பம்முகிறார் ஜெயலலிதா!
சொந்தம் கொண்டாட அம்மாவிற்கு
ஆசைப் பிள்ளைகள்
அதிகம் இல்லை - பணம்நிரூபனின் நாற்று வலை
பந்தம் எனும் பெயரில்
தன் கூடத் தொடர்ந்திட
ஆவல் கொண்டவராய்
சொத்தை குவித்தார்,
தன் அருகே இருக்கும் 'சோ" விற்கும்
தெரியாது மறைத்தார்!
வெளிச்சமாகி
உண்மைகள்
வீக்கிலிக்ஸ் வரை
வந்த நிலையில்;
பதுக்கி வைத்திருகும் சொத்திற்கு
பத்திரம் கேட்கிறது
பெங்களூர் உச்ச நீதிமன்றம்!
வெட்கம் மானமின்றி நாற்று வலையிலிருந்து காப்பி பண்ணினேன்
மறுப்பு வழக்கு தொடுத்து
மக்கள் பணம்
தன்னிடம் இல்லை என
தட்டிக் கழிக்கின்றார் தலைவி!
நிரூபனின் நாற்று வலை www.thamilnattu.com
"மக்கள் பணத்தை
வாரிச் சுருட்டினோர்
கலைஞர் போல்
கதியற்று நிற்பார்கள்
எனும் உண்மையினை உணராது"
பம்மித் திரிகிறா(ர்) அம்மா,
வெகு விரைவில் சொத்தை
நீதிமன்றம் முழுவதுமாய் அறிந்தால்
பறி கொடுத்து விம்மி அழுவாரா
இல்லை வீரத் தலைவியாய்
சொத்தை மறைத்துச் சிரிப்பாரா?
பதறுகிறார் க(கொ)லைஞர்!
நாளை என் மகள்
கோபாலபுரம் வந்து
என் வசல் தனில்
கோலமிட்டு
மீண்டும் இழந்து போன
தமிழ்ப் பிழைப்பிற்கு
இனிமை கொடுப்பாள்
எனும் நினைப்பினில்
காத்திருந்தார் கலைஞர்!
நிரூபனின் நாற்று வலை
சிபிஐ வடிவில்
முன் வினை தொடர
தேசத் துரோகச் சட்டத்தின் கீழ்
வாழ்வில் மீண்டும்
வெளியே வர முடியாதவாறு
திஹாரில் அடுத்தடுத்து
வைக்கிறாங்க கனிமொழிக்கு ஆப்பு,
என் வழியை நம்பி நாற்று வலை
மகள் ஏமாந்து போய்
ஜெயிலினுள்ளே இருப்பதனால்
ஊரெல்லாம் கூடி
ஏளனமாய் எனைப் பார்தடிக்கிறாங்க
நையாண்டி(க்) கூத்து!
சாகும் வயதில்
சிறை செல்ல வேண்டிய நான்
கட்சிப் பிரிவினையால்
கலங்கித் தவிக்கிறேன்!
வாழும் வயதில் என் மகளோ
என் வழியைத் தொடர்ந்ததனால்
இன்று வாடி(த்)
திஹாரில் துடிக்கிறாள்!
பக(கி)டியாய் சிரிக்கிறார் கே(க)ப்டன்!
போதையிலே நான் தேர்தல்
மேடை தன்னில் பல
மந்திரங்கள் சொல்லியதாக
மீடியாக்கள் படம் போட்டு காட்டினாலும்
தந்திரமாய் தட்டிப் பறித்தேன்
ஐயாவின் இடத்தை- அம்மாக்கு
நிகராய் அரியணையின் அருகே
அமர்ந்தேன் எதிர்க் கட்சி உருவில்!
என்னதான் நடந்தாலும்
நானும் அம்மாவின்
செல்லப் பிள்ளையாய்
நடிப்பது போல்
நாலு பேர் பேசுகிறார்கள்
"கேப்டனின் அரசியல் தந்திரம்
கேலிக்குரியதாகிப் போன மந்திரம்"
என சேதி போட்டு
சிரிக்கிறது பல பத்திரிகைகள்;
சிங்கிள் கேப்பினில்
அம்மாவின் இடத்தை
பிடிக்க நான் அமைதியாய் இருப்பதனை
சீரியஸ் ஆக்கிட(த்)
துடிக்கின்றன பல சேதி தாள்கள்!
