ஆச்சியின் பழைய
நைந்து போன
சீலையின் ஓரத்தினை
மாத்திரம் நம்பி
நகர்கின்றது
அவளின் அந்த நாட்கள்,
சானிட்டரி நாப்கினுக்காக
சல்லாபம் புரிந்து
வேலை வாய்ப்பின்மையை
மானமாக்கி அணிந்து கொள்ள
அவள் மனம்
இடங்கொடுக்கவில்லை!
தேச பக்தியும்
தென்னங் கள்ளுப் போல
இப்போது பலருக்கு
வெறியேற்றுகின்றது,
மானத்தை சொந்த நாட்டில்
விற்று விட்டு,
சொர்க்கம் தேடிய
ஒட்டுண்ணிகள் சிலரால்
இப்போது பட்டப் படிப்பேதுமின்றி
துரோகிகள் பட்டம் இலவசமாய்
ஈழத்திலுள்ளோருக்கு
வழங்கப்படுகின்றது!
மேலாடையாய்
இறுக்கி நிற்க
கச்சை ஏதுமின்றி
இறுக்கி நிற்க
கச்சை ஏதுமின்றி
முலைகள் குலுங்கையிலோ
மானத்தை மறைக்க
உதவி செய்யாது
துருத்திக் கொண்டு நிற்கும்
முலைகள் என
அங்க வர்ணனை செய்தோர்
இப்போது சோரம் போய் விட்ட
ஒரு சந்ததியின்
புகழுக்கு இவர்களால்
களங்கம் என்று;
இங்கிதமாய்
இங்கிதமாய்
புதுப் பரணி பாடுகிறார்கள்!
வேள்விக்கு யாகம் சரியென்று
வேதாளம் போலத் தொங்கி நின்று
பத்திரி(க்)கை, இணையம் எங்கும்
பலி வேண்டிய பரி பாடல்கள்
எழுதியோர்-தம்
உண்டியல் நிரப்ப
பணம் சேர்க்கும் நோக்கில்
உதவி வேண்டும் சங்கங்கள்
அமைத்து சரசமாடுகின்றார்கள்!
பணத்திற்காய் விலை போதலுக்கும்-
வழியேதுமின்றி
வயிற்றுப் பிழைப்பிற்காய்
வணங்கி,
கால் தொழுது
பின்னாலே சென்று வாழ்வதையும்
புரியாத
நவீன நாட்டுப் பற்றாளர்கள்
துரோகிகள் என
ஒற்றை வார்த்தையில்
கட்டுரை தீட்டி,
இறந்த பலரது
குருதிச் சாற்றிலிருந்து
தாம் வீரம் பெற்றதாய்
தக்க யாகம் செய்கிறார்கள்!
வாழ வழியின்றி(த்)
தமிழன் வணங்கி
கை தொழுகையில்
பிச்சை போடாது
எச்சில் கையில்
சுவை அதிகம் என
நக்கி மகிழ்ந்தோர்
விலை போய் விட்டான்
தமிழன் என
விபச்சார கட்டுரை வடிக்கின்றார்கள்!
தலை கீழாய்(த்) தொங்கும்
உணவின்றி அல்லலாடும்,
அங்கங்கள் இன்றி அவலமுறும்
செத்துப் பிழைத்த
குற்றுயிர் ஜீவன்களை
வைத்து
புற்றுப் பாம்புகள்
விஷ மருந்தேற்றி
புதிய புரட்சி ஒன்றினை
நிலை நாட்ட முனைகின்றன!
அசரீரியாய் கடலோடு கலந்த
அரஜாகத்திற்கெதிரான குரல்
நாளை உங்களுக்கெதிராகவும்
திரும்பலாம்- இல்லையேல்
சாந்தியடையாது
நடப்பவற்றை பார்த்து
உங்கள் குரல் வளைகளையும்
குடிக்கப் புறப்படலாம்!
தமிழனின் பண்பு
இது எனத் தெ(பு)ரிந்து
அவன் இறந்தானோ
என உள் மனம் பொருமுகிறது,
உணர்ச்சிகள் கண்ணீராய் வருவது
நாவில் உப்புச் சுவை
தோன்றுகையில் தெரிகிறது!!
கவிதையின் கருப் பொருளுக்கான சுருக்கமான விளக்கம்:
இலங்கையின் உள்ளூராட்சித் தேர்தல் பிரச்சார நோக்கில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த கலைஞர்களுக்கும், இறுதிப் போரின் பின்னர் ஈழத்தில் விலை போய் விட்ட துரோகிகள் எனச் சித்தரிக்கப்படும்(வர்ணனை செய்யப்படும்) மக்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தெரியாத புத்தி ஜீவிகளுக்கான ஓர் பதிலாக இக் கவிதையானது எழுதப்பட்டுள்ளது.
|
50 Comments:
மிகவும் உணர்ச்சிபூர்வமான கவிதை நிரூபன்!
//அசரீரியாய் கடலோடு கலந்த
அரஜாகத்திற்கெதிரான குரல்
நாளை உங்களுக்கெதிராகவும்
திரும்பலாம்- இல்லையேல்
சாந்தியடையாது
நடப்பவற்றை பார்த்து
உங்கள் குரல் வளைகளையும்
குடிக்கப் புறப்படலாம்!//
இது தெரியாமல் தானே.. யாருக்கோ நடந்தால் நமக்கென்ன என இருக்கும் நாகரீக கோமாளிகள் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர்..... நல்ல ஆதங்கமான கவிதை நன்றியுடன் வாழ்த்துக்கள்
சரியான சாட்டையடி !
வாசித்தேன் ...என்னும் மீளவில்லை ..
என்ன கருத்திடுவது என்று புரியவில்லை
மிக மிக அற்புதமான சாட்டை அடி
இப்படியான இன உணர்வு வாழும்வரை தமிழுக்குத் தோல்வியில்லை.இன்றைய தேர்தல் செய்தி மனதுக்கு இன்னும் நம்பிக்கை தருகிறது நிரூ.காத்தலும் ஒற்றுமையும் அவசியம் !
love it bro,,nice one
//இன உணர்வும்,
தேச பக்தியும்
தென்னங் கள்ளுப் போல
இப்போது பலருக்கு
வெறியேற்றுகின்றது,
மானத்தை சொந்த நாட்டில்
விற்று விட்டு,
சொர்க்கம் தேடிய
ஒட்டுண்ணிகள் சிலரால்
இப்போது பட்டப் படிப்பேதுமின்றி
துரோகிகள் பட்டம் இலவசமாய்
ஈழத்திலுள்ளோருக்கு
வழங்கப்படுகின்றது!//
துரோகி என்ற சொல்லுக்கே அர்த்தமில்லாமல் போய்விட்டது. இன உணர்வாளர்கள் என்று தம்மை கூறிக்கொண்டு, அவர்கள் செய்யும் கூத்துகள் எல்லாம் எமக்கு தெரியாதென்ற நினைப்பு அவர்களுக்கு
உணர்ச்சிகளின் கலவை
சாட்டையடி!!
துரத்தல் முடிவு செம அடி போல!!
இறுதி வரிகளோடு ஒத்துப் போகிறேன்!!
பணத்திற்காய் விலை போதலுக்கும்-
வழியேதுமின்றி
வயிற்றுப் பிழைப்பிற்காய்
வணங்கி,
கால் தொழுது
பின்னாலே சென்று வாழ்வதையும்
புரியாத
நவீன நாட்டுப் பற்றாளர்கள்
துரோகிகள் என
ஒற்றை வார்த்தையில்
கட்டுரை தீட்டி,
இறந்த பலரது
குருதிச் சாற்றிலிருந்து
தாம் வீரம் பெற்றதாய்
தக்க யாகம் செய்கிறார்கள்!
யாரைப்பற்றி சொல்லுகிறீர்கள் என்று விளன்க்குகின்றது
வாழ வழியின்றி(த்)
தமிழன் வணங்கி
கை தொழுகையில்
பிச்சை போடாது
எச்சில் கையில்
சுவை அதிகம் என
நக்கி மகிழ்ந்தோர்
விலை போய் விட்டான்
தமிழன் என
விபச்சார கட்டுரை வடிக்கின்றார்கள்!
அடிச்சு சொல்லுவான் புலம் பெயர்ந்த சார் இணையங்களுக்கு அடி
தலை கீழாய்(த்) தொங்கும்
உணவின்றி அல்லலாடும்,
அங்கங்கள் இன்றி அவலமுறும்
செத்துப் பிழைத்த
குற்றுயிர் ஜீவன்களை
வைத்து
புற்றுப் பாம்புகள்
விஷ மருந்தேற்றி
புதிய புரட்சி ஒன்றினை
நிலை நாட்ட முனைகின்றன!
வன்னி மக்கள் அடகு வைக்கப்படுவதை சொல்லிநிக்கிறது
நிரூ என்ன சொல்லுரதுன்னே தெரியல. . .
பாடலின் பாத்திரமும் சூத்திரமும் அறியேன் அடியேன்!
நான் எங்கேயும் பார்த்தது இல்லை இதை "கவிதையின் கருப் பொருளுக்கான சுருக்கமான விளக்கம்" ... நல்ல இருக்கு
மாப்பிள இந்த கவிதை என்னைப் பற்றி எழுதியதுபோல் இருக்கிறது ஆரம்பத்தில்.!? இந்த தொப்பி காட்டானுக்கு நன்றாக பொருந்தி வருகிறது..!!!!!!?? ஆனா கடைசி விளக்கத்தில என்னை நீ விலக்கி வைத்துவிட்டாய்...!!!
அறிவு ஜீவிகளுக்குத்தானே...!? காட்டான் போல் அடி முட்டாள்களுக்கில்லையே.. அதுவும் இல்லையென்றால் இங்கிருக்கும் அறிவு ஜீவிகள்ன்னு தன்னை தானே சொல்லிக்கொள்பவர்கள் அடி முட்டாள்களா..!!!!!!??
இப்பிடிதான் மாப்பிள எழுத்து கூட்டி வாசித்தால் விளங்கிக்கொள்ள முடிகிறது காட்டானால்..
காட்டான் குழ போட்டான்..
கவிதை வரிகள் உங்கள் உள்ளத்தி லிருந்து உணர்ச்சி பூர்வமாய்ப் பொங்கி வந்திருக்கின்றன.
நெற்றியடி
சாட்டையடி நண்பரே,
உணர்வுகள் கொந்தளிக்கின்றன
என்னத்த சொல்ல, என்னத்த செய்ய ..இதெல்லாம் சொல்லி திருந்திற கூட்டமா என்ன ...!!!
///அசரீரியாய் கடலோடு கலந்த
அரஜாகத்திற்கெதிரான குரல்
நாளை உங்களுக்கெதிராகவும்
திரும்பலாம்- இல்லையேல்
சாந்தியடையாது
நடப்பவற்றை பார்த்து
உங்கள் குரல் வளைகளையும்
குடிக்கப் புறப்படலாம்!/// நடக்கலாம் ...((
/////தமிழனின் பண்பு
இது எனத் தெ(பு)ரிந்து
அவன் இறந்தானோ
என உள் மனம் பொருமுகிறது,
உணர்ச்சிகள் கண்ணீராய் வருவது
நாவில் உப்புச் சுவை
தோன்றுகையில் தெரிகிறது!!///குடும்பம் குட்டி என்று தன்பாட்டில சுயநலமாய் வாழ்ந்துட்டு போகாமல், போயும் போயும் இந்த தமிழருக்காக போராடினாரே ..((
////மானத்தை சொந்த நாட்டில்
விற்று விட்டு,
சொர்க்கம் தேடிய
"ஒட்டுண்ணிகள்" சிலரால்
இப்போது பட்டப் படிப்பேதுமின்றி
துரோகிகள் பட்டம் இலவசமாய்
ஈழத்திலுள்ளோருக்கு
வழங்கப்படுகின்றது./// "அவர்களுக்கும்" பட்டம் எதுவும் இல்லையே???அதனால் ஒரு வேளை பட்டம் சூட்டி மகிழ்கிறார்களோ?
வெப்பம் அதிகம்.ஆனால் முக்கியமானது.நன்று
உக்கிரமான கவிதை நிரூ..அவர்களை விட்டொழியுங்கள்!
நெருப்பு வரிகள்.. சுடுகின்றன நிரூபன்...
சகோதரம், கவிதை தெரியாது என்பது எனக்கு ஒரு குறையாக இருந்தது. இந்தக் கவிதை வாசித்தபோது, தெரியாமலிருப்பதே சரியென்று தோன்றுகிறது. மொழியறிவு பெரிதாக இல்லாதபோதே இக்கவிதை இவ்வளவு வலியேற்படுத்துமென்றால், கவிதையின் நுணுக்கம் சற்று கூடுதலாய்த் தெரிந்திருந்தால் நாளையும் தூக்கம் இழக்கப்போவது உறுதி. மனது இடியாய்க் கனக்கிறது!
"வெளிநாடுகளில் இது போல் பல ஜீவராசிகள் திரிகின்றனவாம்..." அவர்களுக்கெல்லாம் ...ஞ்சை அறுக்க வேண்டும்....
இவர்களுக்கெல்லாம் எப்படி இப்படி திடீரென்று தோன்றுகிறது? இதன் நோக்கம் பணம் சம்பாதிப்பதா?
என்னமோ போங்க... இத கருமாந்திரத்தை எல்லாம் விட்டு வெளியே வாருங்கள் நிரூ... நாங்களாவது மாத்தி யோசிப்போம்...
சாட்டை அடியைத் தந்திருக்கிறீர்கள் கடைசிவரிகளுடன் ஒத்துப் போகின்றேன் !
வலிகள்மிக்க வார்த்தைகள்!
கவிதையின் கருப் பொருளுக்கான சுருக்கமான விளக்கம்:
இதன்மூலம் கவிதையை சரியான முறையில் விளங்கி கொள்ள முடிகிறது....
எமது வாழ்வு இதுதான்...
மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்...(பகுதி2)
வணக்கம் நாற்று! உனது பணி தொடர என் நல்லாசிகள்.
காணாமல் போய், கவிதையோடு வந்திருக்கிறீங்க நிரூபன்...
/////நவீன நாட்டுப் பற்றாளர்கள்
துரோகிகள் என
ஒற்றை வார்த்தையில்
கட்டுரை தீட்டி,
இறந்த பலரது
குருதிச் சாற்றிலிருந்து
தாம் வீரம் பெற்றதாய்
தக்க யாகம் செய்கிறார்கள்/////
தெளிவா விளங்கிடிச்சு நிரு...
ஒற்றைப் பேனாவும்
வெற்றுத் தாளும் அவர்கையில்
வெறும் வாய் மென்றவர்க்கு கரும்பாய் சில செய்தி..
என்ன செய்வது நாறிப் போனது அவர் எழுத்துக்கள் மட்டுமே..
நானும் ஒரு நிலமையை விளக்க முயற்சிக்கிறேன் (விரைவில்)
மிகவும் உணர்ச்சிபூர்வமான கவிதை நிரூ!
சாட்டையடி! அருமை நிருபன்!!!
சகோ!
அல்லல் பட்டு ஆற்றாது
அழுது வடித்தக் கண்ணீரில்
எழுதிய கவிதை.
சொல்லப் பட்ட வரிகள்
ஒவ்வொன்றும் தியாகத் தீயில்
தள்ளப் பட்டோருக்கு தரும்
நினைவாஞ்சலி.
புலவர் சா இராமாநுசம்
உணர்ச்சிமிக்க வரிகள்
அனைவருக்கும் ஓர் அறிவித்தல்: இக் கவிதையின் தலைப்பில் ’எழுத்துலக’ என்று வருவதற்குப் பதிலாக எழுத்துல’ என்று ஒரு எழுத்தைத் தவற விட்டு எழுதிப் பிரசுரித்தேன். இத் தவறினைச் சுட்டிக் காட்டிய சகோதரன் லோசன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
"...பட்டப் படிப்பேதுமின்றி
துரோகிகள் பட்டம் இலவசமாய்
ஈழத்திலுள்ளோருக்கு
வழங்கப்படுகின்றது!.." அழகாக உறைக்கச் சொன்னீர்கள்.
என்னை ஏதோ செய்கிறது....
வலிகளோடு திரும்புகிறேன்....
அழுத்தம் நிறைந்துள்ளது.சம்மட்டி அடி.
நல்ல உவமைகளோடு கூடிய கவிதை, படிக்கும் பொழுது நெஞ்சமெல்லாம் கனக்கிறது.
எதற்கு தயக்கம், ஏன் கவிதை வடிவில்? நேரடியாக பேச்சுத்தமிழில் நாக்கை புடுங்குவது மாதிரி கேட்டிருக்கலாம்!!!!!! இன்னும் யுத்தம் வேண்டுமாம், எதற்கு? என்றால் அரச ஆதரவாளராம்!!! யாழ்ப்பாணம் சீரழிந்துள்ளது என்பவனுக்கு , உண்மை நிலை புரியவைத்தால் கைகூலியாம்!!!! தமிழகத்தின் சீமான் வகையறாக்களின் அரசியல் ஈழ உணர்வை குறிப்பிட்டு காட்டினால் துரோகியாம்.
அவர்கள் வாழ்க்கையை அசியக் கண்டம் கடந்து பாதுகாப்போடும் வளமோடும் வாழ்வார்களாம், 83 முதல் இடம்பெயர்ந்தே வாழ்வைத் தொலைத்த எம் மக்கள் இன்னுமொரு போராட்டத்திற்கு தயாராக வேண்டுமாம். கிடைக்கும் சராசரி வாழ்க்கையையும் தியாகம் செய்ய வேண்டுமாம். போராட்டத்திற்கு அவர்கள் 'பணம்' கொடுக்கிறார்களாம் , எம்மவர்களை 'பிணம்' கொடுக்கட்டாம், அவளவுதான்.
>ஒட்டுண்ணிகள் சிலரால்
இப்போது பட்டப் படிப்பேதுமின்றி
துரோகிகள் பட்டம் இலவசமாய்
ஈழத்திலுள்ளோருக்கு
வழங்கப்படுகின்றது
100 % சரி.
Post a Comment