பதிவுலகில் வலியது வெல்லும், மென்மையானது அழிந்து விடும் எனும் கொள்கை தான் எழுதப்படாத விதியாக, நிழல் அரசியல் போன்று நிலவுகின்றது. இது அனைவருக்கும் பொதுவாகத் தெரிந்த ஓர் விடயம். விளங்கக் கூறின் ஓட்டுக்கள் அதிகம் பெற்று, ஒரு பதிவரின் பதிவுகள் பிரபலமாகின்ற போது, அப் பதிவரைப் பற்றியும், அவரது எழுத்துக்கள் பற்றியும் அனைவரும் அறிந்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படுகின்றது. ஓட்டரசியலின் மூலம், ’நீ எனக்கு குத்து, நான் அப்புறமா வந்து உனக்கு ஓட்டுப் போடுகிறேன் எனும் விதி தான் எழுதப்படாத, பிறருடன் பேசப்படாத மௌனமான விதியாக இருக்கின்றது.
தொடர்ச்சியாகப் பல பதிவர்களது பதிவுகளினைப் படித்துப் பின்னூட்டமிட்டு, ஓட்டுப் போடும் நானே ஒரு சில நாட்கள் பதிவுலகப் பக்கம் வரவில்லை என்றால், மொய்க்கு மொய் என்னும் கொள்கை சில பதிவர்கள் மூலமாக நிறைவேறாத நிலையில் ஏமாந்திருக்கிறேன் என்றால்; ஏனைய பதிவர்களின் நிலமையினைச் சொல்லியா நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். பல அருமையான, காத்திரமான படைப்புக்களை எழுதவல்ல பதிவர்கள் ஓட்டுக்கள் கிடைக்காது, இன்று வரை வெளித் தெரியா திறமைசாலிகளாக பதிவுலகினுள் இருக்கின்றார்கள்.
இத்தகைய வெளித் தெரியாத திறமைசாலிகள் வரிசையில் வந்த ஒரு பதிவர் தான் இணையம் தாஹீர். இவர் ஆரம்ப காலத்தில் பல சுவாரஸ்யமான படைப்புக்களை கவிதை, கட்டுரை வடிவில் எழுதித் திரட்டிகளில் இணைத்திருக்கிறார். தொடர்ச்சியாகப் பல பதிவுகள் எழுதித் திரட்டிகளில் இணைத்து, பதிவர்களின் பதிவுகளுக்கும் பின்னூட்டமிட்டு வந்திருக்கின்றார். ஆனால் காலவோட்டத்தில் அவரின் பதிவுகள் பிரபலமடையாது ப்ளாக்கினுள் முடங்கிக் கிடந்தன. இதனால் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்ட தாஹீர் , பதிவுலகில் பதிவர்கள் ஒரு குழுவாகவே செயற்படுகின்றார் எனும் முடிவிற்கு வந்தார்.
இதன் பின்னர் பதிவர்கள் எழுதுகின்ற காத்திரமான பதிவுகள் தொடக்கம், காமெடியான பதிவுகள் வரை அனைத்தையும் தனது தளத்தில் காப்பி பேஸ்ட் பண்ணத் தொடங்கினார். பதிவுலகில் பல பதிவர்கள் பதிவெழுதி பதினைந்து நிமிடமாவதற்கு முன்பதாகவே, பதிவுகளைக் காப்பி பேஸ்ட் பண்ணித் தன் வலையில் புதிய அதிரடித் தலைப்புக்களோடு பிரசுரித்து, ஹிட்ஸ் ஏற்றித் தன் வலைக்கான வருகையாளார்களின் எண்ணிக்கையினை அதிகரித்துச் சந்தோசம் கண்டு கொண்டிருந்தார் தாஹீர்.
தாஹீர் பல பதிவர்களின் பதிவினைக் காப்பி பேஸ்ட் செய்வதனை அறிந்த பதிவர்கள் திரட்டிகளிடம் முறையிட்டு, தாஹீரினைத் திரட்டிகளை விட்டு நீக்கும் படி புகார் கொடுத்தார்கள். தாஹீர் திரட்டிகளை விட்டு நீக்கப்பட்ட பின்னரும் தன் காப்பி பேஸ்ட் செயலில் ஓய்வின்றித் தொடர்ந்தும் முனைப்புடன் செயற்பட்டார். இறுதியில் என் பதிவுகளும் தாஹீரின் தளத்தில் காப்பி பேஸ்ட் பதிவுகளாக வெளிவருவதனை அறிந்து அவரினைப் பற்றி, என் வலையில் ’பதிவர்களே! திரட்டிகளே! நீங்கள் இனியும் மௌனமாக இருக்கலாமா?’ எனும் பதிவினூடாக பதிவுலகில் உள்ள அனைவரும் விழித்துக் கொள்ளும் வண்ணம் எழுதியிருந்தேன்.
அதன் விளைவு, என் வலையினைப் போன்று நாத்து எனும் பெயரில் ஒரு போலி வலையினை உருவாக்கி, என் பதிவுகள் வெளியாகிச் சில நிமிடங்களில் அந்த வலையில் எனது பதிவுகளைக் காப்பி பேஸ்ட் செய்து திரட்டிகளில் இணைத்து வந்தார் தாஹீர். இச் செயலால் கடுப்பாகிய நான் தாஹீருடன் பேசிப் பார்த்தேன். அவர் போலி வலையினை நீக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார். பின்னர் சகோதரன் மதிசுதாவின் உதவியோடு தாஹீரிடம் பேச்சுவார்த்தை நடாத்தி, இறுதியில் போலி வலையினை டீலீற் செய்வதற்கு இணங்கினார் தாஹீர்.
தாஹீரோடு பேசும் போது, தான் காப்பி பேஸ்ட் செய்வது, பதிவுலகம் தன்னைப் புறக்கணித்த காரணத்தினால் என்றும், பதிவர்கள் குழுவாக ஓட்டுப் போட்டுத் தம் பதிவுகளைப் பிரபல்யப்படுத்துகிறார்கள் என்றும் ஆதங்கப்பட்டார். பல சிரமங்களின் மத்தியில் மதிசுதாவின் ஆலோசனைக்கமைவாக தாஹீர் தனது காப்பி பேஸ்ட் முயற்சியினைக் கைவிட்டு, சுய பதிவுகளைத் தன் வலையில் பகிர்வதற்கு உடன்பட்டார். தற்போது காப்பி பேஸ்ட் இன்றி சுய பதிவுகளைத் தான் தன் வலையில் பகிர்ந்து வருகிறார் தாஹீர். இது மனதிற்கு மகிழ்ச்சி தரும் ஓர் விடயமாகும்.
தாஹீரின் புதிய வலையுலக மீள் பிரவேசத்திற்கு என் வாழ்த்துக்களை உங்கள் அனைவரோடும் சேர்ந்து தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கே தாஹீர் பற்றி நான் பகிர்ந்து கொண்டமைக்கான காரணம்,
பல பதிவர்கள் தமக்கு ஓட்டுக்கள், கமெண்டுகள் போடும் பதிவர்களிற்கு மாத்திரம் மொய்க்கு- மொய் எனும் பாணியில் தமது செயற்பாடுகளைப் பகிர்ந்து விட்டு நின்று விடுகிறார்கள். இதனால் பல பதிவர்கள் பதிவுலக வெள்ளோட்டத்தில் காணாமற் போய்விடுகின்றார்கள். தாஹீரின் சம்வத்தினை அடிப்படையாகக் கொண்டு எம்மால் முடிந்த வரை, ஏனைய பதிவர்களின் பதிவுகளைப் படிக்கும் போது, கமெண்டு போட முடியாவிட்டாலும், கமெண்ட் போட நேரம் இல்லா விட்டாலும் ஓட்டுக்கள் போட்டு, அவர்களை ஊக்கப்படுத்தலாம் அல்லவா. தாஹீரினைப் போல் வலையுலகில் வெளித் தெரியாது பாதிக்கப்பட்ட பதிவர்கள் பலர் இருப்பார்கள். இவர்களுக்கு நாம் அனைவரும் செய்யப் போவது என்ன?
பிற் சேர்க்கை: பதிவுலகால் புறக்கணிக்கப்பட்ட தாஹீர் பற்றிய உண்மைச் சம்பவத்தினை, மேற்படி சம்பவத்தோடு தொடர்புடைய தாஹீரின் பரிபூரண சம்மதத்தோடு, பதிவர்கள் அனைவருக்கும், ஓர் அனுபவப் பதிவாக இப் பதிவு அமைய வேண்டும் எனும் நோக்கில் இங்கே பகிர்ந்திருக்கிறேன்.
புலி எதிர்ப்பாளர், ஆபாசப் பதிவர் நிரூபனைப் புறக்கணிப்போம்!
வலையுலகில் எப்பொழுதும் திறந்திருக்கும் எனது பின்னூட்டப் பெட்டியினுடாக கருத்துக்களைச் சொல்லத் திராணியற்றவர்கள், ஈழப் போராட்டம் பற்றிய புரிதலற்றவர்களால் பல பதிவர்களுக்கு அனுப்படும் மின்னஞ்சல் தான் புலி எதிர்பாளர் நிரூபனைப் புறக்கணிப்போம். நிரூபனின் பதிவுகளுக்கு ஓட்டுப் போடுவதை நிறுத்துவோம் எனும் மின்னஞ்சலாகும். நான் வலையுலகில் காலடி எடுத்து வைத்த நாட் தொடக்கம், நேரடியாகவும், மறைமுகமாகவும், மைனஸ் ஓட்டு வடிவிலும் என் பதிவுகளுக்கும், என் மீதும், என் வலை மீதும் சேறு பூசும் முயற்சியில் ஈடுப்பட்ட ஒரு கும்பலுக்கு, தற்போது கிடைத்திருக்கும் அவல் தான் ‘ஈழ மக்களை நம்ப வைத்து ஏமாற்றிய புலித் தலைவர் பிரபாகரன்’’ எனும் பதிவாகும்.
இதனைச் சான்றாக வைத்து புலி எதிர்பாளர் நிரூபனைப் புறக்கணியுங்கள் எனும் தொனியில் ஒரு சிலர் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகின்றார்கள். அதிமுக ஜெயலலிதா; ஈழ மக்கள் மீது அனுதாபங் காட்டும் போது, அது சந்தர்ப்பவாத அரசியல் என்பதனை உணராது, அவரைப் பின் தொடர்ந்து தாமும் ஈழ மக்கள் மீது ஆர்வம் உள்ளவர்கள் எனத் தம்மை வெளிப்படுத்தும் சந்தர்ப்பவாத ஈழ நலன் விரும்பிகள்;
ஈழம் பற்றிய பல்வேறு பதிவுகள், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வேண்டிய பல பதிவுகள் வெளியான வேளையில் மாத்திரம் மௌனமாக இருந்து விட்டு, தற்போது பஞ்சாயத்துக் கூட்டிக் கையிலெடுத்திருக்கும் ஓர் விடயம் தான் இந்தப் புறக்கணிப்பு, ஓட்டுப் போடுவதை நிறுத்தும் நாடகம்.
இன்று வரை இண்ட்லியில் 986 பேரைப் பாலோ செய்து வந்தேன். ஒவ்வோர் பதிவுகளை இணைத்த பின்னரும், பல பதிவர்களுக்கு ஓட்டுக்களை பாரபட்சமின்றி வழங்கி வந்துள்ளேன். ஆனால் தற்சமயம், எனக்கு இண்ட்லி மூலம் கிடைக்கும் ஓட்டுக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையினைத் தொடர்ந்து நான் இண்ட்லியில் பாலோ செய்யும் அன்பு உள்ளங்களின் எண்ணிக்கையினைக் குறைக்கலாம் என தீர்மானித்துள்ளேன்.
திரட்டிகளில் தமது பதிவுகளை இணைத்துள்ள பதிவர்களுக்கும், திரட்டிகளில் தம் பதிவுகளை இணைக்காத பதிவர்களுக்கும் தொடர்ச்சியாக என்னால் முடிந்த வரையில் கருத்துக்களைக் காத்திரமான முறையில் வழங்கி வருகிறேன். ஆனாலும் புறக்கணிக்க நினைக்கும் அன்பவர்கள் என் வாதத்திற்கு எதிர்க் கருத்துக்களை முன் வைத்து விட்டுப் புறக்கணித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நினைக்கின்றேன்.
பாட்டு ரசிகனுக்கு ஓர் வெற்றிக் கேடயம்!
என் வலையில் ஜூன் மாதம் இடம் பெற்ற பதிவர்கள் பரபரப்புடன் மோதும் காமெடி ஜிம்மி! போட்டியில் பங்கு பற்றி, இறுதி வரை, முதல் எழுத்துக்களை அடிப்படையாக வைத்துப் பல பாடல்களைக் கண்டு பிடித்து, சளைக்காது கும்மியடித்தாடிய பாட்டு ரசிகன் வலைப் பதிவின் சொந்தக்காரர் பாட்டு ரசிகன் அவர்களுக்கு, இன்றைய பதிவில் வெற்றிக் கேடயத்தினை வழங்குவதோடு, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதிலும் நாற்று வலைப் பதிவு வாசகர்கள் சார்பில் மகிழ்ச்சியடைகின்றேன்.
பாட்டு ரசிகனின் வலைப் பூவிற்குச் செல்ல: http://tamilpaatu.blogspot.com
இவ் வெற்றிக் கேடயத்தினைத் தன் கை வண்ணத்தின் மூலம் வடிவமைத்திருந்தார் நிகழ்வுகள் வலைப் பதிவுச் சொந்தக்காரர் சகோதரன் கந்தசாமி அவர்கள். அவருக்கும் இவ் வேளையில் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
|
152 Comments:
ஆஆஆஆஆஆஆஅ... நான் தான் 1ஸ்ட்டாஆஆஆஆஆஆஆ? இருங்க படிச்சதும் பதில் போடுறேன்... இப்போ நித்திரை வருதூஊஊஊஊ.. பிறகு மாறிக்கீறிப் பதில் போட்டுவச்சிடப்போறேன் அவ்வ்வ்வ்வ்வ்:))
//அனைத்துப் பதிவர்களும் படிக்க வேண்டிய பதிவு!//
பீடிகை பலமா இருக்கே..
//பதிவுலகில் வலியது வெல்லும், மென்மையானது அழிந்து விடும் எனும் கொள்கை தான் எழுதப்படாத விதியாக, நிழல் அரசியல் போன்று நிலவுகின்றது. //
பதிவுலகில் மட்டுமா? எங்கும் அப்படித் தானே?
//ஓட்டரசியலின் மூலம், ’நீ எனக்கு குத்து, நான் அப்புறமா வந்து உனக்கு ஓட்டுப் போடுகிறேன் எனும் விதி தான் எழுதப்படாத, பிறருடன் பேசப்படாத மௌனமான விதியாக இருக்கின்றது.//
ஆமாம் பாஸ்..நம்மை ரொம்ப டயர்டு ஆக்குற விஷயம் இது தான்..
இளைய தளபதி நிரூபனின் புதிய தலைப்புக்கள் எதுவும், என் புலனாய்வுத்துறைப்:) பகுதியில், கடந்த 4 நாட்களாக மேலே வரவில்லை, அதனால இப்போ நேரடியாக வந்து செக் பண்ணினேன்... வந்திருக்கு நிறையத் தலைப்புக்கள்...கர்ர்ர்ர்ர்ர்ர்:)).
அங்கின ஏதோ கெட்ட கிருமி:) தாக்கியிருக்குதோ தெரியேல்லை... பொறுங்க கண்டு பிடிக்கிறேன்(இது வேற கண்டு பிடிக்கிறது:)).
// பல அருமையான, காத்திரமான படைப்புக்களை எழுதவல்ல பதிவர்கள் ஓட்டுக்கள் கிடைக்காது, இன்று வரை வெளித் தெரியா திறமைசாலிகளாக பதிவுலகினுள் இருக்கின்றார்கள்.//
உண்மை தான் நிரூ..எழுதும் திறன் உள்ள சிலரும் நடிகை படம் போட்டு நேரத்தை வீணாக்கிக் கொண்டுள்ளனர்..ஹி..ஹி!
//இதனால் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்ட தாஹீர் , பதிவுலகில் பதிவர்கள் ஒரு குழுவாகவே செயற்படுகின்றார் எனும் முடிவிற்கு வந்தார்.
//
அடப்பாவமே..
//அதன் விளைவு, என் வலையினைப் போன்று நாத்து எனும் பெயரில் ஒரு போலி வலையினை உருவாக்கி, என் பதிவுகள் வெளியாகிச் சில நிமிடங்களில் அந்த வலையில் எனது பதிவுகளைக் காப்பி பேஸ்ட் செய்து திரட்டிகளில் இணைத்து வந்தார் தாஹீர்.//
ஏன் பாஸ், இந்த காப்பி ரைட்டு..காப்பி ரைட்டுன்னு ஒன்னு சொல்வாங்களே..அதுக்கு மரியாதையே கிடையாதா? அதால என்ன தான் யூஸ்?
//தற்போது காப்பி பேஸ்ட் இன்றி சுய பதிவுகளைத் தான் தன் வலையில் பகிர்ந்து வருகிறார் தாஹீர். //
யோ, தாஹீர் தளத்திற்கு லின்க் எங்கய்யா?
@athira
ஆஆஆஆஆஆஆஅ... நான் தான் 1ஸ்ட்டாஆஆஆஆஆஆஆ? இருங்க படிச்சதும் பதில் போடுறேன்... இப்போ நித்திரை வருதூஊஊஊஊ.. பிறகு மாறிக்கீறிப் பதில் போட்டுவச்சிடப்போறேன் அவ்வ்வ்வ்வ்வ்:))//
அவ்...இவ்ளோ தூரம் வந்திட்டு, இப்படிச் சொல்லிட்டு எஸ் ஆகலாமா அக்காச்சி?
@செங்கோவி
//அனைத்துப் பதிவர்களும் படிக்க வேண்டிய பதிவு!//
பீடிகை பலமா இருக்கே..//
இப்படிப் போட்டாச்சும் நாமளும் ஒரு பதிவர் என்பதை நிரூபிக்க வேண்டியதா இருக்கே பாஸ்.
//ஏனைய பதிவர்களின் பதிவுகளைப் படிக்கும் போது, கமெண்டு போட முடியாவிட்டாலும், கமெண்ட் போட நேரம் இல்லா விட்டாலும் ஓட்டுக்கள் போட்டு, அவர்களை ஊக்கப்படுத்தலாம் அல்லவா. //
நீங்க சொல்றது நியாயம் தான்..என்னை மாதிரி பிஸி ஆட்களால ஒரு நாளைக்கு 10 பேர் பதிவை மட்டும் தான் படிக்க முடியுது..அதுவே ரொம்ப கஷ்டப்பட்டு!
பதிவுலகத்துல ஆயிரக்கணக்குல பதிவர்கள் இருக்காங்க..அதுல நிச்சயம் நூற்றுக்கணக்குல நல்ல பதிவர்கள் இருப்பாங்க. எப்படி அவங்களை இனம் கண்டு, ஊக்குவிக்க? அதுக்கான தேடலுக்கு நேரம் இல்லையே...
ஒன்னு செய்யலாம்..உங்களை மாதிரி ஃபிரீயா இருக்குற ஆளுங்க, அந்த மாதிரி தரமான தளங்களை அறிமுகப்படுத்துங்க. நானும் போறேன்..அதுலயும் ஒரு சிக்கல் வரும்..
@செங்கோவி
//பதிவுலகில் வலியது வெல்லும், மென்மையானது அழிந்து விடும் எனும் கொள்கை தான் எழுதப்படாத விதியாக, நிழல் அரசியல் போன்று நிலவுகின்றது. //
பதிவுலகில் மட்டுமா? எங்கும் அப்படித் தானே//
அவ்....எதைக் கொண்டு வந்து அண்ணாச்சி,
எதற்குள் ஜாஜிண்ட் பண்றார்.
சிக்கல் என்னன்னா..
நான் கமெண்ட்/ ஓட்டு தாஹிர் உள்ளிட்ட 10 நல்ல பதிவர்களுக்கு டெய்லி போட முடியும்..அவங்களும் நல்ல மனுசங்கள்கிறதால எனக்கு திரும்ப கமெண்ட்/ஓட்டு போடலாம்..
மறுபடியும் மொய்க்கு மொய் வட்டத்துல சிக்குவோம்..அப்போ மீதி நூற்றுச் சொச்சம் நல்ல பதிவர்கள் தாஹீர் மாதிரியே கடுப்பாகலாம் இல்லையா?
அவங்கள்ல ஒருத்தர் தாஹிர் மேல கடுப்பாகலாம் இல்லையா..அவங்களும் தாஹிருக்கு போட்டியா டாஹிர்-னு ஒரு காப்பிபேஸ்ட் தளம் போடலாம் இல்லியா?
இதுக்கு என்ன முடிவு?
இதுக்கு என்ன முடிவு?...
எனக்குத் தெரியலை நிரூ..
நேரப் பற்றாக்குறையை அனைத்து பதிவர்களும் புரிஞ்சிக்கணும்..தாஹிரால் எத்தனை பேருக்கு ஓட்டு போட முடியும்? 1000?
900?
800?
500?
400?
200?
100?
10 - 20..இல்லியா..அவருக்கும் வேலை இருக்கும்..குடும்பம் இருக்கும்..
இங்க நாம புரிஞ்சிக்க வேண்டியது ஒன்னு இருக்கு..
இங்க நாம புரிஞ்சிக்க வேண்டியது ஒன்னு இருக்கு..
பதிவுலகம் அடிப்படையில் பெரும்பாலான மக்களால் டைம் பாஸ்க்கு பயன்படுத்தப்படுவது..
பதிவுலகில் மட்டும் அல்ல, நம் நாட்டில் அ.முத்துலிங்கம் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்?
அவ்வளவு ஏன் பாரதியைப் பத்தி அவர் காலத்தில் எத்தனை பேருக்குத் தெரியும்? அவர் கால்த்திலும் பொழுதுபோக்குக்கே மகக்ள் ஆதரவு கொடுப்பார்கள்..இது நிதர்சனம்..
@athira
இளைய தளபதி நிரூபனின் புதிய தலைப்புக்கள் எதுவும், என் புலனாய்வுத்துறைப்:) பகுதியில், கடந்த 4 நாட்களாக மேலே வரவில்லை, அதனால இப்போ நேரடியாக வந்து செக் பண்ணினேன்... வந்திருக்கு நிறையத் தலைப்புக்கள்...கர்ர்ர்ர்ர்ர்ர்:)).
அங்கின ஏதோ கெட்ட கிருமி:) தாக்கியிருக்குதோ தெரியேல்லை... பொறுங்க கண்டு பிடிக்கிறேன்(இது வேற கண்டு பிடிக்கிறது:)).//
அவ்....என் ப்ளாக்கினை மீண்டும் ஒரு தடவை பாலோ பண்ணீங்க என்றால்..எல்லாம் சரியாகிடும்,
@செங்கோவி
ஆமாம் பாஸ்..நம்மை ரொம்ப டயர்டு ஆக்குற விஷயம் இது தான்..//
இப்போ தமிழ் மணம் ஓக்கே பாஸ்,
முன்பெல்லாம் தமிழ் மணத்தில் ஓட்டுப் போடுவதற்கு கை வலிச்சிடும் பாஸ்.
சொந்த வாழ்க்கையிலும், அலுவலக வாழ்க்கையிலும் டர்ர் ஆகி, ரிலாக்ஸ் பண்ண ப்ளாக் பக்கம் வர்றவங்களே அதிகம்..ஓட்டு போடறதானாலேயே அதை எல்லாரும் விரும்பிப் படிக்க மாட்டாங்க..
இவரு ‘நல்லவரு’ ன்னு புரிஞ்சுக்கிட்டா டாட்டா காட்டிடுவாங்க..அதான் இங்க பிரச்சினையே..
இலக்கியத்தை, தரமான படைப்புகளை கட்டாயப்படுத்தி திணிக்க முடியாது..
@செங்கோவி
// பல அருமையான, காத்திரமான படைப்புக்களை எழுதவல்ல பதிவர்கள் ஓட்டுக்கள் கிடைக்காது, இன்று வரை வெளித் தெரியா திறமைசாலிகளாக பதிவுலகினுள் இருக்கின்றார்கள்.//
உண்மை தான் நிரூ..எழுதும் திறன் உள்ள சிலரும் நடிகை படம் போட்டு நேரத்தை வீணாக்கிக் கொண்டுள்ளனர்..ஹி..ஹி!//
அவ்....இது யாரு....
@செங்கோவி
ஏன் பாஸ், இந்த காப்பி ரைட்டு..காப்பி ரைட்டுன்னு ஒன்னு சொல்வாங்களே..அதுக்கு மரியாதையே கிடையாதா? அதால என்ன தான் யூஸ்?//
பாஸ், இந்தக் காப்பி ரைட்டிற்கு மரியாதை இருக்கு, ஆனால் நம்ம தமிழர்களின் குணம் உங்களுக்குத் தெரியும் தானே?
கூகுளிடம் புகார் செய்து அவங்க வலையினை நிறுத்தினாலும்,
ஒன்னுக்குப் பத்து வலையினைப் புதிதாக உருவாக்குவாங்க பாஸ்.
@செங்கோவி
//தற்போது காப்பி பேஸ்ட் இன்றி சுய பதிவுகளைத் தான் தன் வலையில் பகிர்ந்து வருகிறார் தாஹீர். //
யோ, தாஹீர் தளத்திற்கு லின்க் எங்கய்யா//
தாஹீரின் லிங் இல்லையா...
இதோ இணைச்சிடுறேன்.
உண்மையில் இலக்கியமும், தரமான படைப்புகளும் பெருவாரியான மக்களுக்கானவை அல்ல..அவற்றைப் படிப்பதற்கான வாசிப்புத்திறன் எல்லா மக்களுக்கும் வாய்ப்பதில்லை..
உலகின் எல்லா இலக்கியகர்த்தாக்களும் சந்திக்கும் பிரச்சினை தான் இது..அவர்களைப் போன்றே, நீங்களும் சுய திருப்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு எழுத வேண்டியது தான்..
ஏனெனில் நல்ல படைப்பை காலம் மட்டுமே மக்களிடம் கொண்டு சேர்க்கும்!
அதுவரை பொறுமையுடன் ஹிட்ஸ் பற்றிக் கவலைப்படாமல், ஆத்ம திருப்திக்காக எழுதுவதே வழி!
இதைவிடுத்து ‘பழிக்குப் பழி - கண்ணுக்குக் கண்’ என்று இறங்கினால், நீங்கள் இழப்பது படைப்புத் திறனையே!
தமிழ்மண ஓட்டை விட அதுவே பேரிழப்பு..
நன்றி!
@செங்கோவி
நீங்க சொல்றது நியாயம் தான்..என்னை மாதிரி பிஸி ஆட்களால ஒரு நாளைக்கு 10 பேர் பதிவை மட்டும் தான் படிக்க முடியுது..அதுவே ரொம்ப கஷ்டப்பட்டு!
பதிவுலகத்துல ஆயிரக்கணக்குல பதிவர்கள் இருக்காங்க..அதுல நிச்சயம் நூற்றுக்கணக்குல நல்ல பதிவர்கள் இருப்பாங்க. எப்படி அவங்களை இனம் கண்டு, ஊக்குவிக்க? அதுக்கான தேடலுக்கு நேரம் இல்லையே...
ஒன்னு செய்யலாம்..உங்களை மாதிரி ஃபிரீயா இருக்குற ஆளுங்க, அந்த மாதிரி தரமான தளங்களை அறிமுகப்படுத்துங்க. நானும் போறேன்..அதுலயும் ஒரு சிக்கல் வரும்..//
அடிங்...நமக்கு சிக்கல் எப்போதுமே பின்னாடி வரும் பாஸ்.
நான் என்ன பிரியாவா இருக்கேன்..
அவ்...
ஓட்டுப் போடும் போது, நமக்குப் பிடித்த பதிவுகளுக்கும் சேர்த்து ஓட்டுப் போடலாமில்லையா.
@செங்கோவி
சிக்கல் என்னன்னா..
நான் கமெண்ட்/ ஓட்டு தாஹிர் உள்ளிட்ட 10 நல்ல பதிவர்களுக்கு டெய்லி போட முடியும்..அவங்களும் நல்ல மனுசங்கள்கிறதால எனக்கு திரும்ப கமெண்ட்/ஓட்டு போடலாம்..
மறுபடியும் மொய்க்கு மொய் வட்டத்துல சிக்குவோம்..அப்போ மீதி நூற்றுச் சொச்சம் நல்ல பதிவர்கள் தாஹீர் மாதிரியே கடுப்பாகலாம் இல்லையா?
அவங்கள்ல ஒருத்தர் தாஹிர் மேல கடுப்பாகலாம் இல்லையா..அவங்களும் தாஹிருக்கு போட்டியா டாஹிர்-னு ஒரு காப்பிபேஸ்ட் தளம் போடலாம் இல்லியா?
இதுக்கு என்ன முடிவு?//
அவ்....நல்லதொரு கேள்வி பாஸ்,
இதுக்கு முடிவே இல்லைப் போல இருக்கே.
பாஸ், ஆனாலும் பதிவுகளை மாத்திரம் படிக்கும், பின்னூட்டம் எழுதாத நபர்கள், ஓட்டுப் போடலாமில்லையா.
//
நிரூபன் said...
@செங்கோவி
உண்மை தான் நிரூ..எழுதும் திறன் உள்ள சிலரும் நடிகை படம் போட்டு நேரத்தை வீணாக்கிக் கொண்டுள்ளனர்..ஹி..ஹி!//
அவ்....இது யாரு...//
யோ, நக்கலா.........நான் தான்யா அது!
@செங்கோவி
இதுக்கு என்ன முடிவு?...
எனக்குத் தெரியலை நிரூ..
நேரப் பற்றாக்குறையை அனைத்து பதிவர்களும் புரிஞ்சிக்கணும்..தாஹிரால் எத்தனை பேருக்கு ஓட்டு போட முடியும்? 1000?
900?
800?
500?
400?
200?
100?
10 - 20..இல்லியா..அவருக்கும் வேலை இருக்கும்..குடும்பம் இருக்கும்..
இங்க நாம புரிஞ்சிக்க வேண்டியது ஒன்னு இருக்கு..//
காத்திரமான கருத்துக்களைத் தந்திருக்கிறீங்க பாஸ்,
அடுத்து யார் வரப் போகின்றார் என்று பார்ப்போம்.
அதிமுக ஜெயலலிதா; ஈழ மக்கள் மீது அனுதாபங் காட்டும் போது, அது சந்தர்ப்பவாத அரசியல் என்பதனை உணராது, அவரைப் பின் தொடர்ந்து தாமும் ஈழ மக்கள் மீது ஆர்வம் உள்ளவர்கள் எனத் தம்மை வெளிப்படுத்தும் சந்தர்ப்பவாத ஈழ நலன் விரும்பிகள்;//
ஈழக்கவிஞர் காசி ஆனந்தன் சொல்கிறார்.தமிழக சட்டசபையில்,ராஜபக்ஸேவை போர்க்குற்றவாளி என தீர்மானம் போட்டது வரலாற்று நிகழ்வு என்று.இது ஜெயலலிதாவின் ஈழமக்களின் மீதான அக்கறையே ஆகும்.கடந்த 5 வருடங்களில் தி.மு.க அரசு இப்படியொரு தீர்மானம் இயற்றவில்லை.
நண்பரே நம் ப்ளாக்கிற்கு வந்து கமெண்ட்,ஓட்டு போடும் சிலருக்கு மட்டுமே நாமும் செல்லமுடியும்.என்னதான் லிங்க் கொடுத்தாலும் ஒருமுறை செல்லலாம்.அடிக்கடி செல்ல இயலாது.5000 தமிழ் பதிவர்கள் இயங்குவதாக புள்ளிவிவரம் சொல்கிறது
//வலையுலகில் எப்பொழுதும் திறந்திருக்கும் எனது பின்னூட்டப் பெட்டியினுடாக கருத்துக்களைச் சொல்லத் திராணியற்றவர்கள், ஈழப் போராட்டம் பற்றிய புரிதலற்றவர்களால் பல பதிவர்களுக்கு அனுப்படும் மின்னஞ்சல் தான் புலி எதிர்பாளர் நிரூபனைப் புறக்கணிப்போம்.//
இப்படியான மைல்கள் இதுவரை எனக்கு வந்தது இல்லை, ஒருவேளை வந்து இருந்தாலும் அதை நான் செயல் படுத்த போவதும் இல்லை,
எனக்கு புடிக்காதவைகளை நீங்கள் எழுதினால் கூட நான் உங்களை ஆதரிப்பேன் காரணம், நான் எழுத்து சுதந்திரத்தை மதிக்குறேன்,
வாக்கு விடயத்தில் நீங்கள் சொல்லியது உண்மையே
ஆனால் நான் நான் விரும்பி படிக்கும் பதிவர்களின் வலைப்பூக்களை
தவாராமல் போய் படிப்பேன் வாக்கு போடுவேன் , அவர்கள் என் வலைப்பூ பக்கம் வந்தார்களா என்று பார்ப்பது இல்லை,
நேரம் இல்லா காரணத்தால் வேறு புதியவர்கள் பக்கம் போறது இல்லை பாஸ்
எனது வாக்குகள் உங்களுக்கு எப்பொழுதும் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன நண்பரே..உங்கள் இந்த ஆதங்க பகிர்வும் ஜெயிக்கட்டும் வாழ்த்துக்கள்
உங்கள் பதிவுகளை சுடுபவர் பற்றி( இப்போது இல்லை, ஹா ஹா)
குறிப்பிட்டு இருந்தமை உங்கள் நல்ல மனசை காட்டுது பாஸ்,
இந்த மனசு யாருக்கும் வராது
மன்னிப்பதுதான் பெரிய குணம் என்ற உங்கள் போக்கு ரியலி குட்
வணக்கம் பாஸ் )
////பதிவுலகில் பல பதிவர்கள் பதிவெழுதி பதினைந்து நிமிடமாவதற்கு முன்பதாகவே, பதிவுகளைக் காப்பி பேஸ்ட் பண்ணித் தன் வலையில் புதிய அதிரடித் தலைப்புக்களோடு பிரசுரித்து, ஹிட்ஸ் ஏற்றித் தன் வலைக்கான வருகையாளார்களின் எண்ணிக்கையினை அதிகரித்துச் சந்தோசம் கண்டு கொண்டிருந்தார் தாஹீர்.//// ;-))))))))))))))))))))))))
இணையம் தகீர் என்பவர் செய்ததை ஒரு போதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
ஒருவரை திருதியதற்காக உங்களுக்கும் மதிசுதா அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள்....
///நிரூபனின் பதிவுகளுக்கு ஓட்டுப் போடுவதை நிறுத்துவோம் எனும் மின்னஞ்சலாகும்./// இது கேவலமான அரசியல்..ஒருவன் கருத்து உங்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்றால் மாற்று கருத்தை முன்வையுங்கள்.. அதை விடுத்து எதற்கு இந்த தனி மனித தாக்குதல், மைனஸ் ஓட்டு..
பாட்டு ரசிகனின் வலைப்பூவிற்கு வாழ்த்துக்கள்
பாட்டு ரசிகனுக்கு வாழ்த்துக்கள்...
கந்தசாமியின் கைவண்ணம் இன்னும் கொஞ்சம் மெருகேறி இருக்கலாம் போல )
புலி எதிர்ப்பாளர், ஆபாசப் பதிவர் நிரூபனைப் புறக்கணிப்போம்!
இது நல்லா இருக்குதே......பேமஸ் ஆனா இப்படி எல்லாம் வரும் தானே....
ஏதோ போருக்கு எதிரா குரல் குடுத்தது மாதிரி இருக்குது.....
"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...
வாக்கு விடயத்தில் நீங்கள் சொல்லியது உண்மையே
ஆனால் நான் நான் விரும்பி படிக்கும் பதிவர்களின் வலைப்பூக்களை
தவாராமல் போய் படிப்பேன் வாக்கு போடுவேன் , அவர்கள் என் வலைப்பூ பக்கம் வந்தார்களா என்று பார்ப்பது இல்லை,
நேரம் இல்லா காரணத்தால் வேறு புதியவர்கள் பக்கம் போறது இல்லை பாஸ்
எனக்கும் இதே பிரச்சனை தான்...அனால் என்னால் முடிந்தவரை முயற்சிக்கிறேன்...
வணக்கம் மச்சி! என்ன ரொம்பவே நொந்து போயிருக்கே போலிருக்கே?
நிருபன் புலி எதிர்ப்பாளரா? ஹி ஹி ஹி ஹி வாட் எ காமெடி?
நிரூ! உன்மீது புலி எதிர்ப்பு முத்திரை குத்தியவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்! நிரூபன் யார் என்பதை அனைவருக்கும் வெளிப்படுத்தவேண்டிய சூழல் வந்திருப்பதாக எண்ணுகிறேன்!
நிரூ, அந்த மெயில் எனக்கும் வந்தது! படிக்கப் படிக்க ஒரே காமெடியாக இருந்தது! அவர்கள் மழைக்குக் கூட பள்ளிக்கூடம் போகவில்லைப் போலும்!
///ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
நிருபன் புலி எதிர்ப்பாளரா? ஹி ஹி ஹி ஹி வாட் எ காமெடி?/// நான் அவருடன் பல தடவைகள் தொடர்புகொண்டதன் படி , அவர் ஒரு புலி எதிர்ப்பாளர் என்று யாராவது சொன்னால் சிரிப்பு தான் வரும்...
நிரூ, நீ இப்போது வாழும் சூழல், உனது உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடியது! எந்த வேளையிலும் எதுவும் நடக்கலாம்! ஆனாலும் உன்னைப் பற்றி சில விஷயங்களை வெளியே சொல்ல விரும்புகிறேன்! அதற்காக என்னை மன்னிக்கவும்!
மேலும் இப்படியே நீ மொனமாக இருந்தால் உன்னைத் துரோகியாக்கி, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கழுதையில் ஏற்றி விடுவார்கள்!
ஹி ஹி ஹி ஹி இந்தக் காமெடி சீனைப் பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியாது!
பாட்டு ரசிகனுக்கு ஓர் வெற்றிக் கேடயம்!
பார்த்தா பொறாமையா இருக்குது அனாலும் அவருக்கு வாழ்த்துக்கள் அடுத்த முறை நானும் முடிந்தவரை முயற்சி செய்கிறேன்......
நிரூ, எமது விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாக, நீ பல துணிச்சலான பதிவுகளைப் போட்டிருக்கிறாய்! வெளினாட்டில், பாதுகாப்பான சூழலில் வாழும் நான் கூட இதுவரை அப்படியான பதிவுகள் போட்டதில்லை!
குறிப்பாக கரும்புலிகள் நாளை முன்னிட்டு நீ போட்ட பதிவு பலரையும் மூக்கில் விரலை வைக்க வைத்தது! மேலும் வறுமையில் வாடும் முன்னாள் போராளிகள் பற்றி நீ போட்ட பதிவு பலரையும் சிந்திக்க வைத்தது!
தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோக பூர்வ இணையத்தளத்திலோ அல்லது அவர்களின் ஆதரவு இணையத் தளத்திலோ, அல்லது புலிகளின் குரல் வானொலியிலோ கூட இப்படியான, அக்கறையான விடயம் வெளிப்படுத்தப் பட்டதாக நான் அறியவில்லை!
மேலும் போராட்டம் சார் பதிவுகளை, உனது ப்ளாக்கில் 75 சதவீதம் நீ போட்டிருக்கிறாய்! அவையனைத்தும் ஆதரவான பதிவுகளே! ஒரே ஒரு எதிர் பதிவு போட்டதனால், உன்னைப் புலி எதிர்ப்பாளன் என முத்திரை குத்துவது, ஹி ஹி ஹி மஹிந்த செய்ததை விட, கேவலமானது!
@ஆர்.கே.சதீஷ்குமார்
ஈழக்கவிஞர் காசி ஆனந்தன் சொல்கிறார்.தமிழக சட்டசபையில்,ராஜபக்ஸேவை போர்க்குற்றவாளி என தீர்மானம் போட்டது வரலாற்று நிகழ்வு என்று.இது ஜெயலலிதாவின் ஈழமக்களின் மீதான அக்கறையே ஆகும்.கடந்த 5 வருடங்களில் தி.மு.க அரசு இப்படியொரு தீர்மானம் இயற்றவில்லை.//
பொறுத்திருந்து பார்ப்போம்....என்ன நடக்கிறது என்று..
@ஆர்.கே.சதீஷ்குமார்
நண்பரே நம் ப்ளாக்கிற்கு வந்து கமெண்ட்,ஓட்டு போடும் சிலருக்கு மட்டுமே நாமும் செல்லமுடியும்.என்னதான் லிங்க் கொடுத்தாலும் ஒருமுறை செல்லலாம்.அடிக்கடி செல்ல இயலாது.5000 தமிழ் பதிவர்கள் இயங்குவதாக புள்ளிவிவரம் சொல்கிறது//
ஆமா பாஸ்,
அந்த ஐயாயிரத்தில் ஒரு கொஞ்சப் பேராவது ஏனைய பதிவர்களையும் ஊக்குவிக்கலாம் தானே.
@"கற்றது தமிழ்" துஷ்யந்தன்
இப்படியான மைல்கள் இதுவரை எனக்கு வந்தது இல்லை, ஒருவேளை வந்து இருந்தாலும் அதை நான் செயல் படுத்த போவதும் இல்லை,
எனக்கு புடிக்காதவைகளை நீங்கள் எழுதினால் கூட நான் உங்களை ஆதரிப்பேன் காரணம், நான் எழுத்து சுதந்திரத்தை மதிக்குறேன்,//
அவ்...அவர்களும் கருத்துச் சுதந்திரம் தானே செய்கிறார்கள்..
அவ்...
அப்படீன்னா அதனையும் நீங்க மதிக்கத் தானே வேண்டும்,.
@"கற்றது தமிழ்" துஷ்யந்தன்
வாக்கு விடயத்தில் நீங்கள் சொல்லியது உண்மையே
ஆனால் நான் நான் விரும்பி படிக்கும் பதிவர்களின் வலைப்பூக்களை
தவாராமல் போய் படிப்பேன் வாக்கு போடுவேன் , அவர்கள் என் வலைப்பூ பக்கம் வந்தார்களா என்று பார்ப்பது இல்லை,
நேரம் இல்லா காரணத்தால் வேறு புதியவர்கள் பக்கம் போறது இல்லை பாஸ்//
ரொம்ப நல்ல பையன் துஸி.
அவ்...
@மாய உலகம்
எனது வாக்குகள் உங்களுக்கு எப்பொழுதும் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன நண்பரே..உங்கள் இந்த ஆதங்க பகிர்வும் ஜெயிக்கட்டும் வாழ்த்துக்கள்//
தங்களின் புரிந்துணர்விற்கும், அன்பிற்கும் நன்றி சகோதரா.
@நிகழ்வுகள்
வணக்கம் பாஸ் )//
வணக்க பெரிய பாஸ்.
////அவ்...அவர்களும் கருத்துச் சுதந்திரம் தானே செய்கிறார்கள்..
அவ்...
அப்படீன்னா அதனையும் நீங்க மதிக்கத் தானே வேண்டும்,.// மச்சி அது கருத்து சுதந்திரம் இல்ல கருத்து திணிப்பு ....
@நிகழ்வுகள்
இணையம் தகீர் என்பவர் செய்ததை ஒரு போதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.//
மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயில் என்று கவியரசரே சொல்லியிருக்கிறார் பாஸ்.
@ஆகுலன்
ஒருவரை திருதியதற்காக உங்களுக்கும் மதிசுதா அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள்....//
அடிங்...நாம என்ன அரசியற் கட்சியா இங்கே நடாத்துறோம்.
@நிகழ்வுகள்
பாட்டு ரசிகனுக்கு வாழ்த்துக்கள்...
கந்தசாமியின் கைவண்ணம் இன்னும் கொஞ்சம் மெருகேறி இருக்கலாம் போல )//
அப்போ நீங்க அந்தக் கந்தசாமி இல்லையே...
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
வணக்கம் மச்சி! என்ன ரொம்பவே நொந்து போயிருக்கே போலிருக்கே?//
ரொம்பவும் நோகலை மச்சி,
சுத்தி வளைச்சு, வல்வளைப்புச் செய்யுறாங்க மச்சி,
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
நிருபன் புலி எதிர்ப்பாளரா? ஹி ஹி ஹி ஹி வாட் எ காமெடி?//
யோ...கொய்யாலா...உண்மையைத் தானே சொல்லுறாங்கள்.
///மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயில் என்று கவியரசரே சொல்லியிருக்கிறார் பாஸ்.// சொல்லுவது சுலபம் பாஸ். இதுக்கு கவியரசரே உதாரணம் ..........!!!
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
நிரூ! உன்மீது புலி எதிர்ப்பு முத்திரை குத்தியவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்! நிரூபன் யார் என்பதை அனைவருக்கும் வெளிப்படுத்தவேண்டிய சூழல் வந்திருப்பதாக எண்ணுகிறேன்!//
நான் யார் என்று வெளிப்படுத்தப் போறீங்களோ..
அவ்...
செல்வராஜாவிற்கும்,
இராசமலருக்கும் பிறந்த இரண்டாவது பையன்.
அவ்................
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
நிரூ, அந்த மெயில் எனக்கும் வந்தது! படிக்கப் படிக்க ஒரே காமெடியாக இருந்தது! அவர்கள் மழைக்குக் கூட பள்ளிக்கூடம் போகவில்லைப் போலும்!//
அவ்...மழைக்கென்றாலும் பள்ளிக் கூடம் நடக்கனுமே பாஸ்.
விடுதலைப் புலிகளை விமர்சிப்பது, அவர்களுக்குச் செய்யும் துரோகம் என்று யார் நினைக்கிறார்கள் என்றால், புலிகளுக்கு ஒரு உதவி கூடச் செய்யாதவர்கள, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் முன்னெப்போதும் வாழாதவர்கள், ஒரு பதுங்கு குழியையோ, காப்பரணையோ அமைத்துக் கொடுக்காதவர்கள், எல்லைப் பயிற்சி எடுக்காதவர்கள், காயப்பட்ட போராளிகளுக்கு ஒரு சொட்டு இரத்தம் வழங்காதவர்கள், புலிகளுடன் பழகாதவர்கள், நேரடியாக அவர்களைக் காணாதவர்கள், இப்படியான வகையறாக்களுக்குத்தான் புலிகளை விமர்சிக்கும் போது கோபம் வருகிறது!
மற்றும் படி விடுதலைப் புலிகளின் தலைவருக்கோ, அவர்களது தலைமைப் பீடத்துக்கோ, தளபதிகளுக்கோ, தம்மை விமர்சனம் செய்பவர்கள் மீது கோபம் வருவதில்லை!
மாறாக தம்மை விமர்சிப்பவர்களின் கருத்துக்களே தம்மை மேலும் வளர்க்கும் என்ற கொள்கையில் புலிகள் தெளிவாகவே இருந்தார்கள்!
மேலும் விடுதலைப் புலிகளின் மத்திய குழுவில், மந்திராலோசனை நடக்கும் போது பக்கப் பாட்டுப் பாடுபவர்கள், ஆமாம் சாமி போடுபவர்கள், எல்லாத்துக்கும் தலையாட்டுபவர்களை, தலைவர் பிரபாகரன் உட்காரும்படி சொல்லிவிடுவாராம்!
மாறாக மாற்றுக் கருத்துக்களை முன் வைப்பவர்களை பக்கத்தில் அழைத்து, அவர்களது கருத்துக்களைக் கேட்டுக்கொண்டிருப்பாராம்!
ஆக, விமர்சிப்பவர்களையே விடுதலைப் புலிகள் அதிகம் நேசித்தனரே தவிர, வால்பிடிகளை அல்ல!
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
நிரூ, நீ இப்போது வாழும் சூழல், உனது உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடியது! எந்த வேளையிலும் எதுவும் நடக்கலாம்! ஆனாலும் உன்னைப் பற்றி சில விஷயங்களை வெளியே சொல்ல விரும்புகிறேன்! அதற்காக என்னை மன்னிக்கவும்!
மேலும் இப்படியே நீ மொனமாக இருந்தால் உன்னைத் துரோகியாக்கி, கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கழுதையில் ஏற்றி விடுவார்கள்!
ஹி ஹி ஹி ஹி இந்தக் காமெடி சீனைப் பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியாது!//
அவ்....வேணாம் மச்சி,
லூஸிலை விடு,
நாம ஏதாச்சும் சொல்லப் போய்...அது பெரிய பிரகண்டமா முடிஞ்சிடாதே...
புலிகளின் குரல் வானொலியில், காலை வேளையில் நாளிதழ் நாளி எனும் நிகழ்ச்சியில், அன்றைய பத்திரிகை செய்திகளை வாசிப்பார்கள்! இதில் கொழும்பில் வெளியாகும், விடுதலைப் புலிகளை விமர்சிக்கும் சிங்கள மற்றும் ஆங்கில பத்திரிக்கைகளின் செய்திகளையே வாசிப்பார்கள்!
தமிழ் பத்திரிக்கை செய்திகளை வாசிப்பதே இல்லை! ஏன் அப்படி? என்று பிரதம செய்தி ஆசிரியர் இறைவன் அண்ணாவிடம் கேட்ட போது அவர் சொன்னது, அவர்கள் முதுகு சொறிபவர்கள்! அவர்களை நாங்கள் கணக்கெடுப்பதில்லை!
இலங்கையில் உள்ள அனைவருக்கும் தெரியும், வன்னியிலே இரண்டு மிகப் பெரிய அரசியல் ஆய்வாளர்கள் இருந்தார்கள்! திரு.நிலாந்தன், திரு.மு.திருநாவுக்கரசு ஆகியோரே அந்த ஆய்வாளர்கள்! இவர்கள் இருவரும் முள்ளிவாய்க்கால் வரை சென்றுதான் வெளியே வந்தார்கள்!
இவர்கள் இருவரும் விடுதலைப் புலிகளை விமர்சிப்பவர்கள்! விடுதலைப் புலிகள் வெளியிடும் பத்திரிகைகள் சஞ்சிகைகளில், புலிகளை விமர்சித்து கட்டுரைகள் எழுதுபவர்கள்!
அவர்கள் இருவருக்கும் புலிகள் மத்தியில் பெரும் மதிப்பும் மரியாதையும் இருந்தது! மேலும் புலிகளின் முக்கிய தளபதிகளுக்கும், அவர்களது பிள்ளைகளுக்கும் ஆங்கிலம் கற்பித்ததும் அந்த இருவரும்தான்!
அந்த மாற்றுக் கருத்தாளர்களை புலிகள் சுட்டுப் பொசுக்கவில்லை! அவர்களை பிடித்து இருட்டறையில் போடவும் இல்லை!
மாறாக அவர்களை நன்கு மதித்தனர்! காரணம் புலிகள் வால்பிடிகளை ஆதரிப்பதில்லை!
பெரிய பெரிய ஆட்களுக்குதான் மெயில் போடுகிறார்கள் எனக்கு ஒருத்தரும் போடேல....
பருவாயில்ல ஆனா கருத்து சுதந்திரத்தை மதிக்கும் நான் இதை ஏற்க மாட்டேன்..
தலைவர் பிரபாகரன் அவர்களால் மாமனிதர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்ட பத்திரிகையாளர் தராகி அவர்களுக்கு, 2007 ம் ஆண்டு, கிளிநொச்சி, அரசறிவியல் கல்லூரி மண்டபத்தில் ஒரு அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது!
அதில் நிலாந்தன் ஆசிரியர் சிறப்புரைக்கு அழைக்கப்பட்டிருந்தார்! தராகி அவர்கள் பற்றி நிலாந்தன் ஆசிரியர் உரையாற்ற வேண்டும்!
ஆனால் மேடையேறிய நிலாந்தன் அவர்கள் சொன்னார் .... தராகி பற்றி எனக்கு நிறையவே மாற்றுக் கருத்துக்கள் உண்டு! அவர் மறுவாசிப்புக்குரியவர்! ஆகவே அவரைப் பற்றி நான் பேச விரும்பவில்லை! மாறாக போர்ச்சூழலில் ஊடகங்களின் பங்களிப்பு பற்றிப் பேச விரும்புகிறேன் என்று சொல்லிவிட்டு, அது பற்றி இரண்டு மணித்தியாலங்கள் பேசினார்!
அந்தக் கூட்டத்துக்கு அடியேனும் போயிருந்தேன்! நிலாந்தன் ஆசிரியர் எங்கும் போய்விடவில்லை! யாழ்ப்பாணத்தில்தான் இருக்கிறார்! டவுட் இருப்பவர்கள் நேரடியாக சென்று அவரிடம் விசாரிக்கவும்!
மேலும், அப்படி உரையாற்றியதற்காக, புலிகள் அவரைத் தண்டிக்கவும் இல்லை, கண்டிக்கவும் இல்லை! அத்துடன் தராகி முன்னாள் ப்ளொட் உறுப்பினரும் கூட ஹி ஹி ஹி!!!
குறித்த அந்தக் கருத்தரங்கில், கொழும்பு பத்திரிக்கையாளர் ஒருவரை பேச அழைத்திருந்தால், அவர் தராகி பற்றிப் போற்றிப் புகழ்ந்து, வளைந்து நெளிந்து, நெக்குருகி, வீணி வடித்து மைக்கை நாசமாக்கியிருப்பார்!
அன்று நிலாந்தன் ஆசிரியர் ஆற்றிய உரையின் ஒரு பகுதி, அன்று இரவு புலிகளின் குரலில், கருத்துக்களம் பகுதியில் ஒலிபரப்பானது என்பதை இவ்விடத்தில் நினைவு படுத்துகிறேன்!
போன பதிவில அண்ணாத்த சொல்லியதா ஞாபகம் உங்கள் பதிவை முழுமையாக ஏற்கா விட்டாளும் உங்களுக்கு எதிரா கீழ்தரமா விமர்சித்தவரை கண்டித்தார் ஏன் வடையார் கூட உங்களை கண்டித்தார்... ஏன் இவர்கள் ஒரு சுதந்திரமான நாட்டில் இருந்தாலும் அவர்கள் பின்பற்றும் கருத்து சுதந்திரத்தை மதிப்பதில்லை???
பல பதிவர்கள் தமக்கு ஓட்டுக்கள், கமெண்டுகள் போடும் பதிவர்களிற்கு மாத்திரம் மொய்க்கு- மொய் எனும் பாணியில் தமது செயற்பாடுகளைப் பகிர்ந்து விட்டு நின்று விடுகிறார்கள். இதனால் பல பதிவர்கள் பதிவுலக வெள்ளோட்டத்தில் காணாமற் போய்விடுகின்றார்கள். //
எதிர் நீச்சல் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும் போலிருக்கே!
இன்னுமொரு உதாரணம்! விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக்கழகம் வெளியிடும் வெளிச்சம் பத்திரிகையின் நூறாவது இதழ் 2008 தொடக்கத்தில் வன்னியில் வெளியானது!
400 க்கும் மேற்பட்ட பக்கங்களில், தமிழக, புலம்பெயர்,மற்றும் கொழும்பு அறிஞர்கள் பலரது ஆக்கங்களைத் தாங்கி வெளியானது!
யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கும் போது இப்படி ஒரு புத்தகத்தை புலிகள் வெளியிட்டது பலரை ஆச்சரியப்படுத்தியது! அதன் ஆசிரியர் கவிஞர் புதுவை இரத்தினதுரை!
அந்த இதழில், அண்மையில் காலமான கொழும்பு பேராசிரியரும் ஒரு கட்டுரை போட்டிருந்தார்!ஹி ஹி ஹி எல்லாம் வால்பிடித்துத்தான்!
ஆனால் வன்னியில் இருந்து, புலிகளின் குகைக்குள் இருந்து, மு.திருனாவுக்கரசு ஆசிரியர் ஒரு கட்டுரை போட்டிருந்தார்! கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்!
மஹிந்த ராஜபக்சவை போற்றுவதாக அக்கட்டுரை அமைந்திருந்தது! அதாவது இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவு பலம் மிக்க ஒரு ஜனாதிபதியாக, மஹிந்த விளங்குகிறார்! அவரை சாதாரணமாக எடை போடக் கூடாது என்பதே, 18 பக்கங்களில் வெளியான அக்கட்டுரையின் சாராம்சம்!
அக்கட்டுரையை எழுதியமைக்காக, திரு மாஸ்டரை புலிகள் துரோகி என்று சொல்லவில்லை! மேலும் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களது ஒப்புதலின் பேரிலேயே அக்கட்டுரை போடப்பட்டிருந்தது!
ஆக, விடுதலைப் புலிகள், மாற்றுக் கருத்துக்கள் சொல்பவர்களை எதிர்க்கிறார்கள் என்பது, புலிகளைப் பற்றி நன்கு புரியாதவர்கள் கிளப்பிவிடும் புரளியாகும்!
ஓட்டைவடை நாராயனின் கருத்து ஆணித்தரமாய் இருக்கு வாழ்த்துக்கள்.. பதிவர்களுக்கு ஓட்டுப்போடுவதைப் பற்றி கூறினீர்கள்.. எல்லா பதிவர்களும் அதை எதிர்பார்பதில்லை உதாரணமா காட்டான் என்ற ஒரு பதிவர் இருக்கிறார் நோபல் பரிசுக்குரிய எழுத்து நடை அதிக பார்வையாளர்களைக் கொண்டவர் அவர் ஓட்டுக்களை எதிர்பாத்தாரா??
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
உங்களை போல் ஒரு நல்ல நண்பன் உள்ளவரைக்கும் நிரூபன் அண்ண பயப்பட தேவயில்ல சும்மா பிச்சு உதருறீங்க..........................
எல்லா பதிவர்களும் அதை எதிர்பார்பதில்லை உதாரணமா காட்டான் என்ற ஒரு பதிவர் இருக்கிறார் நோபல் பரிசுக்குரிய எழுத்து நடை அதிக பார்வையாளர்களைக் கொண்டவர் அவர் ஓட்டுக்களை எதிர்பாத்தாரா??
நானும் இத பற்றி யோசிதிருக்குறேன் காட்டானுக்கு ஓட்டு விழுவது குறைவு அனா கருத்து பெட்டி நிரம்பி வழியும்........
எமது ஆக்கங்களுக்கு கருத்துதான் முக்கியம் ஓட்டு உதவி செய்யும் அவ்வளவு தான்....
நிரூபன்...சமீபத்தில் சிபியை நேரடியாக சந்தித்தேன்.
பதிவுலக அரசியல் பற்றி பேசினோம்.
இந்தப்பதிவும் அதையொட்டியே அமைந்துள்ளது.
பதிவர்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஊட்டும் இத்தகைய பதிவு நிச்சயம் தேவை.
வன்னி மக்கள் ஒவ்வொருவருமே, நாட்டுக்காகவும், புலிகளுக்காகவும் கடுமையாக உழைத்தவர்கள்! தங்கள் வாழ்வை நாட்டுக்காக அர்ப்பணித்தவர்கள்! ஒவ்வொரு குடும்பமும் ஒன்றுக்குமேற்பட்ட பிள்ளைகளை நாட்டுக்காக இழந்திருக்கி்றார்கள்! அவர்கள் தங்கள் உதிரத்தை வியர்வையாக்கி, புலிகளோடு தோளோடு தோள் நின்றவர்கள்!
புலிகள் தொடர்பான சரி பிழைகளைக் கதைப்பதற்கு அவர்களுக்கு பூரண உரிமை உண்டு! அதனை, புலிகளின் தலைமைப் பீடம் எப்போதுமே ஏற்று வந்திருக்கிறது!
நிரூபனும் அந்த மூன்று லட்சம் மக்களில் ஒருவர்! இறுதிவரை வன்னியில் இருந்துவிட்டு, பின்னர் முள்வேலிக்குள் இருந்தவர்!
நிரூபனின் குடும்பமும் நாட்டுக்காக உயிர்தியாகம் செய்தவர்கள்தான்!
மேலும், இவ்விடத்தில் விபரிக்க இயலாத சேவைகளை, நிரூபன் நாட்டுக்காக ஆற்றியிருக்கிறார்!
நானும் நிரூபனும் ஒன்றாக கிளினொச்சியில் சுற்றித் திரிந்த காலங்கள் மறக்க இயலாதவை! அவரது நெருங்கிய நண்பர் என்ற வகையில், நிரூபன் பற்றி எனக்கு நன்கு தெரியும்!
நிரூபனை புலி எதிர்ப்பாளன் என்று முத்திரை குத்துவோர் பரிதாபத்துக்குரியவர்கள்!
அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்! - நிரூபனை நீங்கள் துரோகி என முத்திரை குத்துவதாக இருந்தால், முதலில் உங்கள் முடிவை விடுதலைப் புலிகளின், தலைமைப் பீடத்துக்கு அறிவிக்கவும்!
அவர்களும், அவர்களது புலனாய்வுப் பிரிவும் முடிவு செய்யட்டும்! அப்படி விடுதலைப் புலிகள், நிரூபனைத் துரோகி என்று அறிவித்தால், அதனை நானே எனது ப்ளாக்கில் பதிவாகப் போடுகிறேன்!
தில் இருப்பவர்கள் முயன்றுபார்க்கவும்!
பதிவுலகில் எமக்கு ஒரு பெரிய நண்பர்கள் வட்டம் இருக்கிறது! அதில் எந்த நண்பருக்கு ஆபத்து வந்தாலும், பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது!
முன்பு ஒரு முறை அருமை நண்பர் சி பி செந்தில்குமாருக்கு ஒரு பிரச்சனை வந்த போது, அவருக்காக குரல்கொடுத்து, பதிவுகள் போட்டோம்! எம்மால் முடிந்தளவு ஆறுதலை அவருக்கு வழங்கினோம்!
இப்போது பிரச்சனை நிரூபனுக்கு! பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை!
அட ஆகுலனா என்ர பதிவில ஒருத்தர்தான் மாத்தி மாட்தி கும்முவார் நான் இந்த டாபிக்கை மாத்துறதுகு சொன்னேன்யா ஓட்டுப்பட்டைய இனைக்காமல் ஓட்டு வரவில்லைன்னா எப்பிடியப்பு நான் இபதனே அத இனைச்சனான் ஆனாலும் ஓட்டைப்பற்றி கவளைப்படுவதில்லை நான் பதிவுலகதுக்கு வருவதற்கு முன்னம் ஒரு பதிவையே வாசித்ததில்லை அப்பிடி இருந்தும் கூட இவர்கள் எனது பதிவில் பின்னூட்டம் இடுகிறார்கள் என்றால் சந்தோசம்தானே நாங்களாவது பரவாயில்லை மொய்க்கு மொய்ன்னு ஓடுறோம் ஓட்டேதேவை இல்லாத அண்ணாத்த எல்லாற்ற பதிவிலும் கும்மியடிக்கிறாரே???
மச்சி நிரூ, நீ தலைவர் பற்றி போட்ட பதிவுக்கு கடுமையான மாற்றுக கருத்துக்களை நான் முன் வைத்தேன்! கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வதுதானே மனிதப் பண்பு!
மற்றும் படி, உனக்கு துரோகி முத்திரை குத்துவது, உன்னைப் புறக்கணிக்கச்சொல்லி ஈ மெயில் அனுப்புவது, ஓட்டுக்கள் போடாமல் இருப்பது இவையெல்லாம், நாகரீகமாகத் தோன்றவில்லை!
இதனால்தான் சில பல விஷயங்களை எழுதினேன்! ஏதும் சிக்கல் என்றால் உடன் அறிவிக்கவும்! உனக்கான சப்போர்ட் என்றைக்கும் இருக்கும்!
மச்சி, இதெல்லாத்தையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, அந்த கருவேலங்கண்டல் விதானையாரின், கடைசிப் பெட்டை பாமினி பற்றி ஒரு பதிவு போடவும்! அவள் என்னை லவ் பண்ண முன்பு உன்னைத் தானே லவ் பண்ணினவள்!
ஹி ஹி ஹி ஹி !!!
அறிமுக பதிவருக்கு வாழ்த்துக்கள்..
அட விசயம் அப்பிடி போகுதோ மாப்பிள அந்த விதானையாரின் கடைய சொல்லு நான் கேக்கிறதுக்கு ரெடியா இருக்கேன்யா..
@நிகழ்வுகள்
//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
நிருபன் புலி எதிர்ப்பாளரா? ஹி ஹி ஹி ஹி வாட் எ காமெடி?/// நான் அவருடன் பல தடவைகள் தொடர்புகொண்டதன் படி , அவர் ஒரு புலி எதிர்ப்பாளர் என்று யாராவது சொன்னால் சிரிப்பு தான் வரும்...
August 20, 2011 3:34 AM
உண்மைதான் நண்பா!
@நிரூபன்
நிருபன் புலி எதிர்ப்பாளரா? ஹி ஹி ஹி ஹி வாட் எ காமெடி?//
யோ...கொய்யாலா...உண்மையைத் தானே சொல்லுறாங்கள்.//
ஏன் உன்னை நீயே அப்படி சொல்லி, சும்மா மெல்லுற வாய்க்கு அவல் போடுகிறாய்?
@நிரூபன்
நிரூ! உன்மீது புலி எதிர்ப்பு முத்திரை குத்தியவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்! நிரூபன் யார் என்பதை அனைவருக்கும் வெளிப்படுத்தவேண்டிய சூழல் வந்திருப்பதாக எண்ணுகிறேன்!//
நான் யார் என்று வெளிப்படுத்தப் போறீங்களோ..
அவ்...
செல்வராஜாவிற்கும்,
இராசமலருக்கும் பிறந்த இரண்டாவது பையன்.
அவ்................///
அது சரி!
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
மச்சி, இதெல்லாத்தையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, அந்த கருவேலங்கண்டல் விதானையாரின், கடைசிப் பெட்டை பாமினி பற்றி ஒரு பதிவு போடவும்! அவள் என்னை லவ் பண்ண முன்பு உன்னைத் தானே லவ் பண்ணினவள்!
ஹி ஹி ஹி ஹி !!!
இப்ப கொஞ்சம் முதல் தான சூடா இருந்தீர்கள் இப்ப என்னடா எண்டால் மேட்டர் இப்படி போகுது....
@காட்டான்
ஓட்டைவடை நாராயனின் கருத்து ஆணித்தரமாய் இருக்கு வாழ்த்துக்கள்.. பதிவர்களுக்கு ஓட்டுப்போடுவதைப் பற்றி கூறினீர்கள்.. எல்லா பதிவர்களும் அதை எதிர்பார்பதில்லை உதாரணமா காட்டான் என்ற ஒரு பதிவர் இருக்கிறார் நோபல் பரிசுக்குரிய எழுத்து நடை அதிக பார்வையாளர்களைக் கொண்டவர் அவர் ஓட்டுக்களை எதிர்பாத்தாரா??////
ஹா ஹா ஹா காட்டான் உங்கள் குறும்பை ரசிக்கிறேன்! உங்களுக்கு நோபல் பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்! அற்லீஸ்ட் ஒரு நோமல் பரிசாவது கிடைக்கட்டும்!
@ஆகுலன்
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
உங்களை போல் ஒரு நல்ல நண்பன் உள்ளவரைக்கும் நிரூபன் அண்ண பயப்பட தேவயில்ல சும்மா பிச்சு உதருறீங்க..........................////
நன்றி ஆகுலன்! நியாயத்துக்காக குரல் கொடுப்பதில் தப்பில்லைத் தானே!
@ஆகுலன்
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
மச்சி, இதெல்லாத்தையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, அந்த கருவேலங்கண்டல் விதானையாரின், கடைசிப் பெட்டை பாமினி பற்றி ஒரு பதிவு போடவும்! அவள் என்னை லவ் பண்ண முன்பு உன்னைத் தானே லவ் பண்ணினவள்!
ஹி ஹி ஹி ஹி !!!
இப்ப கொஞ்சம் முதல் தான சூடா இருந்தீர்கள் இப்ப என்னடா எண்டால் மேட்டர் இப்படி போகுது....///
ஹா ஹா ஹா நிரூபனுக்கும் அந்த பாமினிக்கும் இடையில நடந்தது ஒரு கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம்!
அவள் நிரூபனை கழட்டி விட்டது, செம காமெடி! அது என்னவென்று அவனிடமே விசாரிக்கவும்!
மாப்பிள இது ஒரு பெரிய விடயமே இல்லை ஏன் எல்லோரும் பெரிதுபடுத்துகிறார்களோ தெரியவில்லை... என்னைப்பொருத்தவரை உங்கள் கருத்து பிழை என்றால் அதை பின்னூட்டமாக உங்கள் பிளாக்கிள்தான் போடுவேன்.. எல்லோரும் அப்படிச்செய்தால் பதில் அளிப்பது சுலபம் இல்லாவிடில் 5000 தமிழ் பதிவர்களையும் தேடிப்பிடித்து அவர்கள் உங்கள் பதிவைப்பற்றி என்ன எழுதி இருக்கிறார்கள் என்று பார்க்க முடியுமா?? நீங்களாவது பரவாயில்லை இவ்வளவு பதிவை படிக்கிறீர்கள்... உங்களுக்கும் ஒரு காதலி கிடைக்கட்டும் அதுக்கு பிறகு பார்கிறேன் எவ்வளவு பதிவை பார்பீர்கள் என்று...
உங்க பதிவெல்லாம் லேட்டாத்தான் என் டேஷ்போர்டில தெரியுது அவ்வ்வ்வ்!
பரவாயில்லை இப்ப நிரூபன் வந்து விதானையார் கதை சொல்லாட்டி காட்டான் தூங்க மாட்டான் தூங்கா விரதம் இருக்கப்போறேன்..
ஓட்டு அரசியல் சலிப்பான விஷயம்தான் -
ஆரம்பத்தில் எழுதி சென்ற பாதையிலிருந்து விலகி...
இதுக்காகவே எசகு பெசகா டைட்டில் போட்டு....
நடிகைகள் படம் போட்டு....
கஷ்டப்படுறாங்க சிலபேர் ஹி ஹி!!
ஹா ஹா ஹா நிரூபனுக்கும் அந்த பாமினிக்கும் இடையில நடந்தது ஒரு கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம்!
அவள் நிரூபனை கழட்டி விட்டது, செம காமெடி! அது என்னவென்று அவனிடமே விசாரிக்கவும்!
காட்டான் நீங்க தூங்காவிரதம் நான் உண்ணா விரதம்...........
நிரூபன் அண்ணா இத நீங்க சொல்லியே ஆகனும்....
ஆகுலன் உனக்கு இரவுச்சாப்பாடு இன்னும் அம்மா செய்து முடிகவில்லைப்போலும்... ஆனா எனக்கு நித்திரை வருகிறது நிரூபனுக்கு இப்ப நடுச்சாமம்போல இனி அவர் வரமாட்டார் கலைஞரப்போல நாங்களும் டக்குன்னு விரதத்த முடிப்போமையா நாளைக்கு வந்து கும்முவோமா??
காட்டான் கேட்டு கொண்டதுக்கு இணங்க நான் எனது உண்ணா விரதத்தை முடித்து கொள்கிறேன்.............நாளைக்கு காலம சாப்பிடா பிறகு தொடன்குவம்...
நன்றி ஆகுலன் எனது பேச்சை கேட்டு உண்ணா விரதத்தை முடித்துக்கொண்டதற்கு.. நாளை காலை நீங்க சொன்னபடியே சாப்பிட்டு முடித்தவுடன் உண்ணா விரதத்தை தொடங்குவோம்..!!!???
எதையும் இப்படி பிளான் பண்ணி செய்யணும் என்னையும் காட்டான்னையும் போல....
நிரூபன்...சமீபத்தில் சிபியை நேரடியாக சந்தித்தேன்.
பதிவுலக அரசியல் பற்றி பேசினோம்.
இந்தப்பதிவும் அதையொட்டியே அமைந்துள்ளது.
பதிவர்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஊட்டும் இத்தகைய பதிவு நிச்சயம் தேவை.
August 20, 2011 4:48 AM
அட மாப்பிள போனதடவ சிபி உன்ர கடைக்கு வாரான்னு அவசரமாய் சென்னைக்கு ஓடினீங்க...?? இப்ப எங்க அவரை சந்திச்சீங்க எத்தின சீடி அள்ளிக்கொண்டு போனார் மாப்பிள.. இனி அத வைச்சே நாலு பதிவு தேற்றிடுவாரய்யா நம்ம சூப்பர் ஸ்டார்..!!!??
நிரூபன் அவர்களுக்கு வணக்கம்...முதல்முறை உங்கள் தளத்திற்கு வந்தேன்.அழகிய வடிவமைப்பு.திரட்டிகளை அழகாக அடுக்கியிருக்கும் கோடிங்கை(html code)மட்டும் பகிர்வீர்களா..?!
அன்பர் நிரூபன்,
பதிவர் தாஹீரின் மனமாற்றத்துக்கு நன்றிகள்.
எழுதிய எழுத்துக்கு மதிப்பு கிடைக்காமல் போனதால்
மனம் வெறுப்பவர்கள் ஏராளம்.
எழுத்து நம் மனதின் ஊற்று, அதை யாராலும் தூண்டி வெளிக்கொணர முடியாது,
நம்மால் எதை எழுத முடியுமோ அதைத்தான் எழுத முடியும்.
காப்பி பேஸ்ட் செய்வது யார் வேண்டுமானாலும் செய்யலாம்
சகோ, உங்களின் முயற்ச்சியால் பதிவர் தாகிர் மனவிரும்பி ஒப்புக்கொண்டதிலிருந்தே
அவரின் எழுத்துத் திறனை அறிந்து கொள்ளலாம்.
பதிவுக்கு நன்றி.
பாட்டு ரசிகனுக்கு வாழ்த்துக்கள்.
அவரின் வலைப்பக்கம் செல்கிறேன்.
தாகீரின் மீள் வருகை வரவேட்க்கப்படத்தக்கதே!!
ஆனால் சென்கோவியின் அனைத்து கருத்துக்களோடும் நான் ஒத்துப் போகிறேன்!!சொல்ல வேண்டிய விடயங்களை அவரே சொல்லி விட்டார்!
நண்பர் நிரூபன் அவர்களுக்கு
நல்ல பதிவு ,தாகிர் மனமாற்றம் நல்ல விஷயம் ,நானும் பார்த்தேன் அவர் மாறியது ,நிறைய பேருக்கு இருக்கு இந்த ஆதங்கம் .
பாட்டு ரசிகனுக்கு எனது வாழ்த்துக்கள் .
அப்புறம் ஒரு சின்ன விஷயம் நண்பரே
நான் சகோதரன் ,சகோதரி இல்லை .
தமிழ் மணம் 16-ல் இணைத்துள்ளேன்
நன்றி நண்பரே
voted i will come back to comment u
நானும் பதிவுலகில் வந்த புதிதில் குழு வச்சு ஓட்டு போடுறாங்களோன்னு டவுட்டு வந்துச்சு :) நல்ல பதிவாக,மொக்கை பதிவாக (சிரிக்க வைக்கும் பதிவாக) இருந்தால், எழுத்தின் தரம் இருந்தால் இன்று இல்லையென்றாலும் என்றாவது வருவார்கள் என புரிந்துக்கொண்டேன்....
நீரு... உங்களின் நல்லுள்ளம் தெரிகிறது. பழையதை கிளற வேண்டாம் என்றாலும் சமாதானம் ஆனதற்கு மனமார்ந்த பாரட்டுக்கள்.
சகோ தாஹிர்க்கு என் வாழ்த்துக்கள். உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.....
இன்று வரை வெளித் தெரியா திறமைசாலிகளாக பதிவுலகினுள் இருக்கின்றார்கள்.//
இது ரொம்ப உண்மை மச்சி..
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நோக்கத்துக்காக பதிவு எழுதுகிறார்கள்
தன்னை திருப்திப்படுத்த
பிறரை கவர அல்லது திருப்திபடுத்த
தன் திறமையை வளர்க்க
ஆவணப்படுத்தி வைக்க
அதிக வாக்கு பெற
அதிக கருத்து பெற
பிரபலம் ஆக
இவ்வாறு பல
இப்படிபட்டவர்கள் எல்லோரும் திரட்டியில் இணைக்கிறார்கள் என்று இல்லை. மிக மிக காத்திரமான பிரபலமானவர்கள் வலை வைத்திருப்பவர்கள் திரட்டியில் கூட இணைப்பதில்லை
திரட்டியில் இணைப்பவர்கள்
தன் படைப்பை மற்றவர் பாக்க விரும்புவர்கள்
கருத்து பெற விரும்புவர்கள்
வாக்கு பெற விரும்புவர்கள்
பிரபலம் ஆக விரும்புவர்கள்
கருத்து வாக்கு வருதோ இல்லையோ சும்மா இணைப்பும் பாக்கிராக்கள் பக்கட்டும் என நினைப்பவர்கள்
வாக்கு விழுந்தா விழட்டும் கருத்து போட்ட போடட்டும் பிரபலம் ஆனா ஆகட்டும் என நினைப்பவர்கள்
இவ்வாறு பல
எல்லோரும் நம்ம மாதிரி இருக்க மாட்டங்க , நாமளும் எல்லோரும் மாதிரி இருக்க முடியாது
ஆனா வாக்கோ கருத்தோ வந்தா மகிழ்ச்சிபடாதவர்கள் இல்லை
நேரமிருந்தா வந்து பாருங்கோ , பிடிச்சிருந்தா கருத்து வாக்கு போடுங்கோ எண்டு கேகிரவங்களும் இருக்காங்க
ஆனா ஒருத்தரும் கட்டாயம் எனக்கு வாக்கு போடு கருது போடு என்னை பிரபலமாக்கு எண்டு போடுறதில்லை
ஏன் ?
அப்படி நேரடியா போட்டா நாமளும் அவங்கட விருப்பத்தை நிறைவேற்றலாம் எண்டு ஜோசிக்கிரன்
ஆக மொத்தத்தில் இந்த வலையுலக அரசியலை பார்த்து குழம்பி போய் உள்ளேன்
வொய் ப்ளட் சேம் ப்ளட்
//இன்று வரை வெளித் தெரியா திறமைசாலிகளாக பதிவுலகினுள் இருக்கின்றார்கள்.//
எனக்கு புகழ்ச்சி புடிக்காது நிரூ,
எல்லா நேரமும் எல்லோருடைய எழுத்துக்களை படிக்க வாய்ப்பது இல்லையே
அதற்காக கவலைபடவும் தேவை இல்லை..
இது பிரபல எழுத்தாளர்களுக்கும் பொருந்தும், என் ஆதர்ச எழுத்தாளர் என்பதால் அவருடைய அனைத்து படைப்புகளையும் வாசிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே!??
உங்கள் பதிவுகள் உட்பட நல்ல பதிவுகள் தென்பட்டால் ஓட்டோ பின்னூட்டமோ இடுவது வழக்கம். ஆனால் பல சமயங்களில் உங்களுடைய ஜிங்கு சான் டீச்சர் போன்ற மொக்கை பதிவுகள் மகுடத்தில் ஏறுவது எரிச்சல் தருகிறது. மொய்க்கு மொய் பழக்கம் தவறானது. இதனால் பதிவுலகில் குப்பைகள்தான் அதிகரிக்கும்.
கருத்து வேறுபாடுகளை தனிப்பட்ட விரோதமாக பார்க்கும் பழக்கம் பதிவுலகில் வளர்ந்து வருவது நல்லதல்ல. கும்பல் கும்பலாக சேர்ந்து தங்கள் கருத்துக்கு ஒத்துவராதவர்களை தாக்கும் பழக்கம் கருத்து சுதந்திரத்தை பாதிக்கும்.
தாகிர் பற்றிய பதிவு அவசியமானதும் அருமையானதும் தோழரே... தங்கள் பனி பிச்சு பிச்சு தொடரட்டும்...
படிக்கவே கேவலமா இருக்கு ஆனால் அது உண்மைதானே...!!
அனைத்து பதிவர்களும் தெரிந்து
கொள்ள வேண்டிய ஒரு பதிவு.
பதிவுலகில் என்னதான் நடக்கிரது
ஒன்னுமே புரியல்லே.
தவறு செய்தவரையும், தவறுக்கான காரணத்தை அறிந்து அவரை மன்னித்து நண்பனாக பாவித்து உங்கள் பதிவிலும் பாராட்டி எழுதியிருக்கும் நிருவுக்கு, சல்யூட்.
கோப்பை பெற்ற பாட்டு ரசிகனுக்கு வாழ்த்துக்கள்
அவசியமான பதிவு.
நீங்கள் சொல்வது உண்மை.
////// இது அனைவருக்கும் பொதுவாகத் தெரிந்த ஓர் விடயம். விளங்கக் கூறின் ஓட்டுக்கள் அதிகம் பெற்று, ஒரு பதிவரின் பதிவுகள் பிரபலமாகின்ற போது, அப் பதிவரைப் பற்றியும், அவரது எழுத்துக்கள் பற்றியும் அனைவரும் அறிந்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.////////
இது ஓரளவுக்கே சரி, பதிவர்களின் ஆரம்ப காலத்தில் வேண்டுமானால் ஓட்டுக்கள் உதவியாக இருக்கக்கூடும், ஆனால் இன்றைக்கு பிரபலமான பதிவர்கள் பெரும்பாலானோர் சொற்ப ஓட்டுக்களே பெறுகின்றனர்.
/// ஓட்டரசியலின் மூலம், ’நீ எனக்கு குத்து, நான் அப்புறமா வந்து உனக்கு ஓட்டுப் போடுகிறேன் எனும் விதி தான் எழுதப்படாத, பிறருடன் பேசப்படாத மௌனமான விதியாக இருக்கின்றது.//////
இதுவும் வெகுசிலருக்கே பொருந்தக் கூடியது. இன்றைக்கு ஒரு பதிவர் சாதாராணமாக 200-க்கும் மேற்பட்ட வலைப்பூக்களை பின்பற்றுகிறார். அவற்றில் குறாஇந்தது 30-50 பதிவுகளாவது தினமும் படிக்க வேண்டி இருக்கிறது. முதலில் இதுவே சாத்தியம் இல்லை, பின்பு தெரியாத/புது வலைப்பூக்களுக்கு சென்று ஓட்டோ கமெண்ட்டோ அளிப்பது எப்படி?
இதனாலேயே எனது பதிவுகளுக்கோ அல்லது நண்பர்கள் பதிவுகளுக்கோ புதியவர்கள் வந்து கமெண்ட் போடும்போது நான் அவர்கள் வலைப்பூவை பார்வையிடுவதுண்டு. அங்கும் தொடர்ச்சியாக செல்ல முடிவதில்லை.
சிலநேரங்களில் நண்பர்களின் பதிவுகளுக்கு செல்ல மறந்தோ நேரம் இல்லாமலோ போய்விட நேரும், அப்போதும் அவர்கள் கமெண்ட்டை எங்காவது பார்க்க நேரும்போது ஞாபகம் வந்து போய்ப்பார்ப்போம். பெரும்பாலோனோர் இப்படி செய்கிறார்கள் என்று அறிகிறேன்.
இதுவே ஓட்டுக்கு ஓட்டு, கமெண்ட்டுக்கு கமெண்ட்டு என்ற தோற்றத்தை உருவாக்கி இருக்க கூடும். (ஆனால் உண்மையில் ஓட்டரசியல் செய்யும் பதிவர்களும் இருக்கிறார்கள்)
இந்த ஓட்டு, கமெண்ட் எல்லாமே ஒரு மாயை. அதில் இருந்து வெளியே வாருங்கள்! ஆரம்பத்தில் வேண்டுமென்றால் பதிவை அனைவருக்கும் கொண்டு சேர்க்க உதவி இருக்கலாம், ஆனால் அதன்பின்பு இவற்றால் ஒன்றும் ஆகப்போவதில்லை.
தொடர்ந்து தரமான பதிவுகளை எழுதும் பட்சத்தில் வாசகர்கள் தானாக வருவார்கள்.
/////தொடர்ச்சியாகப் பல பதிவர்களது பதிவுகளினைப் படித்துப் பின்னூட்டமிட்டு, ஓட்டுப் போடும் நானே ஒரு சில நாட்கள் பதிவுலகப் பக்கம் வரவில்லை என்றால், மொய்க்கு மொய் என்னும் கொள்கை சில பதிவர்கள் மூலமாக நிறைவேறாத நிலையில் ஏமாந்திருக்கிறேன் ///////
இப்படிப்பட்ட ஓட்டுக்கள் தேவையா? அவர்கள் பதிவை படித்தா ஓட்டளிக்கிறார்கள்?
ஒரு பதிவர் செய்துவந்த தவறை திருத்தி நல்வழிப்படுத்திய செயல் பாராட்டுக்குறியது. வாழ்த்துக்கள்!
பாட்டு ரசிகனுக்கு வாழ்த்துக்கள்! விருதளித்த உங்களுக்கு பாராட்டுக்கள்!
வணக்கம் தல நீங்கள் சொல்வது சரிதான் சில பதிவுகளுக்கு நட்பு ரீதியாக பல பதிவர்கள் ஒட்டுக்களை போட்டாலும்.
தரமான பதிவுகளுக்கு எப்பவுமே ஒட்டுக்களை பெறத்தவறுவது இல்லை,சில நேரங்களில் விதிவிலக்குகளும் உண்டு.என் அனுபவத்தில் நான் யாரைப்பார்த்து அவரது கிரிக்கெட் சம்மந்தமான எழுத்துக்களால் கவரப்பட்டு.நானும் கிரிக்கெட் சம்மந்தமான பதிவுகள் எழுதவேண்டும் என்று எழுதத்தொடங்கினேனோ.எனது சில கிரிக்கெட் பதிவுகள் அவரது கிரிக்கெட் பதிவுகளை விட அதிக ஒட்டுக்கள் வாங்கி,ஹிட்ஸ் ஆகியும் உள்ளது.இதனைக்கு அவர் கடல் என்றால் நான் சிறு துளி நீர்.இதற்கு காரணம் என்பதிவுகள் சரியான முறையில் அடையாளம் காணப்பட்டதே ஆகும்.இதை நான் பெருமைக்காக சொல்லவில்லை.எனவே நல்ல பதிவுகள் கவனிக்கப்படும் போது அவை வெற்றி பெருகின்றன.கவனிக்காத போது அந்தப்பதிவை எழுதிய எழுத்தாளர்கள் துவண்டு போகாமல் தொடர்ந்து முயற்சி செய்யவேண்டும்.
நேற்று இன்ட்லியில் ஒரு செய்திபடித்தேன்.புதிய பதிவர்களை ஊக்குவிப்பதற்கு ஒரு வலைப்பதிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.அதன் பெயர்.www.tamilviruthu.blogspot.comஎன்பதாகும்.அதில் பல பதிவர்களை அடையாளம் காண்பதற்காகவும்,அவர்களை ஊக்கு விப்பதும் என்று குறிப்பிட்டு இருந்தது நேரம் இருந்தால் போய்ப்பாருங்கள்.
/////தொடர்ச்சியாகப் பல பதிவர்களது பதிவுகளினைப் படித்துப் பின்னூட்டமிட்டு, ஓட்டுப் போடும் நானே ஒரு சில நாட்கள் பதிவுலகப் பக்கம் வரவில்லை என்றால், மொய்க்கு மொய் என்னும் கொள்கை சில பதிவர்கள் மூலமாக நிறைவேறாத நிலையில் ஏமாந்திருக்கிறேன் ///////
இப்படிப்பட்ட ஓட்டுக்கள் தேவையா? அவர்கள் பதிவை படித்தா ஓட்டளிக்கிறார்கள்?
அருமையான கருத்து வாழ்துக்கள் பாஸ் எல்லா பதிவையும் எல்லாராலேயும் படிக்க முடியாது... அவங்களுக்கும் குடும்பம் குட்டி இருக்குதுதானே அதை புரிந்தால் பிரச்சை இல்லை..
/////தொடர்ச்சியாகப் பல பதிவர்களது பதிவுகளினைப் படித்துப் பின்னூட்டமிட்டு, ஓட்டுப் போடும் நானே ஒரு சில நாட்கள் பதிவுலகப் பக்கம் வரவில்லை என்றால், மொய்க்கு மொய் என்னும் கொள்கை சில பதிவர்கள் மூலமாக நிறைவேறாத நிலையில் ஏமாந்திருக்கிறேன் ///////
இப்படிப்பட்ட ஓட்டுக்கள் தேவையா? அவர்கள் பதிவை படித்தா ஓட்டளிக்கிறார்கள்?
அருமையான கருத்து வாழ்துக்கள் பாஸ் எல்லா பதிவையும் எல்லாராலேயும் படிக்க முடியாது... அவங்களுக்கும் குடும்பம் குட்டி இருக்குதுதானே அதை புரிந்தால் பிரச்சை இல்லை..
என்னைய்யா ஆச்சு சொம்பு பலமா நசுங்கிரிச்சோ.....??
சகோ! உள்ளேன் அய்யா-ன்னு கையை மட்டும் தூக்கிக் காட்டிப்புட்டேன். :-)
பதிவரசியல் - என்ற வார்த்தையைப் பார்த்தாலே தலைதெறிக்க ஓடிப் பழக்கமாயிருச்சு! :-))
கரெக்ட்........
கிஸ்ராஜா உங்களுக்கு அந்த பதிவரை விட ஓட்டு கிடைசுதுன்னா அதுக்கு உங்கள் எழுத்தும் அதனுடன் நீங்க ஊரெல்லாம் போய் போடுகின்ற குழையும்தான் காரணம்..!!!?? மாப்பிள நானும் பார்கிறன் எல்லாற்ற பதிவையும் எப்பிடி ஐயா பலோ பண்ணுறீங்க..?? உங்கட காதலி தனக்கு நேரம் ஒதுக்கேலேன்னு கோவிக்கப்போறா..!!!!???))))
தாகிரை திருந்த வைத்து விட்டீர்களே பாராட்டுக்கள்.
மற்ற பதிவர்களின் காப்பியடித்தல் தவறான செய்கை தான். குறைந்த பட்சம் அவர்களின் தளத்திற்கு இணைப்பு கொடுத்து, நன்றியாவது சொல்லலாமே..
////ஏனைய பதிவர்களின் பதிவுகளைப் படிக்கும் போது, கமெண்டு போட முடியாவிட்டாலும், கமெண்ட் போட நேரம் இல்லா விட்டாலும் ஓட்டுக்கள் போட்டு, அவர்களை ஊக்கப்படுத்தலாம் அல்லவா. ////
சரிதான். ஆனால் இதனை நிறைய பதிவர்கள் செய்வதாக தெரிகிறது. சில வேளைகளில் குறிப்பிட்ட பதிவுகளில், பின்னூட்டங்களை விட ஓட்டுகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
நிரூபன் said...
@செங்கோவி
ஆமாம் பாஸ்..நம்மை ரொம்ப டயர்டு ஆக்குற விஷயம் இது தான்..//
இப்போ தமிழ் மணம் ஓக்கே பாஸ்,
முன்பெல்லாம் தமிழ் மணத்தில் ஓட்டுப் போடுவதற்கு கை வலிச்சிடும் பாஸ்.
August 20, 2011 2:28 AM
அதுக்குதான்யா நான் இப்ப கைநாட்டு போடுறன் தழிழ் மணத்தில்...!!?? சத்தியமாய்யா நம்புங்கோ..(லாப்டாபில ரேகைய ஸ்கேன் பண்ணீட்டேங்கோ) அத்தோட எனக்கு கையெழுத்தும் போடத்தெரியாததால... இது எனக்கு சுலபமா இருக்கையா...
பல பதிபவர்கள் இலை மறை காயாக வாழ்கின்றனர் என்பது வேதனை
அட.. ஒரே பதிவில் எத்தனை விஷயங்கள்.. :)
தாகிர் விஷயம் உங்கள் நல்ல மனசைக் காட்டியுள்ளது நிரூபன்..
தாகீரை வரவேற்கிறேன்..
தரமானவை சுயமானவை நிற்கும்.. ஏனையவை சேர்ந்தழியும் :)
உங்களைப் பற்றி அப்படியொரு அவதூறா?
அடப் பாவிகளா.. அவர்கள் நீங்கள் எழுதிய மற்றப் பதிவுகளைப் படிக்கவில்லையா? என்ன கொடுமை இது/
பாட்டு ரசிகனுக்கு வாழ்த்துக்கள்.
காபி,பேஸ்ட் செய்தால் பிரபலமாகிவிடலாம் என்று அவருக்கு யார் சொன்னது?
காபி டூ பேஸ்ட் பதிவில் எனக்கு நம்பிக்கையில்லை...
நானும் காபி டூ பேஸ்ட் பதிவு போடுகிறேன் அது நான் வேலையாக இருக்கும் போது மட்டும்தான்...
தன்னுடைய சுய கருத்துக்களை... தன்னுடைய படைப்புகளை...
தன்னுடைய மனதை இங்க பதிவு செய்ய வேண்டும் அதன் பிறகே பிற பதிவுகளை காபி செய்யலாம்...
ஓட்டுக்கு ஓட்டு என்ற காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறினால் நன்றாக இருக்கும் என நம்புகிறேன்...
பாட்டு ரசிகனின் நிறைய பதிவுகல் இடுவதில்லை இருந்தும் அந்த தளத்தால் நிறைய பெருமைகள் கிடைத்திருக்கிறது...
ரசிகர்களின் ஆர்வம் இன்னும் அதிக அளவில் இருந்திருந்தால் அதில் அதிக பதிவுகள் போட்டிருக்போன்..
நேரம் கருதியே அதிக அதிக நேரம் பதிவிட முடியவில்லை...
பாட்டு ரசிகனை மக்களுக்கு அடையாளம் காட்டியதற்க்கு மிக்க நன்றி...
தமிழ்மணம் 30..
எல்லாம் ஒரு விளம்பரத்துக்குதான்...
ரைட்டு...
நிரூபன்...
வோட்டுக்கள் சில காலத்திற்கு சிலரை தூக்கி நிறுத்தும்...நீண்ட நாள் தாங்காதே..எல்லாவற்றையும் தாண்டி நல்ல படைப்பு எப்போதும் தோண்டி எடுக்கப்பட்டு ஆராதிக்கப்படும்...வியாபார உலகிலும் பொருள் ஓரளவுக்கு சுமாராய் இருந்தால் தான் விளம்பரம் அதை கரை சேர்க்கும்...
//மொய்க்கு- மொய் எனும் பாணியில் தமது செயற்பாடுகளைப் பகிர்ந்து //
இது இன்றைய தமிழ்ப் பதிவுலகின் எழுதப்படாத விதியாகி விட்டது!
மொய்க்கு மெய்யோ..ஓட்டுக்கு ஓட்டோ....ஆரோக்யமான நட்பு பதிவர்களிடம் தொடர வேண்டும் என்பதே முக்கியம். ஹிட்சை வைத்துக்கொண்டு வடை கூட வாங்க முடியாது.
http://www.facebook.com/stop.death.penalty
வணக்கம் நண்பரே!எனது பதிவுகளுக்கு கூட சரியாக ஓட்டு கிடைப்பதில்லை!அதனால் பதிவு போடும் ஆர்வமும் குறைகிறது!
>>’நீ எனக்கு குத்து, நான் அப்புறமா வந்து உனக்கு ஓட்டுப் போடுகிறேன் எனும் விதி தான் எழுதப்படாத, பிறருடன் பேசப்படாத மௌனமான விதியாக இருக்கின்றது.
ஒஹோ, அதுதான் எனக்கு ஓட்டு பூஜ்ஜியமோ?
பதிவில் நிறைய ஆனந்த விகடன் ,குமுதம் போன்றவற்றில் இருந்து நிறைய சுடுகின்றார்கள் அது தவறு மலையாளம்,கன்னடம்,ஆங்கிலம் பதிவுகளில் இருந்து சிலர் எழுதுகின்றார்கள் அவர்களை நான் ஆதரிக்கின்றேன் ஏனென்றால் தமிழ் மட்டும் தெரிந்தவர்களுக்கு அனைத்து மொழி படைப்புகளையும் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும் ஆனால் எதில் இருந்து எடுத்ததோ அந்த படைப்பாளியின் பெயரை நன்றி என்று வெளியிடுவது நாகரிகம்
இயலுமானவரை அனைவரையும் தட்டிக் கொடுப்போம்!
Post a Comment