நாளை என் விழி அசைந்தால்
வாய்ச் சொல்லெனும்
வடிவில் சீற காத்திருக்கின்றன
பல வாள்கள்!
பேசினால்
போதையில் உளறுவதாய்
பொய்யுரைக்கும் மீடியா
நடுவே நானும்
மௌனமாய் இருப்பதாய்
காட்டிட விடுகிறார்களா?
இல்லையே!
வாசலில் கூட்டமாய் கூடி
என் அரசியல் வாழ்வின்
செம்பினை நெளித்திடத் துடிக்கிறது
பல மீடியாக்கள்!
ஆதலால் இப்போது
கட்சி வாசலில் குவிந்திருக்கின்றனர்
பல செய்தியாளர்கள்!
*************************************************************************************************************************
பதிவுலகில் சுவையான அனுபவக் குறிப்புக்களையும், சுவாரஸ்யமான கவிதைகளைத் தருவதிலும் வல்லவராக இருக்கின்ற ஒரு புதிய பதிவரின் வலைப் பூவிற்குத் தான் இன்று நாம் செல்லப் போகின்றோம்.
மழைத் தூரலில் நனைய வேண்டும் எனும் ஆவல் எல்லோருக்கும் இருப்பது இயல்பு தானே. அதே போன்று பதிவுலகில் மனதைத் தொடும் காதற் கவிதைகளைத் தாங்கி வரும் "சின்னதூரல்" வலைப் பதிவிற்குச் செல்லுகின்ற உங்களுக்கும் மென்மையான கவி மொழிகள் மனதில் இனிமைத் தூரலை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.
சின்னதூரல் வலைப் பதிவிற்குச் செல்ல:
****************************************************************************************************************************
|
54 Comments:
ஹா ஹா ஹா ஹா ஜெயா'வுக்கு முதல் வாரல்.....
கொலைஞருக்கு இரண்டாவது வாரல்...
புர்ச்சி கொலைஞருக்கு மூணாவது வாரல்....ம்ம்ம்ம் அடுத்து, ம்ம்ம் இன்னும் இன்னும் எதிர்பார்க்கிறோம்....
ஹி ...ஹி...
நல்லா இருக்கு !!!
அரசியல் பதிவுகளை நான் படிப்பதில்லை
செவிவழி கேட்பதோடு சரி...
தலைப்பு சுவாரசியமாகவும் ,
சிரிக்கும் படியும் இருந்ததால்
படித்தேன்...
அறிந்து கொள்ளவேண்டிய
விஷயங்களை
ரசனையாக தந்ததற்கு நன்றி....
படித்து முடித்தபின்
நான் எதிர்பார்க்கவில்லை
இதை....,
என்னை அறிமுகபடுத்துவீர்கள்
என்று...
நன்றி சகோ.....
அரசியல் நிலவரத்தை வார்த்தையில் காட்டி சுளுக்கு எடுத்து இருக்கிறீர் நிரூ அருமை ..
ஹா ஹா ஹா எல்லாருக்கும் அடி.
இப்ப ஓகே பாஸ் ...வோட்டு போட்டுட்டேன் ....
ஹீ ஹீ ஹீ செம காமெடி.
ஹி.ஹி.ஹி.ஹி...இந்தப்பதிவுக்கு நம்ம அம்மா ஆளு நம்ம நண்பர் இல்லாமல் போய்விட்டாரே ஒரு வேளை அவர் வெளியூர் போய்விட்டதால திட்டமிட்டு போட்டு இருக்கீங்களா.....ஹி.ஹி.ஹி.ஹி.
இதுல நான் துஷியை சொல்லுறேனு நினைக்கவேண்டாம்......அப்புடினு சொன்னா நம்பவா போறீங்க.....ஹி.ஹி.ஹி.ஹி..
பாவம்யா தாத்தா......
என்னையா நிரு இப்பிடி எல்லாரையும் காலை வாருகின்றீர்களே பிழைக்கத்தெரியாத மனுசனா இருக்கீங்களே...!!!!?? ஹி ஹி நல்லதொரு நையாண்டிக் கவிதை.... வாழ்த்துக்கள்..
நல்ல நையாண்டிக் கவிதை பாஸ் சூப்பர்
கர்நாடகாவில் பிஜேபி ஆட்சி நடக்குது, அதனால் அங்கு பிஜேபி ஆட்சி முடியும்வரை அம்மாவுக்கு பிரச்சினையில்லை என்று நினைக்கிறேன்.
வயசு கம்மியா இருந்தாலும் தண்டவாளாத்தில் தலையை வைத்து தன் மகளைக் காப்பாத்திவிடலாம். என்னத்த பண்றது, இப்போ தண்டவாளம் வரை வீல் சேர் போகாது.
கேப்டனின் மௌனம் இனி இப்படியே தொடரும் என நம்புறேன். ஏன்னா அவர் வாயை திறந்தாலும் பலனளிக்காது என்பதை அவரே புரிஞ்சி வச்சிருக்கார்.
பொருத்திருந்து பார்ப்போம் விளைவுகள் எப்பிடி என்று !
இந்திய அரசியலையும் விட்டு வைக்க மாட்டீங்களா!!! கவிதைகள் கலக்கல்
கலக்கல் நக்கல் சகோ!
நன்றி!
தமிழ் நாட்டு அரசியல் நாற்றுகிட்ட இந்த பாடு படுதே !
உங்களுக்கே உரிய Trademark நையாண்டி வாரல்கள் சகோதரம்...
ஜெ இப்பம் நல்லா மாறினாலும் பண்ணின தப்புகளுக்கு தண்டனை எப்படியும் கிடைக்கும்...
மு க பிள்ளைட்ட கூட உண்மை பேசுவாரான்னு தெரியல...
காப்டன்=வடிவேலு
எனக்கு ஏற்கனவே பரிச்சியமான சின்ன தூறலுக்கு வாழ்த்துக்கள்...
அரசியல் கருத்துக்களை நகைச்சுவையாக அம்மாவின் நிலையையும் கலைஞர் நிலையையும் கவிபடுத்தினீர்கள் இறுதியில் விஜய்காந்தையும் சீண்டிவிட்டீர்களே கொஞ்சம் காலம் ஆட்சியை பொறுத்திருந்து பார்க்கட்டுமே கேப்டன்!
சகபதிவாளர் சின்னத்தூரல் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!
புட்டுப் புட்டு வைச்சிருக்கீங்க!
தமிழக அரசியலில் முக்கியமான மூவரையும் வாரிய விதம் அருமை.
ஆமாம் மூவரில் முந்துவது யார் நண்பரே..
//ஆவல் கொண்டவராய்
சொத்தை குவித்தார்,
தன் அருகே இருக்கும் 'சோ" விற்கும்
தெரியாது மறைத்தார்!//
ஹா ஹா.. இந்த விசயத்தில கருனாநிதியும் ஜெவும் நானா நீயாதான்..
//பதுக்கி வைத்திருகும் சொத்திற்கு
பத்திரம் கேட்கிறது
பெங்களூர் உச்ச நீதிமன்றம்!//
அதான் படத்தையே போட்டுட்டீங்க.. பந்து ரிட்டேர்ன்...ஹி ஹி
//என்னதான் நடந்தாலும்
நானும் அம்மாவின்
செல்லப் பிள்ளையாய்
நடிப்பது போல்
நாலு பேர் பேசுகிறார்கள்//
நானும் எவ்வளவு நாளைக்குத்தான் கப்டனாவே நடிக்கிறது
//என்னதான் நடந்தாலும்
நானும் அம்மாவின்
செல்லப் பிள்ளையாய்
நடிப்பது போல்
நாலு பேர் பேசுகிறார்கள்//
நானும் எவ்வளவு நாளைக்குத்தான் கப்டனாவே நடிக்கிறது
மூன்று முத்துக்கள் (??!!) பற்றி நல்ல நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள்...
சூப்பரோ சூப்பர்
நண்பர் சின்னத்தூரலுக்கு வாழ்த்துக்கள்
இனிய மாலை வணக்கம் நிரூ..
பகடிக் கவிதைகளா இன்று...
சொத்துக்குவிப்பு வழக்கைக் கண்டு மம்மி பம்முவது உண்மை தான்..அவரும் என்னென்னவோ செய்து பார்க்கிறார்..ம்ஹூம்.
கொலைஞர்............முற்செய்த பாவம்!
அம்மா+கொலைஞர் ஆட்டத்தால், ஒருவேளை கேப்டன் சி.எம் ஆகிடுவாரோ என்று பயமாகத்தான் இருக்கிறது..
செம அடி
சகோ.. நக்கலால் செம அடி...மூவருக்கும்
ஆனாலும் எம்புட்டு அடிச்சாலும் தாங்குவாங்க...
பேசினால்
போதையில் உளறுவதாய்
பொய்யுரைக்கும் மீடியா//
பாக்க பொய் மாதிரி தெரியல.
பக்கத்துல இருந்து ஊத்தி கொடுத்தியான்னு கேக்காதிங்க.
அவர் வழியில் போனா எல்லாருக்கும் ஆப்பு தான் போல.
விம்மி அழுவாரா?மறைத்து சிரிப்பாரா?
நள்ளிரவு வாழ்த்துக்கள்,நிரூபன்!நல்ல வசன கவிதை,வாழ்த்துக்கள்!
நள்ளிரவில் உங்களுக்கு வாழ்த்துக் கூறி என்ன பயன்? வணக்கம் என்று "திருத்தி" வாசிக்கவும்!ஹி!ஹி!ஹி!ஹி!
உங்கள் அரசியல் சரவெடிக் கவிதைகள் அழகு. எதையும் கவிதையாக்காமல் விடமாட்டீர்கள் போலயே...அதற்காக கேப்டனைஎல்லாம் முதல்வராய் வைத்து கவிதை எழுதி எங்களை எல்லாம் பயமுறுத்தாதீர்கள். மெல்லிதயம் கொண்டவர்கள் நாங்கள்.தாங்கமாட்டோம்.
அரசியல்லையே பச்சடி கிண்டீட்டிங்களே.........
திரட்டிகள் ஒன்றையும் காணோமே?
///சொந்தம் கொண்டாட அம்மாவிற்கு
ஆசைப் பிள்ளைகள்
அதிகம் இல்லை - பணம்
பந்தம் எனும் பெயரில்
தன் கூடத் தொடர்ந்திட
ஆவல் கொண்டவராய்
சொத்தை குவித்தார்,
தன் அருகே இருக்கும் 'சோ" விற்கும்
தெரியாது மறைத்தார்!/// சோ அவ்வளவு பெரிய இளிச்ச வாயனா ஹிஹி
///நாளை என் மகள்
கோபாலபுரம் வந்து
என் வசல் தனில்
கோலமிட்டு// அவருக்கு கோலம் போட மனைவி ,துணைவி ,பொண்டாட்டி எண்டு மூவர் இருக்கினம் )))
///பேசினால்
போதையில் உளறுவதாய்
பொய்யுரைக்கும் மீடியா
நடுவே நானும்
மௌனமாய் இருப்பதாய்
காட்டிட விடுகிறார்களா?
இல்லையே!/// சினிமாவில நாலு தீவிரவாதியை அடிச்சவன் ஆக நாட்டையும் காப்பாற்றுவான் எண்டு நினச்சு ஆளை கதிரேல அமர்த்தினது யார் தப்பு )))
கவிதைகள் கலக்கல்
சின்ன தூறலுக்கு வாழ்த்துக்கள் ...
கேப்டன் பற்றிய கவிதையை ரொம்பவும் ரசித்தேன்...
50
கடைந்து எடுத்த கலக்கல் கவிதை...!!!
வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு ......
சின்னத் தூறலிற்க்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் ......
ஓகே சூப்பர் பாஸ்
அரசியலை அலசி.. கலக்கலாக கவிதை... வாழ்த்துக்கள் நண்பா.
சின்ன தூரலுக்கும் வாழ்த்துக்கள்
Post a Comment