நம்பிக்கை ரேகைகள்
தமிழர்
மேனியெங்கும்
தழுவத் தொடங்கியிருக்கிறது,
இலவசமாய் எது கொடுப்பினும்
வாங்கி விட்டு
தன் இயல்புதனை உணர்த்துவான்
தமிழன் எனும் யதார்த்தம்
’ஐயாவின் ஆட்சி-
அம்மாவின் வருகை மூலம்
தூக்கி வீசப்படுகையில்
கண்டு தெளிந்தது தமிழகம்- ஆனாலும்
இலவசங்கள் கொடுத்தால்
வாடிய பயிர்கள் எல்லாம்
தம்மை வாழ வைக்கும் என
வாசல் வந்து
கரங் குவித்து
தம் கையில் நிறைந்திருந்த
செங்குருதி மணம் கழுவப்படாமல்
வெற்றிலையில் சுண்ணாம்பிட்டு;
பிச்சையிடுகின்றோம்- எம்
நன்றி கடன் மறவாதேம்
என வந்தவர்க்கு,
தக்க நேரத்தில் தமிழன்
தன் நிலையினை மீண்டும்
நிரூபித்துள்ளான்!
ஆடி மாதம்
வாடிப் போன
தமிழன் வரலாறு
இரு சேதிகள் வாயிலாக
இந் நாளில்
புதுப்பிக்கப்பட்டிருக்கிறது,
ஜெயலிதாவின் பக்கமிருந்து
மெல்லிய அசைவொன்று
எம் மீதான
சுவாசத்திற்கு வேண்டிய
ஒட்சிசனாய் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது,
கருணாநிதி வடிவில்
களையப்பட்ட
தமிழ்த் தாயின் துகில்
மெது மெதுவாக
இன உணர்வெனும் வெளியீடு கொண்டு
போர்த்தப்படுகிறது- தன் நிலை
உணர்ந்து கொள்ளும்
காலம் இது வென கலைஞர்
கண்டு தெளிந்து விட்டதாய்
நாளாந்தம் மாறும் காட்சிகள்
கட்டியம் கூறுகின்றன!
தான் வளர்த்த
கடாக்கள்- தமிழ்ப் பாலூற்றி
சீவப்பட்ட கொம்புகளோடு
சொத்துக்கள் எனும்
மானத்தை சூறையாடி
பங்கு போட்டு
திமுக வை
திக்குமுக்காட செய்கையில்
வேறு வழியின்றி
முன் வினைப் பயனை
உணர்ந்து தள்ளாடும் வயதினிலும்
தத்தளிக்கிறார் தாத்தா!
அம்மாவின் கரங்கள்
ஈழ மக்கள் நோக்கி
காலச் சுழற்சியின்
சந்தர்ப்ப பிறழ்வுகளால்
மேலும் வீரியமாய்
சில வேளை நீளலாம்!
அந் நேரம் தான் செய்த
தவறுகளை நினைத்து
கண்ணீர் வடிப்பாரா கலைஞர்- இல்லை
மகிந்தவுடன் கரங்கோர்த்து
ஈழ மக்கள் விடிவிற்காய்
புது கூட்டணி தொடங்குவாரா?
தூர நோக்கு அரசியலில்
கலைஞரின் தந்திரங்கள்
வியப்பினைத் தருவதால்.
இலங்கையிடம்
கரங் குவித்து
சரணாகதியடைந்தாலும்
ஆச்சரியப்பட ஏதுமில்லைத் தானே!
|
36 Comments:
///ஆனாலும்
இலவசங்கள் கொடுத்தால்
வாடிய பயிர்கள் எல்லாம்
தம்மை வாழ வைக்கும் என
வாசல் வந்து
கரங் குவித்து
தம் கையில் நிறைந்திருந்த
செங்குருதி மணம் கழுவப்படாமல்
வெற்றிலையில் சுண்ணாம்பிட்டு;
பிச்சையிடுகின்றோம்- எம்
நன்றி கடன் மறவாதேம்
என வந்தவர்க்கு,
தக்க நேரத்தில் தமிழன்
தன் நிலையினை மீண்டும்
நிரூபித்துள்ளான்!
///ம்ம் சரியான பதிலடி கொடுத்துவிட்டார்கள், ஆட்சி காலங்களில் மக்களிடம் இருந்து புடுங்குவதில் மிக சிறு பகுதியை தேர்தல் காலங்களில் இலவசமாய் அள்ளி விடுவார்கள். மக்கள் புரிந்துகொண்டால் சரி .
