திமிர் கொண்டபடி
துருத்திக் கொண்டிருக்கும் தனங்களும்
நத்தை போல நீண்டிருக்கும்
பெண் குறி பற்றிய வர்ணிப்புக்களும்
இப்போது ஆணாதிக்கத்திற்கு எதிரான
வீரியம் மிக்க எழுத்துக்களாக
தமிழ் உலகில் பரிணமித்துள்ளது!
எது கவிதை என கவிஞர்கள் பலர்
ஏகாந்தப் பொழுதுகளில் தூக்கம் தொலைத்து
பொது வெளியில் மேடையிட்டு - விவாதம் செய்து
ஆராய்ச்சி நடாத்துகையில்
இது கவிதை எனவும், அடக்கு முறைக்கு எதிரான
இராப் பாடல் இதுவெனவும் முழக்கமிடுகின்றனர் சிலர்!
இறக்கை விரித்து உலகில்
எமைச் சூழ்ந்திருக்கும் இன்னல் களைந்து
பறக்க நினைக்கும் பெண்களின் பார்வைகளை
இப்போது ஆண் குறியும், பெண்குறியும்
அந்தரங்க கவிதைகள் மூலம் புரட்சி செய்ய வைக்கின்றது!
ஆணாதிக்கத்திற்கான எதிர்வினைகளும்,
அடக்கு முறைக்கான சீழ்க்கை ஒலிகளும்
இன்றைய பொழுதில் அந்தரங்க உறுப்புக்களின்
அர்த ஜாம கீதமாக அரங்கேற்றம் பெறுகின்றது!
தட்டிக் கேட்டால் தமிழ் கவிதையின் வீரியம் இதுவென
எட்டி உதைக்கின்றன குறிக் கவிஞர்களின் வார்த்தைகள்!
வண்டுகள் சூழ்ந்திருக்கும் இன் மலர் தோட்டத்தை
கண்டு தேன் பருகிட துடித்து
கன்றுகள் பல காத்திருக்கும் பொழுதுகளில்
நண்டு போல் புடைத்திருக்கும்
நமது உறுப்புக்களின் அங்க வர்ணனை இதுவென
நாள் தோறும் பேரிகை முழங்குகின்றது!
கொண்டதோர் கொள்கை! கவிதைக்கான வீரியம் இதுவென
மண்டியிட்டு புதிய பரணி பாடுகின்றது 21ம் நூற்றாண்டு இளம் சமூகம்!
ஆண் குறியையும், அந்தரங்க உறுப்புக்களையும்
அடிக்கடி எம் படைப்புகளில் செருகி
அழகு தமிழ் கவிதை படைத்தால்
ஆதிக்க விலங்கு அறுந்து
அழகு நங்கையர் வாழ்வு சிறக்கும் என
அர்த்தங்கள் சொல்கின்றன இன்றைய
அங்க வர்ண்ணை கவிதைகள்!
ஆணாதிக்கத்திற்கு எதிரான
சிறகு உடைக்கும் வடிவில்
அடிக்கடி காதுகளை துளைத்தெடுக்கிறது
அங்க வர்ணனை வார்த்தைகள் - அட
இப்படியும் தமிழ்ச் சமூகத்தில்
பெண் விலங்கை உடைக்கலாம் என
செப்படி வித்தைகளை காட்டுகின்றது
புதியதோர் இலக்கியப் பரம்பரை!
****************************************************************************************************************
இப் பதிவினூடாக நாம் செல்லவிருக்கும் பதிவரின் தளம் "என் மன வானில்" எனும் பெயர் கொண்ட வலைப் பூவாகும். "ஹாலிவூட் ரசிகன்" அவர்கள் தனது என் மன வானில் தளத்தில் உலக சினிமா விமர்சனங்களைப் பகிர்ந்து வருகிறார். ஓய்வாக இருக்கும் போது நீங்களும் அவர் தளத்திற்குச் சென்று வரலாம் அல்லவா?
****************************************************************************************************************
|
42 Comments:
இன்று நானா??? நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை நிரூபன் சகோதரா ... உங்கள் பதிவினூடாக என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி.
தொடரட்டும் உங்கள் பணி.
நல்ல பதிவொன்றை பகிர்ந்தமைக்கு நன்றி.
அடிக்கடி வலைப்பூ பக்கம் வந்து நிறைகளை முக்கியமாக குறைகளை சுட்டிக் காட்டி என் எழுத்தை செப்பனிடுமாறு வேண்டிக் கொள்கிறேன். நன்றி.
@ஹாலிவுட்ரசிகன்
இன்று நானா??? நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை நிரூபன் சகோதரா ... உங்கள் பதிவினூடாக என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி.
//
நன்றியை எதிர்பார்த்து நான் அறிமுகப்படுத்தவில்லை நண்பா,
உங்கள் படைப்புக்களும் ஏனையோரிடம் சென்று சேர வேண்டும் என்பதே என் அவா.
@ஹாலிவுட்ரசிகன்
அடிக்கடி வலைப்பூ பக்கம் வந்து நிறைகளை முக்கியமாக குறைகளை சுட்டிக் காட்டி என் எழுத்தை செப்பனிடுமாறு வேண்டிக் கொள்கிறேன். நன்றி.
//
இப்போது கொஞ்சம் பிசி நண்பா,
நேரங் கிடைக்கும் போது கண்டிப்பாக வருகிறேன்.
செப்படி வித்தைகள்..வார்த்தை விளையாட்டா...எப்படியாவது நல்லது நடக்கனும் அவ்வளவே!
கலக்கிட்டீங்க நிரூபன்! வாழ்த்துக்கள்!
????
நேற்றே சொல்ல வேண்டுமென்று நினைத்தேன்..அது எப்படி விடாம பதிவா உங்களால போட முடியுது..?? ஒரு பதிவுக்கு எவ்வளவு நேரம் பிடிக்கும் ??? இதற்கு தயவு செய்து பதிலை கொடுங்க ..அப்படியே கொஞ்சம் டிப்ஸ்..
இந்த பதிவ பற்றி மட்டும் என்ன தனியா சொல்ல..,நன்று...நன்று..நன்று..நன்றிகள்..
பிரமாதமான நையாண்டி..
குறிகளை பெண்களே எழுதுவதுதான் புதிய புரட்சி,,,
வாழ்க பெண்மக்கள்.. வளர்க அவர்களது சுதந்திரம்...
வணக்கம் நிரூபன்,
இப்பொழுதெல்லாம் பெண்கள் பற்றிய ஆபாசக் கவிதைகள் எல்லாம் அதிகமான பெண்களால் தான் படைக்கப்படுகின்றனவாம். அப்பொழுதுதான் நாக்கைத்தொங்கப் போட்டுக்கொண்டு அதிகம் ஆண் வாசகர்கள் வருவார்கள் என கனவு காண்கின்றனர் போலும் இந்த கூட்டம். ஜனரஞ்சக கவிதைகளை தவிர்த்து இலக்கிய நோக்கில் பார்த்தால், சில நவீன கவிதைகள் இவ்வாறான விடயங்களை பேசத்தான் செய்கின்றன. ஆனால் சூட்சுமமாக பேசுகின்றன. ஆனால், வாசகர்களின் பொழுதை போக்கவேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்தோடு எழுதப்படும் ஜனரஞ்சக கவிதைகள் அப்பட்டமாக இந்த விடயங்களை பேசுகின்றன. ம்ம்ம்.. இருந்தும், இது பற்றி சொல்லும் உங்கள் கவிதை சூப்பர்.
சிற்றமும் பலமும் சிவனும் அருகிருக்க
வெற்றம் பலம்தேடி விட்டோமே - நித்தம்
பிறந்தஇடம் தேடுதே பேதை மடநேஞ்சம்
கறந்தஇடம் நாடுதே கண்.
வணக்கம், நிரூபன்!கவிதை நச்சென்று இருந்தது.வாழ்த்துக்கள்! நண்பர்கள் சொன்னது போல் இப்போது பெண்கவிஞர்களே அதிகமாக எழுதுகிறார்கள்!(தம்பி நிரூபன்,இப்போதும் இங்கு பிரான்சில் மலபார் எனப்படும் சுவிங்கத்துடன் ஸ்டிக்கர் வருகிறது!ஒட்டி மகிழுங்கள்,ஹி!ஹி!ஹி!!!!!
நாறும் குருதிச் சலதாரை நாள்தோரும் சீழ்வடிந்தே
ஊறும் மலக்குழி காமத் துவாரம் ஒளிந்திடும்புண்
தேறுந் தசைப்பிளப் பந்திரங் கத்துள சிற்றின்பம் விட்டு
ஏறும் பதந்தரு வாய் திருக் காளத்தி ஈச்சுரனே!
சும்மா... நச்சுன்னு.........
அதானே! இந்த நாகரிக மோகத்தினுள் மூழ்கியுள்ள பெண்கள் எப்படி இப்படியெல்லாம் எழுதலாம்? தனது கருத்துக்களையும், சிந்தனைகளையும் எப்படி இப்படி ஒப்பனாகச் சொல்லலாம்! பெண்கள் என்றால் ஒரு கட்டுப்பாடு வேண்டாமோ?
இப்படிப் பெண்கள் புரட்சிகரமாகக் கிளம்பினால், சமையல் குறிப்புக்களையும், வீட்டு அலங்காரக் குறிப்புக்களையும் யார் எழுதுவது?
பெண்களே! உமக்கு சுதந்திரம் கூடிவிட்டது! நீவிர் கண்டதையெல்லாம் எழுதுவதை நிறுத்தும்! அந்த உரிமை எமக்கு மட்டுமே உளது! நாம் மட்டும் சைட் அடித்த பெண்கள் பற்றியும், காம உந்துதல் பற்றிய புனைவுகளையும் நாள் தோறும் எழுதலாம்! நீங்கள் அப்படி எதுவுமே எழுதக் கூடாது! தெரிந்துகொள்ளுங்கள்!
உங்கள் சுதந்திரத்துக்கு ஒரு எல்லை இருக்கிறது! காலம் மாறுகிறது என்பதற்காக உமக்கு அதிக சுதந்திரம் தர முடியாது!
உங்கள் குறிகள் பற்றியும், தனங்கள் பற்றியும் கவி பாடவும், குறுஞ்செய்தி அனுப்பவும் ஆண்களாகிய எமக்கு மட்டுமே உரிமை உண்டு! புரிஞ்சுதா?
நீங்கள் வழக்கம் போலவே சமையல் குறிப்புக்களை மட்டுமே எழுதுங்கள்!
உங்களை நாங்கள் அடக்கி வைப்பதே, உங்களின் ஆளுமைக்கு முகம் கொடுக்க முடியாமல்தான்! தயவு செய்து உங்கள் ஆளுமைகளை எழுத்தில் வடிக்காதீர்கள்!
நொந்துபோவோம் நாம்!
ஒரு பெண்ணைக் கற்பழிப்பதற்காக, ஒரு ஆண் துரத்திக்கொண்டு போகிறான்! அவள் ஓடுகிறாள்! இவன் துரத்துகிறான்! ஓடுகிறாள்.... ஓடுகிறாள்! இவனும் துரத்திக்கொண்டே இருக்கிறான்!
ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணினால் ஓட முடியவில்லை! மிகவும் களைத்துப் போகிறாள்! அவளுக்கு கோபம் + வெறுப்பு + இயலாமை எல்லாம் வந்துவிடுகிறது!
அவள் யோசிக்கிறாள்! கேவலம் எனது மார்பை கசக்குவதற்கும், எனது குறியை ருஷிப்பதற்கும் தானே, இவன் இந்தளவு பாடுபடுகிறான்! சக மனுஷி என்றுகூட பார்க்காமல் வெறி பிடித்த மிருகம் போல ஓடிவருவது இதற்குத்தானே! என்று விரக்தியாக ச் சிந்திக்கிறாள்!
உடனே தனது ஆடைகளை தாறுமாறாகக் கிழித்து எறிந்துவிட்டு, கோபத்துடனும், விரக்தியுடனும் சொல்கிறாள்,
“ வா.... வந்து எடுத்துக்கொள்! இதுக்குத்தானே இவ்வளவு அலைகிறாய்.... இதோ நானே தருகிறேன்! எடுத்துக்கொள்” என்று மிகவும் கோபமாகப் பேசுவாள்!
அந்த இடத்தில் ஆடைகளைக் களைந்துவிட்டு, நிர்வாணமாக நிற்பது ஒரு கூச்சமாக அவளுக்குத் தோன்றாது! காம வெறியில் அலையும் ஆண்களை இப்படித்தான் அடக்க வேண்டும்! அவ்வளவு ஆக்ரோசமான நிலையில், ஒரு அனல் தெறிக்கும் நிலையில் நிர்வாணமாக நிற்கும் ஒரு பெண்ணைக் கண்டவுடன், துரத்திக்கொண்டு வந்தவருக்கு எல்லாமே சுருங்கிவிடும்!
ஹி ஹி ஹி பெண்ணின் ஆளுமைக்கு முன்னால், இந்த மைனர்குஞ்சு மணியின் காமவெறி காணாமலேயே போய்விடும்!
இப்படி அந்தப் பெண் முடிவெடுப்பதற்கு காரணமே ஆண்களின் ஓயாத அடக்குமுறைதான்!
எனக்கென்னவோ, வலையுலகில்/எழுத்துலகில் ஆணாதிக்கத்தை முறியடிக்க பெண் பதிவர்கள்/எழுத்தாளர்கள் , தங்கள் குறிகள்/மார்புகள் குறித்து எழுதுவதும், மேற்படி சம்பவத்தில் வரும் பென்ணின் மனோநிலையும் ஒன்றுபோலத்தான் தெரிகிறது!
இப்படி எழுதியாவது காம வெறியர்கள் அடக்கலாமா என்று பார்க்கிறார்கள் போலும்!
//கவிதைக்கான வீரியம் இதுவென
மண்டியிட்டு புதிய பரணி பாடுகின்றது 21ம் நூற்றாண்டு இளம் சமூகம்!//
இதில் பெரும்பாலான பெண் கவிஞர்களும் அடக்கம் என்பதே வேதனை..விலைமாதுவை பற்றி ஒரு கவிதை எழுத முற்படும்போது கூட அத்தகைய வார்த்தைகளை குறிப்பிடுவதில் ஐயம் இருந்தது...பெண்ணின் மார்பைக் குறிக்கும் ஒரு வாரி அதனில் இருந்ததால் இரண்டு நாட்கள் draft ஆகவே வைத்திருந்து இறுதியில் சில நண்பர்களிடம் காண்பித்து கருத்து கேட்ட பின்னரே பிரசுரித்தேன்.. உங்களின் கூற்றில் ஒரு மாண்பு உள்ளது நண்பரே..
பாஸ் இப்போ நிறய பெண் எழுத்தாளர்கள் தங்கள் கருத்தை உரிமையை துணிந்து பேசுகிறார்களே!!!!
வலைப்பூவிலும் பெண்கள் இருக்காங்க..... ஆனா என்ன ஒரு வட்டத்தை விட்டு வாறாங்க இல்ல வெளியே...... அவங்க எல்லாம் துணிந்து பேசணும் எழுதணும் இதான் என் ஆசை :)))
அப்புறம்..... மணியின் கருத்து சூப்பர்
@மயிலன்
உங்களின் கூற்றில் ஒரு மாண்பு உள்ளது நண்பரே..//////
மயிலன் அவர்களே! மாண்பு என்று நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்? ச்சும்மா தெரிஞ்சுக்கலாம்னுதான்!
வலைப்பூவிலும் பெண்கள் இருக்காங்க..... ஆனா என்ன ஒரு வட்டத்தை விட்டு வாறாங்க இல்ல வெளியே...... அவங்க எல்லாம் துணிந்து பேசணும் எழுதணும் இதான் என் ஆசை :)))
அப்புறம்..... மணியின் கருத்து சூப்பர் /////
நன்றி துஷி!
அருமையான பதிவு நண்பரே.. வரிகளும் பிரமாதம்..
யாரச்சொல்றீங்கன்னு தெரியுது,என்ன சொல்றதுன்னு தெரியல!
@விக்கியுலகம்
செப்படி வித்தைகள்..வார்த்தை விளையாட்டா...எப்படியாவது நல்லது நடக்கனும் அவ்வளவே!
//
அண்ணே, நல்லது நடந்தால் ஓக்கே! ஆனால் இது தான் நவீன புரட்சி என்று சொல்லிக் கொண்டு பெண் குறி தொடர்பாகப் பாடுவது ஓவராக இல்லையா?
@கவிப்ரியன்
கலக்கிட்டீங்க நிரூபன்! வாழ்த்துக்கள்!
//
நன்றி நண்பா.
@சசிகுமார்
????
/
மச்சி ஏதோ கவிதை என்று சொல்லுவாங்களாம்.
அது மாதிரி இருக்கா என்று நீ தான் சொல்லனும்.
@Kumaran
நேற்றே சொல்ல வேண்டுமென்று நினைத்தேன்..அது எப்படி விடாம பதிவா உங்களால போட முடியுது..?? ஒரு பதிவுக்கு எவ்வளவு நேரம் பிடிக்கும் ??? இதற்கு தயவு செய்து பதிலை கொடுங்க ..அப்படியே கொஞ்சம் டிப்ஸ்..
இந்த பதிவ பற்றி மட்டும் என்ன தனியா சொல்ல..,நன்று...நன்று..நன்று..நன்றிகள்..
//
என்னை விட, சிபி செந்தில்குமார் அண்ணர் ஒரு நாளைக்கு மூன்று பதிவு போட்டு கலக்கிறார், நான் ஒரு நாற்று நண்பா.
ஏதோ என்னால முடிஞ்சதை எழுதுகிறேன்.
பதிவின் உள்ளடக்கத்தினைப் பொறுத்து நேரம் தீர்மானிக்கபடும் நண்பா.
சாதாரண கவிதைகள் என்றால் அரை மணி நேரமே போதும். கட்டுரை, ஆய்வுக் கட்டுரை, அரசியல் விமர்சனங்கள், சினிமா என்றால் ஒரு மணி நேரம் எடுக்கும்.
ஒவ்வோர் பதிவும் எழுதி முடித்த பின்னர் நானே முதல் வாசகனகா இருந்து எழுத்துப் பிழைகள் பார்த்து, திருத்தங்கள் செய்ய ஐந்து தொடக்கம் பத்து நிமிடம் எடுக்கும் நண்பா.
@Kumaran
இதற்கு தயவு செய்து பதிலை கொடுங்க ..அப்படியே கொஞ்சம் டிப்ஸ்..//
நண்பா பதிவு எழுத முன்னாடி, நீங்க வேலையில இருக்கும் போது அல்லது பஸ்ஸில போகும் போது இல்லே காரில போகும் போது அல்லது எங்காவது போகும் போது என்ன எழுதப் போகிறோம் என்பதனை மூளையில் சேமித்து, யோசித்து வைத்தாலே போதும். எம் சிந்தனைகள் அனைத்தும் பதிவு எழுதத் தொடங்கும் போது வருகின்ற மாதிரி!
இவ்வளவும் தான். இவை அனைத்தும் இலகுவான வழிகளே.
@கே.ஆர்.பி.செந்தில்
பிரமாதமான நையாண்டி..
குறிகளை பெண்களே எழுதுவதுதான் புதிய புரட்சி,,,
வாழ்க பெண்மக்கள்.. வளர்க அவர்களது சுதந்திரம்...
//
நன்றி அண்ணா.
@பி.அமல்ராஜ்
நன்றி அமல் அண்ணா, புரட்சிப் பெண்கள் என்ற போர்வையில் இவ்வாறு எழுதுவதனைத் தான் சகிக்க முடியலை.
@veedu
வணக்கம், நிரூபன்!கவிதை நச்சென்று இருந்தது.வாழ்த்துக்கள்! நண்பர்கள் சொன்னது போல் இப்போது பெண்கவிஞர்களே அதிகமாக எழுதுகிறார்கள்!(தம்பி நிரூபன்,இப்போதும் இங்கு பிரான்சில் மலபார் எனப்படும் சுவிங்கத்துடன் ஸ்டிக்கர் வருகிறது!ஒட்டி மகிழுங்கள்,ஹி!ஹி!ஹி!!!!!//
நன்றி ஐயா, அப்போ உங்களை எப்போ பார்க்கலாம்?
பிரான்ஸில உங்களையும் பார்க்கலாம் தானே?
@veedu
சிற்றமும் பலமும் சிவனும் அருகிருக்க
வெற்றம் பலம்தேடி விட்டோமே - நித்தம்
பிறந்தஇடம் தேடுதே பேதை மடநேஞ்சம்
கறந்தஇடம் நாடுதே கண்.//
அண்ணரும் நல்லாத் தான் எடுத்துக் கொடுக்கிறார்.
ஹே...ஹே..
மிக்க நன்றி..தங்கள் கருத்துக்களை பின்பற்ற முயற்சி செய்கிறேன்..
@veedu
நாறும் குருதிச் சலதாரை நாள்தோரும் சீழ்வடிந்தே
ஊறும் மலக்குழி காமத் துவாரம் ஒளிந்திடும்புண்
தேறுந் தசைப்பிளப் பந்திரங் கத்துள சிற்றின்பம் விட்டு
ஏறும் பதந்தரு வாய் திருக் காளத்தி ஈச்சுரனே!//
அண்ணர் அந்தக் காலத்திலையும் இப்படிக் கவிதை இருந்தது என்பதைப் பாசுரங்கள் ஊடாக நினைவுபடுத்தியிருக்கிறார்.
நன்றி நண்பா.
@நிவாஸ்
சும்மா... நச்சுன்னு.........
//
நன்றி நண்பா.
@Powder Star - Dr. ஐடியாமணி
அன்பிற்குரிய மணி, தாங்கள் இங்கே நான் எடுத்துக் கொண்ட கருப் பொருளையும், நான் கூற வந்தை சில நையாண்டி விடயங்களையும் தவறாகப் புரிந்து விட்டீர்கள்.
உனக்கு என் படைப்புக்களின் போக்கு, ஏலவே பெண் விடுதலை, ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம் பற்றி நான் எழுதிய பதிவுகளின் உட்கிடக்கை யாவும் நீ அறிந்திருப்பாய் என்று நினைக்கிறேன். நினைவில் வைத்திருப்பாய் என நினைக்கிறேன். பாரதி கண்ட புதுமைப் பெண் பற்றி நீ அறிந்திருப்பாய் அல்லவா? பெண்கள் ஆபாசம் கலந்து எழுதுவதனையோ, பெண்கள் வெளிப்படையாகப் பேசுவதனையோ எதிர்க்கின்ற அல்லது வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கும் பழக்கம் எனக்கு இல்லை! ஆனால் எழுத்துலகில் ஆண் குறி மையப் புனைவினைச் சிதைக்கின்றோம் எனக் கூறிக் கொண்டு தூமை என்றும், தீட்டு என்றும் பெண் குறி, யோனி மடல், ஆண் குறி, முலைக் காம்பு, ஆசன வாய் என உடலுறுப்புக்களைக் கொண்டு அதிகளவான புரட்சி செய்வோருக்கு புரட்சி என்றால் எப்படி எனப் புரிய வைக்கும் நோக்கில் தான் இக் கவிதையினைக் கிண்டலுடன் எழுதினேன். ஆகவே தாங்கள் கூறுவது போல பெண்கள் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும்! ஆண்கள் மாத்திரம் தான் எழுதலாம் எனும் இழிவான சிந்தனை எனக்கு இல்லை! இதற்கு முன்னர் பெண்களை அடக்கியாளும் ஆண்கள் பற்றி ஓர் பெண் பதிவர் தொடர்பில் சில பதிவர்கள் கூட்டாகச் சதி செய்கையில் பதிவினை எழுதியிருந்தேன். நீயும் படித்திருப்பாய் என நினைக்கிறேன்.
புரட்சிப் பெண்கள்? பாரதி கண்ட புதுமைப் பெண்கள், பெண் விடுதலை என்பது எழுத்துலகில் இப்படி எழுதுவதுடன் நின்று விடுமா நண்பா? இவர்கள் மாத்திரம் ஏன் ஒரு வட்டத்தினுள் இப்படி எழுதுவது தான் ஆண் குறிப் புனைவினைச் சிதைக்கும் என்று மாயமான் போல பேசிக் கொள்கிறார்களே! ஏன் மச்சி!
@மயிலன்
இதில் பெரும்பாலான பெண் கவிஞர்களும் அடக்கம் என்பதே வேதனை..விலைமாதுவை பற்றி ஒரு கவிதை எழுத முற்படும்போது கூட அத்தகைய வார்த்தைகளை குறிப்பிடுவதில் ஐயம் இருந்தது...பெண்ணின் மார்பைக் குறிக்கும் ஒரு வாரி அதனில் இருந்ததால் இரண்டு நாட்கள் draft ஆகவே வைத்திருந்து இறுதியில் சில நண்பர்களிடம் காண்பித்து கருத்து கேட்ட பின்னரே பிரசுரித்தேன்.. உங்களின் கூற்றில் ஒரு மாண்பு உள்ளது நண்பரே..
//
நன்றி நண்பா.
@துஷ்யந்தன்
பாஸ் இப்போ நிறய பெண் எழுத்தாளர்கள் தங்கள் கருத்தை உரிமையை துணிந்து பேசுகிறார்களே!!!!
வலைப்பூவிலும் பெண்கள் இருக்காங்க..... ஆனா என்ன ஒரு வட்டத்தை விட்டு வாறாங்க இல்ல வெளியே...... அவங்க எல்லாம் துணிந்து பேசணும் எழுதணும் இதான் என் ஆசை :)))
அப்புறம்..... மணியின் கருத்து சூப்பர்
//
துஸி. மேலே மணிக்கு விளக்கம் கொடுத்திருக்கிறேன். துணிந்து பேசுவதற்கு நான் எப்போதும் எதிரானவன் அல்ல.
ஆனால் இது தான் பெண் விடுதலை என்றும் அடக்கப்படும் பெண்களின் குரல் என்றும் யோனியையும், முலைக் காம்பினையும் வைத்து கவி பாடுவதை, இலக்கியம் எழுதுவதை எப்படி ஏற்க முடியும்! இப்படியான இலக்கியங்களை கலிங்கத்துப் பரணியின் கடை திறப்புப் படலம் போன்ற ஒரு வரையறைக்குள் பாடலாம்! தவறில்லை! ஆனால் இது தான் இன்றைய அடக்கப்படும் பெண்களின் குரல் வளை என்று சொல்லுவத தாங்கள் ஏற்றுக் கொள்ளுறீங்களா?

@சேகர்
அருமையான பதிவு நண்பரே.. வரிகளும் பிரமாதம்..
//
நன்றி நண்பா.
@shanmugavel
யாரச்சொல்றீங்கன்னு தெரியுது,என்ன சொல்றதுன்னு தெரியல!
//
யாரையுமே சொல்லலை அண்ணா, ஒரு பொதுவான கண்ணோட்டத்தில் என் கருத்துக்களைச் சொல்லியிருக்கேன்.
ஹே...ஹே..
நன்றி.
எழுத்துக்கும் ஆண் பெண் என பேதம் பிரிக்க வேண்டியதில்லை இருபாலரும் ஒரு நாகரீக வரம்புக்குள் வார்த்தைகளை பிரயோகம் செய்து எழுதலாம்..உள்ளங்கையை மூடி வைத்திருக்கும் வரை தான் உள்ளிருக்கும் பொருள் என்னவென்று அறிந்த கொள்ள ஆர்வம்.இப்போதெல்லாம் முன்னேற்றம் நாகரீக வளர்ச்சி என்று அதற்கு தேவையில்லாமல் போய்விட்டதால் பெண்கள் இப்படி எழுதுகிறார்கள் என்று ஆச்சிரியப்படுவதும் ஆச்சிரியமே!!!
இந்தப் பதிவையும் பின்னூட்டங்களையும் இப்போதான் பார்க்கிறேன் நிரூ !
Post a Comment