என்று என் கவியை(ச்)
சுணக்கம் ஏதுமின்றி
ஆரம்பிக்க முடியாது,
"ஐயே" என்றால்
நீங்கள் இப்போது
உச்சரிக்கும்
அரை குறைத் தமிழில்
அது ஐயம் என ஆகிப்
பொருள் கொள்ளப் படுமோ
என அடியேனுக்கு
ஐயம் உண்டாகி விட்டது!
உங்களைச் சுற்றியிருக்கும்
தமிழினத்து விற்பனர்கள்
தாடி டக்குவும்
தனிப் பிரிவினை கோரிய
தாய்லாந் மலேசிய
அழகிகளால் தன்
தூக்கம் தொலைத்த
கருணையில்லா கருணாவும்
ஐயே எனும் வார்த்தைக்கு
சில வேளை
ஐயம் என
அர்த்தம் கற்பித்திருக்கலாம் - ஆதலினால்
மாமா என்றே
மஹிந்த உங்களை
அழைப்பதுவும் சிறப்பல்லவா?
தமிழை மறத்தல்
நாகரிக மோகம் என
ஒரு பகுதி தமிழர்
தஸ்க்கு புஸ்க்கு என
தமிங்கிலிஸ் பேசும்
காலத்தில் நீங்களோ
ஈழத்து வட கிழக்கில்
தமிழர் மனதை வெல்லுவேன்
எனும் நப்பாசை கொண்டு
தமிழ் கற்றீராமே!
ஆண்டுகள் மூன்றாகப் போகிறதே!
மக்கள் மனங்களை
வென்றீரா மாமா?
மாமா என்பதற்கு அர்த்தங்கள் பலவாம்
நான் சொல்லவில்லை!
நீங்கள் கற்ற தமிழ் சொல்கிறது!
ஒருவனை கூட்டி கொடுப்பவனும்
காட்டி கொடுப்பவனும்
அகராதியில் மாமா என
அழைத்து மகிழத் தகுதி உடையவனாம்!
தவறில்லை தானே?
சிகப்புச் சால்வையால் வாயில்
ஊறி வரும் எச்சில் தனை துடைத்து
நீங்களோ உங்களுக்கு தெரிந்த
அரை குறை தமிழில்
என் கவியை
எழுத்துக் கூட்டிப் படிக்கலாம்?
இல்லையேல் உம்
அருகே இருப்போரை
கொண்டும் படிக்கலாம்!
இந்தியாவிற்கு, சீனாவிற்கும்
தமிழர் பகுதி வளங்களினை
விற்ற பெருமகன்
உம்மை மாமா என
விளிப்பதில் என்ன தவறு கண்டீர்?
உமக்கு அருகே இருக்கும்
"கோத்தா" உணர்ச்சி வசப்பட்டு
பேசுவது புரியாது
ஒட்டு மொத்த
சுதந்திர கட்சியும்
அவதிப்படுவதினைப் போல
என் கவியும் ஆகிவிடாது
கவலை வேண்டாம்!
கவிதை
புரியவில்லை எனில்
அருகே இருக்கும்
தமிழ்
விற்பனர்களிடம் கொடுங்கள்;
தம் பொற் கரங்கள் நிறைய
உங்களிடம்
இன மானத்தை விற்று
பரிசு வாங்கி
கவிதை படித்தும் சொல்லுவார்கள்;
நீங்கள் குனிந்து நின்றால்
குண்டியும் கழுவி விடுவார்கள்!
2005இன் இறுதி நாட்களில்
இதோ இலங்கையை
மாற்றிக் காட்டுகிறேன் எனும்
மமதையோடு ஆட்சி பீடமேறினீர்!
இன்றோ
தமிழரின் மனதை
மாற்ற வழியின்றி
மனதுள் வெந்து சாகின்றீர்!
புதிய வடிவில் போர் தொடுத்து
மாவிலாறிலிருந்து
முள்ளிவாய்க்கால் வரை
நும் சித்து விளையாட்டால்
உலக நாடுகளை
காலடியின் கீழ் வைத்து
தமிழர் சேனையினை
அழிக்க நினைத்து
போரை முடித்தீராமே!
இது யான் சொல்லவில்லை
வரலாறு சொல்லி நிற்கிறது!
நவீன "துட்டகைமுனுவாம்"
நீவிர் என
சிங்கள மக்கள்
"மகாவம்சத்தினையே"
மாற்றி எழுதும் நோக்கோடு
புறப்பட்டு விட்டார்கள்!
கெட்ட குடியின் மேலேறி
தமிழரின் குருதியினை
துப்பாக்கி முனை தன்னில் குடித்து
"கொட்டியா" பற்றி பேச்செடுத்தால்
கொன்று விடுவோம் என - தமிழர்
கொட்டம் தனை அடக்க வழியின்றி
அச்சப்படுத்தி வைத்திருக்கும்
உம்மை நவீன துட்டகைமுனு
என அழைக்க
எப்படி மாமா மனசு வரும்?
கழுத்தில் சிகப்பு சால்வை
தமிழர் குருதியால் நிறைந்திருக்கும்
உம் உடலினை
வெளிக்காட்டும் தனிப் போர்வை!
போரை முடித்து
வடக்கில் வசந்தம் என
மார்தட்டி
சோனியா அம்மையாருக்கும்
சொர்க்க வாசலாம்
திருகோணமலை துறைமுகத்தை
தாரை வார்த்து
கொச்சைத் தமிழ் கற்று
உலகெல்லாம் சுற்றி வந்து
மகிழ்ச்சி வெள்ளத்தில்
பீற்றித் திரியும் உமக்கோ
பயத்தில் குலை நடுக்கமாம் - கூடவே
உம் ஆயுளின் நாளை
அடிக்கடி எண்ணி
கவலை கொள்கிறீராம்!
காரணம் புற்று நோயாம்!
ஆன்மீகத்தில் அளவிலா
நம்பிக்கை கொண்ட
உமக்கோ கனவில்
புலிகளும் பிரபாகரனுமாம்!
ஹே...ஹே..
காவலுக்கு ரெண்டு பிக்கு!
நீர் கனவில் திடுக்குற்று
எந்திருக்கையில்
உமை ஆசுவாசப்படுத்தி
சுய நினைவிற்கு கொண்டு வர
சேவை மேல் சேவை செய்து
கையில் வேலெடுக்கா
குறையாக கவனிக்கிறார்களாம்!
மரணமது எப்போ என்
குரல் வளையை நெரிக்கும்
என எண்ணும் நீரோ
உம் சிகப்புச் சால்வை தனை கண்டு
மரணமது அஞ்ச வேண்டும் என்பதற்காய்
தூங்கையிலும் கழற்றி வைப்பதில்லையாம்!
சே...மணக்கும் அங்கிள்!
மாற்றீடாய் சிகப்பு சால்வையினை
மாற்றியாச்சும் கட்டலாமில்லே!
கோவணமும் சிகப்பு சால்வையோ?
தெரியவில்லை!
கேபி அங்கிள் தான்
இதனைப் பார்த்து(ம்) சொல்ல வேண்டும்!
இராஜ யோகத்தில்
நீர் மகிழ்ந்திருப்பதாய்
உமக்குப் பெருமிதமாம்!
பின்னே!
கேபி அங்கிள் எடுபிடியாய் இருக்க
தாடி டக்கா, வேட்டி அண்ணர்
இருவரும் குடை பிடிக்க
நும் காதில் நுழைந்துள்ள
அழுக்கை
கருணா அவர்கள் அகற்றி நிற்க
உமக்கு ராஜ யோகம் தானே!
ஆனாலும் உம்மை நினைத்தால்
சிரிப்புத் தான் வருகிறது -
ஹே...ஹே....
இலங்கையின்
ஆறாம் பராக்கிரமபாகு என
மார் தட்டும் உங்களுக்கும்
உங்கள் பின்னுள்ள
கூட்டத்திற்கும்
போர் குற்றம் என்றால் கிலியாமே!
வாசலில் புலி என்றால்
இன்னும் அச்சம் விலகாத நிலையாமே!!
சொல் விளக்கங்கள்:
ஐயே: அண்ணா எனும் வார்த்தையைச் சுட்டும் சிங்களச் சொல்.
ஐயம்: சந்தேகம்
கொட்டியா: புலி
கொட்டம்: வீரம்
துட்டகைமுனு: இலங்கை முழுவதையும் முன்பொரு காலத்தில் ஆண்ட மன்னன்.
மகாவம்சம்: சிங்களவர்களின் வரலாற்றினைப் பேசும் நூல்.
கோத்தா: மஹிந்தவின் அருமைத் தம்பியாரும், பாதுகாப்பு அமைச்சிற்குப் பொறுப்பாக உள்ளவருமான கோத்தபாய ராஜபக்ஸே.
********************************************************************************************************
இன்றைய பதிவினூடாக சிறுகதை, கவிதை எனப் பல சுவையான படைப்புக்களைத் தன் "அன்பை விட ஆயுதம் எதுவும் இல்லை" எனும் வலைப் பதிவினூடாக எழுதி வருகின்ற "சிவா" அவர்களின் வலைப் பதிவிற்குத் தான் நாம் செல்லவிருக்கின்றோம்.
சிவா அவர்களின் "அன்பி விட ஆயுதம் எதுவிம் இல்லை" வலைப் பதிவிற்குச் செல்ல:
http://mannaiyinselvan-siva.blogspot.com/
***********************************************************************************************************
|
50 Comments:
ஏ மல்லி, தங் மம நிதா கரன்ன ஓனே! பஸ்ஸெ மங் கமெண்ட்ஸ் கரனவா, ஹரித! ஒயாகே நம, அபி நோட் கரனவா ஹரித!
ஏ மல்லி! அபி தன்னவா ஒயா தமாய் லொக்கு திரஸ்தவாதி! அபிதெக்க செல்லம் கரன்ன எப்பா, ஹரித!
கவிதை வழமை போல் அசத்தல்
\\\\கவிதை
புரியவில்லை எனில்
அருகே இருக்கும் தமிழ்
விற்பனர்களிடம் கொடுங்கள்
தம் பொற் கரங்கள் நிறைய
உங்களிடம்
இன மானத்தை விற்றுப் பரிசு
வாங்கி கவிதை
படித்தும் சொல்லுவார்கள்!
நீங்கள் குனிந்து நின்றால்
குண்டியும் கழுவி விடுவார்கள்!\\\ கொல்லும் வார்த்தைகள் ...மொத்தத்துல அசத்தல் !
சாடல் கவிதை ,சாட்டை
மஹிந்த மாமாவா... விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கிறேன்... அப்புறம் பின்னூட்டத்தில் ஐடியா மணி சிங்களத்தில் எதோ சொல்லியிருக்கிறார் அதையும் மொழி பெயர்த்தா நல்லா இருக்கும்
நிரூ ஜயே மொக்கத கியன்னே!ஒயால சிறிலங்கா இன்ன ஓனே ஹரித?
செல்லங் கரன்ன எப்பா?
ஆயு போவன்.ஓவ் மல்லி சிங்கல தண்ணுவத?டிக்க,டிக்க தண்ணுவ நேயத?பொட்டக் கீண்ட மல்லி,மம தெமிழ தேரு நா!
//தமிழை மறத்தல்
நாகரிக மோகம் என
ஒரு பகுதி தமிழர்
தஸ்க்கு புஸ்க்கு என
தமிங்கிலிஸ் பேசும்
காலத்தில்//
இவங்கள திமிங்கிலம்னு சொல்லலாமா?
கவிதையை புரிந்துகொள்ள, சில வரலாற்று ஆய்வுகள் செய்யவேண்டியிருக்கு, மகாவம்சம்னா என்ன? துட்ட கைமுனு யார்?
நல்லா பிடி பிடின்னு பிடிச்சு விட்டு இருக்கீங்க மாமாவை ஹா ஹா ஹா
நல்லா இருக்கு நிரூ
மேல ஐடியா மணி அண்ணே எதோ திட்டின மாதிரி தெரியுதே?
///ஏ மல்லி, தங் மம நிதா கரன்ன ஓனே! பஸ்ஸெ மங் கமெண்ட்ஸ் கரனவா, ஹரித! ஒயாகே நம, அபி நோட் கரனவா ஹரித!///
அடேங்கப்பா.....
வணக்கம் நிரூ பாஸ் மணிசார் உங்களை தீவிரவாதி என்று திட்டிவிட்டுப் போறார் ஓ வலையில் பதிவுகள் படைப்பதில் தீவிரவாதி என்று சொல்லியிருப்பாரோ ! அவர் பெயரையும் நானும் நோட்பண்ணி விட்டன்!
நவீன துட்டகைமூன் பற்றிய உங்கள் கவிதை ராஜோகம் அன்னக்காவடி தூக்குவது என்பதைப் பதிவு செய்கின்றது!
கனவில் கூட கொட்டியா என்ற பாடல் ஞாபகத்தில் வந்து போகின்றது!
//ஈழத்து வட கிழக்கில்
தமிழர் மனதை வெல்லுவேன்
எனும் நப்பாசை கொண்டு
தமிழ் கற்றீராமே!
ஆண்டுகள் மூன்றாகப் போகிறதே!
மக்கள் மனங்களை
வென்றீரா மாமா? //
அது தேர்தலுக்கு அடித்த ஸ்டண்ட் தானே?
//மரணமது எப்போ என்
குரல் வளையை நெரிக்கும்
என எண்ணும் நீரோ
உம் சிகப்புச் சால்வை தனை கண்டு
மரணமது அஞ்ச வேண்டும் என்பதற்காய்
தூங்கையிலும் கழற்றி வைப்பதில்லையாம்!//
இங்க மஞ்சள் துண்டு...அங்க சிவப்புச் சால்வையா?
//கோவணமும் சிகப்பு சால்வையோ?
தெரியவில்லை!
கேபி அங்கிள் தான்
இதனைப் பார்த்தும் சொல்ல வேண்டும்!
//
ஹா..ஹா..இன்னிக்கு செம காட்டமா இருக்கே.
மகிந்த மாமாவோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... மாமாவும் இல்லை ஐயே யும் இல்லை.... இன்னும் நல்ல:) வார்த்தை பாவித்திருக்கலாமோ:))...
திட்டும்போதும் மரியாதையாகத் திட்டுறீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).
ராஜ பக்ஷேவுக்கு சரியான மாத்து கொடுத்துள்ளீர்கள்.
இரண்டு தடவை படித்து மகிழ்ந்தேன்.
தாடி டக்கா என்பது டக்ளஸ்தானே?
//ஏ மல்லி, தங் மம நிதா கரன்ன ஓனே! பஸ்ஸெ மங் கமெண்ட்ஸ் கரனவா, ஹரித! ஒயாகே நம, அபி நோட் கரனவா ஹரித!//
//ஏ மல்லி! அபி தன்னவா ஒயா தமாய் லொக்கு திரஸ்தவாதி! அபிதெக்க செல்லம் கரன்ன எப்பா, ஹரித!//
மேற்ப்படி சிங்களத்துக்கு தமிழ் மொழி பெயர்ப்பு தரவும்.
சிங்களத்தில் கத்த ஐடியா மணிக்கு
101 லத்திகா டிவிடி பார்சல் அனுப்ப போகிறேன்.
நிரூபன்,
பிடிங்க பூங்கொத்து!
///வணக்கம் ஐயே// வணக்கம் ஐயா
////தனிப் பிரிவினை கோரிய
தாய்லாந் மலேசிய
அழகிகளால் தன்
தூக்கம் தொலைத்த
கருணையில்லா கருணாவும்//// ஒ சங்கதி இதுவா ))
////ஈழத்து வட கிழக்கில்
தமிழர் மனதை வெல்லுவேன்
எனும் நப்பாசை கொண்டு
தமிழ் கற்றீராமே!///ஹிஹி இவர் மகன் புற்று நோயை தமிழில் எப்பிடி சொன்னார் எண்டு தெரியுமோ ))
வணக்கம் நிரூபன்
மாமாவுக்கு இப்படியெல்லாம் அர்த்தம் கொடுத்துட்டிங்களே இனி மருமோன்களுக்கு கொண்டாட்டம்தான், மாட்டி விட்டுட்டிங்களே!!!!)))
///நவீன துட்டகைமுனுவாம்
நீவிர் என சிங்கள மக்கள்
மகாவம்சத்தினையே
மாற்றி எழுதும் நோக்கோடு
புறப்பட்டு விட்டார்கள்!/// துட்டகைமுனு நல்லவனா என்ன ....?
இந்த கவிதையை யாராவது மகிந்தருக்கு அனுப்பி வைக்கிரிங்களா மக்காள்ஸ் ..)
/////ஏ மல்லி, தங் மம நிதா கரன்ன ஓனே! பஸ்ஸெ மங் கமெண்ட்ஸ் கரனவா, ஹரித! ஒயாகே நம, அபி நோட் கரனவா ஹரித!///
ஹா..ஹா... :-))))
அப்பப்பா உம்கவிதை-வந்த
அடிதோறும் சொல்லுவதை
தப்பப்பா என்றுசொல்ல-அந்த
டக்ளசும் வாரானே
ஒப்பப்பா இலையென-இந்த
ஊருலகு சொல்லுமய்யா
செப்பப்பா மேன்மேலும்-தந்த
செந்தமிழில் தேன் போலும்
புலவர் சா இராமாநுசம்
சகோ! போட்டு புரட்டி எடுத்திட்டீங்க!
சரி தம்பி ஐடியா மணி ஆரம்பத்துல என்னவோ சொல்லியிருக்காரே! ஒண்ணும் புரியல!
கவிதை கனல்கிறது!
பாராட்டுக்கள்....
பிச்சு எடுத்துட்டீங்க.. போங்க....
மஹிந்த மாமா...தமிழ் பேசினாலும் பிரெஞ்சு பேசினாலும்...கருணா மொழி பெயர்த்தாலும்...
Writing in clearly on the wall...
நல்லாயிருந்தது சகோதரம்...
வணக்கம் நீண்ட காலத்திற்கு பிறகு வலைத்தளப்பக்கம் வருகிறேன்! எந்தப்பெரிய்ய கவிதை. ......
//உமக்கு அருகே இருக்கும்
"கோத்தா "////
அவருக்கு தெரிஞ்சி பேரு வச்சாங்களா, இல்ல தெரியாம பேர் வச்சாங்களா? ஒன்னுமே புரியல!!
@Dr. Butti Paul
கவிதையை புரிந்துகொள்ள, சில வரலாற்று ஆய்வுகள் செய்யவேண்டியிருக்கு, மகாவம்சம்னா என்ன? துட்ட கைமுனு யார்?//
வணக்கம் அண்ணன்களா,
நலமா?
மகாவம்சம் எனப்படுவது சிங்களவர்களின் வரலாற்றினை கூறும் நூலாகும்.
துட்டகைமுனு என்பவன் பலம் பொருந்திய, இலங்கையினை ஒரு குடையின் கீழ் ஆண்ட மன்னன்.
@மொக்கராசு மாமா
//உமக்கு அருகே இருக்கும்
"கோத்தா "////
அவருக்கு தெரிஞ்சி பேரு வச்சாங்களா, இல்ல தெரியாம பேர் வச்சாங்களா? ஒன்னுமே புரியல!!//
கோத்தா எனப்படுவர் கோத்தபாஜ ராஜபக்ஸே.
பக்ஸே அவர்களின் தம்பி,
பாதுகாப்பு அமைச்சிற்குப் பொறுப்பாக இருந்தவர்.
மக்கு மாமனுக்கு
சரியான சாட்டையடி கொடுத்தீர்கள்.
ஒவ்வொரு வரியும் நரக தண்டனை கொடுக்கும் வரிகள்.
வணக்கம் நிரூபன், என்ன ஒரு வேகம் இப்படி மாமாவை பிடித்து உலுப்பித்தள்ளிவிட்டியள்
>மகாவம்சம் எனப்படுவது சிங்களவர்களின் வரலாற்றினை கூறும் நூலாகும்.
துட்டகைமுனு என்பவன் பலம் பொருந்திய, இலங்கையினை ஒரு குடையின் கீழ் ஆண்ட மன்னன்
-------------
அதுமட்டுமல்ல , எல்லாளன் என்ற சிங்களவர்களும் போற்றிய தமிழ்மன்னனை வீழ்த்தியவன், துட்ட கைமுனு. எல்லாளன் போரில் மரணமடையும்போது எல்லாளன் முதியவன்/ர். துட்ட கைமுனு இளைஞன். அத்தோடு போரில் நயவஞ்சமாகவே எல்லாளனை அவன் விழுத்தினான் என்று தமிழர்கள் சொல்லுகிறார்கள். உண்மை ஆண்டவன் மட்டும் அறிவான்.
வரலாறு இருக்கட்டும், "துட்ட கைமுனு" தமிழனை வென்றவன் என்பதால் பிற்காலச் சிங்கள அரசியல்வாதிகளால் 'பிரபலமாக்கப் பட்டவன்'.
ஆனால், அக்காலங்களில் தமிழ்/சிங்களம் என்று வேறுபாடு இவ்வளவு இருந்திராது என்பதுதான் உண்மை.
கெட்ட வார்த்தயை தவிர மற்ற எல்லா வார்த்தைகளும் பிரயோகிக்கப்பட்டு விட்டது கவிதையில் . திட்டி தீர்த்த நிம்மதி
இப்படி நேரடியாக திட்டி தீர்க்கும் வஞ்சிப்பாவுக்கு கொஞ்சம் சிலேடையும் கலந்து கட்டினா நாங்க குசியா வாசிச்சு சந்தோஷப்படுவோம் .
கவிதையில் திட்டிதீர்த்து .. விளாசி தள்ளீட்டீங்க பாஸ்... கலக்குங்க
நண்பர் சிவாவுக்கு வாழ்த்துக்கள்
மிக நீண்ட கவிதையானாலும்,மாமாவின் மண்டையில் ஏறுமா இவையெல்லாம்?நல்ல பதிவு .இதுபோன்ற நிகழ்வுகளை தொடருங்கள்.
பாஸ்,பின்னிப்பெடலெடுத்துட்டிங்க அப்படின்னு ஏங்க ஊர்ப்பக்கம் சொல்வாங்க!
அதைப்போல இருக்கு!
தங்களால் மட்டுமே இது போன்று எழுத முடியும். எங்களது உணர்வுகள்.
தங்களது அனுபவங்கள் .. வலி நிறைந்தவை.
கவிதையை யாரவது மாமாவுக்கு மொழி பெயர்த்து சொல்வார்களா ?
கார்ட்டூன்ல இருக்குற ஆளுக்கும் எனக்கும் முன் ஜென்ம கொடுக்கல் வாங்கல் தகராறா என்ன?இன்றைக்கு பின்னூட்டமிடும் ஒரே பதிவு இதுதான்.நிரூ!என்னையெல்லாம் அடக்கி வாசிங்கோன்னு முன்னாடி எனக்குப் பின்னூட்டமோ அல்லது உங்க தளத்துக்கு எனது பின்னூட்டத்துக்கு மறுமொழியோ சொல்லி விட்டு மகிந்தவுக்கு ஏவுகணை அனுப்புவது சரியோ!
அண்ணே ..
கவிதை மிகவும் அருமை ...
இதை படிக்கும்
தமிழன் என்று சொல்லி கொள்ளும் ஒவ்வொருவரியும் இது குத்திக்காட்டுகிறது
Post a Comment