Thursday, July 14, 2011

ஐங்கரனின் தங்கை ஈழத்தில் ஜந்துகளால் சிதைக்கப்பட்டாள்!

ஒரு இலக்கியத்திற்குரிய
பாடு பொருட்கள்
பல இருந்தும்,
எழுது கோல் கொண்டு
எழுத முடியாதவாறு
கண்காணிப்புக்கள்
அச்சமூட்டும் ஆக்கிரமிப்பு
வடிவங்களாக நகர்ந்து செல்கின்றன!
வரலாறுகளாக பதிவேட்டில்
செதுக்கப்பட வேண்டிய
குறிப்புக்கள் யாவும்
இன்று பூட்ஸ் கால்களின் கீழ்
அமிழ்ந்தும், நசியுண்டும்,
பச்சை சீருடையின் சாயத்தினால்
நிறம் மாறியும்
கைகளினை சேராது
காணமற் போய் விட்டன!

எப்போதும் தேவைகள் பற்றிய
சிந்தனைகள் மனதில் வர
மனிதர்கள் பற்றிய விருப்பங்கள்
உள் மனம் அறியாத 
புது உணர்வு போல
பட்டெனத் தொற்றிக் கொள்கின்றது!
’’ஐங்கரன் வீட்டிற்கு
பல மாதங்களின் பின்னர்
அவசர அலுவலுக்காய்
உதவியொன்றைப் பெறும் நோக்கில்
மெதுவாக அடியெடுத்து வைத்தேன்’’

வழமையான உரையாடலாய்
அன்று வார்த்தைகள்
வர மறுத்தன - காரணம்
அவன் வீட்டு சுவரில்
தங்கையாகிய என் பள்ளித் தோழி
நினைவஞ்சலிப் படமாக
தொங்கிக் கொண்டிருந்தாள்!

ஒட்டியும் ஒட்டாதும் சொற்கள்
விலகிச் செல்ல,
ஒவ்வொன்றாகப் பிடித்து
சேர்த்து வைத்துக் கொள்ள
முயற்சி செய்தும்
என் நாவிடம் நான்
தோற்றுப் போனேன்!
ஈழம் நனைந்து
நிறம் மாறிய
கொடிய செங்குருதி
மழையின் பின்னர்
சிதைக்கப்பட்ட வெளித்தெரியாத
சீழ்ப் பருக்கைகளாக
இருக்கும் வரலாற்று வடிவத்தினை
ஐங்கரனின் வீட்டிலும் நான் கண்டேன்!

இச்சையினைத்
தீர்த்து கொள்ள
இடமேதுமின்றி
செத்த பிணங்களினைப்
புணர்ந்து பிரித் ஓதும்
வம்சத்தின் கோரப் பிணிக்கு
பு(ன)ணர்வாழ்வு முகாமிலிருந்த
அவன் தங்கை
ஆளாகியிருந்தாள்,

இறுதியில் எல்லாம்
நிகழ்ந்தேறியதும்
வெற்றுடலை மட்டும்
தம் புணர்ச்சியின் எச்சங்களோடு
சேர்த்து வீதியிலே
போட்டு விட்டுப் போய் விட்டார்கள்!

எதிர்த்து(க்) கேள்வி கேட்டல்
இருப்பை குலைப்பதால்
வாய்கள் யாவும் இங்கே
துப்பாக்கி முனைகள் கொண்டு
அடைக்கப்பட்டிருக்கிறது!

வெள்ளரசுகளுக்கு உரமாக- எம்
சகோதரிகளின் தீட்டுத் தண்ணீரும்,
வேட்கையினைத் தீர்த் கொள்ள
இறந்து போன பெண்மையின்
வெறுங் கூடுகளும்
தேவை என்பது
மஞ்சள் துணியால் போர்த்தப்பட்டு
சிகப்புச் சால்வை சுற்றப்பட்ட நாட்டில்
எழுதப்படாத விதியாகி விட்டது!

புனர் வாழ்வு முகாம் என்பது,
இன்று
எம் காதுகளில்
புணர்- பின் வாழ்வழி 
எனும் தொனியில்
எம் செவிப்பறைகளில்
ஒலித்து(க்) கொண்டிருக்கிறது!

59 Comments:

Unknown said...
Best Blogger Tips

அண்ணே...இது முடியாது அண்ணே என்னால் கமென்ட் பண்ண...

Unknown said...
Best Blogger Tips

அண்ணே...இது முடியாது அண்ணே என்னால் கமென்ட் பண்ண...

தனிமரம் said...
Best Blogger Tips

வலிகள் பலநிறைந்த கவிதை இது யாரிடம் சொல்வது காவலுக்கு இருந்தவர்கள் கண்கானவில்லை என்று எக்களிக்கும் வெள்ளரசு வேதாளத்திடம் வேட்டையாடும் மான்கள் பல வேதனையில் வேருடன் இன்னும் விடியாத பூமிக்குள் தொலைந்து போகின்ற துயரம்!

காட்டான் said...
Best Blogger Tips

உன்மையிலேயே இதற்கு காட்டானால் கருத்து செய்யும் பலமில்லை நிரூபா பின்னர் இன்னுமோர் கருத்திடுகிறேன் காட்டானின் பாணியில்...!

தனிமரம் said...
Best Blogger Tips

விடியலைத் தேடிப்போன வேங்கைகளின் வீரத்தை புனர்வாழ்வு என்ற குகையில் சிக்கவைத்து உடலையும் சிந்தனையும் சீரலிக்கும் சீர்கெட்ட தேசத்தை எந்த சீர்திருத்தவாதி வந்து சீக்கரம் வெற்றி கொள்வான் என சிந்திக்கும் நேரத்தில் சிந்தப்படும் உயிரின் மரணங்களும் சதையை வேட்டையாடும் வேதாளங்களுக்கும் கனப்பொழுதும் காவல் என்ற போர்வையில் புதைத்துவிடுகிறது ஈழத்தவன் உரிமையையும் பெண்மையையும் .முடியாதவலி தரும் கவிதை நண்பா முடியவில்லை இன்னும் பின்வர !

தனிமரம் said...
Best Blogger Tips

கொசோவோ படையினர் செய்த அல்பேர்னிய வதை முகம்கள் போல ஈழத்தவனுக்கும் வரலாற்றில் பலபு(ன)ணர்வாழ்வு முகம் என்ற போர்வையில் நடக்கும் கொடுமைகள் எந்த உலகின் கண்களுக்கும் தெரியவில்லையா ஏன் இன்னும் இந்த பாராமுகம் இப்படி ஒரு இனம் அழியட்டும் என்ற ஆவலா?

settaikkaran said...
Best Blogger Tips

//தங்கையாகிய என் பள்ளித் தோழி
நினைவஞ்சலிப் படமாக
தொங்கிக் கொண்டிருந்தாள்!//

வாசிக்கிறபோதே ஆணியிறங்குவது போலிருக்கிறது சகோதரம்!

//வெற்றுடலை மட்டும்
தம் புணர்ச்சியின் எச்சங்களோடு
சேர்த்து வீதியிலே
போட்டு விட்டுப் போய் விட்டார்கள்!//

அரக்கத்தனம்! கொடூரத்தின் உச்சம்!

எப்போது விடியும் என்ற கேள்வியை இன்றும், இப்போதும் முன்னை விட கொதிப்புடன் எழுப்பியிருக்கிறீர்கள். விடை....???

ஹேமா said...
Best Blogger Tips

அப்பவும் சரி இப்பவும் சரி வாயிருந்தும் ஊமைகளாய்த்தான் நாம் !

ad said...
Best Blogger Tips

புனர்வாழ்வு முகாமா?
அனைத்தும் முடிந்தபின்னர் நடந்ததா இது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

மீண்டும் வலிமிகுந்த ஒரு கவிதை! கவிதை மற்றும் இலக்கியங்களில் சமகால நடப்புகள் பதியப்பட வேண்டும். தொடருங்கள் நிரூபன்!

சுதா SJ said...
Best Blogger Tips

வலிக்குது கவிதை பாஸ்

ad said...
Best Blogger Tips

முதல் எழுதிய ஒரு கவிதையில் எழுதியிருந்தது போல-திருமண சந்தையில் விற்பனை செய்வதற்காக என்ற நோக்கில்- நடந்ததை மறைத்து,ஊமையாகிப்போன கதைகள் எத்தனையோ..???

சுதா SJ said...
Best Blogger Tips

//இச்சையினைத்
தீர்த்து கொள்ள
இடமேதுமின்றி
செத்த பிணங்களினைப்
புணர்ந்து//

மனித முகமூடியில் இருக்கும் மிருக இனம் பாஸ் இதுகள்

Anonymous said...
Best Blogger Tips

////ஐங்கரனின் தங்கை ஈழத்தில் ஜந்துகளால் சிதைக்கப்பட்டாள்! /// என்ன சொல்வது ,என்னத்தை செய்வது...((

Anonymous said...
Best Blogger Tips

///ஒரு இலக்கியத்திற்குரிய
பாடு பொருட்கள்
பல இருந்தும்,
எழுது கோல் கொண்டு
எழுத முடியாதவாறு
கண்காணிப்புக்கள்
அச்சமூட்டும் ஆக்கிரமிப்பு
வடிவங்களாக நகர்ந்து செல்கின்றன///உண்மை தான் ...

Anonymous said...
Best Blogger Tips

///வரலாறுகளாக பதிவேட்டில்
செதுக்கப்பட வேண்டிய
குறிப்புக்கள் யாவும்
இன்று பூட்ஸ் கால்களின் கீழ்
அமிழ்ந்தும், நசியுண்டும்,
பச்சை சீருடையின் சாயத்தினால்
நிறம் மாறியும்
கைகளினை சேராது
காணமற் போய் விட்டன!/// இக்காலத்தில் இவை மறைக்கப்பட்டாலும், தண்ணீரில் அமிழ்த்தி வைத்த பந்து போல தான் ,எதிர்காலம் பதில் சொல்லும்..

Anonymous said...
Best Blogger Tips

///ஈழம் நனைந்து
நிறம் மாறிய
கொடிய செங்குருதி
மழையின் பின்னர்
சிதைக்கப்பட்ட வெளித்தெரியாத
சீழ்ப் பருக்கைகளாக
இருக்கும் வரலாற்று வடிவத்தினை
ஐங்கரனின் வீட்டிலும் நான் கண்டேன்!/// இப்படி எத்தனை தங்கைகள் ...((

Anonymous said...
Best Blogger Tips

///இச்சையினைத்
தீர்த்து கொள்ள
இடமேதுமின்றி
செத்த பிணங்களினைப்
புணர்ந்து பிரித் ஓதும்
வம்சத்தின் கோரப் பிணிக்கு
பு(ன)ணர்வாழ்வு முகாமிலிருந்த
அவன் தங்கை
ஆளாகியிருந்தாள்,/// இது அந்த வம்சத்தின் பண்புகளில் ஒன்று என்றும் சொல்லலாம் !

Anonymous said...
Best Blogger Tips

///எதிர்த்து(க்) கேள்வி கேட்டல்
இருப்பை குலைப்பதால்
வாய்கள் யாவும் இங்கே
துப்பாக்கி முனைகள் கொண்டு
அடைக்கப்பட்டிருக்கிறது!// இது தானே பல காலமாக நடக்கிறது .. ஆயுதம் வைத்திருப்பவனின் நோக்கமே அடக்கியாளுதல் தான் !

Anonymous said...
Best Blogger Tips

நெஞ்சை பிழியும் கவிதை , இதற்க்கான பதில் எனக்கு தெரியவில்லை ((

ரொம்ப நல்லவன் நம்பினா நம்புங்க said...
Best Blogger Tips

இதை படிக்கும் பொது மனசு ரொம்ப வலிக்குது நண்பா

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

மிகவும் கொடுமையான நிகழ்ச்சிகள் நடந்தேறியுள்ளன..... வலி மிகுந்த கவிதை வரிகள்.

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

இலங்கையில் பாலும் தேனும் ஓடுகிறதெனும்
இலங்கை அரசின் மேற்பூச்சுக்களும்,
அதற்கு மத்தளம் கொட்டும் இந்திய அரசும்,
இவற்றோடு இவர்கள் சொல்வது என்னவென்று அறியாதிருக்கிறார்கள் பரமபிதாவே
எனும் இயேசு கிறுஸ்துவின் வாக்காக தமிழ் புல்லுருவிகளும்

எய்பவர்கள் சிவப்பு துண்டணிந்திருக்க புலியம்பை நோவதும்...

கவிதையின் வரிகளை வார்த்தையில் சொல்ல இயலவில்லை.

Yoga.s.FR said...
Best Blogger Tips

வம்சத்தின் கோரப் பிணிக்கு
பு(ன)ணர்வாழ்வு முகாம்//////முடியாது,என்னால் கமென்ட் பண்ண...முடியாது.

Mahan.Thamesh said...
Best Blogger Tips

வாய் இருந்தும் பேசவோ துக்கத்தை வெளியில் சொல்ல முடியாமலும் எம் மக்கள். நீதிகள் சட்டங்கள் இருக்கின்றன அவை தமிழனை கட்டுப்படுத்தவும் அடிமைப்படுத்தவும் மட்டுமே தவிர நியாயம் சொல்லவல்ல. நீதிகளும் சட்டங்களும் இராணுவ சீருடையின் கீழே இயங்குகின்றன ஒத்துதும் எம் இண நாய் களின் கீழே இயங்குகின்றன . என்ன செய்ய சகோ .

சீனிவாசன் said...
Best Blogger Tips

வேதனையில் நெஞ்சம் கனக்கிறது

செங்கோவி said...
Best Blogger Tips

கொடூரம் நிரூ..எதிரிக்கும் வேண்டாம் இந்த நிலை.

ஆகுலன் said...
Best Blogger Tips

மிகவும் வருத்தமாக உள்ளது.....

Rathnavel Natarajan said...
Best Blogger Tips

வேதனை.

Unknown said...
Best Blogger Tips

அந்த நிமிடங்களை நினைக்கும் போது அடிவயிற்றில் ஒரு வித கலக்கமும் வலியும் ஏற்படுவதை தடுக்க முடியவில்லை! நிரூ வலியுடன் கூடிய அழுத்தமான கவிதை!

இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
கூடல் பாலா said...
Best Blogger Tips

நெஞ்சை உறைய வைக்கும் நிகழ்வு

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

ரத்தம் கொதித்தாலும் இயலாமையினை நினைத்து அழுகைதான் வருகிறது...!!!

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

இதயத்தை ரணமாக்கி உறைய வைக்கும் வேதனை,வலி மிகுந்த கவிதை [[அல்ல]] மனக்குமுறல்....!!!

rajamelaiyur said...
Best Blogger Tips

மனதை ரணமாக்கும் கவிதை

rajamelaiyur said...
Best Blogger Tips

இன்று எனது வலையில் ...

மூன்று… மூனு… திரி(Three)… தீன்..

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

nanbaa..
schoola irukkiren..
vivirivaaga comment piragu podukire..
ippothu ottu mattume..

Author said...
Best Blogger Tips

ஹ்ம்... வேறென்ன சொல்ல முடியும்?

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...
Best Blogger Tips

அப்பவும் இப்பவும் வாயிருந்தும் ஊமைகளாய் தான் நாம்...! படிக்கும் போது மனம் கனக்கின்றது

Prabu Krishna said...
Best Blogger Tips

எதுவும் சொல்ல முடியவில்லை. வருத்தப்படுவதற்கே வலிக்கிறது, அனுபவித்த உங்களை நினைத்தால்.......

vidivelli said...
Best Blogger Tips

வலிகள் தந்த கவிதை....
வார்த்தை வரமறுக்கிறது எனக்கும் உங்க கவிதையைப்படித்த பின்...
யாரிடம் சொல்லியழ எங்கள் வேதனைகளை...



நிரு..
நம்ம பக்கத்தை மறந்தாச்சா.?
சீனைத்தொடங்கி...?

Unknown said...
Best Blogger Tips

வாய் வரை வந்து விட்டது சொல் சொல்ல முடியவில்லை நிரூ ..

என்ன சொல்லி என்ன சில புல்லுருவிகள் செய்த சதி இந்த வலி.

கவிதை வீதி... // சௌந்தர் // said...
Best Blogger Tips

///////
வரலாறுகளாக பதிவேட்டில்
செதுக்கப்பட வேண்டிய
குறிப்புக்கள் யாவும்
இன்று பூட்ஸ் கால்களின் கீழ்
அமிழ்ந்தும், நசியுண்டும்,
பச்சை சீருடையின் சாயத்தினால்
நிறம் மாறியும்
கைகளினை சேராது
காணமற் போய் விட்டன!
///////


கொடுமையிரும் கொடுமை...
சரித்திரங்கள் மாறும்...

சசிகுமார் said...
Best Blogger Tips

உங்களின் ஒவ்வொரு பதிவையும் படிக்க மனதை திடப்படுத்திக் கொண்டு வரவேண்டும் போலிருக்கு மிகவும் மனதை உருக்கும் சம்பவங்கள்

Shiva sky said...
Best Blogger Tips

புனர் வாழ்வு முகாம் என்பது,
இன்று
எம் காதுகளில்
புணர்- பின் வாழ்வழி
எனும் தொனியில்
எம் செவிப்பறைகளில்
ஒலித்து(க்) கொண்டிருக்கிறது!

Shiva sky said...
Best Blogger Tips

கொடுமை.....

Shiva sky said...
Best Blogger Tips

படிக்கும் போதெ...மனம் துடிக்கிறது

maruthamooran said...
Best Blogger Tips

பாஸ்..........!

வலிகளை மீட்டியிருக்கிறீர்கள். காலையில் இதனை படித்தது முதல் ஏதோவொரு வைராக்கியம். இனம் புரியாத வன்மம்.

அவர்கள் பழிவாங்கப்பட வேண்டும் என்கிற கோபமெல்ாம் சேர்ந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், மீண்டும் வன்முறை தேவையில்லை என்று யதார்த்தம் சொல்கிறது.

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

kalwenjsaiyum karaikkum kavithai கல் நெஞ்சையும் கரைக்கும் கவிதை

hamaragana said...
Best Blogger Tips

nenjai pilanthu valikkuthu nanbare...

Unknown said...
Best Blogger Tips

///////
வரலாறுகளாக பதிவேட்டில்
செதுக்கப்பட வேண்டிய
குறிப்புக்கள் யாவும்
இன்று பூட்ஸ் கால்களின் கீழ்
அமிழ்ந்தும், நசியுண்டும்,
பச்சை சீருடையின் சாயத்தினால்
நிறம் மாறியும்
கைகளினை சேராது
காணமற் போய் விட்டன!
///////




வலிமிகுந்த ஒரு கவிதை

Riyas said...
Best Blogger Tips

வலிகள் தாங்கிய கவிதை

shanmugavel said...
Best Blogger Tips

மனசை என்னவோ செய்கிறது நிரூபன்.

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

படித்ததிலிருந்து ஒன்றுமே ஓடவில்லை. என்ன கொடுமை?இதற்கு நீதி வழங்குவது யார்?

test said...
Best Blogger Tips

என்ன பாஸ்? என்ன சொல்வது / செய்வது ஒன்றுமே தெரியவில்லை! :-(

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

நிஜமாகவே எதிரிக்கும் இந்த நிலை வரக்கூடாது..

tamilachi said...
Best Blogger Tips

manathai kalangaditha kavithai en uravugal alivadhai kandu vedikkai parthu aluvadhai thavira indha pen inathal veru ena seiya mudium vetka padugiren en valnalil mudhal murayaga yen pirandhen endru...vaalga eelam...........

Unknown said...
Best Blogger Tips

வரலாறு மறுபடியும் வரும்.

Unknown said...
Best Blogger Tips

// புனர் வாழ்வு முகாம் என்பது,
இன்று
எம் காதுகளில்
புணர்- பின் வாழ்வழி
எனும் தொனியில்
எம் செவிப்பறைகளில்
ஒலித்து(க்) கொண்டிருக்கிறது!//

கண்களை மறைக்கிறது கண்ணீர்
சகோ
உங்கள் கவிதை வரிகளல்ல
கண்ணீர் வரிகள்

சிங்களக் கயவர்களே விரைவில் செத்து சீரழிந்து போவீர் உண்மை

புலவர் சா இராமாநுசம்

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails