ஈழத்தில் நிலவிய யுத்த சூழல் காரணமாக தாயகத்தை விட்டுப் புலம் பெயர்ந்த உறவுகளின் மூலம் ஈழ மக்களிடையே தொற்றிக் கொண்ட வெளிநாட்டு மோகம் இன்றும் நின்றபாடில்லை. ஈழத்தில் தாம் எவ்வளவு கஷ்டப்பட்டு வாழ்ந்தாலும், தமது பிள்ளைகளை தாம் படும் அதே அவல நிலைக்குள் வளர்க்க விரும்பாத பெற்றோர் பலர் வெளிநாட்டிற்கு அனுப்ப வேண்டும், என்ற நிலைக்கு ஆளாகின்றார்கள். அல்லது அம் மக்களைச் சூழ்ந்து வாழும் சமுதாய அமைப்பில் தமது பிள்ளைகள் வெளி நாட்டில் வாழ்கின்றார்கள் என்றால் பெருமை கிடைக்கும் எனும் நியதிக்கு அமைவாக தம் பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பினால் தமக்கும் பிள்ளைகள் புலம் பெயர் நாட்டில் உள்ளார்களே; என்று மார் தட்டிக் கொள்ளலாம் எனும் நிலைக்கு ஆளாகின்றார்கள்.
இத்தகைய ஈழ மக்களின் வெளி நாட்டு மோகத்தின் காரணமாக சீதனச் சந்தையில் அடி மாட்டு விலையில் விற்கப்படும் விபரீத நிலையினை பல பெண்கள் பெற்றுக் கொள்வதோடு, கடல் கடந்து தமது கனவுகளைக் கட்டியெழுப்பலாம் எனும் ஆசையில் செல்லும் பல பெண்கள் கனவுகள் சிதைந்து கை விடப்பட்ட பரிதாப நிலைக்கு ஆளாகின்றார்கள். இன்னும் சிலரோ கணவனோடு வாழ்ந்தாலும் மன அழுத்தத்திற்கு ஆளாகுவதோடு, தம் ஆசா பாசங்களைப் புதைத்து மனதினுள் வெம்பி அழுகின்றார்கள். ஈழத்தில் முன்பொரு காலத்தில் எஞ்சினியர் மணமகனுக்கு நாற்பது லட்சம் சீதனம் (S40,000 US), மருத்துவருக்கு ஐம்பது லட்சம் சீதனம், எ(அ)க்கவுண்டர் மாப்பிளைக்கு நாற்பது இலட்சம் சீதனம் என இருந்த நிலை மாறித் தற்போது வெளிநாட்டு மாப்பிளைகளுக்கான சீதனம் உயர்ந்த நிலையினைப் பெற்றுக் கொள்கின்றது.
ஆஸ்திரேலியாவில் வாழும் மாப்பிளை அந்த நாட்டு வதிவிட உரிமையினைப் பெற்றிருந்தால் அவருக்கு ஒரு எமவுண்ட் சீதனமும், அமெரிக்க கிரீன் கார்ட் பெற்றிருந்தால் அவருக்கு ஒரு தொகைச் சீதனமும், ஏனைய ஐரோப்பிய நாடுகளில் வாழும் மண மகன்களின் வதிவிட உரிமத்தினை அடிப்படையாக கொண்டு ஒரு தொகைச் சீதனமும் கலியாணத் தரகர்களால் நிர்ணயகிக்கப்படுகின்றது. இலங்கையில் வாழும் போது சாதி அடிப்படையில் பல்வேறு வேறுபாடுகளைக் கொண்டு வாழுகின்ற மக்கள், தொழில் அடிப்படையில் பிரிவினைகளைக் கொண்டிருந்தாலும் எல்லாத் தொழிலும் சமம் எனும் திறந்த மனக் கொள்கையினை வெளிநாட்டிற்குச் சென்றதும் பெற்றுக் கொள்வதால் மணமகன் எந்த தொழிலைச் செய்தாலும் கவலையின்றிப் பெற்றோர் தம் மகள் வெளிநாட்டில் வாழ வேண்டும் எனும் ஒரே நோக்கில் பல இலட்சம் பணம் இனாமாக கொடுத்து வெளிநாட்டு வரனுக்கு மண முடித்து வைக்கின்றார்கள்.
வெளிநாட்டில் வாழும் மண மகன்களில் சிலரோ; தாம் திறந்த மனக் கொள்கை உடையோர்களாக நடுத்தர பொருளாதார நிலை உடைய குடும்பங்களில் உள்ள ஏழைப் பெண்களில் அழகிய பெண்ணைத் தமக்குத் துணையாக ஆக்கிக் கொள்ள ஆசை கொள்வார்கள். இன்றைய கால கட்டத்தில் சீதனம் உயர்ந்த நிலையினை அடைந்துள்ள போது, சாதாரண பொருளாதார நிலையில் வாழும் ஒரு குடும்பமானது சீதனமின்றி கல்யாணச் செலவுகளையும் மணமகன் நல் மனதோடு ஏற்றுக் கொள்ளும் போது மணமகனைப் பற்றிய போதிய விபரங்களை அறிந்து கொள்ளாது தம் மகளைத் தாரை வார்த்துக் கொடுக்கின்றார்கள். இங்கே மணமகனின் வயதும் மணமகளின் வயதும் ஒரு பொருட்டாக இவர்கள் கவனிப்பதில்லை. மணமகன் நல் மனதோடு இவ்வாறு தன் இயல்பினை வெளிப்படுத்தும் போது 38 வயதுடைய மண மகனுக்கு 20+ வயதுடைய மண மகனினைத் திருமணம் செய்து கொடுக்கின்றார்கள்.
மணமகன் அழகானவரா? தம் மகளின் அழகிற்கு நிகரானவரா? வயது வேறுபாடு அவர்களின் எதிர்காலத்திற்கு ஒத்து வருமா என்றெல்லாம் இலங்கையில் வாழும் மக்கள் யாருமே சிந்தித்து பார்ப்பதில்லை. தம் மக்கள் வெளி நாட்டில் வாழும் ஒருவரைத் திருமணம் செய்து வெளிநாட்டிற்குப் போனாலே போதும் என்ற நிலையிலே வாழுகின்றார்கள். கொஞ்சம் கலர் குறைந்து களையற்றுப் போன 30+++ வயதுடைய மணமகன்களிடம் மாட்டிக் கொள்ளும் 20++ வயதுடைய இளம் பெண்களின் நிலை பரிதாபத்திற்குரியதாகின்றது. திருமணம் முடித்து சிறிது காலம் அலைபேசியில் தம் காலத்தை மன்னிக்கவும் வாழ்க்கையை நடத்தும் இவர்கள் மணப் பெண் வெளிநாட்டிற்கு வந்ததும் தம் விஸ்பரூபத்தைக் காட்ட முனைகின்றார்கள். இதற்கான பிராதான காரணம் மணகனிடம் காணப்படும் மனப் பயமும், உடல் நிலைக் குறைபாடுமே ஆகும்.
30++ வயதுடைய மண மகனைத் தம் மகளுக்கு கட்டி வைக்க ஆசை கொள்ளும் பெற்றோர் வெளி நாட்டில் தம் சந்ததிக்காகப் பல வருடங்கள் உழைத்த மண மகனுக்கு தாம்பத்தியத்தில் நாட்டம் இருக்கின்றதா? தம் இளைய வயதுடைய மண மகளை நன்றாக கவனிப்பாரா இம் மணமகன் என்றெல்லாம் அறியாது பெற்ற கடமைக்கு கலியாணம் முடித்து வைத்தால் சரி என்று அனுப்பி வைக்கின்றார்கள். தன்னை விட அழகான பெண்ணை மண முடித்து கூட்டிச் செல்லும் பெரும்பாலான புலம் பெயர் ஆண்களிடம் காணப்படும் உளவியல் ரீதியான குறைபாடு என்னவென்றால்;தன்னை விட அழகிலும், தோற்றத்திலும் உயர்ந்த பெண் எங்கே தன்னை விட்டுப் போய்விடுவாளோ எனும் அச்ச நிலையாகும். இல்லை தன்னை விட அழகான இப் பெண் அடுத்தவன் அழகினால் கவரப்பட்டு, தன்னை விடத் தொழில் ரீதியில் உயர்ந்திருக்கும் அடுத்த நபரோடு ஓடிவிடுவாளோ எனும் உளவியல் ரிதியான ஐயப்பாடே இந்த நிலைக்கு காரணமாகும்.
ஒரு 20+ வயதையுட பெண்ணைத் திருமணம் செய்து வெளிநாட்டிற்கு கூட்டிச் செல்லும் பெரும்பாலான ஆண்கள் தம் மனைவிமாரை வீட்டுச் சிறைக்குள்ளே வாழ வைத்து விட்டு தாம் வேலைக்கு சென்று விடுவார்கள். மனைவியும் ஒரு சராசரி மனித இனம் தானே எனும் இயல்பேதுமின்றி காலையில் வேலைக்குப் போனால், மாலையில் வீடு திரும்பும் இவர்கள் மனைவியை வெளியே கூட்டிச் செல்லும் போதும் இளம் பெண்ணாக இருப்பின் அப் பெண் பிரியப்படும் ஆடைகளை அணியக் கூடாது என்றும் முற்று முழுதாக உடலைப் போர்த்திய ஆடைகளை அணிய வேண்டும் என்றும் கட்டளையிடுகின்றார்கள். அல்லது கலாச்சார உடைகளை அணிய வேண்டும் என்கின்ற பாரம்பரிய நிலையினைப் பின்பற்றுகின்றார்கள். இதில் பரிதாபமான விடயம் என்னவென்றால் ஐரோப்பிய வீதிகளில் பல பெண்கள் தலையினை ஸ்ரைற்றினிங் (Hair Straightening) பண்ணிச் செல்ல எம் தமிழ்ப் பெண்களோ ஈழத்தில் வாழ்ந்த அதே சிக்குப்பட்ட பரட்டைத் தலை முடியோடு செல்ல வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள்.
தாம் தம்மைச் சூழ்ந்துள்ளோருக்கு காண்பிப்பதற்காக பெயருக்குப் பொம்மைக் கலியாணம் செய்து விட்டு, மனைவியைப் பற்றிய எந்த விதமான கரிசனையேதுமின்றி வாழும் ஆண்களும் எம் தமிழ்ச் சமூகத்தில் உள்ளது தான் இன்னுமோர் வேதனையான விடயமாகும்.இத்தகைய வகையறாக்களைச் சேர்ந்த ஆண்கள் அனைவரும் செய்கின்ற மிக நல்ல விடயம் "காலம் பூராவும் உன்னைக் கண் கலங்காமல் பார்க்கிறேன்" என்று கூறி விட்டு வீட்டினுள் மனைவியை விட்டு விட்டுத் தாம் வேலைக்குச் சென்று மனைவிக்கும் சேர்த்தே உழைத்து வருவதாகும். ஆனால் மனைவி டீவியைத் தவிர வீட்டில் உள்ள ஏனைய தொடர்பாடற் பொருட்களை உபயோகிக்க கூடாது. கம்பியூட்டர் இருந்தால் அதில் இணையத்தைப் பாவிக்க கூடாது, கணவன் உறவினர்கள் எடுக்கும் தொலைபேசி அழைப்புக்களைத் தவிர்த்து ஏனைய அழைப்புக்களுக்கு பதில் சொல்லக் கூடாது. வெளிச் செல்லும் (Out going) அலைபேசி அழைப்புக்களை மேற் கொள்ளக் கூடாது என்றெல்லாம் பல கட்டுப்பாடுகள் போடப்பட்டு சிறைக் கைதியினைப் போல வாழுகின்ற பெண்கள் பலரும் உள்ளார்கள் என்று அறியும் போது வேதனை தான் எஞ்சுகிறது.
சமீபத்தில் நான் அறிந்த செய்தி 29 வயதுடைய ஆண் ஐரோப்பியக் கண்டத்திலுள்ள ஓர் நாட்டில் வசிப்பவர் 20 வயதுடைய பெண்ணைத் திருமணம் செய்து கூட்டிச் சென்றிருக்கிறார். பெண்ணுக்கு வேண்டிய இளமைச் சுகத்தினையோ அல்லது தாம்பத்தியச் சுகத்தினையோ அவரால் கொடுக்க முடியாத நிலை. இதற்கான காரணம் அவர் நீண்ட காலம் கடினமாக உழைத்த காரணத்தினால் முள்ளந் தண்டுப் பகுதியில் சத்திர சிகிச்சை (ஓப்பரேசன்) மேற்கொள்ளப்பட்டு மருத்துவரின் அறிவுறுத்தலின் பிரகாரம் அவரால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாதாம். இவர்களைப் போன்று பலர் தம் நிலை தெரிந்திருந்தும் ஏன் ஈழத்தில் உள்ள அப்பாவிப் பெண்களின் வாழ்க்கையோடு விளையாடுகின்றார்கள் என்பது மட்டும் புரியாத புதிராக உள்ளது. இதே வேளை புலம் பெயர் நாட்டில் வாழும் சில நல்ல உள்ளங்கள் ஈழத்தில் விவாகாரத்தானவர்களைத் திருமணம் செய்து அவர்களுக்கு நல் வாழ்வைக் கொடுத்து வாழ வைத்துமிருக்கின்றார்கள்.
ஒரு பெண் வருடத்தில் 365 நாளும் டீவிப் பெட்டியின் முன் உட்கார்ந்திருப்பதும், கணவனின் உடையினைத் (துணி துவைப்பதும்) துவைப்பதும், வெளி உலகினைத் தரிசிக்காது, வீட்டினுள் விம்மி வெடித்து வாழுவதும் தான் வெளி நாட்டு மோகத்தின் பின்னணியில் சில பெண்கள் பெற்றுக் கொள்ளும் அவல நிலையாகும். அட...இவர்களும் மனித இனம் தானே! இவர்களும் படிக்க வேண்டுமே! அல்லது வெளி உலகில் ஏனைய இன மக்களோடு பழகி வாழ வேண்டும் இவர்கள் என்று எண்ணுவோரின் தொகை சிறிதளவு தான். பெற்றோர்கள் விடும் தவறு ஒரு புறம், தம் நிலையினை மறைத்து உளவியல் ரீதியில் தமக்கு உள்ள அச்சத்தை மறைத்து அப்பாவிப் பெண்களைத் திருமணம் செய்து வீட்டுச் சிறைக்குள் அடைத்து வைக்கும் ஆண்கள் விடும் தவறு மறுபுறம் எனப் பல செயல்கள் சுதந்திரமாகப் பறக்க வேண்டிய சிட்டுக்களின் கட்டுக்களை அறுத்துப் போடுகின்றது. பெற்றோர்கள் தம் பிள்ளையின் வளமான எதிர்காலம் பற்றிய தெளிவோடு மணமகனைத் தேடினால் இந்த அவலத்தினை இல்லாதொழிக்கலாம் என்பது யதார்த்தம்.
பிற் சேர்க்கை: இப் பதிவினூடாக வெளிநாட்டில் வாழும் எல்லா ஆண்களையும் நான் குற்றம் சுமத்தவில்லை. பதிவினை முழுமையாகப் படிக்கையில் நீங்கள் அனைவரும் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கின்றேன்.
பிற் சேர்க்கை: இப் பதிவிற்கான கருப் பொருள் உதவிய ஐரோப்பா, கனடா, ஆஸ்திரேலியாவில் வாழும் நண்பர்கள். அவர்களிற்கு என் உளமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் இப் பதிவினூடாகத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
*************************************************************************************************************************
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இலங்கைப் பதிவர்களின் முதல் முயற்சியாக இடம் பெறும் "யாழ்ப்பாணம்" குறும்பட அறிவிப்பினைப் பற்றிய தகவலையும், அதனோடு தொடர்புடைய ஒரு முன்னோட்டத்தினையும் உங்களுக்கு வழங்கியிருந்தேன். இன்றைய தினம் அக் குறும்படத்தின் உத்தியோக பூர்வ (Official) ட்ரெயிலரினை உங்களுக்காக இப் பதிவில் இணைத்துள்ளேன்.
யாழ்ப்பாணம் குறும்படம் வெகு விரைவில் உங்களை நாடி வரவிருக்கிறது. இக் குறும்பட குழுவினரின் முயற்சி வெற்றி பெற எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்!
இக் குறும்படத்தின் ட்ரெயிலரினைப் பார்த்து மகிழ:
***************************************************************************************************************************
இப் பதிவில் உள்ள படங்கள் யாவும் கூகுள் தேடல் மூலம் பெறப்பட்டவை.
***************************************************************************************************************************
இப் பதிவில் உள்ள படங்கள் யாவும் கூகுள் தேடல் மூலம் பெறப்பட்டவை.
|
137 Comments:
தன் மகள் உண்மையாகவே சந்தோசமாக இருக்கிறாளா இல்லையா என்று கூட தெரியாமல்,தங்கள் மகள் வெளிநாட்டு மாப்பிளைக்கு வைக்கப்பட்டால் சந்தோசமாக இருப்பாள் என நினைத்து பின் வருந்துவது கேக்கவே கவலை அளிக்கிறது.நிச்சயம் விழிப்புணர்வு தேவை!
குறும்பட ஆக்கத்தில் பங்கு பெற்றோர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ஆவலாய் எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறோம்!
மாப்ள பதிவு நன்று...குறும்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...ட்ரைலர் இங்க பார்க்க முடியல வீட்ல பார்க்கிறேன் நன்றி...
கமென்ட் moderate எப்பொழுதிலிருந்து...
கல்யாணப் பதிவா போட்டு கலக்குரீங்க பாஸ்....
யதார்த நிலையைச் சொல்லி நிற்கும் பதிவு.......
இத்துடன் என் கமண்டை நிறுத்திக்கொள்கின்றேன்.
பெரியவர்கள்...சக பதிவர்கள் என்ன கருத்து சொல்கின்றார்கள் என்று பார்த்து...நான் எனது சில கருத்துக்களை சொல்கின்றேன் இபோதைக்கு அப்பீட்டு....
காத்திரமான பதிவு சில விடயங்கள் பின்னே தொக்கி நிற்கின்றதது விவாதிக்கலாம் கருத்துப் பொட்டியைத் திறந்து விட்டால்!
மன்னிக்கவும் என்று சொல்லிப்போட்டு இப்படி முகத்தில் குத்துவது தீபாவளிக் கொண்டாட்டத்தில் இருந்து வெளிவரச் சொல்லியா?
பதிவை முழுமையாகப் படித்து விட்டேன் என்றாலும் சில கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது சிலதுக்கு நிச்சயம் பின் விளைவுகள் இருக்கு பாஸ்!
நாற்றுக் குழுமம் எங்கே ஓடிவாருங்கள் தனிமரம் காத்திருக்கின்றேன் உங்களுடன் செம்பு நெளிக்க!
அட யாழ்பானம் குறும்படத்துல நம்ம சகோ மதிசுதா பேர் இருக்கே...
வணக்கம் நீருபன்
நீங்களே சொல்லிவிட்டீர்கள் எல்லோரும் அப்படி இல்லைன்னு சக வாசகர்கள் பதிவை வாசித்துவிட்டு பின்னூட்டமிட வேண்டுகிறேன்..!!!!???
வணக்கம் நிரூபன்
நல்லதொரு விடயத்தை கையிலெடுத்துருக்கிறீங்க.. பாராட்டுக்கள்
உண்மையில் பெற்றோர் வெளிநாட்டு வாழ்க்கை, வசதியான வாழ்க்கை என்றுதான் பார்க்கிறார்களே தவிர அதன் பின்னால் உள்ள பிரச்சினைகளை பார்ப்பதில்லை
உன்மையில் இது ஒரு மனவியல் பிரச்சனை ஊரில்கூட கொஞ்சம் வசதியா மாப்பிள்ளை இருந்தா வயசை பார்க்காமல் திருமணம் செய்து வைக்கிறார்களே..!!
ஏன் நான் சீதனம் வேண்டாம்ன்னு கல்யாணம் கட்டும்போது பெண்வீட்டார் மாப்பிளை ஏன் சீதனம் வேண்டாம்கிறார்ன்னு திரும்ப திரும்ப விசாரித்தார்கள் ஹி ஹி ஹி என்ர அழகுக்கும் அறிவுக்கும்..? நான் நாலு வெள்ளைக்கார பொட்டைகளை வைச்சிருப்பேனோன்னு நினைச்சாங்களோ..??
என்னை பொறுத்தவரை வயசு வித்தியாசம் ஐந்து வயசுக்குமல் இருப்பது நல்லதல்ல (இது எனது தனிப்பட்ட கருத்து)
பல செயல்கள் சுதந்திரமாகப் பறக்க வேண்டிய சிட்டுக்களின் கட்டுக்களை அறுத்துப் போடுகின்றது. பெற்றோர்கள் தம் பிள்ளையின் வளமான எதிர்காலம் பற்றிய தெளிவோடு மணமகனைத் தேடினால் இந்த அவலத்தினை இல்லாதொழிக்கலாம் என்பது யதார்த்தம்.
வெளிநாட்டி இருக்கும் ஒருவருக்கு நான் தரும் குறுக்கு வழியில் எப்படி சீதனம் வாங்களாம் என்னும் ஆலோசனை இது:-
சீதனமே வாங்காது கஷ்டப்பட்ட ஒரு பெண்னை கல்யாணம் செய்யுங்கள்.. பெண் வெளிநாட்டுக்கு வந்தவுடன் உங்கள் ஆண்மையை நிருபிக்கிறேன் பேர்வழின்னு உடனேயே பிள்ளைகளை பெறாதீர்கள்.. வந்த பெண்னோடு சந்தோஷசமாய்?? இருந்துகொண்டே அந்த நாட்டு பாசையை நன்றாக படிக்க வையுங்கள் நன்றாக படிச்ச பெண்னை அவருக்கு பொருத்தமான வேலைக்கு அனுப்பி நீங்களும் வீட்டு வேலைக்கு உதவி செய்து வாருங்கள்..
அதன் பின்பு பிள்ளைகளை பெறுங்கோ.. ஹி ஹி ஹி ஒரு இரண்டு வருஷத்துக்கு பிறகு கூட்டி கழிச்சு பாருங்கோ நீங்க எதிர்பார்த்ததை விட அதிக சீதனம் பெற்றிருப்பீர்கள். மனிசி வீட்டிலேயும் நல்ல பேர் வாங்கியிருப்பீங்க என்ர மாப்பிள தங்கமையா சீதனமே வாங்காம பெண் எடுத்தவர்ன்னு உங்களை மாமா மாமி புகழ்வார்கள்...(தயவு கூர்ந்து செம்பை நெளிக்காதீர்கள் பிடிக்கலைன்னா ஜோக்கா எடுத்துக்கோங்க ஹி ஹிஹி))))
உண்மை.
துஷியோடு இதைப்பற்றி கூறியிருந்தேன் அவரும் தான் இதைப்பற்றி ஒரு பதிவு போடுகிறேன்னார் நீங்கள் முந்திவிட்டீர்கள் ஹி ஹி ஹி..
குறும்படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்!
வணக்கம் நிரூபன்,மீண்டும் தீபாவளி நல வாழ்த்துக்கள்!அருமையாக, நடுநிலை நின்று பகிர்ந்திருக்கிறீர்கள்!ஒரு புலம்பெயர் தேசத்து பிரஜைபோல் அழகாக,விடயத்தை ஆணியடித்தாற் போல் சொல்லி சபாஷ் போட வைத்திருக்கிறீர்கள்!சபாஷ்!!!!!!!!!!!!
என்ன இருந்தாளும் நம்ம பொண்னுங்க தலைமுடி அப்படி இருக்கிறதுதானே "கவர்ச்சியா" இருக்கும் நாம வெள்ளைக்காரங்களிடம் இருந்து நல்ல விஷயத்த எடுப்போம் இப்ப வெள்ளைக்காரர்களே மூக்குத்தி குத்துறாங்க பொட்டு வைக்கிறாங்க.. நம்மபொண்னுங்க அவங்களபோல இருந்தா இனி பொடியங்க பொண்ணுங்கள இறக்குமதி செய்யாம வெள்ளக்காரிய கட்டிடுவாங்களேய்யா... இது நல்லாவா இருக்கும்!!!???
நிரூபன் நல்லதோர் பதிவுதான் ஆனால் நீங்க வெளிநாட்டு இளைஞர்கள் ஏன் இப்படி தாமதமாக திருமணம் செய்கிறார்கள்?
அவர்கள் பின்னே இருக்கும் அந்த காசு"பேய்களை" பற்றியும் குறிப்பிட்டிருக்கலாமோ என்னவோ..!!!?
ஹி ஹி என்மீது யாராவது செம்பை நெளிக்கமுன்னர் ஒரு தகவல் நான் 23 வயசிலேயே திருமணம் செய்துவிட்டேன் எனக்கும் என் மனைவிக்கும் இடையில் ஒரு வயசுதான் வித்தியாசம் ஹி ஹி பொடியங்களுக்கு வயிறு எரியுதா..!!? ஹா ஹா ஹா அதுதான்யா வேண்டும் எனக்கு..
அவசரப்பட்டு சிலர் செய்யும் தவறுகள் இது நல்லா சொல்லி இருக்கீங்க நிரூ
யாழ்ப்பாணம் குறுப்படத்தில் நடிக்கும் என் தம்பி ஈழத்து சூப்பஸ்டார் மதிக்கு என் வாழ்த்துக்கள்..
பெற்றோர்கள் கவனிக்கவேண்டிய விழிப்புணர்வு பதிவு ...
என்ன நிரூபன்... உள்ளக் குமுறல் பலமாகக் கேட்குது:)).
நீங்கள் சொல்வதும் உண்மைதான் ஒரு பக்கம் நடக்குது...
அதே நேரம், ஊரில் அடுத்த வீட்டுக்கே தனியே போகாத பெண்கள், இங்கு கணவரால் முன்னேற்றப்பட்டு தனியே அனைத்து வேலைகளையும் செய்யும் திறமைசாலிகளாக மாறியிருப்பதையும் காண முடிகிறது. ஊரிலே சைக்கிளை உருட்டவே தெரியாமல் இருந்தவர்கள்கூட இங்கு கார் ஓடுகிறார்கள்... இதெல்லாம் கணவன்மார் கொடுத்த தனம்பிக்கையே.
நாளுக்கு இரவும்பகலும்போல, வாழ்க்கையில் இருட்டும் வெளிச்சமும் இருக்கிறது.
தாரமும் குருவும் தலைவிதிப் பயனே.
நல்ல கணவர் / மனைவி அமைந்திட்டால்... எல்லாம் நல்லதாகப் போகும் இல்லையெனில் வாழ்க்கை சூனியமே...
இதில் யாரிலும் குற்றம் சொல்ல முடியவில்லை... பெற்றோர் எப்பவும் பிள்ளை நல்லாக இருக்க வேண்டும் என்றுதான் எண்ணுவினமே தவிர, பாழும் கிணற்றில் தள்ள நினைக்க மாட்டார்கள்.
அதே நேரம் புரோக்கர் நல்ல இடம் என சொல்லிவிட, அவசர அவசரமாக விசாரிக்காமல்.... மகளைக் கட்டிக்கொடுத்துவிட்டு, பின் மகளின் வாழ்க்கையைப் பாழாக்கி விட்டோமே எனப் புலம்பியோரும் உண்டுதான்.
விதியில் நமக்கு என்ன எழுதப்பட்டிருக்கோ அதை மாற்றவே முடியாது.
“எழுதியதை அழித்து எழுத முடியுமோ?:”
அதே நேரம் நம் நாட்டில் இருந்ததைவிட வெளிநாட்டுக்கு திருமணமாகி வந்த பெண்கள், நிறைய முன்னேறி தன்னம்பிக்கையோடு வாழ்வதையும் காணமுடிகிறது.
சீதனம் வாங்குவதில் ஆரைக் குறை சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை. என்னைப்பொறுத்து, மணமகன் நல்லவராகத்தான் இருக்கிறார்:)), ஆனால் பெற்றோர்தான் சீதனம் கேட்கிறார்கள், பெற்றோரை எதிர்த்துப் பேசும் தைரியம் நம் நாட்டு ஆண்களுக்கு இல்லைத்தானே, அதனால் மனம் விரும்பாவிடினும் ஏதோ திருமணம் முடியட்டும் என பொறுத்துப் போவதையும் பார்த்திருக்கிறேன்.
அதே நேரம் பணக்காரர்கள்தான்.... என் மகளுக்கு இவ்வளவு தருவேன், நல்ல உத்தியோகத்தில் மாப்பிள்ளை கொண்டுவா என புரோக்கரிடம் சொல்லி.... சீதனம் என்பதனை கூட்டுகிறார்கள் என்றும் படுகிறது. இதனால் பாதிக்கப்படுவது வசதி குறைவான குடும்பப் பெண்களே...
கனக்க வேண்டாம் நிரூபன், சீதனம் வாங்கப்படாது எனும் கொள்கையோடு நீங்களும் ராஜ் உம்(ஒரு கதைக்குத்தான்:)) இருந்தாலும், பெற்றோர் ... நீ பேசாமல் இரு அதெல்லாம் எமக்குத் தெரியும், உனக்கு ஒன்றும் புரியாது, உனக்கு சகோதரி இருப்பதை மறந்துவிட்டாயோ என்றால்.....
சகோதரிக்குக் கொடுக்கும் தாராளபணம் உங்களிடம் இருப்பின் ஓக்கை.... இல்லை கேட்காதீர்கள் சகோதரிக்கு நான் தருவேன் எனச் சொல்லலாம்... ஆனால் அது முடியாத கட்டத்தில் அடங்கிப் போக வேண்டிய நிலைமைக்கு ஆளாகிறார்கள்...
என்னமோ போங்க..... திருமணங்கள் சொர்க்கத்தில் நிட்சயிக்கப்பட்டு நடந்துகொண்டுதான் இருக்கு.....
காலம்போகப்போக... சீதனம், லிவிங்ருகெதர், விவாகரத்து.... இப்படி எல்லாமே கூடிக்கொண்டேதான் போகுதே தவிர எதுவும் குறைந்த பாடில்லை....
இத்தகைய ஈழ மக்களின் வெளி நாட்டு மோகத்தின் காரணமாக சீதனச் சந்தையில் அடி மாட்டு விலையில் விற்கப்படும் விபரீத நிலையினை பல பெண்கள் பெற்றுக் கொள்வபதோடு, ////பாஸ் வெளிநாட்டு மணமகனுக்கு கொடுக்கவேண்டிய சீதனத்திலும் பார்க்க, உள்நாட்டில் அரச உத்தியோகம் பார்க்கும் மணமகன் எதிர்பார்க்கும் சீதனம் பன்மடங்கு அதிகம் ..இது தான் இன்று பெற்றோர்கள் தமது பெண் பிள்ளைகளுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை தேடுவதற்கான ஒரு காரணம் ...இது தான் இன்றைய யாழ்ப்பாணத்தின் நிலைமை ))
மற்றும் படி வயசு வித்தியாசம் பார்க்காது, வசதி வாய்ப்பை மட்டும் பார்த்து தமது பெண்ணை 'கரை சேர்ந்தால் போதும்' என்ற நோக்குடன் தள்ளி விடுவது கண்டிக்கத்தக்கது..
வெளிநாட்டு மாப்பிளை என்ற ஒரே தகுதியைக் கருத்தில் கொண்டு பல பெண்கள் பலிகடாவாக்கப்படும் அவலத்தை அருமையாகச் சொல்லியுளீர்கள்.
சகோ, வெளிநாட்டு கல்யாணத்தில் கொஞ்சம் கவனமா இருக்கிறது நல்லது தானே....
((இவர்களைப் போன்று பலர் தம் நிலை தெரிந்திருந்தும் ஏன் ஈழத்தில் உள்ள அப்பாவிப் பெண்களின் வாழ்க்கையோடு விளையாடுகின்றார்கள் ..))உண்மை.விழிப்புணர்வு தேவை
அப்பெண்களை நான் நேரில் பார்க்கும் போது மிகவும் பரிதாபமாகவே இருக்கிறது...!!!
எங்க ஊர்ல எல்லாம் இப்போ வெளிநாட்டுல இருக்குறவனுக்கு பொண்ணு குடுக்கமாட்டேங்குறாங்க பாஸ்....
பெண்ணோ ஆணோ வளர்க்கும்போதே அழகுக்கு 'முதல்' இடம் கொடுக்க வேண்டியதில்லை என்பதை உணர்த்த வேண்டும்
அது திருமண நேரத்தில் சொல்லிகொடுத்து வராது.
நிரூ...என் கருத்தின்படி பெற்றோர்கள்மீதே என் வெறுப்பு.சும்மா இருக்கும் பிள்ளையைக்கூட வெளிநாட்டு ஆசை காட்டி கட்டிக்கொடுக்கிறார்கள்.நான் இதுபற்றி 9 வருடங்களுக்கு முன்னமே ஐ.பி.சி வானொலிக்க்கு கவிதை எழுதியிருந்தேன்.என் பதிவிலும் கல்யாணம் என்கிற பெயரில் எழுதியிருக்கிறேன் !
http://kuzhanthainila.blogspot.com/2008/07/blog-post_23.html
எல்லாம் ஃபாரீன் மோகம் தான்
உலகம் முழுக்க நடக்கும் விஷயம்தான்.சிலர் வெளிநாட்டு மாப்பிள்ளை மீது மோகம் கொள்வதும் உண்டு.குறும்பட ட்ரைலர் ஆவலைத் தூண்டுகிறது.
வெளி உலகம் தெரியாதவங்க பண்ற தப்பு பாஸ் இது,,,,,,,
வணக்கம் நிரூ பாஸ்..
நல்ல ஒரு பதிவு.. ஆனாலும் இப்பதிவில் பல கருத்துக்களுடன் எனக்கு உடன் பாடு இல்லை.
கந்தசாமி சொன்னது போல் வெளினாட்டு மாப்பிளையை விட ஊரில் நிறைய படித்த மாப்புள்ளைக்குத்தான் அதிக சீதனம் பேசபடுகிறது. இதோடு ஒப்பிடும் போது வெளினாட்டவர் பெட்டர்தான்.
அதைவிட இந்த ஒரு பக்கட்சார்பான குர்றச்சாட்டு. என்னைப்பொறுத்தவரை லஞ்சம் வேண்டுவதை விட கொடுப்பதான் தப்பு.. அது போலவே இதுவும்.
அப்புறம்.. இங்கிருக்கும் மாப்பிளைக்கு சீதனம் எதிர்பார்த்து பேசி வேண்டுவதே ஊரில் இருப்பவர்கள்தான்., ஹா ஹா.
இப்படி ஒரு பதிவை காட்டான் மாமா என்னை எழுத சொல்லியும் நான் தள்ளிப்போட்டு வந்தேன். காரணம் இங்கிருக்கும் பல நல்ல மனிதர்களை (மாப்பிள்ளைகளை.. உதாரணம்: தனிமரம் )
அது காயபடுத்தி விடலாம் என்று :)
மற்றும் படி
மாப்பிளைகள் விடயத்தில்
இங்கிருப்பவர்கள் எல்லோரும்
கெட்டவர்களும் அல்ல
அங்கிருப்பவர்கள் எல்லோரும்
நல்லவர்களும் அல்ல
இரு பக்கமும் இரு வகையினரும் இருக்கிறார்கள்.
அப்புறம்.. உங்களுக்கு எப்போ பாஸ் கல்யாணம்..?? நீங்க சீதனம் ஒன்றும் வாங்க மாட்டீர்கள் தானே..?? ஹீ ஹீ
Athira வின் கருத்தை கவனியுங்கள்..
சிறப்பாய் நியாயமாய் நிஜத்தை சொல்லுகிறார் பாஸ்
சூப்பர் அதிரா ^_^
வெளிநாட்டு மோகம் கொண்ட பெற்றோருக்கு விழிப்புணர்வூட்டும் பதிவு.
முதலில் Hats off to you Niruban .எப்படிஇங்கே நடக்கும் விஷயத்தை இவ்வளவு தெள்ளதெளிவாக எழுதினீங்க .
.இது உண்மையில் வருந்தத்தக்க வேதனையான விடயம் தான் .
/வெளிநாட்டில் வாழும் எல்லா ஆண்களையும் நான் குற்றம் சுமத்தவில்லை. //
என் கருத்தும் இதுதான்.பிரச்சினை இருபுறமும் இருக்கு நிரூபன் .
காட்டான் said...
ஹி ஹி என்மீது யாராவது செம்பை நெளிக்கமுன்னர் ஒரு தகவல் நான் 23 வயசிலேயே திருமணம் செய்துவிட்டேன் எனக்கும் என் மனைவிக்கும் இடையில் ஒரு வயசுதான் வித்தியாசம் ஹி ஹி பொடியங்களுக்கு வயிறு எரியுதா..!!? ஹா ஹா ஹா அதுதான்யா வேண்டும் எனக்கு./// நியாயமாகப் பார்த்தால் திட்ட வேண்டும்!என்ன செய்ய, விதிவலியது என்று மனதை தேற்றிக் கொண்டேன்!ஹி!ஹி!ஹி!மவனே மாட்னியா?பிரான்சில இனிமேல் நாப்பத்தைஞ்சு வரியம் வேலை செய்ய வேணும்,ராசா!
துஷ்யந்தன் said...
Athira வின் கருத்தை கவனியுங்கள்..
சிறப்பாய் நியாயமாய் நிஜத்தை சொல்லுகிறார் பாஸ்
சூப்பர் அதிரா ^_^
////
உஸ்ஸ்... துஸ்யந்தன் மெதுவாச் சொல்லுங்கோ.... எல்லா இடத்தில இருந்தும் புகைவாறமாதிரி இருக்கே:))))...
மியாவும் நன்றி.
இன்னுமொன்று கேள்விப்பட்டேன், யாழில் புரோக்கர்மாரிடம் குறிப்பைக் கொடுத்து, எங்கட மகனுக்கு சீதனம் வேண்டாம், நல்ல பெண்ணாகப் பாருங்கோ என்றால்....
புரோக்கர் சொல்லுவாராம்... ஏன் உங்கட மகனுக்கு என்ன குறை, நானெல்லோ சீதனம் வாங்கித்தருவேன் என ஆசையைத் தூண்டுவாராம்...
ஏனெண்டால் ஒரு லட்சம் சீதனம் வாங்கினால்.... கொமிஷன் 1000 ரூபாயாம்... அப்போ 50 லட்சம் சீதனம் என்றால் புரோக்கருக்கு 50 ஆயிரம்:))).
இரண்டு கல்யாணம் பொருத்திக் கொடுத்தால் இருந்த இடத்திலேயே மாடி வீடு கட்டிப்போடுவார் அவர்:))).
இப்போ எல்லாமே வியாபாரமாகிவிட்டதே.....
ஊசிக்குறிப்பு:
ஆராவது ஏசப்போறீங்களெண்டால்(எனக்குத்தான்:)) சிரிச்சுச் சிரிச்சு ஏசுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:))).
வணக்கமண்ண ஏன் அண்ண இப்படி வயித்தில புளிய கரைக்கிறீங்க.. நான் பென்சன் எடுக்கிறவயசில இஞ்ச அந்த சிஸ்டம் இருக்குமோ அண்ண..!!
அப்போ பெஞ்சன எதிர்பார்த்தா பிழைப்பு ஓடாது இப்பவே ஆவன செய்யவேண்டியதுதான்... !!!!!??))
அது சரி சகோதரி ஆதிரா அங்க பொடியனுக்கு என்று வாங்கிற சீதனத்த அவங்க வெளிநாட்டில இருக்கிற பொடியனுக்கே கொடுத்தத கேள்விப்பட்டிருக்கீங்களோ..!!?ஹி ஹி நான் கேள்விப்படல அப்போ கையால தொடாத அந்த காச வாங்கவைச்சு ஏன் இந்த பொடியங்க கெட்ட பெயர் எடுக்கோனும்..????
ஆஆ.... குழைபோடுறவர் புரோக்கரா இருப்பாரோ என்று பயந்துகொண்டேதான் எழுதினனான்:))... புகை வருது:)))...
நிரூபன் என்னைக் காப்பாத்துங்கோ... நான் ரொம்ப நல்ல பொண்ணு சிக்ஸ் வயசிலிருந்தே:))).
///அப்போ கையால தொடாத அந்த காச வாங்கவைச்சு ஏன் இந்த பொடியங்க கெட்ட பெயர் எடுக்கோனும்..??//
நியாயமான கேள்விதான்... ஆனா என்னைக் கேட்டு என்ன செய்வது.. எதிர்ப்பாலாரைப்பிடிச்சுக் கேழுங்கோ..
ஊசிகுறிப்பு:
ஆனா வெளிநாட்டிலிருப்போர்... ஊரில் சீதனம் வாங்குவதாக நான் கேள்விப்படவில்லை.... ஒரு 4, 5 வீதமானோர் வாங்கியிருக்கலாம்... அது அம்பலத்துக்கு வந்திருக்கும். நான் அறிந்தவற்றைத்தான் பகிர்கிறேன்...
ஆதிரா,வயதான பெற்றோரை இங்கு புலம்பெயர் தேசத்துக்கு அழைப்பது பெற்ற(தாம்)பிள்ளைகளைப் பராமரிக்கவும்,சீதன பாதனங்களை அதிகப்படுத்திப் பெற்றுக் கொ (ல்)ள்(ல்)ளவுமே!
//Yoga.S.FR said...
ஆதிரா,வயதான பெற்றோரை இங்கு புலம்பெயர் தேசத்துக்கு அழைப்பது பெற்ற(தாம்)பிள்ளைகளைப் பராமரிக்கவும்,சீதன பாதனங்களை அதிகப்படுத்திப் பெற்றுக் கொ (ல்)ள்(ல்)ளவுமே///
ஹா..ஹா..ஹா.... நீங்க இருட்டடி வாங்கப்போறீங்க:))))... எதுக்கும் கொஞ்ச நாளைக்கு காருக்கு , ரூம் டோருக்கெல்லாம் ஆமைப்பூட்டுப் போட்டபடி இருங்க.....:)))).
குட்டிப் பின் குறிப்பு:
நீங்க சொல்வதில் பல உண்மைகள் புதைஞ்சு கிடக்கு:))).
ஆதிரா அல்ல... “அதிரா”
குறும்படம் ட்ரைலர் மிரட்டல்+அசத்தல்.
என்னத்தை சொல்ல? அவரவர் தலையில் என்ன எழுதியிருக்கோ அதன்படி தான் நடக்கும். அமெரிக்கா வந்து கஷ்டப்படும் பெண்களை விட கனடாவில் நிறையப் பெண்கள் மன அழுத்த நோய்க்கு ஆளாகி இருப்பதை நிறையப் பார்த்திருக்கிறேன்.
Yoga.S.FR has left a new comment on the post "வெளியே சொன்னால் வெட்க கேடு - விவகாரமான விடயம்!":
ஆதிரா,வயதான பெற்றோரை இங்கு புலம்பெயர் தேசத்துக்கு அழைப்பது பெற்ற(தாம்)பிள்ளைகளைப் பராமரிக்கவும்,சீதன பாதனங்களை அதிகப்படுத்திப் பெற்றுக் கொ (ல்)ள்(ல்)ளவுமே!
@யோகா ஐயா !
பொதுவாக இப்படிச் சொல்ல முடியாது பிரென்ஸ் தேசத்தின் அகதி விசாவில் இருக்கும் என் போன்றோருக்கு தாயகத்தில் இருக்கும் பெற்றோருக்கு திடீர் என்று ஏதாவது நிகழ்ந்தால் உடனடுயாகப் போகமுடியாது அப்படி இருக்கும் போது அவர்களின் முதுமைக்காலத்தில் பிள்ளைகளுடன் இருந்தால் கவலை இல்லை
என்றுதானே சிலர் இங்கே வரவேற்கின்றார்கள் இறுதிக்காலத்தில் அவர்களும் ஒரு குழந்தைகள் தானே அப்படித்தான் நான் என்னுகின்றேன் சிலர் பிள்ளைகளைப் பார்க்கின்றார்கள் தான் என்றாலும் இப்படியும் ஒரு கோணம் இருக்கு ஐயா. நாங்கள் அம்மாவை வீட்டில் வேலை செய்ய விடுவதில்லை அவர்கள் இனி ஓய்வாக இருக்க வேண்டிய காலம் .

@யோகா ஐயா நான், நீங்கள்,அதிரா இந்த பின்னூட்டங்களின் மூலம் நிரூபனின் பதிவை வேறு தளத்துக்கு கொண்டு போவது போல் இருக்கு .
கருத்துப்பிழை எனின் மன்னிக்கவும் ஐயா.
சிலதுக்கு ஆசைப்பட்டு பலத்தை இழக்கும் நிலைமை தான் சகோ!
உண்மையில் வேதனையான விஷயம்...
ட்ரைலர் Superb...
குறும்பட ஆக்கத்தில் பங்கு பெற்றோர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
@கோகுல்
தன் மகள் உண்மையாகவே சந்தோசமாக இருக்கிறாளா இல்லையா என்று கூட தெரியாமல்,தங்கள் மகள் வெளிநாட்டு மாப்பிளைக்கு வைக்கப்பட்டால் சந்தோசமாக இருப்பாள் என நினைத்து பின் வருந்துவது கேக்கவே கவலை அளிக்கிறது.நிச்சயம் விழிப்புணர்வு தேவை!
//
இப்படிச் சில ஜென்மங்கள் எம் தமிழ்ச் சமூகத்தில் உள்ளதால் தான் இன்றைய கால கட்டத்தில் விவாகாரத்து எனும் விடயமும் சர்வ சாதாரணமாகி விட்டது.
நன்றி கோகுல் பாஸ்.
@கோகுல்
குறும்பட ஆக்கத்தில் பங்கு பெற்றோர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ஆவலாய் எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறோம்!
//
நன்றி சகோ.
உங்கள் வாழ்த்துக்கள் நிச்சயம் அவர்களைப் போய்ச் சேரும்.
@சசிகுமார்
மாப்ள பதிவு நன்று...குறும்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...ட்ரைலர் இங்க பார்க்க முடியல வீட்ல பார்க்கிறேன் நன்றி...
//
நன்றி பாஸ்...
@சசிகுமார்
மாப்ள பதிவு நன்று...குறும்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...ட்ரைலர் இங்க பார்க்க முடியல வீட்ல பார்க்கிறேன் நன்றி...
//
அதுவா...
பின்னூட்டப் பெட்டியில் பலர் வந்து வாந்தி எடுக்கத் தொடங்கிய நாளிலிருந்து..
ஹி...ஹி..
@Mohamed Faaique
கல்யாணப் பதிவா போட்டு கலக்குரீங்க பாஸ்....
//
இதெங்க மச்சி, கல்யாணப் பதிவு..
இது ஒரு ஆதங்கப் பதிவு மச்சி,
@K.s.s.Rajh
யதார்த நிலையைச் சொல்லி நிற்கும் பதிவு.......
இத்துடன் என் கமண்டை நிறுத்திக்கொள்கின்றேன்.
//
ஆமா இப்படி எல்லோரும் ஓடினால் யார் பதில் சொல்வது?
@K.s.s.Rajh
பெரியவர்கள்...சக பதிவர்கள் என்ன கருத்து சொல்கின்றார்கள் என்று பார்த்து...நான் எனது சில கருத்துக்களை சொல்கின்றேன் இபோதைக்கு அப்பீட்டு....
//
அடிங் ராஸ்கல்..
இதில என்ன பெரியவர்கள்? சிறியவர்கள் வேறுபாடிருக்கு?
எல்லோரும் ஒரே வயது என்று கருத்திற் கொண்டு, அனுபவ அறிவினைப் பயன்படுத்திக் கருத்துப் போடுறது?
@தனிமரம்
காத்திரமான பதிவு சில விடயங்கள் பின்னே தொக்கி நிற்கின்றதது விவாதிக்கலாம் கருத்துப் பொட்டியைத் திறந்து விட்டால்!
//
அண்ணே..மன்னிக்கவும்,
ரெண்டு நாளா கொஞ்சம் காய்ச்சல்,
தடிமல்....
அதான் பதிவுலகப் பக்கம் வர முடியலை..
இப்போ பின்னூட்டப் பெட்டி திறந்திருக்கு
நீங்க ஜமாயுங்க.
@தனிமரம்
மன்னிக்கவும் என்று சொல்லிப்போட்டு இப்படி முகத்தில் குத்துவது தீபாவளிக் கொண்டாட்டத்தில் இருந்து வெளிவரச் சொல்லியா?
//
எங்கே ஐயா முதுகில் குத்துறேன்
ஹி...ஹி..
எல்லாம் திரட்டப்பட்ட, சேகரிக்கப்பட்ட தகவல்களிலிருந்து எடுத்திருக்கேன் என்று சொல்லியிருக்கேனே..
@தனிமரம்
பதிவை முழுமையாகப் படித்து விட்டேன் என்றாலும் சில கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது சிலதுக்கு நிச்சயம் பின் விளைவுகள் இருக்கு பாஸ்!
//
பாஸ்..இது விவாத மேடை அல்ல..
என்னோட கட்டுரைப் பதிவு.
என் மன ஆதங்கங்களைத் தான் இங்கே சொல்லியிருக்கேன்.
@தனிமரம்
நாற்றுக் குழுமம் எங்கே ஓடிவாருங்கள் தனிமரம் காத்திருக்கின்றேன் உங்களுடன் செம்பு நெளிக்க!
//
அவங்க வருவது இருக்கட்டும்
உங்களின் கருத்துக்களைச் சொல்லலாமே...
@மாய உலகம்
அட யாழ்பானம் குறும்படத்துல நம்ம சகோ மதிசுதா பேர் இருக்கே...
//
ஆமா மச்சி.
@காட்டான்
நீங்களே சொல்லிவிட்டீர்கள் எல்லோரும் அப்படி இல்லைன்னு சக வாசகர்கள் பதிவை வாசித்துவிட்டு பின்னூட்டமிட வேண்டுகிறேன்..!!!!???
//
அட இதுவும் நல்லாத் தானே இருக்கு...
@மதுரன்
வணக்கம் நிரூபன்
நல்லதொரு விடயத்தை கையிலெடுத்துருக்கிறீங்க.. பாராட்டுக்கள்
உண்மையில் பெற்றோர் வெளிநாட்டு வாழ்க்கை, வசதியான வாழ்க்கை என்றுதான் பார்க்கிறார்களே தவிர அதன் பின்னால் உள்ள பிரச்சினைகளை பார்ப்பதில்லை
//
ஆமாம் மது,
எல்லோரும் தமது பிள்ளைகளைக் கரைசேர்த்தால் போதும் மிகுதி அனைத்தும் மாப்பிளை கையில் என்று பிள்ளையில் உள்ள அக்கறையினைக் குறைத்துக் கொள்வதால் தான் இந் நிலமை ஏற்படுகின்றது என நினைக்கிறேன்.
@காட்டான்
உன்மையில் இது ஒரு மனவியல் பிரச்சனை ஊரில்கூட கொஞ்சம் வசதியா மாப்பிள்ளை இருந்தா வயசை பார்க்காமல் திருமணம் செய்து வைக்கிறார்களே..!!
ஏன் நான் சீதனம் வேண்டாம்ன்னு கல்யாணம் கட்டும்போது பெண்வீட்டார் மாப்பிளை ஏன் சீதனம் வேண்டாம்கிறார்ன்னு திரும்ப திரும்ப விசாரித்தார்கள் ஹி ஹி ஹி என்ர அழகுக்கும் அறிவுக்கும்..? நான் நாலு வெள்ளைக்கார பொட்டைகளை வைச்சிருப்பேனோன்னு நினைச்சாங்களோ..??
//
அப்படி இக் காலத்தில் எல்லோரும் இருப்பதில்லைத் தானே..
உள்ளூரில் சீதனம் அதிகமாக கேட்கும் ஒருவருக்கு தன் மகளைக் கட்டிக் கொடுப்பதிலும் பார்க்க, வெளிநாட்டில் சீதனம் வாங்காமல் திருமணம் செய்யும் ஒருவரைத் திருமணம் செய்து கொடுத்தால் தமது குடும்பமும் வளமான வாழ்வைப் பெறும் எனும் நம்பிக்கை தான் இதற்கான காரணம் என நினைக்கிறேன்.
@காட்டான்
என்னை பொறுத்தவரை வயசு வித்தியாசம் ஐந்து வயசுக்குமல் இருப்பது நல்லதல்ல (இது எனது தனிப்பட்ட கருத்து)
//
ஏன் அண்ணே, அனுபவ அறிவு என்று சொன்னால் நல்லம் தானே..
ஹி...ஹி....
@காட்டான்
வெளிநாட்டி இருக்கும் ஒருவருக்கு நான் தரும் குறுக்கு வழியில் எப்படி சீதனம் வாங்களாம் என்னும் ஆலோசனை இது:-
சீதனமே வாங்காது கஷ்டப்பட்ட ஒரு பெண்னை கல்யாணம் செய்யுங்கள்.. பெண் வெளிநாட்டுக்கு வந்தவுடன் உங்கள் ஆண்மையை நிருபிக்கிறேன் பேர்வழின்னு உடனேயே பிள்ளைகளை பெறாதீர்கள்.. வந்த பெண்னோடு சந்தோஷசமாய்?? இருந்துகொண்டே அந்த நாட்டு பாசையை நன்றாக படிக்க வையுங்கள் நன்றாக படிச்ச பெண்னை அவருக்கு பொருத்தமான வேலைக்கு அனுப்பி நீங்களும் வீட்டு வேலைக்கு உதவி செய்து வாருங்கள்..
அதன் பின்பு பிள்ளைகளை பெறுங்கோ.. ஹி ஹி ஹி ஒரு இரண்டு வருஷத்துக்கு பிறகு கூட்டி கழிச்சு பாருங்கோ நீங்க எதிர்பார்த்ததை விட அதிக சீதனம் பெற்றிருப்பீர்கள். மனிசி வீட்டிலேயும் நல்ல பேர் வாங்கியிருப்பீங்க என்ர மாப்பிள தங்கமையா சீதனமே வாங்காம பெண் எடுத்தவர்ன்னு உங்களை மாமா மாமி புகழ்வார்கள்...(தயவு கூர்ந்து செம்பை நெளிக்காதீர்கள் பிடிக்கலைன்னா ஜோக்கா எடுத்துக்கோங்க ஹி ஹிஹி))))
//
நன்றி அண்ணே.
இந்த ஐடியா நன்றாகத் தான் இருக்கு.
இதனை எத்தனை பேர் கடைப்பிடிப்பார்களோ தெரியாதே...
@துளசி கோபால்
உண்மை.
//
நன்றி.
@காட்டான்
துஷியோடு இதைப்பற்றி கூறியிருந்தேன் அவரும் தான் இதைப்பற்றி ஒரு பதிவு போடுகிறேன்னார் நீங்கள் முந்திவிட்டீர்கள் ஹி ஹி ஹி..
//
இந்தப் பதிவிற்கான கருப் பொருளைத் தந்தவர்களுள் நீங்களும் ஒருவர் என்று பெயர் சொல்லி எழுதியிருந்தால் அண்ணே...
பலர் பொங்கி எழுவார்களே என்று தான் ஐரோப்பிய நண்பர்கள் என்று சொல்லியிருந்தேன்.
ஆனால் நீங்களோ...
துணிவாக இப்படிப் பதிவு போடச் சொல்லிய ஆளுள் நீங்களும் ஒருவர் என்று சொல்லி விட்டீர்களே..
ஹி...ஹி...
@Yoga.S.FR
வணக்கம் நிரூபன்,மீண்டும் தீபாவளி நல வாழ்த்துக்கள்!அருமையாக, நடுநிலை நின்று பகிர்ந்திருக்கிறீர்கள்!ஒரு புலம்பெயர் தேசத்து பிரஜைபோல் அழகாக,விடயத்தை ஆணியடித்தாற் போல் சொல்லி சபாஷ் போட வைத்திருக்கிறீர்கள்!சபாஷ்!!!!!!!!!!!!
..//
இனிய ஞாயிற்றுக் கிழமை வணக்கம் ஐயா,
உங்களுக்கும் மீண்டும் வாழ்த்துக்கள்,
நன்றி ஐயா.
மேற்படி விடயங்கள் தொடர்பாக உங்கள் கருத்துக்களை முன் வைத்திருக்கலாமே...
இன்னும் மகிழ்ந்திருப்பேன்.
@காட்டான்
என்ன இருந்தாளும் நம்ம பொண்ணுங்க தலைமுடி அப்படி இருக்கிறதுதானே "கவர்ச்சியா" இருக்கும் நாம வெள்ளைக்காரங்களிடம் இருந்து நல்ல விஷயத்த எடுப்போம் இப்ப வெள்ளைக்காரர்களே மூக்குத்தி குத்துறாங்க பொட்டு வைக்கிறாங்க.. நம்மபொண்னுங்க அவங்களபோல இருந்தா இனி பொடியங்க பொண்ணுங்கள இறக்குமதி செய்யாம வெள்ளக்காரிய கட்டிடுவாங்களேய்யா... இது நல்லாவா இருக்கும்!!!???
//
அண்ணே...மனைவியின் அழகை வீட்டிற்குள் மட்டும் ரசிக்கும் பலர் சொல்லும் கருத்து இது தான்,
வெளியே அவளை நன்றாகா ட்ரெஸ் பண்ணி கூட்டிச் செல்லக் கூடாது எனும் கருத்தில் தான் இதனைப் பலர் சொல்கிறார்கள்.
அதே வேளை கடல் கடந்தும் எம் கலாச்சாரம் இன்றும் போற்றப்படுவதனை நினைத்து மகிழ்கிறேன்.
ஆனால்
எமது கலாச்சாரம், நாங்கள் அதனை மீறக் கூடாது என்று கடைப்பிடிப்பது தவறில்லை. அதே வேளை மனைவியின் மன உணர்வுகளை அறிந்து கொஞ்சம் சுதந்திரம் கொடுக்கலாம் அல்லவா?
நான் இப் பதிவில் சொல்ல வரும் விடயம், ஓவரா கலாச்சாரம் என்று கட்டிப் பிடித்து உடம்பு முழுக்க போர்த்திய உடுப்பை அணிவதற்கு கொஞ்சம் சுதந்திரம் கொடுக்கலாமே..
மனைவியையும் சக மனிதர்கள் அணிவது போல கவர்ச்சியற்ற, ஆனால் கொஞ்சம் மார்டனான (Modern) ஆடைகளை அணிவிக்க அனுமதி கொடுக்கலாமே....
@காட்டான்
நிரூபன் நல்லதோர் பதிவுதான் ஆனால் நீங்க வெளிநாட்டு இளைஞர்கள் ஏன் இப்படி தாமதமாக திருமணம் செய்கிறார்கள்?
அவர்கள் பின்னே இருக்கும் அந்த காசு"பேய்களை" பற்றியும் குறிப்பிட்டிருக்கலாமோ என்னவோ..!!!?
//
அண்ணே...அதான் சொல்லியிருக்கேனே.
கடின உழைப்பின் காரணமாகத் தான் தாமதமாகப் பலர் திருமணம் செய்கிறார்கள் என்று.
அதே வேளை அவர்கள் தம் நிலையினையும் உணர்ந்து மணம் முடிக்கலாம் அல்லவா.
@காட்டான்
ஹி ஹி என்மீது யாராவது செம்பை நெளிக்கமுன்னர் ஒரு தகவல் நான் 23 வயசிலேயே திருமணம் செய்துவிட்டேன் எனக்கும் என் மனைவிக்கும் இடையில் ஒரு வயசுதான் வித்தியாசம் ஹி ஹி பொடியங்களுக்கு வயிறு எரியுதா..!!? ஹா ஹா ஹா அதுதான்யா வேண்டும் எனக்கு..
//
ஹே....ஹே...
இது யாருக்கப்பா...
நீங்கள் நல்லவர் என்று காண்பிக்கவா?
இல்லே...இளம் பொடியங்களுக்கு வயித்தெரிச்சல் கூட்டவா..
@ஜ.ரா.ரமேஷ் பாபு
அவசரப்பட்டு சிலர் செய்யும் தவறுகள் இது நல்லா சொல்லி இருக்கீங்க நிரூ
//
நன்றி பாஸ்...
@காட்டான்
யாழ்ப்பாணம் குறுப்படத்தில் நடிக்கும் என் தம்பி ஈழத்து சூப்பஸ்டார் மதிக்கு என் வாழ்த்துக்கள்..
//
அண்ணே, உங்களோடு சேர்ந்து நானும் அவர்களை வாழ்த்துகிறேன்.
@koodal bala
பெற்றோர்கள் கவனிக்கவேண்டிய விழிப்புணர்வு பதிவு ...
//
நன்றி அண்ணா.
@athira
என்ன நிரூபன்... உள்ளக் குமுறல் பலமாகக் கேட்குது:)).
நீங்கள் சொல்வதும் உண்மைதான் ஒரு பக்கம் நடக்குது...
அதே நேரம், ஊரில் அடுத்த வீட்டுக்கே தனியே போகாத பெண்கள், இங்கு கணவரால் முன்னேற்றப்பட்டு தனியே அனைத்து வேலைகளையும் செய்யும் திறமைசாலிகளாக மாறியிருப்பதையும் காண முடிகிறது. ஊரிலே சைக்கிளை உருட்டவே தெரியாமல் இருந்தவர்கள்கூட இங்கு கார் ஓடுகிறார்கள்... இதெல்லாம் கணவன்மார் கொடுத்த தனம்பிக்கையே.
//
ஆமாம் அக்கா,
பல நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கேன்.
ஊரில் ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் பெண் இருப்பது போன்று,
புலம் பெயர் நாட்டில் ஒவ்வோர் பெண்களின் வளர்ச்சிக்குப் பின்னும் அவர்களின் கணவன்மார் இருக்கிறார்களே என்பது மறுத்துரைக்க முடியாத உண்மையான வரிகள்.
@athira
இதில் யாரிலும் குற்றம் சொல்ல முடியவில்லை... பெற்றோர் எப்பவும் பிள்ளை நல்லாக இருக்க வேண்டும் என்றுதான் எண்ணுவினமே தவிர, பாழும் கிணற்றில் தள்ள நினைக்க மாட்டார்கள்.
அதே நேரம் புரோக்கர் நல்ல இடம் என சொல்லிவிட, அவசர அவசரமாக விசாரிக்காமல்.... மகளைக் கட்டிக்கொடுத்துவிட்டு, பின் மகளின் வாழ்க்கையைப் பாழாக்கி விட்டோமே எனப் புலம்பியோரும் உண்டுதான்.
//
அக்கா, சில இடங்களில் பெற்றோர் தம் பிள்ளை கரைசேர்ந்தால் போதும் என்று நடந்து கொள்வதும் இத்தகைய நிலமைகளுக்கு காரணமாக அமைந்து கொள்கிறதே?
@athira
சீதனம் வாங்குவதில் ஆரைக் குறை சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை. என்னைப்பொறுத்து, மணமகன் நல்லவராகத்தான் இருக்கிறார்:)), ஆனால் பெற்றோர்தான் சீதனம் கேட்கிறார்கள், பெற்றோரை எதிர்த்துப் பேசும் தைரியம் நம் நாட்டு ஆண்களுக்கு இல்லைத்தானே, அதனால் மனம் விரும்பாவிடினும் ஏதோ திருமணம் முடியட்டும் என பொறுத்துப் போவதையும் பார்த்திருக்கிறேன்.
//
ஆமா பெற்றோர்கள் எல்லா இடத்திலும் சீதனத்தை வாங்கி, அவர்களா வைத்திருக்கிறார்கள்?
இல்லையே..
வெளியில் உள்ள பிள்ளைகளிடம் அல்லவா கொடுக்கிறார்கள்?
@athira
கனக்க வேண்டாம் நிரூபன், சீதனம் வாங்கப்படாது எனும் கொள்கையோடு நீங்களும் ராஜ் உம்(ஒரு கதைக்குத்தான்:)) இருந்தாலும், பெற்றோர் ... நீ பேசாமல் இரு அதெல்லாம் எமக்குத் தெரியும், உனக்கு ஒன்றும் புரியாது, உனக்கு சகோதரி இருப்பதை மறந்துவிட்டாயோ என்றால்.....
//
ஆமா இங்கே கொஞ்சம் உதைக்குதே...
ஹி....ஹி...
@கந்தசாமி.
/பாஸ் வெளிநாட்டு மணமகனுக்கு கொடுக்கவேண்டிய சீதனத்திலும் பார்க்க, உள்நாட்டில் அரச உத்தியோகம் பார்க்கும் மணமகன் எதிர்பார்க்கும் சீதனம் பன்மடங்கு அதிகம் ..இது தான் இன்று பெற்றோர்கள் தமது பெண் பிள்ளைகளுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை தேடுவதற்கான ஒரு காரணம் ...இது தான் இன்றைய யாழ்ப்பாணத்தின் நிலைமை ))//
ஆமாம் பாஸ்..
இதுவும் ஒரு காரணம் தான்,.
ஆனால் பெற்றோர் தம் பிள்ளையின் எதிர்காலம் வெளி நாட்டில் வாழுவதால் வளமாக இருக்குமே என்று சிந்திக்கிறார்களேயன்றி,
அவள் வாழப் போகும் வாழ்க்கையின் பின்னணி பற்றி உணர்வதில்லையே..
@கந்தசாமி.
மற்றும் படி வயசு வித்தியாசம் பார்க்காது, வசதி வாய்ப்பை மட்டும் பார்த்து தமது பெண்ணை 'கரை சேர்ந்தால் போதும்' என்ற நோக்குடன் தள்ளி விடுவது கண்டிக்கத்தக்கது..
//
நன்றி பாஸ்..
@சென்னை பித்தன்
வெளிநாட்டு மாப்பிளை என்ற ஒரே தகுதியைக் கருத்தில் கொண்டு பல பெண்கள் பலிகடாவாக்கப்படும் அவலத்தை அருமையாகச் சொல்லியுளீர்கள்.
//
நன்றி ஐயா.
@தமிழ்வாசி - Prakash
சகோ, வெளிநாட்டு கல்யாணத்தில் கொஞ்சம் கவனமா இருக்கிறது நல்லது தானே....
//
நன்றி மச்சி,.
@♥ !முனைங்♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ !
((இவர்களைப் போன்று பலர் தம் நிலை தெரிந்திருந்தும் ஏன் ஈழத்தில் உள்ள அப்பாவிப் பெண்களின் வாழ்க்கையோடு விளையாடுகின்றார்கள் ..))உண்மை.விழிப்புணர்வு தேவை
//
நன்றி பாஸ்..
@MANO நாஞ்சில் மனோ
அப்பெண்களை நான் நேரில் பார்க்கும் போது மிகவும் பரிதாபமாகவே இருக்கிறது...!!!
//
நன்றி அண்ணே.
@MANO நாஞ்சில் மனோ
எங்க ஊர்ல எல்லாம் இப்போ வெளிநாட்டுல இருக்குறவனுக்கு பொண்ணு குடுக்கமாட்டேங்குறாங்க பாஸ்....
//
ஆகா உள் நாட்டில் இருப்போருக்கு யோகம் என்று சொல்லுறீங்க.
@rufina rajkumar
பெண்ணோ ஆணோ வளர்க்கும்போதே அழகுக்கு 'முதல்' இடம் கொடுக்க வேண்டியதில்லை என்பதை உணர்த்த வேண்டும்
அது திருமண நேரத்தில் சொல்லிகொடுத்து வராது.
//
ஆமாம் சரியான கருத்துக்கள்.
நன்றி
@ஹேமா
நிரூ...என் கருத்தின்படி பெற்றோர்கள்மீதே என் வெறுப்பு.சும்மா இருக்கும் பிள்ளையைக்கூட வெளிநாட்டு ஆசை காட்டி கட்டிக்கொடுக்கிறார்கள்.நான் இதுபற்றி 9 வருடங்களுக்கு முன்னமே ஐ.பி.சி வானொலிக்க்கு கவிதை எழுதியிருந்தேன்.என் பதிவிலும் கல்யாணம் என்கிற பெயரில் எழுதியிருக்கிறேன் !
http://kuzhanthainila.blogspot.com/2008/07/blog-post_23.html
//
நன்றி அக்கா.
இக் கவிதையினைப் படித்துப் பார்க்கிறேன்.
@சி.பி.செந்தில்குமார்
எல்லாம் ஃபாரீன் மோகம் தான்
//
நன்றி பாஸ்..
@shanmugavel
உலகம் முழுக்க நடக்கும் விஷயம்தான்.சிலர் வெளிநாட்டு மாப்பிள்ளை மீது மோகம் கொள்வதும் உண்டு.குறும்பட ட்ரைலர் ஆவலைத் தூண்டுகிறது.
//
நன்றி அண்ணா.
@சண்முகம்
வெளி உலகம் தெரியாதவங்க பண்ற தப்பு பாஸ் இது,,,,,,,
//
அப்படி இல்ல பாஸ்...
வெளி உலகம் தெரிந்தும் சிலர் தவறு செய்கிறார்களே.
நாம என்ன பண்ண முடியும்?
@துஷ்யந்தன்
நல்ல ஒரு பதிவு.. ஆனாலும் இப்பதிவில் பல கருத்துக்களுடன் எனக்கு உடன் பாடு இல்லை.
கந்தசாமி சொன்னது போல் வெளினாட்டு மாப்பிளையை விட ஊரில் நிறைய படித்த மாப்புள்ளைக்குத்தான் அதிக சீதனம் பேசபடுகிறது. இதோடு ஒப்பிடும் போது வெளினாட்டவர் பெட்டர்தான்.//
அடோய்....ஏன் உடன்பாடில்லை..
ஹி...ஹி..
உள் நாட்டில் சீதனம் அதிகம் என்பதற்காக தம் பெண்ணின் வளமான வாழ்வு பற்றி மாத்திரம் எண்ணம் கொண்டு பிள்ளையினை மணம் முடித்து வைக்கும் பல பெற்றோரில் எத்தனை பேர் மாப்பிளையின் வயசு வித்தியாசம், அந்நியோன்யம் பற்றிச் சிந்த்தித்து மணம் முடித்து வைக்கிறார்கள்?
@துஷ்யந்தன்
அப்புறம்.. இங்கிருக்கும் மாப்பிளைக்கு சீதனம் எதிர்பார்த்து பேசி வேண்டுவதே ஊரில் இருப்பவர்கள்தான்., ஹா ஹா.
இப்படி ஒரு பதிவை காட்டான் மாமா என்னை எழுத சொல்லியும் நான் தள்ளிப்போட்டு வந்தேன். காரணம் இங்கிருக்கும் பல நல்ல மனிதர்களை (மாப்பிள்ளைகளை.. உதாரணம்: தனிமரம் )
அது காயபடுத்தி விடலாம் என்று :)
//
மச்சி...
நான் இங்கே எல்லோரையும் குற்றம் சுமத்தவில்லையே..
ஹி...ஹி...
குறிப்பிட்ட ஒரு விகிதமானோர் என்று சொல்லியிருக்கேனே...
@துஷ்யந்தன்
இரு பக்கமும் இரு வகையினரும் இருக்கிறார்கள்.
அப்புறம்.. உங்களுக்கு எப்போ பாஸ் கல்யாணம்..?? நீங்க சீதனம் ஒன்றும் வாங்க மாட்டீர்கள் தானே..?? ஹீ ஹீ
//
நான் சீதனம் வாங்க மாட்டேன்..
ஹி....ஹி...
@துஷ்யந்தன்
Athira வின் கருத்தை கவனியுங்கள்..
சிறப்பாய் நியாயமாய் நிஜத்தை சொல்லுகிறார் பாஸ்
சூப்பர் அதிரா ^_^..//
மீண்டும் ஒரு தடவை அதிரா அக்காவிற்கு நன்றி சொல்லிட்டாப் போச்சு,
நன்றி அக்கா.
@உலக சினிமா ரசிகன்
வெளிநாட்டு மோகம் கொண்ட பெற்றோருக்கு விழிப்புணர்வூட்டும் பதிவு.
//
நன்றி அண்ணே.
@angelin
முதலில் Hats off to you Niruban .எப்படிஇங்கே நடக்கும் விஷயத்தை இவ்வளவு தெள்ளதெளிவாக எழுதினீங்க .
.இது உண்மையில் வருந்தத்தக்க வேதனையான விடயம் தான் .
//
நன்றி அக்கா.
@angelin
/வெளிநாட்டில் வாழும் எல்லா ஆண்களையும் நான் குற்றம் சுமத்தவில்லை. //
என் கருத்தும் இதுதான்.பிரச்சினை இருபுறமும் இருக்கு நிரூபன் .
//
நன்றி அக்கா..
@Yoga.S.FR
// நியாயமாகப் பார்த்தால் திட்ட வேண்டும்!என்ன செய்ய, விதிவலியது என்று மனதை தேற்றிக் கொண்டேன்!ஹி!ஹி!ஹி!மவனே மாட்னியா?பிரான்சில இனிமேல் நாப்பத்தைஞ்சு வரியம் வேலை செய்ய வேணும்,ராசா!//
ஐயா..அந்தாள் நல்லா வயசு போன ஆள் ஐயா.
ஹ்...ஹி...
ஆள் பென்சன் எடுக்கிற காலத்தை நெருங்கிட்டார் என்று நினைக்கிறேன்.
நீங்கள் என்ன எங்கள் காட்டான் மாமா இப்போதும் 24 என்று நினைத்து கமெண்ட் போட்டிருக்கிறீங்க.
ஹி...ஹி...
@athira
இன்னுமொன்று கேள்விப்பட்டேன், யாழில் புரோக்கர்மாரிடம் குறிப்பைக் கொடுத்து, எங்கட மகனுக்கு சீதனம் வேண்டாம், நல்ல பெண்ணாகப் பாருங்கோ என்றால்....
புரோக்கர் சொல்லுவாராம்... ஏன் உங்கட மகனுக்கு என்ன குறை, நானெல்லோ சீதனம் வாங்கித்தருவேன் என ஆசையைத் தூண்டுவாராம்...
ஏனெண்டால் ஒரு லட்சம் சீதனம் வாங்கினால்.... கொமிஷன் 1000 ரூபாயாம்... அப்போ 50 லட்சம் சீதனம் என்றால் புரோக்கருக்கு 50 ஆயிரம்:))).
இரண்டு கல்யாணம் பொருத்திக் கொடுத்தால் இருந்த இடத்திலேயே மாடி வீடு கட்டிப்போடுவார் அவர்:))).
இப்போ எல்லாமே வியாபாரமாகிவிட்டதே.....
//
ஆமாம் இதுவும் உண்மை தான் அக்கா.
அதே வேளை...புரோக்கர்மாரின் தூண்டலைப் பற்றிப் பெற்றோர் சிந்திப்பதும் நன்மையளிக்கும் அல்லவா?
@காட்டான்
வணக்கமண்ண ஏன் அண்ண இப்படி வயித்தில புளிய கரைக்கிறீங்க.. நான் பென்சன் எடுக்கிறவயசில இஞ்ச அந்த சிஸ்டம் இருக்குமோ அண்ண..!!
அப்போ பெஞ்சன எதிர்பார்த்தா பிழைப்பு ஓடாது இப்பவே ஆவன செய்யவேண்டியதுதான்... !!!!!??))//
ஹே...ஹே...
காட்டான் மாமாவிற்கு இப்ப சாப்பிட்ட சாப்பாடும் சொரிக்காது என்று நினைக்கிறேன்.
@காட்டான்
அது சரி சகோதரி ஆதிரா அங்க பொடியனுக்கு என்று வாங்கிற சீதனத்த அவங்க வெளிநாட்டில இருக்கிற பொடியனுக்கே கொடுத்தத கேள்விப்பட்டிருக்கீங்களோ..!!?ஹி ஹி நான் கேள்விப்படல அப்போ கையால தொடாத அந்த காச வாங்கவைச்சு ஏன் இந்த பொடியங்க கெட்ட பெயர் எடுக்கோனும்..????//
ஹி...ஹி...
அப்ப என்ன பெற்றோருக்காக பிள்ளைகள் பிஸ்னஸிலையா ஈடுபடுகின்றார்கள்?
கலியாணம் எனும் பெயரில்?
@!* வேடந்தாங்கல் - கருன் *!
குறும்படம் ட்ரைலர் மிரட்டல்+அசத்தல்.
//
நன்றி பாஸ்..
@FOOD
உண்மையில் கையில் எடுக்க வேண்டிய விஷயத்தை எடுத்துள்ளீர்கள். உரைப்பவர்களுக்கு உரைக்க வேண்டுமே!
//
நன்றி அண்ணே..
@vanathy
என்னத்தை சொல்ல? அவரவர் தலையில் என்ன எழுதியிருக்கோ அதன்படி தான் நடக்கும். அமெரிக்கா வந்து கஷ்டப்படும் பெண்களை விட கனடாவில் நிறையப் பெண்கள் மன அழுத்த நோய்க்கு ஆளாகி இருப்பதை நிறையப் பார்த்திருக்கிறேன்.
//
அடடா..வானதி அக்காவா..
வாங்கோ..வாங்கோ..நான் நினைத்தேன் நீங்க ஹொலிடே போயிட்டீங்க என்று...
நல்ல கருத்து அக்கா.
@தனிமரம்
@யோகா ஐயா !
பொதுவாக இப்படிச் சொல்ல முடியாது பிரென்ஸ் தேசத்தின் அகதி விசாவில் இருக்கும் என் போன்றோருக்கு தாயகத்தில் இருக்கும் பெற்றோருக்கு திடீர் என்று ஏதாவது நிகழ்ந்தால் உடனடுயாகப் போகமுடியாது அப்படி இருக்கும் போது அவர்களின் முதுமைக்காலத்தில் பிள்ளைகளுடன் இருந்தால் கவலை இல்லை
என்றுதானே சிலர் இங்கே வரவேற்கின்றார்கள் இறுதிக்காலத்தில் அவர்களும் ஒரு குழந்தைகள் தானே அப்படித்தான் நான் என்னுகின்றேன் சிலர் பிள்ளைகளைப் பார்க்கின்றார்கள் தான் என்றாலும் இப்படியும் ஒரு கோணம் இருக்கு ஐயா. நாங்கள் அம்மாவை வீட்டில் வேலை செய்ய விடுவதில்லை அவர்கள் இனி ஓய்வாக இருக்க வேண்டிய காலம் .
//
தனிமரம் பாஸ்;
யோகா ஐயா ஒட்டு மொத்தப் புலம் பெயர் உள்ளங்களையும் அப்படிச் சொல்லவில்லை.
குறிப்பிட்ட ஒரு விகிதமானோரைத் தான் சொல்லியிருக்கிறார்.
விசாவுடன் இருந்து பெற்றோரைக் கூப்பிட்டு வைத்திருப்போரை மாத்திரம் இங்கே சுட்டியிருக்கார்.
@தனிமரம்
@யோகா ஐயா நான், நீங்கள்,அதிரா இந்த பின்னூட்டங்களின் மூலம் நிரூபனின் பதிவை வேறு தளத்துக்கு கொண்டு போவது போல் இருக்கு .
கருத்துப்பிழை எனின் மன்னிக்கவும் ஐயா.
//
ஆமா இதெங்கே நடக்கிறது...
@மைந்தன் சிவா
சிலதுக்கு ஆசைப்பட்டு பலத்தை இழக்கும் நிலைமை தான் சகோ!
//
ஹே...ஹே...
நன்றி பாஸ்.
@ரெவெரி
உண்மையில் வேதனையான விஷயம்...
ட்ரைலர் Superb...
குறும்பட ஆக்கத்தில் பங்கு பெற்றோர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
//
நன்றி பாஸ்..
அன்பிற்குரிய உறவுகளுக்கு,
மழையில் நனைந்து, தீபாவளி கொண்டாடிய காரணத்தினால்
(யோ...தண்ணி - குடி பான மழை இல்லை....) rain...
ஹி....
எனக்கு லைட்டான காய்ச்சல்,
கொஞ்சம் தலையிடி,
தடிமல் உருவாகி இருக்கு..
Hay Fever...
ஆதலால் தான் உடனுக்குடன் உங்கள் பதிவுகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை.
பலரின் ஏகோபித்த வேண்டுகோளுக்கமைவாக ஏழாம் அறிவு படம் பாத்து விமர்சனம் எழுத வேண்டியுமுள்ளது.
ஹி...ஹி...
முடிந்த வரை உடல் நிலையினைத் தேற்றிக் கொண்டு ப்ளாக்கிற்கு வருகிறேன்.
உங்கள் அனைவரின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி.
இங்கே பின்னூட்டம் மூலமாக தங்கள் உளக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அனைத்து அன்பு உறவுகளிற்கும் நன்றி!
@தனிமரம்
@யோகா ஐயா நான், நீங்கள்,அதிரா இந்த பின்னூட்டங்களின் மூலம் நிரூபனின் பதிவை வேறு தளத்துக்கு கொண்டு போவது போல் இருக்கு //
நான் இதுபற்றி வேறு எங்கேயும், எந்தத்தளத்திலும் கதைக்கவில்லையே... எதுக்கு என் பெயர் இதில் இணைத்திருக்கிறீங்க?.. இங்கு கதைக்கவே நேரமிருக்கவில்லை, நிரூபனுக்காகவே கதைத்தேன் வந்து.
@தனிமரம்
@யோகா ஐயா நான், நீங்கள்,அதிரா இந்த பின்னூட்டங்களின் மூலம் நிரூபனின் பதிவை வேறு தளத்துக்கு கொண்டு போவது போல் இருக்கு .
கருத்துப்பிழை எனின் மன்னிக்கவும் ஐயா.
//
அன்பிற்குரிய தனிமரம்,
இப் பதிவினை ஒரு கட்டுரைத் தொகுப்பாக எழுதினேனே அன்றி, இதனை ஓர் விவாதமேடைப் பதிவாக நான் எழுதவில்லை.
ஆனால் பதிவின் ஆரம்பத்திலே பதிவின் உள்ளடக்கம் புரியாது நீங்கள் தான் இந்தப் பதிவினை ஓர் விவாத மேடைப் பதிவாக கருதி பெரியவர்களின் கருத்துக்களுக்காக காத்திருப்பதாக சொல்லியிருந்தீங்க.
ஆதிரா அக்கா, யோகா ஐயா கூறிய கருத்துக்களில் தவறேதும் இல்லை.
அவர்கள் பதிவின் உள்ளடக்கத்தினை, தார்ப்பரியத்தை புரிந்து கொண்டு தான் தமது கருத்துக்களை இங்கே வைத்திருக்கிறார்கள்.
தாங்கள் சொல்லும் வேறு தளம்?
அதற்கான பரிபூரண விளக்கத்தினை இங்கே முன் வைக்க முடியுமா?
அல்லது தங்களின் கருத்தினை திரும்பப் பெற்றுக் கொள்ளவும்,
நேசமுடன்,
செ.நிரூபன்.
அன்பின் நிரூபன்!
இந்தப் பதிவில் நீங்கள் கட்டுரை வடிவில் வைத்தது நன்றாக புலப்பட்டது என்றாலும் சில கட்டுரையில் விவாதிக்கும் கருத்துப் பொருள் உள் இருப்பது மூத்த பதிவாளர் உங்களுக்குப் புருயாதது அல்ல!
இதில் இரண்டு விடயத்தை முன்னே தொக்கி நிற்கின்ற ஒரு விடயமாக இருப்பது//
பெண்ணுக்கு வேண்டிய இளமைச் சுகத்தினையோ அல்லது தாம்பத்தியச் சுகத்தினையோ அவரால் கொடுக்க முடியாத நிலை. இதற்கான காரணம் அவர் நீண்ட காலம் கடினமாக உழைத்த காரணத்தினால் முள்ளந் தண்டுப் பகுதியில் சத்திர சிகிச்சை (ஓப்பரேசன்) மேற்கொள்ளப்பட்டு மருத்துவரின் அறிவுறுத்தலின் பிரகாரம் அவரால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாதாம். //
இந்தப்பகுதியில் எனக்கு ஐயம் இருக்கு நிரூ தாம்பத்தியம் மட்டும் தான் வாழ்க்கையா??
இந்த முள்ளந்தண்டு வலி புலம்பெயர்ந்தவர்களுக்கு மட்டும் மல்ல தாயகத்தில் வாகணம் ஓட்டுவோர் ,சந்தைப்படுத்தலில் இருப்போர் பலருக்கும் இருக்கும் வலி அதனால் இந்த பகுதியை என்னால் கடந்து போக முடியவில்லை என்பதே நிஜம் இது பிழை எனின் என் பின்னூட்டத்தை உங்கள் பார்வையில் இருந்து சந்தோஸந்த்துடன் மீளப் பெறுகின்றேன் . இதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை!
இரண்டாவது//
தாங்கள் சொல்லும் வேறு தளம்?
அதற்கான பரிபூரண விளக்கத்தினை இங்கே முன் வைக்க முடியுமா?
வெளிநாட்டுக்கு பெற்றோர்களை வரவைப்பது தங்கள்( பிள்ளைகளைப்) பார்க்கும் வேலைக்காரி என்பதாக இருப்பது பற்றியதை விவாதிக்கனும் ஒரு சிலர் ஒரு சில ஐரோப்பிய நாட்டில் செய்வதால் பொதுவாக அப்படியான கருத்தில் சொல்லுவதில் நான் ஒரு போதும் உடன் பட மாட்டன் இது தன் தாய் தகப்பன் மீது மகனுக்கு இருக்கும் பாசத்தை புரியாது வெளியில் பார்ப்போர் சொல்லும் குற்றச்சாட்டு நிரூ!
இலங்கையின் கொழும்பில் வாழுல் முதியவர்கள் எல்லோரையும் இது சாடும் மகனுடம்/மகளுடன் இருப்போர் எல்லோருமா வேலை வாங்கப்படுகின்றார்கள் ஏன் முதியோர் இல்லத்திற்கு அனுப்புகின்றார்கள் என்பதன் பின் இன்னொரு கோணம் இருக்கு என்பதை சொல்லத்தான் வேறு தளம் என்ற அர்த்தம் இது தான் என் சாரம் இது ஏற்புடையது இல்லை என்றாள் உங்கள் தீர்ப்பை ஏற்று எனது இந்தப்பதிவில் தனிமரத்தின் சகல பின்னூட்டங்களையும் மீளப் பெற்றுக்கொள்கின்றேன் சந்தோஸத்துடன் !
நன்றி நண்பர் நிரூபனுக்கு !
உங்கள் புரிந்துணர்வுக்கு
இப்படிக்கு
தனிமரம்!
இதில் பரிதாபமான விடயம் என்னவென்றால் ஐரோப்பிய வீதிகளில் பல பெண்கள் தலையினை ஸ்ரைற்றினிங் (Hair Straightening) பண்ணிச் செல்ல எம் தமிழ்ப் பெண்களோ ஈழத்தில் வாழ்ந்த அதே சிக்குப்பட்ட பரட்டைத் தலை முடியோடு செல்ல வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள்.
............
நிரூ, மிகவும் காலத்திற்கும் நமது பல மட்டமான சிந்தனை போக்குடைய ஆண்கள், பெற்றோருக்குமான பதிவு ஏன் பெண்களுக்குமான பதிவும் கூட. உண்மையாகவே இந்த பதிவை வாசிக்கையில்தான் பல யதார்த்தத்திற்கு முரணான விடயங்களை நம்மில் பலர் நாடுவதற்கு முற்படுகிறோம் என்பது புரிகிறது.. இந்த விடயத்தை முதல் கையில் எடுத்து அதை சரியாக வெளிப்படையாக சொன்னதற்கு வாழ்த்துக்கள்.. தொடரட்டும் உங்கள் எழுத்து...
@தனிமரம்
அன்பின் நிரூபன்!
இந்தப் பதிவில் நீங்கள் கட்டுரை வடிவில் வைத்தது நன்றாக புலப்பட்டது என்றாலும் சில கட்டுரையில் விவாதிக்கும் கருத்துப் பொருள் உள் இருப்பது மூத்த பதிவாளர் உங்களுக்குப் புருயாதது அல்ல!
இதில் இரண்டு விடயத்தை முன்னே தொக்கி நிற்கின்ற ஒரு விடயமாக இருப்பது//
பெண்ணுக்கு வேண்டிய இளமைச் சுகத்தினையோ அல்லது தாம்பத்தியச் சுகத்தினையோ அவரால் கொடுக்க முடியாத நிலை. இதற்கான காரணம் அவர் நீண்ட காலம் கடினமாக உழைத்த காரணத்தினால் முள்ளந் தண்டுப் பகுதியில் சத்திர சிகிச்சை (ஓப்பரேசன்) மேற்கொள்ளப்பட்டு மருத்துவரின் அறிவுறுத்தலின் பிரகாரம் அவரால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாதாம். //
இந்தப்பகுதியில் எனக்கு ஐயம் இருக்கு நிரூ தாம்பத்தியம் மட்டும் தான் வாழ்க்கையா??
//
அன்பிற்குரிய தனிமரம்,
பெண்ணுக்கு தாம்பத்யம் இல்லை என்றாலே பிரிந்து செல்லும் பக்குவம், மனப்பான்மை எமது சமூகத்தில் வந்து விட்டதை தாங்கள் அறியவில்லையா?
இன்றைய கால கட்டத்தில் பல பெண்கள் தமது கணவர் சரியில்லை எனும் காரணத்தினால் தானே வீட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு ஆளாகின்றார்கள்?
தாம்பத்தியம் இன்றி வாழ்வது என்னவோ அந்தக் கால வாழ்கைக்கு (இற்றைக்கு 10 வருடங்களுக்கு முற்பட்ட கால வாழ்க்கைக்கு) ஏதுவாக அமைந்து கொள்ளும், ஆனால் இன்றைய கால கட்டத்தில் தொழில் நுட்ப சாதனங்கள் வரிசையில் தொலைக்காட்சியில் வரும் உணர்ச்சியினைத் தூண்டும் காட்சிகள், இன்ன பிற விடயங்கள், ஐரோப்பிய வீதிகளில் ஒவ்வோர் இடங்களிலும் காதலியை, மனைவியை வைத்து தாம் விரும்பிய நேரத்தில் கொஞ்சி மகிழும் தம்பதிகளின் காட்சிகள் வீட்டிற்குள் செத்த பிணம் போல வைக்கப்பட்டிருக்கும் ஒரு பெண்ணின் மனதில் எத்தகைய உணர்வினை ஏற்படுத்தும்?
@தனிமரம்
இந்தப்பகுதியில் எனக்கு ஐயம் இருக்கு நிரூ தாம்பத்தியம் மட்டும் தான் வாழ்க்கையா??
//
தாம்பத்தியம் தான் வாழ்க்கை எனும் கருத்தினை ஒரு புறம் வைத்து விட்டு, கொஞ்சம் பேசிப் பார்ப்போமா?
வீட்டுச் சிறைக்குள் அடைத்திருக்கும் மனைவியை, சாரி வீட்டினுள் எந்த நேரமும் இருக்கும் மனைவியை
அவர்களின் கணவன்மாரில் எத்தனை பேர் ஒரு சினிமாவிற்கோ அல்லது நல்ல நிகழ்வுகளிற்கோ,
அல்லது தான் வேலையால் வந்த உடனே ஒரு வெளியிடத்திற்கோ அழைத்து பேசி மகிழ்கிறார்கள்?
அண்மையில் லண்டனின் இருக்கும் பிரபல பெண் சட்டத்தரணி ஒருவரை (உறவினர்) தொலைபேசி மூலமாகப் பேசும் வாய்ப்பு கிடைத்தது.
பல பெண்களின் கணவன்மார் தமது கடின வேலையினை எரிந்து விழுதல், அதிகமாக பொங்கி எழுந்து ஆத்திரத்துடன் பேசுதல் முதலிய செயற்பாடுகளினூடாக உணர்த்திக் காட்டுவதாகவும்,
இதனால் பல பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகுவதாகவும் ஒரு சில துணிந்த பெண்கள் மாத்திரம் விடயங்களை வெளியே சொல்லிக் கொள்வதாகவும் சொல்லியிருக்கிறார்..
இது தொடர்பாக தாங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள்?
@தனிமரம்
வெளிநாட்டுக்கு பெற்றோர்களை வரவைப்பது தங்கள்( பிள்ளைகளைப்) பார்க்கும் வேலைக்காரி என்பதாக இருப்பது பற்றியதை விவாதிக்கனும் ஒரு சிலர் ஒரு சில ஐரோப்பிய நாட்டில் செய்வதால் பொதுவாக அப்படியான கருத்தில் சொல்லுவதில் நான் ஒரு போதும் உடன் பட மாட்டன் இது தன் தாய் தகப்பன் மீது மகனுக்கு இருக்கும் பாசத்தை புரியாது வெளியில் பார்ப்போர் சொல்லும் குற்றச்சாட்டு நிரூ!
இலங்கையின் கொழும்பில் வாழுல் முதியவர்கள் எல்லோரையும் இது சாடும் மகனுடம்/மகளுடன் இருப்போர் எல்லோருமா வேலை வாங்கப்படுகின்றார்கள் ஏன் முதியோர் இல்லத்திற்கு அனுப்புகின்றார்கள் என்பதன் பின் இன்னொரு கோணம் இருக்கு என்பதை சொல்லத்தான் வேறு தளம் என்ற அர்த்தம் இது தான் என் சாரம் இது ஏற்புடையது இல்லை என்றாள் உங்கள் தீர்ப்பை ஏற்று எனது இந்தப்பதிவில் தனிமரத்தின் சகல பின்னூட்டங்களையும் மீளப் பெற்றுக்கொள்கின்றேன் சந்தோஸத்துடன் !
//
ஹே...ஹே...
நீங்கள் இங்கே சுட்டும் மேற்படி கருத்து எப்படிப் பதிவினை வேறு தளத்திற்கு இட்டுச் செல்லும்?
புரியலையே?
ஒரு பெண்ணுக்கு மணம் முடித்து வைக்கும் போது, அதிக சீதனம் கொடுக்கும் பெற்றோரும் சரி.
அல்லது ஏனைய சாதாரண மக்களும் சரி தமது மாமியாரைத் தான் முதலில் அழைப்பார்கள்.
மாமியாரை மனுசி பெறுமாதமாக இருக்கும் போது விசிட்டிங் விசாவில் அழைத்து விட்டு, பிள்ளையினைப் பராமரிப்பதற்கும் வீட்டு வேலைகளைப் பார்ப்பதற்கும் காரணங் காட்டித் தானே அழைக்கிறார்கள்.
பாசத்தில் மாமியாரையோ அல்லது பெற்றோரையோ மனைவி மாசமாக முன்னர் வெளிநாட்டில் உள்ளோர் அழைக்கலாமே..
என்ன லாஜிக் உதைக்குதா?
நான் வன்னியில் இருந்த போது அறிந்த இன்னோர் விடயம்,
இவ்வாறு மாமியாரை, அல்லது தாயை தன் பிள்ளைப் பேறு நிகழ்வுகளைப் பார்க்க அழைக்கும் தம்பதிகள் அகதி விசாவிற்கு அப்ளை பண்ணி காலம் பூராவும் தம் கூட வைத்திருக்க முயற்சி செய்த சம்பவங்களும் உண்டு,
மாமியார் விசா பெற்றால் பின்னர் மாமனாரை ஸ்பொன்சர் பண்ணுவா.
இதெல்லாம் தாங்கள் அறியாததா?
ஹி....ஹி....
ஆக நாங்கள் இங்கே கொழும்பில் உள்ள முதியோரைப் பற்றி பதிவில் பேசவில்லை.
மீண்டும் சொல்கிறேன்.
வெளிநாட்டு மோகத்தால் எம் சமூகத்தில் ஏற்படும் வெளித்தெரியாத பிறழ்வுகளைப் பற்றித் தான் நான் பதிவெழுதினேன்.
அதற்கு தகுந்தாற் போல யோகா ஐயா,
அதிரா அக்கா முதலியோர் தம் கருத்துக்களை வைத்திருந்தார்கள்.
பெற்றோர் மீதான பாசத்தில் கூப்பிடுவோரும் இருக்கிறார்கள் தான்.
ஆனால் பெரும்பாலானோர் தம் பிள்ளைகளைப் பராமரிக்க, வேலை வாங்க அல்லவா தம் பெற்றோரை வெளிநாட்டிற்கு அழைக்கிறார்கள்.
super post
super post
அருமையான கட்டுரை ஈழபெண்கள் மட்டுமல்ல தமிழகத்திலும் இதுபோல் கொடுமைகள் நடக்கின்றது...
தாம்பத்தியம் தான் வாழ்க்கை எனும் கருத்தினை ஒரு புறம் வைத்து விட்டு, கொஞ்சம் பேசிப் பார்ப்போமா?
வீட்டுச் சிறைக்குள் அடைத்திருக்கும் மனைவியை, சாரி வீட்டினுள் எந்த நேரமும் இருக்கும் மனைவியை
அவர்களின் கணவன்மாரில் எத்தனை பேர் ஒரு சினிமாவிற்கோ அல்லது நல்ல நிகழ்வுகளிற்கோ,
அல்லது தான் வேலையால் வந்த உடனே ஒரு வெளியிடத்திற்கோ அழைத்து பேசி மகிழ்கிறார்கள்?//
அன்பின் நிரூபன்
இந்தப்பகுதியைப் பற்றிக் கதைப்பது என்றாள் விவாதம் விதாண்டாவாதம் ஆகிவிடும் சில விடயங்களை நிறுவிச் சொல்லும் போது வெளிவிடயங்களையும் சேர்க்க வேண்டி வரும் ஆகவே எனக்கு உடன்பாடு இல்லாத சில விடயங்களை விவாதிக்க எனக்கு விருப்பம் இல்லை !
ஆகவே நீங்கள் கூறியது போல் மூத்தவர் யோகா ஐயாவுக்கும் சகோதரி ஆதிராவிற்கும் என் பின்னூட்டம் வருத்தம் அழித்திருக்கும் என்பதால் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு என் சகல பின்னூட்டங்களையும் வாபஸ் வாங்கின்றேன் இந்தப்பதிவில்!
காட்டான் said...
ஹி ஹி என்மீது யாராவது செம்பை நெளிக்கமுன்னர் ஒரு தகவல் நான் 23 வயசிலேயே திருமணம் செய்துவிட்டேன் எனக்கும் என் மனைவிக்கும் இடையில் ஒரு வயசுதான் வித்தியாசம் ஹி ஹி பொடியங்களுக்கு வயிறு எரியுதா..!!? ஹா ஹா ஹா அதுதான்யா வேண்டும் எனக்கு.//
உண்மையிலயே வயிறு எரியுது மாம்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. ஹா ஹா
நான் லேட்டா வந்துட்டேன் பாஸ்.. ஆஹா அதிஸே கருத்துல பின்னி பெடலெடுத்துருக்காங்களே.... நல்ல விழிப்புணர்வு ஆதங்க பகிர்வு நண்பா.. சூப்பர் பாஸ்..
ட்ரைலர் சூப்பர் பாஸ்
Post a Comment