நேற்றோடு ஓர் ஆண்டு
எம் நெஞ்சு நிறை வடுக்களுக்கு
மருந்திட்டு ஆற்றாது
காற்றோடு கலந்தது போல
கண் இமைக்கும் நொடிப் பொழுதில்
மறைந்து போயிட்டு!
வந்து போகும் ஒவ்வோர் ஆண்டிலும்
வண்ண வண்ண கனா கொண்டு
தந்திடுவார் தமிழீழம் என
தமிழர் விழி பார்த்திருக்கும்- விடுதலை தீயில்
வெந்து போன உள்ளங்களின்
விழிச் சுடரில் எம் தேசம்
ஒளி கொள்ளும் என
எம் நெஞ்சமெல்லாம் தினந் தோறும்
ஏங்கி நிற்கும்!
ஒளி பிறக்காதா எனும் ஏக்கம் நிறைந்திருக்கும்!
வெவ்வேர் திசையிருந்து எமை அணைக்க
வேற்று நாட்டு கரங்கள் நீளாதா என
எல்லோர் மனங்களும் ஆவல் கொள்ளும்!
ஆனாலும் எல்லோரும் சேர்ந்து
எம் தலையில் மிளகாய் அரைத்தார்கள்!
பூண்டோடு அழித்ததாய் பெருமிதம் கொண்டார்கள்!
வாசல் முழுதும் வருகையினை
எதிர்பார்த்து நிதம் காத்திருப்பு - ஈழ விழிகளில்
விடுதலை வரும் நாளில் எம் மனங்கள்
சந்தோச மழையில் பூத்திருக்கும் எனும் எதிர்பார்பு!
ஆனாலும் எமக்கான நாழிகைகள் இன்னமும் புலரமால்
ஏக்கம் நிறை கனவுகளில் மண் அள்ளி போட்டு
ஏமாற்றம் தந்து விட
ஆண்டுகளோ ஏழையாய் சிரித்து செல்கின்றது!
குருதி திட்டுக்களின் வெடுக்கு நாற்றம்
குற்றுயிராய் துடித்த உடல்கள்
உணவின்றி அல்லாடிய அந்த நிமிடங்கள்
உறவுகளைத் தொலைத்ததனால் நிகழ்ந்த
உணர்ச்சியற்ற நொடிப் பொழுதுகள்!
உருக் கொண்ட விடுதலையை தன் விழியில்
கருக் கொள்ள வைத்த தலைவன்
அருகே இருக்கிறான் அணைப்பான் என இரைஞ்சி நின்ற
எம் வரலாற்றின் இறுதி நாட்கள்- இவை
எல்லாவற்றோடும் போய் விட்ட 2009 இன் பின்னர்
எமக்கான புதுவருடம் இன்னமும் பிறக்கவில்லை!
பிறக்கும் ஒவ்வோர் ஆண்டுகளும்
மௌனித்த ஆண்டுகளாய்
வாசல் வந்து வருகையினை மட்டும் சொல்லி விட்டு
மெதுவாய் தாவிச் செல்கின்றன!
ஈழக் கனவுகளோடு எம் மனங்கள் இறந்து போய் விட்டதாய்
ஆழம் நிறை மன உணர்வுகள் கட்டியம் கூறுகின்றன - ஆனாலும்
இதயத்தில் ஊறிய நெருப்பினை யாராலும்
இலகுவில் அழித்திட முடியுமா?
பூக்கும் ஒவ்வோர் மலர்களும் எம் ஊரில்
தாம் உட் கொண்ட கந்தக மணத்தை வெளியிடுகின்றன
எங்கள் நாசித் துவாரங்களும் தூய ஒட்சிசனின்
சுகந்தத்தினை உள் இழுக்காது
கொத்துக் குண்டுகளின் ரணங்களினை மாத்திரம்
இன்றும் சுவாசித்துக் கொண்டிருக்கின்றன!
கட்டியெழுப்பப்படாத மக்கள் வாழ்வு - எங்கேனும்
ஓர் திசையிருந்து தம் வாழ்வில் ஒளி பிறக்கும்
என ஏக்கத்துடன் வாட்டமுற்றிருக்கும்
பெற்றோரை, உறவுகளை தொலைத்த உறவுகள்;
தொழிலின்றி, வாழ்வை மேம்படுத்த வழியின்றி
வைத்த கண் வாங்காது கிழக்குத் திசையில்
விடியல் பிறக்கும் என ஏங்கும் கிழிந்த மனங்கள்
இவர்களின் அவல வாழ்வு செப்பனிப்படாது
நகர்கையிலும் நச்சு வார்த்தைகளை வீசும்
சிகப்புச் சால்வை நாயகனின் நய வஞ்சகத்தனம்!
இந்த நாழிகைகள் நடுவே புலர்ந்தும் மௌனமாய்
மறைகிறது எங்களின் ஆண்டு!
இந்த ஆண்டும் மௌனப் பெரு மூச்சை மாத்திரம் தந்து
வெந்த மனங்களின் வெப்பியாரம் போக்காது
குளிர் நீர் ஊற்ற மனமின்றி குமுறும் எரிமலைகளை அணைக்காது
எம்மை விட்டு மெதுவாய் அகன்று விடும்- நாளைய
வருகையில் ஓர் விடியல் பிறக்கும் எனும்
நம்பிக்கை மாத்திரம் இன்னமும் அணையாது
எம் கூடவே இருக்கும்!
இன்றைய தினம் புதுவருடத்தைக் கொண்டாடும் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும், மற்றும் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்! பிறந்திருக்கும் இப் புத்தாண்டில் எம் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் எனும் நம்பிக்கையோடு எம் நாட்களைத் தொடங்குவோம்!
*************************************************************************************************************
இலக்கியம், கவிதைகள், இனிமையான ஊர் வாசனை நிறைந்த பதிவுகள், மற்றும் சமூகக் கருத்துக்கள் நிரம்பிய கட்டுரைகள்,பாடல் விமர்சனம் எனப் பல்சுவை அம்சங்கள் நிறைந்த படைப்புக்களை "புலம்பல்கள்" எனும் வலைப் பதிவில் பகிர்ந்து வருகின்றார் "பி.அமல்ராஜ்" அவர்கள்.
அமல்ராஜ் அவர்களின் புலம்பல்கள் வலைப் பதிவிற்கு நீங்களும் செல்ல:
http://www.rajamal.blogspot.com/
*************************************************************************************************************
*************************************************************************************************************
இலக்கியம், கவிதைகள், இனிமையான ஊர் வாசனை நிறைந்த பதிவுகள், மற்றும் சமூகக் கருத்துக்கள் நிரம்பிய கட்டுரைகள்,பாடல் விமர்சனம் எனப் பல்சுவை அம்சங்கள் நிறைந்த படைப்புக்களை "புலம்பல்கள்" எனும் வலைப் பதிவில் பகிர்ந்து வருகின்றார் "பி.அமல்ராஜ்" அவர்கள்.
அமல்ராஜ் அவர்களின் புலம்பல்கள் வலைப் பதிவிற்கு நீங்களும் செல்ல:
http://www.rajamal.blogspot.com/
*************************************************************************************************************
|
29 Comments:
சகோ வணக்கம்
பிறக்கும் ஆண்டு ஈழத்தமிழர் வாழ்வில் விடிவினை ஏற்படுத்துமா என ஏக்க கனவுகளோடு நாம் எங்க ; எம்மை கடந்த ஆண்டுகளோ மௌனித்த ஆண்டுகளாய் சென்றிருக்கின்றன ; ஒவ்வோர் ஆண்டின் எதிர்பார்போடு இந்த ஆண்டையும் வரவேற்போம் ; இனிதாய் அமையும் எனும் நம்பிக்கையில்
பூக்கும் ஒவ்வோர் மலர்களும் எம் ஊரில்
தாம் உட் கொண்ட கந்த மணத்தை வெளியிடுகின்றன#
எல்லோரின் மனக்குமுறலையும் பிரதிபலிப்பதாக உள்ளது.
கந்த என்பதை கந்தக என்று மாற்றினால் நல்லாயிருக்கும் என நினைக்கிறேன்.
அனைவருக்கும் கூகிள்சிறியின் இனிய புத்தாண்டு நாள் வாழ்த்துக்கள்!
@Mahan.Thamesh
நம்பிகை தானே எம் வாழ்க்கை நண்பா,
@யாழ் மஞ்சு
கந்த என்பதை கந்தக என்று மாற்றினால் நல்லாயிருக்கும் என நினைக்கிறேன்.
அனைவருக்கும் கூகிள்சிறியின் இனிய புத்தாண்டு நாள் வாழ்த்துக்கள்!
//
நன்றி நண்பா, ஓர் எழுத்துப் பிழை தேடினேன், கந்தகம் மட்டும் கந்தக என இருந்து என் கண்ணில் சிக்காது தப்பி விட்டது.
மிக்க நன்றி நண்பா, இப்போது திருத்தி விட்டேன்.
தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
எமக்கான புதுவருடம் இன்னமும் பிறக்கவில்லை! ////
இதுதான் என் கருத்தும் ..இருந்தாலும் எல்லோர் விருபத்திற்குஇணங்க என்னுடைய புது வருட வாழ்த்துகளும்...
ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்
இன்றைய தோல்வி நாளைய வெற்றி...சகோதரா கண்டிப்பாய் கந்தகம் மட்டும் உம் மன்னில் உறையவில்லை...தமிழீழகத்தின் கனவும் உறங்குகின்றது....இப்பொழுது அங்கிருக்கும் சகோதரன் வாழ்வு செழிக்க வேண்டும்...அதுவே என் புத்தாண்டின் பிராத்தனை பிராத்தனை...
மனம் கனிந்த புத்தாண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன். வாழ்க வளத்துடன்.
அன்புநிறை சகோ நிரூபன்,
பதிவினை படிக்கும் முன்பே தலைப்பு மனம்
கனக்கச் செய்து விட்டது.
விடியலுக்காய் காத்திருந்து விழிபூத்து
நிற்கின்றோம்.
வருகின்ற புத்தாண்டாவது விழிமுன்
கொண்டுவரட்டும்.
என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்...
சுவிஸ் பார்பதுக்கான போட்டி விவரங்கள் உள்ளே
\\கனவுகளில் மண் அள்ளி போட்டு
ஏமாற்றம் தந்து விட
ஆண்டுகளோ ஏழையாய் சிரித்து செல்கின்றது!//
மறுக்கமுடியவில்லை...
"விடைகொடு எங்கள் நாடே" பாடல் வரிகள் மனதில் ஒரு கனம் வந்துபோனது...
காத்திருப்போம் தோழர்.....
உங்கள் ஏக்கம் மாறும் ,வாழ்வில் ஒளி பிறக்கும்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
அன்புடன் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பரே
ஒவ்வோர் ஆண்டிலும் எங்களுக்கான
ஒளி பிறக்காதா எனும் ஏக்கம் நிறைந்திருக்கும்!
வெவ்வேர் திசையிருந்து எமை அணைக்க
வேற்று நாட்டு கரங்கள் நீளாதா என
எல்லோர் மனங்களும் ஆவல் கொள்ளும்!///
\
இதுதான் ஈழத்தமிழனின் தலைவிதி.காலாதிகாலமா.
வாழ்வினில் துன்பங்கள் அகலும்
நாளிது என்ற நம்பிக்கை ஊட்டும்
ஆண்டிது பிறக்கிறது 2012.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு
வாழ்த்துக்கள்
விடியல் வரும் என்று காத்திராமல்
விடியலை படைப்போம்..
மகிழ்வோம்
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழரே
அருமை புத்தாண்டு வாழ்த்துக்கள் .
@sasikala
அருமை புத்தாண்டு வாழ்த்துக்கள் .
//
இந்த கமெண்டைத் தானே இப்போ 10செக்கனிற்கு முன்னாடி ஜே ஜே இன் ரோஜா திரை விமர்சனத்தில் போட்டிருக்கிறீங்க.
இந்தக் கவிதை ஓர் அவலக் கவிதை.
அருமை என்று சொல்லுமளவிற்கு இக் கவிதையில் ஏதும் இல்லை!
ப்ளீஸ் உணர்வுகளைப் புரிந்து கொண்டு கருத்துக்களைப் பிரசவியுங்கள் நண்பரே.
மச்சி, உனக்கும் உன்னுடைய அவவுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! சும்மா, நெடுக லவ் பண்ணிக்கொண்டு இருக்காமல், ஒரு கலியாணத்தை கிலியாணத்தைக் கட்டு, புள்ளை குட்டியளைப் பெறுமாறு வாழ்த்துகிறேன்!
2012 ல் சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துகிறேன்/
மச்சி, கவிதை பற்றி என்ன சொல்லுறது? இப்பவெல்லாம் சோகமே பிடிப்பதில்லை! திகட்டிவிட்டது - சோகம்!
சொல்லிப் புரிவதில்லை வலியும் வேதனையும்
உணர்ந்தால் மட்டுமே விளங்கும்
விரைவில் காலம் கனியும் களம் மாறும்
வாழ்வு போக்கும்
எமக்கான புதுவருடம் இன்னமும் பிறக்கவில்லை!<<<<<<<<<<<<<<<
இதை தவிர வேறு என்ன சொல்ல முடியும் எங்களால்....... :((((
// ஒவ்வோர் ஆண்டிலும் எங்களுக்கான
ஒளி பிறக்காதா எனும் ஏக்கம் நிறைந்திருக்கும்!
வெவ்வேர் திசையிருந்து எமை அணைக்க
வேற்று நாட்டு கரங்கள் நீளாதா என
எல்லோர் மனங்களும் ஆவல் கொள்ளும்!//
கவிதை சொல்லும் அவலச சுவையில் நெஞ்சம் நொந்து நைந்த
நூலானது!
ஈழ சொந்தங்களுக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை
நிரூ!
புத்தாண்டு வாழ்த்துக்கள்
புலவர் சா இராமாநுசம்
@Powder Star - Dr. ஐடியாமணிமச்சி, உனக்கும் உன்னுடைய அவவுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! சும்மா, நெடுக லவ் பண்ணிக்கொண்டு இருக்காமல், ஒரு கலியாணத்தை கிலியாணத்தைக் கட்டு, புள்ளை குட்டியளைப் பெறுமாறு வாழ்த்துகிறேன்!
2012 ல் சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துகிறேன்////
ஹிஹிஹி.......
SAME TO U.
வருடங்கள் மாறி மாறித்தான் மாறாத வாழ்க்கையோடு ஈழத்தமிழனுக்கு !
எங்கள் நிலைமையும் அதேதான் இங்கேயும். ஏதோ oru நம்பிக்கையில் தான் ஓடிக் கொண்டிருக்கிறது .
வலியை அதிகரிக்கிறது கவிதை நிரூபன். ஏனோ தங்கள் பதிவுகளைப் படிக்கும் போதெல்லாம் ஒரு குற்றவுணர்ச்சி , இயலாமை உணர்வு மேலிடுகிறது.
வணக்கம் நிரூபன்!ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!என்னைப் பொறுத்த வரை இது வெறும் சம்பிரதாய வாழ்த்துதலே.விஷேட தினங்களை மறந்து/வெறுத்து ஆண்டுகள் பல ஆயிற்று.////2009 இன் பின்னர்
எமக்கான புதுவருடம் இன்னமும் பிறக்கவில்லை!///இதன் பின் எதிலும் ஒரு ஒட்டுதலே இல்லாதாயிற்று.உங்கள் போன்றோரின் பதிவுகளால் கொஞ்சம் ஆசுவாசம் கிடைக்கிறது. நன்றி உறவே!!!!
கவிதை மனதைத் தொட்டது.
வலி தரும் கவிதை
நீண்ட வராமைக்கு மன்னிக்கவும்.இனி தொடர்ந்து வருவேன்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
புத்தாண்டில் புதிய பொலிவோடு புறப்படட்டும் உங்கள் பதிவுகள்.
Post a Comment