கரு முகில்கள் சூழ்ந்து இடி இறக்கி, கணப் பொழுதில் தமிழினம் அழிந்து விடும் என பரப்புரை செய்து நின்றவர்கள் மத்தியில் வாழும் தமிழினம் இலகுவில் வீழும் நிலையினை எய்திடாது என்பதனை உணர்த்தி நின்றவர் பிரபாகரன். அகில உலகிற்கு ஈழத் தமிழருக்கென்று ஒரு தனித்துவமான வீரஞ் செறிந்த வரலாறு உண்டென்பதை நிரூபித்துக் காட்டிய பெருமை அவரால் உருவாக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பினையே சாரும். தரை, கடல், வான் என முப் படைகளையும் உள்ளடக்கி தமிழர் வரலாற்றின் கறை படிந்த நாட்களில் இனவாதம் விதைத்த சாபங்களை அடியோடு அகற்றிடக் களமாடிய பெருமையினையும் விடுதலைப் புலிகள் அமைப்பினர் கொண்டிருந்தார்கள்.
"நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம், ஞான நல்லறம் பேணு நற்குடி பெண்களின் குணங்களாம்" எனும் மகாகவி பாரதியாரின் கூற்றிற்கு ஈழத்தில் பெண் புலிகள் ஊடாகவும், ஈழத்துப் பெண்கள் வாயிலாகவும் சிறப்பான அர்த்தத்தினைக் கற்பித்த வரலாறும் புலிகளுக்கே உரியது. அடுக்களையில் சமையல் செய்வோராகவும், வீட்டில் துணி துவைப்போராகவும், ஆண்கள் கிண்டல் செய்கையில் தலை குனிந்து நாணற் புல்லாக உடலை நெளித்துச் செல்வதுவும், பிள்ளை பெறும் மெசினாகவும், கணவன் விரும்பிய போது சுகமளிக்கும் பாலியல் இயந்திரமாகவும் இருந்த பெண்களின் வரலாற்றில் புரட்சியினை உண்டாக்கிய பெருமை திரு.வே.பிரபாகரன் அவர்களையே சாரும்.
ஈழத்தில் மாலையானதும் பெண்கள் வீட்டிற்கு வெளியே போக கூடாது என்றும், "வீட்டிற்கு விலக்கு" எனும் அடை மொழியால் பெண்களை மாதவிடாய் காலத்தில் வீட்டின் ஓரத்தில் விலக்கி வைத்திருந்த சமூகத்தில், பெண்களும் சுடுகலன் (துப்பாக்கி) ஏந்திக் களமாடும் வல்லமை கொண்டவர்கள் என்றும்- ஆணுக்குப் பெண் சளைத்தவர்கள் அல்ல - சரி நிகர் சமானம் உடையவர்கள் என்றும் 1984ம் ஆண்டில் நிரூபித்துக் காட்டியதும் இந்த விடுதலைப் புலிகள் அமைப்புத் தான்.
ஆம்! ஈழத்தில் மாலை ஆறுமணியாகியதும் பெண்கள் வீட்டிற்கு வெளியே போக கூடாது, பெண் விடுதலை என்பது பேச்சளவில் மாத்திரம் இருக்க வேண்டும், செயலில் அல்ல என பண்டைத் தமிழ் மரபில் ஊறித் திளைத்திருந்த தமிழ் மக்களின் நம்பிக்கைகள் யாவும் தகர்த்தெறியப்படும் வண்ணம்; "பெண்களாலும் தம் நாட்டினை எதிர்க்க வரும் எதிரியினை வழி மறித்துப் போர் செய்ய முடியும்" எனும் யதார்த்த நிலையினை ஈழ மக்களிற்கும், உலக மக்களிற்கும் விடுதலைப் புலிகள் தமது மகளிர் படையணி ஊடாக உணர்த்திக் காட்டினார்கள்.
விடுதலைப் புலிகள் அமைப்பினரால் 1985ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி பெண் புலிகளுக்கென்று தனியான பயிற்சி முகாம் தொடங்கப்பட்டு பெண் புலிகளின் போரிடும் ஆற்றலை வலுப்படுத்தும் நோக்கில் செயற் திட்டங்கள் நடை முறைப்படுத்தப்பட்டன. இலங்கையின் வட பகுதியில் மன்னார் அடம்பன் பகுதியில் தம் முதலாவது தாக்குதலைத் தொடங்கிய பெண் போராளிகள் பிற் காலத்தில் மரபு வழித் தாக்குதல்கள் முதல் கள முனையில் ஆண் போராளிகளே விழி நிமிர்த்தி வியப்படைந்து பார்க்கும் பல சாதனைகளைச் செய்து காட்டியிருக்கிறார்கள்.
பெண் போராளிகளின் வளர்ச்சிக்கும், பெண் புலிகள் மத்தியில் மேற்குலகில் பெண் விடுதலை எவ்வாறு இருகின்றது என்பது முதல், ஈழத்தில் பெண்களின் செயற் திட்டங்கள் எவ்வாறு அமைய வேண்டும் எனும் செயற்பாடுகளையெல்லாம் வழி நடத்தி பெண் புலிகளின் வளர்ச்சிப் பாதையில் பிரபாகரனின் சிந்தனையிற்குச் செயல் வடிவம் கொடுத்து வழி காட்டியவராக திருமதி அடேல். பாலசிங்கம் (திரு. அன்ரன் பாலசிங்கத்தின் துணைவியார்) விளங்குகின்றார்.
ஆரம்பத்தில் ஆண் போராளிகளோடு இணைந்திருந்து களமாடிய பெண் போராளிகள் பின்னர் தனித்து நின்று தாக்குதல்களைச் செய்து தம் எதிரியினைக் கலங்கடிக்கும் வண்ணம் செயற்படுகின்ற வல்லமையினைப் பெற்றுக் கொள்கின்றார்கள். பெண் புலிகளின் வீரஞ் செறிந்த தாக்குதலைப் பரிட்சித்துப் பார்க்கின்ற தனித்துவமான களமுனையாக இலங்கையின் மணலாறு இராணுவ முகாம் மீது 1995ம் ஆண்டு ஜூலை மாதம் நிகழ்த்தப்பட்ட புலிகளின் தாக்குதல் அமைந்து கொள்கின்றது.
இந்த தாக்குதல் திட்டங்களை முற் கூட்டியே அறிந்து உள் இழுத்துச் சுற்றி வளைத்து புலிகள் அணிகள் மீது இராணுவம் தாக்குதல் நடாத்திய காரணத்தினால் மேற்படி தாக்குதல் தோல்வியில் முடிவடைந்த போது, இராணுவத்தினர் பெண் போராளிகளின் உடல் உறுப்புக்களைக் துண்டு துண்டாக வெட்டிப் பொதி செய்து புலிகள் பகுதிக்கு அனுப்பி வைத்து தம் மனிதாபிமானமற்ற செயலினை மீண்டும் ஒரு தரம் நிரூபித்திருந்தார்கள்.
மருத்துவப் பிரிவு, ஒளி - ஒலி- இலத்திரனியல் பிரிவு, போரியற் துறையில் புலிகள் வசமிருந்த அனைத்துத் துறைகள், ஆக்க இலக்கியத் துறை, நிர்வாகத் துறை எனப் பல துறைகளிலும் தம் சிறப்பான செயற்திறனை உணர்த்திக் காட்டியதன் மூலம்’ பெண் போராளிகள் ஒரு காலத்தில் ஈழத்தின் விடுதலை விரும்பிய பெண்களிற்கு முன்னுதாரணமாக விளங்கினார்கள். மன்னகுளம் முகாம் மீதான தாக்குதல், தீச்சுவாலை முறியடிப்புச் சமர் என்பவை பெண் புலிகளின் தம் தாக்குதற் சாதனையினை உலகினுக்கு உணர்த்திய கள முனைகளாகும்.
கடலுக்கு அடியால் சென்று கடற் கலங்களைச் சுழியோடி அழிப்பது முதல், விமான எதிர்ப்பு ஏவுகணை இயக்குதல், தம் எதிரியின் நிலைகளுக்குள் சென்று வேவுத் தகவல்களைச் சாதுரியமாகத் திரட்டுதல் வரை பல சிறப்பான செயற்பாடுகளைப் பெண் போராளிகள் ஈழத்தில் ஆற்றியிருந்தார்கள். ஆனால் இன்றோ....ஒரு காலத்தில் நிமிர்ந்திருந்த, தமிழினத்திற்குத் தம் செயல்கள் மூலம் பெருமை சேர்த்த இப் பெண் போராளிகள் கவனிப்பாரற்று, போதிய உதவிகள் ஏதுமின்றி கை விடப்பட்ட சூழ் நிலையில் போருக்குப் பின்னரான தம் புனர்வாழ்வு நிலையினூடாக திசை மாறிச் செல்கின்றார்கள் என்பது கவலைக்குரிய விடயம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் தாம் இந்தியப் படையினருக்கு எதிராக மோதலைத் தொடங்கிய 1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் திகதி அன்று கோப்பாய் பகுதியில் வீரச்சாவடைந்த லெப். மாலதியின் நினைவு நாளினைத் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளாகப் பின் நாளில் பிரகடனம் செய்திருந்தார்கள். காலங்கள் கடந்து கட்டமைப்புக்கள் சிதைந்து, ஞாலத்தில் தமிழினம் அடிமைத் தளையுடன் வாழ்ந்து வரும் காலத்திலும், தலை நிமிரச் செய்த இவர்கள் எப்போதும் போற்றுதற்குரியவர்கள்!
ஈழ யுத்தத்தின் இறுதி நாட்களின் பின்னரான காலப் பகுதியிலும், கள முனைகளில் இராணுவத்திடம் உயிருடன் பெண் போராளிகள் அகப்படும் வேளையிலும் மனிதாபிமானமற்ற முறையில் துடி துடிக்கச் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு, வன் புணர்விற்கு ஆளாக்கப்பட்டு தம் வக்கிர புத்திக்கு ஆதாராமாக கொல்லப்படுகின்ற அப்பாவி உயிர்களாகவே இந்தப் பெண் போராளிகளின் கள முனைக்கு அப்பாற்பட்ட வாழ்வு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது! தமிழினத்தின் வரலாற்றுப் பாதையில் இவர்களுக்கும் ஓர் இடம் உண்டு என்பதை நாம் அனைவரும் எளிதில் மறந்து விடலாகாது!
*************************************************************************************************************
ஈழத்து இலக்கியங்கள் பற்றிய சிறியளவிலான விமர்சனங்களையும், கவிதைகள், சிறுகதை, மற்றும் சம காலப் பெண்களின் நிகழ்வுகளை ஆராய்கின்ற விடயங்களையும் உள்ளடக்கிய சகோதரி "அனார்" அவர்களின் "இதமி" வலைப் பதிவினைத் தான் நாம் இன்றைய பதிவர் அறிமுகம் பகுதி ஊடாகப் பார்க்கவிருக்கின்றோம்.
சகோதரி "அனார்" அவர்களின் "இதமி" வலைப் பதிவிற்குச் செல்ல:
***************************************************************************************************************
எண்ணம், எழுத்து, தேடல்: செல்வராஜா நிரூபன்.
எண்ணம், எழுத்து, தேடல்: செல்வராஜா நிரூபன்.
Courtesy Images From: Google
|
57 Comments:
அழகாகவே சொல்லிருக்கீங்க நண்பா
ஆனால் பிரபாகரனின் சாவு தான் வருத்தமளிக்கிறது
பகிர்வுக்கு நன்றி மாப்ள....பெண்களுக்கு தனி மரியாதையை உருவாக்கிய விஷயம் போற்றுதலுக்குரியது
காலத்திற்கேற்ற முக்கிய பதிவு. "இரு" பக்கங்களும் பார்க்கப்பட வேண்டும்.
நாம் வாழ்ந்த காலத்தில்....
தமிழ் பெண்களின் வீரத்தை உலகிற்க்கு பறை சாற்றியது பெண்புலிகளே!
பெண் புலிகள் பற்றிய வீர தகவல்களை ஆமையாய் தந்திருக்கிங்க
வாழ்த்துக்கள் தோழா
இதே போன்ற பல பதிவுகளை எதிர் நோக்குகிறோம்.. முடிந்தால் கிட்டுவின் புத்தகத்தில் இருந்து பக்கங்களை வெளியிட்டாலும் அருமையாக இருக்கும்... இல்லை என்றால் அதன் தரவிறக்க சுட்டியை கொடுத்தாலும் ஆனந்தமே
சகோதரி "அனார்" அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
தமிழினத்தின் வரலாற்றுப் பாதையில் இவர்களுக்கும் ஓர் இடம் உண்டு என்பதை நாம் அனைவரும் எளிதில் மறந்து விடலாகாது!
பெண்கள் நாட்டின் கண்கள் என்று நிரூபிக்க வைத்து,சிறப்பாக்கியவர் தலைவர்!இன்று....................
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தார்!எனும் வார்த்தைகளை உண்மையாக்கும் நிகழ்வுகள்!
ஆனால் நீங்கள் குறிப்பிட்டது போல இன்றைக்கு அவர்கள் திசை மாறி செல்வது நிச்சயம் கவலைக்குரிய விஷயம்!
@வைரை சதிஷ்
அழகாகவே சொல்லிருக்கீங்க நண்பா
ஆனால் பிரபாகரனின் சாவு தான் வருத்தமளிக்கிறது//
உங்களின் கருத்துக்களிற்கு நன்றி நண்பா,
நான் இங்கே பிரபாகரனின் சாவு பற்றி ஏதும் சொல்லவில்லையே
@விக்கியுலகம்
பகிர்வுக்கு நன்றி மாப்ள....பெண்களுக்கு தனி மரியாதையை உருவாக்கிய விஷயம் போற்றுதலுக்குரியது//
வரலாற்றில் என்றுமே இவர்களின் செயலுக்குத் தனி இடம் உண்டு பாஸ்.
@எஸ் சக்திவேல்
காலத்திற்கேற்ற முக்கிய பதிவு. "இரு" பக்கங்களும் பார்க்கப்பட வேண்டும்.//
ஆமாம் அண்ணா
@FOOD
நல்லதொரு பகிர்வு.//
நன்றி பாஸ்.
@உலக சினிமா ரசிகன்
நாம் வாழ்ந்த காலத்தில்....
தமிழ் பெண்களின் வீரத்தை உலகிற்க்கு பறை சாற்றியது பெண்புலிகளே!//
ஆமாம் பாஸ்.
@கவி அழகன்
பெண் புலிகள் பற்றிய வீர தகவல்களை ஆமையாய் தந்திருக்கிங்க
வாழ்த்துக்கள் தோழா//
நன்றி பாஸ்..
எண்ணிய எண்ணியாங்கு எழுதும்
சகோ பதிவு உள்ளத்தை உருக்கியது
ஆனால்.. முடிவு
விடிவு என்று வருமோ
புலவர் சா இராமாநுசம்
@suryajeeva
இதே போன்ற பல பதிவுகளை எதிர் நோக்குகிறோம்.. முடிந்தால் கிட்டுவின் புத்தகத்தில் இருந்து பக்கங்களை வெளியிட்டாலும் அருமையாக இருக்கும்... இல்லை என்றால் அதன் தரவிறக்க சுட்டியை கொடுத்தாலும் ஆனந்தமே//
என்னால் முடிந்த வரை உங்கள் ஆவலைப் பூர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்.
கிட்டு சென்னை மத்திய சிறையில் இருக்கையில் எழுதிய - தேவி இதழில் தொடராக வந்த கிட்டுவின் டைரி எனும் ஈழப் போராட்டம் பற்றிப் பேசும் தொடர் பற்றி அறிந்திருந்தேன், ஆனால் அத் தொடர் நூலுருப் பெற்றதாக இது வரை அறியவில்லை. நண்பர்கள் யாரிடமாவது கேட்டுப் பார்க்கிறேன்.
@மாய உலகம்
சகோதரி "அனார்" அவர்களுக்கு வாழ்த்துக்கள்...//
உங்கள் வாழ்த்துக்கள் சகோதரியினைச் சென்று சேர்ந்திருக்கும் நண்பா.
புலியை முறத்தால் துரத்திய பரம்பரையில் வந்தவர்கள்தானே ஈழத்து பெண்கள். அந்த வீரம் இன்னும் அவர்கள் ரத்தத்தில் மீதம் இருக்கிறது போலும். பகிர்வுக்கு நன்றி
நல்லதொரு ஆக்கம் சகோ.
பெண் புலிகளை பற்றி, அவர்கள் தம் வீரம் பற்றி நிறைய வாசித்து இருக்கிறேன், ஆனால் இப்போது அவர்கள் படும் வேதனை மனதை அழவைக்கிறது....
லெப். மாலதிக்கு வீர வணக்கங்கள்
பெண்களை சமையல் எந்திரங்களாகவும், பிள்ளைப்பெறும் எந்திரமாகவும் நடத்திய சமூகத்தின் முன்பு, அவர்களை மரியாதைக்குரியவர்களாக ஆக்கியது பிரபாகரனின் சாதனை தான்..
திருமதி. அடேலின் புத்தகத்தைத் தான் படித்துக்கொண்டிருக்கிறேன்..அருமையான புத்தகம்.
@மாய உலகம்
தமிழினத்தின் வரலாற்றுப் பாதையில் இவர்களுக்கும் ஓர் இடம் உண்டு என்பதை நாம் அனைவரும் எளிதில் மறந்து விடலாகாது!//
ஆம் நண்பா.
@Yoga.s.FR
பெண்கள் நாட்டின் கண்கள் என்று நிரூபிக்க வைத்து,சிறப்பாக்கியவர் தலைவர்!இன்று....................//
உண்மை தான் ஐயா.
பெண் விடுதலைக்குச் செயல் வடிவம் கொடுத்த பெரு மகனும் அவர் தான்.
@கோகுல்
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தார்!எனும் வார்த்தைகளை உண்மையாக்கும் நிகழ்வுகள்!
ஆனால் நீங்கள் குறிப்பிட்டது போல இன்றைக்கு அவர்கள் திசை மாறி செல்வது நிச்சயம் கவலைக்குரிய விஷயம்!/
ஆமாம் நண்பா.
இன்றைய கால கட்டத்தில் போரில் பெற்றோரை இழந்த பெண் போராளிகளின் நிலமை, உதவிகள் இன்றித் தனித்து வாழும் பெண் போராளிகளின் நிலமை கவலைக்குரிய விடயம் தான்.
@புலவர் சா இராமாநுசம்
எண்ணிய எண்ணியாங்கு எழுதும்
சகோ பதிவு உள்ளத்தை உருக்கியது
ஆனால்.. முடிவு
விடிவு என்று வருமோ
புலவர் சா இராமாநுசம//
நன்றி ஐயா.
நம்பிக்கையுடன் காத்திருப்போம், வேறு எனன் சொல்ல முடியும்?
@ராஜி
புலியை முறத்தால் துரத்திய பரம்பரையில் வந்தவர்கள்தானே ஈழத்து பெண்கள். அந்த வீரம் இன்னும் அவர்கள் ரத்தத்தில் மீதம் இருக்கிறது போலும். பகிர்வுக்கு நன்றி//
உங்களின் கருத்துக்களுக்கும் நன்றி அக்கா.
@அன்புடன் மலிக்கா
நல்லதொரு ஆக்கம் சகோ.//
நன்றி அக்கா.
@MANO நாஞ்சில் மனோ
பெண் புலிகளை பற்றி, அவர்கள் தம் வீரம் பற்றி நிறைய வாசித்து இருக்கிறேன், ஆனால் இப்போது அவர்கள் படும் வேதனை மனதை அழவைக்கிறது....//
காலம் செய்த கோலம் இது என்று சொல்லுவதைத் தவிர வேறு ஒன்றும் அறியேன் யான்.
@செங்கோவி
திருமதி. அடேலின் புத்தகத்தைத் தான் படித்துக்கொண்டிருக்கிறேன்..அருமையான புத்தகம்.//
படித்து முடியச் சொல்லுங்கள்.
பிரபாகரன் உண்மையிலேயே இறந்து விட்டாரா? என்பது கேள்விக்குறி தான்
அறிமுகப்பதிவருக்கு வாழ்த்துக்கள், நிரூபனுக்கு நன்றிகள்
அங்கயற்கன்னிபோல் பலர் வீரத்தில் தாங்களும் சமநிகர் என போராளிகளாக செய்த பெண்கள் இன்றைய நிலை என்ன சொல்வது நாதியற்றுப் போய்விட்டார்கள் என்றாலும் அவர்களின் தியாகம் மறப்பதற்கல்ல !
காத்திரமான பதிவு நண்பா!
வணக்கம் நிரூபன்..
சங்ககாலத்து பெண்களை ஈழத்தில் தவளவிட்டவர்கள் எங்கள் வீர மறத்திகள்!!
வைரை சதிஷ் said...
அழகாகவே சொல்லிருக்கீங்க நண்பா
ஆனால் பிரபாகரனின் சாவு தான் வருத்தமளிக்கிறது
சதீஷ் இப்படியான பதிவுகளையாவுதல் வாசிக்கலாமே..!!
கடைசி தமிழன் இருக்கும்வரை அவர்கள் மறக்கப்படமாட்டார்கள்.!!
பெண் புலிகளின் திறனை அழகாய் எடுத்து இயம்பி இருக்கிறீர் அருமை
மாலதி நினைவை போற்றுவோம்..
அவ்ருக்கு எனது வீர வணக்கங்கள்..
மாப்ள னா ஊர்ல இல்லை அதனால தான் வர முடியல..
இனி வருவேன்..
மாலதி நினைவு நாளில் எழுதப்பட்ட பதிவா .........வாழ்த்துக்கள் பாஸ்
மாலதி அக்காவுக்கு நினைவு அஞ்சலிகள் .
////தரை, கடல், வான் என முப் படைகளையும் உள்ளடக்கி தமிழர் வரலாற்றின் கறை படிந்த நாட்களில் இனவாதம் விதைத்த சாபங்களை அடியோடு அகற்றிடக் களமாடிய பெருமையினையும் விடுதலைப் புலிகள் அமைப்பினர் கொண்டிருந்தார்கள்./// முப்படைகள் கண்ட முதலாவது தமிழன் ....
///பெண் போராளிகளின் வளர்ச்சிக்கும், பெண் புலிகள் மத்தியில் மேற்குலகில் பெண் விடுதலை எவ்வாறு இருகின்றது என்பது முதல், ஈழத்தில் பெண்களின் செயற் திட்டங்கள் எவ்வாறு அமைய வேண்டும் எனும் செயற்பாடுகளையெல்லாம் வழி நடத்தி பெண் புலிகளின் வளர்ச்சிப் பாதையில் பிரபாகரனின் சிந்தனையிற்குச் செயல் வடிவம் கொடுத்து வழி காட்டியவராக திருமதி அடேல். பாலசிங்கம் (திரு. அன்ரன் பாலசிங்கத்தின் துணைவியார்) விளங்குகின்றார். /// எம்மையெல்லாம் விட அடேல் பாலசிங்கம் அழகாக தமிழ் கதைப்பாவாம் ..கேள்விப்பட்டேன்
////1995ம் ஆண்டு ஜூலை மாதம் நிகழ்த்தப்பட்ட புலிகளின் தாக்குதல் அமைந்து கொள்கின்றது. //யாழ் வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம் அல்லவா ???
அனார் ருக்கு வாழ்த்துக்கள்
இன்னும் கூட ராணுவங்களில் பெண்கள் முழுமையாக இயங்க தொடங்கவில்லை. நம்மவர்கள் 87-லேயே அதைச் சாதித்திருக்கிறார்கள்..... கட்டுரை அற்புதம் நிரூபன்.......
அண்ணே .. தங்களுக்கு ஒரு விருது வழங்கி உள்ளேன் .. ஏற்று கொள்ளவும் ...
பெண் வீராங்கனை பற்றிய பதிவு அறிந்தேன் நண்பரே பகிர்வுக்கு நன்றி
பெண் புலிகளின் வீரம் பற்றி எடுத்துரைத்து இருக்கிறீர்கள். நன்று.
ஏற்கனவே 23பேர் ஓட்டுப் போட்டாச்சு. எனவே நான் போடவில்லை!
புதிய தகவல்கள்.
பொருத்தமான நாளில் பொருத்தமான கட்டுரை போட்ட நிரூபனுக்கு வாழ்த்துக்கள்!
நீங்கள் பிரபாகரனின் மரணம் பற்றி இதில் சொல்லவில்லை என்பது தெரிகிறது பாஸ்.
இருந்தாலும் நான் எனது வருத்ததை தெரிவித்தேன்
பெண்களை மரியாதைக்குரியவர்களாக ஆக்கியது பிரபாகரனின் சாதனை தான்... வாழ்த்துக்கள்...
மாலதிக்கு அஞ்சலிகள்...
சகோ! கொஞ்சம் பிஸி ! பெண் போராளிகளை நினைக்கும்போது மனம் கனக்கிறது.
Post a Comment