மனிதனிடத்தே காதல் எப்போது வந்து தொற்றிக் கொள்ளும் என்று யாராலும் இலகுவில் அறிந்து கொள்ள முடியாது. மனித இனத்தில் உடல் உள ரீதியான வளர்ச்சி ஏற்படும் போது வந்து கொள்ளும் காதலுக்கும், பருவமடைய முன்னர் வரும் காதலுக்கும் இடையில் பல வகையான வேறுபாடுகள் உண்டு. எம் தமிழ் சமூகத்தின் வரலாற்றுப் பாதையில் தெய்வீக காதல் முதல் நாய் காதல் வரை மனிதன் தன்னால் எங்கெல்லாம் அன்பைச் செலுத்த முடியுமோ அங்கெல்லாம் தன் அன்பைச் செலுத்தி மகிழ்ந்திருக்கிறான். அறியாத வயதில் தாம் ஏன் காதல் கொள்கிறோம் என்பதைப் பற்றிய தெளிவேதுமின்றி எமக்குள் தோன்றும் காதல் கை கூடி வந்தாலும், அந்தக் காதல் தருகின்ற விளைவு என்னவோ சமூகத்திற்கு ஒவ்வாத ஒரு தகாத செயலாகவே இருக்கின்றது.
சின்னப் பொண்ணிற்கு தன்னில் உள்ள குழந்தைத் தனம் பற்றிய நடவடிக்கைகள் நீங்கி, தானும் ஒரு பெரிய மனுசி எனும் நினைப்பு வரப் பெற்றவளாக வயதான ஆண் மகன் மீது காதல் கொள்ளும் சம்பவங்களை நாம் அறியாதவர்கள் அல்ல. இதே போலப் பையன்களும், தம்மைச் சூழ்ந்திருக்கும் பெரிய பெண்கள் மேல் காதல் வசப்பட்ட சம்பவங்களை நாம் கடந்து வந்திருப்போம் அல்லவா?இது பொருந்தாக் காதல் எனச் சொல்லப்பட்டாலும், அந்த வயதில் வாழும் டீன் ஏஜ் பசங்களின் உணர்வின் அடிப்படையில் அவர்களுக்கு தாம் போகும் பாதை சரி எனும் எண்ணத்தினை கொடுப்பதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றார்கள்.
ஒரு கல்லூரிப் பொண், தன்னுடைய 12ம் வகுப்புக் காலத்தில் தன்னை விட வயதில் உயர்ந்த ஆடவனைக் கண்ணுற்று அவன் மீது காதல் கொள்ளும் போது ஏற்படும் சுட்டித் தனமான உரையாடல்களையும், குழந்தைத் தனம் நிரம்பிய குறும்புச் செயல்களையும் பேசி நிற்கும் குறும் படம் தான் மாலை நேரம். DADO Creations இன் உருவாக்கத்தில், Lights N' Seasons Entertainment நிறுவனத்தின் வெளியிட்டீல் வந்திருக்கும் குறும்படம் தான் இந்த மாலை நேரம். நிஷாலா கிருஷ்ணா, சரண்யா ராஜேந்திரன் நடித்திருக்கும் இந்த குறும்படத்தை, நிஷாலா கிருஷ்ணா, துவாரகாந்த், அரவிந்ராஜ் ஆகியோர் இணைந்து இயக்கியிருக்கிறார்கள்.
கொஞ்சமும் சலிப்பு ஏற்படா வண்ணம், ஒப்பனையற்ற இயல்பான யதார்த்தம் நிறைந்த நடிப்பின் மூலமாகவும், இயல்பான சினிமாத் தன்மையற்ற உரையாடல்கள் ஊடாகவும் இப் படத்திற்கு தம் நடிப்பால் பலம் சேர்த்திருக்கிறார்கள் நிஷாலா கிருஷ்ணா மற்றும் சரண்ஜா ராஜேந்திரன். ஒளிப்பதிவில் அன்பு ஸ்டாலின் அவர்கள் அசத்தியிருக்கிறார். சினிமாகிராபியில் வழமையான பாணியில் வரும் குறும்படங்களை விட, மிகத் துல்லியமான குவாலிட்டி நிறைந்த காட்சிப்படுத்தல்களை இப் படத்திற்கு வழங்கியிருக்கிறார் அன்பு ஸ்டாலின் அவர்கள்.
B.வெங்கடேஷ் அவர்களின் எடிற்றிங் காட்சியமைப்பிற்குப் பலம் சேர்த்திருக்கிறது. ஜாவ்ட் அவர்களின் மியூசிக் அருமையாகவும், வேண்டிய இடங்களில் மென்மையாகவும் மனதினை வருடிச் செல்கின்றது. இயல்பான வசன அமைப்பிலும், வேண்டிய இடங்களில் சுட்டிப் பொண்ணின் குறும்புச் செய்கைகளை வெளிப்படுத்திக் காட்டும் நோக்கிலும் துவாரகாந்த் அவர்கள் தன் கதை வசனத்தால் அழுத்தம் கொடுத்திருக்கிறார். உயர வேறுபாடு, வயசு வித்தியாசம் ஆகிய இரண்டு அம்சங்களும் தன் காதலுக்கு தடையாக நிற்கிறதே எனும் ஆதங்கத்தினை குழந்தைத் தனத்தோடு வெளிப்படுத்தும் நாயகியின் செய்கைகள் பின் வருமாறு வந்து கொள்ளும்,
"ஹை ஹீல்ஸ் போட்டிருக்கேன். ஹைட்டாகிடுவேன். தினமும் பச்சை முட்டை குடிக்கிறேன். ஸ்கிப்பிங், ஜம்பிங், ஜாக்கிங் பண்றேன். கண்டிப்பா ஹைட்டாகிடுவேன்"
இவ்வாறு நாயகி சரண்யா பேசும் போது, சரண்யாவைப் பார்த்து "வயசுக்கு வந்திட்டியா?" என ஹீரோ கிருஷ்ணா கேட்பதுவும், அதன் பின்னர் அவளிடமிருந்து "ஆம் 8th (எயித்து) படிக்கும் போது வயசுக்கு வந்திட்டேனே" அவள் சொல்லிக் கொள்ளுவதும்,
"அப்படியென்றால் நாளைக்கு ஸ்கூல் போகாம தனியா என் கூட வாரியா?" என ஹீரோ கேட்கையில் நாம் எல்லோரும் கிளைமேக்ஸில் என்ன நடக்கும்? அட அது தானா நடக்கும் என ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்க, இயக்குனரோ, கிளைமேக்ஸில் எம் எதிர்பார்ப்பிற்கு மாறாக வித்தியாசமான ஒரு முடிவினைத் தந்திருக்கிறார். அது என்ன என்பதனை படத்தை முழுமையாகப் பார்க்கும் போது நீங்கள் தெரிந்து கொள்வீங்கள்.
எப்போதுமே சுட்டித் தனமான பொண்ணு, வயசாலும், அறிவாலும் இன்னமும் பெரிய மனுசி ஆகலையே இப் படத்தின் கதாநாயகி என்பதற்குச் சான்றாக அவள் பேசும் மொழி நடை -உரையாடல்களைச் சிறப்புற அமைத்திருக்கிறார் இப் படத்தின் வசன எழுத்தாளர் துவாரகாந். ஒவ்வோர் இடங்களிலும், நாயகியின் சுட்டித் தனம் வெளிப்படும் போது, உங்களை அறியாமலே நீங்கள் சிரித்து மகிழப் போவது நிச்சயம். தாங்கூ.. சொக்கி. எனக்கு சாக்கிலேட் தான் புடிக்கும் முதலிய வசனங்கள் இப் படத்தில் அடடா எம் வாலிப வயசில் இந்த சாக்கிலேட்டை வாங்கிச் சாப்பிடுவதற்காகவேனும் யாராவது பெரிய ஆளுங்களை காதல் செய்திருக்கலாமே எனும் எண்ணத்தை உங்கள் உளத்தினுள் ஏற்படுத்தும்.
மாலை நேரம்: மனதிற்குள் மகிழ்ச்சி பொங்க வைக்கும் மழலைக் காதலின் மறு வடிவம்.
அனைத்து உறவுகளுக்கும் ஒரு அன்பு அறிவித்தல்:
சமீப காலமாக எனக்கு வேலைப் பளு அதிகரித்த காரணத்தினால் என் வழமையான பாணியிலான பதிவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள முடியவில்லை. வெகு விரைவில் வழமைகுத் திரும்புவேன் என்று நினைக்கிறேன்.
அனைவருக்கும் இனிய வார இறுதி நாள் வாழ்த்துக்கள்!
|
46 Comments:
நிரூபனின் முதல் ரசிகன்
>>>Your comment has been saved and will be visible after blog owner approval.
ஹி ஹி ஹி ரைட்டு
வேலைப்பளூ விரைவில் சரி ஆகி மீண்டு வர வாழ்த்துக்கள்
மீண்டும் வாங்க ..வந்து ...பல் சுவை
பதிவுகள் தருக ....
ஏற்க்கனவே இந்த படம் பார்த்துவிட்டேன் ..விமர்சனம் அழகு ..)
படம் பார்த்துட்டு சொல்லுகின்றேன்
என்னது நாயகி பெயர் சரன்யாவா இதோ இப்பவே பாக்கிறன் படத்தை...
19 நிமிட படத்துக்கு அருமையான விமர்சனம்.உன்னிப்பாக கவனித்திருக்கிறீர்கள் சகோ!
நல்ல குறும்படம் பாருங்கள் என்கிறீங்க வேலை முடித்து வீட்டே போய் பார்த்திட வேண்டுயது தான் வேலையில் படம் பார்க்க அனுமதியில்லை பாஸ்!
ஆம் ஏலவே பார்த்திருந்தேன்.
நிரூபன் இனி சினிமா படமும் பார்ப்பன்
கொஞ்சம் பொறுங்க பாஸ் படம் பார்க்கனும்.யாழ்ப்பாணத்தில் கரன்ட் போகப்போது.டோடா!
நான் தப்பு பண்ணின மாதிரி என்மேலயே குற்றம் சொல்லப்பா நீ?
வணக்கம் சகோ நிரூபன்,
இதோ குறும்படத்தை
பார்த்து விடுகிறேன்.
மனிதனிடத்தே காதல் எப்போது வந்து தொற்றிக் கொள்ளும் என்று யாராலும் இலகுவில் அறிந்து கொள்ள முடியாது.//
அட ஆரம்பமே அசத்தலா இருக்கே!
குறும்படத்தினை பற்றிய விமர்சனத்தை அழகாக சிம்பிளாக சொல்லிவிதம் கலக்கல் நண்பா... காணொளியை பார்த்துவிட்டு வருகிறேன்...
மனிதனிடத்தே காதல் எப்போது வந்து தொற்றிக் கொள்ளும் என்று யாராலும் இலகுவில் அறிந்து கொள்ள முடியாது.//////
இக்கருத்தை நான் படு பயங்கரமாக வழி மொழிகிறேன்!
மனித இனத்தில் உடல் உள ரீதியான வளர்ச்சி ஏற்படும் போது வந்து கொள்ளும் காதலுக்கும், பருவமடைய முன்னர் வரும் காதலுக்கும் இடையில் பல வகையான வேறுபாடுகள் உண்டு. ///////
என்னென்ன வேறுபாடு என்று சொல்லி ஒரு பதிவு போடலாமே மச்சி!
எம் தமிழ் சமூகத்தின் வரலாற்றுப் பாதையில் தெய்வீக காதல் முதல் நாய் காதல் வரை மனிதன் தன்னால் எங்கெல்லாம் அன்பைச் செலுத்த முடியுமோ அங்கெல்லாம் தன் அன்பைச் செலுத்தி மகிழ்ந்திருக்கிறான்.///////
யோவ்..... அன்பு என்ன இன்ஜெக்சனா செலுத்தி மகிழ்வதற்கு! அன்பைப் பகிர்ந்து மகிழ்கிறான் என்று மாற்றவும்! இல்லையென்றால், தீக்குளிப்பேன்!
இதே போலப் பையன்களும், தம்மைச் சூழ்ந்திருக்கும் பெரிய பெண்கள் மேல் காதல் வசப்பட்ட சம்பவங்களை நாம் கடந்து வந்திருப்போம் அல்லவா? //////
மச்சி நீ ஒருத்தரையும் லவ்வேலையோ?
இது பொருந்தாக் காதல் எனச் சொல்லப்பட்டாலும், அந்த வயதில் வாழும் டீன் ஏஜ் பசங்களின் உணர்வின் அடிப்படையில் அவர்களுக்கு தாம் போகும் பாதை சரி எனும் எண்ணத்தினை கொடுப்பதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றார்கள்.//////
பார்ரா!
அப்படியென்றால் நாளைக்கு ஸ்கூல் போகாம தனியா என் கூட வாரியா?" என ஹீரோ கேட்கையில் நாம் எல்லோரும் கிளைமேக்ஸில் என்ன நடக்கும்? அட அது தானா நடக்கும் என ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்க,///////
யோவ்... எருமை எருமை! நீ ஆவலோடு காத்திருந்ததுக்கு ஏனப்பா எங்களை இழுக்கிறாய்?
நாங்கள் இதுமாதிரி எத்தினையப் பார்த்திருப்பம்! ஹி ஹி ஹி !!
சமீப காலமாக எனக்கு வேலைப் பளு அதிகரித்த காரணத்தினால் என் வழமையான பாணியிலான பதிவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள முடியவில்லை. வெகு விரைவில் வழமைகுத் திரும்புவேன் என்று நினைக்கிறேன்./////////
சீச்சீ இப்படி நாலு படத்துக்கு விமர்சனம் போட்டுக்கொண்டு இரு! அதுவே போதும்! ஹி ஹி ஹி இதுவும் நல்லாத்தானே இருக்கு!
மச்சி! யூ டியூப்புல, இப்பதான் படம்பார்த்தேன்! படிக்கிற வயசில அவவுக்கு ஒரு கண்டறியாத காதல், நல்ல பச்சை மட்டையை வெட்டி, நாலு சாத்துச் சாத்த ஆள் இல்லை! ஓ!!
( ஹி ஹி ஹி ஹி இப்படித்தான் - நானும் வனஜா மச்சாளும் லவ் பண்ணேக்க, வனஜா மச்சாளின்ர அம்மம்மா பேசினவா! ஹி ஹி ஹி )
Mr.Dwarakhanath.P நல்லா இயக்கிருக்காரு.. அப்பறம் பேக்ரவுண்ட் மியூசிக் சூப்பர்.. எடிட்டிங்கும் நல்லாருக்கு பாஸ்... ரெண்டுபேரோட ஆக்டிங்கும் நல்லாருக்கு.. குறிப்பா தியா கெரக்டர் செம.. அவன் ஓடிபோய் டஸ்ட்பின்ல சாக்லேட் எடுக்கும்போதே அவன் திரும்பவும் பச்சைகொடி காட்டிட்டான்னு தெரியுது... என்ன ஒரு ஹைலைட்டுன்னா.. க்ளைமாக்ஸ் அந்த் பொண்ணுக்கு இதெல்லாம் தப்புங்குற மாதிரி சொல்ல வருவாரு அப்படின்னு ஒட்டு மொத்த ஆடியன்ஸும் எதிர்பாத்திருப்பாங்க... ஆனா அது கொடுக்க கூடாது எதார்த்தத்தை கொடுக்கனும்னு கொடுத்த இயக்குநரை பாராட்டலாம் மாம்ஸ்....
பருவகாதல் - பச்சைக்கொடி
நல்ல விமர்சனம் தல, சவுண்ட் மிக்சிங் கூட நல்லாயிருக்கு, சாதரணமான குறும்படங்கள் குவாலிட்டிய தாண்டி இருக்கு. யூடியூப்ன்னு போட்டதற்கு ஸ்பெசல் நன்றிகள்.
ஆர்வத்தைத் தூண்டி விட்டு விட்டீர்கள்.யூ டியூபில் பார்த்து விட வேண்டியதுதான்.
முதலில் வேலை அப்புறம்தான் மற்றவைகள், வாழ்த்துக்கள்...
குறும்பட விமர்சனம் அருமை !....வாழ்த்துக்கள் சகோ
மிக்க நன்றி பகிர்வுக்கு .
நன்றி நிரூ குறும்படங்களின் அறிமுகங்களுக்கு !
நேரம் கிடைக்கும்போது பார்க்க முயல்கிறேன்... எனக்கும் காதல் தொடர்பான படங்களின் மீது ஒருவித ஈடுபாடு உண்டு...
//ஆர்வ கோளாறால் அவதிப்பட வைக்கும் பருவ காதல்!//
தலைப்பைப் பார்த்ததும் ஏதோ நிரூபன் அண்டவாளம் தண்டவாளம் எல்லாம் அவிழ்த்துவிட்ட்டிருக்கிறாராக்கும் என வேர்க்க விறுவிறுக்க ஓடிவந்தால்.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. பட விமர்சனமாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).
எதை எதை எப்படி எப்படிச் சொல்லோணுமோ, அதை அதை அப்படி அப்படி அழகாக விமர்சித்திருக்கிறீங்க. சூப்பர்.
மாய உலகம் said...
மனிதனிடத்தே காதல் எப்போது வந்து தொற்றிக் கொள்ளும் என்று யாராலும் இலகுவில் அறிந்து கொள்ள முடியாது.//
அட ஆரம்பமே அசத்தலா இருக்கே////
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))
K.s.s.Rajh said...
என்னது நாயகி பெயர் சரன்யாவா இதோ இப்பவே பாக்கிறன் படத்தை..
///
ஹையோ அப்போ ஹன்ஷிகாவின் கதி?????:)))
Powder Star - Dr. ஐடியாமணி said...
மனிதனிடத்தே காதல் எப்போது வந்து தொற்றிக் கொள்ளும் என்று யாராலும் இலகுவில் அறிந்து கொள்ள முடியாது.//////
இக்கருத்தை நான் படு பயங்கரமாக வழி மொழிகிறேன்///
ஹா..ஹா..ஹா.... முடியல்ல சாமீஈஈஈஈஈஈஈ:)))
யோவ்..... அன்பு என்ன இன்ஜெக்சனா செலுத்தி மகிழ்வதற்கு! அன்பைப் பகிர்ந்து மகிழ்கிறான் என்று மாற்றவும்! இல்லையென்றால், தீக்குளிப்பேன்!//
ஹா..ஹா..ஹா....ஹா...... நிரூபன்.., இன்னுமா குளிக்காமல் இருக்கிறார் அவர்?:)).. நான் தீக்குளிப்பதைக் கேட்டேன்... சிரித்துக் களைத்துவிட்டேன்:)))).
அடக் கடவுளே... நிரூபனின் விளையாட்டுக்கு அளவில்லாமல் போச்சுதூஊஊஊஊ.. திறப்பதும் பின்பு ஆமைப்பூட்டுப் போட்டு மூடுவதும் வேலையாப் போச்சூஊஊஊஊ:))).. பின்னூட்டத்தைச் சொன்னேன்.... சீயா மீயா... மியாவ்.
வணக்கம் நிரூபன்
குறும்பட பகிர்வுக்கு நன்றி...
வணக்கம் நண்பா
வேளைப் பளு முடித்து விட்டு வாருங்கள் நண்பரே . நன்றி
நம்மள மாதிரி சின்னப்பசங்க கதையா? பார்க்கிறேன் பாஸ்! :-)
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!
என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
சகோ.......
விமர்சனத்தினை படித்த பின் படத்தினை பார்த்தேன் .படத்திற்கு சிறந்த விமர்சனம் . நன்றி பகிர்வுக்கு
நான் விமர்சனம் போட நினைத்து விட்டு போன குறும்படங்களில் இதுவும் ஒன்று ... இருவர் மட்டுமே நடித்திருக்கும் குறு குறு குறும்படம் ... இருப்பினும் ஹீரோ அந்த பெண்ணை காதலிப்பதற்கு போதுமான விளக்கங்கள் இல்லை ... முடிந்தால் குறும்பட கார்னர் - போஸ்ட்மேன் விமர்சனத்தை படிக்கவும் http://pesalamblogalam.blogspot.com/2011/11/blog-post_22.html
Post a Comment