Friday, September 30, 2011

வேஷம் போடும் சாதியம்- மலையக மக்களின் அவலத்தினைச் சொல்லும் உண்மைச் சம்பவம்!

முன் அறிவிப்பு: அன்பிற்கினிய உறவுகளே, இச் சிறுகதையில் ஓரினச் சேர்க்கை, தகாத உறவு முதலிய விடயங்களோடு, இலங்கையில் வாழும் தமிழ் மக்களால் அடிக்கடி நையாண்டிக்கும், கேலிக்கும் உள்ளாக்கப்படும் மலையக மக்களின் அவல நிலையுல் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. இக் கதையினை ஒரு ஐந்து நிமிடங்கள் செலவழித்துப் பொறுமையாகப் படித்து, இலங்கையில் அரசியற் கட்சிகளாலும், ஏனைய சமூகங்காலும் புறக்கணிக்கப்படும் மலையக மக்கள் பற்றிச் சிறு துளியினையாவது இப் பதிவின் மூலமாக நீங்கள் அறிவீர்கள் என்று நினைக்கின்றேன்.

வவ்...........வவ்................வள்.........வள்.........என்றவாறு, மக்களின் பிரச்சினையைச் சரிவரப் புரிந்து கொள்ளாது பாராளுமன்றத்திற்குச் சென்று வாய் கிழியக் கதறும் அரசியல் வாதியினைப் போல, வீதியினை வெறித்துப் பார்த்த படி குலைத்துக் கொண்டிருந்த ஜிம்மியின் சத்தத்தைச் சகிக்க முடியாதவளாய், "எடோய் தம்பி......சுதன்... , உனக்குப் பள்ளிக் கூட லீவெண்டால் சொல்லவா வேணும்? பட்டம் கட்டி ஏத்தத் தொடங்கீடுவாய், இஞ்சை (இங்கே) வா, ராசா,ரோட்டிலை நாய் குலைச்சுக் கொண்டிருக்குது,  ஓடிப் போய் என்னவென்று பார்த்திட்டு வாவன் பிள்ளை" எனத் தனது மண் குடிசைக்குள் இருந்து குரலெழுப்பினாள் பாக்கியம்.

கருமமே கண் எனும் வாக்கிற்கமைவாக, இன்றைக்கு (இன்னைக்கு) எப்படியாவது (எப்படியாச்சும்) பட்டம் கட்டி, ஒட்டி, ஏத்தித் தான் தீருவேன் எனும் சபதத் தோடிருந்த சுதன், தாயின் கட்டளைக்குக் கீழ்ப் படிந்தவனாய், ரோட்டினை நோக்கி விரைகிறான்.
''டோய் ஜிம்மி........ஏன் குலைக்கிறாய், இஞ்சை (இங்கிட்டு) வா.... வா.....எனத் தனது அன்பு நாயினைத் தடவித் தன் இரு கைகளிலும் தூக்கி வைத்துக் கொண்டு, வீட்டை நோக்கி வரும் சுதன், "அம்மா.....அம்மா, நாய் வந்து ரோட்டைப் பார்த்துக் குலைக்கேல்லை,  அது எங்கடை கிணற்றடியைப் பார்த்துத் தான் குலைக்குது,  பக்கத்துக் காணியிக்கை இருக்கிறதுக்காய் யாரோ ரெண்டு மூன்று பேர் ’லாண்ட் மாஸ்ரரிலை(Land Master) சாமான் கொண்டு வந்து இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்துத் தான் ஜிம்மி குலைச்சது"
எனக் கூறி முடித்து விட்டு, "ஜிம்மி சும்மா கண்ட படி குலைச்சுச் சத்தம் போடக் கூடாது" என ஜிம்மியின் தலையினைத் தடவி வீட்டு ‘விறாந்தையினுள்(வராந்தா) நாயினை இறக்கி விட்டு, மீண்டும் தனது பட்டம் கட்டும் வேலையில் மும்முரமாக ஈடுபடத் தொடங்குகிறான் சுதன்.

"பாக்கியம்", ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூறுகளில் நிலம் விழுங்கும் பூதங்களாகப் புறப்பட்ட ஊர் விழுங்கிப் பேய்களின் இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கை காரணமாகத் தனது சொந்த ஊரான பலாலியிலிருந்து கணவன் சிவராமன்,  மற்றும் பிள்ளைகளான சுதன், செழியன், லக்ஸிகா ஆகியோருடன் இடம் பெயர்ந்து, சாவகச்சேரியில் உள்ள ஓர் தெருவோரக் காணியினுள் காலமிட்ட சாபம் எனும் போக்கில் கால் தெறிக்க ஊரை விட்டு ஓடி வந்த களைப்பு மாறாதவர்களாய், மீண்டும் தன் சொந்த ஊரிற்குப் போய் வாழுவேன் எனும் ஏக்கங்களோடு, இலவு காத்த கிளியாய் கொட்டில் வீடொன்றினுள் வாழ்ந்து கொண்டிருக்கும், அடுக்களையுடனும், வீட்டின் அன்றாடக் கடமைகளோடும் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத் தலைவி.


பரந்து விரிந்திருந்த விவசாய நிலமும், ஏவல் செய்யக் கூலியாட்களும் என வாழ்ந்திருந்த வாழ்வை, அழகான வீட்டை, கோயிலை இழந்த சோகம் அப்போது பாக்கியம், சிவராமன் தம்பதிகள் வாழ்வில் ஆறாத் துயராய்ப் பதிந்திருந்து கண்களில் அடிக்கடி நீர்த் திவலைகளை வரச் செய்து கொண்டிருந்தது.

விவசாய வேலைகளைக் கவனிக்க ஏவலாளர்களும், அந்த ஏவலாளர்கள் "வெள்ளாளன்’ வெள்ளாடிச்சி" எனப் பாக்கியத்தையும், சிவராமனையும் அழைப்பதும் அந் நாளில் இவர்களுக்கு ஒரு பெருமிதத்தைத் தந்திருக்க வேண்டும்.

கீழ்ச் சாதி மக்களுக்கு தமது வெள்ளாளச் செருக்கின் காரணமாய்,  வீட்டின் உட் புறத்தினுள் அனுமதி இல்லை எனும் இறுக்கமான மேல் தட்டு வர்க்கத்தில் பிறந்ததற்கு அடையாளமான சாதிப் பிடிப்புக் கொள்கை கொண்ட வெள்ளாளர்களாகவும்; 
கீழ்ச் சாதியில் உள்ளோரை - தமக்கு கீழே வேலை செய்யும் தொழிலாளிகளை வாசலில் இருத்தி "வளர்த்த நாய் முகத்தைப் பார்ப்பது" போன்ற உணர்வினை அவர்கள் மனங்களில் எழச் செய்து;  
தம் எதிர்காலம் ஏன் இப்படி ஆனது எனச் சிந்திக்கத் தெரியாத அன்றாடங் காய்ச்சிகளினது கடின உழைப்பினைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி" தம் சுறண்டல் வாழ்க்கையினை ஓட்டிக் கொண்டிருந்தவர்கள் தான் இந்தச் சிவராமன், பாக்கியம் தம்பதிகள்.

தம் "திமிர் பிடித்த வெள்ளாள வாழ்வு" இடப் பெயர்வால் சிதைந்து போன கவலையில் அயலவர்களின் உதவியோ, அரசாங்கத்தின் உதவியோ எதுவுமற்று, சாவகச்சேரியில் தெருவோரக் காணியொன்றில் கொட்டில் வீட்டில் தமது பிள்ளைகளுடன் தம் வாழ்வைத் தொடங்குகிறார்கள் சிவராமனும், பாக்கியமும்.

சிவராமனும், பாக்கியமும் தங்கள் வாழ்க்கையினை மீளத் தொடங்கிய சிறிது காலத்தில், பாக்கியத்தின் வீட்டிற்கு அருகே; வாழ்ந்து கொண்டிருக்கும் பற்றிமாவின் ஆசை மகன் காந்தன் போராட்டத்தில் வீரச் சாவடைந்து கொள்ள; நாள் தோறும் தன் அன்பு மகனை எண்ணி அழுதவாறு தனிமையில் அருகே இருக்கும் அயலவர்களின் ஆறுதல் ஏதுமின்றிச் சோகத்தோடு நடைப் பிணமாய் வாழ்ந்து கொண்டிருகிறா பற்றிமா.

பற்றிமாவின் தனிமையினை நீக்கும் வகையில்; பாக்கியம், சிவராமன் குடும்பம் ஆதரவாய் இருக்கவில்லை எனும் காரணத்தால்,
தன் வீட்டினை அவ் ஊருக்குப் புதிதாக வந்த ’கிளார்க்’ கோவிந்தனின் பராமரிப்பில் தற்காலிகமாக ஒப்படைத்து விட்டு (கொடுத்து விட்டு) பற்றிமா தன் மருமகள் வீட்டை நோக்கிப் போகிறாள்.

பற்றிமாவின் வீட்டினுள் கோவிந்தனும், பொன்னம்மாவும்,  தமது பிள்ளைகளான நித்தி, சுரேஷ் உடன் குடியேறுகிறார்கள்.

பாக்கியத்தின் மனதிற்குள் இச் சம்பவங்கள் எல்லாம் ஒரு குழப்ப நிலையினைத் உருவாக்கியிருக்க வேண்டும். பற்றிமா ஆச்சி "கோவிய"(ஈழத்தில் உள்ள ஒரு சாதியினர்) ஆட்கள் என்ற காரணத்தால் தானே நான் அவாவோடை பழகமால் இருந்தனான். "சே...சே.. இனிமேலும் இப்படி இருக்கக் கூடாது, அவசர ஆபத்திற்கு, ஏதாவது ஒன்று நடந்திட்டால், சொந்தக் காரரும்(உறவினர்களும்) இல்லாத இடத்தில் அயலவர்கள் தான் உதவியாய் இருப்பார்கள்". ஆகவே, இப்ப புதுசாக குடி வந்த ஆட்களுடன் கண்டிப்பாகப் போய்ப் பேசியேஆக வேண்டும் எனச் சுய நலத்துடன் தன் உள்ளுணர்வை மறைத்துச் சிந்திக்கிறா பாக்கியம்.

"வீட்டுக்காரர், வீட்டுக் காரர், உங்கடை நாயை ஒருக்கால் (ஒருவாட்டி) பிடியுங்கோ", எனக் குரலெழுப்பிய படி,  வீட்டிற்கு குடி வந்த முதல் நாளே, பொன்னம்மா, பாக்கியத்தின் வீட்டுப் படலையினை(வீட்டுக் கேற்றினை) குசலம் (நலம்) விசாரிப்பதற்காய்த் தட்டுகிறாள்,

"நாய் கட்டி, இருக்குது (நிற்குது)." "வாங்கோ, வாங்கோ" (வருக- வருக) என இன் முகத்துடன் வரவேற்ற பாக்கியம், தன் கொட்டில் வீட்டுக் குந்தில் (கொட்டில் வீட்டின் சிறிய சுவரில்) பொன்னம்மாவை இருக்கச் சொல்லி விட்டு,  நலம் விசாரிக்கத் தொடங்குகிறாள்.

பாக்கியம் தன்னைப் பற்றியும், தன் குடும்பத்தைப் பற்றியும் விபரிக்கத் தொடங்குகிறாள். பொன்னமா, தான் பிறந்தது, இலங்கையின் மத்திய மலை நாட்டில் உள்ள ஹட்டன் டிக்கோயா, என்றும் பின்னர் மலை நாட்டில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக இடம் பெயர்ந்து வவுனியாவில் இருந்ததாகவும், தற்போது தான் யாழ்ப்பாணத்திற்கு வந்ததாகவும் கூறினாள்.

"எப்படியாவது இவையள்(இவர்கள்) என்ன சாதி என்று அறிய வேண்டும்" எனத் திட சங்கற்பம் பூண்டவளாய் பாக்கியம் பொன்னம்மாவைக் குறுக்கு விசாரணை செய்யத் தொடங்குகிறாள்.

பாக்கியம் பொன்னம்மாவைப் பார்த்து;
"உங்களுக்கு இங்கே (இந்த ஊரில சொந்தக்காரங்க யாராவது இருக்கிறார்களா?
பொன்னம்மா, "இல்லை" என்று பதிலளிக்கிறாள்.
"அப்படியென்றால் (அப்படீன்னா) உங்களுக்குப் பற்றிமா ஆச்சி சொந்தமே?"
அதற்கும் "இல்லை" என்றே பதிலுரைத்தாள் பாக்கியம்......

"சே......கடவுளே, ஏன் நான் இப்படி? எல்லோரும் மனிதர்கள் தானே, இவளிட்டையெண்டாலும் சாதியை மறைத்துப் பழக வேணும் (வேண்டும்)" என பாக்கியம் மனதினுள் நினைக்கிறாள்.

ஆனால் மனதினுள் வெள்ளாளப் பேய் தலை விரித்தாட,
"அப்ப நீங்கள் எஸ்டேட்(Estate) ஆட்களே...........................என, மனதை விட்டுக் கேட்டே விட்டாள்.
இப்படி ஒரு அஸ்திரத்தை, அதுவும் குடி வந்த முதல் நாளே பொன்னம்மா எதிர்பார்த்திருக்க மாட்டாள்.................

பொன்னம்மா, கண்கள் கலங்கத் தொடங்கினாலும்; உள்ளூரச் சோகம் அப்பிக் கொள்ளுகையிலும், அதனை வெளிக் காட்டாதவளாய்; "ஓம்.......நாங்கள் எஸ்டேட் தான்...........எனத் தரையினைப் பார்த்து, பாக்கியத்தின் முகம் பார்க்காதவளாய் பதில் சொல்லுகிறாள்.

"நீங்கள் எஸ்டேட் என்றாலும் உங்கடை தமிழ் தெளிவாகத் தானே இருக்கிறது. ‘எங்கடையாட்கள் பேசுகிற மாதிரிச் சுத்தத் தமிழ் தானே பேசுறீங்கள்?” எனப் பாக்கியம் நாசூக்காக, பொன்னம்மாவின் மனதினைத் தேற்றுவது போலப் பூசி மெழுகும் பாணியில் கேள்வி கேட்டாள்.

"அது, வந்துங்கோ (வந்துங்க), நான் வவுனியாவிலை, தமிழ் ஆட்களின் வீட்டுக்குப் பக்கத்திலை தான் இருந்தனான். அவை எங்கடை ’’பமிலி பிரண்ட்’ மாதிரி, அவர்களுடன் பழகிப் பழகி-பேசிப் பேசி, என்னுடைய தமிழும், உங்கடை தமிழ் மாதிரி மாறி விட்டது” எனச் சொன்னாள் பொன்னம்மா.

"உங்கடை அவர்(கணவன்) என்ன செய்கிறார்" எனப் பாக்கியம் கேட்டாள்,
"அவர் சாவகச்சேரிச் சந்தியிலை உள்ள நகர சபை அலுவலகத்தில ‘கிளார்க்’(எழுது வினைஞர்) ஆக இருக்கிறார்" எனப் பொன்னம்மா பதிலளித்தாள்.

"அப்ப நீங்கள் படிச்ச ஆட்கள் தான்........ என்ன?
"சீ...சீ...அப்படியெல்லாம் இல்லை"  என்றாள் பொன்னம்மா.

"உங்களுக்குத் தேத்தண்ணி (தேநீர்) போட்டுத் தரலாம் தான். ஆனால் அடுப்பு (சமையல் செய்யும் இடம்)  பற்ற வைக்க, தீப் பெட்டி பொட்டி (வத்திப் பெட்டி)இல்லை. இவர் சைக்கிள் கடையாலை வரும் போது தான் வாங்கிக் கொண்டு வருவார்........குறை நினைக்காதேங்கோ,(don't take serious)  எனத் தன் வெள்ளாளப் புத்தியினால், ''தாழ்ந்த சாதிக்கு தேநீர் கொடுக்கப் பழைய குவளை இல்லையே எனும் உண்மையினை மறைக்க முடியாதவளாய்" நொண்டிச் சாட்டுச் சொல்கிறாள் பாக்கியம்.

பாக்கியம்..........அப்ப நான் வெளிக்கிடப் போறேன். உங்களைச் சந்தித்தது ரொம்பச் சந்தோசம், பிள்ளையளுக்கு சமைக்க வேணும் எனக் கூறி விட்டு, நடக்கத் தொடங்குகிறாள் பொன்னம்மா. 

தன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கிய பொன்னம்மாவை வழி மறித்த பாக்கியம், "பொன்னம்மா உங்களுக்கு எத்தினை வயசிருக்கும்?"  
''ஏன் கேட்கிறீங்கள் பாக்கியம்? 
"இல்லைச், சும்மா ஒருக்கா தெரிஞ்சு கொள்ளலாம் என்று தான் கேட்கிறேன்".

"எனக்கு முப்பத்திரண்டு வயசு இப்ப நடக்குது."
"ஓ......உங்களுக்கு முப்பத்திரண்டே, எனக்கு முப்பந்தைந்து வயசு எனத் தான் கேட்க வந்த விடயத்தை உள் மனதினுள் மறைத்தபடி போலியாகப் புன்னகைக்கிறாள் பாக்கியம்.

பொன்னம்மா, நீங்கள் இனிமேல் என்னை அக்கா என்று தான் - - - - - - - - - - - 

பாலுறவு சிறுகதையின் இரண்டாம் பாகம் இன்று இரவு உங்களை நாடி வரும்!

இச் சிறுகதையானது ஈழத்தில் இடம் பெற்ற உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்ட ஒரு சிறுகதையாகும், இதில் வரும் கதா பாத்திரங்கள் மட்டும் கற்பனையே! 

இச் சிறுகதை பற்றிய உங்களின் ஆக்கபூர்வமான உள்ளக் கருத்துக்களையும், விமர்சனங்களையும் எதிர் பார்க்கிறேன். 


பாலுறவு சிறுகதையின் இரண்டாம் பாகத்தினைப் படிக்க:
http://www.thamilnattu.com/2011/09/02.html

52 Comments:

செங்கோவி said...
Best Blogger Tips

இந்த அவலம் தமிழகத்திலும் உண்டு நிரூ..ஜாதியைத் தெரிந்துகொள்ள எப்படியெல்லாமோ சுற்றி வளைப்பார்கள்..

செங்கோவி said...
Best Blogger Tips

இனிய ஈழத்தமிழ் நடையில் யதார்த்ததை புட்டுப்புட்டு வைத்திருக்கிறீர்கள்..

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
Best Blogger Tips

சாதி மனிதனைப் பாடாய்ப் படுத்துவதை சொல்லியிருக்கிறீர்கள், ஆரம்பம் அமர்க்களம், அடுத்த பாகத்துக்கு வெய்டிங்..

K said...
Best Blogger Tips

வணக்கம் மச்சி! கதை நல்லா இருக்கு! ஆனால்......!!!!

K said...
Best Blogger Tips

மச்சி, என்னால நிறயக் கருத்துக்கள் சொல்ல முடியும் என்று உனக்குத் தெரியும்! ஆனால், இதெல்லாம் சொல்லப்போனால், சிக்கலாகிடும்!

எனக்கு சுத்தி வளைச்சு, பூசி மெழுகத் தெரியாது! எல்லாமே நேரடியாகத்தான் எழுதுவேன்! அப்புறம் சிக்கலாகிடும்!

எனக்கும் மிகவும் பிடித்த ராஜேஸ்வரி ஷண்முகம், முத்தையா ஜெகன்மோகன், நாகபூஷணி கருப்பையா, கருப்பையாபிள்ளை பிரபாகரன், தர்ஷினி நாகமுத்து, ஸ்ரீதர் பிச்சையப்பா, தெளிவத்தை ஜோசெப் போன்ற பலரை மனதில் நினைத்துப் பார்க்கிறேன்!

அதனால் கருத்தொன்றும் சொல்ல இயலவில்லை!

Rathnavel Natarajan said...
Best Blogger Tips

நல்ல பதிவு.

சசிகுமார் said...
Best Blogger Tips

பாவப்பட்ட மக்கள்

shanmugavel said...
Best Blogger Tips

அருமையாய் இருக்கு சகோ உங்கள் எழுத்து.நிஜம்மாவே அவலம்தான்.

K.s.s.Rajh said...
Best Blogger Tips

அருமையாக ஒரு விடயத்தை தொட்டு இருக்கீங்க அடுத்த பகுதிகளுக்காக வெயிட்டிங்..இந்தப்பகுதி ஏற்கனவே பிரசுரம் ஆகியதுதானே மீள் பதிவா?

K.s.s.Rajh said...
Best Blogger Tips

அப்பறம் பதிவில் போட்டு இருக்கும் அந்த படத்தில் இருப்பது யார் பாஸ் சூப்பரா இருக்காங்க.

kobiraj said...
Best Blogger Tips

சாதிக் கொடுமை இன்று ஓரளவு குறைந்த போதிலும் திருமண சம்பந்தங்களின் போது தலை விரித்து ஆடுகிறது .

M.R said...
Best Blogger Tips

கதை படித்தேன் நண்பரே ,
அந்த எண்ணம் மறைந்ததாய் சொன்னாலும் எல்லா இடத்திலும் இலைமறைவாய் காய் மறைவாய் இருக்கத்தான் செய்கிறது நண்பரே

சம்பத்குமார் said...
Best Blogger Tips

வணக்கம் சகோ

அருமையான விழிப்படைய வைக்கும் கதை.படித்ததும் நெஞ்சம் கணக்கிறது

தொடரட்டும் சகோ

நட்புடன்
சம்பத்குமார்

செல்ல நாய்க்குட்டி மனசு said...
Best Blogger Tips

ஆரம்பமே அசத்தல். மிருகங்களை உவமையாக்கி மனிதனை அறிமுகப் படுத்தும் வழக்கத்தில் இது உல்டா சூப்பர்
எங்க பக்கங்களில் ஜாதியை அறிந்து கொள்ள நம்மை என்ன இனமாக நிர்ணயம் செய்கிறார்களோ அதை சேர்ந்த ஒருவரை சொல்லி அவர் உங்கள் சொந்தமா என்பார்கள். நான் நெல்லை வந்த புதிதில் இதில் கண்ணாம்பூச்சி விளையாடுவேன், நான் கலப்பு திருமணம் செய்தவள் என்பதால்

maruthamooran said...
Best Blogger Tips

ம்ம்!

Mohamed Faaique said...
Best Blogger Tips

Nallayirukku

Mohammed Sajeer said...
Best Blogger Tips

Ippidiyellam nadakkuma??????

WTF!

test said...
Best Blogger Tips

ம்ம்ம்ம்....சரியாத்தான் சொல்லுறீங்கள்.....

Unknown said...
Best Blogger Tips

சிறுகதை அருமை. சமூகத்தில் ஒழிக்கபடவேண்டிய சாதிகொடுமை பற்றி பேசியிருக்றீர்கள்.இயக்கத்திண்ட காலத்தில் கடுமையான கட்டுபாட்டால் இல்லாதிருந்த இவ்விடயம் இப்போது தலைதூக்கியதுள்ளது.

Yoga.s.FR said...
Best Blogger Tips

பிரெஞ்சுக் காலை வணக்கம்!நல்ல ஆரம்பம்! தொடருங்கள்,துகிலுரியுங்கள்!

Yoga.s.FR said...
Best Blogger Tips

"அப்ப நீங்கள் எஸ்டேட்(Estate) ஆக்களே".////ஓம்,எங்களுக்கு ரெண்டு "கொம்பு" குறைய!

அம்பலத்தார் said...
Best Blogger Tips

சாதியம் ஒழியாமல் எமது சமுதாயம் முன்னேறுவது கடினம்

கோகுல் said...
Best Blogger Tips

வவ்...........வவ்................வள்.........வள்.........என்றவாறு, மக்களின் பிரச்சினையைச் சரிவரப் புரிந்து கொள்ளாது பாராளுமன்றத்திற்குச் சென்று வாய் கிழியக் கதறும் அரசியல் வாதியினைப் போல, //

ஒப்பனிங்க்லயே டாப் கியர்!

அம்பலத்தார் said...
Best Blogger Tips

நல்லதொருவிடயத்தைக் கையில் எடுத்திருக்கிறீர்கள். தொடருங்கள்

கோகுல் said...
Best Blogger Tips

இங்கே சிலருக்கு ஒவ்வொரோரின் ஜாதியும் தெரிந்து கொள்ள வேண்டும் இல்லேன்னா தூக்கமே வராது.

கோகுல் said...
Best Blogger Tips

இரவு வரை காத்திருக்கிறோம் அடுத்த பாகத்துக்கு!

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

மிக தீர்க்கமாக எழுதப்பட்ட பதிவு

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

இன்று வலைப்பதிவு அறிமுகம் இல்லையே?

Unknown said...
Best Blogger Tips

நல்ல மொழி நடை நிரூ

எல்லா எடத்துலயும் இந்த ஏற்றத்தாழ்வுகள் நிதர்சனம். என்ன சொல்லுறது தெரியலை


இரண்டாம் பாகத்திற்கு கடத்து இருக்கோம்

நிரூபன் said...
Best Blogger Tips

@K.s.s.Rajh
அருமையாக ஒரு விடயத்தை தொட்டு இருக்கீங்க அடுத்த பகுதிகளுக்காக வெயிட்டிங்..இந்தப்பகுதி ஏற்கனவே பிரசுரம் ஆகியதுதானே மீள் பதிவா?//


தல
இச் சிறுகதையின் முதற் பாகத்தினை நான் பதிவெழுத வந்த ஆரம்ப காலத்தில் எழுதியிருந்தேன். இரண்டாம் பாகத்தை ஒரு சில காரணங்களாலும், பதிவில் ஆபாசம் கலந்திருப்பதாலும் நிறுத்தி விட்டேன்.

இப்போது முதற் பாகத்திலுள்ள வழுக்களை நீக்கி மீளவும் எழுதியுள்ளேன்.

இரண்டாம் பாகம் இன்று இரவு தான் எழுத வேண்டும்.

தமிழன் வர்த்தகம் said...
Best Blogger Tips

ஈழா தில் உயர் ஜாதி வெள்ளாள சமுகத்தால் பதிக்கப்பட்ட மலையக தமிழர்கள் பற்றிய படம்

மண் Munn (Tamil Film) (திரைப்படம்)
http://video.google.com/videoplay?docid=6679400875567464369
இலங்கைல் மலையக தமிழர் குடுப்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்

காட்டான் said...
Best Blogger Tips

இதை ஏற்கனவே வாசித்து விட்டேன்.. அடுத்த பத்திவுக்கு காத்திருக்கிறேன்... இப்ப ஓட்டு மட்டும்

rajamelaiyur said...
Best Blogger Tips

//
செங்கோவி said... Best Blogger Tips [Reply To This Comment]

இந்த அவலம் தமிழகத்திலும் உண்டு நிரூ..ஜாதியைத் தெரிந்துகொள்ள எப்படியெல்லாமோ சுற்றி வளைப்பார்கள்..

//

உண்மைதான்

SURYAJEEVA said...
Best Blogger Tips

இரண்டாம் பாகத்தை எதிர்நோக்கி

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

எல்லா இடத்திலும் ஜாதி வெறியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்....!!!

தனிமரம் said...
Best Blogger Tips

இக்கதை முன்னரே வாசித்தது இரண்டாம் பகத்திற்கு காத்திருக்கின்றேன் இந்த விவகாரத்தில் மூக்குடைந்த வரலாறுகள் அதிகம் சகோ! மக்கள் மனதில் இன்னும் ஏற்ற தாழ்வுகள் மற்றப்பாகம் எந்த நாட்டின் நேரத்தில் வெளிவரும் என்றால் நானும் பால்கோப்பி கேட்க காத்திருப்பேன் கதவோரம்(ஹீ பால் கோப்பிக்கு அலையிறான் என்று திட்டுவது கேட்குது பாஸ்)

தனிமரம் said...
Best Blogger Tips

இக்கதை முன்னரே வாசித்தது இரண்டாம் பகத்திற்கு காத்திருக்கின்றேன் இந்த விவகாரத்தில் மூக்குடைந்த வரலாறுகள் அதிகம் சகோ! மக்கள் மனதில் இன்னும் ஏற்ற தாழ்வுகள் மற்றப்பாகம் எந்த நாட்டின் நேரத்தில் வெளிவரும் என்றால் நானும் பால்கோப்பி கேட்க காத்திருப்பேன் கதவோரம்(ஹீ பால் கோப்பிக்கு அலையிறான் என்று திட்டுவது கேட்குது பாஸ்)

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

வணக்கம் மச்சி.. நான் ரெண்டு நாளா ஊர்ல இல்லை..

அப்பாலிக்கா வறேன்..

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

மீள் பதிவா ?

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

ஐயோ! தனி மரம் வந்துட்டார் எல்லோரும் வ(லி)ழி விடுங்கோ )))

Muruganandan M.K. said...
Best Blogger Tips

நசுக்கிடாமல் சாதி மேன்மையை நிலைநாட்ட முனைபவர்களை துகிலுரித்துக் காட்டியுள்ளீர்கள். நன்றாக இருக்கிறது.

Unknown said...
Best Blogger Tips

நல்ல பதிவு ஆனால் பாவப்பட்ட மக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

வெகுயதார்த்தமாக செல்கிறது கதை....!

நாய் நக்ஸ் said...
Best Blogger Tips

மன்னிக்கவும்.... 2-ம் பாகத்தையும் சேர்த்து படித்துவிட்டு கருத்து கூறுகிறேன் ....

Mahan.Thamesh said...
Best Blogger Tips

வணக்கம் அண்ணே .
சதி வெறியர்களுக்கு நல்லதொரு சட்டை பதிவு . குட்

Mathuran said...
Best Blogger Tips

இரண்டாம் பாகத்தையும் படித்துவிட்டு கருத்து சொல்கிறேன்.

Anonymous said...
Best Blogger Tips

ஆமா ஒங்க நாட்டுல மொத்தம் எத்தன சாதி இருக்குது?
இங்க தமிழ்நாட்டுல ஒரு ஆறு கோடி சாதி இருக்கும்!!!

இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
மகேந்திரன் said...
Best Blogger Tips

சாதி இன்னும் ஒழியவில்லை நண்பரே..
ஒழிந்திருக்கவும் இல்லை
பெரும்பாலானோர் நெஞ்சில் நெருஞ்சிமுள்ளாய்
குடியிருக்கிறது. பல சமயங்களில் வெளிவந்து
சம்பவங்களை உருவாக்கி சென்றுவிடும்.
உங்கள் தொடர் அப்படியே போறபோக்குல சொல்ற கதைபோல போகுது. நல்லா இருக்கு...

அப்புறம் ஒரு விஷயம், நண்பர் விக்கியுலகம் அவர்களுக்கு ப்ளாகரில் வந்த பிரச்னையை நீங்க தீர்த்துவைத்ததா ஒரு பதிவு போட்டிருந்தார்...
உங்களுக்கு ஒரு சிறப்பு நன்றி.

Sharmmi Jeganmogan said...
Best Blogger Tips

சாதி இரண்டொழிய வேறில்லை என்பதை எப்போது விளங்கிக்கொள்வார்களோ?
எழுத்து நடை மிக அருமை நிரூபன்...

Anonymous said...
Best Blogger Tips

இரண்டையும் படித்தேன்...நல்லா எழுதியிருக்கீங்க சகோதரம்...
நமக்கு தெரிஞ்சது பெண் ஜாதி ( My Wife !)மட்டும் தான் :)

மாய உலகம் said...
Best Blogger Tips

அங்க மட்டுமில்லை நண்பா... எங்கும் ஜாதி வெறி இன்னும் மனிதனின் மனதுக்குள் உறங்குவது போல் நடித்துக்கொண்டுதானிருக்கிறது... ரெண்டையும் படித்தேன் பாஸ்... தப்பு தாண்டாவுக்கு ஜாதி இல்ல... நல்ல விசயங்களுக்கு ஜாதி குறுக்கீடா இருக்கு இந்த சமூக மக்களுக்கு... எழுத்து நடையில் மறைமுகமாக சாதிவெறி பிடித்தவர்களுக்கு சாட்டையடி கொடுத்துட்டீங்க தல... வாழ்த்துக்கள்

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails