அனல் பறக்கும்
வார்த்தைகளைப் பேசிய
பெரியவரின் வீட்டு
வேலைக்காரியின்
விடுதலையை நோக்கிய காற்
கடத்தில் சீழ் படிந்த தழும்புகள்!
உறக்கம் தொலைக்கையில்
கிறக்கமிடும் நினைவுகளாய்
வந்து போகும் நடிகைகள் பற்றிய
நினைப்பில் கிறங்கிப் போயிருக்கும்
ஊழியரின் சென்சர்
எனும் அறிக்கையினை
தாங்கி வருகிறது
திரைப் படங்கள்!
விலை போகாப் பொருளாக
விம்மி அழும் மகளிரினை
ஒன்று திரட்டி
சங்கம் அமைத்து
அரசியல் செய்வோரின்
காலடியில்
நசுங்கிச் சாகிறது
சீதனம் எனும்
சொர்க்க வாசற் சரக்கு!
வானம் பூமி
இவை இரண்டிற்கும்
இடையேயான தூரம்
எவ்வளவு எனும்
ஆராய்ச்சியில் தினமும் மூழ்கி
தூக்கம் தொலைக்கின்றன
எம் பள்ளிச் சிறார்களின்
இளம் பராயங்கள்!
வேஷமிட முடியாத
மனித மனங்களாய்
இன்றும் அதே நினைப்பில்
அதே வீரச் சிறப்பின் நிழலில்
வாழ்ந்திருக்கும் அப்பாவிகளின்
கண்ணீரை நீராக்கி
கட்டப்படுகின்றது
மகிந்தரின் மன்மத மாளிகைகளும்,
சொர்க்கத்தை உண்டு பண்ணும்
களியாட்ட விடுதிகளும்!
தூரிகை கொண்டு
தீட்டப்பட முடியாத
சிற்பங்களாய்
காலம் விட்டுச் சென்ற
அவலத்தின் கோடுகள்!
சிற்பமாக்கும் நோக்கில்
மனச் சிறையினை
ஒருமுகப்படுத்தையிலோ
மனச் சுமையினை
தந்த வண்ணம்
மறைவாய் அழ வைக்கின்றன
இனவாதக் கீறல்கள்!
கிழிந்த கிடுகிடையே
தலை கவிழ்ந்து
தொங்கும் வௌவால்களாய்
தம் எதிர்காலம் பற்றிய
ஏக்கங்களோடு
முன்னாள் போராளிகள்!
அவர்களின் கனவுகளை
தண்டணை, புனர்வாழ்வு எனும்
தக்க யாகப் பெரு வெளிக்குள் வைத்து
சிக்கிச் சின்னாபின்னமாக்குகின்றது
பௌத்த இனவாத அரசு!
அச்சடிக்கப்படாத
எழுத்துருவில் இல்லாத
திணிப்புக்களாய்
ஆதிக்க வாதத்தின் சட்டங்கள்!
அடிமையாக தமிழன்
காலம் தோறும்
வாழ வேண்டும் எனும்
தூர நோக்கில் பல திட்டங்கள்!
பென்னம் பெரிய
மனச் சிறையின் ஓரத்தில்
சிறு பான்மை மக்களின்
உணர்வலைகள் தூசிகளாய்
அமிழ்ந்து போய் கிடக்கின்றன!
நாளைய விடியலுக்கான
பாதை தொலைவில் இல்லை
எனும் நம்பிக்கை நிறைந்த
வார்தைகளை
நம்பியே கெட்டபடி
ஈழத்தின் அப்பாவி மக்கள்!
*******************************************************************************
இன்றைய பதிவர் அறிமுகம் பகுதியினூடாக நாம் பார்க்கவிருப்பது, ஈழத்து இலக்கிய வட்டத்தினுள் பலராலும் அறியப்பட்டவரும், ஆனால் பதிவர்கள் பலருக்கு அறிமுகம் இல்லாதவருமான கவிஞர் - எழுத்தாளர் "துவாரகன்" அவர்களின் வலைப் பூவாகும்.
துவாரகன் அவர்கள் தன்னுடைய வல்லைவெளி வலைப் பூவில் குறியீடுகள், படிமங்கள், புதுக் கவிதைகள் எனக் கவிதைக்கேயுரிய இன்ன பிற வடிவங்களையும் கையாண்டு அருமையான கவிதைகளைப் படைத்து வருகின்றார்.
கவிஞர் துவாரகன் அவர்களின் வலைப் பதிவிற்குச் செல்ல:
http://vallaivelie.blogspot.com/
*********************************************************************************
|
46 Comments:
வணக்கம் நிரூபன்! கவிதையைப் படித்துவிட்டு வருகிறேன்!
ஊருக்கு ஒன்று சொல்லி, தம் வாழ்க்கையில் ஒன்றைச் செய்யும் இரட்டை நிலைப்பாடு உள்ளவர்களுக்கு சாட்டையடி கொடுக்கும் பதிவு! வாழ்த்துக்கள்!
கிழிந்த கிடுகிடையே
தலை கவிழ்ந்து
தொங்கும் வௌவால்களாய்
தம் எதிர்காலம் பற்றிய
ஏக்கங்களோடு
முன்னாள் போராளிகள்!////////
அருமையான வரிகள்!
கவிஞர் துவாரகனுக்கு வாழ்த்துக்கள்!
நமக்கு நாம திட்டத்தின்கீழே உங்களுக்கு நீங்களே காமெண்ட் ஐடியா மணி, பன்னிக்குட்டி, எருமைமாடு, போட்ருவீங்களா?
பின்னூட்டங்கள் யாவும் மட்டுறுத்தப் பட வேண்டும் என்று தமிழ்மணம் சொல்லியிருக்காது. மட்டுருத்தினா அநாவசிய பிரசனைக்க வராதுன்னுதா சொல்லிருக்கும். தப்பா புரிஞ்சுகிட்டீங்களா நாத்து? ஒங்க பிளாக்க அவங்க என்னங்க கண்ட்ரோல் பன்னறது?
உங்கள் கவிதை அருமை நிரூ வௌவாலுக்கு எதிர்காலத்தை ஒப்பிட்டமை கனம்
//தூரிகை கொண்டு
தீட்டப்பட முடியாத
சிற்பங்களாய்
காலம் விட்டுச் சென்ற
அவலத்தின் கோடுகள்!//
உண்மை தான்..மறக்கமுடியாத அவலம் தான்..
மனம் கனக்க வைக்கும் உவமைகளுடன், காத்திரமான ஒரு கவிதை.
கவிதை அருமை மச்சி
அருமையான கவிதைகள்.
கிழிந்த கிடுகிடையே
தலை கவிழ்ந்து
தொங்கும் வௌவால்களாய்
தம் எதிர்காலம் பற்றிய
ஏக்கங்களோடு
முன்னாள் போராளிகள்///
மிகவும் வலி நிறைந்த வ[லி]ரிகள்....[[:
தமிழ்மணத்தில் ஏழு.
கவிதை...
ஆரம்பம் இரட்டை வேட சாடல்...
முடிவில் ஏக்கங்களும் கனமும்...
அறிமுக கவிஞர் துவாரகனுக்கு வாழ்த்துக்கள்...
//அச்சடிக்கப்படாத
எழுத்துருவில் இல்லாத
திணிப்புக்களாய்
ஆதிக்க வாதத்தின் சட்டங்கள்!
அடிமையாக தமிழன்
காலம் தோறும்
வாழ வேண்டும் எனும்
தூர நோக்கில் பல திட்டங்கள்//
நெஞ்சை சுரீர் என்று குத்திய வரிகள் .கவிதை சாட்டையடி .
முரண் என்ற ஒற்றை சொல்லில் இந்த வரிகளை அடக்கி விட்டாலும் உணர்வுகளை?
////அப்பாவிகளின்
கண்ணீரை நீராக்கி
கட்டப்படுகின்றது
மகிந்தரின் மன்மத மாளிகைகளும்,
சொர்க்கத்தை உண்டு பண்ணும்
களியாட்ட விடுதிகளும்!/////
இதுவுமா?
முகத்தில் அறையும் கவிதைகள் சகோ!
கவிதைப்பதிவில் கவிஞர் அறிமுகமா? அவருக்கு வாழ்த்துக்கள்.
வணக்கம் நிரூபன் இதைத்தான் ஊரில சொல்லுவாங்களே ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடின்னு.!!!))
கவிஞர் துவாரகனுக்கு வாழ்த்துக்கள்!
அறிமுகப்படுத்திய பதிவருக்கு வாழ்த்துக்கள் பாஸ்...
உங்கள் கவிதை அருமை என்று நான் சொல்லத்தேவையில்லை அப்படி சொன்னால் அது சச்சினுக்கே கிரிக்கெட் சொல்லிக்கொடுப்பது போல் இருக்கும்
உங்கள் சிந்தனையின் வீச்சு என்னைப் பிரமிக்க வைக்கிறது.அருமை.
கவிதை நன்றாக இருக்கு.
அந்தக் ...கிளிநொச்சி வரவேற்கிறது... பார்க்க மனம் எங்கேயோ போய்... கவலையாகிறது:((((.
காலத்தின் கோலத்தில் தமிழினத்தின் அலங்கோலத்தை கவிதையாய் வடித்திருக்கிறது பதிவு.
@Ramya Parasuram
நமக்கு நாம திட்டத்தின்கீழே உங்களுக்கு நீங்களே காமெண்ட் ஐடியா மணி, பன்னிக்குட்டி, எருமைமாடு, போட்ருவீங்களா?
பின்னூட்டங்கள் யாவும் மட்டுறுத்தப் பட வேண்டும் என்று தமிழ்மணம் சொல்லியிருக்காது. மட்டுருத்தினா அநாவசிய பிரசனைக்க வராதுன்னுதா சொல்லிருக்கும். தப்பா புரிஞ்சுகிட்டீங்களா நாத்து? ஒங்க பிளாக்க அவங்க என்னங்க கண்ட்ரோல் பன்னறது?//
உங்களுக்கு என்ன விசர் பிடிச்சிருக்கா?
ஐடியாமணி வேற ஆளு, நான் வேற ஆள்.
அது கூட தெரியாம இம்புட்டு நாளா பதிவுலத்தை அறிந்த ஆள் மாதிரி கமெண்ட் போடுறீங்களே;-)))
////Ramya Parasuram said... /// ஏங்க ஒங்கட நாட்டு பக்கம் பொம்பளைங்களும் தண்ணி அடிப்பாங்களா;)))
கவிதை நல்லா இருக்கு சார்...
///தூரிகை கொண்டு
தீட்டப்பட முடியாத
சிற்பங்களாய்
காலம் விட்டுச் சென்ற
அவலத்தின் கோடுகள்!/// ;((
///கிழிந்த கிடுகிடையே
தலை கவிழ்ந்து
தொங்கும் வௌவால்களாய்
தம் எதிர்காலம் பற்றிய
ஏக்கங்களோடு
முன்னாள் போராளிகள்!///;((
மாலை வணக்கம்!கவிதை அருமை நிரூபன்,வாழ்த்துக்கள்!பாவம் அந்தப் பெண்?ரம்யா பரசுராம்.ஏன் வீணாக மண்டையை உடைத்துக் கொள்கிறீர்கள்!அவருக்கும் "எதுவோ" தெரிந்திருக்கிறதென்று?! விட்டு விட வேண்டியது தானே?
ரொம்ப நல்ல கவிதை நிரூபன், பல விடயங்களை தொட்டுச் செல்கிறது. நல்ல வார்த்தை வீச்சு!
முரண்பாடுகளை கோடிட்டு காட்டுகிறது கவிதையின் ஆரம்பம், ஈழ மக்களின் வாழ்கையையும் அவர் சந்திக்கும் அவலங்களையும் கூறுகிறது கவிதையின் முடிவு.. (சுருக்கம் சரியா?) வாழ்த்துக்கள் நிரு..
இந்த கவிதைக்கு நான் தலை வணங்குகிறேன்
மனச் சிறையின் ஓரத்தில்
சிறு பான்மை மக்களின்
உணர்வலைகள் தூசிகளாய்
அமிழ்ந்து போய் கிடக்கின்றன!
நாளைய விடியலுக்கான
பாதை தொலைவில் இல்லை
எனும் நம்பிக்கை நிறைந்த
வார்தைகளை
நம்பியே கெட்டபடி
ஈழத்தின் அப்பாவி மக்கள்!//
தீர்க்க முடியாத வலியாய் உங்கள் கவிதை மனதை அழ செய்கிறது நண்பா.... உங்களது ஆதங்கத்தை தரமான கவிதையாய் கொடுத்து கனக்க வைத்துவிட்டீர்கள்
அந்த கிளிநொச்சி வரவேற்பு... தீர்க்கமாக பார்க்க வைக்கிறது... பகிர்வுக்கு நன்றி நண்பா... ஈழத்து பதிவுகளால் சாதனைகள் படைத்து உண்மைகளை வெளிகொணருங்கள்...
துயரங்களையும் அதனைத் தந்தவர்களின் ஆட்டங்களையும் சாடிவந்திருக்கின்ற சிறப்பான கவிதை!
எங்கெங்கு காணினும் வலிகளடான்னு பாரதியார் இருந்திருந்தா பாடி இருப்பார்
மனதை தொடும் கவிதை அண்ணா ! :(
கவிஞர் துவாரகனுக்கு என் வாழ்த்துக்கள் !
அச்சடிக்கப்படாத
எழுத்துருவில் இல்லாத
திணிப்புக்களாய்
ஆதிக்க வாதத்தின் சட்டங்கள்!///
இது எல்லா இடத்துக்கும் பொருந்தும் சகோ....
உணர்வு மிக்க கவிதை. அருமை.
உணர்வு மிக்க கவிதை. அருமை.
கவிஞர் துவாரகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
நாளைய விடியலுக்கான
பாதை தொலைவில் இல்லை
எனும் நம்பிக்கை நிறைந்த
வார்தைகளை
நம்பியே கெட்டபடி
ஈழத்தின் அப்பாவி மக்கள்!. . .
உண்மைதான் சகா. . .வலிகளுடன். . .
//பெண் உரிமை பற்றி
அனல் பறக்கும்
வார்த்தைகளைப் பேசிய
பெரியவரின் வீட்டு
வேலைக்காரியின்
விடுதலையை நோக்கிய காற்
கடத்தில் சீழ் படிந்த தழும்புகள்!//
இதைப் படித்தாலும் தாங்கள் செய்யும் பாவம் அவர்களின் மண்டையில் ஏறுமோ தெரியவில்லை... அவ்வளவு கடைந்தெடுத்த சுயநலவாதிகள். இந்த வார்த்தைகள் நல்ல சவுக்கடி.
வழக்கம் போல் எழுத்து அருமை, தம்பி...
இதைப் படித்தாலும் தாங்கள் செய்யும் பாவங்கள் அவர்களின் மண்டையில் ஏறுமோ தெரியவில்லை... அவ்வளவு கடைந்தெடுத்த சுயநலவாதிகள். இந்த வார்த்தைகள் நல்ல சவுக்கடி.
வழக்கம் போல் எழுத்து அருமை, தம்பி...
தாங்கள் செய்யும் பாவங்களை உணரமாட்டார்கள், அந்த கடைந்தெடுத்த சுயநலவாதிகள். இந்த வார்த்தைகள் நல்ல சவுக்கடி.
வழமை போல் எழுத்து மிக அருமை தம்பி...
தமிழ்வாசி - Prakash has left a new comment on your post "கிழிந்த கிடுகிடையே தலை கவிழ்ந்து தொங்கும் வௌவால்கள...":
தமிழ்மணம் 19 வந்தததால் உங்கள் கருத்து படி ஒட்டு போடவில்லை...
Post a Comment