அன்பிற்கினிய உறவுகளே! இந்தத் தொடரின் மூன்றாவது பாகத்தினூடாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி! நாள் தோறும் நீங்கள் வழங்கி வரும் பேராதரவு தான் ஈழத்து மண் வாசனை கலந்த இத் தொடரினை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்குத் தூண்டு கோலாக இருக்கின்றது! அந்த வகையில் மீண்டும், மீண்டும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி(கள்)!
ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் - பாகம் - 3
இத் தொடரின் கடந்த பாகங்களைப் படிக்க..........
மாமாவின் உதட்டிலிருந்து வார்த்தைகள் வர மறுக்கின்றன, "வாங்கோ எல்லோரும் ராசாத்தி எங்கே என்று தேடிப் பார்ப்போம்" எனச் சொல்லியபடி புறப்படுகிறார்.
"ஐயோ என்ரை பிள்ளைக்கு ஏதும் ஆகக் கூடாது" எனக் கதறிய படி இராசாத்தி அக்காவின் அம்மா.
"என்ரை ஆசை மகள்- கடவுளே அவளுக்கு ஏதும் ஆகக் கூடாது" எனக் கதறிய வாறு இராசாத்தியின் அப்பா.
இவர்கள் எல்லோரது அவலங்களையும் பொருட்படுத்தாதவனாய், "ஐயோ இன்றைய மடை பரவலை நாசமறுவார் நிறுத்திப் போட்டாங்களே!" எனும் உணர்வு கொண்டவனாய், வடை, பொங்கல் என ஐயனாரின் பிரசாதங்களைத் தவற விட்ட உணர்வோடும், பெரியவர்கள் போகும் காற் தடங்களை அடியொற்றியவாறும் நான் நகர்ந்து கொண்டிருந்தேன்.
"ஐயோ என்ரை பிள்ளைக்கு ஏதும் ஆகக் கூடாது" எனக் கதறிய படி இராசாத்தி அக்காவின் அம்மா.
"என்ரை ஆசை மகள்- கடவுளே அவளுக்கு ஏதும் ஆகக் கூடாது" எனக் கதறிய வாறு இராசாத்தியின் அப்பா.
இவர்கள் எல்லோரது அவலங்களையும் பொருட்படுத்தாதவனாய், "ஐயோ இன்றைய மடை பரவலை நாசமறுவார் நிறுத்திப் போட்டாங்களே!" எனும் உணர்வு கொண்டவனாய், வடை, பொங்கல் என ஐயனாரின் பிரசாதங்களைத் தவற விட்ட உணர்வோடும், பெரியவர்கள் போகும் காற் தடங்களை அடியொற்றியவாறும் நான் நகர்ந்து கொண்டிருந்தேன்.
ராசாத்தி அக்காவை எல்லா இடமும் சல்லடை போட்டுத் தேடினார்கள். அவா கிடைக்கவேயில்லை, எங்கேயாவது காட்டிலை இருக்கிற "காடை முனி" திசை மாற்றிக் கூட்டிக் கொண்டு போயிருக்கும் எனும் மூட் நம்பிக்கைக்கு அர்த்தம் கொடுத்தவர்களாக, அவள் திரும்பி வருவாள் எனும் நம்பிக்கையில் வீட்டிற்கு வந்தார்கள். வரும் வழியில் "கோபாலு’ மாமா" ஓடி வருகிறார்.
"உவன் குணத்தானின்ரை காணியிருக்கெல்லோ, அதுக்குப் பின்னுக்கு- இந்தியன் ஆமி சென்ரி போட்டு இருக்கிறாங்கள் தானே, அங்கே யாரோ அழுது சத்தம் கேட்டது, ‘ஐயோ என்னைக் காப்பாற்றுங்கோ, இவங்களிட்டை இருந்து என்னைக் காப்பாற்றுங்கோ என்று கூக்குரல் கேட்டது"
"அப்போது ரோந்து வந்த ஆமிக்காரர் அங்கே நின்றவங்கள், அதாலை நான் போய்ப் பார்க்க முடியலை’ இப்ப ஆமி காம்ப் மாறிப் போயிட்டாங்கள்’ எல்லோரும் ஒருக்கால் வெளிக்கிட்டியள் என்றால் போய்ப் பார்க்கலாம்" எனச் சொன்னார்.
எல்லோர் மனங்களிலும் அது இராசாத்தியாக இருக்கக் கூடாது, எனும் எண்ண அலைகள் ஓடத் தொடங்கின. எல்லோரும் போனார்கள். இந்தியன் ஆமி சென்ரி மாறிப் போய் விட்ட காரணத்தினால் இலகுவாக அவ் இடத்தினுள் நுழைந்தார்கள். அங்கே இராசாத்தி அக்கா கடித்துக் குதறப் பட்டு, வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, சிதைக்கப்பட்டிருந்தா. வாயினுள் சீலை வைத்து அழுத்திய காரணத்தாலும், பலாத்காரப் பேய்களின் பலமான நெருக்குதல் காரணமாகவும் இராசாத்தி அக்காவின் உயிர் பிரிந்திருந்தது.
இராசாத்தியின் உடலைக் காவிய படி வீடு வந்தார்கள். செத்த வீட்டிற்கான கடமைகளை முடித்தார்கள். மாமாவின் மனதில் தன் முதற் காதல் சிதைந்து போனதற்கான ரணங்கள் நிரம்பிய கோடுகளை விட, "எங்கள் மணணில் எதிரியின் பிடியில் இப்படி ஓர் கொடுமையா?" என்பதற்கான’ கேள்விக் குறிகளே அதிகமாக நீண்டு கொண்டிருந்தன.
"ஆதிக்கப் பேய்களின் அரக்கக் கால்கள் ஒவ்வோர் நிலங்களில் அடியெடுத்து வைக்கையிலும் சூறையாடல்கள் நிகழும். "
மனித உடலாகவோ, அல்லது உறை விடங்களைச் சார்ந்ததாகவோ இல்லைப் பொருட்களை விரும்பியதாகவோ அவர்களின் சூறையாடல்கள் அமைந்து கொள்ளும். இன்றும் எங்கள் மண்ணில் பல வெளித் தெரியா இராசாத்திகள் இருக்கிறார்கள்.
மானம்- "விற்பனைப் பொருளாகத் திருமணச் சந்தையில் விளம்பரப்படுத்தப்பட வேண்டிய தேவை, குடும்பக் கௌரவம் முதலிய காரணிகளால் வல்லுறவுக்குள்ளான பெண்களில் யாராவது உயிர் தப்பினால் வாய் திறப்பதேயில்லை."
நீதி தேவதயின் தராசின் இரு படிகளிலும் குருதிகள் கட்டி பட்டு, நிறுத்தற் படிகளாக இருக்கும் போது, எங்கனம் நியாயம் கிடைக்கும்?
அழகிய வனப்புக்களும், அழிந்து போகாத செல்வங்களும் என இருந்த வாழ்வு மெல்ல மெல்ல அரிக்கப்படத் தொடங்கிய காலம் அது. அந்தர் கணக்கில் நெற்களை மூடைகளாக்கி ஏற்றுமதி செய்து, ஆசை அடங்கா வண்ணம் ஆதவனுக்குப் பொங்கலிட்டு, ஆஹா என்று பேர் சொல்லும் படி வாழ்ந்திருந்த வாழ்க்கை மெல்ல மெல்லப் புற்றீசல் போலப் புறப்பட்ட இனவாதக் கறையான்களால் அரிக்கத் தொடங்கிய காலங்கள் அவை.
வன்னிப் பகுதி; மட்டும் ஆயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றாறுகள் வரை பெருமெடுப்பிலான இடப் பெயர்வுகளைச் சந்தித்திருக்காத பெரும் பேறு பெற்றிருந்தது. வீரம் எனும் குறியீட்டின் விளக்கப் பொருளான கொற்றவை’ வற்றாப் பளையில் அம்மனாகவும், கிளி நொச்சியில் கண்ணகை அம்மனாகவும் குடி கொண்டிருந்தாள்.
எங்கள் ஊர்த் தெய்வங்கள் எங்களோடு இருக்கிறார்கள் எனும் நம்பிக்கையில் இருக்கையில் தான் யாழில் இருந்து இந்திய இராணுவத்துடனான போரினைச் சந்திக்கும் தந்திரம் கொண்டு ‘ஒரு காலத்தில் நாம் வணங்கிய நிஜக் கடவுளர்களும்’ வன்னியின் முல்லைத் தீவை நோக்கி முன்னேறத் தொடங்கினார்கள்.
நடை பயின்று, கழுசான் அவிண்டு விழும் பருவத்திலும், இவர்களின் செய்கைகள் மீது ஒரு இனம் புரியாத ஈர்ப்பு இருந்தது. செம் புழுதி மண்ணில் உருண்டு புரள்வதுவும், கொக்கான் வெட்டல் விளையாட்டு விளையாடி’ கொத்தம்பியா குளக் கரைகளில் ஓடி மகிழ்ந்ததுவும் இன்றும் காட்சிகளாக இருக்கின்றன.
மண் வீடு கட்டி- பெட்டிக் கடை போட்டு ரோட்டால் போவோர் வருவோரிடம் எங்கள் சிறிய கைவினைப் பொருட்களைத் திணித்த விரல் சூப்பும் வயசு ஞாபகங்களைக் கிளறுகையில்- மீண்டும் ஒரு தரம் குழந்தையாக மாறி ஒரு "கெந்தல் கெந்திக்"(JUMPING) கிளித் தட்டு விளையாடி மகிழ வேண்டும் என்று தோன்றும்.
ஈழம் ஒரு காலத்தில் அமைதியாக இருந்த பொழுதுகளில், நாங்கள் ஆரவாரம் செய்த நிகழ்வுகள் ஏராளம். டிரக்டர்/ ரக்ரர் (உழவு இயந்திரம்- Tractor) தட்டி வான், லாண்ட் மாஸ்டர்(Land Master) இவைகள் அக் காலத்தில் எங்கள் பயண ஊர்திகளாக விளங்கின. இவை எல்லாவற்றையும் விட சைக்கிள் தான் எம் உற்ற தோழனாக இருந்தது. ஒரு சில கிலோ மீற்றர்களை விட நூற்றிற்கும் மேற்பட்ட கிலோ மீற்றர்களுக்கு சைக்கிள்களில் சவாரி விட்டிருக்கிறோம், கோயில் திருவிழா என்றாலோ இல்லை அடுத்த ஊர்களில் பாட்டுக் கச்சேரிகள் என்றாலோ, பட்டி மன்றம்- கவியரங்கம் எனப் பல நிகழ்வுகளை நடக்கும் வேளைகளாயினும் சரி; சைக்கிள் ஓடியச் சந்தோசமாகப் போய்ப் பார்த்த காலங்கள் அவை.
எங்கள் ஊரில் தைப் பொங்கல் என்றால் தனியான தொரு மகிழ்ச்சி களை கட்டும். இளசுகளுக்கு ஒரு வித இன்பம் பொங்கல் அன்று கிடைக்கும், அதே வேளை பழசுகளுக்கும் ஒரு வித இன்பம் பொங்கலை அடுத்த சில நாட்களில் கிடைக்கும். இளசுகள் கொடி பறக்க(பட்டம் ஏற்றல்) விட்டு மகிழத் தொடங்குகையில், பெரிசுகள் மாட்டு வண்டிச் சவாரிக்காய்த் தங்களைத் தயார்படுத்தத் தொடங்குவார்கள்.
பட்டங்கள் பல விதம். மணிக்கூட்டு, கொக்குப் பட்டம், எட்டு மூலை, சீனன் பட்டம், பாம்பன் பட்டம், செம்பிராந்தன் பட்டம், ஆறு மூலைப் பட்டம், ஆள் பட்டம், எனப் பல பட்டங்கள் உண்டு. கழுசான்(காற்சட்டை) அவிழ்ந்து விழுகையிலும், ஒரு கையால் காற் சட்டையினைப் பிடித்தபடி, மறு கையால் பட்டத்தின் நூலை விட்டுக் கொடுத்து ஏற்றுவதில் நாங்கள் அப்போது கை தேர்ந்தவர்களாக இருந்தோம்.
மார்கழி மாதத்தில் பாடசாலை விடுமுறை விட்டதும் பல திட்டங்கள் போட்டுப் பட்டங்கள் கட்டி ஏற்றத் தொடங்கிடுவோம்...........................
எச்சங்கள் நினைவுகளாய் விரியும்.............
*******************************************************************************************************************************
காதற் கவிதைகளிற்குரிய தனிச் சிறப்புக்கள் பல இருந்தாலும், அவற்றுள் மனங்களினுள் உயிர்ப்புள்ள காதல் உணர்வுகளைத் தூண்டவல்ல வல்லமை வாய்க்கப் பெற்ற கவிதைகள் தான் எக் காலத்திலும் வாழும் என்பது யதார்த்தம்.
அத்தகைய இனிமையான - சுகம் தரும் கவிதைகளைத் தன்னுடைய ஜெயசீலன் கவிதைகள் எனும் வலைப் பதிவில் எழுதி வருகின்றார் "கவிஞர் ஜெயசீலன்" அவர்கள்.
"ஜெயசீலன்" அவர்களின் வலைப் பதிவிற்குச் செல்ல:
*********************************************************************************************************************************
இன்ட்லியில் ஓட்டளிக்க:
இன்ட்லியில் ஓட்டளிக்க:
|
48 Comments:
ஈழம் ஒரு காலத்தில் அமைதியாக இருந்த பொழுதுகளில், நாங்கள் ஆரவாரம் செய்த நிகழ்வுகள் ஏராளம். டிரக்டர்/ ரக்ரர் (உழவு இயந்திரம்- Tractor) தட்டி வான், லாண்ட் மாஸ்டர்(Land Master) இவைகள் அக் காலத்தில் எங்கள் பயண ஊர்திகளாக விளங்கின. இவை எல்லாவற்றையும் விட சைக்கிள் தான் எம் உற்ற தோழனாக இருந்தது. ஒரு சில கிலோ மீற்றர்களை விட நூற்றிற்கும் மேற்பட்ட கிலோ மீற்றர்களுக்கு சைக்கிள்களில் சவாரி விட்டிருக்கிறோம், கோயில் திருவிழா என்றாலோ இல்லை அடுத்த ஊர்களில் பாட்டுக் கச்சேரிகள் என்றாலோ, பட்டி மன்றம்- கவியரங்கம் எனப் பல நிகழ்வுகளை நடக்கும் வேளைகளாயினும் சரி; சைக்கிள் ஓடியச் சந்தோசமாகப் போய்ப் பார்த்த காலங்கள் அவை. //
அப்படியே இருந்திருக்கக்கூடாதா?
மீள் நினைவுகள்..........
பிள்ளை பிராந்தியம் திரும்பி பார்க்கும் போது இனிமையாய் தான் இருக்கும்..
அதிலும் ரத்தக்கறை பார்க்கும் போது வருத்தமே மேலிடுகிறது..
நண்பரே உங்கள் பதிவை முழுதாகப் படிக்கும் மன வலிமை எனக்கு இல்லை. மனம் வலிக்கிறது
புது இடுகைகள் எதுவும் காணப்படவில்லை என்று சொல்கிறது. அடுத்து வருபவர் யாரேனும் இணைத்து விடவும்.
எதுவுமே படிக்காம மாலா எப்படி எஸ்கேப் ஆனாங்க பாத்தீங்களா?
ராசாத்திகதை மனதை காயப்படுத்திவிட்டது....இந்திய ராணுவம் ஏற்படுத்திய இழப்புக்கள் மிகக்கொடுரமானவைதான்
தமிழ்மணம் இணைப்பு குடுத்து ஓட்டும் போட்டுட்டேன் மக்கா...
மனசுக்கு கஷ்டமா இருக்கு மக்கா...
மனசை பிழிந்த பதிவு இராசாத்தி போல் இன்னும் எவ்வளவு பேர்..?? இந்திய இராணுவத்தின் கடைசிக்காலங்களில் அங்கு இருந்தபடியால் பதிவில் வரும் சம்பவங்கள் நானே நேரில் பார்த்துக்கொண்டிருப்பதைபோல் ஓர் உணர்வு.. வாழ்துக்கள் நிரூபன்..
ராசாத்தி போன்ற பெண்கள் செய்த பாவம் தான் என்ன? படிக்கவே கஷ்டமாக உள்ளது நிரூ.
ரொம்ப வேதனையா இருக்கு நண்பா
வலிகளின் ஊடே தொடர்கிறது கதையின் நீளம்..
கவிஞர் ஜெயசீலன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
Tamilmanam- 7 nanba
தைப்பொங்கல் நாளில் சொந்த ஊரில் சொந்த வீட்டில்
வாசலில் பொங்கலிடுவது ஒரு பெருமையைய்யா
அப்படியே சிறுவயதுப் பருவத்துக்கு கூட்டிசெல்கிரீர்கள்
சகோ, போகும் வழியில் மனவேதனையுடன்.....
அறிமுகப்பதிவருக்கு அன்பு வாழ்த்துக்கள்.
வணக்கம் பாஸ்
பிந்திய வருகைக்கு சாரி.. கொஞ்சம் பிஸி பாஸ்.
பாஸ் தொடர் அருமைதான்... நம் ஊர் நினைவுகளை மீட்டு நெகிழ்ந்து போக வைக்குது நல்ல படைப்பு பாஸ்
"உவன் குணத்தானின்ரை காணியிருக்கெல்லோ, அதுக்குப் பின்னுக்கு- இந்தியன் ஆமி சென்ரி போட்டு இருக்கிறாங்கள் தானே, அங்கே யாரோ அழுது சத்தம் கேட்டது, ////‘ஐயோ என்னைக் காப்பாற்றுங்கோ, இவங்களிட்டை இருந்து என்னைக் காப்பாற்றுங்கோ என்று கூக்குரல் கேட்டது"
"அப்போது ரோந்து வந்த ஆமிக்காரர் அங்கே நின்றவங்கள், அதாலை நான் போய்ப் பார்க்க முடியலை’ இப்ப ஆமி காம்ப் மாறிப் போயிட்டாங்கள்’ எல்லோரும் ஒருக்கால் வெளிக்கிட்டியள் என்றால் போய்ப் பார்க்கலாம்////
பேச்சு நடை படிக்கவே ஆசையா இருக்கு
ஊரில் இருக்கும் உணர்வு
ஜெயசீலன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்
வணக்கம் சகோதரம், இந்திய இராணுவம் செய்த கொடுமைகளில் இது ஒருதுளி மட்டுமே. இது போன்ற சம்பவங்கள் தொடர்வதும் அதுக்கு ஒரு சிலர் யால்லரா போடுவதும் வேதனை
ஈழத்தின் வலியை அப்படியே பிரதிபளிக்கின்றது உங்கள் பதிவு..
ஈழத்தமிழர் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு
நிரூபன் சார், வணக்கம்...எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை!... என்னைப்போல ஒரு மிகச்சிறிய பதிவனை அறிமுகப்படுத்த ஒரு பெரிய மனம் வேண்டும். மிக்க மகிழ்ச்சியாக உணர்கிறேன்... இந்த நன்றிக்கடனை எப்படி தீர்க்கப்போகிறேன் என்றே தெரியவில்லை... உங்களின் பதிவுகளை எல்லாம் படித்து அதற்கெல்லாம் நேர்மையான பின்னூட்டமிடுவது ஒரு சிறிய, மிகச்சிறிய கைமாறாக இருக்கும் என்று நினைக்கிறேன்... :-) நன்றி.
/நீதி தேவதயின் தராசின் இரு படிகளிலும் குருதிகள் கட்டி பட்டு, நிறுத்தற் படிகளாக இருக்கும் போது, எங்கனம் நியாயம் கிடைக்கும்?/
அவலம்...
/நீதி தேவதயின் தராசின் இரு படிகளிலும் குருதிகள் கட்டி பட்டு, நிறுத்தற் படிகளாக இருக்கும் போது, எங்கனம் நியாயம் கிடைக்கும்?/
அவலம்...
/நடை பயின்று, கழுசான் அவிண்டு விழும் பருவத்திலும், இவர்களின் செய்கைகள் மீது ஒரு இனம் புரியாத ஈர்ப்பு இருந்தது. செம் புழுதி மண்ணில் உருண்டு புரள்வதுவும், கொக்கான் வெட்டல் விளையாட்டு விளையாடி’ கொத்தம்பியா குளக் கரைகளில் ஓடி மகிழ்ந்ததுவும் இன்றும் காட்சிகளாக இருக்கின்றன./
பால்யத்தில் நடந்த இதுபோன்ற நிகழ்வுகள் பெரும்பாலும் மனமகிழ்ச்சியையே தருமென்றாலும், அவைகள் இங்கு வித்யாசமாக ஒரு மெல்லிய சோகக் காட்சிகளாகவே காட்சிபடுத்தப்படுகின்றன. துயருருகின்றது மனசு...
வாழ்த்தளித்த அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள் கோடி...
மனசு அழுகுது மறக்க முடியா அனுபவங்கள் அவை
ஊர் வழக்கு
மீண்டும் ஊருக்கு மனசு பாயுது
வணக்கம் நிரூபன் சார், இயல்பான நடையில், மண்வாசம் வீசும் சொற்களால், யதார்த்தமான வாழ்வியலை அப்படியே படம்பிடித்திருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!
இன்று அறிமுகமாகியுள்ள பதிவர் ஜெயசீலன் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்!
நடந்து வந்த பாதை கரடு முரடானாலும்...விழுந்து அடி பட்டாலும் அது நம் மண் அல்லவா...
விரியட்டும் நினைவுகள்...
//நீதி தேவதயின் தராசின் இரு படிகளிலும் குருதிகள் கட்டி பட்டு, நிறுத்தற் படிகளாக இருக்கும் போது, எங்கனம் நியாயம் கிடைக்கும்? //
சரியாக புரிந்துகொண்டு எழுதப்பட்ட வரிகள்.
//எங்கள் ஊரில் தைப் பொங்கல் என்றால் தனியான தொரு மகிழ்ச்சி களை கட்டும். இளசுகளுக்கு ஒரு வித இன்பம் பொங்கல் அன்று கிடைக்கும், //
எங்கள் ஊரிலும்தான்,
ஈழத்தமிழர் கட்டாயம் படிக்க வேண்டும்
வேதனையா இருக்கு நண்பா
நேரடி ரிப்போர்ட்
இடிந்தகரை உண்ணாவிரத போராட்டம் நாள் 6
ம்ம்ம்.......நான் மிஸ் பண்ணியதையும் சேர்த்து முழுமையாக தொடர்களை படித்துமுடித்தேன்..
மண்வாசனையுடன் சில நுண்மையான நினைவுகளையும் நினைவுக்கு கொண்டுவரும் உங்கள் எழுத்து நடை அருமை தம்பியா........
மனதை கனக்க வைக்கிறது ஆரம்பம். இயல்பு வாழ்கையை விபரிக்கும்போது வரவேண்டிய பரவசம் ஏனோ ராசாத்தியின் நினைவுகளால் ஏக்கமாக மாறிவிடுகிறது. என்றோ படித்த "காவல் பேய்கள்" என்று வரும் ஈழக்கவிதை ஞாபகம் வருகிறது.
ம்ம்..எமது பிள்ளைப் பருவம் எல்லாம் இப்படியே போய்விட்டது! இப்போதும் பெரிதாய் மாற்றமில்லை மனதில் இன்னும் அறாத ரணங்களோடு...
மாய உலகம் said...
இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்
ரணங்கள் ஆறவேண்டும்தான்.. இருந்தாலும் இதை ஒரு புத்தகவடிவில் ஆவணப்படுத்த வேண்டும்.
மிக கொடூரமானது இந்த துன்பங்கள்
வணக்கம் தம்பி நிருபன்,
எங்கட ஊர் புதினங்களை வலு கலாதியாய் எழுதியிருக்கிறீர்.அருமையா இருக்கப்பு.நாங்கள் அந்தக் காலத்திலை ஊரில இருந்த ஞாபகமெல்லாம் வருது கண்டியோ.நல்லாய் எழுதுறாய் தம்பி.
இந்த மணியத்தானின்ர வாழ்த்தும், வற்றாப்பளையாளின் அருளும் எண்டைக்கும் உனக்கு கிடைக்கும் தம்பி.
சிறப்பான பதிவு இருந்தாலும் முன் இடுகைகளில் தலைவர் பற்றிய உங்களின் விமர்சனங்கள் மிகைபடுத்த பட்டானாக தெரிகிறது எஈம் வெல்லும் என விண்ணை முட்ட குரல் எழுப்ப உடைந்து விடும் எதிரிகளின் குருட்டு படை என எண்ணுகிறேன் இது வரட்டுத்தனமான கூச்சல் இல்லை அனால் இதில் உள்ள நுட்பனஅகழி தமிழகத்து தமிழனும் இணைய வேண்டிய தேவை யுக்க்றது உங்களின் சோகம் கலந்த இடுகைகள் மனதை கணக்கா செய்தன ..
படிக்க மனதில்லை,இருந்தும் படித்தேன்.வலி அதிகமாகிறது.
@மாலதி
சிறப்பான பதிவு இருந்தாலும் முன் இடுகைகளில் தலைவர் பற்றிய உங்களின் விமர்சனங்கள் மிகைபடுத்த பட்டானாக தெரிகிறது எஈம் வெல்லும் என விண்ணை முட்ட குரல் எழுப்ப உடைந்து விடும் எதிரிகளின் குருட்டு படை என எண்ணுகிறேன் இது வரட்டுத்தனமான கூச்சல் இல்லை அனால் இதில் உள்ள நுட்பனஅகழி தமிழகத்து தமிழனும் இணைய வேண்டிய தேவை யுக்க்றது உங்களின் சோகம் கலந்த இடுகைகள் மனதை கணக்கா செய்தன ..//
மன்னிக்க வேண்டும் சகோதரி,
இந்தத் தொடரில் நான் இன்னமும் பிரபாகரன் பற்றி எதுவும் எழுதத் தொடங்கவில்லை.
வரலாற்றுப் பதிவுகளை எழுதும் போது, அவை மிகைப்படுத்தப்பட்ட வரலாற்றுத் இடுகை என்று நீங்கள் சொல்லும் போது,
சான்றாதாரங்களை முன் வைத்தால் தான்,
அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்த முடியும்.
ஈழ வயல்களுக்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் இப்போது தான் மூன்று பாகங்களைக் கடந்திருக்கிறது.
@ஜெயசீலன்
நிரூபன் சார், வணக்கம்...எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை!... என்னைப்போல ஒரு மிகச்சிறிய பதிவனை அறிமுகப்படுத்த ஒரு பெரிய மனம் வேண்டும். மிக்க மகிழ்ச்சியாக உணர்கிறேன்... இந்த நன்றிக்கடனை எப்படி தீர்க்கப்போகிறேன் என்றே தெரியவில்லை... உங்களின் பதிவுகளை எல்லாம் படித்து அதற்கெல்லாம் நேர்மையான பின்னூட்டமிடுவது ஒரு சிறிய, மிகச்சிறிய கைமாறாக இருக்கும் என்று நினைக்கிறேன்... :-) //
சகோதரம், உங்களின் அன்பிற்கு நன்றி,
என் வலைக்கு வரும் நான்கு பேர், உங்களின் வலைக்கும் வர வேண்டும் எனும் ஆவலில் தான் பதிவர்களை அறிமுகம் செய்கின்றேன்.
கைம்மாறிற்காகவோ, நன்றிக்காகவோ நான் இந்தப் பதிவர் அறிமுகத்தினைத் தொடரவில்லை.
படிக்கும்பொழுது நெஞ்சமெல்லாம் துக்கம் பரவுகிறது, இந்தியன் என்று சொல்வதில் பெருமைப்பட ஒன்றுமில்லை.
@லண்டன் மணியம்
வணக்கம் தம்பி நிருபன்,
எங்கட ஊர் புதினங்களை வலு கலாதியாய் எழுதியிருக்கிறீர்.அருமையா இருக்கப்பு.நாங்கள் அந்தக் காலத்திலை ஊரில இருந்த ஞாபகமெல்லாம் வருது கண்டியோ.நல்லாய் எழுதுறாய் தம்பி.
இந்த மணியத்தானின்ர வாழ்த்தும், வற்றாப்பளையாளின் அருளும் எண்டைக்கும் உனக்கு கிடைக்கும் தம்பி.//
வணக்கம் மணியம் ஐயா,
எப்பிடிச் சுகம்?
புலம் பெயர்ந்தாலும், நிலம் தனில் இருக்கும் சூட்டினை இழக்கவில்லை என்பதற்கமைவாக,
எங்கடை மொழியில கருத்துரை வழங்கியிருக்கிறீங்க.
மிக்க நன்றி ஐயா.
உங்களைப் போன்ற பெரியோர்களின் அன்பும்,
ஆதரவும் இருக்கும் வரை என் பதிவுகள் தொடரும்.
தொடர்ந்தும் வாங்கோ.
Post a Comment