ஈழப் போரில் இதுவரை வெளிவராத மர்மங்களின் தொகுப்பு.
முதற் பாகத்தின் தொடர்ச்சியாக...
கொழும்பு மாவட்டத்தில் நிகழும் புலிகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்தல், தமிழ் வணிகர்களின் வியாபரத் தகவல்களைத் திரட்டி இராணுவத்தினருக்கு வழங்குதல் முதலிய விடயங்களில் இராணுவத்திற்குச் சார்பாக ஜால்ராப் போட்டு வீணை வாசித்துக் கொண்டிருந்த ஒருவர்...அடிக்கடி இராணுவத்தின் கொழும்பு மாவட்டப் புலனாய்வுப் பிரிவில் மிக முக்கிய பொறுப்பில் இருந்த இஸ்லாமிய அதிகாரியினைத் தனது கட்சி அமைவிடத்திற்கு அழைத்துச் சந்திப்புக்களை மேற்கொண்டு இரசியத் தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருந்தார். நாற்று
நாற்றிலிருந்து அனுமதியின்றி காப்பி செய்த பதிவு
இனி..........யார் மீது? எத்தனை பேரின் உதவியோடு, புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மனித வெடி குண்டுத் தாக்குதல் எனப்படும் கரும்புலித் தாக்குதல் தோல்வியடைந்தது? அது எப்படித் திசை திருப்பட்டது எனும் தகவல்கள் அடுத்த பாகத்தில் பார்ப்போமா.............
நாற்றிலிருந்து அனுமதியின்றி காப்பி செய்த பதிவு
இனி..........யார் மீது? எத்தனை பேரின் உதவியோடு, புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மனித வெடி குண்டுத் தாக்குதல் எனப்படும் கரும்புலித் தாக்குதல் தோல்வியடைந்தது? அது எப்படித் திசை திருப்பட்டது எனும் தகவல்கள் அடுத்த பாகத்தில் பார்ப்போமா.............
நிஷாம் முத்தலிப் என்ற பெயரை அறியாதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். இலங்கை அரசின் இராணுவ புலனாய்வுத் துறையில் 1995-2005ம் ஆண்டு வரையான காலத்தில் புலனாய்வுத் துறையின் வழி நடத்துனராக இருந்தவர் தான் இந்த நிஷாம் முத்தலிப். கொழும்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் பல அப்பாவி வட கிழக்குத் தமிழர்களைக் கைது செய்து, அவர்களை நாலாம் மாடி, போகம்பரை முதலிய வதை முகாம்களுக்கு அனுப்புவதற்கு முன்பதாக தந்திரமாக விசாரணை செய்து புலிகள் பற்றிய சிறு துரும்புத் தகவலைக் கூட இலாவகமாகப் பெற்றுக் கொள்வதில் வல்லவராக விளங்கினார் நிஷாம் முத்தலிப்.
கொழும்பு மாவட்டத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் காரணமின்றிக் கைது செய்யப்பட்டு நாலாம் மாடி எனும் சித்திரவதைக் கூடத்திற்கு அனுப்பப்பட்ட பல தமிழ் உறவுகளிற்கு நிஷாமின் வலது கையின் ஐந்து விரல்களும் கன்னத்தில் அச்சுப் போல் பதிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இதே வேளை பல தமிழர்களை இலகுவில் மயக்கி, விலை பேசி தன் வசப்படுத்திப் புலிகளால் கொழும்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் தாக்குதல் பற்றிய தகவல்களை அறிந்து கொழும்பு மாவட்டத்தில் ரகசியமாகப் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தும் புலிகளின் நடமாட்டத்தினை வேரோடு கிள்ளி எறிவதிலும் முனைப்புக் காட்டியவர் தான் மேஜர் துவான் நிஷாம் முத்தலிப். தமிழை வழுவின்றித் தெளிவாகப் பேசுவதிலும் நிஷாம் முத்தலிப் தேர்ந்த ஒரு முஸ்லிம் தமிழராக வாழ்ந்திருக்கிறார்.
2004ம் ஆண்டு, ஜூலை மாதம், 07ம் திகதி. நிஷாம் அவர்கள் கொள்ளுப்பிட்டியில் அமைந்திருந்த அரசாங்கத்திற்கு விசுவாசமாக வாலாட்டுகின்ற அமைச்சரின் அலுவலகத்திற்கு வழமை போன்று வருகின்றார். வழமையாக (தொடர்ச்சியாக) குறிப்பிட்ட ஜால்ரா நபரைச் சந்தித்து தமிழர் தரப்பின் பல உளவுத் தகவல்களையும், கொழும்பு மாவட்ட தமிழ் வணிகர்களின் தகவல்களையும் பெற்றுக் கொள்வதற்காக நிஷாம் முத்தலிப் அவர்கள் வருவதனை புலிகள் அறிந்து வைத்திருந்தார்கள். நீண்ட நாட்களாக புலிகளின் அணிகளால் வலை வீசிக் கதை முடிக்க காத்திருக்கும் பட்டியலில் உள்ள நபராக நிஷாம் முத்தலிப் அவர்கள் இருந்தாலும், கொழும்பின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் நிஷாமின் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த காரணத்தினாலும் அவர் மீது தாக்குதல் நடாத்துவதற்கான சந்தர்ப்பம் புலிகளுக்கு இலகுவில் கிடைக்கவில்லை.
சம்பவ தினம், நிஷாம் அமைச்சரைச் சந்தித்து உரையாடும் வேளை, மறு புறத்தில் கொழும்பில் இராணுவப் பாஸ் பெறுவதற்காக அமைச்சரின் காலடியில் விழுந்து கெஞ்சுவதற்காக ஒரு தொகுதி மக்களும், ஏனைய அலுவலகங்களில் தம் பதவியினைத் தக்க வைப்பதற்காக இன்னோர் பகுதி மக்களும் வாசலில் காத்திருக்கிறார்கள். நிஷாம் தன் அலுவலகத்திற்கு வருகை தந்ததை உணர்ந்த அமைச்சர் தனியாக அவரைச் சந்தித்து உரையாடத் தயாராகின்றார். இந் நிகழ்வுகள் அனைத்தையும் உற்று நோக்கியபடி, வாசலில் தற்கொலையாளிப் பெண் காத்திருக்கிறார்.
அமைச்சரைச் சூழ்ந்திருந்தோர் விலகும் சமயம் பார்த்து தன் கருமத்தில் கண்ணாக இருந்த அப் பெண் நிஷாமினை நோக்கிப் பாய்வதற்குத் தயாரான வேளை, நிஷாம் திடீரென்று உள்ளே போகின்றார். அமைச்சருக்கு அருகாக சந்தேகத்திற்கிடமான பெண் நிற்கிறாள் என்பதனை அறிந்த மெய்க் காவலர்கள், அப் பெண்ணினை நோக்கி விரைந்து செல்லும் சந்தர்ப்பத்தில் அப் பெண் தன்னால் இன்று தாக்குதலைச் சரியாகச் செய்து முடிக்க முடியாத சந்தர்ப்பம் உருவாகி விட்டதனை உணர்ந்து தான் உயிரோடு எதிரியிடம் அகப்படக் கூடாது எனும் நோக்கில் குண்டினை வெடிக்க வைக்கின்றாள்.
விடயத்தைப் புரிந்து கொண்ட நிஷாம் சமயோசிதமாக ஏனைய இராணுவப் பாதுகாப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பதாக வெளியேறுகின்றார். இராணுவத்தினர் வந்ததும், 10வது தடவையாகப் புலிகள் தன் மீது தற்கொலைத் தாக்குதல் என பதற்றதோடு செய்தி பரப்பி, அதனை ஊடகங்களிற்கும் அனுப்புகின்றார் அமைச்சர். இதன் பின்னர் நடந்தது என்ன? நிஷாம் முத்தலிப் அவர்கள், தீவிர விசாரணையினை மேற்கொண்டு, குறிப்பிட்ட அந்தப் பெண்ணும், ஏனைய ஒரு சில புலிகளின் உளவாளிகளும், தன்னை நோக்கித் தான் தாக்குதல் நடத்தும் நோக்கில் அமைச்சரின் அலுவலகத்திற்குத் தான் வரும் நாட்களை எதிர்பார்த்து வந்திருக்கிறார்கள் எனும் உண்மையினை அறிந்து கொள்கின்றார்.
சமயோசிதமாகச் செயற்பட்ட நிஷாம்; தன் மீதான தாக்குதலுக்கு புலிகளின் தலமையால் அனுப்பி வைக்கப்பட்ட கொழும்பில் உள்ள எஞ்சிய புலிகளின் நடவடிக்கைகளைத் திசை திருப்பி; புலிகளின் தலமைப் பீடத்திற்கு அதிர்ச்சி கொடுக்க வேண்டும் எனும் நோக்கில் தீவிரமாகச் செயற்படத் தொடங்கினார் நிஷாம் முத்தலில் பிரஸ்தாப அமைச்சரைச் சந்திப்பதில்லை என்றும், தமிழ் அமைச்சரின் அலுவலகத்திற்குப் போவதுமில்லை என்றும் ஒரு மாயையினை உருவாக்கினார். அவராகவே சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் என்று அமைச்சரின் அலுவலத்தில் விசுவாசிகளாகப் பணி புரிந்த இருவரை விசாரணைக்கு என அழைத்துச் சென்று நாடகமாடினார். புலிகளின் தலமைப் பீடம் தாம் அனுப்பிய போராளிகள் தவறான இலக்கினை எட்டி விட்டார்கள் என்று நம்பும் படியான நடவடிக்கைகளில் இறங்கித் தன் உயிரினைப் பாதுகாக்கும் விடா முயற்சியில் ஈடுபடத் தொடங்கினார் நிஷாம்.
மங்கை, அன்பரசன், நெடுங்குரலோன், செந்நிலா (இவை யாவும் புனை பெயர்கள்) எனப் புலிகளால் அனுப்பப்பட்ட போராளிகளில், மங்கை குறிப்பிட்ட தாக்குதலில் உயிரிழந்து கொள்ள, ஏனைய மூன்று போராளிகளும் தவறான வழியில் தாக்குதலை நடத்தியாக தலமைப் பீடத்திலிருந்து கண்டிப்புடன் கூடிய எச்சரிக்கை அறிவுப்பு நியூட்டன் அவர்கள் ஊடாக பரிமாறப்படுகின்றது. இவ் வேளையில் கொள்ளுப்பிட்டிக்கு அண்மையில் உளவு பார்த்தார் எனும் குற்றச் சாட்டில் அன்பரசன் அவர்கள் கைது செய்யப்படுகின்றார்.அன்பரசனின் கைது மூலம் நிஷாம் பற்றிய தாக்குதல் தகவல்களை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் பெற்றுக் கொள்கின்றார்கள்.
நெடுங்குரலோனுக்கும் இலக்கில் சறுக்கல்கள் ஏற்படுவதற்குச் சான்றாக, இராணுவ வீரர்கள் வந்து போகும் விபச்சார நிலையத்திற்குச் சென்று தகவல் சேகரித்து வரும் காலப் பகுதியில் அங்கே உள்ள ஒரு பெண்ணோடு காதல் ஏற்பட்டுக் கொள்கிறது. இவ் விடயம் பொறுப்பாளரிற்குத் தெரிந்து கொள்ள கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகின்றார் நெடுங்குரலோன். இக் காலப் பகுதியில் திடீரென நியூட்டன் இருக்கும் இடத்தினை இலங்கையின் புலனாய்வுப் பகுதி அதிகாரிகள் சூழ்ந்து கொள்ள, நிஷாம் மீதான தாக்குதல் தோல்வியில் முடிவடைகின்றது. ஆனாலும் புலிகளின் தலமை தன் மன உறுதியினை இழக்கவில்லை.
செந்நிலாவினைப் பாதுகாப்பாக வன்னிக்கு அழைத்த புலிகளின் தாக்குதற் பிரிவினர், மீண்டும் புதிய மூன்று போராளிகளை அனுப்பி நிஷாம் முத்தலிப்பைக் கண்காணிக்கத் தொடங்குகிறார்கள். 2005ம் ஆண்டு மே மாதம், 31ம் திகதி காலை 7.50 மணியளவில் நரஹேன்பிட்டி- பொல்ஹன்கொடச் சந்தியில் (கொழும்பிலிருந்து சற்றுத் தொலைவிலுள்ள இடம்) வைத்து நிஷாம் முத்தலிப் அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்த புலிகளால் சுட்டுக் கொல்லப்படுகின்றார்.
"ஈழத்தை அதிர வைத்த தற்கொலைத் தாக்குதல் தோல்வியில் முடிவடைந்து கொள்ள, அதன் மூலம் இராணுவ புலனாய்வுத் துறையினைச் சேர்ந்த நிஷாம் அவர்கள் தன் நிலையினைப் பலப்படுத்திட முயற்சிகள் எடுக்கும் சந்தர்ப்பத்தில், பிரஸ்தாப அமைச்சரோ தன் சுய நலத்திற்குச் சாதகமாகத் தாக்குதலை காரணங் காட்டித் தன் பாதுகாப்பினை அதிகரித்துக் கொண்ட காலப் பகுதியில், புலிகள் மீண்டும் தாம் மன வலிமையில் எப்போதும் குறைந்தவர்கள் அல்ல என்பதனை நிரூபித்து சிறு சத்தம் ஏதுமின்றி வெற்றி கரமாக நிஷாம் முத்தலிப் மீதான தாக்குதலை நிறைவு செய்திருந்தார்கள்."
அன்பான அறிவித்தல்: ஏற்கனவே நடந்து முடிந்த, வழக்குகள் யாவும் நிறைவுற்ற, குற்றவாளிகள் தண்டனை பெற்றுக் கொண்ட சம்பவத்தினையே இங்கு பகிர்கிறேன். இம் மர்மங்களை எழுத்துருவிற்கு கொண்டு வருவதன் மூலம்; குறித்த அமைச்சரைப் பற்றிய தகவலினைப் பகிரங்கப்படுத்த நான் முயற்சி செய்யவில்லை. நடந்து முடிந்த ஒரு சம்பவத்தினை இங்கே பகிர்வதால், இக் கட்டுரையினைக் கட்டுரையாகவே விட்டு விடுவோம். யார் மனதையும் புண்படுத்த வேண்டும் எனும் நோக்கிலோ, அல்லது சம்பவத்தோடு தொடர்புடைய நபரை இக் கட்டுரையூடாக வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காகவோ இக் கட்டுரையினை இங்கே எழுதவில்லை.
நாற்றிலிருந்து அனுமதியின்றி காப்பி செய்த பதிவு
பின்னூட்டமிட முடியாத உறவுகள், வாக்குகளை மாத்திரம் பதிவு பிடித்திருந்தால் வழங்கி விட்டுச் செல்லலாமல்லவா.
நாற்றிலிருந்து அனுமதியின்றி காப்பி செய்த பதிவு
பின்னூட்டமிட முடியாத உறவுகள், வாக்குகளை மாத்திரம் பதிவு பிடித்திருந்தால் வழங்கி விட்டுச் செல்லலாமல்லவா.
இன்றைய தினம் பதிவின் நீளம் காரணமாக பதிவர் அறிமுகத்தினை இணைத்துக் கொள்ள முடியவில்லை. மன்னிக்கவும் உறவுகளே!
|
36 Comments:
தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா
இப்போதான் நான் first
Vendaam thaliva..
Mudiyali,,,,,
manasu roomba valikkuthu...
வெள்ளை சாறி கட்டிய பொண்ணு இருக்கயில இருந்து திடீரெண்டு எழுந்து தோள் பக்கத்தில கிடந்த கிளிப்பை இழுத்துவிடும் .............. இது தானே,,,, இதை கண்காணிப்பு கமெரா மூலம் எடுத்து வீடியோவாக அப்போ இலங்கை தொலைக்காட்சிகளில் எல்லாம் ஒளிபரப்பியிருந்தார்கள்,, கொழும்பில் இருந்த போது சக்தி ரீவியில் பார்த்த நினைவு..
இதில இவ்வளவு மேட்டர் இருந்திருக்கா???? நான் நினச்சேன் அது டக்கிளசு மாமாவுக்கு வச்சுதெண்டேல்லோ.........!
நல்ல விறுவிறுப்பான நடையில் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளீர்கள்..
கந்தசாமி அந்த மாமா யார்னு சொல்லிட்டாரே...
படிக்க படிக்க மனம் கனக்கிறது
ஆனால் உங்கள் எழுத்துக்களில்
உள்ள யதார்த்தம் நிமிர்ந்து உட்காரச் செய்கிறது.
அட நானும் அந்த மாமாவுக்குத்தான் வைச்சதுன்னு நினைச்சேன் அதுக்குள்ள இவ்வளவு விசஜம் இருக்கா.,?? அதுசரி மாமாவுக்கு புலிகளைப்பற்றி என்ன தெரியுமென்னு அந்த அதிகாரி அங்க போனாரய்யா.. அந்தாளுக்கு தமிழர்களை பற்றியே ஒரு மண்ணும் தெரியாதே... பக்சேக்களுக்கு வால் பிடிக்க அவர்களுக்கு கு........கழுவத்தான் தெரியும்.. அதுசரி அவரு இந்தியாவில ஒரு அப்பாவிய சுட்டாரே அந்த வழக்கு என்னாச்சையா...!!!??
நிறைய கற்றுக்கொண்டேன் சகோதரம் இந்த இரண்டு பாகங்களிலும்...
////காட்டான் said...
அதுசரி அவரு இந்தியாவில ஒரு அப்பாவிய சுட்டாரே அந்த வழக்கு என்னாச்சையா...!!!??/// அதை பாராட்டி தானே செங்கம்பள வரவேற்ப்பு கொடுக்கப்பட்டது கட்டான் மாமா! ....போதா குறைக்கு அந்த பிரதமர் எல்லாம் கை கொடுத்து வரவேற்றாரே
.........செத்தவன் தமிழன் எல்லோ .....!
தெரியாத நிறைய விடயங்களை தெரிந்து கொண்டேன். இன்னும் எதிர் பார்க்கிறேன். உங்களை தவிர வேறு யார் எழுதி இருந்தாலும் இந்தப் பதிவை படித்திருக்க மாட்டேன். உங்கள் பதிவுகளின் நடு நிலமை பிடித்திருக்கிறது.
வணக்கம் நிருபன் சார், நிறைய விடயங்கள் கூறியிருக்கிறீர்கள், நடுநிலைமையுடன் உங்கள் பதிவுகள் தொடரட்டும்..
வணக்கம் நிருபன் சார், நிறைய விடயங்கள் கூறியிருக்கிறீர்கள், நடுநிலைமையுடன் உங்கள் பதிவுகள் தொடரட்டும்..
கந்தசாமி. said...
////காட்டான் said...
அதுசரி அவரு இந்தியாவில ஒரு அப்பாவிய சுட்டாரே அந்த வழக்கு என்னாச்சையா...!!!??/// அதை பாராட்டி தானே செங்கம்பள வரவேற்ப்பு கொடுக்கப்பட்டது கட்டான் மாமா! ....போதா குறைக்கு அந்த பிரதமர் எல்லாம் கை கொடுத்து வரவேற்றாரே
.........செத்தவன் தமிழன் எல்லோ .....!
September 28, 2011 12:23 AM
சரியா சொன்னீங்க மாப்பிள.. பாதிக்கப்பட்டவன் நம்மாளுதானேன்னு இவங்க கம்முன்னு கிடக்கிறாங்க வழக்க நடத்த காசில்லாம பாதிக்கப்பட்ட குடும்பமும் கைய விட்டுட்டாங்க உயிர்ன்னா எல்லாருமே உயிர்தானே..!!!?? அங்காள சொல்லமாட்டன் நீ கற்பூரம் கப்புன்னு பிடிச்சிடுவ.. ஏதோ இங்கின இருக்கிறதால இத எழுத முடியுது.. இஞ்ச வெள்ள வான் வராதையா...!!!!!!!!!!
Mohamed Faaique said...
தெரியாத நிறைய விடயங்களை தெரிந்து கொண்டேன். இன்னும் எதிர் பார்க்கிறேன். உங்களை தவிர வேறு யார் எழுதி இருந்தாலும் இந்தப் பதிவை படித்திருக்க மாட்டேன். உங்கள் பதிவுகளின் நடு நிலமை பிடித்திருக்கிறது.
September 28, 2011 12:29 AM
அட பரவாயில்லையே இவற்ற பதிவிலயாவது நடுநிலமை இருக்குன்னு சொல்லுறீங்க அப்ப நான் இனி கவனமாதான் வாசிக்கோனும்.. ஹி ஹி ஹி டென்சனாகாத மாப்பிள ஏதோ நம்மாள முடிஞ்சது...!!!!!!)))
சகோ பாகம் இரண்டையும் வாசித்தேன்..
வாசிக்க மனம் கனக்கிறது..வியக்கவும் வைக்கிறது
சகோதரனே உங்கள் நிலையை எண்ணி..என்னமோ பத்திரமாக நல்லாயிருந்தால் சரி..
நல்ல விறு விறுப்பாக நகர்கிறது எழுத்தோட்டம்.
அன்புடன் பாராட்டுக்கள்.
யோவ்... என்னையா இது எட்டிப் பார்க்கவே பயமா இருக்கு! ஒரே, பயங்கர தகவலா கிடக்கு! துணிச்சலான பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா!
செவ்நிலா என்று ஒரு பேரா? கொய்யாலே, செந்நிலா என்றுதான் வரும்!
( செம்மை + நிலா = செந்நிலா )
@Mohamed Faaique
தெரியாத நிறைய விடயங்களை தெரிந்து கொண்டேன். இன்னும் எதிர் பார்க்கிறேன். உங்களை தவிர வேறு யார் எழுதி இருந்தாலும் இந்தப் பதிவை படித்திருக்க மாட்டேன். உங்கள் பதிவுகளின் நடு நிலமை பிடித்திருக்கிறது.////////
ஃபாயிக் அண்ணே! நடுவு நிலைமைன்னா என்னாங்கோ? அப்படி ஒண்ணு உலகத்தில இருக்கா? நடுவு நிலைமையான ஊடகம் ஒன்று சொல்லுங்க பார்க்கலாம்! அறிய ரொம்ப ஆசையா இருக்கு!
சதாம் ஹுசேனையும், ஒசாமா பின் லாதனையும் அமெரிக்கா கொன்றமை பற்றி, நடுவு நிலைமையான ஒரு கட்டுரை எழுதி, எனக்கு மெயிலில் அனுப்புங்க மாப்ளே!
அதனைப் படித்துவிட்டு, நடுவு நிலைமை என்றால் என்னவென்று நான் கற்றுக்கொள்கிறேன்!
அப்புறம், யாழ்ப்பாணத்தில் இருந்து, முஸ்லிம்களை, புலிகள் வெளியேற்றியமை தொடர்பாக உங்களால் “ நடுவு நிலைமையாக “ ஒரு கட்டுரை எழுத முடியுமா?
ஹி ஹி ஹி, ஊடகங்கள் பற்றி, நோட்ஸ் எழுதி படிக்கக்கூடாது! முக்கியமா, இந்த இதழியல் கல்லூரிகளில் சொல்லிக் கொடுக்கப்படும், வரைவிலக்கணங்களைப் பின்பற்றக் கூடாது! ஓகே வா?
அப்புறம் இதே மேட்டரை சப்போஸ் நான் எழுதியிருந்தால், நிஸாம் முத்தலிப் பற்றி நாலு வசனம் “ நல்ல” விதமா போட்டு, அவர் தமிழ் மக்களுக்கு ஆற்றிய அளப்பரிய “ தொண்டுகள்” பற்றியும் எழுதியிருப்பேன்!
அப்போது உங்களுக்குப் பொத்துக்கொண்டு வந்திருக்கும்! சம்மந்தமே இல்லாமல் உங்கள் இனம் மற்றும் மதத்தை அதற்குள் கொண்டு வந்து சொருகி இருப்பீர்கள்! வீணாக கோபப்பட்டிருப்பீர்கள்!
ஆனால் நிரூபன், முத்தலிப் பற்றி, நோகாமல், வலிக்காமல் சொன்னதால் உங்களுக்குப் பிடித்துவிட்டது!
இக்கட்டுரையை நான் எழுதியிருந்தால்....
“ சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து, பல அப்பாவி தமிழ் இளைஞர்களின் உயிரைக் குடித்த கொலைகாரன் நிஸ்ஸாம் முத்தலிப்.....’ என்று தொடங்கியிருப்பேன்!
ஹி ஹி ஹி ஹி நீங்க சுத்தி வளைச்சு சொல்ல வார, நடுவு நிலைமை இதுதானே!
மேலும், நடுநிலைமை என்றால் என்னவென்று வாரா வாரம் நவமணி பேப்பர் படிச்சு, நாங்கள் நல்லாவே தெரிந்து வைத்திருக்கிறோம்!
போங்கையா! போய் புள்ளை குட்டிகள படிக்க வையுங்க!
ஃபாயிக்! நீங்கள் நல்ல நகைச்சுவையாளர்! கடி மன்னன்! நானும் நீங்களும் சேர்ந்து கும்மோ கும்மென்று கும்மியிருக்கிறோம்!
ஹேப்பியா டீல் பண்ணினா, நானும் ஹேப்பியாகவே டீல் பண்ணுவேன்!
மற்றபடி, சுத்திவளைச்சு குத்தலா கதைச்சா, பிறகு நானும் என்னோட, வேலையைக் காட்டத்தானே வேணும்!
ஸோ, ஒற்றுமையா இருக்க ட்ரை பண்ணுங்க! ஓகே வா?
மனதை கனக்க வைக்கும் பதிவு...
உங்கள் துணிச்சலான முயற்சிக்கு வாழ்த்துக்கள்...
பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்!
உலகம் அறியாத பல தகவல்கள்,பகிர்வுக்கு நன்றி சகோ!
ம்ம்ம். வருகையை பதிந்தாச்சு.
நண்பா, நீங்கள் எழுதுவது ஒரு உண்மை சம்பவத்தை. அதனால் இப்பொழுது உயிரோடு இருப்பவர்களைப்பற்றி எழுத நேர்ந்தால் உங்களுக்கு பிரச்சினை வராத அளவுக்கு பார்த்து எழுதுங்கள்.
இந்த நிகழ்வை பற்றிய சில செய்திகளை பகிர்ந்து இருக்கிறீர்கள்.. இதெல்லாம் எங்களுக்கு புதியதே..
எனினும் நீங்கள் உங்கள் எழுத்தில் கொஞ்சம் கவனமாய் இருக்க வேண்டிய தருணம்..
பத்திரம் நிரூ
பதிவுலக வீரன் நிருபன் வாழ்க...
// தாம் மன வலிமையில் எப்போதும் குறைந்தவர்கள் அல்ல //
Love it!! Great Legends!!
சகோ... மிக துணிச்சலான பகிர்வு... நன்றி
அடக்கோதாரி நான் கனவிலும் நினைக்கேல இப்படி கதை போகுமெண்டு
manasu valikkuthu annaa...
புதிய தகவல்கள்!
அந்த"மாமா" தனக்குத் தான் வெடிக்க வந்ததெண்டு சொல்லி,பாதுகாப்பை இரட்டிப்பாக்கினார்!மோட்டுச் சீனாக்களும் நம்பி!
"தாய் பிறன் கைப்படச் சகிப்பவனாகி
நாயென வாழ்வோன் நமரில் இங்கு உளனோ?” - என பாரதி பாடினானே, அதே உணர்வைக் கொண்டோர் தான், தாய் மண்ணில் அடிமையாய் நாய் வாழ்வு வாழப்பொறுக்காமல் விடுதலையை ஏந்தினர் மனதில்.
.....
..... சறுக்கி விட்டது. ஈடுசெய்யவே முடியாத இழப்பை சந்தித்தாகி விட்டது.
உண்மைகள் ஒவ்வொன்றாய் வெளிவந்துக் கொண்டிருக்கிறது.
பகிர்விற்கு நன்றிங்க நிரூபன்.
JOTHIG ஜோதிஜி said....
நல்ல எழுத்து நடை. சிறப்பான நாகரிகம். அற்புதமான கோர்வை. வரிக்கு வரிக்கு வெளிச்சம் போட்டு காட்டிய உண்மைகள். என் வணக்கமும் வாழ்த்துகளும்...... இந்த பெயர் சரிதானே?//
அன்பிற்குரிய சகோதரம்,
என் நிலமையினைக் கருத்திற் கொண்டும், என் நண்பர்களின் நிலையினைக் கருத்திற் கொண்டும் நீங்கள் குறிப்பிட்ட பின்னூட்டதினை மீளத் திருத்தியிருக்கிறேன்.
புரிந்து கொள்வீங்க என்று நினைக்கிறேன்.
தங்களின் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி பாஸ்.
முத்தலிப் ஒரு ஜா முஸ்லிம். இவர்கள் எல்லாம் பிரிட்டிஷ் காலத்தில் இந்தோன்னாசிய ஜாவா தீவுகளில் இருந்து வியாபாரத்துக்காக கொழும்பில் வந்து குடியேறியவர்கள். இவர்கள் இலங்கையில் மற்ற வடகிழக்கு முஸ்லிம் போல தமிழர்கள் கிடையாது இவர்கள் அதிகம் சின்ஹல மொழியை பேசுபவர்கள் சிறிது தமிழ் மொழி தெரிந்தவர்கள் என்பதால் இவர்களை இலங்கை ராணுவம் இந்த வேலைகளை செய்ய வைத்திருந்தது
Post a Comment