து விட்டன. இது தொடர்பாக கண்டனம் தெரிவிக்கனும் என்றெல்லாம் லாஜிக் அடிப்படையில் கூடச் சிந்திக்கத் தெரியாது சில ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அன்னைத் தமிழகத்திற்கு ஏதும் செய்ய முடியாதவர்களாக இருப்பது மட்டுமன்றி, அவர்கள் ஆற்றிய நன்றிக் கடன்களுக்கு கைம்மாறு செய்யக் கூட முடியாதவர்களா ஈழ மக்கள் இருக்கும் இந்த இழி நிலையில் எப்படி ஐயா, அவர்களிடம் உதவியினைக் கேட்க முடியும்? நாம் எல்லோரும் எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு தமிழகத்தின் காலடியில் போய் விழ முடியும்? இப்போது ஈழ மக்கள் தமிழக மக்களிடம் வெட்கித் தலை குனிய வேண்டிய நிலையில் இருக்கின்றோம் உறவுகளே! பாவிகளாக, வழி நடாத்த யாருமற்று நட்டாற்றில் கை விடப்பட்டிருக்கும் ஈழ மக்களை மன்னியுங்கள் தாய்த் தேசத்து உறவுகளே!
இப் பதிவிற்கான படங்கள் யாவும் கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டவை.

14 Comments:

PUTHIYATHENRAL said...
Best Blogger Tips

நல்ல பதிவு வாழ்த்துக்கள் தோழரே. அதே நேரம் தமிழக உறவுகள் என்றும் ஈழத்து மக்களிடம் அன்பும் நேசமும் உள்ளவர்கள். ஈழத்து மக்கள் ஒரு பாரிய இன அழிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள் அவர்கள் மீது வருத்தப்படுவதில் எந்த நீதியும் இல்லை என்றே எண்ணுகிறேன்.

சசிகுமார் said...
Best Blogger Tips

//எம்மை வழி நடாத்திய பெருந் தலைவனின் கீழ் இன்று ஈழம் இருந்திருந்தால் கை தொடும் தூரத்திலுள்ள தமிழகத்தினுள் கால் வைத்து "எம் சொந்தங்களே நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு கரங் கொடுக்க என" உரத்துச் சொல்லி, எம் உணர்வுகளை வெளிப்படுத்தியிருப்போம்.//

இதே மன நிலையில் தான் நாங்களும் இருக்கிறோம்....நல்ல தலைவர்களை இழந்ததால் தான் இந்த நிலைமை நமக்கு....என்று தணியும் இந்த நிலைமை...

நாய் நக்ஸ் said...
Best Blogger Tips

En thalaivan
varuvar......
Ella thunbangalaium
thudaippar....

Yoga.S. said...
Best Blogger Tips

காலை வணக்கம் நிரூபன்!உண்மையை,உண்மையாய் எழுதியிருக்கிறீர்கள்!தாயகமக்கள் இயலா நிலையில் இருந்தாலும் புலம்பெயர்ந்தோர் இணையப் போர் மூலம் உதவ முடியுமே????

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!
உண்மையான ஆதங்கம்தான்.. ஈழபதிவர்களிலேயே அணுமின் நிலையத்தை பற்றியும் பெரியாறு பற்றியும் எனக்கு தெரிந்து எழுதியது நீங்களும் மணியை போன்ற சிலருமே..! பெரியாறு பிரச்சனை தீவிரமாக இருந்த போது கூட அதை பற்றி ஒரு வார்த்தை பின்னுட்டம் கூட போடாது இருந்த நாங்கள் மற்றவர்கள் எங்களுக்கு உதவவில்லையே என்று கூப்பாடு போடுவதில் பயனில்லை.. :-(

Unknown said...
Best Blogger Tips

உணர்ச்சி பூர்வமான கட்டுரை....உண்மை நிலையினை உணர்த்துகிறது கண்டிப்பாக கண்ணீர் வடிப்பதை தவிர என்ன செய்ய முடியும்.....எங்களாலும்!

Admin said...
Best Blogger Tips

நல்ல பதிவு அவசியமான பதிவு..

நாம் தமிழக சொந்தங்களிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கின்றோம். ஆனால் தமிழக சொந்தங்களுக்கு பிரச்சினை என்று வருகின்றபோது. எவரும் கடைக்கண்ணால்கூட பார்ப்பதில்லை. முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெற்றபோது இலங்கை புலம்பெயர் தமிழர்களைவிட அதிகம் குரல் கொடுத்தவர்கள் தமிழக மக்கள் என்பதனை மறுக்க முடியாது. இலங்கை தமிழர்களுக்காக தமது உயிர்களைக்கூட கொடுத்திருக்கின்றனர்.

தமிழக இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பில் தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக எழுதிவிட்டேன் என்று என்னுடன் சண்டைக்கு வந்தவர்களும் உண்டு. சிலருக்கு இலங்கைத் தமிழன் என்றால் உசிரு தமிழகத் தமிழன் என்றால் மசிரு...

Anonymous said...
Best Blogger Tips

The feeling is mutual Bro...
People on both sides of the pond need just empathy and moral support from the other side..Nothing more nothing less...

Anonymous said...
Best Blogger Tips

இரண்டு இடங்களிலும் எதிரி வீட்டுக்குள்ளேயும் நண்பர்கள் கடலுக்கு அக்கரையிலும்...

சத்தியா said...
Best Blogger Tips

தமிழக உறவுகளே உங்கள் துயரங்கள் எங்கள் துயரமே. இன்று எம் வாய் மட்டுமல்ல கைகால்கள் கண்கள் எல்லாம் கட்டப்பட்ட நிலையிலே நாம் இங்கு வாழ்கின்றோம். எம்மால் இன்று மெளனமாய் உங்கள் துயரங்ளில் பங்கேடுபதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. நிச்சயமாய் எம் தேசியத் தலைவரின் தலைமை இன்றிருந்தால் இந்த அவல வாழ்வு தமிழக தமிழருக்கு ஏற்பட்டிருக்காது. அதற்காகவே எம்போராட்டங்களை பயங்கரவாத போராட்டமாக சித்தரித்து எம்மையும் எம் போராட்டத்தையும் முடக்கிது. நிச்சயமாய் மறுபடியும் எம் தலைவர் வருவார். வரவேண்டும். அதுவே இன்றைய உலகத்தமிழர் அத்தனை பேருடைய பேரவா. எம் துன்பம் தீர இதுவே வழி.

shanmugavel said...
Best Blogger Tips

தங்கள் உணர்வுகளை புரிந்துகொள்கிறேன் சகோ! நன்றி

ஹேமா said...
Best Blogger Tips

நிச்சயம் நம்மக்கள் எங்களைப் புரிந்தே வைத்திருப்பார்கள் !

அருண் காந்தி said...
Best Blogger Tips

அன்புத் தோழரே! யாரிடம் யார் தலை குனிவது?
இது போன்ற மனப் பாங்கு நம்மிடையே அவசியமில்லாதது

இடி முழக்கம் said...
Best Blogger Tips

/// "உலகமே கூடி நின்று எதிர்க்கையிலும் எம்மைத் தாய்த் தமிழக உறவுகள் கைவிட மாட்டார்கள் எனும் ஒப்பற்ற நம்பிக்கையில் தான் வன்னியில் இறுதிப் போரினுள் வாழ்ந்த ஒவ்வோர் மக்களும் தம் நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தார்கள்." தாய்த் தேசம் எமக்காகப் புரிந்த தியாகங்களையும், தமிழக மக்கள் ஈழ மக்களுக்காய் உணர்வெழுச்சி கொண்டு பேரெழுச்சியுடன் ஆற்றிய கருமங்களையும் இலகுவில் வார்த்தைகளுக்குள் அடக்கிட முடியாது.///

ஈழத்தில் போர் இறுதிக்கட்டத்தில் இருந்தபோது தமிழகத்தில் நடந்த தேர்தலில் ஆட்சி மாற்றம் வரும் தமிழகத்தல் காங்கிரஸ் ஆதிக்கம் இல்லாமல் போகும் எதாவது வழி பிறக்கும் என்று தலைவர் முதல் கொண்டு எல்லா ஈழ தமிழர்களும் எதிர் பார்த்த போது குள்ளநரி கருணாநிதி அறிவித்த இலவசங்களில் மீண்டும் காங்கிரசை ஆட்ச்சியில் அமர்த்தி ஈழ மக்களின் கடைசி எதிர் பார்ப்பையும் அழித்தது?????????????? காலம் கடந்து வந்த தொப்புள்கோடி உறவின் மகத்துவம் அழிந்தபின் எல்லோரும் சேர்ந்து அழு வதுக்குத்தான் பயன் படுகிறது.....

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails