Thursday, September 1, 2011

ஆபாசப் பதிவெழுதுவோர் மீது அதிரடி ஆக்சன்!

டாங்...டாங்....என ஒலித்துக் கொண்டிருந்த கோயில் மணி ஓசையினைக் கேட்டுக் கண் விழித்தாள் சைலஜா. "அடக் கடவுளே, என் கணவனுக்கு வேலைக்கு நேரமாச்சே. அவருக்கு ஏதாச்சும் சமைச்சுப் போடனுமே" என்ற எண்ணம் மனதில் எழ, அவசர அவசரமாக அடுக்களைப் பக்கமாக ஓடினாள் சைலஜா.
"இன்னைக்கு என் கணவனுக்கு வெஸ்ரேன் பூட் பண்ணிக் கொடுக்கனும்" என்ற நெனைப்போடு புதிதாக சைதாப்பேட்டையில் திறந்திருந்த ஹன்சிகா பார்மஸிக்கு ஓடிச் சென்று ஓட்ஸ் பாக்கட் ஒன்றினை வாங்கி வந்து வீட்டில் இருந்த அமுல் பாலோடு மிக்ஸ் பண்ணி சூடாக்கி கணவனுக்கு வழங்கிய பின், தன் ஆசை நாயகனான லைமுகனை வேலைக்கு அனுப்பி விட்டு, வீட்டு வேலைகளில் கவனத்தைச் செலுத்த தொடங்கினாள் சைலஜா.

சைலஜா சீரியல் படித்துக் கண்ணீர் விடுகின்ற இக் காலத்தின் குடும்பப் பெண் அல்ல. அவளுக்குள்ளும் சாதிக்க வேண்டும் என்கின்ற வெறி இருந்தது. பாரதியார் யூனிவர்சிட்டியில் தான் கற்றுத் தேறிய கணினிக் கல்வியினைக் கொண்டு வேலை தேடியிருப்பின், இன்று ஓர் சாப்ட்வேர் எஞ்சினியராக ஐடி துறையில் பிரகாசிக்க முடியும். எனினும் சுயமாக எலக்டிக்கல் கம்பனி வைத்திருக்கும் கணவன் லைமுகனின் வருமானம்; வீட்டுச் செலவிற்கு போதுமாக இருந்த காரணத்தினால் வேலைக்குச் செல்வதை விடுத்து, வீட்டு வேலைகளைச் செய்து முடித்த பின் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் வெளியே சென்று ஆலய தரிசனம் செய்வது, லேடீஸ் கிளப் மீட்டிங்கிற்கு போவது, தன் மனதில் எழும் நினைவுகளை ஒரு நோட் புக்கில் எழுதிப் பத்திரப்படுத்தி வைப்பது என்று தன் நாட்களை நகர்த்தி வந்தாள் சைலஜா.
நிரூபனின் நாற்று வலை
இவ்வாறான கால கட்டத்தில் தான் சைலஜாவின் ஆசை நாயகன் லைமுகன், மனைவிக்குப் பரிசளிக்கும் நோக்கில் விலை உயர்ந்த ஒரு சீடி ப்ளேயரை மைக்ரோ போனுடன் கூடிய வகையில் வாங்கி வந்தான். பெண்களின் மனது எல்லாவற்றுக்கும் ஆசைப்படும் என்பதற்கு எடுத்துக் காட்டாக, சைலஜாவின் பக்கத்து வீட்டில் இருந்த மரகம் ஸ்பீக்கர் ஒன்றினை வாங்கி வேப்ப மரத்தின் உச்சியில் கட்டி பாடல்களை ஒலிக்கவிட்டுக் கொண்டிருந்தாள்.  இதனைக் கண்ணுற்ற சைலஜாவிற்கும் ஸ்பீக்கர் பூட்டித் தானும் பாட்டுப் போட வேண்டும் எனும் எண்ணம் தோன்றவே, தன் கணவனிடம் சொல்லி ஸ்பீக்கர் வாங்கி தன் வீட்டு பூவரச மரத்தில் ஸ்பீக்கரைக் கட்டி மைக்ரோ போனின் உதவியோடு, பாடல்களை ஒலிக்கவிட்டும், தன் குரலில் ஏதாவது விடயங்களைச் சொல்லியும் மகிழ்ந்திருந்தாள்.

சைலஜா ஒலிபரப்பும் பாடல்கள் ஸ்பீக்கர் மூலம் நல்ல வரவேற்பினைப் பெறுகின்றது என்பதனை அறிந்த அடுத்தாத்து மரகதமோ, அவளினைத் தானும் முந்த வேண்டும் எனும் வகையில் இரட்டை அர்த்தம் நிறைந்த பகலில் கேட்க முடியாத- மிட் நைட்டின் பின்னர் மாத்திரம் டீவிகளில் ஒலிக்கின்ற அந்த மாதிரியான பாடல்களை ஒலிபரப்பத் தொடங்கினாள்.
ஆ....ஆங்....ஸ்...ஊ...எனும் ஒலிகளே பாடல்களிற்குப் பக்க பலமாக இருந்ததாலும், பள்ளி மாணவர்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறிய பின்னாடி மரகதத்தின் அதிரடி நடவடிக்கைகள் ஆரம்பமானதாலும், கொஞ்ச நாட்கள் எந்தவிதத் தடையுமின்றி மரகத்தின் அஜால் குஜால் பாடல்கள் அவர்களின் ஏரியா முழுவதும் பட்டயக் கிளப்பிக் கொண்டிருந்தன.
நிரூபனின் நாற்று வலை
‘ரோட்டில் போறவங்க கூட
"நீ முட்டி தெரியச் சேலை தூக்கிக் கட்டுற வேளை
நான் கண்ணு முழிச்சு காத்திருப்பேன் கயித்துக் கட்டில் மேல..
ஏடா கூட பொறப்பே...உனக்கு ஏறிப் போச்சு கொழுப்பே, நீ மாசத்தில மூனு நாளு எங்கே போயி படுப்பே" இவ்வாறான பாடல்களை மரகதத்தின் ஸ்பீக்கர் மூலம் கேட்டு, கூச்சமின்றிப் பாடிக் கொண்டு போனார்கள். இதனால் சலிப்படைந்த சைலஜா,
"தனக்குப் போட்டியா இந்தச் சிறுக்கி வந்திட்டாளா?
இவளை என்ன வழி பண்றேன் பாரு" என்று தனக்குள் சபதம் போட்டு விட்டுக் கணவனோடு ஆலோசனை நடத்தினாள்.

லைமுகன் நீண்ட நேரம் யோசித்தார். பின்னர் மனைவியைப் புரிந்த கணவனாக, தன் மனைவியிடம் இருக்கும் கிரியேட்டி விட்டி மற்றும் இலக்கியத்தின் மீதான தீராத தாகம்- இவை அனைத்திற்கும் களம் அமைத்துக் கொடுக்க விரும்பினார்.  லைமுகனின் ஆலோசனையின் பயனாக, சைலஜாவிற்கு ஸ்பீக்கர் மூலம் பாடல் ஒலிபரப்பி மகிழும் பொழுது போக்கிற்குப் பதிலாக, ப்ளாக் எழுதும் முயற்சி கை கூடுகின்றது.

சைலஜாவும் தானுண்டு தன்பாடு உண்டு, எனும் நோக்கில் ப்ளாக் எழுதத் தொடங்கினா. காலப் போக்கில் தன் அடுத்தாத்து சைலஜா தான் ப்ளாக்கில் சைலுவின் சங்கீதங்கள் என்ற எழுதுறாள் எனும் உண்மையினை மோந்து பிடித்தாள் மரகதம். மரகதம் சைலுவிக்குப் போட்டியாகத் தானும் ஒரு ப்ளாக் தொடங்கினாள். சைலுவினை ஓவர் டேக் பண்ண வேண்டும் எனும் நோக்கில் ப்ளாக் தொடங்காது, சைலுவினை விடத் தானும் திறமையாக எழுத வேண்டும் எனும் நோக்கில் ஆண் பெயரில் பிட்ஸிகானின் தமிழ் ப்ளாக் எனும் வலையினைத் ஆரம்பித்தாள் மரகதம்.

பல மாதங்களின் பின்னர் சைலஜாவும், மரகதமும், ஒருவரை ஒருவர் அறியாதவர்களாய்- முகம் தெரியாத நண்பர்களாகப் ப்ளாக்கில் சந்தித்துக் கொண்டார்கள்.  பிட்ஸிகானோ எனும் பெயரில் ஆணாக எழுதுவது மரகதம் தான் என்று சைலஜா அறியாதிருந்தாலும், பிட்ஸிகானோவின் படைப்பு மீது சைலஜாவிற்கு ஒரு காழ்ப்புணர்வும், அவரை வீழ்த்த வேண்டும் எனும் வன்மமும் உள்ளத்தில் தானாகவே ஊற்றெடுத்தது. பிட்ஸிகானோவின் வலையினை எப்படியாவது நாறடிக்க வேண்டும், பிட்ஸிகானை வலையை விட்டு ஓட வைக்க வேண்டும் எனச் சந்தர்ப்பம் பார்த்திருந்த சைலுவிற்கு பிட்ஸிகானின் தலைப்புக்கள் நல்லதோர் சான்ஸாக அமைந்தன.

அடுத்தடுத்த ஆபாசத் தலைப்பு வைத்த பிட்ஸிகானை, அவதூறு செய்யும் வகையில் சைலு தன் சங்கீதங்கள் எனும் ப்ளாக்கில் "ஆபாசப் பதிவெழுதுவோர் மீது அதிரடி ஆக்சன்" எனும் பெயரில்’ தலைப்பு வைத்து மறைமுகமாகப் பிட்ஸிகானைத் தாக்கிப் பதிவு போட்டா. ஆனாலும் இது எதிர்பார்த்தளவு தாக்கத்தினைக் கொடுக்கவில்லை என்ற காரணத்தினால், ஆதாரமற்ற செக்ஸ் டாச்சர் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து பிட்ஸிகானை வலையினை விட்டுத் துரத்தும் முயற்சியில் ஈடுபட்டா சைலு. சைலுவின் இச் செயலுக்குப் பலரும் துணை நின்றதால், சைலு தான் ஒரு ராஜாங்கம் நடத்துவது போல் அடுத்தவர் உரிமையில் தலையிடுவது தவறென்று போலியாகப் பரப்புரை செய்து, ஆபாசப் பதிவெழுதுவோர் மீது அதிரடி நடவடிக்கை எனும் செயலில் மும்முரமாக ஈடுபட்டு வெற்றி பெற்றா.

நாட்கள் நகர்ந்தன. அப்படி என்னதான் ஆபாசத் தலைப்புக்களை பிட்ஸிகானோ வைத்தார் என்று பதிவுலகம் ஆராய்ந்து பார்த்தது. ‘அரை குறை ஆடையில் நடிகை’
அடுத்தவன் மனைவியிடம் சில்மிசம் செய்த ஆட்டோ டிரைவர்’
இப்படியான தலைப்புக்கள் வைத்த பதிவரை விரட்ட சைலஜா செய்த அறப்போரின் தலைப்பு ‘காமத் தலைப்புக்களால் கட்டில் சுகம் தேடும் ஈனப் பதிவர்’
இது தான் நல்ல தலைப்பு எனப் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் இன்று சைலஜா உள்ளே...பிட்சிகானோ வெளியே.............
நிரூபனின் நாற்று வலை
"தன் வினை தன்னைச் சுடும்
ஓட்டப்பம் வீட்டைச் சுடும்": பட்டினத்தார்.

டிஸ்கி: பதிவினைப் படிக்காது உள்குத்து, ஊமக் குத்து, ஊசிக் குத்து இருக்கென்று யாராவது சொன்னீங்க...பிச்சுப் புடுவேன் பிச்சி. உள்குத்து ஏதும் இருந்தால் அதற்குரிய பகுதியினையும் சுட்டிக் காட்டிச் சொன்னால் தான் ஏற்றுக் கொள்ளப்படும். 

டிஸ்கி: 2பதிவிற்கும் தலைப்பிற்கும் தொடர்பில்லை என்று யாராவது சொல்ல முன்னாடி, பதிவினை முழுமையாகப் படித்துப் பார்த்திட்டு, இந்தக் கருத்தினை ஆதாரத்துடன் முன் வைத்தால் தான் ஏற்றுக் கொள்ளப்படும். 

*****************************************************************************
நிரூபனின் நாற்று வலை
பள்ளிக்கூடம் போற காலத்தில, நமக்கெல்லாம் எப்படா லாஸ்ட் பெல் அடிக்கும் எனும் எதிர்பார்ப்புத் தானே மனங்களில் எழும். ஆனால் பதிவுலகில் இன்று தன் ஐடியா மூலம் பதிவர்களுக்கு மணியடிக்க ஒருவர் கிளம்பியிருக்கிறார். அவருடைய வலைக்கு நீங்கள் ஒரு முறை விஜயம் செய்தாலே போதும். உங்கள் மூளையினுள் பல ஐடியாக்கள் தானகவே தோன்றும். 
பல்கலைக் கழகத்தில் எத்தனை பட்டங்கள் கொடுப்பார்களோ, அவை அனைத்தையும் பதிவுலகம் மூலம் பெற்றுத் தன் பெயரோடு சேர்த்து வைத்து அழகு பார்க்கும் ஐடியாமணி அவர்கள் தன்னுடைய மொக்கைப் பதிவுகளோடு பதிவுலகினுள் களமிறங்கியிருக்கிறார்.
அண்மையில் பதிவுலகினுள் காலடி எடுத்து வைத்திருக்கும் ஐடியாமணி அவர்கள் பதிவுலகின் நீண்ட நாள் வாசகனாக இருந்து, பல பதிவர்களின் பதிவுகளை, தில்லு முல்லு வேலைகளை நன்றாக உற்று நோக்கி கடந்த வாரம் தான் பதிவராகியிருக்கிறார். 

புதிதாக வந்திருக்கும் ஐடியா மணியினையும் வாழ்த்தி, வரவேற்று, அவரது ஐடியாக்கள் சிறப்படைய ஆதரவு கொடுப்பது நம் கடமையல்லவா.

ஐடியா மணியின் வலைப் பூவிற்குச் செல்ல:
http://ideamani615.blogspot.com/

143 Comments:

செங்கோவி said...
Best Blogger Tips

முதல் ஆக்சன் என்னுது!

செங்கோவி said...
Best Blogger Tips

நானும் பதிவை ரெண்டு தடவை படிச்சிட்டேன்..ஆனாலும் என்ன சொல்ல வர்றீங்கன்னு குழப்பமா இருக்கு..ஏதாவது உள்குத்துன்னா சொல்லுங்கய்யா..இப்படியே ஓடிடறேன்..

செங்கோவி said...
Best Blogger Tips

ஐடியா மணி, பதிவுலக வாசகரா..அதானே பார்த்தேன், இந்தப் போடு போடுறாரேன்னு!

கோகுல் said...
Best Blogger Tips

ஐடியா மணியின் ஐடியாக்கள் பலே பலே!

செங்கோவி said...
Best Blogger Tips

//வீட்டில் இருந்த அமுல் பாலோடு மிக்ஸ் பண்ணி சூடாக்கி கணவனுக்கு வழங்கிய பின், தன் ஆசை நாயகனான லைமுகனை வேலைக்கு அனுப்பி விட்டு, வீட்டு வேலைகளில் கவனத்தைச் செலுத்த தொடங்கினாள் சைலஜா.//

யோ, கணவன் வேற..ஆசை நாயகன் வேற..அப்போ ரெண்டு பேரா? ஒருத்தரு ஆஃபீஸ் போய்ட்டாரு..இன்னொருத்தரை எங்கே?

கோகுல் said...
Best Blogger Tips

இதுல ஏதாவது உள்குத்து இருக்கா?
ஐயோ!திஸ்கியை பாக்காமலே சொல்லிட்டனே!
இருங்க அப்படி ஏதாவது இருக்கான்னு பாக்குறேன்!

Yoga.s.FR said...
Best Blogger Tips

இதுக்குத் தான் வெத்தல வச்சீங்களாக்கும்?நல்லாருக்கு!கிறீஸ் ம...... வருவாரு போல?

Yoga.s.FR said...
Best Blogger Tips

இதுல ஏதாவது உள்குத்து இருக்.. கா?////கு!

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி

முதல் ஆக்சன் என்னுது!//

அவ்......எங்கே துப்பாக்கியைக் காணலையே?

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி

ஐடியா மணி, பதிவுலக வாசகரா..அதானே பார்த்தேன், இந்தப் போடு போடுறாரேன்னு!//

அவ்...அவரு பதிவுலகத்தை நன்றாக கரைத்துக் குடித்திருக்கிறார் போல இருக்கிறதே.

நிரூபன் said...
Best Blogger Tips

@கோகுல்

ஐடியா மணியின் ஐடியாக்கள் பலே பலே!//

ஆமா பாஸ்..ரெண்டு பதிவுகளிலும் செம ஐடியா கொடுத்திருகாரு.

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி
யோ, கணவன் வேற..ஆசை நாயகன் வேற..அப்போ ரெண்டு பேரா? ஒருத்தரு ஆஃபீஸ் போய்ட்டாரு..இன்னொருத்தரை எங்கே?//

நம்ம கதையோட நாயகி கணவனைத் தான் ஆசை நாயகன் என்று சொல்லுறாங்க.
அவ்............

நிரூபன் said...
Best Blogger Tips

@கோகுல்
இதுல ஏதாவது உள்குத்து இருக்கா?
ஐயோ!திஸ்கியை பாக்காமலே சொல்லிட்டனே!
இருங்க அப்படி ஏதாவது இருக்கான்னு பாக்குறேன்!//

பார்த்தது ஓக்கே..
ஆனால் அதுக்கேற்ற பதிலைக் காணலையே?

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

லைமுகனா!இது யாரு பேட்டைக்கு புதுசா:)

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.s.FR

இதுக்குத் தான் வெத்தல வச்சீங்களாக்கும்?நல்லாருக்கு!கிறீஸ் ம...... வருவாரு போல?//

என்னய்யா இப்படிப் பயமுறுத்துறீங்க?

செங்கோவி said...
Best Blogger Tips

//"நீ முட்டி தெரியச் சேலை தூக்கிக் கட்டுற வேளை
நான் கண்ணு முழிச்சு காத்திருப்பேன் கயித்துக் கட்டில் மேல..
ஏடா கூட பொறப்பே...உனக்கு ஏறிப் போச்சு கொழுப்பே, நீ மாசத்தில மூனு நாளு எங்கே போயி படுப்பே"//

அடடா..இதை நானா யோசிச்சேன்ல போடிருக்கலாமே..

Yoga.s.FR said...
Best Blogger Tips

டிஸ்கி: பதிவினைப் படிக்காது உள்குத்து, ஊமக் குத்து, ஊசிக் குத்து.........!////எல்லாமே இருக்கு!

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.s.FR
இதுல ஏதாவது உள்குத்து இருக்.. கா?////கு!

என்னம்மோ சொல்லுறீங்க போங்க..
நமக்கென்றால் ஒன்னுமே புரியலையே ஐயா...

அவ்........

செங்கோவி said...
Best Blogger Tips

//லைமுகன் நீண்ட நேரம் யோசித்தார். //

என்ன பேருய்யா இது?..

லை-ன்னா பொய்..அப்போ பொய்முகனா?

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்

லைமுகனா!இது யாரு பேட்டைக்கு புதுசா:)//

ஆமா பாஸ்...ஆள் புதுசு தான்...
அவ்.....

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

பட்டினத்தார் சொல்வது ஓட்டப்பனையாச்சே!

செங்கோவி said...
Best Blogger Tips

//அரை குறை ஆடையில் நடிகை’
அடுத்தவன் மனைவியிடம் சில்மிசம் செய்த ஆட்டோ டிரைவர்’//

யோவ், இது ஆபாசத் தலைப்பு இல்லாம பாசத் தலைப்பா?

Yoga.s.FR said...
Best Blogger Tips

செங்கோவி said...அடடா..இதை நானா யோசிச்சேன்ல போட்டிருக்கலாமே..////இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போவல,போட்டுக்குங்க!

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி

//"நீ முட்டி தெரியச் சேலை தூக்கிக் கட்டுற வேளை
நான் கண்ணு முழிச்சு காத்திருப்பேன் கயித்துக் கட்டில் மேல..
ஏடா கூட பொறப்பே...உனக்கு ஏறிப் போச்சு கொழுப்பே, நீ மாசத்தில மூனு நாளு எங்கே போயி படுப்பே"//

அடடா..இதை நானா யோசிச்சேன்ல போடிருக்கலாமே.//

ஆமா பாஸ்.அப்பூடியே இதுக்குப் பொருத்தமான ஸ்டில்லும் போட்டா இன்னும் சூப்பரா இருக்கும்,

செங்கோவி said...
Best Blogger Tips

//இப்படியான தலைப்புக்கள் வைத்த பதிவரை விரட்ட சைலஜா செய்த அறப்போரின் தலைப்பு ‘காமத் தலைப்புக்களால் கட்டில் சுகம் தேடும் ஈனப் பதிவர்’
இது தான் நல்ல தலைப்பு எனப் பலராலும் //

அடப்பாவி மனுசா......விடு ஜூட்!

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.s.FR

டிஸ்கி: பதிவினைப் படிக்காது உள்குத்து, ஊமக் குத்து, ஊசிக் குத்து.........!////எல்லாமே இருக்கு!//

ஐயா நெசமா சொல்லுறீங்க.

அவ்..............

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி
//லைமுகன் நீண்ட நேரம் யோசித்தார். //

என்ன பேருய்யா இது?..

லை-ன்னா பொய்..அப்போ பொய்முகனா?//

அப்படியும் இருக்கலாம் பாஸ்.

அவ்........

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்

பட்டினத்தார் சொல்வது ஓட்டப்பனையாச்சே!//

அவ்...நான் ஓட்டப்பம் என்று தான் பாஸ் படிச்சேன்...

தனிமரம் said...
Best Blogger Tips

பாட்டுப்போட்டியில் தொடங்கியவர் ஆபாசப்பதிவு எழுதுவதில் முண்டியடித்து கடைசியில் பாடலும் போய் பதிவு போனது யாரையோ தாக்குது இதுவும் சத்தியமான நான் ஜோசித்தது அவர் யார் என்று எனக்கு மட்டும்தான் தெரியும் பாஸ்! இதுவும் புரியல என்றாள் ஐயோ!ஹீ ஹீ!

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி
/அரை குறை ஆடையில் நடிகை’
அடுத்தவன் மனைவியிடம் சில்மிசம் செய்த ஆட்டோ டிரைவர்’//

யோவ், இது ஆபாசத் தலைப்பு இல்லாம பாசத் தலைப்பா?//

இது இலக்கணத் தலைப்பு என்று பெரியவங்க சொல்லுறாங்க பாஸ்....

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி

அடப்பாவி மனுசா......விடு ஜூட்!//

அவ்...ஏன் பாஸ் ஓடுறீங்க...
இன்னும் மேட்டர் சூடாகவே இல்லையே.

தனிமரம் said...
Best Blogger Tips

ஐடியா மணியையும் பதிவுலகில் பட்டையைத் தீட்டவாழ்த்துக்கள்!

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan

பாட்டுப்போட்டியில் தொடங்கியவர் ஆபாசப்பதிவு எழுதுவதில் முண்டியடித்து கடைசியில் பாடலும் போய் பதிவு போனது யாரையோ தாக்குது இதுவும் சத்தியமான நான் ஜோசித்தது அவர் யார் என்று எனக்கு மட்டும்தான் தெரியும் பாஸ்! இதுவும் புரியல என்றாள் ஐயோ!ஹீ ஹீ!.//

இம்புட்டு நேரமும் நல்லாத் தானே போய்க்கிட்டிருந்திச்சு...
அவ்.......

செங்கோவி said...
Best Blogger Tips

//Nesan said...
பாட்டுப்போட்டியில் தொடங்கியவர் ஆபாசப்பதிவு எழுதுவதில் முண்டியடித்து கடைசியில் பாடலும் போய் பதிவு போனது யாரையோ தாக்குது இதுவும் சத்தியமான நான் ஜோசித்தது அவர் யார் என்று எனக்கு மட்டும்தான் தெரியும் பாஸ்! இதுவும் புரியல என்றாள் ஐயோ!ஹீ ஹீ!//

நானே இந்தக் குத்து எனக்கா வேற யாருக்குமான்னு புரியாம குழம்பிப்போய் இருக்கேன்..நீங்க வேற பீதியைக் கிளப்புறீங்களே..

செங்கோவி said...
Best Blogger Tips

//Nesan said...
பாட்டுப்போட்டியில் தொடங்கியவர் ஆபாசப்பதிவு எழுதுவதில் முண்டியடித்து கடைசியில் பாடலும் போய் பதிவு போனது யாரையோ தாக்குது இதுவும் சத்தியமான நான் ஜோசித்தது அவர் யார் என்று எனக்கு மட்டும்தான் தெரியும் பாஸ்! இதுவும் புரியல என்றாள் ஐயோ!ஹீ ஹீ!//

நானே இந்தக் குத்து எனக்கா வேற யாருக்குமான்னு புரியாம குழம்பிப்போய் இருக்கேன்..நீங்க வேற பீதியைக் கிளப்புறீங்களே..

தனிமரம் said...
Best Blogger Tips

பார்மசியில் ஹான்சிகா எப்படி வேலைக்கு வந்தா நடிப்பைவிட்டு ஆமா இந்த லக்ஸ்பீக்கர்(குழாய்ப்புட்டு) வழக்கத்தில் இப்போதும் இருக்கா சென்னையில் நான் கானவில்லை !

தனிமரம் said...
Best Blogger Tips

பாஸ் தமிழ்-10 இப்ப எல்லாம் தனிமரம் சீரிஸ் பதிவு எழுது என்று உயிரைவாங்குது ஓட்டும் போடமுடியல பதிவையும் இணைக்க முடியல அதனால் தமிழ்மணம், இட்லி மட்டும்தான் இப்போது வரும் வாரம் பார்ப்போம் தமிழ்-10 தீர்வுத் திட்டத்தை !

தனிமரம் said...
Best Blogger Tips

பாஸ் தமிழ்-10 இப்ப எல்லாம் தனிமரம் சீரிஸ் பதிவு எழுது என்று உயிரைவாங்குது ஓட்டும் போடமுடியல பதிவையும் இணைக்க முடியல அதனால் தமிழ்மணம், இட்லி மட்டும்தான் இப்போது வரும் வாரம் பார்ப்போம் தமிழ்-10 தீர்வுத் திட்டத்தை !

தனிமரம் said...
Best Blogger Tips

நிச்சயமா செங்கோவி ஐயா உங்களைக் குழப்பவில்லை தமிழ்மணம் வலையில் நான் வாசிக்கத்தொடங்கிய காலத்தில் பாடல் பதிவு போட்டவர்கள் வரிசையில் நீங்கள் என் கண்ணுக்கு தென்படவில்லை! அதனால் பயம் ஏன்?

தனிமரம் said...
Best Blogger Tips

என்ன பாஸ் நான் வந்ததும் கடையில் ஆணை பூந்துவிட்டதோ இம்புட்டு நேரம் ஒழுங்கா போனது என்பதன் அர்த்தம்!

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan

ஐடியா மணியையும் பதிவுலகில் பட்டையைத் தீட்டவாழ்த்துக்கள்!//

உங்கள் வாழ்த்து நிச்சயம் ஐடியா மணியினைப் போய்ச் சேரும்,

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

ஹிஹி மச்சி எனக்கு 'எல்லாம்' விளங்குது, ஆனாலும் ஒரு சந்தேகம் ............................நீங்க ஆம்பிளையா பொம்புளையா?????????????????? ))

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan

பார்மசியில் ஹான்சிகா எப்படி வேலைக்கு வந்தா நடிப்பைவிட்டு ஆமா இந்த லக்ஸ்பீக்கர்(குழாய்ப்புட்டு) வழக்கத்தில் இப்போதும் இருக்கா சென்னையில் நான் கானவில்லை !//

அவ்....பாஸ்..இது உள்ளூர் மேட்டரு, அதாவது கொஞ்சம் உள்ளே நீங்க போய்ப் பார்த்திருக்கனும்,.

நீங்க அவுட்டோரை மட்டும் சுத்திப் பார்த்திருப்பீங்க. அதான்....

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

///இன்னைக்கு என் கணவனுக்கு வெஸ்ரேன் பூட் பண்ணிக் கொடுக்கனும்" என்ற நெனைப்போடு புதிதாக சைதாப்பேட்டையில் திறந்திருந்த // ஓ! இப்ப அங்க சைதாப்பேட்டை எல்லாம் வந்துட்டுதா? ஹிஹி

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan

பாஸ் தமிழ்-10 இப்ப எல்லாம் தனிமரம் சீரிஸ் பதிவு எழுது என்று உயிரைவாங்குது ஓட்டும் போடமுடியல பதிவையும் இணைக்க முடியல அதனால் தமிழ்மணம், இட்லி மட்டும்தான் இப்போது வரும் வாரம் பார்ப்போம் தமிழ்-10 தீர்வுத் திட்டத்தை !//

அடடா....தமிழ் 10 இல் இலகுவாக இணையலாமே...
காட்டானிடம் கேளுங்க. சொல்லித் தருவார்.

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

///ஆசை நாயகன் லைமுகன்,// இன்னாது லைமுகனா ??? யோவ், அது ஆனைமுகனா இருக்கப்போகுது )))

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan
நிச்சயமா செங்கோவி ஐயா உங்களைக் குழப்பவில்லை தமிழ்மணம் வலையில் நான் வாசிக்கத்தொடங்கிய காலத்தில் பாடல் பதிவு போட்டவர்கள் வரிசையில் நீங்கள் என் கண்ணுக்கு தென்படவில்லை! அதனால் பயம் ஏன்?//

அவ்...என்ன நீங்க ரெண்டு பேரும் அடிச்சுக்கிறீங்களா?
அவ்...........

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

///சைலஜாவின் பக்கத்து வீட்டில் இருந்த மரகம் ஸ்பீக்கர் ஒன்றினை வாங்கி வேப்ப மரத்தின் உச்சியில் கட்டி பாடல்களை ஒலிக்கவிட்டுக் கொண்டிருந்தாள்.// அது வீடா இல்ல வியாபாரக்கடையா...

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

////பிட்ஸிகானோவின் வலையினை எப்படியாவது நாறடிக்க வேண்டும், பிட்ஸிகானை வலையை விட்டு ஓட வைக்க வேண்டும் எனச் சந்தர்ப்பம் பார்த்திருந்த சைலுவிற்கு பிட்ஸிகானின் தலைப்புக்கள் நல்லதோர் சான்ஸாக அமைந்தன./// ஹிஹி ஆமா ஆமா )))

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan
என்ன பாஸ் நான் வந்ததும் கடையில் ஆணை பூந்துவிட்டதோ இம்புட்டு நேரம் ஒழுங்கா போனது என்பதன் அர்த்தம்!//

பாஸ்...அப்படிப் பொருள் கொள்ளல் ஆகாது...
நாம எல்லோரும் உள்குத்தைப் புரியாத மாதிரி கமெண்ட் போட்டுக் கொண்டிருந்தோம், ஆனால் நீங்க வெளிப்படையாக சொல்லிட்டீங்களே...
அதனை விளக்கத் தான் இப்படி ஓர் வசனம் யூஸ் பண்ணினேன் பாஸ்.

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

////பதிவினைப் படிக்காது உள்குத்து, ஊமக் குத்து, ஊசிக் குத்து இருக்கென்று யாராவது சொன்னீங்க.// சத்தியமாய் நானும் சொல்லுறனுங்கோ இதில உள்குத்து என்டதுவே இல்லிங்கோ )

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

/////ஐடியாமணி/// புது பிளாக்கு, புது பேரு, புது................ புது ................கலக்கிறே மணி.....))

நிரூபன் said...
Best Blogger Tips

@நிகழ்வுகள்

//இன்னைக்கு என் கணவனுக்கு வெஸ்ரேன் பூட் பண்ணிக் கொடுக்கனும்" என்ற நெனைப்போடு புதிதாக சைதாப்பேட்டையில் திறந்திருந்த // ஓ! இப்ப அங்க சைதாப்பேட்டை எல்லாம் வந்துட்டுதா? ஹிஹி//

பாஸ்...இதில் கதை நிகழ் களமாகாத் தமிழ் நாட்டினைச் சுட்டியிருக்கேன் பாஸ்.

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

///பாஸ்...இதில் கதை நிகழ் களமாகாத் தமிழ் நாட்டினைச் சுட்டியிருக்கேன் பாஸ்.//அப்பிடியா நான் நெனச்சன் அ................அரசடி சந்திக்கு கிட்டவாக்கும் எண்டு)

நிரூபன் said...
Best Blogger Tips

@நிகழ்வுகள்

///ஆசை நாயகன் லைமுகன்,// இன்னாது லைமுகனா ??? யோவ், அது ஆனைமுகனா இருக்கப்போகுது )))//

ஏன்யா...ஏன்....பப்பிளிக்கிலை போட்டுக் குடுக்கிறீங்க?

நிரூபன் said...
Best Blogger Tips

@நிகழ்வுகள்

///சைலஜாவின் பக்கத்து வீட்டில் இருந்த மரகம் ஸ்பீக்கர் ஒன்றினை வாங்கி வேப்ப மரத்தின் உச்சியில் கட்டி பாடல்களை ஒலிக்கவிட்டுக் கொண்டிருந்தாள்.// அது வீடா இல்ல வியாபாரக்கடையா...//

அதனை நீங்க சைலஜா கிட்டத் தான் கேட்கனும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@நிகழ்வுகள்

////பதிவினைப் படிக்காது உள்குத்து, ஊமக் குத்து, ஊசிக் குத்து இருக்கென்று யாராவது சொன்னீங்க.// சத்தியமாய் நானும் சொல்லுறனுங்கோ இதில உள்குத்து என்டதுவே இல்லிங்கோ )//

ரொம்ப நல்ல பையன் நீங்க...

வாழ்க உங்கள் புகழ்.

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் மாப்பிள இந்த பதிவ ஒண்டுக்கு இரண்டுதடவ வாசித்திட்டன்.. நான் பதிவுலகுக்கு வரும்வரை எந்த பதிவுகளையும் வாசித்ததில்லை... இப்ப எனக்கு தெரிஞ்சு தனிமரம் நேசந்தான் பாட்டுப்போட்டு கடுப்பேத்திறவர்.. அப்ப நீங்க அவரைதான் சொல்லுறீங்களா..!?? இது தெரியாம அவர் கும்மியடிச்சிட்டு போட்டார்.. வாத்து தன்ர தலைய அறுத்து விட்ட பிறகும் உயிரோட இருக்கிறன்னு நினச்சு ஓடுறத போல...ஹி ஹி ஹி ...

அப்புறம் வடையாரை சாரி சாரி மணியாரை வாழ்த்துகிறேன்...

காட்டான் குழ போட்டான்..

சுதா SJ said...
Best Blogger Tips

பதிவை ரெண்டுமுறை படித்து தான் புரிந்தது,
விடுங்க பாஸ் நம்ம அறிவு அப்படி,
நல்லாத்தான் இருக்கு ஹீ ஹீ,

அப்புறம்......... மாத்தியோசி சாரி அண்ணன் மணிக்கு
என் வாழ்த்துக்கள்

சுதா SJ said...
Best Blogger Tips

உள் குத்தா
அவ்வவ் அப்படி ஒண்ணும் தெரியல்லையே
இருந்தா யாராவது எனக்கு மெயில் பண்ணி சொல்லுங்கப்பா
புண்ணியமாய் போகும்.

athira said...
Best Blogger Tips

நான் பஸ் பிடிச்சு வாறதுக்குள்ள இவ்ளோ பேரா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), கொஞ்சம் வெள்ளெனச் சொல்லியிருந்தால், நான் மீ ட 2ஸ்டா வந்திருப்பேனெல்லோ அவ்வ்வ்வ்வ்:)).

இத்தலைப்பு மேலே வரவில்லையே நிரூபன்... நில்லுங்கோ படிச்சிட்டு வந்து மிச்சம் கதைப்பம்.

athira said...
Best Blogger Tips

//காட்டான் குழ போட்டான்.. //

குழை போட்டது போதும், முதல்ல அவரை உடுப்பைப் போடச் சொல்லுங்கோ நிரூபன்:))).. ஹையோ என் வாயை என்னால அடக்க முடியாமல் சொல்லிப்போட்டன்....என்னைக் காப்பாத்திடுங்க நிரூபன்:)))).

athira said...
Best Blogger Tips

///பெண்களின் மனது எல்லாவற்றுக்கும் ஆசைப்படும் என்பதற்கு எடுத்துக் காட்டாக///

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் *123432

//சைலுவின் சங்கீதங்கள்//
இது சூப்பர் தலைப்பாக இருக்கே...

கலக்கிட்டீங்க... இருந்தாலும் வழமையைவிட விரைவாக முடிச்சிட்டீங்க அவ்வ்வ்வ்வ்:))).

athira said...
Best Blogger Tips

//உள்குத்து ஏதும் இருந்தால் அதற்குரிய பகுதியினையும் சுட்டிக் காட்டிச் சொன்னால் தான் ஏற்றுக் கொள்ளப்படும். //

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), உள்ளுக்குக் குத்தும்போது ஐ.... மீஈஈஈன் வயிற்றுக்குள் குத்துறதை, எங்கின குத்துதென எப்பூடிக் காட்டுறது நிரூபன்..?:)).. அப்பூடியெண்டால் ஒரு ஸ்கான் மெஷினையும் பூட்டுங்கோ இங்க:)).

நிரூபனின் வலையில என்னைக் கவர்ந்த விடயம்... பெயர் சூட்டல்:)). அதிலயும் வலைப்பதிவாளர் அறிமுகம்.... இன்னும் சூப்பர் பெயர்.

காட்டான் said...
Best Blogger Tips

athira said...
//காட்டான் குழ போட்டான்.. //

குழை போட்டது போதும், முதல்ல அவரை உடுப்பைப் போடச் சொல்லுங்கோ நிரூபன்:))).. ஹையோ என் வாயை என்னால அடக்க முடியாமல் சொல்லிப்போட்டன்....என்னைக் காப்பாத்திடுங்க நிரூபன்:)))).

September 1, 2011 3:55 AM


என்னங்க இப்பிடி சொல்லிபோட்டியள் இப்பதான் வைக்கேசன்ல இருத்திட்டு வந்தனான்.. அங்க கடக்கரையில என்னை பாத்து வெள்ளக்காரங்க கடுப்பாயிட்டாங்க ஏன்னா நாந்தான் அங்க உடுப்பு போட்டிருக்கேனாம்.. வெள்ளக்காரன் சொன்னா கேப்பீங்கதானே...!!??

காட்டான் said...
Best Blogger Tips

பாஸ் தமிழ்-10 இப்ப எல்லாம் தனிமரம் சீரிஸ் பதிவு எழுது என்று உயிரைவாங்குது ஓட்டும் போடமுடியல பதிவையும் இணைக்க முடியல அதனால் தமிழ்மணம், இட்லி மட்டும்தான் இப்போது வரும் வாரம் பார்ப்போம் தமிழ்-10 தீர்வுத் திட்டத்தை !//

அடடா....தமிழ் 10 இல் இலகுவாக இணையலாமே...
காட்டானிடம் கேளுங்க. சொல்லித் தருவார்.

September 1, 2011 2:16 AM
மாப்பிள இதுக்கு நான் நல்ல பதில் தருவேன்யா ஆனா நீயும் செங்கோவிமாதிரி என்ர கொமண்ட எடுத்திட்டா மனசு வழிக்கும்.. பின்ன எழுத்து கூட்டி எழுதுறதென்னா சும்மாவா அத நீங்க கட் பண்ணேக்க ஒண்டுக்கு ஆயிரம் தடவ யோசிங்கோப்பா.. இண்டக்கு தனிமரம் போட்டிருக்கிற பதிவிலேயே இதுக்கு விடை இருக்கையா ஏன் இவர் இ........ போட்டு வாறேன்யா..

K said...
Best Blogger Tips

வணக்கம் சார்! கும்புடுறேனுங்கோ!

காலைல நாலுமணிக்கே எந்திரிக்க வச்சுட்டீங்க!

K said...
Best Blogger Tips

ஆபாசப் பதிவெழுதுவோர் மீது அதிரடி ஆக்சன்!///

நிஜமாவா சார்?

Unknown said...
Best Blogger Tips

ரைட்டு...நீங்க கலக்குங்க மாப்ள...!

K said...
Best Blogger Tips

டாங்...டாங்....என ஒலித்துக் கொண்டிருந்த கோயில் மணி ஓசையினைக் கேட்டுக் கண் விழித்தாள் சைலஜா. "அடக் கடவுளே, என் கணவனுக்கு வேலைக்கு நேரமாச்சே. அவருக்கு ஏதாச்சும் சமைச்சுப் போடனுமே" ///

இந்தக் காலத்துல இப்படி ஒரு பொண்ணா! இந்தமாதிரி டைப்புல பொண்ணு இருந்தா சொல்லுங்க சார்! எதுக்கு?

ஜஸ்ட் பழகத்தான்!

K said...
Best Blogger Tips

என்ற எண்ணம் மனதில் எழ, அவசர அவசரமாக அடுக்களைப் பக்கமாக ஓடினாள் சைலஜா.///

சார், அடுக்களை மீன்ஸ், கிச்சன் தானே!

மாய உலகம் said...
Best Blogger Tips

ஆஹா கில்மா பதிவு...முக்காடு போட்டுக்கிட்டு படிச்சுட்டு வருவோம்... யாராவது பாத்துர போராய்ங்கிய

K said...
Best Blogger Tips

"இன்னைக்கு என் கணவனுக்கு வெஸ்ரேன் பூட் பண்ணிக் கொடுக்கனும்" என்ற நெனைப்போடு ////

ரொம்ப நல்ல பொண்டாட்டியா இருக்காளே! நிரூபன் சார், நீங்களும் இந்த மாதிரி ஒண்ணப் புடியுங்க சார்!

என்னது உங்களுக்கு ஆல் ரெடி கல்யாணம் ஆச்சா? சொல்லவே இல்ல!

K said...
Best Blogger Tips

புதிதாக சைதாப்பேட்டையில் திறந்திருந்த ஹன்சிகா பார்மஸிக்கு ஓடிச் சென்று ஓட்ஸ் பாக்கட் ஒன்றினை வாங்கி வந்து வீட்டில் இருந்த அமுல் பாலோடு மிக்ஸ் பண்ணி சூடாக்கி கணவனுக்கு வழங்கிய பின், ///

ஹன்சிகா பேருல ஃபாமசியா? கிழிஞ்சுது கிருஷ்ணகிரி!!

மாய உலகம் said...
Best Blogger Tips

ஐடியா மணி யாராஇருக்கும் ஒரு வேளை ஓ வ நாவா இருக்குமோ... ரூம் போட்டு யோசிப்போம்

K said...
Best Blogger Tips

தன் ஆசை நாயகனான லைமுகனை வேலைக்கு அனுப்பி விட்டு, வீட்டு வேலைகளில் கவனத்தைச் செலுத்த தொடங்கினாள் சைலஜா.///

சார், எனக்கு ஆனைமுகன் தெரியும்! ஆறுமுகன் தெரியும்!

அம்பிகை பொன்னம்பலவனும் தெரியும்!

இது யார் சார் லைமுகன்? பேரு ரொம்ப புதுஷா இருக்கு! ரூம் போட்டு, உக்கார்ந்து யோசிப்பீங்களா?

மாய உலகம் said...
Best Blogger Tips

காட்டான் said...
athira said...
//காட்டான் குழ போட்டான்.. //

குழை போட்டது போதும், முதல்ல அவரை உடுப்பைப் போடச் சொல்லுங்கோ நிரூபன்:))).. ஹையோ என் வாயை என்னால அடக்க முடியாமல் சொல்லிப்போட்டன்....என்னைக் காப்பாத்திடுங்க நிரூபன்:)))).

September 1, 2011 3:55 AM


என்னங்க இப்பிடி சொல்லிபோட்டியள் இப்பதான் வைக்கேசன்ல இருத்திட்டு வந்தனான்.. அங்க கடக்கரையில என்னை பாத்து வெள்ளக்காரங்க கடுப்பாயிட்டாங்க ஏன்னா நாந்தான் அங்க உடுப்பு போட்டிருக்கேனாம்.. வெள்ளக்காரன் சொன்னா கேப்பீங்கதானே...!!??//

ஹா ஹா ஹா மொதல்ல ஆதிராக்கா கலக்குனாங்கோ...பொறகு நம்ம காட்டான் டபுள் மடங்கு கலக்கிட்டாருங்கோ

K said...
Best Blogger Tips

சைலஜா சீரியல் படித்துக் கண்ணீர் விடுகின்ற இக் காலத்தின் குடும்பப் பெண் அல்ல. அவளுக்குள்ளும் சாதிக்க வேண்டும் என்கின்ற வெறி இருந்தது. ///

அல்ககோல் எத்தனை பர்சண்டேஜ் சார்!

K said...
Best Blogger Tips

பாரதியார் யூனிவர்சிட்டியில் தான் கற்றுத் தேறிய கணினிக் கல்வியினைக் கொண்டு வேலை தேடியிருப்பின், இன்று ஓர் சாப்ட்வேர் எஞ்சினியராக ஐடி துறையில் பிரகாசிக்க முடியும். எனினும் சுயமாக எலக்டிக்கல் கம்பனி வைத்திருக்கும் கணவன் லைமுகனின் வருமானம்; வீட்டுச் செலவிற்கு போதுமாக இருந்த காரணத்தினால் வேலைக்குச் செல்வதை விடுத்து, வீட்டு வேலைகளைச் செய்து முடித்த பின் ///

டிப்ளோமா முடிச்ச ஒரு பொண்ண வீட்டுக்குள்ளேயே முடக்கி..... இது அநியாயம்க!

K said...
Best Blogger Tips

கிடைக்கும் ஓய்வு நேரங்களில் வெளியே சென்று ஆலய தரிசனம் செய்வது, லேடீஸ் கிளப் மீட்டிங்கிற்கு போவது, தன் மனதில் எழும் நினைவுகளை ஒரு நோட் புக்கில் எழுதிப் பத்திரப்படுத்தி வைப்பது என்று தன் நாட்களை நகர்த்தி வந்தாள் சைலஜா.///

ரொம்ப பாவம்! இது மாதிரி நிஜமாகவே நிறையப் படித்த பொண்ணுங்க வீடுகளில முடங்கிப் போயிருக்காங்க!ஸோ சாட்!

K said...
Best Blogger Tips

இவ்வாறான கால கட்டத்தில் தான் சைலஜாவின் ஆசை நாயகன் லைமுகன், மனைவிக்குப் பரிசளிக்கும் நோக்கில் விலை உயர்ந்த ஒரு சீடி ப்ளேயரை மைக்ரோ போனுடன் கூடிய வகையில் வாங்கி வந்தான். ///

ஓகோ!

K said...
Best Blogger Tips

பெண்களின் மனது எல்லாவற்றுக்கும் ஆசைப்படும் என்பதற்கு எடுத்துக் காட்டாக,////

ஐ ஹேட் திஸ் லைன்! பீக்காஸ் இட் இன்சல்ட்ஸ் ஆல் த வுமென்!

K said...
Best Blogger Tips

இதனைக் கண்ணுற்ற சைலஜாவிற்கும் ஸ்பீக்கர் பூட்டித் தானும் பாட்டுப் போட வேண்டும் எனும் எண்ணம் தோன்றவே, தன் கணவனிடம் சொல்லி ஸ்பீக்கர் வாங்கி தன் வீட்டு பூவரச மரத்தில் ஸ்பீக்கரைக் கட்டி மைக்ரோ போனின் உதவியோடு, பாடல்களை ஒலிக்கவிட்டும், தன் குரலில் ஏதாவது விடயங்களைச் சொல்லியும் மகிழ்ந்திருந்தாள்.///

ஸோ லோக்கல் எஃப் எம் நடத்தியிருக்காய்ங்க!

K said...
Best Blogger Tips

பின்னாடி மரகதத்தின் அதிரடி நடவடிக்கைகள் ஆரம்பமானதாலும், கொஞ்ச நாட்கள் எந்தவிதத் தடையுமின்றி மரகத்தின் அஜால் குஜால் பாடல்கள் அவர்களின் ஏரியா முழுவதும் பட்டயக் கிளப்பிக் கொண்டிருந்தன.///

ஹி ஹி ஹி ஹி இது நல்லா இருக்கே!

K said...
Best Blogger Tips

ரோட்டில் போறவங்க கூட
"நீ முட்டி தெரியச் சேலை தூக்கிக் கட்டுற வேளை
நான் கண்ணு முழிச்சு காத்திருப்பேன் கயித்துக் கட்டில் மேல..///

அட... மஜா படப்பாட்டு!

K said...
Best Blogger Tips

இவ்வாறான பாடல்களை மரகதத்தின் ஸ்பீக்கர் மூலம் கேட்டு, கூச்சமின்றிப் பாடிக் கொண்டு போனார்கள். ///

சார், இதுல கூச்சப்பட என்ன இருக்கு?

K said...
Best Blogger Tips

லைமுகன் நீண்ட நேரம் யோசித்தார். பின்னர் மனைவியைப் புரிந்த கணவனாக, தன் மனைவியிடம் இருக்கும் கிரியேட்டி விட்டி மற்றும் இலக்கியத்தின் மீதான தீராத தாகம்- இவை அனைத்திற்கும் களம் அமைத்துக் கொடுக்க விரும்பினார். ///

இதப் பார்ரா!

K said...
Best Blogger Tips

லைமுகனின் ஆலோசனையின் பயனாக, சைலஜாவிற்கு ஸ்பீக்கர் மூலம் பாடல் ஒலிபரப்பி மகிழும் பொழுது போக்கிற்குப் பதிலாக, ப்ளாக் எழுதும் முயற்சி கை கூடுகின்றது.///

இதத்தான் டொங்கி ரூய்ன் ஆனா, ஸ்ட்ரீற் வால்’ அப்டீன்னு சொல்றதா!

K said...
Best Blogger Tips

சைலஜாவும் தானுண்டு தன்பாடு உண்டு, எனும் நோக்கில் ப்ளாக் எழுதத் தொடங்கினா. காலப் போக்கில் தன் அடுத்தாத்து சைலஜா தான் ப்ளாக்கில் சைலுவின் சங்கீதங்கள் என்ற எழுதுறாள் எனும் உண்மையினை மோந்து பிடித்தாள் மரகதம். மரகதம் சைலுவிக்குப் போட்டியாகத் தானும் ஒரு ப்ளாக் தொடங்கினாள். ///

இதுல உள்குத்து இல்லைன்னு நம்பறேன்!

K said...
Best Blogger Tips

பிட்ஸிகானின் தமிழ் ப்ளாக் ///

ஆஹா என்ன ஒரு பேரு!

K said...
Best Blogger Tips

மொத்தத்துல பதிவும் சூப்பர்! டிஸ்கிகளும் சூப்பர்!

K said...
Best Blogger Tips

சார், என்னைய அறிமுகப் படுத்தினதுக்கு ரொம்ப நன்றி சார்! அழகா எழுதியிருக்கீங்க சார் அறிமுகத்துல!

Anonymous said...
Best Blogger Tips

நல்லாய் இருக்கு.இதையும் வைத்து யாராவது பந்தாடுவாங்கள்.
எனது புதிய பதிவு:இந்த வார பதிவர் பகிடிவதை காண http://pc-park.blogspot.com/2011/08/ragging-1.html அவர் வேறு யாருமல்ல நம்ம நிரூ தான்.
நிரூபனின் டிங்குசா டீச்சரும், டீசன்டான பசங்களும்- காமெடி ஜிம்மி!என்ற பதிவை வைத்தே என் முதல் பகிடி வதை:

எனக்கு அவரை டிங்குசா டீச்சராக சாறி கட்டி பார்க்க ஆசை.நிரூபனின் பால் வடியும் முகத்தை டிங்குசா டீச்சராக மாற்றி பார்த்தால் எப்படி இருக்கும்.கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

K.s.s.Rajh said...
Best Blogger Tips

நம்ம பெரிய அண்ணாத்த காட்டான் அவர்கள் எனக்கு ஒரு வாழ்த்தை சொன்னார்.தம்பி நீ நல்லா எழுதுற ஆனால் பதிவுலக அரசியலில் சிக்கிடாத என்று என்ன எழுத்துக்களை வாழ்த்தினார்.
அப்பநான் பதிவுலக அரசியல் என்றால் என்ன அண்ணே என்று அப்பாவியாக கேட்டேன்.உண்மையில் பதிவுலக அரசியல் எனக்கு தெரியவில்லை.
உங்கள் இந்த பதிவின் மூலம் பதிவுலக அரசியலை நன்றாக படம் போட்டு காட்டி இருக்கீங்க...ஹி.ஹி.ஹி.ஹி..

ஆமா இது உண்மைச்சம்பவமா?ஹி.ஹி.ஹி.ஹி

கவி அழகன் said...
Best Blogger Tips

உள்குத்தோ வெளிகுத்தோ ஆனா செமகுத்து மச்சி

ஊரில நடக்காததையா சொல்லிபுட்டிங்க

settaikkaran said...
Best Blogger Tips

ஒரு "உள்ளேன் ஐயா’ மட்டும் சொல்லிக்கினு ’எஸ்" ஆயிடறேன். :-)

kobiraj said...
Best Blogger Tips

அருமை .தமிழ்மணம் +1

பி.அமல்ராஜ் said...
Best Blogger Tips

பெண்களின் மனது எல்லாவற்றுக்கும் ஆசைப்படும் என்பதற்கு எடுத்துக் காட்டாக, சைலஜாவின் பக்கத்து வீட்டில் இருந்த மரகம் ஸ்பீக்கர் ஒன்றினை வாங்கி வேப்ப மரத்தின் உச்சியில் கட்டி பாடல்களை ஒலிக்கவிட்டுக் கொண்டிருந்தாள்.//

சூப்பர் கதை.. சாரி.. சூப்பர் குத்து.. பலே பலே.. ஐடியா மணிக்கும் வாழ்த்துக்கள்.

ஐடியா மணி அவர்களே, உங்கட பேருக்கு பின்னால கூட ஒரு பதிவு போடிருக்கீன்களே... பலே ஆளையா நீங்க..

Rizi said...
Best Blogger Tips

Present sir,

Rizi said...
Best Blogger Tips

thamilmanam 18

Rizi said...
Best Blogger Tips

century

அம்பாளடியாள் said...
Best Blogger Tips

பாரதியார் யூனிவர்சிட்டியில் தான் கற்றுத் தேறிய கணினிக் கல்வியினைக் கொண்டு வேலை தேடியிருப்பின், இன்று ஓர் சாப்ட்வேர் எஞ்சினியராக ஐடி துறையில் பிரகாசிக்க முடியும். எனினும் சுயமாக எலக்டிக்கல் கம்பனி வைத்திருக்கும் கணவன் லைமுகனின் வருமானம்; வீட்டுச் செலவிற்கு போதுமாக இருந்த காரணத்தினால் வேலைக்குச் செல்வதை விடுத்து, வீட்டு வேலைகளைச் செய்து முடித்த பின் //

இந்தத் தவறுகளை ஏற்க்க முடியவில்லை சகோ .சென்றவாரம் இதை மனதில்க்கொண்டே" நான் படிக்கப் போகணும்"என்ற தலைப்பில்
கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளேன் .நேரம் கிடைத்தால்ப் பாருங்கள் .நன்றி சகோ பகிர்வுக்கு .

கூடல் பாலா said...
Best Blogger Tips

ஹி ..ஹி ...

ஆகுலன் said...
Best Blogger Tips

அண்ணே இது ஆருக்கு ஆப்பு...........
எனக்கு ஏதோ உள்குத்து இருபதாக தோணுது......

ஆகுலன் said...
Best Blogger Tips

ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
எவளவு பட்டமா இவருக்கு...வாழ்த்துக்கள் ஐடியாமணி..

M.R said...
Best Blogger Tips

tamil manam 21

tamil 10,indli also votted

M.R said...
Best Blogger Tips

ஆமாம் நண்பரே ஐடியா மணி நண்பர் கலக்கரார் ,புது ஆள் மாதிரி தெரியவில்லை ,நீங்க கூட சந்தேகப்பட்டீங்க போலிருக்கு ,

M.R said...
Best Blogger Tips

ஹி ஹி பதிவு அருமை

அம்பலத்தார் said...
Best Blogger Tips

பலே கில்லாடிதான். எப்படியோ தலைப்பிற்கும் கதைக்கும் முடிச்சுபோட்டிட்டீர் வாழ்த்துக்கள்

M.R said...
Best Blogger Tips

ஹாங்... சொல்ல மறந்துட்டேன் ,புகைப்படத்துல நல்லாவே இருக்கீங்க ,அது எப்ப எடுத்தது ?

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

என்ன நிரூபா? மைனஸ் ஒட்டு கம்மியா இருக்கு?

Prabu Krishna said...
Best Blogger Tips

என்னது உள்குத்து இல்லையா???? அப்புறம் யாருயா மைனஸ் ஓட்டு குத்தறது!!!!

Unknown said...
Best Blogger Tips

கொஞ்சம் புரிஞ்ச மாதிரி இருக்கு, ஆனா புரியலை என்ன நடக்குது இங்கே!!!!!!!!

rajamelaiyur said...
Best Blogger Tips

ஆபாச புகைப்படம் போடுபவர்கள் மீது ?

இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
K.s.s.Rajh said...
Best Blogger Tips

//நீ முட்டி தெரியச் சேலை தூக்கிக் கட்டுற வேளை
நான் கண்ணு முழிச்சு காத்திருப்பேன் கயித்துக் கட்டில் மேல..
ஏடா கூட பொறப்பே...உனக்கு ஏறிப் போச்சு கொழுப்பே, நீ மாசத்தில மூனு நாளு எங்கே போயி படுப்பே"//

இது என்ன மொழிச்சொற்கள் பாஸ் ஒன்னுமே புரியலையே....வாசிக்க கூடிய மாதிரி இருக்கு பட் அர்த்தங்கள் புரியலையே..........ஹி.ஹி.ஹி.ஹி

K.s.s.Rajh said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

மணி சார் எங்க ஒரு பதிவு போட்டீங்க அப்பால காணவே கிடைக்கல...உங்கள் பதிவுகளை வாசிக்க காதிருக்கும் எங்களை ஏமாற்றலாமா?சீக்கிரம் ஒரு பதிவை போடுங்க.....முதல் பதிவை வாசிச்சபோதே வித்தியாசமா எழுதுவிங்கனு நெனைச்சோம் என்ன சார் நீஙக போங்க சார்.....

K said...
Best Blogger Tips

@செங்கோவி

ஐடியா மணி, பதிவுலக வாசகரா..அதானே பார்த்தேன், இந்தப் போடு போடுறாரேன்னு!///

சார், கும்புடுறேனுங்க! ஆமா சார், ரொம்ப காலமா நெறைய பதிவுகள படிச்சுட்டு வர்ரேன்!

K said...
Best Blogger Tips

@கோகுல்

ஐடியா மணியின் ஐடியாக்கள் பலே பலே!////

வணக்கம் கோகுல் சார்! கும்புடுறேனுங்க!

ரொம்ப நன்றி சார்! உங்க ஒப்பீனியனுக்கு!

K said...
Best Blogger Tips

@நிரூபன்

ஐடியா மணியின் ஐடியாக்கள் பலே பலே!//

ஆமா பாஸ்..ரெண்டு பதிவுகளிலும் செம ஐடியா கொடுத்திருகாரு.///

வணக்கம் நிரூபன் சார்! கும்புடுறேனுங்க!

நீங்க என்னைய ரொம்ப புகழுறீங்க! நான் இன்னும் ஐடியாக்கள் குடுக்க ஆரம்பீகல!இனிமேத்தான் ஆரம்பிக்கப்போறேன்!

தேங்க்ஸ் சார்!

K said...
Best Blogger Tips

@Nesan

ஐடியா மணியையும் பதிவுலகில் பட்டையைத் தீட்டவாழ்த்துக்கள்!///

ரொம்ப நன்றி நேசன் சார்! கும்புடுறேனுங்க!

K said...
Best Blogger Tips

@நிகழ்வுகள்

/////ஐடியாமணி/// புது பிளாக்கு, புது பேரு, புது................ புது ................கலக்கிறே மணி.....))///

ரொம்ப நன்றி கந்தசாமி சார்! கும்புடுறேனுங்க!

K said...
Best Blogger Tips

@காட்டான்

அப்புறம் வடையாரை சாரி சாரி மணியாரை வாழ்த்துகிறேன்...

காட்டான் குழ போட்டான்..///

காட்டான் சார்! கும்புடுறேனுங்க! உங்க வாழ்த்துக்கு நன்றி சார்! ஆனா என்னை இன்னொருவராகப் பாக்கிறதுதான் மனச வலிக்கச் செய்யுது சார்!

K said...
Best Blogger Tips

@துஷ்யந்தன்

அப்புறம்......... மாத்தியோசி சாரி அண்ணன் மணிக்கு
என் வாழ்த்துக்கள்///

வணக்கம் துஷ்யந்தன் சார்! கும்புடுறேனுங்க!

வாழ்த்துக்கு நன்றி! ஆனா என்னையப் போய் இன்னொருத்தரோட....... வேணாம் சார்!நான் அவனில்லை!!

K said...
Best Blogger Tips

@மாய உலகம்

ஐடியா மணி யாராஇருக்கும் ஒரு வேளை ஓ வ நாவா இருக்குமோ... ரூம் போட்டு யோசிப்போம்//

வணக்கம் மாய உலகம் சார்! கும்புடுறேனுங்க!

சார், ரூம் போட்டு யோசிக்கறதுக்கு அவசியமே இல்ல! ஏன்னா, அவரு வேற! நான் வேற சார்! ஆக்சுவலி ஐ ஆம் எ டம்மி பீஸ் டூ!

K said...
Best Blogger Tips

@பி.அமல்ராஜ்

சூப்பர் கதை.. சாரி.. சூப்பர் குத்து.. பலே பலே.. ஐடியா மணிக்கும் வாழ்த்துக்கள்.

ஐடியா மணி அவர்களே, உங்கட பேருக்கு பின்னால கூட ஒரு பதிவு போடிருக்கீன்களே... பலே ஆளையா நீங்க..///

சார், கும்புடுறேனுங்க!

அதெல்லாம் நான் படிச்சு வாங்கின பட்டம் சார்! இம்புட்டு பட்டம் வாங்கியும் எனக்கு எவனும் பொண்ணு தர மாட்டேங்குறான்!

ஏன்னுதான் புரியல சார்!

K said...
Best Blogger Tips

@ஆகுலன்

ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
எவளவு பட்டமா இவருக்கு...வாழ்த்துக்கள் ஐடியாமணி..///

வணக்கம் ஆகுலன் சார்! கும்புடுறேனுங்க!

என்னோட பட்டங்கள் பத்தி, தனியா ஒரு பதிவு போடறேன் சார்!

K said...
Best Blogger Tips

@M.R

ஆமாம் நண்பரே ஐடியா மணி நண்பர் கலக்கரார் ,புது ஆள் மாதிரி தெரியவில்லை ,நீங்க கூட சந்தேகப்பட்டீங்க போலிருக்கு ,///

வணக்கம் எம் ஆர் சார்! கும்புடுறேனுங்க!

ஆமா சார் யாரைப் பார்த்தாலும் என்மேல சந்தேகப்படுறாங்க!

K said...
Best Blogger Tips

@K.s.s.Rajh

மணி சார் எங்க ஒரு பதிவு போட்டீங்க அப்பால காணவே கிடைக்கல...உங்கள் பதிவுகளை வாசிக்க காதிருக்கும் எங்களை ஏமாற்றலாமா?சீக்கிரம் ஒரு பதிவை போடுங்க.....முதல் பதிவை வாசிச்சபோதே வித்தியாசமா எழுதுவிங்கனு நெனைச்சோம் என்ன சார் நீஙக போங்க சார்.....///

வணக்கம் ராஜா சார்! கும்புடுறேனுங்க!

சார், ரெண்டவதா ஒரு பதிவு போட்டிருக்கேன் சார்!

athira said...
Best Blogger Tips

கடவுளே...கடவுளே.... கடவுளே.... முதல்ல உந்த சார் போடுறதை நிறுத்தச் சொல்லுங்கோ நிரூபன்:))... நிம்மதியா இருந்து ஒரு பதிவெழுத முடியேல்லை அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))))அப்பூடி எழுத நினைத்தேன் ஆனா எழுதமாட்டேன், ஏனெண்டால் நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே...:))).

Yoga.s.FR said...
Best Blogger Tips

அந்த முதல் போட்டோவில இருக்கிற "புள்ள" கூடை நிறைய வாழப்பழம் வச்சிருக்குது!

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

மறைமுகமாக ஏதோ சொல்ல வருகிறீர்கள்!நான் ஏதாவது சொல்லி .....!எனெக்கெதுக்கு வம்பு!
மணியோசை கேட்டேன்.கணீர்!

K.s.s.Rajh said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

சாரி மணி உங்க பதிவு என் டாஸ்போட்டுல வரலை அதான் மிஸ்சிங் இதோ இப்பவே போய் பாக்குறன்///

இன்று என்கடையில் (பகுதி-6)நினைவுகள் மாறாத உண்மைக்கதை மறக்கமுடியாத பாடசாலை நாட்கள்.
http://cricketnanparkal.blogspot.com/2011/09/6.html?spref=fb

shanmugavel said...
Best Blogger Tips

ஆபாச பதிவர்கள் மீது அதிரடி ஆக்சனா? எங்கே?எங்கே?

shanmugavel said...
Best Blogger Tips

@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw

எத்தனை முறை தான் கிழியும் இந்த கிருஷ்ணகிரி ,அது சரி dip in mokkai தெரியுது! அப்புறம் புரியலையே?

shanmugavel said...
Best Blogger Tips

லைமுகன் பெயர்காரணம் கூறுக!

Anonymous said...
Best Blogger Tips

சைதாப்பேட்டையில் திறந்திருந்த ஹன்சிகா பார்மஸி....Total Coverage...

லைமுகன்....கெட்ட வார்த்தையா நிரூபன்...?

பதிவிற்கும் தலைப்பிற்கும் தொடர்பில்லை...நம்ம ரெண்டு பேருக்கும் இதுல மாற்றுக்கருத்தே இல்லை நண்பரே...

ஆதாரம்...
Objection your hono(u)r...

நிரூபன் said...
Best Blogger Tips

@ரெவெரி

@பதிவிற்கும் தலைப்பிற்கும் தொடர்பில்லை...நம்ம ரெண்டு பேருக்கும் இதுல மாற்றுக்கருத்தே இல்லை நண்பரே...

ஆதாரம்...
Objection your hono(u)r...//

அவ்...டிஸ்கியைக் கொஞ்சம் பார்க்கிறது..
ஹா..ஹா....

செங்கோவி said...
Best Blogger Tips

//September 1, 2011 2:16 AM
மாப்பிள இதுக்கு நான் நல்ல பதில் தருவேன்யா ஆனா நீயும் செங்கோவிமாதிரி என்ர கொமண்ட எடுத்திட்டா மனசு வழிக்கும்.. பின்ன எழுத்து கூட்டி எழுதுறதென்னா சும்மாவா அத நீங்க கட் பண்ணேக்க ஒண்டுக்கு ஆயிரம் தடவ யோசிங்கோப்பா.. //

மாம்ஸ், இன்னுமா நீங்க அதை மறக்கலை?

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

<<>>வீட்டு வேலைகளைச் செய்து முடித்த பின் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் வெளியே சென்று ஆலய தரிசனம் செய்வது, லேடீஸ் கிளப் மீட்டிங்கிற்கு போவது, தன் மனதில் எழும் நினைவுகளை ஒரு நோட் புக்கில் எழுதிப் பத்திரப்படுத்தி வைப்பது என்று தன் நாட்களை நகர்த்தி வந்தாள் சைலஜா.

hi hi ரமிணிசந்திரன் நாவலை கிண்டலிங்க்?

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

>>"நீ முட்டி தெரியச் சேலை தூக்கிக் கட்டுற வேளை
நான் கண்ணு முழிச்சு காத்திருப்பேன் கயித்துக் கட்டில் மேல..
ஏடா கூட பொறப்பே...உனக்கு ஏறிப் போச்சு கொழுப்பே, நீ மாசத்தில மூனு நாளு எங்கே போயி படுப்பே"

சினிமாவுக்கு டப்பாங்குத்து பாட்டு எழுத நிரூபன் சரியான ஆள் தாம்ப்பொ

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

>>அடுத்தடுத்த ஆபாசத் தலைப்பு வைத்த பிட்ஸிகானை, அவதூறு செய்யும் வகையில் சைலு தன் சங்கீதங்கள் எனும் ப்ளாக்கில் "ஆபாசப் பதிவெழுதுவோர் மீது அதிரடி ஆக்சன்" எனும் பெயரில்’ தலைப்பு வைத்து மறைமுகமாகப் பிட்ஸிகானைத் தாக்கிப் பதிவு போட்டா. ஆனாலும் இது எதிர்பார்த்தளவு தாக்கத்தினைக் கொடுக்கவில்லை என்ற காரணத்தினால், ஆதாரமற்ற செக்ஸ் டாச்சர் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து பிட்ஸிகானை வலையினை விட்டுத் துரத்தும் முயற்சியில் ஈடுபட்டா சைலு

yaarum யாரும் யாரையும் துரத்த முடியாது, அவங்கவங்களுக்குன்னு ஒரு இடம் உண்டு

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

>>இப்படியான தலைப்புக்கள் வைத்த பதிவரை விரட்ட சைலஜா செய்த அறப்போரின் தலைப்பு ‘காமத் தலைப்புக்களால் கட்டில் சுகம் தேடும் ஈனப் பதிவர்’

நிரூபனை விட பெரிய ஆளு போல ஹா ஹா ஹா

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails