ஈழத் தமிழர்கள் மீது தமிழக மக்கள் கொண்டிருக்கும் அன்பிற்கு ஈடு இணையாக என்ன கைம்மாறு செய்தாலும் எதுவும் முழுமையான மன நிறைவினைத் தரப் போவதில்லை. வார்த்தைகளால் விபரிக்க முடியாத அளவற்ற அன்பினையும், ஈழ மக்கள் மீதான உணர்வினையும் தமிழக மக்க்கள் கட்சி பேதமின்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது, தமிழகத்தில் ஒவ்வோர் தடவையும் எழுகின்ற ஈழம் சார் போராட்டங்கள், தமிழின உணர்வு சார் நிகழ்வுகள் எமக்கு செய்திகளாகச் சொல்லிச் செல்கின்றன.
ஈழத் தமிழர்கள் என்ற பெயரின் மூலம் தமிழக மக்களால் சிறப்பிக்கப்படும் விடுதலை வேண்டிய ஈழத்தில் வாழும் வட கிழக்கு மக்கள் மீது தாம் எத்தகைய அன்பினையும், ஆதரவினையும் கொண்டிருக்கிறோம் என்பதனை நாளாந்தம் தமிழகத்திலிருந்து ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் குரல்களுக்கு நடுவேயும், தமிழருக்கு நீதி இல்லையேல் உயிரினையும் கொடுப்போம் எனும் செயல்களின் மூலமும் உணர்த்தி வருகின்றார்கள் எம் தமிழக உறவுகள். வரலாறு என்பது காலச் சக்கரமாய் எம் கண் முன்னே வேகமாகச் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் சூழலில் ஈழத்திற்காய் தமிழகத்தில் முதன் முதலில் தீக்குளித்த உணர்வாளரின் பெயரானது மறைந்து விட, மக்கள் மனங்களிலிருந்து நீங்கி விட, இன்று வன்னி மக்களுக்காய்த் தன் உடலை ஆகுதியாக்கிய முத்துக்குமாரும், தூக்குத் தண்டனையினை நிறுத்த வேண்டும் எனும் கொள்கையிற்காய் உயிர் துறந்த செங்கொடியும் தான் பேசு பொருட்களாய் உள்ளார்கள்.
அனுமதியின்றி நிரூபன் வலையிலிருந்து காப்பி செய்யப்படுகிறது.
"உறவுகளே, கொலையினை நிறுத்த இன்னோர் கொலை எப்படிச் சாத்தியமாகும்? மக்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்பிடவும், மக்களை உணர்வெழுச்சி கொண்டவர்களாகப் போராட்டங்களில் ஈடுபட வைக்கவும் தீக்குளிப்பு அவசியம் என்று பலர் எழுதுகின்றார்கள்". அப்படியானால் மக்களை உசுப்பேத்தி மக்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்பும் பாணியில் இருக்கின்ற அனல் பறக்கும் பேச்சாளர்கள் ஏன் இருக்கின்றார்கள்? அரசியல்வாதிகள் ஏன் இருக்கின்றார்கள்? அவர்கள் எல்லாம் மக்களை வைத்துத் தம் சுய இலாபத்திற்காகவா பிழைப்பு நடத்துகின்றார்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது. மூன்று உயிர்களைக் காக்க ஒரு உயிரினை இழப்பது சரியாகுமா? இழக்கப்படுவதும், தீயில் வேகுவதும் தமிழன் உயிர் என்பதனை நாம் உணராதவர்களாய்த் தான் மேடைகளில் அதிரடியாய் முழங்கி வருகின்றோமா?
அன்பிற்குரிய தமிழகத்தின் உணர்ச்சி மிகு பேச்சாளர்களே, அரசியற் தலைவர்களே!
ஈழத்தின் ஒரு கடை நிலைக் குடி மகனாக என் உணர்வுகளை இங்கே முன் வைக்கின்றேன். இவை சில வேளை உங்கள் காதுகளை எட்டினாலும், பயனற்ற வார்த்தைப் பிரயோகமாக காற்றில் கலந்திடலாம். ஆனாலும் உயிரழப்பு என்பதும், தீக்குளிப்பது என்பதும் எம் நோக்கங்களை நிறைவேற்றிடுமா? இப்படி எல்லாத் தமிழர்களும் இவ் வழியினைப் பின்பற்றினால், தமிழர்களின் உயிர் தான் தமக்கு வேண்டும் எனும் நோக்கில் அலையும் பேயரசுகளுக்கு இச் செயலும் ஓர் இனிப்பான செய்தியாகத் தானே இருக்கும்?
அனுமதியின்றி நிரூபன் வலையிலிருந்து காப்பி செய்யப்படுகிறது.
"உங்களின் ஒவ்வோர் மேடைப் பேச்சுக்களிலும், பொது நிகழ்வுகளிலும், தமிழின உணர்வு சார் விடயங்கள் இடம் பெறும் பிரதேசங்களிலும் தீக்குளிப்பது தவறு என்றும், யாராவது தீக்குளிக்க முயற்சி செய்வதாக அறிந்தால் அவர்களைத் தடுத்தி நிறுத்தி அறிவுரை வழங்கும் முயற்சிகளிலும் நீங்கள் பெருமுனைப்புடன் ஈடுபட்டால் மகிழ்ச்சியாக இருக்கும் அல்லவா". அதிரடியாய் மேடைகள் தோறும் முழங்கி, மக்களின் அடி மனதில் உணர்ச்சிப் பெருக்கினை வர வழைக்கக் கூடிய பேச்சாளர்களே! தயவு செய்து செங்கொடியின் செயலையோ அல்லது முத்துக் குமாரனின் செயலையோ நியாயப்படுத்திப் பேச வேண்டாம்.
நேற்றைய தினமான 30.08.2011 அன்றும்; தமிழகத்தில் இருவர் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஏன் இந்த நிலமை? ஒட்டு மொத்த தமிழகத்தின் உணர்வெழுச்சிக்கும் பயனாகத் தானே தற்பொழுது ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோருக்கான தண்டனைகள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையிலும் இவ் வகையான தீக்குளிப்பு முயற்சி தேவைதானா உறவுகளே?
தீக்குளிப்பு முயற்சி என்பது செங்கொடியின் முடிவோடு முடிந்ததாக இருக்கட்டும். இனிமேல் யாரும் இம் முறையினைக் கையிலெடுக்காதிருப்பது தான் தமிழனாக வாழும் நாம் எம் உணர்வுகள் மூலம் உரிமையினைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளுவதற்கான சாத்வீகப் போராட்டத்திற்கேற்ற சரியான வழியாக அமைந்து கொள்ளும்.
அனுமதியின்றி நிரூபன் வலையிலிருந்து காப்பி செய்யப்படுகிறது.
இரக்கமற்றவர்களின் இதய அறைகள் எமக்காகத் திறந்து கொள்ளும் என்றா தீக்குளிக்கின்றீர்கள்? இறப்பது தமிழன் என்ற உணர்வோடு மௌனமாய் இருப்பது தானே மத்திய அரசின் வேலை!!
******************************************************************************
பிற்சேர்க்கை: அகசியம் வலைப் பதிவின் சொந்தக்காரர் சகோதரன்
கானா வரோதயன் அவர்கள் என்னைப் பேட்டி எனும் பெயரில் நேர்காணல் செய்து தன் வலைப் பதிவில் மானபங்கப்படுத்தியிருக்கிறார். சாரி ஒரு ப்ளோவில சொல்லிட்டேன். என்னை, நேர்காணல் செய்து அவர் வலையில் பதிவிட்டிருக்கிறார். ஆர்வமுள்ளோர் இந்த இணைப்பினூடாகச் சென்று பார்க்கலாம்.
http://shayan2613.blogspot.com/2011/08/blog-post_30.html
|
59 Comments:
வணக்கம் சார்! கும்புடுறேனுங்க!
தமிழகமே இனி ஒரு போதும் தீக்குளிக்க வேண்டாம்!!///
அவசியமான வேண்டுகோள் சார்!
ஈழத் தமிழர்கள் மீது தமிழக மக்கள் கொண்டிருக்கும் அன்பிற்கு ஈடு இணையாக என்ன கைம்மாறு செய்தாலும் எதுவும் முழுமையான மன நிறைவினைத் தரப் போவதில்லை.///
வேணாம் சார்! நாம எல்லோரும் தமிழர்கள்! அண்ணன் தம்பிக்குள்ள எதுக்குகுங்க நன்றி, கைமாறு இதெல்லாம்?
வார்த்தைகளால் விபரிக்க முடியாத அளவற்ற அன்பினையும், ஈழ மக்கள் மீதான உணர்வினையும் தமிழக மக்க்கள் கட்சி பேதமின்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது, தமிழகத்தில் ஒவ்வோர் தடவையும் எழுகின்ற ஈழம் சார் போராட்டங்கள், தமிழின உணர்வு சார் நிகழ்வுகள் எமக்கு செய்திகளாகச் சொல்லிச் செல்கின்றன.///
அது தமிழன் அப்டீங்கற அடிப்படையில், நம்ம எல்லோருடைய கடமை அல்லவா/
"உறவுகளே, கொலையினை நிறுத்த இன்னோர் கொலை எப்படிச் சாத்தியமாகும்? ///
ரொம்ப கரெக்டுங்க!
அவர்கள் எல்லாம் மக்களை வைத்துத் தம் சுய இலாபத்திற்காகவா பிழைப்பு நடத்துகின்றார்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது.///
சார்! எனக்கும் அவிங்கள நெனைச்சா கோபம் வருது!
மூன்று உயிர்களைக் காக்க ஒரு உயிரினை இழப்பது சரியாகுமா? இழக்கப்படுவதும், தீயில் வேகுவதும் தமிழன் உயிர் என்பதனை நாம் உணராதவர்களாய்த் தான் மேடைகளில் அதிரடியாய் முழங்கி வருகின்றோமா?///
அதானே! நல்லாக் கேட்டீங்க சார்!
தீக்குளிப்பு முயற்சி என்பது செங்கொடியின் முடிவோடு முடிந்ததாக இருக்கட்டும். ///
சத்தியமான வரிகள்!
உண்மைதான் தற்கொலை எதற்குமே தீர்வல்ல
@ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Ckr
வணக்கம் சார்! கும்புடுறேனுங்க!//
வணக்கம் மணி சார்,
தமிழ் மணம் இணைச்சிட்டேனுங்க.
உயிர் இழப்பு என்பது எதற்க்கு தீர்வாகாது...
பொருமையுடன் போராடுவோம்...
காலை வணக்கம் நிரூ!
இன்றைய சூழலுக்கு மிகவும் அவசியமான பதிவு்.ஒரு உயிரைக் காக்க, இன்னொரு உயிரைப் பறிப்பது, தவறு! ஆனாலும் அந்த வீர சகோதரிக்கு தலை வணங்க வேண்டும்! இதுவே இறுதியாகவும் இருக்கட்டும்!
செங்கொடி போன்றவர்களின் உயிரிழப்பை, அந்த மூன்று பேர்கூட விரும்ப மாட்டார்கள் என்பது எனது எண்ணமாகும்.
தீக்குளிப்பு என்பது தவறான போராட்டம் என்பதையும், அது கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும் என்பதையும் கடிந்துரைக்கும் பல பதிவுகளை நாம் அனைவரும் எழுத வேண்டும்!
/////நேற்றைய தினமான 30.08.2011 அன்றும்; தமிழகத்தில் இருவர் தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஏன் இந்த நிலமை? /////
தயவு செய்து யாரும் இந்த தப்பான முடிவு எடுக்க வேண்டாம் உறவுகளே. அனைவரும் இதற்கெதிராய் குரல் கொடுங்கள்.
உலக்திலேயே வேதனை அதிகமாக கொடுக்கும் தற்கொலை தீக்குளிப்புத் தான் காரணம் ஒவ்வnhரு நரம்பு முளையாக (nerves bulb) வதைபடும். தயவு செய்து வேண்டாமுங்க.
ம் ...
நல் உணர்வாளர்களே ...தங்கள் போல் உணர்வுகள் கொண்டவர்கள் நாட்டில் மிகவும் குறைந்து வருகிறது... நீங்களும் தற்கொலை செய்துகொண்டால் எதிரிகள் சந்தோசமல்லவா படுவார்கள்....தயவுசெய்து இனிமேலாவது சகோதர, சகோதரிகள் தற்கொலை போராட்டத்தினை அறவே தவிர்ப்பீர்.... மனம் வேதனைக்குள்ளாகிறது... உணர்வுகள் மூலம் மக்கள் சக்தியை ஒன்று திரட்டி போராடுவோம் சகோதர , சகோதரிகளே.... நமது சகோதரன் முத்துகுமாருக்கும். சகோதரி செங்கொடிக்கும் கண்ணீருடன் வணக்கி ..இனியும் இது போன்ற முடிவுகள் வேண்டாம் என முடிவு எடுப்போம்... பகிர்வுக்கு நன்றி நண்பரே
///"உறவுகளே, கொலையினை நிறுத்த இன்னோர் கொலை எப்படிச் சாத்தியமாகும்? /// அது தானே இப்படியான செயல்களால் சம்மந்தப்பட்டவர் குடும்பங்களுக்கும் உறவுகளுக்கும் ஏற்ப்படும் மன கஸ்ரங்களையும், இழப்புக்களையும் எண்ணி பார்க்க வேண்டும்.
////ஈழத்திற்காய் தமிழகத்தில் முதன் முதலில் தீக்குளித்த உணர்வாளரின் பெயரானது மறைந்து விட// அப்துல் ரவூப் என்ற சகோதரன். ஈழ மக்கள் இவர் பெயரை மறந்தாலும் தமிழகத்தில் நினைவு நாட்கள் கொண்டாடப்பட்டுக்கொண்டே உள்ளது
உணர்ந்து கொள்ளுங்கள் உணர்வாளர்களே ...(
போதும் போது
தீக்குளிப்பு
தாங்காது எம்மனம்
சகோதரியே
உன்னோடு நிற்கட்டும்.
வீர மங்கைக்கு என் உள்ளம் கனிந்த வணக்கங்கள்
ஒரு கொள்கைக்காக உயிரைக்கொடுப்பதைவிட அதற்காக இறுதிவரை போராடுவதே சிறந்தது.
தமிழகத்து சகோதர சகோதரிகளே இப்படி முட்டாள்தன மான செயல்களில் இனி தயவு செய்து ஈடுபடவேண்டாம்.அமைதியான முறையில் உங்கள் செயற்பாடுகளை முன்னெடுங்கள்.என்னால் உங்களின் இந்த முட்டாள்தனமான செயலை செய்பவர்களை தியாகம் என்றோ உங்களுக்கு வீரவணக்கம் என்றோ சொல்ல முடியாது.அப்படி பலர் சொல்கின்றபோது அது இன்னும் ஒருவர் இதேகாரியத்தை செய்யத்தூண்டும் என்பதால் யாரும் இதை அப்படி சொல்லவேண்டாம் என்பது என் கருத்து.
எனவே அன்பான என் தமிழகத்து சகோதர சகோதரிகளே மீண்டும் உங்களிடம் மன்றாடிக்கேட்கின்றேன் இப்படியான செயல்களை தயவு செய்து நிறுத்துங்கள்.
தங்கள் கருத்து முற்றிலும் சரியானது ....தியாகச்சுடருக்கு அஞ்சலி ...
அவசியமான பதிவு நண்பர்கள் சேர்த்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை உண்டு மரணங்களுக்கு முற்றுப்புள்ளியாக செங்கொடி இருக்கட்டும்!
சகோதரர்கள் அனைவர் மீதும் சாந்தி நிலவட்டுமாக.
தற்கொலை போராட்டத்தை நான் ஒவ்வொரு முறையும் எதிர்த்துள்ளேன்.
எந்த காரணத்துக்காகவும் யார் செய்தாலும் எதிர்த்துள்ளேன்.
இப்படி தன்னைத்தானே மாய்த்துக்கொண்டு போராடுவது போராட்டம் அல்ல.
எதிரியால் கொல்லப்படாத அது வீரமரனமும் அல்ல. அது கோழைகளின் செயல்..!
வெற்றியை அனுபவிக்க உயிர் அவசியம். தோல்வியிலிருந்து தப்பிக்க எண்ணுவதே தற்கொலை..!
உலகமே...!
இனி ஒரு போதும் தற்கொலை போராட்டம் வேண்டவே வேண்டாம்!
இதை போராட்டம் என்போரிடம் ஒன்றை கேட்கிறேன் நான்..!
இதே செங்கொடியின் தீக்குளிப்பு போராட்டத்தை...
பேரறிவாளன்
சாந்தன்
முருகன்
---இவர்கள் செய்திருந்தால் போராட்டம் என அதை ஏற்றுக்கொள்வீர்களா..?
முத்துக்குமரன் செய்த அந்த செயலை வேலுப்பிள்ளை பிரபாகரன் செய்திருந்தால் அதை போராட்டம் என ஏற்றுக்கொண்டு இருந்திருப்பீர்களா..?
தயவு செய்து இதுபோன்ற மடத்தனமான தற்கொலைகளை
இனி எப்போதும் நாம் ஆதரிக்கக்கூடாது சகோ..!
உணர்வுப்பூர்வமான சமயத்தில் அறிவுப்பூர்வமான இடுகை அளித்தமைக்கு மிக்க நன்றி சகோ.நிரூபன்.
இரக்கமற்றவர்களின் இதய அறைகள் எமக்காகத் திறந்து கொள்ளும் என்றா தீக்குளிக்கின்றீர்கள்? இறப்பது தமிழன் என்ற உணர்வோடு மௌனமாய் இருப்பது தானே மத்திய அரசின் வேலை!!/////ஆட்சியாளர்களுக்கு தீக்குளிப்பது,தற்கொலை செய்து கொள்வதெல்லாம் வெறும் காட்சிகளே!இல்லையெனில் கோரிக்கைக்கு தலை,சாய்க்காது உண்ணா நோன்பிருந்த திலீபனை கண்முன்னே இறக்க அனுமதித்த காந்தி தேசம் தானே?உறவுகள் ஒவ்வொருவரும்,தலைவர்கள் எனப்படுவோரும் உணர்ச்சியூட்டும் சொற் பிரயோகங்களை விடுத்து,மக்களை நல்வழிப்படுத்தும் பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டிய தருணம் இது!
என்னை பொறுத்த வரை தற்கொலை செய்து கொள்வது எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது.. எதிர்த்து போராடுவது மட்டுமே சாதிப்பதற்கு வழி வகுக்கும். எனினும் தீக்குளித்த சகோதரிக்கு என் வணக்கம்,.
சரியான நேரத்தில் இதை பதிப்பித்து அனைவர் உணர்வுகளை தூண்டிய நிரூவிற்கு என் நன்றி !
பொன்னாடை போர்த்திக் கெளரவித்தவர்,"போர்க் குற்றவாளி" என்று இப்போது குற்றம் சாற்றுகிறார்! அவரே,ராஜீவ் கொலையில் சம்பந்தப்படாது,சம்பந்தப்படுத்தப்பட்டவர்களை தூக்கில் ஏற்ற வேண்டும் என்கிறார்!எங்கு போய் முட்ட????????
மீண்டும் சகோதரி செங்கொடிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்!என்னால் இப்படியொன்றை செய்ய முடியாது சகோதரி!இருப்பினும் இதனால் ஆட்சிக் கட்டிலில் இருப்போரின் மனக்கதவுகள் திறந்து விடாது,சகோதரி!இவ்வாறான தியாகத்தை நானும் புரிய வேண்டும் என்று நினைப்போரும் தயவு செய்து உணர்ந்து கொள்ளுங்கள்!மூவர் உயிர் காப்பதே இப்போது வேண்டியது அல்லாது பதிலுக்கு வேறும் உயிர்கள் இழக்கப்படுவதல்ல,உறவுகளே!
முஹம்மத் ஆஷிக்_citizen of world~////நன்றி சகோதரரே!உங்களுக்கு ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்!
உண்மையில் சகோதரியின் தியாகம் வருத்தத்துக்குரியதே.. இவரே இப்படி செய்வவர்களின் கடைசி அத்தியாயமாக இருக்கட்டும்.
ஏனெனில் உயிர் இழப்பின் வழியை உணர்ந்தவர்கள் நாங்கள்
உயிர்களின் இழப்பை அதிகளவில் உணர்ந்தவர்கள் என்ற வகையில் தமிழக உறவுகளுக்கு சொல்லிக்கொள்வது எந்த காரணத்துக்காகவும் தற்கொலை போராட்டத்தை முன்னெடுக்காதீர்கள். உயிர்கள் பெருமதிப்பு மிக்கவை.
நிரூ காத்திரமான பதிவு.
தற்காலத்திற்கு ஏற்ற பதிவு நண்பரே மிக்க நன்றி..........
//ஈழத் தமிழர்கள் என்ற பெயரின் மூலம் தமிழக மக்களால் சிறப்பிக்கப்படும் விடுதலை வேண்டிய ஈழத்தில் வாழும் வட கிழக்கு மக்கள் மீது தாம் எத்தகைய அன்பினையும், ஆதரவினையும் கொண்டிருக்கிறோம் என்பதனை நாளாந்தம் தமிழகத்திலிருந்து ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் குரல்களுக்கு நடுவேயும், தமிழருக்கு நீதி இல்லையேல் உயிரினையும் கொடுப்போம் எனும் செயல்களின் மூலமும் உணர்த்தி வருகின்றார்கள்<<<
உண்மைதான் பாஸ், இவர்கள்தான் இவர்களால்தான் இன்னும் இந்தியாவை நாங்கள் நம்புகிறோம், சில கபட நாடகர்களின் நாட்டியங்களையும் துரோகிகளையும்
சகிப்பதன் காரணமே இந்த உன்னதமானவர்களுக்காகத்தான்.
இவர்கள் இருக்கும் வரை எங்களுக்கு சிறிதேனும் பாதுகாப்பு கிடைக்கும்
என்ற நம்பிக்கையே இப்போதும் இருக்கு...
//இரக்கமற்றவர்களின் இதய அறைகள் எமக்காகத் திறந்து கொள்ளும் என்றா தீக்குளிக்கின்றீர்கள்? இறப்பது தமிழன் என்ற உணர்வோடு மௌனமாய் இருப்பது தானே மத்திய அரசின் வேலை!!//
நெத்தியடி பாஸ்,
நிரூ, நானே எழுத நினைத்த விஷயம்..வழக்கம்போல் காத்திரமாக எழுதியுள்ளீர்கள்.
ஆதங்கம் இயலாமை கருத்துக்கள்
என பல சொல்லி போகுது உங்கள் பதிவு......
இது எல்லோரயும் சென்று அடைய வேண்டும்
என்பதே என் ஆசை......
அவசியமான ஆழமான பதிவு
தமிழர்களிடம் இருக்கும் கெட்டபழக்கம் சுரணையற்ற தன்மை. அதைக் கொஞ்சம் தட்டி எழுப்பினால் அதீத உணர்ச்சிவ்சப்படல்.
நடுநிலையாக நிற்பது என்பதே நம் மக்களுக்குத் தெரியவில்லை. இத்தகைய போராட்டம் அனைத்து மக்களாலும் நடத்தப்படவில்லை. இன்னும் பலதரப்புகள் தூங்கிக்கொண்டே இருக்கின்றன. போராட்டத்தில் இறங்கொவோரின் முதல் கடமை அப்படித் தூங்கும்தரப்பையும் தன்னுடன் போராட வைப்பதே. அதைவிடுத்து போராட வந்தோரும் இறந்துவிட்டால், அது நம் வலுவைக் குறைக்கவே செய்யும்.
மேலும், இத்தகைய இழப்புகள் சாமானிய மகக்ளின் குறிப்பாக பெற்றோர் மனதில் பயத்தையே உண்டுபண்ணும். இன உணர்வு கொண்டு அழிவதைவிட, சினிமா பார்த்துக்கொண்டே மொன்னைத்தனமாக தன் பிள்ளை வாழட்டும் என்றே மகக்ள் எண்ணத் தொடங்கும் ஆபத்து இதில் உள்ளது.
இத்தகைய போராட்டங்களை முன்னின்று நடத்தும் தலைவர்கள் இதை மனதில் கொள்வது அவசியம்.
இந்த மாதிரி உயிர்துறப்போரை கொஞ்சம் மூர்க்கமாக புறக்கணிப்பதும், விள்ம்பரப்படுத்துவதைக் குறைப்பதும் நல்லது என்று நினைக்கின்றேன். அப்படி கொஞ்சம் கடினமாக நம்மைப் போன்ற படைப்பாளிகள் இருந்தால் மட்டுமே, இது வருங்காலத்தில் பிரயோஜனமில்லாத விஷயமாக உணரப்படும். அதைவிடுத்து தியாகி ஆக்கி, கவிதையாக வடித்துத் தள்ளினால், இது தொடரும்..சொல்லக் கஷ்டமாகவே உள்ளது. ஆனாலும் அது தான் உண்மை.
//"உங்களின் ஒவ்வோர் மேடைப் பேச்சுக்களிலும், பொது நிகழ்வுகளிலும், தமிழின உணர்வு சார் விடயங்கள் இடம் பெறும் பிரதேசங்களிலும் தீக்குளிப்பது தவறு என்றும், யாராவது தீக்குளிக்க முயற்சி செய்வதாக அறிந்தால் அவர்களைத் தடுத்தி நிறுத்தி அறிவுரை வழங்கும் முயற்சிகளிலும் நீங்கள் பெருமுனைப்புடன் ஈடுபட்டால் மகிழ்ச்சியாக இருக்கும் அல்லவா".//
ஆமாம் நிரூபன்,அவசியம் செய்யவேண்டியவை.
செங்கொடியின் மரணம் நிலைகுலைய வைத்த அதிர்ச்சி நிகழ்வு. உயிரோடு இருந்து சாதிக்க முடியாததை, இறந்து சாதிக்க முடியும் என்று எண்ணுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதோ என்று யோசிக்க வைக்கிறது. வருத்தத்துடன், குழப்பமும் மனதை ஆட்கொள்ளுகிறது.
உணர்ச்சி பொங்க போராடுங்கள்.......
உயிரை மாய்க்க வேண்டாம்....
//
இரக்கமற்றவர்களின் இதய அறைகள் எமக்காகத் திறந்து கொள்ளும் என்றா தீக்குளிக்கின்றீர்கள்? இறப்பது தமிழன் என்ற உணர்வோடு மௌனமாய் இருப்பது தானே மத்திய அரசின் வேலை!!
//
கண்டிப்பா
செங்கோவி said...
மேலும், இத்தகைய இழப்புகள் சாமானிய மகக்ளின் குறிப்பாக பெற்றோர் மனதில் பயத்தையே உண்டுபண்ணும். இன உணர்வு கொண்டு அழிவதைவிட, சினிமா பார்த்துக்கொண்டே மொன்னைத்தனமாக தன் பிள்ளை வாழட்டும் என்றே மகக்ள் எண்ணத் தொடங்கும் ஆபத்து இதில் உள்ளது.
இத்தகைய போராட்டங்களை முன்னின்று நடத்தும் தலைவர்கள் இதை மனதில் கொள்வது அவசியம்.
உண்மைதான் இதன் மூலம் போராட்டம் திசை மாறும் அபாயம் இருக்கிறது.. நாங்கள் போராடுவது உயிர்களை காப்பாற்ற இப்படி உயிர்களை மாய்துக் கொள்வதற்காக அல்ல இதை உணர்சிகளை தூண்டும் அரசியல்வாதிகள் உணர வேண்டும்..
எதுக்குத்தான் கண்ட கண்டதுக்கெல்லாம் நம்மாளுங்க தீக்குளிக்கிறாங்கன்னே தெரியலை. உதாரணத்துக்கு கருணாநிதி அரசியலை விட்டு விலகுவதாக சும்மா ஒரு டுபாக்கூர் அறிக்கை விடுவார், அதைப் பார்த்து விட்டு கட்சித் தொண்டன்[?] எவனாச்சும் தீக்குளிப்பான், இது மாதிரி பலமுறை அக்கட்சிக்காரர்கள் பல்வேறு காரணங்களுக்காக தீக்குளித்திருக்கிரார்கள். அவர்களுக்காக கருணாநிதி ஒரு பைசா செலவு செய்திருக்க மாட்டார். ஆனால், நூற்றுக் கணக்கான கோடிகளை அவர் மூலமாக சம்பாதித்த அவரது பிள்ளைகள், பேரன்கள் எவனாச்சும் என்னைக்காட்சும் தீக்குளிப்பானா? இதை ஏன் நம்மாளுங்க உணர மறுக்கிறார்கள் என்று புரியவில்லை. மற்ற விஷயங்களில் கூட இவர்கள் உயிரை மாய்த்துக் கொள்வது அந்தப் பிரச்சினையை தீர்க்க எவ்விதத்திலும் உதவாது என்று தெரிந்தும் தீக்குளிக்கிறார்கள். மூன்று பேரை தூக்கில் போட்டு கொல்லக் கூடாது என்று வலியுறுத்தும் பெண் தன்னைத் தானே கொன்றிருக்கிறாளே? சொல்ல வரும் கொள்கையை முதலில் தான் பின்பற்ற வேண்டாமா?
செங்கொடியின் தியாகம் உருப்படாத கட்சிக்கோ அல்லது கோடம்பாக்க கோமாளிகளுக்கோ இல்லை என்பது ஒன்று தான் மன நிம்மதி...
நல்லா எழுதியிருக்கீங்க நிரூபன்...தொடருங்கள் இதே வீரியத்தோடு...
//உறவுகளே, கொலையினை நிறுத்த இன்னோர் கொலை எப்படிச் சாத்தியமாகும்?/ /
பிரச்சினைக்கு தீர்வு தற்கொலை அல்ல..
கருத்தாழம் மிக்க பதிவு நண்பரே..
முதல் முறை வந்த என்னை முழுவதுமாய் வரவைத்து விட்டீர்கள் நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்
//தீக்குளிப்பு முயற்சி என்பது செங்கொடியின் முடிவோடு முடிந்ததாக இருக்கட்டும். இனிமேல் யாரும் இம் முறையினைக் கையிலெடுக்காதிருப்பது தான் தமிழனாக வாழும் நாம் எம் உணர்வுகள் மூலம் உரிமையினைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளுவதற்கான சாத்வீகப் போராட்டத்திற்கேற்ற சரியான வழியாக அமைந்து கொள்ளும்.//
உயிரிழப்பு எதற்கும் தீர்வாகாது என்பதே உண்மை.
உணர்வுத்தீயை நெஞ்சில் மட்டும் ஊற்றுவோம் !உடலில் அல்ல! தோழர்களே!
//கானா வரோதயன் அவர்கள் என்னைப் பேட்டி எனும் பெயரில் நேர்காணல் செய்து தன் வலைப் பதிவில் மானபங்கப்படுத்தியிருக்கிறார்//
என்னாது?????? நிரூபனை மானபங்கப்படுத்திட்டினமோ?:)))) எப்பூடி?:)))) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).
தற்கொலை என்பது ஒருபோதும் போராட்டமாகாது. சகோதரியின் இந்த முடிவு வருத்தமளிக்கிறது. மூன்று சகோதரர்களும் விடுதலையானாலும் அவர்களால் இந்த சகோதரியின் இழப்பை ஏற்றுக்கொள்ளமுடியுமா? மீண்டும் இது போன்ற செயல்கள் நடைப்பெறக் கூடாது என்பதே என் ஆவல். பகிர்வுக்கு நன்றி சகோ.!
இப்படிப்பட்ட உணர்ச்சி வசப்பட்ட முடிவுகள் முடிவுக்கு வர வேண்டும். அவர் வேண்டியது கிடைப்பின்தான் ஆன்மா சந்தியடையும்
த ம ஓட்டு -31
இன்றைய என் கவிதை
தங்கள் பதிவுக்கு பொருத்தமானதே சகோ!
சா இராமாநுசம்
>>இரக்கமற்றவர்களின் இதய அறைகள் எமக்காகத் திறந்து கொள்ளும் என்றா தீக்குளிக்கின்றீர்கள்? இறப்பது தமிழன் என்ற உணர்வோடு மௌனமாய் இருப்பது தானே மத்திய அரசின் வேலை!!
உண்மை
Post a Comment