Wednesday, October 12, 2011

ஈழத்தில் இயல்பு நிலை தோன்றின் புலம் பெயர் தமிழர்கள் தாயகம் திரும்புவார்களா?

விவாத மேடை:
பேரன்பிற்கும் பெரு மதிப்பிற்குமுரிய உறவுகளே, உங்கள் அனைவரையும் மீண்டும் மற்றுமோர் விவாதமேடை பதிவினூடாகச் சந்திப்பதையிட்டு அகம் மகிழ்கின்றேன். ஈழத் தமிழர்களுள் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களை நாம் பின்வருமாறு வகைப்படுத்திக் கொள்ளலாம். 
*உயர்கல்வி நோக்கிலும்,தமது கல்வித் தகமை அடிப்படையில் (Professional Qualification) புலம் பெயர்ந்தோர் (Skilled Migrants)
இம் மக்கள் எக் காலத்திலும் தாயகம் திரும்ப மாட்டார்கள். காரணம் இவர்கள் தாமாகவே வசதி வாய்ப்புக்களினைத் தேடிப் புலம் பெயர்ந்த மக்கள்.
*ஈழத்தின் உள் நாட்டுப் போர் காரணமாக அடைக்கலம் தேடி புலம் பெயர்ந்தோர் (Asylum Seekers)
*ஈழப் போரைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இலங்கையில் வாழ முடியாது என்று பொய் சொல்லி, உண்மையாகவே ஈழத்தில் வாழ முடியாத அச்சம் கொண்ட மக்களைப் போலத் தாமும் போரினால் பாதிக்கப்பட்டோம் எனக் கூறி வெளி நாட்டில் அதிகளவான பணம் உழைக்கலாம் எனும் நோக்கில் புலம் பெயர்ந்தோர். இந்த இரு வகை மக்களில் தாம் வாழும் நாட்டின் குடியுரிமை வைத்திருப்போர் அவற்றையெல்லாம் விசிறி எறிந்து விட்டுத் தாயகம் திரும்ப மாட்டார்கள்.

இனி விவரணச் சுருக்கம்: ஈழத்தின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 1995ம் ஆண்டு வாழ்ந்த "X" எனும் நபர் தான் யாழில் இராணுவ முற்றுகைக்கு உள்ளாகி விடுவேன் எனக் கருதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் செல்கின்றார். அங்கே புலிகள் கட்டாய ஆட் சேர்ப்பினை நடை முறைப்படுத்தும் போது, வெறுப்படைந்து புலிகள் மீது கோபம் கொண்டவராய் புலிகளுக்குத் தெரியாது வவுனியாவிற்கு ரகசியமாகப் போகின்றார். பின்னர் வவுனியாவிலிருந்து தம் உறவினர்களின் உதவியுடன் வெளி நாட்டிற்குப் போகின்றார். 

புலம் பெயர்ந்த பின்னர் தனக்கு யாழில் இராணுவத்தால் அச்சம் என்றும் வன்னியில் புலிகள் பயங்கரவாதிகளாகச் செயற்பட்டார்கள் அதனால் அவர்களால் தனக்கு அச்சம் என்றும், இலங்கையின் ஏனைய பகுதிகளில் தன்னால் வாழ முடியாத படி துணை இராணுவக் குழுக்களின் செயற்பாடுகள் காணப்படுவதாகவும் சொல்லி மூன்றாம் உலக நாடொன்றினுள் அடைக்கலம் கோரும் மேற்படி நபர் காலவோட்ட மாற்றத்தில் புலிக் கொடியினைக் கையிற் பிடித்தவாறு "We want Tamil Eelam, Tamil Tigers Freedom Fighters, Tamil Are LTTE, LTTE Are Tamils" எனக் கோஷமிட்டபடி ஐரோப்பிய நகர வீதிகளில் உலாவருகின்றார். இந் நபர் போல பல புதிய முகங்களிற்கு ஈழம் மீதான தீராத காதல் புலம் பெயர்ந்த பின்னர் தான் உருவாகின்றது. இந் நபர்கள் ஈழத்தில் இயல்பு நிலை தோன்றினால் ஈழத்திற்குத் திரும்பி வந்து வாழத் தயாராக இருப்பார்களா?

இனி பதிவின் மையக் கருத்து: நான் மேலே குறிப்பிட்டுள்ள மூன்று வகையான புலம் பெயர் மக்களில் பணமீட்டுவதற்காகப் புலம் பெயர்ந்தோரும், அகதி அந்தஸ்துக் கோரும் வகையில் புலம் பெயர்ந்தோரும் உண்மையில் மிக மிக கடுமையாக, இரவு பகல் உறக்கமின்றித் தம் சந்ததியினை கஷ்டமின்றி வாழ வைப்பதற்காகவும், தாம் படும் துன்பங்களை அவர்களும் எதிர் நோக்காமல் வாழ வேண்டும் எனும் நோக்கத்தில் அல்லும் பகலும் உழைக்கின்றார்கள். அதே வேளை இம் மக்களில் பெரும்பாலானவர்களின் கனவாக "We Want Tamil Eelam" என்பது தான் இருக்கின்றது. 

தம் தாய் நிலத்திற்கு எக் காலத்திலும் திரும்பி வருகின்ற உணர்வினைப் பெற்றிருக்காதவர்களாக இம் மக்கள் வாழ்ந்தாலும்; தமிழீழத்தை வென்றெடுக்க வேண்டும் எனும் கொள்கை கொண்டவர்களாவும், ஈழத்தில் வாழும் மக்களுக்காக நாம் குரல் கொடுத்து உலக நாடுகளின் ஆதரவினைப் பெற்று ஈழ மக்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் எனும் நோக்கம் உடையோராகவும்; கொட்டும் பனியிலும், குளிர் மழையின் மத்தியிலும் அணி திரண்டு எழுச்சிப் போராட்டங்களை மேற் கொண்டு ஈழ மக்கள் மீதான தம் பாசத்தினை வெளிப்படுத்திக் காட்டுகின்ற நல்ல மனப்பான்மை கொண்டோராகவும் இப் புலம் பெயர் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

"மனிதாபிமானமும், வசதி வாய்ப்புக்களும் மலிந்திருக்கும் மூன்றாம் உலக நாடுகளில் வாழும் இம் மக்கள் இலங்கையில் இயல்பு நிலை தோன்றினால் திரும்பி வருவார்களா?" அல்லது திரும்பி வரத் தயாராகுவார்களா? என்று வினா ஒன்றினை முன் வைக்கையில் இதற்கான விடையாக என்னால் முன் வைக்கக் கூடிய பதில் நிச்சயமாகப் புலம் பெயர் மக்களில் நூற்றிற்கு 95% வீதமான மக்கள் இலங்கை எனும் அபிவிருத்தி குறைந்த செம்மண் உடைகளில் ஒட்டிக் கொள்ளும் நாட்டிற்கு வந்து வாழத் தயாரில்லை. 

இலங்கையில் வசதி வாய்ப்புக்கள் குறைவாக காணப்பட்டாலும், இலங்கை அபிவிருத்தி அடைந்த பின்னர் ஈழத்திற்கு இப் புலம் பெயர் உறவுகள் திரும்பி வருவார்கள் என்று யாராவது நினைத்தால் அதுவும் தவறு. தமது பிள்ளைகளை தாம் வாழும் நாட்டின் மொழியில் கல்வி கற்க வைத்து தமது எதிர் காலச் சந்ததிகள் வல்லவர்களாக உருவாக வேண்டும் எனும் நோக்கில் செயற்படும் புலம் பெயர் உறவுகளில் யாராவது தம் குடியுரிமைகளைத் தூக்கியெறிந்து விட்டு; 
"செந் தமிழ் பேசித் தம் காலத்தைக் கடத்தும் ஈழத் தமிழர்கள் வாழும் வட கிழக்குப் பகுதியில் மீண்டும் வந்து குடியேறத் தயாராகுவார்களா?" இல்லைத் தானே! 

அடுத்ததாக இலங்கையின் கடவுச் சீட்டினை விட மேற்குலக, கிழக்குப் பிராந்திய நாடுகளின் கடவுச் சீட்டிற்கு அனைத்துலக ரீதியில் உள்ள மதிப்பினை நன்கு உணர்ந்த புலம் பெயர் உறவுகள் இக் கடவுச் சீட்டினைத் தூக்கித் தூர வீசி விட்டுத் தாயகத்திற்குத் திரும்பத் தயாராகுவார்களா? அப்போ ஏன் இவர்கள் தமிழீழம் வேண்டும், தமிழர்களுக்குத் தாம் எப்போதும் ஆதரவு எனக் குரல் எழுப்புகின்றார்கள்? என்று யாராவது கேள்வியெழுப்பலாம். இச் செயல்களுக்கான காரணம், தொப்புள் கொடி மக்கள் மீதான பாசத்தின் வெளிப்பாடும், சிங்களவனைக் கொல்ல வேண்டும் என்கின்ற பழிக்குப் பழிவாங்கும் போர் வெறியின் மீதான எதிர்வினை ஆற்றலுமேயாகும். 

போர்க் காலத்தில் பல தரப்பட்ட பேருதவிகளைச் செய்த புலம் பெயர் தமிழர்கள் போரில் தமிழர் சேனை வெற்றி பெற்ற வேளைகளில் அகம் மகிழ்ந்தவர்களாகவும், ஈழத் தமிழினம் போரில் என்ன விலை கொடுத்தாவது வெற்றியீட்ட வேண்டும் என எண்ணம் கொண்டவர்களாகவும் வாழ்ந்திருக்கிறார்கள். இதற்கு எடுத்துக் காட்டாக ஊர் போகும் மேகங்கள் எனும் விடுதலைப் புலிகளின் பாடல் இறு வட்டில் பின் வருமாறு ஒரு பாடலை வெளியிட்டிருந்தார்கள்.
"உலகத் தமிழர் ஒன்றாய் நின்று சபதம் எடுக்கின்றோம்
எங்கள் உடல் பொருள் ஆவி எதுவென்றாலும் உடனே கொடுக்கின்றோம்
உரிமைக்காக எரியும் தீயில் திரியாய் நாங்கள் எரிவோம்
எங்கள் தலை முறைக்காக சாவரும் போதில் 
சந்தோசத்தில் சிரிப்போம்! 
ஆயிரம் அர்த்தங்கள் இப் பாடலில் இருக்கு என்று சொல்லுகிறார்கள். என்னக்கென்னமோ புரியவில்லை. 

"தாம் விரும்பிய போது விரும்பிய இடத்திற்குப் போய் வரக் கூடிய வசதி, அதி நவீன மருத்துவ வசதிகள், சலுகையுடன் கூடிய பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள், சொகுசான மேற்குலகில் வாழ்கின்றோம் எனும் பெருமை நிறைந்த வாழ்க்கை முறை இவை எல்லாவற்றையும் தூசெனத் தூக்கி எறிந்து விட்டு ஈழத்தில் இயல்பு நிலை தோன்றினால் புலம் பெயர் தமிழர்கள் தாயகம் திரும்புவார்களா?"  உங்களின் காத்திரமான கருத்துக்களை இந்த விவாத மேடையில் பகிர்ந்து கொள்ளலாம் அல்லவா.

முக்கிய குறிப்பு: இன்றைய விவாத மேடைப் பதிவு வித்தியாசமான விவாத மேடைப் பதிவாக வருகின்றது. இப் பதிவில் வழமையான விவாத மேடைப் பதிவுகளைப் போன்று நான் விவாதிக்க மாட்டேன். பதிவர்களான "திரு. யோகா ஐயா," "திரு காட்டான் அண்ணா" ஆகியோர் இந்த விவாத மேடையினை இன்றைய தினம் வழி நடத்துவார்கள். பதிவின் இறுதியில் நான் அனைவரின் கருத்துக்களையும் உள் வாங்கித் தொகுப்புரையாக விவாதத்தின் சாராம்சத்தினைத் தருகின்றேன். உங்களுக்கான விவாதக் களம் நாற்று வலைப் பதிவில் இப்போது திறந்திருக்கிறது. உங்களின் கருத்துக்களோடு உடனே களமிறங்கலாம் அல்லவா.

பதிவின் மையக் கருவினைத் தந்ததோடு, இந்த விவாத மேடைக்கான கருப் பொருளை மேற்படி தலைப்பின் கீழ் வைக்க வேண்டும் என ஆலோசனை வழங்கியவர் "தனிமரம்" வலைப் பதிவின் சொந்தக் காரன் "தனிமரம்" அவர்கள். 
***************************************************************************************************
இன்றைய பதிவினூடாக நாம் செல்லவிருக்கும் வலைப் பூவின் பெயர் சகோதரி ஸாதிகா அவர்களின் "சாம்பிராணி" வலைப் பூவாகும். இவ் வலைப் பூவினூடாக கவிதை, சமையற் குறிப்புக்கள், குழந்தை வளர்ப்பு, அலங்கார - அழகு குறிப்புக்கள் எனப் பல தரப்பட்ட விடயங்களைப் பகிர்ந்து வருகின்றார் ஸாதிகா அவர்கள்.

"ஸாதிகா" அவர்களின் "எல்லாப் புகழும் இறைவனுக்கே" வலைப் பூவிற்குச் செல்ல:
*****************************************************************************************************

207 Comments:

«Oldest   ‹Older   1 – 200 of 207   Newer›   Newest»
இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips

ஸாதிகா" அவர்களின் "எல்லாப் புகழும் இறைவனுக்கே" வலைப் பூவிற்கு

வாழ்த்துக்கள் !!

Mathuran said...
Best Blogger Tips

நல்லதொரு விடயத்தை கையில் எடுத்திருக்கிறீர்கள் நிரூபன்.

புலம்பெயர் தமிழர் 95% ஆனோர் திரும்பவும் வரமாட்டார்கள் என்பதே உண்மை.
கவலைக்குரிய விடயம் இந்த பதிவிற்குரிய கருவினை தந்த நேசன் அண்ணாவின் கூகிள் கணக்கு பறிபோய்விட்டது

ஏனையவர்களின் கருத்தினைப்பார்த்து பின்னர் வருகிறேன்.

ஸாதிகாவிற்கு வாழ்த்துக்கள்

Unknown said...
Best Blogger Tips

பதிவு அருமை.திரும்ப மாட்டார்கள்.இதே நேரம் முகநூலில் இதை பகிர்கிறேன் எப்படி பதில்கள் இருக்கின்றன என்று

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன் ஒரு அருமையான பதிவை கொண்டு வந்திருக்கீங்க அதற்கு முதல்கண் வாழ்த்துக்கள்..

யோ மதுரன் யாரையா உங்களுக்கு சொன்னது அந்த ஐந்து வீதமான மக்களும் நாடு திரும்புவார்கள்ன்னு இதை வன்மையாக கண்டிக்கிறேன்...!!!?? ஹி ஹி என்னுடைய 22வருட வெளிநாட்டு வாழ்கையில் இரண்டு பேர்களைதான் பார்த்திருக்கிறேன் நாட்டிற்கு திரும்பியவர்களை அதில் ஒருவர் மீண்டும் இங்கு வந்துவிட்டார்.. ஹி ஹி

காட்டான் said...
Best Blogger Tips

என்னையா நிரூபன் என்னையும் மாட்டி விட்டுட்டீங்களே? அண்ணன் விஷயம் தெரிந்தவர் அவரிடம் பொறுப்பை கொடுப்போம்.. வங்கண்ண வாங்க.

தனிமரம் said...
Best Blogger Tips

நன்றி மதுரன் இன்று சில மணித்தியாலப் போராட்டத்தின் பின் என் கணக்கினை மீட்டுவிட்டேன் உதவ முன்வந்த நண்பர்களுக்கு தனிமரத்தின் சிரம்தாழ்த்திய நன்றிகள்! 

தனிமரம் said...
Best Blogger Tips

முதலில் இப்படி ஒரு விடயத்தை களம் இறக்கியதற்கு நன்றி சகோ!
இங்கே இருக்கும் மக்களை இன்னொரு வகையில் நான் பார்க்கின்றேன் அகதியாகத்தான் அதிகமானவர்கள் இருக்கின்றார்கள் அவர்களில் மூத்த தலைமுறை வட்டமான யோகா ஐயா போன்றோர் 1980 பின் தொடக்கம் 1990 வரையில்  இங்கு வந்தவர்கள் 1990 பின் தொடக்கம்2000 ஆண்டில் வந்தோர் காட்டான் போன்றோர் 2000 பின் வந்த என் போன்றோர்களிடையே பாரிய தலைமுறை இடைவெளி இருக்கின்றது ஆனால் எல்லோரையும் இனைக்கும் ஒரு கயிறு ஈழம் என்ற கனவு தான் ஆகவே எங்களிடையே இருக்கும் சிலமுரன்பாடுகளை பின்வருமாறு அடுக்கின்றேன்!

தனிமரம் said...
Best Blogger Tips

மூத்தோரில் சிலர் போகும் ஆவலில் மனதில் தாயக எண்ணங்களைச் சுமந்தவண்ணம் இருக்கின்றார்கள் இடையில் வந்தோர் மதில் மேல் பூனையாக போய்வரத்தான் எண்ணுகின்றர்கள் ஆனால் போகமாட்டினம் இறுதியில் வந்தோர் இனி ஒரு போதும் திரும்ப மாட்டினம் இது நான்கண்ட உண்மை!

காட்டான் said...
Best Blogger Tips

நிருபா ஏன் உனக்கு இந்த கொலை வெறி?? என்னை பொருத்தவரையில் எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் அவர்களை படிக்க வைச்சு திருமணம் செய்து வைக்க வேண்டும் அதன் பின்னர் பேரக்குழந்தைகளை பார்க்கவேண்டும் அவர்களை பள்ளிக்கூடம் அழைத்துச்செல்ல வேண்டும் அவர்களுக்கும் கல்யாணம் காட்சி பார்க்கவேண்டும் இப்படி நிறைய வேலை இருக்கையா இதெல்லாம் முடிஞ்ச பின்பு  நாட்டுக்கு திரும்பலாமா? திரும்பக்கூடாதான்னு யோசிக்கலாமா? என்னு எனது குடும்பத்துடன் ஆலோசனை நடத்தலாமா நடத்த கூடாதான்னு நான் முடிவெக்க வேனும் அதன் பின்பே மற்றவை!!! அப்பாடா தப்பிச்சேன்..!!!

தனிமரம் said...
Best Blogger Tips

இத்தனை துயரங்கள் சமுகப்பாதுகாப்பு இல்லாத நிலை மற்றும் வாழ்விடங்களை இழந்தவர்களுக்கு அரசு ஏதாவது தூரநோக்குடன் உதவி செய்யா நிலையில் சமுகப்பாதுகாப்பு மற்றும் தொழில்துறையில் சலுகைகள் கிடைக்கும் மேற்குலக வாழ்க்கையில் ஊரிப்போனவர்கள் தாயகம் திரும்புவது என்பது பகல்கனவே ஆனால் இவர்களுக்கு எப்படி என்றாலும் ஈழம் வேண்டும் என்பதில் உடும்புப்பிடியாக இருக்கின்றார்கள் அதனால் தான் தனக்கு வதிவிட விசா இல்லாட்டியும் தனக்கு தொழில் நிரந்தரம் இல்லாட்டியும் யுத்தம் நடந்த  இறுதிக்காலப்பகுதியில் பல லட்சங்களை கடனாக (கைமாறி/வங்கியில் கடன்) எனப்பல வழிகளிலும் உரியவர்களுக்கொடுத்தார்கள் துரதிஸ்டவசம் இந்தப்பணம் சிலரிடம் சிறைப்பட்டுவிட்டது ஆனால் இன்னும் அதற்கு வட்டி மட்டும் கட்டுவோரின் என்னம் எல்லாம் ஈழமே ஆனால் இவர்கள் மீளவும் குடியேற மாட்டார்கள் ஐரோப்பியரைப் போல் சுற்றுலா மட்டும் போய் வருவார்கள் குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் தொழில்முறை விசாவில் வாழ்வோர் ஆனால் அகதிவிசாவில் வாழ்வோர் எக்காலத்திலும் வரமாட்டார்கள் அதற்கு சட்டச்சிக்கல் இருக்கின்றது!

காட்டான் said...
Best Blogger Tips

யோ தனிமரம் நீங்க வந்து உண்மையை சொல்லிடுவீங்கன்னு நிரூபன் பதிவு போடமுன்னரே உங்க பிளாக்கை முடக்கினேனே எப்படி ஐயா தப்பிச்சாய்? இருடி உனக்கு வைக்கிறேன் ஆப்பு!!!??

தனிமரம் said...
Best Blogger Tips

ஐயா காட்டான் தனிமரம் கருத்துச் சொல்லக்கூடாது என்று யார் என் வலையை முடக்கினார் என்று  காலம் பதில் கொடுக்கும் வலையை முடக்கினாலும் என் கருத்துக்கள் மீளவும் எங்கேயாவது பதிவு செய்வேன் ஏன் என்றாள் கூகுல் பிரியாத்தானே விடுகின்றார் முக்கிய விவதாதத்தில் பகிடி வேண்டாம் நடுவர் காட்டானே எங்கே யோகா ஐயா?????

தனிமரம் said...
Best Blogger Tips

இன்று கூட அதிகமான ஐரோப்பிய/கனடிய மக்கள் தாயகம் போய் தமது உறவுகளைப் பார்த்து வருகின்றார்கள் முடிந்தால் இன்னும் பலபேரை அழைத்துவருகின்றார்கள் இவர்கள் யாரும் அங்கு இருப்போருக்கு சொல்வது இல்லை என் இறுதிக்காலத்தில் தாயகத்தில் மரணிக்கவேண்டும் என்று காரணம் இரத்த உறவுகள் இங்கு இருக்கும் போது மற்றவர்களுக்கு கடமைப்படுத்த ஒரு போதும் முதியவர்கள் விரும்ப மாட்டினம் இன்னொன்று இன்னும் தமிழ்கலாச்சாரத்தில் குடும்ப வாழ்க்கை சிதைந்து போகவில்லை தனியாக பிரிந்து வாழ்தல் என்ற நிலைக்கு இலங்கைச் சமுகம் மாறும் போது சில நேரத்தில் சிலர் வருவார்கள் இதுவும் சாத்தியமற்றது!

SURYAJEEVA said...
Best Blogger Tips

தலைவரே, நல்ல விவாதக் களம்... மக்கள் மன நிலை யாராவது போராடினால் அதற்க்கு நம் ஆதரவு உண்டு.. ஆனால் நேரடியான பங்கேற்ப்பு என் குடும்பத்தை சிதைக்கும் என்பதால் கிடையாது என்பதாகவே இருக்கிறது... நேரடியாக பங்கேற்க முடியாவிட்டாலும் தார்மீக ஆதரவு என்ற பெயரில் என்னை போல் பதிவிடுவது, குறுஞ்செய்தி அனுப்புவது, பணம் கொடுப்பது, வருத்தப் படுவது என்பதை மட்டுமே செய்ய முடியும் என்ற நிலை... நாட்டை விட்டு புலம் பெயர்ந்தவர்கள் திரும்ப வருவார்களா என்றால் இல்லை என்று பதில் கொடுத்து ஏன் என்று கேள்வி கேட்டிருக்கிறீர்கள்... இதன் விடை, புலம் பெயர்ந்து ஓரிடத்தில் நிலை கொண்ட பிறகு அவன் மீண்டும் அங்கு இருக்கும் வீட்டை காலி செய்து, பிள்ளைகளின் படிப்பை மாற்றம் செய்து, திரும்ப வருவது என்பது சிரமமான விஷயம்.. இந்த சிரமமான விஷயத்திற்காக கொஞ்சம் சிரமமான தாய் மண்ணை மறப்பது தவறில்லை என்ற எண்ணமாக இருக்கலாம்... இது ஈழத்திற்கு மட்டும் அல்ல, அனைத்து மக்களுக்கும் பொருந்தும்.. சென்னையில் வாழும் souraastrargal , மகாராஷ்ட்ராவில் வாழும் பீகாரிகள், மலேயாவில் வாழும் சீனர்கள் மற்றும் இந்தோனேசியர்கள், அமெரிக்காவில் வாழும் அனைத்து நாட்டினரும் என்று ஊர் விட்டு ஊர் போனவர்கள் ஏராளம்.. அவர்கள் திரும்ப வர மாட்டார்கள்... எவ்வளவு சிரமம் வந்தாலும் இடத்தை விட்டு பெயராமல் இருப்பவர்கள் மன உறுதி உடையவர்கள்.. பெயர்ந்து செல்பவர்கள் எதற்கு வம்பு என்று ஒதுங்கி செல்பவர்கள்...

Mohamed Faaique said...
Best Blogger Tips

நல்லதொரு ஆய்வு

Unknown said...
Best Blogger Tips

நல்லதொரு விவாத பொருளை தந்து இருக்கிறீர்கள் நிரூபன்..

நான் இலங்கையையும் பார்த்தது இல்லை.. ஈழத்தையும் பார்த்தது இல்லை.. போரையும் பார்த்தது இல்லை...

ஆனாலும் நான் வாழ்வது கூட புலம் பெயர்ந்த ஒரு வாழ்க்கை..

தொழில் நிமித்தம் பிறந்த ஊரில் இருந்து 450 KM அப்பால் இருக்கிறேன். தாய் மண்ணை / உறவுகளை / நண்பர்களை பிரிந்த வலி இன்னும் எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. ஆனாலும் இன்னும் சில ஆண்டுகளில் இது மழுங்கிவிடும் என்றே தோன்றுகிறது. இதை நான் நேரிலும் கண்டு இருக்கிறேன் முந்தைய தலைமுறையில் இது போல சொந்த ஊரை விட்டு வந்த நண்பர்களை பார்க்கிறேன் அதாவது அவர்கள் எல்லாம் இங்கே பிறந்து பிறந்து வளர்ந்தவர்கள் அவர்கள் தந்தை இங்கே பிழைக்க வந்தவர்கள்..

இங்கேயே தொழில் சொத்து வாங்கி வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் ஊருக்கு போக வேண்டும் என்ற நினைப்பு குலதெய்வம் கோயில் பண்டிகை வரும் பொது மட்டும் வரும் ஒரு நாள் சென்று மறுநாள் திரும்பி விடுவர்..

