நாள் தோறும் புலர்ந்து மறையும்
வலையுலக நாழிகைகள் நடுவே
தொலைந்து போகின்றன
எங்களின் உணர்வலைகள்!
நிரூபனின் நாற்று
ஆண்கள் மட்டும் தான்
அதிகம் எழுதலாம் என்பதும்
அவர்கள் மட்டும் தான்
தம் உணர்வுகளை
உச்சுக் கொட்டலாம்
என்று கூறுவதும்
யார் இங்கு இயற்றி வைத்த
சட்டமோ தெரியவில்லை!
எங்களுக்குள்ளும் சாதாரண
மனிதர்களைப் போன்ற
மன உணர்விருக்கும்,
எம் உணர்வுகளுக்கு
உருவம் கொடுத்து
எழுதிட இணையம்
வாய்ப்புத் தந்தது- ஆனால்
எம் இடையே உள்ள
பச்சோந்திகளும், நரிகளும்
காழ்ப்பில் எம்மைக் கொல்கிறார்கள்;
காம சுகம் தேடும்
மோகத்தில் அலைந்து
காறி உமிழ நினைக்கிறார்கள்!நிரூபனின் நாற்று
நாளைய பெண்களின் விடுதலை
நம் உளத்தில் தோன்றும்
இன்றைய வாழ்வின் சிந்தனை
மனதில் எழும் இன்ப
உணர்வுகள் இவை யாவும்
எழுதினாலும்,
எமக்கான பட்டம் வேசை!
சமையல் குறிப்போடு
சங்கதிகள் பல சொல்லின்
எமக்கான பெயர்
சக்களத்தி!
காதலைப் பற்றி பெண்
கவிதை பாடினால்
அவளைப் பின் தொடர்ந்து வந்து
காமத்திற்காய் சுகம் தேடி
அலைந்து இம்சையை கூட்டுகின்றன
இதயமற்ற நெஞ்சங்கள்!
முதலில் எம்மைப் பின் தொடர்ந்து
அழகிய கருத்துச் சொல்கிறார்கள் சிலர்
மெதுவாய் மை பூசும் வார்த்தை பேசி
எம் மின்னஞ்சல் எடுத்து
அதில் அன்பெனும் களிம்பு தடவி
சகோதரனாய் உறவாடி,
சற்றே நாம் நிலை தளர்ந்து
ஒரு பொதுவான விடயத்தை
வெளியில் பதிவாக்கிச் சொல்லியதும்,
உனக்கும் அனுபவமோ என கேட்டு
காயம் செய்கின்றன காட்டுப் பன்னிகள்!
நிரூபனின் நாற்று
மூன்று நாள் பதிவெழுதவில்லை எனில்
உனக்கு பீரியட்ஸ் வந்தால்
பதிவுலகிற்கும் பீரியட்ஸோ என
பிளிறுகின்றன சிலம்போசை
எழுப்பும் நயவஞ்சகப் புல்லுருவிகள்!
பெண்கள் இத்தகைய வரையறைக்குள்
வாழ வேண்டும் என்பதில்
மட்டும் கருமமே கருத்தாய் உள்ள
சீழ் கட்டிய செத்து விட்ட
உக்கி உலர்ந்த மனங் கொண்ட
கீழ்த் தரமான ஆண்களோ,
வெளி உலகின் பார்வைக்கு
முக்காடு போட்டு நடந்து,
உள் உலகில்
எம் மெயில் பெட்டி தேடி
மின்னஞ்சல் ஊடே அந்தரங்கம்
விசாரித்து அற்ப சுகம் காண்கிறார்கள்!!
இன்பமெனும் வார்த்தை
எம் பதிவுகளில் வந்தால்
உனக்கும் அனுபவமோ என
ஆளைக் கொல்லும்
சுனாமியாய் பொங்குகிறார்கள்!
உடலுறவு எனும்
வார்த்தையை கையாண்டால்
உனக்கும் விருப்பம் இருந்தால்
வெளியே சொல்லென
உணர்ச்சி பொங்க(ப்)
பேசுகிறது இந்தச் சமூகம்!
நிரூபனின் நாற்று
நாம் எது எழுதினாலும்
ஒரு அளவீடு கொண்டு
எம் மனங்களை மட்டும்
அளக்கத் துடிக்கும்
ஆணாதிக்கவாதிகளால்
காற்றில் பறந்து தொலைகின்றன
எம் கற்பனைச் சிதறல்கள்!
பெண் ஒரு வரம்பினுள்
வாழ வேண்டும் என(க்)
கூப்பாடு போட்டு
வெளியே சமூக காவலர்களாய்
நடிக்கும் சிறிய மனங்களின்
நரகச் செயல்களால்
நாளாந்தம் அமிழ்ந்து நசிகிறது - எம்
எழுத்துக் கிறுக்கல்கள்!
ஆணாதிக்கம் என்றால்
வெளியே நல்லவர் போல் நடித்து
பெண் பதிப்புக்களை
நல்லவராய் விமர்சித்து
பின் அவள் மெயில் பெட்டியூடே
அந்தரங்கம் கிளறுவது தான் என்பது
என்னைப் போல்
எத்தனை அப்பாவிப் பெண்களுக்குப் புரியுமோ?
எதிர்காலம் தொலைக்கப்பட்டு
எழுத்துச் சுதந்திரம் பறிக்கப்படும்
நாளாந்தம் இங்கே துகிலுரியப்படும்
பெண்களின் உணர்வுகளில்
எத்தனை தான் வெளியுலகிற்கு தெரிகின்றனவோ!
ஐயகோ ஆணாதிக்கமே
காலாச்சாரம் கட்டி(க்)
காக்கத் துணியும்
காவல் போலிசுகளே!
இப்படி எத்தனை பெண்களின்
வாழ்க்கையினை சீரழித்து(ச்)
சுகம் காண்பீர்!!
பண்டைய நாகரிக மரபில் திளைத்து
படித்து பட்டம் பெற்றும்
பெண்ணுக்கான வரம்பு
இது என நிர்ணயம் செய்யும்
இன்றைய ஆணாதிக்கவாதிகள்
இருக்கும் வரை
எம் உணர்வுகள்
வெளித்தெரியாதென்பது மாத்திரம் நிஜம்!!!
பிற் சேர்க்கை: வலையுலகில் இந்த வருடத்தின் நடுப் பகுதியில் காலாச்சார காவலர்களால் விரட்டியடிக்கபட்டு, தற்போது, சைபர் கிரைம் வழக்கினை அக் கலாச்சாரக் காவலர்களுக்கெதிராகத் தொடுத்துச் சென்னையில் தானும் ஒரு புதுமைப் பெண் என்பதை நிரூபிக்கும் முகமாய், வலைப் பதிவு மூலமாக நண்பராகிப் பாலியல் துன்புறுத்தல் செய்த பிரபல பதிவருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்து வெற்றி பெற்ற, முகம் தெரியாத அந்தச் சகோதரிக்கு என் இக் கவிதை சமர்ப்பணம்!
****************************************************************************
அன்பு இவ் உலகின் எல்லாப் பகுதிகளிலும் நிறைந்திருந்தால் வன்முறைகள் நிகழாதல்லவா. அது போலத் தான் அன்பு உலகத்தில் நாம் வாழ்ந்தால் எம் வாழ்வில் சிக்கல்கள் தோன்றாதல்லவா.
அன்பு உலகம் பதிவுலகில் எங்கே இருக்கிறது என்று கேட்டால், நீங்கள் அதிகம் யோசிக்கத் தேவை இல்லை. காரணம் விடை உங்கள் கண் முன்னே இருக்கின்றது.
பதிவர்கள் அனைவருக்கும் தேவையான ஆரோக்கியமான தகவல்கள், மருத்துவக் குறிப்புகள், இடையிடையே தொழில்நுட்பத் தகவல்கள் எனப் பல தகவல்களையும் தன் அன்பு உலகத்தில் பகிர்ந்து வருகிறார் சகோதரன் ரமேஷ் அவர்கள். (M.R)
சகோதரன் ரமேஷ் அவர்களின் அன்பு உலகம் வலைப் பூவிற்கு விஜயம் செய்து உங்கள் ஆதரவினையும் அவருக்கு வழங்கிட:
http://thulithuliyaai.blogspot.com/
*******************************************************************************
முக்கிய குறிப்பு: இன்ட்லி ஓட்டுப் பட்டையில் ஓட்டுப் போட முடியவில்லையே எனும் உறவுகளின் வேண்டு கோளுக்கமைவாக, இன்ட்லியில் ஓட்டுப் போடுவதற்கான இணைப்பினை இங்கே பகிர்ந்துள்ளேன்.
இன்ட்லியில் ஓட்டளிக்க:
|
231 Comments:
«Oldest ‹Older 1 – 200 of 231 Newer› Newest»அய்யோ
இது நிரூபன் டைம் இல்லையே, பதிவு எப்பவும் முட் நைட்ல செங்கோவி அண்ணன் மாதிரி தானே போடுவீங்க?
கவிதை நல்லாருக்கு..
அறிமுகப்பதிவர் எம் ஆர் க்கு வாழ்த்துக்கள்
அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பரே
கச்சைகட்டி வரிந்துகொண்டு
ஆணாதிக்கம் காட்டிவரும்
பண்பில் வீழ்ந்தோர் சிலருண்டு...
பெண்ணும் ஒரு மனித இனமே..
அயல்கிரகத்தில் இருந்து வந்தவள் அல்லள்
மூளையை சலவை செய்து...
முற்போக்கு சிந்தனையுடன்
நடந்துகொள்ள
உறைக்கும்படி கவிதையிட்ட
நண்பா நீ வாழி.
எம் அருமை நண்பர் எம்.ரமேஷ்
அவர்களை இன்று அறிமுகப்படுத்தியதற்கு நாடியும்
நண்பருக்கு இனிய வாழ்த்துக்களும்.
தம் எண்ணங்களை பதிவிட ,பகிர்ந்திட அனைவருக்கும் உரிமையுண்டு.
அதை தடுப்பவர்களுக்கு தங்கள் பதிவின் மூலம் பதிலடி குடுத்துள்ளீர்கள்.
நன்றி
அனைத்து கட்சிக்கும் வாக்களித்தேன் .
சி.பி.செந்தில்குமார் said...
அறிமுகப்பதிவர் எம் ஆர் க்கு வாழ்த்துக்கள்
தங்கள் வாழ்த்துக்கு நன்றி நண்பரே
//ஆண்கள் மட்டும் தான்
அதிகம் எழுதலாம் என்பதும்
அவர்கள் மட்டும் தான்
தம் உணர்வுகளை
உச்சுக் கொட்டலாம்
என்று கூறுவதும்
யார் இங்கு இயற்றி வைத்த
சட்டமோ தெரியவில்லை!//
சரியாக கூறினீர்கள் அண்ணா ! பெண் எழுத வந்தால், கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி கொண்டு எங்கு மட்டம் தட்டலாம் என்று பார்க்கும் பல ஓநாய்கள் இருக்க தான் செய்கிறார்கள் !
மகேந்திரன் said...
எம் அருமை நண்பர் எம்.ரமேஷ்
அவர்களை இன்று அறிமுகப்படுத்தியதற்கு நாடியும்
நண்பருக்கு இனிய வாழ்த்துக்களும்.
தங்கள் அன்புக்கு நன்றி நண்பரே
நிரூ...!
அண்மைக்காலத்தில் நீங்களிட்ட பதிவுகளில் மிகவும் சிறந்த பதிவு இது. வாழ்த்துக்கள்.
நண்பர்கள் என்கிற போர்வையில் நயவஞ்சகத்தனம் புரியும் பொறுக்கிகள் எம்மிடையே அதிகமாக இருக்கிறார்கள். அவர்களை சரியாக இனங்கண்டு நட்பு பாராட்டுவதுதான் பெண் பதிவர்களுக்கும் நல்லது.
அவதானம் எல்லா இடங்களிலும் தேவை!
இருங்க படிச்சுட்டு வாரன்
வருத்தமான செய்தி நிரூ அதை சொன்ன விதம் இன்னும் வலு சேர்க்கிறது..
@சி.பி.செந்தில்குமார்
அய்யோ//
ஏனுங்க பாஸ், இயமனோட மனைவியைக் கூப்பிடுறீங்க?
//பெண்கள் இத்தகைய வரையறைக்குள்
வாழ வேண்டும் என்பதில்
மட்டும் கருமமே கருத்தாய் உள்ள
சீழ் கட்டிய செத்து விட்ட
உக்கி உலர்ந்த மனங் கொண்ட
கீழ்த் தரமான ஆண்களோ,//
சரியான சாட்டையடி வார்த்தைகள் !சபாஷ் !!
@சி.பி.செந்தில்குமார்
இது நிரூபன் டைம் இல்லையே, பதிவு எப்பவும் முட் நைட்ல செங்கோவி அண்ணன் மாதிரி தானே போடுவீங்க?//
ஆமா பாஸ்...நேத்தைக்கு உடம்புக்கு கொஞ்சம் முடியாம இருந்திச்சு...ஒரே அலுப்பு.
அதான் டைம் மாத்திப் போட்டிருக்கேன்.
@சி.பி.செந்தில்குமார்
கவிதை நல்லாருக்கு..//
நன்றி பாஸ்.
//ஆணாதிக்கம் என்றால்
வெளியே நல்லவர் போல் நடித்து
பெண் பதிப்புக்களை
நல்லவராய் விமர்சித்து//
பின் ???
பின் சொந்தம் கொண்டாடி அடிமை படுத்த நினைக்கின்றனர் ! என்ன கொடுமை சாமியோவ் !
@M.R
அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பரே//
அவ்...ஏனுங்க இதுக்கெல்லாமா நன்றி சொல்லுவாங்க...
நன்றிக்கு நன்றி நண்பா.
@மகேந்திரன்
கச்சைகட்டி வரிந்துகொண்டு
ஆணாதிக்கம் காட்டிவரும்
பண்பில் வீழ்ந்தோர் சிலருண்டு...
பெண்ணும் ஒரு மனித இனமே..
அயல்கிரகத்தில் இருந்து வந்தவள் அல்லள்
மூளையை சலவை செய்து...
முற்போக்கு சிந்தனையுடன்
நடந்துகொள்ள
உறைக்கும்படி கவிதையிட்ட
நண்பா நீ வாழி//
உங்களின் காத்திரமான கவி நடைக் கருத்திற்கு மிக்க நன்றி நண்பா.
@M.R
தம் எண்ணங்களை பதிவிட ,பகிர்ந்திட அனைவருக்கும் உரிமையுண்டு.
அதை தடுப்பவர்களுக்கு தங்கள் பதிவின் மூலம் பதிலடி குடுத்துள்ளீர்கள்.//
நன்றி நண்பா...
@M.R
அனைத்து கட்சிக்கும் வாக்களித்தேன் .//
உங்கள் அன்பிற்கு நன்றி நண்பா.
@யாழினி
சரியாக கூறினீர்கள் அண்ணா ! பெண் எழுத வந்தால், கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி கொண்டு எங்கு மட்டம் தட்டலாம் என்று பார்க்கும் பல ஓநாய்கள் இருக்க தான் செய்கிறார்கள் !//
லூஸில விடுங்க சகோதரி...போற்றுவோர் போற்றட்டும்..தூற்றுவோர் தூற்றட்டு.
நீங்கள் உங்கள் கருத்துக்களை ஆணித்தரமாக, உறுதியாக முன் வைக்கும் போது நிச்சயம் அவை வலுப் பெறும்.
@மருதமூரான்.
நிரூ...!
அண்மைக்காலத்தில் நீங்களிட்ட பதிவுகளில் மிகவும் சிறந்த பதிவு இது. வாழ்த்துக்கள்.
நண்பர்கள் என்கிற போர்வையில் நயவஞ்சகத்தனம் புரியும் பொறுக்கிகள் எம்மிடையே அதிகமாக இருக்கிறார்கள். அவர்களை சரியாக இனங்கண்டு நட்பு பாராட்டுவதுதான் பெண் பதிவர்களுக்கும் நல்லது.
அவதானம் எல்லா இடங்களிலும் தேவை!//
வாங்கோ பாஸ்,
உங்கள் அன்பு என்னைப் புல்லரிக்கச் செய்கிறது. விழிப்புணர்வாகப் பெண்கள் இருக்க வேண்டும் எனும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
@K.s.s.Rajh
இருங்க படிச்சுட்டு வாரன்//
ஆமாங்க இருக்கிறேன் பாஸ்..
நீங்கள் ஆறுதலாக வாங்கோ.
@ஜ.ரா.ரமேஷ் பாபு
வருத்தமான செய்தி நிரூ அதை சொன்ன விதம் இன்னும் வலு சேர்க்கிறது..//
நன்றி அண்ணாச்சி.
///பிற் சேர்க்கை: வலையுலகில் இந்த வருடத்தின் நடுப் பகுதியில் காலாச்சார காவலர்களால் விரட்டியடிக்கபட்டு, தற்போது, சைபர் கிரைம் வழக்கினை அக் கலாச்சாரக் காவலர்களுக்கெதிராகத் தொடுத்துச் சென்னையில் தானும் ஒரு புதுமைப் பெண் என்பதை நிரூபிக்கும் முகமாய், வலைப் பதிவு மூலமாக நண்பராகிப் பாலியல் துன்புறுத்தல் செய்த பிரபல பதிவருக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்து வெற்றி பெற்ற, முகம் தெரியாத அந்தச் சகோதரிக்கு என் இக் கவிதை சமர்ப்பணம்///
துன்பத்தைக்கண்டு துவண்டுவிடாத அந்த சகோதரிக்கு ஒரு சலூட்.
//பதிவர்கள் அனைவருக்கும் தேவையான ஆரோக்கியமான தகவல்கள், மருத்துவக் குறிப்புகள், இடையிடையே தொழில்நுட்பத் தகவல்கள் எனப் பல தகவல்களையும் தன் அன்பு உலகத்தில் பகிர்ந்து வருகிறார் சகோதரன் ரமேஷ் அவர்கள். (M.R)//
நண்பர் M.R அவர்களின் அறிமுகத்துக்கு நன்றி நான் நினைத்தேன் இவரை உங்கள் வலையில் அறிமுகப்படுத்து வீர்கள் என்று அது நடந்து விட்டது.
இன்று என் கடையில்-
(கில்மா)கற்பு என்பது உடல் சார்ந்ததா இல்லை மனம் சார்ந்ததா
http://cricketnanparkal.blogspot.com/2011/09/blog-post.html
யாழினி said...
நீங்கள் இன்று அறிமுக படுத்தி இருக்கும் சகோ ரமேஷ் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் :)
வாழ்த்துக்கு நன்றி சகோதரி
மன்னிக்கவும், அதில் எழுத்து பிழை இருந்தது. ஆகவே அதை நீங்கி விட்டு திருத்தி மீண்டும் வெளியிடுகிரோன் .. இதோ !
// ஐயகோ ஆணாதிக்கமே
காலாச்சாரம் கட்டிக் காக்கத் துணியும்
காவல் போலிஸுகளே!
இப்படி எத்தனை பெண்களின்
வாழ்க்கையினை சீரழித்து(ச்)
சுகம் காண்பீர்! //
நீங்கள் எவ்வளவு கதறினாலும் புத்தி வராது :) தெரிந்தே செய்பவர்கள் திருந்தவா போகிறார்கள்.
இருந்தாலும் உங்கள் பதிவின் மூலம் ஒரு சிலர் இதை பற்றி எண்ணி பார்த்தாலே அந்த வெற்றி நமக்கு போதுமானது !
பெண் பதிவர்களுக்கு குரல் குடுத்த உங்கள் நல்ல உள்ளத்திற்கு என் பாராட்டுக்கள் அண்ணா :)
நீங்கள் இன்று அறிமுக படுத்தி இருக்கும் சகோ ரமேஷ் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் :)
நன்றிகள் அண்ணா !
K.s.s.Rajh said...
நண்பர் M.R அவர்களின் அறிமுகத்துக்கு நன்றி நான் நினைத்தேன் இவரை உங்கள் வலையில் அறிமுகப்படுத்து வீர்கள் என்று அது நடந்து விட்டது.
நண்பர் ராஜ் நன்றி
எல்லா ஒட்டு பொத்தான்களையும் அழுத்தி ஆகிற்று :)
கவிதைக்கு நன்றிங்க மாப்ள!
வந்தாச்சு சகோ.
எம் ஆர் க்கு வாழ்த்துக்கள்!
அண்ணன் பொங்கி இருக்காரே?
ஜீ... said...
எம் ஆர் க்கு வாழ்த்துக்கள்!
நன்றி ஜீ...சகோ
MR நமக்கு தெரிஞ்சவர்தான்...... எல்லாம் நல்ல பதிவுகள்... வாழ்த்துக்கள்!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
MR நமக்கு தெரிஞ்சவர்தான்...... எல்லாம் நல்ல பதிவுகள்... வாழ்த்துக்கள்!
நன்றி நண்பரே
சமுகத்தில் இப்படியும் சிலர் இருப்பது வேதனையான விடயம் திறமையைப் போற்றுவதைவிடுத்து வேறவழியில் போவோருக்கு சாட்டை அடிக்கவிதை!
அண்ணன் சொல்றது அதிர்ச்சியா இருக்கு! பொங்கிட்டாரு!!
என்ன பாஸ் பிரியவதனா கனவில் வந்தாவா? பதிவு போடும் நேரத்தை மாற்றிவிட்டீர்கள் நாங்களும் கோர்த்துவிடனும் இல்ல அவ்வ்!
M.r அவர்களுக்கு வாழ்த்துக்கள் அவரின் திறமையை நானும் உணர்கின்றேன்!
கவிதையைப்போன்றே அறிமுகமும் அசத்தல் .
கொடுமையிலும் கொடுமை .....பதிவின் வாயிலாக கொடுத்த சாட்டையடிகளும் அருமை !
மாப்ள இதென்ன அன்டைம்ல(?)
சமுதாய கருத்துள்ள காரசாரமா நீட்டி முலன்க்கும் நீள கவிதை
கவிதை மிக அருமை...
வார்த்தைகள் ஓவொன்றும்,
அம்புகள் போல் பாய்கிறது...
அவர்கள் திருந்துகிறர்களோ இல்லையோ..?
பெண் எழுத்தாளர்களுக்கு இது எச்சரிக்கை...
பயணம் என்று வந்துவிட்டால்
முற்களும் , கற்களும்
பாதத்தை பதம் பார்க்கத்தான் செயும்
அவைகளை தூக்கி எறிந்துவிட்டு,
அழகான நடையுடன் முன்னேறுவோம்...
வாழ்த்துக்கள்... நன்றி
Nesan said...
M.r அவர்களுக்கு வாழ்த்துக்கள் அவரின் திறமையை நானும் உணர்கின்றேன்!
நன்றி நண்பரே
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
கவிதையைப்போன்றே அறிமுகமும் அசத்தல் .
நன்றி நண்பரே
பதிவுலகில் பெண்கள் எழுதுவதே ரொம்ப குறைவு.அதிலும் சிலர் நட்போடு எழுத வந்தால் அவர்களையும் துரத்தி விடுவது பதிவுலகுக்கு நல்லதல்ல.ப்திவுலகுக்கு எதிர்மாறான விமர்சனங்களுக்கு இது போன்ற செயல்களும் காரணம்.
A Syndromic mental retardation of intellectual deficits.
கவிதையில் உண்மை நிகழ்ச்சி...
என்னய்யா இது..திடீர்னு ஒரு பதிவு இறங்கி இருக்கு?
/எதிர்காலம் தொலைக்கப்பட்டு
எழுத்துச் சுதந்திரம் பறிக்கப்படும்
நாளாந்தம் இங்கே துகிலுரியப்படும்
பெண்களின் உணர்வுகளில்
எத்தனை தான் வெளியுலகிற்கு தெரிகின்றனவோ!//
உண்மை தான் நிரூ..அதை வெளியே சொல்ல முயலும் பெண்கள் தானே இவ்வாறு ஒடுக்கப்பட்டு, விரட்டியடிக்கப்படுகிறார்கள். யாராக இருந்தாலும், மாற்றுக்கருத்து இருந்தால், ஆரோக்கியமான கருத்து விவாதம் செய்யலாமெ..இது படித்தோர்க்கு அழகில்லையே!
எம்மார் மோதிரக்கையால் தட்டிக்கொடுக்கப்பட்டுள்ளார்...வாழ்த்துகள் ரமேஷ்.
வணக்கம் சார், கும்புடுறேனுங்க!
சர், இந்தப் பதிவ மூணுவாட்டி முழுசாப் படிச்சுட்டேன்! இதுக்கு 45 கமெண்டு போடலாம்னு இருக்கேன்! ஆனா இப்ப போட மாட்டேன்!
ஏன் தெரியுமா? நான் கடைசியா போட்ட பதிவுக்கு, நீங்க ஒழுங்கா கமெண்டு போடல! அற்லீஸ்ட் பதிவப் பத்தி ஒரு வார்த்தைகூடச் சொல்லல!
ஆனா, நீங்க இதுக்கு முன்னாடி போட்ட பதிவுக்கு, நான் எம்புட்டு கமெண்டு போட்டேன் தெரியுமா?
ஸோ, நீங்க வந்து மொதல்ல எனக்கு கமெண்டு போடுங்க! அப்புறம் நான் உங்களுக்கு என்னோட 45 கமெண்டையும் அள்ளி வீசுறேன்!
டீலா? நோ டீலா?
( என்ன இது ரொம்ப கேவலமா இருக்கு? இப்புடியாய்யா கமெண்டுகளக் கேட்டு வாங்குவீங்க? அப்டீன்னு சிலபேர் ஆச்சரியப்படுவீங்க! இதுல என்னங்க கேவலம் இருக்கு?
இன்றைய பதிவுலக யதார்த்தத்தை தானே சொல்லியிருக்கேன்! என்ன பலபேர் மனசுக்குள்ள நெனைச்சத நான் ஓப்பனா சொல்லிட்டேன்! அவ்வளவுதான்!
அதுபோக, பதிவுலகத்துல ஏதோ நேர்மை, உண்மை இதெல்லாம் பொங்கி வழியுறமாதிரி சொல்றீங்களே!
அவரு கமெண்டு போட்டா, நானும் போடுவேன்! அவரு போடலைன்னா நானும் போட மாட்டேன்! - இதுதாங்க கடந்த பத்து நாட்களில பதிவுலகம் பத்தி நான் கத்துக்கிட்டது! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!! )
செங்கோவி said...
எம்மார் மோதிரக்கையால் தட்டிக்கொடுக்கப்பட்டுள்ளார்...வாழ்த்துகள் ரமேஷ்.
நன்றி நண்பரே
ஏனோ தெரியல்ல பெண்கள் பதிவுலகில் ஒரு கட்டுக்குள் தான் இருக்க வேண்டும் என்று பலர் விரும்புகிறார்கள்... ஏன் தான் இந்த அழுகிய மனமோ தெரியல்ல !!!
மதுரை பொண்ணு விடயத்தில் கூட பல பதிவர்கள் அந்த பெண்ணை தான் அதிகமாக குற்றம் சாட்டினார்கள்... அன்றே புரிந்துகொண்டேன் ......(
பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலையை புரிந்து , அவவின் நிலையில் இருந்து எழுதியுள்ளீர்கள். நிச்சயம் குறித்த பெண்ணுக்கு ஆறுதலாய் இருக்கும், சம்மந்தப்பட்ட நபருக்கு சாட்டையடி தான் .
ஒதுங்கி போகாமல் துணிவாக எதிர்கொண்ட அந்த அக்காவுக்கு எனது வாழ்த்துக்கள்.
பதிபவர் m r க்கு வாழ்த்துக்கள் ...
பெண்களுக்கெதிரான அனைத்து செய்திகளையும் உள்ளடக்கி சீறி உள்ளீர்கள். அசத்தல்!!
அருமையான கவிதை வாழ்த்துக்கள் நிரூபன்...!!!
அறிமுகம் எம் ஆருக்கு வாழ்த்துக்கள்.......வித்தியாசமா எழுதி இருக்காரு சூப்பரா...!!
தமிழ்மணம் இருவது, இன்ட்லி ரெண்டு...
கந்தசாமி. said...
பதிபவர் m r க்கு வாழ்த்துக்கள் ...
நன்றி நண்பரே
MANO நாஞ்சில் மனோ said...
அறிமுகம் எம் ஆருக்கு வாழ்த்துக்கள்.......வித்தியாசமா எழுதி இருக்காரு சூப்பரா...!!
தங்கள் அன்பான வாழ்த்துக்கு நன்றி நண்பரே
ஒரு சவுக்கடிப் பதிவு..
கவிதை வடிவில்..
பாராட்டுகள்..
என்னை பதிவுலகில் எழுத தூண்டியது சகோ..M.R. அவரை அறிமுக படுத்திய நண்பர் நிருபருக்கு நன்றிகள்.... சகோக்கு வாழ்த்துக்கள்
மகேந்திரன் said...
கச்சைகட்டி வரிந்துகொண்டு
ஆணாதிக்கம் காட்டிவரும்
பண்பில் வீழ்ந்தோர் சிலருண்டு...
பெண்ணும் ஒரு மனித இனமே..
அயல்கிரகத்தில் இருந்து வந்தவள் அல்லள்
மூளையை சலவை செய்து...
முற்போக்கு சிந்தனையுடன்
நடந்துகொள்ள
உறைக்கும்படி கவிதையிட்ட
நண்பா நீ வாழி.//
நண்பர் மகேந்திரன் நச்சென்று கருத்துரையுட்டிருக்கிறார் எனது கருத்தும் இதுவே.... நீ வாழி நிருபரே
ஆணாதிக்கத்தை எதிர்க்க பெண்ணாதிக்கத்தை தாங்காது பெண் பெண்ணாக இருந்து சாதிக்கலாம் இதில் பதிவு உலகம் எம்மாத்திரம். பெண்கள் முகமூடிகளை களைந்து தங்கள் உண்மை அடையாளத்தை பதிந்தால் சுற்றியிருக்கும் நிழல்களுக்கு என்ன வேலை?
J.P Josephine Baba said...
ஆணாதிக்கத்தை எதிர்க்க பெண்ணாதிக்கத்தை தாங்காது பெண் பெண்ணாக இருந்து சாதிக்கலாம் இதில் பதிவு உலகம் எம்மாத்திரம். பெண்கள் முகமூடிகளை களைந்து தங்கள் உண்மை அடையாளத்தை பதிந்தால் சுற்றியிருக்கும் நிழல்களுக்கு என்ன வேலை?//
மேடம் சரியாக சொல்லியுள்ளார்கள்...அவருக்கு எனது கைதட்டல்கள்....சபாஷ்
பண்டைய நாகரிக மரபில் திளைத்து
படித்து பட்டம் பெற்றும்
பெண்ணுக்கான வரம்பு
இது என நிர்ணயம் செய்யும்
இன்றைய ஆணாதிக்கவாதிகள்
இருக்கும் வரை
எம் உணர்வுகள்
வெளித்தெரியாதென்பது மாத்திரம் நிஜம்!!!//
உண்மை தான் பாஸ்...ஆனா நம்ம நாட்டில் தான் இது போன்ற ஆதிக்கங்களேல்லாம்.... வெளிநாட்டில் ரெக்கை கட்டி சுதந்திரமாக பறக்கிறார்கள்.... இங்கே காழ்ப்புணர்ச்சி அதிகம் அதனால் தான்... ஆதங்க பட்டு என்ன செய்ய... வாழ்த்துக்கள் நண்பரே
முதல் போட்டோ கண்ணீரை வரவைக்கிறது சகோ... அந்த கொடுமை செய்த கொடூரன்களுக்கு இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அல்லல் படுவது நிஜம்....
இப்படி ஒரு ஆவேசத்தை இது வரை நான் கண்டதில்லை!யாரோ ஒரு பெண் பதிவரை கடித்துக் குதறியதை நானும் பார்த்தேன்!பதிவுலகில் இருப்போர் பேசித் தீர்த்திருக்கக் கூடிய விடயத்தை சில பதிவர்களே ஊதிப் பெருப்பித்ததையும் அறிவேன்!தவறு எங்கே நடந்தது? தெரியவில்லை,ஊடுருவவும் மனதில்லை!எப்படியோ ஓய்ந்ததே??????
பாஸ் , கவிதையில் அனல் கக்குது.
பதிவுலகில் இப்படி எல்லாம் நடக்குதா???
எனக்கு இது புது தகவலாக இருக்கு.....
இப்படி செய்யும் ஆண்களை கண்டிக்கனும் தண்டிக்கணும்
ஏன் தள்ளியே வெக்கணும் பாஸ்.
உங்கள் பதிவுகளில் இது முக்கியமான பதிவு பாஸ்,
புரட்சிகரமான கவிதை
முறையற்ற வகையில் நடந்து கொள்ளும் "அவர்"கள் பதிவர்களே அல்ல. கணிணியை கையாளும் மிருகங்கள்.
அந்த சகோதரி எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார் என்பதை உங்கள் கவிதை வரிகளின் தாக்கத்தில் உணர முடிகிறது.
இந்த பதிவில் அறிமுகப்படுத்தப்பட்ட பதிவர் எம் ஆர் க்கு வாழ்த்துக்கள்
அருமையான பதிவு
ஆண் பதிவர்கள் அனைவரும் இதை
அறிவுரையாகக் கொள்ளாமல்
அறவுரையாகக் கொள்ளவேண்டும்
என்பது என் எண்ணம்
தரமான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 28
என்ன கருத்து கூறுவது எண்டு எனக்கு தெரியவில்லை. பலருக்கும் இது விடயம் தொடர்பாக ஆதங்கம் இருக்கின்றது. பெண் பதிவர்களை சகோதரிகள் போல நினைத்தால் பிரச்சை வராது.
@K.s.s.Rajh
துன்பத்தைக்கண்டு துவண்டுவிடாத அந்த சகோதரிக்கு ஒரு சலூட்.
//பதிவர்கள் அனைவருக்கும் தேவையான ஆரோக்கியமான தகவல்கள், மருத்துவக் குறிப்புகள், இடையிடையே தொழில்நுட்பத் தகவல்கள் எனப் பல தகவல்களையும் தன் அன்பு உலகத்தில் பகிர்ந்து வருகிறார் சகோதரன் ரமேஷ் அவர்கள். (M.R)//
நண்பர் M.R அவர்களின் அறிமுகத்துக்கு நன்றி நான் நினைத்தேன் இவரை உங்கள் வலையில் அறிமுகப்படுத்து வீர்கள் என்று அது நடந்து விட்டது.//
உங்களின் கருத்துக்களுக்கும், சகோதரன் ரமேஷிற்கான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா.
@யாழினி
நீங்கள் எவ்வளவு கதறினாலும் புத்தி வராது :) தெரிந்தே செய்பவர்கள் திருந்தவா போகிறார்கள்.
இருந்தாலும் உங்கள் பதிவின் மூலம் ஒரு சிலர் இதை பற்றி எண்ணி பார்த்தாலே அந்த வெற்றி நமக்கு போதுமானது !
பெண் பதிவர்களுக்கு குரல் குடுத்த உங்கள் நல்ல உள்ளத்திற்கு என் பாராட்டுக்கள் அண்ணா :)
நீங்கள் இன்று அறிமுக படுத்தி இருக்கும் சகோ ரமேஷ் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் :)
நன்றிகள் அண்ணா !//
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி தங்கையே. ,
@யாழினி
எல்லா ஒட்டு பொத்தான்களையும் அழுத்தி ஆகிற்று :)//
உங்கள் அன்பிற்கு நன்றி.
@விக்கியுலகம்
கவிதைக்கு நன்றிங்க மாப்ள!//
உங்களின் வருகைக்கும் நன்றி நண்பா.
@Prabu Krishna (பலே பிரபு)
வந்தாச்சு சகோ.//
வாங்கோ நண்பா.
@பன்னிக்குட்டி ராம்சாமி
அண்ணன் பொங்கி இருக்காரே?//
நான் பொங்கலை பாஸ்,
உண்மையத் தான் இங்கே உளறியிருக்கேன்.
புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சந்தோசமே.
@Nesan
சமுகத்தில் இப்படியும் சிலர் இருப்பது வேதனையான விடயம் திறமையைப் போற்றுவதைவிடுத்து வேறவழியில் போவோருக்கு சாட்டை அடிக்கவிதை!//
நன்றி நண்பா, உங்களின் புரிந்துணர்விற்கும்,கருத்துக்களுக்கும்,
@ஜீ...
அண்ணன் சொல்றது அதிர்ச்சியா இருக்கு! பொங்கிட்டாரு!!//
நான் பொங்கலை பாஸ்,
சிபி செந்தில்குமார் கூட இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு பதிவு போட்டாரே...அதனோட அனுதாபம் தான் பாஸ் இந்தக் கவிதை.
உங்களின் புரிந்துணர்விற்கும் நன்றி நண்பா.
m.r. அறிமுகப்பதிவரா???/? என்பக்கம் அடிக்கடி வராங்களே. அவரின் பதிவுகளும் நான் படித்து வரென்ன் நல்லா எழுதுரார்.
@Nesan
என்ன பாஸ் பிரியவதனா கனவில் வந்தாவா? பதிவு போடும் நேரத்தை மாற்றிவிட்டீர்கள் நாங்களும் கோர்த்துவிடனும் இல்ல அவ்வ்!//
யோ....நான் சீரியஸ் பதிவு போடுறேன், நீங்க என்ன பாஸ் காமெடி பண்றீங்க.
பதிவு போடும் டைம் மாத்தலை பாஸ்,
நேற்று எனக்கு உடம்புக்கு முடியலை. அதான்.
@நண்டு @நொரண்டு -ஈரோடு
கவிதையைப்போன்றே அறிமுகமும் அசத்தல் .//
தங்களின் கருத்துக்களுக்கு நன்றி நண்பா.
@koodal bala
மாப்ள இதென்ன அன்டைம்ல(?).//
ஓ..இதுவா நேத்தைக்கு உடம்புக்கு முடியாம இருந்திச்சு, அதான்.
@koodal bala
மாப்ள இதென்ன அன்டைம்ல(?).//
ஓ..இதுவா நேத்தைக்கு உடம்புக்கு முடியாம இருந்திச்சு, அதான்.
@கவி அழகன்
சமுதாய கருத்துள்ள காரசாரமா நீட்டி முழக்கும் நீள கவிதை//
தங்களின் கருத்துக்களுக்கு நன்றி நண்பா.
@சின்னதூரல்
கவிதை மிக அருமை...
வார்த்தைகள் ஓவொன்றும்,
அம்புகள் போல் பாய்கிறது...
அவர்கள் திருந்துகிறர்களோ இல்லையோ..?
பெண் எழுத்தாளர்களுக்கு இது எச்சரிக்கை...
பயணம் என்று வந்துவிட்டால்
முற்களும் , கற்களும்
பாதத்தை பதம் பார்க்கத்தான் செயும்
அவைகளை தூக்கி எறிந்துவிட்டு,
அழகான நடையுடன் முன்னேறுவோம்...
வாழ்த்துக்கள்... நன்ற//
வாங்கோ சகோதரி,
உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன்.
தங்களின் முதல் கருத்துரைக்கு நன்றி.
உங்களின் தன்னம்பிக்கை மிக்க உணர்வுப் பகிர்விற்கு வாழ்த்துக்கள்!
நாளைய பெண்களின் விடுதலை
நம் உளத்தில் தோன்றும்
இன்றைய வாழ்வின் சிந்தனை
மனதில் எழும் இன்ப
உணர்வுகள் இவை யாவும்
எழுதினாலும்,
எமக்கான பட்டம் வேசை!
சமையல் குறிப்போடு
சங்கதிகள் பல சொல்லின்
எமக்கான பெயர்
சக்களத்தி!//
மிகவும் உணர்வு பூர்வமான வரிகள் நண்பா. உங்களது உணர்வுகளுக்கு நான் தலை வணக்குகிறேன். நல்லதொரு சமர்ப்பணம். வாழ்த்துக்கள்
@ராஜ நடராஜன்
பதிவுலகில் பெண்கள் எழுதுவதே ரொம்ப குறைவு.அதிலும் சிலர் நட்போடு எழுத வந்தால் அவர்களையும் துரத்தி விடுவது பதிவுலகுக்கு நல்லதல்ல.ப்திவுலகுக்கு எதிர்மாறான விமர்சனங்களுக்கு இது போன்ற செயல்களும் காரணம்.
A Syndromic mental retardation of intellectual deficits.//
என்ன செய்ய பாஸ், இப்படியான சிலரும் இருக்கிறார்களே,
Less Talk Can Create Less Trouble.
@தமிழ்வாசி - Prakash
கவிதையில் உண்மை நிகழ்ச்சி...//
வாங்கோ பாஸ்,
சென்னைப் பயணம் எப்படி இருந்திச்சு,
தங்களின் உணர்வுப் பகிர்விற்கு நன்றி,
@செங்கோவி
என்னய்யா இது..திடீர்னு ஒரு பதிவு இறங்கி இருக்கு?//
இதுவா..சும்மா தான் பாஸ்...ஏதோ நீண்ட நாளா மனதில அரித்துக் கொண்டிருந்த விடயத்தை எழுதியிருக்கேன்.
மாய உலகம் said...
என்னை பதிவுலகில் எழுத தூண்டியது சகோ..M.R. அவரை அறிமுக படுத்திய நண்பர் நிருபருக்கு நன்றிகள்.... சகோக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கு நன்றி சகோ..
@செங்கோவி
உண்மை தான் நிரூ..அதை வெளியே சொல்ல முயலும் பெண்கள் தானே இவ்வாறு ஒடுக்கப்பட்டு, விரட்டியடிக்கப்படுகிறார்கள். யாராக இருந்தாலும், மாற்றுக்கருத்து இருந்தால், ஆரோக்கியமான கருத்து விவாதம் செய்யலாமெ..இது படித்தோர்க்கு அழகில்லையே!//
உங்களின் உணர்வுப் பகிர்விற்கு நன்றி நண்பா.
இதனை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து உணர்ந்து திருந்தினால் எவ்வளவு அருமையாக இருக்கும்.
@செங்கோவி
எம்மார் மோதிரக்கையால் தட்டிக்கொடுக்கப்பட்டுள்ளார்...வாழ்த்துகள் ரமேஷ்.//
அவ்....என்னது மோதிரக் கை...
பாரத்... பாரதி... said...
இந்த பதிவில் அறிமுகப்படுத்தப்பட்ட பதிவர் எம் ஆர் க்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கு நன்றி சகோ...
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
வணக்கம் சார், கும்புடுறேனுங்க!
சர், இந்தப் பதிவ மூணுவாட்டி முழுசாப் படிச்சுட்டேன்! இதுக்கு 45 கமெண்டு போடலாம்னு இருக்கேன்! ஆனா இப்ப போட மாட்டேன்!
ஏன் தெரியுமா? நான் கடைசியா போட்ட பதிவுக்கு, நீங்க ஒழுங்கா கமெண்டு போடல! அற்லீஸ்ட் பதிவப் பத்தி ஒரு வார்த்தைகூடச் சொல்லல!
ஆனா, நீங்க இதுக்கு முன்னாடி போட்ட பதிவுக்கு, நான் எம்புட்டு கமெண்டு போட்டேன் தெரியுமா?
ஸோ, நீங்க வந்து மொதல்ல எனக்கு கமெண்டு போடுங்க! அப்புறம் நான் உங்களுக்கு என்னோட 45 கமெண்டையும் அள்ளி வீசுறேன்!
டீலா? நோ டீலா?//
கன்ராவி...ஏன் சார் உங்களோட போன பதிவுக்கு முதற் பதிவுக்குத் தானே 110 கமெண்டு போட்டுக் கலக்கினேனே...
அது கூட மறந்து போச்சா சார்.
சார் நேரம் இல்லை சார், ஆனால் கண்டிப்பா வந்துடுறேன் சார்...
ஆமா 45 கமெண்ட் என்று நீங்க என்ன கருத்தா எழுதப் போறீங்க, இல்லே 1,2,3 ஆ எழுதப் போறீங்க.
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
( என்ன இது ரொம்ப கேவலமா இருக்கு? இப்புடியாய்யா கமெண்டுகளக் கேட்டு வாங்குவீங்க? அப்டீன்னு சிலபேர் ஆச்சரியப்படுவீங்க! இதுல என்னங்க கேவலம் இருக்கு?
இன்றைய பதிவுலக யதார்த்தத்தை தானே சொல்லியிருக்கேன்! என்ன பலபேர் மனசுக்குள்ள நெனைச்சத நான் ஓப்பனா சொல்லிட்டேன்! அவ்வளவுதான்!
அதுபோக, பதிவுலகத்துல ஏதோ நேர்மை, உண்மை இதெல்லாம் பொங்கி வழியுறமாதிரி சொல்றீங்களே!
அவரு கமெண்டு போட்டா, நானும் போடுவேன்! அவரு போடலைன்னா நானும் போட மாட்டேன்! - இதுதாங்க கடந்த பத்து நாட்களில பதிவுலகம் பத்தி நான் கத்துக்கிட்டது! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!! )//
ஆமா...இது இந்தப் பொதுச் சபை தனிலே எனக்கு மாத்திரம் சொன்னதாகத் தெரியலையே சாமி..
இருங்க வாரேன்.
நிறையத் தான் நீங்க கத்துக்கிட்டிருக்கிறீங்க.
akshmi said...
m.r. அறிமுகப்பதிவரா???/? என்பக்கம் அடிக்கடி வராங்களே. அவரின் பதிவுகளும் நான் படித்து வரென்ன் நல்லா எழுதுரார்.
நன்றி அம்மா
@கந்தசாமி.
ஏனோ தெரியல்ல பெண்கள் பதிவுலகில் ஒரு கட்டுக்குள் தான் இருக்க வேண்டும் என்று பலர் விரும்புகிறார்கள்... ஏன் தான் இந்த அழுகிய மனமோ தெரியல்ல !!!
மதுரை பொண்ணு விடயத்தில் கூட பல பதிவர்கள் அந்த பெண்ணை தான் அதிகமாக குற்றம் சாட்டினார்கள்... அன்றே புரிந்துகொண்டேன் ......(//
இது தான் எனக்கும் புரியமாட்டேங்குது பாஸ்,
சகோ பெண்களுக்காக பரிந்து பேசும் வார்த்தைகளுக்கு நன்றி
அறிமுகப்பதிவருக்கு வாழ்த்துக்கள்.
@கந்தசாமி.
பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலையை புரிந்து , அவவின் நிலையில் இருந்து எழுதியுள்ளீர்கள். நிச்சயம் குறித்த பெண்ணுக்கு ஆறுதலாய் இருக்கும், சம்மந்தப்பட்ட நபருக்கு சாட்டையடி தான் .
ஒதுங்கி போகாமல் துணிவாக எதிர்கொண்ட அந்த அக்காவுக்கு எனது வாழ்த்துக்கள்.//
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி பாஸ்,
நிச்சயம் உங்கள் வாழ்த்துக்கள் அந்தச் சகோதரியைப் போய்ச் சேரும்,
//நாம் எது எழுதினாலும்
ஒரு அளவீடு கொண்டு
எம் மனங்களை மட்டும்
அளக்கத் துடிக்கும்
ஆணாதிக்கவாதிகளால்
காற்றில் பறந்து தொலைகின்றன
எம் கற்பனைச் சிதறல்கள்!//
சரியாகப் புரிந்துகொண்டு எழுதியிருக்கிறீர்கள்.
shanmugavel said...
அறிமுகப்பதிவருக்கு வாழ்த்துக்கள்.
நன்றி நண்பரே
@! சிவகுமார் !
பெண்களுக்கெதிரான அனைத்து செய்திகளையும் உள்ளடக்கி சீறி உள்ளீர்கள். அசத்தல்!!//
நன்றி நண்பா...
@MANO நாஞ்சில் மனோ
அருமையான கவிதை வாழ்த்துக்கள் நிரூபன்...!!!//
உங்களின் புரிந்துணர்விற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி அண்ணாச்சி,
@MANO நாஞ்சில் மனோ
தமிழ்மணம் இருவது, இன்ட்லி ரெண்டு...//
உங்களின் அன்பிற்கு நன்றி அண்ணா,
@!* வேடந்தாங்கல் - கருன் *!
ஒரு சவுக்கடிப் பதிவு..
கவிதை வடிவில்..
பாராட்டுகள்.//
நிஜமாவா...நன்றி பாஸ்.
@சேட்டைக்காரன்
This post has been removed by the author.//
சகோதரம், உங்களின் புரிந்துணர்விற்கும், கருத்துக்களுக்கும் நன்றி, ஆமா ஏன் கமெண்டை அழித்தீர்கள்?
நான் தான் மாற்றுக் கருத்துக்களை எதிர்ப்பதில்லையே...
@மாய உலகம்
என்னை பதிவுலகில் எழுத தூண்டியது சகோ..M.R. அவரை அறிமுக படுத்திய நண்பர் நிருபருக்கு நன்றிகள்.... சகோக்கு வாழ்த்துக்கள்//
நான் என்ன பத்திரிகையா நடத்துறேன்..என்னை நிருபர் என்று சொல்லுறீங்க..
அவ்............
@J.P Josephine Baba
ஆணாதிக்கத்தை எதிர்க்க பெண்ணாதிக்கத்தை தாங்காது பெண் பெண்ணாக இருந்து சாதிக்கலாம் இதில் பதிவு உலகம் எம்மாத்திரம். பெண்கள் முகமூடிகளை களைந்து தங்கள் உண்மை அடையாளத்தை பதிந்தால் சுற்றியிருக்கும் நிழல்களுக்கு என்ன வேலை?//
அக்கா நீங்கள் சொல்வது சரி, ஆனால் ஒரு பெண்ணின் புகைப்படங்கள், பர்சனல் விடயங்களைத் திருடி ஒருகன் செக்ஸ் டாச்சர் கொடுத்து மிரட்டும் போது, கோர்ட் வாசலேறி நீதி கேட்ட பெண் எப்படி மீண்டும் பதிவுலகப் பக்கம் வர முடியும்?
@மாய உலகம்
உண்மை தான் பாஸ்...ஆனா நம்ம நாட்டில் தான் இது போன்ற ஆதிக்கங்களேல்லாம்.... வெளிநாட்டில் ரெக்கை கட்டி சுதந்திரமாக பறக்கிறார்கள்.... இங்கே காழ்ப்புணர்ச்சி அதிகம் அதனால் தான்... ஆதங்க பட்டு என்ன செய்ய... வாழ்த்துக்கள் நண்பரே//
ஆம் நண்பா, தமிழன் தொழில்நுட்பங்கள் வளர வளர முன்னேறுகின்றான் என்று நினைத்தால்,
மனதளவில் இப்படியான ஒரு சிலரால் பின்னோக்கியல்லவா போய்க் கொண்டிருக்கிறான்.
@மாய உலகம்
முதல் போட்டோ கண்ணீரை வரவைக்கிறது சகோ... அந்த கொடுமை செய்த கொடூரன்களுக்கு இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அல்லல் படுவது நிஜம்....//
உங்களின் கருத்துக்களுக்கும் புரிதலுக்கும் நன்றி பாஸ்
இப்படியும் நடக்குதா...
அந்த பிரபல பதிவரின் பெயரை வெளியிடுங்கள்...அப்பதான் திருந்துவங்கள்...
@Yoga.s.FR
இப்படி ஒரு ஆவேசத்தை இது வரை நான் கண்டதில்லை!யாரோ ஒரு பெண் பதிவரை கடித்துக் குதறியதை நானும் பார்த்தேன்!பதிவுலகில் இருப்போர் பேசித் தீர்த்திருக்கக் கூடிய விடயத்தை சில பதிவர்களே ஊதிப் பெருப்பித்ததையும் அறிவேன்!தவறு எங்கே நடந்தது? தெரியவில்லை,ஊடுருவவும் மனதில்லை!எப்படியோ ஓய்ந்ததே??????//
ஐயா...இது வெளியே வராத, மானத்தினைக் கருத்திற் கொண்டு, மூடி மறைக்கப்பட்ட விடயம் ஐயா.
இது தொடர்பாக சிபி செந்தில்குமார் ஒரு பதிவும் எழுதியிருந்தார்.
இந்த உண்மைச் சம்பவங்களைத் தொகுத்து.
பதிவுலகிற்கு வராத இந்தச் சம்பவம் இடம் பெற்றது இந்த வருடத்தின் நடுப் பகுதியில் ஐயா.
@துஷ்யந்தன்
பாஸ் , கவிதையில் அனல் கக்குது.
பதிவுலகில் இப்படி எல்லாம் நடக்குதா???
எனக்கு இது புது தகவலாக இருக்கு.....
இப்படி செய்யும் ஆண்களை கண்டிக்கனும் தண்டிக்கணும்
ஏன் தள்ளியே வெக்கணும் பாஸ்.//
ஆமாம் பாஸ், தண்டிக்கலாம்.. ஆனால் நல்லவர்கள் போல நடித்துச் சமூகத்தில் மறைந்து வாழ்வோரை நாம் என்ன பண்ணலாம் பாஸ்?
வணக்கம் மாப்பிள..
ஆண்பதிவருக்கெதிரா வழக்கு போட்டு வென்ற அந்த பெண்பதிவருக்கு வாழ்த்துக்கள்..
காட்டான் குழ போட்டான்(மாப்பிள இதில நான் ஏதாவது இசக்கு பிசகா கதைச்சா மாட்டிக்குவன் விடு ஜூட் ஹி ஹி)
@துஷ்யந்தன்
உங்கள் பதிவுகளில் இது முக்கியமான பதிவு பாஸ்,
புரட்சிகரமான கவிதை//
உங்களின் புரிந்துணர்விற்கு நன்றி பாஸ்.
@பாரத்... பாரதி...
முறையற்ற வகையில் நடந்து கொள்ளும் "அவர்"கள் பதிவர்களே அல்ல. கணிணியை கையாளும் மிருகங்கள்.//
சரியாகச் சொல்லியிருக்கிறீங்க பாஸ்.
@பாரத்... பாரதி...
அந்த சகோதரி எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார் என்பதை உங்கள் கவிதை வரிகளின் தாக்கத்தில் உணர முடிகிறது.//
உங்களின் புரிதலுக்கு நன்றி சகோ.
@பாரத்... பாரதி...
இந்த பதிவில் அறிமுகப்படுத்தப்பட்ட பதிவர் எம் ஆர் க்கு வாழ்த்துக்கள்//
உங்கள் வாழ்த்துக்கள் நிச்சயம் அவரைப் போய்ச் சேரும் நண்பா.
@Ramani
அருமையான பதிவு
ஆண் பதிவர்கள் அனைவரும் இதை
அறிவுரையாகக் கொள்ளாமல்
அறவுரையாகக் கொள்ளவேண்டும்
என்பது என் எண்ணம்
தரமான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 28//
உங்களின் மேலான கருத்துக்களுக்கும், புரிதலுக்கும் நன்றி ஐயா.
@KANA VARO
என்ன கருத்து கூறுவது எண்டு எனக்கு தெரியவில்லை. பலருக்கும் இது விடயம் தொடர்பாக ஆதங்கம் இருக்கின்றது. பெண் பதிவர்களை சகோதரிகள் போல நினைத்தால் பிரச்சை வராது.//
ஆமாம் சகோ. உங்களின் புரிதலுக்கும் நன்றி நண்பா..
சகோதரியாக நினைக்காவிட்டாலும் பரவாயில்லை..
சக படைப்பாளியாக, ஒரு எழுத்தாளராக நினைத்தாலே நல்லதல்லவா.
@Lakshmi
m.r. அறிமுகப்பதிவரா???/? என்பக்கம் அடிக்கடி வராங்களே. அவரின் பதிவுகளும் நான் படித்து வரென்ன் நல்லா எழுதுரார்.//
ஆமாம் அம்மா...எங்கள் பக்கமும் ஆள் இப்போது தான் வாரார்.
@பி.அமல்ராஜ்
மிகவும் உணர்வு பூர்வமான வரிகள் நண்பா. உங்களது உணர்வுகளுக்கு நான் தலை வணக்குகிறேன். நல்லதொரு சமர்ப்பணம். வாழ்த்துக்கள்//
உங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி நண்பா.
@shanmugavel
சகோ பெண்களுக்காக பரிந்து பேசும் வார்த்தைகளுக்கு நன்றி//
அவ்....நன்றி நண்பா,
பரிந்து பேசவில்லை, சிலரால் பாதிக்கப்பட்ட பெண்களின் உண்மைத் தன்மையினை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளவே விரும்பினேன்.
@ஆகுலன்
இப்படியும் நடக்குதா...
அந்த பிரபல பதிவரின் பெயரை வெளியிடுங்கள்...அப்பதான் திருந்துவங்கள்...//
ஏனப்பா, நான் நல்லாயிருக்கிறது உங்களுக்குப் பிடிக்கலையே..
பிறகு என்னையும் டாச்சர் பண்ணுவாங்களே(((((((((((;=
@காட்டான்
வணக்கம் மாப்பிள..
ஆண்பதிவருக்கெதிரா வழக்கு போட்டு வென்ற அந்த பெண்பதிவருக்கு வாழ்த்துக்கள்..
காட்டான் குழ போட்டான்(மாப்பிள இதில நான் ஏதாவது இசக்கு பிசகா கதைச்சா மாட்டிக்குவன் விடு ஜூட் ஹி ஹி)//
உங்கள் குழைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி அண்ணே.
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
ஆனா, நீங்க இதுக்கு முன்னாடி போட்ட பதிவுக்கு, நான் எம்புட்டு கமெண்டு போட்டேன் தெரியுமா?
ஸோ, நீங்க வந்து மொதல்ல எனக்கு கமெண்டு போடுங்க! அப்புறம் நான் உங்களுக்கு என்னோட 45 கமெண்டையும் அள்ளி வீசுறேன்!
டீலா? நோ டீலா?//
என்னங்க சார், உங்களுக்கு 45 கமெண்ட் போட்டால், எனக்கு கமெண்ட் போடும் நாற்பது பேருக்கும் கமெண்ட் போட நான் டைம்முக்கு எங்கே சார் போவது?
@ஆகுலன்
இப்படியும் நடக்குதா...
அந்த பிரபல பதிவரின் பெயரை வெளியிடுங்கள்...அப்பதான் திருந்துவங்கள்...//
ஏனப்பா, நான் நல்லாயிருக்கிறது உங்களுக்குப் பிடிக்கலையே..
பிறகு என்னையும் டாச்சர் பண்ணுவாங்களே(((((((((((;=
September 6, 2011 6:28 PM
ஆமா ஆமா இதுவரைக்கும் இவர ஒருத்தரும் டாச்சர் பண்ணல இவரு ஒரு சுத்த சைவப் பதிவரு சித்தர்களின் சுவடிகள மொழிபெயர்த்து போடுறார்..இல்லையா மாப்பிள..!!?
நிரு...கவிதை நல்லா இருக்கு...(வேற என்ன சொல்லன்னு தெரியல..:-) )
ஒவ்வொரு வரியும் ஈட்டியாய் பாய்கிறது .
உங்களது பிற்சேர்க்கை மிகவும் அருமை
//அன்பு இவ் உலகின் எல்லாப் பகுதிகளிலும் நிறைந்திருந்தால் வன்முறைகள் நிகழாதல்லவா. அது போலத் தான் அன்பு உலகத்தில் நாம் வாழ்ந்தால் எம் வாழ்வில் சிக்கல்கள் தோன்றாதல்லவா //
நிரூபன் said...
@ஆகுலன்
இப்படியும் நடக்குதா...
அந்த பிரபல பதிவரின் பெயரை வெளியிடுங்கள்...அப்பதான் திருந்துவங்கள்...//
ஏனப்பா, நான் நல்லாயிருக்கிறது உங்களுக்குப் பிடிக்கலையே..
பிறகு என்னையும் டாச்சர் பண்ணுவாங்களே(((((((((((;=///
நீங்க தானே துணிஞ்ச ஆள்....பிரச்சனை இல்ல போடுங்க...
காட்டான் said...
@ஆகுலன்
இப்படியும் நடக்குதா...
அந்த பிரபல பதிவரின் பெயரை வெளியிடுங்கள்...அப்பதான் திருந்துவங்கள்...//
ஏனப்பா, நான் நல்லாயிருக்கிறது உங்களுக்குப் பிடிக்கலையே..
பிறகு என்னையும் டாச்சர் பண்ணுவாங்களே(((((((((((;=
September 6, 2011 6:28 PM
ஆமா ஆமா இதுவரைக்கும் இவர ஒருத்தரும் டாச்சர் பண்ணல இவரு ஒரு சுத்த சைவப் பதிவரு சித்தர்களின் சுவடிகள மொழிபெயர்த்து போடுறார்..இல்லையா மாப்பிள..!!?////
ஓ ரொம்ப பாதிக்க பட்டுருகுரீங்க போல....
பெண்கள் ஒரு எல்லையை உருவாக்கிட்டா பாதி பிரச்சனை தீர்ந்துடும்னு நெனைக்கிறேன்!
இவங்க இப்படி தான் எழுதணும், இவங்க இப்படிதான்னு நெனைக்கிற மனப்போக்கு கேவலமானது......
அருமையான பதிவு நிரூ!யாரோ அந்தச் சகோதரி,அவருக்கு வணக்கம்!
நிரூபன் said...
நான் என்ன பத்திரிகையா நடத்துறேன்..என்னை நிருபர் என்று சொல்லுறீங்க..
அவ்............//
ஓ நிரூபன்னு சொல்றதுக்கு நிருபர்ன்னு சொல்லிட்டனா.... நீங்க பதிவுலகத்துக்கு நிருபர் தானே பாஸ் ... எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியதாயிருக்கு அவ்வ்வ்வ்வ்
வணக்கம் சார்! கும்புடுறேனுங்க!
’ ஆணாதிக்கவாதிகளால் அவமானப்படுத்தப்படும் பெண் பதிவர்கள்!’
தலைப்பே ரொம்ப ஹாட்டா இருக்கே!இருங்க மறுபடியும் படிச்சுட்டு வர்ரேன்!
மெல்லிதாய் மேலெழும்பி
நாள் தோறும் புலர்ந்து மறையும்
வலையுலக நாழிகைகள் நடுவே
தொலைந்து போகின்றன
எங்களின் உணர்வலைகள்!///
தொலைந்து போகும் உணர்வலைகள் போல, சில புதிதாகவும் பிறப்பெடுக்கின்றன!
ஆண்கள் மட்டும் தான்
அதிகம் எழுதலாம் என்பதும்
அவர்கள் மட்டும் தான்
தம் உணர்வுகளை
உச்சுக் கொட்டலாம்
என்று கூறுவதும்
யார் இங்கு இயற்றி வைத்த
சட்டமோ தெரியவில்லை!///
அப்படியொரு சட்டம் மறைமுகமாக பதிவுலகில் இருப்பது உண்மைதான்! இப்படி பெண்களுக்கென்று சட்டம் போடுபவர்களில் சில பெண்களும் அடக்கம்!
எங்களுக்குள்ளும் சாதாரண
மனிதர்களைப் போன்ற
மன உணர்விருக்கும்,
எம் உணர்வுகளுக்கு
உருவம் கொடுத்து
எழுதிட இணையம்
வாய்ப்புத் தந்தது- ஆனால்
எம் இடையே உள்ள
பச்சோந்திகளும், நரிகளும்
காழ்ப்பில் எம்மைக் கொல்கிறார்கள்;///
இதற்குக் காரணமே பெண்களின் உணர்வுகளை மதிக்காமையாகும்! பெண்ககளை மகாலக்சுமி என்றும் தேவதை என்றும் வர்ணித்து மயங்கிக் கிடக்காமல், அவளும் உயிருள்ள ஒரு மனித இனம் என்று நினைத்தால் பிரச்சனை தீர்ந்தது!
காம சுகம் தேடும்
மோகத்தில் அலைந்து
காரி உமிழ நினைக்கிறார்கள்!///
காரி இல்ல சார் - காறி
நாளைய பெண்களின் விடுதலை
நம் உளத்தில் தோன்றும்
இன்றைய வாழ்வின் சிந்தனை
மனதில் எழும் இன்ப
உணர்வுகள் இவை யாவும்
எழுதினாலும்,
எமக்கான பட்டம் வேசை!///
கொடுமை!
காதலைப் பற்றி பெண்
கவிதை பாடினால்
அவளைப் பின் தொடர்ந்து வந்து
காமத்திற்காய் சுகம் தேடி
அலைந்து இம்சையை கூட்டுகின்றன
இதயமற்ற நெஞ்சங்கள்!///
இதேவேளை ஆண்கள் தங்கள் இச்சைகளை பக்கம் பக்கமாக எழுதித் தள்ளுகிறார்களே - அதை யாரும் தப்பு சொல்வதில்லை!
முதலில் எம்மைப் பின் தொடர்ந்து
அழகிய கருத்துச் சொல்கிறார்கள் சிலர்
மெதுவாய் மை பூசும் வார்த்தை பேசி
எம் மின்னஞ்சல் எடுத்து
அதில் அன்பெனும் களிம்பு தடவி
சகோதரனாய் உறவாடி,///
ஓகோ... இதுவேற நடக்குதா?
சற்றே நாம் நிலை தளர்ந்து
ஒரு பொதுவான விடயத்தை
வெளியில் பதிவாக்கிச் சொல்லியதும்,
உனக்கும் அனுபவமோ என கேட்டு
காயம் செய்கின்றன காட்டுப் பன்னிகள்!///
பாவம்.... ரொம்ப நாளாக ஒன்றும் சாப்பிடவில்லைப் போலும்!
மூன்று நாள் பதிவெழுதவில்லை எனில்
உனக்கு பீரியட்ஸ் வந்தால்
பதிவுலகிற்கும் பீரியட்ஸோ என
பிளிறுகின்றன சிலம்போசை
எழுப்பும் நயவஞ்சகப் புல்லுருவிகள்!///
பெண்களை மட்டம்தட்ட நினைக்கும் சில ஆண்கள் அவ்வப்போது, பெண்களின் மாதவிடாய் பற்றி கிண்டலடிப்பதும், அருவெறுப்புக் காட்டுவதுமாக நடந்துகொள்கின்றனர்!
கொடியவர்கள்!
பெண்கள் இத்தகைய வரையறைக்குள்
வாழ வேண்டும் என்பதில்
மட்டும் கருமமே கருத்தாய் உள்ள
சீழ் கட்டிய செத்து விட்ட
உக்கி உலர்ந்த மனங் கொண்ட
கீழ்த் தரமான....///
சார், பெண்களை அடக்கி ஒடுக்கி ஒரு கட்டுக்குள் வைத்திருந்தால்தானே, அவளது ஆளுமை கண்டு அச்சப்படாமல் இருக்க முடியும்!ஹி ஹி ஹி!
ஆண்களோ,
வெளி உலகின் பார்வைக்கு
முக்காடு போட்டு நடந்து,
உள் உலகில்
எம் மெயில் பெட்டி தேடி
மின்னஞ்சல் ஊடே அந்தரங்கம்
விசாரித்து அற்ப சுகம் காண்கிறார்கள்!!///
ரொம்பநாளா காய்ஞ்சுபோய்க் கிடப்பார்கள் போல!
இன்பமெனும் வார்த்தை
எம் பதிவுகளில் வந்தால்
உனக்கும் அனுபவமோ என
ஆளைக் கொல்லும்
சுனாமியாய் பொங்குகிறார்கள்!///
அதெல்லாம் பெண்கள் எழுதக் கூடாதா என்ன? ஆண்கள் மட்டும் எல்லா சினிமா நடிகைகள் பற்றியும் அக்குவேறாக ஆணி வேறாக அலசி ஆராயலாம்! பெண்கள் எழுதினால் தப்பா?
நாம் எது எழுதினாலும்
ஒரு அளவீடு கொண்டு
எம் மனங்களை மட்டும்
அளக்கத் துடிக்கும்
ஆணாதிக்கவாதிகளால்
காற்றில் பறந்து தொலைகின்றன
எம் கற்பனைச் சிதறல்கள்!///
சார், தனியே ஆண்களை மட்டும் சாடாமல், பெண்களுக்குச் சட்டம் போடும் பெண்களையும் சேர்த்து வாருங்கள்!( அதாவது - வாரி விடுங்கள்! )
பெண் ஒரு வரம்பினுள்
வாழ வேண்டும் என(க்)
கூப்பாடு போட்டு
வெளியே சமூக காவலர்களாய்
நடிக்கும் சிறிய மனங்களின்
நரகச் செயல்களால்
நாளாந்தம் அமிழ்ந்து நசிகிறது - எம்
எழுத்துக் கிறுக்கல்கள்!///
எத்தனையோ பெண்கள் வலையுலகைவிட்டே ஓடியே விட்டார்கள்!
ஆணாதிக்கம் என்றால்
வெளியே நல்லவர் போல் நடித்து
பெண் பதிப்புக்களை
நல்லவராய் விமர்சித்து
பின் அவள் மெயில் பெட்டியூடே
அந்தரங்கம் கிளறுவது தான் என்பது
என்னைப் போல்
எத்தனை அப்பாவிப் பெண்களுக்குப் புரியுமோ?///
இது உண்மைச் சம்பவம் என்றே நினைக்கிறேன்!
எதிர்காலம் தொலைக்கப்பட்டு
எழுத்துச் சுதந்திரம் பறிக்கப்படும்
நாளாந்தம் இங்கே துகிலுரியப்படும்
பெண்களின் உணர்வுகளில்
எத்தனை தான் வெளியுலகிற்கு தெரிகின்றனவோ!///
நம்மளைப் போல, எதற்கும் அஞ்சாத, பதிவர்கள்தான் வெளிக்கொணர வேண்டும்! - இது எமது கடமையும் கூட!
ஐயகோ ஆணாதிக்கமே
காலாச்சாரம் கட்டி(க்)
காக்கத் துணியும்
காவல் போலிசுகளே!
இப்படி எத்தனை பெண்களின்
வாழ்க்கையினை சீரழித்து(ச்)
சுகம் காண்பீர்!!///
குட் கொஸ்டீன்!
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
வணக்கம் சார்! கும்புடுறேனுங்க!
’ ஆணாதிக்கவாதிகளால் அவமானப்படுத்தப்படும் பெண் பதிவர்கள்!’
தலைப்பே ரொம்ப ஹாட்டா இருக்கே!இருங்க மறுபடியும் படிச்சுட்டு வர்ரேன்!//
மீண்டும் வணக்கம் சார்,
இது தான் சார் பதிவுலக ஹொட் மேட்டரே..
அதாங்க தலைப்பு அப்படி இருக்குங்க.
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
தொலைந்து போகும் உணர்வலைகள் போல, சில புதிதாகவும் பிறப்பெடுக்கின்றன!//
அதெங்க சார்...
சொல்லவே இல்லை
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
அப்படியொரு சட்டம் மறைமுகமாக பதிவுலகில் இருப்பது உண்மைதான்! இப்படி பெண்களுக்கென்று சட்டம் போடுபவர்களில் சில பெண்களும் அடக்கம்!//
அடடா...இப்படியும் சம்பவங்கள் இருக்கிறதா...
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
இதற்குக் காரணமே பெண்களின் உணர்வுகளை மதிக்காமையாகும்! பெண்ககளை மகாலக்சுமி என்றும் தேவதை என்றும் வர்ணித்து மயங்கிக் கிடக்காமல், அவளும் உயிருள்ள ஒரு மனித இனம் என்று நினைத்தால் பிரச்சனை தீர்ந்தது//
பார்த்தீங்களா சார்,
உங்களுக்குப் புரிஞ்சது, இன்னமும் பலபேருக்குப் புரியலையே.

காரி இல்ல சார் - காறி//
உங்க அன்பிற்கு நன்றி சார்,
அதை மாத்திட்டேன்.
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
இதேவேளை ஆண்கள் தங்கள் இச்சைகளை பக்கம் பக்கமாக எழுதித் தள்ளுகிறார்களே - அதை யாரும் தப்பு சொல்வதில்லை!//
அவ்...தப்புச் சொன்னால் உங்களை விடுவாங்களா பாஸ்?
பண்டைய நாகரிக மரபில் திளைத்து
படித்து பட்டம் பெற்றும்
பெண்ணுக்கான வரம்பு
இது என நிர்ணயம் செய்யும்
இன்றைய ஆணாதிக்கவாதிகள்
இருக்கும் வரை
எம் உணர்வுகள்
வெளித்தெரியாதென்பது மாத்திரம் நிஜம்!!!///
சார், நச்சுன்னு முடிச்சிருக்கீங்க! ஆனா ஆணாதிக்கத்த மட்டும் குறை சொல்றது அவ்வளவு சரியில்லை!
பெண்களை ஒடுக்குவதற்குப் பெண்களே பலர் வரிந்து கட்டிக்கொண்டு வருவார்கள்!
ஒரு கிராமத்தில் - பட்டிக்காட்டில் இருக்கும் ஒரு பெண், இன்னொரு பெண்ணுக்கு அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்று அட்வைஸ் பண்ணி அறுத்துக் கொட்டினால் பரவாயில்லை!
அவர்கள் படிப்பறிவு குறைந்தவர்கள் என்று ஒதுக்கி விடலாம்!
ஆனால், இப்பவெல்லாம் மேற்கத்தைய நாடுகளில் இருந்துகொண்டு, பெண்களின் ஆளுமை உச்சத்தில் இருக்கும் வல்லரசு தேசங்களில் இருந்துகொண்டு - தமிழ் நாட்டுப் பெண்களுக்கு சிலர் சாட்டங்கள் போடுகிறார்களே நிரூபன் சார்!
இதுக்கு என்ன சொல்றீங்க?
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
ஓகோ... இதுவேற நடக்குதா?//
பதிவுலகையே விரல் நுனியில் வைத்திருக்கும் உங்களுக்கு இதெல்லாம் தெரியலையா பாஸ்?
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
பாவம்.... ரொம்ப நாளாக ஒன்றும் சாப்பிடவில்லைப் போலும்!//
ஹா....ஹா....
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
பெண்களை மட்டம்தட்ட நினைக்கும் சில ஆண்கள் அவ்வப்போது, பெண்களின் மாதவிடாய் பற்றி கிண்டலடிப்பதும், அருவெறுப்புக் காட்டுவதுமாக நடந்துகொள்கின்றனர்!
கொடியவர்கள்//
இவர்கள் தான் நாகரிக மனிதர்கள் என்று நினைக்கிறேன் சார்.
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
சார், பெண்களை அடக்கி ஒடுக்கி ஒரு கட்டுக்குள் வைத்திருந்தால்தானே, அவளது ஆளுமை கண்டு அச்சப்படாமல் இருக்க முடியும்!ஹி ஹி ஹி!//
இந்த மேட்டரில இப்படியும் ஒரு உள் குத்து இருக்கா சார்,
எனக்கு இன்னைக்குத் தான் புரிஞ்சிருக்கு,
ரொம்ப நன்றி பாஸ்.
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
ரொம்பநாளா காய்ஞ்சுபோய்க் கிடப்பார்கள் போல!//
யாருக்குத் தெரியும் பாஸ்?
@ஆகுலன்
நீங்க தானே துணிஞ்ச ஆள்....பிரச்சனை இல்ல போடுங்க...//
நல்லாத் தான்யா சொல்றாரு நம்ம மாப்பு.
@ஆகுலன்
ஆமா ஆமா இதுவரைக்கும் இவர ஒருத்தரும் டாச்சர் பண்ணல இவரு ஒரு சுத்த சைவப் பதிவரு சித்தர்களின் சுவடிகள மொழிபெயர்த்து போடுறார்..இல்லையா மாப்பிள..!!?////
ஓ ரொம்ப பாதிக்க பட்டுருகுரீங்க போல....//
அடிங்....ராஸ்கல்...என்ன வார்த்தை பேசுறீங்க.
@ஆமினா
பெண்கள் ஒரு எல்லையை உருவாக்கிட்டா பாதி பிரச்சனை தீர்ந்துடும்னு நெனைக்கிறேன்!
இவங்க இப்படி தான் எழுதணும், இவங்க இப்படிதான்னு நெனைக்கிற மனப்போக்கு கேவலமானது......//
நன்றாகச் சொன்னீங்க அக்கா.
பெண்கள் எல்லோரும் ஒன்றாகக் கூடித் தீர்மானம் நிறைவேற்றினால் தான் சரியாகும்.
@சென்னை பித்தன்
அருமையான பதிவு நிரூ!யாரோ அந்தச் சகோதரி,அவருக்கு வணக்கம்!//
நன்றி ஐயா..
நம்ம வலையில உள்ளவங்க தான் யாரோ..ஒருவர்.
@சென்னை பித்தன்
அருமையான பதிவு நிரூ!யாரோ அந்தச் சகோதரி,அவருக்கு வணக்கம்!//
நன்றி ஐயா..
நம்ம வலையில உள்ளவங்க தான் யாரோ..ஒருவர்.
@மாய உலகம்
ஓ நிரூபன்னு சொல்றதுக்கு நிருபர்ன்னு சொல்லிட்டனா.... நீங்க பதிவுலகத்துக்கு நிருபர் தானே பாஸ் ... எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியதாயிருக்கு அவ்வ்வ்வ்வ்//
பிழைக்கத் தெரிந்த புள்ள நீங்க பாஸ்.
@மாய உலகம்
ஓ நிரூபன்னு சொல்றதுக்கு நிருபர்ன்னு சொல்லிட்டனா.... நீங்க பதிவுலகத்துக்கு நிருபர் தானே பாஸ் ... எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியதாயிருக்கு அவ்வ்வ்வ்வ்//
பிழைக்கத் தெரிந்த புள்ள நீங்க பாஸ்.
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
அதெல்லாம் பெண்கள் எழுதக் கூடாதா என்ன? ஆண்கள் மட்டும் எல்லா சினிமா நடிகைகள் பற்றியும் அக்குவேறாக ஆணி வேறாக அலசி ஆராயலாம்! பெண்கள் எழுதினால் தப்பா?//
அதானே பாஸ்...
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
சார், தனியே ஆண்களை மட்டும் சாடாமல், பெண்களுக்குச் சட்டம் போடும் பெண்களையும் சேர்த்து வாருங்கள்!( அதாவது - வாரி விடுங்கள்! )//
அதை இன்னோர் பதிவில் கவனிச்சுக்கிறேன் பாஸ்
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
எத்தனையோ பெண்கள் வலையுலகைவிட்டே ஓடியே விட்டார்கள்!//
நெசமாவா பாஸ்..
பதிவுலக ஜாதகமே உங்கள் கையில் தான் இருக்கு என்று நினைக்கிறேன்.
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
இது உண்மைச் சம்பவம் என்றே நினைக்கிறேன்!//
மூச்....
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
நம்மளைப் போல, எதற்கும் அஞ்சாத, பதிவர்கள்தான் வெளிக்கொணர வேண்டும்! - இது எமது கடமையும் கூட!//
யார் நீங்க துணிஞ்ச பதிவரா..
நம்பவே முடியலையே பாஸ்?
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
குட் கொஸ்டீன்!//
நன்றி தலைவா
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
சார், நச்சுன்னு முடிச்சிருக்கீங்க! ஆனா ஆணாதிக்கத்த மட்டும் குறை சொல்றது அவ்வளவு சரியில்லை!
பெண்களை ஒடுக்குவதற்குப் பெண்களே பலர் வரிந்து கட்டிக்கொண்டு வருவார்கள்!
ஒரு கிராமத்தில் - பட்டிக்காட்டில் இருக்கும் ஒரு பெண், இன்னொரு பெண்ணுக்கு அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்று அட்வைஸ் பண்ணி அறுத்துக் கொட்டினால் பரவாயில்லை!
அவர்கள் படிப்பறிவு குறைந்தவர்கள் என்று ஒதுக்கி விடலாம்!
ஆனால், இப்பவெல்லாம் மேற்கத்தைய நாடுகளில் இருந்துகொண்டு, பெண்களின் ஆளுமை உச்சத்தில் இருக்கும் வல்லரசு தேசங்களில் இருந்துகொண்டு - தமிழ் நாட்டுப் பெண்களுக்கு சிலர் சாட்டங்கள் போடுகிறார்களே நிரூபன் சார்!
இதுக்கு என்ன சொல்றீங்க?//
ஆமா சார், இவர்கள் பழைய குட்டையில் ஊறிய மட்டைகள் சார்,
இவர்களைத் திருத்தவே முடியாது சார்.
இவர்களுக்கும் வெளக்கம் கொடுத்து ஒரு பதிவு போடுறேன் சார்.
எனக்குத் தெரிந்த பல புலம்பெயர் இளம்தமிழ் பெண்கள் தாம் வாழுமிட மொழிகளில் பிரபல பதிவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் பலர் என்னிடம் கூறிய கருத்து ஒரு ஆணாக இருப்பதற்கு என்னை வெட்கப்பட, வேதனைப்பட வைத்தது. அவர்கள் தமிழ் இணைய உலகில் இணைந்துகொள்ள ஆரம்பித்த வேளையில் தமக்கு ஆண்களிடமிருந்து கிடைத்த பாலியல்ரீதியான மற்றும் உளவியல்ரீதியான தாக்குதல்களினாலேயே தாம் தமிழிலிருந்து புகலிடமொழிக்குத் தாவியதாகக் கூறினார்கள். பெண்கள் என்றாலே போதைதரும் சரக்குகளாகப் பார்க்காமல் அன்னையாய், சகோதரியாய், மகளாய், நல்லதொரு நண்பனாய் பார்க்கப் பேசப் பழகுவோம். சர்ச்சைக்குரிய ஒருவிடயத்தை வெளிக்கொணர்ந்தற்கு வாழ்த்துக்கள் நிரூபன்
அப்புறம் நிரூபன் ஸார், இந்தப் பதிவுக்கு நான் ஒரு மாற்றுக் கருத்து சொல்கிறேன்! மாற்றுக்கருத்துக்களை வரவேற்பதில் நீங்கள் பின்நிற்க மாட்டீர்களாம் என்று, உங்களது நொருங்கிய..... ஸாரி, நெருங்கிய நண்பர் ஒருத்தர் எங்கிட்ட சொன்னார்!
அந்த அசட்டு நம்பிக்கையில், ஒரு மாற்றுக்கருத்தை முன் வைக்கிறேன்!
அதாவது ஒரு மனிதனுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகள் எவை எவை என்று உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்!
அந்த அடிப்படை உரிமைகளில் ஒன்று “ தகவல் அறியும் உரிமையாகும் “!
இந்தப் பதிவில் பெண்பதிவருக்கு எதிராக செயல்பட்ட சில ஆண் பதிவர்களைக் கடுமையா சாடி இருக்கீங்க!
இந்தப் பதிவைப் படித்த நான் உள்ளிட்ட பல நண்பர்கள், அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக குரல் எழுப்பியதோடு, அந்த ஆண்பதிவர்களையும் கடுமையாக சாடி இருக்கிறோம்!
மேட்டர் என்னவென்றால், நாங்கள் சப்போர்ட் பண்ணிய அந்தப் பெண்பதிவர் யார் என்றோ, அல்லது நாங்கள் வசைபாடிய அந்த ஆண்பதிவர்கள் யார் என்றோ சத்தியமாக எனக்குத் தெரியாது!
ஏனென்றால் நீங்கள் பதிவை வெளிப்படையாக எழுதவில்லை! அப்படி வெளிப்படையாக, பேர் குறிப்பிட்டு பகிரங்கமாக தாக்கி எழுதுவதற்கு உங்களுக்கு துணிச்சல் இல்லை என்று நான் நினைக்கவில்லை!
யாழ்ப்பாணத்தவர்களின் சாதித் தடிப்பைப் பற்றி மிகவும் துணிச்சலாக பதிவு போட்ட உங்களிடம் போய், துணிச்சல் இருக்கா என்று கேட்பது முட்டாள்தனம்!
ஆனால், நீங்கள் இப்பதிவை, மறைமுகமாக எழுதியமைக்கு, அந்தப் பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற நல்ல எண்ணமே காரணமாக இருக்கலாம்! அப்படி இருக்கும் பட்சத்தில், அதை நான் வரவேற்கிறேன்!
ஆனால் எனது கேள்வி என்னவென்றால், அந்த குறிப்பிட்ட ஆண்பதிவர்களுடன் நீங்கள் பேசினீர்களா? அவர்கள் என்ன சொல்கிறார்கள்?
அந்தப் பெண்ணை எதற்காக எதிர்த்தார்களாம்?
ஒரு வேளை அந்த ஆண்பதிவர்களின் பக்கமும் சிறிதளவாவது நியாயம் இருக்க வாய்ப்பு இருக்கல்லவா?
இதனை மறுக்க முடியாதுதானே!
மேலும், அந்த ஆண்பதிவர்கள் யார் என்று அறிந்துகொள்ள ஆசைப்பட, என்னைப் போன்ற வாசகர்களுக்கு இருக்கும் உரிமையை நீங்கள் மறுதலிக்க மாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்!
அப்படியானால், அவர்கள் யார் யார் என்பதை அறிந்துகொள்வது எப்படி சார்?
‘ அதெல்லாம் சொல்ல முடியாது பொத்திக்கிட்டுப் போய்யா’ என்ற பதில் உங்களிடம் இருந்து வராது என்று நம்புகிறேன்!
@அம்பலத்தார்
எனக்குத் தெரிந்த பல புலம்பெயர் இளம்தமிழ் பெண்கள் தாம் வாழுமிட மொழிகளில் பிரபல பதிவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் பலர் என்னிடம் கூறிய கருத்து ஒரு ஆணாக இருப்பதற்கு என்னை வெட்கப்பட, வேதனைப்பட வைத்தது. அவர்கள் தமிழ் இணைய உலகில் இணைந்துகொள்ள ஆரம்பித்த வேளையில் தமக்கு ஆண்களிடமிருந்து கிடைத்த பாலியல்ரீதியான மற்றும் உளவியல்ரீதியான தாக்குதல்களினாலேயே தாம் தமிழிலிருந்து புகலிடமொழிக்குத் தாவியதாகக் கூறினார்கள். பெண்கள் என்றாலே போதைதரும் சரக்குகளாகப் பார்க்காமல் அன்னையாய், சகோதரியாய், மகளாய், நல்லதொரு நண்பனாய் பார்க்கப் பேசப் பழகுவோம். சர்ச்சைக்குரிய ஒருவிடயத்தை வெளிக்கொணர்ந்தற்கு வாழ்த்துக்கள் நிரூபன்//
வாங்கோ ஐயா...நல்லதோர் கருத்தினையும், எம் தமிழ் பதிவுலகின் நிலையினையும் உரைத்திருக்கிறீங்க,
மிக்க நன்றி ஐயா.
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
அப்புறம் நிரூபன் ஸார், இந்தப் பதிவுக்கு நான் ஒரு மாற்றுக் கருத்து சொல்கிறேன்! மாற்றுக்கருத்துக்களை வரவேற்பதில் நீங்கள் பின்நிற்க மாட்டீர்களாம் என்று, உங்களது நொருங்கிய..... ஸாரி, நெருங்கிய நண்பர் ஒருத்தர் எங்கிட்ட சொன்னார்!
அந்த அசட்டு நம்பிக்கையில், ஒரு மாற்றுக்கருத்தை முன் வைக்கிறேன்!//
யார் சார் உங்ககிட்ட அப்படிச் சொன்னாங்க?
சரி, உங்கள் நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன் சார்.
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
இந்தப் பதிவில் பெண்பதிவருக்கு எதிராக செயல்பட்ட சில ஆண் பதிவர்களைக் கடுமையா சாடி இருக்கீங்க!
இந்தப் பதிவைப் படித்த நான் உள்ளிட்ட பல நண்பர்கள், அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக குரல் எழுப்பியதோடு, அந்த ஆண்பதிவர்களையும் கடுமையாக சாடி இருக்கிறோம்!
மேட்டர் என்னவென்றால், நாங்கள் சப்போர்ட் பண்ணிய அந்தப் பெண்பதிவர் யார் என்றோ, அல்லது நாங்கள் வசைபாடிய அந்த ஆண்பதிவர்கள் யார் என்றோ சத்தியமாக எனக்குத் தெரியாது!
ஏனென்றால் நீங்கள் பதிவை வெளிப்படையாக எழுதவில்லை! அப்படி வெளிப்படையாக, பேர் குறிப்பிட்டு பகிரங்கமாக தாக்கி எழுதுவதற்கு உங்களுக்கு துணிச்சல் இல்லை என்று நான் நினைக்கவில்லை!
யாழ்ப்பாணத்தவர்களின் சாதித் தடிப்பைப் பற்றி மிகவும் துணிச்சலாக பதிவு போட்ட உங்களிடம் போய், துணிச்சல் இருக்கா என்று கேட்பது முட்டாள்தனம்!
ஆனால், நீங்கள் இப்பதிவை, மறைமுகமாக எழுதியமைக்கு, அந்தப் பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற நல்ல எண்ணமே காரணமாக இருக்கலாம்! அப்படி இருக்கும் பட்சத்தில், அதை நான் வரவேற்கிறேன்!//
ஆமாம் பாஸ்...நன்றாகத் தான் என் எழுத்துக்களைப் புரிந்து வைத்திருக்கிறீங்க.
உண்மையில் சம்பவத்தோடு தொடர்புடைய பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத் தான் இச் சம்பவத்தைப் பற்றி நான் விரிவான தகவல்களைப் பகிர்ந்திருக்கிறேன்.
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
ஆனால் எனது கேள்வி என்னவென்றால், அந்த குறிப்பிட்ட ஆண்பதிவர்களுடன் நீங்கள் பேசினீர்களா? அவர்கள் என்ன சொல்கிறார்கள்?
அந்தப் பெண்ணை எதற்காக எதிர்த்தார்களாம்?
ஒரு வேளை அந்த ஆண்பதிவர்களின் பக்கமும் சிறிதளவாவது நியாயம் இருக்க வாய்ப்பு இருக்கல்லவா?
இதனை மறுக்க முடியாதுதானே!
மேலும், அந்த ஆண்பதிவர்கள் யார் என்று அறிந்துகொள்ள ஆசைப்பட, என்னைப் போன்ற வாசகர்களுக்கு இருக்கும் உரிமையை நீங்கள் மறுதலிக்க மாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்!
அப்படியானால், அவர்கள் யார் யார் என்பதை அறிந்துகொள்வது எப்படி சார்?
‘ அதெல்லாம் சொல்ல முடியாது பொத்திக்கிட்டுப் போய்யா’ என்ற பதில் உங்களிடம் இருந்து வராது என்று நம்புகிறேன்//
அவர்களிடம் பேசினேன் பாஸ்...
சம்பவத்தோடு தொடர்புடைய பெண் பற்றி ஏதும் பேசமாட்டார்கள் என்று உறுதியளித்திருக்கிறார்கள்.
இன்னோர் விடயம், இது வேற மேட்டர் பாஸ்..
நான் டிஸ்கியில் சொல்லியிருக்கும் விடயத்தைப் பாருங்க. அதற்கான கவிதை தான் இது.
நீங்கள் சொல்லும் மேட்டருக்கான பதிவு ட்ராப்டில் இருக்கிறது.
@நிரூபன்
பெண்கள் ஒரு எல்லையை உருவாக்கிட்டா பாதி பிரச்சனை தீர்ந்துடும்னு நெனைக்கிறேன்!///
விடிய விடிய ராமன் கதை என்பது போலிருக்கிறது, இந்தக் கமெண்ட்!
பெண்கள் சுதந்திரமாகவும், விடுதலை உணர்வோடும் வலையுலகில் செயற்பட வேண்டும் என்று, நாமெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறோம்!
மறுபடியும் பெண்களுக்கு எல்லை வகுக்க வேண்டுமாம்! என்ன கொடுமை சார், இது?
ஆமா, அதை ஏன் நிரூபன் சார்
‘ நன்றாகச் சொன்னீங்க அக்கா.’
என்று வழி மொழிந்தீர்கள்?
எனக்குப் புரியவில்லை நிரூபன் சார்?

எனக்குப் புரியவில்லை நிரூபன் சார்?//
நான் ஏன் அப்படிச் சொன்னேன் என்றால்,
பெண்கள் தாம் இன்னவற்றை எழுத வேண்டும், சில பிரச்சினைகள் இருக்கும் பதிவர்களின் பக்கத்தினைத் தவிர்க்க வேண்டும் என தமக்குள் முடிவெடுத்துக் கொண்டால் சிக்கல்கள் பிரச்சினைகள் இருக்காதல்லவா..
அதான் பாஸ்.
Post a Comment