Thursday, October 27, 2011

வேலாயுதம் - தூள் கிளப்பும் ஆக்சன் - கொஞ்சம் பழைய சாயலடிக்கும் சென்டிமென்ட்!

இளகிய மனமுடையோர், மற்றும் குழந்தைகளுக்கு உகந்த படம் அல்ல!
புத்தாடை அணிந்து, மத்தாப்புக் கொழுத்தி மகிழ்வோடு உறவினர்கள் அனைவருடன் இணைந்து தீபத் திருநாளைக் கொண்டாடி விட்டு, கணினி முன்னே உட்கார்ந்திருப்போருக்கும், மற்றும் ஏனைய உறவுகளுக்கும் வணக்கம் & மீண்டும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்! தமிழ் சினிமா வரலாற்றில் நீண்ட காலமாக இருந்து வந்த பண்டிகைக் கால ரஜினி - கமல் படங்களின் அந்தஸ்தினையும், தியேட்டர் உரிமத்தினையும் தற்போது தன் வசம் தக்க வைத்திருக்கும் ஒரேயொரு மாஸ் ஹீரோ இளைய தளபதி விஜய் அவர்கள் தான்.  பண்டிகைக் காலத்தில் வெளியிடப்படுகின்ற படங்கள் ஜனரஞ்சக அந்தஸ்தினைக் கருத்திற் கொண்டு வெளியடப்படும் அதே சூழலை உணர்ந்தவர்களாக கதாநாயகர்கள் படக் கருவினைக் தேர்வு செய்தால் மக்களுக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கும்! அதே வேளை சலிப்பும் இருக்காது.
நீண்ட காலத்தின் பின்னர் விஜய் படங்கள் பற்றிய பல்வேறு பட்ட காமெடிகள், கலாய்த்தல்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில் ஒரு வித்தியாசமான படமாக இப் படம் அமைந்து கொள்ளும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தினைக் கொடுத்திருக்கிறார் வேலாயுதம் பட இயக்குனர் M.ராஜா அவர்கள். வழமையான தமிழ்ச் சினிமாவின் சாயலில் இப் படம் வந்திருப்பினும் ஆங்கில - உலகப் படங்களின் கதை நகர்விற்கு இணையாக ஒரு திருப்பு முனையிலிருந்து படத்தினை தொடக்கியிருக்கின்றார்கள் வேலாயுதம் படக் குழுவினர். சென்னையில் குண்டு வைத்த மர்மக் கும்பலின் ஆரம்ப அசம்பாவிதச் சம்பவத்தோடு தொடங்கும் படத்தில் தனக்கு கிடைத்த அமெரிக்க பயண வாய்ப்பினை உதறித் தள்ளி விட்டு, தன் தாய் நாட்டிற்காக சுதந்திர ஊடகவியலாளராகப் பணி புரிய வேண்டும் எனும் ஆவலுடன் களமிறங்குகிறார் கதாநாயகி ஜெனலியா.

"தீவிரவாதிகள் பற்றிய சேதிகளையும், அநீதி புரிவோரையும் ஆத்மார்த்த ரீதியில் தட்டிக் கேட்டால் தான் அது உண்மையான ஊடகவியலாளனுக்கு அழகு" எனும் திடகாத்திரம் கொண்டவராக ஜெனலியா தன் கூடப் பணி புரியும் சக பத்திரிகையாளர்களை அழைத்துக் கொண்டு பெண்களை பலவந்தப்படுத்திக் கடத்தி வந்து விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் வில்லன் கோஷ்டியினரை ரகசியமாக படம் பிடிக்கத் தொடங்கும் போது, வில்லன் கோஷ்டியினரின் கண்களில் மாட்டிக் கொள்ள, ஓடத் தொடங்குகிறார்கள். ஓடத் தொடங்கும் பத்திரிகையாளர்கள் மூவரையும் சேஸிங் பண்ணும் வில்லன் கோஷ்டியினர் ஒவ்வொருவரையும் வெவ்வேறு இடங்களில் வைத்து தீர்த்துக் கட்ட முயற்சி செய்கிறார்கள். ஜெனலியாவின் நண்பன் வில்லன் கோஷ்டிகளிடம் மாட்டும் சமயம்,காரிலிருந்து பெற்றோலை ஊற்றித் தீ வைத்து கொலை செய்து விட்டு அவ் இடத்தை விட்டு நகர; சம்பவ இடத்திற்கு ஜெனலியாவும், அவரது சக பணியாளரும் வந்து கொள்கிறார்கள்.
நாற்று வலைப் பதிவின் ஒரிஜினல்: thamilattu.com
ஜெனலியாவின் சக பணியாளரைக் கொலை செய்த வில்லன் கும்பல் ஜெனலியாவை மாத்திரம் உடனே வெட்டிக் கொலை செய்யாமல் ஆற்றினுள் தூக்கி எறிகின்றார்கள். ஜெனலியாவைக் கொன்று விட்டதாக நினைத்து வில்லன் கோஷ்டி அவ் இடத்தை விட்டு நகர, ஜெனலியா உயிர் பிழைக்கின்றார். இங்கே தான் கதை ஆரம்பமாகின்றது. ஆற்றில் விழுந்து தப்பித்த ஜெனலியா, வில்லன்கள் பயணித்த வாகனத்தினுள் தீக்குச்சி விழுந்து பெற்றோல் பையினுள் பட்டு, வெடித்துச் சிதறுவதனைக் கண்ணுற்று, இவர்களை அழித்தது வேலாயுதம் என்று எழுதி வைத்து விட்டு ஹாஸ்பிட்டலுக்குப் போகின்றார்.  வேலாயுதம் யார் என்று அறியும் ஆவலுடன் வில்லன்கள், தீவிரவாத கும்பல் தேடத் தொடங்குகின்றார்கள். இதே வேளை இத்தகைய சூழ் நிலையில் கிராமத்தில் கல கலப்பாக சுற்றத்தாருடன் வாழ்ந்து வரும் விஜய் பட்டணத்தை நோக்கித் தன் தங்கையின் கலியாணத்திற்கு நகை வாங்கும் நோக்கத்தில் கிளம்புகின்றார்.
சென்னைக்கு வந்திறங்கும் விஜய் தீவிரவாத கும்பல்கள் குண்டு வைக்கும் போது தற் செயலாக அவர்கள் வழியில் குறுக்கிட்டு, தன் ஒவ்வோர் செயல்களின் ஊடாகவும் அநீதிகளை, ஆபத்துக்களைத் தடுக்கின்றார். மக்கள் முன் தோன்றாது, வில்லன்கள் கண்ணில் படாது வேலாயுதம் என்ற நாமத்துடன் மூன்று அநீதிகளைத் தடுத்து மறைந்து வாழ்கிறார் ஹீரோ விஜய். பின்னர் ஒரு சம்பவத்தின் ஊடாக ஜெனலியாவை காப்பாற்றும் விஜயிடம், ஜெனலியா தன்னிடம் உள்ள வில்லன் கும்பல்களின் கதையினைச் சொல்லி மக்கள் அனுபவிக்கும் துன்பங்களைச் சொல்லி விஜயை வேலாயுதமாக வாழச் சொல்லியும்,   தீவிரவாத கும்பல்களை கொல்லுமாறும் கேட்கின்றார்.
நாற்று நிரூபன் எழுதியது
மறுப்புத் தெரிவித்து விட்டு, தான் தானவே (சாதாரண வேலாயுதமாக) வாழ்கிறேன் என்று செல்லும் விஜயை அவர் காணும் செயல்கள், தீவிரவாத கும்பலால் மக்கள் பணம் சூறையாடப்படும் நிகழ்வுகள் வேலாயுதமாக மாறத் தூண்டுகின்றன. வேலாயுதமாக மாறிய விஜய் வில்லன்களை ஒழித்துக் கட்டினாரா? வேலாயுதம் யார் என்று அறியத் துடிக்கும் மக்களுக்கு அதற்கான பதில் கிடைத்ததா? அநீதி செய்வோர், தீவிரவாதக் கும்பல்கள், பெண்களை வைத்து வியாபாரம் செய்வோருக்கு என்ன ஆச்சு? விஜய் அவர்களின் முறைப் பொண்ணாக வரும் ஹன்சிகாவிற்கு படத்தில் என்ன வேலை? ஜெனலியாவிற்கு படத்தில் என்ன வேலை? ஹன்சிகா- ஜெனலியா இவ் இருவரில் இறுதியில் விஜயை கட்டிக்கப் போவது யார்?(படத்தில் ஹே...ஹே...) ஆகிய கேள்விகளுக்கான விடையினை நீங்கள் அகலத் திரையில் வேலாயுதத்தினைப் பார்ப்பதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். 

ஆர்ப்பாட்டத்தோடு, ஹீரோ வந்து - ஓடும் ரயிலை மறித்து அருவாளோடு ஏறும் போது ஹீரோ அறிமுகம் படத்தில் தொடங்குகின்றது. வழமையான பாணியில் ஓப்பனிங் சாங் இடம் பெறும் விஜய் படங்களிலிருந்தும் கொஞ்சம் மாறுபட்டு, படத்தில் கொஞ்ச நேரம் கழித்து ஓப்பனிங் சாங்கினை கொடுத்திருக்கிறார்கள். இயக்குனர் கொஞ்சம் மாற்றி யோசித்திருக்ககலாம். ஏழைகளையும், விஜயை தலைவராகப் போற்றும் ரசிகர்களையும் குறிக்கோளாக வைத்து ஓப்பனிங் சாங்கினை "சொன்னா புரியாது! சொல்லுக்குள் அடங்காது நீங்கள் எல்லாம் என் மேல வைத்த பாசம்...." என்று கொடுத்திருப்பதை விடுத்து முற்று முழுதாக ஜனரஞ்சக அந்தஸ்தினை மையமாக வைத்து படத்தினை நகர்த்தியிருக்கலாம். அது விஜய் அவர்களுக்கு இன்னும் பலமாக அமைந்திருக்கும்.

ஆஸ்கார் ரவிச்சந்திரனின் தயாரிப்பில், M.ராஜா அவர்களின் இயக்கத்தில், எழுத்தாளர் சுபா அவர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும் வசனத்தில், விஜய் ஆன்டனியின் இனிய இசையில் வெளிவந்திருக்கும் இப் படத்தில் விஜய், ஹன்சிகா, ஜெனலியா, சரண்யா மோகன், சந்தானம், இளவரசு, வையாபுரி, சிங்கமுத்து, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரோடு ஏனைய தமிழ் சினிமா நட்சத்திரங்களும் இணைந்து அசத்தியிருக்கிறார்கள்.  மீண்டும் ஓர் திருபாச்சியினை நினைவுபடுத்தும் வண்ணம் படத்தில் அண்ணன் தங்கை பாசம் விரவியிருக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் காமெடிகளால் ஹன்சிகா, சரண்யா, விஜய் ஆகியோர் தூள் கிளப்பியிருந்தாலும், சந்தானம் களமிறங்கும் போது காமெடிகள் சூடு பிடிக்கின்றது. படத்தில் இடம் பெறும் பாதிக் காட்சிகள் சந்தானம் ஒரு ஹீரோவிற்கு நிகரான நிலையில் வைத்து ரசிகர்களால் நோக்கப்படும் அளவிற்கு காமெடிகளால், அவரின் பாடி லாங்குவேஜ் கலந்த நடிப்பால் அசத்தியிருக்கிறார். இது சந்தானத்தின் காமெடியின் தரத்தினைப் பறை சாற்றி நிற்கிறது எனலாம். ஹன்சிகா கொஞ்சம் ஓவரா வெட்கப்பட்டு பாடல்களில் கொஞ்சம் கவர்ச்சி காட்டி இயல்பான & யதார்த்தம் கலந்த நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.

விறு விறுப்பான அதே வேளை வேகமான கதை நகர்வினை இயக்குனர் எம்.ராஜா அவர்கள் அசாத் படத்திலிருந்து மாற்றியமைத்து கையாண்டிருக்கிறார். இது இப் படத்திற்கு ப்ளஸ் பாயிண்ட். அதே வேளை சண்டைக் காட்சிகள் படத்திற்குப் பக்க பலமாக உள்ளது. சண்டைக் காட்சிகளில் ஸ்டண்ட் சில்வா அவர்கள் சிறப்பான பங்களிப்பினைச் செய்திருக்கிறார். அச்சமூட்டும் ஆங்கிலத் திரைப்படங்களைப் போன்று பார்க்கும் போது கண்களை மூடி விழிக்கச் செய்யும் கொடூரமான சண்டைக் காட்சிகள். வாளால் வெட்டிக் கொலை செய்யும் காட்சிகளை சைனீஸ் ஆக்‌ஷன் படங்களுக்கு நிகராகப் புகுத்தியிருக்கிறார்கள். பாடல்கள், கலை, மற்றும் எடிற்றிங் என்பன பிரமாதமாகப் படத்திற்குப் பங்களிப்பு நல்கியிருக்கிறது.
ஆமா இந்தப் ஸ்டில்லை ஏன் எடுத்தாங்க? இது தான் படத்தில் வரலையே;-))
நீண்ட நாட்களாக விஜய் படத்தினை வைத்து கலாய்ப்போர், "ஓவராப் பேசினாய் குருவி படத்தை பார்க்க வைத்து கொன்று விடுவேன்" என்று சொல்வோரைச் செவிமடுத்தவர்களாக விஜய் அவர்களும் இயக்குனர் எம்.ராஜா அவர்களும் விஜயின் தங்கை சரண்யா மோகன் சமைத்த தரங் குறைவான உணவினை பலவந்தப்படுத்தி ஏனையோரை உண்ண வைக்கும் காட்சியினைப் படத்தில் சேர்த்து சாட்டையடி கொடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஹன்சிகா சேலையில் வந்து கவர்ச்சியூட்டி, "மொழச்சு மூனு இழையே விடலை' பாடலில் குட்டி நமீதா தமிழகத்திற்கு உருவாகப் போகின்றார் என்பதனை சொல்லாமல் சொல்லிச் செல்கிறார். பாடல்களில் மயக்காதே மச்சினா! நீ காதல் பேசும் மன்னனா" பாடலில் பிரமாண்டமான கிராபிஸ் காட்சிகளை பேக்ரவுண்டில் புகுத்தி கலையில் அசத்தியிருக்கிறார் மிலன் அவர்கள். ஒளிப்பதிவில் ப்ரியன் தன் கமெராக் கை வண்ணத்தை காண்பித்திருக்கிறார்."மாயம் செய்தாயோ நெஞ்சை காயம் செய்தாயோ....பாடலில் வித்தியாசமான கெட்டப்பில் விஜயை காண்பித்து மேக்கப்பிலும் அசத்தியிருக்கிறார்கள் படக் குழுவினர்.
நிரூபனின் நாற்று வலை www.thamilnattu.com
நீண்ட காலமாக காப்பி பேஸ்ட் மீயுசிக் என்று குற்றஞ்சாட்டப்பட்டு வந்த விஜய் ஆன்டனி அவர்கள் முற்று முழுதாக வேலாயுதம் இசையில் கவனம் செலுத்திப் பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார். நீண்ட காலத்தின் பின்னர் விஜயிற்கு ஏறுமுகமாக இப் படம் அமையும் என்பதற்கு சான்றாக ஒவ்வோர் காட்சியமைப்பிலும் கவனம் செலுத்தியிருக்கிறார்கள் படக் குழுவினர்.  வேலாயுதம் கதை தேர்வில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் திருப்பாச்சி, சிவகாசி ஸ்டைல் மீண்டும் விஜய் படங்களில் வந்து கொள்வதனை தவிர்த்திருக்கலாம். விஜய் அறிமுகமாகும் போதும்; சிக்ஸ் பேக் உடல் காட்டி விஜய் சண்டை செய்யும் போதும், "சொன்னா புரியாது! சொல்லுக்குள் அடங்காது பாடலின் போதும் விஜய் ரசிகர்களின் விசில் சத்தம் காதை பிளக்கிறது.விஜய் ரசிகர்களின் திருப்தியினை நிறைவு செய்யும் வகையில் படம் அமைந்திருக்கிறது என்பதற்குச் சான்றாக கதிரைகளை விட்டு எழுந்து நின்று ஆடிய ரசிகர்களின் ஆட்டமும், அவர்களின் முகமலர்ச்சியும் சேதி சொல்லுகின்றது. ஆனாலும் M.ராஜா அவர்கள் கொஞ்சம் வெரைட்டி கூட்டியிருக்கலாம். அண்ணன் தங்கை பாசத்திற்கு மாற்றீடாக வேறு ஏதும் காட்டியிருக்கலாம்.

வேலாயுதம்: தளபதி ரசிகர்களுக்கு கமர்சியல் ஹிட்! நடு நிலையான விமர்சகர்களுக்கு அரைத்த மாவை மீண்டும் அரைக்கும் தமிழ் சினிமாவின் அதே சாயல்!

பிற் சேர்க்கை: ஈழத்தில் இடம் பெற்ற யுத்த சூழலுக்குப் பின்னர் ஆங்கிலத் திரைப்படங்களைப் பார்க்க தியேட்டருக்குப் போயிருந்தாலும் பல ஆண்டுகளுக்குப் பின்னர் நான் முதன் முதலாக நீண்ட இடைவேளையின் பின்னர் திரையில் பார்த்த தமிழ் திரைப்படம் வேலாயுதம்.

பிற் சேர்க்கை: நான் ஒரு விஜய் ரசிகன் அல்ல. எனக்கு பிடித்தவர் சிவாஜி, மற்றும் ரஜினி என்பதனையும் இத்தால் சொல்லிக் கொள்கிறேன். ஹே....ஹே...

94 Comments:

கோகுல் said...
Best Blogger Tips

இளகிய மனமுடையோர், மற்றும் குழந்தைகளுக்கு உகந்த படம் அல்ல!
//
என்ன பாஸ் ஆரம்பத்துலயே வேட்டு வைக்கிறிங்க!

Mathuran said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்..
இன்று வலைப்பதிவில் படிக்கும் நடுநிலையான முதல் விமர்சனம் இது.

Mathuran said...
Best Blogger Tips

விமர்சணம் அசத்தல். ஒரு சிறு திருத்தம்.
//ஜெனலியாவின் சக பணியாளரைக் கொலை செய்த வில்லன் கும்பல் ஜெனலியாவை மாத்திரம் உடனே வெட்டிக் கொலை செய்யாமல் ஆற்றினுள் தூக்கி எறிகின்றார்க//

ஜெனிலியாவை கத்தியால் குத்தும் வேகத்தில் அவர் பாலத்தில் இருந்து கீழே விழுகிறார். அப்போது அவர் வைத்திருந்த ஹெல்மெட் ஆற்றினுள் விழுகின்றது. அவர்தான் ஆற்றில் விழுத்துவிட்டதாக நினைத்தே அவர்கள் சென்றார்கள்

K.s.s.Rajh said...
Best Blogger Tips

/////////ஆர்ப்பாட்டத்தோடு, ஹீரோ வந்து - ஓடும் ரயிலை மறித்து அருவாளோடு ஏறும் போது ஹீரோ அறிமுகம் படத்தில் தொடங்குகின்றது. வழமையான பாணியில் ஓப்பனிங் சாங் இடம் பெறும் விஜய் படங்களிலிருந்தும் கொஞ்சம் மாறுபட்டு, படத்தில் கொஞ்ச நேரம் கழித்து ஓப்பனிங் சாங்கினை கொடுத்திருக்கிறார்கள்.//

சுறா படதிலையே இதை ஆரம்பிச்சாச்சு...

நாய் நக்ஸ் said...
Best Blogger Tips

நன்றி நிருபன் ...

K.s.s.Rajh said...
Best Blogger Tips

நானும் படம் பார்த்து...ஓரு வித்தியாசமாக விமர்சன்ம் போட்டு இருக்கேன் பாருங்க விமர்சனமே ஓரே வரியில் போட்டு இருக்கேன்..........எனவே கமண்ட் எப்படி கனக்கா போடுறது .ஹி.ஹி.ஹி.ஹி.ஹி......ஓட்டை போட்டுட்டு கிளம்புறன்.........

நிரூபன் said...
Best Blogger Tips

@மதுரன்
அன்பிற்குரிய மது,
எனக்கு நைட் வேலை இருக்கு.அவசரமா கிளம்பனும், அப்புறமா சரி பார்க்கிறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

டாகுடரும் திருந்தமாட்டாரு, நாமலும் திருந்த போறதில்ல.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

அந்த ட்ரைன்ல நிக்கிற போட்டோவா பார்த்தா மறுபடியும் ஜம்ப்பான்னு பயமா இருக்கே.....

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன் உங்களுக்கும் உங்கள் மனைவி பிளைகளுக்கும் எனது மனம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்..

விமர்சனம் நடுநிலையோடு எழுதப்பட்டிருக்கின்றது வாழ்த்துக்கள்.. இந்த விமர்சனத்தை நீங்கள் யாழ் போதனா வைத்திய சாலையில் இருந்து எழுதவில்லைத்தானே..??? ஹி ஹி 

விஜய் ரசிகர்கள் கோவிச்சுகாதீங்கப்பா சும்மா கலாய்ச்சேன்.. ஹி ஹி

Anonymous said...
Best Blogger Tips

///இளகிய மனமுடையோர், மற்றும் குழந்தைகளுக்கு உகந்த படம் அல்ல!///அமா இது எதுக்கு ....ஹிஹி

சுதா SJ said...
Best Blogger Tips

இது விமர்சனம்... :)
அப்போ படம் சூப்பர் ஹிட் என்று சொல்லுங்கோ.. ஹா ஹா.

நிரூபன் பாஸ்
விமர்சனம் கலக்கல்
தொடர்ந்து திரைப்பட விமர்சனங்கள்
எழுதலாமே...?? 

மாய உலகம் said...
Best Blogger Tips

தமிழ் சினிமா வரலாற்றில் நீண்ட காலமாக இருந்து வந்த பண்டிகைக் கால ரஜினி - கமல் படங்களின் அந்தஸ்தினையும், தியேட்டர் உரிமத்தினையும் தற்போது தன் வசம் தக்க வைத்திருக்கும் ஒரேயொரு மாஸ் ஹீரோ இளைய தளபதி விஜய் அவர்கள் தான்.//

ஆரம்பமே அசத்தலா ஆரம்பிச்சுருக்கீங்களே பாஸ்.... மேல படிச்சுட்டு வர்றேன்...

மாய உலகம் said...
Best Blogger Tips

ஆங்கில - உலகப் படங்களின் கதை நகர்விற்கு இணையாக ஒரு திருப்பு முனையிலிருந்து படத்தினை தொடக்கியிருக்கின்றார்கள் வேலாயுதம் படக் குழுவினர். //

ஆஹா....

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
Best Blogger Tips

அட்டெண்டன்ச போட்டு வச்சுக்கறேன், அப்புறமா வந்து காமெண்டு போடுறேன்.

மாய உலகம் said...
Best Blogger Tips

விஜய் ரசிகர்களின் திருப்தியினை நிறைவு செய்யும் வகையில் படம் அமைந்திருக்கிறது என்பதற்குச் சான்றாக கதிரைகளை விட்டு எழுந்து நின்று ஆடிய ரசிகர்களின் ஆட்டமும், அவர்களின் முகமலர்ச்சியும் சேதி சொல்லுகின்றது. //

எப்படியோ ரசிகர்களை திருப்திபடித்திவிட்டார் என நினைக்க தோன்றுகிறது... அருமையான அலசல் நண்பா... பகிர்வுக்கு நன்றி.

மாய உலகம் said...
Best Blogger Tips

நான் ஒரு விஜய் ரசிகன் அல்ல. எனக்கு பிடித்தவர் சிவாஜி, மற்றும் ரஜினி என்பதனையும் இத்தால் சொல்லிக் கொள்கிறேன். ஹே....ஹே...//

இது எதுக்கு நண்பா... ஹா ஹா

தனிமரம் said...
Best Blogger Tips

நானும் குழந்தப்பிள்ளை மனசுக்காரன் அப்ப படம் பார்க்க முடியாது என்கிற உங்கள் விமர்சனம் சிறப்பே!

தமிழன் வர்த்தகம் said...
Best Blogger Tips

யாழ்ப்பாண செல்ல திரை அரங்கம் http://www.youtube.com/watch?feature=player_embedded&v=5Evr1B94ZvY

நாற்று தல நண்பர்களுக்கு தீபாவளி நால்வழ்துகள்

தமிழன் வர்த்தகம் said...
Best Blogger Tips

நாற்று தல நண்பர்களுக்கு தீபாவளி நால்வழ்துகள்

வேலாயுதம் யாழ் செல்ல திரை அரங்கம் http://www.youtube.com/watch?feature=player_embedded&v=5Evr1B94ZvY

இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips

அருமையான விமர்சனத்திற்குப் பாராட்டுக்கள்>

இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips

இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துக்கள்>

Anonymous said...
Best Blogger Tips

நிறைய DISCLAIMER போட்டு எழுதிய விமர்சனம்னு நினைக்கிறேன்...ஆமா நீங்க நெடு நாளுக்கு பிறகு எழுதுற நீள் தமிழ் பட விமர்சனம்...சுபம்..
தீபாவளி சிறப்பா சகோதரம்...?

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

இளகிய மனமுடையோர், மற்றும் குழந்தைகளுக்கு உகந்த படம் அல்ல!//

அவ்வ்வ்வ் அதான் நான் பார்க்க போகலை...!!!

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

பன்னிகுட்டிக்கு சந்தோஷத்தை பாருய்யா...!!!

பாரணை முடிச்ச:) அதிரா said...
Best Blogger Tips

வேல் + வெப்பன்.... சூப்பர்... நான் போயிட்டு வந்து படிக்கிறேன் நிரூபன்.. புளொக்கிலயே இருங்கோ...:)))

Anonymous said...
Best Blogger Tips

தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா...
எழுதி வச்சுக்குங்க இந்த படம் சூப்பர் ஹிட்டு...

//சந்தானம் களமிறங்கும் போது காமெடிகள் சூடு பிடிக்கின்றது. படத்தில் இடம் பெறும் பாதிக் காட்சிகள் சந்தானம் ஒரு ஹீரோவிற்கு நிகரான நிலையில் வைத்து நோக்கப்படும் அளவிற்கு காமெடிகளால் அவரின் செயல்களுக்கு உரமூட்டியிருப்பது சந்தானத்தின் காமெடியின் தரத்தினைப் பறை சாற்றி நிற்கிறது எனலாம்////

விஜய்க்காக மட்டுமில்ல நம்ம சந்தானத்துக்காகவும்தான்

Unknown said...
Best Blogger Tips

நல்ல விமர்சணம் பாஸ்

7ம் அறிவு படம் பற்றி அழகா புரியும்படி ஒரு விமர்சணம் போடுங்க பாஸ்

Unknown said...
Best Blogger Tips

முளுக்கதையுமே வந்துவிட்டதே பாஸ் :(

F.NIHAZA said...
Best Blogger Tips

விமர்சனம் படிக்க நல்லாத்தான் இருக்கு...
அருமையாவும் இருக்கு....

பார்ப்போம் படம் எப்பூடின்னு...

ஹேமா said...
Best Blogger Tips

ஏழாம் அறிவு படத்திற்கு ஒரு விமர்சனம் தந்திருக்கலாமே நிரூ !

Angel said...
Best Blogger Tips

சூப்பர்ப் விமர்சனம் .இன்ட்லி தமிழ் டென் ஓட்டு போட்டாச்சு .

sdfsd said...
Best Blogger Tips

முடியல.என்னால் ஏற்று கொள்ளவே முடியவில்லை.மூன்று மணிநேர காட்சியில் எரிச்சல் தான் மிச்சம்.முதல் நாள் முதல் ஷோ .ஏமாற்றம் தான் மிச்சம்.விஜயககாந்த் நடிக்க வேண்டிய படம்.படம் பப்படம் .........

Philosophy Prabhakaran said...
Best Blogger Tips

// இளகிய மனமுடையோர், மற்றும் குழந்தைகளுக்கு உகந்த படம் அல்ல! //

யோவ் மொத வரியிலேயே கலாய்க்க ஆரம்பிச்சிட்டியா...

Philosophy Prabhakaran said...
Best Blogger Tips

விஜய் படத்துக்கு இவ்வளவு சீரியஸா விமர்சனம் எழுதின மொத ஆள் நீங்கதான்...

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

நிரூபன் எழுதி நான் படிக்கும் முதல் தமிழ் சினிமா விமர்சனம்.. ஆஹா!!!!

ஃபேஸ் புக்கில் 123 பேர் ஷேர் பண்ணி இருப்பது சினிமா விமர்சனத்துக்கு பெருமை சேர்க்கிறது வாழ்த்துக்கள்

settaikkaran said...
Best Blogger Tips

ரைட்டு சகோ! :-)

Unknown said...
Best Blogger Tips

///இளகிய மனமுடையோர், மற்றும் குழந்தைகளுக்கு உகந்த படம் அல்ல!///

அப்புறம் நண்பா நீங்க எப்படி பார்த்திங்க ?

'பரிவை' சே.குமார் said...
Best Blogger Tips

நடுநிலையான விமர்சனம்.

Thangasivam said...
Best Blogger Tips

விமர்சனம் அருமை... ஏழாம் அறிவு விமர்சனம் எப்போது?

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

முடன் முதல்ல டாக்குடறு படத்துக்கப் போனீங்க.. ஐயோ,ஐயோ...

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

அரைத்த மாவை அரைப்பதை விட மாட்டாங்களே!

Unknown said...
Best Blogger Tips

நறுக்கு விமர்சனம் நிரூ நல்லா இருக்கு

K said...
Best Blogger Tips

நீண்ட காலமாக காப்பி பேஸ்ட் மீயுசிக் என்று குற்றஞ்சாட்டப்பட்டு வந்த விஜய் ஆன்டனி அவர்கள்://///////

மத்தவங்க சொல்லுறது கிடக்கட்டும் மச்சி! நீ என்ன சொல்லுறே? விஜய் ஆண்டனி காப்பி பேஸ்ட் மியூசிக்கா? உன்னோட தனிப்பட்ட கருத்து எனக்கு வேணும்!

K said...
Best Blogger Tips

விமர்சனம் ஓகே! ஆனால், படத்தின் கதையை இந்தளவுக்கு நீட்டி முழக்கியது எனக்கு]ப் பிடிக்கல, இது ஒரு விமர்சனத்துக்கு அழகும் இல்லை! படம்பார்ப்பவர்களின் எதிர்பார்ப்பை இல்லாமல் செய்துவிடும்!

படம் தயாரிப்பவர்களும் மனிதர்கள் தானே!

மச்சி உன்னோட ஒரு பதிவை மற்றவர்கள் காப்பியடித்து தங்கள் தளத்தில் வெளியிடும் போது உனக்கு எவ்வளவு கோபம் வரும் அதுபோலத்தான், இப்படத்தின் கதையை இவ்வளவு விரிவாக சொல்லியிருக்க வேண்டாமே என்று தோணுது!

K said...
Best Blogger Tips

ஏழைகளையும், விஜயை தலைவராகப் போற்றும் ரசிகர்களையும் குறிக்கோளாக வைத்து ஓப்பனிங் சாங்கினை "சொன்னா புரியாது! சொல்லுக்குள் அடங்காது நீங்கள் எல்லாம் என் மேல வைத்த பாசம்...." என்று கொடுத்திருப்பதை விடுத்து முற்று முழுதாக ஜனரஞ்சக அந்தஸ்தினை மையமாக வைத்து படத்தினை நகர்த்தியிருக்கலாம். அது விஜய் அவர்களுக்கு இன்னும் பலமாக அமைந்திருக்கும்./////////

மச்சி நீ என்ன சொல்ல வார்ரே!

shanmugavel said...
Best Blogger Tips

நடுநிலையான விமர்சனம்.இன்னும் படம் பார்க்கவில்லை.

கார்த்தி said...
Best Blogger Tips

மொத்தத்தில் வேலாயுதம் விஜய் ரசிகர்கள் இல்லாதவர்களுக்கு ”பரவாயில்லை- Average" ரகப்படம். விஜய் ரசிகர்களுக்கு நல்ல-Good படம்.
சுறா மாதிரி படங்களே Collectionல பரவாயில்லாம போன படியா இந்தப்படம் நிச்சயம் collectionல அள்ளும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@கோகுல்

இளகிய மனமுடையோர், மற்றும் குழந்தைகளுக்கு உகந்த படம் அல்ல!
//
என்ன பாஸ் ஆரம்பத்துலயே வேட்டு வைக்கிறிங்க!
//

ஆமா பாஸ்..
ஆக்‌ஷன் காட்சிகள் அவ்வளவு கொடூரமாக இருக்கும்.

மனத் தைரியம் இருந்தால் மாத்திரம் நீங்க பார்க்கலாம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@மதுரன்
வணக்கம் நிரூபன்..
இன்று வலைப்பதிவில் படிக்கும் நடுநிலையான முதல் விமர்சனம் இது.//

நன்றி மது..
நான் விஜய் ரசிகன் அல்ல,
அத்தோடு நடு நிலையான ஒரு ஊடகவியலாளன் போன்று படத்தைப் பார்த்தேன்..

ஹே...ஹே..

நிரூபன் said...
Best Blogger Tips

@மதுரன்

ஜெனிலியாவை கத்தியால் குத்தும் வேகத்தில் அவர் பாலத்தில் இருந்து கீழே விழுகிறார். அப்போது அவர் வைத்திருந்த ஹெல்மெட் ஆற்றினுள் விழுகின்றது. அவர்தான் ஆற்றில் விழுத்துவிட்டதாக நினைத்தே அவர்கள் சென்றார்கள்
//

ஓக்கே மச்சி, மாத்திட்டேன்.
மன்னிக்கவும்,

நிரூபன் said...
Best Blogger Tips

@K.s.s.Rajh
சுறா படதிலையே இதை ஆரம்பிச்சாச்சு...
//

மச்சி, சுறாவை விட வேலாயுதத்தில கொஞ்சம் வெரைட்டி காட்டியிருக்காங்க தானே...
ஹி...ஹி...

நிரூபன் said...
Best Blogger Tips

@NAAI-NAKKS

நன்றி நிருபன் ...
//

நன்றி பாஸ்...

நிரூபன் said...
Best Blogger Tips

@K.s.s.Rajhநானும் படம் பார்த்து...ஓரு வித்தியாசமாக விமர்சன்ம் போட்டு இருக்கேன் பாருங்க விமர்சனமே ஓரே வரியில் போட்டு இருக்கேன்..........எனவே கமண்ட் எப்படி கனக்கா போடுறது .ஹி.ஹி.ஹி.ஹி.ஹி......ஓட்டை போட்டுட்டு கிளம்புறன்.........
//

அட இதுவும் நல்லாத் தானே இருக்கு...

நிரூபன் said...
Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி

டாகுடரும் திருந்தமாட்டாரு, நாமலும் திருந்த போறதில்ல.......
//

ஹே...ஹே...

நிரூபன் said...
Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி

அந்த ட்ரைன்ல நிக்கிற போட்டோவா பார்த்தா மறுபடியும் ஜம்ப்பான்னு பயமா இருக்கே.....
//

நெசமாவா அண்ணே...

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்

வணக்கம் நிரூபன் உங்களுக்கும் உங்கள் மனைவி பிளைகளுக்கும் எனது மனம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்..

விமர்சனம் நடுநிலையோடு எழுதப்பட்டிருக்கின்றது வாழ்த்துக்கள்.. இந்த விமர்சனத்தை நீங்கள் யாழ் போதனா வைத்திய சாலையில் இருந்து எழுதவில்லைத்தானே..??? ஹி ஹி

விஜய் ரசிகர்கள் கோவிச்சுகாதீங்கப்பா சும்மா கலாய்ச்சேன்.. ஹி ஹி
//

அண்ணே...என்ன கனவில கதைக்கிறீங்களா..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
மனைவியா பிள்ளையா...அது எப்ப வந்திச்சு..

முதல்ல மனைவி வரட்டும்.,
அப்புறமா பிள்ளை பத்தி யோசிக்கிறேன்.

ஒருத்தன் கலியாணம் கட்டலைன்னா விட மாட்டாங்க போலிருக்கே...

ஹி...ஹி..

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

///இளகிய மனமுடையோர், மற்றும் குழந்தைகளுக்கு உகந்த படம் அல்ல!///அமா இது எதுக்கு ....ஹிஹி
//

யோ...வேலாயுதம் சண்டை, வாள் வெட்டுக் காட்சியைப் பார்த்திட்டு சொல்லு மச்சி..

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்

இது விமர்சனம்... :)
அப்போ படம் சூப்பர் ஹிட் என்று சொல்லுங்கோ.. ஹா ஹா.

நிரூபன் பாஸ்
விமர்சனம் கலக்கல்
தொடர்ந்து திரைப்பட விமர்சனங்கள்
எழுதலாமே...??
//

துஸி...ஏதோ என்னால முடிஞ்சதை எழுதியிருக்கேன்...

தொடர்ந்தும் தமிழ்ப் படங்கள் பார்க்குமளவிற்கு எனக்கு நேரம் இல்லை.
முடிந்த வரை நல்ல விமர்சனங்களைத் தர முயற்சி செய்கிறேன்.

தங்கள் அன்பிற்கு நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@மாய உலகம்

ஆரம்பமே அசத்தலா ஆரம்பிச்சுருக்கீங்களே பாஸ்.... மேல படிச்சுட்டு வர்றேன்...
//

நன்றி பாஸ்...

நிரூபன் said...
Best Blogger Tips

@மாய உலகம்

அட்டெண்டன்ச போட்டு வச்சுக்கறேன், அப்புறமா வந்து காமெண்டு போடுறேன்.
//

நன்றிங்கண்ணா...

நிரூபன் said...
Best Blogger Tips

@மாய உலகம்

எப்படியோ ரசிகர்களை திருப்திபடித்திவிட்டார் என நினைக்க தோன்றுகிறது... அருமையான அலசல் நண்பா... பகிர்வுக்கு நன்றி.
//

நன்றி மாயா..

நிரூபன் said...
Best Blogger Tips

@மாய உலகம்

நான் ஒரு விஜய் ரசிகன் அல்ல. எனக்கு பிடித்தவர் சிவாஜி, மற்றும் ரஜினி என்பதனையும் இத்தால் சொல்லிக் கொள்கிறேன். ஹே....ஹே...//

இது எதுக்கு நண்பா... ஹா ஹா
//

அடப் பாவமே....

பேஸ்புக்கில பதிவைச் சேர் பண்ணும் போது ஒரு சிலர் நான் அஜித் ரசிகன், அதான் இப்படி விஜயை கொஞ்சம் தரம் குறைத்து விமர்சனம் எழுதியிருக்கேன் என்று வம்பிழுத்தாங்க பாஸ்...
எல்லோருக்கும் பதில் சொல்ல டைம் இல்லை.
அதான் பொத்தாம் பொதுவா நான் யாரோட ரசிகன் என்பதைச் சொல்லியிருக்கேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்

நானும் குழந்தப்பிள்ளை மனசுக்காரன் அப்ப படம் பார்க்க முடியாது என்கிற உங்கள் விமர்சனம் சிறப்பே!
//

இதை நாம நம்பனுமே...

நிரூபன் said...
Best Blogger Tips

@தமிழன் வர்த்தகம்நாற்று தல நண்பர்களுக்கு தீபாவளி நால்வழ்துகள்
//

நன்றி பாஸ்...
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@இராஜராஜேஸ்வரி

அருமையான விமர்சனத்திற்குப் பாராட்டுக்கள்>
..//

நன்றி அம்மா.

நிரூபன் said...
Best Blogger Tips

@ரெவெரி
நிறைய DISCLAIMER போட்டு எழுதிய விமர்சனம்னு நினைக்கிறேன்...ஆமா நீங்க நெடு நாளுக்கு பிறகு எழுதுற நீள் தமிழ் பட விமர்சனம்...சுபம்..
தீபாவளி சிறப்பா சகோதரம்...?//

உங்க அன்பின் வெளிப்பாட்டா தீபாவளி கலக்கல்.
ஓசி டிக்கடில படம் பார்க்க கூட்டிக்கிட்டு போனாங்க நண்பர்கள்..

ஹே....
அப்புறமா ஏதோ என்னால முடிஞ்ச வகையில விமர்சனத்தை தந்திருக்கேன் பாஸ்..

நிரூபன் said...
Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ

இளகிய மனமுடையோர், மற்றும் குழந்தைகளுக்கு உகந்த படம் அல்ல!//

அவ்வ்வ்வ் அதான் நான் பார்க்க போகலை...!!!
//

ஹே....ஹே...

நிரூபன் said...
Best Blogger Tips

@athira

வேல் + வெப்பன்.... சூப்பர்... நான் போயிட்டு வந்து படிக்கிறேன் நிரூபன்.. புளொக்கிலயே இருங்கோ...:)))
//

அக்கா உங்க ஊரில சண்டைக் காட்சி எல்லாம் வெட்டுறாங்களாம்...

ஹே...
படம் எப்பூடி?

நிரூபன் said...
Best Blogger Tips

@மொக்கராசு மாமா

தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா...
எழுதி வச்சுக்குங்க இந்த படம் சூப்பர் ஹிட்டு...
//

நன்றி பாஸ்..
கொஞ்ச நாள் பொறுத்திருந்து பார்ப்போம்...

நிரூபன் said...
Best Blogger Tips

@வைரை சதிஷ்
நல்ல விமர்சணம் பாஸ்

7ம் அறிவு படம் பற்றி அழகா புரியும்படி ஒரு விமர்சணம் போடுங்க பாஸ்//

நன்றி பாஸ். வெகு விரைவில் போடுறேன் பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@மைந்தன் சிவா
முளுக்கதையுமே வந்துவிட்டதே பாஸ் :(
//

யோ வடிவாப் பாரைய்யா..
கிளைமேக்ஸ் ஒன்னுமே வரலையே...
ஹி...ஹி..

நிரூபன் said...
Best Blogger Tips

@F.NIHAZA

விமர்சனம் படிக்க நல்லாத்தான் இருக்கு...
அருமையாவும் இருக்கு....

பார்ப்போம் படம் எப்பூடின்னு...
//

ஓக்கே பார்த்திட்டு வந்து சொல்லுங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹேமா

ஏழாம் அறிவு படத்திற்கு ஒரு விமர்சனம் தந்திருக்கலாமே நிரூ !
//

நன்றி அக்கா.
வெகு விரைவில் ஏழாம் அறிவிற்கு விமர்சனம் தருகிறேன்.
நேரம் இல்லாமையால் உடனுக்குடன் கொடுக்க முடியலை.

நிரூபன் said...
Best Blogger Tips

@angelin

சூப்பர்ப் விமர்சனம் .இன்ட்லி தமிழ் டென் ஓட்டு போட்டாச்சு .
//

நன்றி அக்கா.

நிரூபன் said...
Best Blogger Tips

@sdfsd

முடியல.என்னால் ஏற்று கொள்ளவே முடியவில்லை.மூன்று மணிநேர காட்சியில் எரிச்சல் தான் மிச்சம்.முதல் நாள் முதல் ஷோ .ஏமாற்றம் தான் மிச்சம்.விஜயககாந்த் நடிக்க வேண்டிய படம்.படம் பப்படம் .........
//

நன்றி பாஸ்>.

நிரூபன் said...
Best Blogger Tips

@Philosophy Prabhakaran// இளகிய மனமுடையோர், மற்றும் குழந்தைகளுக்கு உகந்த படம் அல்ல! //

யோவ் மொத வரியிலேயே கலாய்க்க ஆரம்பிச்சிட்டியா...//



விஜய் நடித்திருக்கும் சண்டைக் காட்சிகள் கொடூரமான்வை...
அதனால் தான் சொன்னேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Philosophy Prabhakaran

விஜய் படத்துக்கு இவ்வளவு சீரியஸா விமர்சனம் எழுதின மொத ஆள் நீங்கதான்...
//

யாரோட படமாயிருந்தாலும் என் விமர்சன ஸ்டைலில் இப்படித் தானே பாஸ்..
என் ஆங்கிலப் பட, குறும்பட விமர்சனங்களைப் பார்த்தாலே புரியுமே...
ஹி...ஹி..

நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்
நிரூபன் எழுதி நான் படிக்கும் முதல் தமிழ் சினிமா விமர்சனம்.. ஆஹா!!!!

ஃபேஸ் புக்கில் 123 பேர் ஷேர் பண்ணி இருப்பது சினிமா விமர்சனத்துக்கு பெருமை சேர்க்கிறது வாழ்த்துக்கள்//

நன்றி பாஸ்....

நிரூபன் said...
Best Blogger Tips

@சேட்டைக்காரன்

ரைட்டு சகோ! :-)
..//

நன்றி சகோதரம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@veedu

///இளகிய மனமுடையோர், மற்றும் குழந்தைகளுக்கு உகந்த படம் அல்ல!///

அப்புறம் நண்பா நீங்க எப்படி பார்த்திங்க ?
//

நானா..
ஒளிச்சிருந்து படம் பார்த்தேன்..
அம்மா பின்னாடியிருந்து பார்த்தேன் பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@சே.குமார்

நடுநிலையான விமர்சனம்.
//

நன்றி பாஸ்..

நிரூபன் said...
Best Blogger Tips

@Thangasivam B.Pharm,M.B.A,DPH

விமர்சனம் அருமை... ஏழாம் அறிவு விமர்சனம் எப்போது?
//

அண்ணே ரெண்டு மூன்று நாளில தந்திடுறேன்..

நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@!* வேடந்தாங்கல் - கருன் *!

முடன் முதல்ல டாக்குடறு படத்துக்கப் போனீங்க.. ஐயோ,ஐயோ...
//

ஏனய்யா...

நிரூபன் said...
Best Blogger Tips

@சென்னை பித்தன்

அரைத்த மாவை அரைப்பதை விட மாட்டாங்களே!
//

அதானே ஐயா..
கொஞ்சமாவது புதுசா யோசிக்கலாமில்லே..

நிரூபன் said...
Best Blogger Tips

@ஜ.ரா.ரமேஷ் பாபு

நறுக்கு விமர்சனம் நிரூ நல்லா இருக்கு
//

நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

மத்தவங்க சொல்லுறது கிடக்கட்டும் மச்சி! நீ என்ன சொல்லுறே? விஜய் ஆண்டனி காப்பி பேஸ்ட் மியூசிக்கா? உன்னோட தனிப்பட்ட கருத்து எனக்கு வேணும்!
//

சில படங்களில் விஜய் ஆண்டனி மேலைத் தேச இசையினை அப்படியே பயன்படுத்தியிருக்கிறாரே...
அதனைத் தாங்கள் கவனிக்கலையா பாஸ்..
சில படங்களில் விஜய் ஆண்டனி காப்பி பேஸ்ட் செய்துள்ளார் மச்சி.
அதனால் நானும் பிறரின் கூற்றினை முன்னிலைப்படுத்தியுள்ளேன்.
இதோ லிங்.

http://www.youtube.com/watch?v=NRLlNE0nXTg

http://www.youtube.com/watch?v=WJmGMBQDSpw&feature=results_main&playnext=1&list=PLE508CA51F64DD22C

http://www.youtube.com/watch?v=VEs6ocaCh1I

http://www.youtube.com/watch?v=TGe4Ui0blHg

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

விமர்சனம் ஓகே! ஆனால், படத்தின் கதையை இந்தளவுக்கு நீட்டி முழக்கியது எனக்கு]ப் பிடிக்கல, இது ஒரு விமர்சனத்துக்கு அழகும் இல்லை! படம்பார்ப்பவர்களின் எதிர்பார்ப்பை இல்லாமல் செய்துவிடும்!

படம் தயாரிப்பவர்களும் மனிதர்கள் தானே!

மச்சி உன்னோட ஒரு பதிவை மற்றவர்கள் காப்பியடித்து தங்கள் தளத்தில் வெளியிடும் போது உனக்கு எவ்வளவு கோபம் வரும் அதுபோலத்தான், இப்படத்தின் கதையை இவ்வளவு விரிவாக சொல்லியிருக்க வேண்டாமே என்று தோணுது!
//

அடுத்த பதிவில் இது தொடர்பாக கவனம் செலுத்துகிறேன் மச்சி.

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

ஏழைகளையும், விஜயை தலைவராகப் போற்றும் ரசிகர்களையும் குறிக்கோளாக வைத்து ஓப்பனிங் சாங்கினை "சொன்னா புரியாது! சொல்லுக்குள் அடங்காது நீங்கள் எல்லாம் என் மேல வைத்த பாசம்...." என்று கொடுத்திருப்பதை விடுத்து முற்று முழுதாக ஜனரஞ்சக அந்தஸ்தினை மையமாக வைத்து படத்தினை நகர்த்தியிருக்கலாம். அது விஜய் அவர்களுக்கு இன்னும் பலமாக அமைந்திருக்கும்./////////

மச்சி நீ என்ன சொல்ல வார்ரே!
//

அந்தப் பாடல் வரிகளைக் கேட்டாலே புரியுமே சகோ...

நிரூபன் said...
Best Blogger Tips

@shanmugavel

நடுநிலையான விமர்சனம்.இன்னும் படம் பார்க்கவில்லை.
//

நன்றி அண்ணா.

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

மத்தவங்க சொல்லுறது கிடக்கட்டும் மச்சி! நீ என்ன சொல்லுறே? விஜய் ஆண்டனி காப்பி பேஸ்ட் மியூசிக்கா? உன்னோட தனிப்பட்ட கருத்து எனக்கு வேணும்!
//

மச்சி, இந்தப் பாட்டைக் கேட்டுப் பாரேன்.

http://www.youtube.com/watch?v=ret6hKPw4sI

நிரூபன் said...
Best Blogger Tips

@கார்த்தி
மொத்தத்தில் வேலாயுதம் விஜய் ரசிகர்கள் இல்லாதவர்களுக்கு ”பரவாயில்லை- Average" ரகப்படம். விஜய் ரசிகர்களுக்கு நல்ல-Good படம்.
சுறா மாதிரி படங்களே Collectionல பரவாயில்லாம போன படியா இந்தப்படம் நிச்சயம் collectionல அள்ளும்.//

நன்றி சகோ.

K said...
Best Blogger Tips

@நிரூபன்

மத்தவங்க சொல்லுறது கிடக்கட்டும் மச்சி! நீ என்ன சொல்லுறே? விஜய் ஆண்டனி காப்பி பேஸ்ட் மியூசிக்கா? உன்னோட தனிப்பட்ட கருத்து எனக்கு வேணும்!
//

சில படங்களில் விஜய் ஆண்டனி மேலைத் தேச இசையினை அப்படியே பயன்படுத்தியிருக்கிறாரே...
அதனைத் தாங்கள் கவனிக்கலையா பாஸ்..
சில படங்களில் விஜய் ஆண்டனி காப்பி பேஸ்ட் செய்துள்ளார் மச்சி.
அதனால் நானும் பிறரின் கூற்றினை முன்னிலைப்படுத்தியுள்ளேன்.
இதோ லிங்.

http://www.youtube.com/watch?v=NRLlNE0nXTg

http://www.youtube.com/watch?v=WJmGMBQDSpw&feature=results_main&playnext=1&list=PLE508CA51F64DD22C

http://www.youtube.com/watch?v=VEs6ocaCh1I

http://www.youtube.com/watch?v=TGe4Ui0blHg

மச்சி, விஜய் ஆண்டனி பற்றி உனக்குத் தெரிஞ்சது இவ்வளவுதானா? உன்னால் அவரை சரியாக எடை போட முடியவில்லை என்றுதான் நினைக்கிறேன்!

காப்பி பேஸ் செய்யாத ஒரு இசையமைப்பாளைரை தமிழ் சினிமாவில் உன்னால் காட்ட முடியுமா? அந்தக் கால பழைய பாடல்களில் தான் எக்கச்சக்கமான காப்பி பேஸ்ட் மன்னர்கள் இருந்திருக்கிறார்கள்!

விஜய் ஆண்டனியிடம் ஒரு தனித்துவம் இருக்கு! நிச்சயமாக அவர் பத்தோடு பதினொன்று அல்ல! அவருடைய சாத்திக்கடி போத்திக்கடி, டைலாமோ போன்ற பாடல்களைக் கேட்டுப் பாரு!

அவருடைய இசையில் ஒரு அழகான கோர்வையும், ஒரு ஒன்றித்த தன்மையும் இருக்கு! அதனை உணரத்தான் முடியுமே தவிர, விபரிக்க முடியாது!

அவ்வளவு ஏன், ஒவ்வொரு முறையும் விஜய் ஆண்டனியின் பாடல்கள் வெளியாகும் போதும், அதில் குற்றம் கண்டுபிடித்து பலர் பதிவு போடும் போது நீ அவதானிக்கவில்லையா? அப்படியானால், அவரிடம் ஏதோ ஒன்று இருக்கிறது என்றுதானே அர்த்தம்!

வித்யாசாகரும் தான் இசையமைக்கிறார்! அவரது பாடல்கள் வெளியாகும் போது யாராவது ஏதாவது பேசுகிறார்களா? அவரை யாருமே கணக்கெடுப்பதில்லை!

வேட்டைக்காரன் படத்தில் அத்தனை பாஅடல்களும் ஹிட்ஸ்! ஆனால் பாடல்கள் வெளியான சமயத்தில், “ பாடல்களை வைத்தே பிழைப்பை ஓட்டும் ஒருவர் “ வேட்டைக்காரன் பாடல்கள் சரியில்லை என்று சொன்னார்!

எல்லாமே பொறாமைதான்! மச்சி, விஜய் ஆண்டனி பற்றிய உனது பார்வை விரைவில் மாறும்!

( மச்சி, நான் என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களையே இங்கே சொல்லியிருக்கிறேன்! எனக்கு “ ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே” போன்ற பாடல்கள் பிடிப்பதே இல்லை! செத்தவீட்டில் ஒப்பாரி வைக்கிறமாதிரி இருக்கும்!

ஆனால் மஞ்ச நெத்தி மனத்துக் கட்டை என்றால் அவ்வளவு பிடிக்கும்! )

வைரவர் said...
Best Blogger Tips

பாஸ் ... இதைத்தானே உயர்வு நவிற்சி என்று சொல்லுவாங்க..........
படத்த முடியும் மட்டும் இருந்து பார்த்தீங்களா? நல்ல பொறுமைசாலிதான் போங்க....

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails