தமிழ் என்னும் மொழிக் கடலில், நாம் நீந்திக் கொண்டிருந்தாலும், தமிழைக் கரைத்துக் குடித்து இலகுவில் கரையேற முடிவதில்லை. காரணம் அவ்வளவு ஆழமான மொழி தமிழ். எம் தமிழ் மொழி எமக்குத் தந்திருக்கும் இன்னோர் சிறப்பு, ஒரு சொல்லில் பல பொருள்(பல அர்த்தங்கள்) வருமாறு நிறைவான பொருளைத் தருவதாகும்.
’’தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற ஒரு அமைப்பு, இலங்கையில் ஈழப் போராட்டத்திற்காக தீவிரமாக இயங்கி, அழிந்தது என்றால், அதற்கும் பிரதான காரணம் இந்த வால்பிடி மனிதர்கள் தான். புலிகளின் அழிவிற்கு ஒரு வகையில், இந்த புலி வாலைப் பற்றி- இலகுவில் அறுத்தெறிய முடியாது; இறுதியில் புலிகளுக்கே துரோகமிழைத்து ஆப்படித்த நபர்களும் காரணமாகின்றார்கள்.
அரசியல்வாதிகளுக்கு வால் பிடிக்கும் நபர்களும் இவ் வகையில் தான் வந்து கொள்வார்கள். ரோட்டோரத்தில் கஞ்சா விற்றவனும், திரைப்படங்களில் நடித்தவர்களும் அரசியல்வாதிகளாக நம் நாடுகளில் உருவெடுத்து மக்களுக்குப் பணி செய்யாது, கருத்துத் திணிப்பு எனும் வகையில் செயற்படும் போது, இந்த வால் பிடி ஒட்டுண்ணிகளும் அவர்கள் கூடவே ஒட்டியிருந்து குழியினைப் பறித்து விடுவார்கள்.
எப்போதுமே நண்பர்களால் தான் ஒருவருக்கு ஆபத்து என்பது, இந்த வால் பிடிகள் கூட இருந்து குழி பறிக்கும் போது தான் தெரிய வரும். எம் பார்வையில் ஒருவன் எதிரி என்றால். அவன் குறிப்பிட்ட ஒரு வரையறைக்குள் தீவிர கண்காணிப்புடன் எதிரி என்றே எந் நேரமும் நோக்கப்படுவான். ஆனால் வால் பிடி நபர்கள் அப்படி அல்ல. தம் நோக்கம் நிறைவேறியதும், கூட இருந்தே குழி பறித்து விடுவார்கள்.
ஒருவனுக்கு தீவிர ரசிகனாக இருப்பது வேறு. வால் பிடிப்பது வேறு. ரசிகனாக இருப்பவன், ஒரு கலைஞனைப் பற்றிய அல்லது ஒரு நடிகனைப் பற்றிய அவனது தனிப்பட்ட படைப்புக்களைப் பற்றிய பார்வையில் தான் அக்கறை செலுத்துவான். இதனை விடவும் ஒரு படி மேலாக அக் கலைஞனின் உடல் நலம் பற்றிய விடயங்களிலும் அக்கறை செலுத்துவான். ஆனால் இந்த வால் பிடி மனிதர்களின் உச்சக் கட்டம், தமக்குப் பிடித்தமானவருக்கு, எதிராக யாராவது, கருத்துக்களைச் சொன்னால் போதும்; உடனே ஓடோடிப் போய் தாங்கள் தான், அவரது தீவிர பேச்சாளர்கள்- ஊடக கருத்தாளர்கள் எனும் தொனியில் பேசிக் கொள்வதாகும்.
வால்பிடி முயற்சியின் இன்னோர் வகை தான் வாழி அல்லது வாளி வைத்தல். ஈழத்தில் இதற்கு வாளி வைத்தல், வாழி வைத்தல், பப்பாவில் ஏற்றுதல், உசுப்பேத்துதல், ஐஸ் வைத்தல் எனப் பல அர்த்தங்களினைச் சொல்லிப் பேசுவார்கள் (கதைப்பார்கள்). வாளி எனும் சொல் அல்லது வாழி எனும் சொல் வாழ்த்துதல்- ஓவராகப் புகழ் பாடுதல் எனும் சொல்லிலிருந்து பிறந்திருக்க வேண்டும். (இது பற்றித் தெரிந்தவர்கள் யாராவது உங்கள் கருத்துக்களையும் முன் வைக்கலாம்).
உயர் பதவியிலிருக்கும் ஒரு நபரையோ, அரசியல்வாதியினையோ, நாம் சில காரியங்களைச் சாதிக்க வேண்டும் என்றால்- ஓவராப் புகழ் மாலை சூட்டி வாழ்த்துவோம் அல்லவா. இதே போல, முற் காலத்தில் மன்னர்களின் அரச சபைகளில் மன்னரை வாழ்த்திப் பொற் கிளிகளைப் பரிசாகப் பெறுவதற்காக, புலவர்கள் ‘மன்னரின் சிறப்பு, நாட்டுச் சிறப்பு, வீரம்’ முதலியவற்றை வாழ்த்திப் பாடுவார்கள். அதிலிருந்து தான் இந்த வாழி அல்லது வாளி பிறந்திருக்க வேண்டும். வாழி வைத்தலின் உச்சக் கட்டமாக, அலுவலகங்களில் திடீரெனப் பதவி உயர்வு தேவைப்படின் ஒரு சில பெண்களும் தம் உடலை விருந்தாக, அர்ப்பணிப்பதுண்டு. இத்தகைய சந்தர்ப்பங்களை ஆண்களும் தமக்குச் சாதகமகாப் பயன்படுத்திக் கொள்வதுமுண்டு. எம்முடைய வட்டார வழக்கில் இந்த வாழி/ வாளி வைத்தல் எனும் சொல் தான் ரொம்பப் பேமஸ்.
வாழி வைத்தல் என்றவுடன் எல்லோரும் கக்கூஸ் வாழியினைக் காவிக் கொண்டு போய் வைத்துப் பணி விடை செய்தல் என்று நினைக்கப்படாது. சில வேளைகளில் வாளி/ வாழி வைப்போர் அப்படியும் செய்யலாம். நான் அதிகம் அறிந்தவரை பல்கலைக் கழகங்களில் உள்ள விரிவுரையாளர்களுக்கு வாழி வைப்பதில் ஒரு சில பெண்கள் ரொம்ப திறமைசாலிகளாக இருந்திருக்கிறார்கள்- இருக்கிறார்கள்.
அடுத்து நாம் நோக்கவிருப்பது, உசுப்பேத்துதல் அல்ல்லது பப்பாவில் ஏற்றுதல் அல்லது ஐஸ் வைத்தல். ஒருவரைப் பற்றி ஓவராப் புகழ்நது, அவருக்குப் புகழ் என்னும் போதையினைக் கொடுத்துச் சரிக்க முயற்சி செய்தலினைத் தான்; இம் மூன்று சொற்களும் விளக்கி நிற்கின்றன. உங்களை யாராவது உசுப்பேத்துகிறார்கள் என்றால் மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள். ‘ஓவர் பில்டப்பு உடம்பிற்கு ஆகாது’ என்று இதனைச் சொல்லிச் சிறப்பிப்பார்கள்.
பப்பா மரத்தில் ஒருவனால் இலகுவில் ஏறவும் முடியாது. அப்படி ஏறினால் இலகுவில் இறங்கவும் முடியாது, அதே போலத் தான் புகழ் போதையும் என்று சொல்லுவார்கள். இது கூட இருந்தே வாழ்த்திக் கெடுக்கும் சக்தி கொண்டது.
ஒரு கலைஞனையோ அல்லது படைப்பாளியையோ ஓவராப் புகழ்ந்து புகழின் உச்சிக்கு கொண்டு போய் விட்டு விட்டு, கவிழ்த்து விடும் நபர்களும் இருக்கிறார்கள். ஆகவே நாம தான் எல்லோரிடமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஓவராகப் புகழ்ந்தால், எம்மை அறியாமலே எமக்குள் தலைகன(ண)ம் வந்து விடும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். எதனையும் அளவோடு பெற்று, எம் ஒவ்வோர் அடிகளையும் நகர்த்தினால் வாழ்வில் நன்மை கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
இது வாழி வைத்தல், வால் பிடித்தல் பற்றிய ஈழத்தில் இடம் பெறும் வட்டார மொழி வழக்குகளோடு சேர்த்து எழுதப்பட்டுள்ள ஓர் இடுகை. தமிழகத்திலும், வேறு சில தமிழ் பேசும் நாடுகளிலுமுள்ள வாழி வைத்தல், வால் பிடித்தல் சொல்லுக்கு நிகராக வேறேதும் சொற்கள் நடை முறையில் இருக்கின்றனவா என்று அறிய ஆவல். தெரிந்தவர்கள் - அறிந்தவர்கள் பின்னூட்டம் வாயிலாகப் பகிர்ந்து கொள்ளலாம் அல்லவா.
|
48 Comments:
வணக்கம் சகோதரரே வால்பிடித்தலுக்கு அருமையான
விளக்கம் கொடுத்துள்ளீர்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய
உண்மை இது.நன்றி பகிர்வுக்கு .இன்று என் தளத்தில் ஒரு
பாடல் காத்திருக்கின்றது கருத்திடத் தவறாதீர்கள்.....
வால் பிடிக்கிறவுங்ககிட்ட இனிமேல் கவனமா இருந்துக்கிறேன் ......நல்ல எச்சரிக்கை ..மேலும் புதிதாக சில வார்த்தைகளின் பொருளையும் தெரிந்துகொண்டேன் .
நண்பா!
வால் பிடிக்கும் கூட்டத்துக்கு தமிழ்நாடு மிக அற்ப்புதமான பெயரை வழங்கியிருக்கிறது.
‘அல்லக்கை’
ஹிஹி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை ரணகளமாக்கிட்டாங்கப்பா~!!(ஒரு சேஞ்சுக்கு விஜயகாந்த் ஸ்டயிலில படிக்கவும்)
தலைப்பு தான் வில்லங்கம்..பதிவுமொன்னு பார்த்தேன் இல்ல!ஹிஹி
தலைப்பு தான் வில்லங்கம்..பதிவுமொன்னு பார்த்தேன் இல்ல!ஹிஹி
ஆமா பாஸ் வால் பிடிக்க தானே நம்மகிட்ட வால் இல்ல அப்புறம் எப்பிடி??#டவுட்டு
எல்லா மட்டங்களிலும் இந்த மட்டமான வால் பிடிக்கும் வேலை நடக்குது..
என்னமா சொல்லி இருக்கய்யா...இம்புட்டு இருக்கா நன்றி!
உங்களை யாராவது உசுப்பேத்துகிறார்கள் என்றால் மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள். ‘ஓவர் பில்டப்பு உடம்பிற்கு ஆகாது’ என்று இதனைச் சொல்லிச் சிறப்பிப்பார்கள்.>>>>
உண்மை தான் சகோ... நோ பில்டப்
நிறைய வால் பிடிப்பாளர்கள் உலவுகிறார்கள்.எச்சரிக்கை.
எனக்கு தெரிந்த ஒரு சொல் ஆனால் தமிழ் கிடையாது-சோப் போடறது
தமிழகத்தில் ஒவ்வொரு வட்டாரத்திலும் இந்த ’வாழிவைத்தல்’ என்ற வார்த்தைக்கு நிகராய் பல உள்ளன என்றபோதிலும், இடக்கரடக்கல் கருதி ஒன்றை மட்டும் சொல்லி விடுகிறேன்- "காலை நக்குதல்". :-)
தலைப்பைப் பார்த்து ஓடிவந்தால் அரசியல் விடயம் கும்மியடிக்க என்று கடைசியில் தொட்டுக்க மட்டும் பேசிவிட்டு இப்படி பலவிடயங்களை வால்பிடிக்கிறதில் புட்டுவைக்கிறீங்கள்.
வாழ்பிடிப்போரிடம் நாம்தான் எச்சரிக்கையாக இருக்கனும் அதற்கு முதலில் தெளிவான பார்வையும் திடமான கொள்கையும் அவசியம் என்பது என் கருத்து!
சிபி அண்ணன் சொன்னதை நான் வழி மொழிகிறேன்..
சூப்பர் :)
மாப்ள உன்னுடைய ஒவ்வொரு பதிவிற்கும் தரம் மேம்படுகிறது கலக்குங்க
அடிவருடிகள்
இருக்கும் எங்கும்
இதே நிலைதான்.
அருமையான கட்டுரை நண்பரே.
எல்ல புகழும் இறைவனுக்கே ...என்று
சமர்பித்தால் நன்மை
தலைப்பு தான் வில்லங்கம்..பதிவு ..அப்படி இல்லை ...இப்படியும் கூறலாம்...
விழுந்து கும்பிடுகிறது....
Vetha. Elangathilakam,
http://www.kovaikkavi.wordpress.com
////ஒரு நோக்கம் அல்லது எமக்குரிய ஒரு மேட்டர் நிறைவேற வேண்டும் என்றால்- உயர்ந்த பதவியில் இருக்கும் ஒரு நபரையோ அல்லது, ஒரு அரசியல்வாதியினையோ ஒருவர் காக்கா பிடித்து, அவரிற்குப் பணி விடை செய்து, அவரைப் பற்றிப் போற்றிப் புகழ் பாடித் திரிதலே வால் பிடித்தல் எனப்படும்.//// நம்ம நாட்டிலையும் கன பேர் இப்பிடி இருக்கினம் போல )))
/////ஆனால் இந்த வால் பிடி மனிதர்களின் உச்சக் கட்டம், தமக்குப் பிடித்தமானவருக்கு, எதிராக யாராவது, கருத்துக்களைச் சொன்னால் போதும்; உடனே ஓடோடிப் போய் தாங்கள் தான், அவரது தீவிர பேச்சாளர்கள்- ஊடக கருத்தாளர்கள் எனும் தொனியில் பேசிக் கொள்வதாகும். /// எல்லாம் தம்மை விசுவாசி என்று காட்டிக்கொள்ள தான் ....
/////உலக சினிமா ரசிகன் said...
நண்பா!
வால் பிடிக்கும் கூட்டத்துக்கு தமிழ்நாடு மிக அற்ப்புதமான பெயரை வழங்கியிருக்கிறது.
‘அல்லக்கை’//// ஹிஹிஹி
இன்று அரசியல்வாதிகளுக்கு வாளி வச்சா தான் நாளை அமைச்சர் ஆக முடியும், அதே போல தான் ஏனைய துறைகளிலையும்.... ஆமா பாஸ், நீங்க யாருக்காவது வாளி வச்சிருக்கீங்களா '?...ஹிஹிஹி
அருமையான விளக்கம்.. எல்லாமே நம் மனதிற்குள்தான் உள்ளது..
எதையாவது சொல்லி உசுப்பேத்திக்கொண்டேயிருங்கோ !
பல்கலைக்கழகங்களில், அலுவலகங்களில் பெண்கள் இதில் ரொம்ப தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள்!
பெண்களுக்கு வாழி வைப்பவர்கள் அது தனி!
'சொம்பு தூக்குதல்' என்பது அதே கருத்தா?
தொடரட்டும் உங்கள் துணிச்சலான பணி.
////ஹிஹி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை ரணகளமாக்கிட்டாங்கப்பா~!!(ஒரு சேஞ்சுக்கு விஜயகாந்த் ஸ்டயிலில படிக்கவும்) ////
இது நம்ம பால் மைந்தன் சொன்னது.
அதையே, நானும் வழிமொழிகிறேன்.
கலக்குங்க நிரூ.
ஜால்ரா, ஜின்க் சாக் என்றும் இங்கு அழைப்பதுண்டு..
சகோ!
இந்த பிறவியிலே நீங்க
யாருக்கும் வால பிடுக்க மாட்டீங்க
உங்களுக்கு வால் பிடிக்க யார் வந்
தாலும் அவங்களே விலகிப் போவாங்க!
என்ன! நான் சொன்னது சரிதானே
அருமையான பதிவு
புலவர் சா இராமாநுசம்
அடடா... தலைப்பைப்பார்த்து என்னமோ ஏதோ என்று ஓடிவந்தா வால்பிடிக்கிறத பற்றி எழுதியிருக்கிறீங்களே
ஃஃஃஈழத்தில் இதற்கு வாளி வைத்தல், வாழி வைத்தல், பப்பாவில் ஏற்றுதல், உசுப்பேத்துதல், ஐஸ் வைத்தல் எனப் பல அர்த்தங்களினைச் சொல்லிப் பேசுவார்கள்ஃஃஃ
பிளேடு வைத்தல், சொம்பு தூக்குதல் என்று கூட சொல்லுகிறார்கள்
வால் பிடிக்கிறவுங்ககிட்ட இனிமேல் கவனமா இருந்துக்கிறேன் ...... தேவையான எச்சரிக்கை ..
வால்பிடித்தலுக்கு அருமையான
விளக்கம் கொடுத்துள்ளீர்கள்... இது முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய
உண்மை இது.
பகிர்வுக்கு நன்றிகள் சகோ..
மாப்ள நான் லேட் டா வந்தேனோ?
காரியம் சாதிக்க மட்டும் மற்றவர் தேவை என்பது எல்லா இடத்திலும் இருப்பது வேதனையான விசயம் தான் நண்பரே.
அருமையான கட்டுரை நண்பரே...வால் பிடிக்கிறவுங்ககிட்ட இனிமேல் கவனமா இருந்துக்கிறேன்...
தலைப்பை படித்தவுடன் ஒன்றுமே புரியவில்லை நண்பா .... முழுவதும் படித்த பின்பு தான் அதன் அர்த்தம் புரிந்தது. உங்கள் எழுத்தின் ஆழம் மிக அதிகம், வாழ்த்துகள் நண்பா .... !
நிரு நம்ம வட்டார மொழியெல்லாத்தையும் நாடுகடக்கை வைப்பதற்கு ரொம்ப நன்றீப்பா..
ஃஃஃஃவாழி வைத்தல்,ஃஃஃஃ
நம்ம இடங்கள்ள பெட்டையளைப் பாத்த வழியிறதையும் இதே பதத்தில் தான் அழைப்போம் மாப்பு...
தலைப்பு சும்மா அதிருதில்ல............
அழகான விளக்கம்..
//எதனையும் அளவோடு பெற்று, எம் ஒவ்வோர் அடிகளையும் நகர்த்தினால் வாழ்வில் நன்மை கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. //
மிகச்சரி நிரூபன்,நன்று
தலைப்பைப் பார்த்து ஓடிவந்தால் அரசியல் விடயம் கும்மியடிக்க என்று கடைசியில் தொட்டுக்க மட்டும் பேசிவிட்டு இப்படி பலவிடயங்களை வால்பிடிக்கிறதில் புட்டுவைக்கிறீங்கள்.
வாழ்பிடிப்போரிடம் நாம்தான் எச்சரிக்கையாக இருக்கனும் அதற்கு முதலில் தெளிவான பார்வையும் திடமான கொள்கையும் அவசியம் என்பது என் கருத்து!
கும்மியாட்டத்துக்கு விடுதலைப்புலிகளை ஏன் துணைக்கு கூப்பிடுகிறீர்கள் சகோ!
@ராஜ நடராஜன்
கும்மியாட்டத்துக்கு விடுதலைப்புலிகளை ஏன் துணைக்கு கூப்பிடுகிறீர்கள் சகோ!//
சகோ, புலிகள் அமைப்பின் வீழ்ச்சிக்கு, அவர்களின் பின்னே வால்பிடிகளாக மட்டும் இருந்து கொண்டு, போராட்டத்தில் நேரடியாக கள முனைகளோடு தொடர்புபடாத அடிவருடிகளும் காரணமாக இருந்திருக்கிறார்கள்.
இவர்களை சிறந்த நாட்டுப்பற்றாளர்கள் என்று நம்பித் தான், புலிகள் அமைப்பின் தலைவரும் இறுதியில் ஏமாந்திருக்கிறார்.
சுருங்கச் சொல்லின், மைந்தன் சிவாவின் கமெண்டினை இவ் இடத்தில் மீண்டும் பகிர்கிறேன்.
‘உசுப்பேத்தி உசுப்பேத்தியே....கூட இருந்து புலிகளை ரணகளமாக்கிட்டாங்க ஒரு வால் பிடிக் கூட்டம்.
அவர்களை ஊரில் வால் பிடிப் புலிகள் என்று தான் சொல்லுவார்கள்.
வாலி வைத்தலுக்கு - இங்கே.. ஜால்ரா, அல்லக்கை, காக்கா பிடிக்கிரது, தாளம் தட்றது, ஐஸ் வைக்கிறது, கொள்ளி வைப்பது, சூடேத்துறது , உசுப்பேத்தறது,இன்னும் நிறைய... வாலி வைத்தலை இல்லாமையாக்கி வாழ வைத்தலை செய்வோம்... பகிர்வுக்கு நன்றி நண்பரே...
அத்தனையும் உண்மை தான்..இனியாவது விழிக்க வேண்டும்....:(
Post a Comment