(இவங்களோட அட்ரஸ் தெரிஞ்சவங்க சொல்லுங்க. அப்பிளிக்கேசன் போட்டுப் பார்ப்போம்) |
என்னய்யா எல்லோரும் வானத்தைப் பார்த்துப் பெரு மூச்சு விடுற மாதிரி விறைச்சுப் போய் நிற்கிறீங்க. ஒரு சிதம்பர இரகசியத்தை, இவ்வளவு நாளும் மனதுக்கை பூட்டிப் பூட்டி வைச்சு அழுதுகிட்டிருந்த உள்ளூர் ரகசியத்தை இப்ப உலகத்திற்கே வலைப் பதிவு மூலமாகப் பரகசியமாக்கிப் பரிகாரம் தேடலாம் எனும் முயற்சி தான் இது.
ஐந்தறிவுள்ள மிருகங்கள் தொடக்கம், செயற்கையாக உருவாகின குளோனிங் உயிரினங்கள் வரை எல்லாமே தங்கடை வேலைகளிலை கருமமே கண்ணாகி நேர காலத்திற்கு அம்புட்டு மேட்டரையும் சட்டுப் புட்டுன்னு முடிச்சுப் போட்டுக் கொட்டாவி விட்டு, கொர்.........கொர்...........கொர்ரென்று குறட்டை விட்டுக் கொண்டிருக்குதுங்க.பாவம் ஆறறிவுள்ள மனித இனத்திலை, ஆயகலைகள் அறுபத்தி நான்கும் தெரிந்த; பேசத் தெரிந்த, நன்றாக வடிவாக உள்ள Handsome பையனாகிய நான் மட்டும் கலியாணம் ஆகாமல் இலவு காத்த கிளி போலக் காத்திட்டு இருக்கேன்..
என்னோடை படிச்ச ஆட்களிலை எல்லாருமே கலியாணம் கட்டி, குலை தள்ளுற மாதிரி ஒன்று இரண்டென்று குழந்தைகளையும் தள்ளிப் போட்டு சாரிங்க பெத்துப் போட்டு இருக்கும் போது நான் மட்டும் நடிகைங்களோட படத்தைப் பார்த்து நச்சென்று வீணி ஊத்திக் கிட்டிருக்கேன். என்ன கொடுமை இறைவா??
முதன் முதலிலை அம்மாவிடம் சொல்லி ஜாடை மாடையா மேட்டரைப் போட்டுடைக்க முயற்சி செய்தேன்.
"அம்மா என்னோடை படிச்ச சிவா, வாணி எல்லோரும் கலியாணம் கட்டி வெளி நாடு போயிட்டாங்க, இப்ப வாணியோடை தங்கச்சி சுபாவுக்கும் கலியாணம் நடக்கப் போகுது. அவங்க வயசிலை உள்ள நான் மட்டும்...............ம்........"
ம்..........என்று வசனத்தை முடிக்க முதல் அம்மா; அம்மன் படத்திலை வர்ற ரம்மியா கிருஷ்ணன் வேலாயுதத்தோடை கனவிலை வந்து என்ரை கண்ணைக் குத்த வாற மாதிரி, ஒரு அஸ்திரத்தை எடுத்து விட்டா பாருங்க.
"தம்பி உனக்கென்ன வயசே போட்டுது, இப்பத் தானே இருபத்தியெ............ அதுக்கை என்ன அவசரம், எல்லாம் காலம் நேரம் வரும் போது தானா உனக்கு வந்து அமையும். "உனக்கென்று ஒருத்தி பிறக்காமலா போயிட்டாள்?"
உனக்கு கீழே இருக்கிற குமருகளைக் கரை சேர்த்திட்டாய் என்றால்; பிறகு உனக்குத் தானே கலியாணம்" என்று அம்மா பேசி முடித்தா.
"கோயில் திருவிழாவிலை ஆசையாய் வாங்கிய சின்னப் பையனின் பலூன் திடீரென்று காத்துப் போய் உடைந்தது போன்ற உணர்வோடை மெதுவாக அந்த இடத்தை விட்டு எழுந்து, கணினி அறைக்குள் போனன்.
அவா சொல்வதைப் கேட்டா, இருக்கிற இரண்டு குமருகளையும்(என் தங்கைகளையும்) கரை சேர்த்து, கலியாணம் பண்ணி வைச்சாப் பிறகு தான் எனக்கு கலியாணமாம். இந்த ரேஞ்சிலை போனால், முப்பதைத் தாண்டினாலும் நான் இதே முனிவ நிலையிலை தான் இருக்க வேணும் என எனக்குள் நானே கடிந்து கொண்டேன். கடுப்பேத்துறாங்கப்பா. சும்மா சம்பிரதாயம் சடங்கு என்று ஏதேதோ சொல்லி என்று சிந்தித்துத் கொண்டிருந்த எனக்கு ஒரு ஐடியா வந்திச்சு.
பேசாமல் 750ம் இலக்க பஸ்ஸைப் பிடிச்சு வடமராட்சி அல்வாயிலை இருக்கிற பேமஸான புரோக்கர் விசுவலிங்கம் அண்ணையிட்டைப் போய் ஏதாவது நல்ல பிகருகள் இருந்தால் (Sorry தமிழ் மாறி வந்திடுச்சு) பிகருங்களோடை போட்டோக்கள் பொருத்தம் பாக்கிறதுக்காக இருந்தால் போய் வாங்கி வந்து அம்மா, அப்பாகிட்டைக் காண்பித்து, பேசிக் கலியாணத்தை ஒப்பேத்திப் போடலாம்(நிறைவேற்றலாம்) என்ற நப்பாசையிலை(பேராசையிலை) போனேன் பாருங்க. அங்கை தான் விதி விளையாடிச்சு.
போன போக்கிலை வணக்கம் சொல்லி, புரோக்கர் விசுவலிங்கத்தாரிட்டை என்ரை நிலமையை எடுத்துச் சொல்லி, ஏதாவது நல்ல காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையிலை இருந்தால்;
அந்தாள் கூட எனக்கு எமனாகி விட்டார்.
"தம்பி நிரூபன்,
உங்கடை ஜாதகத்தைக் கொண்டு வந்தனீங்களோ" என்று கேட்டார்?
அப்பிடியே, அரக்கப் பரக்க என்ரை அடிட்டாஸ் (Adidas Bag) பாக்கினுள் தேடி, பழைய கடதாசிப் பேப்பராலை(Brown paper) ஒட்டி, இதுவரை காலமும், காற்றுக் கூடப் படாதமாதிரி அம்மா இறங்குப் பெட்டியினுள் வைத்திருந்த சாதகத்தை முதன் முதலாக நீண்ட காலத்திற்குப் பின்னர் வெளியிலை எடுத்து என் கையாலை புரோக்கரிட்டைக் காட்டுவதற்காய் கொடுத்தேன்.
புரோக்கர் மேலையும் கீழையும் ஜாதகத்தின்ரை முதல் இரண்டு பக்கங்களையும் பார்த்து விட்டுச் சொன்னார்.
"தம்பி உமக்குச் செவ்வாய் குற்றம். அதுவும் ஏழிலை செவ்வாய். உமக்கேற்ற பொம்பிளையைத் தேடி எடுக்கிறது மிகவும் கஸ்டம். கொஞ்சக் காலம் வெயிற் பண்ணும் தம்பி" என்று ஒரு பெரிய நச்சுக் குண்டைத் தூக்கி மனுசன் போட்டிட்டார். ஊரிலை செவ்வாய் குற்றம் உள்ள பெண்களின் சாதகம் ஏதாவது வந்தால் போன் பண்ணுறேன் என்று சொன்னார்.
"விடுவேனா நான்?"
"எத்தினை நாளைக்குத் தான்
"காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி........" என்ற பாட்டைக் கேட்டுக் கேட்டுச் சலிப்படைகிறது என்கிற ஆத்திரம், அவமானம், மன அழுத்தம் காரணமாக ஒரேயடியாக ஒரு கேள்வியைக் கேட்டன்.
”அப்படீன்னா விசுவண்ணை, உந்தச் செவ்வாய் குற்றத்திற்கு ஏதாவது பரிகாரம் இருக்கோ?
அந்தாள் எனக்கு ஜோதிட விளக்கமே சொல்லத் தொடங்கிடுச்சு. இந்தச் செவ்வாய் குற்றம் பிறப்பாலை வர்றது நிரூபன். நீங்கள் பிறந்த நேரம், நாள், நட்சத்திரம் இன்னும் பல விடயங்களை அடிப்படையாக வைத்துச் சாதகம் எழுதும் போது கணிக்கப்படுவதாலை யாராலையும் இதனை நிவர்த்தி செய்ய முடியாது என்றார்.
"ஒரே ஒரு வழி செவ்வாய்க் குற்றமுள்ள பெண்ணைத் திருமணம் செய்வது தான் என்றார் விசுவண்ணை. செவ்வாய்க் குற்றமோ, உச்சத்திலை சனியோ அதைப் பற்றிப் பிரச்சினையில்லை, நல்ல வடிவான பிகரைப் பார்த்துப் பேசி முடிச்சிட்டீங்களென்றால் சரி என்றேன்.
"அண்ணோய் குறிப்பிலை(ஜாதகத்திலை) ஏதாவது உள் குத்துச் செய்து, குறிப்பினைக் கொஞ்சம் மாற்றம் செய்து கலியாணத்தை நடாத்துற வழி ஏதும் இருக்கோ" என்று பரிதாபமாய் விசுவண்ணையிடம் கேட்டேன்.
"அம்மா, அப்பா இந்தச் சாதகம், ஜோதிடத்தை அளவுக்கதிகமா நம்புறாங்க. அதனாலை ஏதாவது மாற்றம் செய்தால் திருட்டுத்தனமா பெற்றோர் சம்மதத்துடன் கலியாணம் செய்து வைத்த பெருமையும், ஒரு தொகையும் உங்களுக்கு கிடைக்கும் தானே" என்றேன்?
புரோக்கர் சீறினார், சினந்தார்.
"உந்த மாதிரியான இழிவான வேலையெல்லாம் என்ரை தொழிலுக்குச் சரிவராது. என்ன முந்திரிக் கொட்டை மாதிரி முந்திக் கொண்டு நிற்கிறீர்? இவ்வளவு காலமும் வெயிட் பண்ணினனீர் தானே. இன்னும் கொஞ்சக் காலம் வெயிற் பண்ணும் என்று பேசிப் போட்டார்."
அடுத்ததாக கொஞ்சம் ஆழமா யோசித்துப் போட்டுக் கேட்டேன். "அண்ணோய் கேட்கிறன் என்று கோபப்படாதீங்க."
"உந்த நவரத்தினக் கற்கள் தோசங்களையும், குறைகளையும் நிவர்த்தி செய்யும் என்று சொல்லுறாங்க ஏலேய். அது போல ஏதாவது கற்களை வைத்து முயற்சி செய்து பார்க்கலாம் தானே?"
‘புரோக்கரண்ணை சுற்றும் முற்றும் கொஞ்ச நேரம் பார்த்து விட்டுச் சொன்னார்,
"உங்களுக்கு இராசியான கல்லு எதுத் தெரியுமே?"
"ஆட்டுக் கல்லுத் தம்பி’ அதைக் கொண்டு வந்து நடு வீட்டுக்கை வைத்து ஒவ்வொரு நாளும் திரு முழுக்குச் செய்ய வேண்டும் என்றார். (ரொம்ப கடுப்பாகியிருப்பாரோ) நான் வெளியை போக வேணும். இன்னொரு நாளைக்குச் சந்திப்பம்" என்றார் புரோக்கர்.
"என்ன பிலிம் காட்டுறீங்களே புரோக்கர் அண்ணை? ஆட்டுக் கல்லைக் கொண்டு வந்து நடு வீட்டுக்கை வைத்து நானென்ன மாவே ஆட்டுறது.. போய்யா, புரோக்கர்....புண்ணாக்குத் தலையா...."
என்ன அப்பிடிப் பார்க்கிறீங்க புரோக்கர் அண்ணே! போய்யா புரோக்கர் புண்ணாக்கு, நீயும் உன்ரை ஏமாத்துப் புரோக்கர் வேலையும்.
இப்பவே இன்டர் நெட்டில், இன்டர் நேசனல் லெவலில் யாரோ ஜோதிடர் ஆர்.கே.சதீஷ்குமார் என்று ஓராள் இருக்கிறாராம். அந்தாளிட்டைக் கேட்டாலாவது நல்ல பரிகாரம் கிடைக்கும், இப்பவே போய் அவரைத் தேடிப் பிடித்து, போன் பண்ணிப் பேசப் போறன், என்று ஒரே ஓட்டமாக ஓடி வந்தேன்.
வரும் வழியில் பஸ்ஸினுள்
"கடலுக்கு பிஸ்ஸிங் நெற்று..
காதலுக்கு இன்டர் நெட்டு...
தேசம் விட்டுத் தேசம் வீசும்
காதல் வலை........." என்று ரேடியோவிலை பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.
"அட நம்ம பேஸ்புக்கைப் பற்றிப் பாட்டுப் பாடியிருக்கிறாங்களே என யோசிக்கையில்; பேஸ் புக் நினைவிற்கு வந்தவனாக, அவசர அவசரமாக வீட்டிற்கு ஓடி வந்து பேஸ்புக் எக்கவுண்ட் ஒன்றை கிரியேட் பண்ணினேன். கிரியேட் பண்ணும் போது போட்டோ கேட்டிச்சு.
"அட நம்மளை நேர்ல தாடியோடை பார்க்கும் போது அண்ணா என்கிறாளுங்க, தாடியில்லாமல் போகும் போது தம்பி என்கிறாளுங்க இந்தக் குட்டிகள். இந்த ரேஞ்சிலை ரெண்டும் கெட்டான் தோற்றத்திலை இருக்கிற என்னோடை போட்டோவை அப்டேற் பண்ணினால் பதிலுக்குச் செருப்பாலை தான் Poke அனுப்புவாளுங்க என்பதால் போட்டோவிற்குப் பதிலாக என் புளொக்கிலை உள்ள என்னோடை சிம்போலைப் போட்டிட்டன்.
"யாரவது சொல்லுங்களேன்? அதேனுங்க என்னை மாதிரி ஹாண்ட் சம் ஆனா யூத்தையெல்லாம் தாடியோடை பார்க்கும் போது அண்ணா என்றும், கிளீன் சேவ் ஆக தாடியில்லாமல் பார்க்கும் தம்பி என்றும் சொல்லுறாளுங்க, ஒரு இழவுமே புரிய மாட்டேங்குது."
பேஸ்புக்கிலை எவளாச்சும் மாட்டாமலா விடுவாளுங்க, எனக்கென்று ஒருத்தி உலகத்தின்ரை எதோ ஓர் மூலையிலை வெயிட் பண்ணாமலா போகப் போறாள், இரடி இரடி... உன்னை வெகு சீக்கிரம் தேடிக் கண்டு பிடிக்கிறன் மவளே!
"இந்தக் காலத்திலை கள்ளக் காதல் முதல், கருக் கலைப்பு வரைக்கும், கலியாணம் முதல், கோயில் கும்பாவிஷேகம் வரை பேஸ் புக் என்ற ஒன்றாலை தானே உருப்படியா நடக்கிறது எனும் உலக விடயத்தைத் தெரிந்தவனாக பேஸ் புக்கில் வடிவோ, வடிவில்லையோ எல்லாப் பொண்ணுகளையும் தேடித் தேடி (Add) அட் பண்ணத் தொடங்கினன். அக்கவுண்ட் தொடங்கி சரியா மூன்று கிழமைகள் தான் ஆகுது. ஒருத்தியுமே நம்ம மூஞ்சியை பிடிக்காதவளுங்க போல ‘அக்செப்ட் பண்ண மாட்டேங்கிறாளுங்க.
அட நீங்க வேற; விடா முயற்சியோடு- ஒரு வெறியோடை (Friend Request) எல்லோரையும் முதலிலை நண்பராகத் தெரிவு செய்வோம் என்று களத்திலை இறங்கினால் இன்றைக்கு இரண்டாவது தடவையாக என்னோடை Friend Request ஐ பேஸ் புக் நிறுத்தி வைச்சிருக்காம் என்று எச்சரிக்கை மெசேஜ் அனுப்புது. வாற பதின்னான்கு நாட்களுக்கு நீ யாரையுமே நண்பராகச் சேர்க்கக் கூடாது என்று ஒரு எச்சரிக்கை வேறை. இந்தக் கொடுமையை நான் எங்கை போய், யார் கிட்ட, எப்படிச் சொல்லி அழுவேன்.
மேலோகத்தில இருக்கிற உமாதேவியார் முதல், பூலோகத்தில புன்னாலைக் கட்டுவனிலை (சிலோனில உள்ள ஊருங்க) இருக்கிற மாரித் தவக்கை(தவக்ளை) வரைக்கும் ஆளாளுக்கு நூற்றுக்கு மேற்பட்ட நண்பர்களோட ஒன்றுக்குப் பதிலாக ஆறேழு பெயரிலை பேஸ் புக் இருக்கும் போது எனக்கு மட்டும் நிலமை இப்பிடி ஆகிடுச்சி என்றால் பாருங்களேன்.
அண்மையிலை எங்கடை உறவுக்காரப் பெண் ஒருத்தி போன் பண்ணி என் அமமா கூடக் கொஞ்ச நேரம் பேசினா. அம்மாவும் சாடை மாடையா என்னோடை கலியாணம் பற்றிப் பேச்சுக் கொடுத்துப் பார்த்தா. அம்மாகிட்ட பேசி முடிஞ்ச பிறகு என்னோடை பேசத் தொடங்கிச்சு அந்தப் பிகர்.
"தன்னைக் கலியாணம் கட்டுற ஆளுக்கு, பிள்ளை பிராக்காட்டத் தெரிய வேணுமாம், (Baby sitting) துணி துவைப்பதோடு, சமைக்கவும் தெரியவும் வேணும் என்று மூன்று கண்டிசன் வேறை சொல்லிச்சு. ஆளவிடடா என்ரை சந்நிதி வேலவா என்று அப்பிடியே லைனை ஆப் ஆக்கிட்டு எஸ் ஆகிட்டேன்.
உள்ளூரிலையும் இந்த ரேஞ்சிலை கூட்டமா வேறை அலையுறாளுங்க. வீட்டோடை மாப்பிளை வேணும் என்று கேட்கிறாளுங்க. "வாவ், இது நல்லா இருக்கே என்று கொஞ்சம் ஆழமா விசாரிச்சா, அவளுங்க மார்கட்டுக்கும், வேலைக்கும் போக வேணுமாம். ஆம்பிளைங்க மட்டும் வீட்டிற்குள்ளை உட்கார்ந்திருந்து சமைச்சு, துணி துவைச்சுக் கொடுக்க வேணுமாம்.
அதோடை வாரவங்க புளொக்(Blogg) எழுதுறவங்களா இருந்தா, அவங்களோடை உணர்வுகளைப் புரிஞ்சு கிட்டு அவள் சொல்லச் சொல்ல நீங்கள் டைப் பண்ணி புளொக்கிலை வேற ஏற்றித் திரட்டிகளிலை இணைக்க வேணுமாம். கேட்டியளே சங்கதி?
உசாரய்யா, உசாரு! எதிர் காலத்திலை பிள்ளை வேறை பராமரிக்க வேணும் என்பதை கலியாணத்திற்கு முதலே சாடையாச் சொல்லுறாளுங்க நம்ம தமிழ்ப் பொண்ணுங்க.
இனிமேலும் வெந்து, வேகக் கூடாது என்ற நல்ல நோக்கத்திலை
"கற்பனையோடு வாழ்ந்து விட்டேன் பாதி வாழ்க்கையே
கனவுகளோடு வாழுகிறேன் மீதி வாழ்க்கையே...
காதல் ராணி இல்லையே கலந்து மகிழவே............ என்ற பாடலை மட்டும் ஐ போட்டில ரொப் சோங்க்ஸா (Top Song) கேட்ட படி நான் அடுத்த பிகரை அட் பண்ணும் நோக்கில் பேஸ் புக்கை லாக் இன் பண்றேன்.
இப்படி மனதளவில் நொந்து, நொருங்கிப் போயிருக்கும் என்னைப் போன்ற எத்தனையோ ஜீவன்களுக்கு, வாழ்க்கையில் முன்னேற, நல்ல ஆலோசனைகள் ஏதாவது உங்களிடம் இருந்தால் உங்கள் கருத்துக்கள் வாயிலாக அவற்றையும் பகிர்ந்து கொள்ளலாமே!
*******************************************************************************************************************************
வன்னியிலை இருக்கும் போது, எனக்குத் தெரிஞ்ச ஒராள் இயக்கத்திலை (புலிகள் அமைப்பில) இருந்தவர். அவர் இன்னொரு இயக்கப் பொட்டையோடை லவ்சு விட்டு, அது கம்பனிக்குத் தெரிய வந்திடுச்சு. பிறகு அவர்களை இயக்கம் எச்சரித்து (Warning பண்ணி) கலியாணம் கட்டி வைச்சிட்டீனம்.
மாப்பிளை கலியாணம் ஆகி ஏழு மாதத்திலை குழந்தைக்கு அப்பாவாகிட்டான். விடுவமா நாங்கள். எங்கடை நண்பர்கள் ஒரு சிலர் சேர்ந்து "நீ பெரிய ஸ்மார்ட் மச்சான். கலியாணமாகி ஏழு மாதத்திலையே குழந்தை பெத்துட்டாய்" என்று கிண்டலடித்தோம்.
உன்ரை தொழில் ரகசியம் என்னவென்று சொல்லன் மச்சான் என நச்சரித்த படி, துருவித் துருவிக் கேட்டு அவனைத் தினம் தோறும் குடைந்தெடுத்தோம்.
அவன் சொன்னான், அது வந்து மச்சான் கொமாண்டோ அடியெண்டு. (Commando Attack)
பிற் சேர்க்கை: நான் வலைப் பதிவினுள் எழுத வந்த ஆரம்ப காலத்தில் எழுதிய இப் பதிவானது மீள் திருத்தங்களோடு இன்று பல வாசகர்களைச் சென்றடையும் எனும் நம்பிக்கையில் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
அப்போது நான் புதிய பதிவர் என்பதால் இப் பதிவு பலரைச் சென்றடையவில்லை எனும் வருத்தமான செய்தியினையும் இங்கே பகிர்கின்றேன்.
பிற் சேர்க்கை: நான் வலைப் பதிவினுள் எழுத வந்த ஆரம்ப காலத்தில் எழுதிய இப் பதிவானது மீள் திருத்தங்களோடு இன்று பல வாசகர்களைச் சென்றடையும் எனும் நம்பிக்கையில் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
அப்போது நான் புதிய பதிவர் என்பதால் இப் பதிவு பலரைச் சென்றடையவில்லை எனும் வருத்தமான செய்தியினையும் இங்கே பகிர்கின்றேன்.
***************************************************************************************************************************
பதிவர் அறிமுகம் பகுதியில் இன்று நான் பகிரப் போகும் பதிவர் பற்றி அறிமுகம் தேவையில்லை என்பதால் தவிர்க்கின்றேன். காரணம்- தன் நீண்ட- காத்திரமான விமர்சனப் பின்னூட்டங்கள் மூலமாக பதிவுலகில் பட்டையைக் கிளப்பியவரும், ஒரு வருடத்தினுள் பல ப்ளாக்குகளிற்கு மாறி மாறிப் பயணித்து, தற்போது "மௌனத்தின் பின்" எனும் வலைப் பதிவில் கவிதைகளோடு ஐக்கியமாகியிருக்கும் தம்பி கூர்மதியனின் வலைப் பதிவினைத் தான் இன்று நாம் தரிசிக்கப் போகின்றோம்.
அதிரடி அரசியல், அசர வைக்கும் அறிவியல், ஆன்மீகம், கவிதைகள் எனப் பல துறைசார் பதிவுகளைத் தந்தவரும், தற்போது வேலைப் பளுவின் காரணத்தினால் கவிதைகளோடு கட்டுரைகளையும் காதலித்துக் கொண்டிருக்கும் தம்பி கூர்மதியனின்
"மௌனத்தின் பின்" வலைப் பூவிற்குச் செல்ல:
*****************************************************************************************************************************
|
73 Comments:
கவலைப்படாதீங்க சீக்கிரமே அருமையான துணை உங்களுக்கு கிடைப்பார்கள்
பொண்ணு தேட ஆரம்பிச்சாச்சா..நடக்கட்டும்
உங்க முதல் மனைவி நாற்று தளம்தான் போல ஹஹா
புரோக்கர ரொம்ப கடுப்பேத்திட்டிங்க போல!
ரொம்ப நொந்து நோருங்கிப்போயிருக்கீங்க !
தோ! நம்ம சோதிடர் சதீஸ்குமார் வந்துட்டார் ஆலோசனை கேளுங்க!
Don t worry be happy
எஸ்கேப் ஆகிட்டீங்களா... அப்ப உங்களுக்கு வாழ்க்கையில கஷ்டம்னா என்னன்னே தெரியாமலே போயிடுமா? என்னவோ போங்க நல்லா இருங்க..
என்ன பொன்னு கிடைக்காம திண்டாடுரிய போலிருருக்கு
கல்யாண ஆசை வந்த காரணத்தை சொல்லவா....
காவ்யா மாதவன் இருக்காக, சோனியா அகர்வால் இருக்காக, சொர்ணமாலியா இருக்காக, அப்ளிகேஷன் குடுத்து பாருங்க ஹி ஹி...
//பேஸ்புக்கிலை எவளாச்சும் மாட்டாமலா விடுவாளுங்க,//
மாட்டி வேணா விடுவாங்க...
MANO நாஞ்சில் மனோ said..காவ்யா மாதவன் இருக்காக,சோனியா அகர்வால் இருக்காக, சொர்ணமாலியா இருக்காக.////எல்லாருமே இருக்காக தான்,அவங்களக் கட்டினா "அண்ணன்"இருப்பாருகளா?(எல்லாமே சப்ப பிகருங்க!)
குரு,சனி,ராகு,கேது எல்லோரும் ஒரே நாளில் பெயர்ந்தால் பெயர்ந்தால் திருமணம்தான்!
அம்மாகிட்ட பேசி முடிஞ்ச பிறகு என்னோடை பேசத் தொடங்கிச்சு அந்தப் பிகர்.
"தன்னைக் கலியாணம் கட்டுற ஆளுக்கு, பிள்ளை பிராக்காட்டத் தெரிய வேணுமாம், (Baby sitting) துணி துவைப்பதோடு, சமைக்கவும் தெரியவும் வேணும் என்று மூன்று கண்டிசன் வேறை சொல்லிச்சு.////அவ கேட்ட அந்த மூண்டு தகுதியோட ஒரு ஆள் "ப்ரீயா" இருக்கு!வயது தான் கொஞ்சம் கூட.விருப்பமோ எண்டு கேட்டுச் சொல்லுறியளோ?
சதீஷ்குமாரும் காய் வெட்டுறார்(எஸ்கேப்)போலயிருக்கு?
குரு,சனி,ராகு,கேது எல்லோரும் ஒரே நாளில் பெயர்ந்தால் பெயர்ந்தால் திருமணம்தான்!////அதற்குள்"அறளை"பெயர்ந்து விடும் போலிருக்கிறதே?
இப்படி மனதளவில் நொந்து, நொருங்கிப் போயிருக்கும் என்னைப் போன்ற எத்தனையோ ஜீவன்களுக்கு, வாழ்க்கையில் முன்னேற,நல்ல ஆலோசனைகள் ஏதாவது உங்களிடம் இருந்தால் உங்கள் கருத்துக்கள் வாயிலாக அவற்றையும் பகிர்ந்து கொள்ளலாமே!/////தாடி வச்சிருக்கிறியள் எண்டால்,லைன் கிளீயர்!நித்திய பிரமச்சாரியா இருக்க வழி இருக்கு!நல்ல காசும் பாக்கலாம்!பிகரும் பாக்கலாம்!இடம் தான் கொஞ்சம் நீட்டு,முடக்கா வேணும்!ஆனா,அதுக்கு புன்னாலக் கட்டுவன் சரி வராது!மலையும்,மலை சார்ந்த இடமா இருக்கோணும்,விளங்கியிருக்குமே???????????
என்ன சொல்ல... என்ன சொல்ல.. நண்பா... உன்ற நிலம தான் என்ற நிலமயும்.... ஆனா செவ்வா தோச மெல்லாம் இல்ல.... மனுசங்க பாசம் போயி மனுச பய புள்ளைங்க தான் தோசமா இருக்குறாங்கிய... ஒரே வார்த்தையில சொல்லனும்னா....
சேம் பிளட்.........
முதன் முதலிலை அம்மாவிடம் சொல்லி ஜாடை மாடையா மேட்டரைப் போட்டுடைக்க முயற்சி செய்தேன்.///உண்மையைச் சொன்னால்,அம்மாவிடம் கல்யாண ஆசை வந்து விட்டது என்பதை சிம்பாலிக்காக சொல்ல,அல்லது உணர்த்த உங்களுக்குத் தெரியவேயில்லை!கறிக்கு உப்புப் போதாது,நன்றாகவே இல்லை,காரம் கூட,வேகவே இல்லை என்பது போல் எரிந்து விழத் தெரிய வேண்டும்!அம்மா செல்லம் என்றால் கஷ்டம் தான்!
//அப்போது நான் புதிய பதிவர் என்பதால் இப் பதிவு பலரைச் சென்றடையவில்லை எனும் வருத்தமான செய்தியினையும் இங்கே பகிர்கின்றேன்.//
ஆமாமா, எப்பேர்ப்பட்டப் பதிவு..கண்டிப்பா பலரையும் சென்று அடையணும்ல...........ஏன்யா இப்படி இம்சை பண்றீங்க?
ஓட்டிவடைகிட்டச் சொல்லி இன்னொரு ஃப்ரான்ஸ் பாட்டி கிடைக்குமான்னு கேளுங்க நிரூ..
///அதோடை வாரவங்க புளொக்(Blogg) எழுதுறவங்களா இருந்தா, அவங்களோடை உணர்வுகளைப் புரிஞ்சு கிட்டு அவள் சொல்லச் சொல்ல நீங்கள் டைப் பண்ணி புளொக்கிலை வேற ஏற்றித் திரட்டிகளிலை இணைக்க வேணுமாம். கேட்டியளே சங்கதி?////
என்ன அண்ணே சொல்லுறீங்க.......இதுவேற இருக்கா......................
//அவன் சொன்னான், அது வந்து மச்சான் கொமாண்டோ அடியெண்டு. (Commando Attack)//
ஹா..ஹா..கலக்கல் பதில்
ஆரம்பத்தில் போட்ட பதிவு இப்ப மீள் பதிவுனு சொல்றீங்க...இன்னும் ஒண்டும் சிக்கலையா அண்ணே...........
ஃபேஸ்புக்ல என்ன ப்ராப்ளம்னா..பன்னிக்குட்டியார் இளம்பெண்களை மட்டும் தானே ஃப்ரெண்டாச் சேர்ப்பார்..
அண்ணே மங்காத்தாவில் ஒரு காட்சியில் அஜீத் பிரேம்ஜியை பார்த்து கேட்பது போல நீ நினைச்சாலும் முடியாது lolz நீ பிறந்ததிலிருந்தே இப்படித்தானா?
சீக்கிரமா....அழகான...அறிவான(ஹி.ஹி)அண்ணி கிடைக்க வாழ்த்துக்கள் பாஸ்
பாஸ்..பதிவில் அந்த பிளைக் அன் வைட்டில் போட்டு இருக்கும் பிகர் படம் சூப்பர்...............ஹி.ஹி
Yoga.s.FR said...
அம்மாகிட்ட பேசி முடிஞ்ச பிறகு என்னோடை பேசத் தொடங்கிச்சு அந்தப் பிகர்.
"தன்னைக் கலியாணம் கட்டுற ஆளுக்கு, பிள்ளை பிராக்காட்டத் தெரிய வேணுமாம், (Baby sitting) துணி துவைப்பதோடு, சமைக்கவும் தெரியவும் வேணும் என்று மூன்று கண்டிசன் வேறை சொல்லிச்சு.////அவ கேட்ட அந்த மூண்டு தகுதியோட ஒரு ஆள் "ப்ரீயா" இருக்கு!வயது தான் கொஞ்சம் கூட.விருப்பமோ எண்டு கேட்டுச் சொல்லுறியளோ?
"ப்ரீயா" இருக்கிற அந்தாளுக்கு பிரான்சில பென்சனும் கிடைக்கபோது.. பிறகென்ன.. ஏற்கனவே பள்ளிக்கூட பக்கத்திலதான் வீடு வாங்கியிருக்கிறாராம்... தன்னைப்பற்றி அப்பிடி ஒரு நம்பிக்கையான ஆளையா.. சம்பந்தத்த பேசி முடியுங்கோய்யா சாதகம் தயாரிக்கிறது நம்ம வேலைங்கோ.. அண்ண ஜாஸ்தியா ஜொல்ல"வடியுது" துடைச்சுக்கோங்க.. பப்பி இருக்காய்யா பக்கத்தில.. ஹி ஹி
செங்கோவி said...
ஃபேஸ்புக்ல என்ன ப்ராப்ளம்னா..பன்னிக்குட்டியார் இளம்பெண்களை மட்டும் தானே ஃப்ரெண்டாச் சேர்ப்பார்..
September 18, 2011 9:55 PM
மாப்பிள உந்த மூஞ்சி புத்தகத்த நம்பாதையா நானே வடிவான பொட்டையிண்ட போட்டோவ போட்டு நாலு பொடியங்கள லோ லோன்னு லவ் பண்ண விட்டுட்டு இருக்கேன்யா அதுல அந்த வயசுபோன பெருசும் இருக்கோன்னு எனக்கு ஒரு சந்தேமமையா.. லவ்வு முத்தின பிறகு என்ர போட்டோவ போடுவோம்ன்னு இருக்கேன்யா.. ஹி ஹி
சார்,சார் காட்டான் சார்!இப்பிடிப் போட்டுக் குடுக்கக் கூடாது,சார்!வேணுமெண்டா லாச் சப்பலுக்கு வாங்கோ!வேண்டிய மட்டும் "வாங்கி" ஊத்துறன்!கடசிக் காலத்தில,றிலாக்ஸா(சும்மா) இருக்க விடுங்கோ,சார்!
விரைவிலேயே திருமணம் நடக்க வாழ்த்துக்கள் சகோ!
இந்தப் பதிவைப்படித்தாவது ஒரு பொண்ணு மனசு இளகட்டும்.
Yoga.s.FR said...
சார்,சார் காட்டான் சார்!இப்பிடிப் போட்டுக் குடுக்கக் கூடாது,சார்!வேணுமெண்டா லாச் சப்பலுக்கு வாங்கோ!வேண்டிய மட்டும் "வாங்கி" ஊத்துறன்!கடசிக் காலத்தில,றிலாக்ஸா(சும்மா) இருக்க விடுங்கோ,சார்!
September 18,
உது வெங்காயம் தெரியாதவனுக்கு ஏதோ காட்டின மாதிரி நீங்க எனக்கு லாச்சப்பல் காட்ட வேணாயா!!!! அங்க வந்தா இருக்கிறதெல்லாம் உருவி விட்டுடுவியள்...!!!! என்ர இமேச் நல்லா இருக்கோனுமையா இஞ்ச இருந்தே கதைப்பமையா...
Yoga.s.FR said...
சார்,சார் காட்டான் சார்!இப்பிடிப் போட்டுக் குடுக்கக் கூடாது,சார்!வேணுமெண்டா லாச் சப்பலுக்கு வாங்கோ!வேண்டிய மட்டும் "வாங்கி" ஊத்துறன்!கடசிக் காலத்தில,றிலாக்ஸா(சும்மா) இருக்க விடுங்கோ,சார்!
September 18,
உது வெங்காயம் தெரியாதவனுக்கு ஏதோ காட்டின மாதிரி நீங்க எனக்கு லாச்சப்பல் காட்ட வேணாயா!!!! அங்க வந்தா இருக்கிறதெல்லாம் உருவி விட்டுடுவியள்...!!!! என்ர இமேச் நல்லா இருக்கோனுமையா இஞ்ச இருந்தே கதைப்பமையா...
நிரூபனுக்கே, பதிவுலகின் சிம்ம சொரூபனுக்கே இந்த நிலைமையா?யாராவது ”ஹெல்ப்” செய்யுங்க!!!!!!!!!
அண்ணே சம மேட்டர் .........இப்பையும் தேடிக்கிட்டு தான் எருக்குரியளா...
காட்டான் said...அங்க வந்தா இருக்கிறதெல்லாம் உருவி விட்டுடுவியள்...!!!!////உங்களிட்ட உருவுறதுக்கு என்ன இருக்கு?????கோ........... தவிர?
அண்ணாச்சி
உங்களுக்கு கல்யாணக்களை வந்துடுசிங்கோ ....
அதான் இப்படி பதிவெல்லாம் வருதுங்க....
நல்ல மனையாள் கிடைக்க வாழ்த்துக்கள்.....
அறிமுகப்பதிவர் தம்பி கூர்மதியான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இந்த பதிவ முதல் முறை போடும் போதே படிச்சுட்டேன் யா.. அந்த கொடுமை போதாதுன்னு இன்னொரு முறை வேறயா... என்ன கொடுமை சார் இது..?
நான் ப்ளாக்கு மாத்திகொண்டே இருப்பதை குத்தி காட்டியமைக்காக உனக்கு இன்னும் 2 மூணு வருசத்துக்கு ஒண்ணும் சிக்காது..
நான் இந்த பதிவ முதல் முறையா போடும் போது சொன்ன அதே பதில சொல்லுறேன்..
நீ இப்படி பொண்ணுங்கள தேடுறத உன் பொண்டாட்டிக்கோ, பசங்களுக்கோ தெரியாம பாத்துக்கோ.. ரைட்டா..
என்னுடைய புது ப்ளாக்கை அறிமுக படுத்தியதுக்கும் ஒரு வருசமா ப்ளாக் மாத்தி மாத்தி எழுதி இப்படி ஒரு பெயர்ல இப்படி ஒருத்தன் இருக்கான் என்று காட்டியமைக்கும் நன்றி சொல்லித்தானே ஆகணும்... ஹி ஹி... நன்றி மாப்ள..
////நீ இப்படி பொண்ணுங்கள தேடுறத உன் பொண்டாட்டிக்கோ, பசங்களுக்கோ தெரியாம பாத்துக்கோ.. ரைட்டா../// அவருக்கு ஏற்க்கனவே கல்யாணமான விசயத்தை பப்பிளிக்கில சொல்ல வேண்டாம் எண்டு சொன்னது மறந்து போச்சோ )
பேஸ்புக்கிலை எவளாச்சும் மாட்டாமலா விடுவாளுங்க,// அப்போ இது தான் நடக்குதா )
அண்ணாச்சி
உங்களுக்கு கல்யாணக்களை வந்துடுசிங்கோ ....
அதான் இப்படி பதிவெல்லாம் வருதுங்க..../// ஒரு மனுஷனுக்கு எத்தனை தரம் தான் கல்யாண களை வரும் ))
கூர்மதியானுக்கு வாழ்த்துக்கள்
You will be blessed with atleast two -:)
Sorry for the mobile comment...
சார் வணக்கம் எனக்கு தெரிஞ்ச ஒரு லேடி அவளும் மாப்பிள்ளை தேடிகிட்டு இருக்க உங்களை மாதிரி. அவளைப் பற்றிய விபரம் உயரம் 6 அடி நல்ல ஒயிட் கலர் அமெரிக்கன் லேடி நின்னா ஜேம்ஸ் பாண்ட் மாதிரி இருப்பா ரொம்ப ஸ்ட் ராங்க் மூணு பொண்ணு குழந்தைகள் (22, 18, 15)இண்டியன் உணவுகள் நன்றாக பிடிக்கும் நல்ல வருமானம் அவ ஒரு அடி அடிச்சா உங்களுக்கு உள்ள செவ்வாய் தோஷம் செவ்வாய் கிரகத்துக்கே போய்விடும் . அவளுக்கு தேவை ஒரு நல்ல கணவன்..(அப்படி யாரும் இருக்கானுங்களா இந்த உலகத்தில் )புடிச்சா சொல்லுங்க... டிஸ்கி ; வயது ஐம்பத்.......) அவ்வளவுதான்.
விடுங்க பாஸ், நமக்கு இந்த கூட்டணியே சரிவராது, எப்பவும் சுயேட்சை தான்...
"யாரவது சொல்லுங்களேன்? அதேனுங்க என்னை மாதிரி ஹாண்ட் சம் ஆனா யூத்தையெல்லாம் தாடியோடை பார்க்கும் போது அண்ணா என்றும், கிளீன் சேவ் ஆக தாடியில்லாமல் பார்க்கும் தம்பி என்றும் சொல்லுறாளுங்க, ஒரு இழவுமே புரிய மாட்டேங்குது."
யதார்த்தம் விடுங்க ;
கல்யாண ஆசையில நொந்து நுல்டிஸ் அகிட்டின்களோ . கவலைபடாதே மச்சி
வெகு சிக்கிரம் மாட்டும்
வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! இனிய திங்கட்கிழமை வாழ்த்துக்கள்!
சார், உங்க ப்ளாக் டெம்ப்ளெட்டில் சின்னச் சின்ன மாற்றங்கள் செஞ்சிருக்கீங்க! அப்படித்தானே!
ஜனங்களே! கேட்டீங்களா சங்கதி! எனக்கு கலியாணம் நடக்காதாம்!//////
இதென்ன அநியாயமா இருக்கு? காதல்மன்னனுக்கே திருமணம் நடக்காதா?
மனித மனங்கள் ஒவ்வொன்றிற்கும் பல் வேறு விதமான ஆசா பாசங்கள் இருக்கும்.///////
ஆசா யார்?
மனித இனத்தில் வந்த எனக்கும் இயல்பான ஆசாபாசங்கள் இருப்பது வழமை தானேங்கோ.//////
ஆமா, உண்மை சார்!
ஒரு சில விசயங்களைத் தனி மனிதனின் சிந்தனைக்கு ஊடாகத் தீர்த்து விடலாம். இன்னும் சில விடயங்களை ஏனையோருடன் கலந்தாலோசித்து, ஒரு தீர்வினைப் பெற்று சுமூகமாகத் தீர்த்து விடலாம். //////
ஆமா சார், எல்லாப் பிரச்சனைக்கும் எல்லோருக்கும் தீர்வு தெரியாது!
/// @காட்டான் said...
மாப்பிள உந்த மூஞ்சி புத்தகத்த நம்பாதையா நானே வடிவான பொட்டையிண்ட போட்டோவ போட்டு நாலு பொடியங்கள லோ லோன்னு லவ் பண்ண விட்டுட்டு இருக்கேன்யா அதுல அந்த வயசுபோன பெருசும் இருக்கோன்னு எனக்கு ஒரு சந்தேமமையா.. லவ்வு முத்தின பிறகு என்ர போட்டோவ போடுவோம்ன்னு இருக்கேன்யா.. ஹி///
மாமா சொல்வது முற்றிலும் உண்மை பாஸ் இப்ப இப்படி பல கூத்து பேஸ்புக்கில நடக்குது.....கவனம்
சோதனைக் கமெண்ட்
////என்னோடை படிச்ச ஆட்களிலை எல்லாருமே கலியாணம் கட்டி, குலை தள்ளுற மாதிரி ஒன்று இரண்டென்று குழந்தைகளையும் தள்ளிப் போட்டு சாரிங்க பெத்துப் போட்டு இருக்கும் போது நான் மட்டும் நடிகைங்களோட படத்தைப் பார்த்து நச்சென்று வீணி ஊத்திக் கிட்டிருக்கேன். என்ன கொடுமை இறைவா??////
என்ன விளக்கம் பாஸ். எனக்கு கண்ணுல தண்ணி வருது.
கலக்கலோ கலக்கல். என்னமாதிரி கல்யாண ஏக்கத்தைச் சொல்லியிருக்கீங்க. எப்படியாவது இந்த வருடத்துக்குள் குடும்பஸ்தன் ஆக வாழ்த்துக்கள். ஹிஹிஹி
சீக்கிரமே கல்யாணம் நடக்கக் கடவதாக!
இப்படிக்கு மரத்தடி மாமுனிவர்
விரைவில் திருமணம் கடாயஹா!
//ஜனங்களே! கேட்டீங்களா சங்கதி! எனக்கு கலியாணம் நடக்காதாம்!//
ஐ ஜாலி ஜாலி
//என்னோடை படிச்ச ஆட்களிலை எல்லாருமே கலியாணம் கட்டி, குலை தள்ளுற மாதிரி ஒன்று இரண்டென்று குழந்தைகளையும் தள்ளிப் போட்டு சாரிங்க பெத்துப் போட்டு இருக்கும் போது நான் மட்டும் நடிகைங்களோட படத்தைப் பார்த்து நச்சென்று வீணி ஊத்திக் கிட்டிருக்கேன். என்ன கொடுமை இறைவா//
ஹி ஹி அதெல்லாம் தானா அமையும் பாஸ்
//இருபத்தியெ............//
முப்பத்தியெ........ வயச இருபத்தியே... என்று அம்மா வாய் கூசாம பொய் சொல்லியிருக்கிறாங்க
கலியாணம் நடக்கும்
அழைப்பிதழ் அனுப்புவீங்க
நானும் வருவேன்!
புலவர் சா இராமாநுசம்
நாங்க மட்டும் கஷ்டப்பட்ட எப்படி..
நீங்களும் படனும்ல...
sikkiram kalyanam aga vazhthukkal
நடக்குறது நடக்காம இருக்காது
நடக்காதது நடக்காது..
கவலைப்படாதீங்க நிரூ..
பெண் தேடும் படலம் வெற்றியடைய வாழ்த்துக்கள்...
சீக்கிரமா உங்க மனசுக்கேத்த மனைவி கிடைப்பாங்க
"அதோடை வாரவங்க புளொக்(Blogg) எழுதுறவங்களா இருந்தா, அவங்களோடை உணர்வுகளைப் புரிஞ்சு கிட்டு அவள் சொல்லச் சொல்ல நீங்கள் டைப் பண்ணி புளொக்கிலை வேற ஏற்றித் திரட்டிகளிலை இணைக்க வேணுமாம். கேட்டியளே சங்கதி? "
சூப்பரோ சூப்பர்...ஹஹஹா...
"அதோடை வாரவங்க புளொக்(Blogg) எழுதுறவங்களா இருந்தா, அவங்களோடை உணர்வுகளைப் புரிஞ்சு கிட்டு அவள் சொல்லச் சொல்ல நீங்கள் டைப் பண்ணி புளொக்கிலை வேற ஏற்றித் திரட்டிகளிலை இணைக்க வேணுமாம். கேட்டியளே சங்கதி?"
சூப்பரோ சூப்பர்..ஹஹஹா..
Post a Comment