தாழ்த்தப்படோரின் குருதி தான்
உணவாக வேண்டுமெனும்
எழுதப்படாத விதி
எம் நாட்டில் மட்டும் தான்
நடை முறையில் உள்ளதோ?
பூமியில் பிறந்து
புதுமைகள் படைத்து;
வேற்றுமை களைந்து
வேர்களைப் புதுப்பித்து
நாகரிகம் கொண்ட
நல்லோனாய் தமிழன் வாழுவான்
எனும் நடை முறை
மாற்றி இங்கே
சாதியால் சண்டைகள் நிகழ்ந்து
தினமும் நாம்
செத்தொழிதல் முறை தானோ?
இதைப் போயி நாற்றிலிருந்துகாப்பி பண்ணி போடுறியே உனக்கு வெட்கம்?
"பற்றி எரிகிறது பரமக்குடி
கொற்றவையே நீயும்
கோபம் கொள்ளலாமோ?
ஒற்றை உயிரையா- நீ
பலியெடுத்தாய்; இல்லையே
இற்றை வரை அறுவர் உயிர்
குடித்தும் அடங்கலையா உன்
ரத்த வெறி?"
நிரூபனின் நாற்று வலையின் ஒரிஜினல் தொகுப்பு
தேவரும் தேவேந்திரரும் என
வேற்றுமை கொண்டு
தெருவெங்கும் நாம் இறங்கி
சாவதற்காகவா பிறந்தோம்- இல்லையே!!
சரித்திரம் படைத்து
தமிழராய் தரணியில்
நிமிர்ந்திடப் பிறந்த நாம்
தெருக்களில் ஜாதியின் பெயரால்
எம் திருத் தலை முறை
அழிவதைத் தூண்டலாமோ?
கொற்றவையே நீயும் கோபமேனோ?
அம்மா ஜெயலிலிதா உனக்கு
அனைவரும் சமம் என்று
அறிக்கை விடவில்லை என்ற
கோபம் தான் இருக்கிறதோ?
அண்ணா, பெரியார், அவை போற்றும்
வல்லோர் இந்த நாட்டில்
நல்லாராய் வாழ்ந்த பொன் பூமியில்
கொல்லும் வெறியோடு
கொடிய சாதிப் பேயாய்
நீயும் அவதரிக்கலாமோ?
சாதிப் பேயே!
காவற் துறையின்
ரத்த வெறிக்கும்
நீதான் காட்சிப் பொருளாக
உள்ளாயோ?
அம்மா மௌனித்து
பக்கசார்பாய் ஒரு இனத்தின்
உணர்வுகளை உசுப்பி விட்டா
என்றா நீயும் கோபங் கொண்டாய்?
நிரூபனின் நாற்று வலையின் ஒரிஜினல் தொகுப்பு
வேற்றுமை நீங்கி
இரு இனமும் கை கோர்த்து
ஒற்றுமையில் உயர்ந்த
தனித் தமிழ் குலமாய்
உலகினுக்கு உணர்த்த வேண்டாமோ?
நிரூபனின் நாற்று வலையின் ஒரிஜினல் தொகுப்பு
"தாழ்த்தப்படவர்கள்
தலித்துக்கள் எனும்
சாபச் சொற்களை இன்றோடு
தமிழ் அகராதியிலிருந்து
தூக்கி எறியுங்கள்!!"
அனைவரும் பொதுவானோர்
என்றோர் புதுப் பரணியை(ப்)
பரமக்குடியிலிருந்து
இன்றே பாடுங்கள்!
நிரூபனின் நாற்று வலையின் ஒரிஜினல் தொகுப்பு
வேற்றுமை நீங்கி
நாம் அனைவரும்
ஒற்றுமை கொண்டோராய்
ஒரு தாயின் பிள்ளைகள் என
பரமக்குடியில் ஒன்றாகி
கொற்றவையின் கோபம் தீருங்கள்!
இப்போது கொற்றவையே
உன் கோபம் என்ன?
கோரிக்கை என்ன?
எல்லோரும் ஒன்றானால்
நீ அடங்கிப் போவாயா?
தேவரும் தேவேந்திரரும்
எம் தெருக்களில்
இனி இல்லை என
தென் மாவட்டத்திலிருந்து
தேனிசையொலி எழுந்து
எம் காதுகளில் பாயட்டும்!
நிரூபனின் நாற்று வலையின் ஒரிஜினல் தொகுப்பு
சாதியின் பெயரால்
சண்டைகள் செய்வதை நிறுத்தி
நீதியை மறந்த
காவல் துறையின்
ரத்த வெறிக்கு
இன்றே முற்றுப் புள்ளி வையுங்கள்!!
*********************************************************************************************************************************
ஒவ்வொருவருக்கும் அவரவர் மன உணர்வுகளிற்கேற்றாற் போல தாம் விரும்பிய இடங்களுக்குப் போக வேண்டும் எனும் ஆவல் அடி மனதினுள் பொதிந்திருக்கும். ஆனால் "ஆண்களில் பெரும்பாலானோரிடம் நீங்கள் போக விரும்பாத இடம் எது" என்று கேட்டால்;
சமையலறை என்று தான் பதில் வருமாம்.
ஆகவே சமையற்கட்டுப் பக்கம் போக விரும்பாத ஆண்களையும் சமையலறைப் பக்கம் போக வைக்கும் நோக்கில் தான் இன்றைய பதிவர் அறிமுகம் அமைந்து கொள்ளப் போகின்றது. இப் பதிவினூடாக நான் உங்களை "என் சமையலறைப் பக்கம்" அழைத்துப் போகப் போகின்றேன்.
ஏன் ஓடுறீங்க. இருங்க இன்னும் சொல்லவேயில்லை.
இன்றைய தினம் "என் சமையல் அறை" எனும் வலைப் பூவினைத் தான் நாம் தரிசிக்கப் போகின்றோம்.
வாய்க்கு ருசியான அறுசுவை உணவுகளைச் செய்வதற்கான ரெசிப்பிகளை அழகாகப் பகிர்ந்து வரும் கீதா ஆச்சல் அவர்களின் "என் சமையல் அறையில்" வலைப் பூவிற்குத் தான் நாம் இன்று செல்லப் போகின்றோம்.
கீதா ஆச்சல் அவர்களின் என் சமையல் அறையில் வலைப் பூவிற்குச் செல்ல:
**********************************************************************************************************************************
|
56 Comments:
கூடங்குளம் அணுஆலை தொடர்பாக 127 உறவுகள் உண்ணாவிரதம் இருக்கும் செய்தி நான்கு நாட்களாக என்னை எந்தவேலையையும் செய்யவிடவில்லை..
ஒவ்வொரு வேளை உண்ணும்போதும் ஏதோ குற்றவுணர்வு என்னுள்..
என் மனம் திறந்து எழுதிய கவிதை..
127 உயிர்களின் கேள்விகளாக..
“அடக்கம் செய்யவா அறிவியல்“
http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_4313.html
காண அன்புடன் அழைக்கிறேன்.
15 September 2011 18:58
மன்னிக்கவும் சகோதரம்....
மாண்புமிகு இந்திய பிரதமர் மற்றும் தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கை.
மனித உயிர் கொல்லும் கூடன்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக மூட நடவடிக்கை எடுங்கள்.இல்லையெனில் உடனே உங்கள் இருவர் இல்லத்தையும் கூடன்குளத்துக்கு மாற்றுங்கள்.
Take steps to close Koodankulam Nuclear Power Plant immediately to avoid another Chernobyl disaster.
இதை வாசிக்கும் அனைவரும் கீழ்க்கண்ட இணைப்புகளின் மூலம் பிரதமருக்கும் முதல்வருக்கும் உங்கள் எதிர்ப்பை உரக்க சொல்லுங்கள்...(Just Cut and paste the above)
http://pmindia.gov.in/feedback.htm
cmcell@tn.gov.in
மன்னிக்கவும் சகோதரம்....எனது முந்தய மறுமொழி உங்கள் பதிவுக்கு சம்பந்தம் இல்லாதது...இருந்தாலும் போகப்போகும் உயிர் காக்க இதை செய்கிறேன்...
:(
//எல்லோரும் ஒன்றானால்
நீ அடங்கிப் போவாயா?
தேவரும் பள்ளரும்
எம் தெருக்களில்
இனி இல்லை என
தெற்கு மாவட்டத்திலிருந்து
தேனிசையொலி எழுந்து
எம் காதுகளில் பாயட்டும்!//
சபாஷ்........
அருமை, அப்படியே அந்த சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் அன்பர்களுக்கும் குரல் கொடுங்களேன் நண்பா..
அறம் பாடும் கவிதை....
மனிதன் ஏன் மனிதனாக இல்லை ஆறறிவு இருந்தும்...??
ஒரு உயிர் கொல்லப்படுவதற்கா பிறக்கிறது...?
ஜாதிகள் பல, ஆனால் ரத்தம்...?? மிருகத்தைவிட கேவலமான மனிதன் த்தூ....!!!
இன்று, இன்னும் ஒருமணி நேரத்துக்குள், நிரூபன் பன்னும் சண்டித்தனம் எனது பதிவில்... வெயிட் அன் ஸீ...
நல்ல கவிதை சகோதரம்...அமைதி விரைவில் வந்துவிடும்...
ஏன்யா இவர்கள் இப்படி செய்கிறார்கள்..!!!!??? தமிழர்கள் எல்லோரும் ஒரே இனம்ன்னு வாய்சவாடல் மட்டும் குறைவில்லை.. இவ்வளவு உயிர்களை பலிவாங்கப்படும்போது காவல் துறை என்ன செய்து கொண்டிருந்தது..?? அவர்க்ளுக்குள்ளும் சாதி அரக்கன் குடி கொண்டுள்ளானா???
கவிதையால் சாட்டையடி கொடுத்துள்ளீர்கள்.. புரிய வேண்டியவர்களுக்கு புரிய வேண்டுமே..???
"தாழ்த்தப்படவர்கள்
தலித்துக்கள் எனும்
சாபச் சொற்களை இன்றோடு
தமிழ் அகராதியிலிருந்து
தூக்கி எறியுங்கள்!!"
அனைவரும் பொதுவானோர்
என்றோர் புதுப் பரணியை(ப்)
பரமக்குடியிலிருந்து
இன்றே பாடுங்கள்
அதுதான் எங்கள் விருப்பமும்.. இதுதான் கடைசி சாதி சண்டையாக இருக்கவேண்மய்யா.. நடக்குமா??
சாதிப்பிசாசுகள் ஒழியும்வரை இவ்வுலகம் அமைதி கொள்ளாது!! :(
@suryajeeva
அருமை, அப்படியே அந்த சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் அன்பர்களுக்கும் குரல் கொடுங்களேன் நண்பா..//
அன்பிற்குரிய நண்பா,
உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கிய அன்றே என் வலையில் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.
மீண்டுமொரு முறை கூடங்குளம் போராட்டம் தொடர்பாக எழுதுகின்றேன் நண்பா.
தமிழன் என்று சொல்லடா
தலைகுனிந்து செல்லடா...
வேறு என்ன சொல்றது?
பரமக்குடியில் நடந்தது தேவர் பள்ளர் சாதிச் சண்டை அல்ல. அம்மா போலீஸின் தலித்துகளுக்கு எதிரான சாதீய வன்கொடுமை. எதற்காக? மூவர் தூக்குத்தண்டனைக்கு எதிராக தமிழினமே ஆர்ப்பரித்து பொங்கி எழுந்ததே, அதைக் கண்டு மிரண்டு போன அம்மாவின் சாணக்கியக் கூட்டத்தின் அப்பட்டமான நயவஞ்சகத் துரோக சதிச்செயல்.
எல்லோரும் ஒன்றானால்
நீ அடங்கிப் போவாயா?
தலை தெரிக்க ஓடி விடும் நண்பரே
//தேவரும் பள்ளரும் என
வேற்றுமை கொண்டு
தெருவெங்கும் நாம் இறங்கி
சாவதற்காகவா பிறந்தோம்- இல்லையே!!//
வரிக்கி வரி நிரூபன் யார்
என்பதை நிருபித்திருக்கிறீர்கள்
கவிதையும் கருத்தும் அருமை!
புலவர் சா இராமாநுசம்
இந்த கவிதையில் உங்கள் சமூக நோக்கு சிறப்பாக வெளிவந்திருக்கிறது சகோ!
உங்கள் ஆதங்கமும் கருத்தும்தான் எனதும் நண்பரே,சாதி ஒரு சதி,நூற்றாண்டுகள் கழிந்தாலும் இது இன்னும் ஒழியாதிருப்பது தமிழன் என்ற சொல்லையே அர்த்தமில்லாது ஆக்குகிறது.
தமிழக துப்பாக்கி சூடு குறித்த ஏனைய பதிவர்களின் பதிவுகளைப் படிக்கும் போது நீங்கள் முன்பு ஆய்வுக்கட்டுரை எழுதியிருந்ததும் நினைவில் வந்து போனது.
//அம்மா மௌனித்து
பக்கசார்பாய் ஒரு இனத்தின்
உணர்வுகளை உசுப்பி விட்டா
என்றா நீயும் கோபங் கொண்டாய்?//
//"தாழ்த்தப்படவர்கள்
தலித்துக்கள் எனும்
சாபச் சொற்களை இன்றோடு
தமிழ் அகராதியிலிருந்து
தூக்கி எறியுங்கள்!!"
அனைவரும் பொதுவானோர்
என்றோர் புதுப் பரணியை(ப்)
பரமக்குடியிலிருந்து
இன்றே பாடுங்கள்!//
அருமையான வரிகள்..சபாஸ். கனவு மெய்ப்பட வேணும்.
//சரித்திரம் படைத்து
தமிழராய் தரணியில்
நிமிர்ந்திடப் பிறந்த நாம்
தெருக்களில் ஜாதியின் பெயரால்
எம் திருத் தலை முறை
அழிவதைத் தூண்டலாமோ?//
சூப்பரு.... வாழ்த்துக்கள் நிரு...
ஆறவில்லை தான்,என்ன செய்ய?சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடியவனும் அந்த "இந்திய" மண்ணில் உதித்தவன் தான்!
கோபத்துக்கும், கோரிக்கைக்கும்... அந்த அன்னங்களுக்கும் என்ன சம்பந்தம் நிரூஊஊஊஊஊஊபன்?:))).
இதை அரசே உண்டாக்கிய கலவரம் என்று தான் சொல்லவேண்டும்.
தலித்களின் விழாவிற்கு ஒரு தலித் தலைவர் வருவதற்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்துவிட்ட நிலையில், அந்தத் தலைவரைக் கைது செய்தால் அது அந்தக் கூட்டத்தை கொந்தளிக்கச் செய்யும் என்பது அரசுக்குத் தெரியாதா?
அந்தக்கூட்டத்தை அடக்கும் அளவிற்கு அங்கே போலீஸும் குவிக்கப்படவில்லை..ஆனால் அரசே இதை ஜாதிக்கலவரம் என்கிற்து. நடந்தது என்ன? தலித்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல். இது எப்படி ஜாதிக்கலவரம் ஆகும்?
ஒருவேளை ஜெ.வே இது தேவர்களின் ஆட்சி என்று மறைமுகமாக ஒப்புதல் கொடுக்கிறாரா? ஜெ.சுட்டால், தேவர்கள் சுட்டதாகவே அர்த்தம் என்று சொல்கிறாரோ?
இதனால் பாதிக்கப்படப்போவது அடித்தட்டு மக்கள் தான். அங்கு கலவரத்தில் இறங்கிய 3000 பேரோடு முடிகிற விஷயம் இல்லை இது..இனி ஜாதிக்கலவரமாக இது உருவெடுத்து, பல லட்சம் குடும்பங்களைப் பாதிக்கும்...
எப்படிப்பட்ட கலவரமாக இருந்தாலும், ஒரு மாதத்தில் அடங்கும். அங்கே அவ்வளவு தான் தாங்கும். இருதரப்பையும் பசி அடக்கும்!
//எல்லோரும் ஒன்றானால்
நீ அடங்கிப் போவாயா?
தேவரும் பள்ளரும்
எம் தெருக்களில்
இனி இல்லை என......//
தேவரும் தேவேந்திரரும் - என்று திருத்தினால் மகிழ்வேன்.
கவிதையின் வெப்பம் தாங்க முடியவில்லை.
நல்ல கவிதை(எனக்கு ஒன்னுமே புரியலை)
அப்பறம் அந்த அந்த உண்ணாவிரதம் இருக்கும் உறவுகளின் போராட்டம் வெற்றிபெற பிராத்திப்போமாக...
சரியான நேரத்தில் வன்முறை எரிந்து
நாசமாக நீங்கள் தொடுத்த பாடல் மிக மிக அருமை
தரமான படைப்பு தொடர வாழ்த்துக்கள்
த.ம 18
சாதி வெறி ஒழியட்டும், மனித நேயம் மலரட்டும்
@athira
கோபத்துக்கும், கோரிக்கைக்கும்... அந்த அன்னங்களுக்கும் என்ன சம்பந்தம் நிரூஊஊஊஊஊஊபன்?:))).//
அவ்.....வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஓ அதுவா,
அன்னங்களைப் பார்த்தீர்களா?
வெள்ளை இறக்கைகளோடு எவ்வளவு அழகாக தண்ணீரில் ஒற்றுமையாக உட்கார்ந்திருக்கின்றன என்று..
அதே போல நாமும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தவே மேற்படி படத்தினைப் பிரசுரித்தேன்.
வலியவன் எளியவனை அழிப்பதும் எளியவன் வலிமை கொண்டு எழுவதும் ஒரு நாள் நிகழும்
@செங்கோவி
தேவரும் தேவேந்திரரும் - என்று திருத்தினால் மகிழ்வேன்.//
நண்பா திருத்தி விட்டேன்.
காவல்துறை எப்போதும் எவி விடுவோரின் ஏவலனாக இருப்பதே கவலைதரும் விடயம்! சமுகச்சிதைவை பாடிவருகின்ற கவிதை! அமைதியாகட்டும் பரமக்குடி!
என்ன தான் நடக்குது யார் மேல் தான் தவறு ஒன்றும் புரியல
அருமையான கவிதை தோழரே...!
இரண்டு தரப்பிலும் சமாதானத்தை விரும்பும் மனிதர்கள் இருக்கிறார்கள்.ஆனால் புல்லுருவிகள் பல பேர் அரசியலுக்காகவும் , சாதி வெறியினாலும் அப்பாவி மக்களை பலி வாங்குகிறார்கள். பெரும்பாலும் துப்பாக்கிகள் ஒருபக்கமே குறி வைப்பதை பார்க்கும்போதுதான் நெஞ்சம் பதைக்கிறது.யாரோ 50 பேர் போராட்டம் செய்ய அந்த மக்களை ஊர் ஊராக சென்று கைது செய்கிறேன் என்ற பெயரில் துன்புறுத்தி ,அவர்களது கோபங்களை தீபமிடுவது எந்த விதத்தில் நியாயம்? இவற்றையெல்லாம் உடனடியாக நிறுத்த மக்கள் அமைதியடைய முயற்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் கூடங்குளம் அணு உலை விசயத்தில எங்களை போன்றோரின் ஆதரவு உண்டு.போராடும் மக்களின் உணர்வுகளை அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.ஆனால் இதுபோன்று சம்பந்தமில்லாமல் அதனை புகுத்துவது பரமக்குடி சம்பவத்தை மறைப்பதற்கு செய்யும் செயலாகவே உள்ளது.
நெத்தியடி கவிதை.
புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.
வேற்றுமை நீங்கி
நாம் அனைவரும்
ஒற்றுமை கொண்டோராய்
ஒரு தாயின் பிள்ளைகள் என
பரமக்குடியில் ஒன்றாகி
கொற்றவையின் கோபம் தீருங்கள்!
இந்த வரிகள் அனைவரின் காதுகளையும் சென்று அடையனும்
என்று தணியும் இந்த சாதி வெறி...
அருமையான......
அக்னி குஞ்சு போன்ற
-தீ- கவிதை ...
மனம் நெகில வைத்தன ...
என்னகு வேறு வார்த்தை தெரியவில்லை ...
வாழ்த்துக்கள் .வாழ்த்துக்கள்
யானைக்குட்டி
"தாழ்த்தப்படவர்கள்
தலித்துக்கள் எனும்
சாபச் சொற்களை இன்றோடு
தமிழ் அகராதியிலிருந்து
தூக்கி எறியுங்கள்!!"
அனைவரும் பொதுவானோர்
என்றோர் புதுப் பரணியை(ப்)
பரமக்குடியிலிருந்து
இன்றே பாடுங்கள்!
அருமையான வரிகளால் சாதிக்
கொடுமைகளுக்கு எதிராக சித்தரிக்கப்பட்டிருக்கும்
இந்தக் கவிதை வரிகளிற்குத் தலைவணங்குகின்றேன் .
மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ..............................
கோமகளே
கோமானின் புதுமைகளே
பாரிந்த
கோரமிதை......
வேண்டாமம்மா இந்த
சாதிவெறி.....
அடக்கிவிடு
இல்லையேல் அதுன்னை
விழுங்கிவிடும்.....
ஆணிவேராய் இருக்கு
இங்கே ஜாதி
புடுங்க மட்டும் இல்லை சுத்தியல்..
eppothu schools kalil jathi ketkum palakkam niruthum pothu than. intha jathi olium. never dont stop
ரணத்தோடும், ஆதஙகத்தோடும், உதிரம் கொப்பளிக்க ஒரு ஆக்கம்...
எனக்கு இதில் என்ன கவலை என்றால், பெரியாரின் பேரர்கள் பலர் மௌனமாக வேடிக்கை பார்ப்பதே
“நச்“ கவிதை..
அருமை பாஸ்,
பாஸ் அப்படியே உண்ணாவிரதம் இருப்பவர்களின் நோக்கம் நிறைவேற என் வாழ்த்துக்கள்
கனல் கக்கும் கவிதை!
வேதனையா இருக்கு நண்பா
நேரடி ரிப்போர்ட்
இடிந்தகரை உண்ணாவிரத போராட்டம் நாள் 6
கொற்றவையின் கோபம் எல்லாம் இல்லை. மனிதம் அற்றவையின் வெறி. எந்தத் தலைவனும் தனக்கு மாலை போட சொல்லிக் கேட்கவில்லை. அரசியல் ஆதாயம் தேடும் சுயனலக்காரத் தலைவர்(?)களின் பின்னால் அதுவும் கண்ணுக்கே தெரியாத சாதி என்கிற எழவின் பேரில் மனிதன் சாவது பரிணாம வளர்ச்சி முழுமையுர்றதா என்கிற கேள்வியை எழுப்புகிறது.
Post a Comment