பிரபாகரன் எனும் தனி மனிதனது உயிரை எடுப்பதற்காக, இலங்கை அரசாங்கமானது, ஆப்கானிஸ்தானில் இடம் பெற்ற ஒஸாமா பின்லேடனைத் தேடி அழிக்கும் நடவடிக்கையின் போது, அமெரிக்கப் படைகள் பயன்படுத்திய மலைகளையும் ஊடுருவிச் சென்று தாக்கக் கூடிய ஆயுத வகைகளையும் , விமானக் குண்டுகளையும் இலங்கைக்கு இறக்குமதி செய்து; எங்கெல்லாம் பிரபாகரன் வாழ்கிறார் எனத் தாம் சந்தேகிக்கின்றார்களே, அங்கெல்லாம் கண் மூடித் தனமாகப் பொழிந்து தள்ளினார்கள்.நாற்று நிரூபன்
நாற்று நிரூபன்
பிரபாகரனுடைய உயிரின் மதிப்பிற்கு உதாரணமாக, 1996ம் ஆண்டு கொழும்பில் அமைந்துள்ள மத்தியவங்கி மீதான மனித வெடி குண்டுத் தாக்குதலின் எதிரொலியாக, பிரபாகரன் கைது செய்யப்படின் 200 ஆண்டு கால சிறைத் தண்டனை வழங்கப்படும் என அரச தரப்பினரால் அறிவிக்கப்பட்டமையினைக் குறிப்பிடலாம். தலை குனிந்து, கை கட்டி அடிமைகளாக காலம் முழுவதும் வாழ வேண்டும் இவர்கள் எனத் தமிழர்களைப் பார்த்துச் சொன்னவர்களுக்கு அச்சமூட்டும் ஒரு மனிதனாகவும், பலம் பொருந்திய விடுதலைக் கட்டமைப்பினைக் கொண்ட போராட்ட அமைப்பின் ஸ்தாபராகவும் இந்தப் பிரபாகரன் விளங்கியிருக்கிறார்.நாற்று நிரூபன்
நாற்று நிரூபன்
ஒரு இனத்தினது விடுதலை அமைப்பாகத் தன்னுடைய புலிகள் அமைப்பினை வளர்த்த பிரபாகரன் செய்த மிகப் பெரும் தவறு, மக்கள் முன் தோன்றாது பதுங்குழிக்குள் வாழ்ந்தமையே ஆகும். பிரபாகரனின் உயிருக்கு எப்போதும் ஆபத்து நிகழலாம் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம். ஆனால், மக்களுக்கான கட்டமைப்பாக, தமிழ் மக்களுக்கு வேண்டிய விடுதலை அமைப்பாகத் தன்னுடைய புலிகள் அமைப்பினை உருவாக்கிய பிரபாகரன் செய்த மிகப் பெரிய தவறான மக்களோடு ஒன்றித்து வாழுதலைப் பிரபாகரன் கடைப்பிடிக்கத் தவறி விட்டார். இதனால் 2002ம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து மெது மெதுவாகத் தனக்கிருந்த மக்கள் ஆதரவினை இழக்கத் தொடங்கினார்.
மக்களுக்கான போராட்ட அமைப்பின் ஸ்தாபகராக இருந்தாலும், மக்களோடு அந்நியோன்னியமாகத் தொடர்புகளைப் பேணினால் தான் அவரது விடுதலை அமைப்பின் மீது மக்களுக்குத் தானகவே ஆர்வத்துடன் கூடிய ஈடுபாடு வந்து கொள்ளும். பிரபாகரன் மக்களிடமிருந்து தனித்தே வாழ விரும்பினார். இதற்குச் சான்றாகப் பல சம்பவங்களைக் கூறலாம். மக்களினைச் சந்திக்கச் செல்லுகையில் தனது உயிருக்கு ஆபத்து நிகழும் என்று கருதினால்,
‘தன்னுடைய புலி வீரர்கள் மூலமாகத் தனது பாதுகாப்பினைப் பலப் படுத்தித் தீவிர கண்காணிப்பினை மேற்கொண்டிருக்கலாம். ஆனால் இவற்றினையெல்லாம் செய்யாது எப்போதும் மக்களிடமிருந்து ஒதுங்கி வாழ வேண்டும் எனும் நினைப்பில் அவர் வாழ்ந்தது அவர் செய்த மிகப் பெரிய தவறாகும்.நாற்று நிரூபன்
நாற்று நிரூபன்
1987ம் ஆண்டு இடம் பெற்ற சுதுமலைப் பிரகடனத்தில் பொதுமக்கள் முன்னிலையில் பிரபாகரன் ஆற்றிய உரைக்குப் பின்னர் அவர் மக்கள் முன் தோன்றியதாக வரலாறு ஏதும் இற்றை வரை எழுதப்படவில்லை. (பத்திரிகையாளர் சந்திப்புக்களைத் தவிர்த்து) தனக்கு நெருங்கிய தளபதிகளின் உறவினர்களின் நிகழ்வுகளில் கலந்து கொண்டிருக்கிறார். இது மக்கள் மத்தியில், புலிகள் அமைப்பின் மீதான ஈடுபாட்டினைக் குறைப்பதற்கு ஏதுவாக அமைந்த ஓர் சந்தர்ப்பமாகும். ஒரு மன்னன், தன் மக்களினைச் சந்திக்கின்ற போது தான் அம் மக்களுக்கும் மன்னவன் மீது அன்பிருந்தால்....அவ் அன்பானது அதிகரிக்கும். ஆனால் இங்கே பிரபாகரனைப் பின்பற்றி வீரகாவியம் ஆன 48,000 இற்கும் மேற்பட்ட மானமாவீரர்களிற்கு முன்னேயும் பிரபாகரன் தோன்றவில்லை.
நாற்று நிரூபன்
பிரபாகரனைப் பின்பற்றிய புலிகளில் குறிப்பிட்ட ஒரு தொகையினருக்கே அவரினைப் பார்க்கின்ற சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இவ்வாறான காரணிகள் தான் பிரபாகரன் மீதிருந்த நம்பிக்கையினை மெது மெதுவாக மக்கள் இழக்கத் தொடங்கினார்கள். ஈழத்திற்காகப் பல போராட்ட அமைப்புக்கள் போராடப் புறப்பட்ட போதிலும், இறுதி வரை பெரும்பான்மையான தமிழ் மக்களின் ஆதரவினைப் பெற்று நின்று நிலைத்து வீழ்ந்த பெருமை புலிகள் அமைப்பிற்கு உண்டு. ஆனால் அப் பெரும்பான்மையான மக்கள் மனங்களிலிருந்து, இறுதி நேரத்தில் புலிகள் நடந்து கொண்ட விபரீதமான செயற்பாடுகளால் தூக்கியெறியப்பட்டார்கள்.
புலிகள் தமிழ் ஈழத்தைப் பெற்றுத் தருவார்கள் என்று போராடினார்கள்- ஆதலால் அவர்களை நம்பினோம் என்று யாரும் குதர்க்க வாதம் புரியலாம். ஆனால், மன்னார் உயிலங்குளம் இராணுவத்திடம் 2008ம் ஆண்டு வீழ்ச்சியடைந்த வேளையிலும், நாம் இறுதி வரை போராடி வெற்றி வாகை சூடுவோம் எனக் கூறி, மக்களை போர் இடம் பெறும் பகுதிகளிலிருந்து வெளியேற விடாது தம் வசம் வைத்திருந்து, இறுதி நேரத்தில் ‘வெளிநாட்டு அமைப்புக்களால் நாம் காப்பாற்றப்படுவோம் எனும் நம்பிக்கையினைக் கொடுத்து விட்டு, நட்டாற்றில் விட்டு விட்டுச் சென்ற இழி நிலையினைத் தமிழினம் தன்னிடத்தே வரலாறாக கொண்டுள்ளது.
நாற்று நிரூபன்
பிரபாகரன் தனக்கு நம்பிக்கையாகச் செயற்படுவார்கள் என புலத்திலிருந்த புலிகளின் அரசியல்- வெளிவிவகார அமைப்பினரை நம்பினார். வன்னியில் எஞ்சியிருந்த மக்களோ , பிரபாகரன் தமக்கோர் வழி காட்டுவார் என நம்பினார்கள். பிரபாகரனை, அவர் நம்பியிருந்த வெளிநாட்டு வெளிவிவகார அரசியற் புலிகள் ஏமாற்றினார்கள்.
பொது மக்களைப் பிரபாகரன் ஏமாற்றினார்.நாற்று நிரூபன்
எம்முள் அழியாத வடுவாக
இன்றும் அந்த
உப்பளக் காற்றில்
கலந்த உதிரத்தின்
நினைவலைகள்
அகலாதிருக்கின்றன!!
பிற் சேர்க்கை: இப் பதிவிற்கான கருவினைத் தந்துதவியர் சகோதரன் கே.எஸ்.எஸ்.ராஜ் அவர்கள்.
************************************************************************
மனதில் தில் இருப்பவர்கள் மட்டும் இதனைப் பார்க்க இங்கே கிளிக் பண்ணுங்கள்
’’எம் மனங்களில் தில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி கோகுல் எனும் புதிய பதிவரின் மனதில் வலைப் பூவினைத் தரிசிப்பது நம் கடமையல்லவா. தற்போது புதிதாக வந்திருக்கும் பதிவர். கவிதை, கட்டுரை, பொது அறிவுத் தகவல்கள் என்று அசத்திக் கொண்டிருக்கிறார்.
கோகுலை வரவேற்று, அவரது எழுத்தாற்றல் வளர்ச்சியடைய ஊக்கம் கொடுப்பது நமது கடமையல்லவா.
இதோ உங்களுக்காக கோகுலின் மனதில் வலைப் பூவின் முகவரியினை இங்கே தருகிறேன்.
|
171 Comments:
தலைப்பு ரொம்ப கார சாரமா இருக்குது...
வாசித்து விட்டு வாறன்...
அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சகோ!
உங்கள் ஆதரவு என்னை நானே மேலும் மேம்படுத்திக்கொள்ள ஊன்றுகோலாய் அமையுனம்.
அவருக்கும் மக்களுக்கும் இருந்த தொடர்பை நான் சரி என கருதுகிறேன்.....இது என்னுடைய கருத்து....
தலைப்பு மட்டுமல்ல,பதிவும் காரசாரம்.
பல கார சார விவாதங்கள் வருமென்று தோன்றுகிறது.
அப்போ "மாவீரர்" தினங்களிலெல்லாம் உரை நிகழ்த்தியது எவ்வாறு?நான் ஊரில் இல்லை,அதனால் எழுந்த கேள்வி!
எல்லோரது வாழ்க்கையுமே நம்பிக்கையில்தான் நிரூ.ஆதிகாலம் தொட்டே நம்பிக் கெட்டவன் தமிழன்.அதில் நமக்கு மட்டுமென்ன விதிவிலக்கு.இன்று அந்த நம்பிக்கைக் கயிறு அறுந்த பலமில்லாத் தமிழர்களாக இருக்கிறோமே.இனி எங்கு யாரில் அந்த நம்பிக்கையை வைப்பது ?
பிரபாகரனை, அவர் நம்பியிருந்த வெளிநாட்டு வெளிவிவகார அரசியற் புலிகள் ஏமாற்றினார்கள்.///இது தான் உண்மை!
பிரபாகரனைப் பின்பற்றிய புலிகளில் குறிப்பிட்ட ஒரு தொகையினருக்கே அவரினைப் பார்க்கின்ற சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இவ்வாறான காரணிகள் தான் பிரபாகரன் மீதிருந்த நம்பிக்கையினை மெது மெதுவாக மக்கள் இழக்கத் தொடங்கினார்கள்.////இதுவும் உண்மை தான்!
@Yoga.s.FR
அப்போ "மாவீரர்" தினங்களிலெல்லாம் உரை நிகழ்த்தியது எவ்வாறு?நான் ஊரில் இல்லை,அதனால் எழுந்த கேள்வி!//
ஐயா...மாவீரர் தினத்திற்கு முன்பதாகவே, விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட அறையில் அவரினைப் பேச வைத்து அதனை ஒலி, ஒளிப்பதிவு செய்து மாவீரர் தினமன்று வெளியிடும் வகையில் தயார் செய்திருப்பார்கள்.
அதற்காக எல்லாவற்றையும் பொய்யென்று சொல்லவில்லை!சில நெருடல்கள் இருக்கின்றன,அவ்வளவு தான்!
@Yoga.s.FR
அதற்காக எல்லாவற்றையும் பொய்யென்று சொல்லவில்லை!சில நெருடல்கள் இருக்கின்றன,அவ்வளவு தான்!//
இது விளங்கவில்லை ஐயா...
மேற்கொண்டு விவாதிக்க விரும்பவில்லை.குறை நினைக்க வேண்டாம்,நன்றி,வணக்கம்!
என்னத்தை சொல்ல என்னத்தை செய்ய ஹிஹி
அண்ணே அண்ணே எண்டு இருபது வருசமா பின்னாலே திரிஞ்சவர்களே முதுகில குத்துராங்கலாம்...........ஒருவேளை மக்களோடு மக்களாக வாழ்ந்திருந்தால் தொண்ணூறுகளுக்கு முன்னமே பிரபாகரன் என்ற உருவம் அழிஞ்சிருக்கலாம்.
அதுமட்டும் இல்ல இரண்டாயிரங்களுக்கு முன்னர் வரை ஒரு கொரில்லா அமைப்பாக இருந்த அவர்களை சுற்றி என் நேரமும் போர் மேகங்கள் சூழ்ந்தே இருந்தது. இதில் மக்களோடு மக்களாக அதன் தலைமை இருப்பது எந்தளவு சாத்தியம். அப்படி மக்களோடு மக்களாக இருந்தாலும் 'நம் சனநாயக அரசின் இராணுவம்' அந்த மக்கள் தலையில் கொண்டுவந்து குண்டுகளை கொட்டிவிட்டு, பிரபாகரன் மக்களுக்குள் ஒழிந்திருந்தார் அது தான் போட்டோம் என்பார்கள். வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா...))
எனக்கு அந்தாளை நினைத்தால் பரிதாபம் தான் வரும்...... இருந்தும் அவரை பற்றிய மதிப்பீடுகளை காலம் சரியாகவே செய்யும் என்று நினைக்கிறேன்.
எனக்கும் அவர் பற்றிய மாற்றுக்கருத்துக்கள் உண்டு.ஆனால் அதை சொல்வதற்கான தகுதி சத்தியமாக எனக்கு இல்லை.
உந்த வெளிநாட்டு புலிவாலுகளை விடுங்கோ ,அதுகளால் தான் இந்த நிலைமை.. அதுகள் தில்லுமுல்லு பற்றி சொல்வதற்கு எவ்வளவோ இருக்கு...
கோகுலுக்கு வாழ்த்துக்கள்....
///Yoga.s.FR said...
அப்போ "மாவீரர்" தினங்களிலெல்லாம் உரை நிகழ்த்தியது எவ்வாறு?நான் ஊரில் இல்லை,அதனால் எழுந்த கேள்வி!//// சுதுமலை சம்பவத்தில் பின் பெரிய அளவில் மக்கள் முன் தோன்றவில்லை.ஆனாலும் சில பொது விழாக்களில் தோன்றியதாக நினைவு.
எது எப்படியோ, கடைசி நேரத்தில் பாதுகாப்பு வளையத்துக்குள் வந்து மக்களை கேடயமாக பாவித்து இலங்கை இராணுவம் மீது தாக்குதல் நடத்தியமையே மிகப் பெரிய இனவழிப்புக்கு வழி வகுத்தது என்பதே என் கருந்த்து.
முள்ளிவாய்க்காலில் அவ்வளவு பெரிய மக்கள் தொகை எப்பாதுமே இருந்ததில்லை. எல்லோருமே புலிகளை நம்பி வந்து மாட்டிக் கொண்டோரே!!!
அது போக, புலிகலிடமிருந்து தப்பி வந்த மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தமை, மனித வெடி குண்டுகளை வெடிக்க செய்தமை, கட்டாய ஆள் சேர்ப்பு என கடைசி நேரத்தில் தம்மை காத்துக் கொள்ள அவர்கள் பண்ணிய அநியாயங்களே மக்களை அவர்களை வெறுக்க வைத்து விட்டது.
பிரபாகரனுக்கு பலவீனங்கள் பல இருக்கலாம்.உதாரணமாக உலக ஊடகவியளாலர்கள் கூட்டத்தில் சரளமாகப் பேச இயலாமை.முந்தைய பதிவில் விடுதலைப் புலிகளுக்குள்ளே உட்பூசல் என்ற நிலையிலும்,கருணா போன்ற்வர்களின் காட்டிக் கொடுப்புக்கு சாத்தியம்,இலங்கை,இந்திய உளவுத்துறைகளின் தேடல் என்ற நிலையில் பிரபாகரன் மக்கள் முன் தோன்றுவது இயலாத காரியமே.
முக்கியமாக தனது வயதான பெற்றோர்கள் உட்பட இறுதி வரை போர்க்களத்தில் இருந்தும்,ஈழ மக்களை நம்ப வைத்து ஏமாற்றினார் என்பது உங்களது தனிப்பட்ட கருத்தே என்று கருதுகிறேன்.
வெளிச்சத்துக்கு வராத நிறைய உண்மைகள் இன்னும் ஒளிந்து கொண்டிருக்கின்றன.
மாற்றுக்கருத்துக்கள் எதுவாயினும் இலங்கையில் இப்பொழுதும் நீங்கள் படும் துயரங்கள்,ஆயுதம் ஏந்தியதற்கான காரணங்கள்,இனப்படுகொலை,சிங்கள மயம்,இப்போது ஜனநாயக நீரோட்டத்தில் இன்னும் தொடரும் போராட்டங்கள் போன்றவை பிரபாகரனை வரலாறு சரியாகவே மதிப்பீடு செய்யும்.
ஒரு போராட்ட அமைப்பின் தலைவர் மக்கள் மத்தியில் கலந்து இருப்பது சாத்தியமற்ற ஒன்று..தீவிரவாத வழியை தேர்ந்தெடுத்த பின், மறைந்தே செயல்பட முடியும்..இது பிரபாகரனின் குறை அல்ல..போராட்ட முறையின் பொதுவான குறைபாடு.
மக்களை ஏமாற்றினாரா பிரபாகரன்? தன் குடும்பத்தையும் அதே மக்களுடன் தானே பலியிட்டார்? இல்லையா?...
பிரபாகரனும் அவரது குடும்பமும் மட்டும் தப்பியிருந்தால் மட்டுமே இந்த வாதம் செல்லுபடியாகும்..உண்மை தெரியாதவரை இது வெற்றுப் புலம்பலே!
வரலாற்று நாயகர்கள் எல்லோருமே குறைபாடு உள்ளவர்கள் தான்..குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி.........
////ஆனால், மன்னார் உயிலங்குளம் இராணுவத்திடம் 2008ம் ஆண்டு வீழ்ச்சியடைந்த வேளையிலும், நாம் இறுதி வரை போராடி வெற்றி வாகை சூடுவோம் எனக் கூறி, மக்களை போர் இடம் பெறும் பகுதிகளிலிருந்து வெளியேற விடாது தம் வசம் வைத்திருந்து, இறுதி நேரத்தில் ‘வெளிநாட்டு அமைப்புக்களால் நாம் காப்பாற்றப்படுவோம் எனும் நம்பிக்கையினைக் கொடுத்து விட்டு, நட்டாற்றில் விட்டு விட்டுச் சென்ற இழி நிலையினைத் தமிழினம் தன்னிடத்தே வரலாறாக கொண்டுள்ளது.///////
இதில் எனக்கும் உடன்பாடு உண்டு. கடைசி ஒருவருடத்தில் தொடர்ச்சியாக தோல்விகண்டு பின்வாங்கிச் சென்றநிலையில் அவர் சரியாக கணிக்கத்தவறிவிட்டார்.
மற்றபடி செங்கோவியின் கருத்துகளையே நானும் வழிமொழிகிறேன்!
Sengovi 100% CORRECT ...
He is unlucky since he born in Tamil race , if he born in any other race than tamilian , he will become god now.
வணக்கம் நிரூபன்! என்னாச்சு உனக்கு? ஏன் இப்ப, இதையெல்லாம் எழுதுகிறாய்? யாருக்காக? யார் யாரெல்லாம் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக?
எனக்குப் புரியவில்லை! நேற்றைய உனது பதிவுக்கும் எனது கண்டனங்கள்! விடுதலைப்புலிகளின் தோல்வியடைந்த ஒரு தாக்குதல் பற்றி, அல்லது அதில் வெளிவராமல் போன ஒரு சில மர்மங்கள் பற்றி சிலாகிக்க வேண்டிய தருணமா இது?
அதற்கான அவசியம்தான் என்ன?
# ஈழ மக்களை நம்ப வைத்து ஏமாற்றிய புலித் தலைவர் பிரபாகரன்!#
எந்த ஈழமக்களைப் பிரபாகரன் ஏமாற்றினார்? வன்னியில் வாழ்ந்த வெறும் 3 லட்சம் மக்களையா? அல்லது ஒட்டு மொத்தமாக இலங்கையில் வாழும் தமிழர்களையா?
இலங்கையில் வாழும் அத்தனை தமிழர்களுமா பிரபாகரனை ஆதரித்தார்கள்? அத்தனை பேருமா பிரபாகரனுடன் தோளோடு தோள் நின்றார்கள்?
மூன்று லட்சம் மக்களும், விடுதலைப்புலிகளும் உயிரை வெறுத்துப் போராடிக்கொண்டிருந்த போது, இலங்கையில் 35 லட்சம் தமிழர்கள் சும்மாதானே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்கள்?
இந்த 35 லட்சம் பேரும் எந்த முகத்தோடு சொல்ல முடியும் பிரபாகரன் எங்களை ஏமாற்றி விட்டார் என்று?
வேண்டுமானால் வன்னிமக்கள் சொல்லலாம்! அவர்களுக்கு அந்த உரிமை இருக்கிறது!
ஆனால் நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களுக்கு ( முன்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்துவிட்டு பல வழிகளில் தப்பியோடியவர்கள்! )பிரபாகரன் தம்மை ஏமாற்றியதாக கூற என்ன அருகதை இருக்கிறது?
பிரபாகரன் யாரையும் ஏமாற்றவில்லை! அவர் பலவருடங்களுக்கு முன்னர் சொன்னது போல, கடைசிப் போராளி இருக்கும் வரை போராடுவேன் என்றார்! அதன்படியே போராடினார்!
அவரது இந்த கொள்கைப் பற்றை, இலட்சிய உறுதியைப் பார்த்து, சிங்களவனே மூக்கில் விரலைவைக்கிறான்! எத்தனையோ தோல்விகளுக்குப் பிறகும், எத்தனையோ இழப்புக்களுக்குப் பிறகும் கொண்ட கொள்கையில் இருந்து சற்றும் விலகாது போராடிய ஒரு போர் வீரனை, இழித்துரைப்பது தகுமா?
என்ன பிரபாகரனையும், டக்ளஸ், கருணா மாதிரி சிங்களவனுக்கு ......... கழுவச் சொல்கிறீர்களா?
அதுசரி, பிரபாகரன் தான் மக்களை ஏமாற்றினார் என்று வைத்துக் கொள்வோம்! அப்ப கே பி, டக்ளஸ், கருணா போன்ற ஏனையவர்கள் என்ன மசிரையா புடுங்குகிறார்கள்?
மீளக் குடியேறிய மக்களுக்கு என்னத்தை செய்து கிழிக்கிறார்கள் என்பதை யாராவது விளக்கிக்கூற முடியுமா?
ஆனால், மன்னார் உயிலங்குளம் இராணுவத்திடம் 2008ம் ஆண்டு வீழ்ச்சியடைந்த வேளையிலும், நாம் இறுதி வரை போராடி வெற்றி வாகை சூடுவோம் எனக் கூறி, மக்களை போர் இடம் பெறும் பகுதிகளிலிருந்து வெளியேற விடாது தம் வசம் வைத்திருந்து, இறுதி நேரத்தில் ‘வெளிநாட்டு அமைப்புக்களால் நாம் காப்பாற்றப்படுவோம் எனும் நம்பிக்கையினைக் கொடுத்து விட்டு, நட்டாற்றில் விட்டு விட்டுச் சென்ற இழி நிலையினைத் தமிழினம் தன்னிடத்தே வரலாறாக கொண்டுள்ளது.&&&
அப்படியானால் பிரபாகரன் என்ன செய்திருக்க வேண்டும்? ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைந்திருக்க வேண்டுமா? அல்லது பெருமளவு போராளிகளையும் மக்களையும் ராணுவத்திடம் அனுப்பிவிட்டு, புலிகளின் முக்கிய தலைவர்கள், வெளிநாட்டுக்குத் தப்பி ஓடியிருக்க வேண்டுமா? ஒருவேளை அப்படி ஓடியிருந்தால், மக்கள் தங்களது எலும்பு இல்லாத நாக்கினால் என்ன கதைத்திருப்பார்கள் நிரூபன்?
இதெல்லாம் நமக்குத் தெரியாததா என்ன? நண்பர் செங்கோவிக்கு இருக்கிற தெளிவுகூட, உனக்கு இல்லாமல் போச்சே?
வணக்கம் மாப்பிள பிரபாகரன் தமிழ் மக்களை ஏமாற்றினாரா.. என்று வெளிநாடுகளிளும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலும் இல்லாத தமிழர்கள் சொன்னால் வேடிக்கைதான்.. அதிலும் வெளிநாட்டில் இருக்கும் நாங்கள் சொல்லக்கூடாது.. ஓட்டை வடையார் சொல்வதை நானும் வழிமொழிகிறேன்.. வடையாரே எங்க இவ்வளவு நாளாய் கானோம்.. காட்டானே பதிவுக்கு வந்துவிட்டான் இனி எங்களைப்பொல ஆட்களுக்கு எங்க மரியாதைன்னு நினைச்சிட்டீங்களா..!!?? நான் வேணும்னா ஒதுங்கியிருக்கவா...??
ராணுவம் கிழக்கு மாகாணத்தைக் கைப்பற்றியதன் பின்னர், புலிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்ற தேவை அதற்கு இல்லாமலே போய்விட்டது! வன்னி மீதான முற்றுகையினை ராணுவம் தொடங்கிய போது, அமைதிப் பேச்சு வார்த்தை, ஏ 9 பாதை திறப்பு பற்றியெல்லாம் பலதரப்பாலும் சிலாகிக்கப்பட்டது!
இதற்கு அரசின் பதில் && வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் தாளியை உடைப்பதா? & என்பதாக இருந்தது! அதாவது புலிகளுடன் பேச்சு வார்த்தை என்ற கதைக்கே இடமில்லை என்பதில் அரசு உறுதியாக இருந்தது!
போதாக்குறைக்கு வன்னியை முழுமையாகக் கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை அரசுபக்கம் பலமாக இருந்தது! இதற்கு பல நாடுகளும் பின்னணியில் இருந்தார்கள்!
இன்னிலையில் புலிகள் என்னதான் செய்வது? முன்பு வலுச்சமனிலையோடு கம்பீரமாக பேச்சுவார்த்தைக்குச் சென்ற புலிகள், கிழக்கு மாகாணத்தை இழந்த நிலையில் பேச்சு வார்த்தைக்குச் சென்றிருந்தால், அரசு என்னத்தை தூக்கிக் கொடுத்திருக்கும்?
புலிகளுக்கு வேறு சாத்தியமான தெரிவுகள் இருந்திருக்கவில்லை என்பதே உண்மையாகும்! அதனால் தான் எது நடந்தாலும் பரவாயில்லை, இறுதி வரை போராடுவது என்று அவர்கள் முடிவு செய்தார்கள்!
நிரூபன் ஒரு கேள்வி! - கிழக்கு மாகாணம் இழக்கப்பட்ட நிலையில், வன்னி மீதான முற்றுகையை ராணுவம் தொடங்கியிருந்த நிலையில், அல்லது மன்னார் மாவட்டம் இழக்கப்பட்டிருந்த நிலையில், புலிகள் தொடர்ந்து போராடியது தவறு என்றால், அவர்கள் என்னதான் செய்திருக்க வேண்டும்?
அந்தச் சந்தர்ப்பத்தில் புலிகள் மேற்கொண்டிருந்திருக்கக்கூடிய மிகச்சிறந்த ராஜதந்திர நடவடிக்கை எதுவாக இருந்திருக்கும்?
தயவு செய்து கூறு! அறிவதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறேன்!
நிரூ, மாற்றுக்கருத்துக்களை முன்வைப்பதால், எமது நட்புக்கு எவ்வித சேதங்களும் வந்துவிடக் கூடாது! மாற்றுக்கருத்துக்கள் சொல்பவர்களை நாம் ஒருபோதுமே எதிரிகளாக கருதக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்!
மேலும் சிவா என்பவர் ஆங்கிலத்தில் உளறியிருப்பதை தயவுசெய்து நீக்கிவிடு! அதில் சொல்லப்பட்டிருப்பவை மாற்றுக்கருத்துக்கள் அல்ல! - விஷமக் கருத்துக்கள்!
நண்பர் காட்டானுக்கு! - நான் இன்னும் பதிவுலகத்துக்குத் திரும்பவில்லைங்கண்ணா! செப்டம்பர் மாதம் முதல் வாரம் தான் வருவேன்! இப்போது இந்தப் பதிவைப் படித்து, பொறுத்துக்கொண்டு இருக்க முடியவில்லை! அதனால்தான் வந்தேன்!
அப்புறம் நீங்க எதுக்கு ஒதுங்கணும்? இருங்க எல்லோரும் சேர்ந்து கலக்குவோம்! வக்கொன்ஸ் முடியட்டும்!
மாப்ள பகிர்வுக்கு நன்றி
முதலில் உங்கள் இந்தப்பதிவுக்கு நன்றி பாஸ்.என் மனதில் நீண்டநாட்களாக இருந்த விடயம் இது.அவர் மக்கள் முன் தோன்றாதது அவரது மிகப்பெரிய பிழை என்று.ஆனால் இதை பதிவாக எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன் ஆனால் சில பல பிரச்சனைகள்.பல எதிர்க்கருத்துக்கள் வரும் என்பதால் நான் எழுதவில்லை.இந்த சந்தர்ப்பத்தில்தான் பதிவர் நண்பர் வேடந்தாங்கல் கருன்,எழுதிய ஈழப்போராட்டத்தின் முக்கிய இரண்டு உரைகள் என்னும் பதிவில்.சுதுமலைப்பிரகடனம் பற்றி எழுதியிருந்தார்.அந்தப்பதிவுக்கு நான் பிரபாகரன்_யாருக்காக போராடினாரோ அந்த மக்கள் முன் தோன்றாதது அவர் செய்த தவறு என்று கருத்துரையை தெரிவித்து இருந்தேன்.அது உங்களை இந்தப்பதிவு எழுத கருவாக இருந்தமைக்கு நான் மகிழ்ச்சிஅடைகின்றேன்.
இன்னும் ஒரு விடயம்.
நண்பர் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது போல
//மூன்று லட்சம் மக்களும், விடுதலைப்புலிகளும் உயிரை வெறுத்துப் போராடிக்கொண்டிருந்த போது, இலங்கையில் 35 லட்சம் தமிழர்கள் சும்மாதானே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்கள்?
இந்த 35 லட்சம் பேரும் எந்த முகத்தோடு சொல்ல முடியும் பிரபாகரன் எங்களை ஏமாற்றி விட்டார் என்று?
வேண்டுமானால் வன்னிமக்கள் சொல்லலாம்! அவர்களுக்கு அந்த உரிமை இருக்கிறது! ///
பிரபாகரனை.போற்றுவதற்கு யாருக்கு வேண்டும்என்றாலும் உரிமை இருக்கலாம்.ஆனால் அவர் ஏமாற்றி விட்டார் என்று அவரை குறை சொல்லும் உரிமை வன்னியில் அவருடன் வாழ்ந்த மக்களுக்கு மட்டும்தான்.அவர்களைத்தவிர ஏனைய மக்களுக்கு அந்த உரிமை மட்டும் இல்லை அதை பற்றி பேசத்தகுதியே இல்லை.
இந்த பிரபா போராடி என்னத்தை கிழித்தான்? இருந்ததையும் கெடுத்தது தான் மிச்சம்...
இந்தியாவோடு சேர்ந்து அப்பப்போ சிங்களவனுக்கு ஆப்படிசிருக்கலாம்..ஆனால் இந்த நாதரியால்
சிங்களவன் இந்தியாவுக்கும் வாய்க்குள் வச்சு ,, தமிழருக்கும் பெரிய ஆப்பா சொருகியது தான் மிச்சம்..
சிங்களவன் யாழ்ப்பாணத்திலும் சிங்களம் பரப்ப 300 வருடம் ஆவது செல்லும் என்று திட்டம் போட்டிருப்பான்..
ஆனா இந்த நாதாரியாலே அவனுக்கு 30 வருசத்திலேயே எல்லாம் முடிஞ்சுது..
நிரூபா. பிரபாகரன் விஷயத்தில் நீங்கள் சொல்வது 60% தான் சரி.. மக்களோடு மக்களாக இருக்க அவர் காந்தியோ அன்ன ஹசாரவோ அல்ல.. அவரளவில் அவர் செய்தது சரி என்றே படுகிறது
naan school lil iruppathaal template comment mattume.. sory..
@சி.பி.செந்தில்குமார்
'. பிரபாகரன் விஷயத்தில் நீங்கள் சொல்வது 60% தான் சரி.. மக்களோடு மக்களாக இருக்க அவர் காந்தியோ அன்ன ஹசாரவோ அல்ல.. அவரளவில் அவர் செய்தது சரி என்றே படுகிறது'
இது எப்படி சரியாகும் சகோதரரே? ஒரு தலைவன் எனில் ’ராஜ தந்திரம்’ தெரிந்திருக்க வேண்டும்.
அது தெரியாத பட்சத்தில் அவன் தலைவனாயிருக்க தகுதில்லாதவனாகி விடுகிறான்.அவரளவில் சரியென்று பட்டதை செய்வதற்கு ஒரு தலைவன் தேவையில்லை.இவ்வளவு பேரும் அழிந்து போனதற்கு தலைமை சரியில்லை என்பது கண்கூடு.’இந்த பிரபா போராடி என்னத்தை கிழித்தான்? இருந்ததையும் கெடுத்தது தான் மிச்சம்...
இந்தியாவோடு சேர்ந்து அப்பப்போ சிங்களவனுக்கு ஆப்படிசிருக்கலாம்..ஆனால் இந்த நாதரியால்
சிங்களவன் இந்தியாவுக்கும் வாய்க்குள் வச்சு ,, தமிழருக்கும் பெரிய ஆப்பா சொருகியது தான் மிச்சம்..
சிங்களவன் யாழ்ப்பாணத்திலும் சிங்களம் பரப்ப 300 வருடம் ஆவது செல்லும் என்று திட்டம் போட்டிருப்பான்..
ஆனா இந்த நாதாரியாலே அவனுக்கு 30 வருசத்திலேயே எல்லாம் முடிஞ்சுது.’ இதுதான் உண்மை.
தலைவர் பிரபாகரனைப்பற்றி சில தகவல்கள் நியாயமாக இருந்தாலும் சில தகவல்கள் மனதை அழ வைக்கிறது.
மக்கள் மத்தியில் தோன்ற அந்த காலகட்டம் சரியாக இல்லை..
ஆனால் வலுக்கட்டாயமான ஆட்பிடிப்பில் அந்த நடவடிக்கைக்கு விட்டவர்கள்
நடந்த விதம் பிழை..
அதனால் அதனைக்கவனிக்காது இருந்தாரா என்ற கேள்வி மக்கள் மனதில் இருந்ததென்பது உண்மை..
அவர் தனது உயிருக்கு பயப்பட்ட மனிதன் அல்ல.பதுங்குகுழியில் வாழ்ந்தவர் என்று மனம் கூசாமல் எழுதியிருக்கிறிங்கள்..
கடைசியாய் ஆனந்தபுர முற்றுகைக்குள் கடைசிவரையும் நின்றவர் தெரியுமா உங்களுக்கு? கடைசியாய் இராணூவம் இருந்த ஒருபாதையையும் மூடுவதற்கு முன் நொடிப்பொழுதில்தான் வெளியேறிவந்தவர்.வந்ததன் காரணமும் பிரிகேடியர் துர்கா,பிரிகேடியர் விதுசா இவர்களுடைய கடிதத்தினாலும்
ஏனைய முதுநிலை போராளிகளுடைய வேண்டுதலினாலும் தான் அவ்விடத்தை விட்டு மெய்பாதுகாவலர்களுடைய வற்புறுத்தலினாலும் வெளியேறினார் .இதன் காரணத்தால் வெளியேறியது 100% உண்மை..
அக்கடிதத்தில் எழுதப்பட்ட சில குறிப்பு அண்ணை எல்லோரையும் இந்த முற்றுகைக்குள் விட்டு நீங்களும் நிற்கிறீங்கள்..எங்களுக்கு ஏதும் இறுக்கமான சூழல் நிகழ்ந்தால் யார் கட்டளை தருவது..உங்களை நம்பித்தானே இத்தனை போராளிகளும் இதற்குள் நிற்கிறோம்.நீங்கள் வெளியில் நின்றால்த்தான் நாங்கள் திடமாக நிற்கமுடியும்.ஒரு தலைவனை இழக்க எந்த ஒரு விடுதலைப்பற்றுடையவரும் நினைக்க மாட்டார்கள்.அந்த முற்றுகைக்குள் நின்று.
அவருக்கு காயங்கள் ஏற்பட்டது தெரியுமா? சிலவற்றை ஆராய்ந்து எழுதவும்.நாமும் போரால் அங்கங்கள் பலவீனமாகப்பட்ட நிலையிலும்,உறவுகளை இழந்து இருந்தாலும் அந்த வலிகளை அவரை தூற்ற நினைக்கவில்லை. தவறுகள் நடந்ததுதான் .மக்களாகிய எங்களிலும் பிழைகள் இருக்கிறது.அதற்காக தனி ஒரு மனிதனை கண்டவற்றையும் சாடி
இழப்புக்களின் கோபத்தை தணிக்க கூடாது.
இது எனது கருத்து..
மன்னிக்கவும்..
@param
// இந்தியாவோடு சேர்ந்து அப்பப்போ சிங்களவனுக்கு ஆப்படிசிருக்கலாம்..
நல்ல நகைச்சுவை.
முழுமையாக தெரிந்தால் எழுதுங்கள் அரைகுறை.
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said.
ஈழ மக்களை நம்ப வைத்து ஏமாற்றிய புலித் தலைவர் பிரபாகரன்!#
எந்த ஈழமக்களைப் பிரபாகரன் ஏமாற்றினார்? வன்னியில் வாழ்ந்த வெறும் 3 லட்சம் மக்களையா? அல்லது ஒட்டு மொத்தமாக இலங்கையில் வாழும் தமிழர்களையா?
இலங்கையில் வாழும் அத்தனை தமிழர்களுமா பிரபாகரனை ஆதரித்தார்கள்? அத்தனை பேருமா பிரபாகரனுடன் தோளோடு தோள் நின்றார்கள்?
மூன்று லட்சம் மக்களும், விடுதலைப்புலிகளும் உயிரை வெறுத்துப் போராடிக்கொண்டிருந்த போது, இலங்கையில் 35 லட்சம் தமிழர்கள் சும்மாதானே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்கள்?
இந்த 35 லட்சம் பேரும் எந்த முகத்தோடு சொல்ல முடியும் பிரபாகரன் எங்களை ஏமாற்றி விட்டார் என்று?
வேண்டுமானால் வன்னிமக்கள் சொல்லலாம்! அவர்களுக்கு அந்த உரிமை இருக்கிறது!
ஆனால் நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களுக்கு ( முன்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்துவிட்டு பல வழிகளில் தப்பியோடியவர்கள்! )பிரபாகரன் தம்மை ஏமாற்றியதாக கூற என்ன அருகதை இருக்கிறது?/
!!இவர் சொன்னது அனைத்தும் உண்மை ..!!
எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை..
பிரபாகரன் தனது பிள்ளைகளை வெளிநாட்டிற்கா அனுப்பி வைத்தார்.இல்லையே..
அல்ல தனது பெற்றோரை அனுப்பி வைத்தாரா ..அவர்களுக்கு என்ன நடந்தது.?
நீதி தவறாமல் நடந்த மனிதனை இப்படியெல்லாம் தூற்றுவது தகுமா?
வெற்றிகளை குவிக்கும் போது கைதட்டுவதும்..
படுகுழியில் வீழும்போது எலும்பில்லாத நாக்கால் தூற்றுவதும் மனிதனது இயல்பாகிவிட்டதே,,
தமிழர் பிரச்சனைபற்றி உலகெங்கும் பேசும் காலத்தை கொண்டுவந்தவர் யார்?
37 வருடமாக தமிழர் உரிமைக்கான போராட்டத்தை நிகழ்த்தாமல் விட்டிருந்தால் இலங்கைத்தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கலந்தேயிருப்பார்கள்..எங்களுக்கென்ற வரலாற்றை தொடக்கி வைத்திருக்கிறார்..
தொடர்ச்சியாக பிரபாகரனையும் அவர் சார்ந்த விடுதலை இயக்கத்தையும் கொச்சைப்படுத்தியே எழுதி வருகிறீர்கள்...இருக்கட்டும் இதனால் அவர் புகழ் மங்கிவிடாது...முதன்முறையாக மைனஸ் ஓட்டு குத்தியிருக்கிறேன்..உங்கள் இந்த இடுகைக்கு...
மனதில் தில் இருப்பவர்கள் மட்டும் இதனைப் பார்க்க இங்கே கிளிக் பண்ணுங்கள்//
போய் பார்த்தேன்..இந்த் ப்ளாக்கில் பயப்படும்படி எதுவுமில்லை.எதற்கு இந்த விளம்பரம்..தவறான வழிகாட்டுதல்?
விடிவேள்ளியின் கருத்துக்களும் ஏற்க்க கூடியதாக உள்ளது.
வணக்கம்,ஓ.வ.நாராயணன் சார்!நல்லாயிருக்கீங்களா?நல்லாயிருக்கீங்கன்னு "எகிறுறது" பாத்தாலே தெரியுது!நிரூபனுக்கு மட்டுமல்ல,உலகு வாழ் தமிழர்களுக்கே தவறான தகவல்கள் இன்று வரை பரப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறது நிதர்சனம்!இதில் யாரை நோக?இப்போது வேண்டியது மருந்திடுவதேயன்றி கிண்டிக்,கிழறி ஆறாமல் செய்வதல்ல!இன்னும் ஓரிரு பத்தாண்டுகளுக்குப் பின் களத்திலிருந்தவர்களிடமிருந்து ஆற்றாமல் வெளி வரும் "உண்மை"!அதுவரை..........................................................................................பிளீஸ்!
என்ன சொல்வதென தெரியவில்லை.
ஒரு இயக்கமெடுத்துக்கொண்ட செயலின் முடிவில் வெற்றியா? தோல்வியா? என்பதை வைத்தே அந்த இயக்கத்தின் தலைவர் பராட்டப்படுவார் அல்லது கண்டிக்கப்படுவார்.
பிரபாகரன் தலைமையேற்று நடாத்திய போரட்டம் தோல்வியில் முடிந்துவிட்டது. எனவே வரலாறு அவரைக் கண்டிக்கத்தான் செய்யும். இன்றில்லாவிட்டாலும் நாளை.
ஏன் நாளை? இன்னும் அரை நூற்றாண்டில் இவ்வியக்கத்திலிருந்தோரும், அதன் போராட்டத்தைக்கண்டோரும் இறந்து விடுவார்கள். அடுத்தடுத்த தலைமுறைகள் வரும்.
அவர்கள் பிரபாகரனைப் போற்றாது - என்னதான் களத்தில் நேரடியாகப் போராடினார், தன்னலமில்லாதவர் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், தெரிந்தாலும் - கண்டிக்கவே செய்வார்கள். ஏன்?
தோல்விக்குத் தலைவனே காரணம் என்பது எந்தவொரு ஒரு போராட்டத்தின் அடிப்படை உண்மை.
பிரபாகரன் உடல்சக்தியை மட்டுமே நம்புவராகத்தான் தன்னியக்கத்தை நடாத்தினார். அரசியல் பேச்சுவார்த்தைகள் நடந்தாலும், அதில் எடுப்பு-கொடுப்பு என்று நடந்ததாகத் தெரியவில்லை.
ஒரு போராட்டம் தன் போராட்டமுறைகளைக் காலத்திற்கேற்ப மாற்றிக்கொண்டேயிருக்கவேண்டும். 80ம் 90ம் 2000ம் வெவ்வேறு முறைகளைக் கொண்டிருந்திருக்கவேண்டும். பிரபாகரன் தன் தலைமையைக்கூட மற்றொருவருக்கு விட்டுக்கொடுக்கும்படி அக்கால முறையில் ஒன்று சொல்லியிருக்கலாம்.
எதிரி வலிமை குறைந்திருக்கும் போது அவனை ஒரேயடியாகப் போட்டுக் கொன்றுவிடாமல், அத்தருணத்தைப் பயன்படுத்தி, அரசியல் முறைப்படி முடித்திருக்கவேண்டும் இந்தப்போராட்டத்தை.
வெளிநாடுகளில் ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் வெற்றி பெற்றன. எனவே இங்கேயும் சரி என்பது சிந்தனையென்பதே வேண்டாமென்னும் செயலாம். அன்னாடுகளும் நம்நாடும் ஒன்றா? ஒரே சமூக, பூமி, அரசியல்,வரலாறு காரணங்களைக் கொண்டனவா? என்ற கேள்விகளுக்கு விடைகளைத் தேடியிருக்கவேண்டும்.
தான் எதற்கும் இறங்கி வராதவன் என்ற பிம்பம் அனைவரையும் வெறுக்கச்செய்யும்.அது பிரபாகரனுக்கு பின்னாளில் நன்றாக ஒட்டிக்கொண்டது பிறரின் பார்வையில். ஒரு படித்தவன், அல்லது படித்தவனுக்குள்ள குணநலங்கள் உள்ளவன், பிறர் கருத்துக்களை முதலில் செவிகொடுத்து ஏற்று ஆராய்ந்து சரியென்றால் அவற்றைப்பெற்றுப் பயனடைபவன் என்ற லிபரல் அப்ரோச் பிம்பம் பிரபாகரனுக்கு இல்லை மாற்றார் பார்வையில்.
ஒரு போராட்டம் வெறும் ஆயதத்தால் தொடங்கலாம். முடியலாம்' ஆனால் சிலவேளைகளில் சிலவிடங்களில் மட்டுமே. மற்றபடி ஆயுதம் அறிவு இரண்டும் கலந்தாலே மட்டுமே வெற்றி பெரும்.
அறிவை பிரபாகரன் ஏற்றதாகவோ, பிறரிடத்திலிருந்தால் மதித்ததாகவோ தெரியவில்லை.
இதைப்போன்ற பல விசாரணைகளை எதிர்கால வரலாற்று, அரசியலாய்வாளர்கள் மேற்கொள்ளுவார்கள். அப்போது பிரபாகரன் சரியாகக் கணிக்கப்படுவார் என்று நான் நினைக்கிறேன்.
கடைசி வரை பிரபாகரன் போராடினார் என்பதை விட கடைசி வரை, வெளிநாட்டு உதவி வரும் வரை, மக்கள் இறந்தாலும் பரவாயில்லையென, தப்பித்துப் போகவும் தைரியமில்லாமல் இன்னொருத்தர் பின்னால் ஒளிந்து கொண்டிருந்தார். அது முடியாது என்ற நிலை வந்த போது, மரணம் வரை போராட்டம், சயனைட் குப்பி, தற்கொலை தாக்குதல் என்பவற்றை பற்றியெல்லாம் முன்பு போராளிகளுக்கு சொன்னவர், உயிர் பயத்தில் வெள்ளை கொடியுடன் ஓடி வந்தார்.
ஈழம் எனும் கற்பனை தேசத்துக்காக போராடிய போராளிகள் மீது சிறிது மரியாதை உண்டு. ஆனால், புலிகளின் தலைவர்கள் சிறிதும் மரியாதை இல்லை. காரணம் அவர்களது சுய நல போக்கு. சரியான தலைவனாக இருந்தால், மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் போய் எதற்கு ஒளிந்து கொண்டு தாக்குதல் நடத்த வேண்டும்? அப்படி நடத்தினால் திருப்பித் தாக்கப் படுவார்கள், மக்களுக்கு மிகப் பெரிய அழிவு வரும் என்பது சின்னக் குழந்தக்கும் புரியுமே!!!
///அது முடியாது என்ற நிலை வந்த போது, மரணம் வரை போராட்டம், சயனைட் குப்பி, தற்கொலை தாக்குதல் என்பவற்றை பற்றியெல்லாம் முன்பு போராளிகளுக்கு சொன்னவர், உயிர் பயத்தில் வெள்ளை கொடியுடன் ஓடி வந்தார்.
///பிராபாகரனும் வெள்ளை கொடியுடன் சரணடைந்ததை நேரில் கண்டுள்ளீர்கள் போல ...உங்களை தான் பாஸ் ஐநா வும் சனல் 4 லும் தேடுது
வடையண்ணா....வந்திட்டீங்க நல்ல சமயத்தில.கொஞ்ச நாளாவே நிரூவின் சில பதிவுகளுக்கு என்ன சொல்லவென்று தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறேன்.எங்கும் சரி பிழையில்லாமல் வாழ்வில்லை.
எத்தனை நாட்டுச் சரித்திரங்களைப் பார்க்கிறோம்.ஆனால் எம் விதி? அடிமைப்பட்ட வாழ்வே சந்தோஷமா !
///param said...
சிங்களவன் யாழ்ப்பாணத்திலும் சிங்களம் பரப்ப 300 வருடம் ஆவது செல்லும் என்று திட்டம் போட்டிருப்பான்..
ஆனா இந்த நாதாரியாலே அவனுக்கு 30 வருசத்திலேயே எல்லாம் முடிஞ்சுது.’ இதுதான் உண்மை.///
அப்ப பாருங்களன் ...பிரபாகரன் என்று ஒருவன் இல்லாவிடில் யாழில சிங்களம் பரப்ப முன்னூறு வருஷம் ஆகியிருக்கும். அதுவரை நானும் என் பிள்ளை குட்டிகளும் பேரப்பிள்ளைகள் காலம் வரை சந்தேசமாக இருந்திருக்கலாம் .அதன் பின் எக்கேடு நடந்தாலும் எனக்கென்னா!! ஆனால் இப்ப முப்பது வருசத்தில எல்லாம் முடிஞ்சதால எங்கட சுதந்திரம் பறி போச்சே என்று கவலை படுகிறிங்கள் ..அட உங்களை போல எல்லாம் பக்கா சுயநலவாதிகளாய் இருந்தால் நம்ம நாட்டில ஏனுங்க இந்த இனபிரச்சினை ..பிழைக்க தெரியாதவங்க நாங்க...
param said...
@சி.பி.செந்தில்குமார்
'. பிரபாகரன் விஷயத்தில் நீங்கள் சொல்வது 60% தான் சரி.. மக்களோடு மக்களாக இருக்க அவர் காந்தியோ அன்ன ஹசாரவோ அல்ல.. அவரளவில் அவர் செய்தது சரி என்றே படுகிறது'
இது எப்படி சரியாகும் சகோதரரே? ஒரு தலைவன் எனில் ’ராஜ தந்திரம்’ தெரிந்திருக்க வேண்டும்.
அது தெரியாத பட்சத்தில் அவன் தலைவனாயிருக்க தகுதில்லாதவனாகி விடுகிறான்.அவரளவில் சரியென்று பட்டதை செய்வதற்கு ஒரு தலைவன் தேவையில்லை.இவ்வளவு பேரும் அழிந்து போனதற்கு தலைமை சரியில்லை என்பது கண்கூடு.’இந்த பிரபா போராடி என்னத்தை கிழித்தான்? இருந்ததையும் கெடுத்தது தான் மிச்சம்...
இந்தியாவோடு சேர்ந்து அப்பப்போ சிங்களவனுக்கு ஆப்படிசிருக்கலாம்//// ஏனுங்கோ உங்களுக்கு வராதராஜா பெருமாளை தெரியுமா? அவரும் முப்பது வருசமா இந்திய மத்திய அரசின் வாலை தான் கெட்டியாய் பிடிச்சு கொண்டு இருக்கார். அவரால் என்னத்தை புடுங்க முடிஞ்சது? உங்களை பொறுத்த வரை ராஜதந்திரம் என்பது இன்னொருவனுக்கு வால் பிடிப்பது தானா !!
இத மத்திய அரசு தான் புளெட் என்ற இயக்கத்தை மாலை தீவில் கலக்கம் செய்ய பயிற்சி கொடுத்து அனுப்பினார்களாம்.. அதற்க்கு பிரதி உபகாரமாய் ஆயுதம் தருகிறோம் என்ற ஒப்பந்தம்- இது கூட உங்க பார்வையில் ராஜ தந்திரமா?
////Kss.Rajh said...
அந்தப்பதிவுக்கு நான் பிரபாகரன்_யாருக்காக போராடினாரோ அந்த மக்கள் முன் தோன்றாதது அவர் செய்த தவறு என்று கருத்துரையை தெரிவித்து இருந்தேன்./// பிரபாகரன் மக்கள் முன் தோன்றி என்னத்தை சாதித்திருக்க முடியும் என்று கருதுகிறீர்கள்??? ஒண்டுமே புரியல்லீங்க !!!
////மூன்று லட்சம் மக்களும், விடுதலைப்புலிகளும் உயிரை வெறுத்துப் போராடிக்கொண்டிருந்த போது, இலங்கையில் 35 லட்சம் தமிழர்கள் சும்மாதானே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்கள்? //// முக்கியமா இரண்டாயிரத்து ஆறுகளில் கிழக்கில் மனித பேரவலமே நிகழ்ந்து கொண்டு இருக்கும் போது யாழில் இருந்த நாம் என்ன செய்தோம் .. அதை பற்றி கவலை பட்டவர்கள் தான் எத்தனை பேர்.
ஒருவன் இரண்டு பேர் இந்த இன அழிப்புக்கு எதிராக குரல் கொடுத்தால் தான் ஆயுத குழுக்களின் அச்சுறுத்தல் பயம், ஆனால் ஒட்டு மொத்தமாய் கொடுத்திருந்தால்.. இல்லை வீதியில் இறங்கி நம் எதிர்ப்பை வெளிகாட்டி இருந்தால் !!! செய்தோமா???
ஆனால் அந்த நேரங்களில் கோவில் திருவிழாக்கள்,சாமத்தியவீடுகள் கல்யாணம் காட்சிகள் என்று களியாட்டம் நடத்த ஒரு போதும் பின்னிற்க்கவில்லை. கொண்டாடினோம்... இப்படிஎல்லாம் அநேக தருணங்களில் படு சுயநலவாதிகளாய் இருந்து விட்டு இப்பமட்டும் பிரபாகாரன் எமாத்திவிட்டார் என்று சொல்வதில் என்ன நியாயம்!!!
ஒருவேளை இப்படியான களியாட்டங்களில் பிரபாகரனும் தங்களுடன் கலந்து கொள்ளவில்லையே என்று ஆதங்க படுகிறார்களோ என்னமோ !!
இங்கு கருத்து சுதந்திரம் என்னும் பேரில் பின்னூட்டமிடும் சிலர் மலசல கூடத்தில் பாலியல் படம் வரைபவனின் மனோநிலையில் இருந்துதான் எழுதுகிரார்கள்.... உதாரணம்..Mohamed Faaique இன் கருத்து மாப்பிள நல்ல டொக்குத்தர பாத்திட்டு வாங்கோயா... இல்லாட்டி காட்டானின் கை வைத்தியம் ஒணடு இருக்கையா... 2தேசிக்காய வெட்டி சாறு புழிஞ்சு 3வேலை தோயுங்கோயா.. காட்டானுக்கு தழிழ்ல உங்களுக்கு விளங்கப்படுத்த முடியுமோ தெரியாதையா... ஆராவது இப்பிடியான ஆளுக்கு மண்ணையில உறைக்கிற மாதிரி ஒரு பின்னூட்டம் போடுங்கோ ராசா...
கந்தசாமி அண்ணே!....கிழக்கில் மானிடப் பேரவலம் நிகழ்ந்தது புலிகளாலல்ல என்பது என் கருத்து.ஏனெனில் புலிகள் பின் வாங்கியிருந்தார்களே?மாவிலாறில் புலிகள் அணையை மூடினார்கள் என்று இலங்கை அரசு குற்றம் சாட்டி போருக்கு வித்திட்டது.உண்மையில் நோர்வேயின் வேண்டுதலின் பேரில் புலிகள் அணையை திறந்து விட்டார்கள்!நோர்வேயின் வேண்டுதலின் பேரில் காவலரணை இன்னமும் பின்னோக்கி நகர்த்தினார்கள்!போரை?!இனவாத அரசே தொடர்ந்தது!அப்போதே,புலிகளால் இலங்கை இராணுவத்தை விரட்டியடித்திருக்க முடியுமாக இருந்தது!சமாதான?!த் தூதுவன் நோர்வே தான் எல்லாவற்றையும் தான் பார்த்துக் கொள்(ல்)வதாக வாக்குறுதியளித்தது.நம்பிக்கை தானே வாழ்க்கை?பின்னர் நிகழ்ந்தவை நிரூபன் சொல்லுவார்!
பத்தோடு பதினொன்று (Mohamed Faaique)காட்டான்!இதுகளுக்கு(உயர் திணையில் சேர்த்துக் கொள்ள முடியாது.)எப்படிச் சொன்னாலும் புரியப் போவதில்லை,நேரத்தை வீணடிப்பானேன்????
////Yoga.s.FR said...
கந்தசாமி அண்ணே!....கிழக்கில் மானிடப் பேரவலம் நிகழ்ந்தது புலிகளாலல்ல என்பது என் கருத்து./// யுத்தத்தால் கிழக்கில் மனித பேரவலம் நிகழ்ந்த போது வெறும் பார்வையாளர்களாக மட்டுமே யாழில் நாம் இருந்தோம் என்று தான் சொல்ல வருகிறேன். மற்றும் படி யாரால் ஏற்ப்பட்டது என்பதை பற்றி அல்ல !!!
Mohamed Faaique.....ஈழம் எனும் கற்பனை தேசத்துக்காக போராடிய போராளிகள் மீது சிறிது மரியாதை உண்டு.////போராடியது கற்பனை தேசத்துக்கு என்று சொல்கிறீர்கள்!அப்புறம்,போராடியோர் மீது என்ன மரியாதை இருக்க முடியும்?முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது உங்கள் "அனைவருக்கும்" கை வந்த கலையோ????????????????(ஏதாவது புரிகிறதா?புரியவில்லை என்பீர்களே?)
இதில இன்னொன்று கவனிக்க வேண்டியது, தொன்னூற்று ஆறுகளில் யாழ் இடப்பெயர்வின் பொது புலிகள் ஆயுத முனையில் மக்களை தம்மோடு அழைத்து சென்றார்கள் என்று பரவலாக பரப்பப்பட்டது..யாழ் மக்களை இடம் பெயர சொன்னது புலிகள் தான். ஆனால் அதையும் மீறி அங்கெ இருந்தவர்கள் பலர். சிறுவனாக அந்த இடப்பெயர்வை நானும் சந்தித்திருதேன். அந்த இடப்பெயர்வின் போது எமக்கான இருப்பிடம் உட்பட எவ்வளவோ உதவிகளை புலிகள் தான் எமக்கு செய்து தந்தார்கள். இது பற்றி ஒரு பதிவும் இட்டனான்..
இந்த சம்பவத்தால் புலிகள் மீது யாழ் மக்கள் பெரும் கோபமாக உள்ளார்கள் என்று அரசும் அதை சுற்றியுள்ள குழுக்களும் நம்பி இருந்த வேளை இரண்டாயிரத்து இரண்டுகளில் போர் நிறுத்தம் ஆரம்பித்து புலிகள் யாழுக்குள் கால் வைக்கும் போது மக்கள் கொடுத்த ஆதரவை கண்டு அவர்கள் மட்டுமல்ல நான் கூட மலைத்து நின்றிருக்கிறேன்..... இப்ப தான் புரிகிறது அது புலிகளுக்கு கொடுத்த வரவேற்ப்பு இல்லை அவர்களின் அன்றைய வெற்றிக்கு கொடுத்த வரவேற்பாய் தான் இருக்கும் என்று...வென்றால் போற்றுவதும் தோற்றால் தூற்றுவதும் எங்கள் பண்புகளில் ஒன்றாய் ஊறிவிட்டது !!!
Mohamed Faaique...சரியான தலைவனாக இருந்தால், மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் போய் எதற்கு ஒளிந்து கொண்டு தாக்குதல் நடத்த வேண்டும்? அப்படி நடத்தினால் திருப்பித் தாக்கப் படுவார்கள், மக்களுக்கு மிகப் பெரிய அழிவு வரும் என்பது சின்னக் குழந்தக்கும் புரியுமே!!!////அடடா!இப்படியொரு ஆலோகசர் இருப்பது தெரியாமல்,கண்டவர்,நின்றவர்களையெல்லாம் ஆலோசகராக வைத்திருந்த "தலைவருக்கு"இதுவும் வேண்டும்,இன்னமும் வேண்டும்!பன்னாடை!(பன்னாடை யாரென்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன்)
@கந்தசாமி.
//கந்தசாமி. said...
அந்தப்பதிவுக்கு நான் பிரபாகரன்_யாருக்காக போராடினாரோ அந்த மக்கள் முன் தோன்றாதது அவர் செய்த தவறு என்று கருத்துரையை தெரிவித்து இருந்தேன்./// பிரபாகரன் மக்கள் முன் தோன்றி என்னத்தை சாதித்திருக்க முடியும் என்று கருதுகிறீர்கள்??? ஒண்டுமே புரியல்லீங்க !!
நண்பரே பிரபாகரன் நல்லவரோ கெட்டவரோ அதற்கு அப்பால் வன்னியில் வாழ்ந்த மக்கள் அவர்மீது ஒரு காலகட்டத்தில் எவ்வளவு நம்பிக்கை வைத்து இருந்தார்கள் ஆனால் படிப்படியாக அவர் மீது இருந்த நம்பிக்கை குறைந்தது அல்லவா அதுவும் 2006 ம் ஆண்டுக்குப்பிறகு வன்னி மக்கள் அவர் மீது கொண்ட நம்பிக்கை முற்றாக குறைந்தது எனலாம்.இதுவெல்லாம் நான் உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை.அதாவது வன்னி மக்கள் அவர் மீது நம்பிக்கை இழந்து கொண்டிருந்த மக்களுக்கு நேரில் தோன்றி விளக்கி இருக்கலாம்.அப்போது அவர் மீது அந்த மக்கள் இழந்து கொண்டிருந்த நம்பிக்கையை ஒரளவு சரி செய்து இருக்கமுடியும்.சரி நேரில் தோன்றுவது பிரச்சனை என்றால்.அவர் தனது வன்னி மக்களுக்கு புலிகளின் தொலைக்காட்சியிலோ இல்லை அவர்களின் வானொலியிலோ ஒரு உரையாவது ஆற்றி இருக்கலாம். அதைக்கு கூட அவர் செய்யவில்லையே.இது அவர் செய்ததவறுகளில் ஒன்று.
////நண்பரே பிரபாகரன் நல்லவரோ கெட்டவரோ அதற்கு அப்பால் வன்னியில் வாழ்ந்த மக்கள் அவர்மீது ஒரு காலகட்டத்தில் எவ்வளவு நம்பிக்கை வைத்து இருந்தார்கள் ஆனால் படிப்படியாக அவர் மீது இருந்த நம்பிக்கை குறைந்தது அல்லவா அதுவும் 2006 ம் ஆண்டுக்குப்பிறகு வன்னி மக்கள் அவர் மீது கொண்ட நம்பிக்கை முற்றாக குறைந்தது எனலாம்.//// கடுமையான யுத்தம் ஒரு நடந்துகொண்டு இருக்கும் போது மக்கள் முன் தோன்றி தன்னை அக்மார் குத்திய நல்லவன் என்று நிருபிக்க வேண்டிய அவசியம் தான் என்ன? ஒருவன் மீது நம்பிக்கை வைப்பதும் வைக்காததும் அவரவர் விருப்பம். நம்பிக்கை வைப்பதும் இழப்பதும் காலா காலமாக நிகழ்ந்து வருவம் ஒன்று தான். ஒரு வேளை அவர் மக்கள் முன் தோன்றி இருந்தால் அதால் என்ன பயன் என்பது தான் கேள்வி???
புலிகள் மீது தவறுகள் உள்ளது தான் .ஆனால் பிரபாகரன் மக்கள் முன் தோன்றாததை மிக பெரிய தவறாக தூக்கி பிடிப்பது சின்ன பிள்ளை தனமாக தான் இருக்கு.
நான் மேலே சொன்ன கருத்திற்கு பலர் சொல்லாம் ஏன் ஒவ்வொறு வருடமும் உரை ஆற்றினார்தானே என்று.அது அவர் மாவீரர் நாள் உரை.தனது மக்களுக்கு தன் மீது நம்பிக்கை இழந்து கொண்டிருந்த காலப்பகுதியில் தனது நிலையை விளக்கி அவர் வன்னி மக்களுக்கு ஒரு உரை ஆற்றி இருக்கலாம்.ஏன் வன்னி மக்கள் என்று குறிப்பிட்டேன் என்றால்.கடைசிவரை அவருடன் இருந்து கஸ்டப்பட்டவர்கள் அவர்கள்தானே.
@நிகழ்வுகள்
நண்பா அது மிகப்பெரிய தவறு இல்லை என்றாலும்.புலிகளின் தோல்விக்கு அதுவும் ஒரு காரணம் என்பது என் கருத்து.
//செங்கோவி said..
ஒரு போராட்ட அமைப்பின் தலைவர் மக்கள் மத்தியில் கலந்து இருப்பது சாத்தியமற்ற ஒன்று..தீவிரவாத வழியை தேர்ந்தெடுத்த பின், மறைந்தே செயல்பட முடியும்..இது பிரபாகரனின் குறை அல்ல..போராட்ட முறையின் பொதுவான குறைபாடு//
முற்றிலும் உண்மை!
மேலும் இது பற்றி குறை கூற எனக்கு எந்த உரிமையும் இல்லை!
தங்கள் மூலமாகத்தான் பல புதிய தகவல்கள் தெரிய வருகிறது !
வெல்கம் பேக் ரஜீவன் !
தேன் கூட்டில் கை வைத்திருக்கிறீர்கள்.
எல்லோருக்கும் வராது இத்துணிச்சல். அவர் ஏமாந்தாரா,ஏமாற்றினாரா எனபதை விட அவர் ஈழத்தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார் என்பதே முக்கியமானது!
நண்பர்களே! தலைவர் மக்கள் மத்தியில் தோன்றி உரையாற்றவில்லை என்பது ஒரு பிரச்சனையே அல்ல! வன்னி மக்கள் அது பற்றி ஒருபோதுமே கவலைப்பட்டதுமில்லை! ஏனென்றால் தலைவரின் கருத்துக்களை, சிந்தனைகளை நாள் தோறும் புலிகளின் குரல் வானொலியும் தமிழீழ தேசியத் தொலைக்காட்சியும் ஈழநாதம் பத்திரிகையும் சொல்லியே வந்தன!
தவிரவும் புலிகளின் பேச்சாற்றல் மிக்க தளபதிகள் நாள் தோறும் மக்கள் மத்தியில் உரையாற்றி வந்தனர்! அவர்கள் தலைவர் பிரபாகரனின் குரலாகவே ஒலித்தனர்!
மக்கள் மத்தியில் தோன்றி, அவர்களுக்கு ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுப்பதற்கு தலைவர் ஒன்றும் சினிமா நடிகர் அல்லவே! உண்மையில் தலைவரை உண்மையாக நேசித்த ஒவ்வொரு தமிழனும், அவரைப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டதைவிட, அவர் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றே நினைத்திருப்பான்!
மேலும் விடுதலைப்புலிகள் பாரிய தவறொன்று இழைத்து விட்டதாகவும், அது இன்றுவரை வெளிவராமல் மர்மமாக இருப்பதாகவும் சிலர் படம் காட்டுகிறார்கள்! அது ஒன்றும் பெரிய மர்மம் அல்ல! அதாவது 2006.08.20 க்குப் பின்னர் விடுதலைப்புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பை மேற்கொண்டார்கள்! மேலும் வன்னிமக்களை யுத்தம் நடந்த இடத்தில் இருந்து வெளியேற விடாமல் தடுத்தார்கள்! இவைதான் அந்த மர்மங்கள்!
இவற்றைத்தான் வெளியே சொல்லிவிடுவோம் என்று சிலர் படம் போடுகிறார்கள்! உண்மையில் இவை ஒன்றும் பெரிய மர்மங்கள் அல்ல! கட்டாய ஆட்சேர்ப்பு என்பது உலகில் ஒன்றும் புதிது அல்ல! அமெரிக்கா முதற்கொண்டு போரில் ஈடுபட்ட ஐரோப்பிய நாடுகள் அனைத்துமே ஒரு கால கட்டத்தில் கட்டாய ஆட்சேர்ப்பை மேற்கொண்டார்கள்தான்!
நான் வசிக்குப் ஃபிரான்ஸ் கூட 2 ம் உலக யுத்த காலப்பகுதியில் இளைஞர்களை கட்டாயமாகப் பிடித்து, அவர்களுக்கு வெறும் 10 மணிநேரப் பறப்பு பயிற்சியினைக் கொடுத்துவிட்டு, யுத்த விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்த அனுப்பினார்கள்! ஹிட்லரின் படைகளின் தாக்குதலில் பெருமளவு பிரெஞ்சு விமானங்கள் அழிக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது!
ஆகவே யுத்தம் நடக்கும் போது, ஒரு நெருக்கடி வரும் போது, கட்டாய ஆட்சேர்ப்பு என்பது தவிர்க்க இயலாமல் இருந்தது! இதனை உலகில் உள்ள போரியல் நிபுணர்களே ஏற்றுக்கொள்கிறார்கள்!
யார் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றால் போருக்குப் பயந்து, பட்டாசு வெடிச்சத்தம் கேட்டாலே பயந்து உச்சா போகிற கோழைகள்தான் இதுபற்றிக் கதைத்துக்கொண்டு இருப்பார்கள்!
உண்மையில் கட்டாய ஆட்சேர்ப்பின் போது, வன்னிமக்களுக்கும் புலிகளுக்கும் இடையில் ஒரு சில முரண்பாடு வந்தது உண்மை! ஆனால் அது ஒன்றும் சிலர் சொல்வது போல, வன்னிமக்கள் புலிகளை அடியோடு வெறுக்கும் அளவுக்குப் பாரிய கோபமாக இருந்திருக்கவில்லை!
இன்றும் வன்னிமக்கள் புலிகளை அடிமனதில் ஆதரிக்கவே செய்வார்கள்! என்ன பேய்களின் ஆட்சியில் எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்ல முடியாது! பிடித்ததை பிடிக்கவில்லை என்றும், பிடிக்காததை பிடித்துள்ளது என்றும் சொல்லும் நிலையில்தான் மக்கள் இருக்கிறார்கள்!
மேலும் மே 18 க்குப் பின்னர் புலிகள் மீது கடுப்பில் இருந்த பலர், தங்கள் கருத்துக்களை மாற்றிக் கொண்டார்கள்! புலிகளை அடியோடு வெறுத்தவர்கள்கூட, ச்சே அவர்களுக்கு இப்படி ஆகிவிட்டதே என்று வருந்தினார்கள்!
நிலைமை இப்படி இருக்க இந்த நேரத்தில் போய், பிரபாகரன் அது செய்யவில்லை இது செய்யவில்லை என்று விமர்சிப்பது எவ்வகையிலும் பொருத்தமற்றது! தேர்தலில் தமிழ்த் தேசிய சக்திகளுக்கு மக்கள் வாக்குகள் போடுகிறார்கள் என்றால், அங்கே அவர்களது மனதில் பிரபாகரன் இருக்கிறார் என்றுதானே அர்த்தம்!
மேலும் கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில், ஒட்டுமொத்த தமிழர்களுமே திரண்டு சரத் ஃபொன்சேகவுக்கு வாக்குப் போட்டது எதற்காக? மஹிந்தவைத் துரத்த வேண்டும் என்பதற்காகத்தானே!
புலிகளின் பிடிக்குள் இருந்து எம்மை மீட்டெடுத்த இரட்சகர் என்று மஹிந்தவை தமிழ்மக்கள் கருதியிருந்தால், எல்லா வாக்குகளும் மஹிந்தவுக்கு அல்லவா போய்ச் சேர்ந்திருக்கவேண்டும்? ஆனால் நடந்தது என்ன?
உண்மை என்னவென்றால், புலிகள் மீது சின்னச் சின்னக் கோபம் இருந்தாலும், தமிழர்கள் இன்னமும் புலிகளை மறக்கவோ, வெறுக்கவோ இல்லை என்பதே உண்மையாகும்!
இனிமேல் யாராவது திடீரென்று முளைத்து, புலிகள் கடைசிக்காலத்தில் அப்படி செய்தார்கள் இப்படி செய்தார்கள் என்று எப்படி விதம் விதமாக எழுதினாலும், அவை எதுவுமே எடுபடப்போவதில்லை! புலிகள் மீதான அபிமானமும் குறையப் போவதில்லை!
முப்பது வருடப் போராட்டத்தில் புலிகள் மேற்கொண்ட சாதனைகள், அர்ப்பணிப்புக்கள் இவற்றோடு ஒப்பிடும்போது, அவர்கள் செய்த தவறுகள் வெறும் தூசியளவே இருக்கும்!
இப்போது நிலவுவது வெறும் மயக்ககாலம் மட்டுமே!
இப்போது எல்லாமே சொல்ல எளிதுதான்!!....
இந்த நிரூபன் ராஜபக்க்ஷேவின் வப்பாட்டி மகனாக இருப்பான்.
சிங்களவனுக்குப் பிறந்தவன் சிங்களக் குரலில் கூவுகின்றான்.
உங்களைப்போன்ற அறைகுறைகளால் தான் இன்னமும் தமிழ் இனத்திற்கு விடிவு கிடைக்கவில்லை!
கருத்துகளை,கருத்தால் மட்டும் எதிர் கொள்ளுங்கள்,ராவணன்.தேவையற்ற அவதூறு கூறும் வார்த்தைப் பிரயோகங்கள் வேண்டாமே?(நீக்கி விடுங்கள்,நிரூபன்.இல்லாவிடில் அனுதாபம் தேடும் செயல் என்று கூறிவிடுவார்கள்,முதுகெலும்பற்றவர்கள்.)
karthickeyan said...
உங்களைப்போன்ற அரைகுறைகளால் தான் இன்னமும் தமிழ் இனத்திற்கு விடிவு கிடைக்கவில்லை!///யாரைச் சொல்கிறீர்கள்,கார்த்திக்கேயன்?ஒட்டு மொத்த தமிழ் இனத்தையுமா?அல்லது,நிரூபனையா?என்னையா?ஓ.வ.நா.வையா?புரியவில்லையே??????
ராவணனுக்கு ராவணன் புத்திதான் அண்ணண் சொன்னது போல் கருத்தை கருத்தால் எதிர் கொள்ளலாமே...!!?? எனக்கும் இந்த பதிவில் சில கருத்துக்களில் உடன்பாடில்லை சில பதிவர்கள் தங்களை யார் என்று நிமிந்து பார்க்க வேண்டுமென்றே பின்னூட்டமிடுகிறார்கள்.. காட்டானைப்போல..
நிரூபன் said...
@Yoga.s.FR
அதற்காக எல்லாவற்றையும் பொய்யென்று சொல்லவில்லை!சில நெருடல்கள் இருக்கின்றன,அவ்வளவு தான்!//
இது விளங்கவில்லை ஐயா...///அது என்னுடனேயே இருந்து,என்னுடனேயே மடிந்து போகட்டும்!
காட்டான் said.....சில பதிவர்கள் தங்களை யார் என்று நிமிந்து பார்க்க வேண்டுமென்றே பின்னூட்டமிடுகிறார்கள்.. காட்டானைப்போல..///யோவ்,என்னய்யா "காட்டானை"ப் போல் என்று,உவமானம்,உவமேயம் பேசிக் கொண்டு?கொன்றே விடுவேன்!சில "அல்லக்கைகள்" பிதற்றுகின்றன தான்,அதற்காக,உங்களுடன் ஒப்பிட வேண்டுமாக்கும்?
நீல சாயம் வெளுத்துப்போச்சி டூம் டூம் டூம்
புலி எதிர்ப்பு தெரிஞ்சிப்போச்சி டூம் டூம் டூம்
போலி வேடம் வெளுத்துப்போச்சி டூம் டூம் டூம்
போலி வேடம் தெரிஞ்சிப்போச்சி டூம் டூம் டூம்
கொண்ட கொள்கையில் இறுதி வரை பற்றுறுதியுடனே இருந்தார்,தலைவர்!புலம்பெயர் தமிழரிடம் போராட்டத்தை காலமறிந்து ஒப்படைத்தார்!காரணம் என்னவென்று தெரிதல் சுலபமானது!இன்று வரையில் பேசு பொருளாக எங்கள் தலைவரின் வழிகாட்டல் இருக்கிறது என்றால், அவரது தீர்க்கதரிசனம் எவ்வாறு என்பது புரிந்து கொள்ளப்படக் கூடியதே!மாறிவரும் உலக ஒழுங்கில் இந்த வழியில் சென்றாலே எங்கள் மக்களுக்கு விடிவு கிட்டும் என்ற தூர நோக்குப் பார்வை அவருடையது!இப்போது நடக்கும்,நடக்க இருக்கும் சம்பவங்கள் எல்லோருக்கும் சிறந்த பதிலையும்,விளக்கத்தையும் தருமாக
மிக சர்ச்சையான விஷயத்தை கையிலெடுத்து இருக்கிறீர்கள்,பல தகவல்கள் தெரிந்துகொண்டேன்.
ஜிஎஸ்ஆர் said...
இப்போது எல்லாமே சொல்ல எளிதுதான்!!....///இது அழகு!
என்னைப் பொருத்தவரை நிரூபன் இந்த பதிவிற்கு விளக்கமளித்தால் நல்லது என்று நினைக்கிறேன்... தனித்தனியாக இல்லாமல் எல்லா கருத்துக்களையும் உள்வாங்கி... நேரமிருந்தால் இதை அவர் செய்வார் என நம்புகிறேன்..
@ஆர்.கே.சதீஷ்குமார்
தொடர்ச்சியாக பிரபாகரனையும் அவர் சார்ந்த விடுதலை இயக்கத்தையும் கொச்சைப்படுத்தியே எழுதி வருகிறீர்கள்...இருக்கட்டும் இதனால் அவர் புகழ் மங்கிவிடாது...முதன்முறையாக மைனஸ் ஓட்டு குத்தியிருக்கிறேன்..உங்கள் இந்த இடுகைக்கு...//
அன்பிற்குரிய சகோ, இதுவரை நான் எழுதிய பதிவுகளில், ஈழத்தைப் பற்றி எழுதிய பதிவுகள், கட்டுரைகள் யாரைப் பற்றிப் பேசியிருக்கின்றன என்று நீங்கள் படிக்கவில்லையா?
அண்ணாச்சி,தொடர்ச்சியாக நான் கொச்சைப்படுத்தி வருகின்றேன் எனும் கருத்திற்கு நீங்கள் ஆதாரமாக இங்கே ஒரு சில இடுகைகளை முன் வைக்க முடியுமா?
நேரடியாகச் சொல்ல முடியாத பல விடயங்களையும் மறைமுகமாக நான் என் பதிவுகளில் சொல்லியிருக்கிறேன்.
ஏன்...ஈழத்தில் சாதியம் என்ற ஒன்றினைத் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து இல்லாதொழிப்பதற்கு முனைப்புடன் செயற்பட்டவர்களும் விடுதலைப் புலிகளே என்று கூறியிருக்கிறேன். இதுவரை நான் எழுதிய 130 பதிவுகளில், பெரும்பாலானவை ஈழத்தினைப் பற்றியது, இங்கே உள்ள வாழ்விழந்த போராளிகளைப் பற்றிய, ஈழ மண்ணைப் பற்றியது.
இவற்றையெல்லாம் தாங்கள் படிக்கவில்லையா?
தொடர்ச்சியாக என்று நீங்கள் கூறிய கருத்திற்கு ஆதாரமாக என் பதிவுகளைத் தாங்கள் சுட்ட வேண்டும், அதே வேளை நான் நடு நிலையோடு எழுதிய கட்டுரைகளில் விடுதலைப் புலிகள் பற்றிய சரியான பார்வையினை வெளிப்படுத்தியிருக்கிறேன்.
என் பதிவுகளைப் படித்தவர்கள், ஈழம் பற்றிய பதிவுகளைப் படித்த உறவுகள் கூட் இந்தக் கருத்திற்கு மாற்றுக் கருத்து முன் வைக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது.
உண்மையில் பின்னூட்டம் மூலம் என் பிறப்பினைப் பற்றி கேலி பண்ணி எழுதியது எனக்கு வலிக்கவில்லை, நகைச்சுவையாகவே எடுத்துக் கொள்கிறேன். ஆனால்....என் பதிவுகளுக்கு இது நாள் வரை ஊக்கமும், கருத்துக்களும் வழங்கிய ஒருவருமே சகோதரர் சதீஷ்குமாரின் கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்து முன் வைக்காதது மனதினைச் சங்கடத்தில் ஆழ்த்துகிறது.
ஒருவன் எப்படி ஒரு நாளில் துரோகியாக முடியும்?
ஈழத்தின் பெருமைகளை, இலங்கையிலிருந்து இது வரை ஒருவர் கூட ஜீலை ஐந்து நினைவு தினமன்று நேரடியாக எழுத முடியாத விடயங்களை எழுதிய,
நான் மாற்றுக் கருத்தாக என் பார்வையில் பட்ட விடயத்தினை முன் வைக்கின்ற போது எப்படித் துரோகியாக முடியும்?
மாற்றுக் கருத்தினை முன் வைப்பதற்கு ஒரு மனிதனுக்கு உரிமையில்லையா
அப்படியாயின் என் பதிவுகளில் புலிகளை வாழ்த்தி மட்டுமே எழுத முடியும்?
அப்படித் தானே?
புலிகள் செய்த தவறுகளை எழுத முடியாதா?
என்னுடைய பதிவுகளில் தொடர்ச்சியாக நான் புலிகளைக் கொச்சைப்படுத்தி வருகின்றேன் எனும் கருத்தினை அண்ணாச்சி சதீஷ்குமார் அவர்கள் ஆதாரப்படுத்த வேண்டும்,. இல்லையேல், அதற்குரிய சுட்டிகளை இங்கே வழங்க வேண்டும்.
என் தரப்பில் தொடர்ச்சியாக நான் இவ்வாறான தவறுகளை மேற்கொள்கிறேன் என்றும்,
என் எழுத்துக்கள் மீதும் ஆதார பூர்வமாக நிரூபிக்கப்படின் அந்த நிமிடமே நான் பதிவுலகத்தினை விட்டு விலகிப் போகின்றேன்.
தாங்கள் நிரூபிப்பது உண்மையாயின் உங்களுக்காக,
புலிகளைக் கொச்சைப்படுத்தியதற்காக தீக்குளித்து அதனை LIVE STREAM வீடியோ மூலமாக ஒளிபரப்பியவாறு என் உயிரினையும் மாய்க்கத் தயராக இருக்கிறேன். ஒருவனுக்கு ஒரு இனத்திற்குச் சார்பாக எழுதுவதற்குப் பூரண உரிமை இருக்கின்ற போது, அதனை விமர்சிப்பதற்கும் உரிமை இருக்க வேண்டுமல்லவா.
அப்படி பக்கச்சார்பின்றி எழுதினால் தானே நடுநிலையாளனாக எழுத முடியும். அப்போ நான்...பக்கச் சார்பாக எழுதுவதனைத் தான் இங்கே பின்னூட்டமிட்ட அனைவரும் விரும்புகின்றீர்களா?
@ஆகுலன்
தலைப்பு ரொம்ப கார சாரமா இருக்குது...
வாசித்து விட்டு வாறன்...//
ஒக்கே, வாசித்து விட்டு வாங்கோ,
@கோகுல்
அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சகோ!
உங்கள் ஆதரவு என்னை நானே மேலும் மேம்படுத்திக்கொள்ள ஊன்றுகோலாய் அமையும்//
நன்றி எல்லாம் நமக்குள் எதுக்கு மச்சி,
’எல்லோரும் இன்புற்றிருக்கவே அன்றி யாமொன்றும் அறியோம் பராபரமே...
நன்றிக்கு நன்றி மச்சி,
@ஆகுலன்
அவருக்கும் மக்களுக்கும் இருந்த தொடர்பை நான் சரி என கருதுகிறேன்.....இது என்னுடைய கருத்து....//
சகோதரம், அப்படியாயின் மக்கள் முன் தோன்றி, தலைவர் மக்களுக்குத் தெம்பினைக்(தைரியத்தை) கொடுக்கின்ற போது அது மக்களுக்கு மேலும் உற்சாகத்தினை வழங்கி, மக்களை விடுதலைப் போரில் முழுப் பங்களிப்புடன் ஈடுபட வைத்திருக்குமல்லவா.
கரும்புலிகள் பற்றி அறிந்திருப்பீங்க தானே,
தலைவனின் முகம் பார்த்த பின் போய்ச் சாவதில் எவ்வளவு இன்பம் இருக்கெனக் கூறுகிறார்களே,
அதனைக் கேட்கவில்லையா?
அதெல்லாம் பொய்யா சகோதரம்?
@கோகுல்
தலைப்பு மட்டுமல்ல,பதிவும் காரசாரம்.
பல கார சார விவாதங்கள் வருமென்று தோன்றுகிறது.//
ஆமாம்....சகோ,
நீங்கள் சொல்லியது போலவே காரசாரமான விடயங்கள் தான் வந்துள்ளன.
@ஹேமா
எல்லோரது வாழ்க்கையுமே நம்பிக்கையில்தான் நிரூ.ஆதிகாலம் தொட்டே நம்பிக் கெட்டவன் தமிழன்.அதில் நமக்கு மட்டுமென்ன விதிவிலக்கு.இன்று அந்த நம்பிக்கைக் கயிறு அறுந்த பலமில்லாத் தமிழர்களாக இருக்கிறோமே.இனி எங்கு யாரில் அந்த நம்பிக்கையை வைப்பது ?//
ம்....இப்போது...
மேய்ப்பார் இன்றி அலையும் ஆடுகளாகத் தான் நாம் எல்லோரும்.
அதனை முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறேன்.
@Yoga.s.FR
பிரபாகரனை, அவர் நம்பியிருந்த வெளிநாட்டு வெளிவிவகார அரசியற் புலிகள் ஏமாற்றினார்கள்.///இது தான் உண்மை!//
ஆமாம்....
இத்தால் சகல உறவுகளுக்கும்,
இனியும் உண்மைகள் உறங்கிக் கொண்டிருப்பதாகவும், முழுமையான விடயங்கள் தெரியாமல் மேற்படி விடயங்களில் நான் தலையிடுவதாகவும் சிலர் சொல்கிறார்கள்.
மே 17 அன்று, இராணுவத்தினர் வந்து, பங்கருக்குள் இருந்த எம்மைத் தட்டியொழுப்பிய போது தான்....
நிமிர்ந்து பார்த்து அவர்களை இராணுவத்தினர் என்று அடையாளங் கண்டு கொண்டோம்,. நானும், என் அத்தையும், அவர்களின் இரு பிள்ளைகள், மாமா இவர்கள் எல்லோரும் ஒரு பங்கருக்குள் மூத்திரம் கூடப் பெய்யப் போக முடியாத நிலையில் இருந்தோம்.
எம்மோடு கூட இருந்தவர்கள், எங்களோடு நெருங்கிப் பழகிய ஒருவர் கூட, வைகாசி 15 அல்லது 16 அன்று தாம் சரணடையப் போவதாகச் சொல்லவில்லை,
ஏன் வெறும் அரைக் கிலோ மீற்றர் தூரத்தினைக் கொண்ட,
சுற்றி வளைக்கப்பட்ட பகுதிக்குள் இருந்து கொண்டு, ஓரு ஒலிபெருக்கி வாயிலாகவோ, அல்லது வேறு ஏதேனும் தொடர்பு சாதனம் வாயிலாகவோ மக்களே நாங்கள் சரணடையப் போகிறோம், நீங்களும் சென்று சரணடையுங்கள் என்று அறிவித்திருக்கலாம் அல்லவா...
எமக்குச் சொல்லப்பட்டதெல்லாம் உலக நாடுகள் வந்து காப்பாற்றும்,
அமெரிக்காவின் பூரண ஆதரவு எமக்கு கிடைக்கப் போகின்றது. இதனை விட எம்மோடிருந்த மக்களே நீங்கள் நம்புங்கள் நாங்கள் சரணடையப் போகின்றோம் என்று யாரும் சொல்லவில்லை.
அடுத்த விடயம், பிரபாகரன் அவர்களின் இறப்பிற்குப் பின்னரும், உண்மை அதுவல்ல, உண்மைகள் உறங்குகின்றன என்று கூறுகின்றவர்கள், தமக்குத் தெரிந்த உண்மைகளை இங்கே முன் வைக்கலாம்.
நானும் இறுதி நேரம் வரை முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தவற்றை முன் வைக்கின்றேன்.
நான் கண்ணால் கண்டவற்றை விட,
போரின் பின்னர் நானிருந்த தடுப்பு முகாமிலிருந்த காலப் பகுதியில் அங்கே இராணுவத்தினரால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் முக்கிய படைத் துறைத் தளபதிகளோடு கூட இருந்த முன்னாள் போராளிகளோடும் நான் உரையாடியிருக்கிறேன். உறங்கும் உண்மைகள் ஒரு நாள் வெளிச்சத்திற்கு வருமளவிற்கு, அங்கே சரணடைதலைத் தவிர, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற எம்பிக்கள், வெளிநாட்டுப் பத்திரிகையாளர், புலிகளின் நோர்வே கிளை பொறுப்பாளர்கள், இலங்கை அரசாங்கத்தின் முக்கிய அரசியற்- சமாதானப் புள்ளிகள் இவர்களால் நம்ம வைத்துக் கழுத்தறுக்கப்படுத் தான் புலிகள் கொல்லப்பட்டார்கள்.
ஆகவே தயவு செய்து, உண்மை அதுவல்ல, இது பற்றிக் கதைக்க எனக்கு உரிமையில்லை என்று பூச்சாண்டி காட்டுவதைத் நிறுத்துங்கள். நக்கீரன் பத்திரிகை போலவு, பழ நெடுமாறன் ஐயா, சீமான், வைகோ போல இறுதி நேர அரசியல் விடயங்கள் வெளி வரும் என்று மக்களுக்குப் பொய் கூறி அவர்களின் கடுமையான உழைப்புக்கள் மூலமாகப் பெறப்படும் பணத்தில் ஈழ அரசியல் நடத்திக் குளிர் காய்வதை நாம் அனைவரும் தவிர்க்க வேண்டும். அதுவே நீங்கள், நாம் அனைவரும் தலைவர் மீது உண்மையான விசுவாசம் வைத்திருந்தால்....அதனை வெளிக்காட்டுவதாக அமைந்து கொள்ளும்.
இது பற்றி விரிவான விளக்கமான கட்டுரை ஒன்றினை நான் வெகு விரைவில் வலையேற்றுகின்றேன்.
@கந்தசாமி.
அண்ணே அண்ணே எண்டு இருபது வருசமா பின்னாலே திரிஞ்சவர்களே முதுகில குத்துராங்கலாம்...........ஒருவேளை மக்களோடு மக்களாக வாழ்ந்திருந்தால் தொண்ணூறுகளுக்கு முன்னமே பிரபாகரன் என்ற உருவம் அழிஞ்சிருக்கலாம்.//
மச்சி, நான் மக்களோடு மக்களாக தலைவர் வாழ்ந்திருக்க வேண்டும் என்று இங்கே பதிவில் எழுதவில்லை, மக்கள் முன் தலைவர் தோன்றியிருந்தால் சிறப்பாக இருக்குமல்லவா என்றே எழுதினேன்.
சில ஞானசூன்யங்கள் பின்னூட்டம் என்ற பெயரில் பிரபாவை கேவலப்படுத்துவது மானக்கேடு.சகோ.காட்டானும்,ஒ.வ.நா.அண்ணனும் அருமையான பதிலை கொடுத்துள்ளனர்.தமிழனை அழிக்க வேறு யாரும் வேண்டியதில்லை போலும்.தமிழ்நாட்டு தமிழன் வேதனைப்படுகிறேன்.
தாங்கள் நிரூபிப்பது உண்மையாயின் உங்களுக்காக,
§§§§புலிகளைக் கொச்சைப்படுத்தியதற்காக தீக்குளித்து அதனை LIVE STREAM வீடியோ மூலமாக ஒளிபரப்பியவாறு என் உயிரினையும் மாய்க்கத் தயராக இருக்கிறேன்.§§§§ ஒருவனுக்கு ஒரு இனத்திற்குச் சார்பாக எழுதுவதற்குப் பூரண உரிமை இருக்கின்ற போது, அதனை விமர்சிப்பதற்கும் உரிமை இருக்க வேண்டுமல்லவா./////இது வேண்டாமே?நான் ஏலவே சொல்லியது போல விவாதத்தில் சில நெருடல்கள் உண்டு.அவ்வளவுதான் சொல்வேன்!
////மக்கள் முன் தலைவர் தோன்றியிருந்தால் சிறப்பாக இருக்குமல்லவா என்றே எழுதினேன்
[[[[பிரபாகரன் செய்த மிகப் பெரிய தவறான மக்களோடு ஒன்றித்து வாழுதலைப் பிரபாகரன் கடைப்பிடிக்கத் தவறி விட்டார்.]]] ]???????
@கந்தசாமி.
/Yoga.s.FR said...
அப்போ "மாவீரர்" தினங்களிலெல்லாம் உரை நிகழ்த்தியது எவ்வாறு?நான் ஊரில் இல்லை,அதனால் எழுந்த கேள்வி!//// சுதுமலை சம்பவத்தில் பின் பெரிய அளவில் மக்கள் முன் தோன்றவில்லை.ஆனாலும் சில பொது விழாக்களில் தோன்றியதாக நினைவு.//
இப் பதிவினூடாக பிரபாகரனை நான் கேவலப்படுத்த முயலவில்லை, அவர் விட்ட ஒரு தவறினை மாத்திரம் தான் நான் இங்கே சுட்டியுள்ளேன்.
மக்கள் முன் பொது விழாக்களில் தலைவர் தோன்றவில்லை,
நான் அறிந்தவரை தலைவர் தோன்றிய நிகழ்வுகளாக,
*புலிகளின் குரல் ஆண்டு விழா,
*புலிகளின் படையணிகளால் நடாத்தப்பட்ட இறுவட்டு வெளியீட்டு விழாக்கள்,
*போராளிகளின் படை நடவடிக்கை, ஓயாத அலைகள் நான்கின் பின்னர் தலைவர் போராளிகள் முன் தோன்றிப் போருக்குச் செல்வதற்கு முன் உற்காசமூட்டுவதைக் கருணாவின் நடவடிக்கையால் நிறுத்தியிருந்தார்.
*புலிகள் அமைப்பின் படையத் தொடக்கப் பள்ளியினால் நடாத்தப்பட்ட நூல் வெளியீட்டு விழாக்கள்,
*போராளிகளின் நடன அரங்கேற்ற விழாக்கள்,
*தமீழப் பெண்கள் எழுச்சி நாளில் 2002ம் ஆண்டு கிளிநொச்சியில் தோன்றினார். பிரபாகரனுக்குச் செங்கம்பள வரவேற்பு வழங்கினார்கள். பிரபாகரன் அவ் இடத்தை விட்டு நகர்ந்த பின்னர் தான்
அவர் அங்கு வந்தார் எனும் விடயமே அங்கே குழுமியிருந்த மக்கள் அனைவருக்கும் தெரிய வந்தது
*காவற்துறையினரின் ஆண்டு நிறைவு விழா...இதிலும் பிரபாகரனுக்குச் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
*செஞ்சோலைச் சந்திப்புக்கள்
*சமாதானத் தூதுவர்களைச் சந்தித்ததை இங்கே பொது நிகழ்வாக கருத வேண்டாம்- அரசியல் நிகழ்வு
*தளபதிகளின் வீர மரண நிகழ்வு...
இவை பொது நிகழ்வுகளா அல்லது விடுதலைப் புலிகள் அமைப்பின் உள்ளக நிகழ்வுகளா சகோதரம்?
ஆகவே தலைவர் பொது நிகழ்வுகளில் தோன்றவில்லை.
@Mohamed Faaique
எது எப்படியோ, கடைசி நேரத்தில் பாதுகாப்பு வளையத்துக்குள் வந்து மக்களை கேடயமாக பாவித்து இலங்கை இராணுவம் மீது தாக்குதல் நடத்தியமையே மிகப் பெரிய இனவழிப்புக்கு வழி வகுத்தது என்பதே என் கருந்த்து. //
இது, இனவழிப்பிற்கான காரணம்,
ஆனால்...இராணுவம் உணவுகளையும், மருந்துப் பொருட்களையும் அனுப்பாது இருந்தமையும் மனிதாபிமானற்ற செயல் தானே.
முள்ளிவாய்க்காலில் அவ்வளவு பெரிய மக்கள் தொகை எப்பாதுமே இருந்ததில்லை. எல்லோருமே புலிகளை நம்பி வந்து மாட்டிக் கொண்டோரே!!!
@ராஜ நடராஜன்
முக்கியமாக தனது வயதான பெற்றோர்கள் உட்பட இறுதி வரை போர்க்களத்தில் இருந்தும்,ஈழ மக்களை நம்ப வைத்து ஏமாற்றினார் என்பது உங்களது தனிப்பட்ட கருத்தே என்று கருதுகிறேன்.
வெளிச்சத்துக்கு வராத நிறைய உண்மைகள் இன்னும் ஒளிந்து கொண்டிருக்கின்றன//
அப்படியென்றால், எல்லோரும் தலைவர் எம்மைக் காப்பாற்றுவார், எமக்கு ஆதரவாகப் போராடி வெற்றியீட்டித் தருவார் என்று கருதி ஏமாந்தார்களே,
இது பொய்யா...
இத்தனை ஆயிரம் மக்களையும் ஏன் ஒரு சிறிய பகுதிக்குள் வந்து சுருங்கும் வரை தலைவர் மக்களை வெளியே செல்ல அனுமதியளிக்காது, பாதுகாப்பரணாக வைத்திருக்க வேண்டும்?
வெளிச்சத்திற்கு வராத உண்மைகள் என்று...போலி அரசியல் நடாத்துவைதைத் தவிருங்கள் சகோதரா.
உங்களின் வெளிச்சத்திற்கு வராத உண்மகள் விடயத்திற்கு ஒரு தனிப் பதில் எழுதியிருக்கிறேன். படித்துப் பாருங்கள்.
///ஆகவே தலைவர் பொது நிகழ்வுகளில் தோன்றவில்லை. /// அப்புறம் முத்தமிழ் விழாவை விட்டு விட்டியளே...?http://www.youtube.com/watch?v=UQ1K2f51DEw&feature=related
இது பொது நிகழ்வு எண்டு தான் நினைக்கிறான் பாஸ் ...
@ராஜ நடராஜன்
மாற்றுக்கருத்துக்கள் எதுவாயினும் இலங்கையில் இப்பொழுதும் நீங்கள் படும் துயரங்கள்,ஆயுதம் ஏந்தியதற்கான காரணங்கள்,இனப்படுகொலை,சிங்கள மயம்,இப்போது ஜனநாயக நீரோட்டத்தில் இன்னும் தொடரும் போராட்டங்கள் போன்றவை பிரபாகரனை வரலாறு சரியாகவே மதிப்பீடு செய்யும்.//
பிரபாகரனை நான் இங்கே முழுமையாக மதிப்பீடு செய்யவில்லை, அவர் விட்ட ஒரு தவறினைத் தான் நான் இங்கே குறிப்பிட்டுள்ளேன்.
@செங்கோவி
ஒரு போராட்ட அமைப்பின் தலைவர் மக்கள் மத்தியில் கலந்து இருப்பது சாத்தியமற்ற ஒன்று..தீவிரவாத வழியை தேர்ந்தெடுத்த பின், மறைந்தே செயல்பட முடியும்..இது பிரபாகரனின் குறை அல்ல..போராட்ட முறையின் பொதுவான குறைபாடு.//
சகோதரம், மக்கள் மத்தியில் வாழ்வதை விட மக்கள் முன் தோன்றி...வருடத்தில் ஒரு தடவை என்றாலும் மக்களோடு மக்களாகா பேசியிருக்கலாம் தானே...அப்படி ஒரு சூழல் அமையும் போது மக்களுக்கும் போராட்டத்தின் மீதான பற்றுறுதி அதிகரிக்குமல்லவா.
@செங்கோவி
மக்களை ஏமாற்றினாரா பிரபாகரன்? தன் குடும்பத்தையும் அதே மக்களுடன் தானே பலியிட்டார்? இல்லையா?...
பிரபாகரனும் அவரது குடும்பமும் மட்டும் தப்பியிருந்தால் மட்டுமே இந்த வாதம் செல்லுபடியாகும்..உண்மை தெரியாதவரை இது வெற்றுப் புலம்பலே!//
பலியாகிய மக்கள் போக, எஞ்சிய மக்களுக்கான உங்கள் பதில் என்ன?
அவர் கூடவே இருந்து, இறுதி வரை தம்மை இராணுவத்திடம் போகவிடாது தலைவர் தடுத்து வைத்திருக்கிறாரே, எமக்கெல்லாம் விடிவு கிடைக்கும் என எண்ணிய மக்களுக்கு இறுதியில் கிடைத்தது ஏமாற்றம் தானே?
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
வணக்கம் நிரூபன்! என்னாச்சு உனக்கு? ஏன் இப்ப, இதையெல்லாம் எழுதுகிறாய்? யாருக்காக? யார் யாரெல்லாம் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக? //
வணக்கம் மிஸ்டர் ஓட்டவடை நாராயணன் ஓனர் ஒப் மாத்தியோசி,
யாரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எழுதவில்லை, எம் வரலாற்றுப் பாதையில் உள்ள, சிறிய சறுக்கலைத் தான் இங்கே எழுதியுள்ளேன்.
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
எனக்குப் புரியவில்லை! நேற்றைய உனது பதிவுக்கும் எனது கண்டனங்கள்! விடுதலைப்புலிகளின் தோல்வியடைந்த ஒரு தாக்குதல் பற்றி, அல்லது அதில் வெளிவராமல் போன ஒரு சில மர்மங்கள் பற்றி சிலாகிக்க வேண்டிய தருணமா இது?
அதற்கான அவசியம்தான் என்ன?//
நேற்றைய பதிவினை முழுமையாகப் படித்த பிறகுமா நீ இப்படிக் கேட்கிறாய்? நேற்றைய பதிவினூடக நான் சொல்ல வந்த விடயம், இராணுவத்தின் உயர் தரத்தினைத் சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு வைக்கப்பட்ட இலக்கிலிருந்து அவர் தப்பி விட,
அந்தக் குண்டு வெடிப்பினைத் தன் பக்கம் திசை திருப்பி, புலிகளின் தாக்குதலைத் திசை திருப்பிப் புலிகளின் தலைமைப் பீடத்திற்கு கொழும்பில் தங்கியிருந்து தாக்குதலை மேற்கொள்ள நினைத்த போராளிகள் மீது அவ நம்பிக்கையினை உண்டு பண்ணி,
மேற்படி தாக்குதல் மூலம் தன் பாதுகாப்பினை அதிகரித்து, தனக்குச் சாதகமாக அந்தத்தாக்குதலைத் திசை திருப்பி வாழ்கிறாரே ஒரு தமிழ் எம்பியார்.
அவரைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று தான் நேற்றைய பதிவினை எழுதினே. அதில் என்ன தவறு மச்சி?
2002 க்குப் பின்னரான சில விரும்பத்தகாத நிகழ்வுகள்,புலம்பெயர்ந்திருப்போரால் கூட வெளியே சொல்ல முடியாத சூழல் தற்போதும் உள்ளது.களத்தில் இருந்தவர்களுக்குக் கூட,குறிப்பாகப் போராளிகளுக்குக் கூட தெரிந்திருக்க முடியாத விரும்பத்தகாத சம்பவங்களும் நடந்திருந்தது என்பதும் உண்மை!அதனால் தான் கிண்டுதல்,கிழறுதல் வேண்டாம் என்றேன்!உண்மையைச் சொல்லப்போனால் 2006 வரை புலிகளின் செயற்பாடுகளில் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை.பின்னர்.................................................!
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
# ஈழ மக்களை நம்ப வைத்து ஏமாற்றிய புலித் தலைவர் பிரபாகரன்!#
எந்த ஈழமக்களைப் பிரபாகரன் ஏமாற்றினார்? வன்னியில் வாழ்ந்த வெறும் 3 லட்சம் மக்களையா? அல்லது ஒட்டு மொத்தமாக இலங்கையில் வாழும் தமிழர்களையா?
இலங்கையில் வாழும் அத்தனை தமிழர்களுமா பிரபாகரனை ஆதரித்தார்கள்? அத்தனை பேருமா பிரபாகரனுடன் தோளோடு தோள் நின்றார்கள்? //
மச்சி, உண்மையில் வன்னி மக்கள் என்றே எழுதியிருக்க வேண்டும், இறுதியில் ஈழம் வன்னிக்குள் சுருங்கி விட்டதால்....
நான் வன்னி மக்கள் என்பதற்குப் பதிலாக ஈழ மக்கள் என்று எழுதி விட்டேன், உண்மையில் பிரபாரகன் பற்றிக் குறை கூறுவதற்கு இறுதி வரை அவரோடு இருந்த மக்களுக்கு அருகதையில்லைத் தான். ஆனால் இறுதி வரை வன்னியில் இருந்த ஒரு சாதாரண குடிமகனாக என் கருத்த்துக்களைக் கூறுவது சரி தானே?
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
பிரபாகரன் யாரையும் ஏமாற்றவில்லை! அவர் பலவருடங்களுக்கு முன்னர் சொன்னது போல, கடைசிப் போராளி இருக்கும் வரை போராடுவேன் என்றார்! அதன்படியே போராடினார்!//
இறுதிப் போராளி இருக்கும் வரை போராடினார் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.
காரணம் சரணடைவது தொடர்பான முடிவினை எடுத்தது அவருக்கு கீழே இருந்த மக்களுக்கு இறுதி வரை சொல்லப்படவில்லைத் தானே...
இதற்கு என்ன விளக்கம் கூறப் போகிறாய்?
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
அவரது இந்த கொள்கைப் பற்றை, இலட்சிய உறுதியைப் பார்த்து, சிங்களவனே மூக்கில் விரலைவைக்கிறான்! எத்தனையோ தோல்விகளுக்குப் பிறகும், எத்தனையோ இழப்புக்களுக்குப் பிறகும் கொண்ட கொள்கையில் இருந்து சற்றும் விலகாது போராடிய ஒரு போர் வீரனை, இழித்துரைப்பது தகுமா?
என்ன பிரபாகரனையும், டக்ளஸ், கருணா மாதிரி சிங்களவனுக்கு ......... கழுவச் சொல்கிறீர்களா?
அதுசரி, பிரபாகரன் தான் மக்களை ஏமாற்றினார் என்று வைத்துக் கொள்வோம்! அப்ப கே பி, டக்ளஸ், கருணா போன்ற ஏனையவர்கள் என்ன மசிரையா புடுங்குகிறார்கள்?
மீளக் குடியேறிய மக்களுக்கு என்னத்தை செய்து கிழிக்கிறார்கள் என்பதை யாராவது விளக்கிக்கூற முடியுமா?//
மச்சி, பிரபாகரனை நான் நீ மேற் கூறிய நபர்களோடு ஒப்பிடவும் இல்லை, அவரைப் பற்றிய முழுமையான மதிப்பீட்டினையும் இங்கே எழுதவுமில்லை, இறுதி நேரம் வரை அவர் கூட இருந்த மக்களுக்குச் செய்த துரோகம் என்ன?
மக்களோடு மக்களாக, போருக்குத் துணையாக இருந்த வன்னி மக்கள் முன் தோன்றி அவர் உரை நிகழ்த்தியிருக்கலாம் தானே?
இல்லாவிட்டால்.....வன்னி மக்களோடு சுமுகமான சந்திப்புக்களை நிகழ்த்தியிருக்கலாம் தானே?
இதனை அவர் திடீர் சந்திப்புக்களாக, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளோடு செய்யும் போது, ஆபத்துக் இல்லாதிருக்கும் தானே?
உனக்கு நினைவிருக்கிறதா 1998களில் புலனாய்வுத் துறையின் பொஸ்கோ இறந்த போது,
வித்துடல் ஆலங்குளம் துயிலுமில்லத்திற்கு கொண்டு வந்தார்கள். அங்கே தலைவர் வரவில்லையா?
தலைவர் அப்போது விசுவமடுவிலிருந்தார்.
விசுவமடுவிலிருந்து ஆலங்குளத்திற்கு வந்து பொஸ்கோவிற்கு அஞ்சலி செலுத்தவில்லையா?
பொஸ்கோ குடும்பத்தாருடன் தலைவர் பேசவில்லையா?
இதே போல தலைவர் மக்கள் முன் திடீர் சந்திப்பாகத் தோன்றியிருக்கலாம் தானே?
பிரபாரகனால் நேரடி நெறிப்படுத்தலுக்கு உட்பட்ட ஓயாத அலைகள் மூன்று, மற்றும் நான்கு வெற்றிச் சமரிற்கும், அவர் வோக்கிடோக்கி மூலமாக வழி நடத்திய சமர்களுக்கும் உள்ள வேறுபாட்டினை நீ அறிந்திருக்காமல் இருக்க வாய்ப்பில்லை எனக கருதுகிறேன்.
தலைவர் நேரடி நெறிப்படுத்தல் செய்கின்ற போது எவ்வளவு துணிவுடன், போராளிகள் மன உறுதியுடன், பிரபாரகனைச் சந்தித்தோம் என்ற ஆர்வத்துடன் போராடினார்கள் தெரியுமா?
இதற்கு உன் பதில் என்ன மச்சி?
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
அப்படியானால் பிரபாகரன் என்ன செய்திருக்க வேண்டும்? ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடைந்திருக்க வேண்டுமா? அல்லது பெருமளவு போராளிகளையும் மக்களையும் ராணுவத்திடம் அனுப்பிவிட்டு, புலிகளின் முக்கிய தலைவர்கள், வெளிநாட்டுக்குத் தப்பி ஓடியிருக்க வேண்டுமா? ஒருவேளை அப்படி ஓடியிருந்தால், மக்கள் தங்களது எலும்பு இல்லாத நாக்கினால் என்ன கதைத்திருப்பார்கள் நிரூபன்?
இதெல்லாம் நமக்குத் தெரிமச்சி, நான் இங்கே சொல்லவருவது, புலிகளோடு இருக்க விருப்பமில்லாத மக்களை, வெளியே போகப் பாஸ் கொடுக்காது வலுக்காட்டயாமகத் தம்மோடு வைத்திருந்தது தவறு தானே..
உயிலங்குளம் விழுந்த பின்னர், முகாமாலை அரணை உடைக்கப் பல மாதங்களாக முயன்றும் தோற்ற இராணுவத்தினை, மடக்க தலமை உயிலங்குளத்திற்கு முகமாலையில் நின்ற இம்ரான் பாண்டியன் படையணிப் போராளிகளை அங்கே அனுப்பியிருக்க வேண்டும். உயிலங்குளம் தொடக்கம் அக்கராயன், கரடிப் போக்குச் சந்தி வரை தடையின்றி வேகமாகத் தானே இராணுவம் கைப்பற்றிக் கொண்டு வந்தது,
அதே நேரம் முகமாலை காப்பரணை 2006 ஆகஸ்ட் 8ம் திகதி முதல் 2008ம் ஆண்டு பூநகரிப் பாதை வீழ்ச்சியடையும் வரை இராணுவம் கைப்பற்ற முடியாமல் தானே இருந்தது..
அப்போதே தலமைத்துவம் என்ன செய்திருக்க வேண்டும், தம்மோடு கூட இருக்க விருப்பமில்லாத மக்களை இராணுவக் கட்டுப்பாட்டிற்குப் போக அனுமதித்திருக்க வேண்டும், அதனைச் செய்யாது இறுதி வரை காக்க வைத்து, கைவிட்டது தவறென்று உனக்குத் தோன்றவில்லையா?
இலைக் கஞ்சியும், பருப்பும் சோறும் உண்ட போதெல்லாம் நாம் என்ன அங்கே பேசினோம்?
எப்படி நம்ம வைக்கப்பட்டோம்,
மக்களே நம்புங்கள்,. தலைவர் கைவிட மாட்டார் என்று தானே...
இதற்கு நீ என்ன சொல்லப் போகின்றாய்?யாததா என்ன? நண்பர் செங்கோவிக்கு இருக்கிற தெளிவுகூட, உனக்கு இல்லாமல் போச்சே?//
@காட்டான்
வணக்கம் மாப்பிள பிரபாகரன் தமிழ் மக்களை ஏமாற்றினாரா.. என்று வெளிநாடுகளிளும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலும் இல்லாத தமிழர்கள் சொன்னால் வேடிக்கைதான்.. அதிலும் வெளிநாட்டில் இருக்கும் நாங்கள் சொல்லக்கூடாது.. //
அப்படியென்றால், உள் நாட்டில் போரை அனுபவித்து, இறுதி நேரம் வரை இருந்த நான் என் கருத்துக்களைச் சொல்வதில் தவறில்லைத் தானே அண்ணே?
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
நிரூபன் ஒரு கேள்வி! - கிழக்கு மாகாணம் இழக்கப்பட்ட நிலையில், வன்னி மீதான முற்றுகையை ராணுவம் தொடங்கியிருந்த நிலையில், அல்லது மன்னார் மாவட்டம் இழக்கப்பட்டிருந்த நிலையில், புலிகள் தொடர்ந்து போராடியது தவறு என்றால், அவர்கள் என்னதான் செய்திருக்க வேண்டும்?
அந்தச் சந்தர்ப்பத்தில் புலிகள் மேற்கொண்டிருந்திருக்கக்கூடிய மிகச்சிறந்த ராஜதந்திர நடவடிக்கை எதுவாக இருந்திருக்கும்?
தயவு செய்து கூறு! அறிவதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறேன்!//
மச்சி, உண்மையில் தமக்கு விசுவாசமில்லாத, தம்மோடு இருக்க விரும்பாத மக்களை இராணுவக் கட்டுப்பாட்டிற்குப் போங்கள் என்று அனுப்பியிருக்க வேண்டும், அடுத்ததாக தம்மோடு இருக்க விரும்பும், போராட்டத்திற்கு ஆதரவான மக்களுக்கு முழுமையான பயிற்சி அளித்து, வாழ்வா சாவா என்ற நிலையில் ஒட்டு மொத்த வன்னியும் போர்க் கோலம் பூண்டிருக்க வேண்டும்,.
ஆனால் நடந்தது என்ன?
கட்டாய ஆள்சேர்ப்பு வருகின்ற போது மச்சாள் உள்ளவன் மச்சாளைக் கலியாணம் கட்டினான், காதலி உள்ளவன் காதலியைக் கலியாணம் கட்டிக் குடும்பம் நடத்தினான்,
ஆட்சேர்ப்பைத் தவிர்க்க வலிந்து கர்ப்பம் கூடத் தரித்தார்கள் பலர்.
ஏன்.....ஆட்சேர்ப்பு என்றதும் பெரும்பாலானவர்கள் கலியாணம் கட்டினார்கள். இவர்களை இறுதி நேரம் வரை கூட வைத்திருந்ததில் என்ன பலன்?
போராளி-மாவீரர் குடும்பங்கள் இராணுவத்திடம் போக அஞ்சினார்கள். ஆனால் அவர்களிடமிருந்து போருக்கான ஆதரவுகள் ஏனைய சாதாரண மக்களிடமிருந்து கிடைப்பதனை விட அதிகமாக கிடைத்தது.
இவர்களை கணக்கெடுத்தாலே ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக வரும், இவர்கள் மூலம் எதிர்ப்போர் புரிந்திருக்கலாம் தானே...
இது என்ன தந்திரம் இல்லையா?
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
நிரூ, மாற்றுக்கருத்துக்களை முன்வைப்பதால், எமது நட்புக்கு எவ்வித சேதங்களும் வந்துவிடக் கூடாது! மாற்றுக்கருத்துக்கள் சொல்பவர்களை நாம் ஒருபோதுமே எதிரிகளாக கருதக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்!
மேலும் சிவா என்பவர் ஆங்கிலத்தில் உளறியிருப்பதை தயவுசெய்து நீக்கிவிடு! அதில் சொல்லப்பட்டிருப்பவை மாற்றுக்கருத்துக்கள் அல்ல! - விஷமக் கருத்துக்கள்!//
அடப் பாவி, நான் எப்போதும் பழைய மாதிரி இருக்கிறேன், நீ தான் வக்கேசன் என்று நான் போன் பண்னினாலும் போனை ஓப் பண்ணிட்டு பிரெஞ்சு பொண்ணுங்களைப் பார்க்க ஓடிப் போகிறாய். போனையாச்சும் ஆன்ஸர் பண்ணலாம் தானே... சிவாவின் கருத்துக்களை இன்று காலையே நீக்கி விட்டேன்.
பாஸ் முகமாலையில் நிண்டது இம்ரான் பாண்டியன் படையனியா? தீபன் தலைமையிலான சாள்ஸ் அன்டனி சிறப்பு படையணி எண்டெல்லோ அறிஞ்சிருந்தன் (கொழும்பில் இருக்கும் போது ஞாயிறு வீரகேசரியில் சமகால அரசியல் பார்க்கும் பழக்கம் இருந்தது )
நல்லா தான் போய்க்கொண்டிருக்கு ..நானும் தொடருரன் ;-)
@vidivelli
தலைவர் பிரபாகரனைப்பற்றி சில தகவல்கள் நியாயமாக இருந்தாலும் சில தகவல்கள் மனதை அழ வைக்கிறது.
மக்கள் மத்தியில் தோன்ற அந்த காலகட்டம் சரியாக இல்லை..
ஆனால் வலுக்கட்டாயமான ஆட்பிடிப்பில் அந்த நடவடிக்கைக்கு விட்டவர்கள்
நடந்த விதம் பிழை..
அதனால் அதனைக்கவனிக்காது இருந்தாரா என்ற கேள்வி மக்கள் மனதில் இருந்ததென்பது உண்மை..
அவர் தனது உயிருக்கு பயப்பட்ட மனிதன் அல்ல.பதுங்குகுழியில் வாழ்ந்தவர் என்று மனம் கூசாமல் எழுதியிருக்கிறிங்கள்..//
சகோதரி, கட்டாய ஆட்சேர்ப்பு தலைவரின் உத்தரவின் பேரில் தான் இடம் பெற்றது, அதனை நான் இங்கே கொண்டு வந்து செருகவில்லை, நான் கூற வரும் விடயங்கள் உயிருக்குப் பயந்து என்றல்ல...
எப்போதுமே பதுங்குகுழிக்குள் வழ்ந்த தலைவர்...எப்போதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மக்களினைப் பார்த்திருக்கலாம் தானே என்று.
@vidivelli
கடைசியாய் ஆனந்தபுர முற்றுகைக்குள் கடைசிவரையும் நின்றவர் தெரியுமா உங்களுக்கு? கடைசியாய் இராணூவம் இருந்த ஒருபாதையையும் மூடுவதற்கு முன் நொடிப்பொழுதில்தான் வெளியேறிவந்தவர்.வந்ததன் காரணமும் பிரிகேடியர் துர்கா,பிரிகேடியர் விதுசா இவர்களுடைய கடிதத்தினாலும்
ஏனைய முதுநிலை போராளிகளுடைய வேண்டுதலினாலும் தான் அவ்விடத்தை விட்டு மெய்பாதுகாவலர்களுடைய வற்புறுத்தலினாலும் வெளியேறினார் .இதன் காரணத்தால் வெளியேறியது 100% உண்மை..
அக்கடிதத்தில் எழுதப்பட்ட சில குறிப்பு அண்ணை எல்லோரையும் இந்த முற்றுகைக்குள் விட்டு நீங்களும் நிற்கிறீங்கள்..எங்களுக்கு ஏதும் இறுக்கமான சூழல் நிகழ்ந்தால் யார் கட்டளை தருவது..உங்களை நம்பித்தானே இத்தனை போராளிகளும் இதற்குள் நிற்கிறோம்.நீங்கள் வெளியில் நின்றால்த்தான் நாங்கள் திடமாக நிற்கமுடியும்.ஒரு தலைவனை இழக்க எந்த ஒரு விடுதலைப்பற்றுடையவரும் நினைக்க மாட்டார்கள்.அந்த முற்றுகைக்குள் நின்று.//
சகோதரி, ஊகங்களின் அடிப்படையில் கருத்துக்களை முன் வைக்கிறீங்க போலிருக்கிறது. விதுஷா, துர்க்கா முதலியோருக்கு பிரபாகரனுடம் நேரடியாகப் பேசுகின்ற அளவிற்கு தொடர்பு சாதன வசதிகள் இருந்தது. தலைவருக்கு கடிதம் அனுப்பினார்கள் என்று என்ன புதுக் கதை சொல்கிறீர்கள்?
ஆனந்தபுரம் சமரில் தலைவரின் வெளியேற்றத்திற்கு முனைப்புடன் செயற்பட்டவர்கள் விதுசாவோ அல்லது துர்க்காவோ அல்ல,
தீபனும், கடாபியும் தான் தலைவரை வெளியே அனுப்ப வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார்கள். ஆனந்தபுரம் சமரினைக் காட்டிக் கொடுத்த ஊடகப் பேச்சாளர் யார் என்று தெரியுமா?
அவரையும் இவ் இடத்தில் நினைவு கொள்ள வேண்டு,
இப்படியும் மனிதர்கள் நம்முள் இருக்கின்றார்களே,
ஆனந்தபுரம் தாக்குதல் வெற்றியீட்டியிருந்தால்,
புலிகளின் புதிய பரிணாமம் உலகிற்கு பகிரங்கப்படுத்தப்பட்டிருக்கும்.
ஆனந்தபுரத்தில் இரண்டு மிக் மிகையொலி விமானங்களை ஏவுகணை மூலம் புலிகள் வீழ்த்தியிருந்தார்களே, அது பற்றி அறிந்திருக்கிறீங்களா?
இதனை அரசாங்கம் இறுதிவரை அறிவிக்கவே இல்லை.
@vidivelli
அவருக்கு காயங்கள் ஏற்பட்டது தெரியுமா? சிலவற்றை ஆராய்ந்து எழுதவும்.நாமும் போரால் அங்கங்கள் பலவீனமாகப்பட்ட நிலையிலும்,உறவுகளை இழந்து இருந்தாலும் அந்த வலிகளை அவரை தூற்ற நினைக்கவில்லை. தவறுகள் நடந்ததுதான் .மக்களாகிய எங்களிலும் பிழைகள் இருக்கிறது.அதற்காக தனி ஒரு மனிதனை கண்டவற்றையும் சாடி
இழப்புக்களின் கோபத்தை தணிக்க கூடாது.
இது எனது கருத்து..
மன்னிக்கவும்..//
காயங்கள் ஏற்பட்டது அல்ல,
அவருக்கு காயம் தான் ஏற்பட்டது ஆனந்தபுரத்தில்.
ஆராய்ந்து எழுதுவதிலும் பார்க்க, பெற்றுக் கொண்ட அனுபவத்தின் மூலம் எழுதுவது சிறந்தது தானே.
இதற்கு உங்கள் பதில் என்ன?
இங்கே இழப்புக்களின் கோபத்தினைத் தணிக்க நான் எழுதவில்லை, எம் வரலாற்றுப் பாதையில் உள்ள சிறு தவறினைத் தான் நான் எழுதியுள்ளேன்.
@vidivelli
அல்ல தனது பெற்றோரை அனுப்பி வைத்தாரா ..அவர்களுக்கு என்ன நடந்தது.?
நீதி தவறாமல் நடந்த மனிதனை இப்படியெல்லாம் தூற்றுவது தகுமா?//
அப்படியென்றால், தலைவருக்காக ஒட்டுமொத்த மக்களும் இறப்பதும் சரி என்று தோன்றுகிறதா உங்களுக்கு?
@vidivelli
வெற்றிகளை குவிக்கும் போது கைதட்டுவதும்..
படுகுழியில் வீழும்போது எலும்பில்லாத நாக்கால் தூற்றுவதும் மனிதனது இயல்பாகிவிட்டதே,,//
என்னுடைய முந்தைய பதிவுகளைப் படித்த பின்னருமா தாங்கள் இப்படியொரு கருத்தினைச் சொல்லுகிறீர்கள்?
புலிகளின் வீர தீரங்களைப் போற்றுகின்ற அளவிற்கு எமக்கு பூரண சுதந்திரம் உள்ளது போன்று, அவர்களை விமர்சனம் செய்ய அங்கே வாழ்ந்த ஒரு சாதாரண குடி மகனுக்கு உரிமை கூடவா இல்லை?
இவ்வளவு நாளும் நான் போற்றி எழுதுகின்ற போது தாங்கள் வரவில்லையே?
நான் எழுதிய பதிவுகளில் உள்ளவ கருத்துக்கள், சில சொல்ல முடியாத விடயங்களையெல்லாம் சொல்லுகின்ற போது,
நம்பிய மக்களை ஏமாற்றினார் எனும் வார்த்தை தான் உங்களுக்கு கொடூரமாகத் தோன்றுகின்றதோ?
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
மேலும் விடுதலைப்புலிகள் பாரிய தவறொன்று இழைத்து விட்டதாகவும், அது இன்றுவரை வெளிவராமல் மர்மமாக இருப்பதாகவும் சிலர் படம் காட்டுகிறார்கள்! அது ஒன்றும் பெரிய மர்மம் அல்ல! அதாவது 2006.08.20 க்குப் பின்னர் விடுதலைப்புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பை மேற்கொண்டார்கள்! மேலும் வன்னிமக்களை யுத்தம் நடந்த இடத்தில் இருந்து வெளியேற விடாமல் தடுத்தார்கள்! இவைதான் அந்த மர்மங்கள்! //
மச்சி...நிற்க.
ஒரு சிறிய வரலாற்றுப் பிழை,. வீட்டுக்கொருவர் நாட்டிற்கு வேண்டும் என்பத் ஜெயசிக்குறு முறியடிப்புக் காலத்திலிருந்தே தொடங்கி விட்டது.
@Yoga.s.FR
கருத்துகளை,கருத்தால் மட்டும் எதிர் கொள்ளுங்கள்,ராவணன்.தேவையற்ற அவதூறு கூறும் வார்த்தைப் பிரயோகங்கள் வேண்டாமே?(நீக்கி விடுங்கள்,நிரூபன்.இல்லாவிடில் அனுதாபம் தேடும் செயல் என்று கூறிவிடுவார்கள்,முதுகெலும்பற்றவர்கள்.)//
வேண்டாம் ஐயா, இப்படியும் மனிதர்கள் நம்முள் இருக்கிறார்கள் என்று அனைவரும் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டுமே,
நீக்க வேண்டாம். இருக்கட்டும்.
@karthickeyan
உங்களைப்போன்ற அறைகுறைகளால் தான் இன்னமும் தமிழ் இனத்திற்கு விடிவு கிடைக்கவில்லை!//
அடடா....அப்படியாயின், உங்களுடைய வாழ்வில் தமிழினத்திற்கு விடிவு வேண்டி என்ன செய்திருக்கிறீங்க?
ஏன் இந்தக் கொடூரம்?
எங்களைப் போன்ற அரை குறைகள்,
இறுதிப் யுத்தத்தின் பின்னர் தப்பி வந்த காரணத்தினால் தான், ஈழத்தை வைத்துப் பிழைக்கும் பலர் வாய் பொத்திக் கொண்டிருக்கிறார்கள்.
////ஆனந்தபுரம் சமரினைக் காட்டிக் கொடுத்த ஊடகப் பேச்சாளர் யார் என்று தெரியுமா?
அவரையும் இவ் இடத்தில் நினைவு கொள்ள வேண்டு, // பெயரை சொல்லவில்லையே .................இளந்திரையனை சொல்லுறிங்களா?? அப்படி ஒரு வதந்தி பரவியது , ஆனா அதற்க்கு பிறகும் அவ் அமைப்பில் இருந்து தொடர்ந்து அறிக்கைகள் விட்டுக்கொண்டு இருந்தவர்.
@காட்டான்
வணக்கம் மாப்பிள பிரபாகரன் தமிழ் மக்களை ஏமாற்றினாரா.. என்று வெளிநாடுகளிளும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலும் இல்லாத தமிழர்கள் சொன்னால் வேடிக்கைதான்.. அதிலும் வெளிநாட்டில் இருக்கும் நாங்கள் சொல்லக்கூடாது.. //
அப்படியென்றால், உள் நாட்டில் போரை அனுபவித்து, இறுதி நேரம் வரை இருந்த நான் என் கருத்துக்களைச் சொல்வதில் தவறில்லைத் தானே அண்ணே?
அதற்காகதானே உங்கள் கருத்துக்களை எழுதச்சொல்லி கேட்டேன்..
@Sathiyanarayanan
நீல சாயம் வெளுத்துப்போச்சி டூம் டூம் டூம்
புலி எதிர்ப்பு தெரிஞ்சிப்போச்சி டூம் டூம் டூம்
போலி வேடம் வெளுத்துப்போச்சி டூம் டூம் டூம்
போலி வேடம் தெரிஞ்சிப்போச்சி டூம் டூம் டூம்//
அடடா....இது நல்ல பாட்டாக இருக்கே, என்ன சிட்டுவேசன் சாங்க்ஸா இது?
புலிகளைப் பற்றிய தவறொன்றினைச் சுட்டினால் இது எப்படிப் புலி எதிர்ப்பாகும்?
என்ன கொடுமை நாராயணா!!
@Yoga.s.FR
கொண்ட கொள்கையில் இறுதி வரை பற்றுறுதியுடனே இருந்தார்,தலைவர்!புலம்பெயர் தமிழரிடம் போராட்டத்தை காலமறிந்து ஒப்படைத்தார்!//
ஐயா. நான் இங்கே தலைவரின் கொள்கைப் பற்றினை விமர்சிக்கவில்லை,
அவர் செய்த ஒரு செயலின் மூல் தான் என் கருத்தினை இங்கே முன் வைத்துள்ளேன்.
வேலைப் பளு, ஆணி அதிகம், சக உறவுகளின் வலைப் பதிவினைப் படிக்க வேண்டிய கட்டாயத்தினால் சர்ச்சைக்குரிய பின்னூட்டங்களுக்கே என் பதில்களை வழங்கியிருக்கிறேன். இங்கே கருத்துரை வழங்கிய உறவுகள் அனைவருக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள்.
///நான் மாற்றுக் கருத்தாக என் பார்வையில் பட்ட விடயத்தினை முன் வைக்கின்ற போது எப்படித் துரோகியாக முடியும்?////
அதெப்படி முடியும்... ”நான் பிடித்த முயலுக்கு 3 கால்`னு சொன்னா, 3 கால்தான்... நீங்க கணக்கிட்டுப் பார்த்தீர்கள் சத்தியம் பண்ணி சொன்னாலும் நாம நம்ப மாட்டோம்” இதுதான் உலக நியதி நன்பா....
Mohamed Faaique said...
Mohamed Faaique said...
///நான் மாற்றுக் கருத்தாக என் பார்வையில் பட்ட விடயத்தினை முன் வைக்கின்ற போது எப்படித் துரோகியாக முடியும்?
அதெப்படி முடியும்... ”நான் பிடித்த முயலுக்கு 3 கால்`னு சொன்னா, 3 கால்தான்... நீங்க கணக்கிட்டுப் பார்த்தீர்கள் சத்தியம் பண்ணி சொன்னாலும் நாம நம்ப மாட்டோம்” இதுதான் உலக நியதி நன்பா....//// அமைதி நண்பா! இங்கே தம் சுய விபரத்துடன் பின்நூட்டமிட்டவர்கள் யாரும் துரோகி என்ற சொற் பிரயோகத்தை முன் வைக்கவில்லை. நீங்களாய் எதுக்கு புதுசா கண்டு பிடிக்கிறீங்க.
இவ்வளவு விவாதத்தையும் படிக்கவே ஒரு மணி நேரம் ஆகிவிட்டதே..
நிரூ, மாற்றுக்கருத்துகள் வரும் என்று தெரியாதா..ஏன் பதட்டம்..நமக்குப் பிடிக்காத கருத்த்தைச் சொல்பவனை துரோகி என்று சொல்வதும் நமக்குப் புதிது இல்லையே..
பிரபாகரனிடம் இருந்த ஒரு குறையினாலேயே அவரை ஏமாற்றியவராக இந்தப் பதிவு சித்தரித்தது தான் இங்கே தவறு..அப்படியும் ஒரு குறை அவரிடம் இருந்தது என்று மட்டும் சொல்லியிருந்தால் பிரச்சினை இல்லை..
அமைதி அடையுங்கள்..தேவையற்ற தனிமனிதத் தாக்குதல் கொண்ட பின்னூட்டங்களை தூக்குங்கள்..வேறொரு நல்ல பதிவுடன் வாருங்கள்.
நாற்று தளத்தின் சிறப்பே நடுநிலையோடு பல உண்மைகளை வெளியில் சொல்வது தான்..
அவ்வாறு சொல்லும்போது சார்புள்ளவர்களிடம் இருந்து எதிர்க்கருத்துகள் வரவே செய்யும்..புலிகளின் வீரத்தினைப் போற்றியது போலவே குறையை சுட்டிக்காட்டினேன் என்ற உங்கள் வாதம் சரியே..
தொடர்ந்து உங்கள் கருத்தைப் பகிருங்கள்..இந்தப் பதிவு போலவே அதுவும் எமக்குப் பிடிக்காமல் போகலாம். இருப்பினும் தொடர்ந்து ஈழ உண்மைகள் வெளிவரட்டும். நன்ரி நிரூ.
செங்கோவி அவர்களின் கருத்துக்களை வழிமொழிகிறேன் . நிருபன் உங்கள் கருத்துக்களில் சில நியாயங்கள் இருக்கத்தான் செய்கிறது .ஆனாலும் "ஈழ மக்களை நம்ப வைத்து ஏமாற்றிய புலித் தலைவர் பிரபாகரன்!" என்று எழுதும் அளவிற்கு நியாயம் இருப்பதாக தெரியவில்லை .விடுதலைக்காக போராடிய பெரும்பாலான அமைப்புக்கள் விட்ட பிழைகளைதான் விடுதலைப்புளிகளும் செய்திருந்தனர் .கெரில்லா இயக்கங்களின் கட்டமைப்பு அப்படியான தவறுகளுக்கு வழி சமைத்து விடுகிறது .அரசாங்கள் போன்று அவை தொழிற்படுவது மிகவும் கடினம் .அப்படி செய்திருந்தாலும் அங்கு தனிமனித தவறுகள் இடம்பெற்றுஇருக்கும் .இதுதான் வரலாறு .இந்த நிலைக்கு விடுதலை புலிகளின் தலைவர் மட்டும் விதிவிலக்கல்ல .இறுதி வரை வன்னியில் இருந்தவர் என்ற அடிப்படையில் உங்களுக்கு அவரை விமர்சிப்பதற்கு உரிமை இருக்கிறது .இப்போது பிரபாகரன் எங்கே என்ற உண்மை தெரிந்தவர்கள் இப்படி விமர்சிக்க மாட்டார்கள் .நீங்கள் இறுதிவரை வன்னியில் இருந்தவர் என்ற ரீதியில் நிகழ்வுகளின் அடிப்படையில் யோசித்து பார்த்தீர்களானால் அவர் பற்றிய உண்மை உங்களுக்கு வெளிப்படும் .நக்கீரன் போன்ற பத்திரிக்கைகளின் கருத்துக்கள் உண்மை வெளித்தெரிவதட்கு மிகவும் இடையூறாக இருக்கின்றது .இந்த விடயம் பற்றி பேசுவதற்கு என்னை போன்றவர்களுக்கு உரிமை இல்லை என்பதே உண்மையாகும் .அதை போன்று ஒருவரை பற்றி தவறான பார்வைவையோடு பகிரங்கமாக விமர்சிக்கும் போது அதை கண்டிக்கும் உரிமை எனக்கிருக்கின்றது .என்னை பொருந்த வரைக்கும் உங்கள் வலி புரிகிறது ஆனாலும் பிரபாகரன் பற்றிய உங்களுடைய மதிப்பீடு மிகவும் தவறு!இங்கு சிலர் சந்தர்ப்பம் கிடைத்தவுடன் முட்டாள்தனமாக உளறுவதை வன்மையாக கண்டிக்கிறேன் .இந்த விடயம் பற்றி நிறைய எழுதமுடியும் ஆனாலும் அதற்கு உரிய தகுதி எனக்கில்லாத படியால் விட்டுவிடுகிறேன் .இங்கு என்னைப்போன்றவர்கள் பலர் பின்னூட்டம் இட்டிருக்கின்றார்கள் அவர்களும் என்னைப்போன்று ஒதுங்கி கொள்வதுதான் முறை .அதை விடுத்து முட்டாள்தனமாக உளறவேண்டாம் .அதனால் சாதிக்க கூடியது ஒன்றும் இல்லை!
மீண்டும் வணக்கம் நிரு!எல்லோருடைய பின்னூட்டங்களையும் அவற்றிற்கான உனது பொறுப்பு மிக்க பதில்களையும் பார்த்தேன்! உனது பதில்களின் காத்திரத்தனமை வியக்க வைக்கிறது! சக்தி மிக்க ஊடகம் ஒன்றை நடத்திச் செல்வதற்குரிய தகுதிகள் உன்னிடத்தில் இருக்கின்றன! வாழ்த்துக்கள் மச்சி!
சர்ச்சைக்குரிய கருத்தொன்றை எடுத்து ஆராயும்போதுதான், அதில் தெளிவு பிறக்கின்றன! ஒரு சிலர் உணர்ச்சிவசப்பட்டு, வார்த்தைகளை வரம்பு மீறி வெளியிட்டிருந்தாலும், பல நண்பர்கள் நேர்மையாகவே எழுதியிருக்கிறார்கள்!
மேலும் உனது கவனத்திற்கு ஒரு சிலவற்றைக் கொண்டுவருகிறேன்!
** @ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
மேலும் விடுதலைப்புலிகள் பாரிய தவறொன்று இழைத்து விட்டதாகவும், அது இன்றுவரை வெளிவராமல் மர்மமாக இருப்பதாகவும் சிலர் படம் காட்டுகிறார்கள்! அது ஒன்றும் பெரிய மர்மம் அல்ல! அதாவது 2006.08.20 க்குப் பின்னர் விடுதலைப்புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பை மேற்கொண்டார்கள்! மேலும் வன்னிமக்களை யுத்தம் நடந்த இடத்தில் இருந்து வெளியேற விடாமல் தடுத்தார்கள்! இவைதான் அந்த மர்மங்கள்! //
மச்சி...நிற்க.
ஒரு சிறிய வரலாற்றுப் பிழை,. வீட்டுக்கொருவர் நாட்டிற்கு வேண்டும் என்பத் ஜெயசிக்குறு முறியடிப்புக் காலத்திலிருந்தே தொடங்கி விட்டது.**
** ஜெயசிக்குறு காலத்தில் வீட்டுக்கொருவர் என்ற நடைமுறையினை புலிகள் கொண்டுவந்திருந்தாலும், பலவந்தமாக யாரைம் பிடித்து ஏற்றவில்லை! இயன்றவரை பிரச்சாரங்கள் வைத்தே ஆட்சேர்ப்பு செய்தனர்!
ஆனால் 2006.08.20 க்குப் பின்னர்தான் பலவந்தமாகப் பிடிக்க ஆரம்பித்தனர்! இதனையே சுட்டிக்காட்டியிருந்தேன்! **
** வணக்கம்,ஓ.வ.நாராயணன் சார்!நல்லாயிருக்கீங்களா?நல்லாயிருக்கீங்கன்னு "எகிறுறது" பாத்தாலே தெரியுது!**
வணக்கம் ஐயா! நான் நல்லாயிருக்கிறேன்! நீங்கள் எப்படி? விரைவில் சந்திப்போம்!
** பிரபாகரன் தலைமையேற்று நடாத்திய போரட்டம் தோல்வியில் முடிந்துவிட்டது. எனவே வரலாறு அவரைக் கண்டிக்கத்தான் செய்யும். இன்றில்லாவிட்டாலும் நாளை.**
நண்பர் ஞங்கள் சொன்ன மேற்படி கருத்தை நான் முற்றாக மறுக்கிறேன்! ஒருவர் தோற்றுப் போனதினால் அவருக்கான வரலாறு இல்லாமல் போய்விடாது! அல்லது வரலாறு கண்டிக்கும் என்றில்லை!
வீரபாண்டிய கட்டப்பொம்மனும் பண்டாரவன்னியனும் வெள்ளையர்களிடத்தே தோற்றுத்தான் போயினர்! அதற்காக வரலாறு அவர்களைக் கண்டிக்கவா செய்கிறது? இல்லையே! இறுதியில் அவர்கள் தோற்றுப் போனாலும் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றதினாலும், உறுதியோடு போராடியமையாலும்தான் நாம் இன்று அவர்களை மதிக்கிறோம்!
புலிகள் இயக்கத்திற்கும் பிரபாகரனுக்கும் இதுதான் நடக்கும்! இன்று சிலர் விமர்சிக்கலாம்! குற்றம் காணலாம்! இப்போதுதானே யுத்தம் முடிவடைந்திருக்கிறது! இன்னும் சில பத்து ஆண்டுகளின் பின்னர் வரலாறு ஒரு நிலையான தீர்மானம் எடுக்கும்! அப்போது ஈழப்போரில் உயிர் நீத்த அத்தனை மாவீரர்களும் போற்றப்படுவர்! புலிகளின் வீரம் பெரிதும் மெச்சப்படும்! அதுதான் நடக்கப்போகிறது!
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மன் தோற்றுத்தான் போனது! அதற்காக அந்த நாட்டு மக்கள், அன்று போராடிய தளபதிகளையும் வீரர்களையும் திட்டிக்கொண்டா இருக்கிறார்கள்? இன்று ஜெர்மனியில் இருக்கும் ஏராளமான கல்லறைத் தோட்டங்களும், நினைவு மண்டபங்களும் அன்றைய வீரர்களைப் போற்றியே வருகின்றன! தமிழர்களின் வீர வரலாறும் அப்படித்தான் நிலைநாட்டப்படும்!
** வடையண்ணா....வந்திட்டீங்க நல்ல சமயத்தில.கொஞ்ச நாளாவே நிரூவின் சில பதிவுகளுக்கு என்ன சொல்லவென்று தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறேன்.எங்கும் சரி பிழையில்லாமல் வாழ்வில்லை.
எத்தனை நாட்டுச் சரித்திரங்களைப் பார்க்கிறோம்.ஆனால் எம் விதி? அடிமைப்பட்ட வாழ்வே சந்தோஷமா !**
நன்றி ஹேமா! அப்படி மனம் நொந்து பேசாதீர்கள்! பொறுமையாக இருப்போம்! நல்லதே நடக்கும்!!
** வெல்கம் பேக் ரஜீவன் !**
நன்றி பாலா அண்ணா! உங்கள் அன்புக்கு!!
** இந்த நிரூபன் ராஜபக்க்ஷேவின் வப்பாட்டி மகனாக இருப்பான்.
சிங்களவனுக்குப் பிறந்தவன் சிங்களக் குரலில் கூவுகின்றான்.**
ராவணன் என்பவர் சொன்ன மேற்படி கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன்! நிரூபன் சொன்ன கருத்தை உங்களால் ஏற்கமுடியவில்லை என்றால், அதற்குரிய விளக்கத்தைக் கொடுப்பதே நல்லது! இப்படி மோசமான வார்த்தைகளால் திட்டுவது அழகல்ல!
** அப்படி பக்கச்சார்பின்றி எழுதினால் தானே நடுநிலையாளனாக எழுத முடியும். அப்போ நான்...பக்கச் சார்பாக எழுதுவதனைத் தான் இங்கே பின்னூட்டமிட்ட அனைவரும் விரும்புகின்றீர்களா? **
நிரூ! நல்லதொரு கேள்வி கேட்டாய்! ஆனால் ஊடக நடுவுநிலைமை
என்பது ஒரு மாயமான்! ஊடக நடு நிலைமை என்ற ஒன்றே இந்த உலகத்தில் இல்லை என்று பலர் சொல்லக் கேள்வி!
நீ இது பற்றி ஒரு பதிவு போடேன்! விவாதிப்போம்!
@ராவணன்
வணக்கம் உங்களது கருத்து ஏற்புடையது இல்லை இப்படி எல்லாம் சொல்லக்கூடாது.
ஈழத்தமிழனின் திறமையை உலகம்அறிய செய்தவர்.ஈழத்தமிழர்களை இன்று உலக அரங்கில் தலைநிமிரவைத்தவர் பிரபாகரன் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் சொல்ல முடியாது.
ஆனால்......
பிரபாகரன் ஒன்றும் கடவுள் இல்லை அவரும் ஒரு மனிதனே.தவறு செய்யாத மனிதர்கள் என்று யாரையும் இந்த உலகில் சொல்ல முடியாது.அதற்கு பிரபாகரன் ஒன்றும் விதிவிலக்கு இல்லை.என்பது என் கருத்து.
@நிகழ்வுகள்
பாஸ் முகமாலையில் நிண்டது இம்ரான் பாண்டியன் படையனியா? தீபன் தலைமையிலான சாள்ஸ் அன்டனி சிறப்பு படையணி எண்டெல்லோ அறிஞ்சிருந்தன் (கொழும்பில் இருக்கும் போது ஞாயிறு வீரகேசரியில் சமகால அரசியல் பார்க்கும் பழக்கம் இருந்தது )//
பாஸ், தீபன் வடபோர் முனைக்குத் தான் கட்டளைத் தளபதியாக இருந்தார்.
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணித் தளபதியாக பிற் காலத்தில் நகுலன் மாஸ்டர் இருந்தார்.
முதலில் சாள்ஸ் அன்ரனிப் படையணி, இம்ரான் பாண்டியன் படையணி இருவரும் சேர்ந்தே நின்றார்கள். பின்னர் மன்னார்- பூநகரி வீதி மீதான முற்றுகை பலமாகின்ற போது சாள்ஸ் அன்ரனிப் படையணி அங்கே சென்று எதிர்ச் சமர் புரிந்தார்கள்.
2008ம் ஆண்டின் நடுப் பகுதியில் நகுலன் அவர்கள் மட்டு அம்பாறை சிறப்புத் தளபதியாக பதவி உயர்வு பெற்றுச் சென்று விட, பாவலன் சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதியாகினார்.
நிரூபன், இலங்கையில் பிறந்து தாங்கள் சந்தித்த நிகழ்வுகளை நேரில் காணாதவனாக இருப்பினும்..என் கருத்துப்படி....தமிழர்களின் ஒப்பற்ற தலைவர்களில் காமராஜருக்குப்பிறகு....பிரபாகரன்தான்!
இங்கு தமிழகத் தமிழர்கள் வாய்க்கு வந்ததை உளறுவதை காணும் போது வயிரு எரிகிறது. நானும் தமிழகத்தான்-தான். எமக்கு கிடைக்கும் தகவல்கள் எல்லாமும் ஊடகங்கள் மூலம் கிடைப்பவைதான். அவற்றில் இயக்கத்திற்கு எதிரான செய்திகளை காண்பது அரிது. இந்த மாதிரி அரைகுறை தகவல்களை பெற்ற அரை வேக்காடுகள் வன்னியில் பங்கரில் தங்கி தப்பித்த மனிதனை குறை சொல்லுகின்றன. இதில் கொடுமை என்னவெனில் இவர்களில் வீரத்திறமைக்கு இவர்களில் தலைவர்களே சாட்சி.இந்திய சிறையில் இருப்பதிற்கே பலபொய்களை சொல்லி தப்பிப்பவர்கள் இவர்களின் தலைவர்கள் (அரசியல் சட்டத்தினை எரித்துவிட்டு காகித்ததினை எரித்தாக கோர்ட்டில் சொன்னது ஒரு உ-ம்). இப்படி பாதுகாப்பாக தமிழ்நாட்டில் உட்கார்ந்து வன்னி தமிழனை எதிர்த்து எழுதுபவர்கள் தான் எதிரியிடம் பணயம் வைக்கபட்டால் எப்படி எழுதுவார்கள்? எருது நோய் காக்கை அறியுமா?
இன்னோரு விடயம், ஹீரோ ஒர்ஷிப்பில் வெல்லவே முடியாதவன்தான் தமிழ்நாட்டு தமிழன். உலகத்திலேயே தமது ஹீரோகளுக்கு கோவில் கட்டும் மடையர்களை தமிழ்நாட்டிலேதான் பார்க்க இயலும். படிப்பறிவு குறைந்த ஆப்பரிக்க நாட்டவன் கூட இப்படி ஒரு முட்டாள்தனத்தை செய்ய மாட்டான். எம்ஜியார், ரஜினி போன்றோரையே உத்தமர் என நம்புகிறவர் எமோசனல் இடியட்தான் தமிழ்நாட்டவன். இதனால்தான் பிரபாகரனை குறை சொன்னலே டென்சனாகிடுறான்
இத்தனை நாட்களாக எங்கே போனிங்க பாஸ்..அவங்க இருக்கும் பொது இந்த மாதிரி எல்லாம் பதிவு இட வேண்டியது தானே.அப்போ எங்கே போச்சு தைரியம்..அங்கே அவங்க காலத்துல கட்டுபாடுகள் எப்டி இருந்துச்சு. இப்போ கலாச்சார சீரழிவுகள் எப்டி இருக்கு. ஒரு சில எட்டப்பர்கள் இருக்கும் வரை நமது தமிழ் சமுதாயத்துக்கு மானக்கேடு என்பது தொடரும்..ஆக்கபூர்வமான பதிவுகள் ஏதும் இருந்தால் இடவும்..
சகோதரி, ஊகங்களின் அடிப்படையில் கருத்துக்களை முன் வைக்கிறீங்க போலிருக்கிறது. விதுஷா, துர்க்கா முதலியோருக்கு பிரபாகரனுடம் நேரடியாகப் பேசுகின்ற அளவிற்கு தொடர்பு சாதன வசதிகள் இருந்தது. தலைவருக்கு கடிதம் அனுப்பினார்கள் என்று என்ன புதுக் கதை சொல்கிறீர்கள்?
சகோ....தொடர்புசாதனத்தில் எல்லா விடயங்களும் கதைக்க அனுமதி இல்லை தெரியுமா?
அதனால்த்தான் கடிதத்தில் எழுதி கொடுக்கப்பட்டது..
அப்போதுதான் பாணு அவர்களிடம் பொறுப்பைக்கொடுத்துவிட்டு வெளியேறினார்.
இது ஊகம் அல்ல...
வேறுவிதத்தில் சொல்லி உறுதிப்படுத்த நான் வரவில்லை...
இவ்வளவு நாளும் நான் போற்றி எழுதுகின்ற போது தாங்கள் வரவில்லையே?
நான் எழுதிய பதிவுகளில் உள்ளவ கருத்துக்கள், சில சொல்ல முடியாத விடயங்களையெல்லாம் சொல்லுகின்ற போது,
நம்பிய மக்களை ஏமாற்றினார் எனும் வார்த்தை தான் உங்களுக்கு கொடூரமாகத் தோன்றுகின்றதோ?
சகோ..
உங்கள் பதிவை கூடுதலாக படிக்கிறனான்..
சில நேரங்களில் பின்னூட்டமிடாமல் போவதுண்டு...
ஆனால் இப்படியான பதிவைப்பார்த்துவிட்டு கருத்துக்கூறாமல் போக மனம் பொறுக்கவில்லை...
உங்கள் பதிவை பார்த்து உங்கள் எழுத்துக்களில் ஓர் விருப்பு இருந்தது..
யூலை 5 ற்காக வெளியிட்ட பதிவைப்பார்த்தே சந்தோசமும் ,
இருக்கும் அச்சமான சூழ்நிலைக்குள்ளும் அப்படியோர் பதிவைப்போட்டது உங்கள் மீது ஓர் நல்லெண்ணத்தைக்கொண்டு வந்தது..
!!ஆனால் ஈழ மக்களை நம்ப வைத்து ஏமாற்றிய புலித் தலைவர் பிரபாகரன்!.இப்படியான கருத்தை ஏற்க முடியாமல் போய்விட்டது...
தமிழர்கள் தனி நபர் துதி பாடுவதில் வல்லவர்கள். இந்த பதிவை எதிர்த்து வந்திருக்கும் பின்னூட்டங்களும் அதையே உறுதிபடுத்துகின்றன.
வணக்கம் சகோதரர்களே...
எதோ என் சிற்றறிவுக்கு எட்டியவரை ...புலிகள் மீது சில தவறுகள் இருக்கலாம் தான் ..
ஆனால் வேறு யார் இருந்தார்கள்? ஏறக்குறைய 30 ஆண்டுகள் தமிழர்களுக்கு பாதுகாப்பாய் இருந்தவர்தானே தலைவர்? அவர் எடுக்க வேண்டிய ஆயுதத்தை இலங்கை ஆட்சியாளர்கள் தான் தீர்மானித்தார்கள்....செல்வா காலத்தில் காந்திய வழியில் போராடி தோற்று போஸ் வழியை பின்பற்றினார்கள்.
அவர் நம்பிய ராஜதந்திரம் பலிக்கவில்லை...பொதுமக்கள் பாதிக்கப்படும்போது உலக நாடுகள் தலையிடும் என்று நம்பினார்கள்... சுமார் 8 -10 நாடுகள் எதிர்த்து நடத்திய போர். வெற்றி பெற்றிருந்தால் அவர் அசுரர்களை அழித்த ராமனாக , கிருஷ்ணனாக வணங்கபட்டிருப்பார். தோற்றதனால் தூற்றப்படுகிறார்.
அவர் முதுகு அழுக்கை சுரண்டிக்கொண்டிருக்காமல் நாம் நம் முள்வேலி மக்களுக்கு
என்ன செய்ய போகிறோம்? திண்ணையில் உட்கார்ந்து ஊர்பொரணி பேசும் கூட்டமாகவே இருந்துவிடப்போகிறோமா?
தனிப்பட்டமுறையில் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாமலும் , சொகுசான , வாழ்க்கை வாழ்ந்த அரசு ஊழியரின் மகன் எதற்காக வீட்டை விட்டோடி தீயில் குதித்தான்?
உற்றார் உறவினரை உதறி காட்டுக்குள் பதுங்கினான்? சொகுசு கார், சரக்கு, விதவிதமான பெண்கள் கிடைக்குமேன்றா? தலைமுறை க்கும் கரையாத கோடிகளுக்ககவா? இந்த இனத்திர்காகதானே?
அவர் குறையை கண்டுபிடித்த ராஜதந்திர புலிகளே...!!! ..உங்கள் குடும்பம், வெளிநாட்டு வேலை, டாலர் சம்பளம் galfirend இதையெல்லாம் தாண்டி,,ஒரு நிமிடம் விலக்கி..தைரியம் இருந்தால்....!!! நீங்கள் ஒரு துரும்பையாவது கில்லி எறியுங்கள்.
வெட்டிப்பேச்சு வீணர்கள், எதிர்த்து நிற்பவனின் காலை வாரிவிடும் கலைஞர்கள்,காட்டிகொடுத்த கயவர்கள் இவர்களுக்கு வரலாற்றில் பஞ்சமில்லை.
இங்கு பேசிய (எழுதிய) பெரும்பாலானோர் என்ன செய்தார்கள் இந்த மக்களுக்காக?
இந்த கேள்வி எனக்கும் சேர்த்து தான்... " அவர்" தம் வரலாற்றை நிறை,குறைகளுடனே நினைவு கூர்ந்து குறைகளை களைந்து முன்னேறலாம் அவர் கனவை நனவாக்க .
காழ்ப்புணர்ச்சியில் அவர் குறையை மட்டும் கூறி தூற்றி,போராட நினைப்பவர்களையும் பின்வாங்க செய்துவிடாதீர்கள்....
அண்ணேயயை விட ஒரு சிறந்த தானை தலைவனை வரலாறு ஒருபோதும் காணாது. ஆரம்ப காலங்களில் வெளிவராமல் இருந்தது கெரில்லா இயக்கமாக இருந்ததால். அப்போதும் அண்ணே மக்களுடனேயே இருந்தார். பின்பு வராமல் போனதுக்கு வேறு காரணங்கள். ஒபாமா தனது சாதாரண குடிமகனின் ஒரு நிகழ்வுக்கு செல்வாரா? அதை விட சுதுமலை பிரகடனதுக்கு பிறகும் தோன்றினார். ஆனால் மற்றவங்க போல நான் வாறன் எண்டு பந்தா எல்லாம் இல்லாமல். ஒரு மனிதனுக்கு அதிக அழுத்தங்கள் வரும்போது தவறுகள் நேரலாம்.
வணக்கம் அண்ணே
தலைவர் மக்கள் மத்தியில் தோன்றவில்லையே தவிர அவரின் எண்ணங்கள் சிந்தனைகள் எல்லாவற்றையும் புலிகள் மக்களிடம் சென்று சேர்த்தனர் . அதற்காகவே அவர் அரசியல் பிரிவினை ஏற்படுத்தி இருந்தார் . மக்களுக்கும் தலைவருக்கும் நேரடியான தொடர்பாடல் ஊடகமாகவே அரசியல் பிரிவு செயல்பட்டது . அண்ணே சர்வதேச சமூகத்த நம்பி த்தான் தலைவர் ஏமாற்றப்பட்டார் . அது உண்மை அவர் மக்களை ஏமாற்றவில்லை / அவரும் சரி போராளிகளும் சரி இறுதி வரை போராடினார்கள் . தமிழன் ஒற்றுமையோடு அவரின் பின்னால் திரண்டிருந்தால் ஈழம் பெற்று என்றோ தந்திருப்பார் .
@vivek
அவர் முதுகு அழுக்கை சுரண்டிக்கொண்டிருக்காமல் நாம் நம் முள்வேலி மக்களுக்கு
என்ன செய்ய போகிறோம்? திண்ணையில் உட்கார்ந்து ஊர்பொரணி பேசும் கூட்டமாகவே இருந்துவிடப்போகிறோமா?
தனிப்பட்டமுறையில் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாமலும் , சொகுசான , வாழ்க்கை வாழ்ந்த அரசு ஊழியரின் மகன் எதற்காக வீட்டை விட்டோடி தீயில் குதித்தான்?
உற்றார் உறவினரை உதறி காட்டுக்குள் பதுங்கினான்? சொகுசு கார், சரக்கு, விதவிதமான பெண்கள் கிடைக்குமேன்றா? தலைமுறை க்கும் கரையாத கோடிகளுக்ககவா? இந்த இனத்திர்காகதானே?
அவர் குறையை கண்டுபிடித்த ராஜதந்திர புலிகளே...!!! ..உங்கள் குடும்பம், வெளிநாட்டு வேலை, டாலர் சம்பளம் galfirend இதையெல்லாம் தாண்டி,,ஒரு நிமிடம் விலக்கி..தைரியம் இருந்தால்....!!! நீங்கள் ஒரு துரும்பையாவது கில்லி எறியுங்கள்.//
முதலில், என்னைப் பற்றி நன்றாகப் புரிந்து கொண்டு உங்களது கருத்துக்களை முன் வையுங்கள் சகோதரா.
இவ்வளவு உணர்சிவசப்படும் நீங்கள் தமிழ் மக்களுக்காக என்ன செய்தீர்கள்? போலியாக ஒரு கள்ள புரோபைல் உருவாக்கி, பெயர் விபரமேதுமின்றிப் பின்னூட்டம் போட்டது தானே நீங்கள் இப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்த உதவி,
உங்கள் அனைவரின் நோக்கமும் மீண்டும் ஒரு தடவை வன்னி, யாழ்ப்பாண & வட கிழக்கு மக்கள் போராட வேண்டும், அவர்கள் சாக வேண்டும், சிங்களவன் மீதான உங்கள் துவேசத்திற்கும், ஆவேசத்திற்கும், ஆத்திரத்திற்கும் வன்னி மக்கள் பல்லிகடாவாக வேண்டும், நாம் ஒன்றும் சொகுசாக இருந்து வந்தவர்கள் அல்ல.
ஒரு தலைமுறையின் கையில் போரினைத் திணித்து விட்டு எல்லோரும் ஓடி விட, அவர்கள் கூட இருந்து முகாம் தனில் ஒரு கோப்பை கஞ்சிக்கு வரிசையில் நின்று கையேந்தி வந்தவர்கள். வெளிநாட்டு ராஜதந்திரப் புலிகள் எனும் பதம் இங்கே நீங்கள் பாவிக்க காரணம் என்ன?
வெளிநாட்டில் இருந்து ஒருவன் எழுதினால் அதனைப் பாவிப்பது நியாயமானது. உள் நாட்டில் போரால் பாதிக்கப்பட்ட ஒருவன் கூறும் கருத்துக்களை உங்களால் ஜீரணிக்க முடியாதுள்ளது.
இதுவரை நான் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி தேவை என்று எழுதிய பதிவுகளுக்கு நீங்கல் என்ன கிள்ளி எறிந்தீர்கள்? உங்களால் என்ன செய்ய முடிந்தது? போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள் என்று ஒரு பதிவு எழுதிய போது,
மக்களுக்கு உதவுவது இரண்டாம் பட்சம், போர்க் குற்ற வழக்கில் ராஜபக்ஸவினைக் கைது செய்ய வேண்டியதே இப்போது முதன்மையான செயல் என்று கூறியவர்கள் தானே உங்களைப் போன்றவர்கள். அந்தப் பதிவில் வந்து உங்களது எதிர்க் கருத்துக்களை முன் வைத்திருக்கலாம் தானே?
இதோ இப்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை. சகோதரன் மதிசுதா, போரில் அங்கவீனரான அன்பர் ஒருவருக்கு உதவும் முகமாக ஒரு திட்டத்தினைச் செயற்படுத்துகிறார். உங்களால் முடிந்தால், உங்களுக்கு உண்மையில் இன உணர்விருந்தால், உங்களுக்கு தமிழன் எனும் உணர்விருந்தால் எங்கே உங்கள் பங்களிப்பினை இப்போதே வழங்குங்கள் பார்க்கலாம்.
இதோ அந்த முகவரி.
http://www.mathisutha.com/2011/08/1.html
@vivek
வெட்டிப்பேச்சு வீணர்கள், எதிர்த்து நிற்பவனின் காலை வாரிவிடும் கலைஞர்கள்,காட்டிகொடுத்த கயவர்கள் இவர்களுக்கு வரலாற்றில் பஞ்சமில்லை.
இங்கு பேசிய (எழுதிய) பெரும்பாலானோர் என்ன செய்தார்கள் இந்த மக்களுக்காக?
இந்த கேள்வி எனக்கும் சேர்த்து தான்... " அவர்" தம் வரலாற்றை நிறை,குறைகளுடனே நினைவு கூர்ந்து குறைகளை களைந்து முன்னேறலாம் அவர் கனவை நனவாக்க .
காழ்ப்புணர்ச்சியில் அவர் குறையை மட்டும் கூறி தூற்றி,போராட நினைப்பவர்களையும் பின்வாங்க செய்துவிடாதீர்கள்....//
என்ன இனியும் ஒரு சந்ததியினைப் பலிக்கடாவாக்கும் எண்ணமா? இறுதி யுத்தம் வரை வன்னியில் வாழ்ந்து, ஒரு பிடி உணவிற்கு அஞ்சி, தடுப்பு முகாமில் தன் வாழ் நாளைக் கழித்த ஒருவன் கூட இனியொரு போராட்டம் பற்றிச் சிந்திக்க மாட்டான்.
உங்களால் முடிந்தால் போராடுங்கள், இனத்திற்காக உங்களது உணர்வினைக் காட்டுங்கள். அதற்காக இன்னோர் சந்ததியினைப் போராடச் சொல்லி விட்டு, குளிர்காயாதீர்கள்.
பிராபகரன் ஏமாற்றினார் என்று கதைக்கதீர்கள் அப்படி என்றால் களத்தில் அவருடைய குடும்பத்தையும் இழந்திருக்க மாட்டார். பிராபகரன் தமிழ் இனத்தை நம்பியே மோசம் போய் விட்டார் இவர்கள் பிரிவு வாதிகள் அவர் ஒரு மலையாளிகள் தலைவனோ , பஞ்சாபு தலைவரோ ஆக இருந்தால் வெற்றி கொண்டிருப்பார்! அவர் இந்த நூற்றாண்டின் வீர தமிழனை!
சகோதரா...!!!
கடுமையான எதிர் தாக்குதல்...நான் இதை எதிர்பார்க்க வில்லை.. நான் தற்செயலாகத்தான் உங்கள் பதிவை வாசித்தேன். இதற்கு முன் வந்ததில்லை.
என் பெயரைத்தான் சொல்லி இருக்கிறேனே? profile இதவரை வைத்ததில்லை. மாற்றிவிட்டேன். நான் ஏதோ உங்களை எல்லாம் கிணற்றில் தள்ளிவிட்டு வேடிக்கை பார்த்து ரசிக்க நினைப்பது போல் எழுதி இருக்கிறீர்கள். ஈழ பிரச்சினை எனக்கு முழுமையாக தெரியாது ,உங்கள் அளவுக்கு. அதனால் புரிதலில் ஏதாவது தவறு இருக்கலாம்.
நான் கருத்து சொன்ன, ஆலோசனை சொன்ன அனைவரையும் தான் சொன்னேன். நம் அனைவரையும் விட களத்தில் இருந்தவருக்கு அதிகமாகவே தெரிந்திருக்கும் என்று..
நான்" போராட"என்று சொன்னது மறுபடியுமான ஆயுத போராட்டத்தை அல்ல. அணைத்து தளங்களிலும் போராடும் (இணையத்திலும் சேர்த்துதான்) சகோதரர்களை தான் . குறை சொல்லி அவர்கள் நோக்கத்தை மழுங்கடித்து விடாதீர்கள் என்று தான் மறுபடியும் சொல்கிறேன்.
எனக்கு இதுவரை அப்படி எந்த ஒரு நிவாரண வழிமுறையும் தெரிந்திருக்கவில்லை. தெரியாதது என் குறை என்று தான் சொல்வேனே தவிர தெரிய படுத்தாமல் வெகு ஜனங்களிடம் வராமளிருக்கிறதே என்று குறையாக சொல்லமாட்டேன். நிச்சயம இதுபோன்ற உதவிகளை செய்வேன், நான் மட்டுமல்ல யாரும் செய்யலாம்.
ஆனால் ...
நம் அமைதிக்கும்,சுகத்திற்கும் , குடும்ப நிம்மதிக்கும் பங்கம் வருமாறு எந்த செயலையும் செய்யமுடியாது, அதற்கும் துணிந்து , உயிரையும் ஈந்த மாவீரர்களை தூற்ற வேண்டாம் என்று தான் மறுபடியும் கருத்து கூறும் அனைவருக்கும் சொல்கிறேன்...
பதிவும்,அதற்க்கு வந்த பின்னூட்டங்களும் மலைக்கவைக்கின்றன.
@நிரூபன்
http://www.youtube.com/watch?v=DtL2DkA4fU8&feature=related
போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி தேவை நன்றி tamilcnn
சண்முகம் நாகேஸ்வரி (65 வயது) இந்த தாயின் கணவர் கடந்த யுத்தத்தின் போது
எறிகணைவீச்சில் உயிர் இழந்து விட்டார்.
இவரும் இவரது திருமணமாகாத 35 வயது மகள் வனிதாவும் நிவாரணப் பொருட்களை
நம்பி சீவியம் நடத்துகின்றனர்.
வன்னி நிலா மக்கள் துன்பத்தில் இருக்க யாழ் நிலா மக்கள் கோவில் திருவிழா என்று கொண்டடி கொண்டு இருகிறார்கள்
யாழ் நல்லூர்ப் பெருந்திருவிழாவின் 16 ம் நாள் காட்சிகளின் (காணொளி) இந்த திருவ்ழாவில் வசூல் ஆகும் பணம் வன்னி நிலா மக்களுக்கு பயன் படுத்தலாம்
http://www.youtube.com/watch?v=7f7BWEY_YVE&feature=player_embedded
தமிழன் வர்த்தகம்
நல்லூர்ப் திருவிழா கொண்டாடும் ஈழவாதிகளால் வஞ்சிக்கபட்ட மக்களை விடுங்கள். ஈழவாதிகளால் வெளிநாடுகளில் பதுக்கபட்ட பல மில்லியன் கணக்கான டொலர்கள் எங்கே?
நம்பிக் கெட்டவன் தமிழன் என்று
என்றும் அழியாத வாசகத்தை
இன்றே எழுதுவோர் சிரங்களுக்கு
பொன்னால் முடி சூட்டிப் பூமாலையும் அணிந்து புகழ்ந்து பாடுவாள் எங்கள் தமிழ் அன்னை .எட்டப்பன் பரம்பரை எம்மோடு வாழும்போது எவர்தான் வெல்லமுடியும் சகோ?......இது தமிழனின் தலைவிதி.இதை மாற்ற யாராலும் முடியவே முடியாது .
நன்றி பகிர்வுக்கு .
i do not no wether i can post my comment or not however i do not care what people says about Mr. prabakaran. he fought for the Tamil people and he died for them as well. we may have several conflicts but the ultimate and unavoidable truth is he died for the people.
சாரிங்க, இந்த பதிவ பொறுத்தவரை நான் ஒரு வழிப்போக்கன், ஈழ மக்கள் பிரச்சினைய பதிவுலகம் வழியா புரிந்துகொள்ள முயற்சிக்கறவன் என்பது மட்டும்தான் எனது தகுதி. இங்கு வாழும் தமிழர்களுக்கு ஈழ பிரச்சினை தொடர்பான சரியான புரிந்துகொள்ளல் இல்லை என்பதே எனது கருத்து. இந்த பதிவு தொடர்பான எனது சில சந்தேகங்கள், நேரமிருந்தால் பதிலளிக்கவும்.
மக்கள் முன் தோன்றாததால் மக்களை ஏமாற்றினார் என கூற முடியாது. செங்கோவியின் கருத்துடனே நானும் ஒத்துப்போகிறேன். ஆயினும் பின்னூட்டங்களை படிக்கும்போது வரும் சந்தேகங்களே இவை. வன்னியில் புலிகளுடன் இருந்தது மூணுலட்சம் தமிழர்களே, வெளியே இருந்தது முப்பது லட்சம், அவர்களுக்கு திரு பிரபாகரனை விமர்சிக்க உரிமை இல்லை என ஒரு பின்னூட்டம் கூறுகிறது , அதாவது பெரும்பான்மை தமிழர்கள் புலிகளை ஆதரிப்பவர்களாக இருக்கவில்லை, அப்பிடி எனில் புலிகளை எப்படி தமிழ் மக்களுக்காக போராடியவர்கள், தமது மக்களுக்காக உயிர் இழந்தவர்கள் என ஏற்க முடியும்? புலிகள் புலிகளுக்காக மட்டுமே போராடியிருக்கிறார்கள் என்பதே ஒரு வழிப்போக்கன் அந்த பின்னூட்டத்தில் இருந்து விளங்குவது.
இதுவே இரண்டாவது சந்தேகத்தை தூண்டுகிறது, ஈழ மக்களின் உண்மையான பிரச்சினை என்ன? அதற்கான நியாயமான தீர்வு என்ன? புலிகள் முன்வைத்த பிரச்சினையும் கோரிய தீர்வும் நியாமானது எனில் பெரும்பான்மை மக்கள் அவர்களுக்கு ஆதரவளிக்காதது ஏன்? அவர்களும் ஆதரவளித்தார்கள் அல்லது அவர்களும் அதே பிரச்சினையை எதிர்நோக்கினார்கள் எனில் அவர்களுக்கு கருத்துகூரும் உரிமை மறுதலிக்கப்பட காரணம் என்ன? "விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து பலவகைகளில் தப்பிஒடியபர்கள்" இதற்கான அர்த்தம் என்ன? மக்களின் விருப்பை மீறியே புலிகள் செயற்பட்டார்கள் மக்கள் அவர்களை வெறுத்து வெளியேறினார்கள் என்பதுதானே சாமானியன் கண்களுக்கு படும் அர்த்தம்.
ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரித்தது ராஜபக்ஷே அரசினை தோற்றுவித்ததே புலிகள் இயக்கம்தான் என எங்கோ படித்ததாக ஞாபகம். அதற்கான காரணம் என்ன? தேர்தலை பகிஷ்கரித்தது ரணில் விக்ரமசிங்காவை ஆட்ச்சியில் இருந்து வெளியேற்றவே என்றே எனக்கு படுகிறது, அப்படியாயின் ராஜபஷேவை ஆட்சியில் அமர்த்த, இது மக்கள் முடிவா, இல்லை புலிகள் முடிவா? காரணம் என்ன? அரசியல் தீர்வு ஏற்பட்டால் நமக்கான மதிப்பு மக்கள் மத்தியில் குறைந்துவிடும் என்கிற அச்சமா? ரணில் கேட்டவன் அவனை வெளியேற்றுகிறோம் என்றால் ரணிலை நம்பி சரத் பொன்சேகாவுக்கு (ராஜபக்சேவை விட இவரே நேரடியாக தமிழ் மக்களை கொலைசெய்தவர்) வாகளித்ததன் மாயம் என்ன? இது சந்தற்பவாதமே அல்லாமல் தீர்வு காணும் நோக்கம் அல்ல எனவே படுகிறது.
அறியாமையினால் கேள்வி கேட்டுவிட்டேன், நேரமிருந்தால் பதிலளிக்கவும். திட்டி தீர்கவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
நல்ல பதிவு இதையும் வாசியுங்கள்.
இலங்கை தமிழர் பிரச்சினை – மூன்று முக்கிய குற்றவாளிகள்
//லைட்டு போடாம வந்தமா, பதிவைப் படிச்சமா, எஸ்கேப் ஆகினமா //
வணக்கம் நிரூபன், இப்படித்தான் போய்கொண்டிருந்தேன்.. இருந்தாலும் இந்த பதிவையும்/கருத்துக்களையும் இன்று தான் வாசித்தேன்.
நீண்ட நாட்களுக்குப்பின் என் முதல் கருத்து(?) உங்கள் பதிவுக்கு! அனேகமான உங்கள் கருத்துக்களோடு நானும் உடன் படுகிறேன்..
கடல் அலை வீசிக் கொண்டுதான் இருக்கும்,
தரை அரிக்கிறதே என்று கவலைப்படாமல்..
தவறோ, சரியோ அது கடலின் கடமை!
நீங்கள் ஒரு கடல் போல், உங்கள் மனதில் தோன்றியவற்றை, நீங்கள் சரி யென நினைத்தால்,, செய்யுங்கள், யாரைப்பற்றியும் கவலைப்படாமல்.. வாழ்த்துக்கள், நன்றி.
நிரூபன் உங்களுக்கு இந்த பதிவை இட சகல உரிமையும் இருக்கிறது என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை... ஆனால் என் கேள்வி எல்லாம் இது இப்பொழுது தேவைதானா என்பதே........ ஏற்கனவே பெரும்பான்மை இனமும் இன்ன பிற ஒட்டுக்குழுக்களும் தமிழர் போராட்டத்தையும்
தலைவரையும் பற்றி பொய் பிரசாரத்தை உலகத்திற்கு பரப்ப முயலும் வேளையில் நீங்கள் நடுலையாக சொன்ன சில கருத்துகளை தங்களுக்கு சார்பாக பயன்படுத்தக் கூடும்..... அது மட்டுமன்றி இப்படியான விடயங்கள் பற்றி நாம் விவாதிக்க தொடக்கி விட்டோம் என்றால் போராட்டத்தின் சில தவறுகள் திரிபடைந்து கால ஓட்டத்தில் பெரிய தவறுகளாக மாறலாம் .இதனால் அடுத்த சந்ததிக்கு நமது போராட்டம் பற்றிய ஒரு சரியான தெளிவு ஏற்படுமா என்பது சந்தேகமே...... இந்த விடயத்தில் பெரும்பான்மை இனம் என்னவோ தெளிவாகத்தான் செயற்படுகிறார்கள் போல் உள்ளது... நாம் கொஞ்சம் ஒற்றுமையாக இருந்து இப்படி தன்மானத்தோடு , சுயமரியாதையோடு போராடினோம் என்பதை சொல்லலாமே.....
நிரூபன் உங்களுக்கு இந்த பதிவை இட சகல உரிமையும் இருக்கிறது என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை... ஆனால் என் கேள்வி எல்லாம் இது இப்பொழுது தேவைதானா என்பதே........ ஏற்கனவே பெரும்பான்மை இனமும் இன்ன பிற ஒட்டுக்குழுக்களும் தமிழர் போராட்டத்தையும்
தலைவரையும் பற்றி பொய் பிரசாரத்தை உலகத்திற்கு பரப்ப முயலும் வேளையில் நீங்கள் நடுலையாக சொன்ன சில கருத்துகளை தங்களுக்கு சார்பாக பயன்படுத்தக் கூடும்..... அது மட்டுமன்றி இப்படியான விடயங்கள் பற்றி நாம் விவாதிக்க தொடக்கி விட்டோம் என்றால் போராட்டத்தின் சில தவறுகள் திரிபடைந்து கால ஓட்டத்தில் பெரிய தவறுகளாக மாறலாம் .இதனால் அடுத்த சந்ததிக்கு நமது போராட்டம் பற்றிய ஒரு சரியான தெளிவு ஏற்படுமா என்பது சந்தேகமே...... இந்த விடயத்தில் பெரும்பான்மை இனம் என்னவோ தெளிவாகத்தான் செயற்படுகிறார்கள் போல் உள்ளது... நாம் கொஞ்சம் ஒற்றுமையாக இருந்து இப்படி தன்மானத்தோடு , சுயமரியாதையோடு போராடினோம் என்பதை சொல்லலாமே....
உங்களின் பதிவு மிகவும் தவறு..பிரபாகரன் சில தவறுகள் செய்து இருந்தாலும் அவை கூட அவரது சுயநலத்திற்காக அல்ல..சிறுபான்மை மக்களுக்கு அச்சத்தை ஊட்டுபவராக இருந்தார் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்...ஆமாம் பிரபாகரன் நடவடிக்கை சரிதான் அவர்கள் சிங்கள அரசிடம்தமிழர்களைக் காட்டிக் கொடுத்திருப்பார்கள்...அதுமாதிரி சில நிகழ்வுகள் நடந்ததால்தான் பிரபாகரனின் நடவடிக்கைகள் அப்படியிருந்தன...எனவே பிரபாகரன் மாபெருந் தலைவன்தான்...எங்கள் பாரத நாட்டை பீடித்த சனி சோனியா மட்டும் இல்லையென்றால் கதையே மாறியிருக்கும் ஆனாலும் கடவுளின் சித்தம் வேறுமாதிரியாகிவிட்டது...
வைரவனின் கருத்துக்கள்..மிகச்சரிதான்
வைரவனின் கருத்துக்கள்..மிகச்சரிதான்
@sirippousingaram
உங்களின் பதிவு மிகவும் தவறு..பிரபாகரன் சில தவறுகள் செய்து இருந்தாலும் அவை கூட அவரது சுயநலத்திற்காக அல்ல..சிறுபான்மை மக்களுக்கு அச்சத்தை ஊட்டுபவராக இருந்தார் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்...//
பதிவினை ஒரு தடவை முழுமையாகப் படித்து தங்கள் கருத்தினை முன் வைக்க முடியுமா?
இப் பதிவில் எங்கேயாச்சும் சிறுபான்மை மக்களுக்கு பிரபாகரன் அச்சத்தை ஊட்டுபவராக இருந்தார் என்று கூறப்பட்டுள்ளதா?
பிரபாகரன் அவர்கள் போராடியது சிறுபான்மை மக்களுக்காக என்பதனைத் தாங்கள் அறியவில்லையோ?
Post a Comment