Tuesday, September 27, 2011

"ABDUCTION" - கிரிமினலின் அசைவுகள்- புத்தம் புதிய ஹாலிவூட் சினிமா விமர்சனம்!

இப் படமானது 15 வயதிற்கு மேற்பட்டோர் மாத்திரம் பார்த்து மகிழும் வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இன்றைய உலகில் பல்வேறுபட்ட குறிக்கோள்களின் அடிப்படையில் மனித உயிர்களைக் கொல்லுகின்ற யுத்தங்கள் இடம் பெற்று வருகின்றன. சுதந்திரத்திற்காகவும், உணவுத் தேவைக்காகவும், இனவாதக் கொள்கைகளின் அடிப்படையிலும் ஒருவரை ஒருவர் அடக்கி வாழும் நோக்கிலும் யுத்தங்கள் இடம் பெற்று வரும் இக் காலத்தில் சைபர் கிரைம் எனப்படுகின்ற நவீன தொழில் நுட்பத் தரவிற்காக (DATA) இடம் பெறுகின்ற கொலை முயற்சிகளைப் பற்றிப் பேசுகின்ற படம் தான் ABDUCTION ஆகும். 
Longsgate (லாங்க்ஸ்கேட்) படத் தயாரிப்பு நிறுவனத்தின் உருவாக்கத்தில், Taylor Lautner (ரெயிலர் லன்ரெட்), Lily Collins (லில்லி காலின்ஸ்), Alfred Molina (அல்பிரட் மோலினா), Jason Isaacs (ஜாசன் இசாக்ஸ்), Sigourney Weaver (சிக்குரேணி வேய்வர்), Maria Bello (மரியா பெலோ), முதலிய அமெரிக்க- பிரிட்டிஷ் ஹாலிவூட் நட்சத்திரங்களின் நடிப்பிலும், Edward Shearmur (எட்வார்ட் சஃர்மெர்) இன் அடுத்தது என்ன எனும் எதிர்பார்ப்பினைத் தூண்டவல்ல இசையிலும், Shawan Cristensen (சவான் கிரிஸ்ரேன்ஸ்) அவர்களின் எழுத்துருவாக்கத்திலும், John Singelton (ஜான் சிங்கெல்ரோன்) அவர்களின் இயக்கத்திலும் செப்டெம்பர் 23ம் திகதி அன்று திரைக்கு வந்திருக்கும் படம் தான் இந்த ABDUCTION.

வாலிப வயசிற்குரிய குறும்புத் தனமும்,  மேலைத் தேச டீன் ஏஜ் பசங்களுக்கேயுரிய பார்ட்டி- கேளிக்கை ஆசை கொண்டவனாகவும், தன்னுடைய நிஜப் பெற்றோர் பற்றியோ, தான் யாரிடம் வளர்கின்றேன் என்பது பற்றியோ அறியாதவனாகத் தன் வளர்ப்புப் பெற்றோருடன் வாழ்ந்து வரும் பையன் தான் Nathan எனும் கதாபாத்திரமாக இப் படத்தில் வலம் வரும் Taylor Lautner. பல்கலைக் கழகத்தில் குரூப் புரொஜக்ட் அடிப்படையில் புகைப்படங்களை ஜோடிகளுக்கு ஏற்ற வாறு பொருத்த வேண்டும் எனும் ப்ராக்டிக்கலைத் தன் வகுப்புத் தோழியான லில்லியுடன் இணைந்து தன் வீட்டில் வைத்துச் செய்யத் தொடங்குகிறார் ரெயிலர் அவர்கள்.

ரெயிலரின் வகுப்புத் தோழி லில்லி மீது தனக்கு இருந்த ஆசையிற்குச் சரியான சந்தர்ப்பம் வாராதா எனும் ஏக்கத்தோடும், அவளைக் காதலிக்க வேண்டும் எனும் ஆவலினைத் தன் மனதினுள்ளும் கொண்டு நடை போட்டுக் கொண்டிருக்கும் ரெயிலருக்கு அவரது தோழி லில்லி சிறு வயதில் ரெயிலர் எப்படி இருந்தார் என்பதனை டிசைனிங் செய்து காட்டுகிறார். இதன் மூலம் தன் பிறப்பில் சந்தேகம் கொண்டவனாக தன் தயாரிடம் ஓடிச் சென்று கேட்கின்ற வேளை வளர்ப்புத் தாயாரோ பதிலேதும் சொல்ல முடியாதவராக விம்மி அழுகின்ற நேரம் பார்த்து இனந் தெரியாத கும்பல் ஒன்று அவரது தாயினையும், தந்தையினையும் கொல்வதற்காக ரெயிலரின் வீட்டினுள் நுழைகின்றது.

ரெயிலரின் வளர்ப்புப் பெற்றோரினைக் கொல்வதற்காக அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டினுள் நுழையும் வரை மெதுவாக நகர்ந்து கொண்ட திரைக்கதை கொலையாளிகள் ரெயிலரின் வீட்டிற்குள் வெடி குண்டினைச் சொருகியிருக்கிறோம், இன்னும் சில நிமிட நேரத்தில் வெடித்து விடும் என்று சொன்னதும் சூடு பிடிக்கத் தொடங்குகின்றது. நேரக் கணிப்பு வெடி குண்டுத் தாக்குதலில் ரெயிலரின் வளர்ப்புப் பெற்றோர்கள் இறந்து கொள்ளத், தன் தோழி லில்லியை அழைத்துக் கொண்டு காயம்பட்ட தன் தோழிக்குச் சிகிச்சைய பெறும் நோக்கில் வைத்தியசாலை நோக்கி ஓடத் தொடங்குகிறார் ரெயிலர்.

ரெயிலர் மாத்திரம் அவர்களது குடும்பத்தில் எஞ்சியிருக்கிறார்கள் என்பதனை அறிந்து, அவரைக் கொல்லும் நோக்கோடு பின் தொடரும் ஐரோப்பிய மாபியா சைபர் கிரைம் கும்பலிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள ஓடிக் கொண்டிருக்கும் ரெயிலரின் ஒவ்வொர் அசைவுகளும் திருப்பங்கள் நிறைந்ததாகப் படத்திற்கு மேலும் திரிலிங்கை கூட்டுகின்றது.

ஐரோப்பிய மாபியா கும்பலான காஸ்டெல்லோ கும்பலும், அமெரிக்க உளவுத் துறையும் ஏன் ரெயிலரை இடை விடாது துரத்துகிறார்கள், ரெயிலரின் உண்மையான பெற்றோர் யார்? ரெயிலர் வைத்திருக்கும் தரவுக் கோப்புக்களின் மூலம் கிடைக்கப் போகும் பயன் என்ன? எனப் பல தரப்பட்ட தகவல்களுக்கு விடையளிக்கும் வண்ணம் படத்தினை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் ஜான் சின்கெல்டன் அவர்கள். திருப்பங்களும், அதிரடிக் கொலைகளும் நிகழ்ந்த இப் படத்தின் முடிவானது உங்களுக்குத் திரையில் நிச்சயம் தித்திப்பினைத் தரும் என்பதில் ஐயமில்லை.

லில்லி தன் தோழனான ரெயிலரோடு பின் தொடர்ந்து சென்று இறுதி வரை அவனுக்குத் துணையிருந்து, "உன் கூட நான் எப்பவுமே இருக்கனும்" எனச் சொல்லிக் கையோடு கை கோர்த்துப் புகைவண்டியில் தம்மைப் பாதுகாப்பதற்காக மறைந்து செல்லும் போது மூச்சு விடாது ரெயிலருக்கு முத்தம் கொடுத்து ரசிகர்களுக்கும் விருந்தளித்திருக்கிறா. 

படத்தின் ப்ளஸ் பாயிண்டுகளுள் ஒன்றாக; ஒவ்வோர் நொடியும் அடுத்தது என்ன என்று அறியும் ஆவலைத் தூண்டும் வண்ணம் Edward Shearmur அவர்களின் இசை அமைந்து கொள்கின்றது. Shawan Cristensen  அவர்கள் தன்னுடைய உன்னதமான வசனங்கள் நம் மனதில் இடம் பிடிக்கும் வண்ணம் படத்தின் காட்சிகளுக்கேற்றாற் போல அருமையான வசனங்களைத் தந்திருக்கிறார். எடுத்துக் காட்டாக, தன்னுடைய தாய் மீது சந்தேகம் கொண்ட ரெயிலரின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வண்ணம், உணர்ச்சி பொங்கும் வசனங்களை அமைத்திருக்கின்றார்.
"Are you my mum? Are you my mum? Why you din't tell me, 
(நீ என்னுடைய அம்மாவா? உண்மையிலே நீ என்னைப் பெறவில்லைத் தானே. ஏன் இன்று வரை சொல்லவில்லை?)

இறுதிக் காட்சிகளில் தன் தந்தையினைத் தான் எதிர்பார்க்காத தோற்றத்தில் படத்தில் Nathan ஆக வலம் வரும் ரெயிலர் அவர்கள் அறிந்து கொள்ள நேரிடும் போது; தந்தையோடு சேர்ந்து வாழ வேண்டும் எனும் உணர்வு கொண்டவனாகத் தொலைபேசி வழியே பேசும் போது, தனக்கு உன்னோடு வாழும் பாக்கியம் கிடைக்கவில்லை எனத் தந்தை சொல்லும் காட்சியில்
I'm your Father, But never be a Dad” (நான் உன்னைப் பெற்ற தந்தை. ஆனால் உனக்குத் தந்தையாக இருந்ததில்லை) என்று மனங்களை உருக்குகின்ற வசனம் பேச வைத்து தன் எழுத்துருவாக்கத்தின் ஸ்திரத் தன்மையினை நிரூபித்திருக்கிறார். 

ரெயிலருக்கு உதவுகின்ற நல்ல பெண்ணாக வருகின்ற Sigourney Weaver (மூத்த நடிகை) அவர்கள் தன்னுடைய 44 வயதிலும், துள்ளும் இளமைத் துடிப்போடு, மாபியா குறூப்பிற்குச் சவாலாக வேகமாகவும், சாதுர்யமாகவும் கார் ஓட்டி எம் விழிகளினைச் சில நிமிடங்கள் திரையினை விட்டு அகலாதவாறு பற்றிப் நிலை கொள்ளச் செய்திருக்கிறா.

போரடிக்காமல் திரிலிங் பிரியர்களுக்கு விருந்தளிக்கும் வண்ணம் இப் படத்தினை $35மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் எடுத்திருக்கிறார்கள். படத்தின் மொத்த நேரம் 103-106 நிமிடங்கள். 

ABDUCTION: அப்டக்சன் திரிலிங் கலந்த, சைபர் கிரைம் தொழில்நுட்பத் தரவுகளிற்காக இடம் பெறும் கொலைகளின் பின்னணியிலான துலங்கும் மர்மங்களிற்கான விடை.


சென்னையில் இப் படம் ஓடிக் கொண்டிருக்கும் தியேட்டர் விபரங்களை அறிய:
http://www.nowrunning.com/abduction/chennai/9583/movie-showtimes.htm

இலங்கையில் லிபர்ட்டி திரையரங்கில் இன்னும் சில நாளில் இப் படம் திரைக்கு வரும்.
இப் படத்தினை ட்ரெயினிங்கின் நிமித்தம் சிங்கப்பூரில் தற்போது நிற்பதால், சிங்கப்பூர் Golden Village Bishan திரையரங்கில் பார்த்தேன்.

பிற் சேர்க்கை: இப் படக் கதா நாயகன் ரெயிலரின் உண்மையான வயது என்ன தெரியுமா? 19
***********************************************************************************************************************
வலையுலகில் அண்மைக் காலத்தில் காலடி எடுத்து வைத்து கிரிக்கட், சினிமா, சமூகம் சார்ந்த பதிவுகள் எனப் பல சுவையான பதிவுகளைப் பகிர்ந்து வருபவர் தான் "உங்களில் ஒருவன்" வலைப் பதிவின் சொந்தக் காரன் சகோதரன் "கோபிராஜ்" அவர்கள். 

விஜய் அஜித் ரசிகர்களின் முறுகல் நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வண்ணம் ஒரு அசத்தல் பதிவினை எழுதி அனைவருக்கும் அறிமுகமாகியதோடு; கிரிக்கட் எதிர்வு கூறல்களையும் தொகுத்து வழங்கிப் பதிவர்களை ஆச்சரியப்பட வைப்பதில் தேர்ச்சி பெற்றவராக விளங்குகின்றார் கோபிராஜ் அவர்கள்.

கோபிராஜ் அவரிகளின் வலைப் பூவிற்குச் செல்ல:
***************************************************************************************************************************

47 Comments:

K said...
Best Blogger Tips

என்ன இப்பவெல்லாம் அடிக்கடி சினிமா வருது? அதுவும் ஹாலிவூட் படங்கள்! வெளிநாட்டுக்கு வர்ர ஐடியா இருக்கோ?

ஸ்ரீராம். said...
Best Blogger Tips

புத்தம்புதிய ஆங்கிலத் திரைப் படத்திற்கு விமர்சனமா...? நான் இன்னும் நீங்கள் ஏற்கெனவே சொன்ன Unstoppable படமே பார்க்கவில்லை..பார்க்க வேண்டும் என்ற ஆவல் மட்டும் உள்ளது. இப்போது இதுவும் லிஸ்ட்டில் சேர்ந்து விட்டது!

kobiraj said...
Best Blogger Tips

என்னை உங்கள் தளத்தில் அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றிகள் அண்ணா.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

kobiraj said...
Best Blogger Tips

இந்த படத்தை யாழில் பார்க்கும் வசதிகள் எதுவும் இல்லையா ? பாஸ்

Anonymous said...
Best Blogger Tips

அதென்னமோ... விமர்சனம் படிக்கறதோட சரி... ஆங்கில படங்களை எல்லாம் தியேட்டர் தேடிப்போய் பார்க்கறதுக்கு ஆர்வமே வருவதில்லை.....

K.s.s.Rajh said...
Best Blogger Tips

விமர்சணம் சூப்பர் பாஸ்..

கோபிராஜ்க்கு வாழ்த்துக்கள் அவரது எழுத்துக்கள் ரசிக்க வைக்கின்றன

K.s.s.Rajh said...
Best Blogger Tips

பாஸ் தமிழ் மணம்.ஓட்டு மக்கர் பண்ணுது..

கவி அழகன் said...
Best Blogger Tips

பாதிட்டா போச்சி மச்சானுக்கு நல்ல தியட்டர் ஒண்டு அம்பிட்டிருக்கு போல

rajamelaiyur said...
Best Blogger Tips

Good review

Unknown said...
Best Blogger Tips

நீங்க படம் பார்த்தாச்சா? இலங்கையில் எங்கே? எனக்கும் 19 வயசுதானே.

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

விமர்சனம் அருமை நண்பா...

maruthamooran said...
Best Blogger Tips

நிரூ...!

கலக்கலாகவும்- விறுவிறுப்பாகவும் இருக்கய்யா விமர்சனம்.

அடிக்கடி பீட்டர் பட விமர்சனங்கள் வருகிறது. நல்லாயிருக்கு.

விறுவிறு சண்டைப்படங்களிலும்- அளவான செண்டிமென்ட் காட்சிகள் அற்புதமாகப் பொருந்தப்போயிருக்கின்றன என்று நினைக்கிறேன். விரைவில் பார்க்க வேண்டும்.

தனிமரம் said...
Best Blogger Tips

விமர்சனம் படத்தைப் பார்க்கத்தூண்டுகின்றது அடுத்த விடுமுறையில் பார்க்கும் பட்டியல் தொடர்ந்து தந்துகொண்டிருக்கிறீங்க பாஸ்.
ஹீரோவுக்கு 19 வயதா அப்ப எனக்கும் அதுதானே!
கோபிராச் வலைப்பூ உண்மையில் காத்திரமான பதிவுகள் மிக்கது அவருக்கும்  வாழ்த்துக்கள்!

தனிமரம் said...
Best Blogger Tips

இந்தப்படம் இங்கேயும் பிரென்ஸ் மொழியில் (பின்னனிக்குரல்) நாளை(28/9) திரைக்கு வருகின்றது பார்க்கத்தான் ஆசை !

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

நிரூபா!! சினிமா பத்திரிக்கைல சேரும் அளவு அட்டகாசமான விமர்சனத்திறமை இருக்கு ..!!!!!!!!!!!!!! நாங்களும் கத்துக்கறோம்ம்.

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

படத்துல செம ஆக்‌ஷன் போல!!!

எம்.ஞானசேகரன் said...
Best Blogger Tips

விமர்சனம் நல்லாத்தான் இருக்குது ஆனா படத்தை எங்கே போய் பாக்குறது

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்

நிரூபா!! சினிமா பத்திரிக்கைல சேரும் அளவு அட்டகாசமான விமர்சனத்திறமை இருக்கு ..!!!!!!!!!!!!!! நாங்களும் கத்துக்கறோம்ம்.//

அப்படியெல்லாம் இல்லை பாஸ்..
ஏதோ என்னால முடிஞ்சதை எழுதுகிறேன்,
நான் இப்போதும் கத்துக் குட்டி தான்.

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்

விமர்சனம் நல்லாத்தான் இருக்குது ஆனா படத்தை எங்கே போய் பாக்குறது//

நண்பா விமர்சனத்தின் கீழே படத்தினை எங்கே பார்க்கலாம் என்று போட்டிருக்கேன்...

Prabu Krishna said...
Best Blogger Tips

விமர்சனம் நல்லாத்தான் இருக்குது ஆனா படத்தை எங்கே போய் பாக்குறது//
Repeat......

அம்பலத்தார் said...
Best Blogger Tips

எப்படி ஐயா இவ்வளவு படங்கள் பார்க்க நேரம் கிடைக்கிறது

ம.தி.சுதா said...
Best Blogger Tips

////இப் படமானது 15 வயதிற்கு மேற்பட்டோர் மாத்திரம் பார்த்து மகிழும் வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது.////

+ நாய்கடிக்கும் கவனம் = எச்சரிக்கை

ம.தி.சுதா said...
Best Blogger Tips

பகிர்வுக்கு நன்றி காரணம் இப்பிடியொரு படத்துக்காய் 3000 செலவழித்து லிபேட்டி போக நான் தயாரில்லை.

யாராவது சீடி தாங்கப்பா..

அம்பாளடியாள் said...
Best Blogger Tips

அழகிய திரைப்பட விமர்சனத்திற்கு வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .........

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

நல்ல விமரிசனம்.

Rizi said...
Best Blogger Tips

திரைப்பட விமர்சனத்திலும் கலக்குறீங்க பாஸ் தொடருங்கள்.. நல்ல படங்களை அறிமுகப்படுத்துங்க,

Unknown said...
Best Blogger Tips

அருமையா விமர்சனம் பண்ணி இருக்கீங்க நண்பா!

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
Best Blogger Tips

விமர்சனம் அருமை நிரு. கோபிராஜுக்கு வாழ்த்துக்கள்...

பாரணை முடிச்ச:) அதிரா said...
Best Blogger Tips

நல்லாத்தான் விமர்சித்திருக்கிறீங்க.

//இப் படமானது 15 வயதிற்கு மேற்பட்டோர் மாத்திரம் பார்த்து மகிழும் வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது//

அப்போ பேபியாக இருப்பவங்க பார்க்கமுடியாதுதானே?:).

ஊசிக்குறிப்பு:

வெடி சொடி:), நான் பழக்க தோஷத்தில உள்ளே வந்திட்டேன்:), நான் நிரூபனோட கோபம்ம்ம்ம்:)),

கோபமெண்டால் பேசப்புடாது தானே?:)).. இல்ல ஒரு டவுட்:)))).

பாரணை முடிச்ச:) அதிரா said...
Best Blogger Tips

"உங்களில் ஒருவன்" // அறிமுகத்திற்கு வாழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்த்துக்கள்.

செங்கோவி said...
Best Blogger Tips

படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுறிங்களே..பார்த்திடுவோம்.

Unknown said...
Best Blogger Tips

அழகான விமர்சனம் நிரூ

படம் பார்த்த ஒரு உணர்வை ஏற்ப்படுத்தி இருக்கிறீர்கள் !!

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

கமான் ஒன் டூ த்ரீ.......ஆக்ஷன் கேமரா.......!!!

காட்டான் said...
Best Blogger Tips

அட சிங்கப்பூரில நிக்கிறீங்களா..!!! ஏதோ விசயமிருக்கு வெளிநாட்டுக்கு வரப்போகின்றீர்களோ..!?? 

அருமையான விமர்சனம் வாழ்த்துக்கள்..

Anonymous said...
Best Blogger Tips

மத்த எல்லாத்தையும் விட தரவு பசி ரொம்ப பொல்லாதது... முக்கியமான நேரங்களில் தரவுகை தந்துதவாத நிறுவங்களை பார்த்தல் நமக்கே ரொம்ப காண்டாகும்... எதுக்கு இந்த படத்த ஒரு வாட்டி பார்துர்றேன்... இல்லைனா எவனாவது கொல கில பண்ணி தொலைக்கபோறேன்...

Mathuran said...
Best Blogger Tips

விமர்சனம் சூப்பர் பாஸ்...
வித்தியாசமா இருக்கு

Mathuran said...
Best Blogger Tips

கோபிராஜுக்கு வாழ்த்துக்கள்

Mathuran said...
Best Blogger Tips

///////அட சிங்கப்பூரில நிக்கிறீங்களா..!!! ஏதோ விசயமிருக்கு வெளிநாட்டுக்கு வரப்போகின்றீர்களோ..!?? ///

காட்டான் உங்களுக்கு விசயமே தெரியாதா... நிரூபன் பாஸ் கல்யாணம் கட்டப்போறாராம்..
அவர் ட்ரெயினிங் எண்டு சொன்னது மணப்பெண்ணுக்கு ப்ளாக் எழுதுறது எப்பிடி என்று ட்றெயினிங்காம் ஹி ஹி

Mathuran said...
Best Blogger Tips

///////அட சிங்கப்பூரில நிக்கிறீங்களா..!!! ஏதோ விசயமிருக்கு வெளிநாட்டுக்கு வரப்போகின்றீர்களோ..!?? ///

காட்டான் உங்களுக்கு விசயமே தெரியாதா... நிரூபன் பாஸ் கல்யாணம் கட்டப்போறாராம்..
அவர் ட்ரெயினிங் எண்டு சொன்னது மணப்பெண்ணுக்கு ப்ளாக் எழுதுறது எப்பிடி என்று ட்றெயினிங்காம் ஹி ஹி

kobiraj said...
Best Blogger Tips

எனக்கு வாழ்த்து தெரிவித்து உற்சாகப் படுத்தும் அனைவருக்கும் நன்றிகள் .என்னை உங்கள் வலையில் அறிமுகப் படுத்தி பலரை எனக்கு அறிமுகப் படுத்திய நிருபன் அண்ணா உங்களுக்கு மீண்டும் நன்றிகள்

shanmugavel said...
Best Blogger Tips

பார்த்துட்டாப் போச்சு! விமர்சனம் நல்லாருக்கு சகோ!

Anonymous said...
Best Blogger Tips

என்ன நிரூபன்..படம் எடுக்கப்போரீங்களா...அடிக்கடி விமர்சனம்...

நல்லாயிருந்தது விமர்சனம்...

சூட்டிங் பார்த்தேன் ரெண்டு நாள்...பத்தாயிரம் பொண்ணுங்க Taylor Lautner பின்னாடி எப்போதுமே...

M.R said...
Best Blogger Tips

நல்ல விமர்சனம் நண்பரே

அனைத்திலும் வாக்கிட்டேன் நண்பரே

Unknown said...
Best Blogger Tips

நல்ல விமர்சனம் நண்பரே

Philosophy Prabhakaran said...
Best Blogger Tips

நல்ல விமர்சனம்... பார்த்துவிடுகிறேன்...

மாய உலகம் said...
Best Blogger Tips

அலசல் அருமை மாம்ஸ்... எல்லா ஓட்டையும் போட்டுட்டேன் இண்ட்லி உட்பட... உங்களில் ஒருவனுக்கு வாழ்த்துக்கள்

Unknown said...
Best Blogger Tips

//நேரக் கணிப்பு வெடி குண்டுத் தாக்குதலில் ரெயிலரின் வளர்ப்புப் பெற்றோர்கள் இறந்து கொள்ள//

அப்பிடி இறக்கவில்லை என நினைக்கிறேன்

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails