மரணங்கள் மலிந்த பூமியில் மகிழ்ச்சிக்கான கதவுகள் போர் தின்ற வாழ்விற்குப் பின்னரும் திறக்கவில்லை என்றே கூறலாம். தமிழனின் எழுச்சியின் போது இருந்த ஒற்றுமை இறுதி வரை தமிழனின் இரத்தத்தோடு ஊறியிருந்தால் தமிழர் தம் வாழ்வானது எப்போதோ ஒரு காலத்தில் செழிப்படைந்திருக்கும். வளமான வாழ்விற்காக போராடிய தமிழர்களை அவர்களின் போராட்ட நோக்கத்திலிருந்து திசை திருப்ப வேண்டும் எனும் காரணத்திற்காக கட்டவிழ்த்து விடப்பட்ட நச்சுப் பாம்பு தான் இப் பிரதேசவாதமாகும்.
போட்டி, பொறாமை, எரிச்சல், வன்மங்கள், குரோதங்கள், காழ்ப்புணர்சி அடிப்படையில் தமிழர்கள் தம் உள் நோக்கத்தினைச் சிதைக்க வேண்டும் எனும் ஒரே ஒரு காரணத்திற்காக தமிழர் விரோத குணம் கொண்டோரால் மெது மெதுவாகத் தமிழரின் இரத்தத்தினுள் புகுத்தப்பட்ட இந்தப் பிரதேசவாதம் பற்றிய சரியான புரிந்துணர்வற்றோர் மீண்டும், மீண்டும் பிரதேசவாதத்தினைத் தூண்டும் கருத்துக்களை முன் வைப்பது வேதனையளிக்கிறது. ஈழப் போர் கூட பிரதேசவாதம் என்ற ஒன்றின் அடிப்படையில் அதன் உரிய பலனை அடைய முன்னரே உள் இருந்தோரால் சிதைக்கப்பட்டது.
தமிழன் ஒவ்வோர் முயற்சியினைத் தொடங்கும் போதும் இன்றைய கால கட்டத்தில் பிரதேசவாதம் எனும் சாயம் பூசி அம் முயற்சியினை ஒரு பிரதேசத்திற்குரிய செயலாக்கி இன்பம் காணுவோரின் செயற்பாடுகள் பலவற்றை நாம் கண்டு கடந்து வந்திருக்கிறோம்.போரினால் பல வருடங்களாகப் பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசத்திலிருந்து நீண்ட காலத்தின் பின்னர் போராட்டம் சாராத வகையில் ஒரு குறும்படத்தினைத் தமிழ்க் கலைஞர்கள் உருவாக்குகின்றார்கள் என்றால் அவர்களின் முயற்சியினைப் பாராட்ட வேண்டும்.
உண்மையான, நேர்மையான குணம் கொண்ட மனிதர்களாக நாமிருந்தால் அக் குறும்படம் வெளியாகுவதற்கு முன்னபதாகப் பிரதேசவாதம் எனும் சாயம் பூசி அக் குறும்படத்தினைப் புறக்கணிக்கச் சொல்லிப் பிரச்சாரம் நடத்துவதனை விடுத்து, இந்த முயற்சியில் ஈடுபடும் உள்ளங்களிற்கு எம் ஆதரவுக் கரத்தினை நீட்ட வேண்டும். விமர்சனங்கள் என்பதற்கும் அப்பால் ஒரு முயற்சியினைப் புறக்கணிக்கும் வகையில் இணையத் தளங்கள் வாயிலாகவும், சமூக வலைத் தளங்கள் வாயிலாகவும் கூச்சலிடுவதால் நமக்குப் பயனேதும் கிடைக்கப் போவதில்லை என்பது யதார்த்தம்.
நீண்ட காலத்தின் பின்னர் யாழ் மண்ணில் உள்ள கலைஞர்களின் சிறிய முயற்சியாக யாழ்ப்பாணம் எனும் பெயரில் ஒரு குறும்படம் தயாரிக் கொண்டிருக்கிறது. படப் பிடிப்பு வேலைகள் யாவும் முடிவுற்று, இப்போது எடிற்றிங் வேலைகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. யாழ் மண்ணைச் சேர்ந்த கலைஞர்கள் மாத்திரமின்றி, வன்னி மண்ணைச் சேர்ந்தோரும் இக் குறும்படத்தில் தம் பங்களிப்புக்களை வழங்கியிருக்கின்றார்கள். Evergreens பசு நிறுவனத்தினர் இக் குறும் படத்தினைத் தயாரிக்கின்றார்கள்.
ஒரு ஊரின் அல்லது ஒரு பிரதேசத்தின் பெயரினை இக் குறும்படம் தாங்கி நிற்கிறதே என்பதனை அடிப்படையாக வைத்து பிரதேசவாதம் எனும் நஞ்சினை இப் படத்தின் மீதும் தூவிப் பிரச்சாரம் செய்வது எவ் வகையில் நியாயமாகும்? ஒரு ஊரின் பெயரை இப் படத்திற்கு வைத்திருப்பதால் நாம் இப் படம் பற்றிய சரியான புரிதலின்றி எப்படி இந்தப் படத்தையும் பிரதேசவாதம் எனும் பெயர் கொண்டு புறக்கணிக்க முடியும்? தமிழக சினிமாவில் திருப்பதி, திருப்பாச்சி, பழநி, சிவகாசி, எனப் பல படங்கள் பிரதேசங்களின் பெயரினைத் தாங்கி வந்திருக்கின்றனவே. தமிழக மக்கள் யாராவது இந்தப் படங்களைப் பிரதேசவாதம் எனும் பெயர் கொண்டு புறக்கணித்தார்களா?
தமிழகத்தில் வெளியான பிரதேசங்களின் பெயர்களினைத் தாங்கிய படங்களைத் தமிழக மக்கள் தமது வழமையான பார்வையிலிருந்தும் விலகி எப்போதாவது புறக்கணித்திருப்பார்களா?ஹாலிவூட் திரையுலகில் பல திரைப்படங்கள் அமெரிக்க மாநிலங்கள் மற்றும் அமெரிக்க ஊர்களின் பெயர்களினைத் தாங்கி வந்திருக்கின்றனவே. இந்தத் திரைப்படங்களை பிரித்தானியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து முதலிய நாடுகளில் வாழும் ஆங்கிலேயர்கள் பிரதேசவாதம் அல்லது இனத்துவேசம் எனும் பெயர் சூட்டி புறக்கணிக்கவில்லையே? ஏன்? அடடா இந்த மக்களுக்கெல்லாம் இல்லாத பேரறிவும், புரிந்துணர்வும் எம் ஈழத்தில் உள்ள நரிகளுக்கு இருப்பது தான் இன்று வரை தமிழர்கள் ஒவ்வோர் துறைகளிலும் தம் இன மானத்தை அடகு வைத்துப் பிழைப்பதற்கான காரணமாக இருக்கின்றது.
முற்று முழுதாக நகைச்சுவையினை மையமாக வைத்துப் பதிவர் கிருத்திகன் குகேந்திரன் அவர்களின் இயக்கத்தில் உருவாகும் இப் படத்தினைப் பற்றிய சரியான புரிதலற்றவர்கள் கிழக்கு மாகாணம் எனும் ஒரு மாயையினை மீண்டும் கையிலெடுத்து வட மாகாணத்திலிருந்து யாழ்ப்பாணம் எனும் பெயர் கொண்ட திரைப்படம் பிரதேசவாதத்தினைத் தூண்டும் வகையில் வெளி வரப் போகின்றது. இதற்கான காரணம் இப் படத்தின் பெயர் என்று பொய்ப் பிரச்சாரம் செய்வது இப் படத்திற்கு கிடைத்திருக்கும் முதல் வெற்றியாகும். கிழக்கில் உள்ள மக்களில் பலருக்கு இப் படம் பற்றிய செய்திகள் அதிகளவில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியிருக்க கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் நோக்கில் ஒரு சில புத்திஜீவீகளால் தனிப்பட்ட ரீதியில் வெளியிடப்படும் தான் தோன்றித் தனமான கருத்துகள் தான் பிரதேசவாதத்தை தூண்டுகின்றது எனும் பாணியிலான கருத்துக்களாகும்.
தலை முறை தலை முறையாகத் தமிழர்களுக்குள் பிரிவினையினை உருவாக்கி ஒரு சந்ததியினை அழித்தது போதும்! இனியாவது ஒரு சந்ததி வேற்றுமைகள் நீங்கி ஒற்றுமையுடன் வாழட்டுமே! நாம் வாழும் காலத்தில் தான் பிரதேசவாதம் எனும் பெயர் சொல்லி எமக்குள் பிரிவினைகளை உண்டாக்கி சுய இன்பம் கண்டு தெளிகின்றோம். எம் வருங்காலச் சந்ததிகளாவது பிரிவினைகளற்றவர்களாக தமிழர்கள் என்ற உணர்வோடு வாழ்வதற்கு நீங்கள் இடங் கொடுக்கலாம் அல்லவா? இன்னும் ஒரு சில நாட்களில் உங்களை நாடி வரைப் போகும் யாழ்ப்பாணம் குறும்படம் கொஞ்சம் வித்தியாசமான திரைப்படம் என நீங்கள் நினைத்தால் அதற்கான பதிலை இப் படம் பற்றிய ஸ்டில்கள் உங்களுக்கு வழங்கி நிற்கின்றது.
பதிவர்களின் புதிய முயற்சியாக வெளிவரவிருக்கின்றது இக் குறும்படம். நீண்ட காலமாக யாழ்ப்பாணத்தில் படப் பிடிப்பிற்குத் தடை செய்யப்பட்டுள்ள பிரதேசங்களில் இக் குறும்படத்திற்கான படப்பிடிப்பினை வெற்றிகரமாக நடாத்தி முடித்திருக்கிறார்கள் யாழ்ப்பாணம் குறும்படக் குழுவினர். பதிவர் மதிசுதா அவர்கள் இக் குறும்படத்தில் பிரதான கதா பாத்திரமாக நடித்திருக்கின்றார். மதிசுதா அவர்களுடன், பிரசன்னா, வாகீசன், பிரசாத், ஜெயகோபி, சஞ்சீவன், முகுந்தன், விந்தகன், வேணுதனுசன், நந்தஸ்ரீ, ஆகிய கலைஞர்களும் பதிவர்களும் இக் குறும்படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். ஆக்கபூர்வமான விமர்சனங்கள் எப்போதும் வரவேற்கத்தக்கவை தான் ஆனால் படம் வெளியாகுவதற்கு முன்பே ஒரு புதிய முயற்சியினைச் சாயம் பூசி மறைக்க நினைப்போரின் செயல்கள் கண்டிக்கத்தகைவையே!
ஈழத்துச் சினிமா எனும் சொல்லுக்கான தேடலிற்கு இன்றைய கால கட்டத்தில் உள்ள எம் படைப்புக்கள் வாயிலாக விடை காண முடியாது நிற்கின்றோம். காரணம் இன்றைய கால கட்டத்தில் ஈழத்துச் சினிமாவில் முழு நீளத் திரைப்படங்கள் அதிகளவில் வெளியாகுவதில்லை. அத்தோடு ஈழத்தில் நிலவும் வளப் பற்றாக் குறை என்ற ஒன்றினைக் காரணங் காட்டி யாருமே படம் எடுக்க விரும்புவதுமில்லை. குறும்படங்கள் மாத்திரமே அத்தி பூத்தாற் போல எப்போதாவது ஒரு நாள் வந்து கொள்கின்றது. ஆகவே நீண்ட காலத்தின் பின்னர் யாழ் குடாநாட்டிலிருந்து ஒரு சிறு முயற்சியாக வெளிவரவிருக்கும் இக் குறும்படக் குழுவினரை வாழ்த்தி, வரவேற்பது நம் கடமையல்லவா?
யாழ்ப்பாணம் குறும்படத்தின் ட்ரெயிலரினைக் கண்டு களிக்க இங்கே கிளிக் பண்ணுங்கள்:
போட்டி, பொறாமை, எரிச்சல், வன்மங்கள், குரோதங்கள், காழ்ப்புணர்சி அடிப்படையில் தமிழர்கள் தம் உள் நோக்கத்தினைச் சிதைக்க வேண்டும் எனும் ஒரே ஒரு காரணத்திற்காக தமிழர் விரோத குணம் கொண்டோரால் மெது மெதுவாகத் தமிழரின் இரத்தத்தினுள் புகுத்தப்பட்ட இந்தப் பிரதேசவாதம் பற்றிய சரியான புரிந்துணர்வற்றோர் மீண்டும், மீண்டும் பிரதேசவாதத்தினைத் தூண்டும் கருத்துக்களை முன் வைப்பது வேதனையளிக்கிறது. ஈழப் போர் கூட பிரதேசவாதம் என்ற ஒன்றின் அடிப்படையில் அதன் உரிய பலனை அடைய முன்னரே உள் இருந்தோரால் சிதைக்கப்பட்டது.
தமிழன் ஒவ்வோர் முயற்சியினைத் தொடங்கும் போதும் இன்றைய கால கட்டத்தில் பிரதேசவாதம் எனும் சாயம் பூசி அம் முயற்சியினை ஒரு பிரதேசத்திற்குரிய செயலாக்கி இன்பம் காணுவோரின் செயற்பாடுகள் பலவற்றை நாம் கண்டு கடந்து வந்திருக்கிறோம்.போரினால் பல வருடங்களாகப் பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசத்திலிருந்து நீண்ட காலத்தின் பின்னர் போராட்டம் சாராத வகையில் ஒரு குறும்படத்தினைத் தமிழ்க் கலைஞர்கள் உருவாக்குகின்றார்கள் என்றால் அவர்களின் முயற்சியினைப் பாராட்ட வேண்டும்.
உண்மையான, நேர்மையான குணம் கொண்ட மனிதர்களாக நாமிருந்தால் அக் குறும்படம் வெளியாகுவதற்கு முன்னபதாகப் பிரதேசவாதம் எனும் சாயம் பூசி அக் குறும்படத்தினைப் புறக்கணிக்கச் சொல்லிப் பிரச்சாரம் நடத்துவதனை விடுத்து, இந்த முயற்சியில் ஈடுபடும் உள்ளங்களிற்கு எம் ஆதரவுக் கரத்தினை நீட்ட வேண்டும். விமர்சனங்கள் என்பதற்கும் அப்பால் ஒரு முயற்சியினைப் புறக்கணிக்கும் வகையில் இணையத் தளங்கள் வாயிலாகவும், சமூக வலைத் தளங்கள் வாயிலாகவும் கூச்சலிடுவதால் நமக்குப் பயனேதும் கிடைக்கப் போவதில்லை என்பது யதார்த்தம்.
நீண்ட காலத்தின் பின்னர் யாழ் மண்ணில் உள்ள கலைஞர்களின் சிறிய முயற்சியாக யாழ்ப்பாணம் எனும் பெயரில் ஒரு குறும்படம் தயாரிக் கொண்டிருக்கிறது. படப் பிடிப்பு வேலைகள் யாவும் முடிவுற்று, இப்போது எடிற்றிங் வேலைகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. யாழ் மண்ணைச் சேர்ந்த கலைஞர்கள் மாத்திரமின்றி, வன்னி மண்ணைச் சேர்ந்தோரும் இக் குறும்படத்தில் தம் பங்களிப்புக்களை வழங்கியிருக்கின்றார்கள். Evergreens பசு நிறுவனத்தினர் இக் குறும் படத்தினைத் தயாரிக்கின்றார்கள்.
தலை முறை தலை முறையாகத் தமிழர்களுக்குள் பிரிவினையினை உருவாக்கி ஒரு சந்ததியினை அழித்தது போதும்! இனியாவது ஒரு சந்ததி வேற்றுமைகள் நீங்கி ஒற்றுமையுடன் வாழட்டுமே! நாம் வாழும் காலத்தில் தான் பிரதேசவாதம் எனும் பெயர் சொல்லி எமக்குள் பிரிவினைகளை உண்டாக்கி சுய இன்பம் கண்டு தெளிகின்றோம். எம் வருங்காலச் சந்ததிகளாவது பிரிவினைகளற்றவர்களாக தமிழர்கள் என்ற உணர்வோடு வாழ்வதற்கு நீங்கள் இடங் கொடுக்கலாம் அல்லவா? இன்னும் ஒரு சில நாட்களில் உங்களை நாடி வரைப் போகும் யாழ்ப்பாணம் குறும்படம் கொஞ்சம் வித்தியாசமான திரைப்படம் என நீங்கள் நினைத்தால் அதற்கான பதிலை இப் படம் பற்றிய ஸ்டில்கள் உங்களுக்கு வழங்கி நிற்கின்றது.
பதிவர்களின் புதிய முயற்சியாக வெளிவரவிருக்கின்றது இக் குறும்படம். நீண்ட காலமாக யாழ்ப்பாணத்தில் படப் பிடிப்பிற்குத் தடை செய்யப்பட்டுள்ள பிரதேசங்களில் இக் குறும்படத்திற்கான படப்பிடிப்பினை வெற்றிகரமாக நடாத்தி முடித்திருக்கிறார்கள் யாழ்ப்பாணம் குறும்படக் குழுவினர். பதிவர் மதிசுதா அவர்கள் இக் குறும்படத்தில் பிரதான கதா பாத்திரமாக நடித்திருக்கின்றார். மதிசுதா அவர்களுடன், பிரசன்னா, வாகீசன், பிரசாத், ஜெயகோபி, சஞ்சீவன், முகுந்தன், விந்தகன், வேணுதனுசன், நந்தஸ்ரீ, ஆகிய கலைஞர்களும் பதிவர்களும் இக் குறும்படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். ஆக்கபூர்வமான விமர்சனங்கள் எப்போதும் வரவேற்கத்தக்கவை தான் ஆனால் படம் வெளியாகுவதற்கு முன்பே ஒரு புதிய முயற்சியினைச் சாயம் பூசி மறைக்க நினைப்போரின் செயல்கள் கண்டிக்கத்தகைவையே!
குறும்படம் பற்றி பிரதேசவாதம் எனும் ஒரு புதுக் கருத்துத் திணிப்பை புகுத்திய முதல் நபர்! |
யாழ்ப்பாணம் குறும்படத்தின் ட்ரெயிலரினைக் கண்டு களிக்க இங்கே கிளிக் பண்ணுங்கள்:
|
66 Comments:
வாசித்து விட்டு வாறன்...
அண்ணா நாம் இனத்துக்கு அழிவு நம்மால் தான்...ஏன் எமது இனம் மட்டும் இப்படியான குரோத மனம் கொண்டுள்ளது..?
புரியாத புதிராக உள்ளது........
யாழ்ப்பாணம் குறும்படத்தில் பங்கு பற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
@ஆகுலன்
வாசித்து விட்டு வாறன்...
//
ஓம் வாங்கோ..
@ஆகுலன்
அண்ணா நாம் இனத்துக்கு அழிவு நம்மால் தான்...ஏன் எமது இனம் மட்டும் இப்படியான குரோத மனம் கொண்டுள்ளது..?
புரியாத புதிராக உள்ளது......//
நான் நினைக்கிறேன்
இது ஒருவகை மனோ வியாதி என்று..
@ஆகுலன்
யாழ்ப்பாணம் குறும்படத்தில் பங்கு பற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
//
உங்கள் வாழ்த்துக்கள் அவர்களைப் போய்ச் சேரும் என நினைக்கிறேன்.
நன்றி ஆகுலன்.
@FOOD
தொடரட்டும் உங்கள் பணி-மதி சுதா.
//
நன்றி ஆப்பீசர்.
>தமிழர்களை அவர்களின் போராட்ட நோக்கத்திலிருந்து திசை திருப்ப வேண்டும் எனும் காரணத்திற்காக கட்டவிழ்த்து விடப்பட்ட நச்சுப் பாம்பு தான் இப் பிரதேசவாதமாகும்.
---
ஆம் சரியான நெத்தியடி.
கட்டுரையில் எங்கே நம் நண்பர்களுடைய
முறச்சி வீணாகிவிடுமோ என்கிற அங்கலாயிப்பு தெரிகிறது
கவலை தேவையில்லை சர்ச்சைக்குறிய திரைப்படங்களே
வெற்றி பெற்றிருக்கின்றன
மதிசுதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
தலைப்பு - இது ஒரு அடையாளமே ஒழிய பிரதேச வாதம் கிடையாது என்பது என் கருத்து
அடடா இந்த மக்களுக்கெல்லாம் இல்லாத பேரறிவும், புரிந்துணர்வும் எம் ஈழத்தில் உள்ள நரிகளுக்கு இருப்பது தான் இன்று வரை தமிழர்கள் ஒவ்வோர் துறைகளிலும் தம் இன மானத்தை அடகு வைத்துப் பிழைப்பதற்கான காரணமாக இருக்கின்றது.//
இலங்கையில் தமிழ் சினிமா வளர வளர கிள்ளி எறியப்பட்டது இதனால் தான்
யாழ்தேவி என்ற பெயரில் அமைந்த திரட்டியை கிழக்கு பதிவர்கள் புறக்கணித்ததையும் நினைத்து பார்க்கிறேன்
படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
சிறந்த ஓரு முயற்சியை பாராட்டுவதை விட்டுவிட்டு ஏன் பிரதேசவாதம் என்ற சொல்லுக்குள் உள்ளடக்குவான்.....
யோசிக்கத்தேவையில்லை இதனால் படத்துக்கு விளம்பரம் கிடைக்கும்..
இந்த குறும்படம் நல்லதொரு முயற்சி இது வெற்றியடைய வேண்டும் தொடர்ந்து பல படைப்புக்கள் வெளிவரவேண்டும்
வணக்கம் நண்பர் நிரூபன்,
மாற்றுக்கருத்துள்ள எந்த ஒரு காவியமும்
சற்று சர்ச்சைக்குள்ளாகி பின்னர் மாபெரும் வெற்றி பெரும்..
இந்தக் குறும்படமும் அவ்வகையை சாரும்..
வணக்கம் நண்பா நலமா
மூன்று நாட்கள் வெளியூர் பயணம் என்பதால் பதிவும் இட இயலவில்லை ,நண்பர்கள் பதிவிற்கும் செல்ல இயலவில்லை
குறும்படக் குழுவினர்க்கு வாழ்த்துக்கள் நண்பா
ட்ரைலர் அருமை .. அப்ப முழுதும் ?
பெயரை மட்டும் பார்த்து பிரதேசவாதம் என்று புறக்கணிப்பதும்,தூற்றுவதும் நல்லதல்ல.
குழுவினருக்கு வாழ்த்துக்கள்.விரைவில் வெளிவரட்டும்!
@எஸ் சக்திவேல்
ஆம் சரியான நெத்தியடி.
//
நன்றி அண்ணா
இதுவும் ஒரு மனவியாதிதான் முன்முயற்ச்சிகளை சீரலிக்க முண்டியடிப்பது!
குறும்படத்துடன் தொடர்புள்ள எல்லோருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் இப்படம் பொருளாதார ரீதியில் வெற்றியடைய பிரார்த்திக்கின்றேன்!
எங்களிடையே திறமைவாய்ந்த பல கலைஞர்கள் இருக்கின்றனர். அவர்களின் திறமைகள் வெளிவருவதற்கு சரியான களம் அமைத்துக் கொடுக்கப்படவில்லை. எமது கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டும். யாழ்ப்பாணம் குறுந்திரைப்படக் குழுவினருக்கு என்னுடைய பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
இக் குறுந்திரைப்படம் இலங்கைப்பதிவர்களின் ஒரு முயற்சி எனும்போது சந்தோசப்பட வேண்டிய விடயம். வெறுமனே யாழ்ப்பாணம் எனும் பெயர் இக் குறும்படத்துக்கு சூட்டப்பட்டிருக்கின்றது என்பதற்காக யாராவது பிரதேசவாதம் பேசுவார்களாக இருந்தால் அது அவர்களின் அறியாமை.
யாழ்ப்பாணம் எனும் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது என்பதனால் இக் குறும்படம் பிரதேச வாதம் பேசும் படம் என்று நினைப்பது முட்டாள்த்தனம். இக் குறும்படத்தின் கதை என்ன? இக் குறும்படம் சமூகத்துக்கு எதனைச் சொல்ல வருகின்றது என்பதனை நாம் பார்க்க வேண்டும். கண்ணை மூடிக் கொண்டு எதனையும் சொல்லிவிட முடியாது.
நான் ஒரு குறும்படம் தயாரிப்பதானால் நிச்சயமாக மட்டக்களப்பு என்று வைக்கவே அதிகம் விரும்புவேன். இப் பிரதேச மக்களின் அவலங்களை , பிரதேசம் சார்ந்த விடயங்களை அவணப்படுத்தும் ஒரு திரைப்படத்துக்கு அப்பிரதேசத்தின் பெயரை வைப்பதனை பிரதேச வாதம் பேசுவது பேசுபவர்களின் அறியாமையே.
// KANA VARO said...
யாழ்தேவி என்ற பெயரில் அமைந்த திரட்டியை கிழக்கு பதிவர்கள் புறக்கணித்ததையும் நினைத்து பார்க்கிறேன்//
யாழ்திரட்டியினை கிழக்குப் பதிவர்கள் புறக்கணிக்கவில்லை. யாழ்தேவிக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை வைத்து எதிராக பல பதிவுகளை இட்டவன் நான் மட்டுமே எல்லா பதிவர்களும் யாழ்தேவியை புறக்கணித்தனர் என்பது தவறு.
அதேபோன்று யாழ்தேவி திரட்டியை நான் புறக்கணித்ததும் கிழக்குப்பதிவர்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் நான் பதிவிட்டதும் யாழ்தேவி எனும் பெயரின் காரணமாக இல்லை.
இலங்கையின் தமிழ் வலைப்பதிவர்களின் முதலாவது பதிவர் சந்திப்பு நடந்ததன் பின்னர் யாழ்தேவி திரட்டி தொடர்பாக பல கருத்து மோதல்கள் இடம்பெற்றன. யாழ்தேவி எனும் பெயர் தவறானதல்ல அப்பெயரே இருக்கட்டும் என்று அதிகம் கருத்துரையிட்டவன் நானே.
யாழ்தேவி திரட்டியின் பெயர் தொடர்பில் கிழக்குப்பதிவர்கள் ஒருபோதும் பிரதேசவாதம் பேசியவர்களல்ல.
காலை வணக்கம் நிரூபன்!///அடடா இந்த மக்களுக்கெல்லாம் இல்லாத பேரறிவும், புரிந்துணர்வும் எம் ஈழத்தில் உள்ள நரிகளுக்கு இருப்பது தான் இன்று வரை தமிழர்கள் ஒவ்வோர் துறைகளிலும் தம் இன மானத்தை அடகு வைத்துப் பிழைப்பதற்கான காரணமாக இருக்கின்றது.////இப்போது மீண்டும் பிரதேச வாதத்தை"அந்த"இருவருமே தெளித்து வருவது ஊரறிந்தது.அதற்கும் ஒரு பா.உ பதிலடி கொடுத்திருப்பதும் தெரிந்திருக்கும்.மீண்டும் வருகிறேன்.................
@Yoga.S.FR
/இப்போது மீண்டும் பிரதேச வாதத்தை"அந்த"இருவருமே தெளித்து வருவது ஊரறிந்தது.அதற்கும் ஒரு பா.உ பதிலடி கொடுத்திருப்பதும் தெரிந்திருக்கும்.மீண்டும் வருகிறேன்.................//
இனிய காலை வணக்கம் ஐயா,
எல்லாம் காலஞ் செய்த கோலம். நாம என்ன செய்ய முடியும், இன்னோர் சந்ததியாவது வேற்றுமைகள் நீங்கி வாழட்டும் என்று நினைத்தால் அதிலும் ஓட்டை உடைசல் கண்டு பிடிக்க நினைக்கிறார்களே.
@veedu
கட்டுரையில் எங்கே நம் நண்பர்களுடைய
முறச்சி வீணாகிவிடுமோ என்கிற அங்கலாயிப்பு தெரிகிறது
கவலை தேவையில்லை சர்ச்சைக்குறிய திரைப்படங்களே
வெற்றி பெற்றிருக்கின்றன
மதிசுதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
//
நல்லதோர் கருத்தினைத் தந்திருக்கிறீங்க.
மிக்க நன்றி நண்பா.
@KANA VARO
தலைப்பு - இது ஒரு அடையாளமே ஒழிய பிரதேச வாதம் கிடையாது என்பது என் கருத்து
//
இதனை விளக்கிச் சொன்ன பிறகும் விடுகிறார்களா?
இல்லையே சகோ, சும்மா கலைத்துக் கலைத்தல்லவா அடிக்கிறார்கள்...
அவ்வ்வ்வ்வ்
@KANA VARO
இலங்கையில் தமிழ் சினிமா வளர வளர கிள்ளி எறியப்பட்டது இதனால் தான்
//
பின்னூட்டம் ஊடாக வரலாற்றை மீட்டிப் பார்க்கச் சந்தப்பர்ப்பம் வழங்கியிருக்கிறீங்க.
நன்றி சகோ.
@KANA VARO
யாழ்தேவி என்ற பெயரில் அமைந்த திரட்டியை கிழக்கு பதிவர்கள் புறக்கணித்ததையும் நினைத்து பார்க்கிறேன்
//
அடடா இது புதுசா இருக்கிறதே.
@KANA VARO
படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
//
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சகோ.
இவ் வாழ்த்துக்கள் நிச்சயமாக அவர்களைப் போய்ச் சேர்ந்திருக்கும்!
@K.s.s.Rajh
சிறந்த ஓரு முயற்சியை பாராட்டுவதை விட்டுவிட்டு ஏன் பிரதேசவாதம் என்ற சொல்லுக்குள் உள்ளடக்குவான்.....
யோசிக்கத்தேவையில்லை இதனால் படத்துக்கு விளம்பரம் கிடைக்கும்..
இந்த குறும்படம் நல்லதொரு முயற்சி இது வெற்றியடைய வேண்டும் தொடர்ந்து பல படைப்புக்கள் வெளிவரவேண்டும்
//
அப்போ காசில்லாமல் ஓசி விளம்பரம் கொடுக்கிறாங்க.
இதுவும் நல்ல விடயம் தான்.
@மகேந்திரன்
வணக்கம் நண்பர் நிரூபன்,
மாற்றுக்கருத்துள்ள எந்த ஒரு காவியமும்
சற்று சர்ச்சைக்குள்ளாகி பின்னர் மாபெரும் வெற்றி பெரும்..
இந்தக் குறும்படமும் அவ்வகையை சாரும்..
//
நன்றி அண்ணே.
@மகேந்திரன்
வணக்கம் நண்பர் நிரூபன்,
மாற்றுக்கருத்துள்ள எந்த ஒரு காவியமும்
சற்று சர்ச்சைக்குள்ளாகி பின்னர் மாபெரும் வெற்றி பெரும்..
இந்தக் குறும்படமும் அவ்வகையை சாரும்..
//
நன்றி அண்ணே.
ஐயா வணக்கம் எந்த வலைத்தளம் எந்தசமுக தளம் எப்படி சாயம் எண்ட ஆதாரத்தையும் இப்பதிவில் சேர்க்கவும்
லின்கயோ அல்லது சமுகதலன்க்ளில் வந்த கருத்துக்களின் படங்களையோ போடவும்
இல்லாட்டி
நிருபன் படத்துக்கோ அலது பதிவுக்கோ விளம்பரம் தேடுறான் எண்டு புதுசா சாயம் பஊசிடுவாங்க
@M.R
வணக்கம் நண்பா நலமா
மூன்று நாட்கள் வெளியூர் பயணம் என்பதால் பதிவும் இட இயலவில்லை ,நண்பர்கள் பதிவிற்கும் செல்ல இயலவில்லை
குறும்படக் குழுவினர்க்கு வாழ்த்துக்கள் நண்பா
//
நோ ப்ராப்ளம் பாஸ்,
நீங்க வந்திட்டீங்க இல்லே.
நாம சேர்ந்து கலக்கிடுவோம்.
குறும்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்...உங்களுக்கும் நண்பர் மதி சுதாவுக்கும் நன்றிகள்!
@"என் ராஜபாட்டை"- ராஜா
ட்ரைலர் அருமை .. அப்ப முழுதும் ?
//
இது ரொம்ப ஓவர் ஐயா,
அதான் படம் இன்னும் ஒரு சில தினங்களுள் வரும் என்று ரெண்டாவது போட்டோவிற்கு கீழே சொல்லியிருக்கேனே;-)))
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@கோகுல்
பெயரை மட்டும் பார்த்து பிரதேசவாதம் என்று புறக்கணிப்பதும்,தூற்றுவதும் நல்லதல்ல.
குழுவினருக்கு வாழ்த்துக்கள்.விரைவில் வெளிவரட்டும்!
//
நன்றி சகோ.
@தனிமரம்
இதுவும் ஒரு மனவியாதிதான் முன்முயற்ச்சிகளை சீரலிக்க முண்டியடிப்பது!
//
உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி சகோ.
@தனிமரம்
குறும்படத்துடன் தொடர்புள்ள எல்லோருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் இப்படம் பொருளாதார ரீதியில் வெற்றியடைய பிரார்த்திக்கின்றேன்!
//
நன்றி சகோ,
உங்கள் வாழ்த்துக்கள் இப் படத் தயாரிப்புக் குழுவினரைச் சென்று சேர்ந்திருக்கும்.
@சந்ரு
எங்களிடையே திறமைவாய்ந்த பல கலைஞர்கள் இருக்கின்றனர். அவர்களின் திறமைகள் வெளிவருவதற்கு சரியான களம் அமைத்துக் கொடுக்கப்படவில்லை. எமது கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டும். யாழ்ப்பாணம் குறுந்திரைப்படக் குழுவினருக்கு என்னுடைய பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
//
உண்மையான கருத்துக்கள், முப்பதாண்டு காலப் போரால் நாம் பல கலைகளை இழந்து விட்டோம் சகோ,
உங்கள் வாழ்த்துக்களும் கிருத்திகன் குழுவினரைச் சென்றடையட்டும்!
@சந்ரு
நான் ஒரு குறும்படம் தயாரிப்பதானால் நிச்சயமாக மட்டக்களப்பு என்று வைக்கவே அதிகம் விரும்புவேன். இப் பிரதேச மக்களின் அவலங்களை , பிரதேசம் சார்ந்த விடயங்களை அவணப்படுத்தும் ஒரு திரைப்படத்துக்கு அப்பிரதேசத்தின் பெயரை வைப்பதனை பிரதேச வாதம் பேசுவது பேசுபவர்களின் அறியாமையே.
//
ஆனால் அவர்கள் ஏன் இப்படிப் பேசுகிறார்கள் என்பது மாத்திரம் புரியாத புதிராக இருக்கிறதே?
@சந்ரு
யாழ்திரட்டியினை கிழக்குப் பதிவர்கள் புறக்கணிக்கவில்லை. யாழ்தேவிக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை வைத்து எதிராக பல பதிவுகளை இட்டவன் நான் மட்டுமே எல்லா பதிவர்களும் யாழ்தேவியை புறக்கணித்தனர் என்பது தவறு.
//
அடியேனுக்கு இந்த விடயங்கள் புதியனவாக இருக்கிறது. மூத்த பதிவர்கள் தான் இவ் விடயம் தொடர்பாக கருத்துக் கூற வேண்டும். நான் இவ் வருடத்தின் ஆரம்பத்தில் தான் பதிவுலகினுள் வந்தேன்.
@கவி அழகன்
ஐயா வணக்கம் எந்த வலைத்தளம் எந்தசமுக தளம் எப்படி சாயம் எண்ட ஆதாரத்தையும் இப்பதிவில் சேர்க்கவும்
லின்கயோ அல்லது சமுகதலன்க்ளில் வந்த கருத்துக்களின் படங்களையோ போடவும்
இல்லாட்டி
நிருபன் படத்துக்கோ அலது பதிவுக்கோ விளம்பரம் தேடுறான் எண்டு புதுசா சாயம் பஊசிடுவாங்க
//
நல்ல கருத்து சகோ,
இப்பொழுதே அவர்களின் சமூக வலைத் தள ஸ்டேட்டஸ்ஸினை இணைக்கின்றேன்.
குறும்படத்துடன் இணைந்த அனைவருக்கும் வாழ்த்துகள்.
ஒரு படத்தைப் பார்க்காமலேயே கருத்துச் சொல்வது சரியல்ல..வெளியானபின் மாற்றுக்கருத்து இருந்தால் சொல்லலாம்.
பழைய வெறுப்பினை இன்னும் தொடர்வதில் ஏதும் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை..
அரவேக்காடுகளை கணக்குல சேர்க்காதீங்க
முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
வணக்கம் நிரூபன்...
யாழ்பாணம் குறும்பட குழுவினர்களுக்கு எனது வாழ்த்துக்கள்..
பாருங்கோ இந்த அரைவேக்காட்டின் பின்னூட்டத்தை நானும் மூஞ்சி புத்தகத்தில் பார்த்தேன் அட நீங்க யாழ்பாணம்ன்னு சொல்லவேண்டாம் தமிழன்னு சொன்னாவே இவங்களுக்கு பொத்திக்கொண்டு வருது.. மதத்தை முன்னிறுத்துபவர்கள் ”எவராய்” இருந்தாலும் புறம்தள்ளுவோம்.. இவர்களுக்கு சொந்தங்கள் உலகம் பூரா இருக்காம்.. ஹி ஹி ஹி நல்ல ஜோக் இப்ப அவங்களை பாதுகாக்கவே அவங்க படுகிறபாட்டில நீங்க வேற!!
மீண்டும் வருகிறேன்...
மச்சி வாழ்த்துக்கள்....
குறும் படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்....
anna antha Irshad Khan unmayana profile ah??/....ithu yaro hack panni use panninam....ena padichathu elame hindu college la...and avar fotoz elame hindu koil la eduthathu...ivlo kevalama pesuravan...ithula padichu irupan nu nambringala.....
kurumpadam vetri pera enn vazhthukal
இது பொறாமை அண்ணா. முடியாட்டி இப்படித்தானே குமுருவாங்கள்.
படத்தை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறோம்.
நிரூ....நாங்கள் ஒற்றுமைப்படும்வரை இதேதான்.ஒரு படம் எடுப்பது எவ்வளவு கஸ்டமான விஷயம் !
ஆமாம்,பிரதேச வாதம் நச்சுப்பாம்புதான் ,
குறும் படம் வெற்றி பெற படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்...
நண்பர் மதி சுதாவுக்கும் நன்றி...
உங்களுக்கும்...
முயற்சியைப் பாராட்டுகிறேன். இளம் கலைஞர்களுக்கு பாராட்டுகள்.
யாழ்ப்பாணம் குறும்படத்தில் பணியாற்றிய எல்லாக் கலைஞர்களுக்கும் எனது பாராட்டுகளும், வாழ்த்துக்களும்
எம் மனதுக்குள் அடங்கியிருந்ததை வெளிக் கொண்டுவந்ததுக்கு நனறி நிரு.... இதை ஒவ்வொரு உறவும் உணர்ந்து திருந்த வேண்டும்...
வாழ்த்துத் தெரிவித்த என் அனைத்து உறவுகளுக்கும் மிக்க மிக்க நன்றி
முயற்சிக்கு பாராட்டுக்கள்.....
நல்ல பகிர்வு....
அனைத்தும் புரிந்துணர்வின்மையின் பிரதிபளிப்புக்களே.....
நிரூபன்,
கனி மரத்தின் மீது கல்லடி விழுந்திருக்கிறது.
மரம் வீழாதென்பது அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
குரும்பட முயற்சி வெல்லட்டும். வாழ்த்துக்கள்.
நாம் பட்ட துன்பம் போதாதா ? இதுலுமா பிரதேச வாதம் .
"யாழ்ப்பாணம்" குறும்படத்தை பார்க்க நானும் ஆவலுடன் உள்ளேன்.
Post a Comment