Friday, September 30, 2011

ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் - பாகம் 05

இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க.....
நான்காவது பாகத்தின் தொடர்ச்சியாக......
எங்களின் விளைச்சல் நிலங்கள் அனைத்திலும் பசளைகளுக்குப் பதிலாக(உரத்திற்கு) மனித எலும்புகளே புதைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றினைத் தோண்டி எடுத்து, தோல்விகளை ஆற்றுப்படுத்த முடியாதவர்களாய் நாங்கள் இன்று நடை போட்டுக் கொண்டிருக்கிறோம்.


"ஊர் நினைவுகள் எப்பொழுதும் நினைக்க - நினைக்க சுகத்தை அள்ளி வழங்கும் இயல்புடையவை" என்று பாடுகின்ற பல கவிஞர்கள் மத்தியில் எம் இறந்த காலங்கள் இதயத்தை வாட்டுகின்ற நரக ஞாபகங்களாக மட்டுமே நெஞ்சில் நிழலாடுகின்றன. என்னவோ தெரியவில்லை! ஈழத் தமிழன் மட்டும் தன் மண்னில் உள்ள வளங்களோடு தானும் ஒன்றித்து, அனுபவித்து வாழ்ந்து மண்ணோடு மண்ணாகிப் போகின்ற வரத்தினை காலம் தரவில்லை. 

1954ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பெருவாரியான இனவாதப் பேய்களின் ஊழி நடனம் இன்று வரை தன் தீராத ரத்தப் பசியோடு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இராசாத்தி அக்காவைப் பிரிந்த துயரில் மாமா தன் நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தார். மாமாவின் மனதினுள் இருந்த இராசாத்தி மீதான காதல் அவருக்குப் பல்வேறு சிந்தனைகளைக் கிளறி விட்டிருக்க வேண்டும். "இராசாத்தியினைப் போல இன்னும் எத்தனை பெண்களை இவர்கள் வல்லுறவு செய்வார்கள்? எங்களின் மண்ணில் இன்னும் எத்தனை நாளைக்குத் தான் அச்சத்தோடு நாம் வாழ வேண்டும் எனும் எழுதப்படாத விதியினை இந்திய இராணுவமும், ஸ்ரீலங்கா இராணுவம் கடைப்பிடிப்பார்கள்?" இவ்வாறு மாமாவின் எண்ண அலைகள் புரட்சியினை நோக்கிப் பயணிக்கத் தொடங்கின.


"ம்....நாங்கள் ஒன்று திரள வேண்டும்! அஞ்சி வாழ்ந்து இவர்களின் கீழ் அடிமைப் பட்டுச் சாக தமிழன் ஒன்றும் நனைந்த நாணற் புற்கள் இல்லை என இந்த இனவாதப் பேய்களுக்குப் பறை சாற்ற வேண்டும்!" இவ்வாறு மாமாவின் மனதில் பல சிந்தனைகள் நடனமாடிக் கொண்டிருந்தன. மாமா மனதிற்குள் புகைந்து கொண்டிருந்தார். 


இராசாத்தியின் துயர் ஒரு புறம் அவர் மனதை வாட்ட; 
எங்கள் மண்ணில் அந்நியரின் பூட்ஸ்கால்கள் இரத்த வெறியோடு அலைவதனை எப்படியாவது நிறுத்தி விடத் தானும் ஏதாவது பங்களிப்புச் செய்ய வேண்டும் என ஆவல் கொண்டார். 


வீதியில் நாய் குலைக்கும் சத்தம் கேட்டது. மீண்டும் அவசர அவசரமாக மாமா வீட்டின் லெவல் சீற்றினுள் ஏறி ஒளிந்து கொண்டார். வீட்டிற்கு வந்த சீருடையினர் அம்மாவிடமும், அம்மம்மா, ஐயா (அம்மாவின் அப்பா), அப்பாவிடமும் வீட்டில் உள்ள மொத்தக் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை என்று விசாரித்தார்கள்? தீடீரென ஒராள் குறைகிறதே என்பதனைத் தம் புலன் விசாரணை மூலமாக கேட்டறிந்த இராணுவத்தினர் கோபங் கொண்டு, துப்பாக்கிப் பிடியால் ஐயாவின் கையில் ஓங்கி அறை விட்டார்கள். 


"வயல் வேலையாக மாமா வெளியே போயிருப்பதாக ஐயா பதிலுரைத்தார்." ஆனாலும் நீண்ட விசாரணைக்குப் பின்னர் திருப்தியின்றி, ஒரு உயிரை எடுப்பதற்கான தமது சந்தர்ப்பம் வீண் போய்விட்டதே எனும் ஏமாற்ற உணர்வோடு இராணுவத்தினர் வெளியேறினார்கள்.


மாமா, மெதுவாக குரலெழுப்பி, அம்மம்மாவிடம் அவர்கள் போய் விட்டார்களா? என்பதனை உறுதி செய்து கொண்டு வீட்டின் ஓட்டிற்கு கீழிருக்கும் லெவல் சீற்றிலிருந்து கீழே இறங்கினார். இறங்கியவர் குசினிக்கும், முன் விறாந்தைக்கும் (வராந்தா) இடையே தன் கையினைப் பின் பக்கம் கட்டி மாறி மாறி நடந்தார். சில மணி நேரத்தின் பின்னர் சைக்கிளை எடுத்துக் கொண்டு கடைப் பக்கம் போய் வருவதாகச் சொல்லி விட்டு வீட்டை விட்டுப் புறப்பட்டார். 


வீட்டை விட்டுச் சென்றவர், வயற்காட்டின் பின் புறந்தே ஆளரவமற்ற பிரதேசத்தில் பதுங்கியிருந்த புலிகள் அமைப்பினரைச் சந்தித்தார். தானும் போராட்டத்தில் இணைந்து எதிரியினை - எமக்கு அவலத்தினைத் தருபவனை அழிக்க வேண்டும். எனையும் உங்களோடு இணைத்துக் கொள்ளுங்கள் எனப் போராளிகளிடம் கூறினார் மாமா". தன் ஆசையிற்கு கடிவாளம் போட முடியாதவராய் மாமா போராட்டத்தில் இணைந்து கொண்டார்.


எங்கள் வீட்டில் ஒரே அமளி! மாமாவை இந்த வருடம் நெல்லு வெட்டுதல் மூலம் கிடைக்கும் பணத்தில் வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனும் கனவோடிருந்த ஐயாவி மனதில் தீராத வலி! 


“அவன் போயிட்டான் எல்லோ! 
இனிமேல் நாங்கள் யாரும் அவனைத் தேடிப் போக கூடாது! பெற்றவர்கள் நாங்கள் இருக்கிறோம், எங்களைப் பாராமரிக்க வேண்டும், வயது போன காலத்தில எங்களுக்கு ஒத்தாசையா இருக்க வேண்டும் எனும் உணர்வினை மறந்து வீட்டை விட்டு, நாட்டுக்காக போயிட்டானெல்லோ!
தெருப் பொறுக்கி! இனிமேல் அவனை யாரும் வீட்டுப் படலைக்கும் அண்டக் கூடாது".
எங்கேயாச்சும் போற வழியிலை அவனைக் கண்டால், இனிமேல் உன் மூஞ்சியிலையும் நான் முழிக்க மாட்டேன் என்று பொன்னுத்துரையர் சொன்னதாக சொல்லி விடுங்கோ!
சின்னத் தங்கச்சி (அம்மம்மா) ஏன் அழுகிறாய்? எங்களையெல்லாம் வேண்டாம் என்று தானே அவன் போனவன்! இனிமேல் எங்களுக்கு அவன் தேவையில்லை! வீட்டுப் பக்கம் வந்தால் ஒரு பச்சத் தண்னி கூட குடுக்காமல் அவனை துரத்தி (விரட்டி) விட வேண்டும்! சரியே?” என தனது நீண்ட கோபக் கணையினைக் கொட்டித் தீர்த்தார் ஐயா.


எல்லோரும் கலைந்து சென்றார்கள். பிள்ளைப் பாசம் தாங்காதவளாய் அம்மம்மா மீண்டும், மீண்டும் மாமாவை நினைத்து விம்மி அழுதா. நான் சில்லு வண்டிலைத் தள்ளி விளையாடிக் கொண்டிருக்கையில் திடீரென ஏதோ ஞானம் பிறந்தவனாய் அம்மாவிடம் பல கேள்விக் கணைகளைத் தொடுத்தேன்.


"அம்மா எங்களை மட்டு ஏன் ஆமி மாமாக்கள் வந்து வெருட்டுகிறார்கள்?
மாமா எங்க போனவர்?
ஆமி மாமாக்கள் மாமாவைச் சுடவே தேடித் திரிகிறார்கள்?” (அலைகிறார்கள்) அம்மா மெதுவாக வாய் திறந்தா! 


"நாங்கள் தமிழர்கள்! தமிழர்கள் என்றால் காலதி காலமாக சிங்களவனுக்கு அடிமையாக வாழ வேண்டும் என்பது அவங்கட சிந்தனை! அது தான் ஊரில இருக்கிற இளம் பொடியங்களை இயக்கம் என்று சாட்டுச் சொல்லிச் சுட்டுக் கொன்றால் அவங்களோட ஆசை இலகுவில நிறைவேறிடும் தானே? அதற்காகத் தான் இப்படியெல்லாம் செய்கிறார்கள்."


அப்போது நான் குறுக்கிட்டேன்! நாங்கள் தமிழர்கள் என்றால்? எங்கே இருந்து வந்த தமிழர்கள்? எல்லோரும் ஒரே நாட்டவர் என்று தானே எனக்கு டீச்சர் நேற்றுப் பாட்டுச் சொல்லித் தந்தவா"


அம்மா மெதுவாக எங்களின் பூர்வீக வரலாற்றினைச் சொல்லத் தொடங்கினா. 
"நாங்கள் இற்றைக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பதாக இந்தியாவிலிருந்து வந்த தமிழர்கள்! எங்களின் பூர்வீகம் இந்தியா தான்! 
சிங்களவர்களின் வரலாறு எங்களுக்குப் பின்னர் தான் தொடங்கியது. இந்தியாவின் குமரிக் கண்டத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பதாக...................................

                                                              
                                                          எச்சங்கள் தொடர்ந்தும் எழுத்தாக வரும்...........
****************************************************************************************************************************
இன்றைய பதிவர் அறிமுகம் பகுதியினூடாக பல்சுவைப் பதிவுகளையும் எழுதி வருகின்ற "காந்தி” அவர்களின் வலைப் பூவிற்குத் தான் நாம் செல்லவிருக்கின்றோம்.

அரசியல், அறிவியல், இலக்கியம், பொதுத் தகவல்கள் எனப் பல சுவையான விடயங்களைத் தன்னுடைய "பனங்கூர்"  எனும் வலைப் பதிவில் பகிர்ந்து வருகின்றார் காந்தி அவர்கள். 

பதிவர் காந்தி அவர்களின் வலைப் பூவிற்குச் செல்ல:
***************************************************************************************************************************

40 Comments:

சீனிவாசன் said...
Best Blogger Tips

//தன் ஆசையிற்கு கடிவாளம் போட முடியாதவராய் மாமா போராட்டத்தில் இணைந்து கொண்டார்.//

இவரை போன்ற எத்தனையோ மனிதர்களின் ஆசைகளும்,இலட்சியங்களும் நிராசையாகி போனதை நினைக்கும் பொழுதுதான் மிகப்பெரிய துக்கம் நெஞ்சில் சூழ்கிறது.

Mohamed Faaique said...
Best Blogger Tips

வந்தேன் படித்தேன் ஓட்டும் போட்டேன். இப்போ மீ எஸ்கேப்..

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

///என்னவோ தெரியவில்லை! ஈழத் தமிழன் மட்டும் தன் மண்னில் உள்ள வளங்களோடு தானும் ஒன்றித்து, அனுபவித்து வாழ்ந்து மண்ணோடு மண்ணாகிப் போகின்ற வரத்தினை காலம் தரவில்லை./// இந்த வரிகளை படித்த போது நெஞ்சு கனத்துவிட்டது ((

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

/// சில மணி நேரத்தின் பின்னர் சைக்கிளை எடுத்துக் கொண்டு கடைப் பக்கம் போய் வருவதாகச் சொல்லி விட்டு வீட்டை விட்டுப் புறப்பட்டார்.


வீட்டை விட்டுச் சென்றவர், வயற்காட்டின் பின் புறந்தே ஆளரவமற்ற பிரதேசத்தில் பதுங்கியிருந்த புலிகள் அமைப்பினரைச் சந்தித்தார்/// இவ்வாறு எத்தனை சம்பவங்களை சிருவயசிலே நேரில் கண்டுள்ளேன் !!((

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

////இனிமேல் நாங்கள் யாரும் அவனைத் தேடிப் போக கூடாது! பெற்றவர்கள் நாங்கள் இருக்கிறோம், எங்களைப் பாராமரிக்க வேண்டும், வயது போன காலத்தில எங்களுக்கு ஒத்தாசையா இருக்க வேண்டும் எனும் உணர்வினை மறந்து வீட்டை விட்டு, நாட்டுக்காக போயிட்டானெல்லோ!
தெருப் பொறுக்கி! இனிமேல் அவனை யாரும் வீட்டுப் படலைக்கும் அண்டக் கூடாது".
எங்கேயாச்சும் போற வழியிலை அவனைக் கண்டால், இனிமேல் உன் மூஞ்சியிலையும் நான் முழிக்க மாட்டேன் என்று பொன்னுத்துரையர் சொன்னதாக சொல்லி விடுங்கோ!//// இந்த கோபம் எல்லாம் கொஞ்ச காலம் தான்../ அனுபவம் ((

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

///சிங்களவர்களின் வரலாறு எங்களுக்குப் பின்னர் தான் தொடங்கியது. இந்தியாவின் குமரிக் கண்டத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பதாக...// சுவாரசியம் ..எதிர்பார்த்து காத்திருக்கேன்...

தனிமரம் said...
Best Blogger Tips

"ஊர் நினைவுகள் எப்பொழுதும் நினைக்க - நினைக்க சுகத்தை அள்ளி வழங்கும் இயல்புடையவை" என்று பாடுகின்ற பல கவிஞர்கள் மத்தியில் எம் இறந்த காலங்கள் இதயத்தை வாட்டுகின்ற நரக ஞாபகங்களாக மட்டுமே நெஞ்சில் நிழலாடுகின்றன. என்னவோ தெரியவில்லை! ஈழத் தமிழன் மட்டும் தன் மண்னில் உள்ள வளங்களோடு தானும் ஒன்றித்து, அனுபவித்து வாழ்ந்து மண்ணோடு மண்ணாகிப் போகின்ற வரத்தினை காலம் தரவில்லை. // 
எத்தனை வலிகள் நிறைந்த வார்த்தைகள் சகோ!

தனிமரம் said...
Best Blogger Tips

தெருப் பொறுக்கி! இனிமேல் அவனை யாரும் வீட்டுப் படலைக்கும் அண்டக் கூடாது".// 
தந்தை மாரின் அன்பின் வெளிப்பாடகத்தான் இது அன்நாட்களில் இருந்தது கோபம் வரும் போது திட்டுவது இயல்புதானே ம் எல்லாம் விதி ஈழ்த்தவன் வாழ்வில்!

தனிமரம் said...
Best Blogger Tips

வேதனையின் தொடர்களை இயல்பு நடையில் சொல்லிச் செல்கின்ற கதைக்களம் தொடருங்கள் முடிந்தளவு பின்னூட்டத்துடன் தொடர்கின்றேன்!

தனிமரம் said...
Best Blogger Tips

சகபதிவாளர் காந்திக்கு வாழ்த்துக்கள்!

தனிமரம் said...
Best Blogger Tips

ஓட்டுப்பட்டையைக் கானவில்லை ஒ அமலாபால் கூட சூட்டிங்கோ பாஸ்!

Yoga.s.FR said...
Best Blogger Tips

பிரெஞ்சு இரவு வணக்கம்.நாளை படித்த பின்........................................

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

வெகுயதார்த்தமான நடையில் நிகழ்வுகளை பதிவு செய்து கொண்டே நகர்கிறது தொடர்........

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
Best Blogger Tips

பின்னுறீங்க, நிருபன் சார்...

Mahan.Thamesh said...
Best Blogger Tips

படிக்கும் போது தாய்மண்ணின் நினைவுகளும், போராளிகளின் நினைவுகளும் வந்து நெஞ்சு கனக்கிறது .

Unknown said...
Best Blogger Tips

மாப்ள பகிர்வு அருமை....கண் முன்னே நடக்கும் கொடுமைகளை காணாமல் போவது கடினம்...தன்னுயிரை ஈந்தாவது பல கொடுமைகள் தடுக்க முடியுமானால் அதுவும் நாட்டுக்காக என்று வந்து விட்டால் செய் அல்லது செத்து மடி....இது தான் தோன்றும்...அவரின் செயல் நாட்டுக்காகவே...தொடர் அருமையா போகுது தொடர்கிறேன்...நன்றி!

எஸ் சக்திவேல் said...
Best Blogger Tips

தொடருங்கள்; ஆவலாக அடுத்த தொடர்ச்சியைப் பார்த்துக் கொண்டுள்ளேன்.

மாய உலகம் said...
Best Blogger Tips

எங்களின் விளைச்சல் நிலங்கள் அனைத்திலும் பசளைகளுக்குப் பதிலாக(உரத்திற்கு) மனித எலும்புகளே புதைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றினைத் தோண்டி எடுத்து, தோல்விகளை ஆற்றுப்படுத்த முடியாதவர்களாய் நாங்கள் இன்று நடை போட்டுக் கொண்டிருக்கிறோம்.//

ஆரம்பமே அதிர்ச்சியாகவும்... ஆறுதல் படுத்த முடியாத வரிகளாக இருக்கின்றன நண்பா :-(

மாய உலகம் said...
Best Blogger Tips

சிங்களவர்களின் வரலாறு எங்களுக்குப் பின்னர் தான் தொடங்கியது. //

அறிந்த கொள்ள மனம் துடிக்குது நண்பா.. அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம்.....

மாய உலகம் said...
Best Blogger Tips

நண்பர் காந்தி பனங்கூர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

K.s.s.Rajh said...
Best Blogger Tips

வழமைபோல் சுவாரஸ்யம்...தொடருங்கள்......

rajamelaiyur said...
Best Blogger Tips

Really super boss . . .

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

தொடர் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு... அறிமுக பணங்கூருக்கு வாழ்த்துக்கள்

SURYAJEEVA said...
Best Blogger Tips

கடைசி பாகத்தை எதிர்பார்த்து..

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

நிகழ்வுகள் யதார்த்தமாய் தொடருகிறது..

Unknown said...
Best Blogger Tips

ஒவ்வொரு பாகமும் மனதின் கனம் கூடிக்கொண்டே தான் போகிறது நிரூ

சசிகுமார் said...
Best Blogger Tips

பகிர்வுக்கு நன்றி

காட்டான் said...
Best Blogger Tips

இதுவரை கதை நான் பார்த்த கிராமமும்,எங்கள் உணர்வுகளும் அடுத்த பதிவு தமிழர் பூர்வீகம் பற்றி எங்களில் சிலர் அறிந்திடாத விடயங்களை தொடப்போகிறீர்கள்.. கதையை அருமையாக கொண்டு செல்கிறீர்கள்.. வாழ்த்துக்கள் அடுத்த பதிவை எதிர்பார்த்து..

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

அடுத்து லெமூரியா கண்டம் பற்றி விரிவாக சொல்வீர்கள்தானே...???

Unknown said...
Best Blogger Tips

போக போக பதிவுகள் சுவாரஸ்யமடைந்து கொண்டே போகிறது நண்பா

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

தொடருங்கள்!

shanmugavel said...
Best Blogger Tips

சிறப்பாகச் செல்கிறது.இதை புத்தகமாக்கலாம்.

அம்பலத்தார் said...
Best Blogger Tips

எங்கள் வாழ்வின் அவலங்களைக்கூட படிக்கத்தூண்டும்விதமாக சுவாரசியமாகச் சொல்லிச் செல்கிறீர்கள்

Anonymous said...
Best Blogger Tips

தொடர் அருமையா போகுது... தொடர்கிறேன் சகோதரம்...

Anonymous said...
Best Blogger Tips

நண்பர் காந்திக்கு வாழ்த்துக்கள்...

F.NIHAZA said...
Best Blogger Tips

நல்லா இருக்கு...
கதைப் போக்கு சூப்பரு...

செங்கோவி said...
Best Blogger Tips

அடடா..என் மனம் கவர்ந்த தொடர் லீவு நாளில் வந்துவிட்டதா?

செங்கோவி said...
Best Blogger Tips

//வீதியில் நாய் குலைக்கும் சத்தம் கேட்டது. மீண்டும் அவசர அவசரமாக மாமா வீட்டின் லெவல் சீற்றினுள் ஏறி ஒளிந்து கொண்டார். //

எவ்வளவு மோசமான சூழ்நிலையில் நம் மக்கள் வாழ்ந்தார்கள் என்பதை இந்தச் சம்பவம் காட்டுகின்றது.

செங்கோவி said...
Best Blogger Tips

//அம்மா மெதுவாக எங்களின் பூர்வீக வரலாற்றினைச் சொல்லத் தொடங்கினா.
"நாங்கள் இற்றைக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பதாக இந்தியாவிலிருந்து வந்த தமிழர்கள்! எங்களின் பூர்வீகம் இந்தியா தான்! //

தொடரின் முக்கியப் பாகமே இப்போது தான் ஆரம்பிக்கிறதா..தொடருங்கள்..

vimalanperali said...
Best Blogger Tips

துயரங்களின் பூமியாக காட்சியளிக்கிற ஈழத்தின் கொடுமையை விவரிக்க வார்த்தைகல் இல்லை.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails