மனமென்னும் பெருங் கடலின் ஓரத்தில் சிறு துகள்களாய் ஞாபகச் சிதறல்களின் பெரும் பாகத்தினை அவள் எடுத்து விடுகின்றாள். நினைவுகளில் நீந்தச் செய்து, உணர்வுகளுக்கு உருவம் கொடுத்து, காலப் பெரு வெளியின் கோலக் கிறுக்கல்கள் அவள் மூலமாக வசியம் செய்யப்பட்டு விடுகின்றது. இரவுகளின் அர்த்தமற்ற பொழுதுகள் இதமான கனவுகள் மூலம் இனிமையாக்கப்படும் வேளைகளில் மனம் எத்தனை சாந்தம் பெறும்?
ஓ! அப்படியானால் அவள் நினைவுகளைத் தந்து விட்டுச் செல்லும் நீல மேகமா?
சே... இல்லை! இல்லை! மேகத்திற்கு இணையாக அவளை எப்படி ஒப்பிட முடியும்?
வாழ்வில் அர்த்தமற்றதாக இருக்கும் ஒவ்வோர் நொடிப் பொழுதுகளும் எப்போது அர்த்தமுள்ளதாக்கப்படுகின்றதோ, அப்போது தான் அந்த அர்த்தங்களின் பின்னே ஒரு பெண் இருந்திருப்பாள் என்று வரலாறு கூறுகின்றது. நினைவுகள் நீர்த் திவலைகளாகி இலகுவில் கரைந்துருகும் போது கனவுகளிலிருந்து அவள் பற்றியதான விம்பம் சிதற விடப்படுகின்றது. "ஒரு மனிதனுள் உணர்ச்சிகள் இருக்கின்றது எனும் உண்மையினை உணரச் செய்கின்ற காதல் மோகினியாக பெண் இருக்கின்றாளாம்"- நான் சொல்லவில்லை. தமிழ் இலக்கிய உலகம் செப்பி நிற்கின்றது.
ஆண்டுகள் ஒன்றென்றாலும் அன்பே உன் உடல் தாண்டி நான் வாழ்ந்தால் தப்பேதும் இல்லையே எனும் எண்ணத்தை சில பெண்கள் கொடுத்து விடுகிறார்கள். அப்படித்தான் அவளும் என்னுள் நுழைந்தாள். என் மனத் திரைகளின் ஓரத்தில் ஸ்ரெல்லா பற்றிய குறிப்புக்களே அதிகம் நிரம்பி வழிகின்றது. குழைத்து வைத்த கோதுமை மாவின் வெண் சாந்தெடுத்து, குமரிப் பெண்ணின் பருவ மேட்டில் மாதுளைக் கனிகளைப் பொருத்தி, அழைப்பொலியாய் இருக்கும் சிறிய மணியோசையின் கூர் முனையை மூக்கில் செருகி, அகல விரிந்திருக்கும் தன் விழி வெண் படலத்தினுள் என்னைக் கட்டி வைக்கத் துடிக்கும் ஆரஞ்சு கலர் உதட்டுக்காரி அவள் அல்லவா.
இன்னும் அவள் அழகைப் பற்றி அதிகம் சொல்ல முடியும். ஆனாலும் அவள் பற்றிய அவஸ்தையை அதிகரிக்க விரும்பிடாத மனமோ இத்தோடு நிறுத்தச் சொல்கிறது. பழகும் வேளைகளில் இனிமை தருவாள். பருவக் கனவிற்குச் சுதந்திரம் கொடுப்பாள். மனதில் எழும் எண்ண அலைகள் கரை புரண்டோடி விடாதபடி மயக்கம் கொடுப்பாள். ஸ்ரெல்லா ஒரு கிறிஸ்துவப் பெண் என்பதனையும் தாண்டி மதங்களை வென்று விடும் மனங்களின் போர்க் களமாக எம் காதல் மொட்டு விட்டது. "இனங்களிற்கிடையேயான உரசல் பயங்கரவாதமாய் இருக்கும் எம் தேசத்தில்" ஆண் பெண் எனும் பாலினங்களிற்கிடையேயான புரிதல் எனக்கும் அவளுக்குமிடையேயான ஆலாபனையாக மாற்றம் பெற்று விட்டது.
"மேல்த் தட்டு சொர்க்கம், கீழ்த் தட்டு நரகம்" எனும் மனித குலத்தை இழிவாக்கியோரின் வரைவிலக்கணத்தைப் பொய்ப்பித்தாள். மேல்த் தட்டில் சொர்க்கம்- கீழ்த் தட்டில் சொப்பனம் என ஏதேதோ கற்பித்தாள். வாழ்வில் இனிமையான தருணங்களில் இரண்டறக் கலந்து, கல்லூரி நாட்களில் கதை பேசி மகிழ்ந்த; என் காது மடல்களை வருடிக் காதல் ரசம் பருகிய ஸ்ரெல்லாவுடனான அந்த நாட்கள் போர் மேகங்களின் சூறாவளித் தாக்குதல்களால் நிலை குலைந்து விட்டது.
இப்போது எஞ்சியிருப்பது அவளைப் பற்றிய ஞாபகச் சிதறல்கள் மட்டுமே. நினைக்க நினைக்க சுகம் தரும் ஞாபக அலைகள் பெண் மனத்தை விட்டுப் பறந்து சென்றதும் வலி தருகின்றன. நரக அவஸ்தை என்பது இன்று எனக்குள் நகரும் நொடிப் பொழுதாய் மாற்றம் பெற்றிருக்கின்றது. மறுபடியும் அவளைக் காண மாட்டேனா எனும் ஏக்கத்தை விட, மனதினுள்ளே கூடு கட்டி, என் உயிர்ச் சிறகில் சிலிர்ப்பூட்டிப் பறக்கச் செய்த அந்த வெண் பஞ்சு மேகம் மீண்டும் என் அருகே வாராதா எனும் ஏக்கம் தான் எஞ்சியிருக்கின்றது.
ஓ..ஞாபகச் சிதறல்களில் சிக்கி நான் படும் நரக அவஸ்தை இது தானோ?
மெதுவாய் வந்து, என் மேனி தன்னில் ஒரு தொடுகையிட்டு, அருகே நான் இருக்கின்றேன் ஆருயிரே என அவள் சொன்னால்- என் இரவும் இனிமை ஆகாதோ?
பூவாய் மணம் பரப்பி, புன்னகையால் கோல விழியசைத்து, மோவாய் திருப்பி, மேனி தன்னில் முத்தமிட, பாவாய் அவளும் வாராளோ!
"நினைவுகளில் சிக்கி நரக அவஸ்தையில் வாழ்வதை விட- நிஜப் பொழுதில் அவள் நினைவுகளுடன் செத்து விடல் சுகம்" எனச் சொன்னவனைக் கூட்டி வாருங்கள்!
"வாழும் போதே நரகம் எனை விட்டுப் பிரிந்த அவள் நினைப்பாக என் அருகே இருக்கையில்" எப்படி நான் சாக முடியும்? இப்போது தேடத் தொடங்குகிறேன்!
அவள் எங்கே இருப்பாள்; எப்போது கிடைப்பாள் எனும் ஆவல் மேலெழ நானும் ஸ்ரெல்லாவைத் தேடிப் போகிறேன்!
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார் பிரிவு: திருக்குறள்-1158
பொழிப்புரை: எம்மை விரும்பி அன்பு செலுத்தும் ஒருவர் இல்லாது வாழ்வது கொடுமையானது. இதனை விட, இனிமையான- மனதிற்குப் பிடித்தவரைப் பிரிந்து வாழ்வது இன்னும் கொடுமையானது.
*******************************************************************************************************************************
வலைப் பதிவில் இன்றைய கால கட்டத்தில் பல்வேறு வகையான விடயங்களை உள்ளடக்கிய சுவையான வலைப் பூக்கள் இருந்தாலும், செல்லப் பிராணிகளுக்கென்று இருக்கின்ற வலைப் பூக்கள் அரிதாகத் தான் எம் தமிழ் மொழியில் கிடைக்கின்றன. ஆனாலும் அந்தக் குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கில் தன் வலைப் பதிவில் பூனைகளுக்கென்று தனியான பக்கத்தினை வடிவமைத்துப் பதிவுகளைப் பகிர்ந்து வரும் ஒருவரை யாருக்காவது தெரியுமா?
தன்னுடைய வலைப் பூவில் பூனைகளைப் பற்றிய சிறப்புப் பகிர்வுகளையும், கூடவே தான் வாழும் பிரதேசத்தின் நினைவுகளையும், தன் ஊர் பற்றிய குறிப்புக்களையும், இடையிடையே எப்போதாவது அத்தி பூத்தாற் போல கவிதைகளையும் "என் பக்கம்" எனும் வலைப் பூவினூடாக பகிர்ந்து வருபவர் தான் சகோதரி அதிரா.
அதிராவின் "என் பக்கம்" வலைப் பூவிற்குச் செல்ல:
**********************************************************************************************************************************
|
78 Comments:
Nanthan First
ayyo im 2nd
யோவ் போன மாசம் வேற பொண்ண பத்தி எழுதுன என்னய்யா இது?
@ Mohamed Faaique
நிரூ வந்து எனக்கு தங்க பதக்கம் உங்களுக்கு சில்வர் பதக்கம் தருவாப்புல
//நினைவுகளில் சிக்கி நரக அவஸ்தையில் வாழ்வதை விட- நிஜப் பொழுதில் அவள் நினைவுகளுடன் செத்து விடல் சுகம்///
நல்லாயிருக்கு...
பொழிப்புரையும் அருமை..
மறுபடியும் அவளைக் காண மாட்டேனா எனும் ஏக்கத்தை விட, மனதினுள்ளே கூடு கட்டி, என் உயிர்ச் சிறகில் சிலிர்ப்பூட்டிப் பறக்கச் செய்த அந்த வெண் பஞ்சு மேகம் மீண்டும் என் அருகே வாராதா எனும் ஏக்கம் தான் எஞ்சியிருக்கின்றது.////
அண்ணே வடிவா தேடி பாருங்கோ..கண்டு பிடிக்கலாம்..ஒரே பீலிங் தான்...
மனதுக்கினியவளை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க இயலாதுதான்.ஆனால் அவள் நினைவுகள் தரும் வலியே ஒரு சுகம்தானே நிரூ?
நண்பா நினைவுகளே வாழ்கையில் பல இடங்களில் துரத்துகின்றன...பகிர்வுக்கு நன்றி!
பகிர்வுக்கு நன்றி
//"மேல்த் தட்டு சொர்க்கம், கீழ்த் தட்டு நரகம்" எனும் மனித குலத்தை இழிவாக்கியோரின் வரைவிலக்கணத்தைப் பொய்ப்பித்தாள். //
அருமையான வரிகள். மீண்டும் சந்திப்போம்...
பாஸ் கொஞ்சம் வேலை இருக்கு அப்பால வாரன்..மீண்டும் அண்ணிய பத்தின பதிவா(எத்தின)........ஹி.ஹி.ஹி.ஹி
Prabu Krishna said...
யோவ் போன மாசம் வேற பொண்ண பத்தி எழுதுன என்னய்யா இது?////அதான் நீங்களே சொல்லிப்புட்டீங்களே,போன மாசம்னு????
இந்த,பதிவில பொம்பிளயளின்ர படம் தான் போடோணுமோ?இந்தப் பதிவில,பொம்பிளை சம்பந்தப்படுறதால,பொம்பிளப் படமோ?இல்லையெண்டால்,பொம்பிளைப் படம் போட்டாத் தான் ஆக்கள் வருவினமோ?இலையெண்டால் நீங்கள் ஆணாதிக்க வாதியோ?(இன்னசிற்றி பிரஸ் கேக்கிற கேள்வி மாதிரிக் கிடக்கோ?)
@Yoga.s.FR
இந்த,பதிவில பொம்பிளயளின்ர படம் தான் போடோணுமோ?இந்தப் பதிவில,பொம்பிளை சம்பந்தப்படுறதால,பொம்பிளப் படமோ?இல்லையெண்டால்,பொம்பிளைப் படம் போட்டாத் தான் ஆக்கள் வருவினமோ?இலையெண்டால் நீங்கள் ஆணாதிக்க வாதியோ?(இன்னசிற்றி பிரஸ் கேக்கிற கேள்வி மாதிரிக் கிடக்கோ?)//
இனிய காலை வணக்கம் ஐயா,
நல்ல கேள்வி தான்,
ஆனாலும் பதிவிற்குச் சம்பந்தப்படுறதாலை பொம்பிளைப் படம் போட்டேன்,
நான் ஆணாதிக்கவாதியா இல்லையா என்பதனை நீங்களும், வாசகர்களும் தான் முடிவு செய்யனும்.
பொம்பிளைப் படம் போட்டால் ஆட்கள் வருவீனை என்பது சும்மா பம்மாத்து ஐயா.
@Yoga.s.FR
Prabu Krishna said...
யோவ் போன மாசம் வேற பொண்ண பத்தி எழுதுன என்னய்யா இது?////அதான் நீங்களே சொல்லிப்புட்டீங்களே,போன மாசம்னு????//
அவ்...இது வேறை பொண்ணைப் பத்திய பதிவு..
ஹா...
@K.s.s.Rajh
பாஸ் கொஞ்சம் வேலை இருக்கு அப்பால வாரன்..மீண்டும் அண்ணிய பத்தின பதிவா(எத்தின)........ஹி.ஹி.ஹி.ஹி//
ஓக்கே..ஓக்கே..நீங்க அப்புறமா வாங்கோ..
@Real Santhanam Fanz
அருமையான வரிகள். மீண்டும் சந்திப்போம்...//
நன்றி நண்பா.
@தமிழ்வாசி - Prakash
பகிர்வுக்கு நன்றி//
உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா.
@விக்கியுலகம்
நண்பா நினைவுகளே வாழ்கையில் பல இடங்களில் துரத்துகின்றன...பகிர்வுக்கு நன்றி!//
ஆமாம் பாஸ்..வாழ்க்கையின் யதார்த்தமும் இது தானே.
"இனங்களிற்கிடையேயான உரசல் பயங்கரவாதமாய் இருக்கும் எம் தேசத்தில்"////"ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும்,இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்" என்றும் "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" என்று சொன்னவனும் தமிழனே!!!!!!!!!!!!இனங்களுக்கிடையே உரசுவதை விடுங்கள்,நமக்குள்.............................................!?
@சென்னை பித்தன்
மனதுக்கினியவளை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க இயலாதுதான்.ஆனால் அவள் நினைவுகள் தரும் வலியே ஒரு சுகம்தானே நிரூ?//
ஆமாம் ஐயா.
@ஆகுலன்
அண்ணே வடிவா தேடி பாருங்கோ..கண்டு பிடிக்கலாம்..ஒரே பீலிங் தான்...//
இதோ...முயற்சி செய்கிறேன் பாஸ்..
@Mohamed Faaique
பொழிப்புரையும் அருமை..//
நன்றி நண்பா.
@Prabu Krishna
நிரூ வந்து எனக்கு தங்க பதக்கம் உங்களுக்கு சில்வர் பதக்கம் தருவாப்புல//
அவ்....இதோ தருகின்றேன்.
பெற்றுக் கொள்ளுங்கள் நண்பர்களே.
@Prabu Krishna
யோவ் போன மாசம் வேற பொண்ண பத்தி எழுதுன என்னய்யா இது?//
அது போன மாசம்,
இது இந்த மாசம்...
ஹா...ஹா...
நினைவு சுமக்கும் உணர்வுகள் எப்பொழுதும் அழகுதான் நினைத்துப் பார்ப்பதற்கு ஆங்காங்கே விட்டுப்போன அந்த சிறு வலிகள் உட்பட.. அழகான, எனக்கு ரொம்ப பிடித்த பதிவு. உங்கள் இரண்டு விருதுகளுக்கும் வாழ்த்துக்கள்.
இதில ஏதோ விசயம் இருக்குது போலயிருக்கு!பொடிக்கு அந்த ஆச வந்திட்டிது போல கிடக்கு!தாய்,தேப்பனுக்கு புள்ளயள் எப்பவும் குழந்தையள் எண்ட நினைப்புத் தான?சாடை,மாடையா கறிக்கு உப்புக் காணாது, ரீ சாயம் காணாது எண்டு விடியக் காத்தால குளம்பினாத் தான்,அம்மாக்கு விளங்கும்.இது தெரியாம கொம்பியூட்டரில புலம்பி????????
எல்லாரும்,"காந்தி"யப் பற்றி எழுதினாக் கூட பொம்பிளப் படம் தான் போடீனம்!கிறவுட் அடிக்கத் தான் செய்யுது!ஏன்"அந்தப்"(பொம்பிள)படம் போடயில்லயெண்டு,பதிவுக்கு படம் தேவையில்லை எண்டாலும் கேக்கீனம் தான?
இனிய பகல் வணக்கம்,நிரூ!நன்றி,பகிர்வுக்கு,பதிவுக்கு!ஒரே பீலிங் தான் போல?நான் ஒருக்கா கதச்சுப் பாக்கட்டோ?(சும்மா ரீல் சுத்துவம்!)
வேலையில் இருப்பது போல் தெரிகிறது.வேலையைக் கவனியுங்கள்,கம்பியூட்டர் எங்கே போய் விடும்?மாலை கும்மலாம்!
வணக்கம் சார்! கும்புடுறேனுங்கோ! இனிய புதன்கிழமை வாழ்த்துக்கள்!
அழகாக, அருமையாக, உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கீங்க! நேசமானவர்களின் பிரிவு கொடியதுதான்!
உறவுகள் தொடர்கதை,
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை இங்கு முடியலாம்
முடிவிலே ஒன்று தொடங்கலாம்
இனி எல்லாம் சுகமே..
ஸ்ரெல்லா! ம்ம்
கலைந்து போன யுத்த பூமியில் கந்தகாற்று சுவாசித்து கருகிப்போனாலோ!
கயவர் கையில் பட்டு பட்டுமேனி பச்சைமயில் இறகுகள் இரையாக்கப்பட்டாலோ?
இத்தப்பிறவி வேண்டாம் தேவனே என்று அடிப்பாட்டில் அவதிப்பட்டு அலைகடலில் அடுத்த தேசம் போனாலோ!
மெழுகுதிரிபோல் வெடிகுண்டில் தீயாகிப்போனாலோ!
இப்படியும் என் நினைவுகள் அவளை என்னி!
அதிகாலைப்பொழுதில் அருமையான கதை சொல்லி அசத்திப்புட்டீங்க குறகுக்கு விளக்கம் கொடுத்து! சபாஷ் நிரூ!
//இடுகைத்தலைப்பு:
ஞாபகச் சிதறல்களில் சிக்கி நரக அவஸ்தையினைத் தரும் நினைவுகள்!
மன்னிக்கவும்! உங்கள் ஓட்டு ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது.
சன்னலை மூடு//
யாரோ கள்ள ஓட்டு போட்டு இருக்காங்க பாஸ்!! ஹீ ஹீ
நினைவோ ஒரு பறவை....
என்ன பாஸ் ஓட்டு விளமாட்டன் எங்குது?????
ஏதோ நினைவுகள் மலருதே மனதிலே, காவேரி ஊற்றாகவே, காற்றோடு காற்றாகவே....
///"மேல்த் தட்டு சொர்க்கம், கீழ்த் தட்டு நரகம்" எனும் மனித குலத்தை இழிவாக்கியோரின் வரைவிலக்கணத்தைப் பொய்ப்பித்தாள்.//// அதென்ன மேல் தட்டு கீழ்த்தட்டு எனக்கு புரியவில்லையே ..))
@??????
வடிவா அது யாரு?
குறளை மையமாக வைத்து எழுதப்பட்டதா இல்லை எழுதியதுக்கு குறள் பொருந்தியதா ?
ஆதிராவுக்கு வாழ்த்துக்கள்
//// ஸ்ரெல்லா ஒரு கிறிஸ்துவப் பெண் என்பதனையும் தாண்டி மதங்களை வென்று விடும் மனங்களின் போர்க் களமாக எம் காதல் மொட்டு விட்டது. "இனங்களிற்கிடையேயான உரசல் பயங்கரவாதமாய் இருக்கும் எம் தேசத்தில்" ஆண் பெண் எனும் பாலினங்களிற்கிடையேயான புரிதல் எனக்கும் அவளுக்குமிடையேயான ஆலாபனையாக மாற்றம் பெற்று விட்டது.////
ஆகா.....................என்ன சொல்வது அற்புதம்
Yoga.s.FR said...
இதில ஏதோ விசயம் இருக்குது போலயிருக்கு!பொடிக்கு அந்த ஆச வந்திட்டிது போல கிடக்கு!தாய்,தேப்பனுக்கு புள்ளயள் எப்பவும் குழந்தையள் எண்ட நினைப்புத் தான?சாடை,மாடையா கறிக்கு உப்புக் காணாது, ரீ சாயம் காணாது எண்டு விடியக் காத்தால குளம்பினாத் தான்,அம்மாக்கு விளங்கும்.இது தெரியாம கொம்பியூட்டரில புலம்பி????????
பொறுங்கண்ண பொறுங்கோ பொடிக்கு இப்பதானே35வயசு இப்பியே அனுப்பிவுட்டா நாங்க எப்பிடி இபிடியான பதிவுகள வாசிக்க முடியும்.. முந்தானை முடிச்சு பொல்லாததையா..!!? அப்புறம் பொடி வலைப்பக்கமே வரமாட்டான்யா...!!!)))
குறளும் அதன் விளக்க கதையும் நன்று நிரூ..
மரணத்தை விட
கொடியது
விரும்பியோர் பிரிவு
நல்லா சொல்லி இருக்கீங்க
வாழ்த்துக்கள்
////"நினைவுகளில் சிக்கி நரக அவஸ்தையில் வாழ்வதை விட- நிஜப் பொழுதில் அவள் நினைவுகளுடன் செத்து விடல் சுகம்" எனச் சொன்னவனைக் கூட்டி வாருங்கள்!
"வாழும் போதே நரகம் எனை விட்டுப் பிரிந்த அவள் நினைப்பாக என் அருகே இருக்கையில்" எப்படி நான் சாக முடியும்? இப்போது தேடத் தொடங்குகிறேன்!
அவள் எங்கே இருப்பாள்; எப்போது கிடைப்பாள் எனும் ஆவல் மேலெழ நானும் ஸ்ரெல்லாவைத் தேடிப் போகிறேன்!/////
தேடுங்க பாஸ் நிச்சயம் கிடைப்பாங்க.....வாழ்த்துக்கள்..
////குழைத்து வைத்த கோதுமை மாவின் வெண் சாந்தெடுத்து, குமரிப் பெண்ணின் பருவ மேட்டில் மாதுளைக் கனிகளைப் பொருத்தி, அழைப்பொலியாய் இருக்கும் சிறிய மணியோசையின் கூர் முனையை மூக்கில் செருகி, அகல விரிந்திருக்கும் தன் விழி வெண் படலத்தினுள் என்னைக் கட்டி வைக்கத் துடிக்கும் ஆரஞ்சு கலர் உதட்டுக்காரி அவள் அல்லவா./////
மிகவும் எளிமையான இலகுவில் புரிந்துகொள்ளக்கூடிய வர்ணனை.
இதை ஸ்டெல்லா வாசிப்பாங்களா?
திருக்குறள் விளக்கம் மிகவும் எளிமையாய்..
>>Prabu Krishna said... Best Blogger Tips [Reply To This Comment]
யோவ் போன மாசம் வேற பொண்ண பத்தி எழுதுன என்னய்யா இது?
இதெல்லாம் என்ன கேள்வி? அடுத்த மாசம் வேற ஃபிகர். ஹி ஹி
>>வாழ்வில் அர்த்தமற்றதாக இருக்கும் ஒவ்வோர் நொடிப் பொழுதுகளும் எப்போது அர்த்தமுள்ளதாக்கப்படுகின்றதோ, அப்போது தான் அந்த அர்த்தங்களின் பின்னே ஒரு பெண் இருந்திருப்பாள் என்று வரலாறு கூறுகின்றது.
தத்துவவாதி நிரூபன் வாழ்க
>>"மேல்த் தட்டு சொர்க்கம், கீழ்த் தட்டு நரகம்" எனும் மனித குலத்தை இழிவாக்கியோரின் வரைவிலக்கணத்தைப் பொய்ப்பித்தாள். மேல்த் தட்டில் சொர்க்கம்- கீழ்த் தட்டில் சொப்பனம் என ஏதேதோ கற்பித்தாள்.
aahaa!!!!!!!!!! ஆஹா!! அபாரம். சென்சர் போர்டு ஆஃபீஸர்ஸ் கமான்
>.
"நினைவுகளில் சிக்கி நரக அவஸ்தையில் வாழ்வதை விட- நிஜப் பொழுதில் அவள் நினைவுகளுடன் செத்து விடல் சுகம்" எனச் சொன்னவனைக் கூட்டி வாருங்கள்!
"வாழும் போதே நரகம் எனை விட்டுப் பிரிந்த அவள் நினைப்பாக என் அருகே இருக்கையில்" எப்படி நான் சாக முடியும்? இப்போது தேடத் தொடங்குகிறேன்
vaav!!!!!!!!!!!!!!!!!!!!
காட்டான் said...பொறுங்கண்ண பொறுங்கோ பொடிக்கு இப்பதானே35வயசு இப்பியே அனுப்பிவுட்டா நாங்க எப்பிடி இபிடியான பதிவுகள வாசிக்க முடியும்.. முந்தானை முடிச்சு பொல்லாததையா..!!? அப்புறம் பொடி வலைப்பக்கமே வரமாட்டான்யா...!!!)))////என்னது,முப்பத்தைஞ்சா?நீங்களெல்லாம் இருவத்தெட்டு,முப்பதில கட்டி,பள்ளிக்குடத்துக்கு ஒண்டை அனுப்பிப் போட்டு,ரெண்டாவது காலுக்குள்ள தடக்குதெண்டு எரிஞ்சு புகைவியள்,அவர் முப்பத்தைஞ்சு ஆகியும் கட்டாமல்,உங்களுக்கு "கில்மா" பதிவு எழுதோணுமாக்கும்?நல்லநியாயமையா,கோவணக்காரரே!
என்ன வர்ணனை பாஸ்
அவ்வ்.... இது உங்களால் மட்டுமே முடியும்
பின்னுறீங்க பாஸ்
பழகும் வேளைகளில் இனிமை தருவாள். பருவக் கனவிற்குச் சுதந்திரம் கொடுப்பாள். மனதில் எழும் எண்ண அலைகள் கரை புரண்டோடி விடாதபடி மயக்கம் கொடுப்பாள்.////
பாஸ் பாஸ் இந்த வர்ணனை அவங்க காதுக்கு மட்டும் எட்டிச்சு....
ஓடி வந்திருவாங்க உங்க கிட்ட என்று சொல்ல வந்தேன் ஹீ ஹீ
பாஸ் பாஸ் அண்ணி ரெம்ப லக்கி பொண்ணு என்று
நினைக்குறேன்... பட் எந்த அண்ணிக்கு உங்கள கட்டிக்குற
யோக்கியம் அமைய போகுதோ ஹீ ஹீ
பொறுங்கண்ண பொறுங்கோ பொடிக்கு இப்பதானே35வயசு இப்பியே அனுப்பிவுட்டா நாங்க எப்பிடி இபிடியான பதிவுகள வாசிக்க முடியும்.. முந்தானை முடிச்சு பொல்லாததையா..!!? அப்புறம் பொடி வலைப்பக்கமே வரமாட்டான்யா...!!!)))////அனுபவம் பேசுது போலயிருக்கு?இருவத்தி மூண்டு ஓகஸ்ட்டுக்குப் பிறகு பதிவொண்டையும் காணயில்லை?நானும் மவுஸை உறுட்டி உறுட்டி தேடினா கிடைகவே மாட்டெண்டுது?ஏதோ போத்தாபிள் இருக்கிறதால கருத்தெண்டாலும்,றோட்டில போகைக்க,வரய்க்க எழுதக் கூடியா இருக்கு!என்னுடைய ஆ....................ழ்ந்த அனுதாபங்கள்,காட்டான்!
ஆரம்பமே மனமென்னும் கடல்! ...அப்போ நிறைய மீன்கள் இருக்கும் போலிருக்கே!
அருமை நிரூபன்!
ஆஆஆஆஆ நிரூபன்... இல்ல இல்ல நான் தான் 1ஸ்ட்டூஊஊஊ:)).
நீங்க வந்து சொல்லியிருக்காட்டில் எனக்குத் தெரியாது, இத்தலைப்பு மட்டும் மேலே வரவில்லையே அவ்வ்வ்வ்வ்:)).
இடைக்கிடை ஆரோ சதி செய்கினம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).
மியாவும் மியாவும் நன்றி நிரூபன்.
மியாப்பக்கத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறீங்க. நான் அவசரமாக வந்தேன்... இரவைக்கு வந்து முழுவதும் படித்து... நல்ல நல்லாஆஆஆஆ பின்னூட்டமாகப் போடுவேன் ஓக்கை?:)))))).
ஹய்யோ ஹய்யோ... சூப்பர் பாஸ் பிண்ணி பெடலடுரீங்க நண்பா.... சான்ஸே இல்ல....அந்த ஸ்ரெல்லா யாருங்க.... ஐய்யோ இப்பவே பாக்கனும் போலருக்கே இப்பவே பாக்கனும் போலருக்கெ......
"ஒரு மனிதனுள் உணர்ச்சிகள் இருக்கின்றது எனும் உண்மையினை உணரச் செய்கின்ற காதல் மோகினியாக பெண் இருக்கின்றாளாம்" //
யார் சொன்னா என்னா பாஸ்... படிக்கும்போதே பரவசம் வருகுதே...
குழைத்து வைத்த கோதுமை மாவின் வெண் சாந்தெடுத்து, குமரிப் பெண்ணின் பருவ மேட்டில் மாதுளைக் கனிகளைப் பொருத்தி, அழைப்பொலியாய் இருக்கும் சிறிய மணியோசையின் கூர் முனையை மூக்கில் செருகி, அகல விரிந்திருக்கும் தன் விழி வெண் படலத்தினுள் என்னைக் கட்டி வைக்கத் துடிக்கும் ஆரஞ்சு கலர் உதட்டுக்காரி அவள் //
யார் அந்த தேவதை.... உங்களுக்கு போட்டியாக நானும் அப்ளிகேசன் போடப்போறேன் பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... வழி விடுங்கோ.... எங்கே எனது கவிதை
மெதுவாய் வந்து, என் மேனி தன்னில் ஒரு தொடுகையிட்டு, அருகே நான் இருக்கின்றேன் ஆருயிரே என அவள் சொன்னால்- என் இரவும் இனிமை ஆகாதோ?
பூவாய் மணம் பரப்பி, புன்னகையால் கோல விழியசைத்து, மோவாய் திருப்பி, மேனி தன்னில் முத்தமிட, பாவாய் அவளும் வாராளோ!//
வாராயோ வான்மதி.. ஆஹா சாரி பாஸ்ஸ்ஸ்ஸ் வாராயோ ஸ்ரேல்லா...எனக்கு ஃபுல்லா உன் போதையே ஞாபகமாய்
அவள் எங்கே இருப்பாள்; எப்போது கிடைப்பாள் எனும் ஆவல் மேலெழ நானும் ஸ்ரெல்லாவைத் தேடிப் போகிறேன்!//
பாஸ்... என்னையும் கூட்டிட்டு போங்க நானும் ஸ்ரெல்லாவை தேடி வாரேன்... தேடும் கண் பார்வை துடிக்க ... தவிக்க...
என் உயிர்ச் சிறகில் சிலிர்ப்பூட்டிப் பறக்கச் செய்த அந்த வெண் பஞ்சு மேகம் மீண்டும் என் அருகே வாராதா எனும் ஏக்கம் தான் எஞ்சியிருக்கின்றது.//
வாவ் அந்த வெண் பஞ்சு மேகம்... அவள் மீது தாகம்... வேண்டும் அவள் தேகம்...கிடைத்தால் அவள் மீது நடத்திடுவேன் ஒரு யாகம்...அவ்வ்வ்வ்
எம்மை விரும்பி அன்பு செலுத்தும் ஒருவர் இல்லாது வாழ்வது கொடுமையானது. இதனை விட, இனிமையான- மனதிற்குப் பிடித்தவரைப் பிரிந்து வாழ்வது இன்னும் கொடுமையானது.//
சூப்பர் பாஸ்ஸ்ஸ்ஸ்... காதல் வைத்து அன்பிற்காக ஏங்கும் பலரின் மனதை கொள்ளை கொள்ளும் நம் காலம்கடந்த வள்ளுவரின் பொழிப்புரை... பொளந்து கட்டிடுச்சு கலக்கலா....
என் உயிர்ச் சிறகில் சிலிர்ப்பூட்டிப் பறக்கச் செய்த அந்த வெண் பஞ்சு மேகம் மீண்டும் என் அருகே வாராதா எனும் ஏக்கம் தான் எஞ்சியிருக்கின்றது.//
எனது நிலையும் அதுவே நண்பரே....
அட நம்ம ஆதிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மியாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் தல சூப்பர் பதிவரை அறிமுக படுத்திட்டீங்க... கவலைகள் கலைந்துவிடும் உற்சாகம் பொங்கிவிடும்... அவரது வலைப்பூவிற்கு சென்றால்....வாழ்வில் நகைச்சுவை உணர்வுடன் வாழவேண்டும் என கள்ளம் கபடம் இல்லாத நல் உள்ளத்தை அறிமுக படுத்திட்டீங்க பாஸ் ஆதிஸ்ஸ்ஸ்ஸ்க்கு மனம்கனிந்த வாழ்த்துக்குள்...
வலைப் பதிவில் இன்றைய கால கட்டத்தில் பல்வேறு வகையான விடயங்களை உள்ளடக்கிய சுவையான வலைப் பூக்கள் இருந்தாலும், செல்லப் பிராணிகளுக்கென்று இருக்கின்ற வலைப் பூக்கள் அரிதாகத் தான் எம் தமிழ் மொழியில் கிடைக்கின்றன. ஆனாலும் அந்தக் குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கில் தன் வலைப் பதிவில் பூனைகளுக்கென்று தனியான பக்கத்தினை வடிவமைத்துப் பதிவுகளைப் பகிர்ந்து வரும் ஒருவரை யாருக்காவது தெரியுமா?//
யாருக்காவது தெரியுமாவாஆஆஆஅ
பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்ன்ன்ன்ன்ன் ... கொஞ்ச நாள் முதலைக்கு பயந்து முருங்கை மரத்துல ஏறி அவங்க ஒளிஞ்சிக்கிட்டாங்க்கிறத்துக்காக... இப்படியேல்லாம் சொல்லப்படாதூஊஊஊஊஊஉ தேம்ஸ்ஸ்ஸ்ஸ்ன்னு சொல்லி பாருங்கோ சின்ன குழந்தை கூட அவங்க பேர சொல்லும்....
தன்னுடைய வலைப் பூவில் பூனைகளைப் பற்றிய சிறப்புப் பகிர்வுகளையும், கூடவே தான் வாழும் பிரதேசத்தின் நினைவுகளையும், தன் ஊர் பற்றிய குறிப்புக்களையும், இடையிடையே எப்போதாவது அத்தி பூத்தாற் போல கவிதைகளையும் "என் பக்கம்" எனும் வலைப் பூவினூடாக பகிர்ந்து வருபவர் தான் சகோதரி அதிரா. //
இடை இடையே எப்போதாவது அத்தி பூத்தார் போல.... ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா என்னா பாஸ் இப்படி கவுத்துபுட்டீக அவ்வ்வ்வ்வ்வ்வ்
இலக்கியம் படித்தாற்போல இருக்கிறது.வாழ்த்துக்கள்.
ம்யா.... ம்யாஆஆஆஅ... ம்ம்ம்ம்யாஆஆஆஆஅ... ம்ம்ம்ம்ம்யாஆஆஆஆஆ:))))).
இனிய நினைவுகள் கரைந்து விடுவதேயில்லை.
மாசத்துக்கு மாசம் வித்தியாசம்...
பெண் மட்டுமா?
யாரந்த புதுப்பெண்...?
//நினைவுகள் நீர்த் திவலைகளாகி இலகுவில் கரைந்துருகும் போது கனவுகளிலிருந்து அவள் பற்றியதான விம்பம் சிதற விடப்படுகின்றது.//
உன்னதமான வரிகள்!
//நினைவுகள் நீர்த் திவலைகளாகி இலகுவில் கரைந்துருகும் போது கனவுகளிலிருந்து அவள் பற்றியதான விம்பம் சிதற விடப்படுகின்றது.//
உன்னதமான வரிகள்!
என்ன திடீரென்று இலக்கிய நயம் சொட்டுகிறது.ஏதாவது விஷேசமா....
ஒரு அருமையான வசனகாவியத்தை படித்த உணர்வு! சூப்பர் நிரூபன் சார்!
Post a Comment