நவீன மகளுக்காய் நடு ரோட்டில் வீழ்ந்த தந்தை!
பொங்கலுக்கு வந்த மகள் ரீட்டா
போதையேத்த கேட்டாள் ஒரு குவாட்டர்
போத்தலது வாங்க சென்ற அவள் அப்பன்
போதையிலே தள்ளாடி வீழ்ந்தார் அரை மப்பில்!
மெல்லிதாய் இருள் சூளும் நேரம்
மேனியில் பட்டது சில்லெனும் காற்று,
பேருந்திற்காய் தனித்து நான் நின்றேன்;
பேச்சுத் துணைக்காய்
தூரத்தே ஒரு பெண்
வருவதனை(ப்) பார்த்து அகம் மகிழ்ந்தேன்!
அவளைக் கண்டதும் அடையாளம் கொண்டேன்!
அன்பாய் "ஹாய் செல்லம்" என்று
பிரகாஷ்ராஜ் ஸ்டைலில்
பெயர் சொல்லி அழைத்தேன்
சீ தூ என செருப்பால் அடித்தாள் பாவி
என் சிகப்பு மூஞ்சியில்
தழும்பை வரவைத்த அவள் ஓர் கேடி!
குறும்புக் குணமும் குழந்தை(த்) தனமும்!
நைட்டு பத்து மணி வரைக்கும்
ஓயாது உன் தொல்லை
அப்புறம் பக்குவமாய் என் அருகே
தூங்கிடுவாள் சிறு முல்லை
குறும்புகள் செய்வதில் அவள் ஓர் கள்ளி
குழந்தையாய் இருந்து கீதம் இசைப்பதினாலா
என் அத்தை மகள் பெயர் இசைச்செல்வி?
மாற்றமே இல்லாத மங்கை மனமுண்டா?
அவள் கொஞ்சம் புதுமையானவள்
அன்பாய் பழகினால் இனிமையானவள்
கண்களால் பின்னூட்டும் கவிதையானவள்
நெஞ்சிலே எனைத் தாங்கும் உயிரானவள்
"இப்படி ஓர் நாள் நண்பன் சொன்னான்".
அன்பாய் பழகினால் இனிமையானவள்
கண்களால் பின்னூட்டும் கவிதையானவள்
நெஞ்சிலே எனைத் தாங்கும் உயிரானவள்
"இப்படி ஓர் நாள் நண்பன் சொன்னான்".
நீண்ட நாட்களின் பின்னர்
அவனிடம் கேட்டேன்,
இப்போது உந்தன் அழகுச் சிலை
இப்போது உந்தன் அழகுச் சிலை
எங்கே மச்சி என்று?
"பழகுவதில் எப்போதுமவள் தனிரகம்
பணத்தைச் சுருட்டுவதிலோ அவள் முதலிடம்
குணத்தில் அவள் இப்போ குள்ள நரி- காரணம்
குற்றுயிராய் எனை விட்டு
போய் விட்டாள் வெளியிடம்!" (வெளியிடம்- வெளி நாடு)
"பழகுவதில் எப்போதுமவள் தனிரகம்
பணத்தைச் சுருட்டுவதிலோ அவள் முதலிடம்
குணத்தில் அவள் இப்போ குள்ள நரி- காரணம்
குற்றுயிராய் எனை விட்டு
போய் விட்டாள் வெளியிடம்!" (வெளியிடம்- வெளி நாடு)
********************************************************************************************************************************************************************************
இன்றைய பதிவர் அறிமுகம் பகுதியினூடாக நாம் செல்லவிருக்கும் வலைப் பதிவு; மலையாளத் திரைப்படங்களிற்கான விமர்சனங்களையும், கேரளா பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களையும், சமூகத்திற்கு வேண்டிய இன்ன பிற குறிப்புக்களையும் தன்னகத்தே கொண்டு விளங்கும் "ஜோஸபின் கதைக்கறேன்" வலைப் பதிவாகும்.
ஜோஸபின் வலைப் பதிவினைச் சகோதரி ஜோஸபின் பாபா அவர்கள் எழுதி வருகின்றார்.
ஜோஸபின் கதைக்கிறேன் வலைப் பதிவிற்குச் செல்ல:
*************************************************************************************************************************************************************************************
|
65 Comments:
வணக்கம் மச்சி! ஹா ஹா ஹா கலகலப்பான கவிதைகள்! + கிளு கிளு + குளு குளு!!!
"பழகுவதில் எப்போதுமவள் தனிரகம்
பணத்தைச் சுருட்டுவதிலோ அவள் முதலிடம்
குணத்தில் அவள் இப்போ குள்ள நரி- காரணம்
குற்றுயிராய் எனை விட்டு
போய் விட்டாள் வெளியிடம்!" ////////
ஹி ஹி ஹி வெளிநாடுகளில் இருக்கும் சகோதரிகள் குழம்பப் போகிறார்கள்!
நைட்டு பத்து மணி வரைக்கும்
ஓயாது உன் தொல்லை
அப்புறம் பக்குவமாய் என் அருகே
தூங்கிடுவாள் சிறு முல்லை
குறும்புகள் செய்வதில் அவள் ஓர் கள்ளி
குழந்தையாய் இருந்து கீதம் இசைப்பதினாலா
என் அத்தை மகள் பெயர் இசைச்செல்வி?//////
வாவ்! இது.... இது..... இது கவிதை!
ஜோசஃபின் மேடத்துக்கு வாழ்த்துக்கள்! துணிச்சலான பதிவர்! அவரோட எல்லாப் பதிவுகளையும் படிச்சிருக்கேன்! ஆனா கமெண்டு போட்டதில்லை!
நாம எல்லாம் மொக்கை பதிவர்கள் என்ற கெட்ட பேரோடு இருப்பதால், மேடம் மாதிரியான நல்ல பதிவர்கள் பக்கம் போறதில்லை!
மத்தபடி பதிவுகளை தவறாமல் படிப்பேன்!
கடைசி கவிதை சூப்பர், ஆனா அதுக்கு பிந்து மாதவி படம் போட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்.
வணக்கம் நிரூபன் கவிதை அருமை ஆனா நீங்க வெளிநாட்டில இருக்கிற பொண்ணுங்களை சீண்டுறீங்க இது தப்பு..
செருப்பே இம்புட்டு பெருசுன்னா அவ மனசு எம்புட்டு பெருசா இருக்கும்..
"பழகுவதில் எப்போதுமவள் தனிரகம்
பணத்தைச் சுருட்டுவதிலோ அவள் முதலிடம்
குணத்தில் அவள் இப்போ குள்ள நரி- காரணம்
குற்றுயிராய் எனை விட்டு
போய் விட்டாள் வெளியிடம்''
எப்பிடி முடியுது உங்களால் அருமை
////
"பழகுவதில் எப்போதுமவள் தனிரகம்
பணத்தைச் சுருட்டுவதிலோ அவள் முதலிடம்
குணத்தில் அவள் இப்போ குள்ள நரி- காரணம்
குற்றுயிராய் எனை விட்டு
போய் விட்டாள் வெளியிடம்!" (வெளியிடம்- வெளி நாடு////
ஆகா நிரூபன் பாஸ் தானா செம்பை நெளிக்க ஒரு மேட்டர் எடுத்துக்கொடுத்து இருக்கார்...ரைட்டு...கும்மப்போறாங்கய்யா...கும்மப்போறாங்க...
@
காட்டான் said...
வணக்கம் நிரூபன் கவிதை அருமை ஆனா நீங்க வெளிநாட்டில இருக்கிற பொண்ணுங்களை சீண்டுறீங்க இது தப்பு./////
இந்தாச்சரி மாம்ஸ்க்கும் நிரூபன் பாஸ்க்கும் இன்னும் பழய பஞ்சாயத்தை இழுபறியா இருக்கு இப்ப புதுஷா(அப்பா கோத்துவிட்டாச்சு)
அறிமுகப்படுத்திய பதிவர் சகோதரிக்கு வாழ்த்துக்கள்
ஹ ஹா, டி.விஜய ராஜேந்தரிடம் பயிற்சி எடுத்தீர்களோ?
என்ன குட்டிக் கவிதையா
அல்லது
புட்டிக் கவிதையா
புலவர் சா இராமாநுசம்
முதல் கவிதை- அப்பனும் மகளும் சேம் பிளட்டா..... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இரண்டாவது படம்... ஓ இதான் ஹை ஹில்ஸ்ஸ்ஸ்ஸாஆஆஆ.. அவ்வ்வ்வ்வ்வ்வ்.. இதுல அடி வாங்குனா செத்துல்ல போயிருவாங்கிய
மழலைக்கவிதை சோ க்யூட்....
ஆஹா குணத்திலே அவள் குள்ளநரி.. ஹா ஹா ஹா கவிதை ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
சகோதரி ஜோஸபின் பாபா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
//கண்களால் பின்னூட்டும் கவிதையானவள்//
அண்ணன் பின்னூட்டத்தை விடுறாரே இல்லை! :-)
அருமை!!!
வணக்கம் நிரூபன் §§§§/என் சிகப்பு மூஞ்சியில்
தழும்பை வரவைத்த அவள் ஓர் கேடி!/யாருக்கு சிகப்பு மூஞ்சி?????/
மரபுக் கவிதையில் லொள்ளா....கலக்குறீங்களே!
சகோதரி ஜோஸபின்னுக்கு வாழ்த்துகள்.
// பொங்கலுக்கு வந்த மகள் ரீட்டா
போதையேத்த கேட்டாள் ஒரு குவாட்டர்
போத்தலது வாங்க சென்ற அவள் அப்பன்
போதையிலே தள்ளாடி வீழ்ந்தார் அரை மப்பில்! //
அப்பனக்கும் மகளுக்கும் இடையில் கடும் போட்டி போல..நல்ல குடும்பம்யா.
யோ, எனக்கு எப்போய்யா மரபுக்கவிதை எழுத சொல்லித்தரப் போறீங்க? மறந்துட்டீங்களா?
நண்பா கலக்கும் கவிதைகள்
அறிமுக பதிவருக்கு வாழ்த்துகள்
நண்பர்களே இன்று பதிவு திருட்டு பற்றி ஒரு பதிவு போட்டுருக்கேன்.வந்து பாருங்க
பதிவை திருடினாலும் இனி கவலை இல்லை?
///பழகுவதில் எப்போதுமவள் தனிரகம்
பணத்தைச் சுருட்டுவதிலோ அவள் முதலிடம்
குணத்தில் அவள் இப்போ குள்ள நரி- காரணம்
குற்றுயிராய் எனை விட்டு
போய் விட்டாள் வெளியிடம்!///
தொப்பி... தொப்பி...
கவிதைகள் மிகவும் அருமை அண்ணா !
SHORT BUT SWEET ரகம் ... வாழ்த்துக்கள் !
அறிமுக பதிவர், சகோ ஜோசெபின் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் !
இனிய மதிய வணக்கம் நிரூபன்,
கலகலப்பான கவிதைகளை வழங்கியிருக்கிறீர்கள்.
//"பழகுவதில் எப்போதுமவள் தனிரகம்
பணத்தைச் சுருட்டுவதிலோ அவள் முதலிடம்
குணத்தில் அவள் இப்போ குள்ள நரி- காரணம்
குற்றுயிராய் எனை விட்டு
போய் விட்டாள் வெளியிடம்!"//
அனுபவமோ!
கடைசிவரிகளை பார்த்தா கொஞ்சம் சேதாரம்தான் போல.....?
தலைப்பு :))))) தந்தது.
என் சிகப்பு மூஞ்சியில்
தழும்பை வரவைத்த அவள் ஓர் கேடி!//
என்னாது சிகப்பு மூஞ்சியா...??? பிச்சிபுடுவேன் பிச்சி, அண்டங்காக்கை கலர்ல இருந்துட்டு ஹாய் செல்லம்னு சொன்னால் செருப்பு என்ன செருப்பு, கராத்தே அடியே கிடைக்கும் ம்ஹும் சிகப்பாம்ல....ஹி ஹி....
சிறந்த சமூக அக்கறை கொண்ட பதிவுகள் ஜோசபின் பிளாக்'கில் காணலாம்...!!! அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்....
எங்கே மச்சி என்று?
"பழகுவதில் எப்போதுமவள் தனிரகம்
பணத்தைச் சுருட்டுவதிலோ அவள் முதலிடம்
குணத்தில் அவள் இப்போ குள்ள நரி- காரணம்
குற்றுயிராய் எனை விட்டு
போய் விட்டாள் வெளியிடம்!" (வெளியிடம்- வெளி நாடு)
//
என்ன பாஸ் அப்ப வெளிநாடு போறவை மட்டும் தான் அப்படியா ஏன் கொழும்பில் இருக்கும் நாகரிக மங்கைகள் சிலர் இப்படிச் செய்வதை கேள்விப்பட்டதில்லையா?
KANA VARO said...
செருப்பே இம்புட்டு பெருசுன்னா அவ மனசு எம்புட்டு பெருசா இருக்கும்?///உண்மையிலேயே செருப்பைத் தான் சொல்கிறீர்களா?
குழந்தை சூப்பர்!யாரோடது?????????
hai ஹை க்ளாஸ் ஃபிகர் போல. ஹை ஹீல்ஸ் செப்பலில் கம்மிங்க்./ ஹி ஹி
பழகுவதில் எப்போதுமவள் தனிரகம்
பணத்தைச் சுருட்டுவதிலோ அவள் முதலிடம்குணத்தில் அவள் இப்போ குள்ள நரி- காரணம் குற்றுயிராய் எனை விட்டுபோய் விட்டாள் வெளியிடம்!" (வெளியிடம்- வெளி நாடு)
அசத்தலான வரிகள் வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .....
//பொங்கலுக்கு வந்த மகள் ரீட்டா
போதையேத்த கேட்டாள் ஒரு குவாட்டர்
போத்தலது வாங்க சென்ற அவள் அப்பன்
போதையிலே தள்ளாடி வீழ்ந்தார் அரை மப்பில்!
//
கலக்கல்
@Powder Star - Dr. ஐடியாமணி
மணி sir யாரைக் குத்திக்காட்டுறீக......
கவிதைகள் அனைத்தும் பாட்டாய் மாற்றி விடலாம்...
ரெண்டில் நம்ம சூர்யாவையும் ராஜேந்தரையும் இணைத்து பாட சொல்லலாம்..(சபாஸ் என்ன ஒரு கற்பனை...)
சகோதரி ஜோக்கு வாழ்த்துக்கள்...
மூன்றாம் உலகப்போர் இன்னும் தொடர்கிறதா...?
@MANO நாஞ்சில் மனோ
சரியாச் சொல்லிட்டீங்க மனோ sir....
ஹி...ஹி....
கவிதை கருவை விட...
வரிகள் அருமை....
கவிதை அழகு!...பதிவர் அறிமுகம் அருமை....வாழ்த்துக்கள்!
கவிதைகள் அனைத்தும் கலக்கல்.
//காரணம்
குற்றுயிராய் எனை விட்டு
போய் விட்டாள் வெளியிடம்!" (வெளியிடம்- வெளி நாடு)//
ஹா..ஹா...ஹா... இங்கேயும் அணிலை மரமேறவிட்ட .... கதைதானோ?:)))))))
அடடா பழையபடி வேதாளம் முருங்கில் ஏறிய கதையாக்கிடக்கே அவ்வ்வ்வ்:))), நான் அப்புறூவலைச்:))) சொன்னேனாக்கும்.
இப்படியே வைத்திருங்கோவன் நிரூபன்.
@
athira said...
அடடா பழையபடி வேதாளம் முருங்கில் ஏறிய கதையாக்கிடக்கே அவ்வ்வ்வ்:))), நான் அப்புறூவலைச்:))) சொன்னேனாக்கும்.
இப்படியே வைத்திருங்கோவன் நிரூபன்//
இப்படியே அப்ரூவல் போட்டு வைச்சிருந்தால் தான் கண்ட விளம்பரங்களையும் கட்டுப்படுத்தலாம், இல்லேன்னா ஏதோ குப்பை கொட்டுற மாதிரி விளம்பரங்களைப் போட்டு கொல்லுறாங்க.
கலக்கல் கவிதைகள்!
வணக்கம் பாஸ்!
நாற்றில்
இன்று கவிதைக்காற்று !
எங்களை எல்லாம் அசத்திட்ற்று
இன்னாயா இதுக்கெல்லாம் மைனஸ் ஓட்டு போடுறாங்களா??? யாருக்கு அந்த காழ்ப்புணர்ச்சி ?????
///சீ தூ என செருப்பால் அடித்தாள் பாவி
என் சிகப்பு மூஞ்சியில்
தழும்பை வரவைத்த அவள் ஓர் கேடி!// ஏன் மாலைக்கண்ணா??? மாறி கீறி அழைச்சுட்டினகளோ??))
////நைட்டு பத்து மணி வரைக்கும்
ஓயாது உன் தொல்லை
அப்புறம் பக்குவமாய் என் அருகே
தூங்கிடுவாள் சிறு முல்லை /// பாவம் சார் நீங்க அவ்வ்வ்வ் )))
////"பழகுவதில் எப்போதுமவள் தனிரகம்
பணத்தைச் சுருட்டுவதிலோ அவள் முதலிடம்
குணத்தில் அவள் இப்போ குள்ள நரி- காரணம்
குற்றுயிராய் எனை விட்டு
போய் விட்டாள் வெளியிடம்!" /// நல்ல இடமாய் மாட்டிக்கிச்சு போட்டா .... சாமர்த்தியசாலி தானே !!))
மரபுக்கவிதையிலும் நீங்க மன்னன் தான் பாஸ் ...
என்னய்யா போடுற கமெண்ட் எல்லாம் லேட்டா பப்பிளிஷ் ஆகுது ...இரண்டாவது கமெண்ட் ஐ காணேல்ல... என்ன மெசின் பழுதாய் போச்சோ ????
கந்தசாமி. said...
///பொங்கலுக்கு வந்த மகள் ரீட்டா
போதையேத்த கேட்டாள் ஒரு குவாட்டர்
போத்தலது வாங்க சென்ற அவள் அப்பன்
போதையிலே தள்ளாடி வீழ்ந்தார் அரை மப்பில்!//// ம்ம் எங்கடையாக்கள் ஓவராய் அடிச்சுப்புட்டு மட்டயாகிறது தானே...
வணக்கம் சகோதரா; நலமா? . சிறிய இடைவேளையின் பின்னர் சந்திக்க வேண்டியாயிற்று என்ன கொஞ்சம் பிசி
மிக ரசித்து படித்தேன் . எல்லாமே அருமையான கவிதைகள் .
ஆஹா,,
பாஸ் ஹாய் சொன்னதுக்கே செருப்படியா கொஞ்சம் ஓவர் கற்பனையில்ல,,
//நைட்டு பத்து மணி வரைக்கும்
ஓயாது உன் தொல்லை
அப்புறம் பக்குவமாய் என் அருகே
தூங்கிடுவாள் சிறு முல்லை//
சூப்பர்.. 10 மணிவரைக்கும் யார் தொல்லை.. குழந்தையா?
மிக்க அருமையான பதிவு நண்பா.
கவிதைகள் எல்லாம் அருமை நண்பா! வாழ்த்துக்கள்!
அன்பு நண்பர்களை கருத்தை இன்றே கவனித்தேன். மிக்க நன்றி மகிழ்ச்சிகள். அறிமுகப்படுத்திய நண்பருக்கு என் பணிவான வணக்கங்கள்.
@செங்கோவி மிக்க நன்றி நண்பா
@MANO நாஞ்சில் மனோ நன்றி நாஞ்சில் நண்பரே. நலமல்லவா. சந்தித்து பல வருடங்கள் ஆகி விட்டதே. ஓர் பதிவர் கூட்டம் ஏற்பாடு செய்யலாமே
@மாய உலகம் நன்றி வணக்கங்கள் தோழா
ஆறிமுகப்படுத்தியமைக்கு நன்றி நண்பரே
Post a Comment