ஒவ்வோர் வருடமும் பிறந்த நாள் வருகின்றதே என நாம் மகிழ்ச்சிக் கடலில் துள்ளிக் குளித்து குதூகலிக்கும் போதெல்லாம், அணைக்கப்படும் மெழுகுவர்த்திப் புகையோடு சேர்ந்து காணாமற் போய் விடுகின்றது வயதாகின்றதே என்கின்ற நினைப்பு. நாம் வாழும் காலத்தில் ஒவ்வோர் வருடமும் ஓராண்டு குறைகின்றதே என கவலை கொள்வோரை விட; எமக்கு அடுத்த பிறந்த நாள் எப்போது வரும் என ஆவல் கொண்டிருப்போர் தான் இவ் உலகில் அதிகமாக உள்ளார்கள். வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் எம் உலகியல் ஆசாபாசங்கள் நீங்கப் பெற்றவர்களாக நாம் ஆண்டு, அனுபவித்து மாண்டு போகும் நாளை எண்ணிக் காத்திருந்தாலும் தீராத நோயால் வாடுவோரைத் தவிர யாருமே சாவை விரும்பி அழைத்துக் கொள்வதில்லை.
இனிமையான இளமைக் காலங்களில் அனுபவித்த பொக்கிஷமான நினைவுகளை மீட்டிப் பார்த்து "அடடா நாம் இப்படியும் வாழ்ந்தோமே" என மனதளவில் மகிழ்ச்சி பொங்க வைக்கும் ஒரு பருவம் தான் முதுமைப் பருவமாகும். ஞாப்கச் சுமைகளில் பொதிந்திருக்கும் நினைப்புக்களை விட, நம்மை எத்தகைய நோய்கள் வந்து சூழுமோ எனும் ஏக்கத்தில் இவ் உலகில் வாழுவோர் தான் அதிகம். வயதான காலத்தில் பாட்டிமார் அருகே பேரக் குழந்தைகள் அல்லது வயதான பிள்ளைகள் இருந்தால் அவர்களின் மனதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனலாம்.
எங்கள் ஊர்ப் பாட்டிமாரில் அதிகளவானோர், வயாதாகி விட்டார்கள் என்றால் சமூகத்தில் அல்லது தாம் வாழும் குடும்பத்திலிருந்து மெது மெதுவாகத் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். தனி அறை, தனிக் கட்டில் அல்லது தனிப் பாய் என்று தொடங்கி; தொற்று நோய்கள் வயதானோரிடமிருந்து தமக்கும் பரவிடும் எனும் அபாயத்தில் தனியான உணவுப் பரிமாறும் பாத்திரங்கள் என்று பல வகையான வகைப்படுத்தல்களை எம் சமூகம் செய்கின்றது. எங்கள் ஊர்களில் வயதான பொல்லுப் பிடிக்கும் பாட்டிகளினதும், பொல்லுப் பிடிக்காப் பாட்டிகளினதும் நெருக்கமான சொத்தாக இறுதிக் காலங்களில் இருப்பது வெற்றிலை பாக்கு இடித்து சப்பி மகிழப் பயன்படுத்தும் சிறிய குடுவை உரல் தான்.
பாட்டிமாரின் பொழுது போக்கு அம்சங்களுள் இன்று தொலைக் காட்சி சேனல்கள் (Channel) தனி இடத்தைப் பிடித்தாலும், அவர்களைச் சூழ்ந்திருக்கும் பேரக் குழந்தைகளின் சுட்டித் தனங்களும், வயதான பிள்ளைகளின் குறும்புகளும் தான் அவர்களிற்கு ஆத்மார்த்த ரீதியில் மன மகிழ்ச்சியினைக் கொடுக்கும் அம்சங்களாக விளங்குகின்றது. பாட்டிமாரை, அம்மம்மா, ஆச்சி, அப்பம்மா, கிழவி, ஆசை அம்மம்மா, வயசான கட்டை, எனப் பல வகையான பெயர்களால் அழைப்பார்கள். தம் வாழ் நாளின் இறுதிக் காலத்தில் தங்களுடன் பேரக் குழந்தைகள் அல்லது, அயல் வீட்டுப் பிள்ளைகள் நெருங்கிப் பழகும் போது இந்தப் பாட்டிமார் பல நற் கருத்துக்கள் நிரம்பிய கதைகளை, பாடல்களை சொல்லி சிறு பிள்ளைகளின் அறிவுத் திறன் விருத்திக்கு தூண்டு கோலாக அமைவார்கள்.
ஒரு சில வீடுகளில் பாட்டிகளை அல்லது வயதான பெற்றோரை தம் கூட வைத்திருப்பதைப் பல தம்பதிகள் விரும்புவதற்கான பிரதான காரணம் - தமது சிறு பிள்ளைகளைத் தாம் வேலைக்குப் போகும் போது பார்த்துக் கொள்ளுவார்கள் எனும் உள் நோக்கத்திலாகும். இதுவே பிள்ளைகள் வளர்ந்த வீடுகளில், வீட்டில் இருக்கும் ஆச்சியின் உதவி தேவைப் படாத சந்தர்ப்பத்தில் ஆச்சி கொஞ்சம் உபத்திரம் கொடுப்பவர் போன்று தம்பதிகளின் பார்வைக்குப் புலப்பட்டால் அடுத்த கணமே முதியோர் இல்லத்தில் கொண்டு போய்ச் சேர்த்து விடுவார்கள். சிறு பிள்ளைகளை, பிறந்த குழந்தைகளைக் குளிப்பாட்டுதல், கண் - காது - மூக்கு என அழுத்தி உடல் உறுப்புக்களைச் சேப்பாகப் பிடித்தல், எண்ணெய் தடவி சூரிய வெய்யிலில் நிற்க வைத்து சருமத்தை அழகுபடுத்துதல் முதல், கதைகள் சொல்லித் தூங்க வைப்பது வரை இந்தப் பாட்டிமாரின் செயல்கள் பல வடிவங்களைப் பெற்று நிற்கும்.
தாம் வாழும் காலத்தில் தமக்கோர் பேரக் குழந்தை கிடைத்து விட்டால் பாட்டிமாரிற்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை என்றே கூறலாம். வாரி அணைத்து உச்சி முகர்ந்து கொஞ்சி மகிழ்வார்கள். வயதான அம்மம்மா அல்லது ஆச்சி கொஞ்சும் அழகே தனி என்று கூறலாம். உச்சி முகர்ந்து மூச்சை உறிஞ்சி கன்னத்தில் "ச்...சூ..." என ஓசை எழுமாறு கொஞ்சுவார்கள். இந்த முகர்ந்து கொஞ்சுதல் பாட்டிமாரின் பாசத்தினை வெளிப்படுத்தி நின்றாலும், உங்கள் காதலிக்கு முகர்ந்து கொஞ்சும் போது அதிலும் ஒரு தனிச் சுவை இருக்கு என்பதனை அவள் வாயாலே கேட்டு அறிய நேரிடுகையில் தான் "அட முகர்ந்து கொஞ்சுதலிலும் பல வகையான பாசப் பிணைப்புக்கள்" இருக்கின்றனவே என்று உங்களுக்குத் தோன்றும்.
பாட்டிமாரின் வைப்பகமாக அல்லது பணம் மற்றும் இத்தியாதிப் பொருட்களைப் பாதுகாத்து வைக்குமிடமாக இருப்பது அவர்களின் நெஞ்சுச் சட்டை தான். பாட்டிமார் தமது நெஞ்சுச் சட்டைக்குள் பணத்தைப் பத்திரப்படுத்தி வைத்து கொடுக்கல் வாங்கல் செய்யும் போது எள்ளி நகைக்கும் நாம், இன்றைய கால கட்டத்தில் இளம் பெண்களும் இதே முறையினைப் பின் பற்றி பணத்தினை வெளியே எடுக்கும் போது "மனசையும் மார்புக்குள் மறைக்கிறாள்! மணியையும் (MONEY) மனசுக்குள் மறைக்கிறாள்!" எனக் கவித்துவம் பொங்கப் பாடி மகிழ்கிறோம்.
பாட்டிமார் போன்று வயசான ஆச்சிமார் பலரை நாம் கோவில் திருவிழாக்களில் அடிக்கடி தரிசித்திருப்போம். இந்த ஆச்சிமார் கச்சான் வியாபாரம் முதல், தேன் முறுக்கு, சுண்டல் எனப் பல வகையான தின் பண்ட வியாபாரங்களில் ஈடுபடுவார்கள். ஒவ்வோர் தடவையும் ஆலயத்திற்குப் போகும் போது, நாம் அனைவரும் செய்யும் ஒரே ஒரு வேண்டத்தாக செயல் அவர்களிடமும் பண்ட மாற்று வேலை செய்து கொள்வது. ஆலய தரிசனம் முடித்து வரும் வரை எம் பாதணிகளைப் பத்திரப்படுத்தி வையுங்கள் என்று கூறி விட்டுச் செல்லுவதும், தரிசனம் முடித்ததும் செருப்பிற்கு காவல் காத்த காரணத்திற்காய் நன்றிக் கடன் செய்கின்றோம் எனும் நோக்கில் அவர்கள் விற்கும் தின் பண்டங்களை வாங்கி விட்டு அவ் இடத்தை விட்டு நகர்வதுமாகும்.
எப்போதாவது ஒரு நாள் அவர்களின் கஷ்டங்களைப் போக்கும் வண்ணம் ஏதாவது ஆறுதல் கேட்டிருக்கிறோமா அல்லது அவர்களுக்கு பண்டமாற்று முறைமை தவிர்த்து உதவியிருப்போமா? எம்மில் ஒரு சிலர் தான் அவ்வாறு செய்திருப்பார்கள். காலங்கள் மாறுகையில் வாழ்க்கைக் கோலங்கள் மாறும் என்பதற்கு எடுத்துக் காட்டாக முன்பெல்லாம் வயதாகியதும் வீட்டின் ஓரத்தில் அல்லது வீட்டிற்குப் பின் புறத்தில் ஒரு சிறு குடிசையில் தம் வாழ் நாளைக் கழித்த முதியவர்களின் நிலை இன்று மாற்றமடைந்து கொண்டு வருகின்றது.
இப்போதெல்லாம் பெற்றவர்களை பிள்ளைகள் தம்மால் இயலுமானவரை பெற்ற கடன் தீர்க்கும் வகையில் பார்க்கிறோம் - பராமரிக்கிறோம் என்று கூறி விட்டு, முதியோர் இல்லங்களில் கொண்டு போய் விட்டு விடுகின்றார்கள். அன்றைய காலத்தில் வீட்டோடு கூட்டுக் குடும்பமாக இருந்த பாட்டன் பாட்டி, உறவு முறை இன்று தம்பதிகளின் சுதந்திரத்திற்கு இடையூறு எனும் காரணத்தினால் முதியோர் இல்லங்களை நோக்கி நகரத் தொடங்கி விட்டது. பாவம்! அவர்களும் மனிதர்கள் தானே என்று எம்மில் எத்தனை பேர் எண்ணியிருப்போம்? பெற்ற கடன் தீர்க்க முடியா விட்டாலும், அவர்களைப் புறக்கணித்து தம்மிலிருந்து பிரித்துப் பார்க்கும் சமூக நிலை என்று மாறுமோ?
எங்கள் ஊரில் வயதான ஆச்சிகளின் குறும்புச் செயலை அடிப்படையாக வைத்து ஒரு குட்டி நகைச்சுவை சொல்லுவார்கள்.
ஆச்சி ஒருவர் கிராமத்திலிருந்து பட்டணத்திற்குப் போகும் நோக்கில் பஸ்ஸில் கடகப் பெட்டியோடு ஏறி முன் இருக்கையில் உட்கார்ந்திருப்பா. தனக்கு முன் இருக்கை கிடைத்து விட்டதே என மகிழ்ச்சி பொங்க ஆச்சி கடகப் பெட்டியினை கியர் பொக்ஸிற்கு மேலே வைத்து விடுவா.
பஸ் ஓட்டுனரோ, "ஆச்சி கடகத்தை கொஞ்சம் எடுங்களேன். நான் கியர் போட்டு பஸ்ஸை ஓட்டனும்" எனச் சொல்லும் போது, ஆச்சி சொல்லுவாவாம், "கியர் தானே போடப் போறீங்க தம்பி! அதை மெதுவாக கடகத்தினுள் போடுங்களேன்!";-))
கடகம்: ஓலையால் பின்னப்பட்ட வட்ட வடிவான பெட்டி.
*****************************************************************************************************************
இன்றைய பதிவினூடாக நாம் கொஞ்சம் புரட்சிகரமான, கொஞ்சம் வித்தியாசமான சிந்தனை உடைய பதிவர் "அருளினியன்" அவர்களது வலைப் பதிவிற்குச் செல்லவிருக்கிறோம்.
அருளினியன் அவர்கள் தன்னுடைய "அருளினியன் பதிவுகள்" வலைப் பூவில் ஈழத்து அரசியல் விடயங்கள், உலக அரங்கில் இடம் பெறும் மாற்றங்கள், உள்ளூர் அரசியல் விடயங்கள் எனப் பல வகையான வித்தியாசமான எண்ணங்களை உடைய பதிவுகளைப் பகிர்ந்து வருகிறார்.
அருளினியன் அவர்களின் அருளினியன் பதிவுகள் வலை பதிவிற்குச் செல்ல:
*******************************************************************************************************************
|
56 Comments:
வணக்கம் நிரூபன். உங்களை சுற்றி நடப்பவற்றை உற்று நோக்குவதுவும் அவற்றிற்கான காரண காரியங்களை ஆராய்வதுமே உங்களை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக்காட்டும் நல்ல பதிவராக்கி இருக்கிறது வாழ்துக்கள்.
Keepitup
//பாட்டிமாரின் பொழுது போக்கு அம்சங்களுள் இன்று தொலைக் காட்சி சேனல்கள் (Channel) தனி இடத்தைப் பிடித்தாலும், அவர்களைச் சூழ்ந்திருக்கும் பேரக் குழந்தைகளின் சுட்டித் தனங்களும், வயதான பிள்ளைகளின் குறும்புகளும் தான் அவர்களிற்கு ஆத்மார்த்த ரீதியில் மன மகிழ்ச்சியினைக் கொடுக்கும் அம்சங்களாக விளங்குகின்றது.//
வணக்கம் சகோ.. மாறி வரும் உலகத்தில் மக்களிடம் மாற்றப்பட வேண்டிய விடயத்தினை மிக அழகாக செதுக்கியுள்ளீர்கள்
நான் வரைந்த கவிதை ஒன்று ஞாபகம் வந்தது.இங்கே முதியோர் இல்லத்தில் இருந்த்தாலும் ஓர் தாயின் மனது படும் வேதனை..
மார்பிலே தவழவிட்டு
மகனோடு கொஞ்சுகிறான்
என் மகன்!
இப்படித்தான் அவனை
ஈரமுடன் நான் வளர்த்தேன்!
எப்படித்தான் மறந்தானோ…
என்னை இன்று துரத்திவிட்டான்!
முதுமையில் தனிமையாய்
வறுமையின் கொடுமையோடு
தள்ளாடித் தவித்தபோதும்
விழிகள் பரபரக்கும்
தூரத்தில் நின்றேனும்
ஒருமுறை என் மகனைக் காண!
பிரார்த்தனை
வேறொன்றுமில்லை
கடைசிவரை கைவிடாமல்
பேரனாவது காக்க வேண்டும்
என் மகனை!
நன்றி சகோ ஆழமான சிந்தனை பதிவிற்க்கு..
அன்புடன்
சம்பத்குமார்
www.tamilparents.com
பாட்டிமாருக்கு இந்த பதிவு சமர்ப்பணம் ))
பிறந்தது வரை எனக்கு பாட்டியின் அரவணைப்பு கிடைக்கவே இல்லை.. (
///நாம் வாழும் காலத்தில் ஒவ்வோர் வருடமும் ஓராண்டு குறைகின்றதே என கவலை கொள்வோரை விட; எமக்கு அடுத்த பிறந்த நாள் எப்போது வரும் என ஆவல் கொண்டிருப்போர் தான் இவ் உலகில் அதிகமாக உள்ளார்கள்.// ஓம் இது உண்மையிலே ஒரு வியப்பான விடயம் தான்.. மரணம் நெருங்குதே என்று பயந்து பயந்து வாழ்வதை விட அதையே சவாலாக /சந்தோசமாக ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு தான் இந்த பிறந்தநாள் விழாக்கள்
கட்சி ஜோக் சூப்பர் ஹிஹி..
கூட்டுக்குடும்பம் கலைந்ததும் பொருளாதார மாற்றங்களும் பாட்டிமாரை வீட்டைவிட்டு முதியோர் இல்லத்திற்கு அனுப்பியது எனலாம்.
பெரியோரை கனம்பண்ணும் காலம் போய் இன்று அவசர உலகத்தில் அன்பின் பெறுமதியை மறந்த தாலும் இந்த அவலம் தொடர்கின்றது. புலம்பெயர்வில் உறவுகள் பிரிந்த தாலும் பலர் முதியோர் இல்லம் நாடுவது பாதுகாப்புக் கருதியும் தான் தன் இயலாமை நேரம் யார் தண்ணி கொடுப்பார்கள். என்ற ஆதங்கம்ப்கூட.
கடகம் ஜோக் இன்னொரு அர்த்தம் கொடுக்கும் அம்பி!
முதியோர் தனிமை பற்றி பிரென்ஸ் தேசத்தில் இருந்து ஒரு குறும்படம் வந்தது சுந்தர்லிங்கம் ஐயா அதில் சிறப்பாக நடித்திருப்பார் தாத்தா என்று நினைவில் அதன் பெயர்.
பாட்டிமார் நினைவுகள்...
முதியோர் இல்ல ஆதங்கம்...
வயதான ஆச்சிகளின் நகைச்சுவை ...
கதம்பமாய் இனிக்கிறது...எனக்கும் மலரும் நினைவுகள் தான் சகோதரம்...
பேரன் பேர்த்தியா?/தாத்தா என்று சிறு குலப்பம் இருக்கு நண்பர்கள் தெளிவு படுத்தட்டும் பாஸ்!
நள்ளிரவு வணக்கம் நிரூபன் அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!இன்று (நேற்று?)சென்னைப் பித்தன் ஐயாவும் ஒரு சம்பவம் பகிர்ந்திருக்கிறார்!பெற்றோர்,வயதானோர் பிள்ளைகளால் "பரா"மரிக்கப்பட்ட காலம் மலையேறி விட்டது!
பாட்டிகளே இல்லாத நாட்டில் வாழ்கிறோம்.(பாட்டிகள் உதட்டிலும் சிவப்புச் சாயம்தான்.என் பாட்டியை ஞாபகப் படுத்துகிறீர்கள் நிரூ.ஆனால் என் அம்மம்மா பொல்லாத மனுசி.தாத்தாதான் எனக்குப் பிடிக்கும் !
பாட்டியை பத்தி இவ்வளவு சொன்னீங்களே... வடையை பத்தி எதுவுமே சொல்லலை...
மனுஷனுக்கு தேவை ரெண்டே விஷயம்... ஒன்னு ஆயா... இன்னொன்னு ஆட்டுக்கால் பாயா...
வணக்கம் நிரூபன்
நான் இங்கு வரும்வரை எனது பாட்டியின் அரவனைப்பில்தான் இருந்தேன்.... அந்த காலங்கள் மறக்க முடியாதவை.. பாட்டியின் கால் உழைவுக்கு நொச்சியிலை பத்து கட்டுவது எனது வேலைதான் அதற்கு பரிசாக கோவிலில் கச்சான் வாங்குவதற்கு 50சதம் தருவா..(யாரப்பா50 சதத்தை பூ இவ்வளவுதானான்னு கேற்கிறது அப்போது இரண்டு பைக்கற் கச்சான் வாங்கலாமையா..) பழைய நினைவுகளை கிளறுகின்றீர்கள்..
ஒரு குட்டி கதை சொல்லுவார்கள்.. திண்ணையிலே பெற்றோரை வைத்து சாப்பாடு போட்ட தந்தையை பார்த்து மகன் சொல்வானாம் அப்பா பாட்டிக்கு சாப்பாடு போட்ட தட்டை கவனமாய் வைத்திரு நாளை உங்களுக்கு சாப்பாடு போட உதவுமென்று..,!!?? பெற்றோர்கள் முன்னுதாரணமாய் இருந்தால் நாளை அவர்களுக்கு சிக்கல் இல்லை.,!!!!!!
எனது பாட்டிகளை நினைவுபடுத்திவிட்டீங்க நாங்கள் ஊரில் கூட்டுக்குடும்பமாக அதுவும் பாட்டிமார்களோடு இருந்த அந்த நாட்கள் ஏனோ என் கண்முன்.. நானும் பார்க்கிறேன் இங்கு பாட்டிமார் இல்லாமல் வளரும் பிள்ளைகளை ஏன் இப்படி எங்களுக்குமட்டும்..!!!!!!!!!???????
எனது பாட்டி அடிக்கடி வெள்ளைக்காரங்க ஆண்ட அந்தகாலங்களை ஞாபகபடுத்துவா அதைப்பற்றி கூறும்போது வெள்ளைக்காரன் குதிரையில் போகும்போது அவனும் அவன் குதிரையும் அரைப்பனை உயரமிருக்கும்ன்னுவா நானும் இப்ப பார்க்கிறேன் அந்த வெள்ளைக்காரங்களையும் அவங்க குதிரைகளையும் ஹி ஹி ஹி!!!!???? என்ர பாட்டிக்கு கற்பனா சக்தி அதிகம்தான்யா..!!!
எனக்கு இன்றுவரை புரியாத புதிர் வயதானவர்களை ஒதுக்கும் இன்றய தலைமுறை..!!!!??
அருமையான பதிவு நன்றி நிரூபா..))))
பாட்டியை நினைவுபடுத்திவிட்டீர் நிரூபன்....நான் வளர்ந்தது பாட்டியிடத்தில்.....நிறையப்பாசம் உண்டு.அவரின் சொல் இன்றும்கூட எங்கள் சபையில் எடுபடும்....
பாட்டிகள் கூட பேரபிள்ளைகள் இருப்பது தான்... பாட்டிகளுக்கு மன நிறைவு... ஆனால் அது எத்தனை ஜீவன்களுக்கு கிடைக்கதோ, கிடைக்கலையோ... சிறியவயதில் பாட்டி எனக்கு கிழங்கு அவுத்து கொடுத்து அதில் தேங்காய் துருவல் போட்டு கடுகால் தாளித்து.. எனக்கு ஊட்டி விட்டு தானும் தின்றவாறு கதை பேசிய காலங்கள் ஞாபகத்திற்கு வருகிறது.. ஆனால் படபடப்பான வாழ்க்கையில் இப்பொழுதெல்லாம் அந்த ரிலாக்ஸான வாழ்வு நினைத்து கூட பார்க்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளபட்டுவிட்டோம்... உண்மையில் பதிவை படிக்கும் போது பாட்டி வயது உள்ளோர் மீது இன்னும் பாசம் அதிகரிக்கிறது... நன்றி நண்பா
ஹேமா said...
பாட்டிகளே இல்லாத நாட்டில் வாழ்கிறோம்.(பாட்டிகள் உதட்டிலும் சிவப்புச் சாயம்தான்.என் பாட்டியை ஞாபகப் படுத்துகிறீர்கள் நிரூ.ஆனால் என் அம்மம்மா பொல்லாத மனுசி.தாத்தாதான் எனக்குப் பிடிக்கும் !//
ஹா ஹா.. எங்க வீட்டிற்கு எதிர் வீட்டில் கூட ஒரு பாட்டி இருந்தது... பார்க்கவே சூன்யகாரி போல் எப்பொழுது பார்த்தாலும் யாரையாவது முறைத்துக்கொண்டும், திட்டிக்கொண்டும் இருப்பார்கள்.. அவர்களைபார்த்தால் எனக்கு கூட பிடிக்காது... ஆனால் அவங்க இறந்த பிறகு கருமகாரிங்களுக்கு முழுதும் நான் கூட இருந்தேன்... வயதானோரை பார்த்தால் அவர்களை கை எடுத்து கும்பிடுவது போன்ற தெய்வீக அமைப்பில் முகத்தை வைத்துக்கொண்டு இருந்தால்.. அனைவருக்கும் பிடிக்கும்... தாத்தாவை பிடிக்குமா.... தாத்தா வாழ்க! கலைஞரை சொல்லவில்லை :-)
பாட்டிகளை பற்றி நல்லா தெரிஞ்சி வச்சிருக்கீங்களே
வணக்கம் நிருபன் ....
மனதை இலகுவாக்கும் பதிவு
அதான் வந்தேன் .....
வணக்கம் சகோ நிரூபன்
அருமையான தலைப்புடன் இன்றைய கட்டுரை.
நாம் பண்பாட்டில் மற்றும் கலாச்சாரத்தில் இருந்து
எவ்வளவு விலகி இருக்கிறோம் என்பதை தெளிவாக
உணர்விக்கும் கட்டுரை.
பாட்டிமார்களின் உணர்வுகளையும், எண்ணங்களையும்
சாரை சாரையாய் வகுத்திருக்கிரீர்கள்.
காட்டான் மாமா சொன்னது போல, ஏனிந்த இளைய தலைமுறை
முதியவர்களை ஒதுக்கி வைக்கிறது..
காய்ந்த சருகுகள் இசைக்கும் இசைதான் இலைகளின் ஓசை..
முதுமை காக்க வேண்டும்.
பணபாட்டை அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
அருமையாய் ஒரு பதிவு கொடுத்தமைக்கு மிக்க நன்றி.
இன்றைய கால கட்டத்தில் இளம் பெண்களும் இதே முறையினைப் பின் பற்றி பணத்தினை வெளியே எடுக்கும் போது "மனசையும் மார்புக்குள் மறைக்கிறாள்! ”மணி”யையும் (MONEY) மனசுக்குள் மறைக்கிறாள்!" எனக் கவித்துவம் பொங்கப் பாடி மகிழ்கிறோம்.:////////
எல்லாப் பெண்களும் என்னை அங்க வைத்தா மறைக்கிறார்கள்! ச்சேச்சே சொல்லவே இல்லை!
அருளினியனுக்கு வாழ்த்துக்கள்! அதுசரி, முத்தையன்கட்டு விதானையாரின் மகள் அருட்செல்வி, தன்னுடைய பாட்டியுடன் முள்ளியவளையில் தங்கியிருந்து, வித்தியானந்தாவில் படித்தாள்!
அந்தப் பாட்டிக்கு ஐஸ் வைச்சு, பேத்தியைப் பிடிக்கத்தானே இந்தப் பதிவு????
தமிழ்மணத்தில் 7 வது ஓட்டுப் போட்டு, அனுப்பிவிட்டேன்! ஓகே வா??
எல்லோருக்குமே அவரவர் பால்யப்பருவத்தில் பாட்டிகளின் வாஞ்சையும் ஒரு அங்கமாய் இருக்குமோ என்ற ஊகம் உறுதிப்பட்டது. நெகிழ்ச்சி!
அருமையான கருத்து நண்பரே
பகிர்வுக்கு நன்றி மாப்ள...நல்லா சொல்லி இருக்கீங்க மற்றும் அறிமுகத்துக்கும் நன்றி!
பள்ளிப்படிப்பு முழுவதும் என் தாத்தா பாட்டியிடம் வளர்ந்து படித்தவன்.
அவர்களைத்தான் பெற்றோராக எண்ணி வாழ்ந்தவன்.
நன்றி நிரூபன்... என் ஆச்சியை நினைவுபடுத்தியதற்க்கு.
பாட்டிகள் வாழ்க!
அடுத்த பதுவுத் தாத்தாகள்
பற்றியா ...
நானும் ஒரு தாத்தா தான்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
நமக்குப்பின் வரும்சந்ததிகள், பாட்டி கதைகளை கேட்க்காமல் வளருமே!!!
///எங்கள் ஊர்ப் பாட்டிமாரில் அதிகளவானோர், வயாதாகி விட்டார்கள் என்றால் ///
வயதாகினால்தானே பாட்டி... ஹி..ஹி..
தமிழகத்தில் கூடை(மூங்கில் கூடை)
வெற்றிலை கொட்டும் உரல் கொட்லா என்று அழைப்பார்கள்
பொல்லுப்பிடிக்கும் என்பது பல்லுதானே (Dental)
பாட்டி என்றாலே என்கவிதை ஒன்று நினைவுக்கு வருகின்றது என் அம்மாவின் அம்மா அன்னையை இழந்த என்னை வளர்த்தவள் "அம்மாயி"
இன்று பதிவிட போகின்றேன் நன்றி
நல்ல நினைவுகள்
இன்று என் வலையில்
பா. ம. க சின்னம் மாறுகின்றதா?
வணக்கம் பாஸ்..
சிம்பிள் ஆனா விடயம் சொல்லியிருக்கும் விதம், கொடுத்திருக்கும் முக்கியத்துவம் சூப்பர்..
//எங்கள் ஊர்களில் வயதான பொல்லுப் பிடிக்கும் பாட்டிகளினதும், பொல்லுப் பிடிக்காப் பாட்டிகளினதும் நெருக்கமான சொத்தாக இறுதிக் காலங்களில் இருப்பது வெற்றிலை பாக்கு இடித்து சப்பி மகிழப் பயன்படுத்தும் சிறிய குடுவை உரல் தான்.//
யதார்த்தமான உண்மை.. சொல்லப்பட்டிருக்கும் விதம் சூப்பர் பாஸ்..
//"மனசையும் மார்புக்குள் மறைக்கிறாள்! மணியையும் (MONEY) மனசுக்குள் மறைக்கிறாள்!" //
ஹி ஹி ஹி ஹி நல்லவேளை பாஸ் அடைப்புக்குறிக்குள்ள ஆங்கில பதம் வந்தது...
இறுதியில் நம்ம ஊரு காமெடியும் சூப்பர்.. (உண்மையா சிரிச்சன் பாஸ்... மொக்கை காமெடி இல்லை..)
ஒட்டு மொத்தத்தில் சமூக சீர்திருத்த சிந்தனை கொண்ட, அருமையான, வழமைபோல அழகிய மொழி நடை கொண்ட அழகிய பதிவு. வாழ்த்துக்கள் நிரூ.
வணக்கம் அண்ணே...
//கியர் தானே போடப் போறீங்க தம்பி! அதை மெதுவாக கடகத்தினுள் போடுங்களேன்!";/// ஹீ ஹீ
அண்ணே நீங்க இப்புடி சொல்லி இருக்கீங்க,,, ஆனா சில வீடுகள்ல இந்த பாட்டிகள் அடிக்கும் லூட்டிகள் தாங்க முடியலப்பா...
பாட்டி-பேரன் உறவும் அந்த சுகமும் இப்போது இல்லாமல் போய்விட்டது.
வழக்கம் போல தங்களுடைய பாணியில்.....
பாட்டி பற்றிய நினைவுகளை கிளரும் பதிவு......
இவர்கள் யாரும் தங்களிடம் பேச வேண்டும் என்ற எதிர்பார்ப்பை விட, அவர்கள் பேசுவதை யாரும் காத்து கொடுத்து கேட்கவில்லையே என்ற ஏக்கம் பல உண்டு... என்ன பாட்டி என்று கேட்டு விட்டு அமர்ந்து அவர்கள் சொல்வதை காத்து கொடுத்து கேட்டாலே அவர்களுக்கு ஆனந்தமே..
பாட்டிகளின் பற்றிய நினைவலைகள் அருமை சகோ.... அறிமுகத்துக்கும் நன்றி
பாட்டியின் கடகம் ஜோக் சூப்பர்ப்....!!!
இந்த காலத்துல பெத்த அம்மா அப்பாவையே கூட வச்சிக்காமல் முதியோர் இல்லத்தில் சேர்க்கும் போது பாட்டியாவது பூட்டியாவது, மனிதாபிமானம் இல்லாத மனிதர்கள் இவர்கள்!!!!!
இதிகாசங்கள் பாட்டி வழியாகவே சிறுவர்களுக்கு போய் சேர்ந்தது சகோ! ஏன் பாட்டி நினைவகள் .கடைசி நகைச்சுவை அருமை.
@veedu
பொல்லுப்பிடிக்கும் என்பது பல்லுதானே (Dental)
//
பொல்லு என்பது பாட்டி கையில் வைத்திருக்கும் தடியை ஈழத்தில் சொல்லுவார்கள்.
தமிழகத்தில் பிரம்பு என்று சொல்லுவார்கள் என நினைக்கிறேன்.
பொல்லு: Walking Stick பாஸ்.
பாட்டிகள் பற்றிய பதிவு அருமை . எனக்கு எனது தாயின் தாயை நினைவுபடுத்தியது. இந்த பதிவு .
மன்னிக்கவும் சகோ . தற்போது வாரம் ஒரு தடவை மட்டுமே வலைத்தளத்துக்கு வருகை தரும் சூழ்நிலையில் நான் .
பாட்டி தாத்தா என்றாலே எனக்கு பேரானந்தம் .அதுவும் இங்கே நிறைய பேர் எனக்கு நண்பர்கள் என் கணவர் என்னை கிண்டல் செய்வார் .old peoples darling //
என்று .என்னால் முடிந்த உதவி செய்வேன் குறைந்த பட்சம் ஐந்து நிமிடமாவது அவங்களுடன் நின்று பேசுவேன் .நிரூபன் எல்லாருமே என்பது வயதுக்கு மேல் இருப்பாங்க .நீங்க சொல்றது முற்றிலும் உண்மை அவர்கள் ஆசையெல்லாம் யாராவது சிறிது நேரம் அவங்களோடு பேசணும் .
Post a Comment