வாழ்க்கையில் புரிந்துணர்வோடு நாம் வாழப் பழகிக் கொண்டால் பல புரிதலற்ற விடயங்களை வெற்றிகரமாகச் சாதிக்க முடியும். சந்தேகமும், நம்பிக்கையினை உடைத் தெறிகின்ற சபல புத்தியும் சந்தோசத்திற்கு கேடு விளைவிக்கும் என்பது யதார்த்தம். நாம் ஒருவர் மீது கொண்டிருக்கிற அளவு கடந்த நம்பிக்கையின் வெளிப்பாடு தான் சந்தேகம் என்று மனோதத்துவ ஆய்வாளர்கள் விளக்கம் கூறினாலும், ஒரு மனிதன் வாழும் சூழலும், அவனைச் சூழ்ந்து நடக்கும் சமூக மாற்றங்கள் அவனது துணை பற்றிய சந்தேகத்திற்கு தூண்டு கோலாக அமைந்து கொள்கிறது.
ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுள் பலருக்கு அந் நாடுகளில் உற்றார், உறவினர்கள் இருப்பதில்லை. ஆனாலும் ஈழத்தின் ஸ்திரமற்ற இயல்பு நிலையும், ஈழத்தில் வாழும் இளைஞர்களுக்குத் தம் பெண் பிள்ளைகளை மணம் முடித்துக் கொடுப்பதனை விட, வெளி நாட்டில் வாழும் மணமகனிடம் தம் மகளை ஒப்படைத்தால் சந்தோசமாகவும், வசதியாகவும், நிம்மதியாகவும் தம் மகள் இருப்பாள் எனும் அசைக்க முடியாத நம்பிக்கையில் தான் ஈழத்தில் உள்ள பெற்றோர்கள் பலர் வெளிநாட்டில் உள்ள வரன்களிடம் தம் பிள்ளைகளை அந்த வரனின் வயதினைப் பற்றிக் கூட கவலைப்படாது ஒப்படைக்கின்றார்கள்.
சந்தர்ப்பமும் சூழ் நிலைகளும், விதியும் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடும் போது; சில தவிர்க்க முடியாத காரணங்களால் இனிதான இல்லற வாழ்வினைத் தொடங்கி இன்புற்று வாழ வேண்டும் எனும் நோக்கில் புலம் பெய்ர்ந்து செல்லும் பெண்கள் சிலரது வாழ்க்கை திசை மாறிச் சென்றிருக்கிறது. தன் துணைவியை வேலைக்கு அனுப்பி விட்டு, வீட்டில் உட்கார்ந்திருக்கும் ஆண் மகனுக்கு வேலையற்ற வெட்டி நிலை காரணமாகச் சந்தேகம் வந்தால் எத்தகைய நிலையினை உருவாக்கும் என்பதனை ஒரு பெண்ணின் வலி நிறைந்த வாழ்க்கையூடே தன் முன் பாதியில் சொல்லி நிற்கும் படம் தான் இந்த தீரா இருள்.
ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து சென்ற சிலருக்கு அந் நாடுகளின் அரசியல் நிலமை காரணமாக வதிவிட அனுமதி (விசா) இலகுவில் கிடைப்பதில்லை. வதிவிட நிலமை இல்லாதோருக்கு அந் நாட்டுச் சட்ட திடங்களுக்கு அமைவாக பதிவு செய்யப்பட்ட (ரிஜிஸ்டர் செய்யப்பட்ட) ஒரு ஊழியராக வேலை செய்ய முடியாத நிலையின் காரணமாக குறைந்த சம்பளத்தில் கையில் காசிற்கு வேலை செய்யும் அவல நிலையில் அடிமைகள் போன்று நடாத்தப்பட்டு வேதனையோடு தம் காலத்தைக் கழிக்க வேண்டிய நிலமையும் ஏற்பட்டிருக்கிறது.
தனிமையில் தம் உறவினர்களால் கை விடப்பட்ட முதியவர்கள் புலம் பெயர் நாடுகளில் இருந்தால் எவ்வாறு இருப்பார்கள்? கணவனால் சந்தேக கண் கொண்டு பார்க்கப்பட்டு வீட்டினை விட்டு விரட்டி அடிக்கப்பட்ட பெண் தெருவில் தன் குடும்ப கௌரவம் போகக் கூடாதே எனும் மன உணர்வோடு நிற்கும் போது அவளது மன நிலை எப்படி இருக்கும்? பிரான்ஸ் நாட்டில் வாழும் மூன்றாந் தலை முறையினர் அடி தடி வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு எப்படி அப்பாவித் தமிழர்கள் சிலரின் வாழ்வைச் சிதைக்கிறார்கள்? இத்தகைய பல வினாக்களுக்கான விடையினை 11.25 நிமிடங்களுக்குள் சொல்லி நிற்கும் அற்புதமான படம் தான் தீரா இருள்!
எம்மைச் சுற்றியிருப்பதெல்லாம் தீராத இருளே! எப்போது எம் வாழ்வு விடியும் எனும் ஏக்கத்தில் வாழும் நான்கு வெவ்வேறு தள நிலையில் நோக்கக் கூடிய தமிழ் உறவுகளின் அவல நிலையினைச் சொல்லி நிற்கும் யதார்த்தம் நிறைந்த குறும்படம் தான் இந்த தீரா இருள்! சதா பிரணவன் அவர்களின் எழுத்துருவாக்கம் மற்றும் இயக்கத்திலும், டெசுபனின் ஒளிப்பதிவிலும், ஜனாவின் இசையிலும் உருவாகியுள்ள இக் குறும்படத்தினை பிரான்ஸில் உள்ள அவதாரம் நிறுவனத்தினர் வெளியிட்டிருக்கிறார்கள்.
தனிமையில் ஒரு பெண் வீதியோரத்தில் நிற்கையில் அதுவும் கலாச்சாரம் என்ற வேலிக்குள் கட்டுப் போட்டு வளர்க்கப்பட்ட தமிழ்ப் பெண் வீதியில் நிற்கையில் அவள் புலம் பெயர் நாட்டில் வாழ்ந்தாலும் அவளை எத்தகைய கண்ணோட்டத்தில் இச் சமூகம் நோக்கும் என்பதனை "உந்த டைம்மில உவாக்கு என்ன வேலை? (இந்த நேரத்தில இவங்க என்ன பண்ணுறாங்க)
கேட்டுப் பார்ப்போம். ஆள் வந்தான்னா எனக்கு ஓக்கே" எனும் வசனங்கள் ஊடாக காட்சிப்படுத்தி எம் முகத்தில் அறைவது போன்ற உணர்வினை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர் சதாபிரணவன்.
இக் குறும்படம் வாயிலாக புலம் பெயர் தேசம் பற்றிய கனவுகளின் பின்னே சந்தர்ப்ப சூழ் நிலைகளால் சிதைந்து நிற்கும் ஒரு சந்ததியின் வாழ்வினை அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
11.25 நிமிடங்கள் கால அளவை கொண்ட இந்த தீரா இருள் திரைப்படத்தினைக் கண்டு களிக்க இவ் இணைப்பில் கிளிக் பண்ணுங்கள்:
தீரா இருள்: புலம் பெயர் தமிழ்ச் சொந்தங்களின் அவலங்களைச் சொல்லும் அழுத்தமான குறுங் காவியம்!
தீரா இருள்: புலம் பெயர் தமிழ்ச் சொந்தங்களின் அவலங்களைச் சொல்லும் அழுத்தமான குறுங் காவியம்!
**********************************************************************************************************************************
"இந்த நீரூபன் பையன் பதிவர் அறிமுகம் என்று ஒன்னு கொஞ்ச நாளா போட்டுக்கிட்டு இருந்தானே. இப்போ திடீரென்று நிறுத்திட்டானா. எடுங்கடா அந்த அருவாளை" என கோபம் கொப்பளிக்க என்னைப் பார்க்கும் மக்களே! பொறுமை! பொறுமை! பொறுமை!
இன்றைய பதிவர் அறிமுகம் பகுதி "வேர்ப்புழுக்கள்" எனும் புத்தம் புதிய வலைப் பதிவின் அறிமுகத்தினைத் தாங்கி வருகின்றது.
பதிவுலகினுள் ஒரு சில வாரங்களுக்கு முன்பதாக நுழைந்துள்ள புதிய பதிவர் தான் "கணேசன்" அவர்கள்.
கணேசன் அவர்களின் வேர்ப்புழுக்கள் வலைப் பதிவிற்குச் செல்ல:
************************************************************************************************************************************
பிற் சேர்க்கை:என் பாசத்திற்கும் நேசத்திற்குமுரிய சொந்தங்களே!
பதிவுலகை விட்டு விலகுவது தொடர்பான என் அறிவிப்பினை வாபாஸ் வாங்கச் சொல்லியதோடு; உங்கள் அன்பினை வெளிப்படுத்தி, நான் எப்போதும் உங்களோடு இருக்க வேண்டும் எனும் உணர்வினை உங்கள் அன்பால் வெளிப்படுத்தி நிற்கும் அனைத்து அன்பு உறவுகளுக்கும் நான் என்ன கைம்மாறு செய்வேனோ தெரியவில்லை. காலமும் நேரமும், என் பணியும், கல்வியும் தான் இதனைத் தீர்மானிக்கும்! மீண்டும் உங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி!
ஒற்றை வார்த்தையில் சொல்லுவதற்கு மன்னிக்கவும் உறவுகளே!
|
32 Comments:
மிக அருமையான படம் பாஸ் பார்த்தேன் ரசித்தேன்
சந்தேக புயலடித்தால் ... சந்தோச பூ உதிரும்ம்ம்ம்....குறும்படம் அருமை நண்பா
கணேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
ஆமாம் நிரூபன் பதிவுலகத்தை விட்டு விலகும் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்... வாரம் ஒரு பதிவாவது எழுதுங்கள்...
சகோ...இப்படத்தின் பின்னணி இசை மிகவும் சிறப்பாக இருந்தது.
இறுதிக்காட்சியில் ஒளிவெள்ளம் மிகுந்த பாதையில் கார்கள் பயணிப்பதை இயக்குனர் குறியீடாக காண்பித்துள்ளார்.
இருள் விலகி அவர்கள் வாழ்வு வளம் பெறப்போகிறது என்பதை விளக்கும் இக்காட்சி மிகவும் என்னை கவர்ந்தது.
தொழில் நுட்ப குறைகள் இருந்தாலும் நிறைவான படமே.
வணக்கம் சகோ நிரூபன்..
விமர்சனம் அருமையா இருக்கு.
அறிமுகப் பதிவர்க்கு வாழ்த்துக்கள்.
///// காலமும் நேரமும், என் பணியும், கல்வியும் தான் இதனைத் தீர்மானிக்கும்!////
இப்பத் தாம்பா தெளிவானேன்...
எல்லாரும் ஒருமாதிரி குழப்பி எடுத்திட்டீங்க சரி சரி
////எம் முகத்தில் அறைவது போன்ற உணர்வினை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர் சதாபிரணவன்////
ஆமாம் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் தாராளமாகவே அறைந்திருக்கிறார் இயக்குனர்.
நல்ல கருத்தோட்டம் உள்ள படமாகத் தெரிகிறதே.
வெளிநாடுகளில் சுதந்திரப் பண்பாட்டுச் சூழலில் வாழ்ந்தாலும், நம் மக்களின் பெண்கள் குறித்தான பார்வை மாறுவதில்லை என்பதைக் காட்டுகிறது அந்தக் காட்சி.
தங்களால் இயன்ற அளவு பதிவுலகத்திற்கு வந்து சென்றால் மகிழ்ச்சியாக இருக்கும் ...யோசித்து முடிவெடுங்கள் மாப்ஸ் ...
அடிக்கடி பதிவிட முடியாவிட்டாலும் வாரம் ஒரு பதிவாவது போடலாம்...
அருமையான குறும்படம், பகிர்வுக்கு நன்றி..
கலக்கல் படம் நல்ல மெசேஜ்
நல்ல படம், விளக்கமான விமர்சனம்
பதிவுலகை விட்டு நிரூபன் விலகுவதா? வன்மையாக மென்மையாக கண்டிக்கிறேன்
பதிவுக்கும் படம் பகிர்வுக்கும் நன்றி சகோ.
மீண்டும் வரும் வரை காத்திருப்போம் நிரூபன்.
வலி நிறைந்த விமர்சனமும், படமும்....!!!
விமர்சனம் நல்லாய் இருக்கு பாஸ் ..குறும்படம் இனி தான் பார்க்க வேண்டும்..நன்றி ....
வணக்கம் பாஸ்,
ஈழத்தில் வாழும் இளைஞர்களுக்குத் தம் பெண் பிள்ளைகளை மணம் முடித்துக் கொடுப்பதனை விட, வெளி நாட்டில் வாழும் மணமகனிடம் தம் மகளை ஒப்படைத்தால் சந்தோசமாகவும், வசதியாகவும், நிம்மதியாகவும் தம் மகள் இருப்பாள் எனும் அசைக்க முடியாத நம்பிக்கையில் தான் ஈழத்தில் உள்ள பெற்றோர்கள் பலர் வெளிநாட்டில் உள்ள வரன்களிடம் தம் பிள்ளைகளை அந்த வரனின் வயதினைப் பற்றிக் கூட கவலைப்படாது ஒப்படைக்கின்றார்கள்.
//
நிம்மதியாக இருந்து விட்டால் பரவாயில்லையே?
நல்ல பகிர்வு பாஸ்.ஒலிக்கொர்வை அருமை!
அறிமுகப்பதிவருக்கு வாழ்த்துக்கள்!
நல்ல குறும்படம் அருமையான விளக்கம்..
விமர்சனம் அருமையா போட்டிருகிங்க.
அப்புறம் அதென்ன விலகல்?
வாரம் ஒன்று வருமாம் நாற்றில்... முடியும் தானே சகோ?
அருமை நண்பரே ,அறிமுகப் படுத்தப் பட்டுள்ள பதிவருக்கும் வாழ்த்துக்கள்
நிரூ, பதிவுலகை விட்டு விலகுவது தொடர்பான என் அறிவிப்பினை வாபாஸ் வாங்கச் சொல்லியதோடு//இதெல்லாம் எப்ப நடந்தது??
புலம்பெயர்ந்த தமிழர்கள் படும்பாடு சொல்லி மாளாது. குறிப்பாக கனடாவில் நிறையப் பார்த்திருக்கிறேன். நல்ல பதிவு.
புலம் பெயர் தேசம் பற்றிய குறும்பட விமர்சனம் நல்லாய் இருக்கு...ரசித்தேன்..
அறிமுகப்பதிவருக்கு வாழ்த்துக்கள்...
வணக்கம் நிரூபன்
அருமையான விமர்சனப்பார்வை.. படமும் பார்த்தேன் பகிர்வுக்கு நன்றி
வணக்கம்நிரூபன்!நல்ல எங்கட (நாட்டு) படம் காட்டினீங்க! தேங்க்ஸ்!
நன்றி நிரூ குறும்படத்திற்கு.நேரம் கிடைக்கும் நேரங்களில் பதிவுலகத்தில் உங்கள் பதிவுகளைப் பதிந்துகொள்ளுங்கள்.காத்திருப்போம் !
தீரா இருள்.... இதுவரை கேள்விப்பட்டதில்லை நிரூபன்... பார்க்கிறேன்..
//ஈழத்தில் வாழும் இளைஞர்களுக்குத் தம் பெண் பிள்ளைகளை மணம் முடித்துக் கொடுப்பதனை விட, வெளி நாட்டில் வாழும் மணமகனிடம் தம் மகளை ஒப்படைத்தால்///
எங்கேயோ இடிக்குதே நிரூபன்:))).... இல்ல இல்ல நான் ஒண்ணுமே சொல்ல மாட்டேன்....
விலத்த நினைத்தீங்களோ பதிவுலகை விட்டு.. ப்ப்ப்ப்ப்ப்ப்ப?
நானும் அந்நேரம் உங்களோட பழக்கமில்லையாக்கும்... இனி எங்களையெல்லாம் விட்டுவிட்டு எப்பூடி விலத்துவீங்க?:)))).
இப்படியும் கலக்கறீங்களே! அருமை.
Post a Comment