///ஆடி மாதம்
வாடிப் போன
தமிழன் வரலாறு
இரு சேதிகள் வாயிலாக
இந் நாளில்
புதுப்பிக்கப்பட்டிருக்கிறது,
/// ஒன்று உள்ளுராட்சி தேர்தல் வெற்றி, மற்றையது ஜெயாவின் ஈழ மக்கள் மீதான சாயல் என்று சொல்ல வருகிறது இந்த வரிகள்!
///தன் நிலை
உணர்ந்து கொள்ளும்
காலம் இது வென கலைஞர்
கண்டு தெளிந்து விட்டதாய்
நாளாந்தம் மாறும் காட்சிகள்
கட்டியம் கூறுகின்றன!
// எவ்ளோ அடிச்சாலும் நாம தாங்குவம்ல ;-)
வித்தியாசமான அரசியல் சிந்தனை
நடந்தாலும் நடக்கும்
இப்போதைக்கு அது ஒரு டம்மி பீஸ் ....மற்றபடி தேர்தலில் தமிழர்களின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் ...வெற்றி தொடரட்டும் .........
அரசியல் இலாபத்திற்காக கலைஞர்
என்ன வேண்டுமானாலும் செய்வார்.
மாப்ள எந்த வயசுலத்தான் மனுஷன் திருந்துவான்...ஓ அதுக்கு மனுசனா இருக்கனுமா சரி சரி சாரிபா!
தன்னுடைய நிலையென்ன அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற நிலையில் தற்ப்போது திமுக இல்லை....
இவர் தமிழர் முன் மண்டியிடும் காலம் தூரமில்லை...
இவர் மட்டுமல்ல இவரோடு இருந்த எல்லோரும்
மிகவும் காட்டமான அரசியல் பதிவு ..........
இப்படியெல்லாம் நடக்காது நண்பா இது ரொம்ப ஓவர் ..ஆமா
இந்த பதிவை கலைஞர் படித்தால் என்ன பதில் வரும் ....
பாவம் பாஸ் பெருசு தாங்குமோ தாங்காதோ
அரசியல் பதிவு அர்த்தமுள்ளது...
நல்லது நடக்க வேண்டும்.
அந் நேரம் தான் செய்த
தவறுகளை நினைத்து
கண்ணீர் வடிப்பாரா கலைஞர்- //
இனிமேல் அந்த கருமம் யாருக்கு வேணும்..?
தற்போதைய சூடான அரசியல் நிலையை கவிதை மூலமாக நல்லது,,,
உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருந்தேன் சகோ,,
//தூர நோக்கு அரசியலில்
கலைஞரின் தந்திரங்கள்
வியப்பினைத் தருவதால்.
இலங்கையிடம்
கரங் குவித்து
சரணாகதியடைந்தாலும்
ஆச்சரியப்பட ஏதுமில்லைத் தானே!//
நிச்சயம் இல்லை!
நான் மிகவும் ரசித்த கவிதை..இலகுவாக விளங்கி கொண்டேன்.......
தமிழ் மக்களும் இலவசம் என்றால் என்ன என்று புரிந்து விட்டார்கள் போல..
மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்...(பகுதி2)
You said very true friend
நம் மக்கள் தமிழ்நாட்டிலும் சரி ஈழத்திலும் சரி இன்றைய யதார்த்த நிலையைச் சரியாகப் புரியத்தொடங்கியிருக்கிறார்கள்.
அநேகமாக இனி ஏமாறமாட்டார்கள் !
கனிமொழியை ராஜபக்ஷே அரெஸ்ட் செய்யும் சூழல் வந்தால், அதுவும் நடக்கும்.
அம்மாவின் கரங்கள்
ஈழ மக்கள் நோக்கி
காலச் சுழற்சியின்
சந்தர்ப்ப பிறழ்வுகளால்
மேலும் வீரியமாய்
சில வேளை நீளலாம்!
இதில கலைஞர் எப்படி எங்களை காலை வாரினார் என்பது ஒரு புரமிருக்க...
அம்மாவாலையும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் எதுவும் செய்ய முடியாது.. மத்திய அரசுதான் வெளிநாட்டு விவகாரங்களை கவனிக்கின்றது.. மானில அரசால் இதில் தலையுட முடியாது... அம்மாவும் மத்திய அரசோடு சுமுகமாய் போவதற்கே விரும்புகிறார் போல் தெரிகிறது... அம்மா கலைஞர் மேல் இருக்கும் கடுப்பில் எதையும் செய்யக் கூடியவர்தான்..அட்துடன் தவரான முடிவை எடுத்தாளும் துணிந்து தான் எடுக்கும் முடிவை செயல் படுத்தக்கூடியவர்..
காட்டானுக்கு கலைஞர் ஆட்சியில் இல்லை என்னும்போது மனசு வலிக்கிறது பின்ன மானாட மயில் ஆட,கோழியாட கொக்காடன்னு விழாக்களில் மூன்று நான்கு மணித்தியாலங்கள் குந்தியிருப்பார் அதை பின்னர் TVயில் ஒளிபரப்புவார்கள்.. அதை காட்டானும் இரசித்த காலங்கள்...
அது ஒரு கனாக்காலங்கள்...
காட்டான் குழ போட்டான்
காட்டானுக்கு கலைஞர் ஆட்சியில் இல்லை என்னும்போது மனசு வலிக்கிறது.////காட்டான் சொன்னது போல் எனக்கும் வலிக்கிறது தான்.ஆனாலும் நம்ப வைத்து கழுத்தறுது தான் மன்னிக்க முடியாதது!இத்தனை காலம் ஏமாற்றினார். தாங்கிக் கொண்டோம்!ஆனால் அந்த மே-18,மறக்கவே முடியாது!வரலாறு பேசும்.அது மட்டும் நிட்சயம்!ஆட்சி இல்லை!ஊழல்களில் மூழ்கித் திளைத்த மந்திரிகள்(மந்திகள்)ஒவ்வொருராக மாமியார் வீட்டுக்குப் போகிறார்கள்!இப்போதும் சோனியா முந்தானை தான் வேண்டுமென்று,பழைய குருடி கதவை திறவடி கதையாக தீர்மானம் தான் நிறைவேற்றுகிறார்!நிரூபன் நினைப்பது போல் ஒன்றும் ஆகாது!ஏனெனில், இது பொட்டென்று போகப் போகும் கேஸ்
இனி நல்லதே நடக்கும் என நம்புவோமாக. கேடு நினைப்பார் கெட்டழிவார் .
We forgot what JJ said during war times in sri lanka,"if there is a war it is obvious ppl dies".The tamil nadu ppl are have a quick memory loss????
சரியான பதிலடி நண்பரே..
இனி எல்லாமே நல்லபடியாக நடக்கும்..
நல்ல சிந்தனை...நல்ல நடை..வழக்கம் போல் அருமை....
கோவையில் கூடிய கலைஞர் மாபியா கூட்டம்..தொடர்ந்து காங்கிரசோடு கூட்டணி என்று தீர்மானம் போட்டுள்ளது.
மானம் கெட்டவர்களின் தீர்‘மானம்’என தமிழ்நாடே சிரிக்கிறது.
அரசியலை பிரதிபலிக்கும் கவிதை ஐயா மனசில் இப்படிமாற்றம் எதிர்பார்க்க முடியாது ஆடிபலரை ஆட்டியிருக்கு என்பது நிஜம்தான்!
அந் நேரம் தான் செய்த
தவறுகளை நினைத்து
கண்ணீர் வடிப்பாரா கலைஞர்- இல்லை
மகிந்தவுடன் கரங்கோர்த்து
ஈழ மக்கள் விடிவிற்காய்
புது கூட்டணி தொடங்குவாரா?//
ஈழமக்கள் விடிவுக்கு இந்த துரோகியா....??? நெவர்......!!!
ஒரு சட்டி இட்டிலியை காலையிலே முழுங்கிட்டு போயி உண்ணாவிரதம் இருந்த நாதா.......ஆச்சே இந்த படு பாவி......!!!!
இவனும் இவன் குடும்பமும் சத்தியமா உருப்படாது.....உருப்படவுங் கூடாது ம்ஹும்......
திமுக இன்னும் இருக்கா #டவுட்டு
இனி என்னததை, எதோ மந்திரம் ஓதி இருக்கும் நேரம் நிம்மதியாக இருந்து விட்டு போகட்டும் என்று மட்டுமே வாழ்த்த இயலும்!
செத்துப்போன பாம்பு கழகம் ஹி ஹி
அருமையான கவிதை சகோ
நிகழ்கால
நிகழ்வுகளை
நிலை
நிறுத்திய
நிதர்சன
வரிகளை
வடிவமைத்து
வழங்கிய
உங்களின்
திறமை
அளவிடமுடியாதது.
அற்புதம் சகோ
சசிகுமாருக்கு டவுட்டே வேண்டாம் கலைஞர் இருக்கும் வரை திமுக இருக்கும்..
அத்தோடு இபோது எதிர்கட்சி என்று இப்ப யார் இருக்கிறார்கள்..
அந் நேரம் தான் செய்த
தவறுகளை நினைத்து
கண்ணீர் வடிப்பாரா கலைஞர்- இல்லை
மகிந்தவுடன் கரங்கோர்த்து
ஈழ மக்கள் விடிவிற்காய்
புது கூட்டணி தொடங்குவாரா?. . .
ஈழத்தை அரசியலாகக் கூட பார்க்கவில்லை அவர். அனுபவிக்கின்றார் இப்பொழுது. . .
Post a Comment