ஒரு இயக்குனர் தன்னிடம் உள்ள குறைந்தளவான மூல வளங்களின் உதவியோடு மிகப் பிரமாண்டமான தயாரிப்பிற்கு நிகரான படத்தினைக் கொடுப்பாராயின் அந்த இயக்குனரின் சாதனைக்கும், அவரது கிரியேட்டி விட்டி மனப் பாங்கிற்கும் ஈடு இணை இல்லை என்று கூறலாம். இலங்கையின் தமிழ்த் திரைப்பட வளர்ச்சிப் பாதையில் வட கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் எப்போதும் தனித்துவமானவை.வரலாற்றுப் பக்கங்களில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. யுத்தப் பிரதேசத்தில் பாரியளவு மூல வளங்கள், தொழில் நுட்ப உதவிகள் இல்லாத சந்தர்ப்பத்திலும் புலிகளின் திரைப் படத் துறையினரால் தயாரிக்கப்பட்ட படங்கள் பெரிய பட்ஜெட் படங்களுக்கு நிகரான அந்தஸ்தினைப் பெற்று நிற்கின்றன.
22.10.2007 அன்று ஸ்ரீலங்கா இராணுவத்தின் அனுராதபுரம் வானூர்தி தளம் மீது விடுதலைப் புலிகளின் வான் படை மற்றும் தரைக் கரும்புலிகளால் நிகழ்த்தப்பட்ட அதிரடித் தாக்குதலினைப் பற்றிய உண்மைச் சம்பவத்தைப் பேசி நிற்பதே இந்த எல்லாளன் திரைப்படமாகும். 2008ம் ஆண்டின் இறுதிக் காலங்களில் ஈழ யுத்தத்தின் இறுதிக் கட்டத்திற்கு முன்பதாக இலங்கை இராணுவம் தனது முற்றுகையினை வன்னிப் பகுதிக்குள் அதிகமாக்கிய வேளையில் குறுகிய மூல வளங்களின் உதவியோடு மிகப் பிரமாண்டமான திரைப்படங்களுக்கு நிகரான முறையில் படமாக்கப்பட்டு திரைக்கு வந்திருக்கிறது இந்த எல்லாளன்.
சுருங்கக் கூறின் ஹாலிவூட்டின் யூனிவேர்சல் ஸ்டூடியோவின் தொழில் நுட்பத் திறனுக்கு நிகரான முறையில் ரியாலிட்டியாக இந்த திரைப்படத்தின் காட்சியமைப்புக்கள் அமைந்திருக்கிறது.
இலகுவில் ஏவுகணைத் தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்த முடியாது எனும் இறுமாப்போடு இலங்கை இராணுவத்தினரால் தமிழர் பிரதேசங்களில் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த "கிபிர்" விமானங்களை விமானத் தளத்தில் தரித்து நிற்கும் வேளையில் தாக்குதல் நடாத்தி தகர்த்தெறிந்து இலங்கை அரசாங்கத்திற்கு அச்சமூட்டும் வகையில்;
புலிகளின் 21 பேர் கொண்ட கரும்புலி அணியினராலும், புலிகளின் இரு விமானங்களின் உதவியோடும் அனுராதபுரம் முகாம் மீதான தாக்குதல் விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.வே. பிரபாகரன் அவர்களின் திட்டத்திற்கு அமைவாக 22.10.2007 அன்று நிகழ்த்தப்படுகின்றது.
இந்தத் தாக்குதலுக்கு முன்பதாக புலிகளின் வேவுப் பிரிவினர் எப்படி அனுராதபுரம் முகாமினுள் ஊடுருவித் தாக்குதலுக்கான புலனாய்வுத் தகவல்களைச் சேகரித்தார்கள், புலிகளின் அணியினர் எவ்வாறு இத் தாக்குதல்களுக்குத் தம்மைத் தயார்படுத்தினார்கள், சாதாரண மனிதர்கள் போல வாழ்ந்த தமிழர்களின் மனதில் எவ்வாறு கரும்புலியாக உருவாக வேண்டும் எனும் ஆவல் எழுகின்றது? எனப் பல தரப்பட்ட விடயங்களை வெறுமனே ஆக்சன் படமாக அல்லாது நவரசங்கள் கலந்த ஒரு ஆக்சன் + மசாலா கமர்சியல் ஹிட்டாக சொல்லி நிற்பது தான் இந்த எல்லாளனின் திரைப்படத்தின் உள்ளடக்கமாகும்.
தமிழர்கள் வாழும் பகுதிகளில் அடிக்கடி இடம் பெறும் விமானக் குண்டு வீச்சுக்கள் மூலம் கொல்லப்படும் அப்பாவிப் பொது மக்களின் அவல நிலை தான் இந்த தாக்குதலுக்கான மூல காரணி என்பதனை நக்கலும் நையாண்டியும் கலந்த எள்ளல் தொனியில் அழகிய காட்சியமைப்பினூடாக காட்டி நிற்கிறார் இயக்குனர் தமிழன் அவர்கள். இதற்கு எடுத்துக் காட்டாக செஞ்சோலைத் தாக்குதல் இடம் பெற்ற மறு நாள் கரும்புலித் தாக்குதலோடு தொடர்புடைய கரும்புலி வீரனொருவர் தான் கரும்புலி என்று வெளிப்படுத்தாது பொது மக்களோடு சென்று பத்திரிகை வாசிக்கும் சந்தர்ப்பத்தில் புலிகளின் குரல் வானொலியின் நாளிதழ் நாளிப் பத்திரிகைச் செய்தியினைச் செவிமடுத்த பெரியவர்கள் பின் வருமாறு எள்ளி நகைப்பார்கள்.
"சமாதானம் சமாதானம் என்று உலகம் முழுக்கத் திரிஞ்சாங்கள். உந்தக் கிபிரை வீழ்த்த ஒரு வழியும் அறியாமல் நிற்கிறாங்கள்". இவ்வாறு பேசுவது கரும்புலியின் மனதில் உள்ள உணர்ச்சியிற்குத் தூண்டு கோலாக அமைந்து கொள்கிறது. இதே போல ஒவ்வோர் இடங்களிலும் மக்கள் கிபிர் தாக்குதல்களால் பாதிக்கப்படும் போது, "கிபிரைச் சுட்டு வீழ்த்த புலிகளால் முடியாதா? எனக் கேள்வி கேட்டு புலிகள் மனதினைச் சோதிக்கும் நிஜமான சம்பவங்கள் தான் இந்தத் தாக்குதலுக்குத் தூண்டு கோலாக விளங்கியிருக்கிறது. ஒரு புறத்தில் தாக்குதலுக்கான தயார்படுத்தல்கள், பயிற்சிகள் என விறு விறுப்பாகச் செயற்படும் புலிகளின் கரும்புலி அணியினரின் மனிதாபிமானம் நிறைந்த செயற்பாடுகளைக் காட்சிப்படுத்திய இயக்குனர் இந்தக் கறுப்பு மனிதர்களுக்குள் நெருப்பு மாத்திரம் அல்ல! அவர் தம் உளத்தினுள் ஈரமும் நிறைந்திருக்கிறது என்பதனையும் அழகுறப் படமாக்கியிருக்கிறார்கள்.
இதற்கு எடுத்துக்காட்டாக தாக்குதல் நடாத்தி தான் இன்னும் சில நாட்களுக்குள் வீரச்சாவடைந்து விடுவேன் என்பதற்கு அப்பால், தாம் வாழும் காலம் வரை இந்த உலகில் உயிர்களிடத்தில் அன்பாக இருக்க வேண்டும் என்பதனை "நாயிற்கு கட்டிலை கொடுத்து விட்டு, தாம் வெறும் நிலத்தில் தூங்கும் போராளியின் செயற்பாட்டின் ஊடாகவும், எலிக் குஞ்சுகளைத் தனது மிலிட்டரித் தொப்பியினுள் துயில் கொள்ள வைத்து விட்டு பயிற்சி வழங்கும் மாஸ்டரிடம் தண்டனை பெறும் போராளியின் செயற்பாட்டின் ஊடாகவும் அழகுறப் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் அவர்கள். ஒளிப்பதிவினைப் பொறுத்தவரை மிகத் தரமான அதே வேளை துல்லியமான காட்சியமைப்புக்களை சந்தோஷ் அவர்கள் தன் கமெராக் கை வண்ணம் மூலம் காண்பித்திருக்கிறார்.
இசை பற்றி நான் அதிகம் சொல்லுவதை விட நீங்கள் திரையில் பார்க்கும் போது உணர்ந்து கொள்வீர்கள். பின்னணி இசையில் நிரு அவர்களும், பாடல் இசையில் தேவேந்திரனும் பின்னி எடுத்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க டிஜிட்டல் தொழில் நுட்ப இசையமைப்பும், கலவை (Sound Mixing) ஒலிகளும் பயன்படுத்தப்பட்டு இப் படத்திற்கு உயிரோட்டமாக இசையும் தன் பங்களிப்பினைச் செய்திருக்கிறது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் கணீரெனும் கம்பீரக் குரலில் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் கவி வரிகளில் "தாயக மண்ணே... தாயக மண்ணே....." எனும் பாடல் உங்கள் அனைவரின் உணர்வுகளையும் ஒரு முறை உசுப்பி விடும் என்பதில் ஐயமில்லை.
நீண்ட காலமாக ஈழத்து காதலை படங்களில் கண்டு களிக்க முடியலையே எனும் குறை உள்ளோருக்கு எல்லாளன் படத்தில் வரும் மச்சான் மச்சாள் சேஸிங் காட்சிகள் விருந்தளிக்கும். ஈழத்து மண் வாசனை கலந்த நகைச்சுவைக் காட்சிகளில் கலக்கியிருக்கிறார்கள் போராளிகள். உண்மைச் சம்பவத்தை எம் மனக் கண் முன்னே கொண்டு வரும் போது இருக்க வேண்டிய உயிர்ப்பூட்டல், யதார்த்த உணர்வுகளை வெளிப்படுத்தும் பாங்கு, இயல்புத் தமிழ் உச்சரிப்பு ஆகிய அம்சங்கள் இத் திரைப்படத்திற்கு மெரு கூட்டியிருக்கிறது.
தமிழ் திரைக் கண் திரைப்பட பிரிவின் வெளியீட்டில், 2009ம் ஆண்டு வன்னிப் பகுதியிலிருந்து உலக நாடுகளில் வெளியீடு செய்வதற்காக அனுப்பி வைக்கபட்டிருந்த இந்தத் திரைப்படம் தான் விடுதலைப் புலிகள் அமைப்பினரால் இறுதியாக வன்னிப் பகுதியில் தயாரிக்கப்பட்ட முழு நீளத் திரைப்படமாகும். எல்லாளன் நடவடிக்கையின் போது பயன்படுத்தப்பட்ட அனைத்து வகையான ஆயுதங்களும் இப் படத்தில் பயன்படுத்தப்பட்டு முற்று முழுதாக ஒரு ரியாலிட்டித் திரைப்படமாக இந்தத் திரைப்படத்தினை வெளியிட்டிருக்கிறார்கள் தமிழ் திரைக் கண் வெளியீட்டுப் பிரிவினர்.
இந்தத் திரைப்படத்தினைப் படமாக்கும் போது நான்கு பேர் வீரச்சாவைத் தழுவியிருக்கிறார்கள்.
விடுதலைப் புலிகளின் போரியல் திட்டமிடல்கள், புலிகளின் தாக்குதல் மதி நுட்பங்கள் பற்றி அறியாதோர் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம் இது!
எல்லாளன்: தமிழர்கள் அனைவரும் கண்டு களிக்க வேண்டிய அதிரடிக் காவியம்!
தற் கொடைப் போராளிகள்: தம்மைத் தம் இனத்திற்கா கொடையாக கொடுப்போர்.
பிற் சேர்க்கை: விடுதலைப் புலிகளால் 2009ம் ஆண்டு மாசி மாதம் ஆனந்தபுரம் பகுதியில் இலங்கை அரசிற்குச் சொந்தமான இரண்டு கிபிர் விமானங்கள் ஏவுகணைத் தாக்குதல் மூலம் வீழ்த்தப்பட்டன.
பிற் சேர்க்கை: விடுதலைப் புலிகளால் 2009ம் ஆண்டு மாசி மாதம் ஆனந்தபுரம் பகுதியில் இலங்கை அரசிற்குச் சொந்தமான இரண்டு கிபிர் விமானங்கள் ஏவுகணைத் தாக்குதல் மூலம் வீழ்த்தப்பட்டன.
******************************************************************************************************************
இன்றைய பதிவர் அறிமுகம் பகுதியினூடாக நாம் ஒரு வீட்டிற்குச் செல்லவிருக்கின்றோம். அட என்னங்க நீங்க. "வீடு" எனும் பெயர் கொண்ட வலைப் பதிவிற்குச் செல்வோமா?
அண்மையில் பதிவுலகினுள் நுழைந்த பதிவர். வீடு எனும் வலைப் பதிவில் சுவையான பதிவுகளை எழுதி வருகின்றார்.
வீடு வலைப் பதிவிற்குச் செல்ல:
******************************************************************************************************************
|
74 Comments:
mudhal முதல் வாசிப்பாளன்
@சி.பி.செந்தில்குமார்
mudhal முதல் வாசிப்பாளன்//
என்ன பாஸ், இன்னும் தூங்கலையா..
இன்னைக்கு அதிசயமாக இருக்கே..நீங்க இப்போ இந்த டைம்மில;-))
நிரூபன் அசத்திட்டிங்க..
நீண்ட நாட்களுக்கு முன்னர் சுடர் ஒளி பத்திரிகையில் இந்த படம் பற்றி ஒளிப்பதிவாளர் சந்தோஷின் பேட்டியை பார்த்ததும் இந்த படத்தை எப்படியாவது பார்த்திடனும் என்று ஓடித்திரிந்து மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் பார்க்க முடிந்தது.
உண்மையிலே பிரமிக்க வைத்த படம். அதுவும் இறுதி நெருக்கடியான சூழலில் எடுக்கப்பட்டிருந்தது. படத்தில் நடித்த பலர் நடித்துக்கொண்டிருக்கும்போதே வீரச்சாவை தழுவியிருந்தனர். ஆரம்பத்தில் கதாநாயகனாக நடித்த போராளிகூட வீரச்சாவை தழுவியிருந்தார்.
இந்த அமைப்பில் வந்த ஆங்கில திரைப்படங்கள் full metal jacket, Saving prirate ryan போன்றன கூட இராணுவ பயிற்சி, தாக்குதல்களை மையப்படுத்தி வந்தனவே தவிர ஓர் தாக்குதல் நடவடிக்கையையும் அதற்கான திட்டமிடல்களையும் மையப்படுத்தி வரவில்லை. அந்த வகையில் எல்லாளன் தாக்குதல், திட்டமிடல் மாத்திரமல்லாது அதனூடே போர் சூழலில் ஒன்றித்துப்போன மக்களின் வாழ்வியலையும் அழகாக எடுத்துக்காட்டியிருக்கிறது
@மதுரன்

//
ஆமாம் மச்சி,.
அவர்களுக்கு நிகர் அவர்கள் தான்.
அதுவும் கடலோரக் காற்று, ஆணிவேர் இவற்றினை விடமும்
மிகத் தரமான ஒளியமைப்பும், காட்சியமைப்பும் இப் படத்திற்கு அணி சேர்த்திருக்கிறது..
ஏதோ என்னால முடிஞ்சதை எழுதியிருக்கேன்.
@மதுரன்
இந்த அமைப்பில் வந்த ஆங்கில திரைப்படங்கள் full metal jacket, Saving prirate ryan போன்றன கூட இராணுவ பயிற்சி, தாக்குதல்களை மையப்படுத்தி வந்தனவே தவிர ஓர் தாக்குதல் நடவடிக்கையையும் அதற்கான திட்டமிடல்களையும் மையப்படுத்தி வரவில்லை. அந்த வகையில் எல்லாளன் தாக்குதல், திட்டமிடல் மாத்திரமல்லாது அதனூடே போர் சூழலில் ஒன்றித்துப்போன மக்களின் வாழ்வியலையும் அழகாக எடுத்துக்காட்டியிருக்கிறது
//
ஆமாம்...நிச்சயமாக உண்மையான வரிகள். ஆங்கிலத் திரைப்படங்களிற்கு நிகரனா தொழில் நுட்பத்தோடும், திட்டமிடலோடும் வந்துள்ள படம்...வரலாற்றில் நிச்சயம் இடம் பிடிக்கும் என நினைக்கிறேன்.
நிரூபன் said...
@சி.பி.செந்தில்குமார்
mudhal முதல் வாசிப்பாளன்//
என்ன பாஸ், இன்னும் தூங்கலையா..
இன்னைக்கு அதிசயமாக இருக்கே..நீங்க இப்போ இந்த டைம்மில;-))//
ஹா ஹா ஹா ஹா அந்த மூதேவிக்கு இன்னைக்கு பிறந்த நாள்ய்யா அதான் தூங்காமல் கில்மா படம் பார்த்துட்டு இருக்கான் ராஸ்கல்....
இந்த படத்தில் ஆரம்பத்தில் நடித்தவர்கள் எறிகணை தாக்குதலில் இறந்துவிட்டார்கள் ( புலிகளின் படப்பிடிப்பு சம்மந்தமான பிரபலமானவர் உட்ப்பட ) அதன் பின் வேறு புதிய போராளிகளை கொண்டு மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதிலே பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் நிஜமான - தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படுபவை என்று இயக்குனர் சந்தோஷ் குறிப்பிட்டுருந்தார்.. இந்த படம் வெளியானபோது அதில் நடித்த பெரும்பாலானோர் வீரச்சாவடைந்துவிட்டார்கள் ...சிலர் இருக்கிறார்கள்.
அழகாக விமர்சனம் செய்துள்ளீர்கள்
எப்போதோ எங்கேயோ வெளிவர வேண்டிய படம்...
ஒலிச் சேர்ப்புப் பிரச்சனையால் காலம் கடந்து வர வேண்டியதாயிற்று...
பகிர்வுக்கு நன்றி நிரு..
நல்ல விமர்சனம்,படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது....
உடனே படம் பார்க்க வேண்டும்போல் தோன்றுகிறது.அவ்வளவு நேரம் இப்போது முடியாது.
நிரூபன்,நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.....
தயாரிப்பாளர் நிரூபன்... வாழ்க... சும்மா ஒரு ஆசையில் சொல்லிப்பார்த்தேன்:)))
இரவு வணக்கம்,பொன் சுவார்! நாங்கள் பார்த்து மகிழ்ந்ததை விடவும் அருமையாக விமர்சித்திருக்கிறீர்கள் நிரூபன்!பாராட்டுக்கள்.
தெரியாமல் போய்விட்டதே....
நிச்சயம் பார்க்க வேண்டும்....
தேடித்தரும் உங்களை பாராட்டாமல் இருக்க முடியாது நிரூபன்....
பாராட்டுக்கள்...தம்பி...
இரவு வணக்கம் நிரூ..மீண்டும் ஒரு நல்ல படத்தினை அறிமுகம் செய்துள்ளீர் போல..
அனுராதபுரம் தாக்குதல் செய்தியாகப் படிக்கும்போதே, சிலிர்க்க வைத்தது. அதையே காட்சியாகப் பார்ப்பதென்றால், நிச்சயம் அதுவொரு நல்ல அனுபவமாகத் தான் இருக்கும்..
//பின்னணி இசையில் நிரு அவர்களும், பாடல் இசையில் தேவேந்திரனும் பின்னி எடுத்திருக்கிறார்கள்.//
நிரூ?
எல்லா துறையிலும் எவருக்கு நிகராகவும் எங்களது வளங்களை வைத்தே தன்னிறைவு பெற முடியும் என்று நிரூபித்த படம்.
நல்ல விமர்சனம்...பார்த்துவிட்டு சொல்கிறேன்...
குறைந்த வளங்களுடன்
எதிரியை அதிரவைத்த
எல்லைகளைத் தாண்டிய
எம் வீரர்களின்
வீர சாகாசம்
பாரிஸ் திரையரங்கில் பார்த்த படத்தினை மீள்வும் பார்க்கத் தூண்டுகின்றது உங்கள் விமசனம்.
வணக்கம் நிரூபன்
அருமையான உங்கள் விமர்சனத்தை பார்த்துவிட்டு படத்தை பாத்திருக்கலாம்போல் இருக்கின்றது..
மதுரன் said...
இந்த படத்தை எப்படியாவது பார்த்திடனும் என்று ஓடித்திரிந்து மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் பார்க்க முடிந்தது.//
நீங்க ippavum யாழ்பாணம் தானே!
இந்தத் திரைப்படத்தினைப் படமாக்கும் போது நான்கு பேர் வீரச்சாவைத் தழுவியிருக்கிறார்கள். //
போராளிகள் திரைக்காகவும் தன்னை அர்பணித்திருக்கிறார்கள்
கண்டிப்பாக எல்லாளன் படத்தை காண வேண்டும்.... நண்பா.. பகிர்வுக்கு நன்றி
வீடு வலைப்பூவிற்கு வாழ்த்துக்கள்...
நோ கமண்ட்ஸ் ஓன்லி ஓட்டு
விமர்சணத்தை விறுவிறுப்பா சொல்லிருக்கீங்க பாஸ்
எல்லத்தாக்குதல்களும் ஒரு திரைப்படத்திற்கோ கதைக்கோ கருவாக அமைந்து விடுகிறது
@MANO நாஞ்சில் மனோ
ஹா ஹா ஹா ஹா அந்த மூதேவிக்கு இன்னைக்கு பிறந்த நாள்ய்யா அதான் தூங்காமல் கில்மா படம் பார்த்துட்டு இருக்கான் ராஸ்கல்....
//
அடடா...இதுவா மேட்டரு,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாஸ்.
@மைந்தன் சிவா
:)
//
நன்றி பாஸ்.
@கந்தசாமி.
இந்த படத்தில் ஆரம்பத்தில் நடித்தவர்கள் எறிகணை தாக்குதலில் இறந்துவிட்டார்கள் ( புலிகளின் படப்பிடிப்பு சம்மந்தமான பிரபலமானவர் உட்ப்பட ) அதன் பின் வேறு புதிய போராளிகளை கொண்டு மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதிலே பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் நிஜமான - தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்படுபவை என்று இயக்குனர் சந்தோஷ் குறிப்பிட்டுருந்தார்.. இந்த படம் வெளியானபோது அதில் நடித்த பெரும்பாலானோர் வீரச்சாவடைந்துவிட்டார்கள் ...சிலர் இருக்கிறார்கள்.
//
ஆமாய்யா...
இதில் நான்கு பேர் வீரச்சாவடைந்தார்கள் என்பதனைச் சொல்லியிருக்கேன்.
@கந்தசாமி.
அழகாக விமர்சனம் செய்துள்ளீர்கள்
//
நன்றி பாஸ்..
@♔ம.தி.சுதா♔
எப்போதோ எங்கேயோ வெளிவர வேண்டிய படம்...
ஒலிச் சேர்ப்புப் பிரச்சனையால் காலம் கடந்து வர வேண்டியதாயிற்று...
பகிர்வுக்கு நன்றி நிரு..
//
ஆமா பாஸ்...
நிரு தான் இதற்கு இசையமைத்திருந்தார்.
அவர் ஜேர்மனியில் தானே இருக்கார்.
அதனால் தான் என்று நினைக்கிறேன்.
@பன்னிக்குட்டி ராம்சாமி
நல்ல விமர்சனம்,படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது....
//
அப்படீன்னா பார்த்திடுங்க அண்ணே.
@shanmugavel
உடனே படம் பார்க்க வேண்டும்போல் தோன்றுகிறது.அவ்வளவு நேரம் இப்போது முடியாது.
//
பாதிப் படத்தை இப்ப பாருங்க.
மீதிப் படத்தை அப்புறமாப் பாருங்க அண்ணே.
@athira
நிரூபன்,நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.....
தயாரிப்பாளர் நிரூபன்... வாழ்க... சும்மா ஒரு ஆசையில் சொல்லிப்பார்த்தேன்:)))
//
ஹே...ஹே..
ஏன் நான் ஊரில நல்லா இருப்பது பிடிக்கலையே.............
வலிக்குது;-))))
@Yoga.S.FR
இரவு வணக்கம்,பொன் சுவார்! நாங்கள் பார்த்து மகிழ்ந்ததை விடவும் அருமையாக விமர்சித்திருக்கிறீர்கள் நிரூபன்!பாராட்டுக்கள்.
//
நன்றி ஐயா.
@F.NIHAZA
தெரியாமல் போய்விட்டதே....
நிச்சயம் பார்க்க வேண்டும்....
தேடித்தரும் உங்களை பாராட்டாமல் இருக்க முடியாது நிரூபன்....
பாராட்டுக்கள்...தம்பி...
//
நன்றி அக்கா.
நேரம் இருந்தா படம் பார்த்திட்டு சொல்லுங்க.
எப்பூடி படம் என்று?
@செங்கோவி
இரவு வணக்கம் நிரூ..மீண்டும் ஒரு நல்ல படத்தினை அறிமுகம் செய்துள்ளீர் போல..
//
ஆமா பாஸ்...
//
அனுராதபுரம் தாக்குதல் செய்தியாகப் படிக்கும்போதே, சிலிர்க்க வைத்தது. அதையே காட்சியாகப் பார்ப்பதென்றால், நிச்சயம் அதுவொரு நல்ல அனுபவமாகத் தான் இருக்கும்..
//
பாருங்க பாஸ்..படத்தைப் பார்த்த பின்னர் சொல்லுங்க.
நண்பா!
படம் பார்க்க முடியவில்லை.
பள்ளிக்குப்போன பிள்ளைகள் பதுங்கு குழிக்குள் தாவிக்குதிக்கும் அவலத்தை காண சகிக்க முடியவில்லை.
தொடர்ந்து வந்த மருத்துவமனை காட்சி ஒலங்கள்...
அது தான் நான் இறுதியாக பார்த்த காட்சி.
@செங்கோவி
//பின்னணி இசையில் நிரு அவர்களும், பாடல் இசையில் தேவேந்திரனும் பின்னி எடுத்திருக்கிறார்கள்.//
நிரூ?//
அது நான் இல்ல பாஸ்..
@M.Shanmugan
எல்லா துறையிலும் எவருக்கு நிகராகவும் எங்களது வளங்களை வைத்தே தன்னிறைவு பெற முடியும் என்று நிரூபித்த படம்.
//
ஆமாம் பாஸ்...
நன்றி.
@ரெவெரி
நல்ல விமர்சனம்...பார்த்துவிட்டு சொல்கிறேன்...
//
இன்னும் படம் பார்த்து முடியலையா பாஸ்...
உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
@♥ !முனைங்♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ !
குறைந்த வளங்களுடன்
எதிரியை அதிரவைத்த
எல்லைகளைத் தாண்டிய
எம் வீரர்களின்
வீர சாகாசம்//
நன்றி பாஸ்.
@தனிமரம்
பாரிஸ் திரையரங்கில் பார்த்த படத்தினை மீள்வும் பார்க்கத் தூண்டுகின்றது உங்கள் விமசனம்.
//
அப்போ பார்த்திட்டாப் போச்சு..
@காட்டான்
வணக்கம் நிரூபன்
அருமையான உங்கள் விமர்சனத்தை பார்த்துவிட்டு படத்தை பாத்திருக்கலாம்போல் இருக்கின்றது..//
அப்படீன்னா இன்னோர் தடவை படத்தைப் பார்த்திடுங்க பாஸ்..
ஹே...ஹே..
@KANA VARO
//
மதுரன் said...
இந்த படத்தை எப்படியாவது பார்த்திடனும் என்று ஓடித்திரிந்து மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் பார்க்க முடிந்தது.//
நீங்க ippavum யாழ்பாணம் தானே!
//
ஏனய்யா இந்த கொல வெறி...
@மாய உலகம்
போராளிகள் திரைக்காகவும் தன்னை அர்பணித்திருக்கிறார்கள்
//
ஆமாம் பாஸ்.
//கண்டிப்பாக எல்லாளன் படத்தை காண வேண்டும்.... நண்பா.. பகிர்வுக்கு நன்றி
//
நேரம் இருக்கும் போது பாருங்க பாஸ்.
@K.s.s.Rajh
நோ கமண்ட்ஸ் ஓன்லி ஓட்டு
//
அப்படீன்னா நீங்க இங்கே வந்திருக்கிறீங்க என்று தானே அர்த்தம்...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@வைரை சதிஷ்
விமர்சணத்தை விறுவிறுப்பா சொல்லிருக்கீங்க பாஸ்
//
ஆமா பாஸ்..படமும் விறு விறுப்பானது தான்.
@நாய்க்குட்டி மனசு
எல்லத்தாக்குதல்களும் ஒரு திரைப்படத்திற்கோ கதைக்கோ கருவாக அமைந்து விடுகிறது
//
ஆமாம் சகோதரி.
நன்றி.
@உலக சினிமா ரசிகன்
நண்பா!
படம் பார்க்க முடியவில்லை.
பள்ளிக்குப்போன பிள்ளைகள் பதுங்கு குழிக்குள் தாவிக்குதிக்கும் அவலத்தை காண சகிக்க முடியவில்லை.
தொடர்ந்து வந்த மருத்துவமனை காட்சி ஒலங்கள்...
அது தான் நான் இறுதியாக பார்த்த காட்சி.
//
அண்ணே, நீங்களே இப்படிச் சொல்லிட்டா..
கண்டிப்பாகப் பாருங்கண்ணே..
மருத்துவ மனைக் காட்சிகளுக்குப் பின்னர் தான் விறு விறுப்பான தாக்குதல் காட்சிகள் தொடங்குகிறது.
வணக்கம் நிரூ!
அருமையான ஒரு படத்தைப் பற்றி விமர்சனம் எழுதியிருக்கிறாய்! வாழ்த்துக்கள்! இந்தப் படம் எங்களுக்கு பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது!
வன்னியில் இருந்து வெளிக்கொணரப்பட்ட இறுதித் திரைப்படமாகும்!
இத்திரைப்படத்தை உத்தியோகபூர்வமாக வெளியிட ஆயத்தங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, சுவிஸ் நாட்டிலிருந்து களவாக இணையத்தில் ஏற்றிய கயவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்!
அவர்களுக்கு இந்த நேரத்தில் கண்டணங்கள்!
@Powder Star - Dr. ஐடியாமணி

ஆமா பாஸ்..
இதனையும் பதிவில் சொல்லியிருக்கேன்.
@Powder Star - Dr. ஐடியாமணி
இத்திரைப்படத்தை உத்தியோகபூர்வமாக வெளியிட ஆயத்தங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, சுவிஸ் நாட்டிலிருந்து களவாக இணையத்தில் ஏற்றிய கயவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்!
அவர்களுக்கு இந்த நேரத்தில் கண்டணங்கள்!
//
அடடா..இப்படியும் சிலர் இருக்கிறார்களா..
நானும் என் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பளைப்பகுதியில் இடம்பெற்ற ஷெல் தாக்குதலில் லெப்.கேணல் தவா அண்ணா உள்ளிட்ட மூன்று போராளிகள் வீரச்சாவடைந்தனர்!
அத்துடன் முதலில் படத்தின் கதாநாயகனாக நடித்த மேஜர் புகழ்மாறனும் வீரச்சாவடைந்திருந்தார்!

இத்திரைப்படத்தில் வரும், செஞ்சோலை விமானத்தாக்குதல் காட்சியும், இடிந்த கட்டிடங்களும் கிளிநொச்சியில் எடுக்கப்பட்டவை!
27.11.2007 அன்று தாக்குதலுக்கு உள்ளான புலிகளின்குரல் வானொலியின் தலைமையகத்தின் இடிந்த சிதைவுகளே அவை!
ஒருபக்கம் மிகவும் உக்கிரமாக சண்டை நடைபெற்றுக்கொண்டிருக்க, படப்பிடிப்பும் தீவிரமாக நடந்தது, இதில் இந்தியக் கலைஞர்களும் துணிச்சலுடன் பங்கு பற்றியிருந்தமை வியப்பானது!
அனுராதபுரம் விமானத்தளம் செட்டு போட்டு எடுக்கப்பட்டது! ஒரு திரைப்படத்துக்காக இவ்வளவு பெரிய செட்டு போடப்பட்டது, வன்னியில் அதுவே முதல் முறையாக இருந்தது! வட்டக்கச்சிப் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் செட்டு போடப்பட்டிருந்தது!
நல்ல விமர்சனம் தல, பார்க்கக் கிடைக்குமான்னு தெரியல கிடைச்சா, கண்டிப்பா பார்க்கணும்.
தலைப்பு விளக்கம் அருமை. போல்ட் பண்ணியிருக்கலாம்.
நல்ல படமா இருக்கும் போல? உங்க விமர்சனம் சொல்லுதே...
பகிர்வுக்கு நன்றி, நேரம் கிடைக்கும் பொழுது அவசியம் பார்க்கிறேன்
ஒரு நல்ல படத்தினை எங்களிடம் கொண்டு வந்து சேர்த்தமைக்கு நன்றி நிரூ..
@Dr. Butti Paul
நல்ல விமர்சனம் தல, பார்க்கக் கிடைக்குமான்னு தெரியல கிடைச்சா, கண்டிப்பா பார்க்கணும்.
//
சகோ, வீடியோ லிங் கொடுத்திருக்கேன்.
ஓய்வாக இருக்கும் போது பாருங்க.
அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. சிறப்பாக இருந்தது விமர்சனம்.
செம விமர்சனம் பாஸ்... யூட்யூப் டவுன்லோட் பண்ணி வைப்போம், தீபாவளிக்கு பார்ப்போம்..
அன்னக்கி கூட போட்டிருந்தீங்களா, அவசருத்துல கவனிக்காம விட்டுட்டேன் போலிருக்கே...
மெய்சிலிர்ப்பும் பெருமூச்சும்:(
படம் பார்த்தேன்...பிரமித்துப் போய்விட்டேன்...
Post a Comment