இது ஈழத்தில் இருந்து புலம் பெயர்ந்தவர்களுக்கும் பொருந்தும் என்றே தோன்றுகிறது.. அதாவது புதிதாய் சென்றவர்கள் திரும்பி வர நினைப்பு இருக்கும் ஆனால் சில பல ஆண்டுகள் தொழில் வசதி என்று மேலை நாடுகளில் செட்டில் ஆனவர்கள் வருவதற்கு வாய்ப்புகள் குறைவே

தனிமரம் said...
Best Blogger Tips

இங்கே சமுகப் பாதுகாப்பு அதிகம் இருக்கு ஆனால் தாயக்த்தில் சமுகப்பாதுகாப்பு என்பது வெறும் கானல் நீரே! இங்கே சட்டங்களை மக்கள் மதிக்கின்றார்கள் சட்டம் மக்களுக்கு சுதந்திரம் கொடுக்கின்றது ஆனால் தாயக சட்டமோ ஒரு சிலருக்கு வளைந்து தன் நடுநிலமை தவறுகின்றது இப்படியான நிலையில் வாழ்வாதாரங்களில் மற்றநாட்டவருடன் போட்டிபோடும் ஐரோப்பிய/கனடிய /ஆஸ்ரேலிய வாழும் ஈழத்தவர்கள் மீளவும் போய் தம் குராமத்து வாழ்வில் ஒன்றினைந்து கொள்வார்கள் என்பது வெறும் பகல் கனவு ! மாவை வரோதயன் சொல்லுவார் "இந்தஊருக்கு "ஒரு நாள் திரும்பி வருவேன் அதுதான் எனக்குத் திருநாள் என் கனவுகள் பலித்திடும் " என்று அது வெறும் கனவாகவே இருக்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கு போகமாட்டார்கள்!
சிலரின் கருத்துக்கள் வரும் வரை சற்று விலகியிருந்து பார்க்கின்றேன் மீளவும் வருவேன்!

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

நிரூபன் நீங்கள் சொல்வது சரிதான் போல தெரியுதே....!!!

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

சந்தேகம்தான்.

Unknown said...
Best Blogger Tips

நச்சுன்னு சொன்னா..திரும்ப மாட்டார்கள்!!(98 %)

Unknown said...
Best Blogger Tips

தனிமரம் அண்ணன் சொல்லும் கருத்துக்கள் உண்மையானவை!!அந்த கோணத்தில் பார்க்கும் போது சரிதான் !!

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

நல்லதொரு பதிவு.... விவாதங்கள் தொடருங்கள்.

K said...
Best Blogger Tips

நிரூபன் இன்னும் ஏதாவது மிச்சம் மீதி இருந்தால் அவற்றையும் சொல்லி எல்லோருடைய மானத்தையும் கப்பலேற்றலாமே!

எமக்குள்ளான அல்ப பிரச்சனைகளை அடிக்கடி, பொது இடத்தில் பேசி, எம்மவர்களை அசிங்கப்படுத்துவதில் நிரூபனுக்கு அப்படி என்ன லாபம்?

வெளிநாட்டில் வாழும் மக்கள் புலிக்கொடி ஏந்துவதில், நிரூபனுக்கு என்ன பிரச்சனை?

முன்னொரு காலத்தில் போராட்டத்துக்கு, உதவாதவர்கள் பின்பும் உதவாமல் இருக்க வேண்டும் என்று நிரூபன் ஆசைப்படுகிறாரா?

நிரூ, உன்னுடைய பல பதிவுகளின் தொகுப்பை எடுத்துப் பார்த்தால், வெளிநாடுகளில் உள்ள புலி ஆதரவாளர்களை எதிர்ப்பதாகவும், வன்னியில் நடந்த சில சம்பவங்களை வெளியே சொல்லி, எல்லோரையும் நாறடிப்பதாகவுமே உள்ளன!

என்ன காரணம்?

சத்தியமாக எனக்குப் புரியவில்லை!

வெளிநாடுகளில் உள்ள புலி ஆதரவாளர்களை ஒடுக்குவதில், இலங்கை அரசு கண்ணும் கருத்துமாக இருக்கு!

ஹி ஹி ஹி நிரூபனும் மறைமுகமாக அதே வேலையினைத் தான் செய்கிறார்!

நிரூபன், வன்னியில் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பு செய்தார்கள் என்பதை நீ பல முறை பிரச்சாரம் செய்துவிட்டாய்! இனிமேலும் அதைப் பற்றி பேசி போரடிக்காதே!

இன்னும் ஏதாவது மிச்சம் மீதி இருந்தால், அவற்றையும் பதிவாகப் போட்டு, இருக்குற கொஞ்ச நஞ்ச மானத்தையும் கப்பலேற்றி எல்லோரையும் நாறடிக்கும்படி அன்பாக கேட்டுக் கொள்கிறேன்!

கடந்த காலத்தில் எத்தனையோ பேர் தொண்டை கிழிய கத்தினார்கள்! புலிகளை எதிர்ப்பதொன்றே எமது பணியென்று முழங்கினார்கள்!

ஹி ஹி ஹி இப்ப ஒருத்தரையும் காணவில்லை! எல்லோருக்கும் சேர்த்து நிரூபன் வந்துவிட்டார்!

K said...
Best Blogger Tips

புலம்பெயர் மக்கள் எப்படி எப்படி எல்லாம் வெளிநாட்டுக்கு வந்தார்கள் என்ற விபரங்கள், தமிழகம், மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் வாழும் மக்களுக்குத் தெரியாமல் இருந்தது!

ஹி ஹி ஹி இப்போது பல பதிவுகள் போட்டு நாறடிக்கிறமைக்கு ரொம்ப நன்றி!

என்னிடம் சில பாயிண்டுகள் உள்ளன! அவற்றை அனுப்பி வைக்கிறேன்! அவற்றையும் சேர்த்து பதிவு போடவும்!

ஈழத்தமிழன் இப்படித்தான் போலும் என்று எல்லோரும் காறித்துப்பட்டும்!

K said...
Best Blogger Tips

ஏற்கனவே யாழ்ப்பாணத்து மக்கள் சாதி வெறி பிடித்தவர்கள்! அப்படியானவர்கள் , இப்படியானவர்கள் என்று பல பதிவுகள் போட்டு, எல்லோரையும் சந்தி சிரிக்க வைத்துவிட்டு, இப்போது புலம்பெயர் மக்கள் பற்றி நக்கலா??

அல்லது திரும்பி வரத் தயாராகுவார்களா? என்று வினா ஒன்றினை முன் வைக்கையில் இதற்கான விடையாக என்னால் முன் வைக்கக் கூடிய பதில் நிச்சயமாகப் புலம் பெயர் மக்களில் நூற்றிற்கு 95% வீதமான மக்கள் இலங்கை எனும் அபிவிருத்தி குறைந்த செம்மண் உடைகளில் ஒட்டிக் கொள்ளும் நாட்டிற்கு வந்து வாழத் தயாரில்லை. ////////////

நிச்சயமாக தயாரில்லை! ஏன் செம்மண் புழுதியை சுவாசித்து காச நோய்க்கு ஆளாகவா?

முதலில், பிச்சைக்கார ஆட்சியாளர்களை மக்களுக்கு நல்ல ரோட்டு போட்டுக் கொடுக்கச் சொல்லுங்கள்! யுத்தம் நடத்த மட்டும், வெளிநாடுகளில் பிச்சை எடுத்தவர்களை, அபிவிருத்திக்கும் பிச்சை எடுக்கச் சொல்லுங்கள்!

அப்படி, வெளிநாடுகள் கொடுக்கும் பணத்தை, தங்கள் பாக்கெட்டுக்குள் போடாமல், மக்களின் அபிவிருத்திக்குப் பயன்படுத்தச் சொல்லுங்கள்!

எதுக்கு செம்மண்ணுக்குள் கிடந்து உழல வேண்டும்! சொறி பிடிக்கும்!

K said...
Best Blogger Tips

நிரூபனுக்கு புலம்பெயர் தமிழர்கள் பற்றி தெரிந்த ஒரே ஒரு விஷயம் “ அவர்கள் புலிக்கொடியை பிடிச்சுக்கொண்டு தெருத் தெருவா திரிவார்கள் என்பது மட்டும் தான் போலும்”

எங்களைப் பற்றி வேற ஒரு அறுப்பும் தெரியாது போல! இங்கு பிறந்த ஒவ்வொரு தமிழ் குழந்தையும், தமிழ் படிக்கிறது! தமிழ் பரீட்சையில் சித்தியடைகிறது!

முற்றிலும் தமிழ் சூழல் உள்ள ஈழத்தில் ஒரு குழந்தை செந்தமிழ் பேசுவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை!

ஆனால் பலநூறு மொழிகள் ஒரு குறுகிய இடத்தினுள் பேசப்படும் ஐரோப்பிய பெரு நகரங்களில் வாழும் தமிழ் குழந்தைகள் தமிழ் பேசுவதுதான் உண்மையில் ஆச்சரியம்!

ஹி ஹி ஹி இதெல்லாம் உங்களுக்கு எங்கே தெரியப் போகிறது?

ஒன்றைப் பற்றி சரியாகத் தெரியாவிட்டால், பொத்திக்கொண்டிருப்பது உத்தமம்!

K said...
Best Blogger Tips

"தாம் விரும்பிய போது விரும்பிய இடத்திற்குப் போய் வரக் கூடிய வசதி, அதி நவீன மருத்துவ வசதிகள், சலுகையுடன் கூடிய பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள், சொகுசான மேற்குலகில் வாழ்கின்றோம் எனும் பெருமை நிறைந்த வாழ்க்கை முறை இவை எல்லாவற்றையும் தூசெனத் தூக்கி எறிந்து விட்டு ஈழத்தில் இயல்பு நிலை தோன்றினால் புலம் பெயர் தமிழர்கள் தாயகம் திரும்புவார்களா?" /////////

ஓ.... என்ன கத்தரிக்காய்க்கு அங்க வரணும்?? நாங்கள் இன்னமும் மிச்சம் மீதியாக இருக்கிற எங்கள் உறவுகளையும், பணத்தைக் கொட்டி, வெளிநாட்டுக்கு எடுப்பமே தவிர இனி அங்கு வரவே மாட்டோம்!

சில வேளைகளில் வந்திருப்போம்! ‘ அவையள்” இருந்திருந்தால்!!!!!

K said...
Best Blogger Tips

*ஈழத்தின் உள் நாட்டுப் போர் காரணமாக அடைக்கலம் தேடி புலம் பெயர்ந்தோர் (Asylum Seekers)
*ஈழப் போரைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி இலங்கையில் வாழ முடியாது என்று பொய் சொல்லி, உண்மையாகவே ஈழத்தில் வாழ முடியாத அச்சம் கொண்ட மக்களைப் போலத் தாமும் போரினால் பாதிக்கப்பட்டோம் எனக் கூறி வெளி நாட்டில் அதிகளவான பணம் உழைக்கலாம் எனும் நோக்கில் புலம் பெயர்ந்தோர். இந்த இரு வகை மக்களில் தாம் வாழும் நாட்டின் குடியுரிமை வைத்திருப்போர் அவற்றையெல்லாம் விசிறி எறிந்து விட்டுத் தாயகம் திரும்ப மாட்டார்கள்./////////

“ திரை கடல் ஓடியும் திரவியம் தேடு” என்கிறது தமிழ் பழமொழி!

அப்படி திரவியம் தேடுவதில் என்ன தவறு?

K said...
Best Blogger Tips

சிலபேருக்கு ஒருவகை வியாதி இருக்கு! எதிலும் சாதகாமானவற்றைப் பார்க்கத்தெரியாது! எதிலும் குறை சொல்லுவதுதான் வேலை!

இவர்களை பெஸிமிஸ்ட் என்று சொல்வார்கள்! இது ஒரு மனநோயாகும்!

தனிமரம் said...
Best Blogger Tips

மணிசார் ஏன் இந்த விளையாட்டு விவாவதம் இயல்பு நிலை தோன்றினால் வருவார்களா மாட்டார்களா என்பதே அதைவிடுத்து தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவது ஏன் நிரூ கருத்தை சொல்லும்போது பழையவிடயத்தை ஏன் கிளருகின்றீர்கள்!

Anonymous said...
Best Blogger Tips

நல்ல களம்...

புலம் பெயரும் அனைவர் மனதிலும் எப்படியும் திரும்ப வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருக்கும்...

அது 1 சதவீதமா 100௦௦ சதவீதமா என்பது சூழலை பொறுத்ததே...

ஒதுங்கி வாசிக்க தயாராகிறேன் சகோதரம்...

தனிமரம் said...
Best Blogger Tips

இயல்பு நிலை இல்லாத போது புலம்பெயர்ந்தவர்கள் இங்கு தம் நிலையை சரியாக செய்வதை விடுத்து தாயகத்தில் சொத்துச் சேகரிப்பதும் விரைவில் வருவோம் என்று கஸ்ரப்படும் சாதாரமக்கள் மீது வீடுகளை விட்டு வெளியேறுங்கள்,திருத்த வேலைகள் என்று சொல்லி மக்களை நடுக்கதியில் விடுவதும் இந்த புலம்பெயர் மக்களின் ஒரு பகுதிதானே மணிசார் இத நியாயமா !????

தனிமரம் said...
Best Blogger Tips

அவர்கள் !இருக்கும் போது !!
புலம்பெயர் மூத்தவர்கள் பலர் பலஇடங்களுக்கு போய் வந்தார்கள் இன்று தலைநகரோடு திரும்புகின்றார்கள் சிலரின் மறைமுக நெருக்கிதலினால் பலர் வெளியேறிக்கொண்டிருக்கும் போது இங்கு இருப்போர் மீளவும் குடியேறுவதும் தம் வளங்களை மீளநிறுவி தம் வியாபாரங்களைச் செய்வதற்கு சாத்தியம் இல்லாத தேசத்தில் ஏன் போகனும் என்று பலர் எண்ணுவதில் தவறு இல்லைத்தானே ஆகவே அவர்கள் திரும்ப மாட்டார்கள்!புலம்பெயர் வாழ்வில் இரண்டரக்கலந்து விடுவார்கள்!

Unknown said...
Best Blogger Tips

@ Powder Star - Dr. ஐடியாமணி said...
//இங்கு பிறந்த ஒவ்வொரு தமிழ் குழந்தையும், தமிழ் படிக்கிறது! தமிழ் பரீட்சையில் சித்தியடைகிறது! //
ஒவ்வொரு குழந்தையுமா சார்?

செங்கோவி said...
Best Blogger Tips

புலம்பெயர் மக்கள் சொந்த நாட்டிற்குத் திரும்புதல் என்பது ஈழ மக்கள் மட்டுமல்லாது இந்தியா போன்ற பிற நாட்டு மக்களும் எதிர்கொள்ளும் பிரச்சினை தானே..பொதுவாக குடும்பப் பெரியோர்க்கு சொந்த இடம் பற்றிய நினைப்பு இருக்கும். பிள்ளைகளோ புலம்பெயர் தேச வசதிகளுடன் பழகியிருப்பர். எனவே அவர்களுக்காக பெற்றோர் சகித்துக்கொள்வர். இதுவே யதார்த்த நிலை. எனவே பெரும்பாலான புல்ம்பெயர் மக்கள் சொந்த ஊர் திரும்ப மாட்டார்கள், டூரிஸ்ட்டாக மட்டுமே வருவர்..

தனிமரம் said...
Best Blogger Tips

மூத்தவர் யோகா ஐயா சபைக்கு வரும் வரை நானும் சில கேள்விகளுடன் காத்திருக்கின்றேன் சகோ!!

செங்கோவி said...
Best Blogger Tips

புலம்பெயர்ந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தன் மொழி, இனம் ,பண்பாடு மறக்காமல், தன் சொந்த நாட்டில் பிரச்சினையென்றால் துடிதுடித்து காசையும் கண்ணீரையும் இறைக்கின்றார்களே, அந்த இன உணர்வே போதும்.

உள்ளூரில் காட்டிக்கொடுப்பவனாய் இருப்பவனைவிட, எங்கோ வாழ்ந்தாலும் நமக்காக இரங்கும் உள்ளங்கள் பாராட்டுக்குரியவை. அவை எங்கிருந்தாலும், நன்றாக இருக்கட்டும்.

செங்கோவி said...
Best Blogger Tips

//தனிமரம் said...
மூத்தவர் யோகா ஐயா சபைக்கு வரும் வரை நானும் சில கேள்விகளுடன் காத்திருக்கின்றேன் சகோ!!//

ஓகே....நேசரே, என்ன ஆச்சு? முடக்கப்பட்டீரா? பிரபல பதிவர் நேசன் வாழ்க.

K said...
Best Blogger Tips

@M.Shanmugan

@ Powder Star - Dr. ஐடியாமணி said...
//இங்கு பிறந்த ஒவ்வொரு தமிழ் குழந்தையும், தமிழ் படிக்கிறது! தமிழ் பரீட்சையில் சித்தியடைகிறது! //
ஒவ்வொரு குழந்தையுமா சார்?

ம்.....!!!

K said...
Best Blogger Tips

@தனிமரம்

மணிசார் ஏன் இந்த விளையாட்டு விவாவதம் இயல்பு நிலை தோன்றினால் வருவார்களா மாட்டார்களா என்பதே அதைவிடுத்து தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவது ஏன் நிரூ கருத்தை சொல்லும்போது பழையவிடயத்தை ஏன் கிளருகின்றீர்கள்!////////

எது தனிமனித தாக்குதல் நேசன் அண்ணாச்சி?

‘ மச்சி நிரூ, நீயேன் அந்த நேமிஷாவுக்கு டிமிக்கி குடுத்தாய்? “ என்று பெர்ஷனல் மேட்டர்களை கிளறுவதுதான் தனி மனித தாக்குதல்!

ஆனால் நான் இங்கு நிரூவின் கருத்தை மட்டுமே எதிர்த்துள்ளேன்!

இது தனி மனித்தாக்குதல் அல்ல!

அதுபோக, நிரூபன் எனக்கு சகலை முறை! அவன் மீது தாக்குதல் செய்துவிட்டு, வீட்டில மனிசியிடம் உதைதான் வாங்கணும்! ஹி ஹி ஹி !!!

Anonymous said...
Best Blogger Tips

////செங்கோவி said...

புலம்பெயர்ந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தன் மொழி, இனம் ,பண்பாடு மறக்காமல், தன் சொந்த நாட்டில் பிரச்சினையென்றால் துடிதுடித்து காசையும் கண்ணீரையும் இறைக்கின்றார்களே, அந்த இன உணர்வே போதும்.

உள்ளூரில் காட்டிக்கொடுப்பவனாய் இருப்பவனைவிட, எங்கோ வாழ்ந்தாலும் நமக்காக இரங்கும் உள்ளங்கள் பாராட்டுக்குரியவை. அவை எங்கிருந்தாலும், நன்றாக இருக்கட்டும்./// ஆயிரத்தில் ஒரு கருத்து ...

K said...
Best Blogger Tips

@தனிமரம்

இயல்பு நிலை இல்லாத போது புலம்பெயர்ந்தவர்கள் இங்கு தம் நிலையை சரியாக செய்வதை விடுத்து தாயகத்தில் சொத்துச் சேகரிப்பதும் விரைவில் வருவோம் என்று கஸ்ரப்படும் சாதாரமக்கள் மீது வீடுகளை விட்டு வெளியேறுங்கள்,திருத்த வேலைகள் என்று சொல்லி மக்களை நடுக்கதியில் விடுவதும் இந்த புலம்பெயர் மக்களின் ஒரு பகுதிதானே மணிசார் இத நியாயமா !????///////

ஏன் வன்னியிலோ, யாழ்ப்பாணத்திலோ வசிக்க வீடு வாசல் இல்லாமல் சனம் இரூக்கா? எத்தனையோ வெறும் காணிகள் உள்ளனவே?

ஒருவர் இன்னொருவன் காணியில் வசிக்க வேண்டிய அவசியமே இல்லையே!

மேலும், மக்களுக்கு வசிக்க வீடு கட்டிக் கொடுப்பது மிஸ்டர்.அரசாங்கத்தினது பொறுப்பாகும்!

புலம்பெயர் மக்கள் ஈழத்தில் சொத்துக்களை மெயிண்டைன் பண்ணுவதில் தப்பே இல்லை!

K.s.s.Rajh said...
Best Blogger Tips

இன்று நான் இந்த விவாதமேடையில் கலந்து கொள்ளப்போவது இல்லை..இதை நான் காலையில் நிரூபன் பாஸ் இந்த விவாதத்தை கையில் எடுக்கும் போதே ஒதுங்கிவிட்டேன்..அமைதியாக இருந்து கருத்துக்களை ரசிக்கப்போகின்றேன்...

சில கருத்துக்களை பார்க்கும் போது அதுக்கு கமண்ட் போடனும் என்று மனசு சொல்லுது...ஆனாலும் ஒதுங்கியே நிற்கின்றேன் கொஞ்சம் சூடு பிடிக்கட்டும் பார்க்கலாம்..

joker said...
Best Blogger Tips

இது ஒரு சின்ன விடயம்
அவர்கள் வரமாட்டார்கள் வரமாட்டார்கள்....

மற்றும் Dr. ஐடியாமணி கருத்துக்களில்
பலவற்றை நானும் அதரிக்கின்றேன்.

Anonymous said...
Best Blogger Tips

வரக்கூட்டாது என்று தான் இருந்தேன்...

வடக்கில் பரம்பலாக இருக்கும் மக்களை குறிவைத்தோ,இல்லை கிழக்கில் - மட்டு திரிகோணமலையில் பலம்பலாக வசிக்கும் மக்களை குறிவைத்தோ எழுதினால் அதை பிரதேசவாதத்தை தூண்டும் கருத்துக்கள் என்ற வகையில் தான் எடுத்துக்கொள்ளுவார்.... அதே போல தான் புலம்பெயர் தேசத்தில் பரம்பலாக இருக்கும் மக்களை குறிவைத்து எழுதும் போது பிரிவினைகளுக்கே வழிவகுக்கும் அது இப்போ தெரியாது.. ஏனெனில் ஒரேயடியாக ஏற்ப்பட்டுவிடுவதல்ல இவ்வாறு சிறுக சிறுக தான்..

நிரூபன் மட்டுமல்ல பலர் இதை தான் செய்கிறார்கள்.. எண்பதுகளுக்கு முன்னரும் இப்படி தான் மாவட்டங்களை முன்னிறுத்தி பிரதேசவாதங்களை கிளப்பிவிட்டார்கள், நிரூபன் கூட எழுதியிருந்தார் "ஈழ குழந்தையை கொன்ற பிரதேச வாதம்" என்று,


நாளைக்கு இன்னொருவன் வந்து எழுதக்கூடாது..............

K.s.s.Rajh said...
Best Blogger Tips

@
மதுரன் said...
நல்லதொரு விடயத்தை கையில் எடுத்திருக்கிறீர்கள் நிரூபன்.

புலம்பெயர் தமிழர் 95% ஆனோர் திரும்பவும் வரமாட்டார்கள் என்பதே உண்மை.
கவலைக்குரிய விடயம் இந்த பதிவிற்குரிய கருவினை தந்த நேசன் அண்ணாவின் கூகிள் கணக்கு பறிபோய்விட்டது////

என்னய்யா சொல்லுறீங்க தனிமரம் அண்ணுடைய ப்ளாக் முடக்கப்பட்டதா..அப்ப அண்ணன் பிரபல பதிவர் ஆகிட்டார்..

தனிமரம் said...
Best Blogger Tips

 செங்கோவி said...

//தனிமரம் said...
மூத்தவர் யோகா ஐயா சபைக்கு வரும் வரை நானும் சில கேள்விகளுடன் காத்திருக்கின்றேன் சகோ!!//

ஓகே....நேசரே, என்ன ஆச்சு? முடக்கப்பட்டீரா? பிரபல பதிவர் நேசன் வாழ்க.// 
அண்ணா செங்கோவியாரே தனிமரம் பிரபல்யம் இல்லாத பதிவர் யாரோ நல்ல உள்ளம் என் மீது அன்பு செதுக்கல் செய்திருக்கிறது பாவம் அந்த நபருக்குத் தெரியவில்லை தனிமரம் பிரென்ஸ் தொழில்வித்தை தெரிந்த  நண்பர்களை கூட்டாளியாக வைத்திருக்கிறது என்று!

தனிமரம் said...
Best Blogger Tips

@தனிமரம்

இயல்பு நிலை இல்லாத போது புலம்பெயர்ந்தவர்கள் இங்கு தம் நிலையை சரியாக செய்வதை விடுத்து தாயகத்தில் சொத்துச் சேகரிப்பதும் விரைவில் வருவோம் என்று கஸ்ரப்படும் சாதாரமக்கள் மீது வீடுகளை விட்டு வெளியேறுங்கள்,திருத்த வேலைகள் என்று சொல்லி மக்களை நடுக்கதியில் விடுவதும் இந்த புலம்பெயர் மக்களின் ஒரு பகுதிதானே மணிசார் இத நியாயமா !????///////

ஏன் வன்னியிலோ, யாழ்ப்பாணத்திலோ வசிக்க வீடு வாசல் இல்லாமல் சனம் இரூக்கா? எத்தனையோ வெறும் காணிகள் உள்ளனவே?

ஒருவர் இன்னொருவன் காணியில் வசிக்க வேண்டிய அவசியமே இல்லையே!

மேலும், மக்களுக்கு வசிக்க வீடு கட்டிக் கொடுப்பது மிஸ்டர்.அரசாங்கத்தினது பொறுப்பாகும்!

புலம்பெயர் மக்கள் ஈழத்தில் சொத்துக்களை மெயிண்டைன் பண்ணுவதில் தப்பே இல்லை!
// மணிசார் ஒரு நாளில் இங்கு வீடுகட்டிக் கொடுக்க அவர்கள் 1000 வீட்டுக்கு ஒப்பந்தம் போட்டார்கள் பெரியண்ணா இன்னும் காசு கொடுகளையாம் அந்தக் காபர் கையில் கிடைக்காத படியால் ஆனாலும் வீடுகள் இருப்பது குறைவு தானே சார்!

தனிமரம் said...
Best Blogger Tips

வரக்கூட்டாது என்று தான் இருந்தேன்...

வடக்கில் பரம்பலாக இருக்கும் மக்களை குறிவைத்தோ,இல்லை கிழக்கில் - மட்டு திரிகோணமலையில் பலம்பலாக வசிக்கும் மக்களை குறிவைத்தோ எழுதினால் அதை பிரதேசவாதத்தை தூண்டும் கருத்துக்கள் என்ற வகையில் தான் எடுத்துக்கொள்ளுவார்.... அதே போல தான் புலம்பெயர் தேசத்தில் பரம்பலாக இருக்கும் மக்களை குறிவைத்து எழுதும் போது பிரிவினைகளுக்கே வழிவகுக்கும் அது இப்போ தெரியாது.. ஏனெனில் ஒரேயடியாக ஏற்ப்பட்டுவிடுவதல்ல இவ்வாறு சிறுக சிறுக தான்..

நிரூபன் மட்டுமல்ல பலர் இதை தான் செய்கிறார்கள்.. எண்பதுகளுக்கு முன்னரும் இப்படி தான் மாவட்டங்களை முன்னிறுத்தி பிரதேசவாதங்களை கிளப்பிவிட்டார்கள், நிரூபன் கூட எழுதியிருந்தார் "ஈழ குழந்தையை கொன்ற பிரதேச வாதம்" என்று, 


நாளைக்கு இன்னொருவன் வந்து எழுதக்கூடாது..............
//
கருத்து என்று வரும் போது கந்தசாமி பிரதேசவாதம் என்று ஒதுங்குவது பிழை ஐயா சிலருக்கு தெளிவு பிறக்கனும் என்பது தான் என் ஆவல் நீங்கள் ஒதுங்கினால் தனிமரம் மட்டும் சபையில் கூச்சல் போட்டால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் இந்த விடயத்தை தனிமையில் நிரூவுடன் விவாதிக்கலாமே????

K.s.s.Rajh said...
Best Blogger Tips

களத்தில் இறங்கக்கூடாது என்று இருந்தேன் முடியவில்லை இதோ நானும் விவதமேடையில் குதிக்கின்றேன்

Anonymous said...
Best Blogger Tips

///@தனிமரம்

இயல்பு நிலை இல்லாத போது புலம்பெயர்ந்தவர்கள் இங்கு தம் நிலையை சரியாக செய்வதை விடுத்து தாயகத்தில் சொத்துச் சேகரிப்பதும்/// மிஸ்டர் தனிமரம் பெரும்பான்மையான புலம்பெயர் மக்கள் இதை செய்கிறார்களா ???

அவனவன் வீடு காணி தோட்டம் எண்டு மனிசின்ர தாலிக்கொடி வரை அடகு வச்சுட்டு வந்து, அதோட நில்லாது சற்றும் ஒத்துவராத சூழலில், பனிக்கட்டிகளின் நடுவில மாடாய் உழைச்சு அதில் பெரும்பங்கை நாட்டில இருக்கும் தான் குடும்பத்துக்கு அனுப்பிட்டு காஞ்ச மாடு போல இருக்கான் ....கடுப்ப கிளப்பிக்கிட்டு ..நீங்கள் கேள்விப்பட்ட ஓரிரு சம்பவங்களை வச்சு முடிவுக்கு வராதீர்கள் ...

Anonymous said...
Best Blogger Tips

///இந்த விடயத்தை தனிமையில் நிரூவுடன் விவாதிக்கலாமே????// அதை நீங்கள் அவருடன் செய்திருக்கலாமே ?

K.s.s.Rajh said...
Best Blogger Tips

/////ஈழத்தின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 1995ம் ஆண்டு வாழ்ந்த "X" எனும் நபர் தான் யாழில் இராணுவ முற்றுகைக்கு உள்ளாகி விடுவேன் எனக் கருதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் செல்கின்றார். அங்கே புலிகள் கட்டாய ஆட் சேர்ப்பினை நடை முறைப்படுத்தும் போது, வெறுப்படைந்து புலிகள் மீது கோபம் கொண்டவராய் புலிகளுக்குத் தெரியாது வவுனியாவிற்கு ரகசியமாகப் போகின்றார். பின்னர் வவுனியாவிலிருந்து தம் உறவினர்களின் உதவியுடன் வெளி நாட்டிற்குப் போகின்றார்.

புலம் பெயர்ந்த பின்னர் தனக்கு யாழில் இராணுவத்தால் அச்சம் என்றும் வன்னியில் புலிகள் பயங்கரவாதிகளாகச் செயற்பட்டார்கள் அதனால் அவர்களால் தனக்கு அச்சம் என்றும், இலங்கையின் ஏனைய பகுதிகளில் தன்னால் வாழ முடியாத படி துணை இராணுவக் குழுக்களின் செயற்பாடுகள் காணப்படுவதாகவும் சொல்லி மூன்றாம் உலக நாடொன்றினுள் அடைக்கலம் கோரும் மேற்படி நபர் காலவோட்ட மாற்றத்தில் புலிக் கொடியினைக் கையிற் பிடித்தவாறு "We want Tamil Eelam, Tamil Tigers Freedom Fighters, Tamil Are LTTE, LTTE Are Tamils" எனக் கோஷமிட்டபடி ஐரோப்பிய நகர வீதிகளில் உலாவருகின்றார்./////

இங்கு நிரூபன் பாஸ் குறிப்பிட்டது போல புலம்பேர் தமிழர்கள் திரும்பி ஈழத்துக்கு வருவார்களா? அவர்கள் வரட்டும் இல்லை அங்கேயே இருக்கட்டும் அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்

ஆனால் மேலே நிரூபன் பாஸ் சுட்டிக்காட்டிய X என்ற நபரைப்போல சில ஜென்மங்கள் நீங்கள் ஒன்றை உணரவேண்டும் இப்படி நீங்கள் கோசம் போட்டு திரிவதால்.
காலம் எல்லாம் யுத்ததிலேயே வாழ்ந்து சொல்லணா துன்பங்களை அனுபவித்த வன்னிமக்களுக்கு என்ன பிரயோசனம்.அவர்கள் மீண்டும் யுத்தம் போன்ற கஸ்டங்களை அனுபவிப்பதைத்தான் நீங்கள் விரும்புகின்றீர்களா?...

உங்கள் மனசாட்சியைத்தொட்டு சொலுங்கள் நீங்க அங்க இருந்து தமிழீழம் வேணும்..என்று கூச்சல் போடுவதால் உங்களுக்கு ஒரு பிரச்ச்னையும் இல்லை

இங்கே உள்ளனுக்குத்தான் மீண்டும் பிரச்சனை..எனவே வன்னியில் உள்ளவன் இதை சுட்டிக்காட்டுவது என்ன தவறு?

Anonymous said...
Best Blogger Tips

/////உண்மையில் மிக மிக கடுமையாக, இரவு பகல் உறக்கமின்றித் தம் சந்ததியினை கஷ்டமின்றி வாழ வைப்பதற்காகவும், தாம் படும் துன்பங்களை அவர்களும் எதிர் நோக்காமல் வாழ வேண்டும் எனும் நோக்கத்தில் அல்லும் பகலும் உழைக்கின்றார்கள்.////
இதுவும் நிரூபன் சொன்னது

/////சொகுசான மேற்குலகில் வாழ்கின்றோம் எனும் பெருமை நிறைந்த வாழ்க்கை முறை////

அப்புறம் இதுவும் சில வரிகள் கழித்து நிரூபனால் எழுதப்பட்டது



ஒருவேளை தனிமரம் போன்றோர் மேற்குலகில் சொகுசாக வாழ்வதாக உணரலாம் (அது தான் இது தொடர்பில் அவர் சுட்டி காட்டவில்லை) அதுக்காக எல்லோரையும் இந்த வட்டத்துக்குள் உள்ளடக்காதீர்கள்

K said...
Best Blogger Tips

நேசன் அண்ணை நீங்களே சொல்லுங்க!

புலம்பெயர்ச் மக்கள் ஈழத்துக்கு திரும்பி வருவினமா? மாட்டினமா? என்பதுதானே விவாதம்!

இதைப்பற்றி கருத்துச் சொல்ல எவ்வளவோ இருக்க, நிரூபன் தேவையில்லாமல், எக்ஸ் எண்ட நபரின் கருத்தை சொல்லி, வன்னிக்குப் போனது, வவுனியாவுக்குப் போனது, வெளிநாட்டில் கொடிபிடிக்கிற தேவையில்லாத விசர்க்கத்தையெல்லாம் கதைச்சால், கோபம் வருமோ? வராதோ?

வெளிநாட்டில் இருந்து மக்கள் வருவது பற்றித்தான் பதிவு என்றால், அதில் வெளிநாட்டுக்குப் போன கதை எதுக்கு????????

Anonymous said...
Best Blogger Tips

K.s.s.Rajh said...///உங்கள் மனசாட்சியைத்தொட்டு சொலுங்கள் நீங்க அங்க இருந்து தமிழீழம் வேணும்..என்று கூச்சல் போடுவதால் உங்களுக்கு ஒரு பிரச்ச்னையும் இல்லை

இங்கே உள்ளனுக்குத்தான் மீண்டும் பிரச்சனை..எனவே வன்னியில் உள்ளவன் இதை சுட்டிக்காட்டுவது என்ன தவறு?/// என்ன ராஜா சார் தமிழீழ பிரகடனம் புலம்பெயர்ந்த தமிழர்களால் எடுக்கப்பட்டது என்பது போலல்லவோ உள்ளது உங்கட கதை ... ஹிஹி சாரு தமிழீழ பிரகடனத்தையும் அதை தொடர்ந்து ஆயுதவழி முறையையும் தேர்ந்தெடுத்தது ஈழத்தில் வசித்த மக்களால் தான்.. அதே மக்கள் தான் தமிழீழம் எனும் தனி நாடு கேட்டு முப்பது வருடங்களுக்கு மேலாக போரிட்டார்கள் ஹிஹி இப்போ என்னடா நீங்க காமெடி பண்ணிக்கிட்டு )

அதுமட்டுமல்ல ராஜா சார் நீங்கள் போன்ற ஒருசிலர் விதிவிலக்காக இருந்தாலும் தமக்கு என்று ஒரு தனி நாடு வேண்டும் என்பது ஒவ்வொரு தமிழனின் அடி மனதில் ஓடும் ஏக்கம் என்பதை யாரும் மறுக்க முடியாது .....................ஏன் இதை எழுதிய நிரூபனால் கூட (

K.s.s.Rajh said...
Best Blogger Tips

@
Powder Star - Dr. ஐடியாமணி said...
"தாம் விரும்பிய போது விரும்பிய இடத்திற்குப் போய் வரக் கூடிய வசதி, அதி நவீன மருத்துவ வசதிகள், சலுகையுடன் கூடிய பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள், சொகுசான மேற்குலகில் வாழ்கின்றோம் எனும் பெருமை நிறைந்த வாழ்க்கை முறை இவை எல்லாவற்றையும் தூசெனத் தூக்கி எறிந்து விட்டு ஈழத்தில் இயல்பு நிலை தோன்றினால் புலம் பெயர் தமிழர்கள் தாயகம் திரும்புவார்களா?" /////////

ஓ.... என்ன கத்தரிக்காய்க்கு அங்க வரணும்?? நாங்கள் இன்னமும் மிச்சம் மீதியாக இருக்கிற எங்கள் உறவுகளையும், பணத்தைக் கொட்டி, வெளிநாட்டுக்கு எடுப்பமே தவிர இனி அங்கு வரவே மாட்டோம்!

சில வேளைகளில் வந்திருப்போம்! ‘ அவையள்” இருந்திருந்தால்!!!!////

அப்ப என்னத்துக்கு சார் தமிழீழம் வேணும் புலிகள் மீண்டும் வருவர்கள் என்று மீண்டும் கூச்சல் போடுறீங்க..இதனால் இங்க உள்ளவனுக்கு எவ்வளவு பிரச்சனைகள் வரும் என்று சிந்தித்தீர்களா?

கவனிக்க மச்சான் சார் இதில் நான் உங்களை தனிப்பட ரீதியில் சொல்லவில்லை நீங்கள் அப்படி கூச்சல் போட்டீர்களோ எனக்குத்தெரியாது இப்படி கூச்சல் போடும் கும்பலிடம்தான் இந்தக்கேள்வியைத்தொடுக்கின்றேன்

Anonymous said...
Best Blogger Tips

K.s.s.Rajh said...///அவர்கள் மீண்டும் யுத்தம் போன்ற கஸ்டங்களை அனுபவிப்பதைத்தான் நீங்கள் விரும்புகின்றீர்களா?.../// நீங்கள் ஏன் ஆயுத வழியை மட்டுமே திரும்ப திரும்ப நினைக்கிறீர்கள்... உலகில் ஒரு குறிக்கோளை- நோக்கத்தை அடைந்து கொள்வதற்கு ஆயுத வழி ஒன்றால் மட்டுமே சாத்தியம் என்று யாராவது எழுதி வைத்துள்ளார்களா ?

தனிமரம் said...
Best Blogger Tips

தாயகத்தில் சொத்துச் சேகரிப்பதும் விரைவில் வருவோம் என்று கஸ்ரப்படும் சாதாரமக்கள் மீது வீடுகளை விட்டு வெளியேறுங்கள்,திருத்த வேலைகள் என்று சொல்லி மக்களை நடுக்கதியில் விடுவதும் இந்த புலம்பெயர் மக்களின் ஒரு பகுதிதானே மணிசார் //
அண்ணா கந்தசாமி இதை திருப்பி படிக்க முடியுமா பிளீஸ்!

K.s.s.Rajh said...
Best Blogger Tips

////
கந்தசாமி. said...
K.s.s.Rajh said...///உங்கள் மனசாட்சியைத்தொட்டு சொலுங்கள் நீங்க அங்க இருந்து தமிழீழம் வேணும்..என்று கூச்சல் போடுவதால் உங்களுக்கு ஒரு பிரச்ச்னையும் இல்லை

இங்கே உள்ளனுக்குத்தான் மீண்டும் பிரச்சனை..எனவே வன்னியில் உள்ளவன் இதை சுட்டிக்காட்டுவது என்ன தவறு?/// என்ன ராஜா சார் தமிழீழ பிரகடனம் புலம்பெயர்ந்த தமிழர்களால் எடுக்கப்பட்டது என்பது போலல்லவோ உள்ளது உங்கட கதை ... ஹிஹி சாரு தமிழீழ பிரகடனத்தையும் அதை தொடர்ந்து ஆயுதவழி முறையையும் தேர்ந்தெடுத்தது ஈழத்தில் வசித்த மக்களால் தான்.. அதே மக்கள் தான் தமிழீழம் எனும் தனி நாடு கேட்டு முப்பது வருடங்களுக்கு மேலாக போரிட்டார்கள் ஹிஹி இப்போ என்னடா நீங்க காமெடி பண்ணிக்கிட்டு ///

அதைத்தான் நான் சொல்கின்றேன் இங்க எல்லாம் முடிந்து இங்க உள்ள மக்கள் யுத்தம் இன்றி தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் போது மேலே சொன்ன X போன்றவர்கள் மீண்டும் கூச்சல் போடுகின்றார்கள்.அதைத்தான் சொன்னேன்..ஈழத்தில் இருக்கும் போது வராத பற்று என்ன?H................வெளிநாடு போனது வரனும்?

இதனால் நாங்கள் மீண்டும் மீண்டும் யுத்ததில் சாகனுமா?

தனிமரம் said...
Best Blogger Tips

ஒருவேளை தனிமரம் போன்றோர் மேற்குலகில் சொகுசாக வாழ்வதாக உணரலாம் (அது தான் இது தொடர்பில் அவர் சுட்டி காட்டவில்லை) அதுக்காக எல்லோரையும் இந்த வட்டத்துக்குள் உள்ளடக்காதீர்கள்// 
கந்தசாமி ஏற்கனவே என் பின்னூட்டத்தில் வதிவிட வீசா இல்லாமல் கைமாறி பணம் கொடுத்துவிட்டு இன்னும் வட்டி கட்டுகின்றன் என்று சொன்ன பிறகுமா?? சொகுசு வாழ்க்கை வாழ்வதாக என்னுவது ஐயோடா ராமா???

தனிமரம் said...
Best Blogger Tips

நேசன் அண்ணை நீங்களே சொல்லுங்க!

புலம்பெயர்ச் மக்கள் ஈழத்துக்கு திரும்பி வருவினமா? மாட்டினமா? என்பதுதானே விவாதம்!

இதைப்பற்றி கருத்துச் சொல்ல எவ்வளவோ இருக்க, நிரூபன் தேவையில்லாமல், எக்ஸ் எண்ட நபரின் கருத்தை சொல்லி, வன்னிக்குப் போனது, வவுனியாவுக்குப் போனது, வெளிநாட்டில் கொடிபிடிக்கிற தேவையில்லாத விசர்க்கத்தையெல்லாம் கதைச்சால், கோபம் வருமோ? வராதோ? 

வெளிநாட்டில் இருந்து மக்கள் வருவது பற்றித்தான் பதிவு என்றால், அதில் வெளிநாட்டுக்குப் போன கதை எதுக்கு????????
// இதற்கு சகோ நிரூதான் பதில் சொல்லனும் என் விவாதம் போக மாட்டார்கள் என்பதே மணிசார்! 

K.s.s.Rajh said...
Best Blogger Tips

@
கந்தசாமி. said...
K.s.s.Rajh said...///அவர்கள் மீண்டும் யுத்தம் போன்ற கஸ்டங்களை அனுபவிப்பதைத்தான் நீங்கள் விரும்புகின்றீர்களா?.../// நீங்கள் ஏன் ஆயுத வழியை மட்டுமே திரும்ப திரும்ப நினைக்கிறீர்கள்... உலகில் ஒரு குறிக்கோளை- நோக்கத்தை அடைந்து கொள்வதற்கு ஆயுத வழி ஒன்றால் மட்டுமே சாத்தியம் என்று யாராவது எழுதி வைத்துள்ளார்களா ////

இது கதைக்க நல்லா இருக்கு..என்ன வழியை நீங்கள் கையாண்டாலும் இங்க கஸ்டப்படுவது நாங்கள் தான்
உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்க கந்து நான் சொல்வது உங்களுக்கு தெரியாதா?

K said...
Best Blogger Tips

யோவ்! மச்சான் சார், வெளிநாட்டு மக்கள் புலிகளை ஆதரிப்பதால், உங்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் என்று தயவு செய்து பட்டியல் போட்டு கூறவும்!

காத்திருக்கிறேன்!

தனிமரம் said...
Best Blogger Tips

சிலர் தனிமரம் உல்லாசமாகத் திரியுது என்பதில் பின் இருக்கும் தனிப்பட்ட பொருளாதார அழுத்தங்கள் புரியாமல் இப்படி உறவுகளும் கேள்வி கேட்கின்றது கந்தசாமி அண்ணே நீங்களே சொல்லியிருக்கிறீங்க இரவு பகல் மிகவும் கஸ்ரப்பட்டு உறவுகளைப் பிரிந்து இருக்கும் போது அவர்களை பார்க்கப் போகும் போது சொகுசான வாழ்வு வாழ்கின்றார் என்று என்னுவதா கந்தசாமியாரே!! ஏய்யா இந்தக் குறும்பு!

Anonymous said...
Best Blogger Tips

K.s.s.Rajh said...///அதைத்தான் நான் சொல்கின்றேன் இங்க எல்லாம் முடிந்து இங்க உள்ள மக்கள் யுத்தம் இன்றி தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் போது மேலே சொன்ன X போன்றவர்கள் மீண்டும் கூச்சல் போடுகின்றார்கள்.//// சரி அவர்கள் கூச்சல் போடுகிறார்கள்... அப்பிடி போட்டவுடன் உடனே இருதரப்பும் ஆயுதங்கள் சகிதம் முட்டி மோதப்போகிறார்களா???? என்ன கொடும சாரே ..எதுக்கு மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறீர்கள்.

ஒருத்தன் தன் தாயை விட்டு விலத்தி இருந்தவுடன் அந்த தாயை பற்றி கதைக்கிற உரிமையை இழந்துவிடுகிரானா ? அதேபோல தாய் நாட்டையும்-தான் பிறந்து வளர்ந்து ஓடித்திரிந்த மண்ணையும் ...? அப்படி சொல்ல எவனுக்காவது உரிமை இருக்கா ??

K.s.s.Rajh said...
Best Blogger Tips

@
Powder Star - Dr. ஐடியாமணி said...
யோவ்! மச்சான் சார், வெளிநாட்டு மக்கள் புலிகளை ஆதரிப்பதால், உங்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் என்று தயவு செய்து பட்டியல் போட்டு கூறவும்!

காத்திருக்கிறேன்////

இந்தா கேளுங்க

புலிகள் மீண்டும் வருவார்கள் என்று நீங்கள் கதைப்பதால்
1)இங்க இயல்பு நிலைக்கு திரும்பிய பல நடைமுறைகள் மீண்டும் அமுல் படுத்தப்படலாம்..
2)இப்படி நீங்கள் கதை பேசிக்கொண்டு இருப்பதால் இங்கு புலிகளால் கட்டாயமாக போராட்டத்தில் இணைக்கப்பட்டோ இல்லை ஏதோ ஒரு வகையில் புலிகள் அமைப்பில் போராடி இபோது புணர்வாழ்வு முகாம்களில் இருக்கும் பலரின் விடுதலை தாமதமாகலாம்.
3)நீங்கள் இப்படி கதை பேசுவதால் மீண்டும் நாட்டில் புலிகள் அச்சுருத்தல் இருக்கு என பல இருக்கமான சூழ்நிலைகள் கடைப்பிடிக்கப்படலாம்

இப்படி நிறைய பட்டியல் இடலாம் இதல்லாம் கடந்தகால வரலாறுகலை நீங்கள் அறியாதவர்கள் இல்லையே..

K.s.s.Rajh said...
Best Blogger Tips

@
கந்தசாமி. said...
K.s.s.Rajh said...///அதைத்தான் நான் சொல்கின்றேன் இங்க எல்லாம் முடிந்து இங்க உள்ள மக்கள் யுத்தம் இன்றி தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் போது மேலே சொன்ன X போன்றவர்கள் மீண்டும் கூச்சல் போடுகின்றார்கள்.//// சரி அவர்கள் கூச்சல் போடுகிறார்கள்... அப்பிடி போட்டவுடன் உடனே இருதரப்பும் ஆயுதங்கள் சகிதம் முட்டி மோதப்போகிறார்களா???? என்ன கொடும சாரே ..எதுக்கு மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறீர்கள்.

ஒருத்தன் தன் தாயை விட்டு விலத்தி இருந்தவுடன் அந்த தாயை பற்றி கதைக்கிற உரிமையை இழந்துவிடுகிரானா ? அதேபோல தாய் நாட்டையும்-தான் பிறந்து வளர்ந்து ஓடித்திரிந்த மண்ணையும் ...? அப்படி சொல்ல எவனுக்காவது உரிமை இருக்கா ?////

கந்து மேலே ஜடியாமணி அவர்களின் கேள்விக்கு பதில் போட்டுள்ளேன் பாருங்கள் நான் சொலவது இப்படியான பிரச்சனைகளை

Anonymous said...
Best Blogger Tips

K.s.s.Rajh said... ////

இது கதைக்க நல்லா இருக்கு..என்ன வழியை நீங்கள் கையாண்டாலும் இங்க கஸ்டப்படுவது நாங்கள் தான்
உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்க கந்து நான் சொல்வது உங்களுக்கு தெரியாதா?////

அப்போ என்ன செய்திருக்க வேண்டும்?
இறுதி யுத்தம் நடந்து கொண்டிருந்த போது நாட்டில உள்ள மக்கள் சீரியலும் சினிமாவும் பார்த்து கண்ணீர் வடித்த போது (நீங்கள் எப்பிடி ) புலம்பெயர் மக்கள் நாய்கள் போல தெரு தெருவாக போலீசிடம் அடிவாங்கி யுத்தத்தை நிறுத்து என்று கத்தியிருக்க கூடாது.. முக்கியமாய் புலிக்கொடியையும், பிரபாகரனின் போட்டோவையும் கையில் வைத்திருந்திருக்க கூடாது

சனல் நாலு இறுதி யுத்தத்தில் சிங்கள காடை இராணுவம் செய்த வன்கொடுமைகளை உலகுக்கு படம் பிடித்து காட்டியிருக்க கூடாது - மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஐநா இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு புலம்பெயர் மக்கள் தூண்டியிருக்க கூடாது
.....................
...................
..................

ஆக இவ்வளவும் நடந்திருக்காவிட்டால் நீங்கள் சுதந்திரமாக சுக போக வாழ்க்கை வாழ்ந்திருப்பீர்கள் அப்படி தானே ?

தனிமரம் said...
Best Blogger Tips

கந்தசாமி. has left a new comment on the post "ஈழத்தில் இயல்பு நிலை தோன்றின் புலம் பெயர் தமிழர்கள...": 

///இந்த விடயத்தை தனிமையில் நிரூவுடன் விவாதிக்கலாமே????// அதை நீங்கள் அவருடன் செய்திருக்கலாமே ? 

Post a comment. 

Unsubscribe to comments on this post. 

Posted by கந்தசாமி. to நாற்று at October 11, 2011 11:21 PM//
கந்தசாமி  இதை பொதுவில் விட்டால் தானே தெளிவு பிறக்கும் !

K.s.s.Rajh said...
Best Blogger Tips

இந்தவிவாத மேடையில் இறங்காமல் கருத்துக்களை அவதானிக்கலாம் என்று இருந்தேன் முடியவில்லை இப்போ இங்க நேரம் நளிரவு 12.00..நான் மட்டும் தான் கமண்ட் போட்டுக்கொண்டு இருக்கேனா?ஜயா யாராவது இருகீங்களா?

K said...
Best Blogger Tips

@K.s.s.Rajh

@
Powder Star - Dr. ஐடியாமணி said...
யோவ்! மச்சான் சார், வெளிநாட்டு மக்கள் புலிகளை ஆதரிப்பதால், உங்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் என்று தயவு செய்து பட்டியல் போட்டு கூறவும்!

காத்திருக்கிறேன்////

இந்தா கேளுங்க

புலிகள் மீண்டும் வருவார்கள் என்று நீங்கள் கதைப்பதால்
1)இங்க இயல்பு நிலைக்கு திரும்பிய பல நடைமுறைகள் மீண்டும் அமுல் படுத்தப்படலாம்..
2)இப்படி நீங்கள் கதை பேசிக்கொண்டு இருப்பதால் இங்கு புலிகளால் கட்டாயமாக போராட்டத்தில் இணைக்கப்பட்டோ இல்லை ஏதோ ஒரு வகையில் புலிகள் அமைப்பில் போராடி இபோது புணர்வாழ்வு முகாம்களில் இருக்கும் பலரின் விடுதலை தாமதமாகலாம்.
3)நீங்கள் இப்படி கதை பேசுவதால் மீண்டும் நாட்டில் புலிகள் அச்சுருத்தல் இருக்கு என பல இருக்கமான சூழ்நிலைகள் கடைப்பிடிக்கப்படலாம்

இப்படி நிறைய பட்டியல் இடலாம் இதல்லாம் கடந்தகால வரலாறுகலை நீங்கள் அறியாதவர்கள் இல்லையே...::::://////////

ஆகவே, வெளிநாட்டுமக்களின் நடவடிக்கைகளைப் பார்த்து அரசாங்கம் இப்படியெல்லாம் செய்யும் என்றால், அரசாங்கத்துக்கு சுய புத்தி என்ற ஒன்றே கிடையாதா? அவர்களுக்குத் தெரியாதா, மீண்டும் புலிகள் வருவார்களா? என்று!

எனவே வெளிநாட்டு மக்களின் கதைகளை நம்பி , தனக்கு கீழே வாழும் மக்களை ஒரு அரசு தண்டிக்கும் என்றால், அது எப்படியான ஒரு அரசாக இருக்க வேண்டும்?

அப்படியான அரசின் ஆட்சியில் வாழ்வதை விட வெளிநாட்டில் கோப்பை கழுவுவது மேல் அல்லவா?

சுதா SJ said...
Best Blogger Tips

மணி சார் உங்கள் கருத்துக்கள் ஒவ்வொன்றும் சூப்பர்வ்வ்வ்.. நிஜமும் கூட..

சில பேருக்கு தங்களையும் நிர்வாணமாக்கி அடுத்தவனையும் நிர்வாணம் ஆக்கி ரசிப்பதில் ஒரு வித இன்பமும் கூட...

மற்றும் படி
இதை நான் படிக்கவும் இல்லை..   பார்க்கவும் இல்லை..

நிரூ பாஸுன் இந்த தொண்டு மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்..

Anonymous said...
Best Blogger Tips

////K.s.s.Rajh said...

@
Powder Star - Dr. ஐடியாமணி said...
யோவ்! மச்சான் சார், வெளிநாட்டு மக்கள் புலிகளை ஆதரிப்பதால், உங்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் என்று தயவு செய்து பட்டியல் போட்டு கூறவும்!

காத்திருக்கிறேன்////

இந்தா கேளுங்க

புலிகள் மீண்டும் வருவார்கள் என்று நீங்கள் கதைப்பதால்


1)இங்க இயல்பு நிலைக்கு திரும்பிய பல நடைமுறைகள் மீண்டும் அமுல் படுத்தப்படலாம்..


////2)இப்படி நீங்கள் கதை பேசிக்கொண்டு இருப்பதால் இங்கு புலிகளால் கட்டாயமாக போராட்டத்தில் இணைக்கப்பட்டோ இல்லை ஏதோ ஒரு வகையில் புலிகள் அமைப்பில் போராடி இபோது புணர்வாழ்வு முகாம்களில் இருக்கும் பலரின் விடுதலை தாமதமாகலாம்.
3)நீங்கள் இப்படி கதை பேசுவதால் மீண்டும் நாட்டில் புலிகள் அச்சுருத்தல் இருக்கு என பல இருக்கமான சூழ்நிலைகள் கடைப்பிடிக்கப்படலாம்

இப்படி நிறைய பட்டியல் இடலாம் இதல்லாம் கடந்தகால வரலாறுகலை நீங்கள் அறியாதவர்கள் இல்லையே..////ஹாஹஹா ஏன் சாரே காலாகாலமாக மாறிவரும் சிங்கள அரசுகள் பற்றி அறிஞ்சு வச்சிருக்கிறது இவ்வளவு தானா ;) புலிகள் வருவார்கள் என்று சொன்னால் என்ன சொல்லாட்டி என்ன தமிழர் பிரதேசங்களில் அவ்வளவு சீக்கிரம் இயல்பு நிலைக்கு திரும்ப விடார்கள் அவர்கள் .. உதாரணமாய் அதுக்கு தான் இந்த கிரிஸ் பூதம் ..மற்றும் யுத்தம் முடிந்த கையேடு ஒட்டுக்குழுக்களை பயன்படுத்தி "மட்டக்கிளப்பில் ஈழம் புதிய ஆயுதக்குழு" என்ற மாயையை தோற்றுவித்ததும் ...

K.s.s.Rajh said...
Best Blogger Tips

@
கந்தசாமி. said...
K.s.s.Rajh said... ////

இது கதைக்க நல்லா இருக்கு..என்ன வழியை நீங்கள் கையாண்டாலும் இங்க கஸ்டப்படுவது நாங்கள் தான்
உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்க கந்து நான் சொல்வது உங்களுக்கு தெரியாதா?////

அப்போ என்ன செய்திருக்க வேண்டும்?
இறுதி யுத்தம் நடந்து கொண்டிருந்த போது நாட்டில உள்ள மக்கள் சீரியலும் சினிமாவும் பார்த்து கண்ணீர் வடித்த போது (நீங்கள் எப்பிடி ) புலம்பெயர் மக்கள் நாய்கள் போல தெரு தெருவாக போலீசிடம் அடிவாங்கி யுத்தத்தை நிறுத்து என்று கத்தியிருக்க கூடாது.. முக்கியமாய் புலிக்கொடியையும், பிரபாகரனின் போட்டோவையும் கையில் வைத்திருந்திருக்க கூடாது

சனல் நாலு இறுதி யுத்தத்தில் சிங்கள காடை இராணுவம் செய்த வன்கொடுமைகளை உலகுக்கு படம் பிடித்து காட்டியிருக்க கூடாது - மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஐநா இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு புலம்பெயர் மக்கள் தூண்டியிருக்க கூடாது
.....................
...................
..................

ஆக இவ்வளவும் நடந்திருக்காவிட்டால் நீங்கள் சுதந்திரமாக சுக போக வாழ்க்கை வாழ்ந்திருப்பீர்கள் அப்படி தானே ///

என்னனையா கதைக்கின்றீர் வன்னியில் யுத்தம் நடந்து கொண்டு இருக்கும் போது எவனையா சீரியல் பாத்துக்கொண்டு இருந்தது அவனுக்கு சீரியல் பார்க்க மனம் வருமா? தலைக்கு மேல செல் வரும் போது எவனாவது சீரியல் பாக்க முடியுமா? என்ன பாஸ் சினன்ப்புள்ளைதனமா கதைக்கிறீங்க?

நான் வெளிநாடு வாழ் உறவுகள் எங்களுக்கு குரல் கொடுக்கவில்லை என்று சொல்லவில்லை அப்போது குடுத்தீர்கள் இப்ப எல்லாம் முடிந்துவிட்டது மீண்டும் ஏன்? அதை கிளருவான் என்றுதான் கேட்கின்றேன் இதானல் இங்குள்ளவர்களுக்குத்தானே பிரச்சனை?

தனிமரம் said...
Best Blogger Tips

ஆகவே, வெளிநாட்டுமக்களின் நடவடிக்கைகளைப் பார்த்து அரசாங்கம் இப்படியெல்லாம் செய்யும் என்றால், அரசாங்கத்துக்கு சுய புத்தி என்ற ஒன்றே கிடையாதா? அவர்களுக்குத் தெரியாதா, மீண்டும் புலிகள் வருவார்களா? என்று!

எனவே வெளிநாட்டு மக்களின் கதைகளை நம்பி , தனக்கு கீழே வாழும் மக்களை ஒரு அரசு தண்டிக்கும் என்றால், அது எப்படியான ஒரு அரசாக இருக்க வேண்டும்? 

அப்படியான அரசின் ஆட்சியில் வாழ்வதை விட வெளிநாட்டில் கோப்பை கழுவுவது மேல் அல்லவா? // நவீன துட்டைகை மூன்களுக்கு எங்கே சார் தூரநோக்குப் பார்வை இருக்கு அயல் வீடு இருவரிடமும் இவர்கள் ஆண்மையை அடகு வைத்தகதை தெரியாதா மணிசார் இதைப்பற்றி இன்னொரு விவாதம் வைக்கலாம் இப்போது மையக்கருத்திற்கு வருவோம் பெரியோரே!

காட்டான் said...
Best Blogger Tips

வேலையில் நிற்கிறேன் இதில் எல்லோரும் மூலக்கருத்தை விட்டு விட்டு எங்கேயோ போவதுபோல் உள்ளது.. இன்னு கொஞ்சம் விட்டால் முள்ளிவாய்கால் பிரச்சனைக்கு வந்திடுவீங்க ?? வெளிநாட்டில இருக்கும் நாங்க நாட்டில போய்"செட்டில்"ஆவோமா? வாங்கையா திரும்பி விஷயத்திற்கு...

Anonymous said...
Best Blogger Tips

Powder Star - Dr. ஐடியாமணி said...////ஆகவே, வெளிநாட்டுமக்களின் நடவடிக்கைகளைப் பார்த்து அரசாங்கம் இப்படியெல்லாம் செய்யும் என்றால், அரசாங்கத்துக்கு சுய புத்தி என்ற ஒன்றே கிடையாதா? அவர்களுக்குத் தெரியாதா, மீண்டும் புலிகள் வருவார்களா? என்று!//// ஹிஹி ராஜா சார் உண்மையை சொன்னால் மோட்டுசிங்களவன் மோட்டு சிங்களவன் எண்டு சொல்லி மோடனாய் போனது தமிழன் தான்..
இந்தியா பாகிஸ்தானை ஒரே தராசில் வைத்து சமாளித்தவர்களுக்கு இதெல்லாம் .................)

K said...
Best Blogger Tips

வெளிநாட்டு மக்கள் அனைவரும் அடுத்து வரும் ஆறு மாதங்களுக்கு வாயை மூடிக்கொண்டு இருப்போம்! பார்க்கலாம் இலங்கையில் பாலும் தேனும் ஓடுகிறதா என்று????

K.s.s.Rajh said...
Best Blogger Tips

@
Powder Star - Dr. ஐடியாமணி said...
அப்படியான அரசின் ஆட்சியில் வாழ்வதை விட வெளிநாட்டில் கோப்பை கழுவுவது மேல் அல்லவா?///

உங்கள் கேள்வி சரி ஆனால் எல்லோறாலும் அப்படி போகமுடியாதே சார்......அன்றாடம் கூலிவேலைக்குப்போனால் தான் சாப்பாடு என்று இருப்பவன் இங்கதானே மச்சான் சார் வாழனும் அவனால் வெளிநாடு போக முடியாதே?

K.s.s.Rajh said...
Best Blogger Tips

@
Powder Star - Dr. ஐடியாமணி said...
வெளிநாட்டு மக்கள் அனைவரும் அடுத்து வரும் ஆறு மாதங்களுக்கு வாயை மூடிக்கொண்டு இருப்போம்! பார்க்கலாம் இலங்கையில் பாலும் தேனும் ஓடுகிறதா என்று??////

மச்சான் சார் உங்களைப்போல புரிந்துணர்வு உள்ள பலர் உண்மையில் உணர்வுகளுடன் பேசினாலும்

இதை பொழப்பா வைத்துக்கொண்டு ஒரு குறூப்திரியுதுதானே அதுகளுக்கு இந்தப்பிரச்சனைகளை கதைக்காவிட்டால் ஓன்றும் செய்யமுடியாதே...

K.s.s.Rajh said...
Best Blogger Tips

மச்சான் சார் நானும் நீங்களும் கந்துவும் விவாத்தை விட்டு விலகிப்போயிட்டம் போல நடுவவர் காட்டான் மாம்ஸ் குழம்பிட்டார்?

கருத்துக்கு வருவோம்..ஹி.ஹி.ஹி.ஹி...

Anonymous said...
Best Blogger Tips

K.s.s.Rajh said...///என்னனையா கதைக்கின்றீர் வன்னியில் யுத்தம் நடந்து கொண்டு இருக்கும் போது எவனையா சீரியல் பாத்துக்கொண்டு இருந்தது அவனுக்கு சீரியல் பார்க்க மனம் வருமா? தலைக்கு மேல செல் வரும் போது எவனாவது சீரியல் பாக்க முடியுமா? என்ன பாஸ் சினன்ப்புள்ளைதனமா கதைக்கிறீங்க?// சார் நான் சொன்னது யுத்தம் நிகழ்ந்த பிரதேசத்துக்கு வெளியில் இருந்தவர்கள் பற்றி... நான் இரண்டாயிரத்து எட்டு இறுதிவரை யாழில் இருந்தேன் ...அதன் பின் ஒருவருடத்துக்கு மேலாக (2009தொடக்கம்)கொழும்பில் இருந்தேன் ..ஆகா


ஆமா நீங்க எங்கிருந்தீங்க ;)

Anonymous said...
Best Blogger Tips

///K.s.s.Rajh said...

மச்சான் சார் நானும் நீங்களும் கந்துவும் விவாத்தை விட்டு விலகிப்போயிட்டம் போல நடுவவர் காட்டான் மாம்ஸ் குழம்பிட்டார்?/// ஹிஹி பதிவை எழுதிய பதிவரும் இதை தான் எதிர்பார்த்தார். )

K said...
Best Blogger Tips

@காட்டான்

வேலையில் நிற்கிறேன் இதில் எல்லோரும் மூலக்கருத்தை விட்டு விட்டு எங்கேயோ போவதுபோல் உள்ளது.. இன்னு கொஞ்சம் விட்டால் முள்ளிவாய்கால் பிரச்சனைக்கு வந்திடுவீங்க ?? வெளிநாட்டில இருக்கும் நாங்க நாட்டில போய்"செட்டில்"ஆவோமா? வாங்கையா திரும்பி விஷயத்திற்கு..:::::://////////

பின்ன நிரூபனும் பதிவில தேவையில்லத கதை கதைச்சா, நாங்களும் கதைப்பம் தானே காட்டான் அண்ணே!

இதுக்குத்தான் சொல்லுறது சீரியசான விஷயங்களைக் கதைக்க கூடாது என்று்!

காட்டான் அண்ணை நீங்க வேலை முடிச்சு வாங்க! நாங்க அந்தக் குருநாதரின் தவிலை வாசிப்போம்!

K.s.s.Rajh said...
Best Blogger Tips

@
கந்தசாமி. said...
K.s.s.Rajh said...///என்னனையா கதைக்கின்றீர் வன்னியில் யுத்தம் நடந்து கொண்டு இருக்கும் போது எவனையா சீரியல் பாத்துக்கொண்டு இருந்தது அவனுக்கு சீரியல் பார்க்க மனம் வருமா? தலைக்கு மேல செல் வரும் போது எவனாவது சீரியல் பாக்க முடியுமா? என்ன பாஸ் சினன்ப்புள்ளைதனமா கதைக்கிறீங்க?// சார் நான் சொன்னது யுத்தம் நிகழ்ந்த பிரதேசத்துக்கு வெளியில் இருந்தவர்கள் பற்றி... நான் இரண்டாயிரத்து எட்டு இறுதிவரை யாழில் இருந்தேன் ...அதன் பின் ஒருவருடத்துக்கு மேலாக (2009தொடக்கம்)கொழும்பில் இருந்தேன் ..ஆகா


ஆமா நீங்க எங்கிருந்தீங்க ;////

வன்னியில் தான்
ஒருவேளை வெளியில் இருந்தவர்கள் அப்படி சீரியல் பாத்துக்கொண்டு இருந்து இருக்கலாம்..அவர்களைவிட புலம்பேர் உறவுகள் போற்றத்தக்கவர்கள்..

ஆனால் நான் சொல்வது இப்ப திரும்பவும் அதுகளை கதைப்பதில் என்ன பிரயோசனம் என்றுதான் கேட்கின்றேன் கந்து?

நடுவர் காட்டான் குழபோட்டுவிட்டார்..நானும் நீங்களும் ஜடியாமணி மச்சானும் விவாத்தை வேறு பக்கம் கொண்டு போறமாம்

Anonymous said...
Best Blogger Tips

///Powder Star - Dr. ஐடியாமணி said...

வெளிநாட்டு மக்கள் அனைவரும் அடுத்து வரும் ஆறு மாதங்களுக்கு வாயை மூடிக்கொண்டு இருப்போம்! பார்க்கலாம் இலங்கையில் பாலும் தேனும் ஓடுகிறதா என்று????/// ஹிஹி எனக்கு தெரியும் பாஸ் ... இரண்டாயிரத்து ஒன்பதுகளில் இங்கு வந்த போது இந்த நாட்டில் கூட புலம்பெயர்ந்து வந்த ஈழ மக்கள் யுத்தத்தை நிறுத்த சொல்லி தினமும் போராட்டங்கள் நடத்திக்கொண்டிருந்தார்கள்.ஆனால் நான் ஒரேயொரு போராட்டத்துக்கு தான் சென்றிருந்தேன்.. ஏன்னா எனக்கு தெரியும் எப்பிடி தான் கத்தினாலும் நாளை "உன்னை யார் குரல் கொடுக்க சொன்னது" என்று ஒரு தரப்பு கேட்க்கும்.. அது தான் சுயனலவாதியாகவே இருந்துட்டேன்.. சுயநலமாய் இருப்பவனுக்கு தான் சார் இப்போ காலம்..

எங்கே, இவர்களை எம்மினம் மீது கொடிய யுத்தத்தை திணித்த இலங்கை பேரினவாத தரப்பையும் அவர்களுடன் கைகோர்த்த சோனியா கும்பலையும் விமர்சிக்க சொல்லுங்கள் பார்ப்போம் ...................

ஹிஹி அவர்களை எல்லாம் தங்கள் மனசில், உச்சத்தில் வைத்திருக்கிறார்கள் பாஸ் ;)

இலங்கை இராணுவத்தை கூட கடவுளாக மதிக்கிறார்கள் ;)

K.s.s.Rajh said...
Best Blogger Tips

சரி பதிவின் கேள்விக்கு வருவோம்(அப்ப இன்னும் கேள்விக்கே வரவில்லையா ஹி.ஹி.ஹி.ஹி)

புலம்பேர் உறவுகள் எதற்காக மீண்டும் இங்க வரவேண்டும் சிலர் எவ்வளவோ கஸ்டத்தின் மத்தியில் வெளிநாடு போய்யிருபார்கள் அவர்கள் அங்கு பல கஸ்டப்பட்டு வேலைசெய்து அங்க செட்டிலான பின் மீண்டும் இங்கே வரவேண்டிய தேவையில்லைத்தானே..
என்னைக்கேட்டால் 99% பேர் வரமாட்டார்கள்.

Anonymous said...
Best Blogger Tips

///ஆனால் நான் சொல்வது இப்ப திரும்பவும் அதுகளை கதைப்பதில் என்ன பிரயோசனம் என்றுதான் கேட்கின்றேன் கந்து?// எதை! சனநாயக அரசென்று சொல்லிக்கொண்டு யுத்தத்தில் ஒரு இனத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அரக்கத்தனமான செயல்களை, நியாயமான வழிகளில் சர்வதேசத்தின் சட்டங்களின் பால் கொண்டு செல்வதையா?

K said...
Best Blogger Tips

@கந்தசாமி.

எங்கே, இவர்களை எம்மினம் மீது கொடிய யுத்தத்தை திணித்த இலங்கை பேரினவாத தரப்பையும் அவர்களுடன் கைகோர்த்த சோனியா கும்பலையும் விமர்சிக்க சொல்லுங்கள் பார்ப்போம் ...................

ஹிஹி அவர்களை எல்லாம் தங்கள் மனசில், உச்சத்தில் வைத்திருக்கிறார்கள் பாஸ் ;)

இலங்கை இராணுவத்தை கூட கடவுளாக மதிக்கிறார்கள் ;):////////

ஹி ஹி ஹி உண்மைதான்!

காட்டான் said...
Best Blogger Tips

வேண்டாதவன் பொண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றமென்பதை போல நிருபனின் எந்த பதிவையும் "அவர்கள்" எதிர்பாக பார்காமல் வெளிநாட்டில் இருக்கும் நாங்க இயல்பு நிலை வந்தால் அட தமிழ் ஈழமே கிடைச்சிட்டுன்னு வைச்சுக்கொள்வோம் அப்போதாவது நாடு திரும்புவோமா..?

காட்டான் said...
Best Blogger Tips

என்னை பொருத்தவரையில் நீங்கள் வேறு பதிவில் கதைக்க வேண்டியதை இதில் நுளைத்து விவாதத்தை திசை திருப்புகிறீர்கள் யுத்தத்தையும் மற்ற விடயங்களையும் பின்னர் கதைப்போம் இப்ப விஷயத்துக்கு வாங்கையா..!!?

K said...
Best Blogger Tips

வேண்டாதவன் பொண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றமென்பதை போல நிருபனின் எந்த பதிவையும் "அவர்கள்" எதிர்பாக பார்காமல் வெளிநாட்டில் இருக்கும் நாங்க இயல்பு நிலை வந்தால் அட தமிழ் ஈழமே கிடைச்சிட்டுன்னு வைச்சுக்கொள்வோம் அப்போதாவது நாடு திரும்புவோமா..?/.///////

நிரூபன் முதலில் ஒழுங்கா எழுதட்டும்! நிறையப் பதிவுகளீல் புலி எதிர்ப்பைக் காட்டி, நிறையப் பேரிசம் வாங்கிக் கட்டுவதே என்ர சகலைக்கு வேலையாகிவிட்டது!

கடைசியில என்ர மனிசிக்கும் அவன்ர மனிசியாகிய, என்ர மனிசியின் தங்கச்சிக்கும் இடையிலே அக்காள் தங்கை பிரச்சனை வரப்போகுது!

K.s.s.Rajh said...
Best Blogger Tips

இப்ப இங்க 12.37Am..நாங்கள் சிலர் கதைச்சிக்கொண்டு இருக்கோம் ப்ளாக் ஓனர் நல்லா நித்திரை கொள்வார்........


தூக்கம் கண்ணைக்கட்டுது நானும் கிளம்புறன்...

ஒரு வேளை நான் இங்கே சொன்ன கருத்துக்கள் தவறு என்றால் மன்னிசுக்கொள்ளுங்கள் நண்பர்களே ஏன்னா வன்னியில் இறுதி யுத்தம் நடந்து கொண்டு இருக்கும் போது நாங்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்து சீரியல் பாத்துக்கொண்டு இருந்தோம் எனவே எங்களுக்கு இதை பற்றி பேச தகுதி இல்லைதானே..இத்தோடு நான் கெளம்புறன்...

Anonymous said...
Best Blogger Tips

////ஈழத்தில் இயல்பு நிலை தோன்றின் புலம் பெயர் தமிழர்கள் தாயகம் திரும்புவார்களா? //// அதென்ன இயல்புநிலை ?

காட்டான் said...
Best Blogger Tips

ஸாதிகா" அவர்களின் "எல்லாப் புகழும் இறைவனுக்கே" வலைப் பூவிற்கு

வாழ்த்துக்கள் !!

நிரூபன் இப்படியான விவாதங்கள் வரும்போது பதிவர் அறிமுகங்கள் வேண்டாமே!!!

Anonymous said...
Best Blogger Tips

K.s.s.Rajh said..///ஏன்னா வன்னியில் இறுதி யுத்தம் நடந்து கொண்டு இருக்கும் போது நாங்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்து சீரியல் பாத்துக்கொண்டு இருந்தோம் எனவே எங்களுக்கு இதை பற்றி பேச தகுதி இல்லைதானே../// உங்க கதைகளை பார்த்தால் இப்போ எதோ ஒரு வேற்று கிரகத்தில் இருந்து எழுதுகிறது போல தான் இருக்கு ;)

காட்டான் said...
Best Blogger Tips

நாட்டு பிரச்சனையில்லை வீட்டு பிரச்சனையையும் உருவாக்கும் நிருபனை கண்டிக்கிறேன்!! போதுமா மணிசார் விஷயத்துக்கு வாங்க...!!

K.s.s.Rajh said...
Best Blogger Tips

@
கந்தசாமி. said...
K.s.s.Rajh said..///ஏன்னா வன்னியில் இறுதி யுத்தம் நடந்து கொண்டு இருக்கும் போது நாங்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்து சீரியல் பாத்துக்கொண்டு இருந்தோம் எனவே எங்களுக்கு இதை பற்றி பேச தகுதி இல்லைதானே../// உங்க கதைகளை பார்த்தால் இப்போ எதோ ஒரு வேற்று கிரகத்தில் இருந்து எழுதுகிறது போல தான் இருக்கு ;////

ஆமா சார் இப்ப இந்தக்கருத்தை நான் கிளிநொச்சி என்ற வேற்றுக்கிரகத்தில் இருந்து டைப்பன்னி போட்டுக்கொண்டு இருக்கேன்

Anonymous said...
Best Blogger Tips

////எனவே எங்களுக்கு இதை பற்றி பேச தகுதி இல்லைதானே..///யார் அப்படி சொன்னது .. மாற்று கருத்து வைக்க முடியவில்லை என்றால் .... இறுதியாக இப்படி ..உங்களுக்கு சாதகமாக கருத்தை மாற்றுவது ...............

காட்டான் said...
Best Blogger Tips

கந்து இயல்பு நிலைன்னா தமிழ் ஈழமே கிடைத்து விட்டதுன்னு நினைச்சு பதில் சொல்லுங்கள்  புலத்து தமிழர்கள் மீண்டும் அங்கு செல்வார்களா? ஏன்னா கொழும்பில் இருப்பவர்களே தங்கள் இடங்களுக்கு போக விருப்பமில்லாமல்தானே இருக்கிறார்கள்..?

K.s.s.Rajh said...
Best Blogger Tips

@
காட்டான் said...
நாட்டு பிரச்சனையில்லை வீட்டு பிரச்சனையையும் உருவாக்கும் நிருபனை கண்டிக்கிறேன்!! போதுமா மணிசார் விஷயத்துக்கு வாங்க...///

கடைசியா குடும்பச்சண்டை வந்துடிச்சா ..நிரூபண் பாஸ்க்கு வண்மையான கண்டனங்கள்

மாம்ஸ் நானு கெளம்புறன் நீங்க கமண்ட் போட எனக்கும் போடனும் போல இருக்கு ஆனா இப்ப இங்க நடுச்சாமம் கடந்துவிட்டது நான் வாரன் இப்ப தூக்கினாதான் விடிய எழும்பி என் ப்ளாக்கின் பஞ்சாயத்தை தீர்க்கனும் ஏற்கனவே தீர்த்துட்டன் இப்ப யாரும் கூட்டி இருகாங்களோ தெரியலை நான் போய்ட்டு வாரன் குட் நைட்..

காட்டான் said...
Best Blogger Tips

மாம்ஸ் நானு கெளம்புறன் நீங்க கமண்ட் போட எனக்கும் போடனும் போல இருக்கு ஆனா இப்ப இங்க நடுச்சாமம் கடந்துவிட்டது நான் வாரன் இப்ப தூக்கினாதான் விடிய எழும்பி என் ப்ளாக்கின் பஞ்சாயத்தை தீர்க்கனும் ஏற்கனவே தீர்த்துட்டன் இப்ப யாரும் கூட்டி இருகாங்களோ தெரியலை நான் போய்ட்டு வாரன் குட் நைட்.. 

போய்யா போய் நல்லா தூங்கு இண்டைக்கு யார் முகத்தில முழிச்சாய் உன்ர பிளாக்கிலும் செம்பநெளிச்சோம் இங்கும் விடவில்லை பாத்தியா...ஹி ஹி

K said...
Best Blogger Tips

@காட்டான்

மாம்ஸ் நானு கெளம்புறன் நீங்க கமண்ட் போட எனக்கும் போடனும் போல இருக்கு ஆனா இப்ப இங்க நடுச்சாமம் கடந்துவிட்டது நான் வாரன் இப்ப தூக்கினாதான் விடிய எழும்பி என் ப்ளாக்கின் பஞ்சாயத்தை தீர்க்கனும் ஏற்கனவே தீர்த்துட்டன் இப்ப யாரும் கூட்டி இருகாங்களோ தெரியலை நான் போய்ட்டு வாரன் குட் நைட்..

போய்யா போய் நல்லா தூங்கு இண்டைக்கு யார் முகத்தில முழிச்சாய் உன்ர பிளாக்கிலும் செம்பநெளிச்சோம் இங்கும் விடவில்லை பாத்தியா...ஹி ஹி :///////

மச்சான் சாரின் கனவிலே சோனியா காந்தி வரக்கடவதாக!ஹி ஹி ஹி ஹி

கோவிக்க வேண்டாம்` ச்சும்மா காமெடிக்குச் சொன்னேன்!

K.s.s.Rajh said...
Best Blogger Tips

@
கந்தசாமி. said...
////எனவே எங்களுக்கு இதை பற்றி பேச தகுதி இல்லைதானே..///யார் அப்படி சொன்னது .. மாற்று கருத்து வைக்க முடியவில்லை என்றால் .... இறுதியாக இப்படி ..உங்களுக்கு சாதகமாக கருத்தை மாற்றுவது .......///

இல்லை சார் நாங்க செவ்வாய் கிரகத்தில் இருந்தால் எங்களுக்கு பிரச்சனை சரியாகத்தெரியாது..வன்னி மக்களைவிட புலம்பெயர் உறவுகள்தான் ஈழத்தில் மிகுந்த பற்றுடன் இருந்தார்கள் ஏன்னா வன்னி மக்கள் நாங்கள் எல்லோறும் செவ்வாய் கிரகத்தில் இருந்தால் நாங்கள் சொன்னால் எல்லாம் தவறுதான்...நாங்கள் சொல்லும் விடயம் என்ன வென்று உங்களுக்கு நன்றாக தெரிந்தும் தெரியாதது போல இருக்கும் உங்களுடன் எப்படி எங்கள் நிலைமையை புரியவைப்பது என்று தெரியவில்லை..இப்ப இதில போடும் கமண்டுகளுக்கு கூட நாங்கள் யோசிக்கவேண்டியிருக்கு இதான் நிலமை...புரிஞ்சு கொள்ளுங்க சார்..

விடியவாரன் கந்து நித்திரை கண்ணைக்கட்டுது..

K.s.s.Rajh said...
Best Blogger Tips

@
Powder Star - Dr. ஐடியாமணி said...
@காட்டான்

மாம்ஸ் நானு கெளம்புறன் நீங்க கமண்ட் போட எனக்கும் போடனும் போல இருக்கு ஆனா இப்ப இங்க நடுச்சாமம் கடந்துவிட்டது நான் வாரன் இப்ப தூக்கினாதான் விடிய எழும்பி என் ப்ளாக்கின் பஞ்சாயத்தை தீர்க்கனும் ஏற்கனவே தீர்த்துட்டன் இப்ப யாரும் கூட்டி இருகாங்களோ தெரியலை நான் போய்ட்டு வாரன் குட் நைட்..

போய்யா போய் நல்லா தூங்கு இண்டைக்கு யார் முகத்தில முழிச்சாய் உன்ர பிளாக்கிலும் செம்பநெளிச்சோம் இங்கும் விடவில்லை பாத்தியா...ஹி ஹி :///////

மச்சான் சாரின் கனவிலே சோனியா காந்தி வரக்கடவதாக!ஹி ஹி ஹி ஹி

கோவிக்க வேண்டாம்` ச்சும்மா காமெடிக்குச் சொன்னேன்////

என்னை தூங்க விட மாட்டீங்களோ இண்டைக்கு சிவராத்திரியா?சோனியா அகர்வால் வந்தா சந்தோசம் தான் .ஹி.ஹி.ஹி.ஹி.

குட் நைட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

K.s.s.Rajh said...
Best Blogger Tips

@
காட்டான் said...
மாம்ஸ் நானு கெளம்புறன் நீங்க கமண்ட் போட எனக்கும் போடனும் போல இருக்கு ஆனா இப்ப இங்க நடுச்சாமம் கடந்துவிட்டது நான் வாரன் இப்ப தூக்கினாதான் விடிய எழும்பி என் ப்ளாக்கின் பஞ்சாயத்தை தீர்க்கனும் ஏற்கனவே தீர்த்துட்டன் இப்ப யாரும் கூட்டி இருகாங்களோ தெரியலை நான் போய்ட்டு வாரன் குட் நைட்..

போய்யா போய் நல்லா தூங்கு இண்டைக்கு யார் முகத்தில முழிச்சாய் உன்ர பிளாக்கிலும் செம்பநெளிச்சோம் இங்கும் விடவில்லை பாத்தியா...ஹி ஹி.////

ஆமா மாம்ஸ் இன்னைக்கு பக்கத்துவீடு பிகர் மூச்சிலதான் முழுச்சேன் வேனாம் இதுக்கு மேல சொல்லி இதுக்கும் செம்புநெளிஞ்சிடும் நான் வாரன்

குட் நைட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

Anonymous said...
Best Blogger Tips

K.s.s.Rajh said...////இல்லை சார் நாங்க செவ்வாய் கிரகத்தில் இருந்தால் எங்களுக்கு பிரச்சனை சரியாகத்தெரியாது..வன்னி மக்களைவிட புலம்பெயர் உறவுகள்தான் ஈழத்தில் மிகுந்த பற்றுடன் இருந்தார்கள் ஏன்னா வன்னி மக்கள் நாங்கள் எல்லோறும் செவ்வாய் கிரகத்தில் இருந்தால் நாங்கள் சொன்னால் எல்லாம் தவறுதான்..//// இப்ப ஏன் இந்த இடத்தில் சும்மா இருக்கிற வன்னி மக்களை இழுக்கிறீர்கள்...எதிர்வாதங்கள் உங்களுக்கும் எனக்கும் தானே அப்புறம் எதுக்கு வன்னி மக்கள்...இப்போ யார் சொன்னார்கள் வன்னி மக்களுக்கு ஈழத்தில் பற்று இல்லை என்றது.. ராஜா சார் உங்களை போன்ற ஒருசிலர் விதிவிலக்காக இருந்தாலும், முப்பது வருடங்களில் பெரும் பகுதி ஈழ யுத்தத்தை தங்கள் தோளில் சுமந்தவர்கள் அவர்கள் ..ஆக அவர்களை உங்க கூட துணைக்கு இழுத்தா தான் அனுதாபம் தேடலாம் என்றால் அந்த மனப்பான்மையை கை விடுங்கள்.. வன்னி பிரதேசத்தில் வாழ்ந்தீர்கள் என்ற ஒரே காரணத்துக்காக உங்கள் கருத்துக்களை அவர்களின் கருத்தாக திணிக்காதீர்கள்.

Anonymous said...
Best Blogger Tips

இப்ப இதில போடும் கமண்டுகளுக்கு கூட நாங்கள் யோசிக்கவேண்டியிருக்கு இதான் நிலமை.///இது.. இது தான் பாஸ் மேட்டரே...உங்க நிலை மட்டுமல்ல நாட்டில் இருக்கிற பலரது நிலை கூட இது தான். ஏன், என் நிலை கூட இப்படி தான் இருந்தது.. அது தான் ஒருவன் ஈழத்தில் இருந்து கருத்து சுதந்திரம் உள்ள இன்னொரு நாட்டுக்கு செல்லும் போது தன் கருத்துக்களை - அதுவரை காலமும் தன் மனதில் நிராசையாக ,ஆயுதங்கள் முன்னணியில் முடக்கப்பட்ட குரலை சுதந்திரமாக வெளியிடுறான்.. ஏன், யுத்த நிறுத்த காலத்தில் கூட வடகிழக்கு மக்கள் எவ்வாறான கருத்துக்களை கொண்டிருந்தார்கள் என்பது சில வேளைகளில் தங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.

முக்கியமாக யாழில் நடந்த பொங்கு தமிழ் நிகழ்வுகள்- கலந்து கொண்ட மக்கள், மற்றும் ஏனையவை ..................இன்றும் மனக்கண் முன் ஆச்சரியங்களாக ...!

K.s.s.Rajh said...
Best Blogger Tips

@
கந்தசாமி. said...
K.s.s.Rajh said...////இல்லை சார் நாங்க செவ்வாய் கிரகத்தில் இருந்தால் எங்களுக்கு பிரச்சனை சரியாகத்தெரியாது..வன்னி மக்களைவிட புலம்பெயர் உறவுகள்தான் ஈழத்தில் மிகுந்த பற்றுடன் இருந்தார்கள் ஏன்னா வன்னி மக்கள் நாங்கள் எல்லோறும் செவ்வாய் கிரகத்தில் இருந்தால் நாங்கள் சொன்னால் எல்லாம் தவறுதான்..//// இப்ப ஏன் இந்த இடத்தில் சும்மா இருக்கிற வன்னி மக்களை இழுக்கிறீர்கள்...எதிர்வாதங்கள் உங்களுக்கும் எனக்கும் தானே அப்புறம் எதுக்கு வன்னி மக்கள்...இப்போ யார் சொன்னார்கள் வன்னி மக்களுக்கு ஈழத்தில் பற்று இல்லை என்றது.. ராஜா சார் உங்களை போன்ற ஒருசிலர் விதிவிலக்காக இருந்தாலும், முப்பது வருடங்களில் பெரும் பகுதி ஈழ யுத்தத்தை தங்கள் தோளில் சுமந்தவர்கள் அவர்கள் ..ஆக அவர்களை உங்க கூட துணைக்கு இழுத்தா தான் அனுதாபம் தேடலாம் என்றால் அந்த மனப்பான்மையை கை விடுங்கள்.. வன்னி பிரதேசத்தில் வாழ்ந்தீர்கள் என்ற ஒரே காரணத்துக்காக உங்கள் கருத்துக்களை அவர்களின் கருத்தாக திணிக்காதீர்கள்////

சார் இன்னைக்கு சிவராத்திரி என்றாலும் பரவாயில்லை...பாஸ் இங்கே நானும் நீங்களும் வாதசெய்வது என்றால் என்ன கதை உங்களுக்கும் எனக்கு என்ன பிரச்சனை ஒரு பிரச்சனையும் இல்லை..இங்கே வாதம் புலம்பேர் உரவுகள் ஈழத்து மக்களின் கருத்துக்கள் என்ற கண்ணோட்டத்தில்தான்......போய் வன்னியில் கேட்டுப்பாறுங்கள் சார் வெளிநாட்டு வாழ் உறவுகள் மீண்டும் தமிழீழக்கதை கதைப்பதையோ இல்லை புலிகள் கதை பேசுவதையோ விரும்புகின்றார்களா என்று?ஒருவரும் விரும்புதவாத சொல்ல மாட்டார்கள் சார் அது ஏன் என்று உங்களுக்கு தெரியும்...இதைத்தான் நான் சொல்கின்றேன்.....எனக்ருத்தை வன்னியில் வாழ்த்து கொண்டிருக்கும் என் கருத்தை வன்னி மக்களின் கருத்தாக எடுக்கமுடியாவிட்டால் உங்கள் கருத்தை எப்படி மட்டும் எப்படிசார் ஓட்டு மொத்தபுலம் பேர் உறவுகளின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியும்?

இங்க உங்களுக்கும் எனக்கு என்ன கந்து பிரச்சனை ஒன்றும் இல்லையே இங்கே விவாதம் நடப்பதே புலம்பேர் உறவுகளின் கருத்தும்,ஈழத்தவரின் கருத்தும் தானே உங்களுக்கும் எனக்கும் தனிப்பட்ட விவாதம் என்றால் ஏன் பாஸ் நாங்க விவாதிப்பான் பேசாம கிளம்புவம்...உங்களின் எனக்கு என்ன கோபம் என்னில் உங்களுக்கு என்னகோபம்..

K.s.s.Rajh said...
Best Blogger Tips

கந்து பதிவ போட்டுட்டு நிரூபன் பாஸ் நிம்மதியா தூக்கிறார் இங்க நாங்க கடையை நடத்திகிட்டு இருக்கோம்..இப்பவே டைப்பண்ணும் போது நிறைய எழுத்துப்பிழை வருது மச்சி..தூக்க கலக்கம்...இத்தோட நான் இந்தவிவாத மேடையில் என்கருத்தை முடித்துக்கொள்கின்றேன்...நேற்று(இப்பைங்க விடிஞ்சுடிச்சி) பக்கத்துவீடு பிகர் மூஞ்சிலதான் முழுச்சேன் மச்சி(அது எப்படி என்று கேட்க கூடாது பிறகு அதுக்கும் செம்பை நெளிச்சிடுவாங்க..ஹி.ஹி.ஹி.ஹி.)

என்னமோ இன்னைக்கு ஒரே ரகளையாத்தான் இருக்கு நான் கெளம்புறன் பாஸ்..

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

///இங்கே வாதம் புலம்பேர் உரவுகள் ஈழத்து மக்களின் கருத்துக்கள் என்ற கண்ணோட்டத்தில்தான்./// ஓ இது தான் விவாதமா???? எங்க பார்ப்பம் ....

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

K.s.s.Rajh said...///போய் வன்னியில் கேட்டுப்பாறுங்கள் சார் வெளிநாட்டு வாழ் உறவுகள் மீண்டும் தமிழீழக்கதை கதைப்பதையோ இல்லை புலிகள் கதை பேசுவதையோ விரும்புகின்றார்களா என்று?/// அப்போ எந்த ஒரு காலத்திலும் ஈழ மக்கள்(வன்னி மக்கள் என்று தனித்து சொல்ல விரும்பவில்லை) தனிநாட்டையோ புலிகளையோ ஆதரிக்கவில்லை என்று சொல்ல வருகிறீர்களா ?

தெரியாமல் தான் கேட்கிறேன் புலம்பெயர் தமிழர்களுக்கு தமிழீழம் பற்றி கதைக்கவும் ,புலிகள் பற்றி கதைக்கவும் உரிமை இல்லை என்று யார் சட்டம் கொண்டு வந்தது...ஒருத்தன் தன் தாயை விட்டு விலத்தி இருந்தவுடன் அந்த தாயை பற்றி கதைக்கிற உரிமையை இழந்துவிடுகிரானா ? அதேபோல தாய் நாட்டையும்-தான் பிறந்து வளர்ந்து ஓடித்திரிந்த மண்ணையும் ...? அப்படி சொல்ல எவனுக்காவது உரிமை இருக்கா ??

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

K.s.s.Rajh said...///இங்க உங்களுக்கும் எனக்கு என்ன கந்து பிரச்சனை ஒன்றும் இல்லையே இங்கே விவாதம் நடப்பதே புலம்பேர் உறவுகளின் கருத்தும்,ஈழத்தவரின் கருத்தும் தானே//// அதுக்காக எதுக்கு பாஸ் உங்க தனிப்பட்ட கருத்துக்களை ஒரு சமூகத்தின் ,பிரதேசத்தின் கருத்தாக முன்வைக்கிறீர்கள் ...குறிப்பாக இங்கே வன்னி மக்களை குறிவைத்து எந்த விவாதமும் ,கருத்துக்களும் முன்வைக்கப்படாமல் இருக்கும் போதும் ..........

ஹிஹி சோனியாகாந்தியை உங்களுக்கு பிடிக்கும் என்பதை அதே சமூகத்தின்- பிரதேசத்தின் கருத்தாக முன் வைக்க முடியுமா ??? அது தான் பாஸ் நான் சொன்னேன் ..உங்களுக்கும் அந்த மக்களுக்கும் நிறைய வேறுபாடுகளை என்னால் உணர முடிகிறது ......

Yoga.s.FR said...
Best Blogger Tips

அனைவருக்கும் வணக்கம்.எனக்கு இப்படி ஒரு பதிவு நிரூபன் போட்டிருக்கிறார் என்பது தெரிந்திருக்கவில்லை!சற்று நேரத்துக்கு முன்னர் தான் சக நடுவர் காட்டான் செங்கோவி பதிவில் தகவல் சொன்னார்.மன்னிக்க வேண்டும் எல்லோரும்,நிரூபன் உட்பட. இந்தப் பதிவு முன் கூட்டியே எழுதப்பட்டு விட்டது என்பது என் கருத்து!அதாவது,போர்?!அல்ல,இன அழிப்பின் உச்சம் முடிந்து ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளே ஆகியிருக்கிறது!கடந்த எட்டு மாதங்களாகத் தான் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு"மீண்டும்" பேச்சு வார்த்தை என்று ஒன்று நடத்தப்படுவதாக,சர்வதேச அழுத்தத்தை "ஆறப்" போடுவதற்காக எடுபிடிகள் த.தே.கூ வுடனும்,ஈ.பி.டி.பி யுடனும் கலந்து ஆலோசிக்கிறது,இன வாத மகிந்த அரசு!ஏதோ இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு வந்து விட்டது போலவும்,முப்பத்தைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களின் கனவும்,மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட உறவுகளின் அழிவுக்கும் நியாயம் கிடைத்து,சுய நிர்ணய உரிமையுடன் ஈழத் தமிழ் மக்களின் வாழ்வு மலர்ந்து விட்டதாகவும் எண்ணி நிரூபன் இந்தப் புலம் பெயர்ந்து வாழும் உறவுகளை மீளவும் ஈழத்துக்கு அழைத்து வர முடியுமா,முடியாதா என்ற ரீதியில்,புலம்பெயர்ந்தோரை மூன்று வகையினராகப் பிரித்து கேள்வியைப் பொது விவாத மேடைக்கு கொண்டு வந்திருக்கிறார்!பலரும் பல விதத்தில் நிரூபனை சாடியிருக்கிறீர்கள்.முதலில் நிரூபன் இந்தக் கேள்வியை கொண்டு வந்திருக்கும் நேரம் தவறானது என்பது என் அபிப்பிராயம்!இரண்டாவது,இலங்கை அரசு "அந்த" நாட்களில் சொன்னது போல் பொருள் தேடி புலம்பெயர்ந்த கூட்டம் என்று நிரூபன் சொல்லுகிறார்!இது தவறு நிரூபன்!ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்களே புலம்பெயர்ந்துள்ளனர்.படித்தவர்கள் பற்றிக் கூறினீர்கள்,ஒப்புக் கொள்ளலாம்!உங்களுக்கு ஒரு விடயம் சொல்கிறேன்,கேளுங்கள்;அகதி அந்தஸ்து கோருவதற்கு நூற்றியெட்டுக் காரணங்களை ஜெனீவா உடன்படிக்கை சொல்கிறது.விரிவாக இங்கே சொல்வது அழகல்ல,அதனால் தவிர்ப்போம்.மீண்டுமொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம்.இலங்கையிலும் வெளி நாடுகளிலும் மேற்கொள்ளப்படும் தற்போதைய அரசியல் நகர்வுகள் உங்களுக்கும்,எங்களுக்கும் தெரியும். வேண்டாம்,இந்த விடயம் இப்போது விவாதத்துக்குக் கொண்டு வரப்பட வேண்டிய நேரம் அல்ல!உறவுகளுக்குள்,நண்பர்களுக்குள் பெரியவர்களுக்குள் மோதலை உருவாக்கும் எதுவும் வேண்டாமே??????????

தனிமரம் said...
Best Blogger Tips

@யோகா ஐயாவிற்கு !
இந்தப்பதிவு எழுதியது நிரூபன் என்றாலும் கருத்துப் பொருள் கொடுத்தது தனிமரம் என்பதாலும் இந்தப்பதிவு வர நானும் ஒரு காரணம் விவாத மேடை எடுத்த பொருளை விட்டு சில விதண்டாவாதங்களுக்குப் போய்விட்டதால் நானும் பணி நிமித்தம் வெளியே சென்று விட்டேன் !
நிற்க இந்தப்பதிவு 2மாதங்களுக்கு முன் வரவேண்டியது இருவருக்கும் இடையில் சில கருத்துக்கள் பரிமாறுவதற்கு போதிய கால அவகாசங்கள் கிடைக்கவில்லை அதனாலேயே பதிவில் இத்தனை சாடல்கள்!
ஐயா நாங்கள் புலம் பெயர்ந்தவர்கள் ஆனால் சில இனவாத சகோதரமொழியினர் இங்கு ஒரு கூட்டத்தில் பிரஸ்தாபித்த இந்த விடயத்தை நண்பருக்கு இப்படி இருந்தால் என்று பொருள்பட கூறியிருந்தேன் அதனை உள்வாங்கி நிரூபன் பதிவு செய்ததும் நாம் எதிர்பார்த்த விடயங்களை சிலர் முன்வைக்கவில்லை என்பதாலும் நீங்கள் கேட்டதற்கு இனங்க நானும் இந்த விடயத்தை இத்தோடு நிறுத்துகுன்றேன். 
சில ஊடகங்களின் தாக்கத்தால் எனக்கு எழுந்த கேள்வியே இந்தப்பதிவு யாரையும் புன்படுத்தியிருந்தால்  சபை மரபிற்கு இனங்க தனிமரம் சிரம் தாழ்த்தி மன்னிப்புக் கோருகின்றேன்!
யோகா ஐயா புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் 
நட்புடன் தனிமரம் நேசன்!

Anonymous said...
Best Blogger Tips

தனி மரம்.... தனிமரம் ;)

K said...
Best Blogger Tips

விவாத மேடை எடுத்த பொருளை விட்டு சில விதண்டாவாதங்களுக்குப் போய்விட்டதால்........//////

எது நேசன் அண்ணாச்சி விதண்டாவாதம்???????

இப்பதிவிலும் கருப்பொருளுக்கு மாறாக சில விதண்டா வாதங்கள் உள்ளன!

விதண்டாவாதம் கிரியேட்டட் சம் மோர் விதண்டாவாதம்ஸ்! தற்ஸ் ஆல்!

K.s.s.Rajh said...
Best Blogger Tips

இங்க இவ்வளவு ரணகளமா இருக்கு எங்கையா ப்ளாக் ஓனர்?
மதிப்புக்குறிய ப்ளாக் ஓனரை இங்கே வரும் படி அன்புடன் அழைக்கின்றோம்.

மாய உலகம் said...
Best Blogger Tips

"ஸாதிகா" அவர்களின் "எல்லாப் புகழும் இறைவனுக்கே" வலைப் பூவிற்கு வாழ்த்துக்கள்

மாய உலகம் said...
Best Blogger Tips

விவாதம் தொடருங்கள்...

உலக சினிமா ரசிகன் said...
Best Blogger Tips

மிக முக்கியமான கருவை விவாதப்பொருளாக்கி உள்ளீர்கள் சகோ!
நல்ல கருத்துகள் உருவாக வாழ்த்துகிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

அனைவருக்கும் மீண்டும் என் வணக்கம்,

விவாதமேடைப் பதிவில் நான் சொல்ல வந்த விடயங்களைப் புரிந்து கொள்ளாது சக நண்பர்கள் பதிவினைத் திசை மாற்றும் நோக்கில் கருத்துக்களை வழங்கிய காரணத்தினால், அனைவரின் பதில்களுக்கும் தனித் தனியே கருத்துரை வழங்கவுள்ளேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@இராஜராஜேஸ்வரி
ஸாதிகா" அவர்களின் "எல்லாப் புகழும் இறைவனுக்கே" வலைப் பூவிற்கு

வாழ்த்துக்கள் !//

உங்கள் வாழ்த்துக்களிற்கு நன்றி அம்மா.

நிரூபன் said...
Best Blogger Tips

@மதுரன்

புலம்பெயர் தமிழர் 95% ஆனோர் திரும்பவும் வரமாட்டார்கள் என்பதே உண்மை.
கவலைக்குரிய விடயம் இந்த பதிவிற்குரிய கருவினை தந்த நேசன் அண்ணாவின் கூகிள் கணக்கு பறிபோய்விட்டது

ஏனையவர்களின் கருத்தினைப்பார்த்து பின்னர் வருகிறேன்.

ஸாதிகாவிற்கு வாழ்த்துக்கள்//

வாழ்த்துக்களிற்கு நன்றி மது,
நேசன் கணக்கினை மீட்டு விட்டார்.

நிரூபன் said...
Best Blogger Tips

@M.Shanmugan

பதிவு அருமை.திரும்ப மாட்டார்கள்.இதே நேரம் முகநூலில் இதை பகிர்கிறேன் எப்படி பதில்கள் இருக்கின்றன என்று//

நன்றி நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்

வணக்கம் நிரூபன் ஒரு அருமையான பதிவை கொண்டு வந்திருக்கீங்க அதற்கு முதல்கண் வாழ்த்துக்கள்..

யோ மதுரன் யாரையா உங்களுக்கு சொன்னது அந்த ஐந்து வீதமான மக்களும் நாடு திரும்புவார்கள்ன்னு இதை வன்மையாக கண்டிக்கிறேன்...!!!?? ஹி ஹி என்னுடைய 22வருட வெளிநாட்டு வாழ்கையில் இரண்டு பேர்களைதான் பார்த்திருக்கிறேன் நாட்டிற்கு திரும்பியவர்களை அதில் ஒருவர் மீண்டும் இங்கு வந்துவிட்டார்.. ஹி ஹி//

அப்படீன்னா ஒட்டு மொத்த மக்களும் நாட்டிற்குத் திரும்ப மாட்டார்கள் என்று சொல்லுறீங்களா..
ஹே...ஹே..

அப்போ நீங்க என் கட்சி தான்

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்

என்னையா நிரூபன் என்னையும் மாட்டி விட்டுட்டீங்களே? அண்ணன் விஷயம் தெரிந்தவர் அவரிடம் பொறுப்பை கொடுப்போம்.. வங்கண்ண வாங்க.//

அண்ணே இப்படி எல்லாம் சாட்டுச் சொல்லி எஸ் ஆக வேணாம். ஆட்டத்தில இறங்கிய ஜாமயுங்கண்ணே.

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்

முதலில் இப்படி ஒரு விடயத்தை களம் இறக்கியதற்கு நன்றி சகோ!
இங்கே இருக்கும் மக்களை இன்னொரு வகையில் நான் பார்க்கின்றேன் அகதியாகத்தான் அதிகமானவர்கள் இருக்கின்றார்கள் அவர்களில் மூத்த தலைமுறை வட்டமான யோகா ஐயா போன்றோர் 1980 பின் தொடக்கம் 1990 வரையில் இங்கு வந்தவர்கள் 1990 பின் தொடக்கம்2000 ஆண்டில் வந்தோர் காட்டான் போன்றோர் 2000 பின் வந்த என் போன்றோர்களிடையே பாரிய தலைமுறை இடைவெளி இருக்கின்றது ஆனால் எல்லோரையும் இனைக்கும் ஒரு கயிறு ஈழம் என்ற கனவு தான் ஆகவே எங்களிடையே இருக்கும் சிலமுரன்பாடுகளை பின்வருமாறு அடுக்கின்றேன்!//

தலை முறை இடைவெளி என்பது ஓக்கே. ஆனால் அம் மக்களில் எல்லோரும் நாட்டிற்குத் திரும்பி வருவார்களா என்பது கேள்விக் குறியே!

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்

மூத்தோரில் சிலர் போகும் ஆவலில் மனதில் தாயக எண்ணங்களைச் சுமந்தவண்ணம் இருக்கின்றார்கள் இடையில் வந்தோர் மதில் மேல் பூனையாக போய்வரத்தான் எண்ணுகின்றர்கள் ஆனால் போகமாட்டினம் இறுதியில் வந்தோர் இனி ஒரு போதும் திரும்ப மாட்டினம் இது நான்கண்ட உண்மை!//

ஆகா இதுவும் நல்ல கருத்தாக இருக்கிறதே.
நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்
நிருபா ஏன் உனக்கு இந்த கொலை வெறி?? என்னை பொருத்தவரையில் எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள் அவர்களை படிக்க வைச்சு திருமணம் செய்து வைக்க வேண்டும் அதன் பின்னர் பேரக்குழந்தைகளை பார்க்கவேண்டும் அவர்களை பள்ளிக்கூடம் அழைத்துச்செல்ல வேண்டும் அவர்களுக்கும் கல்யாணம் காட்சி பார்க்கவேண்டும் இப்படி நிறைய வேலை இருக்கையா இதெல்லாம் முடிஞ்ச பின்பு நாட்டுக்கு திரும்பலாமா? திரும்பக்கூடாதான்னு யோசிக்கலாமா? என்னு எனது குடும்பத்துடன் ஆலோசனை நடத்தலாமா நடத்த கூடாதான்னு நான் முடிவெக்க வேனும் அதன் பின்பே மற்றவை!!! அப்பாடா தப்பிச்சேன்..!!! //

அண்ணே இதெலாம் ஒரு காரணமா?
எங்கடை பள்ளிக் கூடம் இருக்கண்ணே.

உங்க பிள்ளைகளை அங்கே படிக்க வைக்கேலாதா?
ஏன் மனுசியைக் கேட்டு ஆலோசிக்க வேண்டும்?
நீங்க சொல்லுங்க கண்டிப்பாக நீங்க நாட்டிற்கு வரச் சம்மதம் இல்லைத் தானே? அதுக்கு எதுக்கு மனுசியைக் கேட்கனும் என்று பொய் சொல்லி பம்முறீங்க;-))

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்
சமுகப்பாதுகாப்பு மற்றும் தொழில்துறையில் சலுகைகள் கிடைக்கும் மேற்குலக வாழ்க்கையில் ஊரிப்போனவர்கள் தாயகம் திரும்புவது என்பது பகல்கனவே ஆனால் இவர்களுக்கு எப்படி என்றாலும் ஈழம் வேண்டும் என்பதில் உடும்புப்பிடியாக இருக்கின்றார்கள//

அண்ணே அப்படீன்னா ஈழம் கிடைத்தால் வருவார்களா? இல்லே ஈழத்தைப் பெற்ற பின்னர் வெறும் பார்வையாளர்களாக அவர்கள் இருந்திடுவார்களா?
தாயகத்திற்கு வர விம்பாதோராய் எமக்காகப் போராட்டத்திற்கு குரல் கொடுப்பதே நல்ல செயல் அல்லவா.

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்

யோ தனிமரம் நீங்க வந்து உண்மையை சொல்லிடுவீங்கன்னு நிரூபன் பதிவு போடமுன்னரே உங்க பிளாக்கை முடக்கினேனே எப்படி ஐயா தப்பிச்சாய்? இருடி உனக்கு வைக்கிறேன் ஆப்பு!!!??//

அட அண்ணாச்சி அவனா நீயி?

நிரூபன் said...
Best Blogger Tips

@suryajeeva
அவர்கள் திரும்ப வர மாட்டார்கள்... எவ்வளவு சிரமம் வந்தாலும் இடத்தை விட்டு பெயராமல் இருப்பவர்கள் மன உறுதி உடையவர்கள்.. பெயர்ந்து செல்பவர்கள் எதற்கு வம்பு என்று ஒதுங்கி செல்பவர்கள்..//

மிக்க நன்றி நண்பா, இதனைத் தான் நானும் சொல்கிறேன்.
புலம் பெயர்ந்த தேசத்தில் தமது வாழ்க்கையினைக் கஷ்டப்பட்டு உழைத்து நிலை நாட்டியோர் எக்காலத்திலும் திரும்பி வரமாட்டார்கள்

நிரூபன் said...
Best Blogger Tips

@Mohamed Faaique

நல்லதொரு ஆய்வு//

நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஜ.ரா.ரமேஷ் பாபு
இது ஈழத்தில் இருந்து புலம் பெயர்ந்தவர்களுக்கும் பொருந்தும் என்றே தோன்றுகிறது.. அதாவது புதிதாய் சென்றவர்கள் திரும்பி வர நினைப்பு இருக்கும் ஆனால் சில பல ஆண்டுகள் தொழில் வசதி என்று மேலை நாடுகளில் செட்டில் ஆனவர்கள் வருவதற்கு வாய்ப்புகள் குறைவே//

ஆமாம் நண்பா, இது தான் உண்மை நிலையும் கூட, மற்றும் படி ஈழம் கிடைத்ததும் ஓடி வருவோம் என்று சொல்வதெல்லாம் பொய்யே.

நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ

நிரூபன் நீங்கள் சொல்வது சரிதான் போல தெரியுதே....!!!//

நன்றி பாஸ்>

நிரூபன் said...
Best Blogger Tips

@சென்னை பித்தன்

சந்தேகம்தான்.//

நன்றி ஐயா

நிரூபன் said...
Best Blogger Tips

@மைந்தன் சிவா

நச்சுன்னு சொன்னா..திரும்ப மாட்டார்கள்!!(98 %)//

நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@தமிழ்வாசி - Prakash

நல்லதொரு பதிவு.... விவாதங்கள் தொடருங்கள்.//

நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

நிரூபன் இன்னும் ஏதாவது மிச்சம் மீதி இருந்தால் அவற்றையும் சொல்லி எல்லோருடைய மானத்தையும் கப்பலேற்றலாமே! //

நண்பா இங்கே நான் யதார்தத்தினைச் சொல்ல முனைகின்றேனே தவிர யாருடைய மானத்தையும் கப்பலேற்ற வேண்டும் எனும் நோக்கில் என் கருத்துக்களை முன் வைக்கவில்லை,
மீண்டும் சொல்கின்றேன், நமக்குள் ஆயிரம் பிரச்சினைகள் உள்ளன என்று பொத்தி வைத்து மனசிற்குள் அடக்கி மன அழுத்ததிற்கு ஆளாகுவதை விட, வெளிப்படையாகப் பேசி எம் எதிர்கால சந்ததியினரும் புரிந்து கொள்ளும் வண்ணம் பொது இடத்தில் விவாதிப்பதில் சிக்கல் இல்லைத் தானே நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி
வெளிநாட்டில் வாழும் மக்கள் புலிக்கொடி ஏந்துவதில், நிரூபனுக்கு என்ன பிரச்சனை?
முன்னொரு காலத்தில் போராட்டத்துக்கு, உதவாதவர்கள் பின்பும் உதவாமல் இருக்க வேண்டும் என்று நிரூபன் ஆசைப்படுகிறாரா? //

மச்சி,
வெளிநாட்டில் வாழுவோர் புலிக் கொடி ஏந்துவதில் எனக்குப் பிரச்சினை இல்லை. நான் வயித்தெரிச்சல் கொள்ளவும் இல்லை. ஆனால் வெளி நாட்டில் போலிச் சாயத்தோடு இந்தப் புலிக் கொடியின் பின்னே உண்மை விசுவாசிகள் போல பலர் வேஷம் போடுகின்றார்களே! இவர்களைப் பற்றி நீ அறியவில்லையா? இவர்களைப் பற்றித் தானே சுட்டியிருக்கிறேன்,. ஒட்டு மொத்தப் புலம் பெயர் தமிழர்களையுமா இந்த வார்த்தையினுள் உள்ளடக்கியிருக்கிறேன்?

அடுத்ததாக புலம் பெயர் மக்கள் போராட்டத்திற்கு உதவுவதிலும், ஈழ மக்களுக்காக குரல் கொடுப்பதிலும் எனக்கு பிரச்சினை இல்லை. நான் இங்கே சொல்வது புலிகளால் பாதிப்பு என்று நாட்டை விட்டுச் சென்ற பின்னர் புலிக் கொடியைப் போர்த்தித் திரிவோர் பற்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

நிரூ, உன்னுடைய பல பதிவுகளின் தொகுப்பை எடுத்துப் பார்த்தால், வெளிநாடுகளில் உள்ள புலி ஆதரவாளர்களை எதிர்ப்பதாகவும், வன்னியில் நடந்த சில சம்பவங்களை வெளியே சொல்லி, எல்லோரையும் நாறடிப்பதாகவுமே உள்ளன!
என்ன காரணம்?
சத்தியமாக எனக்குப் புரியவில்லை! //

ஆமா நான் பதிவினூடாக என்ன சொல்ல வருகிறேன் என்று புரியலையா?

கொஞ்சம் விளக்கமாகப் படித்துப் பார்க்கிறது. வெளி நாட்டில் உணர்ச்சி கரமாக, உணர்வு பூர்வமாகப் புலிகளை ஆதரிப்போரைப் பற்றி இப் பதிவில் எங்காவது ஒரு இடத்தில் சாடியிருக்கிறேனா? சொல்லுங்கள்?

அடப் பாவமே! வெளிநாட்டில் வாழும் ஒரு சில பச்சோந்திகளைப் பற்றி எழுதினால் எல்லா மக்களையும் ஒடுக்குவதாகப் பொருள் படுமா? எங்கே ஒரு வரியினைச் சுட்டிக் காட்டுங்கள் பார்போம்?

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

வெளிநாடுகளில் உள்ள புலி ஆதரவாளர்களை ஒடுக்குவதில், இலங்கை அரசு கண்ணும் கருத்துமாக இருக்கு!
ஹி ஹி ஹி நிரூபனும் மறைமுகமாக அதே வேலையினைத் தான் செய்கிறார்!
நிரூபன், வன்னியில் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பு செய்தார்கள் என்பதை நீ பல முறை பிரச்சாரம் செய்துவிட்டாய்! இனிமேலும் அதைப் பற்றி பேசி போரடிக்காதே!//

ஆமா நீ பதிவினை முழுமையாகப் படித்தாயா? பதிவினை உள்வாங்கித் தான் பின்னூட்டம் எழுதுகின்றாயா மச்சி.

நான் இங்கே சொல்லியிருப்பது வன்னியில் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பு நடத்துகின்றார்கள் என்று சொல்லிக் கொண்டு நாட்டை விட்டு ஓடியோர்?

தமிழ் புரிகிறதா?
புரிந்தால் பதில் சொல்லுங்கள்,. ஏன் வசை பாட வேண்டும் எனும் நோக்கில் கருத்துக்களை முன் வைக்கிறீங்க.

நான் கட்டாய ஆட்சேர்ப்பினைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திய ஒரு சிலரைப் பற்றித் தான் இங்கே குறிப்பிட்டிருக்கிறேன். புரியலைன்னா மீண்டும் அந்தப் பந்தியினைப் படித்துப் பாருங்கள்.

Thamizhan said...
Best Blogger Tips

உலகெங்கும் யூத மக்கள் வாழ்கின்றார்கள். அவர்களது முக்கிய நிகழ்ச்சிகள் திருமணம் போல நடக்கும் போது உறுதி எடுப்பார்கள் " ஒரு நாள் இசுரேலில்". என்று. முடியாதவர் கூட என்றாவது ஒரு நாள் இசுரேல் என்று உறுதியெடுப்பார்.
தமிழினம் உள்ளவரை, உலகெங்கும் வாழ் தமிழர்களுக்கு ஈழம் இதயத்திலே வாழும்.
பெரும்பாலானத் தமிழர்கள் தங்களால் ஆன உதவியைச் செய்து வெளி நாட்டில் வாழும் குற்ற/ ஏக்க உணர்வைக் கழுவிக் கொள்கிறார்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

ஹி ஹி ஹி நிரூபனும் மறைமுகமாக அதே வேலையினைத் தான் செய்கிறார்! //

இன்னைக்குத் தான் நீங்க ஒரு உண்மையினைக் கண்டறிந்திருக்கிறீங்க.
ஹே...ஹே..அப்படீன்னா எனக்கு கிடைக்க விருக்கும் நாட்டுப் பற்றாளர் பட்டமும் இன்றோடு பறி போய் விடுமே;-))
ஹே...ஹே...

M.R said...
Best Blogger Tips

நல்லதோர் விவாத ஆய்வு நண்பா

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

நிரூபன், வன்னியில் புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பு செய்தார்கள் என்பதை நீ பல முறை பிரச்சாரம் செய்துவிட்டாய்! இனிமேலும் அதைப் பற்றி பேசி போரடிக்காதே!//

நெசமாவா...அப்போ உங்களுக்கு இந்தப் பதிவில் நான் சொல்லியிருக்கும் சுருக்க விவரணம் சரியாகப் புரியவில்லை. அப்படித் தானே?
//
ஈழத்தின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 1995ம் ஆண்டு வாழ்ந்த "X" எனும் நபர் தான் யாழில் இராணுவ முற்றுகைக்கு உள்ளாகி விடுவேன் எனக் கருதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் செல்கின்றார். அங்கே புலிகள் கட்டாய ஆட் சேர்ப்பினை நடை முறைப்படுத்தும் போது, வெறுப்படைந்து புலிகள் மீது கோபம் கொண்டவராய் புலிகளுக்குத் தெரியாது வவுனியாவிற்கு ரகசியமாகப் போகின்றார். பின்னர் வவுனியாவிலிருந்து தம் உறவினர்களின் உதவியுடன் வெளி நாட்டிற்குப் போகின்றார். //

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

கடந்த காலத்தில் எத்தனையோ பேர் தொண்டை கிழிய கத்தினார்கள்! புலிகளை எதிர்ப்பதொன்றே எமது பணியென்று முழங்கினார்கள்!

ஹி ஹி ஹி இப்ப ஒருத்தரையும் காணவில்லை! எல்லோருக்கும் சேர்த்து நிரூபன் வந்துவிட்டார்!//

ஆமா நான் பதிவில் புலிகளை வசை பாடுகின்றேனா?
அப்போ நான் என்ன சொல்லி விட்டேன் என்று இப்படிக் குமுறுகின்றீர்கள்?

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

புலம்பெயர் மக்கள் எப்படி எப்படி எல்லாம் வெளிநாட்டுக்கு வந்தார்கள் என்ற விபரங்கள், தமிழகம், மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் வாழும் மக்களுக்குத் தெரியாமல் இருந்தது! ஹி ஹி ஹி இப்போது பல பதிவுகள் போட்டு நாறடிக்கிறமைக்கு ரொம்ப நன்றி!

என்னிடம் சில பாயிண்டுகள் உள்ளன! அவற்றை அனுப்பி வைக்கிறேன்! அவற்றையும் சேர்த்து பதிவு போடவும்
ஈழத்தமிழன் இப்படித்தான் போலும் என்று எல்லோரும் காறித்துப்பட்டும்!//

புலம் பெயர் தமிழர்கள் என்று எல்லாத் தமிழரினையும் சேர்த்துச் சுட்டும் போது (அழைக்கும் போது) அம் மக்களின் உண்மையான, யாதார்த்த நிலையினை, அவர்கள் ஏன் நாட்டை விட்டுப் பிரிந்தார்கள் என்று சொல்லுவதில் என்ன தவறு நண்பா?

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

ஏற்கனவே யாழ்ப்பாணத்து மக்கள் சாதி வெறி பிடித்தவர்கள்! அப்படியானவர்கள் , இப்படியானவர்கள் என்று பல பதிவுகள் போட்டு, எல்லோரையும் சந்தி சிரிக்க வைத்துவிட்டு, இப்போது புலம்பெயர் மக்கள் பற்றி நக்கலா??

அல்லது திரும்பி வரத் தயாராகுவார்களா? என்று வினா ஒன்றினை முன் வைக்கையில் இதற்கான விடையாக என்னால் முன் வைக்கக் கூடிய பதில் நிச்சயமாகப் புலம் பெயர் மக்களில் நூற்றிற்கு 95% வீதமான மக்கள் இலங்கை எனும் அபிவிருத்தி குறைந்த செம்மண் உடைகளில் ஒட்டிக் கொள்ளும் நாட்டிற்கு வந்து வாழத் தயாரில்லை. //////////////

சமூகத்தில் இருக்கின்ற பிரச்சினைகள் என்றோ ஒரு நாள் வரலாற்றில் எழுதப்பட்டுத் தானே ஆக வேண்டும் மிஸ்டர் ஐடியாமணி,
ஸோ, நான் இங்கே சிறு துளியினைத் தானே சொல்லியிருக்கிறேன். அவ்வாறு சொல்லுவதால் என்ன தவறு?

புலம் பெயர் தமிழர்களுக்கு இருக்கும் மண் மீதான ஆசையினை, தாயகத்தின் மீதான நேசிப்பினை அறிந்து கொள்வதற்கு சாதாரண ஒரு இலங்கைத் தமிழ்க் குடிமகனாக மேற்படி கருத்துக்களை முன் வைப்பதில் என்ன தவறு?

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

நிரூபனுக்கு புலம்பெயர் தமிழர்கள் பற்றி தெரிந்த ஒரே ஒரு விஷயம் “ அவர்கள் புலிக்கொடியை பிடிச்சுக்கொண்டு தெருத் தெருவா திரிவார்கள் என்பது மட்டும் தான் போலும்”//

போங்க சார்,
நல்லதோர் கண்டு பிடிப்பு, நான் என்ன சொல்லுறேன், நீங்க என்ன சொல்லுறீங்க.
புலம் பெயர் தமிழர்களின் எழுச்சிகரமான ஆதரவினைச் சுட்டவே அவ்வாறு சொன்னேன். எல்லா உதவிகளையும் இங்கே விபரித்து எழுதலாகாது தானே...

நான் சொல்ல வாறது என்னவோ...நீங்க பாய்வது எதற்கோ?
ஒன்னுமே புரியாமல் அல்லவா உங்கபாட்டுக்கு கருத்துக்களை முன் வைக்கிறீங்க

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

எங்களைப் பற்றி வேற ஒரு அறுப்பும் தெரியாது போல! இங்கு பிறந்த ஒவ்வொரு தமிழ் குழந்தையும், தமிழ் படிக்கிறது! தமிழ் பரீட்சையில் சித்தியடைகிறது!

முற்றிலும் தமிழ் சூழல் உள்ள ஈழத்தில் ஒரு குழந்தை செந்தமிழ் பேசுவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை!

ஆனால் பலநூறு மொழிகள் ஒரு குறுகிய இடத்தினுள் பேசப்படும் ஐரோப்பிய பெரு நகரங்களில் வாழும் தமிழ் குழந்தைகள் தமிழ் பேசுவதுதான் உண்மையில் ஆச்சரியம்! //

ஹே...ஹே...இதனையும் பதிவில் சொல்லியிருக்கேன் கவனிக்கலையா.

வசதி வாய்ப்புக்கள், கவ்லி ,மருத்துவம் என எல்லாவற்றிலும் சிறந்த புலம் பெயர் தேசத்தில் வாழும் மக்கள் என்று குறிப்பிட்டிருக்கிறேனே...

கவனிக்கலையோ?

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

ஓ.... என்ன கத்தரிக்காய்க்கு அங்க வரணும்?? நாங்கள் இன்னமும் மிச்சம் மீதியாக இருக்கிற எங்கள் உறவுகளையும், பணத்தைக் கொட்டி, வெளிநாட்டுக்கு எடுப்பமே தவிர இனி அங்கு வரவே மாட்டோம்!

சில வேளைகளில் வந்திருப்போம்! ‘ அவையள்” இருந்திருந்தால்!!!!!//

அது சரி, அவையள் இருக்கும் போது தானே ஒரு சிலர் வந்து ஜாலியாக நந்தவனத்தில (கிளிநொச்சியில) தங்கி இருந்தார்கள். அந் நேரம் தம் கல்வியினை இடை நடுவில் விட்டுக் களமாடிய போராளிகள் நுளம்புக் கடியினுள் முகாம்களில் தூங்கும் போது இவர்கள் பைவ் ஸ்டார் ரக ஓட்டலில் அல்லவா கிளிநொச்சியில் தங்கியிருந்தார்கள்.

அப்போது நீண்ட காலமாக புலத்தில் இருந்து பெரியவரைச் சந்திக்கும் நோக்கில் வந்த ஒருவரிடம் "நீங்கள் இனி நாட்டிற்கு வரலாம் தானே" என்று கேட்ட போது, இஞ்ச சண்டை முடிஞ்ச பின்னாடி எங்கட நாட்டின் நிர்வாகத்தை நடாத்த ஆட்கள் வேணும் அல்லவா. அப்போ புலம் பெயர் தமிழர்களின் பிள்ளைகள் வந்து ஆளுவார்கள் என்று ஒரு புலம் பெயர் ஆள் சொன்னார்.

ஹே...ஹே/...

நீங்க வருவீங்க. அவையள் இருக்கும் போது..ஏன்னா சண்டை முடிந்து தனி நாடு கிடைத்தால் சந்தோசமாக இருக்கலாம் எனும் நோக்கில ஆனால் அப்பாவிப் போராளிகள் தான் பாவம்.

நல்லாத் தான் எல்லோருமே சிந்திக்கிறீங்க, போங்க.

அப்பாவித் தமிழ் மக்கள் சாகனும்,
அவர்கள் பெறும் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க நீங்கள் வருவீங்க

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

சிலபேருக்கு ஒருவகை வியாதி இருக்கு! எதிலும் சாதகாமானவற்றைப் பார்க்கத்தெரியாது! எதிலும் குறை சொல்லுவதுதான் வேலை!

இவர்களை பெஸிமிஸ்ட் என்று சொல்வார்கள்! இது ஒரு மனநோயாகும்!//

ஏன் இப்படிப் பூடகமாகச் சொல்லுறீங்க.
நிரூபனுக்கு ஒரு மன நோய் இருக்கிறது, அது பின்வருமாறு அழைக்கப்படும் என்று சொன்னால் சந்தோசமாக சிரித்துக் கொண்டே படிப்பேன் அல்லவா?

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி
“ திரை கடல் ஓடியும் திரவியம் தேடு” என்கிறது தமிழ் பழமொழி!

அப்படி திரவியம் தேடுவதில் என்ன தவறு?//

அப்படியென்றால் மிஸ்டர் ஐடியாமணி அவர்களே, திரைகடல் ஓடித் திரவியம் தேடுவோரில் ஈழப் போரை ஒரு போலிச் சாட்டாகப் பயன்படுத்தியோரையும் நீங்கள் ஆதரிக்கிறீங்களா?

நான் சொல்லவருவது போரால் பாதிக்கப்படாத எத்தனையோ அன்பர்கள் தாம் போரால் பாதிக்கப்பட்டதாக போலி வீசா பெற்று வாழ்கின்றார்களே!

அவர்களுக்கும் இந்தப் பழமொழி பொதுவானது தானே;-))

ஹே...ஹே...
வாழ்க தமிழ்!

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்மணிசார் ஏன் இந்த விளையாட்டு விவாவதம் இயல்பு நிலை தோன்றினால் வருவார்களா மாட்டார்களா என்பதே அதைவிடுத்து தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவது ஏன் நிரூ கருத்தை சொல்லும்போது பழையவிடயத்தை ஏன் கிளருகின்றீர்கள்!//

விடுங்க பாஸ். அவன் எனக்கிருக்கும் மனநோயிற்கு ஏதோ ஒரு வகையில் மருந்து கண்டு பிடித்துக் குணப்படுத்தலாம் என்று களமிறங்கியிருக்கிறான்.

மச்சி ஐடியாமணி! நீ நடத்து!

நிரூபன் said...
Best Blogger Tips

@ரெவெரி

நல்ல களம்...

புலம் பெயரும் அனைவர் மனதிலும் எப்படியும் திரும்ப வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருக்கும்...

அது 1 சதவீதமா 100௦௦ சதவீதமா என்பது சூழலை பொறுத்ததே...

ஒதுங்கி வாசிக்க தயாராகிறேன் சகோதரம்...///

இல்லை நண்பா.
எல்லோரும் திரும்புவார்கள் என்று சொல்ல முடியாது.
அதுவும் தமது எதிர்காலச் செல்வங்களைப் புலம் பெயர் நாட்டில் கல்வி கற்பிக்கத் தொடங்கியோர் இலகுவில் நாட்டிற்குத் திரும்ப மாட்டார்கள் என்பது என் கருத்து.

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி

புலம்பெயர் மக்கள் சொந்த நாட்டிற்குத் திரும்புதல் என்பது ஈழ மக்கள் மட்டுமல்லாது இந்தியா போன்ற பிற நாட்டு மக்களும் எதிர்கொள்ளும் பிரச்சினை தானே..பொதுவாக குடும்பப் பெரியோர்க்கு சொந்த இடம் பற்றிய நினைப்பு இருக்கும். பிள்ளைகளோ புலம்பெயர் தேச வசதிகளுடன் பழகியிருப்பர். எனவே அவர்களுக்காக பெற்றோர் சகித்துக்கொள்வர். இதுவே யதார்த்த நிலை. எனவே பெரும்பாலான புல்ம்பெயர் மக்கள் சொந்த ஊர் திரும்ப மாட்டார்கள், டூரிஸ்ட்டாக மட்டுமே வருவர்..//

நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்

மூத்தவர் யோகா ஐயா சபைக்கு வரும் வரை நானும் சில கேள்விகளுடன் காத்திருக்கின்றேன் சகோ!!//

ஆமா ஐயாவே வந்து போயிட்டாரே,
உங்க கேள்விகளை இன்னும் காணலையே?

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி

புலம்பெயர்ந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தன் மொழி, இனம் ,பண்பாடு மறக்காமல், தன் சொந்த நாட்டில் பிரச்சினையென்றால் துடிதுடித்து காசையும் கண்ணீரையும் இறைக்கின்றார்களே, அந்த இன உணர்வே போதும்.
உள்ளூரில் காட்டிக்கொடுப்பவனாய் இருப்பவனைவிட, எங்கோ வாழ்ந்தாலும் நமக்காக இரங்கும் உள்ளங்கள் பாராட்டுக்குரியவை. அவை எங்கிருந்தாலும், நன்றாக இருக்கட்டும்.//

நல்ல கருத்துத் தான் பாஸ், ஆனால் புலம் பெயர் உறவுகள் போர் நடை பெறும் போது ஒருமித்துக் குரல் கொடுத்தது போன்று பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தற்போது வேண்டிய உதவிகள் பற்றியும் குரல் கொடுக்கலாம் அல்லவா?

நிரூபன் said...
Best Blogger Tips

@K.s.s.Rajh

இன்று நான் இந்த விவாதமேடையில் கலந்து கொள்ளப்போவது இல்லை..இதை நான் காலையில் நிரூபன் பாஸ் இந்த விவாதத்தை கையில் எடுக்கும் போதே ஒதுங்கிவிட்டேன்..அமைதியாக இருந்து கருத்துக்களை ரசிக்கப்போகின்றேன்...

சில கருத்துக்களை பார்க்கும் போது அதுக்கு கமண்ட் போடனும் என்று மனசு சொல்லுது...ஆனாலும் ஒதுங்கியே நிற்கின்றேன் கொஞ்சம் சூடு பிடிக்கட்டும் பார்க்கலாம்..//

அடடா,
நீங்களே இப்படிச் சொல்லிட்டு எஸ் ஆகலாமா?
ஆட்டத்திய எப்படியாச்சும் உங்களையும் இறக்கியே தீருவாங்க நம்ம பசங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@Taker007
இது ஒரு சின்ன விடயம்
அவர்கள் வரமாட்டார்கள் வரமாட்டார்கள்....

மற்றும் Dr. ஐடியாமணி கருத்துக்களில்
பலவற்றை நானும் அதரிக்கின்றேன்//

நன்றி பாஸ்.

Yoga.s.FR said...
Best Blogger Tips

தெளிவற்ற ஒரு கண்ணோட்டம், நிரூபன் பதிவில்!அது,ரண களம் ஆக்கி விட்டது.உண்மையில் வெளிப் பார்வைக்கு நிரூபன் ஏதோ சிறி லங்கா அரசின் ஊது குழல் போல் தோன்றினாலும்,உண்மையில் அண்மைக் காலத்தில் புலம் பெயர்ந்த புல்லுருவிகளின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டும் ஓர் முயற்சியாகவே தோன்றுகிறது! 1995-2000 ஆண்டுக்குப் பின்னர் புலம் பெயர்ந்தோர்,வன்னிக்குள் இன அழிப்பு ஆரம்பித்த பின் காட்டிக் கொடுப்போர் உள் நுழைந்ததற்கு ஒப்பானது.இங்கே இவர்களின் கைங்கரியம் அரங்கேற,அங்கே அவர்களின் நிகழ்ச்சி நிரல் தடையின்றி தொடர்ந்தது.இங்கு நடந்த நிகழ்வுகளும்,வன்னித் துரோகத்துக்கு சளைத்ததல்ல!இங்கே விபரித்தால் நம் மூக்கைக் குத்தி நாமே முகர்வது போலாகி விடும் என்பதால் தவிர்ப்போம்!ஏகப்பட்ட சம்பவங்கள் குடைந்து கொண்டே இருக்கின்றன,கனன்று கொண்டே இருக்கிறது!வேண்டாம் நிரூபன் விட்டு விடலாம்!

கோகுல் said...
Best Blogger Tips

வணக்கம் பாஸ்!விவாத களத்தை உருவாக்கி எண்ணங்களை பகிர வைத்தமைக்கு நன்றி!

முன்பாகவே பலரும் தன் விவாதங்களை முன் வைத்திருக்கிறார்கள்.

எனது கருத்து -ஈழத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பின் இருக்கும் புலத்தை விட்டு திரும்புவது கடினமே.இன்று ஈழம் மட்டுமல்லாது உலகில் பலரும் பலவித சூழல் காரணமாக புலம் பெயர்ந்தே வாழ்ந்து வருகிறார்கள்.நானும் தான்.இந்நிலையில் வாழ்ந்த இடம் சூழல் மாறி வாழும் தன்மை ஏற்ப்படும் நிலை வந்தாலும் வாழ்ந்து கொண்டிருக்கும் இடம் நமக்கு அனைத்து வகைகளிலும் ஒத்துப்போய் ஒரு பிடிப்பினை அமைந்திருக்கும்.அதனால் திரும்பிச்செல்வது நிச்சயம் இயலாத காரியம்.அப்படியே பெயர்வதாய் இருந்தாலும் பிறந்து வாழ்ந்த இடமே இப்பொது புதிதாய் தோன்றும் .மீண்டும் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும்.

புலம் பெயர்ந்த காரணத்தை பற்றி நினைக்காமல் எனது கருத்து இது.
//
செங்கோவி said...
புலம்பெயர்ந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தன் மொழி, இனம் ,பண்பாடு மறக்காமல், தன் சொந்த நாட்டில் பிரச்சினையென்றால் துடிதுடித்து காசையும் கண்ணீரையும் இறைக்கின்றார்களே, அந்த இன உணர்வே போதும்.

உள்ளூரில் காட்டிக்கொடுப்பவனாய் இருப்பவனைவிட, எங்கோ வாழ்ந்தாலும் நமக்காக இரங்கும் உள்ளங்கள் பாராட்டுக்குரியவை. அவை எங்கிருந்தாலும், நன்றாக இருக்கட்டும்.//

அண்ணன் செங்கோவி சொன்னதையும் வழி மொழிகிறேன்!

சசிகுமார் said...
Best Blogger Tips

ஆழமான கருத்துக்கள் மச்சி....

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

வரக்கூட்டாது என்று தான் இருந்தேன்...

வடக்கில் பரம்பலாக இருக்கும் மக்களை குறிவைத்தோ,இல்லை கிழக்கில் - மட்டு திரிகோணமலையில் பலம்பலாக வசிக்கும் மக்களை குறிவைத்தோ எழுதினால் அதை பிரதேசவாதத்தை தூண்டும் கருத்துக்கள் என்ற வகையில் தான் எடுத்துக்கொள்ளுவார்.... அதே போல தான் புலம்பெயர் தேசத்தில் பரம்பலாக இருக்கும் மக்களை குறிவைத்து எழுதும் போது பிரிவினைகளுக்கே வழிவகுக்கும் அது இப்போ தெரியாது.. ஏனெனில் ஒரேயடியாக ஏற்ப்பட்டுவிடுவதல்ல இவ்வாறு சிறுக சிறுக தான்..//

இந்தக் கருத்து ஓக்கே பாஸ்.,
ஆனால் புலம் பெயர் மக்கள் அனைவரும் ஈழத்திற்கு திரும்பி வருவார்களா என்று விவாதிப்பது பிரதேசவாதத்தினைத் தூண்டுமா பாஸ்?

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

////நிரூபன் said...]

@Powder Star - Dr. ஐடியாமணி
“ திரை கடல் ஓடியும் திரவியம் தேடு” என்கிறது தமிழ் பழமொழி!

அப்படி திரவியம் தேடுவதில் என்ன தவறு?//

அப்படியென்றால் மிஸ்டர் ஐடியாமணி அவர்களே, திரைகடல் ஓடித் திரவியம் தேடுவோரில் ஈழப் போரை ஒரு போலிச் சாட்டாகப் பயன்படுத்தியோரையும் நீங்கள் ஆதரிக்கிறீங்களா?///

ஏன், என்பதுகளுக்கு பின்னர் வடகிழக்கிலே போர்சூழலை எதிர்கொள்ளாத , இடப்பெயர்வுகளை சந்திக்காத, எந்நேரத்திலும் உயிருக்கு உத்தரவாத அற்ற நிலையை உணராத யாராவது ஒருத்தரை உங்களால் அடையாளம் காட்ட முடியுமா? - இப்படியான நிலையை சந்தித்தவர்கள் தானே பிற்காலத்தில் இடம் பெயர்ந்தார்கள்.. ஐயா பெரியவரே அகதி அந்தஸ்து கேட்க்க வன்னியிலே தான் இருந்திருக்க வேண்டும் என்று ஐநா சாசனத்தில் எழுதப்படவில்லை...

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

நிரூபன் மட்டுமல்ல பலர் இதை தான் செய்கிறார்கள்.. எண்பதுகளுக்கு முன்னரும் இப்படி தான் மாவட்டங்களை முன்னிறுத்தி பிரதேசவாதங்களை கிளப்பிவிட்டார்கள், நிரூபன் கூட எழுதியிருந்தார் "ஈழ குழந்தையை கொன்ற பிரதேச வாதம்" என்று,


நாளைக்கு இன்னொருவன் வந்து எழுதக்கூடாது..............
//

நல்லாத் தான் சொல்லுறீங்க போங்க பாஸ்...
இதனை நினைத்து நான் சிரிக்கிறேன்.
ஹே...ஹே...

ஈழத்தில் இப்படியும் நிகழ்ந்தது என்று எழுதி வைத்திருப்பது,
வலையில் எழுதுவது பிரதேசவாதத்தைத் தூண்டுமா?
ஈழச் சிசுவைக் கொன்றொழித்த பிரதேசவாதம் என்று எழுதியது எமக்குள் இப்படியும் பல பிரிவினைகள் இன்று வரை உள்ளனவே என்று உணர்த்தி நிற்கத் தான்.
அட...மக்கள் இவ்வாறு பிரிவினையோடு நிற்பதைச் சுட்டி எழுதினால் பிரதேசவாதம் தோன்றுமா?

நல்லாத் தான் சொல்லுறீங்க போங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

/////உண்மையில் மிக மிக கடுமையாக, இரவு பகல் உறக்கமின்றித் தம் சந்ததியினை கஷ்டமின்றி வாழ வைப்பதற்காகவும், தாம் படும் துன்பங்களை அவர்களும் எதிர் நோக்காமல் வாழ வேண்டும் எனும் நோக்கத்தில் அல்லும் பகலும் உழைக்கின்றார்கள்.////
இதுவும் நிரூபன் சொன்னது

/////சொகுசான மேற்குலகில் வாழ்கின்றோம் எனும் பெருமை நிறைந்த வாழ்க்கை முறை////

அப்புறம் இதுவும் சில வரிகள் கழித்து நிரூபனால் எழுதப்பட்டது //

ஹே...ஹே...இது பெரிய காமெடியாக இருக்கப்பா..

மேற்குலகில் வாழ்கின்றோம் எனும் உள் உணர்வு இல்லாமலா புலம் பெயர் மக்கள் வாழ்கின்றார்கள்?
புலம் பெயர் மக்கள் மாடாய் வருந்தி உழைக்கின்றார்கள் என்று சொல்லி விட்டு, சொகுசான மேற்குலகில் தாமும் இலங்கையில் இருப்போரைப் போன்று அரசிற்கு அடிபணியாது ஓரளவுக்கேனும் சுதந்திரமாய் வாழ்கின்றார்கள் என்று எழுதுவதில் என்ன தவறு பாஸ்?

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

நேசன் அண்ணை நீங்களே சொல்லுங்க!

புலம்பெயர்ச் மக்கள் ஈழத்துக்கு திரும்பி வருவினமா? மாட்டினமா? என்பதுதானே விவாதம்!

இதைப்பற்றி கருத்துச் சொல்ல எவ்வளவோ இருக்க, நிரூபன் தேவையில்லாமல், எக்ஸ் எண்ட நபரின் கருத்தை சொல்லி, வன்னிக்குப் போனது, வவுனியாவுக்குப் போனது, வெளிநாட்டில் கொடிபிடிக்கிற தேவையில்லாத விசர்க்கத்தையெல்லாம் கதைச்சால், கோபம் வருமோ? வராதோ?

வெளிநாட்டில் இருந்து மக்கள் வருவது பற்றித்தான் பதிவு என்றால், அதில் வெளிநாட்டுக்குப் போன கதை எதுக்கு????????//


போங்கண்ணே நீங்க நல்லாத் தான் சொல்லுறீங்க.

நான் புலம் பெயர் மக்களை வகைப் படுத்தி அவர்களில் உள்ள ஒரு சிலரின் செயற்பாட்டினைச் சொன்னேன். அதாவது இப்படிச் சந்தர்ப்ப சூழ் நிலைகளால் புலம் பெயர்ந்தவர்களை விடப் புலிகளால் பிரச்சினை, அச்சுறுத்தல் என்று சொல்லிப் புலம் பெயர்ந்து விட்டு, புலம் பெயர்ந்ததும் தாம் ஏதோ வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்தவர்கள் போன்று உணர்வு கொண்டவர்களாக நாட்டுப் பற்றினைப் பெறுகின்றார்களே! அவர்களைப் பற்றிச் சொன்னேன் சார்?
அதில் என்ன தவறு?

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.
சரி அவர்கள் கூச்சல் போடுகிறார்கள்... அப்பிடி போட்டவுடன் உடனே இருதரப்பும் ஆயுதங்கள் சகிதம் முட்டி மோதப்போகிறார்களா???? என்ன கொடும சாரே ..எதுக்கு மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறீர்கள்.

ஒருத்தன் தன் தாயை விட்டு விலத்தி இருந்தவுடன் அந்த தாயை பற்றி கபாஸ் அதே பந்தியில் ஒரு வரி சொல்லியிருக்கிறேனே...
கவனிக்கலையா?
புலிகளால் அச்சுறுத்தல் எனச் சொல்லி ஓடியவர்கள் என்று? ஸோ....

நான் சொல்ல வந்த விடயம் புலிகளால் அச்சுறுத்தல் என இலங்கையை விட்டு ஓடியோரைப் பற்றியது. ஏனைய உணர்வெழுச்சியுள்ள தாய் நாடு மீது இயல்பான பாசம் கொண்ட புலம் பெயர் மக்களைப் பற்றியது அல்ல/.

மீண்டும் கவனிக்கவும்.
தைக்கிற உரிமையை இழந்துவிடுகிரானா ? அதேபோல தாய் நாட்டையும்-தான் பிறந்து வளர்ந்து ஓடித்திரிந்த மண்ணையும் ...? அப்படி சொல்ல எவனுக்காவது உரிமை இருக்கா ??//

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்

மணி சார் உங்கள் கருத்துக்கள் ஒவ்வொன்றும் சூப்பர்வ்வ்வ்.. நிஜமும் கூட..

சில பேருக்கு தங்களையும் நிர்வாணமாக்கி அடுத்தவனையும் நிர்வாணம் ஆக்கி ரசிப்பதில் ஒரு வித இன்பமும் கூட...

மற்றும் படி
இதை நான் படிக்கவும் இல்லை.. பார்க்கவும் இல்லை..

நிரூ பாஸுன் இந்த தொண்டு மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்..//

ரொம்ப நன்றி பாஸ்...


நான் சொல்ல வரும் விடயத்தைப் புரிந்து கொண்டு வாழ்த்தியிருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

வெளிநாட்டு மக்கள் அனைவரும் அடுத்து வரும் ஆறு மாதங்களுக்கு வாயை மூடிக்கொண்டு இருப்போம்! பார்க்கலாம் இலங்கையில் பாலும் தேனும் ஓடுகிறதா என்று????//

கொய்யாலே..இங்கே என்ன நடக்குது?
வெளிநாட்டு மக்கள் இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு ஆதரவுக் குரல் கொடுப்பது பற்றியா நாம் பேசுறோம்?

எங்கேயோ எல்லாம் போயிட்டீங்களே?

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்
வேலையில் நிற்கிறேன் இதில் எல்லோரும் மூலக்கருத்தை விட்டு விட்டு எங்கேயோ போவதுபோல் உள்ளது.. இன்னு கொஞ்சம் விட்டால் முள்ளிவாய்கால் பிரச்சனைக்கு வந்திடுவீங்க ?? வெளிநாட்டில இருக்கும் நாங்க நாட்டில போய்"செட்டில்"ஆவோமா? வாங்கையா திரும்பி விஷயத்திற்கு...

விடுங்கண்ணே..

நாம சொல்லும் விடயம் இன்னமும் புரியாதவர்களாக முட்டி மோதுகின்றார்கள்.

நன்றாக டைப் பண்ணி கை உழையட்டும் பொடியளுக்கு;-)))

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

நிரூபன் முதலில் ஒழுங்கா எழுதட்டும்! நிறையப் பதிவுகளீல் புலி எதிர்ப்பைக் காட்டி, நிறையப் பேரிசம் வாங்கிக் கட்டுவதே என்ர சகலைக்கு வேலையாகிவிட்டது!

கடைசியில என்ர மனிசிக்கும் அவன்ர மனிசியாகிய, என்ர மனிசியின் தங்கச்சிக்கும் இடையிலே அக்காள் தங்கை பிரச்சனை வரப்போகுது!//

ஹே...ஹே...இதில புலி எதிர்ப்பைக் காட்டவில்லையே பாஸ்..

ஏன் பாஸ் இந்த வாருகிற வேலை?

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்

ஸாதிகா" அவர்களின் "எல்லாப் புகழும் இறைவனுக்கே" வலைப் பூவிற்கு

வாழ்த்துக்கள் !!

நிரூபன் இப்படியான விவாதங்கள் வரும்போது பதிவர் அறிமுகங்கள் வேண்டாமே!!!//

ஓக்கே அண்ணே....

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.s.FR
அனைவருக்கும் வணக்கம்.எனக்கு இப்படி ஒரு பதிவு நிரூபன் போட்டிருக்கிறார் என்பது தெரிந்திருக்கவில்லை!சற்று நேரத்துக்கு முன்னர் தான் சக நடுவர் காட்டான் செங்கோவி பதிவில் தகவல் சொன்னார்.மன்னிக்க வேண்டும் எல்லோரும்,நிரூபன் உட்பட. இந்தப் பதிவு முன் கூட்டியே எழுதப்பட்டு விட்டது என்பது என் கருத்து!அதாவது,போர்?!அல்ல,இன அழிப்பின் உச்சம் முடிந்து ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளே ஆகியிருக்கிறது!கடந்த எட்டு மாதங்களாகத் தான் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு"மீண்டும்" பேச்சு வார்த்தை என்று ஒன்று நடத்தப்படுவதாக,சர்வதேச அழுத்தத்தை "ஆறப்" போடுவதற்காக எடுபிடிகள் த.தே.கூ வுடனும்,ஈ.பி.டி.பி யுடனும் கலந்து ஆலோசிக்கிறது,//

வணக்கம் ஐயா,

நான் நேற்றைய பதிவின் பின்னூட்டப் பெட்டியில் தகவல் கூறியிருந்தேன், இந்த விவாத மேடையினை யோகா ஐயா தலமையேற்று நடத்துவார் என்று,
நீங்கள் கவனிக்கவில்லைப் போலும்,
சிறியவர்களிடம் மன்னிப்பெல்லாம் நீங்க கேட்கனுமா? ;-)))

இந்தப் பதிவு முன்னரே எழுதப் படவில்லை ஐயா. நேற்று மாலை தான் எழுதி விட்டுத் தூங்கப் போனேன்,

அட விடுங்க ஐயா...இன்னுமா நம்புறீங்க. இனப் பிரச்சினைக்குத் தீர்வு என்று இரண்டரை ஆண்டுகளாக காலம் கடத்தும் சிங்கள அரசியல்வாதிகள் இனியும் நமக்குத் தீர்வு தருவார்கள் என்று? பம்மாத்து ஐயா...

அதோட இப்படிச் சொல்லிச் சொல்லி இன்னும் 20 வருடத்திற்கு காலத்தை இழுத்தடிப்பார்கள் பாருங்கள்...

ஹே...ஹே....

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.s.FR
இன வாத மகிந்த அரசு!ஏதோ இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு வந்து விட்டது போலவும்,முப்பத்தைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களின் கனவும்,மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட உறவுகளின் அழிவுக்கும் நியாயம் கிடைத்து,சுய நிர்ணய உரிமையுடன் ஈழத் தமிழ் மக்களின் வாழ்வு மலர்ந்து விட்டதாகவும் எண்ணி நிரூபன் இந்தப் புலம் பெயர்ந்து வாழும் உறவுகளை மீளவும் ஈழத்துக்கு அழைத்து வர முடியுமா,முடியாதா என்ற ரீதியில்,புலம்பெயர்ந்தோரை மூன்று வகையினராகப் பிரித்து கேள்வியைப் பொது விவாத மேடைக்கு கொண்டு வந்திருக்கிறார்! //

ஐயா நீங்கள் பதிவினைப் புரிந்து கொண்ட விதத்திற்கும், உங்களின் பணிவான கருத்திற்கும் தலை வணங்குகின்றேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.s.FR
இரண்டாவது,இலங்கை அரசு "அந்த" நாட்களில் சொன்னது போல் பொருள் தேடி புலம்பெயர்ந்த கூட்டம் என்று நிரூபன் சொல்லுகிறார்!இது தவறு நிரூபன்!ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்களே புலம்பெயர்ந்துள்ளனர்.படித்தவர்கள் பற்றிக் கூறினீர்கள்,ஒப்புக் கொள்ளலாம்!உங்களுக்கு ஒரு விடயம் சொல்கிறேன்,கேளுங்கள்;அகதி அந்தஸ்து கோருவதற்கு நூற்றியெட்டுக் காரணங்களை ஜெனீவா உடன்படிக்கை சொல்கிறது.விரிவாக இங்கே சொல்வது அழகல்ல,அதனால் தவிர்ப்போம்.மீண்டுமொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம்.//

ஐயா....நான் சொல்லுவது போரினால் பாதிக்கப்படாது கொழும்பு பகுதியில், இலங்கையின் ஏனைய பகுதிகளில் இராணுவம், துணைக்குழுக்களோடு சகஜமாகப் பழகி விட்டு, பிரச்சினை ஏதும் இல்லாதோராய் உள் நாட்டில் வாழும் மட்டும் இருந்து விட்டு,
புலிகள் பகுதியில் வாழுகையில் புலிகளால் அச்சுறுத்தல் எனக் காரணங் கூறிப் புலம் பெயர்ந்தோரை.

இங்கே உண்மையிலே தனிப்பட்ட பிரச்சினை காரணமாகப் புலம் பெயர்ந்தோரைச் சாடவில்லை.அந்த வரிகள் சர்ச்சையினைக் கிளப்பும் என்று உணர்ந்து தான் விவரணச் சுருக்கமாக நான் கூற வரும் வகையிலான புலம் பெயர் தமிழர்கள் எப்படிப் பட்டோர் என்பதனை விளக்கியிருக்கிறேன்.

அகதி விசா கோருவதற்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் யுத்தத்தில் பாதிக்ககப்படாதோராய் வாழ்ந்து விட்டு, அகதி விசா கோரி, தாம் புலிகளின் பங்காளிகள் - புலிகளுக்கு ஊரில் தொண்டு செய்த காரணத்தினால் தான் இலங்கையில் வசிக்க முடியவில்லையே என்று சுய இலாபத்திற்காக புலி எதிர்பாளர்களாக ஊரில் வாழ்ந்து விட்டு புலம் பெயர்ந்ததும் மேற்படி கருத்துக்களை உள்ளடக்கி விசா கோருவோரின் செயல் நியாயமானதா ஐயா?

அவர்களின் தார்மீக ஆதரவினை உண்மையான ஈழ மக்கள் மீதான ஆதரவாக எடுத்துக் கொள்ளலாமா?

உணர்வெழுச்சியுடன் கொட்டும் பனியிலும், மழையிலும் தமீழத்திற்காக குரல் கொடுத்த மக்களோடு இந்தப் போலிப் பற்றாளர்களையும் ஒப்பிடலாமா ஐயா?

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.s.FR
இலங்கையிலும் வெளி நாடுகளிலும் மேற்கொள்ளப்படும் தற்போதைய அரசியல் நகர்வுகள் உங்களுக்கும்,எங்களுக்கும் தெரியும். வேண்டாம்,இந்த விடயம் இப்போது விவாதத்துக்குக் கொண்டு வரப்பட வேண்டிய நேரம் அல்ல!உறவுகளுக்குள்,நண்பர்களுக்குள் பெரியவர்களுக்குள் மோதலை உருவாக்கும் எதுவும் வேண்டாமே?????????//

புலம் பெயர்ந்து வாழும் நேசன் அண்ணா, காட்டான் மாம்ஸ் ஆகியோரின் கருத்துக்களின் அடிப்படையில் தான் இப்படி ஒரு விவாதத்தினை எழுதியிருந்தேன். உண்மையிலே இது மோதலை உருவாக்கும் என்று நான் நினைக்கவில்லை.

நான் சொல்ல வரும் கருத்துக்களிலிலிருந்தும் விலகிச் சிலர் வேறு கோணத்தில் கருத்துக்களை முன் வைத்திருந்தார்கள்.
நேசன் அண்ணா தான் இப்படி ஒரு விவாதத்தினை வைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இனிமேல் இவ்வாறான விவாதாங்களைத் தவிர்க்கிறேன் ஐயா.

மன்னிக்கவும்,

நிரூபன் said...
Best Blogger Tips

@மாய உலகம்

"ஸாதிகா" அவர்களின் "எல்லாப் புகழும் இறைவனுக்கே" வலைப் பூவிற்கு வாழ்த்துக்கள்//

நன்றி பாஸ்...

நிரூபன் said...
Best Blogger Tips

@மாய உலகம்

விவாதம் தொடருங்கள்...//

தொடர்கிறோம் பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@உலக சினிமா ரசிகன்
மிக முக்கியமான கருவை விவாதப்பொருளாக்கி உள்ளீர்கள் சகோ!
நல்ல கருத்துகள் உருவாக வாழ்த்துகிறேன்//

நன்றி பாஸ்...

நிரூபன் said...
Best Blogger Tips

@Thamizhan

உலகெங்கும் யூத மக்கள் வாழ்கின்றார்கள். அவர்களது முக்கிய நிகழ்ச்சிகள் திருமணம் போல நடக்கும் போது உறுதி எடுப்பார்கள் " ஒரு நாள் இசுரேலில்". என்று. முடியாதவர் கூட என்றாவது ஒரு நாள் இசுரேல் என்று உறுதியெடுப்பார்.
தமிழினம் உள்ளவரை, உலகெங்கும் வாழ் தமிழர்களுக்கு ஈழம் இதயத்திலே வாழும்.
பெரும்பாலானத் தமிழர்கள் தங்களால் ஆன உதவியைச் செய்து வெளி நாட்டில் வாழும் குற்ற/ ஏக்க உணர்வைக் கழுவிக் கொள்கிறார்கள்.//

நன்றி பாஸ்...

நிரூபன் said...
Best Blogger Tips

@M.R

நல்லதோர் விவாத ஆய்வு நண்பா//

நன்றி பாஸ்...

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.s.FR

தெளிவற்ற ஒரு கண்ணோட்டம், நிரூபன் பதிவில்!அது,ரண களம் ஆக்கி விட்டது.உண்மையில் வெளிப் பார்வைக்கு நிரூபன் ஏதோ சிறி லங்கா அரசின் ஊது குழல் போல் தோன்றினாலும்,உண்மையில் அண்மைக் காலத்தில் புலம் பெயர்ந்த புல்லுருவிகளின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டும் ஓர் முயற்சியாகவே தோன்றுகிறது! 1995-2000 ஆண்டுக்குப் பின்னர் புலம் பெயர்ந்தோர்,வன்னிக்குள் இன அழிப்பு ஆரம்பித்த பின் காட்டிக் கொடுப்போர் உள் நுழைந்ததற்கு ஒப்பானது.இங்கே இவர்களின் கைங்கரியம் அரங்கேற,அங்கே அவர்களின் நிகழ்ச்சி நிரல் தடையின்றி தொடர்ந்தது.இங்கு நடந்த நிகழ்வுகளும்,வன்னித் துரோகத்துக்கு சளைத்ததல்ல!இங்கே விபரித்தால் நம் மூக்கைக் குத்தி நாமே முகர்வது போலாகி விடும் என்பதால் தவிர்ப்போம்!ஏகப்பட்ட சம்பவங்கள் குடைந்து கொண்டே இருக்கின்றன,கனன்று கொண்டே இருக்கிறது!வேண்டாம் நிரூபன் விட்டு விடலாம்!//

ஐயா....நான் இங்கே இருந்து எல்லா வகையான விடயங்களையும் தான் எழுதுகின்றேன். இலங்கை அரசின் ஊதுகுழலாக என்னை யாராவது சொல்லுவதால் எனக்கு கவலையே இல்லை.

ஹே...ஹே....புலிகளைப் பற்றிய விடயங்களில் சில நல்ல செயல்களை எழுதும் போது புகழ்கிறார்கள். சில தவறுகளைச் சுட்டும் போது இகழ்கிறார்கள். இதனால் நான் கவலைப் படவில்லை ஐயா.
ஒரு படைப்பாளியாக இப்படியான விமர்சனங்களை எதிர் கொண்டு தானே ஆக வேண்டும்.

ஹே...ஹா....ஹா...

நான் சொல்லியது X எனு நபரின் ஊடாகவும் போரினால் பாதிக்கப்படாது புலம் பெயர்ந்த ஒரு சிலரைப் பற்றியே.ஏனைய புலம் பெயர் மக்களை நான் சாடவில்லையே...

அதனைக் கூட நீங்கள் புரிந்து கொண்டது போல புரிந்து கொள்ளாது நண்பர்கள் சிலர் வேறு நோக்கத்தில் கருத்தினைத் திசை திருப்பியிருப்பதை எண்ணித் தான் சிரிக்கிறேன்.


நன்றி ஐயா.

நிரூபன் said...
Best Blogger Tips

@கோகுல்

எனது கருத்து -ஈழத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பின் இருக்கும் புலத்தை விட்டு திரும்புவது கடினமே.இன்று ஈழம் மட்டுமல்லாது உலகில் பலரும் பலவித சூழல் காரணமாக புலம் பெயர்ந்தே வாழ்ந்து வருகிறார்கள்.நானும் தான்.இந்நிலையில் வாழ்ந்த இடம் சூழல் மாறி வாழும் தன்மை ஏற்ப்படும் நிலை வந்தாலும் வாழ்ந்து கொண்டிருக்கும் இடம் நமக்கு அனைத்து வகைகளிலும் ஒத்துப்போய் ஒரு பிடிப்பினை அமைந்திருக்கும்.அதனால் திரும்பிச்செல்வது நிச்சயம் இயலாத காரியம்.அப்படியே பெயர்வதாய் இருந்தாலும் பிறந்து வாழ்ந்த இடமே இப்பொது புதிதாய் தோன்றும் .மீண்டும் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும்.
/

ஆமாம் பாஸ்...
இதனைத் தான் நான் நான் சொல்லியிருக்கிறேன் பாஸ்.

மிக்க நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@சசிகுமார்

ஆழமான கருத்துக்கள் மச்சி....
//

நன்றி மச்சி

நிரூபன் said...
Best Blogger Tips

ஈழத்தில் போர் அற்ற, மக்கள் பிற அழுத்தங்களின் கீழ் அல்லது அரசாங்கத்தின் அழுத்தங்களின் கீழ் வாழுகின்ற சூழ் நிலை அகன்று/ நீங்கி

சுய நிர்ணய உரிமைகளுடன் கூடிய வகையில் தமிழ் மக்கள் வாழுவதற்கேற்ற தனி ஈழம் அல்லது பிரிந்த வடக்கு கிழக்கு மாநிலத் தீர்வு உருவாகினால்
ஈழ மக்களுக்காகப் பல வழிகளிலும் குரல் கொடுக்கும் புலம் பெயர் மக்கள் மீண்டும் ஈழத்திற்குத் திரும்பி வருவார்களா எனும் தொனிப் பட இந்த விவாத மேடையினை வைத்திருந்தேன்.

புலம் பெயர் மக்களை அவர்களின் வாழ்வாதாரம், அவர்கள் புலம் பெயர்ந்த காரணங்களை அடிப்படையாக வைத்துப் பிரித்தும், உண்மையான உணர்வெழுச்சியுள்ள புலம் பெயர் மக்களுக்கும், போலிச் சாயம் பூசி வாழும் நபர்களிற்கும் இடையிலான வேறுபாட்டினைப் பிரித்துக் காட்டும் வகையிலும் "X" எனும் நபரை உதாரண விளக்கமாகவும், அவரின் நிலையினை விளக்கிட விவரணச் சம்பவத்தினையும் இங்கே குறிப்பிட்டிருந்தேன்,

இதில் உண்மையில் நான் எதிர்பார்த்த விடயம், தார்மீக அடிப்படையிலும், உணர்வெழுச்சியாகவும், உண்மையான தம் உழைப்பின் மூலமாகவும் ஈழ மக்கள் மீது ஆதரவுக் கரம் நீட்டும் புலம் பெயர் உறவுகள் ஈழத்தில் இயல்பு நிலை உருவாகின் ஈழத்திற்கு திரும்பி விருவார்களா? என்பதையே?

ஆனால் இங்கே உண்மையில் தம் மூன்றாந் தலை முறையின் கற்றல் நடவடிக்கைகள், மொழிப் பிரச்சினை, புலம் பெயர் மக்களின் கடின உழைப்பின் பின்னே மறைந்திருக்கும் கடன் விடயங்கள் இவை யாவும் ஈழத்திற்கு திரும்பி வரும் அவர்களின் கனவினை உடைத் தெறிந்து விடும், ஆதலால் ஈழத்தினை மனக் கண்ணால் தரிசிக்கவும், வசதி கிடைக்கும் போது ஈழத்திற்கு வந்து போகவுமே அம் மக்களால் முடியும் என்பது என் கருத்து.

பதிவில் என் கருத்துக்கள் சிலவற்றைச் சொல்லி, புலம் பெயர் மக்கள் மீண்டும் தாயகத்திற்கு வந்து வாழ மாட்டார்கள் என்று என் கருத்துக்களையும் சொல்லி விட்டுப் பெரியவர்களான யோகா ஐயா, காட்டான் அண்ணா ஆகியோரிடம் விவாத மேடையினைக் கொடுத்து விட்டு நான் விலகி நீண்ட நாட்களின் பின்னர் நேற்றிரவு எட்டு மணித்தியாலங்கள் முழுமையான தூக்கத்தினை பெற்றேன்.

ஆனால் விவாதத்தினை புலி எதிர்ப்பு எனும் ரீதியில் மாற்றி நண்பர் ஐடியாமணி, கந்தசாமி ஆகியோர் தம் கருத்துக்கள் மூலம் விவாத மேடையின் மையக் கருத்திலிருந்தும் விலகி நின்றார்கள்.

இனிமேல் அடுத்த பதிவில் புலிகளின் வீர தீரங்களைப் பற்றி நான் எழுதும் போது என்னை வாழ்த்திக் கருத்துக்களைச் சொல்லுவதை விடுத்து ஒரு துரோகியின் கருத்துக்களாக இவ் இருவரும் என்னை நோக்க வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் இவ் விவாத மேடைக்குரிய கருத்தினை வழங்கிய "தனிமரம்" அவர்களிற்கு என் உளமார்ந்த நன்றி!

இவ் விவாத மேடையினை புலி எதிர்ப்பு எனும் நோக்கில் எழுதவில்லை என்பதனையும், புலிகளை எதிர்ப்பதற்குப் பதிவெழுதும் போது எழுத்துலக வழக்கப் படி "பாசிசம்" எனும் வார்த்தையோடு புலிகளைத் தூற்றி எழுத வேண்டும் எனும் கொள்கையினையும் நான் எந்தப் பதிவில் கையாண்டதுமில்லை. இனிமேலும் கையாளப் போவதுமில்லை. புலி எதிர்ப்பு என்றால் என்னவென்று இங்கே கூச்சலிடும் என் அன்புத் தோழர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

இப் பதிவில் புலிகளால் அச்சுறுத்தல் என்று கூறி ஈழத்திற்குப் புலம் பெயர்ந்தோரைப் பற்றிச் சாடியதை வைத்துப் புலி எதிர்ப்பு என்று புரிந்து கொண்டு காத்திரமான ஆதரவுக் கருத்துக்களை வழங்கிய அன்பு நண்பர்கள் ஐடியாமணி, மற்றும் கந்தசாமி பாஸிற்கு என் உளமார்ந்த நன்றி..

ஈழத்தில் வாழும் மக்களின் உணர்வுகளிற்கு எப்போதும் ஆதரவு கொடுக்கும் நல் உள்ளங்களாவும், ஈழத்து மக்கள் பிரச்சினையை உலக அரங்கில் பேசும் மாபெரும் வலுவாய்ந்த சக்தியாகவும் புலம் பெயர் தமிழர்கள் இருப்பார்களே தவிர, ஈழ மக்களோடு ஈழத்தில் இயல்பு நிலை தோன்றின் பெரும்பான்மையான புலம் பெயர் மக்கள் தாம் கஷ்டப்பட்டுக் கட்டியெழுப்பிய வாழ்வாதாரங்களை உடைத்தெறிந்து விட்டு ஈழத்திற்குத் திரும்பி வரமாட்டார்கள் என்பதே இவ் விவாத மேடையின் முடிவாகும்!

இவ் விவாத மேடையில் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அனைத்து அன்பு உள்ளங்களிற்கும் என் உளமார்ந்த நன்றி!

மேலும் இவ் விவாத மேடையினைச் சிறப்புற நடாத்துவதற்கு நடுவர்களாகப் பணி புரிந்த யோகா ஐயா, காட்டான் அண்ணா ஆகியோருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

மீண்டும் மற்றுமோர் விவாத மேடைப் பதிவினூடாக உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை விடை பெற்றுக் கொள்கின்றேன்.

நேசமுடன்,
செ.நிரூபன்.

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

நிரூபன் said...///சுய நிர்ணய உரிமைகளுடன் கூடிய வகையில் தமிழ் மக்கள் வாழுவதற்கேற்ற தனி ஈழம் அல்லது பிரிந்த வடக்கு கிழக்கு மாநிலத் தீர்வு உருவாகினால்
ஈழ மக்களுக்காகப் பல வழிகளிலும் குரல் கொடுக்கும் புலம் பெயர் மக்கள் மீண்டும் ஈழத்திற்குத் திரும்பி வருவார்களா எனும் தொனிப் பட இந்த விவாத மேடையினை வைத்திருந்தேன்.//// எங்கே மேலே எழுதிய இந்த வரிகளை உங்கள் பதிவில் இருக்கா என்று காட்டுங்கள் பார்ப்போம்...

நிரூபன் said...
Best Blogger Tips

@நிகழ்வுகள்
நிரூபன் said...///சுய நிர்ணய உரிமைகளுடன் கூடிய வகையில் தமிழ் மக்கள் வாழுவதற்கேற்ற தனி ஈழம் அல்லது பிரிந்த வடக்கு கிழக்கு மாநிலத் தீர்வு உருவாகினால்
ஈழ மக்களுக்காகப் பல வழிகளிலும் குரல் கொடுக்கும் புலம் பெயர் மக்கள் மீண்டும் ஈழத்திற்குத் திரும்பி வருவார்களா எனும் தொனிப் பட இந்த விவாத மேடையினை வைத்திருந்தேன்.//// எங்கே மேலே எழுதிய இந்த வரிகளை உங்கள் பதிவில் இருக்கா என்று காட்டுங்கள் பார்ப்போம்...//

ரொம்பத் தான் காமெடி பண்றீங்க.

ஹே...ஹே...மேலே உள்ள வரிகளில் தொனிப்பட என்றோர் வார்த்தை இருக்கிறதல்லவா.
அதற்கான பொருளினைக் கூகிளில் தேடுங்கள்.
அர்த்தப்பட....என்று தான் சொல்லியிருந்தேன்.
ஹே...ஹே...

ரொம்பத் தான் காமெடி பண்றீங்க பாஸ்...

ஈழத்தில் இயல்பு நிலை திரும்பினால் என்று சொல்லியிருந்தேன்...

இயல்பு நிலை என்றால் என்னவென்று நீங்க தானே ஒரு கேள்வி கேட்டிருந்திருந்தீங்க.
அதற்கான விளக்கமாகத் தான் இவ் வரிகளைச் சொல்லியிருந்தேன்..

ஹே...ஹே...

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

///இனிமேல் அடுத்த பதிவில் புலிகளின் வீர தீரங்களைப் பற்றி நான் எழுதும் போது என்னை வாழ்த்திக் கருத்துக்களைச் சொல்லுவதை விடுத்து ஒரு துரோகியின் கருத்துக்களாக இவ் இருவரும் என்னை நோக்க வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.//ஹிஹி எங்கே மேலே உள்ள விவாதங்களில் உங்களை யாராவது இனத்துரோகி என்று கூறியிருக்கிறார்களா என்று சுட்டி காட்டுங்கள்...

"துரோகி எண்டு என்னை சொல்கிறார்கள் " என்று இன்று பலர் அடிக்கடி கூறுவது தம் பால் பிறரின் அனுதாபத்தை தேடிக்கொள்ள தான்! இதுவும் இன்று பலரிடையே ஒரு மனோவியாதி போலாகிவிட்டது... இப்பிடி பலர் இணையத்திலே உலாவுகிரார்கள்..அவர்களை நினைத்தால் சிரிப்பு தான் வரும்..)

இல்லாத ஒன்றை தனக்கு தானே கூறி கூட்டம் சேர்ப்பது போல ஹேஹே....

நிரூபன் said...
Best Blogger Tips

@நிகழ்வுகள்
ஹிஹி எங்கே மேலே உள்ள விவாதங்களில் உங்களை யாராவது இனத்துரோகி என்று கூறியிருக்கிறார்களா என்று சுட்டி காட்டுங்கள்...

"துரோகி எண்டு என்னை சொல்கிறார்கள் " என்று இன்று பலர் அடிக்கடி கூறுவது தம் பால் பிறரின் அனுதாபத்தை தேடிக்கொள்ள தான்! இதுவும் இன்று பலரிடையே ஒரு மனோவியாதி போலாகிவிட்டது... இப்பிடி பலர் இணையத்திலே உலாவுகிரார்கள்..அவர்களை நினைத்தால் சிரிப்பு தான் வரும்..)

இல்லாத ஒன்றை தனக்கு தானே கூறி கூட்டம் சேர்ப்பது போல ஹேஹே....//

போங்க பாஸ்..

நிரூபன் புலி எதிர்ப்பு,
சிறீலங்கா அரசாங்கத்தின் ஊதுகுழல் என்றெல்லாம் கூறியிருக்கிறார்களே!
அதனைக் கவனிக்கலையா பாஸ்..’

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

///ஈழத்தில் இயல்பு நிலை திரும்பினால் என்று சொல்லியிருந்தேன்.../// ஓகோ இயல்பு நிலை என்பதன் அர்த்தம்

/சுய நிர்ணய உரிமைகளுடன் கூடிய வகையில் தமிழ் மக்கள் வாழுவதற்கேற்ற தனி ஈழம் அல்லது பிரிந்த வடக்கு கிழக்கு மாநிலத் தீர்வு/
இதுவா

ஹே ஹே யாரு பாஸ் காமெடி பண்ணுவது


ஈழத்தில் ஏற்க்கனவே இப்படி ஒரு இயல்பான நிலை இருந்ததா - அதுவே மீண்டு வர )

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

////நிரூபன் புலி எதிர்ப்பு,
சிறீலங்கா அரசாங்கத்தின் ஊதுகுழல் என்றெல்லாம்/// நீங்கள் மேற்சொன்ன வசனத்தில் சுட்டி காட்டியது என்னையும் மணி சாரையும் தான். ஆனால் இதை சொன்னது யோகா அவர்கள் ..ஆக அவரின் பெயரை சொல்லி விளக்கம் கேட்க்க வேண்டியது தானே ..


என்னை பொறுத்தவரை புலி எதிர்ப்பு நபர்களை ஒரு போதும் துரோகி என்று சொல்லமாட்டேன்..

அதே போல அரசாங்கத்துக்கு ஊதுகுளலாக செயற்படுபவர்கள் துரோகிகள் என்று அர்த்தம் கொள்ளலாமா??? ஹே ஹே ....

நீங்கள் அவற்ருக்குக்கு அவ்வாறு அர்த்தம் கொண்டதற்ற்க்கு யோகா அவர்கள் கூட பொறுப்பல்ல )

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

ஆனால் விவாதத்தினை புலி எதிர்ப்பு எனும் ரீதியில் மாற்றி நண்பர் ஐடியாமணி, கந்தசாமி ஆகியோர் தம் கருத்துக்கள் மூலம் விவாத மேடையின் மையக் கருத்திலிருந்தும் விலகி நின்றார்கள்.
/// நான் புலி எதிர்ப்பு நிலையில் நீங்கள் நிற்கிறீர்கள் என்று விவாதம் செய்யவில்லை.. நீங்கள் புலம்பெயர் தமிழர்களின் எதிர்ப்பு நிலையை அவ்வப்போது கக்குவதை தான் "இனியும் பிரிவினைகள் வேண்டாம் என்று ஆரம்பத்தில் இருந்து சொல்லி வருகிறேன்"

இப்பொழுது பாருங்கள் ஒருபகுதி புலத்தில் உள்ளவர்களாகவும் இன்னொரு பகுதி புலம்பெயர்ந்தவர்களாகவும் முட்டி மோதுவதற்கு நீங்கள் களம் அமைத்து கொடுத்துள்ளீர்கள்.... இது ஒன்றும் முதல் தடவையும் அல்ல...

பிரதேசவாதம் பிரிவினைவாதம் இவை இரண்டும் இனியும் எம்மினத்துக்குள் வேண்டாமே...

எஸ் சக்திவேல் said...
Best Blogger Tips

அப்பு இது 1-way-ticket தான். . மண்ணில் பற்று ஊள்ளதுதான். ஆனால் என் போன்ற ஆட்களே திரும்பிப் போவார்களோ என்றால் இல்லை. பிள்ளை, குட்டி அது இது என்று. எங்களுக்கு எப்படி இந்த ஊர் புழுதி ஞாகத்தில் இருக்கோ அப்படித்தான் எங்கள் குழந்தைகளுக்கு இந்த மண். அத்தோடு ஆசையா இலங்கை வந்தால் "ப*த் தமிழா" என்று அன்பாக அழைக்கும் ஆட்டோக்காரர் என்ன. எப்ப திரும்பிப் பயணம் என்று புல்லரிக்க வைக்கும் உறவுகள் என்ன.

நிற்க இந்தப் பிரச்சினை அவ்வளவு சுலபமானது அல்ல. சிக்கலானது. ஒரு புத்தகமே எழுதலாம். இத்தோடு யாழ்ப்பாணத்திலிருந்து (அல்லது வேறு இடங்களிலிருந்து) கொழும்பு வந்து ஒரு 10 வருடங்கள் இருந்தவர்கள் திரும்பி ஊருக்குப் போவார்களா என்றும் ஆராயவேண்டும். நேரம் கிடைத்தால் தனிப்பதிவு போடுகின்றேன்.

Yoga.s.FR said...
Best Blogger Tips

நன்றி நிரூபன்,வாழ்த்துக்கள்!உண்மையில் நீங்கள் போற்றுதலுக்குரியவர்.விடுதலைப் பயணத்தில் ஊடகங்களின் பணி மேலானது.நீங்கள் ஊடகவியலாளர் அல்லா விடினும் கூட விமர்சிப்பதற்குத் தகுதி பெற்ற ஒருவர் என்பது என் அபிப்பிராயம்!கருத்துரைத்த அன்பர்களில் சிலர் உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை விட்டிருந்தும் கூட பகுத்தறிந்து,தவறான கண்ணோட்டம் என்பதைச் சுட்டிக் காட்டி சிரித்துக் கொண்டே பதில் கொடுப்பதற்கும் ஓர் தனித் திறமை வேண்டும்!விடயத்துக்கு வருவோம்;புலம் பெயர் தமிழர்களில் பெரும்பான்மையானோர் நாடு திரும்புவார்கள் என்று சொல்வதற்கில்லை.காரணம் எல்லோருக்கும் தெரிந்தது.எண்பதுகளில் ஆரம்பித்து இன்று வரை புலம்பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள்,தமிழ் மக்கள்.அப்போதெல்லாம் புலம்பெயர்ந்தவர்கள் சிறு வயதினராகவே இருந்தார்கள்!காலம் செல்லச் செல்ல வயது வேறுபாடின்றி புலம் பெயர்ந்தார்கள்.இன்றைய மாறி வரும் உலக ஒழுங்கில் எவ்வளவு பேர் தாக்குப் பிடிக்க முடியும் என்பது கூட கேள்விக்குறி தான்!இளையோராகப் புலம்பெயர்ந்தோர் இப்போது திருமணம் செய்து ,அவர்களின் குழந்தைகள் கூட திருமணம் செய்து பேரக் குழந்தைகள் கண்டோரும் இருக்கிறார்கள்!மொத்தத்தில் இரண்டாவது தலைமுறையும் இப்போது இருக்கிறது.என் போன்ற வயதானவர்கள் ஒரு வேளை இரட்டைக் குடியுரிமை பெற்று ஈழத்துக்கு வந்து குடியேறக் கூடும்.நிம்மதியாக வாழ வேண்டும் என்றே "அவர்களும்" விரும்புவார்கள்,இல்லையா?நீங்கள் கூறுவது போல் சிறி லங்கா அரசு ஒன்றும் தாம்பாளத்தில் வைத்து உரிமையைக் கொடுக்கப் போவதில்லை தான்!ஆனாலும் இப்போது ஈழ மக்களும் சந்திக்கு வரத் தயாராகி விட்டார்கள் என்றே தோன்றுகிறது,உரிமைக் குரல் எழுப்ப! சர்வதேசம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக உண்மை என்னவென்று புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறது!அதற்குக் காரணமானவர்களும் பெரும்பான்மையின ஆட்சியாளர்களே!ஆட்டைக் கடித்து,மாட்டைக் கடித்து தமிழர்களைக் கடித்து இப்போது சர்வதேசத்தையும் கடிக்க "அவர்கள்"முயற்சிக்கிறார்களோ என்ற ஒரு சந்தேகம் சர்வதேச மட்டத்தில் எழுந்திருக்கிறது."இவர்கள்" நினைத்தால்????????கடற்பரப்பு முக்கியத்துவமானதெனில் எதை வேண்டுமானாலும் இழக்க இவர்கள் தயங்க மாட்டார்கள்!கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் எதையோ எண்ணி ஆரம்பித்தது,எங்கேயோ போய் நிற்பதை கண்கூடாகப் பார்க்கிறோம்!சிறீ-லங்காவெல்லாம் ஜுஜுபி!அதுவும் கடலால் சூழப்பட்டிருக்கையில்!இப்படித் தான் அரபு நாடுகளிலும் மனித உரிமை மீறல் என்றே ஆரம்பித்தார்கள்!விடியும்!!!!!!!!!!!

அம்பலத்தார் said...
Best Blogger Tips

வணக்கம் நிரூ, ஒரு நல்ல ஒரு விடயத்தைக் கையாண்டிருப்பதற்கு முதலில் நன்றிகலந்த வாழ்த்துக்கள்.

«Oldest ‹Older   1 – 200 of 207   Newer› Newest»

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails