எல்லோரும் இன்றைய பயிற்சிக்கு ரெடியோ?
என்ன கடைசி வரிசையில ஒராள் குறைகிற மாதிரி இருக்கு.
ஓ...செந்தோழன் இன்னும் ட்ரெயினிங்கிற்கு வரவில்லையே!
ஓக்கே நீங்கள் எல்லோரும் ஒரு ஐஞ்சு நிமிசம் துள்ளத் தொடங்குங்கோ. நான் செந்தோழனைப் போய்க் கூட்டி வாரேன்" என்று சொல்லியவாறு ட்ரெயினிங் மாஸ்டர் புரட்சி வேகமாக தன் வேஸினுள்(போராளிகள் முகாம்) போய் ஆழ்ந்த தூக்கத்திலிருந்த செந்தோழனைத் தட்டி எழுப்புகிறார்.
என்ன செந்தோழன், வழமையா ட்ரெயினிங்கிற்கு நீர் தான் முன்னுக்கு நிற்கிறனீர். இன்னைக்கு மட்டும் எழும்ப(எந்திருக்க) லேட்டாகிட்டு. என்ன காரணம்?
"ஓ...அது வந்தண்ணை, இன்னைக்கும் வழமையான நேரத்திற்கு தான் எழும்பினேன். திடீரென என்ர அம்மாவின் நினைப்பு(நெனைப்பு) வந்திட்டுது. அதான் அவா இப்ப, நான் இல்லாமல் பிள்ளைப் பாசத்தில துடிச்சுப் போயிருப்பா என்ற நினைப்பில தூங்கி விட்டேன்".
"அது சரி செந்தோழன், போராளிகள் என்றால் இப்படியான கவலை இருக்கத் தான் செய்யும். ஆனாலும் உங்கடை அம்மாவைப் பற்றி நீங்க கவலைப் பட்டுக் கொண்டிருந்தால், எங்கடை மண்ணில வாழுற எத்தனையோ அம்மாக்களை யார் நெனைச்சுப் பார்க்கிறது?
கெதியா(வேகமாக) வெளிக்கிட்டு வாரும். பயிற்சிக்கு என்ன?
நீர் இப்பவே பத்து நிமிசம் லேட். நான் போறேன்.
எனச் சொல்லி செந்தோழனின் நினைவுகளைக் கலைத்து அவனை ட்ரெயினிங்கிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனும் நோக்கத்திலிருந்த மாஸ்டர் புரட்சிக்கு, விடை கொடுத்தவனாய் கையில் பற்பொடியினை எடுத்துக் கொண்டு கிணற்றடிக்கு ஓடினான் செந்தோழன்.
மாஸ்டர் சொல்லுவதும் சரி தான்.
"நான் ஒருவன் என்ரை அம்மாவைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தால், மாற்றான் பிடியில் உள்ள மண்ணில் நாளாந்தம் தம் இன்பங்களைத் தொலைத்து வாழ்கிற பல அம்மாக்களுக்கு எப்போது விடிவு கிடைப்பது? எனச் சிந்தனை கொண்டவனாய் செந்தோழன் தன் காலைக் கடன்களை முடித்துப் பயிற்சிக்குத் தயாரானான்.
தாயக விடுதலைப் போரில் மாவீரர்களான தனது பிள்ளைகள் மலரவன், எழில்நிலா ஆகிய இருவரை இழந்த துயரம் ஒரு புறத்திலும், தன் கணவனைப் புலிகளுக்கு உணவு கொடுத்தார் என்ற குற்றச் சாட்டின் பேரில் கண் முன்னே இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட கொடுந் துயரம் மறு புறத்திலும் மனதின் நிம்மதி அலைகளைத் துண்டாடிக் கொண்டிருக்க;
தன் மகனாகிய நிஷாந்தன் தனக்கு ஆறுதலாக இறுதிக் காலம் வரை இருப்பான் எனும் வைராக்கியத்தில் வாழ்ந்த கனகம்மாவின் நினைப்பில் மண் தூவி விட்டு விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்டவன் தான் செந்தோழன்.
இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பதுங்கித் திரிந்த புலிகள் அணியினரை மோப்பம் பிடித்து, அவர்களுக்குத் தொல்லை கொடுத்து "அண்ணே, நானும் இயக்கத்திற்கு வரட்டே" எனும் நச்சரிப்புக் கொடுத்துக் கொண்டிருந்த நிஷாந்தனை "நீங்கள் இப்ப சின்னப் பிள்ளை தானே" உங்களுக்கு இன்னும் வயசு வரவில்லை. கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்கோ" என்று போலிச் சாட்டுச் சொல்லி புலிகள் சமாளித்து வந்தார்கள்.
ஏற்கனவே இரண்டு குடும்ப உறுப்பினர்களைப் போராட்டத்திற்காக காணிக்கையாக்கிய கனகம்மா- பொன்னையா குடும்பத்திலிருந்து மேலும் ஒருவனைப் போராட்டத்திற்குச் சேர்த்துக் கொள்ளுவது அழகில்லை என்று நிஷாந்தனைப் புறக்கணித்து வந்தார்கள் புலிகள்.
நிஷாந்தனின் தந்தையார் புலிகளுக்கு உணவு கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் காரணமாய் இராணுவத்திற்கு விசுவாசமானவர்களால் வழங்கப்பட்ட செய்தியின் அடிப்படையில் சுட்டுக் கொல்லப்பட்ட நாள் முதலாய்;
"என் அப்பாவைப் போல இவங்கள் எத்தனை பேரைச் சுடுவாங்க(ள்)? இனிமேலும் என்னை மாதிரி துடிப்புள்ள இளைஞர்கள் பொறுத்துப் போகலாமோ?"
நான் எப்படியாச்சும் போராட்டத்தில் இணைய வேண்டும் எனும் தீராத ஆவல் கொண்டு காத்திருந்த நிஷாந்தனுக்கு நல்லதொரு சந்தர்ப்பமாய் இராணுவத்தினரின் சுற்றி வளைப்புத் தாக்குதல் அமைந்து கொள்கிறது.
08.03.1999 அன்றும் வழமை போலவே யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் இராணுவக் கட்டுப் பாட்டுப் பகுதிக்குள் தாக்குதல் நடத்துவதற்காகவும், புலனாய்வுத் தகவல் சேகரிப்பிற்காகவும் பதுங்கியிருந்த விடுதலைப் புலிகளின் அணியோடு ரகசியமான சந்திப்புக்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான் நிஷாந்தன். திடீரென யாரோ கொடுத்த தகவலைத் தொடர்ந்து, வேகமாக அவ் இடத்தைச் சுற்றி வளைத்த இராணுவத்தினர் மறைந்திருக்கும் புலிகள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினார்கள்.
புலிகளும் பதில் தாக்குதல் தொடுத்து, இராணுவத்தினரை நிலை குலையச் செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இராணுவத்தினர் தமது பின் பலத்திற்காக (BACKUP) மேலும் ஒரு இராணுவத்தினரை உதவிக்கு அழைத்துக் கொண்டிருந்தார்கள். இந் நேரத்தில் துப்பாக்கி ரவை ஒன்று நிஷாந்தனின் கையினைப் பதம் பார்த்துக் கொள்ள, தொடர்ந்து பதில் தாக்குதல் நிகழ்த்திக் கொண்டிருந்தால் தாம் அனைவரும் இங்கேயே மாட்டிக் கொள்ள வேண்டும் எனும் நினைப்பில் பின் வாசல் வழியே தப்பிச் செல்லத் தீர்மானித்து காயம்பட்ட நிஷாந்தனை தோளில் சுமந்து செல்ல முடிவெடுத்தார்கள் புலிகள்.
ஆனால் நிஷாந்தனோ, "என்னை நீங்கள் காப்பாற்ற வேண்டாம்.
உங்களாலை என்னைப் போராட்டத்தில் சேர்த்துக் கொள்ள முடியுமென்றால் மட்டும் என்னைக் தூக்கிக் கொண்டு போங்க. இல்லையென்றால் இங்கேயே விட்டு விட்டுச் செல்லுங்கள்" என்று சொல்லியது அங்கே இருந்தோருக்கு அதிர்ச்சியினை உருவாக்கியது.
"என்ன யோசிக்கிறீங்க? இது யோசிப்பதற்கான நேரமில்லை. இன்னும் கொஞ்ச நேரம் தாமதிச்சால் நிலமை மோசமாகிடும். என்னை உங்களோடு இணைத்துக் கொள்வதாகச் சத்தியம் பண்ணுங்கோ. நான் கண்டிப்பா உங்களோடு வரச் சம்மதம் தாரேன்" என்று கூறி முடித்தான் நிஷாந்தன்.
நிலமை மோசமாவதை உணர்ந்த புலிகளின் ஊடுருவித் தாக்கும் அணித் தலைவர் புயலரசன், "ஓக்கே நீங்களும் இன்று முதல் எங்களோட தான் இருப்பீங்க" என வாக்குக் கொடுத்து நிஷாந்தனையும் போரட்டத்தில் இணைப்பதாக முடிவு செய்தார்கள் புலிகள்.
கையில் துளைத்த துப்பாக்கி ரவையின் காயத்திற்கு தமக்கு விசுவாசமான மருத்துவர் மூலம் மருந்திட்டுக் காயமாற்றிய பின் ரகசிய கடல் வழிப் பயணம் முடித்து, வன்னிப் பகுதியில் உள்ள புலிகளின் பாசறைக்குள் நுழைந்த நிஷாந்தன் செந்தோழனாகப் பெயர் மாற்றம் பெற்றுப் புலியானான்.
தன் மகனைக் காணவில்லையே எனும் ஆதங்கத்தோடு தனி மரமாய் இருந்த கனகம்மாவிற்கு போராளி ஒருவன் செந்தோழன் கைப் பட எழுதிய கடிதத்தினை ரகசியமாக வந்து கொடுத்து விட்டுச் சென்றான்.
"அன்புள்ள அம்மா, நான் அண்ணன் நிழலில் இங்கே பத்திரமாக இருக்கிறேன்.
என்னைப் பற்றி நீ கவலைப் படாதே. என்னைக் காணவில்லை என்று மட்டும் நீ ஒரு மனுவினைப் போலீஸ் நிலையத்திலும், மனித உரிமைகள் திணைக்களத்திலும் கொடு. இல்லையேல் இராணுவத்தினர் வீட்டுச் சோதனைக்காக வரும் சமயத்தில் என்னை எங்கே எனக் கேட்டுத் தொல்லை செய்வார்கள். ஆதலால் உனதும், எங்கள் உறவினர்களின் நலன் கருதியும் இக் காரியத்தை உடனடியாகச் செய் அம்மா” எனத் தன் மடலினை முடித்திருந்தான் செந்தோழனாகிய நிஷாந்தன்.
நாட்கள் நகர்ந்தன. செந்தோழனின் வேண்டுகோளுக்கு அமைவாக மனித உரிமைகள் திணைக்களத்தில் தன் மகனைக் காணவில்லை என்று மனுக் கொடுத்த பின் தான் தனிமையில் வாழ்வது மனக் கவலையினை அதிகரிக்கிறது எனும் உண்மையினை அனுபவமாய் உணர்ந்த கனகம்மா, தனக்கு ஆதரவாய் யாருமே இல்லை எனும் தவிப்போடு, அயல் வீட்டில் வாழ்ந்த தவராசா குடும்பத்தாரோடு போய் ஒட்டிக் கொண்டாள்.
என் மகனுக்கு ஏதும் ஆகக் கூடாது எனும் பிரார்த்தனையினைத் தவறாது மேற்கொண்டவளாய், தவராசாவின் பிள்ளைகளுக்கு பாடஞ் சொல்லிக் கொடுக்கும் வேலையில் ஈடுபட்டு, தான் வாங்கி உண்ணும் உணவிற்கான கைம்மாறினையும் தீர்த்துக் கொண்டிருந்தா(ள்) கனகம்மா. தவராசாவின் சுட்டிப் பிள்ளைகளான நித்யா, வல்லவன் ஆகிய இருவரும் அடிக்கடி கேட்கும் கேள்வியான "ஆச்சி நிஷாந்தன் மாமா எங்கே? அவர் எப்போ வருவார்?
என்ற கேள்விகளுக்கு "அவர் வெளிநாடு போய் விட்டார்" இன்னும் கொஞ்சக் காலத்தில எங்கடை நாட்டுப் பிரச்சினை எல்லாம் தீர்ந்த பின்னர் கண்டிப்பா வந்திடுவார் என்று மழுப்பல் பதில் சொல்லிச் சமாளித்து வந்தா கனகம்மா.
என் மகன் போராட்டத்தில் இணைந்து விட்டான் என்பதனை இந்தச் சிறு வாண்டுகளிடம் எப்படிச் சொல்ல முடியும்? அவர்களுக்கு எப்படிப் புரிய வைக்க முடியும்? ஒரு வேளை வாய் தவறி ஆமிக்காரங்க(ள்) வீடு செக் பண்ண வரும் சமயத்தில்(டைம்மில) இந்தச் சுட்டிகள் ரெண்டும் வாய் தவறி உளறி விட்டால் "வயசான எனக்கு ஏதும் ஆனாலும் பரவாயில்ல. இன்னும் கொஞ்ச நாளில கட்டையில போற கிழடு தானே நான்” ஆனால் என்னையை வைத்துப் பார்க்கிற(பராமரிக்கும்) குற்றத்திற்காக இந்த அப்பாவிக் குடும்பத்திற்கும் அவையளின்ர பிள்ளைகளுக்கும் ஏதும் ஆகிவிட்டால் யார் பதில் சொல்லுவது எனும் காரணத்தினால் "தன் மகன் பற்றிய ரகசியத்தை தன் மௌனங்களுக்குள் புதைத்து விடுகிறாள் கனகம்மா.
தவராசாவும், அவர் மனைவி கோமதியும் காலையில் வேலைக்காகச் சென்று விட, வீட்டில் தன் தனிமையினைப் போக்குவதற்கு உதவியாக, சுட்டிகளுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுத்த கனகம்மாவினைப் பார்ப்பதற்காக இரு இளைஞர்கள் வருகிறார்கள்.
"அம்மா எப்படி இருக்கிறீங்க? நலம் தானே?
என்ற போராளிகளின் அன்பு மொழி கேட்டு, அவர்களைக் கட்டி அணைத்து அழ வேண்டும் போலிருந்தது கனகம்மாவிற்கு.
“தம்பியவை என் மகன் நிஷாந்தனைக் கண்டனீங்களே? (பார்த்தீங்களா)? எப்படி இருக்கிறான் அவன்? எனும் ஒரு தாயின் மகன் பற்றிய எதிர்பார்பினுள் ஒரு வீரச் சாவுச் செய்தியினைச் சொல்லுவது என்பது மிகவும் இயலாத காரியமாகி விட, பொய் வேசம் போட மனமில்லாத போராளிகள் இருவரும்;
"அம்மா இப்போ நான் உங்களுக்குச் சொல்லப் போவது அதிர்ச்சியாக இருக்கலாம்; ஆனாலும் மனித வாழ்வென்றால் இது சகஜம் தானே. அதே போலப் போராளிகள் வாழ்விலும் இது சகஜம் அம்மா.
"உங்கட மகன் நிஷாந்தன்...சாவகச்சேரியில இடம் பெற்ற வழி மறிப்புத் தாக்குதலில் ரெண்டு கிழமைக்கு முன்னாடி(2வாரத்திற்கு முன்னாடி) வீரச்சாவடைந்திட்டார். அவரின் வித்துடலை வன்னிக்குக் கொண்டு போய், விசுவமடு துயிலும் இல்லத்தில நாங்கள் விதைச்சிருக்கிறோம்.
வாழ்க்கை என்றால் இன்பம் துன்பம் வருவது இயல்பு தானே அம்மா. யோசிக்காம(ல்) இருங்கோ. நாங்கள் இங்கே கன (அதிக) நேரம் நிற்க முடியாது.
ஆமி வந்தால் பிரச்சினைப் போயிடும். நாங்கள் போயிட்டு வாரோம்’(போய் வருகிறோம்) என்று சொல்லி விட்டுப் புறப்பட்ட போராளிகளைப் பார்த்தபடி விறைத்துப் போய் நின்ற கனகம்மாவின் கைகளைப் பிடித்து உலுப்பி, நித்யாவும், வல்லவனும் சுய நினைவிற்குக் கொண்டு வந்தார்கள்.
ஏன் ஆச்சி ஒரு மாதிரி இருக்கிறீங்க? எனும் சிறு வாண்டுகளின் கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாமல் கண்களில் நீர் முட்டியவாறு, அழக் கூடத் திராணியற்று மனமெனும் இரும்புக் கோட்டையினுள் தன் கவலையினைப் பதுக்கி வைக்க முடிவு செய்த கனகம்மாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியல்லை.
தனக்குள் யோசித்தா. என்ர மகன் இறக்கவில்லை. அவன் வாழ்கிறான்.
தம்பி (பிரபாகரன்) சொன்ன மாதிரி ‘விதையாகும் ஒவ்வொருவரும் மறு நாள் விருட்சமாக முளைக்கிறார்கள்' என்பது தானே உண்மை.
என்ர மகன் இன்னும் இறக்கவில்லை. அவன் இப்போதும் வாழ்ந்து கொண்டே இருக்கிறான். நான் அழக் கூடாது. அழவே கூடாது!
எனத் தன்னைத் தேற்றியவாறு கண்ணிலிருந்து கீழே விழுவதற்குத் தயாராகவிருந்த ஒரு துளி கண்ணீரைக் கையால் துடைத்தா கனக்கம்மா.
எங்கே பிள்ளையள் நித்யாவும், வல்லவனும் போட்டீங்கள்?
ஓடி வாங்கோ நான் கதை சொல்லப் போறேன். என்றவாறு தன் மனதைச் சிறு வாண்டுகள் பக்கம் திசை திருப்பினா கனகம்மா!
பிற் சேர்க்கை: இக் கதையின் நோக்கம், கனகம்மா போன்று பல தாய்மார் ஈழத்தில் வாழ்ந்தார்கள் என்பதனை ஆவணப்படுத்துவதேயன்றி, போராட்ட உணர்வுகளை மீண்டும் தூண்டும் நோக்கில் இக் கதை எழுதப்படவில்லை.
சிறு குறிப்பு: இக் கதையில் வரும் ஓவியங்களை ஓவியர் புகழேந்தி அவர்களின் போர் முகங்கள் ஓவியத் தொகுப்பிலிருந்து நகல் எடுத்துப் பகிர்ந்துள்ளேன்.
********************************************************************************************************************************
தற்போது கிடைத்த செய்தி: கூடங்குளம் அணு மின் நிலையத்தினை மூடக் கோரி இன்றைய தினம் கூடங்குளம் மக்கள் 500 பேரால் இந்திய நேரப்படி காலை 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் சக பதிவர் கூடல் பாலா அவர்களும் இணைந்துள்ளார் எனும் வருத்தமான செய்தியினை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
இவ் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அரசாங்கமானது செவி சாய்க்கப் பதிவர்களாகிய நாம் பரப்புரை செய்ய வேண்டும் என இப் பதிவின் வாயிலாக அன்பாக கேட்டுக் கொள்கின்றேன்.
பாலா அண்ணாவின் வலைப் பூவிற்குச் செல்ல:
http://koodalbala.blogspot.com/
*********************************************************************************************************************************
உறவுகளின் கவனத்திற்கு: சமீப காலமாக இன்ட்லி ஓட்டுப் பட்டையில் என் வலைப் பதிவின் ஊடாக ஓட்டளிக்க முடிவதில்லை எனும் உங்களின் உணர்வுகளிற்கு மதிப்பளித்து, இப் பதிவிற்கு இன்ட்லியில் ஓட்டுப் போடுவதற்கான இணைப்பினை இங்கே பகிர்ந்துள்ளேன்.
இன்ட்லியில் ஓட்டளிக்க:
|
88 Comments:
வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! நலமா இருக்கீங்களா?
ஈழ மகன் இன்னும் இறக்கவில்லை!///
தலைப்பில் சிலேடை தெரிகிறது! ஈழமகன் எனும் போராளி இறக்கவில்லை என்றும், ஈழத்து மக்கள் இன்னமும் தங்கள் உணர்வுகளை இழந்துவிடவில்லை என்றும் இருவிதமான பொருளைத் தருகிறது, தலைப்பு!
எல்லோருக்கும் இனிய காலை வணக்கம்,
எல்லோரும் இன்றைய பயிற்சிக்கு ரெடியோ?
என்ன கடைசி வரிசையில ஒராள் குறைகிற மாதிரி இருக்கு.
ஓ...செந்தோழன் இன்னும் ட்ரெயினிங்கிற்கு வரவில்லையே!///
ஒரு பயிற்சி முகாம் அப்படியே கண்முன் விரிகிறது!
என்று சொல்லியவாறு ட்ரெயினிங் மாஸ்டர் புரட்சி வேகமாக தன் வேஸினுள்(போராளிகள் முகாம்) போய் ஆழ்ந்த தூக்கத்திலிருந்த செந்தோழனைத் தட்டி எழுப்புகிறார்.////
இந்த இடத்தில் வேஸ் என்ற சொல் பொருத்தமற்றது! BASE என்ற சொல்லை தமிழில் பேஸ் என்று எழுதிவிட்டு, அடைப்புக்குறிக்குள் ஆங்கிலத்தில் BASE என்று போட்டிருக்கலாம்!
ஆனால் மக்கள் பேச்சு வழக்கில் வேஸ் என்றுதானாமே சொல்வார்கள்! உண்மையா நிரூபன் சார்?
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! நலமா இருக்கீங்களா?//
வணக்கம் சார்,
உங்களைப் பார்த்தாலே எகிறுது சார்,
நான் நலம் சார்,
நீங்க எப்படி இருக்கிறீங்க.
என்ன செந்தோழன், வழமையா ட்ரெயினிங்கிற்கு நீர் தான் முன்னுக்கு நிற்கிறனீர். இன்னைக்கு மட்டும் எழும்ப(எந்திருக்க) லேட்டாகிட்டு. என்ன காரணம்?////
இராணுவப்பயிற்சியின் போது செண்டிமெண்டுக்கு இடமில்லையே! பயிற்சிக்கு தாமதமாக வரும் ஒரு போராளிக்கு, சிறிய தண்டனை உண்டு என்பதோடு, பயிற்சி மாஸ்டரும் கடுமையாக அல்லவா நடந்து கொண்டிருப்பார்?
அப்படியா சார்?
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
இப்போ பிற்சேர்க்கையாக ஒரு விடயம் சேர்த்திருக்கிறேன் சார்,
Page Refresh பண்ணிப் பாருங்க சார்.,
நம்ம பாலா அன்ணாச்சி பற்றிய விசயம் சார்.
உருக்கமான பதிவு நிரூபன்,
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
ஒரு பயிற்சி முகாம் அப்படியே கண்முன் விரிகிறது!//
ஆமா சார்....
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
இந்த இடத்தில் வேஸ் என்ற சொல் பொருத்தமற்றது! BASE என்ற சொல்லை தமிழில் பேஸ் என்று எழுதிவிட்டு, அடைப்புக்குறிக்குள் ஆங்கிலத்தில் BASE என்று போட்டிருக்கலாம்!
ஆனால் மக்கள் பேச்சு வழக்கில் வேஸ் என்றுதானாமே சொல்வார்கள்! உண்மையா நிரூபன் சார்?//
ஆமா சார்,
ஆனால் நம்ம ஊரில பேச்சு வழக்கில் வேஸ் என்று தானே சொல்லுவாங்க. அதான் அப்படிப் போட்டு விட்டேன்.
//என்ர மகன் இன்னும் இறக்கவில்லை. அவன் இப்போதும் வாழ்ந்து கொண்டே இருக்கிறான். நான் அழக் கூடாது. அழவே கூடாது!//
தமிழ்த்தாய்கள் எததனையோ போர்களை பார்த்தவர்கள்தான்.
எனச் சொல்லி செந்தோழனின் நினைவுகளைக் கலைத்து அவனை ட்ரெயினிங்கிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனும் நோக்கத்திலிருந்த மாஸ்டர் புரட்சிக்கு, விடை கொடுத்தவனாய் கையில் பற்பொடியினை எடுத்துக் கொண்டு கிணற்றடிக்கு ஓடினான் செந்தோழன்.///
இப்படி, பயிற்சி நிலையில் இருக்கும் ஒரு போராளி, இவ்வளவு தாமதமாக வரும் வரை ஒரு பயிற்சி மாஸ்டர் காத்துக்கொண்டிருப்பது அதிசயமாக உள்ளது!
ரெயினிங் மாஸ்டருக்கு காத்துப் போகப் போகுது என்று, என்னருகில் இருந்து இப்பதிவை வாசித்துக்கொண்டிருக்கும், ஈழத்து நண்பன் ஒருவன் சொல்கிறான்!
அப்படியா நிரூபன் சார்?
மாஸ்டர் சொல்லுவதும் சரி தான்.
"நான் ஒருவன் என்ரை அம்மாவைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தால், மாற்றான் பிடியில் உள்ள மண்ணில் நாளாந்தம் தம் இன்பங்களைத் தொலைத்து வாழ்கிற பல அம்மாக்களுக்கு எப்போது விடிவு கிடைப்பது? எனச் சிந்தனை கொண்டவனாய் செந்தோழன் தன் காலைக் கடன்களை முடித்துப் பயிற்சிக்குத் தயாரானான்.///
ரொம்ப ரொம்ப லேட்! இந்தப் போராளிக்கு அவசியம் தண்டனை கொடுக்க வேண்டும்!
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
இராணுவப்பயிற்சியின் போது செண்டிமெண்டுக்கு இடமில்லையே! பயிற்சிக்கு தாமதமாக வரும் ஒரு போராளிக்கு, சிறிய தண்டனை உண்டு என்பதோடு, பயிற்சி மாஸ்டரும் கடுமையாக அல்லவா நடந்து கொண்டிருப்பார்?
அப்படியா சார்?//
ஆமா சார், செண்டிமெண்டுக்கு இடமில்லைத் தான், ஆனால் இங்கே பயிற்சிக்கு லேட் ஆன காரணத்தினைப் பொறுப்பாளர் கேட்டறிந்த பின்னர் தானே தண்டனை பற்றிச் சிந்திப்பார் சார்.
அத்தோடு பதிவு நீண்டு விடும் என்பதால் கொஞ்சம் சுருக்கி விட்டேன்.
இந்த இடத்தில் லாஜிக் இடிக்கிறது, அதாவது தண்டனை பெறாது பயிற்சிக்குப் போகும் போராளியைக் காண்பிப்பது தவறு என்பதை ஒத்துக் கொள்கிறேன்.
@shanmugavel
உருக்கமான பதிவு நிரூபன்,//
நன்றி அண்ணாச்சி,
தாயக விடுதலைப் போரில் மாவீரர்களான தனது பிள்ளைகள் மலரவன், எழில்நிலா ஆகிய இருவரை இழந்த துயரம் ஒரு புறத்திலும், தன் கணவனைப் புலிகளுக்கு உணவு கொடுத்தார் என்ற குற்றச் சாட்டின் பேரில் கண் முன்னே இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட கொடுந் துயரம் மறு புறத்திலும் மனதின் நிம்மதி அலைகளைத் துண்டாடிக் கொண்டிருக்க;
தன் மகனாகிய செந்தோழன் தனக்கு ஆறுதலாக இறுதிக் காலம் வரை இருப்பான் எனும் வைராக்கியத்தில் வாழ்ந்த கனகம்மாவின் நினைப்பினைத் தவிடு பொடியாக்கி விட்டு விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்டவன் தான் செந்தோழன்.///
இந்த இடத்தில் “ தவிடுபொடியாக்கிவிட்டு” என்ற சொல் பொருத்தமே இல்லை! உடனே மாற்றவும்! அந்த இடத்தில் மென்மைப்படுத்தவும்! அதற்கான காரணம் புரியும் என்று நினைக்கிறேன்!
போரிலக்கியங்கள் படைக்கும் போது, வார்த்தைகள் முக்கியம் சார்!
எதற்காக இதனைக் கோருகிறேன் என்று புரியாவிட்டால் சொல்லுங்கள்! இன்னமும் விளக்கமாக சொல்கிறேன்!
@shanmugavel
தமிழ்த்தாய்கள் எததனையோ போர்களை பார்த்தவர்கள்தான்.//
ஆமாம் அண்ணாச்சி,
தாயக விடுதலைப் போரில் மாவீரர்களான தனது பிள்ளைகள் மலரவன், எழில்நிலா ஆகிய இருவரை இழந்த துயரம் ஒரு புறத்திலும், தன் கணவனைப் புலிகளுக்கு உணவு கொடுத்தார் என்ற குற்றச் சாட்டின் பேரில் கண் முன்னே இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட கொடுந் துயரம் மறு புறத்திலும் மனதின் நிம்மதி அலைகளைத் துண்டாடிக் கொண்டிருக்க;///
இப்படி எத்தனை தாய்மார்கள், ஈழத்தில்! ம் ...... காலம் ஒருநாள் மாறாது போகுமா?
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
இப்படி, பயிற்சி நிலையில் இருக்கும் ஒரு போராளி, இவ்வளவு தாமதமாக வரும் வரை ஒரு பயிற்சி மாஸ்டர் காத்துக்கொண்டிருப்பது அதிசயமாக உள்ளது!
ரெயினிங் மாஸ்டருக்கு காத்துப் போகப் போகுது என்று, என்னருகில் இருந்து இப்பதிவை வாசித்துக்கொண்டிருக்கும், ஈழத்து நண்பன் ஒருவன் சொல்கிறான்!
அப்படியா நிரூபன் சார்?//
சார், நீங்கள் சுட்டும் வரிக்கு மேலே உள்ள வரியைப் பாருங்கள்.
ட்ரெயினிங் மாஸ்டர் ஏனைய போராளிகளைத் துள்ள விட்டுத் தான் வந்திருக்கிறார்.
ஆதலால் அவர் காத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை....
ஆதலால் தான் அவர் செந்தோழனை வரச் சொல்லி விட்டு, போகின்றார்.
இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பதுங்கித் திரிந்த புலிகள் அணியினரை மோப்பம் பிடித்து, அவர்களுக்குத் தொல்லை கொடுத்து "அண்ணே, நானும் இயக்கத்திற்கு வரட்டே" எனும் நச்சரிப்புக் கொடுத்துக் கொண்டிருந்த நிஷாந்தனை "நீங்கள் இப்ப சின்னப் பிள்ளை தானே" உங்களுக்கு இன்னும் வயசு வரவில்லை. கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்கோ" என்று போலிச் சாட்டுச் சொல்லி புலிகள் சமாளித்து வந்தார்கள்.////
இது முற்றிலும் உண்மை! புலிகள் இயக்கத்தில் சேருவது அவ்வளவு கஷ்டம் என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்! ( சில நெருக்கடியான சூழ்நிலைகள் தவிர்த்து!)
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
இந்த இடத்தில் “ தவிடுபொடியாக்கிவிட்டு” என்ற சொல் பொருத்தமே இல்லை! உடனே மாற்றவும்! அந்த இடத்தில் மென்மைப்படுத்தவும்! அதற்கான காரணம் புரியும் என்று நினைக்கிறேன்!
போரிலக்கியங்கள் படைக்கும் போது, வார்த்தைகள் முக்கியம் சார்!
எதற்காக இதனைக் கோருகிறேன் என்று புரியாவிட்டால் சொல்லுங்கள்! இன்னமும் விளக்கமாக சொல்கிறேன்!//
நினைவுகளை உடைத் தெறிவதென்பது தவறு?
தவிடு பொடியாக்குவது சுக்கு நூறாக உடைப்பதற்கு நிகரான வார்த்தை தானே சார்.
வார்த்தையில் தவறிருப்பின் உடனே மாற்றி விடுகிறேன்.
ஏற்கனவே இரண்டு குடும்ப உறுப்பினர்களைப் போராட்டத்திற்காக காணிக்கையாக்கிய கனகம்மா- பொன்னையா குடும்பத்திலிருந்து மேலும் ஒருவனைப் போராட்டத்திற்குச் சேர்த்துக் கொள்ளுவது அழகில்லை என்று நிஷாந்தனைப் புறக்கணித்து வந்தார்கள் புலிகள்.////
சகட்டு மேனிக்கு புலிகளை விமர்சிப்போர் இதனைக் கவனிக்கவும்!
நிஷாந்தனின் தந்தையார் புலிகளுக்கு உணவு கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் காரணமாய் இராணுவத்திற்கு விசுவாசமானவர்களால் வழங்கப்பட்ட செய்தியின் அடிப்படையில் சுட்டுக் கொல்லப்பட்ட நாள் முதலாய்;////
தமிழனைக் கொல்வதற்கு, அடக்குமுறை இராணுவங்கள் கண்டுபிடித்த, மிகப்பெரிய நொண்டிச்சாட்டு!
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
இப்படி எத்தனை தாய்மார்கள், ஈழத்தில்! ம் ...... காலம் ஒருநாள் மாறாது போகுமா?//
நீங்க சொல்லுவதனைப் பார்க்கையில் மணி சார், எனக்கு
"காலம் ஒரு நாள் மாறாதோ..
கண்ணீர் ஒரு நாள்...
என்ற புயல் அடித்த தேசப் பாட்டுத் தான் நினைவிற்கு வருது சார்.
"என் அப்பாவைப் போல இவங்கள் எத்தனை பேரைச் சுடுவாங்க(ள்)? இனிமேலும் என்னை மாதிரி இள வட்டங்கள் பொறுத்துப் போகலாமே?////
நிரூபன் சார்! சொல்கிறேன் என்று கோபபடாதீர்கள்! போராட்ட சம்பவங்கள் எழுதும் போது, புனிதமான சொற்களைக் கையாளுவது அவசியம்! ‘ இளவட்டங்கள்’ என்ற சொல், ஈழத்தில் பயன்பாட்டில் இருக்கலாம், ஆனால் இந்த இடத்தில் அது பொருத்தமற்றது!
இளவட்டம் என்ற சொல் புனிதம் குறைந்தது என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்!
“ மேடையில் தோன்றிய தங்கள் அபிமான நடிகரைப் பார்ப்பதற்கு இளவட்டங்கள் முண்டியடித்தன” என்பதுதான் பொருத்தமான பாவனை!
சொல் ஒன்றுதான்! ஆனால் அதற்குப் பெறுமதி இருக்கிறது! அதுதான் தமிழின் சிறப்பே!
புலிகளின் தலைவர் என்பதற்கும் புலித்தலைவர் என்பதற்கும் பாரிய வித்தியாசம் உண்டல்லவா?
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
இது முற்றிலும் உண்மை! புலிகள் இயக்கத்தில் சேருவது அவ்வளவு கஷ்டம் என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்! ( சில நெருக்கடியான சூழ்நிலைகள் தவிர்த்து!)//
சார், தமிழகத்தில் உள்ள உங்களுக்கு இது எப்படித் தெரியும் சார்?
ஈழத்திலிருந்து புலனாய்வு செய்வதற்கு நீங்க ஆளுங்களை வைச்சிருந்திருக்கிறீங்க போல இருக்கே.
நான் எப்படியாச்சும் போராட்டத்தில் இணைய வேண்டும் எனும் தீராத ஆவல் கொண்டு காத்திருந்த நிஷாந்தனுக்கு நல்லதொரு சந்தர்ப்பமாய் இராணுவத்தினரின் சுற்றி வளைப்புத் தாக்குதல் அமைந்து கொள்கிறது.////
பெரும்பாலான தமிழர்களைப் புலிகளாக்கிய பெருமை இரணுவத்துக்கே சேரும்! இங்கும் அதுதான் நடக்கிறது!
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
இந்த இடத்தில் “ தவிடுபொடியாக்கிவிட்டு” என்ற சொல் பொருத்தமே இல்லை! உடனே மாற்றவும்! அந்த இடத்தில் மென்மைப்படுத்தவும்! அதற்கான காரணம் புரியும் என்று நினைக்கிறேன்!
போரிலக்கியங்கள் படைக்கும் போது, வார்த்தைகள் முக்கியம் சார்!//
சார் ஒரு டவுட் சார்,
இவ் இடத்தில் நினைவுகளில் மண் அள்ளித் தூவி விட்டு என்ற ஒரு சொல்லை மாற்றினால் நன்றாக இருக்குமா சார்?
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
சகட்டு மேனிக்கு புலிகளை விமர்சிப்போர் இதனைக் கவனிக்கவும்!//
இது எனக்கும் சேர்த்துத் தானே சார்...
அவ்.........
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
தமிழனைக் கொல்வதற்கு, அடக்குமுறை இராணுவங்கள் கண்டுபிடித்த, மிகப்பெரிய நொண்டிச்சாட்டு!//
ஆமா சார்.
இது தான் உண்மையும் கூட.
இது முற்றிலும் உண்மை! புலிகள் இயக்கத்தில் சேருவது அவ்வளவு கஷ்டம் என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்! ( சில நெருக்கடியான சூழ்நிலைகள் தவிர்த்து!)//
சார், தமிழகத்தில் உள்ள உங்களுக்கு இது எப்படித் தெரியும் சார்?
ஈழத்திலிருந்து புலனாய்வு செய்வதற்கு நீங்க ஆளுங்களை வைச்சிருந்திருக்கிறீங்க போல இருக்கே.////
சார், நான் ஊடகத்தில் இருப்பவன்! ஆசிய நாடுகளில், மக்களுக்கு சொல்லப்படும் தகவல்களுக்கு, நேரெதிர் தகவல்களைக் கொண்டிருப்பவனே ஊடகவியலாளன்!
புரியும் என்று நினைக்கிறேன்!
08.03.1999 அன்றும் வழமை போலவே யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் இராணுவக் கட்டுப் பாட்டுப் பகுதிக்குள் தாக்குதல் நடத்துவதற்காகவும், புலனாய்வுத் தகவல் சேகரிப்பிற்காகவும் பதுங்கியிருந்த விடுதலைப் புலிகளின் அணியோடு ரகசியமான சந்திப்புக்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான் நிஷாந்தன். ////
ம்......!!
திடீரென யாரோ கொடுத்த தகவலைத் தொடர்ந்து, வேகமாக அவ் இடத்தைச் சுற்றி வளைத்த இராணுவத்தினர் மறைந்திருக்கும் புலிகள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினார்கள்.////
உறங்கிக்கொண்டிருக்கும் இராணுவத்தைத் தட்டியெழுப்பி, தகவல்கள் சொல்வதற்கும் ஆட்கள் இருப்பார்கள் போலும்! எதிரிகளைவிட ஆபத்தானவர்கள் காட்டிக்கொடுக்கும் துரோகிகள் என்பது எவ்வளவு பெரிய உண்மை சார்!
மணி சார்,
நீங்கள் சுட்டிய தவறுகளை மாற்றி விட்டேன் சார்,
//
"என் அப்பாவைப் போல இவங்கள் எத்தனை பேரைச் சுடுவாங்க(ள்)? இனிமேலும் என்னை மாதிரி துடிப்புள்ள இளைஞர்கள் பொறுத்துப் போகலாமோ?"//
//
தன் மகனாகிய நிஷாந்தன் தனக்கு ஆறுதலாக இறுதிக் காலம் வரை இருப்பான் எனும் வைராக்கியத்தில் வாழ்ந்த கனகம்மாவின் நினைப்பில் மண் தூவி விட்டு விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்டவன் தான் செந்தோழன்.//
இந்த மொழி மாற்றங்கள் இரண்டும் சரியா மணி சார்?
////இக் கதையின் நோக்கம், கனகம்மா போன்று பல தாய்மார் ஈழத்தில் வாழ்ந்தார்கள் என்பதனை ஆவணப்படுத்துவதேயன்றி, போராட்ட உணர்வுகளை மீண்டும் தூண்டும் நோக்கில் இக் கதை எழுதப்படவில்லை.///
மச்சி என்கிட்ட தப்பிச்சே.. ஹ...ஹ...
என்னடா இவனும் அனுபவிச்சிட்டு இப்பிடி எழுதுறனே என கொஞ்சம் கடுப்போட தான் வாசிச்சிட்டு வந்தேன்.
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
சார், நான் ஊடகத்தில் இருப்பவன்! ஆசிய நாடுகளில், மக்களுக்கு சொல்லப்படும் தகவல்களுக்கு, நேரெதிர் தகவல்களைக் கொண்டிருப்பவனே ஊடகவியலாளன்!
புரியும் என்று நினைக்கிறேன்!//
சும்மா ஒரு டெஸ்ட்டிங் வைச்சுப் பார்த்தேன் சார்...
அவ்...........
மணி சார்,
நீங்கள் சுட்டிய தவறுகளை மாற்றி விட்டேன் சார்,
//
"என் அப்பாவைப் போல இவங்கள் எத்தனை பேரைச் சுடுவாங்க(ள்)? இனிமேலும் என்னை மாதிரி துடிப்புள்ள இளைஞர்கள் பொறுத்துப் போகலாமோ?"//
//
தன் மகனாகிய நிஷாந்தன் தனக்கு ஆறுதலாக இறுதிக் காலம் வரை இருப்பான் எனும் வைராக்கியத்தில் வாழ்ந்த கனகம்மாவின் நினைப்பில் மண் தூவி விட்டு விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்டவன் தான் செந்தோழன்.//
இந்த மொழி மாற்றங்கள் இரண்டும் சரியா மணி சார்?///
ம்.... சரி நிரூபன் சார்! சுட்டிக்காட்டியமைக்கு மன்னிக்கவும்!
ஏனென்றால், தனதுமகன் போராடத்தான் புறப்பட்டான் என்பதை உணர்ந்த தாய், அதனை ஒரு ஏமாற்றமாக கருத மாட்டாள்! இந்த இடத்தில் நிஷாந்தன் தனது தாயை ஏமாற்றவும் இல்லை!
ஒருவேளை, அவன் எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு தூர இடத்துக்குச் சென்றிருந்தால், அங்கே தாயின் கனவு தவிடு பொடியானது என்பது சரியாக இருந்திருக்கும்!
இப்போதைய உங்கள் வரிகள் சரியே!
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
உறங்கிக்கொண்டிருக்கும் இராணுவத்தைத் தட்டியெழுப்பி, தகவல்கள் சொல்வதற்கும் ஆட்கள் இருப்பார்கள் போலும்! எதிரிகளைவிட ஆபத்தானவர்கள் காட்டிக்கொடுக்கும் துரோகிகள் என்பது எவ்வளவு பெரிய உண்மை சார்!//
இவர்களால் தானே தமிழன் கெட்டான் சார்...
@♔ம.தி.சுதா♔
மச்சி என்கிட்ட தப்பிச்சே.. ஹ...ஹ...
என்னடா இவனும் அனுபவிச்சிட்டு இப்பிடி எழுதுறனே என கொஞ்சம் கடுப்போட தான் வாசிச்சிட்டு வந்தேன்.//
அவ்....அவ்...
அட பின்னால நீங்கள் எல்லாம் பார்த்துக் கொண்டு தான் நிற்கிறீங்க போல இருக்கே...
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
ம்.... சரி நிரூபன் சார்! சுட்டிக்காட்டியமைக்கு மன்னிக்கவும்!
ஏனென்றால், தனதுமகன் போராடத்தான் புறப்பட்டான் என்பதை உணர்ந்த தாய், அதனை ஒரு ஏமாற்றமாக கருத மாட்டாள்! இந்த இடத்தில் நிஷாந்தன் தனது தாயை ஏமாற்றவும் இல்லை!
ஒருவேளை, அவன் எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு தூர இடத்துக்குச் சென்றிருந்தால், அங்கே தாயின் கனவு தவிடு பொடியானது என்பது சரியாக இருந்திருக்கும்!
இப்போதைய உங்கள் வரிகள் சரியே!//
இதுக்கெல்லாம் எதுக்கு சார் மன்னிப்பு...
தவறுகளைத் திருத்தி எழுதுவது தானே மனித இயல்பு..
மிக்க நன்றி சார்.
@நிரூபன்
சகட்டு மேனிக்கு புலிகளை விமர்சிப்போர் இதனைக் கவனிக்கவும்!//
இது எனக்கும் சேர்த்துத் தானே சார்...
அவ்.........///
நிச்சயமாக இல்லை! ஆனால் இதன் மூலமாக நீங்கள் யாரையோ கடிக்கிறீர்கள் என்று உணர்கிறேன்!
நீங்கள் புலிகளை விமர்சித்தபோது, விழுந்தடித்துக்கொண்டு வந்து சண்டை போட்டவர்கள், உங்களது இப்பதிவுக்கு தங்களது ஆதரவினைத் தரவில்லை என்றால், அவர்களுக்கு உண்மையில் விடுதலைப் போரில் விசுவாசம் உண்டா என்ற கேள்வி தவிர்க்கவியலாமல் எழுவது, தவிர்க்கமுடியாதது!
ஆனால் நிஷாந்தனோ, "என்னை நீங்கள் காப்பாற்ற வேண்டாம்.
உங்களாலை என்னைப் போராட்டத்தில் சேர்த்துக் கொள்ள முடியுமென்றால் மட்டும் என்னைக் தூக்கிக் கொண்டு போங்க. இல்லையென்றால் இங்கேயே விட்டு விட்டுச் செல்லுங்கள்" என்று சொல்லியது அங்கே இருந்தோருக்கு அதிர்ச்சியினை உருவாக்கியது.////
இப்படியெல்லாம் சொல்வார்களா? என்று சிலர் சந்தேகப்படலாம்! ஆனால் இது உண்மை!
நிலமை மோசமாவதை உணர்ந்த புலிகளின் ஊடுருவித் தாக்கும் அணித் தலைவர் புயலரசன், "ஓக்கே நீங்களும் இன்று முதல் எங்களோட தான் இருப்பீங்க" என வாக்குக் கொடுத்து நிஷாந்தனையும் போரட்டத்தில் இணைப்பதாக முடிவு செய்தார்கள் புலிகள்.///
ம்....
கையில் துளைத்த துப்பாக்கி ரவையின் காயத்திற்கு தமக்கு விசுவாசமான மருத்துவர் மூலம்....////
புலனாய்வுத்துறைப் போராளிகள் அல்லவா? அப்படித்தான் இருப்பார்கள்!
"அன்புள்ள அம்மா, நான் அண்ணன் நிழலில் இங்கே பத்திரமாக இருக்கிறேன்.
என்னைப் பற்றி நீ கவலைப் படாதே. என்னைக் காணவில்லை என்று மட்டும் நீ ஒரு மனுவினைப் போலீஸ் நிலையத்திலும், மனித உரிமைகள் திணைக்களத்திலும் கொடு. இல்லையேல் இராணுவத்தினர் வீட்டுச் சோதனைக்காக வரும் சமயத்தில் என்னை எங்கே எனக் கேட்டுத் தொல்லை செய்வார்கள். ஆதலால் உனதும், எங்கள் உறவினர்களின் நலன் கருதியும் இக் காரியத்தை உடனடியாகச் செய் அம்மா” எனத் தன் மடலினை முடித்திருந்தான் செந்தோழனாகிய நிஷாந்தன்.////
நட்டு நிலையினை நன்கு உணர்ந்தவன்!
ரத்தமும் கொதிக்குது, கண்ணுல கண்ணீரும் வருது என்னத்த செய்ய....
"அன்புள்ள அம்மா, நான் அண்ணன் நிழலில் இங்கே பத்திரமாக இருக்கிறேன்.
என்னைப் பற்றி நீ கவலைப் படாதே. என்னைக் காணவில்லை என்று மட்டும் நீ ஒரு மனுவினைப் போலீஸ் நிலையத்திலும், மனித உரிமைகள் திணைக்களத்திலும் கொடு. இல்லையேல் இராணுவத்தினர் வீட்டுச் சோதனைக்காக வரும் சமயத்தில் என்னை எங்கே எனக் கேட்டுத் தொல்லை செய்வார்கள். ஆதலால் உனதும், எங்கள் உறவினர்களின் நலன் கருதியும் இக் காரியத்தை உடனடியாகச் செய் அம்மா” எனத் தன் மடலினை முடித்திருந்தான் செந்தோழனாகிய நிஷாந்தன்.////
நட்டு நிலையினை நன்கு உணர்ந்தவன்!///
மன்னிக்கவும், நாட்டு நிலையினை...
மளுப்பல் பதில் சொல்லிச் சமாளித்து வந்தா கனகம்மா.////
மழுப்பல் என்பதே சரி! மழுங்குதல் என்ற சொல்லின் பண்புத்தொகைதான் மழுப்பல்!
என் மகன் போராட்டத்தில் இணைந்து விட்டான் என்பதனை இந்தச் சிறு வாண்டுகளிடம் எப்படிச் சொல்ல முடியும்? அவர்களுக்கு எப்படிப் புரிய வைக்க முடியும்? ஒரு வேளை வாய் தவறி ஆமிக்காரங்க(ள்) வீடு செக் பண்ண வரும் சமயத்தில்(டைம்மில) இந்தச் சுட்டிகள் ரெண்டும் வாய் தவறி உளறி விட்டால் "////
சோதனைச் சாவடிகளைக் கடக்கும் சமயத்தில், இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் குழந்தைகளுக்கு சாக்லெட் கொடுத்துவிட்டு, “ உங்க வீட்டுக்கு இயக்க மாமாக்கள் வருவார்களா? “ என்று அன்பாக விசாரிப்பார்களாம்!
உண்மையா சார்?
சுருக்கமாகச் சொன்னால், உண்மையான பதிவு!
@MANO நாஞ்சில் மனோ
ரத்தமும் கொதிக்குது, கண்ணுல கண்ணீரும் வருது என்னத்த செய்ய....//
என்ன செய்ய...
இவை எல்லாவற்றையும் கடந்து வந்தது தான் இன்றைய தமிழனின் வாழ்வு அண்ணா.
பிற் சேர்க்கை: இக் கதையின் நோக்கம், கனகம்மா போன்று பல தாய்மார் ஈழத்தில் வாழ்ந்தார்கள் என்பதனை ஆவணப்படுத்துவதேயன்றி, போராட்ட உணர்வுகளை மீண்டும் தூண்டும் நோக்கில் இக் கதை எழுதப்படவில்லை. ////
எனக்கு இது பிடிக்கவில்லை! ஏன் என்று கேட்டால் விளக்கம் சொல்லக் காத்திருக்கிறேன்!
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
மளுப்பல் பதில் சொல்லிச் சமாளித்து வந்தா கனகம்மா.////
மழுப்பல் என்பதே சரி! மழுங்குதல் என்ற சொல்லின் பண்புத்தொகைதான் மழுப்பல்!//
ஆமா சார்.
இப்போதே இந்தத் தவறினையும் மாற்றி விடுகிறேன்.
தங்களின் மேலான விமர்சனத்திற்கு நன்றி சார்.
திரு.பாலா அவர்களது நெஞ்சுறுதியை மெச்சுகிறேன்!
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
சோதனைச் சாவடிகளைக் கடக்கும் சமயத்தில், இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் குழந்தைகளுக்கு சாக்லெட் கொடுத்துவிட்டு, “ உங்க வீட்டுக்கு இயக்க மாமாக்கள் வருவார்களா? “ என்று அன்பாக விசாரிப்பார்களாம்!
உண்மையா சார்?//
ஆமா சார்....இப்படி ஏதாச்சும் பண்ணி கறக்கலாம் என்பது தானே அவர்களின் ஐடியா.
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
பிற் சேர்க்கை: இக் கதையின் நோக்கம், கனகம்மா போன்று பல தாய்மார் ஈழத்தில் வாழ்ந்தார்கள் என்பதனை ஆவணப்படுத்துவதேயன்றி, போராட்ட உணர்வுகளை மீண்டும் தூண்டும் நோக்கில் இக் கதை எழுதப்படவில்லை. ////
எனக்கு இது பிடிக்கவில்லை! ஏன் என்று கேட்டால் விளக்கம் சொல்லக் காத்திருக்கிறேன்!//
ரசனை என்பது ஒவ்வொருவரின் உணர்விற்கும் ஏற்றாற் போல மாறுபடும் தானே..
அந்த வகையில் சார்...
என்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும், எனும் நோக்கில் தான் இப்படி எழுதினேன்.
புரிந்து கொள்வீங்க என்று நினைக்கிறேன் சார்.
இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்து எழுதும் போது எல்லாவற்றையும்............
பண்ணி எழுதுவது போன்று காட்ட முடியாது தானே சார்?

பண்ணி எழுதுவது போன்று காட்ட முடியாது தானே சார்?:////
உங்கள் நிலைமை எனக்கு நன்கு புரியும் சார்! திரு.மதி சுதா அவர்களது நிலைமையும் அதுவே!
இலங்கைத் தீவில் மீண்டும் ஆயுதப் போராட்டம் தோன்றவேண்டும் என்று நான் எதிர்பார்கவும் இல்லை ஆசைப்படவும் இல்லை!
ஆனால் மக்களுக்குள், ஆயுதப் போராட்டம் தவிர்ந்த இதர போராட்ட உணர்வுகள் இருப்பது அவசியமானது!
காணிகள் அபகரிக்கப்படும் போது, கிறீஸ் பேய் வரும்போது என்று பல சந்தர்ப்பங்களில் மக்கள் தமது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவதற்கு, ஒருவகை போராட்ட உணர்வு அவசியமே!
ஆயுதம் தூக்குவது மட்டுமே போராட்டம் அல்ல! உங்களின் இப்பதிவு, போராட்ட உணர்வைத் தூண்டிவிடும் என்று கணக்குப் போட்டு, உங்களுக்கு ஒரு நெருக்கடியினை இலங்கை இராணுவம் ஏற்படுத்த நினைத்தால்,
முதலில்,
ஆக்சன் படங்கள்,
மஹாபாரதம்,
கம்பராமாயானம்,
திருமுருகாற்றுப்படை,
புறநானூறு,
முக்கியமாக கந்த புராணம்,
தாவீது - கோலியாத் கதை,
பண்டார வன்னியன் கதை,
இவற்றையெல்லாம் படிக்கக் கூடாது என்று தமிழர்களுக்குச் சட்டம் போட வேண்டும்!
இவை எல்லாமே போரினை வழிமொழியும் இலக்கியங்கள் தான்!
ஆக, தமிழனின் போராட்ட உணர்வினை மழுங்கடிக்க வேண்டுமானால், அது ஒருபோதுமே அரசினால் முடியாது!
ஏனென்றால் போராட்ட குணம் என்பது தமிழனின் இரத்தத்தில் ஊறியுள்ளது!
வேணாம் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்! கண்டதையும் சொல்லி உங்களுக்கு வில்லங்கத்தைத் தேடித்தர விரும்பவில்லை!
ஏற்கனவே இரண்டு குடும்ப உறுப்பினர்களைப் போராட்டத்திற்காக காணிக்கையாக்கிய கனகம்மா- பொன்னையா குடும்பத்திலிருந்து மேலும் ஒருவனைப் போராட்டத்திற்குச் சேர்த்துக் கொள்ளுவது அழகில்லை என்று நிஷாந்தனைப் புறக்கணித்து வந்தார்கள் புலிகள்.//
இந்த மாற்றம் பின் மாறியதன் விளைவுகள் எத்தனை தூயரங்கள் வெறுப்பின் உச்சி எனலாம்!
தம்பி (பிரபாகரன்) சொன்ன மாதிரி ‘விதையாகும் ஒவ்வொருவரும் மறு நாள் விருட்சமாக முளைக்கிறார்கள்' என்பது தானே உண்மை. // இதை நம்பிப் போனது யாரால் இரானுவத்தின் அட்டூளியம் தானே காரணம் சகோ!
வணக்கம் நிரூபன் ஒரே குடும்பத்தை சேர்தவர்கள் மாவீரர்களாவது மனசை பிசையும் விடயமே.. அண்மையில் பிரான்சின் வடபகுதியில் இருக்கும் நோர்மொண்டிக்கு சென்றேன் அங்கு இரண்டாம் உலகயுத்தத்தில் வெவ்வேறு இடத்தில் இறந்த முன்னால் அமெரிக்க ஜனாதிபதியின் இரண்டு பிள்ளைகளின் கல்லறையை பார்த்தபோது.. ஈழத்தின் மாவீரர் துயிலுமில்லங்கள்தான் ஞாபகத்திற்கு வந்தன.. இப்படி எத்தனை கனகம்மாக்கள் நடை பிணமாய் ஈழத்தில்..?????
புறநானூற்றுத் தாயின் ஞாபகம் வருகிறது நிரூ.
மொத்தக் குடும்பத்தையும் விடுதலைப் போராட்டத்திற்காக அர்ப்பணித்த, அந்த நல்ல உள்ளங்களுக்கு நாம் செய்யப் போகும் கைம்மாறு என்ன?
ஏன் ஆச்சி ஒரு மாதிரி இருக்கிறீங்க? எனும் சிறு வாண்டுகளின் கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாமல் கண்களில் நீர் முட்டியவாறு, அழக் கூடத் திராணியற்று மனமெனும் இரும்புக் கோட்டையினுள் தன் கவலையினைப் பதுக்கி வைக்க முடிவு செய்த கனகம்மாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியல்லை.//இப்படி நம்மில் எத்தனை தாய் தந்தையர் என்ன செய்வது தமிழர் தூயரம் விதியா! இவர்களின் வேதனைக்கு மருந்து என்ன? விடைகள் அற்ற பதில்கள் தானே கையில்!
ஐடியா மணி சொன்னது போல், போராட்ட உணர்வே கூடாது என்று டிஸ்கி சொல்வது தவறு..
கூடல் பாலாவின் நெஞ்சுறுதி பாராட்டத்தக்கது. தர்மம் வெல்லும் என்று நம்புவோம்.
பிற் சேர்க்கை: இக் கதையின் நோக்கம், கனகம்மா போன்று பல தாய்மார் ஈழத்தில் வாழ்ந்தார்கள் என்பதனை ஆவணப்படுத்துவதேயன்றி, போராட்ட உணர்வுகளை மீண்டும் தூண்டும் நோக்கில் இக் கதை எழுதப்படவில்லை. ////
எனக்கு இது பிடிக்கவில்லை! ஏன் என்று கேட்டால் விளக்கம் சொல்லக் காத்திருக்கிறேன்!//
ரசனை என்பது ஒவ்வொருவரின் உணர்விற்கும் ஏற்றாற் போல மாறுபடும் தானே..
அந்த வகையில் சார்...
என்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும், எனும் நோக்கில் தான் இப்படி எழுதினேன்.
புரிந்து கொள்வீங்க என்று நினைக்கிறேன் சார்.
இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்து எழுதும் போது எல்லாவற்றையும்............
பண்ணி எழுதுவது போன்று காட்ட முடியாது தானே சார்?:////
உங்கள் நிலைமை எனக்கு நன்கு புரியும் சார்! திரு.மதி சுதா அவர்களது நிலைமையும் அதுவே!
இலங்கைத் தீவில் மீண்டும் ஆயுதப் போராட்டம் தோன்றவேண்டும் என்று நான் எதிர்பார்கவும் இல்லை ஆசைப்படவும் இல்லை!
ஆனால் மக்களுக்குள், ஆயுதப் போராட்டம் தவிர்ந்த இதர போராட்ட உணர்வுகள் இருப்பது அவசியமானது!
காணிகள் அபகரிக்கப்படும் போது, கிறீஸ் பேய் வரும்போது என்று பல சந்தர்ப்பங்களில் மக்கள் தமது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவதற்கு, ஒருவகை போராட்ட உணர்வு அவசியமே!
ஆயுதம் தூக்குவது மட்டுமே போராட்டம் அல்ல! உங்களின் இப்பதிவு, போராட்ட உணர்வைத் தூண்டிவிடும் என்று கணக்குப் போட்டு, உங்களுக்கு ஒரு நெருக்கடியினை இலங்கை இராணுவம் ஏற்படுத்த நினைத்தால்,
முதலில்,
ஆக்சன் படங்கள்,
மஹாபாரதம்,
கம்பராமாயானம்,
திருமுருகாற்றுப்படை,
புறநானூறு,
முக்கியமாக கந்த புராணம்,
தாவீது - கோலியாத் கதை,
பண்டார வன்னியன் கதை,
இவற்றையெல்லாம் படிக்கக் கூடாது என்று தமிழர்களுக்குச் சட்டம் போட வேண்டும்!
இவை எல்லாமே போரினை வழிமொழியும் இலக்கியங்கள் தான்!
ஆக, தமிழனின் போராட்ட உணர்வினை மழுங்கடிக்க வேண்டுமானால், அது ஒருபோதுமே அரசினால் முடியாது!
ஏனென்றால் போராட்ட குணம் என்பது தமிழனின் இரத்தத்தில் ஊறியுள்ளது!
வேணாம் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்! கண்டதையும் சொல்லி உங்களுக்கு வில்லங்கத்தைத் தேடித்தர விரும்பவில்லை!
// நானும் ஐடியாமணியின் கூற்றை வழிமொழிகின்றேன்! தூரங்களை மறக்கனும் என்று தான் இங்கு கூறமுடியும்!
இப்பதிவிற்கு இன்னும் சில பின்னூட்டங்கள் போட விருப்பம்தான் உங்களை சிக்கலில் மாட்டிவிட விரும்பவில்லை.. இத்துடன் முடித்துக்கொள்கிறேன்..
காட்டான் குழ போட்டான்..
பெரிசா ஒண்டும் எழுத விரும்ப வில்லை.......
வாசித்தேன்........
போராளிகளில் உன்மை நிலவரம் இதனினும் பரிதாப நிலையிலையே உள்ளது. . . நனறி சகா. . .
நல்ல ஒரு படைப்பு
கனகம்மாள் போல் எம்மில் இன்னும் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்.....
மனசி தவிக்க வைக்கும் படைப்பு
கதைபோல எழுதியிருந்தாலும், பலபேரின் வாழ்வில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்கள்தானே. இப்படி எத்தனை எத்தனை சம்பவங்கள்.
கனகம்மா போன்ற தாய்மார் இன்னும் எத்தனை பேர் ஈழத்தில் . நெஞ்சை நெகிழ வைக்கிறது . வசித்து முடிந்ததும் சில நிமிட அமைதி.....
கூடல்பாலாவுக்கு வாழ்த்துக்கள்
மனது கசங்குகிறது
ஒரே குடும்பத்தில்
அத்தனை பெரும்
அப்பப்பா
உங்கள் பதிவின் மூலம்
தெரியாத
நிறைய செய்திகளை
தெரிந்து கொண்டேன் சகோ........
அன்புநிறை அண்ணாச்சி கூடல்பாலாவின்
தார்மீக போராட்டத்திற்கு வெற்றிக்கனி
பிறக்கட்டும்.
இப்படியான பதிவுகளை எழுத உங்களால் மட்டும் எப்படி முடியுது
நல்ல விஷயம் பகிர்ந்துள்ளீர்கள் நண்பரே
all votte are done
"உங்கட மகன் நிஷாந்தன்...சாவகச்சேரியில இடம் பெற்ற வழி மறிப்புத் தாக்குதலில் ரெண்டு கிழமைக்கு முன்னாடி(2வாரத்திற்கு முன்னாடி) வீரச்சாவடைந்திட்டார். அவரின் வித்துடலை வன்னிக்குக் கொண்டு போய், விசுவமடு துயிலும் இல்லத்தில நாங்கள் விதைச்சிருக்கிறோம்.
வாழ்க்கை என்றால் இன்பம் துன்பம் வருவது இயல்பு தானே அம்மா. யோசிக்காம(ல்) இருங்கோ. நாங்கள் இங்கே கன (அதிக) நேரம் நிற்க முடியாது//
அம்மாவின் நிலையிலும்...நிசாந்தன் என்கிற செந்தமிழன் செந்தோழன் நினைந்து பெருமைப்பட்டாலும் கண்ணீர் தானாக வழிய தொடங்கியது.... எத்தனை உயிர்கள் இது போன்று.... மனம் வேதனை அடைகிறது... போராளிகள் ஜெயிக்கட்டும்....
களம் சென்று வந்திடடா கண்ணே என் உளம் வெந்து போவதற்கு முன்னே... என்ற உரம்படைத்த நல் உள்ளம் கோண்ட வீர தமிழச்சி எங்கள் கனகம்மா,...
நண்பர் பாலாவின் போராட்டம் வெற்றி பெறட்டும் நம் ஆதரவினை எப்பொழுதும் கொடுத்துக்கொண்டிருப்போம்... நண்பர் நிரூபனுக்கு பாலாவின் தளத்தை தங்கள் தளத்தில் அறிமுகபடுத்தியமைக்கு நன்றி
பயிற்ச்சி முகாமுக்கே கூட்டிசென்று விட்டீர்கள்...சகோதரா... எண்பதுகளில் தூத்துக்குடியில் முகாம்களில் சிறுவனாய் நான் கண்ட சில காட்சிகளை நினைவுபடுத்துகிறது...
தாய் கனகம்மா வாழ்வை பதிவு செய்தது அருமை...
மற்றுமொரு timely அறிமுகம் ..கூடல்பாலா...
கனகம்மா கதையைப் போல நிறைய அந்த நாட்கள் முதல் படித்து படித்து என் கண்ணீர் வற்றிவிட்டது நிருபன்.ஈழத்திற்காக நான் எற்படுத்திக்கொண்ட இன்னல்கள் ஏராளம்.இப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாகி வருகின்றேன். எனினும் உங்கள் பதிவிற்கு நன்றி. மேலும் என்னை மற்ற பதிவர்களுக்கு அறிமுகம் செய்துள்ள்மைக்கும் நன்றி.வணக்கம்.
உள்ளத்தை உலுக்கும் பிதிவு
சகோ!
புலவர் சா இராமாநுசம்
உங்கள் எழுத்து காட்சிகளை கண்முன்னே கொண்டுவருகிறது..
தியாகங்களும் இலட்சியம் நோக்கிய ஒருமித்த பயணிப்புகளும் தோற்பதில்லை.
மிகவும் ரகசியமான கதை எல்லோருக்கும் வெளியில் தெரிவது இல்லை
இப்படி நிறைய தாய்மார்கள்
நிறைய நண்பர்கள் கண்முன் வந்து போகிறார்கள்
அன்பின் நிரூபன்,
ஈழம் எனும் சொல்லை கேட்கும் போதெல்லாம் கண்கள் குளமாகி துக்கம் தொண்டையை அடைப்பதை தவிர்க்க முடிவதில்லை. உங்களின் இந்த பதிவை படித்ததும் மனம் புலிகளில்லா ஈழத்தின் கோரத்தை நினைத்து அழுகிறது. என்றேனும் அடைவோம் நம் இலக்கை என்ற நம்பிக்கையோடு,
சதீஷ் முருகன்
Post a Comment