எதிர் வாங்கில் வந்திருப்பாள்
என்னை விட உயர்ந்திருப்பாள்
புதிர் போட்டு புன்னகைப்பாள்
பூங் குழலால் உரசிடுவாள்
கதிர் பட்டு(க்) கண்ணுடையாள்
காதல் மொழி பேசிடுவாள்
புதிர் நீக்கி என்னிடத்தே
பூங்கோதை நீ வருவதெப்போ?
செம்பவளச் சிங்காரி - அவள்
சின்ன இடை ஒய்யாரி
அம்புலியின் பூங்கோதை - அவள்
அன்ன நடை மாக்கோதை
கும்மிருட்டு(க்) குழற்காரி - அவள்
குயிற் பாட்டில் சிருங்காரி
செம்பருத்தி வாய்க்காரி- எனை(ச்)
செவ் இதழால் நனைப்பதெப்போ?
எண்ணிரண்டு வயதாம்; அவள்
என்னை விட நிறமாம்
பெண்களுக்குள் அழகாம்; அவள்
பேச்சு மொழி சுவையாம்
கண்ணிரண்டில் ஒளியாம்; அவள்
கன்ன மதில் குழியாம்
எண்ணி எண்ணித் தவிக்கும்
என்னை நீயும் புரிவதெப்போ?
தேதி வைக்கும் முன்பே - இன்ப(த்)
தேன் மழையில் நனைவோம்
ஆதி முதல் அந்தம் வரை
அனு தினமும் கற்போம்
பாதி உயிர் பிரிந்தாலும் - உலகில்
பாச வலி மறவோம்
மீதி உயிர் இருப்பின்- நாம்
மீண்டும் மீண்டும் பிறப்போம்!
பிற் சேர்க்கை: இற்றைக்குப் பதினொரு வருடங்களுக்கு முன்பதாக என்னால் எழுதப்பட்டு எம் நாட்டின் போர்ச் சூழலின் இடப் பெயர்வில் சிக்குண்டு இக் கவிதையும் தொலைந்து விட்டது. இக் கவிதைக்கான சந்தமும் வரிகளும் என்னுள்ளே மனப் பாடமாய் இன்று வரை பதிந்திருக்கிறது.இதற்கான காரணம் நான் படித்த டியூசனில் எனக்கு எதிரே இருந்த நேமிசாவைப் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) பார்த்து நானும் ஆசையோடு இக் கவிதையை என் நோட் புக்கில் எழுதி வைத்திருந்தேன். என் அருகே இருந்த என் நண்பன் செய்த நாச வேலையால் ஆசிரியரின் கையில் கவிதை மாட்டி விட, அப்புறம் என்ன நானும் மாட்டி; "உனக்கு இந்த வயதில் இன்பத் தேன் மழை கேட்குதோ!" என பிரம்பு முறியும் வரை அடி வாங்கிய ஞாபகங்களோடு, இந்தக் கவிதை வரிகளும் என் மனதில் பொதிந்திருக்கிறது.
அரும்பத விளக்கம்/ பொருள் விளக்கம்:
வாங்கு: பெஞ்சு - Bench Or Table.
கதிர் பட்டுக் கண்: நெற் கதிர்கள் போன்று நீண்ட தூரம் சாயக் கூடிய கூர்மையான பார்வை கொண்ட, பட்டுப் போன்று வெண்மையான கண்.
மாக்கோதை: மாம்பழம் போன்ற குளிர்மையான கோதை அல்லது பெரிய அழகி.
கும்மிருட்டு: பயமூட்டும் வெளிச்சமற்ற கருமையான இரவு.
குழல்: கூந்தல் அல்லது தலை முடி.
அம்புலி: சந்திரன்.
சிருங்காரி: சிறிய பெண்.
விதானையார் / விதாணையார்: ஈழத்தில் கிராம சேவகரைக் குறிக்கப் பயன்படும் (Urban or Rural Officer) ஒல்லாந்த மொழிச் சொல்.
பெட்டை: பிகர்.
உங்கள் அபிமான நாற்று வலைப் பதிவில்...
இன்றைய தினம் செவ்வாய் கிழமை இலங்கை இந்திய நேரப் படி மாலை நான்கு மணியளவில் பெண்ணடிமைத் தனம், ஆணாதிக்கம், சம உரிமை, பெண்ணுரிமை பற்றிப் பேசுகின்ற விவாத மேடைப் பதிவு ஒன்று உங்களை நாடி வரவிருக்கின்றது!காத்திருங்கள்!சூடான விவாதங்களை எதிர்பார்த்திருங்கள்!
|
42 Comments:
//எதிர் வாங்கில் வந்திருப்பாள்
என்னை விட உயர்ந்திருப்பாள்// இதில இருந்து என்ன தெரியுதெண்டா நம்ம நிரூபன் ரொம்ப கட்டை பையன்.. சாரி சாரி கட்டை அங்கிள்
//எண்ணிரண்டு வயதாம்; அவள்
என்னை விட நிறமாம்//
அப்போ நிரூபன் கலரும் கம்மி
அழகான ஒரு காதல் கவிதை நிரூபன். அசத்தலாக இருக்கிறது
//இற்றைக்குப் பதினொரு வருடங்களுக்கு முன்பதாக//
நோட் திஸ் பாயிண்ட்
@மதுரன்
/எதிர் வாங்கில் வந்திருப்பாள்
என்னை விட உயர்ந்திருப்பாள்// இதில இருந்து என்ன தெரியுதெண்டா நம்ம நிரூபன் ரொம்ப கட்டை பையன்.. சாரி சாரி கட்டை அங்கிள்
//
வணக்கம் மது,
என்னது அங்கிளா?
ஏலேய் யாரங்கே பார்த்துக் கொண்டு நிற்பது,
எடுங்கடா அந்த அருவாளை!
என்றும் 19 வயதுடைய என்னைப் போய் அங்கிள் என்று சொல்லிட்டாரே மதுரன்;-)))))))))))
@மதுரன்
/எண்ணிரண்டு வயதாம்; அவள்
என்னை விட நிறமாம்//
அப்போ நிரூபன் கலரும் கம்மி
//
அப்போ தானே கலர் கம்மி!
அப்ப இப்போ!
ஹி....ஹி....
@மதுரன்
அழகான ஒரு காதல் கவிதை நிரூபன். அசத்தலாக இருக்கிறது
//
நன்றி ஐயா!
இரவு வணக்கம், நிரூபன்!சின்ன வயதிலையே................ம்.ம்.ம்......! நான் என்னவோ.......!சரி,சரி,"அந்தப்"பெட்டை கலியாணம் கட்டீட்டுதோ???ஹி!ஹி!ஹி!!!கவிதை நல்லாயிருக்கு.பாராட்டுக்கள்!
wow..... Super Super. I like it,
அரும்பத விளக்கங்கள் நன்று...
நேமிசா மீது நேசமா...
வணக்கம் நிரூபன்!
நல்ல காலம் விதானையார் பொட்டை தப்பிச்சு!!!
சூப்பர் பாஸ் . கலக்கல் .
அண்ணே உங்களுக்கு அந்த வயதிலேயே உப்பிடி கவிதை எல்லாம் வந்திருக்குது..............
இருந்தாலும் யார் அந்த அக்கா(உங்களுக்கு) ஹீ ஹீ ஹீ
மாப்ளே, அப்பவே காதலில் சிக்கி அடி வாங்கியுள்ளாயா? அந்த அடி வாங்கியதால் என்னவோ இந்த கவிதை மனனமாக இருக்கிறது போல...
நம்ம தளத்தில்:
ஷேர் ஆட்டோவும், ஹெல்மெட்டும்
@Yoga.S.FR
இரவு வணக்கம், நிரூபன்!சின்ன வயதிலையே................ம்.ம்.ம்......! நான் என்னவோ.......!சரி,சரி,"அந்தப்"பெட்டை கலியாணம் கட்டீட்டுதோ???ஹி!ஹி!ஹி!!!கவிதை நல்லாயிருக்கு.பாராட்டுக்கள்! //
வணக்கம் ஐயா,
நல்லா இருக்கிறீங்களா?
அவா கலியாணம் கட்டி கனடாவில செட்டிலாகிட்டா!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நன்றி ஐயா.
@Powder Star - Dr. ஐடியாமணி
wow..... Super Super. I like it,
//
நன்றி பாஸ்.
@Philosophy Prabhakaran
அரும்பத விளக்கங்கள் நன்று...
//
நன்றி அண்ணே.
@Philosophy Prabhakaran
நேமிசா மீது நேசமா...
//
அது முன்பொரு காலத்தில!
ஹி....ஹி...
இப்போவெல்லாம் இல்லை.
@காட்டான்
வணக்கம் நிரூபன்!
//
வணக்கம் மாமோய்.
@காட்டான்
நல்ல காலம் விதானையார் பொட்டை தப்பிச்சு!!!
//
ஏன் அண்ணே அப்படிச் சொல்லுறீங்க?
@Mahan.Thamesh
சூப்பர் பாஸ் . கலக்கல் .
//
நன்றி பாஸ்.
@ஆகுலன்
அண்ணே உங்களுக்கு அந்த வயதிலேயே உப்பிடி கவிதை எல்லாம் வந்திருக்குது..............
இருந்தாலும் யார் அந்த அக்கா(உங்களுக்கு) ஹீ ஹீ ஹீ
//
ஹே...ஹே..
ஏதோ நம்மால முடிஞ்சது பாஸ்..
@தமிழ்வாசி பிரகாஷ்
மாப்ளே, அப்பவே காதலில் சிக்கி அடி வாங்கியுள்ளாயா? அந்த அடி வாங்கியதால் என்னவோ இந்த கவிதை மனனமாக இருக்கிறது போல...
//
ஆமா பாஸ்...
@FOOD
வாங்கிய அடி, வலியையும் கூடவே வல்லமையையும் தந்துள்ளது.
//
ஆமா ஆப்பிசர்
ஹே....ஹே..
இப்படியான நினைவுகளை இலகுவில் மறக்க முடியுமா?
நன்றி பாஸ்.
சூப்பரப்பு!!
அந்த வட்டக்கச்சி விதானையாற்ற மகள்தானே! :-)
//அம்புலியின் பூங்கோதை - அவள்
அன்ன நடை மாக்கோதை//
கோதையின் நடையைவிட உங்க தமிழ்நடை அருமை நிரூ..
ஸ்கூலில் படிக்கும்போதே நிரூ விளைஞ்சுட்டாரு போல..ரொம்ப ஃபீல் பண்ணியிருக்காரே..
விவாத மேடைத் தலைப்பே சூடா இருக்கே..நடக்கட்டும்.
வணக்கம் சகோ நிரூபன்..
நலமா?
விடலைப்பருவ நினைவுகள்
கிளர்ந்தெழ ஆரம்பித்துவிட்டது
பதிவு கண்டு...
கவிதைக்கான சந்தமும் வரிகளும் என்னுள்ளே மனப் பாடமாய் இன்று வரை பதிந்திருக்கிறது.//
ரொம்ப ஆழமான பகிர்வு!
இவனுக ஊரில இருந்தா நம்மள யாரு பாப்பா!!
////
மைந்தன் சிவா said...
இவனுக ஊரில இருந்தா நம்மள யாரு பாப்பா!////
என்னையா மைந்தனே இப்படி பீல் பண்ணுறார்..............அவ்.....
16 வயதில் எழுதிய கவிதை 11 வருடங்களுக்கு முன் எழுதியது அப்ப உங்க கணக்குப்பட அந்தப்பொண்ணுக்கு இப்ப வயசு 27
உங்கள் வகுப்பு என்பதால் உங்களுக்கும் அதே வயசாகத்தான் இருக்கும் எல்லாம் நல்லா கேட்டுக்கோங்க நிரூபன் பாஸின் வயது 27
இபப்டிக்கு
வயசை அம்மபலப்படுத்துவோர் சங்கம்
நிரூபன் பிஞ்சுலயே பழுத்தவர் போல
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததோ.. நண்பனே நண்பனே...
மைந்தன் சிவா said...
இவனுக ஊரில இருந்தா நம்மள யாரு பாப்பா!!////பகல் வணக்கம்,மைந்தன்!கவலைப்படாதையுங்கோ,அடுத்த வரியம் பிரான்சுக்கு வாராராம்!இங்கினைக்க ஒண்டைப் பாத்து "கொழுவி" விடுவம்!ஹி,ஹி,ஹி!!!!!!
கையால் தாளம் போட்டு சத்தமாக பாடத்தொன்றுகிறது, அருமை, அப்பவே பழுத்துட்டீங்க போல ஹி ஹி...
வணக்கம் நண்பா.. கவிதை கலக்கல்.. பிஞ்சுலயே பழுத்து பட்டைய கிளப்பிருக்கீங்க..ம்ம்ம்ம் .. நண்பன் என்ற பெயரில் எட்டப்பன் இருந்திருந்தால் பிரம்படி கிடைத்திருக்கிறது .. அதனால் தானோ இன்னும் அந்த கவிதையை மறக்காமல் நியாபகம் வைதிருக்கிறீர்கள்... ஹா ஹா அருமை பாஸ்..
அரும்பத விளக்கத்துடன் கவிதையை வழக்கம்போல உங்கள் பாணியில் படித்துவிட்டீர்கள்.
Post a Comment