Wednesday, September 21, 2011

அரசியல்வாதிகள் அடக்கி வாசிக்கனுமா அல்லது அழுத்திப் பேசனுமா?

அரசியல் என்பது மக்களுக்கான ஜனநாயகம் பேணும் பாதையென்று விளிக்கப்பட்டாலும், எம் இலங்கை- இந்திய நாடுகளில் நாட்டினது வளர்ச்சி- மக்களின் முன்னேற்றம் முதலிய செயற்பாடுகளைப் பற்றிய தூர நோக்குப் பார்வையற்ற அரசியல்வாதிகளால் இவ் அரசியலானது மாசுபடுத்தப்பட்டு வருகின்றது. மக்களுக்கான குரலையும், மக்களின் உரிமையினையும் உரத்துச் சொல்ல வேண்டிய கடப்பாடு ஒரு அரசியல்வாதிக்கு அல்லது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிக்கு இருக்க வேண்டும். ஆனால் எம் நாடுகளிலோ ஓட்டு வாங்கி, சட்ட சபை சென்ற பின்னர் தம் சுய ரூபத்தைக் காட்டி மக்களை மறக்கின்ற போலி அரசியல்வாதிகள் தான் அடக்கியும் வாசிக்கின்றார்கள். சந்தர்ப்பத்திற்கேற்றாற் போல அழுத்தியும் வாசிக்கின்றார்கள்.
இன்றைய பதிவினூடாக நாம் தமிழோடு கொஞ்சம் விளையாடிப் பார்ப்போமா? அடக்கி வாசித்தல்- அழுத்தி வாசித்தல் பற்றிய மொழிக் குறிப்புக்களை அலசுவது தான் இப் பதிவின் நோக்கம். ஒருவன் உரத்துக் கத்துகின்ற போது, அல்லது சத்தமாகப் பேசுகின்ற போது அவனது குரலைக் கொஞ்சம் தாழ்த்தி- சத்தமின்றி மென்மையாகப் பேசும் படி முதலில் டீசெண்டாக கேட்டுப் பார்ப்போம். நாகரிகமான இவ் வார்த்தைக்குச் செவிசாய்க்கா விட்டால் "ஏலேய் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறியா?" என்று சவுண்டு விட்டு மிரட்டுவோம். அடக்கி வாசித்தல் என்பது கொஞ்சம் மென்மையாக உரையாட முடியுமா? , சத்தமாகப் பேசாதிருக்க முடியுமா? கொஞ்சம் பொறுமையாக இருக்க முடியுமா எனும் சொற் பதங்களைத் தரும். 

ஒரு நபர் பொதுச் சபையிலோ அல்லது வெளியிடங்களிலோ அதிகப் பிரசங்கித் தனமாகப் பேசுகின்ற போது, அவருக்கு அருகே இருப்பவர்கள் அடக்கி வாசிக்கச் சொல்லிக் கேட்பார்கள். இதற்கும் அவர் மசிந்து (வளைந்து) கொடுக்கா விட்டால், "கொஞ்சம் பொத்திக்கிட்டு இருக்கிறியா" என்று பேசுவார்கள். அல்லது "மூடிக் கிட்டு இருக்கிறியா" என்றும் ஏசுவார்கள். இங்கே எதைப் பொத்தி, எதனை மூடி என்று நீங்கள் கேள்வியெழுப்பும் போது வாய் எனும் சொல் தொக்கி நிற்பதனை அல்லது மறைந்திருப்பதனை நீங்கள் உணருவீர்கள்.  ஒருவர் தன்னைப் பற்றித் தம்பட்டம் அடிக்கும் போது, ஓவராப் புகழும் போதும், "கொஞ்சம் பொத்திக்கிட்டுப் போறியா?" என்று ஏசி அவரின் வாயினை மூடப் பண்ணுவார்கள்.

அடக்கி வாசித்தல் என்பது நாதஸ்வரம், மற்றும் ஏனைய இசைக் கருவிகளை வாசிக்கும் நபரினைப் பார்த்தும் கொஞ்சம் அடக்கி வாசிக்க முடியுமா எனும் கேள்வியினை எழுப்புவதற்கும் பயன்பட்டுக் கொள்ளும். ஊடக சுதந்திரமானது கட்டுப்படுத்தப்படும் போது அல்லது செய்தித் தணிக்கை மேற்கொள்ளப்படும் போது அடக்கி வாசித்தல் சிறந்தது என்று எம் நாட்டில் சொல்லிக் கொள்வார்கள். அடக்கிவாசித்தல் எனும் சொற்பதமானது
நாகரிகமான முறையில் சொல்லுகின்ற போது- கொஞ்சம் சத்தம் போடமா இருக்க முடியுமா? என்ற வினாச் சொல்லாக வந்து கொள்ளும்.

இந்த அடக்கி வாசித்தல் எனும் சொற்பதத்தினை இலங்கையில் இரு நபர்கள் சண்டை போடும் போது, "கொஞ்சம் பொத்துறியா" என்று சொல்லிக் கொள்வர்கள். இதே சொல்லானது தமிழகத்தில் "மூடிக்கிட்டு இருக்கிறியா, கொஞ்சம் பொத்திக்கிட்டு இருக்கிறியா? " என்ற அர்த்தங்களோடு பயன்படுத்தப்படும். அத்தோடு "கொஞ்சம் அடங்குங்கடா" என்று அர்த்தம் வரும் வண்ணமும் யூஸ் பண்ணிக் கொள்வார்கள். 

அடக்கி வாசித்தல் பற்றி நான் அதிகம் அழுத்தி வாசிப்பது அழகல்ல என்பதால் இத்தோடு நிறைவு செய்கின்றேன். இந்த அடக்கி வாசித்தல் பற்றி உங்களுக்கு வேறேனும் சொற் பதங்கள்- மொழி வழக்குகள் தெரிந்தால் பின்னூட்டம் வாயிலாகப் பகிர்ந்து கொள்ளலாமே! 
***********************************************************************************************************************
பொறுமைக்கு நிகராக இந்த உலகில் பெண்களை ஒப்பிடுவதில் நியாயம் இருப்பதனை நாம் அறியாதவர்கள் அல்ல. மிக நுணுக்கமான கைவினைப் பொருட்கள், அலங்கார வேலைப்பாடுகள்- டிசைனிங் வகையறாக்களைப் பொறுமையாகச் செய்வதில் வல்லவர்கள் பெண்கள் தான். 

வலைப் பதிவிலும் அலங்கார- டெக்கரேசன் குறிப்புக்களையும், கைவினைப் பொருட்கள்- மீள் சுழற்சிப் பொருட்களைச் செய்வதற்கான தகவல்கள்- சிறுகதைகள், அனுபவக் குறிப்புக்கள் முதலிய விடயங்களோடு, இடைக்கிடையே சமையற் குறிப்புக்களையும் பகிர்ந்து வரும் சகோதரி "வானதியின்" வலைப் பதிவினைத் தாம் நாம் இன்று பார்க்கப் போகின்றோம்.

"வானதியின் Vanathy's" வலைப் பக்கத்திற்குச் செல்ல:
***********************************************************************************************************************

65 Comments:

காட்டான் said...
Best Blogger Tips

நீ கம்முன்னு கிட மாப்பிள யாராவது இனைச்சு விடுவாங்க நான் வேலையில நிக்கிறன்யா.. ஹி ஹி

Anonymous said...
Best Blogger Tips

Short n Sweet...

Sweet dreams...

athira said...
Best Blogger Tips

தமிழ் மணத்தில இணைக்க முடியுதில்ல நிரூபன். அதில இணைக்க ஐடி எல்லாம் கேக்குது, சொன்னால், உது பிழை எண்டுசொல்லுது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:). அதுக்கு ஏதும் ஸ்பெஷல் ஐடி கிரியேட் பண்ண வேண்டுமோ?

+ வோட் மட்டும்தான் போட முடியுது.

அதுக்கு ஒரு முடிவு கட்டமுன், புதுத்தலைப்புப் போட்டால் என்ன பண்றதாம் அவ்வ்வ்வ்வ்:)).

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

///அரசியல் என்பது மக்களுக்கான ஜனநாயகம் பேணும் பாதையென்று விளிக்கப்பட்டாலும், எம் இலங்கை- இந்திய நாடுகளில் நாட்டினது வளர்ச்சி- மக்களின் முன்னேற்றம் முதலிய செயற்பாடுகளைப் பற்றிய தூர நோக்குப் பார்வையற்ற அரசியல்வாதிகளால் இவ் அரசியலானது மாசுபடுத்தப்பட்டு வருகின்றது./// இன்று நேற்றா ம்ம்ம் ...

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

///சந்தர்ப்பத்திற்கேற்றாற் போல அழுத்தியும் வாசிக்கின்றார்கள்./// அப்பப்ப தொப்பிகளையும் பிரட்டுகிறார்கள் )

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

///அடக்கி வாசித்தல்- அழுத்தி வாசித்தல் பற்றிய மொழிக் குறிப்புக்களை அலசுவது தான் இப் பதிவின் நோக்கம். /// அடப்பாவி அரசியல் பதிவெண்டல்லோ நான் ஓடி வந்தனான் ..அப்ப தானே எவனாச்சும்... சிக்குவான் கும்மலாம்)))

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

நானும் கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறான் ..


வானதி அக்காவுக்கு வாழ்த்துக்கள்

athira said...
Best Blogger Tips

//பொறுமைக்கு நிகராக இந்த உலகில் பெண்களை ஒப்பிடுவதில் நியாயம் இருப்பதனை நாம் அறியாதவர்கள் அல்ல. மிக நுணுக்கமான கைவினைப் பொருட்கள், அலங்கார வேலைப்பாடுகள்- டிசைனிங் வகையறாக்களைப் பொறுமையாகச் செய்வதில் வல்லவர்கள் பெண்கள் தான். //

நிரூபன் ரொம்ம்ம்ம்ம்ம்பவும் நல்ல பிள்ளைக்கு நடிக்கப்படாது:))).

இம்முறை எங்கட வான்ஸ் ஆ? ஆஆ வாழ்த்துக்கள்.

K said...
Best Blogger Tips

வணக்கம் மச்சி! இனிய புதன்கிழமை வாழ்த்துக்கள்! தோ, படிச்சுட்டு வர்ரேன்!

K said...
Best Blogger Tips

அரசியல்வாதிகள் அடக்கி வாசிக்கனுமா அல்லது அழுத்திப் பேசனுமா? /////

உண்மையப் பேசணும்!

K said...
Best Blogger Tips

அரசியல் என்பது மக்களுக்கான ஜனநாயகம் பேணும் பாதையென்று விளிக்கப்பட்டாலும், எம் இலங்கை- இந்திய நாடுகளில் நாட்டினது வளர்ச்சி- மக்களின் முன்னேற்றம் முதலிய செயற்பாடுகளைப் பற்றிய தூர நோக்குப் பார்வையற்ற அரசியல்வாதிகளால் இவ் அரசியலானது மாசுபடுத்தப்பட்டு வருகின்றது. ////////

உண்மை! தூரநோக்கோடு சிந்திப்பவர்களின் கையில் அதிகாரம் இல்லை! அதிகாரம் இருப்பவர்கள் தூர நோக்கோடு சிந்திப்பதில்லை!

( சந்தடி சாக்கில் நானும் ஒரு தத்துவம் சொல்லிவிட்டேன் )

K said...
Best Blogger Tips

மக்களுக்கான குரலையும், மக்களின் உரிமையினையும் உரத்துச் சொல்ல வேண்டிய கடப்பாடு ஒரு அரசியல்வாதிக்கு அல்லது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிக்கு இருக்க வேண்டும். ////////

கதிரையில் ஏறியதும் அவர்கள் முதலில் மறப்பது இதைத்தானே!

K said...
Best Blogger Tips

ஆனால் எம் நாடுகளிலோ ஓட்டு வாங்கி, சட்ட சபை சென்ற பின்னர் தம் சுய ரூபத்தைக் காட்டி மக்களை மறக்கின்ற போலி அரசியல்வாதிகள் தான் அடக்கியும் வாசிக்கின்றார்கள். சந்தர்ப்பத்திற்கேற்றாற் போல அழுத்தியும் வாசிக்கின்றார்கள்.///////

கொஞ்சம் புரியுற மாதிரி இருக்குது! மேல!

K said...
Best Blogger Tips

இன்றைய பதிவினூடாக நாம் தமிழோடு கொஞ்சம் விளையாடிப் பார்ப்போமா? அடக்கி வாசித்தல்- அழுத்தி வாசித்தல் பற்றிய மொழிக் குறிப்புக்களை அலசுவது தான் இப் பதிவின் நோக்கம். ////////

அடப்பாவி! முன்னுரையில் வேற மாதிரி சொன்னாயே! நான் அரசியல் பதிவென்று நினைத்தேன்!

K said...
Best Blogger Tips

மச்சி, அடக்கி வாசித்தலுக்கு நீ கொடுத்த விளக்கம் படித்தேன்! நன்று! அடக்கிவாசித்தல் என்பது வெறுமனே, ” மென்மையாக உரையாட முடியுமா? “ சத்தமாகப் பேசாதிருக்க முடியுமா?” போன்ற அர்த்தங்களை மட்டுமே கொடுப்பதல்ல!

அது வேறொரு அர்த்தத்தையும் தருகிறது! அதாவது முழுக்க முழுக்க நியாயமாக பேசாதே என்றும் பொருள்படும்!

அதாவது நீங்கள் சொல்ல நினைக்கும் கருத்தை சொல்லாது, சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றிப் பேசு என்றும் அர்த்தம் தரும்!

சமயத்தில் நீங்கள் உண்மை சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்! அந்த இடத்தில் ஒருவர் உங்களை அடக்கி வாசிக்கச்சொன்னால், உங்களை ஏதாவது பொய் சொல்லும்படி அவர் கேட்கிறார் என்று பொருள்!

என்ன புரியவில்லையா? இப்போ, வெளிநாட்டில் இருக்கும் ஒருபதிவர் காரசாரமான அரசியல் பதிவொன்று போடுகிறார்! நீங்கள் அதற்கு கமெண்டு போடுகிறீர்கள்! இப்படி,

“ ஆமா ஆம நீங்க சொல்றது சரிதான்! இங்கு நாங்க நிம்மதி இல்லாமல்தான் இருக்கோம்!”

என்று! அப்போது ஒருவர் சொல்கிறார் அடக்கி வாசிக்கும்படி!ஏனென்றால் அவ்விடத்தில் நீங்கள் உண்மை சொன்னால் உங்களுக்கு ஆபத்து என்று!

இப்போது நீங்கள் சொல்கிறீர்கள் “ நீங்க சொல்வதை முழுமையாக ஏற்க முடியவில்லை” என்று!

இதுதான் அடக்கி வாசித்தல்! இப்போது நீங்கள் காப்பாற்றப்படுகிறீர்கள்!

ஓகே வா?

01. வடிவேலு அடக்கி வாசித்திருந்தால், இன்று அவருக்கு இந்த நிலைமை வந்திருக்குமா?

02. எப்போதும் யுத்த வெற்றிபற்றி பீற்றிக்கொள்ளும் மஹிந்த இம்முறை ரொபேர்ட் ஓ ப்ளேக்குடனான சந்திப்பின் போது கொஞ்சம் அடக்கியே வாசித்தார்!

03. எதிர்க்கட்சி தலைவராக இருந்தும் ஏனோ விஜயகாந்த் அடக்கியே வாசித்து வருகிறார்!

( ஸாரி மச்சி பின்னூட்டம் நீண்டுவிட்டது! ஆடிய காலும் பாடிய வாயும் ரெஸ்ட் எடு என்றால் எடுக்குமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!! )

K said...
Best Blogger Tips

சகோதரி வானதிக்கு வாழ்த்துக்கள்!

தனிமரம் said...
Best Blogger Tips

அடக்கிவாசித்துப் போதல்தான் இப்போது நாகரிகம் அரசியலில் என்று ஒரு கூட்டமும் அமுக்கி வாசிப்பது தம் சுயநலத்திற்கு நல்ல தென்றும் போகும் நிலை இருக்கின்ற தேசத்தில் தூரநோக்குப் பார்வை யாரிடமும் இருப்பதாக தெரியவில்லை!

தனிமரம் said...
Best Blogger Tips

வானதி அக்காளுக்கு வாழ்த்துக்கள்!

தனிமரம் said...
Best Blogger Tips

இனிய உறக்கம் கண்களைத் தழுவட்டும் பாஸ்/
காமலாகாமேஸ் மாமியை அல்ல !

மாய உலகம் said...
Best Blogger Tips

சகோதரி "வானதிக்கு வாழ்த்துக்கள்

மாய உலகம் said...
Best Blogger Tips

சமயத்தில் நீங்கள் உண்மை சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்! அந்த இடத்தில் ஒருவர் உங்களை அடக்கி வாசிக்கச்சொன்னால், உங்களை ஏதாவது பொய் சொல்லும்படி அவர் கேட்கிறார் என்று பொருள்!

மாய உலகம் said...
Best Blogger Tips

01. வடிவேலு அடக்கி வாசித்திருந்தால், இன்று அவருக்கு இந்த நிலைமை வந்திருக்குமா?//

correct

Mathuran said...
Best Blogger Tips

//மக்களின் முன்னேற்றம் முதலிய செயற்பாடுகளைப் பற்றிய தூர நோக்குப் பார்வையற்ற அரசியல்வாதிகளால் இவ் அரசியலானது மாசுபடுத்தப்பட்டு வருகின்றது.//

என்னாது மாசுபடுத்தப்பட்டு வருகிறதா... போங்க பாஸ் மாசுபடுத்த இன்னும் இடமிருக்கா என்ன? அதத்தான் எப்பவோ முடிச்சிட்டாங்களே

Mathuran said...
Best Blogger Tips

//மக்களின் முன்னேற்றம் முதலிய செயற்பாடுகளைப் பற்றிய தூர நோக்குப் பார்வையற்ற ....//

அப்பிடியிருந்தாத்தானே அரசியல்வாதி

Mathuran said...
Best Blogger Tips

//இன்றைய பதிவினூடாக நாம் தமிழோடு கொஞ்சம் விளையாடிப் பார்ப்போமா? அடக்கி வாசித்தல்- அழுத்தி வாசித்தல்//

அப்போ இது அரசியல் பதிவில்லையா... போங்க பாஸ் நல்லா ஏமாத்திட்டிங்க

Mathuran said...
Best Blogger Tips

அடக்கி வாசித்தல் பற்றி ஓர் அருமையான பதிவு

Mathuran said...
Best Blogger Tips

சகோதரி வானதிக்கு வாழ்த்துக்கள்

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...
Best Blogger Tips

அடக்கி வாசித்தல் என்ன அழகான சிந்தனை ...கலக்கல் நீருபன்
வானதி அக்காவுக்கு வாழ்த்துக்கள் ...

உங்கள் பார்வைக்கு ....
"மத்திய அமைச்சர்களின் மற்றும் பதிவர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது' அரசு அதிர்ச்சி !!!

K.s.s.Rajh said...
Best Blogger Tips

அறிமுகபடுத்திய சகோதரிக்கு வாழ்த்துக்கள்

K.s.s.Rajh said...
Best Blogger Tips

அடக்கிவாசித்தல் பற்றிய பதிவு என்பதால் நான் அடக்கி வாசிக்கின்றேன்...

K.s.s.Rajh said...
Best Blogger Tips

அப்ப எதிர்காலத்தில் நானும் பிரபல அரசியல்வாதியா வந்தால்..நீங்கள் இப்படி எதும் பதிவுகள் போட்டு செம்பை நெளிப்பிங்களோ............ஹி.ஹி.ஹி.ஹி.........

K.s.s.Rajh said...
Best Blogger Tips

மச்சான் சார் ஜடியாமணி கூகுள்+பத்தி சொன்னதும் சரன்யா சொல்லிச்சு..அண்ணன் சொல்லிட்டார்..உடனே ஒடிப்போய் கூகுள்+ கணக்கு கிரியேட் பன்னு என்று...உடனே...பன்னிட்டம்ல...முதல்...ஓட்டு உங்களுக்குத்தான்..........................

Unknown said...
Best Blogger Tips

பதிவு சூப்பர்


இன்று என் வலையில்
ப்ளாக்கருக்கு ஆயிரம் Comment பெட்டிகள்

இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
உலக சினிமா ரசிகன் said...
Best Blogger Tips

அடக்கி வாசிக்கும் அரசியல்வாதியாக வாழ்ந்து மறைந்தவர் பெருந்தலைவர் காமராஜர்.
அமுக்கி வாசிப்பதில் ஈடு இணையற்றவர் கலைஞர்தான்.

Unknown said...
Best Blogger Tips

ஆதி வாசி அடக்கி வாசி அப்படின்னு சொல்லுவாங்க....அப்படின்னா எல்லோருக்கும் முன் பிறந்து பல விஷயங்களை நடத்த தெரிந்தவர்கள் அடங்கியே இருக்கிறார்கள் அல்லது அடப்படுகிறார்கள்...இல்லையென்றால் அமுக்கப்படுகிரார்கள் என்றும் கொள்ளலாம் நண்பா...இது எனது தாழ்மையான கருத்து!

maruthamooran said...
Best Blogger Tips

நிரூ...!

உங்களின் மொழி ஆளுமை அழகு. மிகவும் எளிய விளக்கம்.


கலக்குங்க.

Unknown said...
Best Blogger Tips

வணக்கம் சிறந்த பதிவு தோழர்

பி.அமல்ராஜ் said...
Best Blogger Tips

சூப்பர் பதிவு நிரூ. நம்ம நாட்டில எல்லாத்தையும் மூடிக்கிட்டு இருந்தால்தான் நின்மதியா இருக்கலாம்.

Astrologer sathishkumar Erode said...
Best Blogger Tips

நானும் இப்ப அடக்கிதான் வாசிக்கிறேன்

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

OTTU POTTAACCHU MAKKA...

SURYAJEEVA said...
Best Blogger Tips

அருமை... திரட்டிகளின் ஓட்டு பட்டையை நிறுவவதில் எனக்கு சில பிரச்சினைகள் உள்ளது.. ஆகையால் எதற்கு என்று விட்டு விட்டேன்... திரட்டிகளில் இணைத்து கொண்டு இருக்கிறேன்... பதிவர்களின் பேராதரவுடன் பெரும்பாலோர் வந்து பார்த்து படித்து விட்டு செல்கின்றனர்... உங்கள் ஆதரவுக்கும் அக்கறைக்கும் நன்றி...

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

நல்ல தலைப்பு...

காமேன்ட்லையும் அடக்கி வாசிக்கனுமோ?

Unknown said...
Best Blogger Tips

நீங்க என்ன அரசியல் வாதியா
நிரூ
நீங்க நல்லாவே வாசிக்கலாம்
நன்றி சகோ!

புலவர் சா இராமாநுசம்

Unknown said...
Best Blogger Tips

நல்ல அலசல் நிரூ..

இடக்கரடக்கல் என்று ஒரு சொல் உண்டு.

இடம் பார்த்து அடக்கி வாசித்தலும் அழுத்திவாசித்திலும் எல்லோருக்கும் நலம் தரும்

இந்திரா said...
Best Blogger Tips

//ஒரு நபர் பொதுச் சபையிலோ அல்லது வெளியிடங்களிலோ அதிகப் பிரசங்கித் தனமாகப் பேசுகின்ற போது, அவருக்கு அருகே இருப்பவர்கள் அடக்கி வாசிக்கச் சொல்லிக் கேட்பார்கள். //


எந்த இடத்தில் எதைப் பேசவேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது. அதைப் புரிந்துகொள்ளாமல் அதிகப்பிரசங்கித்தனமாக நடக்கும்போது, அது அடுத்தவர்க்கு எரிச்சலை உண்டாக்குகிறது.

Yoga.s.FR said...
Best Blogger Tips

அடக்கி வாசிக்கிறது,அழுத்தி பேசுறதெல்லாம் சரி தான்,இந்தக் "கூடா நட்பு கேடாய் முடியும்" என்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வசனத்துக்கு விளக்கம் சொல்லி ஒரு பதிவு போடுங்கோ!இந்த மரமண்டைக்கு ஒண்டும் விளங்குதில்லை!

காட்டான் said...
Best Blogger Tips

 நிகழ்வுகள் said...
///அடக்கி வாசித்தல்- அழுத்தி வாசித்தல் பற்றிய மொழிக் குறிப்புக்களை அலசுவது தான் இப் பதிவின் நோக்கம். /// அடப்பாவி அரசியல் பதிவெண்டல்லோ நான் ஓடி வந்தனான் ..அப்ப தானே எவனாச்சும்... சிக்குவான் கும்மலாம்)))
September 21, 2011 1:24 AM

ஹா ஹா ஹா.. ஆமா மாப்பிள நானும் அப்பிடிதான் ஓடிவந்தன் இவரு ஆராச்சி பதிவல்லோ போட்டிருக்கிறாரு..!!! சரி அடுத்த பதிவில பார்போம் யாராவது கிடைக்காமலா போவாங்க.. ஹி ஹி

காட்டான் said...
Best Blogger Tips

சகோதரி வானதிக்கு வாழ்த்துக்கள்.. 

Yaathoramani.blogspot.com said...
Best Blogger Tips

திறமையானவன் கொஞ்சம்
அதிகம் பேசாமல் இருத்தலைக் கூட
பய அடக்கி வாசிக்கிறான் எனக் கூட
சொல்வதுண்டு
சிந்திக்கத் தூண்டிச் செல்லும் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம17

அம்பலத்தார் said...
Best Blogger Tips

நம்ம அரசியல்வாதிகள் அடக்கிறதோடும் அழுத்துறதோடும் மட்டும் நிறுத்திக்கொள்ளவில்லை. அமுக்கிறதை அமுக்கி, நிரப்புகிறதை நிரப்பி, கவுக்கிறதைக் கவுத்து என இன்னும் பல காரியங்களையும் செய்திட்டு இருக்கிறார்களே, அவற்றையும் கொஞ்சம் விளக்கிடலாமே நிரூபன்

சசிகுமார் said...
Best Blogger Tips

மாப்ள நேத்து பேசிகிட்டே இருக்கும் பொழுது போன் சார்ஜ் இல்லாம கட் ஆகிடுச்சி மன்னிக்கவும்

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

நான் அடக்கியே வாசிக்கிறேன். நல்ல அலசல்.

செங்கோவி said...
Best Blogger Tips

அடக்கியோ, அழுத்தியோ....வாசிச்சா சரி தாம்யா!

செங்கோவி said...
Best Blogger Tips

பொதுவாக பொத்திக்கிட்டுபோ / மூடிட்டுப் போ போன்ற வார்த்தைகள் டீசண்டானவை அல்ல நிரூ.பொதுஇடத்தில் அதை யூஸ் செய்யமுடியாது.

செங்கோவி said...
Best Blogger Tips

// Yoga.s.FR said...
அடக்கி வாசிக்கிறது,அழுத்தி பேசுறதெல்லாம் சரி தான்,இந்தக் "கூடா நட்பு கேடாய் முடியும்" என்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வசனத்துக்கு விளக்கம் சொல்லி ஒரு பதிவு போடுங்கோ!இந்த மரமண்டைக்கு ஒண்டும் விளங்குதில்லை! //

ஐயா, ஏதோ அழுத்தி வாசிக்கிறாங்களே....உள்குத்து கமெண்ட்டா?

M.R said...
Best Blogger Tips

வானதிக்கு வாழ்த்துக்கள்

பதிவில் நல்ல அலசல்

shanmugavel said...
Best Blogger Tips

எதற்கும் நான் கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறேன்.

ஆமினா said...
Best Blogger Tips

அடக்கி வாசி- ஓவரா ஆடாத :-)

வானதி அக்காவுக்கு வாழ்த்துக்கள் ஹி...ஹி...ஹி....

vanathy said...
Best Blogger Tips

நிரூ, என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. தாங்யூ.
ஐடியா மணி, நன்றி.
அதீஸ், நன்றி.
நிகழ்வுகள், மிக்க நன்றி.
தனிமரம் ( விரைவில் தோப்பாக வாழ்த்துக்கள் ), மிக்க நன்றி.
மாய உலகம், நன்றி.
மதுரன், நன்றி.
ராஜ், நன்றி.
எம். ஆர், மிக்க நன்றி.
வேறு யார் பெயராவது விடுபட்டு போனால் மன்னிக்கவும்.

Jana said...
Best Blogger Tips

நான் அரசியல்ல இறங்கலாமா நிரூ??? நீங்களே சொல்லுங்க?

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

எங்குமே அடக்கி வாசிப்பது நல்லதுதான்.

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி

பொதுவாக பொத்திக்கிட்டுபோ / மூடிட்டுப் போ போன்ற வார்த்தைகள் டீசண்டானவை அல்ல நிரூ.பொதுஇடத்தில் அதை யூஸ் செய்யமுடியாது.//

ஆமா பாஸ்..இது பற்றி இதற்கு கீழ் வரியில் சொல்லியிருக்கேன்.

மிக்க நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

கருத்துரைகளும், வானதி அக்காவிற்கு வாழ்த்துக்களையும் வழங்கிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

Rathnavel Natarajan said...
Best Blogger Tips

நல்ல பதிவு.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/09/blog-post_19.html

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails