ஏழாவது பாகத்தின் தொடர்ச்சியாக.......
"ஐயா முஸ்லிம்கள் பற்றி ஏதும் சொல்லையே?" என நான் மீண்டும் நினைபடுத்தினேன். "நிரூபன் பொடியன் (பையன்) என்னைத் தூங்கவும் விட மாட்டான் போலிருக்கே" என்று ஐயா செல்லமாய்க் கோபித்தவாறு, "நாளைக்கு இரவு உனக்குத் தூக்கம் வரப் பண்ண ஏதும் வேணுமில்லே! அப்போ நாளைக்கே சொல்றேன்" என்றவாறு படுக்கையறைப் பக்கம் போனார்..............
கழுசாணை (காற்சட்டையை) பிறர் முன்னே அவிழ்த்து விட்டு நின்றால் நான் ஏதோ ஒரு பெரிய பையனாகி விட்டேன் எனும் நினைப்பு வரப் பெற்றவனாய் ஓடி ஒளியத் தொடங்கி விட்டேன். அத்தோடு ஐயாவின் குளிக்க வார்க்கும் படலமும் நிறைவு பெற்று விட்டது. விரும்பினால் "நீ "பேபி வாளியினுள்" ஊத்து நான் வேண்ணா அள்ளிக் குளிக்கிறேன்" என்று சொல்லி விட்டு, முன்பெல்லாம் கழுசாணைக் கழற்றி விட்டுக் குளிக்கத் தொடங்கிய நானோ கழுசாணோடு குளிக்கத் தொடங்கினேன். செவ்வரத்தை இலையின் சாறெடுத்து அதனை நசித்து, கைகளால் பிசைந்து தலையில் வைத்து தோய வார்க்கும் போது உச்சி குளிரும்.
நான் குளித்து அல்லது தலை முழுகி முடிந்த பின்னர் சாம்பிராணியைக் (ஊதுபத்தி) கொழுத்தி மணக்கத் தருவார்கள். காரணம் கேட்டால் தடிமன் பிடிக்காது என்று ஒரு கதை வேறு சொல்லுவார்கள். குளித்து முடித்ததும் கறுத்தப் பொட்டினை (சிறுவர்களுக்கான பொதுவான பொட்டு) நெற்றியிலும், கன்னத்திலும் வைத்து விடுவார்கள். இந்தக் கறுத்தப் பொட்டினையும் செவ்வரத்தைச் சாறிலிருந்து தான் எம் ஊர்களில் செய்வார்கள். என் எட்டு வயது வரை நான் கறுத்தப் பொட்டுடன் ஒரு களை நிறைந்த சிறுவனாக வலம் வந்திருக்கிறேன்.
காலைக் கடன்களை முடித்து பாடசாலைக்கு அம்மா என்னை ஆடை அணிவித்து நெற்றியில் சிறு பொட்டு வைத்து, பள்ளிச் சீருடையின் வலது பக்கத்தில் "கொலருக்கு” கீழாக (கழுத்துப் பகுதிக்கு அருகே) சிறியதோர் கைக்குட்டையினை ஊசி கொண்டு குற்றி, கையில் ஒரு தண்ணீர்ப் போத்தலும் தந்து அனுப்பி வைப்பா. எப்போது பள்ளி முடியும் என ஆவல் மேலெழும்ப ஐயாவிடம் கதை கேட்கனுமே எனும் உந்துதல் என் மனதை வாட்ட நான் எதிர்பார்ப்போடு காத்திருந்தேன். உண்மையில் நான் எல்லாம் அந்த நாட்களில் பாண்டியன் குளம் மகாவித்தியாலத்திற்குப் போனது சிறு வயதில் இடைவேளையின் போது தரப்படும் பசுப் பாலினையும், பிஸ்கட்டினையும் வாங்கி உண்பதற்காகத் தான்.
மதியம் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்து ஐயாவைத் தேடின என் கண்கள். "ஐயா இல்லை. ஐயா வயலுக்குப் போயிருப்பதாக அம்மா சொன்னா(ர்)." "சே...ஐயாவோடு வயலுக்குப் போயிருந்தாலாச்சும் மிகுதிக் கதையினைக் கேட்டிருக்கலாம். நான் குடுத்து வைச்சது இவ்வளவும் தான் என" என்னை நானேன் சினந்தவனாக ஐயாவின் வருகையினை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஐயா வரும் வரைக்கும் என் பொழுதினைப் கழிக்கும் வண்ணம் அயல் வீடுகளிலிருந்த சிறுவர்களின் திடீரெ விஜயம் எனக்கு உதவியளித்தது. ஐயா வரும் வரை நாமெல்லோரும் ஆமியும் இயக்கமும் விளையாடலாம் என முடிவெடுத்தோம்.
வீட்டின் பின் புறத்தே இருக்கும் பூவரச மரத்திலிருந்து சிறு தடிகள் பிடுங்கி அதனைத் துப்பாக்கி போல வளைத்து ஆமியும் இயக்கமும் (புலிகள்) விளையாட்டு விளையாடத் தொடங்கினோம். 1990ம் ஆண்டின் பின்னரான காலப் பகுதியில் ஈழத்தில் பிறந்து வளர்ந்த பல சிறுவர்களின் பொழுது போக்கு விளையாட்டுக்களுள் இந்த ஆமியும் புலியும் விளையாட்டும் உள்ளடங்கும். ஆமியும் இயக்கமும் விளையாட்டில் ஒரு குறூப் சிறுவர்கள் ஆமி போன்றும், மற்றைய குறூப் சிறுவர்கள் புலிகள் போன்றும் தங்களைப் பாவனை செய்து சண்டைக்குத் தயாராகுவார்கள்.
அப்போது படலையில் (வாசலில்) ஐயா வரும் சத்தம் கேட்டது. என் நாடியில் உள்ள வலியினை மறந்தவனாய் ஐயா என ஓடிச் சென்றேன். ஐயா தன் இரு கைகளிலும் என்னை ஏந்தியவராய் (தூக்கியவராய்) வீட்டிற்குள் வந்தார். அப்போது தான் என் நாடியிலிருந்த காயத்தினைக் கவனித்தவராக காரணம் கேட்டார். நான் காரணம் சொல்லி விட்டு, "மிகுதி வரலாற்றினை சொல்லவில்லையே" என நினைவுபடுத்தினேன். "இருடா பொடியா! நான் குளிச்சு உடுப்பு (ஆடை) மாற்றி வந்து கதை சொல்லத் தொடங்கிறேன்" என்று சொல்லி கிணற்றடிப் பக்கம் போனார் ஐயா.
நான் ஐயா எங்கே கதையினை நேற்றிரவு நிறுத்தியிருந்தார் என்பதனை நினைவுபடுத்தி வைத்திருந்தேன். ஐயா குளித்து முடித்து வந்ததும் சாப்பிடத் தொடங்கினோம். சாப்பிட்ட பின்னர் ஐயா "கதையினை எங்கே நிறுத்தினோம்" எனக் கேட்டார். நான் "இலங்கையில் சிங்கள இனப் பரம்பல் பற்றிச் சொல்லி விட்டு அடுத்ததாக இலங்கைக்கு எப்போது முஸ்லிம் மக்கள் வந்தவர்கள் என்று சொல்லுவதாகச் சொல்லியிருந்தீங்க" என்று சொன்னேன். ஐயா வரலாற்றினை கதை சொல்வது போன்ற பாணியில் (பாவனையில்) மீண்டும் சொல்லத் தொடங்கினார்.
"இப்ப எல்லோரும் கவனமாக கேளுங்கோ. பிறகு எங்கேயும் பராக்குப் பார்த்து விட்டு (வாய் பார்த்து விட்டு) வரலாற்றினைக் கேட்கவில்லையே! மறுபடியும் சொல்லுங்கோ என்று கேட்க கூடாது" எனச் சொல்லியவாறு ஐயா தன் இரவுப் பிரசங்கத்தினைத் தொடங்கினார்.
இலங்கைத் தீவில் வாழும் மக்களுள் முஸ்லிம் மக்களும் தமக்கென்றோர் தனியான, நீண்ட பாரம்பரிய வரலாற்றினைக் கொண்டவர்களாக வாழ்கிறார்கள். இலங்கைத் தீவில்(ஈழத்தில்) முதன் முதலாக வியாபார நோக்கோடு கி.பி 414ம் ஆண்டு தென் அரேபிய வர்த்தகர்கள் காலடி எடுத்து வைக்கிறார்கள். ஆனாலும் அவர்களது வருகையானது வியாபார நோக்கோடு இருந்தது. இதன் பின்னர், கி.பி 628ம் ஆண்டளவில் "வஹாப் இப்னு அபீ ஹப்ஸா" எனும் நபிகளின் தோழர் இலங்கைக்கு வருகை தந்து, "இலங்கையர்களை இஸ்லாமியர்களாகவும், இலங்கை மன்னனாக அக் காலத்திலிருந்தவனை இஸ்லாமிற்கு மதம் மாறும் படியும்" கோரியிருந்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன.
"ஐயா வரலாறுகள் கூறியிருப்பது எல்லாம் இருக்கட்டும். இலங்கையினுள் எப்படி? எப்போது முஸ்லிம் இன மக்கள் வந்தார்கள் என்று சொல்ல முடியுமா?" என அம்மா குறுக்கிட்டா(ர்). ஐயா தான் விட்ட இடத்திலிருந்து ஆரம்பித்தார்..............................................
வரலாறு விரியும்............................
***********************************************************************************************************************************************
இன்றைய பதிவர் அறிமுகம் பகுதியினூடாக குழந்தை வளர்ப்பு, குழந்தைகளின் குதூகல வாழ்விற்குத் தேவையான தகவல்கள் எனப் பெற்றோருக்குப் பயனுள்ள பல விடயங்களை அலசுகின்ற "தமிழ் பேரன்ட்ஸ்"வலைப் பதிவிற்குத் தான் நாம் செல்லவிருக்கின்றோம். "சம்பத்குமார்" அவர்கள் இந்த தமிழ் பேரன்ட்ஸ் வலைப் பதிவினை நிர்வகித்து வருகின்றார்.
தமிழ் பேரன்ட்ஸ் வலைப் பதிவிற்குச் செல்ல:
http://www.tamilparents.com/
****************************************************************************************************************************************************
|
38 Comments:
சிறப்பான முறையில் பதிவு செய்து செல்கிறீர்கள்சகோ!
அருமை நிரூ நல்லா சொல்லுறீங்க வரலாறு
வணக்கம் மச்சி! நலமா? இரு படிச்சுட்டு வர்ரேன்!
என்னைக் குளிக்க வார்ப்பது முதல் தலை முழுகச் (தோய்தல்) செய்வது வரை ஐயாவே என் பத்து வயது வரைக்கும் செய்திருப்பார். பின்னர் என்னை அறியாமலே வெட்கம் என்னைச் சூழ்ந்து கொண்டிருக்க வேண்டும். ////////
ஹி ஹி ஹி ஹி எனக்கும் இப்படியான அனுபவம் இருக்கு மச்சி! எனக்கு அப்பாதான் குளிக்க வார்ப்பார்! குளிக்கும் போது காற்சட்டையோடு குளிச்சா, அடிவிழும்!
நாங்கள் சிறியவர்களாக இருக்கும் போது வறுமை என்பதால், பள்ளிக்கூதத்துக் போடுற அதே நீலக்கலர் காற்சட்டையத் தான் வீட்டிலும் போடுவோம்!
அதனால், குளிக்கும் போது உரிஞ்சான் கு... உடன் தான் குளிப்போம்! பிறகு நீ சொன்னது மாதிரி 10 வயசு வரும் போது வெட்கம் வந்திட்டுது!
செவ்வரத்தை இலையின் சாறெடுத்து அதனை நசித்து, கைகளால் பிசைந்து தலையில் வைத்து தோய வார்க்கும் போது உச்சி குளிரும்.///////
சூப்பர் மச்சி! நானும் இப்படி முழுகி இருக்கேன்! செவ்வரத்தம் பூ அப்படி ஒரு குளிர்ச்சி!
இந்தக் கறுத்தப் பொட்டினையும் செவ்வரத்தைச் சாறிலிருந்து தான் எம் ஊர்களில் செய்வார்கள். என் எட்டு வயது வரை நான் கறுத்தப் பொட்டுடன் ஒரு களை நிறைந்த சிறுவனாக வலம் வந்திருக்கிறேன்.//////////
ஹி ஹி ஹி மச்சி அப்போது களையாகத் திரிந்தாய்! இப்போது காளையாகத் திரிகிறாய்!
கடைசி பாகம் இப்ப வராது போலிருக்கே
வீட்டின் பின் புறத்தே இருக்கும் பூவரச மரத்திலிருந்து சிறு தடிகள் பிடுங்கி அதனைத் துப்பாக்கி போல வளைத்து ஆமியும் இயக்கமும் (புலிகள்) விளையாட்டு விளையாடத் தொடங்கினோம். ////////
ஹா ஹா ஹா இந்த விளையாட்டை நானும் விளையாடியிருக்கிறேன்! இதில் கன்னை பிரிக்கும் போதே சண்டை தொடங்கி விடும்!
தங்களை இயக்கம் கன்னைக்கு சேர்க்குமாறு எல்லோரும் சொல்லுவாங்கள்! ஹி ஹி ஹி!!!
மச்சி, இலங்கைக்கு முஸ்லிம்கள் வந்த கதையினை இன்று அறிய நானும் ஆவலக இருந்தேன்!
ஆனால், மீளும் நினைவுகளைச் சொன்னதனால் உன்னால் இன்று வரலாற்றினை பூரணமாக் சொல்ல முடியாது போய்விட்டது!
சரி அடுத்த பதிவில் சொல்லு!
நல்லதொரு வரலாற்றுத் தொடர்!
///செவ்வரத்தை இலையின் சாறெடுத்து அதனை நசித்து, கைகளால் பிசைந்து தலையில் வைத்து தோய வார்க்கும் போது உச்சி குளிரு///
இதை இன்றுதான் கேள்விப் படிகிறேன்.. செய்து பார்க்க வேண்டும்..
உங்க மீளும் நினைவுகள் என்னையும் பழைய காலத்துக்கு கூட்டிப் போய் விட்டது...
Ur History is super Friend
கல்சத்தை கழற்ற மறுக்கும் நாள் நீங்கள் வயதுக்கு வந்த நாள்...-:)
இஸ்லாமில் தொடங்கி இஸ்லாமில் முடித்தாலும் அதைப்பற்றி அறிய காத்திருப்பது சற்று ஏமாற்றம் தான்...
பெரியவர்கள் சிறுவர்களை மரியாதையுடன் அழைப்பது நான் சிறுவயதில் ஆச்சர்யப்பட்ட ... வயதான பின்பு கடைபிடிக்கும் வெகு சில நல்ல பழக்கங்களில் ஒன்று...
அறிமுக பதிவர் சம்பத்துக்கு வாழ்த்துக்கள்...
///கழுசாணை (காற்சட்டையை) பிறர் முன்னே அவிழ்த்து விட்டு நின்றால் நான் ஏதோ ஒரு பெரிய பையனாகி விட்டேன் எனும் நினைப்பு வரப் பெற்றவனாய் ஓடி ஒளியத் தொடங்கி விட்டேன். ///நாம நாலஞ்சு வயசில இருந்தே களுசானோட தான் ஹிஹி அப்போவே பெரியபையனாகிட்டம்ல )
///செவ்வரத்தை இலையின் சாறெடுத்து அதனை நசித்து, கைகளால் பிசைந்து தலையில் வைத்து தோய வார்க்கும் போது உச்சி குளிரும். //செவ்வரத்தம் இலையா இல்லை பூவா... பூ என்று தான் நினைக்கிறேன் ...?
///நான் குளித்து அல்லது தலை முழுகி முடிந்த பின்னர் சாம்பிராணியைக் (ஊதுபத்தி) கொழுத்தி மணக்கத் தருவார்கள்.///இப்ப போலவே அப்பவும் அவளு நீளமா உங்க தலைமுடி ஹிஹி
///என் எட்டு வயது வரை நான் கறுத்தப் பொட்டுடன் ஒரு களை நிறைந்த சிறுவனாக வலம் வந்திருக்கிறேன்.///எல்லாம் ஊர் கண் படக்கூடாது எண்டு தான் )
உண்மையில் நான் எல்லாம் அந்த நாட்களில் பாண்டியன் குளம் மகாவித்தியாலத்திற்குப் போனது சிறு வயதில் இடைவேளையின் போது தரப்படும் பசுப் பாலினையும், பிஸ்கட்டினையும் வாங்கி உண்பதற்காகத் தான்./// கொடுத்து வச்சனிங்கள்))
முஸ்லீம்களின் வரலாறை அறிய ஆவலாக உள்ளேன் ...
என் கடந்த காலங்களையும் கண்முன்னே கொண்டு வைத்துவிட்டீர்கள் இந்த பதிவு ஊடாக ...
நாங்க சத்துணவுக்காக ஸ்கூலுக்கு போன மாதிரி தான், நீங்களும் பிஸ்கட்-பாலுக்காக போயிருக்கிறீங்க..
முஸ்லிம்களின் வரலாற்றை ஆரம்பித்துள்ளீர்கள்..அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்..
//ரெவெரி said...
கல்சத்தை கழற்ற மறுக்கும் நாள் நீங்கள் வயதுக்கு வந்த நாள்...-:)//
அப்போ நான் இன்னும் வயசுக்கு வரலையோ.....
நான் குளித்து அல்லது தலை முழுகி முடிந்த பின்னர் சாம்பிராணியைக் (ஊதுபத்தி) கொழுத்தி மணக்கத் தருவார்கள். காரணம் கேட்டால் தடிமன் பிடிக்காது என்று ஒரு கதை வேறு சொல்லுவார்கள். குளித்து முடித்ததும் கறுத்தப் பொட்டினை (சிறுவர்களுக்கான பொதுவான பொட்டு) நெற்றியிலும், கன்னத்திலும் வைத்து விடுவார்கள். இந்தக் கறுத்தப் பொட்டினையும் செவ்வரத்தைச் சாறிலிருந்து தான் எம் ஊர்களில் செய்வார்கள். என் எட்டு வயது வரை நான் கறுத்தப் பொட்டுடன் ஒரு களை நிறைந்த சிறுவனாக வலம் வந்திருக்கிறேன்.//
செவ்வரத்தை இலை மற்றும் பூ கலந்து சவ்வரிசியில் செய்த பொட்டுடன் நானும் திரிந்தகாலங்கள் சேம் பீலீங்!
பாலினையும், பிஸ்கட்டினையும் வாங்கி உண்பதற்காகத் தான். //
நாங்கள் பயத்தம் உருண்டை அல்லது கடலை தருவார்கள் பாலுடன் இன்னொரு சிறிய பிஸ்கட் (பத்துசதம் பிஸ்கட்)என்பார்கள் அதுவும் சேர்த்துத் தந்தகாலம் மலரும் நினைவுகள் பாஸ்!
இந்த ஆமியும் புலியும் விளையாட்டும் //இதில் பெரியவர்கள் தான் புலிக்குறுப்பில் இருப்பார்கள் சிறியவர்களை ஆமியில் சேத்துவிடுவார்கள் மீளவும் நினைவுகள் விழியில்!
இஸ்லாமிய வரலாற்றுக்கு காத்திருக்கின்றேன் தொடருங்கள்!
வணக்கம் நிரூபன்
நாங்க செவ்வரத்தையுடன் அரப்பையும் இடிச்சு நல்லெண்ணை வைச்சு தோய்வோம்.. ஹி ஹி
குறித்து வைக்க வேண்டிய வரலாற்று பதிவுகள்
உங்களுடையது.
பதிவர் சம்பத்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
என்ன இண்டைக்கு ஐயா கதை சொல்ல லேட்டா வந்ததால முஸ்லீம்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள முடியாதுபோயிற்று.. அடுத்த பதிவில ஐயாவ அலாரம் வைச்சு எழுப்பி விடுங்கோ..!!!))
அப்ப நீங்கள் சின்னப் புள்ளயா இருக்கேக்க குளிச்சனான் எண்டு சொல்லுறியள்?அதோட செவ்வரத்தம் இலை புடுங்கி அரச்சு சாறு உச்சந்தலையில வைச்சு தோய்ஞ்சும் இருக்கிறியள்!நல்ல குளிர்மையான ஆள் தான் நீங்கள்!
பொம்பிள பாக்கச் சோல்லி ஐடியா மணி கேக்கிறார்!உள் நாட்டிலையோ,இல்லை வெளி நாட்டிலயோ?
தொடர் அருமையாகச் செல்கிறது. இடையிடையே அங்கிருந்த வாழ்வியல் சூழல்களும் வருவது அருமை....!
சிறந்த தொடர்....
அடடா.. முஸ்லிம் மக்களின் வரலாறு அறியலாம் என்று பார்த்தால் அதற்குள் முடித்துவிட்டிர்களே
பாஸ்.. குளியல் அப்படியே எம் கிராமத்து நினைவுகளை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியது.
உங்கள் குழந்தைப்பருவ நினைவுகளை அழகாக ரசிக்கும் படி சொல்லியுள்ளீர்கள் பாஸ் பெரும்பாலும் ஈழத்தில் இருந்த அனைவரின் குழந்தைப்பருவமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வாழ்க்கை முறைதான்...
வணக்கம் நண்பரே..
தங்கள் வலையில் அறிமுகப்படுத்தி அங்கீகாரம் அளித்தமைக்கு மிக்க நன்றி..
பின்னூட்டங்கள் வழி வாழ்த்திய ஒவ்வொரு நல் உள்ளத்திற்க்கும் என் மனமார்ந்த நன்றிகள்
அன்புடன்
சம்பத்குமார்
www.tamilparents.com
Post a Comment