முதற் பாகத்தின் தொடர்ச்சியாக...மாமா வீட்டின் மேற் புறக் கூரையினுள் பதுங்கி, மறைந்திருப்பதற்காக ஓடிப் போய் ஏறத் தொடங்குகிறார். அவரை வைத்த கண் வாங்காது பார்த்த படி நான்.................................எனும் வகையில் முதற் பாகம் நிறை வடைந்திருந்தது. இத் தொடரின் முதற் பாகத்தினைப் படிக்காது தவற விட்டவர்கள், இங்கே கிளிக் பண்ணிப் படிக்கலாம்.
மாமா, ஏன் ஏறினார், எதற்கு ஏறினார் என்பது அறியாதவனாய், அவரது செய்கைகளை வைத்த கண் வாங்காமற் பார்த்துக் கொண்டு நின்றேன். மாமாவினைப் பின் தொடர்ந்து பூட்ஸ் கால்கள் பட படக்க, குதிரைக் குழம்பின் ஓசையினைப் போல நிலம் எல்லாம் தடதடக்க பச்சை நிறம் என்றால் பசுமையிற்கான குறியீடல்ல, பகைமையிற்கான பொருள் விளக்கம் என்பதற்கான அறை கூவலுடன் அவர்கள் வந்தார்கள்.
என்னையும், என் செய்கைகளையும் உய்த்தறிந்தவர்கள்(ஊகித்து அறிந்தவர்கள்) போல அம்மாவும், அம்மம்மாவும் ஓடோடி வந்து என்னைத் தூக்கிக் கொண்டு போனார்கள்.
வந்தவர்கள் வீட்டின் கூரையிற்கு கீழ் இருக்கும் லெவல் சீற்றினை எட்டிப் பார்க்கவே இல்லை.. சுற்றும் முற்றும் தேடி விட்டு "அடோய் யாராச்சும் இங்க வந்தது" எனும் அதட்டல் கலந்த அதிகாரத் தொனி நிறைந்த கேள்வியினைக் கேட்டு விட்டுச் சென்று விட்டார்கள். அப்போதைய கால கட்டத்தில் சிறிய வேள்விக்கான தாயார்படுத்தல்களில் எம்மவர்கள் ஈடுபடத் தொடங்கியிருந்தார்கள். இப்படித் தான் அக் காலத்தில் எங்களிற் பல மாமாக்களின் இறந்த காலங்கள் இருந்தன.
இனியும் கீழ்ப் படிந்து வாழ்தல் தகாது என்பதனை உணர்ந்தவர்களாய், இனிமேல் கை கட்டி வாழ்வதிலும் பார்க்க, காயமுற்று வீர மறவராய் வீழ்தல் மெலென எண்ணம் கொண்டார்கள்.
நெஞ்சம் எங்கும் விடுதலைத் தீ கொண்ட புரட்சியின் புதிய தளகர்த்தர்கள் பிறப்பெடுத்தார்கள். ஒரு சில ஊர்களை மையங் கொண்டு உருவான விடுதலைப் புயல்கள்; ஈழத்தின் வட புலமான யாழ்ப்பாண மாவட்டத்தில் மையங் கொண்டிருந்த நேரத்தில்,
வன்னி மண் தங்களை அரவணைக்கும், தமக்கான பாதுகாப்பை வழங்கும் என புவியியல் ரீதியில் உணர்ந்தவர்களாய் நகரத் தொடங்கினார்கள். இறுதியில் தம் இறக்கைகளை எங்கள் ஊர் நோக்கியும் பறக்க விட்டார்கள்.
வீரத்தில் பண்டாரவன்னியனின் பரம்பரை எனும் அளவிற்கு மார் தட்டும் வல்லமை வன்னி மண்ணில் உள்ள மக்களிடம் இருந்தது. ஆனாலும் அன்றும் சரி, பின் நாளிலும் சரி காக்கை வன்னியர்கள்(காட்டிக் கொடுப்பிற்கு பெயர் போனவர்கள்) பலர், சிவ பூசையினுள் புகும் கரடி போல, புற்றினுள் இருந்து திடீரெனச் சீறும் நச்சுப் பாம்புகளாய்ப் புகுந்து விளையாடத் தொடங்கினார்கள்.
இவை எல்லாவற்றையும் கண்களால் தரிசிக்கும் வல்லமையை எங்கள் புதூர் நாகதம்பிரான் பெற்றிருந்தாள். குழந்தைகளே, நீங்கள் என்னிடத்தில் வாருங்கள், உங்களை நான் குளிர்விக்கிறேன் என வவுனிக் குளமும், கொத்தம்பியா குளமும் அவர்களைப் பார்த்து வரவேற்பளித்துக் கொண்டிருந்தது.
வாழ்தலுக்கான அடையாளங்களையும், இருத்தலுக்கான அடிப்படை வசதிகளையும் நாம் இழக்கத் தொடங்குகையில் தான் பல மாற்றங்களுக்கான, புரட்சிகளுக்கான புரிதல்களை அடையத் தொடங்குகிறோம்.
இன்றும்-இன்றும் நினைக்கையில் கண் முன்னே இவை எல்லாம் காட்சிகளாய் விரியத் தொடங்கும். கண்ணில் ஒற்றிக் கொண்டாடி மகிழ்ந்து, கைகள் நிரம்ப மலர் அள்ளித் தூவினாலும், ஒரு காலத்தில் நாம் நிமிர்ந்ததற்கான கடனை அவர்களிடத்தே அடைக்க முடியாது.
கைகளால் மலர் தூவி, மௌனமாய் செலவழிக்கும் நொடிகள் அவர்களின் கால் தூசிற்கும் ஈடாகாது. எல்லாவற்றையும் கற்பனையில் மட்டும் கண்டுணர்ந்து கொள்ளும் சொப்பனத்தைத் தந்து விட்டுப் போய் விட்டார்களே!
தலை முறை தலை முறையாக மேய்ப்பாரற்றுக் கிடந்த ஆடுகளை; தலை சாய்த்து வெள்ள நீரின் கீழ் அமிழ்ந்து போய் விடும் நிலையிலிருந்த நாணற் புற்களை நிமிர்த்திய பெருமைக்குரிய கரங்கள் அவை. எங்களூர் இவர்களையும் தன்னருகே அணைத்துக் கொண்டது. தன் செம் புழுதித் தரையில் தேவர்கள் நடந்து வருவதாய் பெருமிதம் கொண்டிருந்தது.
மாலை ஆகும் வேளையில் சூரியன் தன் முளு உருவையும் சுருக்கி கொத்தம்பியா குளத்தினுள் நீராடி மகிழ்வான், யானைகள் வரிசையாக வந்து....ப்.....பீ............என ஒலி எழுப்பி நீர் அருந்தி மகிழும். யானைகளுக்கும் எமக்கும் ஓர் ஒற்றுமை இருப்பதாய் ஒரு சிறிய உணர்வு. நீர் அருந்தும் யானைகளைச் சீண்டினால் சங்காரம் நிஜம் என்பது போலத் தான் அக் காலத்தில் தமிழர்களின் வாழ்வும் இருந்தது.
சும்மா இருந்த சங்கினை ஊதி, ஊரின் நிசப்தத்தைக் கிழித்தது போன்ற உணர்வினைத் தான், நிராயுத பாணிகளாய் அஹிம்சையில் இருந்த தமிழர்கள் மீது பூட்ஸ் கால்கள் தம் புஜ பலத்தைக் காட்டப் போய் எதிர் வினையாகப் பெற்றுக் கொண்டார்கள்.
கழிப்பறைகளை நம்பி எங்கள் வாழ்க்கைகள் அக் காலத்தில் இருக்கவில்லை. வீட்டிற்கு ஒரு கழிப்பறை இருந்தாலும், காலையில் எழுந்து; அதுவும் பனிக் காலத்தில் கொட்டாவி விட்டபடி போத்தலுடன் பனங் காணிக்குள் போய் குந்தி இருப்பதிலும் எங்களுக்கு ஒரு அலாதிச் சுகம் இருந்தது. யானைகளின் படையெடுப்பையும் பொருட்படுத்தாது, ஓடி ஓடி விளாம்பழம் பொறுக்கிய நினைவுகள் இன்றும் கண் முன்னே நிழலாடுகின்றன.
பாலப்பழம் ஒரு சீசனுக்கு வந்து வாயெல்லாம் ஸ்ரிக்கர் போல ஒட்டி விட்டுச் சென்று விடும், இராசாத்தி அக்காவுடன் ஓடிப் போய் பாலப் பழம் ஆய்ந்து(பிடுங்கி) சட்டையினை (சேர்ட்டினை) பையாக்கித் தூக்கிப் பிடித்து ஏந்தி வரும் சுகமே ஒரு அலாதிச் சுகமாக இருக்கும். இராசாத்தி அக்காவும் என்னுடைய மாமாவும் ஒரு காலத்தில் எங்களூரின் கலர்ப் பட நாயகர்களாய் எம் கண்களுக்குத் தெரியத் தொடங்கினார்கள். இராசாத்தி அக்கா தானுண்டு, தன் வேலையுண்டு எனும் போக்கில் குழந்தைத் தனமாக இருப்பா. ஆனாலும் இராசாத்தி அக்காவும், மாமாவும் எங்களையெல்லாம் ஒளிச்சுப், பிடிச்சு விளையாடுங்கோ என்று சொல்லி விட்டு, ஏதேதோ பேசிக் கொண்டிருப்பார்கள்.
இந் நிகழ்வுகள் எல்லாம் எங்களுக்குள்; அப்போது ஒரு இனம் புரியாத காட்சிகளாய், தென்றலில் தேவதைகள் வந்து திரைப் பாடல் இசைக்கும் போது, நாங்கள் தந்தனாப் பாடி இரசிப்பதாக தோன்றின. அன்று மாலை, எங்கள் வீட்டில் உள்ள ஐயனாருக்கு மடை பரவுவதற்காய்(படையல் வைப்பதற்காய்) எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்தோம்.அப்போது மாமா, மீண்டும் ஓடோடி வருகிறார். இராசாத்தியைக் காணேல்லையாம்...........என பதை பதைத்தபடி வார்த்தைகள் எச்சிலோடு மல்லுக் கட்டி, வெளியே வர முடியாத நிலையில் இருக்கும் மனிதனைப் போல உணர்வற்றவராகி நடுக்கத்துடன் சொல்லத் தொடங்குகிறார். _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
எச்சங்கள் நினைவுகளாய் விரியும்.............
பிற் சேர்க்கை: இது சிறுகதையோ அல்லது கதையோ அல்ல. கிராமத்து மணங் கமழ எழுதப்படும் ஈழத்தின் வலி சுமந்த வலாற்றினைத் தாங்கி வரும் ஒரு உரை நடைத் தொகுப்பு.
*******************************************************************************************************************************
தொழில் நுட்பம் என்பது மொழி போல ஒரு பெருங் கடலாக இன்றைய கால கட்டத்தில் விளங்குகிறது. இந்தத் தொழில் நுட்பப் பெருங்கடலில் விரவிக் கிடக்கும் தகவல்களைத் தேடி எடுத்து; வாசகர்கள் மனதினை நாடி பிடித்துப் பார்த்து அதற்கேற்றாற் போல பல தரப்பட்ட வித்தியாசமான தகவல்களை வழங்கும் வலைப் பதிவர்கள் தான் இன்று வெற்றிக் கொடி கட்டிப் பறக்கும் தொழில் நுட்பப் பதிவர்களாக விளங்குகின்றார்கள்.
மேற்படி சிறப்புக்களைக் கொண்ட தொழில் நுட்பப் பதிவர்கள் வரிசையில் அதிசயிக்கத்தக்க பல தொழில் நுட்பத் தகவல்களைப் பகிர்ந்து வருபவர் தான் "சின்னவன்" எனும் வலைப் பதிவின் சொந்தக்காரன் சகோதரன் " MAHAN THAMESH".
MAHAN THAMESH அவர்களின் வலைப் பூவிற்குச் விஜயம் செய்திட:
http://mahaa-mahan.blogspot.com/
********************************************************************************************************************************
முக்கிய குறிப்பு: இன்ட்லி ஓட்டுப் பட்டையில் ஓட்டுப் போட முடியவில்லையே எனும் உறவுகளின் வேண்டு கோளுக்கமைவாக, இன்ட்லியில் ஓட்டுப் போடுவதற்கான இணைப்பினை இங்கே பகிர்ந்துள்ளேன். இன்ட்லியில் ஓட்டளிக்க:
|
52 Comments:
வடையும் நமக்க
நன்றி சகோ எனது தளத்தினை தங்கள் தளத்தில் அறிமுகம் செய்ததற்கு
சகோ கலையில மீண்டும் வருகிறேன் .
உங்கள் மனதில் விரிந்த நினைவுகளில்
நானும் லயித்திருந்தேன்.
அறிமுகப் பதிவருக்கு வாழ்த்துக்கள்.
ஈழத்தின் நினைவு/வலி சுமந்து வரும் இந்த படைப்பு தொடருங்கள் நண்பரே...
பதிவர் தமேஷுக்கு வாழ்த்துக்கள்...
கிராமத்து மனம் தவழ்கிறது .எங்கள் நினைவுகளையும் மீட்டிப் பார்க்கும் படி உள்ளது அண்ணா
கண் முன்னே காட்சிகள் வந்து போகச் செய்கின்றன உங்கள் நினைவலைகள்! தொடருங்கள்...!
திரைப் படம் பார்ப்பது போன்றதொரு உணர்வு ...தொடரட்டும் ....
வலிமிக்க தொடர் நிகழ்வுகளை கண் முன்னே நிறுத்துகிறது தங்களின் பதிவு...
மனதை நெகிழச்செய்கிறது பதிவு..
அஹா என்ன ஒரு சுகம் ஊர் கதை வாசிக்கும் போது
//
கிராமத்து மணங் கமழ எழுதப்படும் ஈழத்தின் வலி சுமந்த வலாற்றினைத் தாங்கி வரும் ஒரு உரை நடைத் தொகுப்பு.
//
உங்கள் எழுத்தில் அது தெரிகிறது
வலி மிகுந்த தொடர்
மனசுக்கு கனமான தொடர் சகோ... தொடருங்கள்
நடத்துங்க நிரூபன்.. துணைக்கு நாங்க இருக்கோம்
மனதை நெகிழவைத்த பதிவு .
நன்றி சகோ உங்கள் பகிர்வுக்கு .இன்று
முடிந்தால் என் தளத்திற்கு ஒருமுறை
வருகைதாருங்கள் .இது ஓர் அன்பான
வேண்டுகோள் .
மனசிற்கு வலி தரும் நினைவலைகள்....பகிருங்கள் எங்களோடு......!!!
இராசாத்தி அக்கா தானுண்டு, தன் வேலையுண்டு எனும் போக்கில் குழந்தைத் தனமாக இருப்பா. ஆனாலும் இராசாத்தி அக்காவும், மாமாவும் எங்களையெல்லாம் ஒளிச்சுப், பிடிச்சு விளையாடுங்கோ என்று சொல்லி விட்டு, ஏதேதோ பேசிக் கொண்டிருப்பார்கள்.//
ஆஹா அருமையான காதல் காவியம்......!
இன்று அறிமுகமாகி இருக்கும் நண்பருக்கு என் வாழ்த்துக்கள்.
ஈழத்தின் பல நினைவுகளை
படிப்பவர்களையும் இழுத்து செல்கிறது
பதிவு....... மனசுக்கு புடித்த பதிவு
///வீரத்தில் பண்டாரவன்னியனின் பரம்பரை எனும் அளவிற்கு மார் தட்டும் வல்லமை வன்னி மண்ணில் உள்ள மக்களிடம் இருந்தது. ஆனாலும் அன்றும் சரி, பின் நாளிலும் சரி காக்கை வன்னியர்கள்(காட்டிக் கொடுப்பிற்கு பெயர் போனவர்கள்) பலர், சிவ பூசையினுள் புகும் கரடி போல, புற்றினுள் இருந்து திடீரெனச் சீறும் நச்சுப் பாம்புகளாய்ப் புகுந்து விளையாடத் தொடங்கினார்கள்////
சத்தியமான்ன வார்த்தை...
இன்றைய எங்களின் இந்த அவல நிலைக்கு இவர்களும் ஒரு காரணமே........ :((
//பாலப்பழம் ஒரு சீசனுக்கு வந்து வாயெல்லாம் ஸ்ரிக்கர் போல ஒட்டி விட்டுச் சென்று விடும், இராசாத்தி அக்காவுடன் ஓடிப் போய் பாலப் பழம் ஆய்ந்து(பிடுங்கி) சட்டையினை (சேர்ட்டினை) பையாக்கித் தூக்கிப் பிடித்து ஏந்தி வரும் சுகமே ஒரு அலாதிச் சுகமாக இருக்கு//
பழ மணம் மட்டும் அல்ல ஊர் மணமும் தூக்கலாய் வருகிறது......
//வன்னி மண் தங்களை அரவணைக்கும், தமக்கான பாதுகாப்பை வழங்கும் என புவியியல் ரீதியில் உணர்ந்தவர்களாய் நகரத் தொடங்கினார்கள். இறுதியில் தம் இறக்கைகளை எங்கள் ஊர் நோக்கியும் பறக்க விட்டார்கள்.//
ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகர்வுகளை எளிமையாக விளக்குகிறது இந்த வரிகள்..
// ஆனாலும் அன்றும் சரி, பின் நாளிலும் சரி காக்கை வன்னியர்கள்(காட்டிக் கொடுப்பிற்கு பெயர் போனவர்கள்) பலர், சிவ பூசையினுள் புகும் கரடி போல, புற்றினுள் இருந்து திடீரெனச் சீறும் நச்சுப் பாம்புகளாய்ப் புகுந்து விளையாடத் தொடங்கினார்கள்.//
இது நம் இனம் பெற்று வந்த சாபம்!
// வாழ்தலுக்கான அடையாளங்களையும், இருத்தலுக்கான அடிப்படை வசதிகளையும் நாம் இழக்கத் தொடங்குகையில் தான் பல மாற்றங்களுக்கான, புரட்சிகளுக்கான புரிதல்களை அடையத் தொடங்குகிறோம். //
அருமையான சொல்லாட்சி.
//கைகளால் மலர் தூவி, மௌனமாய் செலவழிக்கும் நொடிகள் அவர்களின் கால் தூசிற்கும் ஈடாகாது. எல்லாவற்றையும் கற்பனையில் மட்டும் கண்டுணர்ந்து கொள்ளும் சொப்பனத்தைத் தந்து விட்டுப் போய் விட்டார்களே! //
உண்மை..அவர்களுக்கு கைம்மாறாக நாம் என்ன செய்யப்போகிறோம் என்று சிந்திக்க வேண்டிய நேரம் இது.
மீள்பதிவென்றாலும், நினைவுகளை மீட்டியெழுப்பும் பதிவு.
தொடர்ந்து படிக்கிறேன்.
பதிவைப் படிக்கப்படிக்க
மனம் கனக்கிறது சகோ
புலவர் சா இராமாநுசம்
அடுத்தடுத்த தொடர்களுக்கு காத்திருக்கேன் பாஸ் ....
தொழில் நுட்ப் பதிவருக்கு வாழ்த்துக்கள்...
அறிமுகப்படுத்திய பதிவருக்கு வாழ்துக்கள்....என்னதான் நாங்கள் வாழ்ந்து இருந்தாலும்...அந்த வாழ்க்கையை பதிவாக படிப்பதிலும் ஒரு சந்தோசம் இருக்கிறது...தொடர்ந்து கலக்குங்க பாஸ்
கொத்தம்பியா குளம், யானைகளின்....ப்.....பீ..ஒலி
பழாப்பழ ஸ்டிக்கர்
என எங்கள் மனதை அள்ளிச் சென்றுவிட்டீர்கள்
நிரூபன்,மிகவும் இதமான நடையில் உள்ளத்தை ஊடுருவுகிறது வலி.
//சிவ பூசையினுள் புகும் கரடி போல, புற்றினுள் இருந்து திடீரெனச் சீறும் நச்சுப் பாம்புகளாய்ப் புகுந்து விளையாடத் தொடங்கினார்கள்//.
மொழி உங்களுக்கு வசப்பட்டுவிட்டது.
வணக்கம் மாப்பிள உங்கள் பதிவு எனக்கு ஈமெயிலில் வரவில்லை என்னடா ஓவ்வொரு நாளும் பதிவ போடுறவர் ஏன் போடலைன்னு வந்து பார்தால் எனக்கு விருப்பமான தொடர் போகின்றது இனி நானும் உங்க பதிவ ஈமெயிலில் பெறுவதற்கு பதிந்து விட்டேன் உங்கள நம்ப முடியாதே அதுதான்...ஹிஹிஹிஹிஹி
வாழ்துக்கள் மாப்பிள..
கழிப்பறைகளை நம்பி எங்கள் வாழ்க்கைகள் அக் காலத்தில் இருக்கவில்லை. வீட்டிற்கு ஒரு கழிப்பறை இருந்தாலும், காலையில் எழுந்து; அதுவும் பனிக் காலத்தில் கொட்டாவி விட்டபடி போத்தலுடன் பனங் காணிக்குள் போய் குந்தி இருப்பதிலும் எங்களுக்கு ஒரு அலாதிச் சுகம் இருந்தது. யானைகளின் படையெடுப்பையும் பொருட்படுத்தாது, ஓடி ஓடி விளாம்பழம் பொறுக்கிய நினைவுகள் இன்றும் கண் முன்னே நிழலாடுகின்றன.//
நினைவுகளின் எதார்த்த நடைகளுடன் கூடிய வரலாற்று பகிர்வு...மனதில் வடு ஏற்படுத்துகிறது நண்பரே
நீங்கள் கண்ட இராசாத்தியக்காவும் மாமாவும் போல் எவ்வளவு பேரை நான் பார்திருக்கிறேன்.. அட காதல் கடிதங்களையே அவர்களுக்காக கொண்டுபோய் கொடுத்திருக்கிறேன்..அது காதல் கடிதமென்றோ அல்லது காதல் என்றால் என்னவென்று அறியாத பருவத்தில்.. நீங்க என்ர மணியண்ணையையும் கோமதியக்காவையும் ஞாபகபடுத்திறீங்க ஒரு வகையில் அது அந்தக்காலம் யுத்தங்களையே கண்டிராத காலத்தில்.. ஆனால் இது வலி சுமந்த வரலாற்றினை தாங்கி வரும் தொகுப்புன்னு சொல்கிறீர்கள் நான் கண்டிராத ஒரு ஈழத்தை உங்கள் தொகுப்புமூலம் காணப்போகிறேன்.. அடுத்த பதிவை பார்க ஆவலோடு காத்திருக்கிறேன்..
நண்பர் MAHAN THAMESH அவர்களுக்கு வாழ்த்துக்கள்
படங்கள் அருமை நான் இதுவரை விரும்பி பார்பதற்கு இதுவும் காரணமோ தெரியவில்லை... அட என்ர சிவலயன பார்த மாதிரி இருக்கையா..
அட மதன் தமேசா அவரை நான் மறக்க முடியாது என்ர பதிவையும் மதிச்சு முதல் முதலாய் கொமண்டு போட்டவர்.. அவரை நீங்க அறிமுகபடுத்தியதற்கு நன்றி..
வாழ்த்துக்கள் தமேஸ்..
வணக்கம் சார்!கும்புடுறேனுங்க! நலமா இருக்கீங்களா?
இந்தப் பதிவு மிகவும் உணர்வு பூர்வமானது! ஆழ்மனத்தால் வாசிக்கப்பட வேண்டியது!
இப்பதிவுக்கௌ கும்மியோ, நக்கல் நையாண்டியோ பொருத்தமற்றது!
எனவே, இந்த ஒரு கமெண்டுடன் சுருக்கிக் கொள்கிறேன்!
நன்றி சார்!
வலி நிறைந்த,மனதைகனக்கச்செய்த பதிவு.
முதல் பாகத்தை வாசிக்கத் தவறியதால், இன்று அலுவலகத்திலிருந்து திரும்பியதும் இரு பாகங்களையும் முழுமையாக வாசித்தேன். இயல்பாக இருந்ததை, இருப்பதை அப்படியே சொல்வதுகூட மனதை இவ்வளவு வருடும் என்பதை நான் வாசித்தறிந்த சில இடுகைகளில் இதுவும் ஒன்று! வாசித்து முடிந்ததும் தன்னிச்சையாய் சில பெருமூச்சுக்கள்! நன்று சகோ!
அருமையான சொல்லாடல்கள்,தமிழ்நாட்டை ஒப்பிட்டு உங்கள் மண்,வாழ்வு முறைகள்,அரசியல் மற்றும் அனைத்தையும் குறித்து அறிந்து கொள்ளும் ஆவலுள்ளவர்களுக்கு,எனக்கு இது நல்ல தீனி.தொடருங்கள் சகோ.
அருமையான தகவல்களைக்கொண்ட பதிவு. இது போன்ற பதிவுகள் நிறைய வேண்டும் நிரூபன்
மிக அழகான கவித்துவமான நடை.
முதல் முறை வந்துள்ளேன். லைட்டு போட்டு நல்ல வெளிச்சத்தில் கண்ணாடி போடாம என் எழுத்துகளை பதிவிட்டுள்ளேன் நண்பரே.
உண்மையில் மனதை நெகிழச்செய்யும் படங்களும் பதிவுகளும்...மனம் அழுத்ததுடன்..
பாலப்பழம் ஒரு சீசனுக்கு வந்து வாயெல்லாம் ஸ்ரிக்கர் போல ஒட்டி விட்டுச் சென்று விடும்.
பால பழத்தை நினைத்தாலே வாய் ஊறும்.
இவ்வளவு நாட்கள் வந்த உங்கள் பதிவுகளில் (நான் வாசித்தவற்றில்) மிகப்பிடித்தது இது. தொடருங்கள்.
சகோ . இந்த தொடரின் அடுத்த பதிவினை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் .
என்னை வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு என் நன்றிகள் .
Post a Comment