Friday, September 30, 2011

வேஷம் போடும் சாதியம்- பாகம் 02- அவலங்கள் நிறைந்த மலையக மக்களின் வாழ்க்கை முறை!

முன் அறிவிப்பு: பாலுறவு சிறுகதையின் இரண்டாம் பாகம் கொஞ்சம் விவகாரமானது. பிடிக்காதவர்கள் அம்பாலிக்கா எஸ்கேப் ஆகிட்டு அடுத்த பதிவிற்கு வரலாம். ஒரு பிரதேச மக்களின் வாழ்க்கை முறையினைச் சிறுகதை மூலம் எழுதுகின்ற போது சில வேண்டத் தகாத விடயங்கள் என்று சமூகத்தில் முத்திரையிடப்படும் விடயங்களை விலக்கி வைத்து என்னால் எழுத முடியவில்லை. பெரியோர்களே! சமூக காவலர்களே! மன்னிக்கவும்!

இக் கதையினை ஐந்து நிமிடங்கள் செலவழித்துப் பொறுமையாகப் படித்து, இலங்கையில் அரசியற் கட்சிகளாலும், ஏனைய சமூகங்காலும் புறக்கணிக்கப்படும் மலையக மக்கள் பற்றிச் சிறு துளியினையாவது இப் பதிவின் மூலமாக நீங்கள் அறிந்து கொண்டால் நான் மிக்க மகிழ்ச்சியடைவேன்!


இனி முதற் பாகத்தின் தொடர்ச்சியாக:

தன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கிய பொன்னம்மாவை வழி மறித்த பாக்கியம், "பொன்னம்மா உங்களுக்கு எத்தினை வயசிருக்கும்?"  
''ஏன் கேட்கிறீங்கள் பாக்கியம்? 
"இல்லைச், சும்மா ஒருக்கா தெரிஞ்சு கொள்ளலாம் என்று தான் கேட்கிறேன்".

"எனக்கு முப்பத்திரண்டு வயசு இப்ப நடக்குது."
"ஓ......உங்களுக்கு முப்பத்திரண்டே, எனக்கு முப்பந்தைந்து வயசு எனத் தான் கேட்க வந்த விடயத்தை உள் மனதினுள் மறைத்துப் போலியாகப் புன்னகைக்கிறாள் பாக்கியம்.

பொன்னம்மா, நீங்கள் இனிமேல் என்னை அக்கா என்று தான் கூப்பிட வேண்டும். இன்னொரு விடயத்தினையும் சொல்ல மறந்திட்டேன். உண்மையில நீங்கள் அழகாக இருக்கிறீங்க எனப் பீடிகை போட்டாள் பாக்கியம்.
பொன்னம்மா பாக்கியத்திடமிருந்து விடை பெற்றவளாகத் தன் வீட்டிற்குள் நுழைந்தாள். அந் நேரம் பொன்னம்மாவின் பிள்ளைகளான நித்தியும், சுரேசும் பாடசாலையினை விட்டு வந்திருந்தார்கள். தன் பிள்ளைகள் இருவருக்கும் தான் சமைத்து வைத்திருந்த உணவினைப் பரிமாறியவாறு அயல் வீட்டிலிருக்கும் பாக்கியத்தினைப் பற்றியும், அவர்களின் பிள்ளைகளான சுதன், ஆராதனா பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தாள் பொன்னம்மா.

தம் வயதினை ஒத்த சிறு வாண்டுகள் இருவரும் அயல் வீட்டில் இருப்பதனை எண்ணிய பொழுது நித்திக்கும், சுரேசிற்கும் மனதிற்குள் மகிழ்ச்சி பொங்கத் தொடங்கியது.
"ஆய் இனிமே ஜாலி தானே அம்மா.
பக்கத்து வீட்டில எங்களோட சேர்ந்து வெளையாட ஆளுங்க இருக்காங்க.
இப்பவே நாங்க அவங்கட வூட்டுக்குப் போகப் போறோம்" என்று தம் தாயிடம் விடை பெற்றவர்களாக கிளம்பினார்கள் நித்தியும், சுரேசும்.

ஹலோ அன்ரி...நாங்கள் நித்தியும், சுரேசும் பக்கத்து வூட்டில இருந்து வந்திருக்கிறம். ஒங்கட புள்ளைங்க எங்கே?
எனக் குரலெழுப்பியவாறு பாக்கியத்தின் வீட்டு வாசலில் நின்றார்கள் நித்தியும் சுரேசும்.
"ஓ...நீங்க தான் பொன்னம்மாவின் பிள்ளைகளே! வாங்கோ...வாங்கோ..என வரவேற்று எங்கட பிள்ளையள் ரெண்டு பேரும் இப்பத் தான் சாப்பிடீனம் (சாப்பிடுகிறார்கள்) எனச் சொல்லினாள் பொன்னம்மா.

வீட்டிற்கு வெளியே தங்களின் தாய் யாரோ சிறுவாண்டுகளுடன் பேசிக் கொண்டிருப்பதற்கான அடையாளமாக அவர்களின் குரலினைச் செவிமடுத்த ஆராதனாவும், சாதுரியனும், "அம்மா ஏன் அவையளை வாசலில வைச்சிருக்கிறீங்க?
உள்ளே கூட்டி வாங்களேன்!" என அழைப்பு விடுத்தார்கள். இதனால் மறுப்பேதும் சொல்ல முடியாதவளாக பாக்கியம் நித்தியையும், சுரேசினையும் தன் வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள்.

"நான் நித்தி! இவர் சுரேஸ்!" என்று தங்களை அறிமுகப்படுத்தினார்கள் பொன்னம்மாவின் புதல்வர்கள் இருவரும்.
"நான் ஆராதனா. இவன் சுதன்" என்று பதிலுரைத்தனர் பாக்கியத்தின் பிள்ளைகள்.

"அப்படீன்னா நீங்க இப்ப என்ன சாப்பிடுறீங்க?" எனப் பொன்னம்மாவின் பிள்ளைகள் உணவு உண்பதனைப் பார்க்கையில் தன் மழமை நாக்கில் ஊறிய எச்சிலைக் கட்டுப்படுத்த முடியாதவனாய் கேள்வி கேட்டான் நித்தி.

"நாங்க(ள்) உளுத்தம்மா சாப்பிடுறோம்" எனப் பதிலுரைத்தாள் ஆராதனா.
என்னது உளுத்தம்மாவோ..அப்படீன்னா என்ன?" என்று கேட்டான் சுரேஸ்.

"சீ...கறுமம் இது கூடத் தெரியாமலே..உளுந்திலிருந்து திரிக்கப்பட்ட மாத் தான் உளுத்தம்மா. அதுக்கு நாங்கள் சீனி, தேங்காய்ப் பூ போட்டுக் குழைத்துச் சாப்பிடுவோம். வேண்ணா ஒரு சின்ன உருண்டை தாரேன்..சாப்பிட்டுப் பாருங்களேன்?" எனக் கேட்டான் சுதன்.

சுதனிடமும், ஆராதனாவிடமும் வாங்கி உண்ட சின்ன உருண்டை உளுத்தம்மாவே நித்திக்கும், சுரேஸிற்கும் அமிர்தம் போல இனித்தது. "இன்னும் இருக்கோ" (இருக்கா?) என்று வெட்கம் அறியாத தன் மழலை மனதின் வெளிப்பாட்டினை காண்பித்தான் சுரேஸ்.

"அம்மா...அம்மா...இஞ்ச வாங்களேன்! நித்திக்கும், சுரேஸிற்கும், உளுத்தம்மா பிடிச்சிருக்காம். கொஞ்சம் குழைச்சுக் கொண்டு வந்து கொடுங்களேன்?" என வேற்றுமையேதும் அறியாத தன் மன உணர்வினை வெளிப்படுத்தினான் சுதன்.

குசினிக்குள் (கிச்சனுக்குள்) நின்ற பாக்கியம், தம்பி சுதன், ஒருக்கால் (ஒருவாட்டி) இஞ்ச வந்திட்டுப் போறீங்களே எனக் கூப்பிட்ட தாயின் குரலுக்குச் செவி சாய்த்தவனாக அடுக்களைப் பக்கம் போனான் சுதன்.
தம்பி! எங்கட தராதரம் என்ன? அந்த தோட்டக்காட்டுச் சனங்களின் தராதரம் என்னவென்று தெரியுமே?

எஸ்ட்டேட் ஆட்களின்ரை பிள்ளையள் தான் நித்தியும், சுரேசும். அவர்களை வீட்டிற்குள் கூட்டி வந்ததே பெரிய தப்பு. இதில இனி நான் அவையளுக்கென்று சமைச்சுப் போட வேண்டுமோ? இப்பவே ஆட்களை வீட்டிற்கு வெளியாலை கூட்டிக் கொண்டு போய் விளையாடுங்கோ பார்ப்பம்" எனக் குசு குசுத்துச் (மெது மெதுவாகச் சொல்லுதல்) சொன்ன தாயின் சொல்லைத் தட்டாதவனாக, நித்தியையும், சுரேஸினையும் அழைத்துச் செல்ல வந்த சுதனுக்கு, நிலத்தில் சிதறிக் கிடந்த சிறிய உளுத்தம் மாத் துகள்களைப் பொறுக்கி சுரேஸ் உண்டு கொண்டிருந்தது கவலையினைத் தோற்றுவித்தது.

"சுரேஸ் நீங்கள் என்ன பண்ணுறீங்க. சீ..இது அசிங்கம். நிலத்தில விழுந்து கிடக்கிறதைப் பொறுக்கிச் சாப்பிடக் கூடாதென்று உங்களுக்குத் தெரியாதே?" என அதட்டினான் (செல்லமாக மிரட்டினான்) சுதன்.

"இல்ல சுதன் அண்ணா, உளுத்தம்மா ரொம்ப டேஸ்ட்டா இருந்திச்சு. அதான் நான் அப்படிச் செய்தேன்" என்று மெல்லிதாய்ப் பதிலுரைத்தான் சுரேஸ்.

"அம்மா கொஞ்சம் வேலையா இருக்கிறா. அதோட உளுத்தம்மா முடிஞ்சுதாம். அடுத்த தடவை கண்டிப்பா உளுந்து திரித்து, உங்களுக்கும் உளுத்தம்மா குழைச்சுத் தருவதாச் சொல்லியிருக்கிறா. இப்ப வாங்கோ நாங்கள் பேணிப் பந்து விளையாடுவோம்" எனக் கூறியவாறு எல்லோரும் வீட்டு முற்றத்திற்குப் போனார்கள்.

சிறு வாண்டுகள் நால்வரும் பேணிப் பந்து விளையாடச் செல்லும் நேரத்தில், பொன்னம்மா அழகான கவுணொன்றை (கவுண் - நைட்டியைப் போன்ற கொஞ்சம் கவர்ச்சியற்ற உடை) அணிந்தவாறு தன் பேச்சுத் துணைக்காகப் பாக்கியத்தினை நாடி வந்தாள்.
"ஹலோ பாக்கியம் அக்கா! எப்படி இருக்கிறீங்க? என்ன சமையல் முடிஞ்சுதே?"
எனப் பாக்கியத்தின் வீட்டு வாசலில் நின்று குரலெழுப்பினாள் பொன்னம்மா.

ஓம்! பொன்னம்மாவே! வாங்கோ! வாங்கோ! எனப் பொன்னம்மாவை வரவேற்று மீண்டும் அதே வராந்தாக் குந்தில் உட்கார வைத்தாள் பாக்கியம்.

"பொன்னம்மா உண்மையாகத் தான் சொல்லுறேன். நீங்கள் இந்த உடுப்பில (உடையில) ரொம்ப அழகாகத் தான் இருக்கிறீங்க.
உங்கட கணவர் குடுத்து வைத்தவர் தான் உங்களைக் கட்ட" என நாசூக்காக ஏதோ ஒன்றினை உரைப்பதற்கான முன்னுரையினைப் பேசத் தொடங்கினாள் பாக்கியம்.

"அப்ப உங்களுக்கு ரெண்டு பிள்ளைகள் தான் என்ன, இனியும் பிள்ளைகள் பெறுகிற ஐடியா ஏதாச்சும் இருக்கோ?" எனக் கேள்வியெழுப்பினாள் பாக்கியம்.

"இல்லை அக்கா. இரண்டு பிள்ளைகளுமே போதும் என்று நிறுத்திப் போட்டம்..
"நிறுத்திட்டமென்றால்?"

"இல்ல குடும்பக் கட்டுப்பாடு செய்திட்டம்."

"அப்படீனா இரவில ஒரே வேலையெடுப்புத் தான் என்ன?" எனப் பச்சையாக கேட்டாள் பாக்கியம்.

"சீ...போங்க அக்கா. எங்கட புள்ளையளும் வளந்திட்டாங்க. எப்பவாச்சும் நேரம் கிடைக்கும் போது தான் பண்ணுவோம். எனக்கு வெட்கமா இருக்கு. நீங்க வேறை ஏதாச்சும் பேசுங்களேன்" என்று பேச்சை மாற்ற முயற்சி செய்தாள் பொன்னம்மா.

"இப்பவே நீங்க குமர் பிள்ளை (பிகர்) மாதிரி இருக்கிறீங்க பொன்னம்மா. ஊர்ப் பொடியள் (ஊர்ப் பசங்க) கண்ணில நீங்க இன்னும் தென்படவில்லைப் போல இருக்கு! அவங்க கண்ணில மட்டும் பட்டீங்க, பின்னால வந்தே தேங்காய் உரிச்சுப் போடுவாங்க" என அர்த்தமில்லா வார்த்தைகளுக்கு அர்த்தம் கற்பிக்கத் தொடங்கினாள் பாக்கியம்!

"அதெல்லாம் இருக்கட்டும் பாக்கியம் அக்கா! அங்கால நம்மளோட புள்ளைங்க வெளையாடிக்கிட்டிருக்கிறாங்க. நாம இப்படிப் பேசுறது நல்லா இல்லே" என்று விவாத மேடையின் குறுக்கே புகுந்து சம்பந்தமில்லாத் போர்க் கொடி தூக்கும் பதிவர் போலத் பேச்சினை மாற்ற முனைந்தாள் பொன்னம்மா.

"பொன்னம்மா ஒங்களிட்ட ஒன்னு கேட்கிறேன். கண்டிப்பாகச் சொல்லுவீங்க தானே?
உங்களுக்கு அந்த மாதிரி அனுபவம் ஏதாச்சும் இருக்கா?"

"அந்த மாதிரின்னா? என்ன புரியலையே?"

"அதான் பொண்ணுங்களும், பொண்ணுங்களும் ஏறுவது போல...."

"சே...நான் வூட்டுக்குப் போகனும் அக்கா. நீங்க அசிங்க அசிங்கமாப் பேசுறீங்க. அவர் வேலையால வர்ற (வருகிற) நேரமாகுது!" எனச் சொல்லிப்; பாக்கியத்தின் பேச்சினைச் சலிக்காதவளாக வீட்டிற்குப் போகப் புறப்பட்ட பொன்னம்மாவின் கவுணிற்கு மேலாக அந்த இடத்தில் சட்டெனக் கை வைத்தாள் பாக்கியம்!

முதன் முதலாக ஒரு பெண் தொட்டது பொன்னம்மாவின் நரம்புக்களில் ஒரு புதுவித மாற்றத்தினைக் கொடுத்திருக்க வேண்டும். இசைந்து கொடுப்பது போல இருந்த பொன்னம்மாவை அழைத்துக் கொண்டு தன் கொட்டில் வீட்டிற்குள் நுழைந்து தட்டியினைச் (கதவினை) சாத்தினாள் பொன்னம்மா.

அந் நேரம் பேணிப் பந்து விளையாடிக் கொண்டிருக்கையில் சுதன் எறிந்த பந்து எதேச்சையாக பாக்கியத்தின் கொட்டில் வீட்டின் (ஓலைக் குடிசை) வாசலோரக் கிடுகளுக்கு நடுவே சிக்கிக் கொண்டது.

பந்தினைப் எடுப்பதற்காய்ச் சென்ற நித்திக்கோ, உள்ளிருந்து முனகல் ஒலிச் சத்தம் வருவதனை அறிந்து, மேலும் அது பற்றி அறியும் ஆவல் எழுந்தது.

இரு பெண்கள்!....ஒரு பாயில்! இணை பிரியாத அன்றில்களாய்! மனதில் தொடர்ந்து பார்க்க வேண்டும் எனும் ஆவல் எழுந்திருந்தாலும் "தன் அம்மா இந்தக் கோலத்தில் இருக்கிறாவே.....நான் இதற்கு மேலும் பார்த்தால் அவாவிடம் மாட்டிக் கொள்ள வாய்ப்பிருக்கிறதே" எனும் உணர்வு கொண்டவனாய் மெதுவாக அவ் இடத்தை விட்டு வெளியேறி பேணிப் பந்து விளையாட்டினைத் தொடர்ந்தான் நித்தி.

பொழுது இருட்டத் தொடங்கியது. பாக்கியமும், பொன்னம்மாவும் தம் வேலை முடித்து, வெளியே வந்து வீட்டிற்குப் போகத் தொடங்கினார்கள். சிறுவர்களும் தம் விளையாட்டினை முடித்து வீட்டினுள் நுழைந்தார்கள்.

நித்தியின் மனதிலோ, அந்தக் காட்சியினைக் கண்ணுற்ற நொடியிலிருந்து தன் தாயிடம் இது பற்றிக் கேட்டு விட வேண்டும் எனும் உணர்வு தான் மேலோங்கியிருந்தது. ஆனாலும் எப்படிக் கேட்பது? "அவ தான் என் அம்மாவாச்சே" எனும் உணர்வு மேலேழுந்து அவன் மனதினை மௌனச் சுமையால் அடைத்துப் போட்டு விட்டது.

மறு நாள் பாடசாலை விட்டு வந்து மீண்டும் பேணிப் பந்து விளையாடத் தொடங்கினார்கள் சிறுவாண்டுகள். பாக்கியமும், பொன்னம்மாவும் சிறுவாண்டுகளிடம் விடை பெற்று, கடைத் தெருப்பக்கம் பொருட்கள் வாங்குவதற்காக இறங்கினார்கள். இடையில் பந்து வெடித்து விட, பந்து வாங்குவதற்கான பணத்தினைப் பெறுவதற்காகத் தம் தாய் வரும் வரை காத்திருக்க வேண்டுமே எனும் காரணத்தினால் ஒளிச்சுப் பிடித்து விளையாடத் தொடங்கினார்கள் சிறுவர்கள்.

நித்தியும், சுதனும் ஒன்றாக ஒளிப்பதற்காச் சென்றார்கள். அவர்களைத் தேடிக் கண்டு பிடிக்கும் பொறுப்பு, ஆராதனாவிடமும், சுரேஸிடமும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

தன் தாயினையும், பாக்கியம் அன்ரியையும் அந்தக் கோலத்தில் பார்த்தது முதல் தானும் இவ்வாறு செய்தால் எப்படியிருக்கும் எனும் மன நிலை நித்தியின் மனதில் எழுந்திருந்தது. நித்தியும், சுதனும் தம் வீட்டின் உள் அறையினுள் ஒளிக்கத் தொடங்கினார்கள்.
நித்தி சுதனின் காதில் மெதுவாக குசு குசுத்தான்.

"டேய் மச்சான், உன்னோட ஒன்னுக்குப் போறதையும், என்னோட ஒன்னுக்குப் போறதையும் ஒன்னாக கோர்ப்பமோ?"

"சுதன்-போடா நாயே...நான் அப்பாட்டைச் சொல்லிப் போடுவேன்."

இல்ல மச்சான்..நீ ஒரு வாட்டி ட்ரை பண்ணிப் பாரேன் என்று வற்புறுத்தி சுதனோடு ஓரினச் சேர்க்கையில் ஈடு பட முனைந்தான் நித்தி. இதனால் கடுப்படைந்த சுதனோ...விடடா நாயே.! எனக்கு இது பிடிக்கலை என்று நித்தியை விலக்கி விட்டுச் சென்றான்.
அந் நேரம் சுதனின் தந்தையார் ஓவர் மப்பில் சைக்கிள் கடை வேலை முடித்து வீட்டிற்கு வந்திருந்தார்.

சுதன் ஓடோடிச் சென்று தன் தந்தையிடம் அப்பா..."இவன் நித்தி என்னைக் கோர்க்க வரச் சொல்லிக் கேட்டு அங்க பிடிச்சவன்” என்று அழுதழு சொன்னது மப்பிலிருந்த தந்தையின் மனதில் உள்ள மிருக குணத்தின் வெளிப்பாட்டிற்கு உந்துதலாய் அமைந்தது!

"தோட்டக் காட்டு நாயளே! உங்களை பாவம் பார்த்து எங்கட புள்ளையளோட சரிக்குச் சமனா வெளையாட வுட்டால் நீங்க சமானில கை வைக்கிறீங்களோ!
பு......................மக்களே!..இருங்க அந்த வேசை வரட்டும்! உன்ர கொப்பன் (அப்பன்) எங்க போயிட்டான்?
அந்த வேசமோன் வரட்டும்! இன்னைக்கு ஒரு வழி பார்த்திடுறேன்!" என்று நித்தியைப் பேசியவாறு, நித்திக்கு அடிப்பதற்காக கை ஓங்கிய சிவராமனிடமிருந்து இலாவகமாகத் தப்பித்து ஓடத் தொடங்கினான் நித்தி.

இருட்டிய பின்னர் பாக்கியமும், பொன்னம்மாவும், வீட்டிற்கு வந்தார்கள். போதையில் புலம்பியவாறு புரண்டு படுத்துக் கொண்டிருந்த சிவராமனோ..பாக்கியத்தின் குரல் கேட்டு எழுந்தார். ஓடோடிச் சென்று பொன்னம்மாவிடம் விசயத்தைப் பற்ற வைத்தார்.


பொன்னம்மாவோ "அந்தச் சனங்கள் எப்பவுமே அப்படித் தான்! முளைச்சு மூனு இளை விட முன்னாடியே கலியாணம் கட்டுங்கள். அதோட இப்படித் தப்பான வேலைகளும் செய்யுங்கள். இது தானே அவங்கட தொழில்" என்று தன் சுய குணத்தை மறைத்து வெள்ளாத் தடிப்பினைக் காட்டிக் கணவனுக்கு ஒத்திசைவாகப் பேசத் தொடங்கினாள்.

போதை தலைக்கேறியிருந்த சிவராமன் நினைத்திருந்தால் கோவிந்தனுடனும், பொன்னம்மாவுடனும் போய்ச் சமரசமாக- மென்மையாக அந்த விடயத்தினைப் பற்றிப் பேசி நித்தியின் நடவடிக்கையினைக் கட்டுப்படுத்தியிருக்க முடியும். ஆனால் அவரோ ஓடோடிச் சென்று.......
"அடோய் கோவிந்தன் பு.............யாண்டி............எளிய வம்பில பொறந்த தோட்டக்க் காட்டு பயலுகளே" எனும் தொனியில் கெட்ட வார்த்தைகளால் பேசி...கோவிந்தனின் மானத்தையும், பொன்னம்மாவின் மானத்தையும் கப்பலேற்ற வேண்டும் எனும் ஒரே நோக்கத்தில் குறியாக இருந்தார்.

பொன்னம்மா குறுக்கிட்டாள். "அண்ணே கொஞ்ச நேரம் பேசாம இருக்கீங்களா?”
நான் இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டுறேன் எனச் சமரசம் பேசச் சென்றவள் ஒரு பெண் என்பதனை உணராது தன் சாதி வெறியினைக் காண்பித்து கெட்ட வார்த்தைகளால் திட்டத் தொடங்கினார் சிவராமன்.

"கோத்தைக் கோழி....வேசமோன்...............வடுவா ராஸ்கல்" எனும் வார்த்தைகளை அடிக்கடி ரிப்பீர்ட் செய்து திட்டிக் கொண்டிருந்தார் சிவராமன். அயலவர்கள் ஊர்ச் சண்டையினைப் பார்க்கும் ஆவலில் ஒன்று கூடியிருந்தார்கள். டீசெண்டாகப் பிரச்சினையைத் தீர்க்க ஒரு வழி! இப்போது நித்தியிற்கு அடிப்பது தான்; என்று உணர்ந்த கோவிந்தன், வீட்டுக் கூரையின் மேற் பக்கத்தில் சொருகிக் கிடந்த குடையினை எடுத்த விளாசத் தொடங்கினார்.

போதையில் புலம்பிக் கொண்டிருந்த சிவராமனை அழைத்துக் கொண்டு பாக்கியம் மெதுவாக அவ் இடத்தை விட்டு நகர்ந்தா.

"அப்பா அடிக்காதீங்கப்பா! ஏதோ தெரியாமற் பண்ணிட்டேன்! அப்பா வலிக்குதப்பா! வேணாம்பா!" என கெஞ்சி அழுதான் நித்தி!

"சொல்லு! உனக்கு யார் இந்த வெளையாட்டைச் சொல்லித் தந்தது?"

"தன் தாயின் மானத்தினையும், தனக்கு உளுத்தம்மா கொடுத்த பாக்கியம் அன்ரியின் மானத்தினையும் பாதுகாப்பது தான் ஒரு மனிதனுக்கு அழகு என்பதனை அந்தப் 15 வயதுச் சிறுவன் சிந்தித்தான்."

"அப்பா...பள்ளிக் கூடத்தில என் கூடப் படிக்கிற ராமு தான் சொல்லிக் கொடுத்தான்" எனப் பொய் சொன்னான்.
அடி வாங்கியபடியே தூங்கி விட்டான் நித்தி. நள்ளிரவு விழுத்துப் பார்த்தான். எல்லோரும் தூக்கத்திலிருந்தார்கள்.

மெதுவாகத் தன் வீட்டை விட்டு வெளியேறினான். சாவகச்சேரியிலுள்ள புலிகளின் முகாமினை நோக்கி நகர்ந்தான். தானும் இயக்கத்திற்குச் சேரப் போவதாகச் சொல்லி அழுதான் நித்தி.
புலிகள் மறுத்தார்கள்! ஒரு பதினைந்து வயதுச் சிறுவனை இணைத்துக் கொள்ள மாட்டோம் என எச்சரித்தார்கள். ஆனாலும் பிடிவாதமாய் நின்றான் நித்தி!
இறுதியில் வெற்றி கண்டான்.

மறு நாள் காலைப் பொழுது புலர்ந்தது. நித்தியினைத் தேடி அவர்களது வீட்டார் எல்லா இடமும் அலைந்தார்கள். அவன் கிடைக்கவில்லை. ஒரு வருடத்தின் பின் "நித்தி தவளைப் பாய்ச்சல் போர் நடவடிக்கையில் வீரச்சாவடைந்து விட்டதாகவும், மாலையில் நித்தியின் வித்துடல் வீட்டிற்கு வரும் என்றும், அதன் பின்னர் ஏனைய மாவீரர்களின் உடல்களோடு நித்தியின் உடலும் அஞ்சலிக்காக சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் வைக்கப்படும்" என்று புலிகளின் பொறுப்பாளர் குகன் பொன்னம்மா வீட்டிற்கு வந்து சொல்லி விட்டுச் சென்றார்.

இது நாள் வரையும் பிரிந்திருந்த குடும்பங்கள் ஒன்றாகின. ஒப்பாரி வைத்துக் கதறியழுதன. நித்தியின் இறுதி வணக்க நிகழ்வுகள் யாவும் முடிவுற்ற பின்னர் பொன்னம்மா குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லித் தேற்றுகின்ற நபராகவும், அறுந்து போன உறவினை ஒட்ட வைக்கும் வண்ணமும் செயற்படத் தொடங்கினா பாக்கியம்.

சில நாட்களின் பின், பாடசாலையில் விடுதலைப் போருக்கு ஆட்களைத் திரட்டுவதற்கான கூட்டத்தினைப் புலிகள் சாவக்சேரி இந்துக் கல்லூரியிலும் மேற்கொண்டார்கள். சுதனையும், ஆராதனாவையும் விடா முயற்சியோடும்,  "வீட்டிற்கு ஒருவர் நாட்டைக் காக்க வேண்டும்" எனும் கொள்கை விளக்கத்தோடும் கெஞ்சிக் கேட்டுப் பார்த்தார்கள். அவர்கள் புலிகள் அமைப்பில் இணைய மறுப்புத் தெரிவித்தார்கள்.

அன்று மாலை பாடசாலை முடிவடைந்ததும் ஓடோடி வந்து தமது தாயிடம் சுதனும், ஆராதனாவும், "அம்மா எங்களை இயக்கத்திற்கு வரச் சொல்லிக் கட்டாயப்படுத்திப் அண்ணாக்கள் கேட்டவையம்மா, ஆனால் நாங்கள் போகவில்லை" எனச் சொன்னார்கள்.

இயக்கத்திற்கு எங்களை மாதிரி ஆட்கள் எல்லாம் போறதில்ல கண்டியளோ! அது வந்து எளியன் சாதிகள் (கீழ்ச் சாதிகள்) தான் போறவை! நாங்கள் யார்? வெள்ளாளரேல்லே! இயக்கத்திற்குப் போய் சாகுறதுக்கு நாங்கள் என்ன நித்தியை மாதிரி எஸ்டேட் ஆட்களோ! இல்லை கீழ்ச் சாதி ஆட்களோ! என்று அட்வைஸ் சொல்லி அந்தப் பிஞ்சுகளின் மனதில் நச்சு விதையினை விதைத்தா பாக்கியம்!

மாலையானதும் சுரேஸ், சுதன், ஆராதனா ஆகிய மூவரும் பேணிப் பந்து விளையாடத் தொடங்கினார்கள்!

"எஸ்டேட் ஆட்களும், கீழ்ச் சாதியில பிறந்தோரும் தான் இயக்கத்திற்குப் போய்ச் சாகிறவை" என்று சொன்ன அதே வாயால், தன் வீட்டு வாசலில் குந்தியிருந்த பொன்னம்மாவைப் பார்த்து "அவரும் இப்ப பயங்கரக் குடி. எனக்கென்றால் அடக்க முடியேல்லை. பிள்ளையள் விளையாடிக் கொண்டிருக்கீனம் தானே! நீ வாவன் பொன்னம்மா" எனச் சொல்லிப் பொன்னம்மாவின் கையினைப் பிடித்து அழைத்துக் கொண்டு மீண்டும் அதே கொட்டில் வீட்டின் தட்டியினைச் சாத்தினாள் பாக்கியம்!

                                             பாலுறவு சிறுகதை இத்தோடு நிறைவு பெறுகின்றது! 

இச் சிறுகதையானது ஈழத்தில் இடம் பெற்ற உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்ட ஒரு சிறுகதையாகும், இதில் வரும் கதா பாத்திரங்களின் பெயர்கள் மட்டும் கற்பனையே! 

இச் சிறுகதை பற்றிய உங்களின் ஆக்கபூர்வமான உள்ளக் கருத்துக்களையும், விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறேன். 

இன்ட்லி ஓட்டுப் பட்டையில் கிளிக் செய்வதன் மூலம் இன் ட்லியில் ஓட்டளிக்க முடியும்.
பதிவின் நீளம் காரணமாக பதிவர் அறிமுகம் பகுதியினை இணைக்க முடியாததையிட்டு வருந்துகிறேன்!

54 Comments:

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
Best Blogger Tips

FDFS

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
Best Blogger Tips

இருங்க சார், பதிவ படிச்சிட்டு வர்றேன்..

அட, முக்கியமானதா மறந்துட்டேன், இனிய இரவு வணக்கங்கள்...

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன் என்னையா லெஸ்பியன் கேச கொண்டு வருகிறாய் இப்ப வீட்ட போறன் மிகுதி பின்னோட்டம் பின்னர்..!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

பல சிறு சிறு விபரங்கள் அறியமுடிகிறது. மிக சென்சிட்டிவான சாதியும் பாலியலும் கைகோர்த்துச் செல்கிறது.

Anonymous said...
Best Blogger Tips

என்னாத்தை சொல்ல .. ! முக்கியமாய் மொழி நடையில் அசத்துயுள்ளீர்கள்.. ஈழத்து மற்றும் தமிழ் நாட்டு மொழி நடைகளில் கதாபாத்திரங்களை பிரித்து காட்டியமை அழகு...

செங்கோவி said...
Best Blogger Tips

அதிர்ச்சியான விஷயத்தை எழுதிட்டு, கருத்துச் சொல்லுன்னா என்ன சொல்ல?

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
Best Blogger Tips

சமூக சிந்தனை சிறுகதை. பாலியல் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கு. சாதிகள் உடையும் இடம்களை தொட்டுக்காட்டியிருக்கிறீர்கள். நல்ல பதிவு. ஒரு விடுதலை இயக்கம் இப்படியும் பிரச்சனைகளை சந்தித்ததா?

Anonymous said...
Best Blogger Tips

///"தோட்டக் காட்டு நாயளே! உங்களை பாவம் பார்த்து எங்கட புள்ளையளோட சரிக்குச் சமனா வெளையாட வுட்டால் நீங்க சமானில கை வைக்கிறீங்களோ!//// எஸ்டேடில் வேலை செய்பவர்களை பொதுவாக மலையாக தமிழர்கள் என்று சொல்ல முடியாது.. ஈழத்தில் வேறு பாகங்களில் இருந்தும் மலையகத்துக்கு வேலை தேடி சென்றோர் இருக்கிறார்கள்.. நீங்கள் சொன்ன வெள்ளாளர்களும் எஸ்டேட்டில் வேலை செய்தவர்கள் தான்... எங்க வீட்டுக்கு பக்கத்தில அப்பிடி ஒரு அன்ரி இருக்கா ..!!

நிரூபன் said...
Best Blogger Tips

@Dr. Butti Paul

FDFS//

வணக்கம் பாஸ்,

அப்படீன்னா என்ன பாஸ்?
F என்றால் பெஸ்ட்டு என்று தெரியும்,,,,

அப்புறமா;-))))

நிரூபன் said...
Best Blogger Tips

@Dr. Butti Paul
இருங்க சார், பதிவ படிச்சிட்டு வர்றேன்..

அட, முக்கியமானதா மறந்துட்டேன், இனிய இரவு வணக்கங்கள்..//


நன்றி சார்,

உங்களுக்கும் இனிய இரவு வணக்கங்கள்!
படிச்சிட்டு வாங்க.

நான் ஓடவா போறேன்...

இருக்கிறேன்.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்

வணக்கம் நிரூபன் என்னையா லெஸ்பியன் கேச கொண்டு வருகிறாய் இப்ப வீட்ட போறன் மிகுதி பின்னோட்டம் பின்னர்..!!//

இப்படி ஒரு கேஸ் அங்கே இருந்தது...எனக்குத் தெரிஞ்ச இடத்தில..

அதை வைச்சுத் தான்,
அவையின் பிரச்சினையை வைத்துத் தான் எழுதியிருக்கேன்.

நீங்க அப்புறமா வாங்க.

Anonymous said...
Best Blogger Tips

///இயக்கத்திற்கு எங்களை மாதிரி ஆட்கள் எல்லாம் போறதில்ல கண்டியளோ! அது வந்து எளியன் சாதிகள் (கீழ்ச் சாதிகள்) தான் போறவை! /// இது உண்மையோ ....????

ஒரு பக்கத்தால சோபா சக்தியும்,இரயாகரனும் இன்னும் சிலரும் 'புலிகள் இயக்கம் என்பது வெள்ளாளர்களின் அச்சு,அவர்களின் நலன் சார்ந்த அமைப்பு' எண்டு எழுதுகிறார்களே !!!

நிரூபன் said...
Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி

பல சிறு சிறு விபரங்கள் அறியமுடிகிறது. மிக சென்சிட்டிவான சாதியும் பாலியலும் கைகோர்த்துச் செல்கிறது.//

நன்றி பாஸ்...

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

என்னாத்தை சொல்ல .. ! முக்கியமாய் மொழி நடையில் அசத்துயுள்ளீர்கள்.. ஈழத்து மற்றும் தமிழ் நாட்டு மொழி நடைகளில் கதாபாத்திரங்களை பிரித்து காட்டியமை அழகு...//

அவ்...
இம்புட்டுத் தானா...
நான் நெனைச்சேன் வேற ஏதாச்சும் சொல்லுவீங்க என்று...

நன்றி பாஸ்.

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
Best Blogger Tips

அடுத்த தலைமுறைக்கு தவறுகள் கடத்தப்படும் வழிமுறையினை சொல்லியிருக்கிறீர்கள். ஒரு சமுதாயத்தின் வாழ்க்கை முறையினை சொல்லியிருக்கிறீர்கள், பெரியவர்களை விட சில சமயங்களில் சிறுவர்கள் தெளிவான சிந்தனை உள்ளவர்கள் என்பதனை தொட்டுக்காட்டுகிரீர்கள். தொடரட்டும் உங்கள் பணி.. நிரூபன் வாழ்க...

நிரூபன் said...
Best Blogger Tips

@Dr. Butti Paul
சமூக சிந்தனை சிறுகதை. பாலியல் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கு. சாதிகள் உடையும் இடம்களை தொட்டுக்காட்டியிருக்கிறீர்கள். நல்ல பதிவு. ஒரு விடுதலை இயக்கம் இப்படியும் பிரச்சனைகளை சந்தித்ததா//

உங்களின் புரிதலுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி பாஸ்.

ஆமாம் பாஸ்..

விடுதலைப் போராட்டத்தில் பிரதேசவாதம், ஏற்றத் தாழ்வுகள் இருந்தமையும், போராட்ட வீழ்சிக்கும், ஒருமித்த மக்களின் எழுச்சிக்கும் தடையாக அமைந்திருந்தது.

http://www.thamilnattu.com/2011/05/1.html

இந்த இடுகையில் பிரதேசவாதம், சாரி ரீதியிலான ஏற்றத் தாழ்வுகள் எப்படி ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு குறுக்கே நின்றன என்பதனையும் எழுதியிருக்கேன் பாஸ்..

ஓய்வாக இருக்கும் போது, ஒருவாட்டி எட்டிப் பாருங்களேன்.

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...
Best Blogger Tips

நிரூபன் said...
@Dr. Butti Paul

FDFS//

வணக்கம் பாஸ்,

அப்படீன்னா என்ன பாஸ்?
F என்றால் பெஸ்ட்டு என்று தெரியும்,,,,

அப்புறமா;-))))///

First Day First Show..
வட எல்லாம் பழசு சார், இது நாங்களா யோசிச்சது...

Anonymous said...
Best Blogger Tips

///பொன்னம்மாவின் கையினைப் பிடித்து அழைத்துக் கொண்டு மீண்டும் அதே கொட்டில் வீட்டின் தட்டியினைச் சாத்தினாள் பாக்கியம்!/// செருப்பை கழட்டி அடிக்காமல் பின்னாலே போனது பொன்னம்மாவின் பிழையெல்லோ!

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

///இயக்கத்திற்கு எங்களை மாதிரி ஆட்கள் எல்லாம் போறதில்ல கண்டியளோ! அது வந்து எளியன் சாதிகள் (கீழ்ச் சாதிகள்) தான் போறவை! /// இது உண்மையோ ....????

ஒரு பக்கத்தால சோபா சக்தியும்,இரயாகரனும் இன்னும் சிலரும் 'புலிகள் இயக்கம் என்பது வெள்ளாளர்களின் அச்சு,அவர்களின் நலன் சார்ந்த அமைப்பு' எண்டு எழுதுகிறார்களே !!!//

அடிங்...............இது ஊரில எல்லோரும் பேசுற பொதுவான விடயம்.

இவர்கள் சில வேளை இயக்கம் பற்றி முழுமையாக அறியாது பாசிசம் என்ற அடை மொழி கொண்டு புலிகளை விமர்சிக்கும் நோக்கில் எழுதலாம் அல்லவா/

நிரூபன் said...
Best Blogger Tips

@Dr. Butti Paul

அடுத்த தலைமுறைக்கு தவறுகள் கடத்தப்படும் வழிமுறையினை சொல்லியிருக்கிறீர்கள். ஒரு சமுதாயத்தின் வாழ்க்கை முறையினை சொல்லியிருக்கிறீர்கள், பெரியவர்களை விட சில சமயங்களில் சிறுவர்கள் தெளிவான சிந்தனை உள்ளவர்கள் என்பதனை தொட்டுக்காட்டுகிரீர்கள். தொடரட்டும் உங்கள் பணி.. நிரூபன் வாழ்க...//

அண்ணே உடம்பெல்லாம் புல்லரிக்கு அண்ணே,

மிக்க நன்றி...
உங்களின் மேன்மையான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.
எஸ்டேடில் வேலை செய்பவர்களை பொதுவாக மலையாக தமிழர்கள் என்று சொல்ல முடியாது.. ஈழத்தில் வேறு பாகங்களில் இருந்தும் மலையகத்துக்கு வேலை தேடி சென்றோர் இருக்கிறார்கள்.. நீங்கள் சொன்ன வெள்ளாளர்களும் எஸ்டேட்டில் வேலை செய்தவர்கள் தான்... எங்க வீட்டுக்கு பக்கத்தில அப்பிடி ஒரு அன்ரி இருக்கா ..!!//

நீங்கள் சொல்வதும் சரி தான் பாஸ்..

ஆனால் பொத்தாம் பொதுவாக ஈழத்தில் எஸ்டேட் ஆட்கள் என்று தோட்டத் தொழிலாளர்களை, மலையக மக்களைத் தானே சொல்லுகிறார்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

நான் தூங்கப் போகிறேன்.

பொழுது விடிந்ததும் பார்க்கிறேன்.

குட் நைட்.

Mahan.Thamesh said...
Best Blogger Tips

என்னத்த சொல்ல / நல்ல கதை நகர்வு

காட்டான் said...
Best Blogger Tips

யோ பதினைஞ்சுவருசமா குடும்பம் நடத்தினவங்க டக்கன்னு லெஸ்பியனுக்கு மாற மாட்டாங்கையா.. பாக்கியத்துக்கு கில்மா தேவைப்பட்டா பொன்னம்வின் மனிசன பிடிச்சா நாயம் இதுல ஏதோ இருக்கேய்யா...!!??  வெள்ளாளர் இயக்கத்துக்கு போறதில்லைன்றது எனக்கு புதுக்கதையா இருக்கையா.. இதுக்குமேல சொல்லப்போனா பின்னூட்டம் திசை மாறிவிடும்...!!

காட்டான் said...
Best Blogger Tips

யாழ்பாணத்தில மட்டும்  இந்த பிரச்சனை இல்லைங்கோ நான் சிறு வயதிலும் பின்னர் இலங்கை சென்ற போதும்  மலையகதமிழரிடையே இருக்கும் சாதிகளையும் பார்தேன் மக்கள் தொகை குறைந்த மலையகத்திலேயே ஆயிரம் சாதிகள்... நான் இருந்த எட்டியாந்தோட்டையில் இருக்கும் ஒருவர் தன் மகனுக்கு பெண் எடுக்க இந்தியாவில் உள்ள தன்னுடைய சாதிக்காரர்களை நோக்கியே ஓடுவார்.. மற்றவர் வீட்டில் தேத்தண்ணி கூட அருந்த மாட்டார் உலகம் பூரா தமிழன் சாதியால் பிரிந்திருக்கின்றான் இதில் யாழ்பாணத்தான் மட்டும் விதிவிலக்கில்லை அத்துடன் யாழ்பாணத்தானும் தங்களுக்குள் சாதியின் பெயரால் பிரிந்திருக்கிறான்.. இங்கு கூட அந்த சாதிப்பிரச்சனை மிக மிக குறைந்தளவு பழசுகளிடம் இருக்கின்றது.. புதிய தலைமுறை பிள்ளைகளுக்கு அப்படின்னா என்னவென்றே தெரியாது... பொருளாதாரமும் கல்வியும் இந்த மாற்றத்தை கொண்டுவரும்ன்னு நம்புகிறேன்..!!!!??

தனிமரம் said...
Best Blogger Tips

அதிர்ச்சியான விஷயத்தை எழுதிட்டு, கருத்துச் சொல்லுன்னா என்ன சொல்ல?
//ஐயாவே சொல்லிப்போட்டார் தனிமரம் தனியாக என்ன சொல்ல இதை வழிமொழிகின்றேன் அடுத்த பதிவில்  இணைகின்றேன்!

K said...
Best Blogger Tips

கதை நல்லாயிருக்கு நிரூபன்! மொழி நடை, கற்பனை எல்லாமே ஓகே!வாழ்த்துக்கள்!

Unknown said...
Best Blogger Tips

மாப்ள இப்படியும் இருக்காங்களா....பல விஷயங்களை தெளிவா எடுத்து உரைசிருக்கீங்க....உண்மையில் இப்படி ஒரு விஷயத்தில் போன வாரம் ஒருத்தர்(!)சொல்லியவைகள் ஞாபகம் வருதய்யா...என்னத்த சொல்ல ஜாதி பற்றி பேசி தங்களை மட்டும் மேலோராக நினைத்துக்கொள்கிரார்களோ இந்த அறிவிலிகள்!

KANA VARO said...
Best Blogger Tips

நானும் பொழுது விடிந்ததும் கமெண்ட் பண்ணுறன். எல்லாமே விவகாரமா இருக்கு.

Unknown said...
Best Blogger Tips

கதை நல்லாஇருக்கு.ஆனா ஒன்னு சொல்றதுக்கு தான் வாய்ல வரமாட்டேங்குது

K.s.s.Rajh said...
Best Blogger Tips

பாஸ் கதை செல்லும் விதம் மிகவும் அருமை.அதிலும் உரை நடை சூப்பர்..அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்

காந்தி பனங்கூர் said...
Best Blogger Tips

எல்லா பகுதிகளையும் ஒரு சேர படிச்சிட்டு அப்புறம் கருத்து சொல்றேன் நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@K.s.s.Rajh

பாஸ் கதை செல்லும் விதம் மிகவும் அருமை.அதிலும் உரை நடை சூப்பர்..அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்//

அடிங்.....கொய்யாலே...

கதை தொடரும் என்றா போட்டிருக்கேன்..

இத்தோட கதை முடிந்து விட்டதே;-))

Yoga.s.FR said...
Best Blogger Tips

இனிய பிரெஞ்சுக் காலை வணக்கம்,நிரூபன்!

Yoga.s.FR said...
Best Blogger Tips

பாலுறவு சிறுகதை இத்தோடு நிறைவு பெறுகின்றது! ////அப்பாடி முடிஞ்சுது!எங்க,பத்துப் பாகம் வந்திடுமோ எண்டு பயந்திட்டன்!

வெளங்காதவன்™ said...
Best Blogger Tips

//அதிர்ச்சியான விஷயத்தை எழுதிட்டு, கருத்துச் சொல்லுன்னா என்ன சொல்ல? ///

ஆமாங்க...

சசிகுமார் said...
Best Blogger Tips

ரைட்டு.....

test said...
Best Blogger Tips

//இப்பவே நீங்க குமர் பிள்ளை (பிகர்) மாதிரி இருக்கிறீங்க பொன்னம்மா. ஊர்ப் பொடியள் (ஊர்ப் பசங்க) கண்ணில நீங்க இன்னும் தென்படவில்லைப் போல இருக்கு! அவங்க கண்ணில மட்டும் பட்டீங்க, பின்னால வந்தே தேங்காய் உரிச்சுப் போடுவாங்க" என அர்த்தமில்லா வார்த்தைகளுக்கு அர்த்தம் கற்பிக்கத் தொடங்கினாள் பாக்கியம்!//

இப்படியெல்லாம் எங்காவது நடந்திருக்கா? இப்படி யாராவது பேசுவார்களா? மன்னிக்கவும்.. நான் அறிந்ததில்லை!

மற்றபடி இசகுபிசகா இருக்கிறதால ஒண்ணும் சொல்லல!

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

ரொம்ப நன்றி மச்சி. எதுக்குன்னு புரியும்ன்னு நினைக்கிறேன்..

Unknown said...
Best Blogger Tips

என்னவோ பண்ணுது உங்க எழுத்து நிரூபன்..

குடும்ப கோளாறையும் சமூக கோளாறையும் ஒரு புள்ளியில் இணைத்தது அருமை

aotspr said...
Best Blogger Tips

நல்ல கதை.....
பகிர்வுக்கு நன்றி....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Sharmmi Jeganmogan said...
Best Blogger Tips

எழுத்து மிக அருமை. இது ஓர் சம்பவம். அதில் வரும் வேளாளர்களின் கருத்து என்னவோ அதைச் சொல்கிறது. சாதிப் பற்று இல்லாத வேளாளர்களையும் நான் பார்த்திருக்கிறேன். பின்னூட்டம் போடுபவர்கள் இதை மனதில் கொண்டு கதையைப் பற்றி மட்டும் யோசிக்கலாமே... தாழ்மையான கருத்து. அத்து மீறினால் மன்னிக்கவும்.

Sharmmi Jeganmogan said...
Best Blogger Tips

குடும்பத்துடன் குதூகலமாக வாழ்ந்துகொண்டிருக்கும் பெண், இப்படி ஒருத்தி கை வைத்தவுடன் ஓரினச் சேர்க்கையை நாடுவாள் என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. 
சிறுகதை என்பதால் விளாவரியாக சொல்ல நேரம் கிடைக்கவில்லையோ?

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்

யோ பதினைஞ்சுவருசமா குடும்பம் நடத்தினவங்க டக்கன்னு லெஸ்பியனுக்கு மாற மாட்டாங்கையா.. பாக்கியத்துக்கு கில்மா தேவைப்பட்டா பொன்னம்வின் மனிசன பிடிச்சா நாயம் இதுல ஏதோ இருக்கேய்யா...!!?? வெள்ளாளர் இயக்கத்துக்கு போறதில்லைன்றது எனக்கு புதுக்கதையா இருக்கையா.. இதுக்குமேல சொல்லப்போனா பின்னூட்டம் திசை மாறிவிடும்...!!//

அண்ணே இதில திசை மாறுமளவிற்கு ஏதும் இல்லை.

யார் சொன்னது?
ஒரு வேளை அவங்க பள்ளிக் காலத்தில ஒரு பால் உறவில் நாட்டமுள்ளவங்களா இருக்கலாம் அல்லவா..

நிரூபன் said...
Best Blogger Tips

@ஜீ...

இப்படியெல்லாம் எங்காவது நடந்திருக்கா? இப்படி யாராவது பேசுவார்களா? மன்னிக்கவும்.. நான் அறிந்ததில்லை!

மற்றபடி இசகுபிசகா இருக்கிறதால ஒண்ணும் சொல்லல!//

இப்படிப் பல இடங்களில் பேசுவார்கள்,
ஏன் ஒரு சில இடங்களில் மீன் விற்கும் இடத்திற்குப் போய்ப் பாருங்கள்,

இதனை விட கேவலமாக பேசுவார்கள்...

நிரூபன் said...
Best Blogger Tips

@ஷர்மி
குடும்பத்துடன் குதூகலமாக வாழ்ந்துகொண்டிருக்கும் பெண், இப்படி ஒருத்தி கை வைத்தவுடன் ஓரினச் சேர்க்கையை நாடுவாள் என்பதை என்னால் ஏற்க முடியவில்லை.
சிறுகதை என்பதால் விளாவரியாக சொல்ல நேரம் கிடைக்கவில்லையோ//

உங்களின் கருத்துக்களுக்கும், புரிந்துணர்விற்கும் நன்றி அக்கா.

சில விடயங்களை விரிவாக்கிச் சொல்லும் போது கதை இன்னும் நீண்டு விடும். அதனால் தான் விலாவாரியாகச் சொல்ல முடியவில்லை.

கோவிந்தனால் பொன்னம்மா சரிவர கவனிக்கப்படாமையும் இதற்கான ஒரு காரணமாக இருக்கலாம் அல்லவா.

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

பெற்றோரின் தவறு பிள்ளையை எந்த அளவு பாதிக்கும் என்பதை சொல்லும் சமூக சீர்திருத்தக்கதை வெல்டன் நிரூபன்..

சுதா SJ said...
Best Blogger Tips

வணக்கம் பாஸ். எப்படி இருக்கீங்க,,,,,?

இதில் முகம் சுழிக்க என்ன இருக்கு... பதிவு மிக நன்று

உண்மைகள் எப்பவும் கசக்கத்தானே செய்யும்.. அவர்களின் வாழ்க்கை போராட்டங்களை முடிந்தளவு உங்கள் சிறுகதையில் காட்டி உள்ளீர்கள். தரமான பதிவு பாஸ்... ( நிரு பாஸ் எப்போ தரம் இல்லாம இருந்து இருக்கு.. ஹீ ஹீ )

சுதா SJ said...
Best Blogger Tips

யாருப்பா... இங்கே மைனஸ் ஓட்டு போட்டா??????

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

சகோ... விசயத்தை மிக நேர்த்தியான வரிகளால் அழகாக சொல்லி இருக்கீங்க

Mathuran said...
Best Blogger Tips

நல்லதொரு விடயத்தை எழுதியிருக்கிறீங்க நிரூபன்.
இரு குடும்பத்தின் சண்டை நிஜ சண்டையை கண் முன்னே கொண்டு வருகிறது.

சில மாற்றுக்கருத்துக்கள் உண்டு,, இப்போ கொஞ்சம் பிஸி.. காலை வருகிறேன்

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

வளர்கின்ற பருவத்தில் ஒரு பையன் எப்படி பாதிக்கப் படுகிறான் என்பதைச் சுரீர் சொல்லும் கதை.

shanmugavel said...
Best Blogger Tips

வெகுநாளைக்கு மனதில் நிற்கும் சகோ!நல்ல படைப்பு!

Anonymous said...
Best Blogger Tips

கடவுளே கடவுளே.... இலங்கையிலுமா????
இங்கதான் மேட்டுக்குடி மக்கள் ஜாதி ஜாதின்னு சொல்லிகிட்டே வீட்டுக்கு வேலைக்கு வரும் தாழ்த்தப்பட்ட ஜாதி பொண்ணுகள சீரழிகிறாங்கன்னா, அங்கயும் அப்புடி ஒரு கதையா?

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails