Tuesday, September 13, 2011

இரண்டாகப் பி(ள)ரிந்தது பதிவுலகம்!

வள் ஒரு டெம்பிளேட்!

அன்பே ஆடையினை மாற்றுகையில் மனதில்
ஆசையினைத் தூண்டுகின்ற நீயோ பளிச்சிடும் டெம்பிளேட்(டு)
அடிக்கடி அணைக்க வைத்து மனசை மாற்றி
ஆப்பிள் உதட்டினைக் கடிக்க வைக்கும் உன் குணமோ 
எளிதில் புரிந்திட முடியாத இறுக்கமான பாஸ்வேர்ட்டு!

வள் மீது மோகம் ஏன்?

மையல் கொண்டு என் தோளில் சாய்ந்து
மோக ஆசையினைத் தூண்டும் வேளையினில்
நீ பேசும் வார்த்தையோ 
புரிந்து கொள்ள முடியாத பின்னூட்டம்,
தேவதை நீ என்பதால் உனைப் பின் தொடரும்
நபர்களுக்கோ காதல் கண்ணோட்டம்! 
காப்பியோடு சர்க்கரையை நீ கலந்து கொடுத்தாலும்
காதலியாய் இருப்பதனால் எனக்கோ திண்டாட்டம்,
உன் ஆதரவைப் பற்றி அடியோர் மேலெழும்ப நினைக்கையிலோ
அடிவருடும் செயலைப் புரிந்து கொள்ளாது
நீயும் அப்பீட்டாய் இருப்பது தான் உன் பாடு திண்டாட்டம்!

ரண்டாகப் பிரி(ள)ந்தது பதிவுலகம்! 

வகுப்பில் பாடம் நடாத்திக் கொண்டிருந்த ஆசிரியர் ஜிங்கா ஜிஸ்க்கன் அவர்கள், "பசங்களா இன்னைக்கு சேர்த்தெழுதுவது, பிரித்தெழுதுவது எப்படி என்று சொல்லித் தாரேன். எல்லோரும் கவனமா கேட்டுக்குங்க" என்று சொல்லியவாறு; திடீரென லாஸ்ட்டு பெஞ்சில் அரைத் தூக்கத்தில் இருந்த மாணவனை எழுப்பி "பதிவுலகம் எனும் வார்த்தையினை இரண்டாகப் பிரித்தெழுத முடியுமா?" என்று கேட்டார். 
அதற்கு அவனோ, ஆமா சார், பிரித்தெழுத முடியுமே. 
பதிவுலகம்= பதிவு + உலகம் என்று வந்து கொள்ளும் என்று ஒரு மொக்கை போட்டான் பாருங்க....
வகுப்பறையே கெக்கே பிக்கே எனும் சிரிப்பொலியில் அதிர்ந்து விட்டது. 
இப் படத்தினை உருவாக்கித் தந்வர் நண்பர்கள் வலைப் பதிவின்
ஓனர் கே.எஸ்.எஸ்.ராஜா அவர்கள்.  

இன்று முதல் என் தொல்லை ஓயப் போகிறது- இத்தால் சகலருக்கும் நான் தெரிவித்துக் கொ(ல்)ள்வது யாதெனில்: (அட சிரியுங்கப்பா...ஹே..ஹே..ஹா....)

அன்பிற்குரிய உறவுகளே, என் ஒவ்வோர் இடுகைக்கும் அதிகளவான வாக்குகளையும், பின்னூட்டங்களையும் வாரி வழங்கி என்னை ஊக்கப்படுத்தும் உங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகளை மாத்திரம் தான் இப்போது சொல்லிக் கொள்ள முடிகிறது. 
உங்களின் தார்மீக ஆதரவிற்கு மீண்டும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த வருடத்தின் பெப்ரவரி மாதம் முதல் இன்று வரை தமிழ்மணத்தின் மகுடத்தில் தொடர்ச்சியாக என் பதிவுகள் வந்து கொண்டிருப்பது நியாயமாகுமா? இல்லைத் தானே! அத்தோடு பத்திரிகைகள்- சஞ்சிகைகளில் வெளியாகும் கட்டுரைகளின் மீள் பதிவுகள் தமிழ் மணத்தின் மகுடத்தில் இடம் பெறவில்லையே எனும் பலரது ஆதங்கத்தினை நீக்கும் முகமாக, இன்று முதல் தமிழ்மணம் மகுடத்திலிருந்து விலகிக் கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளேன். 

எல்லோரும் பதிவர்கள் தானே. அனைவரும் எழுத வேண்டும். அனைத்துப் பதிவர்களின் எழுத்துக்களும் எல்லோரிடமும் சென்று சேர வேண்டும் தானே. ஆதலால் இன்று முதல் என் பதிவுகளுக்கு தமிழ் மணத்தில் 18 ஓட்டுக்களுக்கு மேல் யாரும் ஓட்டுக் குத்த வேண்டாம் என அன்பாக கேட்டுக் கொள்கின்றேன். 

மிகவும் காத்திரமான பலரிடமும் சென்று சேர வேண்டும் என்று நீங்கள் கருதும் என்னுடைய பதிவுகளுக்கு மாத்திரம் 18++ ஓட்டுக்களுக்கு மேல் நீங்கள் உங்களின் ஓட்டுக்களையும் வழங்கலாம். 

ஏலேய்...என்ன சார் முறைச்சுப் பார்க்கிறீங்க. இப்போ தான் நானே விட்டு விலகிடுறேன் என்று சொல்லுறேன்.அதுக்கு அப்புறமும் முறைச்சுப் பார்த்திட்டு.
சின்னப் புள்ளத் தனமா இருக்கில்லே. 
ஆகா...இங்கேயிருந்து பார்க்கவே தெரியுது சார். உங்க முகத்தில 1000 வாட்ஸ் பிரகாசம் தெரியுது சார்! சிரிங்க சார். நல்லா சிரிங்க சார்! 
******************************************************************************************************************************
கவிதைகளால் பதிவுலகில் எம்மைக் கட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் கவிஞர்கள் பலர். அந்தப் பல கவிஞர்கள் வரிசையில் அண்மையில் பதிவுலகிற்குள் வந்தவரும்; எம்மையெல்லாம் கிராமிய மண் வாசனை நிறைந்த கவிதைகள் மூலமாகத் தன்னுடைய வலைப் பூவான வசந்த மண்டபத்தில் இளைப்பாறச் செய்து, தினமும் கிராமியக் காற்றினைக் கவிதைகளூடே சுவாசிக்கச் செய்யும் வண்ணம் படைப்புக்களைப் பகிருவதிலும் சிறந்து விளங்குபவர் தான் கவிஞர் மகேந்திரன் அவர்கள். 

கிராமியக் கூத்துக்கள், கலைகள் பற்றிய அழகிய கவிதைகள், மண்வாசனை கமழும் படைப்புக்களை வசந்த மண்டபமூடாகத் தந்து கொண்டிருக்கும்
மகேந்திரன் அவர்களின் வசந்த மண்டபம் வலைப் பூவிற்குச் செல்ல:
********************************************************************************************************************************

*இன்ட்லியில் ஓட்டளிப்பதற்கான லிங்:

120 Comments:

KANA VARO said...
Best Blogger Tips

mm

KANA VARO said...
Best Blogger Tips

இரண்டாகப் பி(ள)ரிந்தது பதிவுலகம்!//

வடை போச்சா?

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

டைட்டிலுக்கு என் முதல் கண்டனம்,

KANA VARO said...
Best Blogger Tips

எளிதில் புரிந்திட முடியாத இறுக்கமான பாஸ்வேர்ட்டு!//

அப்ப ஹக் பண்ண மாட்டாங்க.

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

தமிழ்மணம் மகுடம் தியாகம் எல்லாம் எதுக்கு.. ?

KANA VARO said...
Best Blogger Tips

புரிந்து கொள்ள முடியாத பின்னூட்டம்,//

பலரதும் அப்பிடி தான்

Prabu Krishna said...
Best Blogger Tips

ஏன் இந்த திடீர் முடிவு?

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

>>அத்தோடு பத்திரிகைகள்- சஞ்சிகைகளில் வெளியாகும் கட்டுரைகளின் மீள் பதிவுகள் தமிழ் மணத்தின் மகுடத்தில் இடம் பெறவில்லையே எனும் பலரது ஆதங்கத்தினை நீக்கும் முகமாக, இன்று முதல் தமிழ்மணம் மகுடத்திலிருந்து விலகிக் கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளேன்.

ஏதோ உள்குத்து???????

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

>>
கிராமியக் கூத்துக்கள், கலைகள் பற்றிய அழகிய கவிதைகள், மண்வாசனை கமழும் படைப்புக்களை வசந்த மண்டபமூடாகத் தந்து கொண்டிருக்கும்
மகேந்திரன் அவர்களின் வசந்த மண்டபம் வலைப் பூவிற்குச் செல்ல:
http://ilavenirkaalam.blogspot.com/

அருமையான அறிமுகம்!!!!!!!!

நிரூபன் said...
Best Blogger Tips

@KANA VARO

mm//

என்ன மௌனமாக இருக்கிறீங்க.
ஏதும் சொல்லுங்க நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்

டைட்டிலுக்கு என் முதல் கண்டனம்,//

vinhvishali

said...

இப்படித்தான் ஒரு பெரிய பிளவு ஏற்ப்பட்டு வருது பதிவுலகில்....அது என்னன்னா புதுசா வரும்போது அய்யா வாங்க அம்மா வாங்கன்னு கூப்பிடுறாங்க....அப்புறம் நாம போய் அவங்களுக்கு சீர் செனத்தி(!) செஞ்சாலும் அவங்க சனம் கிட்ட தான் சலம்புறாங்க....என்னத்த பண்றது மணி சார் கேட்டா நான் அதிகமா உண்மையா சொல்றேன்னு குத்துறாங்க முடியல ...இதுக்கு ஒரு ஐடியா கொடுங்க...இவங்கள மாத்த(திருத்த அல்ல!)...பகிர்வுக்கு நன்றிங்க மாப்ள!//

பாஸ், இப்படியான மனநோய் பிடித்த காழ்ப்புணர்ச்சிப் பின்னூட்டங்களை அனுப்பி இன்பங் காணும் பதிவர்கள் இருக்கும் போது,
இந்த டைட்டில் பதிவுலகத்தில் பிளவு இல்லை என்பதனையும் பதிவுலகத்தினைச் சொல்லின் அடிப்படையில் தான் பிரிக்க முடியும் என்பதனையும் வலியுறுத்தவே வைக்கப்பட்டது.

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்

தமிழ்மணம் மகுடம் தியாகம் எல்லாம் எதுக்கு.. ?//

அதுவா. நான் என்னோட வழியில் பிரச்சினைகள் ஏதுமின்றித் தொடர்ந்தும் எழுதிக் கொண்டிருக்கத் தான் பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@KANA VARO

புரிந்து கொள்ள முடியாத பின்னூட்டம்,//

பலரதும் அப்பிடி தான்//

அட, நான் என்னையும் சேர்த்துத் தான் சொன்னேனுங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்

>>அத்தோடு பத்திரிகைகள்- சஞ்சிகைகளில் வெளியாகும் கட்டுரைகளின் மீள் பதிவுகள் தமிழ் மணத்தின் மகுடத்தில் இடம் பெறவில்லையே எனும் பலரது ஆதங்கத்தினை நீக்கும் முகமாக, இன்று முதல் தமிழ்மணம் மகுடத்திலிருந்து விலகிக் கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளேன்.

ஏதோ உள்குத்து???????//

நேரடியான கருத்தே இது தான் பாஸ்..

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்

அருமையான அறிமுகம்!!!!!!!!//

ஆமாம் பாஸ்..

நிரூபன் said...
Best Blogger Tips

@Prabu Krishna

ஏன் இந்த திடீர் முடிவு?//

பாஸ்...தலையிடி ஏதும் இன்றித் தனி வழியில் எழுதலாம் என்று தான் இந்த முடிவு பாஸ்.

SURYAJEEVA said...
Best Blogger Tips

பதறி போய் வந்தா பல்பு குடுத்திட்டீங்களே..

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

வகுப்பில் பாடம் நடாத்திக் கொண்டிருந்த ஆசிரியர் ஜிங்கா ஜிஸ்க்கன் அவர்கள், "பசங்களா இன்னைக்கு சேர்த்தெழுதுவது, பிரித்தெழுதுவது எப்படி என்று சொல்லித் தாரேன். எல்லோரும் கவனமா கேட்டுக்குங்க" என்று சொல்லியவாறு; திடீரென லாஸ்ட்டு பெஞ்சில் அரைத் தூக்கத்தில் இருந்த மாணவனை எழுப்பி "பதிவுலகம் எனும் வார்த்தையினை இரண்டாகப் பிரித்தெழுத முடியுமா?" என்று கேட்டார்.
அதற்கு அவனோ, ஆமா சார், பிரித்தெழுத முடியுமே.
பதிவுலகம்= பதிவு + உலகம் என்று வந்து கொள்ளும் என்று ஒரு மொக்கை போட்டான் பாருங்க....
வகுப்பறையே கெக்கே பிக்கே எனும் சிரிப்பொலியில் அதிர்ந்து விட்டது. //

மாப்ள தலைப்பு சமாளிபிகேசன் தானே?.. ஹா.ஹா...

நிரூபன் said...
Best Blogger Tips

@suryajeeva

பதறி போய் வந்தா பல்பு குடுத்திட்டீங்களே..//

நெசமாவா சார்.
நான் யதார்த்ததினைச் சொல்லியிருக்கேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@!* வேடந்தாங்கல் - கருன் *!

மாப்ள தலைப்பு சமாளிபிகேசன் தானே?.. ஹா.ஹா...//

இல்லை நண்பா,
தலைப்பிற்கான விளக்கத்தினை சிபி கேட்ட கேள்விக்குப் பதிலாக வழங்கியிருக்கிறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

என்ன நடக்குதுன்னு ஒண்ணும் புரியல...

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

அய்யய்யோ நான் போட்ட சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த (ஆகப்போகும்) முதல் பின்னூட்டம் காணோம்..

மாப்ள என்னவோ சதி ?

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்ன நடக்குதுன்னு ஒண்ணும் புரியல..// டக்குடருக்கே புரியல//
என்ன கொடுமை சரவணா?

K said...
Best Blogger Tips

வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! இனிய செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்!

பதிவின் டைட்டில் எனக்கும் பிடிக்கவில்லைத்தான்! ( நீங்கள் விளக்கம் சொல்லியும்)

பதிவுலகத்தில் பிளவு என்ற பேச்சுக்கே இடம் இருக்ககூடாது! அதில் பதிவர்கள் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும்!

யாராவது பிரிவினையைத் தூண்டினால், அவர்களை இனம் கண்டு நாம் ஒதுக்க வேண்டும்!

பதிவுலகில் சின்னச் சின்ன சண்டைகள் வரலாம்! மனக்கசப்புகள் வரலாம், உள்குத்துப் பதிவுகள் போடலாம்!

ஆனால் பிரிவு என்ற பேச்சுக்கே இடம் இருக்கக்கூடாது!

இது எனது ஆணித்தரமான கருத்து!

நிரூபன் said...
Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி

என்ன நடக்குதுன்னு ஒண்ணும் புரியல...//

பாஸ்...அது தான் வெளக்கம் கொடுத்திருக்கேன்,

பதிவுலகத்தினை வார்த்தைகளால் மாத்திரம் தான் பிரிக்கலாம்.
ஆனால் செயற்பாடுகளால் பிரிக்க முடியாது என்பதனை விளக்கத் தான் இப் பதிவு.

K said...
Best Blogger Tips

மேலும் நிரூபன் சார், உங்களுக்கு ஒரு வேண்டுகோள்! உங்களுக்கு தமிழ்மணம் 18 க்குமேல் போட வேண்டாம் என்பது சும்மா பம்மாத்து!

உங்களுக்குத் தில் இருந்தால், செங்கோவி சார் மாதிரி, தமிழ் மணத்தில் இருந்து விலக முடியுமா?

ஹி ஹி ஹி எப்புடி?

நிரூபன் said...
Best Blogger Tips

@!* வேடந்தாங்கல் - கருன் *!

அய்யய்யோ நான் போட்ட சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த (ஆகப்போகும்) முதல் பின்னூட்டம் காணோம்..

மாப்ள என்னவோ சதி ?//

அவ்....எங்கே பாஸ்...எங்கே போச்சு...

ஓப்பின் கமெண்ட் தானே இப்போ இருக்கு.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! இனிய செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்!

பதிவின் டைட்டில் எனக்கும் பிடிக்கவில்லைத்தான்! ( நீங்கள் விளக்கம் சொல்லியும்)

பதிவுலகத்தில் பிளவு என்ற பேச்சுக்கே இடம் இருக்ககூடாது! அதில் பதிவர்கள் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும்!

யாராவது பிரிவினையைத் தூண்டினால், அவர்களை இனம் கண்டு நாம் ஒதுக்க வேண்டும்!

பதிவுலகில் சின்னச் சின்ன சண்டைகள் வரலாம்! மனக்கசப்புகள் வரலாம், உள்குத்துப் பதிவுகள் போடலாம்!

ஆனால் பிரிவு என்ற பேச்சுக்கே இடம் இருக்கக்கூடாது!

இது எனது ஆணித்தரமான கருத்து!//

வணக்கம் சார்,.
சொற்களால் பிரிவிருக்கலாமே தவிர,
செயலில் பிரிவு இருக்கக் கூடாது என்பதனை விளக்கத் தான் இப் பதிவு.

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
மேலும் நிரூபன் சார், உங்களுக்கு ஒரு வேண்டுகோள்! உங்களுக்கு தமிழ்மணம் 18 க்குமேல் போட வேண்டாம் என்பது சும்மா பம்மாத்து!

உங்களுக்குத் தில் இருந்தால், செங்கோவி சார் மாதிரி, தமிழ் மணத்தில் இருந்து விலக முடியுமா?

ஹி ஹி ஹி எப்புடி?///

பார்யா கேப்ல கடா வெற்றது இதுதானோ?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

பதிவுலகத்தில் பிளவு என்ற பேச்சுக்கே இடம் இருக்ககூடாது! அதில் பதிவர்கள் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும்!

யாராவது பிரிவினையைத் தூண்டினால், அவர்களை இனம் கண்டு நாம் ஒதுக்க வேண்டும்! //

ஆமா சார், ஒதுக்கி வைக்கலாம் தான், பிரிவினையைத் தூண்டுவோர் ஏனைய பதிவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று கருதுவது அழகல்லவே.

சுதா SJ said...
Best Blogger Tips

பாஸ் கவிதை அழகு

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

மேலும் நிரூபன் சார், உங்களுக்கு ஒரு வேண்டுகோள்! உங்களுக்கு தமிழ்மணம் 18 க்குமேல் போட வேண்டாம் என்பது சும்மா பம்மாத்து!

உங்களுக்குத் தில் இருந்தால், செங்கோவி சார் மாதிரி, தமிழ் மணத்தில் இருந்து விலக முடியுமா?

ஹி ஹி ஹி எப்புடி?//

ஆமா சார், கூடிய சீக்கிரத்தில விலகிடுறேன்.

அப்புறமா உங்க எல்லோரின் ஆசையும் நிறைவேறிடும் தானே..
நீங்க நடத்துங்க சார்.

சுதா SJ said...
Best Blogger Tips

//நீ பேசும் வார்த்தையோ
புரிந்து கொள்ள முடியாத பின்னூட்டம்,//

ஹீ ஹீ
அதே.. அதே... சில நேரங்களில்

சுதா SJ said...
Best Blogger Tips

//காப்பியோடு சர்க்கரையை நீ கலந்து கொடுத்தாலும்
காதலியாய் இருப்பதனால் எனக்கோ திண்டாட்டம்//

நிஜமே............... காப்பி பண்ண எழுதுறோம் என்றால் அது அதன் மேல் உள்ள காதலால்தானே..

நிரூபன் said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்

பாஸ் கவிதை அழகு//

நன்றி பாஸ்..

சுதா SJ said...
Best Blogger Tips

அப்புறம்.... தமிழ் மனத்தில் 18 வோட்டுக்கு மேலே போடாதீங்க என்பது நீங்க சொல்லி இருக்க தேவை இல்லை பாஸ், பதிவை யாருக்கெல்லாம் பிடித்து இருக்கோ அவர்கள் எல்லாம் ஒட்டு போடவே செய்வார்கள்.
அதுதான் முறையும் கூட.......நீங்கள் எழுதுகிறீர்கள் வாக்கு போடுவதும் போடாமல் விடுவதும்
அது வாசகர்கள் முடிவு.

குறையொன்றுமில்லை. said...
Best Blogger Tips

என்னமோ நடக்குது பதிவுலகத்திலே.ஒன்னுமே புரியல்லே, மர்மமா இருக்குது.

ம.தி.சுதா said...
Best Blogger Tips

நல்லதொரு முடிவு தாம்பா நானும் வரவேற்கிறேன்...

ஆனால் மைனஸ் குத்துறவன் இதுக்கா குத்தலியே ஏதோ உள் குத்தில தானே குத்துறான்..

ம.தி.சுதா said...
Best Blogger Tips

மாப்பு அப்ப வாழ்க்கையில என் வாக்கு கிடைக்காதுடா.. ஏன்னா நான் குத்த வரும் போதே 20 கடந்திருக்கும் (இன்று விதிவிலக்கு)

காட்டான் said...
Best Blogger Tips

இது தேவைதானா மாப்பிள...!!!???

K said...
Best Blogger Tips

சார், பதிவுலகத்துல இருக்குற ஒரு சில பிரச்சனைகளைத் தீர்க்குற நேரம் வந்திருப்பதா நான் கருதுறேன்!

சார், நம்ம ரெண்டு பேர்கிட்டேயும் சொந்தமா கம்பியூட்டர் இருக்கு, அதுல 24 மணிநேரமும் இண்டெர்னெட் கனெக்சன் ஃப்ரீ! ஐ பேட் இருக்கு, ஐ ஃபோனும் இருக்கு! ஏதோ கடவுளின் அனுக்கிரகத்தில் நாம வசதியா இருக்கோம்!

இந்த வசதியை நாம கொஞ்சம் ஓவரா பயன்படுத்துறமோன்னு தோணறது!

ஏன்னா, பதிவுலகத்துல இருக்குற எல்லோரும் நம்மளமாதிரி வசதியானவங்களா இருப்பாங்கன்னு சொல்லமுடியாது, சிலபேர் நெட் சென்டர் வந்துதான் பதிவே போடுறாங்க!

எனக்கென்னவோ, பதிவுலகத்துல ஒரு இம்பேலன்ஸ் நிலவுறதா படுறது!

நாம இந்த நிலையை மாத்தணும் சார்! தெரிஞ்சோ தெரியாமலோ பதிவுலக குழப்பங்களுக்கு நாம காரணமாயிடக் கூடாது சார்!

அதுனால இனிமே உங்களுக்கு 3 கமெண்டுக்குமேல போடுறதில்லைன்னு முடிவுபண்ணியிருக்கேன்! நீங்களும் அதையே ஃபாலோ பண்ணுங்க!

எனக்கு இனிமே 3 கமெண்டுக்கு மேல போட வேணாம்! பதிவர்கள் அனைவருமே எமது நண்பர்கள்! நாம் எல்லோரும் ஒற்றுமையாவே இருப்போம்!

கருத்து வேற்றுமைகள் இருக்கலாம்! ஆனா பதிவர்கள் மத்தியில் பிளவு என்ற பேச்சுக்கே இடம் இருக்க கூடாது!

எனக்கு இந்த தமிழ்கலாச்சாரமே பிடிக்கறதில்லை! எவனாவது கலாச்சாரம் பற்றிக் கதைத்தால் வாந்திதான் வரும்!

ஆனால், கலாச்சாரத்தை நேசித்து, ஆதரித்துப் பதிவு போடும் பதிவர்களுடன் நான் ரொம்பவே ஒற்றுமையாக இருக்க விரும்புகிறேன்! அப்படி ஒரு தெளிவும் பக்குவமும் இருக்கு சார்!

அவ்வளவு ஏன், நேத்திக்கு நாம ரெண்டுபேரும் எம்புட்டு சண்டை போட்டோம்?

அதுக்காக நாம எதிரிகளா என்ன?

இதுமாதிரித்தான் பதிவுலகத்துல அனைவருமே ஒத்துமையா இருக்கணும் சார்!

காட்டான் said...
Best Blogger Tips

அப்புறம்.... தமிழ் மனத்தில் 18 வோட்டுக்கு மேலே போடாதீங்க என்பது நீங்க சொல்லி இருக்க தேவை இல்லை பாஸ், பதிவை யாருக்கெல்லாம் பிடித்து இருக்கோ அவர்கள் எல்லாம் ஒட்டு போடவே செய்வார்கள்.
அதுதான் முறையும் கூட.......நீங்கள் எழுதுகிறீர்கள் வாக்கு போடுவதும் போடாமல் விடுவதும்
அது வாசகர்கள் முடிவு.

அப்பிடி போடு மருமோனே அருவாள இதென்ன காச கொடுத்து ஓட்டுபோடுற விசயமா.. எங்களுக்கு பிடிச்சா போடுறம் இல்லைன்னா விட்டுடுறம்.. நீங்க எங்களை ஓட்டு போடு என்றோ போடாதேன்னோ அறிவுறுத்த தேவையிலை..

காட்டான் கமெண்ட் கலக்கல்

மாலதி said...
Best Blogger Tips

அன்பே ஆடையினை மாற்றுகையில் மனதில்
ஆசையினைத் தூண்டுகின்ற நீயோ பளிச்சிடும் டெம்பிளேட்(டு)
அடிக்கடி அணைக்க வைத்து மனசை மாற்றி
ஆப்பிள் உதட்டினைக் கடிக்க வைக்கும் உன் குணமோ
எளிதில் புரிந்திட முடியாத இறுக்கமான பாஸ்வேர்ட்டு!
முதலில் அதிரவைத்தத்து பின்னர் நகைக்கவைத்தத்து சிந்திக்க எண்ணியபோது உண்மையில் வியக்கவைத்தத்து காரணம் நம்மை சுற்றி கிடைக்கிற ஒரு நிகழ்வை அழகாக படம் பிடித்து மற்றவர்கள் முன் வைப்பது அவ்வளவு எளிதல்ல பாராட்டுகள் நன்றிகளுடன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

////////நிரூபன் said...
@பன்னிக்குட்டி ராம்சாமி

என்ன நடக்குதுன்னு ஒண்ணும் புரியல...//

பாஸ்...அது தான் வெளக்கம் கொடுத்திருக்கேன்,

பதிவுலகத்தினை வார்த்தைகளால் மாத்திரம் தான் பிரிக்கலாம்.
ஆனால் செயற்பாடுகளால் பிரிக்க முடியாது என்பதனை விளக்கத் தான் இப் பதிவு.

///////

அப்படியே இருந்தா சரிதான்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

////////////சி.பி.செந்தில்குமார் said...
காட்டான் said...

அப்புறம்.... தமிழ் மனத்தில் 18 வோட்டுக்கு மேலே போடாதீங்க என்பது நீங்க சொல்லி இருக்க தேவை இல்லை பாஸ், பதிவை யாருக்கெல்லாம் பிடித்து இருக்கோ அவர்கள் எல்லாம் ஒட்டு போடவே செய்வார்கள்.
அதுதான் முறையும் கூட.......நீங்கள் எழுதுகிறீர்கள் வாக்கு போடுவதும் போடாமல் விடுவதும்
அது வாசகர்கள் முடிவு.

அப்பிடி போடு மருமோனே அருவாள இதென்ன காச கொடுத்து ஓட்டுபோடுற விசயமா.. எங்களுக்கு பிடிச்சா போடுறம் இல்லைன்னா விட்டுடுறம்.. நீங்க எங்களை ஓட்டு போடு என்றோ போடாதேன்னோ அறிவுறுத்த தேவையிலை..

காட்டான் கமெண்ட் கலக்கல்

///////////

100%

KANA VARO said...
Best Blogger Tips

இந்த வருடத்தின் பெப்ரவரி மாதம் முதல் இன்று வரை தமிழ்மணத்தின் மகுடத்தில் தொடர்ச்சியாக என் பதிவுகள் வந்து கொண்டிருப்பது நியாயமாகுமா?

இன்று முதல் தமிழ்மணம் மகுடத்திலிருந்து விலகிக் கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளேன்.//

இப்ப எடுத்த முடிவை "கடந்த ஒரு மாதமா என் பதிவுகள் தமிழ்மணம் மகுடத்தில் வருகிறது அதனால் நான் விலகுகிறேன்" என மார்ச் மாதமே எடுத்திருக்கலாமே!

KANA VARO said...
Best Blogger Tips

ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

அதுனால இனிமே உங்களுக்கு 3 கமெண்டுக்குமேல போடுறதில்லைன்னு முடிவுபண்ணியிருக்கேன்! நீங்களும் அதையே ஃபாலோ பண்ணுங்க! //

welcome mani

K said...
Best Blogger Tips

அத்தோடு பத்திரிகைகள்- சஞ்சிகைகளில் வெளியாகும் கட்டுரைகளின் மீள் பதிவுகள் தமிழ் மணத்தின் மகுடத்தில் இடம் பெறவில்லையே எனும் பலரது ஆதங்கத்தினை நீக்கும் முகமாக,/////

அப்படி யார் சார் ஆதங்கப்பட்டா? வெளிப்படையா சொல்ல முடியுமா?

இதுல நீங்க யாரைக் குத்துறீங்கன்னு வெளிப்படையாவே தெரியுது சார்!

நமக்கு யாராச்சும் உள்குத்து பதிவு போட்டா, அவருக்கு எதிராக நாம உள்குத்து பதிவு போடுறது நியாயம்!

ஆனா, ஒரு நாளுமே, யாருக்கெதிராகவும் உள்குத்து போடாத, சின்னப் பிழைகளுக்கும் மனமுவந்து மன்னிப்புக் கேட்கும் ஒரு பதிவரை நீங்க இப்படிக் குத்தியிருப்பது எனக்கென்னவோ சரியாப் படலை!

அவரு எப்பயாச்சும் உள்குத்துப் போட்டிருந்தா பரவாயில்லை! நாம தொடர்ச்சியா அவரோட பதிவுகளப் படிச்சிட்டு வர்ரோமே! அவரு அப்படி எழுதுறதில்லையே!

ஒரு வேளை நான் கருதும் அவரும், நீங்க சொல்ல வர்ர அவரும் வேறு வேறு ஆட்களோ என்னமோ?

எப்படி இருந்தாலும், நீங்க இப்படி சொல்லிவிட்டு, தமிழ்மணத்துல ஓட்டுக் குத்தாதீங்கன்னு சொல்றது, உங்க தீர்மானத்தின் புனித தன்மையைக் குறைக்குது!

நீங்க வேணும்னா, புதிய மற்றும் ஏனைய பதிவர்களுக்கு வழிவிடும் முகமாக, விட்டுக்குடுக்கிறேன் அப்டீன்னு சொல்லியிருந்தா அதனை நாம மெச்சியிருப்போம்!

இது நீங்க ஏதோ, மனமில்லாம, வேண்டா வெறுப்பா, விட்டுக்குடுத்த மாதிரி இருக்கு!

ஒரு சந்தோசமான தருணத்தில் இதை நீங்க அறிவிச்சிருந்தா தேவலை!

KANA VARO said...
Best Blogger Tips

ஐடியா மணி சொன்ன பேச்சை மீறிட்டார், மூண்டு கமெண்ட் தாண்டிட்டுது.

K said...
Best Blogger Tips

@KANA VARO

ஐடியா மணி சொன்ன பேச்சை மீறிட்டார், மூண்டு கமெண்ட் தாண்டிட்டுது.:////

சார்! வரோ சார்!

இன்னிக்கு பிரச்சனை போய்க்கிட்டு இருக்குறதால, ஒண்ணு ரெண்டு கமெண்டுகள் அதிகம் போடுவேன்! ஆனா நாளைல இருந்து 3 மட்டும்தான்!

நிஜமாத்தான் சார்! பாருங்க - இதுக்கு விளக்கம் சொல்லி ஒரு கமெண்டு போட்டுட்டேன்!

ச்சே.... நம்மளால கமெண்டு போடாம இருக்கமுடியாதோ? ஏதோ கமெண்டோஃபோபியா அப்டீன்னு ஒரு வியாதி வந்திருக்கும்னு நெனைகிறேன்!ஹி ஹி ஹி!!!

KANA VARO said...
Best Blogger Tips

நிஜமாத்தான் சார்! பாருங்க - இதுக்கு விளக்கம் சொல்லி ஒரு கமெண்டு போட்டுட்டேன்!

ச்சே.... நம்மளால கமெண்டு போடாம இருக்கமுடியாதோ? //

அது.. ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காது.

சுதா SJ said...
Best Blogger Tips

நானும் இதை வர வேற்கிறேன்...... இனி மூன்று கமெண்ட்ஸ் க்கு மேல் யாருக்கும் போடுவது இல்லை..
இது மிக வரவேற்க தக்கதே....... என் பக்கம் வரும் நண்பர்களும் இதே செயுங்கள்
ஒரு கமெண்ட்ஸ் போட்டாலும் நச ன்னு போடலாமே

நிரூபன் said...
Best Blogger Tips

@Lakshmi

என்னமோ நடக்குது பதிவுலகத்திலே.ஒன்னுமே புரியல்லே, மர்மமா இருக்குது.//

ஆமாம் அம்மா, எனக்கும் ஒன்றுமே புரியாமல் தான் இருக்கு.

ஸ்ரீராம். said...
Best Blogger Tips

வோட்டுப் போட வேண்டாம் என்று பார்த்தாலும் அனுஷ்கா படம் போட்டதால் இன்று(ம்) உங்கள் சொல்லை மீறி வாக்களித்து விட்டேன்!

நிரூபன் said...
Best Blogger Tips

@♔ம.தி.சுதா♔

நல்லதொரு முடிவு தாம்பா நானும் வரவேற்கிறேன்...

ஆனால் மைனஸ் குத்துறவன் இதுக்கா குத்தலியே ஏதோ உள் குத்தில தானே குத்துறான்..//

மைனஸ் ஓட்டுப் பிரச்சினைக்கும், இதுக்கும் தொடர்பேதும் இல்லை மச்சி.
இது வேற அது வேற.

நிரூபன் said...
Best Blogger Tips

@♔ம.தி.சுதா♔

மாப்பு அப்ப வாழ்க்கையில என் வாக்கு கிடைக்காதுடா.. ஏன்னா நான் குத்த வரும் போதே 20 கடந்திருக்கும் (இன்று விதிவிலக்கு)//

அவ்....பரவாயில்லடா..
உண்மையான அன்பே இருந்தாலே போதும் தானே..

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்

இது தேவைதானா மாப்பிள...!!!???//

எது மாமா?

தனிமரம் said...
Best Blogger Tips

பதிவு தலைப்புக்கு கண்டனம் பாஸ் !
உங்கள் நிலை புரிந்து கொள்ள முடிகிறது த.ம விலகுவது!
 கவிதை கலக்கல் பாஸ்வேட்டு பின்னூட்டம்,
காதல்தான் பதிவுகளில்!

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

கருத்து வேற்றுமைகள் இருக்கலாம்! ஆனா பதிவர்கள் மத்தியில் பிளவு என்ற பேச்சுக்கே இடம் இருக்க கூடாது!

எனக்கு இந்த தமிழ்கலாச்சாரமே பிடிக்கறதில்லை! எவனாவது கலாச்சாரம் பற்றிக் கதைத்தால் வாந்திதான் வரும்!

ஆனால், கலாச்சாரத்தை நேசித்து, ஆதரித்துப் பதிவு போடும் பதிவர்களுடன் நான் ரொம்பவே ஒற்றுமையாக இருக்க விரும்புகிறேன்! அப்படி ஒரு தெளிவும் பக்குவமும் இருக்கு சார்!

அவ்வளவு ஏன், நேத்திக்கு நாம ரெண்டுபேரும் எம்புட்டு சண்டை போட்டோம்?

அதுக்காக நாம எதிரிகளா என்ன?

இதுமாதிரித்தான் பதிவுலகத்துல அனைவருமே ஒத்துமையா இருக்கணும் சார்!//

ஆமாம் சார்.
உங்களோட முடிவை நானும் வரவேற்கிறேன் சார்.

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்

அப்புறம்.... தமிழ் மனத்தில் 18 வோட்டுக்கு மேலே போடாதீங்க என்பது நீங்க சொல்லி இருக்க தேவை இல்லை பாஸ், பதிவை யாருக்கெல்லாம் பிடித்து இருக்கோ அவர்கள் எல்லாம் ஒட்டு போடவே செய்வார்கள்.
அதுதான் முறையும் கூட.......நீங்கள் எழுதுகிறீர்கள் வாக்கு போடுவதும் போடாமல் விடுவதும்
அது வாசகர்கள் முடிவு.

அப்பிடி போடு மருமோனே அருவாள இதென்ன காச கொடுத்து ஓட்டுபோடுற விசயமா.. எங்களுக்கு பிடிச்சா போடுறம் இல்லைன்னா விட்டுடுறம்.. நீங்க எங்களை ஓட்டு போடு என்றோ போடாதேன்னோ அறிவுறுத்த தேவையிலை..//

உங்க ஐடியா ஓக்கே தான், ஆனால் மாம்ஸ்,
எல்லாப் பதிவர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுக்கனும் எனும் ஒரு நல்ல நோக்கம் இருப்பது தவறா பாஸ்?

நிரூபன் said...
Best Blogger Tips

@மாலதி

முதலில் அதிரவைத்தத்து பின்னர் நகைக்கவைத்தத்து சிந்திக்க எண்ணியபோது உண்மையில் வியக்கவைத்தத்து காரணம் நம்மை சுற்றி கிடைக்கிற ஒரு நிகழ்வை அழகாக படம் பிடித்து மற்றவர்கள் முன் வைப்பது அவ்வளவு எளிதல்ல பாராட்டுகள் நன்றிகளுடன்//

நன்றி சகோதரி.

நிரூபன் said...
Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி

அப்படியே இருந்தா சரிதான்..../

ஆமா பாஸ்....

நிரூபன் said...
Best Blogger Tips

@KANA VARO

இப்ப எடுத்த முடிவை "கடந்த ஒரு மாதமா என் பதிவுகள் தமிழ்மணம் மகுடத்தில் வருகிறது அதனால் நான் விலகுகிறேன்" என மார்ச் மாதமே எடுத்திருக்கலாமே!//

அப்போ யோசிக்கலை பாஸ்.....

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

அதுனால இனிமே உங்களுக்கு 3 கமெண்டுக்குமேல போடுறதில்லைன்னு முடிவுபண்ணியிருக்கேன்! நீங்களும் அதையே ஃபாலோ பண்ணுங்க! ///

இது நல்ல ஐடியாவாக இருக்கே..

நானும் பாலே பண்றேன் பாஸ்.

K.s.s.Rajh said...
Best Blogger Tips

///மையல் கொண்டு என் தோளில் சாய்ந்து
மோக ஆசையினைத் தூண்டும் வேளையினில்
நீ பேசும் வார்த்தையோ
புரிந்து கொள்ள முடியாத பின்னூட்டம்,
தேவதை நீ என்பதால் உனைப் பின் தொடரும்
நபர்களுக்கோ காதல் கண்ணோட்டம்!///

இப்படித்தான் சில பின்னூட்டங்கள் வருது.ஹி.ஹி.ஹி.ஹி

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

ஆனா, ஒரு நாளுமே, யாருக்கெதிராகவும் உள்குத்து போடாத, சின்னப் பிழைகளுக்கும் மனமுவந்து மன்னிப்புக் கேட்கும் ஒரு பதிவரை நீங்க இப்படிக் குத்தியிருப்பது எனக்கென்னவோ சரியாப் படலை!

அவரு எப்பயாச்சும் உள்குத்துப் போட்டிருந்தா பரவாயில்லை! நாம தொடர்ச்சியா அவரோட பதிவுகளப் படிச்சிட்டு வர்ரோமே! அவரு அப்படி எழுதுறதில்லையே!

ஒரு வேளை நான் கருதும் அவரும், நீங்க சொல்ல வர்ர அவரும் வேறு வேறு ஆட்களோ என்னமோ?//

மணி சார், இந்தக் கோர்த்து விடும் வேலை வேணாமே,

நான் அந்த அப்பாவிப் பதிவரைப் பற்றி,- குழந்தைப் பதிவரைப் பற்றி ஏதும் சொல்லலை சார், ஆனால் பொதுப்படையாக வேறு சில நபர்களைச் சாடியிருக்கிறேன்.

ஏன் சார் இப்படி வத்தி வைக்கனும் என்று அலையுறீங்க?

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

ஒரு வேளை நான் கருதும் அவரும், நீங்க சொல்ல வர்ர அவரும் வேறு வேறு ஆட்களோ என்னமோ?//

ஆமா பாஸ்...அவர் வேறு,
இவர் வேறு.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

எப்படி இருந்தாலும், நீங்க இப்படி சொல்லிவிட்டு, தமிழ்மணத்துல ஓட்டுக் குத்தாதீங்கன்னு சொல்றது, உங்க தீர்மானத்தின் புனித தன்மையைக் குறைக்குது!

நீங்க வேணும்னா, புதிய மற்றும் ஏனைய பதிவர்களுக்கு வழிவிடும் முகமாக, விட்டுக்குடுக்கிறேன் அப்டீன்னு சொல்லியிருந்தா அதனை நாம மெச்சியிருப்போம்!

இது நீங்க ஏதோ, மனமில்லாம, வேண்டா வெறுப்பா, விட்டுக்குடுத்த மாதிரி இருக்கு!//

அப்படியெல்லாம் இல்ல பாஸ்..
நான் சந்தோசமா விலகுறேன்.
அதாவது யாம் பெற்ற இனபம் பெறுக இவ் வையகம் எனும் நோக்கில் விலகிறேன்.
இப்போ புரிஞ்சுதா.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஸ்ரீராம்.

வோட்டுப் போட வேண்டாம் என்று பார்த்தாலும் அனுஷ்கா படம் போட்டதால் இன்று(ம்) உங்கள் சொல்லை மீறி வாக்களித்து விட்டேன்!//

நன்றிங்க தல...
அனுஸ்கா படம் மீது அம்புட்டுப் பிரியமா?

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan
பதிவு தலைப்புக்கு கண்டனம் பாஸ் !
உங்கள் நிலை புரிந்து கொள்ள முடிகிறது த.ம விலகுவது!
கவிதை கலக்கல் பாஸ்வேட்டு பின்னூட்டம்,
காதல்தான் பதிவுகளில்//

அட போங்க பாஸ்..
பதிவினை முழுமையாகப் படிச்சிட்டு,
வாங்க பாஸ்...

@K.s.s.Rajh

இப்படித்தான் சில பின்னூட்டங்கள் வருது.ஹி.ஹி.ஹி.ஹி//

நெசமாவா...

K.s.s.Rajh said...
Best Blogger Tips

பாஸ் உங்கள் எழுத்துக்களுக்கு வரும் வரவேற்பை நீங்கள் தடுப்பது அழகு இல்லை...அதைவிட இப்ப என்ன தழிழ் மணத்தில் இருந்து ஓவ்வொறுவராக விலகுறீங்க கடந்த மாதம்...செங்கோவி பாஸ் விலகினார்.....

Anonymous said...
Best Blogger Tips

இரண்டாகப் பி(ள)ரிந்தது பதிவுலகம்!
......

என்ன நடக்குது ...............?

கவி அழகன் said...
Best Blogger Tips

உள்குத்தோ வெளிக்குத்தோ நல்ல குத்து

சத்தியமா இண்டைகுய் தான் தெரியும் தமிழ் மணம் மகுடம் பற்றி

இனிதான் போய் அப்படி எண்டா என்னெண்டு பாக்கபோரன்

போது அறிவு கொஞ்சம் கம்மி

முடிவு நல்லா முடிவு இனி நிருபன் மணத்துக்காக எழுதமட்டான் மனத்துக்காகதான் எழுதுவான் எண்டு நினைக்கிறான்

test said...
Best Blogger Tips

புரியல!
ஏன்?
எதுக்கு?
என்னாச்சு?

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

கவிதை சூப்பர்...!!!

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

அனுஷ்கா சூப்பர்...

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

தலைப்புக்கு எனது அண்ணன் சிபி மூதேவியின் முதல் கண்டனத்தை தொடர்ந்து எனது இரண்டாவது கண்டனம்...

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்....

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

பதிமூனாவது ஓட்டு

Unknown said...
Best Blogger Tips

போதும் நிரூ உங்கள் விளையாட்டு

எங்கே வந்து என்ன சொல்லுகிறீர் நீங்கள்

இன்னும் கலைஞர் ஆட்டத்தில் இருக்கிறார்!!?? அவருக்கு தோணாதது உங்களுக்கு ஏன் தோன்றுகிறது?

தமிழ்விருது said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்.எங்கள் தளத்தின் முதலாவது விருது வழங்கும் வைபோகத்தில் உங்களுக்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது
http://tamilviruthu.blogspot.com/2011/09/by.html
வாழ்த்துக்கள்

Jana said...
Best Blogger Tips

நிரூ நீங்க பதிவுலக ஜேசுதாஸ் :)

காட்டான் said...
Best Blogger Tips

மாப்பிள உதெல்லாம் விட்டுட்டு நீங்க சொல்லுற மாதிரி காத்திரமான பதிவுகள போடுங்கையா.. நேற்றய குறும்பட விமர்சன பதிவ எல்லோரும் பாத்திருக்கமாட்டாங்க அதுக்குள்ள ஏன் இப்படி ஒரு தலைப்பில பதிவு போட்டீர்கள்...!!?

 இது ஒன்றும் தலை போகிற விடயமில்லை அன்மையில் ஈழத்து பதிவர் ஒருவர் என்னை வெளிய போடா நாயேன்னு.. தள்ளிவிட்டார் தன் பதிவுகளில் எனக்கு கருத்திட அனுமதியில்லைன்னு.. ஏன்னா எங்களுக்குள் பிரிவினைய தூண்டாதேன்னு ஒரு கொமொண்டு போட்டதற்காக  இப்பிடியான விடயங்களை முளையிலேயே கிள்ளி எறிய எங்கள் சகோதரர்கள் முன்வரவேண்டும்.... 

ஐயா நான் காட்டானுங்கோ இதில ஏதாவது தவறு இருந்தா மன்னிச்சிடுங்கோய்யா..

*anishj* said...
Best Blogger Tips

Kavithai rendum supperuuuuuuuuuuuuuuuu :)

ஆமினா said...
Best Blogger Tips

நான் கூட சீனியரும் ஜீனியரும் பிரிஞ்சுட்டாங்க போல... நம்ம ஆதரவு யாருக்கு கொடுக்குறதுன்னு பெரிய குழப்பத்துல வந்தேன் :-)

தம்பி கூர்மதியன் said...
Best Blogger Tips

//ஆதலால் இன்று முதல் என் பதிவுகளுக்கு தமிழ் மணத்தில் 18 ஓட்டுக்களுக்கு மேல் யாரும் ஓட்டுக் குத்த வேண்டாம் என அன்பாக கேட்டுக் கொள்கின்றேன்.

மிகவும் காத்திரமான பலரிடமும் சென்று சேர வேண்டும் என்று நீங்கள் கருதும் என்னுடைய பதிவுகளுக்கு மாத்திரம் 18++ ஓட்டுக்களுக்கு மேல் நீங்கள் உங்களின் ஓட்டுக்களையும் வழங்கலாம். //

இதை விட கேவலமான பதிவு போடவே முடியாது உன்னால... என்னயா இது பதிவு.. சே!!

shanmugavel said...
Best Blogger Tips

நீங்க சொன்னத ஒத்துக்கிட்டாங்களா? குறைவா இருக்கு தமிழ்மணத்துல!

shanmugavel said...
Best Blogger Tips

நல்ல நகைச்சுவை.அதென்ன திடீர்னு கமென்ட் மாடரேஷன் ?

Anonymous said...
Best Blogger Tips

அது என்ன பதினெட்டு...மேஜர் ஆகுதோ பதிவுகள்...-:)

எனக்கென்னவோ உங்கள் இந்த முடிவு தவறு என்றே தோன்றுகிறது... சொந்தமாய் ...உணர்வோடு எழுதுபவர்களில் நீங்களும் ஒருவர்...அது நிறைய பேரைப் போய் சேர வேண்டும் என்பதே ஏன் எண்ணம...நிர்..+ ஊ + பன்...

அருமை சகோதரர் மகேந்திரன் தூத்துக்குடிக்கு தன் எழுத்தால் பெருமை சேர்ப்பவர்...அவர் எழுத்துக்கு நானும் ரசிகன்...பதிவுலகைத் தாண்டியும் அவர் கொடிகட்டிப் பறக்க என் வாழ்த்துக்கள்.

ஆகுலன் said...
Best Blogger Tips

அப்புறம்.... தமிழ் மனத்தில் 18 வோட்டுக்கு மேலே போடாதீங்க என்பது நீங்க சொல்லி இருக்க தேவை இல்லை பாஸ், பதிவை யாருக்கெல்லாம் பிடித்து இருக்கோ அவர்கள் எல்லாம் ஒட்டு போடவே செய்வார்கள்.
அதுதான் முறையும் கூட.......நீங்கள் எழுதுகிறீர்கள் வாக்கு போடுவதும் போடாமல் விடுவதும்
அது வாசகர்கள் முடிவு./////

எனது கருத்தும் இதுதான்.......

ஆகுலன் said...
Best Blogger Tips

அண்ணே உங்களுக்கு என்ன நடந்தது.....ஒரே குழப்பமா இருக்குது///

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

யார் மீது கோபம்?என்ன நடக்கிறது? ஏன்?-----கேள்விகள்,கேள்விகள்!!

கடம்பவன குயில் said...
Best Blogger Tips

நாற்றை காயப்படுத்தியது யார்??? என்னவோ நடக்குதுன்னு மட்டும் புரியுது...ஆனால் என்ன நடக்குதுன்னு புரியல...

Mahan.Thamesh said...
Best Blogger Tips

கலக்கல் பாஸ் . காப்பியோடு சர்க்கரையை நீ கலந்து கொடுத்தாலும்
காதலியாய் இருப்பதனால் எனக்கோ திண்டாட்டம்,
உண்மை பாஸ் என்ன பண்ண நம்ம தலைஎழுத்து .

Mahan.Thamesh said...
Best Blogger Tips

பாஸ் நீங்க கலையில பதிவு போடுவீங்க நான் இரவு வந்து கண்டிப்பா 18 பிளஸ் வோட்டு போட்டே ஆவேன்

K said...
Best Blogger Tips

சிறந்த காதல் பதிவர், சிறந்த துணிச்சல் பதிவர் ஆகிய விருதுகளை வென்றிருக்கும் நிரூபன் சாருக்கு எனது வாழ்த்துக்கள்!

என்ன புரியலையா?

இந்த லிங்கில் பார்க்கவும்!

http://tamilviruthu.blogspot.com/2011/09/by.html

வடலியூரான் said...
Best Blogger Tips

என்ன ஒரு பெருந்தனமை நிருபன் அண்ணா உங்களிடம்.. ம்ம்ம்ம்

Anonymous said...
Best Blogger Tips

தலைப்பு வைக்கறதுக்கெல்லாம் உங்ககிட்ட கத்துக்கனும் போல...

என்னம்மா யோசிக்கறீங்க... :)

செங்கோவி said...
Best Blogger Tips

யோவ் நிரூ, ஏன்யா இப்படி ஒரு முடிவு? யாரு என்ன சொன்னா?

செங்கோவி said...
Best Blogger Tips

அப்படியே 18க்கு மேல ஓட்டு வேண்டாம்னா....நீங்க 18 பேருக்கு மேல ஓட்டு போடாதீங்க.

அப்புறம் பார்ப்போம் எப்படி 18க்கு மேல வருதுன்னு..ஹி..ஹி.

செங்கோவி said...
Best Blogger Tips

//Your comment has been saved and will be visible after blog owner approval.
//

இது வேறயா..ரைட்டு.

செங்கோவி said...
Best Blogger Tips

இப்பவே 22 ஓட்டு விழுந்திருச்சு..யாருமே உங்க பேச்சுக்கு மரியாதை கொடுக்கலை போல..

ஆனா நான் உங்க பேச்சை மதிக்கிறேன் பாஸ்.

Unknown said...
Best Blogger Tips

நன்றிங்க நண்பா பகிர்வுக்கு.....பல விஷயங்கள் புரிந்து கொண்டேன் நன்றி!...எதிர் பதிவு என்பதை நான் தொடர்வதாக இல்லை...அப்படியே நீங்கள் விரும்பினால்....நன்றி!

கோகுல் said...
Best Blogger Tips

முதல்ல தமிழ்விருதுகளுக்கு வாழ்த்துக்கள்!

கோகுல் said...
Best Blogger Tips

டைட்டில்ல டிவிஸ்ட் வைச்சத பாத்து என்னவோ ஏதோன்னு வந்தேன்!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!

மாய உலகம் said...
Best Blogger Tips

ஆஹா நண்பரே! வெற்றியை யாருக்காகவும் எதற்காகவும் விட்டு கொடுக்காதீர்கள்.... (எனது தொழில் சம்பந்தமாக நான் அப்படி தான் பெரிய இவனாட்டம் எனக்கு கிடைத்த வாய்ப்புகளை எனது நண்பர்களுக்கு அமைத்து கொடுத்து அழகு பார்த்தேன்... அந்த அன்பர்க்ள எனக்கு ஆப்பு வைத்து அழகு பார்த்தார்கள்)... ஓடும் வரை ஓடுங்கள் வெற்றி கிடைத்தால் பணிவுடன் ஏற்றுக்கொண்டு பண்புடன் பகிருங்கள்.. ஒரு வேளை தோல்வி கிடைத்தால் அதையும் அன்புடனே ஏற்றுக்கொள்ளுங்கள்.. தோல்வியும் வீரனுக்கு அழகு தான்... நீங்கள் என்ன சொன்னாலும் ஓட்டு போடுவதை நிறுத்த போவதுமில்லை... என்னைப்போன்றே சக பதிவுலக அன்பர்களும் நிறுத்த மாட்டார்கள் என நினைக்கிறேன்... அது உங்களது பதிவுக்கு கிடைக்கும் அங்கிகாரம்.... அதை அன்புடன் ஏற்றுக்கொள்ளுங்கள்... பகிர்வுக்கு நன்றி நண்பா......

கோகுல் said...
Best Blogger Tips

தமிழ்மனம் 24 ஆகிடுச்சே!இப்ப நான் என்ன செய்ய?

மாய உலகம் said...
Best Blogger Tips

இன்று அறிமுகமாகியிருக்கும் வசந்த மண்டபம் அன்பு நண்பர் மகேந்திரனுக்கு வாழ்த்துக்கள்

மாய உலகம் said...
Best Blogger Tips

நீ பேசும் வார்த்தையோ
புரிந்து கொள்ள முடியாத பின்னூட்டம்,
நீயும் அப்பீட்டாய் இருப்பது தான் உன் பாடு திண்டாட்டம்!//

அப்பிட்டாவதால் திண்டாட்டம் அவளுக்கல்ல நமக்கு தான்... புரிந்துகொள்ள முடியாத பின்னூட்டம் ... ஆஹா இந்த அனுபவம் உங்களுக்கும் இருக்கா.....சேம் பிளட்

Yoga.s.FR said...
Best Blogger Tips

இதில் ஏதோ இருக்கிறது என்று மட்டும் புரிகிறது.நெருப்பில்லாமல் ........! என்று சொல்வார்களே?அடக்கி வாசிக்கலாம்,அது தான் சரி!

K said...
Best Blogger Tips

My best wishes to Mr.Mahendran! i too follow him!

K said...
Best Blogger Tips

இதில் ஏதோ இருக்கிறது என்று மட்டும் புரிகிறது.நெருப்பில்லாமல் ........! என்று சொல்வார்களே?அடக்கி வாசிக்கலாம்,அது தான் சரி!::::

Dear, Yoga sir, i expect you! if you have time........!!!

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

என்னையா ரண்டு கவிதையுமே ஒரு மார்க்கமாய் இருக்குது.. என்ன நடந்தது ,நடக்குது ,நடக்கப்போகுது எண்டு ஒண்ணுமே புரியல ...நடக்கட்டும் நடக்கட்டும் .............

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

நீங்க சொன்னா போல தமிழ் மணத்தில ஓட்டு போடாம விட்டுடுவமா ....

Unknown said...
Best Blogger Tips

நன்றிங்க நண்பா பகிர்வுக்கு.தலைப்பு அசத்தல்

சசிகுமார் said...
Best Blogger Tips

@நிரூபன்
நீங்கள் கூறி இருக்கும் செய்தியை இரண்டு விதமாக எடுத்து கொள்ளலாம். பலரும் பயனடைவார்கள் உங்களுடைய எண்ணம் சிறந்தது. அதே வேளையில் இவன் என்ன பெரிய இதுவா விட்டு கொடுக்க வந்துட்டான் என்று பலரும் நினைப்பதாலே இங்கே இந்த பிரச்சினைகள்.

தமிழ்மணம் 26 போடுவோம்ல ஹீ ஹீ

மகேந்திரன் said...
Best Blogger Tips

அன்புள்ளம் கொண்ட சகோ நிரூபன்
நேற்றும் இன்றும் விமானப் பயணத்தில் இருந்ததால் என்னால்
பதில் பின்னூட்டம் இட முடியவில்லை.
என்னையும் என் எழுத்தையும் மதித்து
இங்கே அறிமுகப் படுத்தியமைக்கு
கோடானுகோடி நன்றிகள்.
என்னை வாழ்த்திய அத்தனை அன்பு உள்ளங்களுக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails