இடையறாத
மழைப் பொழிவிற்கு மத்தியில்
கந்தக(த்) துகள்களின்
எச்சங்களோடு
காற்றில் கலைந்து
புதைந்து போக வேண்டிய
வன்னி மக்கள்
புனர்வாழ்வு பெற்று
புத்துயிர் பெற்றோராய்
எப்படி வாழ்ந்திட முடியும்?
நெஞ்சுரம் கொண்டவர்களாய்,
எச்சத்திலிருந்து புதிதாய்
எழுவோராய் வன்னியார்
இருப்பது எப்படி நியாயமாகும்?
வன்னி மக்கள் முட்டாள்கள்- காரணம்
வாசல் வரை வந்த பகையின்
கால் தொழுதவர்கள்,
வன்னி மக்கள் தேசத் துரோகிகள்- காரணம்
புலத் தமிழருள் ஒளிந்து வாழும்
கீழ்த் தரமான போர் விரும்பிகளின்
உள்ளம் குளிர வெற்றிச் சேதி அனுப்பாதோர்,
வன்னி மக்கள் சுய நலக்காரர்- காரணம்
புணர்வாழ்வெனும் பெயரில் தம்
புலத் தமிழ்ச் சந்ததி வாழ
திரட்டிய பணத்திற்கு
இறுதி போரில் பின்னகர்ந்து
போர் வெறிக்கு
முற்றுப் புள்ளி வைத்தவர்கள்!
வன்னி மக்கள் பச்சோந்திகள்- காரணம்
சுடச் சுடச் சேதி போட்டு
சுதியேற்றி போர்பறை பாட
நினைத்தோருக்கு
சுறணையெனும்
மந்திரத்தை உணர்த்தியோர்;
வன்னி மக்கள் தேசத்துரோகிகள்,
கோழைகள்,
வால் பிடிகள்- அல்லக்கைகள்- காரணம்
ஈழம் வெல்ல இறுதி வரை போரிடாது
வீழ்ந்த வீரர் நினைவுகளோடு
பின்னகர்ந்தோர்!
காகிதப் புலிகளாய்
திரை மறைவில் வேடமிட்டு,
போலியாய் தேசப் பற்றை
நெஞ்சில் சுமப்பதாய்
நடிக்கும் ஈனர்கள் மத்தியில்
வன்னி மக்கள்
கல்வி கற்க கூடாது,
வன்னி மக்கள்
வாழ்வில் முன்னேறவே கூடாது!!
மீண்டும் அதே பனங்காம மண்ணில்
ஓலைக் குடிசைகளில்,
குருதி தேய்த தெருக்களிடையே
செத்துப் பிழைத்து ஒரு
சந்ததி மட்டும் முற்றாக அழிய வேண்டும்
நாமெல்லாம்
கம்பியூட்டர் திரையூடே
கண்டு களித்து
கை கொட்டி(ச்)
சிரித்து மகிழ வேண்டும்!
மக்கள் இறக்கையிலும்
இறப்பது மக்களல்ல என
நாம் எழுதி மகிழ வேண்டும்,
இடம் பெயர்ந்த அகதிகளின்
நிலையை உரைப்போரை
எள்ளி நகை செய்து கொல்ல வேண்டும்,
உதவி ஏதுமின்றி
உறவுகள் தொலைத்து நிற்கும்
அப்பாவி மக்கள் கதையினை
எம் உரத்த குரல் கொண்டு
அடக்க வேண்டும்!
நான், என் பிள்ளை
என் அப்பா - அம்மா
எல்லோரும்
என் சார்ந்து
வன்னி மக்களை வைத்து
அவர் தம் குருதிகளின்
நிழல் மேல் ஏறி நின்று
நாட்டுப் பற்றாளர் என
மார் தட்டிச் சொல்லி மகிழ வேண்டும்!
அப்பாவி மக்கள் மட்டும்
அரவணைப்பார் யாருமின்றி
நிற்கையிலும்
எம் காதிகப் புலி வீரத்தால்
அவர் தம் குரலை நசுக்கிட வேண்டும்!
நாங்கள் தான் புலிகள்
நாங்கள் தான்
மண்ணுக்காய் வீழ்ந்த
பெரு வீரர் நினைவை
வைத்து வியாபாரம் செய்யும்
காகிதப் புலிகள்!
ஈழ விசுவாசிகள் போல்
போலியாய் நடிப்போர்
கால்களின் கீழ்
நசுங்கிச் சாகட்டும்
அப்பாவி மக்களின்
எதிர்காலம் பற்றிய கனவுகள்!
அநீதியின் கீழ்
அழுது கொண்டு வாழ்வோர்
அப்படியே சாகட்டும்;
எமக்கென்ன கவலை?
காகிதப் புலிகளாய்
நாமிருந்து
அவர் சந்ததிகள்
ஏதும் செய்கையில்
புலிகள் மீண்டும்
புத்துயிர் பெற்றதாய்
வர்ணச் சேதி பிரசுரித்து
வாழ்த்துப் பா இயற்றிப் பாடிடுவோம்!
வன்னி மக்கள்
இராணுவத்திற்கெதிராக
கிளர்ந்தெழும் போது
அவர்கள் எங்கள்
சேதித் தாள்களின்
தியாகிகள்- வன்னி மக்கள்
அவலப்பட்டு(த்) தம்
வாழ்வைத் தொலைத்து
நிற்கையில்
துரோகிகள்!
வாழ்க ஈழம்! வாழ்க ஊடக தர்மம்!
பிற் சேர்க்கை: இது ஓர் வசன கவிதை!
பிற் சேர்க்கை: இது ஓர் வசன கவிதை!
******************************************************************************************************************************
எம் வீடுகளில் நாம் அன்றாடம் பாவிக்கும் பொருட்களைக் குப்பையில் வீசாது, மீள் சுழற்சி செய்து இல்லத்திற்கு அழகு சேர்க்கும் அலங்காரப் பொருட்களாக மாற்றினால் எப்படி இருக்கும்?
சிம்பிளான வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய கைவினைப் பொருட்களையும், நம் இல்லத்திற்குத் தேவையான அலங்காரப் பொருட்களையும், மீள் சுழற்சி முறையிலான டெக்கரேஷன் வகைகளையும் செய்வதற்கேற்ற குறிப்புக்களோடு, பல சுவையான விடயங்களையும் தன்னுடைய "காகிதப் பூக்கள்" வலைப் பதிவில் பதிந்து வருகிறார் தான் சகோதரி ANJELIN (ஏஞ்சலின்) அவர்கள்.
ஏஞ்சலின் அவர்களின் வலைப் பூவிற்குச் செல்ல:
********************************************************************************************************************************
|
76 Comments:
உங்களுக்கே உரிய கவிதை நடையில் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கீங்க.... அதிர வைக்கும் கசப்பான யதார்த்தம்.... என்ன செய்வது..?
அனைத்தும் உண்மை. ஆனால் எங்களால் என்ன செய்ய முடியும் எங்களின் கருத்து மட்டுமே கூறமுடியும்:-(
தியாகிகள்/துரோகிகள்...இரு துருவங்கள்...
உணர்சிக்கவியின் உணர்வு வரிகள்...
ஏஞ்சலின் எனக்கு ஏற்கனவே அறிமுகமானவர்...வாழ்த்துக்கள் சகோதரி...
நான் எதுவுமே சொல்றதா இல்லை! எது நடக்க இருக்குதோ அது நன்றாகவே நடக்கட்டும்!
@பன்னிக்குட்டி ராம்சாமி
உங்களுக்கே உரிய கவிதை நடையில் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கீங்க.... அதிர வைக்கும் கசப்பான யதார்த்தம்.... என்ன செய்வது..? //////////
சார், இதுல யதார்த்தமும் இல்லை ஒரு மண்ணும் இல்ல! புலம்பெயர் மக்கள், வன்னி மக்கள் மேல எவ்வளவு அன்பா, பாசமா இருக்கோம்கறத, அவங்களுக்கு சொல்லி புரியவைக்க முடியல!
மௌனமா இருப்பதே நல்லது!
சகோ . வணக்கம்
சில ஊடகங்கள் புலம்பெயர் தமிழர்களின் அனுதாபத்தினை பெறுவதற்காய் முறையற்ற வகையில் செயல்படுகின்றன . என்ன செய்ய
புலம்பெயர் தமிழர்களையும் ஈழ தமிழர்களையும் பிரிப்பது தவறு சகோ
குருதி தேய்த தெருக்களிடையே
செத்துப் பிழைத்து ஒரு
சந்ததி மட்டும் முற்றாக அழிய வேண்டும்
நாமெல்லாம்
கம்பியூட்டர் திரையூடே
கண்டு களித்து
கை கொட்டி(ச்)
சிரித்து மகிழ வேண்டும்!//
அத்தனையும் உண்மை ஒரு சில புலம்பெயர் ஊடகமேதைகளுக்கு மட்டும்தான் சகோ! எல்லாரையும் இந்த வகையுனுள் சேர்க்க முடியாது!
தம்மையும் தம் சந்ததியை வளர்க்கவும்தான் இந்த தியாகிகள்/துரோகிகள் என்ற பட்டங்கள்! இட்டு இவர்கள் கொக்கரிக்கும் செயல்!
இறப்பது மக்களல்ல என
நாம் எழுதி மகிழ வேண்டும்,
இடம் பெயர்ந்த அகதிகளின்
நிலையை உரைப்போரை
எள்ளி நகை செய்து கொல்ல வேண்டும்,
உதவி ஏதுமின்றி
உறவுகள் தொலைத்து நிற்கும்
அப்பாவி மக்கள் கதையினை
எம் உரத்த குரல் கொண்டு
அடக்க வேண்டும்!
//இதைத்தானே புலம்பெயர்ந்தவர்களுக்கு சில ஊடகங்கள் சொல்லிய சேதி மறக்க முடியாது அவர்களின் பணப்பை நிரம்பியதே! எரியும் வீட்டில் புடுங்குவது லாபம் என்பதை உணர்ந்த பெருச்சாலிகள் இவர்கள்!
இன்றைய பதிவில் அறிமுகமாகியிருக்கும் காகித பூக்கள் ஏஞ்சலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
கண்ணீர் தான் வருகிறது...
சத்தியமாய் எனக்கு புரியல்லை பாஸ் நீங்க யாரை சொல்லுரிங்க என்று ...((
ஒன்றை மட்டும் சொல்லுகிறான் பாஸ் ...இறுதி யுத்தம் நடந்துகொண்டிருந்த போது அந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருந்த வன்னி மக்கள் படும் வேதனையை நினைத்து, ஈழத்தில் ஏனைய மாவட்டங்களில் உள்ள தமிழர்களை விட புலம் பெயர்ந்த தமிழர்கள் அதிக வலியையும் வேதனையையும் சுமந்து நடைப் பிணங்களாக வீதிகளில் உலாவினார்கள்... யுத்தம் நடந்த சமகாலத்தில் ஈழத்திலும் புலம்பெயர் தேசத்திலும் இருந்தவன் என்ற வகையில் என்னால் இதை உறுதியாக சொல்ல முடியும்..
///சகோ . வணக்கம்
சில ஊடகங்கள் புலம்பெயர் தமிழர்களின் அனுதாபத்தினை பெறுவதற்காய் முறையற்ற வகையில் செயல்படுகின்றன ./// பாஸ் இப்படி சொன்னால் புலம்பெயர் தமிழர்களின் அனுதாபம் சம்மந்தப்பட்ட ஊடகங்களுக்கு கிடைக்கும் என்று எப்படி சொல்லுறிங்க????.... நாட்டிலிருந்து புலம்பெயரும் ஒவ்வொருத்தரும் அரக்கர்களாக மாறிவிடுகிறார்களா இவ்வாறான செய்திகளை(!) பார்த்து சந்தோசப்பட???
////Mahan.Thamesh said...
புலம்பெயர் தமிழர்களையும் ஈழ தமிழர்களையும் பிரிப்பது தவறு சகோ/// பிரதேசவாதம், பிரிவினைவாதம் எல்லாம் நம் கூட பிறந்தது(((
சார் நீங்க யாரை சொல்கிறீர்கள்ன்னு இந்த மரமண்டைக்கு புரியல.. நீங்க கடைசி யுத்தத்தில் முள்ளிவாய்காலில் இருந்தபோது இங்கு புலம்பெயர் தமிழ் சமூகம் செய்த ஆர்பாட்டங்களும் பேரணிகளும் நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள்.. !!?? அப்போது இலங்கையின் மற்ற இடங்களில் இருந்த மக்கள் என்ன செய்தார்கள் என்பதையும் நினைத்து பாருங்கள்.. கடைசி ஆர்பாட்டங்கள் நடத்தக்கூடிய சூழ்நிலை இல்லை என்றாலும் அந்த மக்களுக்காகவாவுதல் தங்கள் வீட்டு விழாக்களையாவுதல் தள்ளி போட்டிருக்கலாம்.. இங்கு அப்படி நடந்திருக்கின்றதா..!!? நான் இன்றைய நிலமையில் மீண்டும் ஒரு யுத்தம் வர வேண்டுமென்று விரும்பவில்லை ஆனால் யுத்த குற்றவாளிகள் தண்டனை பெறவேண்டும் என்றும் எங்களுக்கு ஒரு தீர்வு வேண்டுமென்று போராடுவோரோடு நானும் போராடுவேன்.. யாரை நீங்கள் காகித புலிகள் என்று சொல்கிறீர்கள் என்பது மட்டும் விளங்கவில்லை...
சாரி சார் எனக்கு விளங்கியதைத்தான் என்னால் எழுதமுடியும்.. சில ஊடகங்களைதான் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்றால் ஒத்துக்கொள்ளலாம் அல்லது புலிகளின் பணத்தை மடைமாற்றி சுகபோக வாழ்கையை அனுபவிக்கும் சிலரை சொன்னால் ஒத்துக்கொள்ளலாம்.. அவர்கள் வன்னி மக்களின் ரத்தத்தில் குளிர்காய்ந்தார்கள் என்று... ஆனா பொத்தாம் பொதுவாக இப்படி சொல்லமுடியாது...எங்கேயும் இருக்கும் கருங்காலிகள் புலத்து தமிழர்களிடையேயும் இருந்தது,இருக்கின்றது..!!??
இன்றைய பதிவில் அறிமுகமாகியிருக்கும் காகித பூக்கள் ஏஞ்சலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
உங்கள் ஆதங்கம் சரியானது என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது..பாஸ்..ஆனால் இது பற்றி கதைக்க எனக்கு விருப்பம் இல்லை..
@Mahan.Thamesh
புலம்பெயர் தமிழர்களையும் ஈழ தமிழர்களையும் பிரிப்பது தவறு சகோ//
ஆம் நண்பா,
புலம் பெயர் மக்களையும், ஈழத் தமிழர்களையும் பிரிப்பது தவறு தான்.
நான் இக் கவிதையில் புலம் பெயர் மக்களுள் இருக்கும் ஒரு சிலரையே சாடியுள்ளேன்.
அதற்குச் சான்றாக இவ் வரிகளையும் இணைத்துள்ளேன்.
//ஈழ விசுவாசிகள் போல்
போலியாய் நடிப்போர்
கால்களின் கீழ்
நசுங்கிச் சாகட்டும்
அப்பாவி மக்களின்
எதிர்காலம் பற்றிய கனவுகள்!
//
வன்னி மக்கள் தேசத் துரோகிகள்- காரணம்
புலத் தமிழருள் ஒளிந்து வாழும்
கீழ்த் தரமான போர் விரும்பிகளின்
@நிகழ்வுகள்
ஒன்றை மட்டும் சொல்லுகிறான் பாஸ் ...இறுதி யுத்தம் நடந்துகொண்டிருந்த போது அந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருந்த வன்னி மக்கள் படும் வேதனையை நினைத்து, ஈழத்தில் ஏனைய மாவட்டங்களில் உள்ள தமிழர்களை விட புலம் பெயர்ந்த தமிழர்கள் அதிக வலியையும் வேதனையையும் சுமந்து நடைப் பிணங்களாக வீதிகளில் உலாவினார்கள்... யுத்தம் நடந்த சமகாலத்தில் ஈழத்திலும் புலம்பெயர் தேசத்திலும் இருந்தவன் என்ற வகையில் என்னால் இதை உறுதியாக சொல்ல முடியும்..//
சகோதரம், இங்கே நான் ஒட்டு மொத்தப் புலம் பெயர் தமிழர்களையும் சொல்லவில்லையே. ஒரு சிலரைத் தானே சொல்லியிருக்கிறேன்.
//
வன்னி மக்கள் தேசத் துரோகிகள்- காரணம்
புலத் தமிழருள் ஒளிந்து வாழும்
கீழ்த் தரமான போர் விரும்பிகளின்
உள்ளம் குளிர வெற்றிச் சேதி அனுப்பாதோர்,
வன்னி மக்கள் சுய நலக்காரர்- காரணம்
புணர்வாழ்வெனும் பெயரில் தம்
புலத் தமிழ்ச் சந்ததி வாழ
திரட்டிய பணத்திற்கு
இறுதி போரில் பின்னகர்ந்து
போர் வெறிக்கு
முற்றுப் புள்ளி வைத்தவர்கள்!
//
@காட்டான்
அன்பிற்குரிய காட்டான் சார்,
நான் ஒரு சிலரைத் தான் குறிப்பிட்டுள்ளேன்.
அதற்குச் சான்றாக என் கவி வரிகளையும் முன் வைக்கின்றேன் பாருங்கள்.
பொத்தம் பொதுவாக ஒட்டு மொத்த மக்களையும் சொல்லியிருக்கேன் என்று புரளியைக் கிளப்பாதீங்க சார்.
//வன்னி மக்கள் தேசத் துரோகிகள்- காரணம்
புலத் தமிழருள் ஒளிந்து வாழும்
கீழ்த் தரமான போர் விரும்பிகளின்
உள்ளம் குளிர வெற்றிச் சேதி அனுப்பாதோர்,
வன்னி மக்கள் சுய நலக்காரர்- காரணம்
புணர்வாழ்வெனும் பெயரில் தம்
புலத் தமிழ்ச் சந்ததி வாழ
திரட்டிய பணத்திற்கு
இறுதி போரில் பின்னகர்ந்து
போர் வெறிக்கு
முற்றுப் புள்ளி வைத்தவர்கள்!
//
தங்களின் கவிதைகள் வெறும் கவிதைகள் இல்லை நண்பரே
மனதில் விழும் உணர்வு
விதைகள் .
பகிர்வுக்கு நன்றி நண்பா
tamil manam
inli voted
//காட்டான் said...
கடைசி யுத்தத்தில் முள்ளிவாய்காலில் இருந்தபோது இங்கு புலம்பெயர் தமிழ் சமூகம் செய்த ஆர்பாட்டங்களும் பேரணிகளும் நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள்.. !!??//
அது உண்மையிலேயே மக்களைக் காப்பாற்றத்தானா? அப்படியெனில் மிக்க சந்தோசம்!
முள்ளி வாய்க்காலுக்கு முன்னரே 2008 இன் தொடக்கத்திலேயே அவர்கள பெருந் துன்பத்தை அனுபவிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்று நினைக்கிறேன்!
//அப்போது இலங்கையின் மற்ற இடங்களில் இருந்த மக்கள்... அந்த மக்களுக்காகவாவுதல் தங்கள் வீட்டு விழாக்களையாவுதல் தள்ளி போட்டிருக்கலாம்.. இங்கு அப்படி நடந்திருக்கின்றதா..!!//
கவலைப்பட்டார்கள்....வன்னியில் நெருங்கிய சொந்தபந்தம் உள்ளவர்கள் மட்டும்! மற்றவர்கள்? ஏதோ வன்னியாம்...அடிவிழுதாம்...என்று கதைத்தவர்களே இங்கு (கொழும்பில்) ஏராளம்! அதிலும் கொழும்பில் பிறந்து வளர்ந்தவர்கள் பலர் (எல்லோருமல்ல) வன்னி என்பது ஏதோ வேற்று நாடு மாதிரியே பேசுவார்கள்!
நாங்கள் தமிழர்கள்...ஒவ்வொருவரும் நாங்களே அடிவாங்காமல் அடுத்தவர்களின் வேதனையைப் புரிந்து கொண்டிருக்கிறோமா எப்போதாவது?
என்னத்த சொல்லுறது பாஸ்..
இவா்களுக்கு ஈழத்தவா்களை வைத்து பிழைப்பு நடத்துவதே வேலையாகப்போய்விட்டது. ஒரு சிலர் என்று வெளிப்படையாக சொன்னாலும் பலர் இந்த நிலையிலேயே இருக்கிறார்கள். அங்கிருந்து வந்த பலருடன் உரையாடியபோது பெரும்பாலானவர்கள் போர் தேவையற்றது என்று கூறினாலும் அவர்கள் அடிமனதில் வன்னிமக்கள் மீது ஒர் காழ்ப்புணர்வு இருந்ததை காணமுடிந்தது.
நீண்ட நாட்களின் பின் இணைவதில் மகிழ்ச்சி.
ஏற்றுக்கொள்ளக்கூடிய மன வலிகள்
வரிவரியாய் கொட்டியிருக்கிறீங்க சகோ..
அதற்காக அப்படி எல்லோரையும் சொல்லவில்லைத்தானே...
இப்படி கருத்தோடு இருக்கிறார்கள் தான் பலர்.
ஏன் யாழ்ப்பாணத்தில் கூட வன்னிமக்களை புறம்போக்காக பார்பதும் அவர்கள் முன்னேற விரும்பாத
கிருமிகளும் ஆங்காங்கே இருக்குத்தானே..
நல்ல பகிர்வு..
அன்புடன் பாராட்டுக்கள்..
////காகிதப் புலிகளாய்
திரை மறைவில் வேடமிட்டு,
போலியாய் தேசப் பற்றை
நெஞ்சில் சுமப்பதாய்
நடிக்கும் ஈனர்கள் மத்தியில்
வன்னி மக்கள்
கல்வி கற்க கூடாது,
வன்னி மக்கள்
வாழ்வில் முன்னேறவே கூடாது!!////
நிரூ...!
மிகச்சரியா வரிகள். இதனைத்தவிர இந்த காகிதப்புலிகள் பற்றி வேறுவிதமாக சொல்லிவிட முடியாது. (உங்களைப்பற்றி என்னுடைய மனம் இன்னும் இன்னும் உயர்வாக நினைக்க இந்தப்பதிவும் காரணம்)
உடல் பொருள் ஆவி அனைத்தும் இழந்தும் இன்றும் பழிச்சொல்லுக்கு ஆளாகும் மக்களின் நிலையை சொல்லி இருக்கீங்க....அடி வாங்காதவர்களுக்கு வலியை பற்றி என்ன தெரியும் மாப்ள!
ஏஞ்சலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
//எம் காதிகப் புலி வீரத்தால்
அவர் தம் குரலை நசுக்கிட வேண்டும்!//
பலே பலே!!
///வன்னி மக்கள் முட்டாள்கள்- காரணம்
வாசல் வரை வந்த பகையின்
கால் தொழுதவர்கள்,///
யோவ் என்னய்யா இது??>
///வன்னி மக்கள் முட்டாள்கள்- காரணம்
வாசல் வரை வந்த பகையின்
கால் தொழுதவர்கள்,///
யோவ் என்னய்யா இது??>
மாப்ள கலக்குற
கந்தக நெடி கவிதையில்!!!!
ஊடகங்களின் கோர முகம்... வலை பூக்கள் மூலமாய் கிழித்தெறியப் படுகிறது..
//காகித புலிகள்//
இதில் யாரைக்குறிப்பிடுகிறீர்கள் என்றும் சொல்லியிருக்கலாம்.
எப்போது நினைத்தாலும் வலிக்கும் கொடுமைகள்.கவிதையாக்கம் ஆறுதல் தருகிறது.
Very painful post
மனதை நெகிழச்செய்த கவிதை...
//அப்பாவி மக்கள் மட்டும்
அரவணைப்பார் யாருமின்றி
நிற்கையிலும்
எம் காதிகப் புலி வீரத்தால்
அவர் தம் குரலை நசுக்கிட வேண்டும்!//
ஈழ போராட்டத்தை வைத்து அரசியல் பண்ணுவோருக்கு உறைக்கும்படியே சொல்லியிருக்கிறீர்கள், தொடரட்டும்..
//அப்போது இலங்கையின் மற்ற இடங்களில் இருந்த மக்கள்... அந்த மக்களுக்காகவாவுதல் தங்கள் வீட்டு விழாக்களையாவுதல் தள்ளி போட்டிருக்கலாம்.. இங்கு அப்படி நடந்திருக்கின்றதா..!!//
இதில் எனக்கு உடன்பாடு இல்லை, சோகத்தை தெரிவிக்க வீட்டு விஷேசங்களை தள்ளிப்போட இது ஒன்றும் ஒற்றைச்சாவு இல்லை. வீட்டு விழாக்களை தள்ளிப்போடுதல் சோகத்தில் பங்கெடுக்கும் வழிமுறையும் இல்லை.
அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நிரூபன் .
////Dr. Butti Paul said...
//அப்போது இலங்கையின் மற்ற இடங்களில் இருந்த மக்கள்... அந்த மக்களுக்காகவாவுதல் தங்கள் வீட்டு விழாக்களையாவுதல் தள்ளி போட்டிருக்கலாம்.. இங்கு அப்படி நடந்திருக்கின்றதா..!!//
இதில் எனக்கு உடன்பாடு இல்லை, சோகத்தை தெரிவிக்க வீட்டு விஷேசங்களை தள்ளிப்போட இது ஒன்றும் ஒற்றைச்சாவு இல்லை. வீட்டு விழாக்களை தள்ளிப்போடுதல் சோகத்தில் பங்கெடுக்கும் வழிமுறையும் இல்லை////
முன் வீட்டில செத்தவீடு நடக்கேக்க எதிர்த்த வீட்டில திருமண வீடு நடக்கலாம் பரவாயில்லை தானே சார் ..நீங்க சொல்லுறதை ஒத்துக்கிறன்
//அநீதியின் கீழ்
அழுது கொண்டு வாழ்வோர்
அப்படியே சாகட்டும்;
எமக்கென்ன கவலை?//
ஒரு சர்வாதிகாரியின்
உள்ள வடிவினை
படம் போட்டு காட்டும் வரிகள்.
கவிதை நன்று சகோ..
நிருபன் /////சகோதரம், இங்கே நான் ஒட்டு மொத்தப் புலம் பெயர் தமிழர்களையும் சொல்லவில்லையே. ஒரு சிலரைத் தானே சொல்லியிருக்கிறேன். /// சார் இது புலம்பெயர் தமிழர்களை குறிவைத்து எழுதப்பட்டது என்பதை தமிழ் புலவர்கள் தான் வந்து ஆராய்ச்சி பண்ணி முடிவு சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை தானே ...
நாட்டில தேவானந்தாக்கள் கருணாக்கள் இருக்க தான் செய்கிறார்கள் அதுக்காக நாட்டிலுள்ள தமிழ் மக்களை குறிவைத்து எழுதலாமா சார்??
இங்க உங்களுக்கு ஆமாம் சாமி போடுறவர்களை பார்த்து கேளுங்க சார் இறுதி யுத்தம் நடந்துகொண்டு இருந்த போது என்ன செய்தீர்கள்? அக்காலகட்டத்தில் எத்தனை சினிமா பார்த்தீர்கள்? எத்தனை கோவில் திருவிழாக்கள் ,சாமத்திய வீடுகள் இன்ன பிற கலாசார நிகழ்வுகளில் கலந்து 'சிறப்பித்தீர்கள்'?, எத்தனை எபிசொட் மானாட மயிலாட பார்த்தீர்கள்? , எத்தனை பேர் இரண்டாயிரத்து ஏழு உலகக்கிண்ண தொடர் கண்டு கழிக்க டிவி முன்னாள் தவம் கிடந்தீர்கள், அப்போட்டியிலே இலங்கை வெல்வதற்காக என்னென்ன நேர்த்திக்கடன் வைத்தீர்கள், இலங்கை தோத்ததும் தலையில இடி விழுந்தது போல எத்தனை பேர் உணர்ந்தீர்கள் ......(நானும் இந்த ரகம் தான் சார்)
ஆனால் புலம்பெயர் தமிழர்கள் பெரும் பாலானோர் இவற்றை எல்லாம் தவிர்த்தார்கள் சார். ஐநாவின் முன்னால் அவர்கள் காலடியில் விழுந்து கிடந்தார்கள் சார்..இதெல்லாம் உங்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை தானே(?)
ஒருவேளை, நாட்டில் இவ்வாறு ஒரு பகுதி மக்கள் அவலங்களை சந்தித்து கொண்டிருக்கும் போது அதை செய்தியாக கேட்டு உச்சு கொட்டிப்போட்டு நான் மேற் சொன்னது போல "தங்கள் அன்றாட கடமைகளை செய்த" நாட்டில் உள்ள தமிழர்கள் போல புலத்தில் உள்ளவர்களும் சுயநலமாக இருக்கவில்லை என்பது தான் உங்கள் பிரச்சனை என்றால் புலத்து தமிழர்கள் அனைவரும் முழு முட்டாள்கள் தான் சார் ....
ஏ யப்பா எரிமலை வெடிச்சி சிதறுது எழுத்துகளில், மனசு கலங்கி கல்லாகி நிக்குது....
ஒருவேளை நீங்கள் சில ஊடகங்களை தான் சொல்கிறீர்கள் என்றால் இதில் புலத்து தமிழர்களை குறிவைக்க வேண்டிய அவசியம் இல்லை சார் காரணம் இன்று பெரும்பாலான இனைய ஊடகங்கள் தனி மனிதர்களால் தான் நிகழ்த்தப்படுகிறது என்பது தங்களுக்கு தெரியாததா?
""காகிதப் புலிகளாய்
திரை மறைவில் வேடமிட்டு,
போலியாய் தேசப் பற்றை
நெஞ்சில் சுமப்பதாய்
நடிக்கும் ஈனர்கள் மத்தியில்
வன்னி மக்கள்
கல்வி கற்க கூடாது,
வன்னி மக்கள்
வாழ்வில் முன்னேறவே கூடாது!!""
சரியா சொல்லிருகிங்க
பகிர்வுக்கு நன்றி சகோ....
இன்றைய பதிவில் அறிமுகமாகியிருக்கும் காகித பூக்கள் ஏஞ்சலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நிகழ்வுகள் said...
////Dr. Butti Paul said...
இதில் எனக்கு உடன்பாடு இல்லை, சோகத்தை தெரிவிக்க வீட்டு விஷேசங்களை தள்ளிப்போட இது ஒன்றும் ஒற்றைச்சாவு இல்லை. வீட்டு விழாக்களை தள்ளிப்போடுதல் சோகத்தில் பங்கெடுக்கும் வழிமுறையும் இல்லை////
முன் வீட்டில செத்தவீடு நடக்கேக்க எதிர்த்த வீட்டில திருமண வீடு நடக்கலாம் பரவாயில்லை தானே சார் ..நீங்க சொல்லுறதை ஒத்துக்கிறன்////
என்ன சார் நீங்க, இம்புட்டு சீரியசான எடத்துல போய் காமெடி பண்ணிக்கிட்டு.. இந்த விஷேசம் பிர்போடுதல் விசயத்தையே சாக்கா சொல்லிட்டு இருக்காங்களே தவிர யாரும் உருப்படியா எதையுமே செய்யறதா இல்லங்குற கடுப்ப சொன்னா நீங்களும் அதையே தூக்கி பிடிக்கறீங்களே, இன்னம் எத்தன நாளக்கிதான் நாம மும்பைல குண்டு வெடிச்சா சென்னையில பார்டி போடுரவனுக்கும், ஈழத்துல மக்கள் செத்தா தமிழ் நாட்டுல படம் ரிலீஸ் பன்னுரவனுக்கும் எதிராவே போராட்டம் நடத்திக்கிட்டு இருக்கறது. அதையும் தாண்டி எதிர்வீட்டுல சாவு பக்கத்து வீட்டுல திருமணம் லாஜிக் எல்லாம் இந்த விசயத்துல சரிப்பட்டு வராது... இப்புடியே பேசி பேசி நாம இன்னம் இத எதிர் வீட்டு சாவு அளவுலயேதான் தான் வச்சிட்டு இருக்கோம். செத்துட்டான், திரும்ப வரவா போறான், ரெண்டு நாளக்கி துக்கம் அனுஷ்டிப்போம், அப்புறம் நம்ம வேலைய பாப்போம், இதே மனநிலைதான் உருவாகுது இந்த விசயத்துனால.. இதுக்கும் மேலயும் சொன்னதுல தவறு இருந்தா சுட்டிக்காட்டுங்க தலைவரே.
//// இன்னம் எத்தன நாளக்கிதான் நாம மும்பைல குண்டு வெடிச்சா சென்னையில பார்டி போடுரவனுக்கும், ஈழத்துல மக்கள் செத்தா தமிழ் நாட்டுல படம் ரிலீஸ் பன்னுரவனுக்கும் எதிராவே போராட்டம் நடத்திக்கிட்டு இருக்கறது./// அந்த மட்டத்துக்கு நான் வரேல்ல சார்... ஆனா ஈழத்தில ஒரு பகுதி அவலத்தில இருக்கும் போது மறுபகுதி அதை பற்றி சிந்திக்காது திருவிழாக்களும் கொண்டாட்டங்களையும் மறக்காமல் நடாத்திக்கொண்டு இருந்தார்களே அதை தான் சொன்னேன்....
மற்றும் படி ஈழத்தில மக்கள் சாகும் போது தமிழ் நாட்டில படம் ரிலீசான என்ன பால் ஊத்தினா என்ன அதை பற்றியெல்லாம் நான் கதைக்க வரவில்லை..
"உள்ளுக்கே ஒற்றுமை இல்லையாம் அப்புறம் எப்படி வெளியில எதிர்பார்க்க முடியும்......???"
அனைவரும் துரோகிகளே...
////அதையும் தாண்டி எதிர்வீட்டுல சாவு பக்கத்து வீட்டுல திருமணம் லாஜிக் எல்லாம் இந்த விசயத்துல சரிப்பட்டு வராது./// இது லாஜிக் இல்ல சார் நடந்த உண்மை தான்
///ஈழத்துல மக்கள் செத்தா தமிழ் நாட்டுல படம் ரிலீஸ் பன்னுரவனுக்கும் எதிராவே போராட்டம் நடத்திக்கிட்டு இருக்கறது.// ஓ அப்படியெல்லாம் நடந்ததா ??
கவிதை சொல்ல வந்ததை முழுமையாக முன் நிறுத்துகிறது.எப்படியாவது பிழைப்பு நடத்துவது அதிகரித்து விட்டது.
காகித பூக்கள் நல்ல தளம்.அறிமுகத்திற்கு நன்றி நிருபன்
உணர்ச்சி எரிமலையாய்ப் பொங்கி வந்திருக்கும் கவிதை!
உங்கள் மக்களின் வலி கவிதை வசன வடிவில் பகிர்ந்திருகிங்க..
நிரூபன்,தயவு செய்து பதிவேற்ற முன் ஒன்றுக்கு இரண்டு தடவைகள் சரி பார்க்கவும்!எல்லோருக்கும் நான் சொல்வது தான்,ஓர் எழுத்து பொருளையே மாற்றி விடும்!
அருமையான,உணர்வைக் கிளறிய,ஆக்ரோஷமான கவிதை!
சரி பிழை
உண்மை பொய்
நடந்தது நடக்கவில்லை
ஏற்றுக்கொள்ளலாம் ஏற்றுக்கொள்ளமுடியாது
இப்படி எதிர் பதங்கள் இருக்கையில் சிந்தனைகளும் எதிராக இருக்கலாம் தப்பில்லை.
இதை அரையமுடயுமே ஒழிய ஆணித்தரமாக சொல்லமுடியாது
சிலர் உய்த்தறி முறை மூலம் சிந்திக்கின்றனர் சிலர் தொகுத்தறி முறை மூலம் சிந்திக்கின்றனர்
அவ்வளவுதான்
சைட் பாரில உள்ள விட்ஜெட் கவுண்டர்- ட்ராபிக் கவுண்டர் இரண்டையும் நீக்கி விட்டேன் நண்பரே.இப்பொது பாருங்கள்
முழுவதும் படித்தேன்
வேதனை தான் மிஞ்சியது
ஏறச் சொன்னா எருதுக்கு கோபம்
இறங்கச் சொன்னா நொண்டிக்குக்
கோபம் என்பது போல உள்ளது
இன்றைய நிலை!
ஆனால் நான் ஒன்றை
மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிபாடு
கொண்டாட்டம் என்று ஆகிவிடக்
கூடாதே என்பததுதான் என் கவலை
முதற்கண் தற்போது எழுந்துள்ள பேதம் களையப்பட
வேண்டும்
இருதரப்பும் என்று கூட
நான் பிரித்தெழுத விரும்பவில்லை
உரியவர்கள் உடன் அமர்ந்து பேச
விரும்பி, வேண்டிக் கேட்டுக்கொள்
கிறேன். செய்வீர்களா....
புலவர் சா இராமாநுசம்
///கவி அழகன் said...
சரி பிழை
உண்மை பொய்
நடந்தது நடக்கவில்லை
ஏற்றுக்கொள்ளலாம் ஏற்றுக்கொள்ளமுடியாது
இப்படி எதிர் பதங்கள் இருக்கையில் சிந்தனைகளும் எதிராக இருக்கலாம் தப்பில்லை.
இதை அரையமுடயுமே ஒழிய ஆணித்தரமாக சொல்லமுடியாது
சிலர் உய்த்தறி முறை மூலம் சிந்திக்கின்றனர் சிலர் தொகுத்தறி முறை மூலம் சிந்திக்கின்றனர்
அவ்வளவுதான்///
இதுதான் சரியாகப் படுகிறது. ஈழம், புலிகள் சம்பநந்தமான பதிவுகளுக்கு கருத்திடுவதில்லை என்று நினைத்திருந்தேன். கருத்திடுவதின் மூலம் மத, இட ரீதியான தாக்குதல்களால் அதிகம் மன உளைச்சல்களுக்கு ஆளாகிறேன்.
உங்கள் கவிதை சொல்வது உண்மைதான் என்பது மறுப்பதற்கில்லை.. இது உங்கள் அனுபவம்.. ஊடகங்களில் நிலமையை படித்து விட்டு கதறுபவர்களுக்கிடையில் உங்கள் கருத்து யதார்த்தமானவை.
///காகிதப் புலிகளாய்
திரை மறைவில் வேடமிட்டு,
போலியாய் தேசப் பற்றை
நெஞ்சில் சுமப்பதாய்
நடிக்கும் ஈனர்கள் மத்தியில்
வன்னி மக்கள்
கல்வி கற்க கூடாது,
வன்னி மக்கள்
வாழ்வில் முன்னேறவே கூடாது!!////
நிரூ நான் அறிய இந்தக்காகித புலிகள் சிங்கலீஸ் போட்ஸ் கிளப்பில (கொழும்பில்) தண்ணி அடித்துக்கொண்டு யாழ்ப்பாணத்திலை இப்ப கலாசாரம் சீரழியுது பெடியள் பியரும் கையமாக திரிகிறார்கள் என்று கண்ணீர் விட்டவர்கள்.
அப்பட்டமாக சொல்வதென்றால் பச்சத்தண்ணியில பலகாரம் சுட்டவர்கள், இலங்கையில் பல ஊடகவியலாளர்களை வழைத்துப்பொட்டு ஆசைகாட்சி செய்திகள் படங்களை பெற்றுவிட்டு மீண்டும் மீண்டும் அசைகாட்டி அவர்களின் கரியர்களையெ அழித்தவர்கள்.
நிரூபன் உங்க பதிவைப்பற்றிய பின்னூட்டம் அப்புறம் எழுதுகிறேன் இந்த இணைப்பையும் படியுங்கள் நண்பர்களே.
http://thenee.com/html/220911-3.html
அரசாங்கமும் நம்மவரில் பலரும் இந்த அப்பாவி வன்னித்தமிழ்மக்களை தமது சொந்த ஆதாயங்களிற்கான வியாபாரப்பொருளாக்குவது வேதனைகலந்த உண்மை. இது தனது தாயை சகோதரியை வைத்து விபச்சாரத்தொழில் நடத்துவதற்கு ஒப்பானது.
அட நம்ம Angelin ஐ அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் Angelin
வணக்கம் சகோ தங்கள் வெற்றியை காண என்தளம் வாருங்கள் http://pc-park.blogspot.com/2011/09/top-20-bloggers-sri-lanka-1.html
ஓ சாரி.. இப்போதான் ஃபுல் கவிதை படித்தேன்
உணர்வுகளின் கோர்வை அருமை.
எதார்த்த உண்மையை கண் முன் கண்டேன்.
நிரூபனது ரசிகர் வரிசையில்;இன்னி நானும் ஒருவன் ........
i would like to know more about you nirupan......
please send me your mail address; this is mine rajalovely6@gmail.com
Post a Comment