நம்மில் பலர் எம் வாழ் நாளில் என்றோ ஒரு நாள் நம்மை; ஒருத்தனோ ஒருத்தியோ திரும்பிப் பார்க்க மாட்டார்களா எனும் ஏக்கத்தினைத் தாங்கியவர்களாக எம் இளமைப் பருவத்தினைக் கடந்து வந்திருப்போம். ஆணுக்காகப் பெண்ணும், பெண்ணுக்காக ஆணும் காத்திருக்கும் விடயங்களை விட; "தன்னைப் பார்த்து ரசிக்க ஒருவர் காத்திருப்பாரே" எனும் ஆவலுடன் அழகுபடுத்திச் செல்லும் நிகழ்வுகள் இருக்கிறதே! அப்பாடா! அவை பருவ வயது மாற்றத்திற்கமைவாக எம்மை விட்டுத் தூர விலகிச் சென்றிருப்பது போலத் தோன்றினாலும், மீளவும் நினைத்துப் பார்க்கையில் சுகம் தரும் நினைவுகளாக அல்லவா இருக்கின்றன.
பள்ளியில் படிக்கும் போது எம்மில் பலருக்கு 13-16 வயதிற்கு இடைப்பட்ட காலத்தில் மனதினுள் ஓர் இனம் புரியாத குறு குறுப்பும், எதிர் பாலாரினைக் கண்டு விலகி நடக்கும் போது அவர்கள் எம்மைப் பார்க்க மாட்டார்களா எனும் ஏக்கமும் இயல்பாகவே எழுந்திருக்கும். அதிலும் நாம் டீன் ஏஜ் பருவத்தினை எட்ட முன்பதாகவே நம்முடன் கூடப் படிக்கும் எதிர்ப் பாலாரைப் பற்றிய சிறிய சிறிய விடயங்களில் கொஞ்சம் அக்கறை செலுத்த தொடங்கி விடுவோம். இதுவே மெது மெதுவாக சைற்(ட்) அடித்தல் என்ற நிலையினை நோக்கி எம்மை நகர்த்த ஆரம்பித்து விடுகின்றது.
சிறு வயதில் எம்மோடு கல்வி கற்கும் எதிர்ப் பாலாரில் எமது இயல்பிற்கேற்றவாறு ஒருவரைச் சோடி கட்டி பட்டம் பளிக்கத் தொடங்கி விடுவார்கள். இந்த விடயமும் பின் நாளில் அதே ஆள் மீதான பிரியம் அதிகரிப்பதற்கு காரணமாக ஆகி விடுகின்றது. ஆண்களையும், பெண்களையும் பொறுத்த வரை கல்லூரி வாழ்வில் பலரைத் திருட்டுத் தனமாக ரசிக்கின்ற இயல்பு தான் அதிகமாக காணப்படும். ஆண்களின் பொதுவான குணவியல்பு கொஞ்சம் அழகான, மா நிறம் போன்ற பெண்ணை அல்லது வெள்ளை நிறப் பெண்ணை கண்டு பின் தொடர ஆரம்பிப்பதாகும். ஆனால் பெண்களின் குணவியல்பு இந்த விடயத்தில் அலைய விட்டு தன்னை ரசிக்கப் பலர் இருக்கிறார்களே எனப் பெருமிதம் கொள்வதாக அமைந்து கொள்ளும்.
தனக்குப் பின்னால் பல ஆண்கள் சைற் அடிப்பதற்காக அலைகின்ற போது தான் ஓர் தேவதை போன்ற நிலையினை உணர்வதாக என்னுடன் காலேஜ்ஜில் படித்த நண்பி ஒருத்தி கூறினாள். 13-16 வயதுகளில் ஆண்களிடையே ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் பல்வேறுபட்ட விகாரமான மன உணர்வுகளை ஆண்களிடத்தே தூண்டுதற்கும் காரணமாக அமைந்து கொள்கின்றது. பாடசாலை செல்லும் போது காற் சட்டைப் பாக்கட்டினுள் சீப்பு கொண்டு போதல், பவுடர் கொண்டு செல்லுதல் முதலியவை இந்த சைற் அடித்தல் நோய்க்கான ஆரம்ப அறிகுறிகளாகும். பாடசாலை முடியும் தருணம் ஆண்கள் ஓடிச் சென்று பள்ளிக் கூட டாய்லெட்டினுள் உள்ள கண்ணாடியினைப் பார்த்து தம் தலையினை வாரி, பவுடரைப் பூசித் தம்மை அலங்கரிக்கத் தொடங்கி விடுவார்கள்.
பள்ளிக் கூட டாய்லெட்டில் கண்ணாடி இல்லை என்றாலே போதும். இருக்கவே இருக்கு கைக்கு அடக்கமான வட்டக் கண்ணாடி. சைட் அடிக்க மேக்கப் பண்ணும் பசங்களில் யாராச்சும் ஒருத்தன் இந்தக் கண்ணாடியைத் தன் பாக்கெட்டினுள் (POCKET) வைத்திருப்பான். மேக்கப் பண்ணி, வாசம் நிறைந்த பவுடரை மூஞ்சி முழுக்க பூசிய பின் பாடசாலை நிறை வடைந்ததும் ஓடிச் சென்று லேடீஸ் ஸ்கூலுக்கு முன்னாடி காத்திருக்க வேண்டியது தான் நம்ம பசங்களோட வேலை. இந்த வேளையில் நம்ம பசங்களில் சிலர் கூட்டமாக நின்று தான் பொண்ணுங்களை லுக்கு விட்டுப் பார்ப்பாங்க.
ஏடா கூடமாக அடுத்த காலேஜ் பசங்க இவங்க வழியில குறுக்கிட்டாலே போதும். தம்மை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக லேடிஸ் ஸ்கூலுக்கு முன்னாடியே காண்பித்து பெண்டை நிமிர்த்திடுவாங்க. அன்றைய காலத்தில் சைட் அடிக்கும் போதெல்லாம் நாம சைக்கிளைத் தான் பின் தொடருவதற்கு யூஸ் பண்ணியிருப்போம். ஆனால் இன்றைய காலப் பசங்க மோட்டார் சைக்கிளை அல்லவா யூஸ் பண்றாங்க. சைக்கிளில் லேடீஸ் ஸ்கூல் முன்னாடி இருந்து ஒரு பெண்ணைப் பார்த்து, அவளைப் பின் தொடர்ந்து செல்லும் போது உச்சி வெய்யில் அதிகமாக இருந்தால் டயர் பஞ்சராகிடும். அப்புறம் என்ன சைக்கிளை உருட்டிக் கொன்று நடக்க வேண்டியது தான்.
பொண்ணுங்களை ஆண்கள் பார்க்க முன்னாடி தெரிஞ்சிருக்க வேண்டிய மொதல் மேட்டர் கண்ணடிப்பது. ஒரு பெண்ணை ஆண் மெதுவாக கடந்து செல்லும் போது வலது கண்ணால் ஜாடை காட்டத் தெரிந்திருக்க வேண்டும். கண்ணடிக்கத் தெரியலைன்னா கவலை வேணாம். பள்ளியில் இந்த மேட்டரில PHD முடிச்ச ஒருத்தன் கண்டிப்பா இருப்பான். அவன் எமக்கு கண் அடிப்பது முதல், விசில் அடித்து (சீழ்க்காய்) அடித்து முன்னாலே போகும் பெண்ணைத் திரும்பிப் பார்க்க பண்ணுவது எப்படி என்பது வரை அழகாக சொல்லிக் கொடுப்பான். பெண்களுக்கும் இந்த மாதிரியான பயிற்சிகளை அவர்களின் கல்லூரித் தோழிகள் சொல்லிக் கொடுப்பார்கள்.
இந்த மேட்டரில பெண்கள் கழுவுற தண்ணீரில் நழுவுகின்ற மீன் மாதிரித் தான் நடந்து கொள்வார்கள். தமக்கு எதிரே வரும் ஆண்களைப் பார்த்து மெதுவாக கண்ணால் ஜாடை காட்டி விட்டுப் பெண்கள் பார்த்தும், பார்க்காதது போன்று சென்று விடுவார்கள். அப்பாவிப் பையன் மனமோ "தம்மையும் ஒருத்தி பார்த்துக் கண்ணடித்து விட்டாளே!" எனும் எண்ணத்தில் அவள் பின்னே அலையும். காலேஜ்ஜில் படித்த காலத்தில்; ஒரு பெண்ணிடம் உரையாடிய போது, தமக்குப் பின்னே பல ஆண்களை வர வைப்பது, அலைய வைப்பது தமது மனதிற்கு இன்பமாகவும், தம்மை தாம் வசிக்கும் ஏரியாவில் ஹீரோயின் போல காண்பிப்பதற்கும் ஏதுவாக அமையும் என்றும் கூறினாள்.
பல பேரை அலைய விட்டுப் பார்ப்பது தான் அதிகமான பெண்களின் நோக்கமாக இருக்கும் எனவும் கூறினாள் அவள். நமக்குப் பின்னே வரும் எல்லா ஆண்களோடும் நாம் பேச மாட்டோம். ஒவ்வோர் நாளும் நமக்குப் பின்னே அலைய வேண்டும் எனும் நோக்கில் புது ட்ரெஸ் வாங்கி உடுத்தி வரும் ஆண்களும் உண்டு என கூறினாள் அவள். பெண்களுக்குள்ளே போட்டி நடக்குமாம். யாருக்குப் பின்னே அதிகளவான பசங்க வாறாங்க எனும் போட்டி காரணமாகவே; "தாம் ஒரே ஒரு தடவை ஒரு பையனைப் பார்த்தும் பார்க்காதது போன்று கண்ணால் ஜாடை காட்டி விட்டுச் சென்று விடுவோம்" என்று கூறினாள் மற்றுமோர் நண்பி.
தொடர்ச்சியாக நம்மை ஒருவர் பின் தொடர்ந்து வந்து சைற் அடிக்கும் போது; "இவர் வேணாம், இவரை இத்தோடு Stop பண்ணிடனும் என நினைத்தால் உடனடியாக பின்னே திரும்பி பார்ப்போம். கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ள ஆணாக இருந்தால் அன்றுடன் பின் தொடருவதை நிறுத்திடுவான்." அதனையும் மீறி அவன் வந்தால் "ஏன்டா நாயே! உனக்கு வேற வேலை இல்லையா? செருப்பு பிஞ்சிடும் என்று பேசினாலே" போதும் என்றாள் இன்னோர் நண்பி. பெண்களின் உள் மனதிலும் திருட்டுத் தனமாக ஆண்களைச் சைட் அடிக்கும் பழக்கம் இருக்கின்றது. ஆனால் அவர்கள் எல்லா நேரங்களிலும் அப் பழக்கத்தினை வெளிக் காட்ட மாட்டார்களாம்.
சைட் அடித்தல் தொடர்பில் பதிவர்களின் எண்ணக் கருத்துக்கள்:
ஆண்களில் பலர் பின் தொடர நினைப்பது சுமாரான பிகர்களை விட சூப்பரான பிகர்களைத் தான் என்று கூறுகின்றார் "அட்ராசக்க வலைப் பதிவின் ஓனர் திரு. சிபி. செந்தில்குமார்" அவர்கள். உண்மை தானே! நம்மில் பலர் கொஞ்சம் முக வெட்டான- வட்ட மதி போன்ற முகமுள்ள பெண்ணின் பின்னே அவள் அட்டுப் பிகர் ஆக இருந்தால் அலைகிறோமா? இல்லையே மனதை வாட்டும் Goodu பிகராக இருந்தால் தானே அலைகின்றோம் என தன்னுடைய சைட் அடித்த பள்ளிக் கால எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார் "தமிழ் ஆதி ப்ளாக் ஓனர் ஐடியாமணி" அவர்கள். "நாஞ்சில் மனோ ப்ளாக் ஓனர் நாஞ்சில் மனோ" அவர்களிடம் கேட்ட போது சைட் அடிப்பதற்கு என்னைப் பொறுத்த வரை பெண்களின் மனசு தான் Very Important எனக் கூறி ஆச்சரியப்படுத்தினார். நான் கல்லூரி படிக்கும் போது வெள்ளையோ, கறுப்போ என்று பார்க்க மாட்டேன். ஆனால் மனசில அவங்க நல்லவங்க என்று தோன்றினால் லுக்கு விட்டுப் பார்ப்பேன் என்றார் அவர்.
ஆக சைட் அடித்தலும் ஒவ்வொருவரின் மனங்களைப் பொறுத்து வேறு பட்டுக் கொள்கின்றது என்பதற்கு மேற்படி விடயங்களை உதாரணங்களாக கொள்ளலாம். "இளைய பதிவர்களான மதுரன், KSS.ராஜ், துஸ்யந்தன், தமிழ்வாசி பிரகாஷ்" ஆகியோரிடம் சைட் அடித்தல் பற்றிச் சில டிப்ஸ் கேட்டேன். சுமாரான பிகராக இருப்போரை ஆண்கள் மனம் நாடுவதில்லை என்றும், சூப்பரான பிகராகவும், கொஞ்சம் Modern ஆகவும் இருந்தால் தான் அதுங்க பின்னாடி நாம அலைஞ்சாலும் அதுக்கும் ஒரு ஹிக்கு இருக்கும் எனத் தம் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்கள் இவர்கள்.. இந்தக் காலத்தில மோட்டார் சைக்கிளும், டச் மாடல் போனும் கையில இருப்போருக்குத் தான் முன்னுரிமை கொடுக்கிறாங்க பொண்ணுங்க. ஸோ யாராச்சும் களத்தில இறங்க முன்னாடி கையில போனும், காலுக்குள் மிதிச்சிட மோட்டார் பைக்கும் வாங்கிக்குங்கோ என உசுப்பேற்றினார்கள் இன்றைய இளைய உள்ளங்கள்.
சைட் அடிக்கிற பெண்களைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று சட்டம் இருக்கா? இல்லேத் தானே! ஸோ, அதாலா தாரளமாக சைட் அடியுங்க என "பதிவர் கானா வரோ" அவர்கள் தன் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார். ஆண்களும், பெண்களும் பள்ளியிலும், டியூசன் சென்டர்களிலும், கோயில்களிலும் தம் சைட் அடித்தல் வேலையினைத் தொடங்கி, தாம் போகும் இடங்களெல்லாம் தம் எதிர்ப் பாலாரை அலைய வைப்பதனை ஒரு பொழுது போக்கு அம்சமாக கருதுகின்றார்கள். இன்றைய பெண்களில் சிலர் கொஞ்சம் இறுக்கமான உடையணிந்து தளுக்கு குலுக்கி வந்தால் தான் ஆண்கள் பார்வை நம் மேலே படுகின்றது எனவும், இல்லேன்னா யாருமே கண்டுக்கிறாங்க இல்லையே எனவும் ஆதங்கப்படுகின்றார்கள். இன்னும் சிலரோ மேற் சட்டையினூடாக நெஞ்சு பிதுங்கித் தெரிவது மாதிரி உடையணிந்து ஜாடை காட்டி அலைய வைப்பதனையும் இன்றைய காலத்தில் பெண்கள் ஜாலியாக நினைத்துச் செய்கிறார்கள் என்று கூறினார்கள்.
இது போல சுடிதார், சாறியில் அணிந்து வரும் பெண்களை விட, Modern ட்ரெஸ் மங்கைகளுக்குத் தான் மவுசு அதிகம் என்பதால் பல பெண்கள் இப்போது ஆண்கள் பார்வை தம் மீது பட வேண்டும் என்பதற்காகவே Modern மாடல்களாக மாறிக் கொள்கின்றார்கள் என கூறினார் "விக்கியின் அகட விகடங்கள் ப்ளாக் ஓனர் விக்கி உலகம்" அவர்கள்.. ஆண்கள் எப்போதும் வெளிப்படையாகவே சைட் அடித்தல் தொடர்பான விடயங்களை வெளிப்படுத்துவார்கள். ஆனால் பெண்களில் அதிகளவானோர் சைக்கிள் கேப்பில் மென்மையான உணர்வு கொண்டோராக இருந்து தம் உணர்வுகளை வெளிப்படுத்துவதால், பிரச்சினை ஏதாச்சும் வந்துட்டா இலகுவில் தப்பித்துக் கொள்கின்றார்கள் என்றார் "உணவு உலகம் ப்ளாக் ஓனர் ஆப்பிசர் சங்கரலிங்கம்" அவர்கள்.
வெளி நாடுகளில் கிழவிங்க கூட தம் உடம்பினை உடற் பயிற்சி செய்து சிக்கென்று வைத்திருக்கிறாங்க. ஆனால் நம்மூர் பொண்ணுங்க 30+ வயதாகிட்டாலே தொந்தியும், தொப்பையுமாக ஆகிடுறாங்க. இதனால நம்ம ஊர் பொண்ணுங்களை விட, பாரின் பொண்ணுங்க மேல லுக்கு விடுவதும் ஒரு ஹிக்கு என்று சொல்கிறார்கள் பதிவர்கள் "காட்டான், மற்றும் யோகா ஐயா" ஆகியோர். "அட போங்க நீரூபன், நம்ம ஊரில உள்ள பொண்ணுங்க பின்னாடி லோ...லோ என்று அலைவதை விட நடிகைகளை கனவில் சைட் அடித்து மகிழ்வது, அதுவும் ஹன்சிகாவிற்காக ரசிகர் மன்றம் கனவில் கட்டி மகிழ்வது போல சைட் அடித்தல் தான் நமக்குச் சரிப்பட்டு வரும்" என்று சொல்கிறார்கள் பதிவர்கள் "செங்கோவி, மைந்தன் சிவா மற்றும் பிலாசபி பிரபாகரன், வேடந்தாங்கல் கருன், வந்தேமாதரம் சசி" ஆகியோர். காலங்கள் கடந்தாலும், காலேஜ் வாழ்வில் சைட் அடித்த நினைவுகள் எம் மனதை விட்டு இலகுவில் மறைந்து விடுமா என்ன?
************************************************************************************************************************
விசேட அறிவித்தல்: அன்பிற்கினிய சொந்தங்களே! அதிகரித்த வேலைப் பளு காரணமாக என்னால் உங்கள் வலைகளுக்கு வழமை போல வர முடியவில்லை. என் பதிவில் தவறுகள் ஏதும் இருந்தால் பின்னூட்டம் ஊடாகச் சுட்டிக் காட்டுங்கள். எனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் வழமை போன்று உங்கள் வலைப் பதிவுகளுக்கு கண்டிப்பாக நான் வருவேன். ஆனாலும் நான் உங்களுக்குப் பின்னூட்டம் போடுகின்றேன் என்பதற்காக யாரும் பதிலுக்குப் பதிலாகப் பின்னூட்டம் எழுத வேண்டாம்! (மொய்க்கு மொய் வேணாம்)பதிவினைப் படித்த பின்னர் உங்கள் வருகையை அடையாளப்படுத்தா விட்டாலும், வழமை போல நான் யார் யார் வலைகளுக்கு வருகின்றேனோ, வந்து கொண்டே இருப்பேன்!
************************************************************************************************************************
|
69 Comments:
இந்த பதிவூடாக நிருபன் பாஸ் சொல்லவருவது தானும் எத்தனை பெண்களை சைட் அடிச்சிருக்கேன் ஆனால் அவருக்கு இப்படித்தானாம்
யாரை நீ காதலித்தாயோ
அவள் வேறொருவனைக் காதலித்தாள்
யாரை நீ காதலிக்கின்றாயோ
அவள் வேறொருவனைக் காதலிக்கின்றாள்
யாரை நீ காதலிக்கப்போகின்றாயோ
அவளும் வேறொருவனைக் காதலிப்பாள்
உன்னுடையதை எதை இழந்தாய்?
ஏன் தாடி வளர்க்கின்றாய்?
யாரை நீ கொண்டுவந்தாய்? அவளை நீ காதலிக்க…
யாருக்கு உன் காதலைச் சொன்னாய்? அவள் உன்னைக் காதலிக்க…
யார் உன்னைக் காதலித்தாள்? நீ மீண்டும் காதலிக்காமல் இருக்க…
காதலை நீ எங்கிருந்து பெற்றாய்?
அது இங்கேயே பெறப்பட்டது.
யார் இன்று உன்னுடைய காதலியோ
அவள் நாளை இன்னொருவனுடையவளாகின்றாள்….
மற்றொரு நாள் அவள் வேறொருவனுடையவளாகின்றாள்…
இதுவே காதலின் நியதியும் சாரம்சமுமாகும்.
//பள்ளிக் கூட டாய்லெட்டில் கண்ணாடி இல்லை என்றாலே போதும். இருக்கவே இருக்கு கைக்கு அடக்கமான வட்டக் கண்ணாடி. சைட் அடிக்க மேக்கப் பண்ணும் பசங்களில் யாராச்சும் ஒருத்தன் இந்தக் கண்ணாடியைத் தன் பாக்கெட்டினுள் (POCKET) வைத்திருப்பான்//
இல்லாட்டியும் இருக்கவே இருக்கு சேர்மாரின் மோட்டுசைக்கிள் சைட் கண்ணாடி
@M.Shanmugan
இல்லாட்டியும் இருக்கவே இருக்கு சேர்மாரின் மோட்டுசைக்கிள் சைட் கண்ணாடி
//
ஹி....ஹி...
அடப் பாவமே! இது என் ஞாபகத்திற்கு வராமல் போய் விட்டதே!
ஹி...ஹி..
நன்றி பாஸ்.
அண்ணே உங்க நண்பிகள் சொன்னதை வைத்து பார்க்கும்பொது ஆண்கள் பாவம்....
@M.Shanmugan
இந்த பதிவூடாக நிருபன் பாஸ் சொல்லவருவது தானும் எத்தனை பெண்களை சைட் அடிச்சிருக்கேன் ஆனால் அவருக்கு இப்படித்தானாம்
//
அடடா, பதிவுக்கு ஏற்றாற் போல தத்துவம் வேறையா?
ஹி....ஹி...
இது என்ன பாஸ் காதல் கீதையா?
சூப்பரா இருக்கே.
அனாலும் ஆண்கள் பாடசாலையில் படித்த ஆண்கள் பாவம் தான்..நன் கலவன் பாடசாலையில் படித்தேன்...
ஆண்கள் ஓடிச் சென்று பள்ளிக் கூட டாய்லெட்டினுள் உள்ள கண்ணாடியினைப் பார்த்து தம் தலையினை வாரி, பவுடரைப் பூசித் தம்மை அலங்கரிக்கத் தொடங்கி விடுவார்கள். // மச்சி போய் சொல்லாம சொல்லு , இது அனுபவம் தானே..
அவர்கள் எல்லா நேரங்களிலும் அப் பழக்கத்தினை வெளிக் காட்டமாட்டார்களாம். // அப்ப எப்பதான் வெளிக்காட்டுவாங்கலாம்.
நல்லாச் சொல்லியிருக்கீங்க நிரூபன்! :-)
சைட் அடிப்பது பற்றிய என்னோட பதிவொன்று பாதிலயே நிக்குது! பார்க்கலாம்!
மனதை வாட்டும் Goodu பிகராக இருந்தால் தானே அலைகின்றோம் என தன்னுடைய சைட் அடித்த பள்ளிக் கால எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார் "தமிழ் ஆதி ப்ளாக் ஓனர் ஐடியாமணி"//
மாப்ள மணியும் ஒரு பதிவு போடலாமே..
@ஆகுலன்
அண்ணே உங்க நண்பிகள் சொன்னதை வைத்து பார்க்கும்பொது ஆண்கள் பாவம்....
//
இனிமேல் உங்கள மாதிரிப் பசங்க பாவப் படக் கூடாது என்று தான் ரொம்ப நல்ல விளக்கமா எழுதியிருக்கேன். நீங்க ஆரம்பியுங்க பாஸ்!
ஹி...ஹி....
@ஆகுலன்
அனாலும் ஆண்கள் பாடசாலையில் படித்த ஆண்கள் பாவம் தான்..நன் கலவன் பாடசாலையில் படித்தேன்...
//
ஹி....ஹி...
கலவன் பாடசாலைன்னா எப்போதுமே நேருக்கு நேர் சைட் அடிக்கலாமே;-)))
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@!* வேடந்தாங்கல் - கருன் *!
மச்சி போய் சொல்லாம சொல்லு , இது அனுபவம் தானே.. //
போ, மச்சி, நீங்க கண்டு வராத பாதையா இது?
ஹே...ஹே...
@!* வேடந்தாங்கல் - கருன் *!
அவர்கள் எல்லா நேரங்களிலும் அப் பழக்கத்தினை வெளிக் காட்டமாட்டார்களாம். // அப்ப எப்பதான் வெளிக்காட்டுவாங்கலாம்.//
அவங்களுக்கு எப்போ தோணுதோ!
அப்போ தான் வெளிக் காட்டுவாங்க,
@ஜீ...
நல்லாச் சொல்லியிருக்கீங்க நிரூபன்! :-)
சைட் அடிப்பது பற்றிய என்னோட பதிவொன்று பாதிலயே நிக்குது! பார்க்கலாம்!
//
பாதியில நிற்க விடாதீங்க பாஸ்.
ரொம்ப ஆபத்தாகிடும்,
எப்படியாச்சும் முடிச்சிடுங்க
ஐ மீன் பதிவை எழுதி முடிச்சிடுங்க பாஸ்.
ரொம்ப நன்றி.
@!* வேடந்தாங்கல் - கருன் *!
மனதை வாட்டும் Goodu பிகராக இருந்தால் தானே அலைகின்றோம் என தன்னுடைய சைட் அடித்த பள்ளிக் கால எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார் "தமிழ் ஆதி ப்ளாக் ஓனர் ஐடியாமணி"//
மாப்ள மணியும் ஒரு பதிவு போடலாமே..//
அவர் கொஞ்சம் பிசியாக இருக்கார், பாஸ்,
சீக்கிரமே எழுதுவார் என்று நினைக்கிறேன்.
வெளி நாடுகளில் கிழவிங்க கூட தம் உடம்பினை உடற் பயிற்சி செய்து சிக்கென்று வைத்திருக்கிறாங்க.//
அதுதான் விக்கி ஐம்பத்தாறு வயசுகாரிகிட்டே மாட்டிகிட்டு சிதஞ்சு வந்தானோ, இப்பதானே புரியுது விஷயம் ம்ம்ம்ம்....!!!
////இதனால நம்ம ஊர் பொண்ணுங்களை விட, பாரின் பொண்ணுங்க மேல லுக்கு விடுவதும் ஒரு ஹிக்கு என்று சொல்கிறார்கள் பதிவர்கள் "காட்டான், மற்றும் யோகா ஐயா" ஆகியோர்.////பகல் வணக்கம், நிரூபன்!எங்களைப் பற்றி தவறாக எங்கள் தாய்க்குலங்களிடையே பரப்புரை செய்வதை கண்டிக்கிறேன்!ஹ!ஹ!ஹா!!!!!!!!!(சொர்க்கமே என்றாலும் அது ................பாடல் கேட்கவும்!)-Yoga.S.Fr.
நாஞ்சில் மனோ ப்ளாக் ஓனர் நாஞ்சில் மனோ" அவர்களிடம் கேட்ட போது சைட் அடிப்பதற்கு என்னைப் பொறுத்த வரை பெண்களின் மனசு தான் Very Important எனக் கூறி ஆச்சரியப்படுத்தினார். நான் கல்லூரி படிக்கும் போது வெள்ளையோ, கறுப்போ என்று பார்க்க மாட்டேன். ஆனால் மனசில அவங்க நல்லவங்க என்று தோன்றினால் லுக்கு விட்டுப் பார்ப்பேன் என்றார் அவர்.//
காதல் ஓவியம் பாடும் காவியம் தேன்சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்....
காதல் எப்போதும் கவிதைதான் இல்லையா,
அனுபவிச்சு உணர்ந்திருக்கிறேன் காதலை,
பிரிவின் வேதனையை கூட இப்பவும் தாங்கிட்டுதான் வாழ்ந்துட்டு இருக்கேன்...!!
@உங்களில் ஒருவன்
////பகல் வணக்கம், நிரூபன்!எங்களைப் பற்றி தவறாக எங்கள் தாய்க்குலங்களிடையே பரப்புரை செய்வதை கண்டிக்கிறேன்!ஹ!ஹ!ஹா!!!!!!!!!(சொர்க்கமே என்றாலும் அது ................பாடல் கேட்கவும்!)-Yoga.S.Fr. //
வணக்கம் ஐயா,
நல்லா இருக்கிறீங்களா?
மாவீரர் தினம் எல்லாம் உங்க ஊரில எப்படி?
அப்புறமா நீங்க எப்பவுமே எங்களுள் ஒருவர் தானே!
ஹி...ஹி..
அப்புறம் ஏன் இந்தப் புது சித்து விளையாட்டு!
என்னமோ போங்க. காட்டான் மாமா தான் உங்க நிலமையை கண்ணீரோடு சொன்னார்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@MANO நாஞ்சில் மனோ
அதுதான் விக்கி ஐம்பத்தாறு வயசுகாரிகிட்டே மாட்டிகிட்டு சிதஞ்சு வந்தானோ, இப்பதானே புரியுது விஷயம் ம்ம்ம்ம்....!!!//
அடடா..
விக்கி அண்ணா நான் ஏதும் சொல்லைங்கோ
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@MANO நாஞ்சில் மனோ
காதல் ஓவியம் பாடும் காவியம் தேன்சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்....
காதல் எப்போதும் கவிதைதான் இல்லையா,
அனுபவிச்சு உணர்ந்திருக்கிறேன் காதலை,
பிரிவின் வேதனையை கூட இப்பவும் தாங்கிட்டுதான் வாழ்ந்துட்டு இருக்கேன்...!!
//
அண்ணாவின் மனசை நாம டச் பண்ணிட்டோமா?
சாரி பாஸ்
அது வந்து,நான் புதிதாக?!ஒரு "ப்ளாக்" தொடங்கியிருக்கிறேன்.பெயர் "அதிரசம்".அதில் தவறுதலாக ப்ரோபில்லில் அப்படிக் குறித்து விட்டேன்!இப்போது சரி செய்திருக்கிறேன்!காட்டானும் பாவம் தான்,என்ன செய்ய?ஹி!ஹி!ஹி!
@Yoga.S.FR
அது வந்து,நான் புதிதாக?!ஒரு "ப்ளாக்" தொடங்கியிருக்கிறேன்.பெயர் "அதிரசம்".அதில் தவறுதலாக ப்ரோபில்லில் அப்படிக் குறித்து விட்டேன்!இப்போது சரி செய்திருக்கிறேன்!காட்டானும் பாவம் தான்,என்ன செய்ய?ஹி!ஹி!ஹி!
//
ஐயா, சொல்லவேயில்ல.
எப்போ தொடங்கினீங்க.
லிங் கொடுங்க.
இன்னைக்கே வந்து ஒரு வழி பார்த்திடுறோம்!
அதிரசம் உண்மையிலே உங்கள் கை பட்டால்
அதி அதிரசமாகத் தான் இருக்கும் ஐயா.
மாவீரர் நாள் நிகழ்வுகள் குறித்துக் கேட்டீர்கள்.இரண்டு ,அதாவது பாரிஸ் புற நகர்ப் பகுதியில் இரண்டு வெவ்வேறு இடங்களில் திரண்டு வரும் மக்கள் தொகையை சமாளிப்பதற்காக இனிதே நிகழ்ந்து முடிந்தது!எப்போதும் போல் இல்லாமல்,இம்முறை ஈழத்தில் மாவீரர் நினைவிடங்கள் பேரினவாதிகளால் இடித்து அளிக்கப்பட்டதற்கு மாற்றாக,மாவீரர் நினைவு ஊர்தி பாரிஸ் நகரின் முக்கிய இடங்களில் பவனி வந்ததுடன்,திறந்த வெளியில் ஈழத்தில் அன்றிருந்த மாவீரர் துயிலும் இல்லங்கள் போல் வடிவமைக்கப்பட்டு எழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.இலங்கை அரசின் பரப்புரை போல்,இரண்டு பிரிவாக அல்ல ஒன்றாகவே இரண்டு வேறு,வேறு இடங்களில் நினவு கூறப்பட்டனர் எமது உறவுகள்.அதே வேளை,தாயகத்தில் நிகழ்ந்த பேரினவாத அரசின் அடக்குமுறைகள் பற்றி ,மேற்குலகு நன்றாகவே இந்த ஆண்டு அறிந்து கொண்டதும் குறிப்பிட வேண்டிய விடயம்!
நிரூபன் said...
அதிரசம் உண்மையிலே உங்கள் கை பட்டால்
அதி அதிரசமாகத் தான் இருக்கும் ஐயா.///அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.அதில் வெறும் காப்பிபேஸ்ட் பதிவு தான் வரும்!ஹி!ஹி!ஹி!
http://athitasam.blogspot.com/ நேற்று ஆரம்பித்த எனது பிளாக்!!!!!!????!!!!!!!
Yoga.S.FR said...
http://athitasam.blogspot.com/ நேற்று ஆரம்பித்த எனது பிளாக்!!!!!!????!!!!!!!//
ஆரம்பமே நல்லதோர் வரலாற்று நிகழ்வினைத் தாங்கி வந்திருக்கிறது!
வாழ்த்துக்கள் ஐயா.!
ஏன் கமெண்ட் போட முடியாதவாறு செய்திருக்கிறீங்க?
நிரூபன் said... Best Blogger Tips [Reply To This Comment]
Yoga.S.FR said...
http://athitasam.blogspot.com/ நேற்று ஆரம்பித்த எனது பிளாக்!!!!!!????!!!!!!!//
ஆரம்பமே நல்லதோர் வரலாற்று நிகழ்வினைத் தாங்கி வந்திருக்கிறது!
வாழ்த்துக்கள் ஐயா.!
ஏன் கமெண்ட் போட முடியாதவாறு செய்திருக்கிறீங்க?
/////எத்தனை பேர் பொருளுக்காக என் கடைக்கு வருகிறார்கள் என்று பார்த்து விட்டு.......................................!
வேலையைக் கவனியுங்கள்,பின்னர் கும்மாளம் அடிக்கலாம்!
யோவ் இதுக்கு தான் நைசா பேசி மேட்டர் வாங்கிநீரா... இது தெரியாம ஒளரிட்டேனே
அட!தமிழ்வாசி பிரகாஷ் இளைய பதிவரா,சொல்லவேயில்ல?????
வணக்கம் சகோ நிரூபன்,
இயற்கை வழித்தோன்றலான சைட்டடிக்கும் நிகழ்வை
அருமையா சொல்லியிருகீங்க...
////இதனால நம்ம ஊர் பொண்ணுங்களை விட, பாரின் பொண்ணுங்க மேல லுக்கு விடுவதும் ஒரு ஹிக்கு என்று சொல்கிறார்கள் பதிவர்கள் "காட்டான், மற்றும் யோகா ஐயா" ஆகியோர்.////பகல் வணக்கம், நிரூபன்!எங்களைப் பற்றி தவறாக எங்கள் தாய்க்குலங்களிடையே பரப்புரை செய்வதை கண்டிக்கிறேன்!ஹ!ஹ!ஹா!!!!!!!!!(சொர்க்கமே என்றாலும் அது ................பாடல் கேட்கவும்!)-Yoga.S.Fr.
வணக்கம் அண்ணன்!
சரியாக சொன்னீங்க..!!
அது சரி எவ்வளவு நாட்களாக நாங்க கேட்டுக்கொண்டு இருந்தோம் நீங்க ஒரு பிளாக் தொடங்குங்கோன்னு.. நன்றி அண்ண இப்பவாவது தொடங்கினீங்களே!!
எப்பிடி ஒரு விளக்கம் சும்மா சைட் அடிக்கிறத கூட விலாவாரியா விளக்கி இருக்கீங்க ஹா ஹா ஹா
@Yoga.S.FR
மாவீரர் நாள் நிகழ்வுகள் குறித்துக் கேட்டீர்கள்.இரண்டு ,அதாவது பாரிஸ் புற நகர்ப் பகுதியில் இரண்டு வெவ்வேறு இடங்களில் திரண்டு வரும் மக்கள் தொகையை சமாளிப்பதற்காக இனிதே நிகழ்ந்து முடிந்தது!//
புலம் பெயர் தேசத்தில் பலரின் தடைகளின் மத்தியிலும், உணர்வெழுச்சியுடன் நிகழ்வுகள் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது.
@Yoga.S.FR
அதிரசம் உண்மையிலே உங்கள் கை பட்டால்
அதி அதிரசமாகத் தான் இருக்கும் ஐயா.///அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.அதில் வெறும் காப்பிபேஸ்ட் பதிவு தான் வரும்!ஹி!ஹி!ஹி!
//
நீங்கள் காப்பி பேஸ்ட் தருவீங்க என்பதை நாம எப்படி நம்ப முடியும்?
உங்களிடம் தானே அனுபவங்கள், பழைய கால வரலாற்று கதைகள் எல்லாம் இருக்கு..
போட்டுத் தாக்குங்க ஐயா.
@Yoga.S.FR
http://athitasam.blogspot.com/ நேற்று ஆரம்பித்த எனது பிளாக்!!!!!!????!!!!!!!
//
மீண்டும் வாழ்த்துக்கள் ஐயா.
மாப்ளே, சைட் பத்தி நான் சொன்னத போடாம நீயா என்னமோ போட்டிருக்க...
இருந்தாலும் உம் மனச தொறந்து சில விஷயங்கள் சொல்லி இருக்குற...
கல்யாணம் ஆகுற வயசுல சைட் அடிக்கரத குறை... பொண்ணு வீட்டுக்காரங்க பாத்து பொண்ணு இல்லையின்னு சொல்லிற போறாங்க.
நம்ம தளத்தில்:
எனக்குள் நான் - {பய(ங்கர) டேட்டா} - தொடர்பதிவு
@Yoga.S.FR
ஏன் கமெண்ட் போட முடியாதவாறு செய்திருக்கிறீங்க?
/////எத்தனை பேர் பொருளுக்காக என் கடைக்கு வருகிறார்கள் என்று பார்த்து விட்டு...........//
நீங்க ரொம்பத் தான் கில்லாடி ஐயா!
நடக்கட்டும்! நடக்கட்டும்!
@Yoga.S.FR
வேலையைக் கவனியுங்கள்,பின்னர் கும்மாளம் அடிக்கலாம்!
//
ஆமா இல்லே...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@சசிகுமார்
யோவ் இதுக்கு தான் நைசா பேசி மேட்டர் வாங்கிநீரா... இது தெரியாம ஒளரிட்டேனே
//
ஏதோ நம்மால முடிஞ்சது பாஸ்..
@Yoga.S.FR
அட!தமிழ்வாசி பிரகாஷ் இளைய பதிவரா,சொல்லவேயில்ல?????
//
அவர் தான் என்றும் 18
என்றல்லவா சொல்லுகிறார்.
@மகேந்திரன்வணக்கம் சகோ நிரூபன்,
இயற்கை வழித்தோன்றலான சைட்டடிக்கும் நிகழ்வை
அருமையா சொல்லியிருகீங்க...//
நன்றி அண்ணே.
@காட்டான்
அது சரி எவ்வளவு நாட்களாக நாங்க கேட்டுக்கொண்டு இருந்தோம் நீங்க ஒரு பிளாக் தொடங்குங்கோன்னு.. நன்றி அண்ண இப்பவாவது தொடங்கினீங்களே!!
//
ஆமா இல்லே..
ஐயா கடைக்கு நாமளும் களமிறங்கிடுவோம் இல்லெ..
@ஜ.ரா.ரமேஷ் பாபு
எப்பிடி ஒரு விளக்கம் சும்மா சைட் அடிக்கிறத கூட விலாவாரியா விளக்கி இருக்கீங்க ஹா ஹா ஹா
//
நன்றி பாஸ்.
@தமிழ்வாசி பிரகாஷ்
மாப்ளே, சைட் பத்தி நான் சொன்னத போடாம நீயா என்னமோ போட்டிருக்க...
இருந்தாலும் உம் மனச தொறந்து சில விஷயங்கள் சொல்லி இருக்குற...
கல்யாணம் ஆகுற வயசுல சைட் அடிக்கரத குறை... பொண்ணு வீட்டுக்காரங்க பாத்து பொண்ணு இல்லையின்னு சொல்லிற போறாங்க.
//
பாஸ், இது தானே பாஸ் நீங்க சொன்னது,
ஹி....ஹி...
பழக்க தோசத்தை குறைன்னு சொன்னா எப்படி பாஸ் குறைக்க முடியும்?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@நிரூபன்
@Yoga.S.FR
அட!தமிழ்வாசி பிரகாஷ் இளைய பதிவரா,சொல்லவேயில்ல?????
//
அவர் தான் என்றும் 18
என்றல்லவா சொல்லுகிறார்.///
மாப்ளே நிரூபனே இளசுன்னு சொல்றப்போ நாம சொலக்கூடாதா?
நல்ல ஆய்வு ... நிரூபன்
50
//// வாசம் நிறைந்த பவுடரை மூஞ்சி முழுக்க பூசிய பின் பாடசாலை நிறை வடைந்ததும் ஓடிச் சென்று லேடீஸ் ஸ்கூலுக்கு முன்னாடி காத்திருக்க வேண்டியது தான்/////
மச்சி நாமா என்ன பண்ணுவமுண்ணா கை்குட்டைக்குள்ள பவுடரை வச்சிருந்து வகுப்பில வச்சே அப்பப்போ மூஞ்சீல தப்பிக்குவோம்...
தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips [Reply To This Comment]
@நிரூபன்
@Yoga.S.FR
அட!தமிழ்வாசி பிரகாஷ் இளைய பதிவரா,சொல்லவேயில்ல?????
//
அவர் தான் என்றும் 18
என்றல்லவா சொல்லுகிறார்.///
மாப்ளே நிரூபனே இளசுன்னு சொல்றப்போ நாம சொல்லக்கூடாதா?///எல்லாத்துக்கும் காரணம் மனசு தான்,பிரகாஷ்!நாமளே வயசுப் பசங்க கும்மியில கலந்துக்கிறோம்னான்வயசென்ன வயசு?இப்ப கூட என்னால ஐம்பது கிலோ மூடையத் தனியா தூக்க முடியும்!ஹ!ஹ!ஹா!!!!
வணக்கம்,காட்டான்!உங்கள் அன்புக்கு நன்றி.சும்மா பொழுது போக்குக்காக இது! நான் சீரியசாக எழுத ஆரம்பித்தால் ஏடா,கூடமாகி விடும்.அதனால் அப்பப்போ,சிறிதாக கொஞ்சம் எழுதலாம் என்றிருக்கிறேன்.பொறி பறந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்!சந்திப்போம்.
தமிழ்வாசி பிரகாஷ் said...
@Yoga.S.FR
உங்களைக் கலாய்த்த நிரூபனை ஏன் தொடர அழைக்கவில்லை?///
ஹி..ஹி... மறந்துட்டேனே,
அவர கூப்பிட்டா ரொம்ப பீட்டரு விடுவாரு...அதான்...
இருந்தாலும் உங்களுக்காக மாப்ள நிரூபன் அவர்களை "எனக்குள் நான்" என்ற தொடர்பதிவு எழுத அழைக்கிறேன்.
கடைசி வரிகள் தான் எனக்கு கண்ணுக்க குத்துது ஹா ஹா
ஹா ஹா... பாஸுக்கு ரெம்ப அனுபவம் போல..... ஹீ ஹீ.... ரெம்ப ஜொள்ளு கொட்டி எழுதி இருக்கீங்க....
பாஸ் இளைய உள்ளங்களுக்கு பிகர் கிடைக்க நீங்க போடும் இந்த பயன் உள்ள பதிவு சூப்பர்... நன்றி பாஸ் ...lol
தமிழ்வாசி பிரகாஷ் இளைய பதிவர்.....!!!
நெசமாத்தான் சொல்லுறீங்களா ??? (கற்றது தமிழ் அஞ்சலி ஸ்டையிலில் படிக்கவும்.. ஹீ ஹீ)
ஹாய் ....
எனக்கு சைட் அடிக்கும் வயது வரவில்லை என்பதால்....
நான் வயதுக்கு வந்தஉடன் இந்த பதிவை படித்து தெரிந்துகொல்கீறேன்....
ஹி ஹி
இம்புட்டு விஷயங்கள் இருக்காய்யா...என்ன இருந்தாலும் உண்மைய சொல்றத சொல்லிட்டீங்க ஜூப்பரு ஹிஹி!
தமிழ்வாசி பிரகாஷ் said...
மாப்ளே, சைட் பத்தி நான் சொன்னத போடாம நீயா என்னமோ போட்டிருக்க...
இருந்தாலும் உம் மனச தொறந்து சில விஷயங்கள் சொல்லி இருக்குற...
கல்யாணம் ஆகுற வயசுல சைட் அடிக்கரத குறை... பொண்ணு வீட்டுக்காரங்க பாத்து பொண்ணு இல்லையின்னு சொல்லிற போறாங்க.//
Amen
புதுசா இருக்கே !என்னென்னவோ சொல்றீங்க!
வணக்கம் நண்பரே
சுவாரஸ்யமாக உள்ளது பதிவு
எண்ணங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி
துஷ்யந்தன் said...
பாஸ் இளைய உள்ளங்களுக்கு பிகர் கிடைக்க நீங்க போடும் இந்த பயன் உள்ள பதிவு சூப்பர்... நன்றி பாஸ் ...lol
பார்த்து பாஸ் உங்கள ..............ஆக்கிட போறாங்க
அனுபவம் இரண்டு வகை
மற்றவர்களிடம் கற்றுகொள்வது
சொந்த அனுபவம் .
இரண்டினையும் சேர்த்து ஒரு பதிவு . உங்களை காத்து கொள்ளவே பிரபல பதிவர்களிடம் பேட்டி . சுப்பர் .
பெண்களின் பின் அலைவதிலேயே அதிக நேரம் செலவழிக்கும் ஆண்கள் பலர். ஆனால் பெண்களையும் நம்பின்னால் அலைய வைக்கலாம் அல்லது ஒரு சில முறையேனும் திரும்பிப் பார்க்கவேனும் வைக்கலாம்.அதுக்கு நாம் செய்ய வேண்டியது அவர்களின் கண்களை மட்டும் பார்த்து முதலில் ஜாடை செய்வது. கழுத்துக்கு கீழ் முதலில் பார்த்தால் நாமும் கடைவாய் வழிப்பவர் என நினைத்து கண்டுக்க மாட்டாங்கள்.
Supper
நல்ல பதிவு. கல்லூரி வாழ்க்கையை நினைவு படுத்துகிறது.
எங்கேதான் "ரூம் போட்டு" இந்த தலைப்புகளையும் படங்களையும் கண்டுபிடிக்கிறியள் ?
Post a Comment